நிர்வாணம் தெய்வீகமானது

கவர்னர் திவாரியோட லீலைகளை பத்தின அதிரடி வீடியோ க்ளிப்ஸ் ஒளிபரப்பு செய்து புகை வர வைத்த ஏ.பி.என்.ஆந்திர ஜோதியில் இந்த பதிவின் தலைப்பில் ஒரு விரிவான ஸ்டோரி ஒளிபரப்பானது. கடைசில பஞ்ச் என்னடான்னா ” நீங்க நிர்வாணமா திரியாட்டியும் பரவாயில்லே.. நிர்வாணத்தை பார்த்து அருவறுப்படையாதிங்கங்கறது” தான் . அடங்கொப்புரானே.. திவாரி தாத்தா பண்ணது கூட அதை தானே.. அதை வெளிச்சம் போடற மோரல் ரைட் உனக்கேது.

சரி அது எக்கேடோ கெட்டு ஒழியட்டும். அவனவன் விரைக்கிறது தெரியக்கூடாதுன்னுதான் ட்ரஸ்ஸே போடறான்னும் ஒரு தகவல். ம‌த்திய படெஜ்ட் போட்டுட்டாய்ங்க. வழக்கம் போல விவசாயத்துக்கு கையில் கொடுத்துட்டாங்க (கப்பறைங்கண்ணா) அந்த விவசாயமே இல்லேன்னா புவ்வா இல்லே. பலான சமாச்சாரமெல்லாம் ஒடுங்கிபோயிரும்னா இதையும் படிச்சு வைங்கன்னா


“சத்யமேவஜெயதே”ன்னு ஸ்லோகன் வச்சிக்கிட்டு நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற

கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை

காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா. நம்ம சனம் தோல் தடிச்சி போயி

கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி

சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே

மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு,

சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை

இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட

கார்ப்போரேட் கம்பெனிகள் நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை

இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை

நட்டாத்துல விடறது அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி

கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது இதெல்லாம் நம்ம

கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை

அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற செம்பு கம்பிகளை ஒரு கூட்டம்

திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை

வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில் விவசாய

குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்

வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி ஓனர்களின் உழைப்பு

சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு

என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய

பெரிய தொழிற்சாலைகளை கட்டி தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு

நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம்

பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது,

கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு

அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி

ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு

இலவச யோசனை தந்திருக்கார்.

பாவம் .. அந்த காலத்துல காந்தி தாத்தா விவரம் போதாம கிராமங்கள் உற்பத்தி

கேந்திரமா இருக்கனும். நகரங்கள் விற்பனை மையங்களா இருக்கனும்னு

சொல்லிட்டு போய் சேந்துட்டாரு.

இப்ப பாருங்க எல்லாமே தலை கீழா மாறிருச்சு. கிராமத்துல பசு வச்சிருக்கிற

குடும்பம் தங்கள் வீட்டு ஆளுங்க, குழந்தை குட்டி எல்லாம் குடிச்சபிறகு

அக்கம்பக்கத்து குடும்பங்களுக்கு கொடுப்பாங்க. இப்போ காசு மேல காசு வந்து

கொட்டனும்னு ஊசி மேல ஊசி போட்டு ஒட்டக்கறந்து டைரிக்கு ஊத்தறாங்க. அதே

பால் ப்ளாஸ்டிக் கவர்ல கிராமத்துக்கு வந்து சேருது. அதை காசு குடுத்து

வாங்கியாறது. அட ஒரு கல்யாணம்னு வச்சிக்கயேன் அதுக்கு தேவையான பொருட்கள்ள

எத்தினி கிராமத்துல கிடைக்குது எத்தினி டவுன்ல கிடைக்குது கூட்டி கழிச்சு

ஒரு கணக்கு போடுங்களேன்.

உப்பு மேல வரி போட்டதுக்காக தாத்தா பிரிட்டீஷ் காரனை காச்சு காச்சுனு

காச்சினாரு. இன்னைக்கு டாட்டா சால்ட் வாங்கினா லோக்கல் டாக்ஸஸ்

எக்ஸ்ட்ரா. லோக்கல் ட்ரிங்க்ஸ் காணாம போயிருச்சு. குக்குராமத்துல கூட

குண்டி கழுவ தண்ணி கிடைக்காத இடத்துல கூட பெப்சி,கொக்கோ கோலா.

தையல் காரங்க கதைய பாருங்க. எல்லாம் மெகனைஸ் ஆயிருச்சு. நீங்க தைய கூலியா

கொடுக்கிற காசுல முக்காவாசி மின்சாரத்துக்கும், ரா மெட்டீரியலுக்கும்,

மின் உபகரண தேய்மானத்துக்குமே சரியா போகுது. இதுல ஷகரான ஏரியால கடை

போடனும், பள பளானு இன்ட்டிரியர், ஜகஜ்ஜோதியா ஒளியலங்காரம்

எல்லாத்துக்கும் போக அவன் என்னத்த திங்கறது. இதுல ரெடி மேட்

கார்மென்ட்ஸோட போட்டி வேற. எந்த தொழிலை எடுத்தாலும் இந்த இழவுதான்.

உதவாத தீப்பெட்டிய எடுத்துக்கங்க.அதை கூட டாட்டா கம்பெனி தயாரிக்குது,

ஒரு காலத்துல ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஆயிரம் பேருக்காவது

நேரிடையாவும், மறைமுகமாவும் வேலை கொடுத்துக்கிட்டிருந்தது. இப்போ.

உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயம்தான். ஒரு 54 இஞ்ச்

கலர் டிவியை புதைச்சி வச்சா ஒரே ஒரு எஃப்.எம். ரேடியோ கூட முளைக்காது.

டிவி தான் நாறிப்போயிரும்.

கால் நடை வளர்ப்பு, கோழி, வாத்து வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். பயிர்

பச்சைய பாலாவும், மாமிசமாவும் மாத்தி தருது (கன்வெர்ஷன்). ஆனால் விவசாயம்

ஜஸ்ட் இட் ப்ரொட்யூஸஸ்.

எல்லா தொழிற்சாலையும் ரா மெட்டீரியலை ப்ராடக்டா மாத்துது.(உ.ம் தகடை காரா

மாத்தறது) அவ்ளதான். பொல்யூஷனுக்கு இடமில்லாத ஒரே துறை விவசாயம் . (

நான் சொல்றது பயிரை தாக்குற பூச்சிகளுக்கு அமிர்தமாவும், விவசாயிக்கு

மட்டும் விஷமாவும் வேலை செய்யற பூச்சி மருந்து, செயற்கை உரங்களை டப்பா

டப்பாவா, மூட்டை மூட்டையா கொட்டி நிலத்தை ,நீரை , வயிறை, விஷமாக்கிற

விவசாயமில்லே தலைவா !).

இந்த நிர்வாண நிஜம் எப்பத்தான் இந்த கேடு கெட்ட அரசாங்கங்களுக்கு

உறைக்குமோ தெரியலை. விவசாயத்துக்கு தேவை ஜஸ்ட் பாசன நீர். வாட்டர்.

பானி.நீள்ளு . அத ஒழுங்கா கொடுக்க துப்பில்லே.

ஜஸ்ட் கன்வெர்ஷன் பண்ணிக்கிட்டு, கோடி கோடியா குவிச்சிக்கிட்டு, சில

ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குற ஃபேக்டரிக்கு லட்சகணக்கான காலன்

தண்ணி, சப்சிடில மின்சாரம், இலவச நிலம், வரி தள்ளுபடி எங்க

போயிட்டிருக்கோம்.

நீங்க ஒரு மாட்டுப்பண்ணை வச்சிருக்கிங்கனு வைங்க. ஒரு மாடு லிட்டர்

லிட்டரா பால் கொடுக்குது. ஒரு மாடு வெறுமனே கோமியம் விட்டுக்கிட்டு, சாணி

போட்டுக்கிட்டிருக்கு. நீங்க எந்த மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்

புண்ணாக்கையும் போடுவிக? பால் தர்ர மாட்டுக்குதானே.

விவசாயத்துறை வெறுமனே போஸ்டர்களை தின்னுட்டு பால் தர்ர மாடு மாதிரி

அல்லாடிக்கிட்டிருக்கு. ஆனால் காத்துல, தண்ணில, நிலத்துல விஷத்தை

கலந்துவிடற தொழில்துறைக்கு மட்டும் சிகப்பு கம்பள வரவேற்பு. அந்த சிகப்பு

கம்பளத்துல அதென்ன ராஜ நடையா போடுது. ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஒரு அரசாங்கமும் மாட்டுப்பண்ணை முதலாளி மாதிரி தான் செயல் படனும். எந்த

துறைல ப்ரொடக்டிவிட்டி அதிகம், எந்த துறை அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை

வழங்குது, எந்த துறையால பொல்யூஷன் குறைவுன்னு பார்த்து அந்த துறைமேல

அக்கறை காட்டனும்.

இந்தியாவுல விவசாயம் 70 சதவீதம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கறதா ஒரு

கணக்கு. அப்போ பட்ஜெட்ல 70 சதவீதம் விவசாயத்துக்கு தானே ஒதுக்கப்படனும்.

அரசாங்கங்கள் தொழில் துறை மேல அதீத அக்கறை காட்ட காரணம் கார்ப்போரேட்

கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதிதான் போலும்.

