தொழிலும் -கில்மாவும் : ஜோதிட பார்வை

அண்ணே வணக்கம்ணே !
கால ஞானம் :உலக எதிர்காலம் தொடருக்கான விஷயங்களை கி.பி 2000 லயே சேகரிச்சு வச்சிருந்தம். அதெல்லாம் பத்திரமா இருக்கும்ங்கற நம்பிக்கையில தொடரை ஆரம்பிச்சுட்டம். முன்னோட்டமா சொல்ல வேண்டிய மேட்டரை எல்லாம் சொல்லி முடிச்ச பிறவு குறிப்புகளை தேடி பார்க்கிறேன்.. ஒன்னும் பேரலை.

மொபைல் -கம்ப்யூட்டர் உபயோகிக்க ஆரம்பிக்கிறதுக்கு மிந்தி இருந்த ஞா சக்தி இப்பம் இல்லை. கிழவாடிகளுக்கு பழசோ பழசான மேட்டர்லாம் பக்காவா ஞா இருக்கும்.அதை சொல்லி மொக்கை போடுவாய்ங்கனு சொல்றாய்ங்க. நமக்கு அந்த யோகமும் இல்லை போல. எல்லாம் பஜ்னு இருக்கு.மறுபடி அடியை பிடிடா பரதப்பட்டான்னு கால ஞானம் தொடருக்கான சேகரிப்புகளை
துவக்கியிருக்கேன். எல்லாமே உதிரியாத்தான் இருக்கு. உதிரிப்பூக்களை சாதி பார்த்து பிரிச்சு ..ஊஹூம் கிளிஞ்சுரும்.

அதுவரை தொழிலும் -கில்மாவும் தொடரை ஒப்பேத்தலாம்னு நினைக்கிறேன். எந்த தொடர்லயும் வராத சிக்கல் தொ .கி தொடர்ல வந்துருச்சு.அது என்னடான்னா ஏறக்குறைய நோ ஜோதிடம்.இதை பாலன்ஸ் பண்றதுக்