டூ வீலர் வாங்க கடன், ஆட்டோ வாங்க கடன், கார் வாங்க கடன். இதையெல்லாம்

வங்கிகள், அதிலும் அரசுத்துறை வங்கிகள், வழங்க காரணம் என்ன ? அந்த ஆட்டோ

மொபைல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா? வீட்டு வசதி கடன்கள் வழங்கப்பட காரணம் என்ன ? சிமெண்ட்,

ஸ்டீல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா?

விவசாயிகளுக்கு தரப்படும் அரை குறை கடன் வசதிகளுக்கு கூட இது போன்ற

விலங்கமான காரணங்கள் உண்டுன்னே சொல்லலாம்.(உர கம்பெனி, மோட்டார் கம்பெனி

, ட்ராக்டர் கம்பெனி, பூச்சி மருந்து கம்பெனி தர்ர கட்சி நிதி) ஒரு

அரசாங்கம் உண்மையிலேயே விவசாயத்துறையை முன்னேற்றனும்னு நினைச்சா எவ்வளவோ

செய்யலாம்.

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிச்சு கூட்டுறவு பண்ணை விவசாயம்

அமலாக உதவலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வுங்கறத போல விவசாயிகள் ஒன்னு

சேர்ந்து சின்ன சின்ன செக் டேம், ஏரிகளின் இணைப்பு, ஏரிகளை தூர் வார்ரது

,, பாசன வாய்க்கால்களை வெட்றது சின்ன சின்ன உப நதிகளை இணைக்கறதுனு

செய்துக்கலாம். விவசாய உற்பத்திகளை நல்ல விலை வர்ர வரைக்கும்

பாதுகாக்க கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ் இத்யாதி கட்டிக்கொள்ள மேற்படி

சங்கங்களுக்கு கடன் தரலாம். க்ராப் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடு செய்யலாம்.

விவசாய பொருட்களின் மதிப்பை கூட்டும் தொழிற்சாலைகள் அந்த சங்கங்களே

அமைத்து நிர்வகிக்க உதவலாம். (இதை பைலட் ப்ராஜக்டா ஆந்திர முன்னாள்

முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அறிவிச்சாரு. விவசாயிகள் ஒப்புக்கிட்டா

செய்யலாம்னு சொன்னாரு. எங்க பிழைக்க விட்டாங்க. )

ஆனால் நம்ம அரசாங்கங்கள் இதையெல்லாம் செய்யாது ஏன்னா விவசாயிக்கிட்டே

இருக்கிறது ஒரு ஓட்டு. மிஞ்சிப்போனா அவனோட குடும்பத்து ஓட்டு. அவனென்ன

தேர்தல் நிதியா தரப்போறான். கார்ப்போரேட் கம்பெனிக குடுக்கிற ஃபண்ட்ஸ்ல

லட்சக்கணக்கான ஓட்டுக்களை விலைக்கு வாங்கிரலாமே..

தொழில் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியெல்லாம் வெறும் வீக்கம்.

விவசாயி பயிர் செய்து, உற்பத்தி கைக்கு வந்தாதான், அது பணமாகி அவன்

கைக்கு போனாதான் மார்க்கெட்டுக்கே வாழ்வு .இல்லேன்னா சாவுதான்.

டிவி,மொபைல் தயாரிப்பாளர்கள் டீலர்கள் தம் வாடிக்கையாளர்களுக்கு தரும்

ஸ்பெஷல் ஆஃபர்ஸ் எல்லாம் அறுவடைகாலத்திலேயே வெளியாறத கூட்டிக்கழிச்சு

பாருங்க உண்மை தெரியும். எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்துறைய

சார்ந்து வாழற நாட்ல லட்ச ரூபாய்க்கு கார் வருது. ஏன் லட்ச ரூபாய்க்கு

ட்ராக்டர் தயாரிக்க கூடாது. எப்படியும் நகர மயமாக்கம் காரணமா, கிராமப்புற

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் , ஒரு ரூபா அரிசி திட்டம் இத்யாதி

காரணங்களால விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிரை கொம்பா போன காலத்துல

விவசாய வேலைகளுக்கு உதவக்கூடிய சிறு,குறு இயந்திரங்களை ஏன் குறைஞ்ச

விலைல தயாரிக்க கூடாது. மைல் கணக்குல வாய்க்கால்ல ஓடி வீணாகற பாசன நீரை

சூரிய வெப்பத்துக்கு ஆவியாகாம, நிலத்துல ஊறிப்போகாம , ஒரு சொட்டு

தண்ணியும் வீணாகிடாம பயிருக்கு கொண்டு சேர்க்க ஏன் நாடு தழுவிய ஒரு

திட்டத்தை கொண்டுவரக்கூடாது.

இந்தியா விவசாயத்துக்கு ஏதுவான சீதோஷ்ண நிலை , புவியியல் அனுகூலங்கள்

நீராதாரங்கள் கொண்ட நாடு. அரபு நாடுகள் வெறுமனே எண்ணெய் வளத்தை வைத்து

உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தும்போது, நாம் ஏன் உணவு பொருள் உற்பத்தியை

வைத்து உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தக்கூடாது.

ஒரு புடவைய சுத்தி விட்டா மரம் கூட ஏதோ ஒரு கோணத்துல மங்கையா

காட்சியளிக்கும். அதை உருவி பாருங்க..

நிர்வாணம் தெய்வீகமானது. நிஜமானது. போலிகளுக்கு இடமில்லாதது.

ஆட்சியாளர்களே நீங்கள் இந்திய பொருளாதாரத்துக்கு கட்டிவிட்ட ஆடைகள்

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டி உங்களையும்

சேர்த்து குழப்புகிறது. நிலைமை கை மீறிப்போனா சனம் சாப்பிட

ரொட்டியில்லேன்னா கேக் சாப்பிடுங்கனு சொல்லக்கூடிய ஆளுங்க தான். ஆனால்

அப்படி சொன்ன ராணி என்ன ஆனாள்? அவள் ராஜ்ஜியம் என்னாச்சுனு ஒரு தடவை

நினைச்சு பாருங்க..

Advertisements

பவர் கட்டால் பயன்கள்

கேடு கெட்ட மனிதர்களை எம்.எல்.ஏ, எம்.பிக்களா தேர்ந்தெடுத்தபிறகு விலை வாசி ஏற்றம், பெட் ரோல் டீசல் விலையேற்றம்,பவர் கட் இப்படி என்னென்னமோ இழவெடுக்கும்.இதையெல்லாம் நினைச்சு கடுப்பானா, இதுகளால வர்ர நஷ்டங்களை நினைச்சு கொதிச்சா உடம்பு கெட்டு போயிரும். ஜி.ஹெச் போனா நாறிரும். கார்ப்போரேட் ஆஸ்பத்திரிக்கு போனா கிட்னி வித்து பில் கட்ட வேண்டியதுதான். அதுக்காகத்தான் இந்த பதிவு.

கெட்ட விஷயத்திலும் எத்தனையோ நல்ல விஷயங்க ஒளிஞ்சிருக்கும். அதை எல்லாம் நினைச்சு மனச தேத்திக்கிட்டா
1.பங்க்சுவாலிட்டி வருது.கரெக்டா காலைல எட்டு மணிக்கு பவர் போயிரும்.ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பர பரனு வேலைய முடிக்கிற வழிய பாருங்க. வேலையில வேகம் வருது ( சீக்கிரம் மிக்ஸில சட்னியை அரைச்சு எடு புடுங்கிர போறானுவ)
2.மின் வினியோகம் குறையுது மின் கட்டணம் குறையுது. அதே போல எம்.டி முதல் கொண்டுஊழியர்கள் வரை பவர் கட் ரேஷோவின் படி சம்பளமும் குறைச்சா நல்லாருக்கும்
3.பவர் புடுங்கின உடனே ஜனம் கான்கிரீட் காடுகளிலான தம் கூடுகளிலிருந்து மொட்டை மாடிகளுக்கோ , சாலைக்கோ வருகிறார்கள். இயற்கையுடன்,சக மனிதர்களுடன் கம்யூனிக்கேட் ஆகிறார்கள்
4.ஏழை பணக்காரன் வித்யாசம் குறையுது. செமை சவுண்ட் பார்ட்டிங்க ஜெனரேட்டர் போட்டுக்கறான் அது வேற கதை.
5.காலை நேரத்துல பவர் கட்டானா ஆஃபீஸ் போற தாய் குலம் மிக்ஸி,கிரைண்டரை உபயோகிக்கமாட்டாங்க,ஒன்னு வேலை குறையும். இல்லாட்டி அம்மி, உரல் உபயோகிப்பாங்க ஹெல்த் பிக் அப் ஆகும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கமாட்டாங்க தலை மயிர் பிழைக்கும்
6.விடியல்ல பவர் கட் ஆரம்பிச்சா புழுக்கத்தாலயாவது 9 மணிக்கு எழுந்துக்கற பார்ட்டிங்க வைகறை துயிலெழுவாங்க
7.கணவன் மாரு ( மனைவி “மாரு”னுதான் சொல்ல முடியாதுங்க) பண்ற ஆணாதிக்க அட்டகாசம் குறையும். இவரு நியூஸ் பேப்பர்ல மூழ்கி போயிருக்கிற நேரம் டீப்பாய் மேல காஃபியை வச்சா ” என்ன அறிவில்ல உனக்கு கைல தரணும்னு தெரியாது”ங்கற பிசினஸெல்லாம் வேலைக்காகாது. “ஆமா! நீங்க கைய நீட்டற வரை காத்திருந்தா கரண்ட் புடுங்கிக்கும் .அப்புறம் இட்லிக்கு மிளகாய் பொடிதான் பரவாயில்லயானு ப்ளாக் மெயில் பண்ணலாம். ஆணாதிக்கம் குறையும். பெண்ணுரிமை காக்கப்படும்

மறுபடி அவள் : தொடர் கதை

காலியா போன ஆட்டோவை கை தட்டி கூப்டா .சரி ரூமுக்கு தான் போவா போலனு நினைச்சா பஜாருக்கு போக சொன்னா. சனம் ஒரு வாரம் கர்ஃப்யூக்கு அப்புறம் அப்பத்தான் கடைகளை திறந்த மாதிரி அலைபாஞ்சுக்கிட்டிருந்தாக. எவனோ ஊரை ஏமாத்தவே ரிச் ஃபேஷன்ஸுன்னு ஒரு கடை திறந்திருந்தான்.மாயா ஆட்டோவை அந்த கடை வாசல்ல நிறுத்தி மீட்டர் கட் பண்ணி கடை படியேறினாள். ஜீன், டீ ஷர்ட்டுன்னு இஷ்டத்துக்கு செலக்ட் பண்ணிக்கிட்டிருந்தா. நான் காதோரமா “இதெல்லாம் ஓவராயிருக்கு ..உன் ஸ்ட்ரக்சருக்கு செட்டாவாது கண்ணு ..சித்தூர் சனம் மேல உனக்கென்ன கடுப்பு”ன்னேன் முறைச்சு பார்த்துட்டு இதெல்லாம் உனக்குதான்” என்றாள்.

“அடப்பாவி மகளே! என்னா செலக்ஷனிது? பஞ்சுமிட்டாய் கலர்ல சுப்பர் மேன் பொம்மை, தெலுங்கு தேசம் கலர்ல பூனை பொம்மை.. என்னை என்ன எல்.கே.ஜி பையனு நினைச்சயா? சைஸை பார்ரா ரெண்டு முகேஷ் உள்ளார போறாப்ல.. டீ ஷர்ட்டுன்னா அப்படியே சிக்ஸ் பேக் பாடியையும், கட்ஸையும் காட்டனும்.. கைய மடிச்சு விட்டா அப்படியே கமல் மாதிரி இருக்கனும் ( கதை நடக்கறது 1987லிங்கண்ணா).. என்னை பழி வாங்கனும்னா அதுக்கு இதானா வழி ? இதைவிட ஒரு லாலி பாப் வாங்கி கொடு சப்பிக்கிட்டே வரேன்” என்று புலம்பவே ஆரம்பிச்சுட்டேன்.

” ஜான்தா நை” நீ இதைதான் போட்டுக்கனும். ஆமா இதென்ன தலை குருவிக்கூடு மாதிரி எப்படியும் வெயில் காலம் ஆரம்பிச்சுருச்சு..நல்லா சம்மரா ஹேர் கட் பண்ணிக்க.. புல் தடுக்கிபயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு சிக்ஸ் பேக்காம், கட்ஸாம்” பல் கடிச்சிக்கிட்டே ரகுவரன் ஸ்டைல்ல பேசிட்டு கவுண்டர்ல இருந்தவனை இதெல்லாம் “பேக் பண்ணிருங்க”ன்னிட்டா.

ராகி மால்ட்டு, ஹார்லிக்ஸ்,விவான்னிட்டு மார்க்கெட்ல இருக்கிற சத்து பானமெல்லாம் வாங்கி குவிச்சா. நந்தினில நெய் இட்லி ஆர்டர் பண்ணி சாப்பிட வச்சிட்டு அதோட விட்டாளா ?டவுன் இருக்கிறதலயே பயங்கர ஜிகாவா இருக்கிற சலூனுக்கு கூட்டிப்போயி “சார் ! போலீஸ் செலக்சனுக்கு போறாரு ஷார்ட்டா வெட்டிவிடுப்பா”ன்னிட்டா. நான் முறைக்கிறேன் முறைக்கிறேன் கண்டுக்கிட்டா தானே. பாவம் சலூன் காரன் கரண்ட் சார்ஜுக்கு கூட சிரைக்கலியேனு இருந்தானோ இல்லை திருப்பதில ட்ரெயின் ஆனவனோ ” நக்கி “எடுத்துட்டான். அழுகை அழுகையா வந்தது.

மறுபடி ஆட்டோ ” நேரு ஸ்ட்ரீட் போப்பா” ரூம் கதவு பூட்டை திறக்கறப்பவே முதல்ல குளிச்சுட்டு இந்த புது ட்ரஸ்ஸை போடு.. சூடா ஹார்லிக்ஸ் தரேன். குடி. சரி வராண்டால எதுக்கு வாக்கு வாதம்னிட்டு பேசாம உள்ள நுழைஞ்சேன். மூனு மணி நேரம் சிகரட் இல்லாம லங்க்ஸ் நிக்கோடின் நிக்கோடின்னு அரற்ற ஒன்னை பத்த வச்சேன்.

மாயா நான் சிகரட் பிடிக்கிற ஸ்டைலை ஒரு நிமிசம் பார்த்துட்டு “முகேஷ்! நான் சொன்னா தப்பா நினைக்கமாட்டியே”ன்னா. “என்ன”ன்னேன். ” என்னதான் தொங்கு மீசை வச்சிருந்தாலும், இந்தியாவுல பரவிக்கிடக்கிற வறுமை மாதிரி கன்னமெல்லாம் தாடி முளைச்சாலும் நீ சிகரட் பிடிக்கிறப்பதான் கொஞ்சமாச்சும் ஆம்பளை மாதிரி தெரியறே”ன்னாள். அதுல வேற மாதிரிங்கற வார்த்தைய மா…..திரின்னு இழுத்தாப்ல உச்சரிச்சாப்பாருங்க நவத்வாரமும் எரிஞ்சு போச்சு.

‘ஏய்! என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல. பஞ்சு மிட்டாய் கலர்ல டீ ஷர்ட் வாங்கறே.. போலீஸ் கட் பண்ண வைக்கிறே ..இப்ப என்னடான்னா சிகரட் பிடிக்கிறப்பதான் ஆம்பள மாதிரி இருக்கேங்கறே.. என் ஆண்மைல உனக்கு சந்தேகம் இருந்தா மீனா,ரீனா,சீதா,கீதா,ராதா வேதான்னு யார் கிட்டே வேணம்னா கேட்டுக்க. ஹேர் கட் பண்ணிட்டா குளிச்சித்தான் ஆகனும், ட்ரஸ் மாத்தித்தான் ஆகனும்னு நினைக்கிறே போல. அதெல்லாம் நடக்காது கண்ணு.. காலைல ஹேர் கட் பண்ணிட்டு, அப்படியே டீ அப்படியே டிஃபன், அப்படியே லஞ்ச் அடிச்சு மதியம் 3 மணிக்கு டூர் வண்டிய அனுப்பிட்டு ஒரு பீர் அடிச்சுட்டு படுத்து தூங்கி ராத்திரி 10 மணிக்கு குளிச்ச பார்ட்டி நானு.. எப்டி எப்டி ஆம்பளை மா……திரி யா தேவைதான்”

என் கோபத்தை ஏதோ சுவாரஸ்யமான வீடியோ க்ளிப்பிங்க் பார்த்த தினுசுல பார்த்த மாயா ” நான் சொன்னதுல தப்பே இல்லை. நீ இவ்ள அக்ரசிவா பேசறப்ப கூட உன் முகத்துல பால் வடியுதுரா’ என்றாள்.

“வேணா மாயா .. நீ ஒரு முகேஷை தான் பார்த்திருக்கே..”
“அட உங்கப்பாவ பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியிருந்தது.. உனக்கு ரெட்டை வேற இருக்கா..கூப்டு கூப்டு”
“என்ன நக்கலா? ஆமா நான் அசல் விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ கேட்டுக்கிட்டிருக்கேன்.. ஆமா நீ எதுக்கு எனக்கு ட்ரச் ப்ரசண்ட் பண்ணனும். ஓகோ அடியாள் மாதிரி உங்க வில்லேஜுக்கு போய் பேக்கு மாதிரி ஒதை வாங்கிகிட்டு வந்ததுக்கு மாமூலா? ஆமா என்னை பத்தி என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல .. நான் ரோட்ல நடந்து வந்தா 40 வயசு ஆன்டி கூட முந்தாணைய சரி பண்ணிக்கும் தெரியுமா உனக்கு?”
மறுபடி மாயா முகத்தில் அதே வீடியோ க்ளிப்பிங் சுவாரஸ்யம்.

“த பாரு ! நீ என்னை என்னவோ செய்யப்பார்க்கிறே…எவளையாவது கணக்கு பண்றப்ப உன்னோட இந்த கமெண்ட் , பார்வையெல்லாம் ஞா வந்துருச்சுன்னா அப்புறம் நான் டாக்டர் மாத்ருபூதத்தை தான் பார்க்க வேண்டிவரும்.. நான் வரேன் தாயி ! அய்யயோ பொம்பளைலயே சேர்த்தியில்ல நீ” ன்னிட்டு எந்திரிச்சு தெருக்கதவு பக்கமா திரும்பினேன்.

ஒரே மூச்சுல என்னை நெருங்கின மாயா என் காதை பிடிச்சி ” என்னடா.. நீ ஆம்பள சிங்கமா? உன் மூஞ்சியும் நீயும்.. ஃபீடிங் பாட்டில்தான் தெரியுதுரா உன் மூஞ்சில.. எப்டி எப்டி நான் போய் உன் லவர்ஸ்கிட்டே கேட்கனுமா உன் ஆண்மைய பத்தி அறுத்து எறிஞ்சிருவன். போய் ஒழுங்கா குளிச்சிட்டு நான் வாங்கி கொடுத்த ட்ரஸ்ஸ போட்டுக்கற வழியபாரு”ன்னா..

சாதாரணமா வேற யாராவது ஒரு பொம்பளை ,பொம்பளை என்ன கிழவியாவே இருந்தாலும் இந்த மாதிரி பேசியிருந்தா அப்படியே கமல் சார் மாதிரி இழுத்து ஒரு இங்கிலீஷ் கிஸ் கொடுத்திருப்பேன். அதென்னவோ தெரியல மாயா முகத்துல இருந்த ஒரு வித அலட்சியம், என் மேலான பரிபூரண நம்பிக்கை, தானேதோ இந்த பூமியில பிறந்த எல்லா குழந்தைக்கும் அம்மா மாதிரியான ஃபீலிங்க் அதை என்னன்னு சொல்ல தெரியலை … என்னை சிலையாக்கிருச்சு, அடுத்த செகண்ட் தலைய உதறிக்கிட்டு சாதாரணமானேன். குளிச்சுட்டு மாயா வாங்கின ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு ஸ்கூல் பையன் மாதிரி அட்டென்ஷன்ல நின்னு ‘ குட்மா ……….ர்னிங்க் டீச்சர்!”ன்னேன்.

மாயா சிரிச்சா பாருங்க ஒரு சிரிப்பு.. அதை சிரிப்புனு சொன்னா எனக்கு மொழியே தெரியாதுனு அர்த்தம். அந்த சிரிப்பு அப்படியே வெடிச்சது. க்ளைமோர் பாம் மாதிரி வெடிச்சது. சிரிச்சா சிரிச்சுக்கிட்டே இருந்தா அவளோட கண்கள்ள் கண்ணீர் மாலை மாலையா கொட்டுது சிரிச்சுக்கிட்டே இருக்கா.சிரிச்சுக்கிட்டே கிச்சனுக்கு போய் ஹார்லிக்ஸ் கலந்துக்கிட்டு வந்து கொடுத்தா.

நான் “மாயா ! எங்கம்மா 1984லயே செத்துட்டாங்க. கவர்ன்மென்ட் எம்ப்ளாயியா இருந்தாலும், ரிலீஸிங்க் அதாரிட்டியா இருந்தாலும் எங்கப்பா ஹானஸ்ட் மேன். பாவம் மாவட்டம் மாவட்டமா தூக்கியடிச்சாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்ந்ததை என்னால பார்க்கவே முடியாம போயிருச்சு. அவரு சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரவும் எங்கம்மா யூட்ரஸ் கேன்சர் வந்து செத்துப்போகவும் சரியா இருந்தது. பேசாம எங்கப்பாவ கல்யாணம் கட்டிக்கிறியா ‘ என்றேன்.

பலான ஜோக்+ சைக்காலஜி

அய்யா ,
பலான ஜோக் படிந்தவரே ஒரு செகண்ட்.. இன்னைக்கு மறுபடிஅவள் தொடர்கதையோட புது அத்தியாயம், பவர் கட்டினால் நன்மைகள் என்று மேலும் 2 பதிவுகள் போட்டிருக்கேன். தவறாம படிங்க. உங்க கருத்தை தெரிவிங்க. ஓகே ஜூட் …

நம்ம வெங்கடேஷுக்கு வயசாயிருச்சு. ( வெங்கடேஷை மறந்துட்டிங்களா நிறைய பலான ஜோக்ல இவன் தான் ஹீரோ.ஜொள்ளு பார்ட்டி. பணவிஷயத்துல கெட்டி,. ஆசை, ஆத்திரம் அதிகம்.அறிவும் கம்மி தாக்கத்தும் கம்மி.) பலான ஆட்டம் எல்லாம் க்ளோஸ் ஆயிருச்சு.

ஆனா தூக்கத்துல அசிங்க அசிங்கமா உளற ஆரம்பிச்சுட்டான். அவன் இம்சை தாங்க முடியாம சைக்கிரியாட்ரிஸ்ட் ஒருத்தர் கிட்டே கூட்டிப்போனாங்க. சைக்ரியாட்ரிஸ்ட் ஒரு சார்ட் பேப்பர்ல மார்க்கரால ஒரு புள்ளி வச்சாரு.

“இதை பார்த்தா என்ன தோணுது? “
“என்ன டாக்டர் இது ‘அதை’ போயி லாங் ஷாட்ல வரைஞ்சிருக்கிங்க”

சைக்கிரியாட்ரிஸ்ட் ஒரு வட்டத்தை “O” வரைஞ்சாரு.

“இதை பார்த்தா என்ன தோணுது? “
” இது போய் பெரிய விஷயமா ? எவளோ காலை அகட்டி தூங்கிக்கிட்டிருக்கா”

சைக்கிரியாட் ரிஸ்ட் சார்ட்ல ஒர் ப்ராக்கெட்” () ” வரைஞ்சாரு”

“இதை பார்த்தா என்ன தோணுது? “
“குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கா”

சைக்கிரியாட்ரிஸ்டு கடுப்பாயிட்டாரு. மார்க்கரை டேபிள் மேல வீசியெறிஞ்சாரு
நம்மாளு அதை பார்த்ததும். இது தான் இதுவேதான் என் பிரச்சினைன்னான்.

சில காரியங்களை செய்யறத விட கற்பனை பண்ணிக்கிறது சுகம். உதாரணமா காதலியோட அடுத்த பிறந்த நாள். அதுக்கு நாம தரப்போற கிஃப்ட்.

சில காரியங்களை நினைச்சு பார்த்துக்கறது சுகம். நாம அரை ட்ராயர் போட்டு திரிஞ்ச சமயம் கனவுக்கன்னியா தோணின ..அக்கா.

சில காரியங்களை (அதாங்க பலான காரியத்தை மட்டும் ) கற்பனையும் செய்யக்கூடாது, நினைச்சும் பார்க்க கூடாது செய்துர்ரதுதான் பெட்டர். நம்ம வெங்கடேஷ் மாதிரி செய்யவேண்டிய காலத்துல நினைச்சு பார்த்துக்கிட்டும், கற்பனை செய்துக்கிட்டும் இருந்துட்டா சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க வேண்டியதாயிரும்.

நம்ம வெங்கடேஷ் இளமைல கொஞ்ச நாள் திருடனா கூட வாழ்ந்திருக்கான். ஒரு நாள் ஒரு முன்னாள் நடிகையின் வீட்டில் திருடப்போனான். “கத்திய காட்டி பீரோ சாவி எங்கே”னு மிரட்டினான். அவள் ” அட கருமமே ! இல்லாத இல்லாத ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஆம்பளை என் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான். ஆனா என்ன புண்ணீயம் எடுத்துக்காட்ட கத்திய தவிர வேறெதுவும் இல்லாதவனா இருக்கானே” ன்னு கண்ணீர் விட்டா.

பெண்கள்ள நிறைய பேரு நான் பொம்பளை எனக்கு அழகுதான் அழகு, அழகுதான் பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க. ஆனால் ஜஸ்ட் அந்த அஞ்சு நிமிஷமோ , இல்லே அந்த எண்ணம் வந்த பிறகோ தான் ஆண் ஆணாவோ, பெண் பெண்ணாவோ ஃபீல் பண்றாங்க. மத்த நேரமெல்லாம் நாமெல்லாரும் மனித பிறவிகள். பயம், பசி,கண்ணீர், வலி, இயற்கை உந்துதல் எல்லாமே ஆண்,பெண்ணுக்கு பொதுவானவை. இந்த கான்செப்டை புரிஞ்சிக்காம “ஃபிலிம்” காட்டியே வாழற பொம்பளைங்க தலையெழுத்து இது மாதிரி தான் முடியும்.

நீங்க கவனிச்சிருக்கமாட்டிங்கனு நினைக்கிறேன் இளம் வயசுல எப்படி பால் வேற்றுமை இல்லாம பழகறோமே அதே நிலை நடுத்தர வயசை தாண்டின பிறகு வந்துருது. அப்போ முட்டிவலில இருந்து “சகலமும்” பரிமாறிக்கொள்ளப்படும். ஏண்டான்னா “விஷயம்” தீர்ந்து போவுதில்ல.

மேலும் வயசான பெண்களை பார்த்தா அவங்கள்ள ஆண்மை மிளிரும். வயசான ஆண்களை பார்த்தா அவிகள்ள பெண்மை மிளிரும். அதான் ஆண்மையும்,பெண்மையும் தீர்ந்து போச்சுல்லா. ஆண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த பெண்மையும், பெண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த ஆண்மையும் வயசான காலத்துல வெளிப்படும். பாட்டிகள்ள சில பேருக்கு தாடியெல்லாம் வருதுங்கோவ்.

ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல ஃப்யூஸ் போயிருச்சு. ஹாஸ்டல் வார்டன் ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு போன் பண்ணாங்க.துள்ளலா ஒரு லைன் மேன் வந்தாரு. வார்டனம்மா ” ம் ம் ..உள்ள போங்க”ன்னு அனுப்பினாங்க. உள்ள போனவரு ஒரு மணி நேரம் வரைக்கும் வெளிய வரவேயில்லை . வார்டனம்மா ரூம் ரூமா தேடிக்கிட்டே போனாங்க.கடைசி ரூம்கிட்டே டஸ்ட் பின் கிட்டே குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடந்தாரு லைன் மேன். உடனே வார்டனம்மா ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு மறுபடி போன் போட்டாங்க ” உடனெ இன்னொரு லைன் மேனை அனுப்பச்சொன்னாங்க”

அந்தப்பக்கம் அடிஷ்னல் இஞ்சினீர் “உங்க ஹாஸ்டலுக்கு லைன் மேனை அனுப்பி ஒரு மணி நேரமாச்சு.அவருக்கு என்ன ஆச்சு”ன்னாரு

வார்டனம்மா சொன்னாங்க ” ஹெவி ஓல்டேஜ் காரணமா நீங்க அனுப்பின லைன் மேனுக்கு ஃப்யூஸ் போயிருச்சு”

இந்த வகைல ஏராளமான ஜோக்ஸ் செலாவணில இருக்கு. ஆனால் உண்மை நிலவரம் என்னடான்னா லெஸ்பியனா இருக்கக்கூடிய பெண்கள், லெஸ்பியனா மாறக்கூடிய ஊசலாட்டத்துல இருக்க கூடிய பெண்கள் வேணம்னா தங்களுக்குள்ள அப்படி இப்படி இருப்பாகளோ என்னமோ தவிர லைன் மேனுக்கு ஃப்யூஸ் பிடுங்கிற அளவுக்கெல்லாம் போகமாட்டாங்கனு தான் நினைக்கிறேன்.

மேலும் இந்த மாதிரி சமாச்சாரத்துல பெண், பெண்ணோட கூட்டு சேர்ரது அப்புறம் கதை. லவ்வுக்கு தூதா அனுப்பவே க்ரூப்ல இருக்கிறதிலயே டம்மி பீஸாதான் செலக்ட் பண்ணிக்குவாக. அப்படியிருக்க ஃப்யூஸ் பிடுங்கற அளவுக்கு போறதெல்லாம் அதீத கற்பனை தான்.

ஆண்கள் வேணம்னா ” மச்சான்.. என் லவ்வு உனக்கு தங்கச்சி மாதிரி .. என்ன சொன்னேன் தங்கச்சி மாதிரி “ன்னு ப்ரெயின் வாஷ் பண்ணி லவ் மேட்டர்ல கூட ஃப்ரெண்ட்ஸை கட் பண்ணி விடாம மெயின்டெயின் பண்ணுவாங்களே தவிர பெண்கள் இந்த விஷயத்துல ரொம்பவே உஷார். அவிகளுக்கு தெரியும் தங்களுக்கு ஆப்பு வைக்கப்போறது யாருன்னு. ஒரு அரை முழம் பூவிலயோ, வதங்கி போன ஒரு டிசம்பர் பூ காரணமாவோ 10 வருசம் பேசாம இருந்த தோழிகளை கூட நான் பார்த்திருககேன்.

ஆண்கள் உலகம் பெண்களை கேவலம் மேடு,பள்ளமா மட்டும் பார்க்கிற காரணத்தால ஆண்கள் உலகத்துல இப்படிப்பட்ட ஜோக்கெல்லாம் பிரபலமாயிருக்கு.
ஆனால் ஒன்னுங்க எங்க ஊர்ல ஒரு இளந்தலைவர் தன்னோட முக்கிய ஆதரவாளர்கள் நாலஞ்சு பேரோட பெண்டாட்டிகளை பிக் அப் பண்ணிட்டதோட அந்த நாலஞ்சு பேரையும் க்ரூப்பா கூட்டிக்கிட்டு “தங்க” போன கதைய கேள்விப்பட்டிருக்கேன்.

உன்னால தான் ! நோ நோ உன்னாலதான் !

இது ஏதோ கல்யாணமாகாத கன்னிப்பெண்ணும் அவளோட காதலனும் கர்பத்துக்கப்புறம் பேசிக்கிற டைலாக் மாதிரியிருந்தா ஐம் சாரி. நான் ஆந்திர மானிலத்துல நக்ஸல்ஸுக்கும், மத்திய  உள் துறை மந்திரி சிதம்பரத்துக்குமிடையில நடக்கிற விவகாரத்தை சொல்ல வந்தேன்.

கண்ணி வெடில சாகற போலீஸ் மேலயோ , என்  கவுண்டர்ல சாகற நக்சல்ஸ் மேலயோ நமக்கு ( ஹி ஹி எனக்கு) சிம்பதி கிடையாது. ஏன்னா நக்ஸல் அவனோட லட்சியத்துக்காக ஃபைட் பண்றான், போலீஸ் அவன் வயித்துபாட்டுக்காக ஃபைட் பண்றான். ஆனால் ரெண்டுப் பக்கமும் அடி வாங்கற மத்தளம் கதையா நாசமா போறது மக்கள் தான்.

என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர்  கூட இவிகளோட பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தாச்சு. அதாவது ஏதோ  மந்திரி பேசுவாரு, அவருக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்க ப்ளு ப்ரிண்ட் கொடுப்பாங்க. இந்த பேச்சு வார்த்தைங்கறதே ஒரு கலை. இது இந்த ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் பார்ட்டிகளுக்கு ஒரு ம…ரும் தெரியாது. இவிக கான்வென்ட்ல படிச்சுட்டு தன் முன்னே தெரியற புல் கட்ட திங்க தலைய அசைச்சு அசைச்சு முன்னுக்கு ஓடற பட்டை கட்டின குதிரைக மாதிரி . ஏதோ கொஞ்சம் சமுதாயத்தோட இருந்த கம்யூனிகேஷனும் ஏ.சி. ரூம்லவேலைன்னு போன பிறகு உசோ ஆயிருது. அவரு அவரு சேம்பர்ல இருக்கிற வரை பெருமாள் மாதிரி எல்லாரும் அவருக்கு ஆராதனை. மந்திரி வந்துட்டா இவர் அவருக்கு செருப்பு தூக்கனும்

செருப்புன்னா ஞா வருது   நீதி மன்றத்துல , கோர்ட் நடக்கிற நேரத்துல கர்னூல் நீதிபதியை அதே கோர்ட்ல வேலை செய்யற பெண் டைப்பிஸ்ட் செருப்பாலடிச்சிருக்காங்க. தங்களுக்கு  கீழ வேலை செய்யற  அதிகாரிகளை, ஊழியர்களை கொத்தடிமையா நடத்தறதுல போலீஸ் டிப்பார்ட்மென்டை விட  கோரமான டிப்பார்ட்மென்ட் நீதித்துறை. போலீஸ் டிப்பார்ட்மென்ட்லயாவது “ஐயா” பெரிய ஐயாவுக்கு சேவகம் பண்ண போனப்ப காம்பவுண்டுக்குள்ள சக ட்ரைவர் கிட்டே இதையெல்லாம் பேசி மனச ஆத்திக்கலாம். நீதித்துறைல அந்த இழவு கூட கிடையாது.

யாரோ சொன்னாங்க ஒரு பெண் நீதிபதி. அவிகளை புருசன் காரன் செமை இம்சை கொடுத்து விவாகரத்து வாங்கின கேஸு அந்தம்மா. அவிக கோர்ட்ல ஆம்பளைனு சொல்லிக்கிட்டு ஒரு புழு போய் பெயிலுக்கு அப்ளை பண்ணா கூட  பேராதாம். பொய் கேசா இருந்தா கூட அந்த ஆம்பளை ஜெயிலுக்கு போயே ஆகனும். இதே நீதிபதி கிட்ட நான் ஸ்டெனோவா இருந்திருந்தா என்னாயிருக்கும் ? உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

சரி ரொம்பவே டைவர்ட் ஆயிட்டம் விஷயத்துக்கு வந்துர்ரன். ஆங் ! நக்சல் பேச்சு வார்த்தை. தமிழ் நாட்ல எழுத்தாள பெருந்தகைகள் விஷயம் எப்படியோ எனக்கு தெரியாது. ஆந்திராவை பொருத்தவரை எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் ,மனித உரிமைகளுக்கான சுதந்திர அமைப்புகளுக்கெல்லாம் நக்சல்ஸ் மேலே நல்ல சிம்பதி இருக்கு.

அவிக எங்கயோ காட்டுக்குள்ளாற இருந்தாலும் இவிக அவிகளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டே இருப்பாக. (தமிழ் நாட்ல ஈன்னு சிரிச்சா கூட ஈழங்கறான்னு தூக்கி உள்ளாற போட்டுர்ராங்களாமே நிஜமா ?

சரி பழைய கதை எதுக்கு ..லேட்டஸ் டெவலப்மென்டை பார்ப்போம்.
ஆயுதங்களை கைவிட்டால் நக்சல்ஸுடன்  பேச்சு வார்த்தைக்கு தயார்னு – மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம் அறிவிச்சது நினைவிருக்கலாம்.

இதையடுத்து  நக்சல் தலைவர் கிஷன் ஜி ”  72 நாட்களுக்கு துப்பாக்கி சூடு நிறுத்தம் அறிவிச்சு  பேச்சு வார்த்தைக்கு தயார்னு அறிக்கை  உட்டார். அப்புறமா தான் அசல் கதையே .. செமை காமெடிபோங்க..

(அஸ்கு புஸ்கு) அறிக்கை  எழுத்துப்பூர்வமா இருக்கனும். என் ஃபேக்ஸ் நெம்பருக்கு ஃபேக்ஸ் பண்ணுங்க
– மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

பண்றோம். இதோ இந்த நெம்பருக்கு கால் பண்ணுங்க
– நக்சல் தலைவர் கிஷன் ஜி

ஃபேக்ஸ் வரவேயில்லை.
– மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

நக்சல்ஸ் கொடுத்தது போலீஸ் கான்ஸ்டபிள்  நெம்பர் . யாரும் எடுத்து பேசவே இல்லை
– மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

இவிக எம்மாத்தம்  பொறுப்பா நடந்துகிடறாங்களோ பார்த்தியளா ? இவிகளை எல்லாம் நம்பி நடுக்கூடத்துல பாதி ராத்திரி வரை சீரியல் பாக்குதுங்களே அதுகளை சொல்லனும்.

தெலுங்கானாவில் இரண்டு மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களும் மானில சராசரியை விட அதிக வளர்ச்சி. இதர பகுதிகளில் 4மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.
-ஜெயபிரகாஷ் நாராயண், தலைவர், லோக் சத்தா

மறுபடி அவள் ‍ தொடர் கதை

மாயா அந்த விடிஞ்சும்   விடியாத சமயத்துல  கெய்சர்ல தண்ணி போட்டு தந்தா குளிச்சேன். உடல் துவட்டி அவள் தந்த அவளோட வெள்ளை நிற சல்வார் கமீஸை உடுத்திக்கிட்டேன். சூடா ஒரு கப் பால் கொடுத்தா தூக்கம் கண்ணை சுழட்ட சோஃபாலயே படுத்துட்டன். ஜன்னல் வழியா வெயில் சுள்ளுனு அடிக்குது.  நேத்துபோட்டிருந்த பேண்ட் சட்டை அயர்ன் பண்ணி கிடக்கு.எடுத்து உடுத்திக்கிட்டேன். வாஷ் பேசின்ல வாய் கொப்பளிச்சு முகம் அலம்பிக்கிட்டிருந்தேன். கண்ணாடில பாத்ரூம் கதவு திறக்கறதும் மாயா டர்க்கி டவலை மட்டும் கட்டிக்கிட்டு வெளிய வர்ரதும் தெரிஞ்சது. நான் “க்கும்”னு கனைச்சேன். என்னை திரும்பி பார்த்த  அவளோ எள்ளளவும் டென்ஷனாகல. தலைக்கு கட்டியிருந்த டவலை பிரிச்சு உதறி தலை துவட்ட ஆரம்பிச்சா. சின்ன சிரிப்போட ” என்ன நல்ல தூக்கமா?”ன்னு கேட்கிறா.

எனக்கு கில்ட்டியா இருந்தது. “மாயா நான் புறப்படறேன்”னேன். அவளோ நத்திங் டூயிங். உனக்காக ஸ்பெஷல் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி பண்ணியிருக்கேன்.ரெண்டு பேரும் சாப்டுட்டு ஸ்ட் ராங்கா ஒரு காஃபி சாப்டுட்டு ஒரே ஆட்டோல ட்ராவல்ஸுக்கு போறோம். டைம் என்னாச்சு தெரியும்லன்னிட்டு கடிகாரத்தை காட்டினா.  நான் டிவி ரிமோட்டை எடுத்து கையில வச்சுக்கிட்டு சட்டை பாக்கெட்டை தடவினேன். அதை பார்த்த மாயா “என்ன சிகரட் பாக்கட்டை தேடறியா இந்தா”ன்னிட்டு சிகரட் பாக்கட்டையும் தீப்பெட்டியையும்  என் மேல வீசினா.   நான் சிகரட்டை பத்த வச்சிக்கிட்டு யோசிச்சேன்.

எனக்கும் மாயாவுக்கும் இடையில உள்ள விசித்திரமான உறவை எந்த கேட்டகிரில சேர்க்கிறதுன்னே புரியலை. மாயா எப்போ ட்ரஸ் மாத்தினா ,எப்போ மேக்கப் பண்ணிக்கிட்டா, எப்போ கிச்சனுக்குள்ள நுழைஞ்சா எப்போ டிஃபன் கொண்டு வந்தான்னு கூட  கவனிக்கல. என்னென்னவோ குருட்டு யோசனை. அப்போ என் தலைல ” நங்” குனு ஒரு குட்டு. ஏய் முதல்ல டிஃபன்  வேலையாகட்டும் அப்புறம் யோசிக்கலாம்னா. மவுனமா சாப்பிட்டேன்.

“இதான் சாப்பிடற லட்சணமா? தட்டை பார்த்து சாப்பிட்டா என்ன.. இதென்ன அல்சர் பேஷண்ட் மாதிரி இட்லிக்கு சட்னியை காட்டி காட்டி சாப்பிடறே .  நல்லா தொட்டு சாப்பிடு” மாயாவின் அதட்டல்கள் என் சிந்தனைவலைய அறுக்க முடியவில்லை. அறையை லாக் செய்து ஹேண்ட் பாகுடன் படியிறங்க ஆட்டோ வந்து நின்றது. நான் ஆச்சரியமாக பார்க்க ” ஏய் முகேஷ் ! என்ன தூக்க கலக்கம் போகலியா இன்னும் ஏறு ஆட்டோல” என்று என் தோளை பிடித்து தள்ளினாள் . மவுனமாய் ஆட்டோ ஏறினேன்.

மாயா  எங்கள் ட்ராவல்ஸ் ஆஃபீஸ் அருகே இறங்கிகொள்ள நான் பக்கத்திலிருந்த ஓனர் வீட்டுக்கு சென்று சாவி வாங்கி ஆஃபீஸ் திறந்தேன். சற்று நேரத்தில் முனியம்மா வர ஆஃபீஸ் சுத்தமானது.  சாமி படத்துக்கு ஊதுவத்தி கொளுத்த கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம் என் அப்பா நிற்பது தெரிந்தது. 

அந்த கால டைரக்டர் பாலசந்தர் மாதிரி காதோரம் நரைச்ச க்ராப், பட்டை ப்ரேம் கண்ணாடி, கம்பளி பூச்சி கணக்கா அடர்த்தியான புருவம். ஹிட்லர் மீசைக்கு ரெண்டு பக்கம் அரும்பு மீசை ஒட்டிவச்ச மாதிரியான மீசை , கொட்டிப்போன தலை முடி கொடுத்த கூடுதல் நெற்றியில் விபூதி பட்டை, இரண்டு புருவங்களுக்கும் நடுவே தீக்குச்சியின் மருந்து முனையளவே   குங்கும பொட்டு,  காதுகள்ள இருந்து கரப்பான் பூச்சி மீசைய மட்டும் ஆட்டிக்காட்டற மாதிரி புஸு புஸு முடி. வெள்ளை கலர் அரைக்கை சட்டை ,ப்ளாக்  கொரியா பேண்ட். அப்பாவை பார்த்ததும் சீரியசா ஸ்லோகமெல்லாம் சொல்லி சாமி படங்களுக்கு அனாவசியமா மறுபடி மறுபடி ஊதுபத்தி புஐ காட்டினாலும் அப்பா அசையறதா காணோம். ஊதுவத்திய அதுக்கான ஸ்டாண்ட்ல செருகிட்டு வெளியே வந்தேன். அவர் உள்ளயே இரு இதோ வந்துட்டேன்னு மூக்கை நல்லா சிந்திட்டு ஃப்ரஷ்ஷா  இன்னொரு  சிட்டிகை மூக்கு பொடியை ரெண்டு ஓட்டைலயும் பேக் பண்ணிக்கிட்டு கர்சீஃபை கயிறு மாதிரியாக்கி மூக்கு  முனைய ஒரு தேய் தேச்சுட்டு உள்ள வந்துட்டாரு.

மாயா தலை நிமிர்ந்து அவரை பார்த்துட்டு என்னை பார்த்தாள்.மாயாவுக்கு என் அப்பாவ பத்தி நிறைய சொல்லியிருக்கேனே தவிர அவள்  நேர பார்த்ததில்ல. சுருக்கமா “அப்பா”ன்னேன். உடனே எந்திரிச்சு நாடகத்தனமா கை கூப்பி ” நமஸ்தே”ன்னா. அப்பா என்னதான் ஏகபத்தினி விரதனா இருந்தாலும் பொம்பளைங்க அதுவும் ச்சுமாரா இருக்கிற பொம்பளைங்களை பார்த்தா கொஞ்சம் அதிகமாவே பேசுவார். அதுலயும் அந்த சந்தர்ப்பத்துல என்னை காச்சனும்னா உபமானம், உபமேயமெல்லாம் ஏ.சி.பி ரெயிட்ல லஞ்சப்பணம் மாதிரி கொட்டும்.

“எங்கடா போயிருந்தே.. ஒரு நாளைப்போல ராத்திரி 12 ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தே இப்போ வெளிய ராத்தங்க கூட ஆரம்பிச்சுட்டயா? அப்படி என்னடா புடுங்கற வேலை..ராத்திரியெல்லாம்  எவளோட இருந்த?”

என் அப்பா இதை விட மோசமாக தேவகவுடா ரேஞ்சில் எல்லாம் பேசினதுண்டு.  ஆனால் இப்ப மாயா எதிர்லன்னும் போது கொஞ்சம் சுர்ருன்னுச்சு. மாயாவோட முகத்தை பார்த்தேன். அதுல சின்ன கீறல் மாதிரி ஒரு சிரிப்பு. மாயா சகஜமா எடுத்துக்கிட்டாங்கறது கன்ஃபார்ம் ஆனதுமே அப்பா புலம்பலை கன்டின்யூ பண்ணிட்டார்.

“நான் தான் சொல்லியிருக்கேன் இல்லியா ராத்திரி எந்த நேரத்துக்குன்னாலும் சரி வீட்டை வந்து சேரு, பெல்லடிச்சா நான்  வந்து திறக்கறேன்னு சொல்லியிருக்கெனில்லயா..இன்னம் என்னடா கேடு உனக்கு? உண்மைய சொல்லு ராத்திரியெல்லாம் எங்கே இருந்தே?”

நான் அந்த நேரத்துக்கு  நல்ல  பிட்டா எதை  போடலாம்னு  யோசிச்சிட்டிருந்தப்போ மாயா , “அங்கிள் ! ராத்திரி முகேஷ் என்னோட தான் எங்க வில்லேஜுக்கு வந்திருந்தாப்ல. எங்க  சொந்தக்காரங்க திருமலால  கல்யாணத்துக்கு நம்ம கிட்டே தான் பஸ் புக் பண்ணியிருந்தாங்க. ட்ரைவருக்கு பக்கத்து வில்லேஜ்ல தான் வீடு.   பாவம் அவனுக்கு இந்த வாரமெல்லாம் ரெஸ்டே கிடையாது  .அவன் தான்  முகேஷு! வண்டிய  ராத்திரி வில்லேஜுக்கு கொண்டாந்துரு அப்பறம் நான் திருமலா போறேன்னு கெஞ்சிக்கிட்டான்” ன்னா.

என் அப்பாவுக்கு வந்ததே கோபம் ” நல்லாருக்கும்மா நீங்க பண்றது. அசலே இவன் குரங்கு. இவனை நம்பி நான் டூவீலர் கூட வாங்கி தரலை நீங்க பஸ்ஸையே கொடுத்திருக்கிங்க. ஒரு நாள் என் டிவிஎஸ்ஸை எடுத்துக்கிட்டு போனான் . எவ்ளதான் ஸ்பீட் போனான்னு தெரியாது இஞ்சின் சீஸ் ஆயிருச்சு. இவனை போய் ட்ரைவரா போட்டு..  ” தொடர்ந்து பேச வார்த்தைகள் வராம அவர் தவிக்க மாயா இடை மறிச்சு பேச ஆரம்பிச்சாள்.

” அதான்..அதேதான் ஒரு நாள் இவன் வண்டில ஏறினேன் அங்கிள் அய்யய்யோ வண்டில போறோமா ஏரோப்ளேன்ல போறமானு சந்தேகம் வந்துருச்சு.கண்ல தண்ணியா கொட்டுது .. அந்தமாதிரி ஓவர் ஸ்பீட் போய் எதுனா ஆயிரபோவுதுன்னு நானும் கூடப்போனேன் அங்கிள். கல்யாண கோஷ்டி எல்லாம் புறப்பட பாதி ராத்திரி ஆயிருச்சு. அந்த நேரத்துல எதுக்கு ஜர்னின்னு நான் தான் எங்க வீட்ல படுத்துக்க சொல்லிட்டன் அங்கிள். வீட்ல அக்காங்க, மாமாங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பையன் அரவிந்த் சாமி மாதிரி க்ளாஸா இருக்கான். மாஸா டூர் பஸ்ஸ ஓட்டிக்கிட்டுவந்தனான்னு ராத்திரியெல்லாம் செம உபச்சாரம் முகேஷுக்கு”

குறைஞ்சது அரை மணி  நேரமாவது காச்சியிருக்க வேண்டிய மனுஷன்  சுதியிறங்கி போய் “சரிம்மா.. இந்த ஒரு தடவை சரி .இனி எப்பவும் இவனை நம்பி ஸ்டீரிங்கை கொடுக்காதிங்க”ன்னிட்டு எதிர்க்க நாயர் கடைல டீ வரவச்சு குடிக்க வச்சுட்டு இன்னொரு பாட்டம் மூக்குப்பொடி போட்டுக்கிட்டுத்தான் போனார்.

அவர் போனதும் மாயா சுத்தி முத்தி பார்த்துட்டு என் தொடைல கிள்ளி “படுவா ராஸ்கல் என் கிட்டே வரப்ப மட்டும் 9 ஆச்சு 9.10 ஆச்சுனு விவிதபாரதி மாதிரி டைம் சொல்வே . பாதி ராத்திரி வரை எங்கே போற  நீ..” என்றாள்.

” அதெல்லாம் நீ கேட்க கூடாது .. நான் சொல்லக்கூடாது.”ன்னு கலாய்ச்சிக்கிட்டு இருந்தபப் ஒரு ஐயப்ப சாமி கோஷ்டி வந்தது. வியாபாரத்துல மூழ்கிட்டோம். ஒன்னு பின்னால ஒன்னு ஏதோ கமிட்மென்ட் ரோட் டாக்ஸ் கட்டறது, அடுத்த மாச டூருக்கு பாம்லெட் ,போஸ்டர் ரெடி பண்றதுன்னு  நேரம் ஓடிப்போச்சு.

வெள்ளிக்கிழமைகள்ள ராத்திரி  பூஜை போட்டுட்டு  7.30  மணிக்கே ஆஃபீஸ் க்ளோஸ் பண்றது வழக்கம். ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடக்கிறப்ப மாயா  “இன்னைக்கு  நீ 9 ஆச்சு 9.10 ஆச்சுனு சீன் போட்டு தப்பிக்க முடியாது. உங்கப்பா தான் ராத்திரி 2.30 மணிக்கு கூட வா கதவு திறக்கறேன்னிட்டாரே “ன்னிட்டு  கண் சிமிட்டி மர்மமா சிரிச்சா.

(தொடரும்

நவீன விக்கிரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் புளிய  மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை வெட்டி வீழ்த்தினான். அதை தன் தோளில் சுமந்தபடி நடந்தான்.அதுவரை மவுனமாக இருந்த வேதாளம் கல கலவென்று சிரித்தது. “மன்னனே ! அறிமுக எழுத்தாளன் எத்தனை முறை தன் படைப்புகள் திரும்பி வந்தாலும், எத்தனை ஆண்டுகளுக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தாலும் மீண்டும் மீண்டும் கதை எழுதி அனுப்புவதை போல் நீயும் சளைக்காமல் என்னை சுமந்து செல்லவே பார்க்கிறாய். சரி அலுப்பு தெரியாமல் இருக்க ஒரு கதை சொல்கிறேன் கேள். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை லேண்ட் மைன் மீது தலை வைத்து படுத்தாற்போல் சிதறிவிடும் ஓகேவா ” என்றது.

 விக்கிரமாதித்தனும் ” என்னடா இது லொள்ளா போச்சு நானும் என்.டி.ஆர், எஸ்.வி,ரங்கா ராவ் காலத்துல இருந்து இதையே செய்துட்டிருக்கேன். இந்த வேதாளம் கேள்வி கேட்குது பதில் க்ளிக் ஆகுது பதில் தெரிஞ்சும் சொல்லலன்னா தலை வெடிச்சுருமேனு சொல்லித்தொலைக்கிறேன்.வேதாளம் மவுனம் கலைஞ்சு மறுபடி பு.மரத்துக்கே போயிருது. மறுபடி அடியை பிடிடா பரதப்பட்டானு ஆயிருது.” என்று சிந்தித்தபடி “அப்படியே ஆகட்டும் வேதாளமே” என்றான். வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.

இந்தியாவுல .. ஒரு மானிலம். அங்கே ஒரு சுமார் டவுன். அங்கே ஒரு  விளம்பர ஏஜென்சி. வில்லேஜ்ல இருந்து வந்து வயித்துபாட்டுக்காக  டவுனுக்கு வந்த இளைஞன்  அதுல வந்து சேர்ந்துட்டான். அங்கே ஒரு குடிகார ஆர்ட்டிஸ்ட். வேலைல புலினு வை. ஆனால் மொடா குடியன். புதுப்பையன் வந்தானா அந்த குடிகார ஆர்ட்டிஸ்டுக்கு எங்கில்லாத வேகம் வந்துருச்சு. பையனை தன் சிஷ்யனா ஸ்வீகரிச்சிக்கிட்டான். காலப்போக்குல புதுப்பையன் நல்ல கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டா தயாராயிட்டான்.

தனியா போய் கடை போட்டான். தொழில் நல்லாவே சூடு பிடிச்சது கல்யாணமுமாச்சு. இரண்டு குழந்தைகளையும் பெத்துட்டான்.  மாசத்துல எப்பவோ ஒருதரம்னு இருந்த குடி வாரம் ஒரு தடவையாச்சு. அப்புறம் தினமும்னு ஆச்சு. அப்புறம் மதியம் ஒரு குவார்ட்டர், ராத்திரி  ஒரு குவார்ட்டர்னு ஆச்சு. வசதி ஜாஸ்தியானபிறகு பெண்டாட்டிய பார்த்தா வேலைக்காரி மாதிரி இருக்காளேனு தோணுச்சு. பார்ட்டிங்களை என்னதான் சத்தாய்ச்சாலும் வாரக்கணக்குல திரிஞ்சு வேலை செய்துகிட்டு போனாங்க.

அந்த நேரம் பார்த்து மாலா அறிமுகமானாள். இவனா ருசி கண்ட பூனை. அவளா பருவத்தின் வாசல்ல இருந்தா.பெட்ரோல் இல்லாமயே பத்திக்கிச்சு.அவள் கர்பமானாள். விஷயம் தெரிஞ்சு பொண்ணு வீட்டுக்காரங்க ரெண்டாமரம் தெரியாம சுத்தம் பண்ணி வீட்ல வச்சுக்கிட்டாங்க. இவனா சாதாரணமாவே அலைபாயற புத்தி. குடி வேற ஓவரா போயிட்டே இருக்கு. மறுபடி இவன் புத்தி அந்த பக்கம் திரும்புச்சு. அந்த பொண்ணு மறுபடி கர்பமானாள். இந்த முறை அவள் வீட்டுக்காரங்க ரோட்ல இறங்கிட்டாங்க. இவன் வீட்டுக்கும், கடைக்கும் பெரிய பூட்டா போட வச்சாங்க. இவனுக்கும் செமை மாத்து. ஊரை விட்டு ஓடினாதான் சாவின்னுட்டாங்க.  ஒருவாரம் அல்லாடினான். அவிக கால்ல விழுந்து ஏரியாவ விட்டு போயிர்ரதா சத்தியம் பண்ணி சாவி வாங்கினான்.

இதுக்கிடைல பெண்டாட்டி பிரச்சினை வேற. அவள் மனசு உடைஞ்சு போயி பிள்ளைகளோட பூச்சி மருந்து கடைக்கு போய் பூச்சி மருந்து கேட்க அந்த கடைகாரன் நல்லவன் போல. இந்த பொம்பள அவதாரத்தை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி கடைக்கு வந்த கான்ஸ்டபிள் கிட்டே ஒப்படைச்சுட்டான்.  எஸ்.ஐ ஜாதில செட்டியாராம். இதுவரை ஒரு கெட்ட வார்த்தையால கூட எவனையும் திட்டினதில்லையாம். ஆனால் நம்மாளை பின்னி பெடலெடுத்துட்டார்.

இதெல்லாம் நடந்து 2 வருஷம் கூட ஆகலை. ஏதோ பத்து மணிக்கு கடைக்கு போனோமா, வந்ததை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு வைன்ஸ் ஷாப் போனோமா மூக்கு பிடிக்க குடிச்சமா வீட்டுக்கு வந்து கவுந்தடிச்சு படுத்தமானு காலத்தை ஓட்டினான். பார்ட்டிங்களுக்கு போர்டு இத்யாதி சொன்ன நேரத்துல டெலிவரி தர்ரதில்லை. உதவியாளுகளுக்கு கூலி தர்ரதில்லை, போர்ட் அடிச்ச கார்பெண்டருக்கு கூலி தர்ரதில்லை. கூட மாட எழுதற பெயிண்டர்களுக்கு கூலி நை. இப்படி பேரை சுத்தமா கெடுத்துக்கிட்டான். அந்த நேரம் பார்த்து  டிஜிட்டல் யுகம் ஆரம்பமாச்சு. கதியில்லாத குறைக்கு இவனை பிடிச்சி தொங்கினவனெல்லாம் டிஜிட்டலுக்கு மாறிட்டான். வெறுமனே சுவத்துல “இவ்விடம் மூத்திரம் பெய்யாதீர் “னு எழுதர மாதிரியான வேலைகள் மட்டும் வர ஆரம்பிச்சது.கடைய காலி பண்ணிட்டான். வீட்டோட முடங்கிட்டான். ஏதோ மச்சான் காரன் தங்கச்சிக்கு வீட்டுசெலவுக்கு பணம் கொடுத்தா அதை கூட திருடி குடிக்க ஆரம்பிச்சான்.

ஒரு நாள் ரொம்ப நாளைக்கப்புறம்  ஜில்லுனு பீர் சாப்பிட்டான். மூத்திரம் வெள்ளமா போக ஆரம்பிச்சது. சரி பீர் சாப்டமில்ல அதான்னு நினைச்சிக்கிட்டான். இது வாரக்கணக்குல தொடரவே டாக்டர் கிட்டே போனான். ஷுகர்னிட்டாங்க. சப்த நாடியும் ஒடுங்கிபோச்சு. நாள்பட நாள்பட ஏற்கெனவே மினுக் மினுக்குன்னிருந்த பலான கெப்பாசிட்டியும் அதல பாதாளத்துக்கு போயிருச்சு. ஊரான் வீட்டு பொண்ணை காக்கா கடி கடிச்சே ரெண்டு தடவை கர்பம் பண்ண ஆண்மை சூடு ஆறிப்போச்சு. ஏற்கெனவே லாலா பழக்கத்தால இருந்த லேசான கையுதறல் இப்போ அதிகமாயிருச்சு. வீக்னெஸ். பேக் கிரவுண்ட் பெயிண்ட் அடிச்சாலே கையெல்லாம் விட்டுப்போவுது. புருவம் வரையப்போனா கை நடுங்கி ப்ரஷ் உதட்டுமேல வந்து நிற்குது.

லாலாவையா நிறுத்த முடியலை. ஷுகரா முத்தி முத்தி ப்ளட் ஷுகரா மாறிருச்சு. இந்த இழவுல ஆளில்லாத நேரம் ஒரு போர்டை நகர்த்த போக கால் விரல் நசுங்கி புண்னாகி அது புரையோடி ரெண்டு கால் விரலை எடுத்துட்டாங்க.”

வேதாளம் மேலும் ஏதோ சொல்லப்போக விக்கிரமாதித்தன் ” ஷிட் என்ன வேதாளம் என்னா கதை இது இழவு. சீக்கிரம் உன் கேள்விய கேளு”என்றான்.

வேதாளம் ” விக்கிரமாதித்தா ! சைக்காலஜிஸ்டுங்க குடிப்பழக்கத்துக்கு        நிப்பிள் காம்ப்ளெக்ஸ், என்விரான்மென்டல் ஃபேக்டர், சப்ரெஸ்ட் செக்ஸுவல் அர்ஜ் அது இதுனு என்னென்னவோ சொல்றாங்கல்லியா. நம்மாளு கிராமத்துல பிறந்து வளர்ந்த பையன். சின்ன வயசுலயே தொழில் கத்துக்கிட்டு தொழில்ல  இறங்கிட்டான். காலாகாலத்துல கல்யாணமுமாச்சு. அப்புறம் எதுக்கு அவனுக்கு குடிப்பழக்கம் வந்தது? ஒரு கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டுக்கு கை உதற ஆரம்பிச்சா அப்புறம் அவன் பேக் கிரவுண்டு அடிக்கதானே லாயக்கு. வீட்ல பெண்டாட்டி இருக்கிறச்ச இன்னொரு கன்னிப்பொண்ணை அவன் ஏன் கெடுக்கனும்?, அவனுக்கு ஷுகர் வந்து ஏன் பிஸ்டன் வேலை செய்யாம போகனும். ஏன் கால் விரலை கட் பண்ணி எடுக்கனும் ?
இதுக்கெல்லாம் விடை தெரிஞ்சும் சரியான பதிலை சொல்லலன்னா உன் தலை க்ளைமோர் பாம் போட்ட மாதிரி சிதறிடும்” என்றது.

விக்கிரமாதித்தன் பதில் சொல்ல ஆரம்பித்தான். இந்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்றத விட சித்தூர் முருகேசன் பதில் சொன்னா பக்காவா இருக்கும். ஓவர் டு முருகேசன்.

“ஹலோ ! மிஸ்டர் வேதாளம் அண்ட் விக்கிரமாதித்தன் அவர்களே, கதைய கேட்டவரை  நான் என்ன நினைக்கிறேன்னா நீங்க சொல்ற ஆளுக்கு ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்கனும். அதனால தான் சோத்துக்கு கதியில்லாம வீடு வாசலை விட்டு டவுனுக்கு வந்தான். அவன் ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருந்தாலும் சுக்கிரன் காரகத்வம் வகிக்கிற கமர்ஷியல் ஆர்ட்ஸ்ல இறங்கினது முதல் தப்பு.

சோத்துக்கில்லாதப்ப சுக்கிர தோஷம் பரிகாரமாகி கலைல தேர்ந்தான். ஆனால் அதே தொழில்ல காசு புரள ஆரம்பிச்சதும் சுக்கிரன் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டார். அதனாலதான் மனைவியிருக்க இன்னொரு பெண்ணை நாடற புத்தி வந்தது. ஜாதக பலன்கிறது  கரண்ட் அக்கவுண்ட் மாதிரி. கரண்ட் அக்கவுண்ட்ல  பணமில்லாத நேரம்   பந்தாவா ரப்பர் செக் விட்டாலும் அது ஹானர் ஆயிரும். ஆனால் அதுக்கு நாம வட்டி கட்ட வேண்டி வந்துரும். ஏதோ ஜொள் விடறதோட விட்டுருந்தாலும் பரவாயில்லே இன்னொரு கன்னிப்பெண்ணை வேற அனுபவிக்க ஆரம்பிச்சான். அதனால வெறியேறிப்போன சுக்கிரன் ஷுகரை கொடுத்து பிஸ்டன் வேலை செய்யாம பண்ணிட்டாரு.

சுக்கிரன் வீக்கா இருந்து சோத்துக்கு லாட்டரியடிக்கிற நேரத்துல ஆர்ட்ஸ் கத்துக்க வந்ததை கூட மன்னிக்கலாம். ஆனால் அதை குடிகாரனான குருகிட்டே கத்துக்கிட்டது பெரிய  தப்பாயிருச்சு. குருகிட்டே வித்தை கத்துக்கிடறோம். வெறும் வித்தை மட்டுமா வரும். அவரோட கர்மமும் சேர்ந்துவரும்.  அது வந்து சேராம இருக்கத்தான் குரு சேவை பண்ணி கருமத்தை தொலைக்கிறதும், குரு தட்சிணை வழங்கறதும் பண்றோம். இவனெங்கே குரு தட்சிணை கொடுத்தான். அதான் குருவோட கருமம் அதான் குடிப்பழக்கம் இவனுக்கு தொத்திக்கிச்சு.”

சித்தூர் முருகேசனின் சரியான பதிலால் திருப்தியுற்ற வேதாளம் கிளம்பி மீண்டும் புளியமரத்திலேறிவிட்டது. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேற துவங்கினான்.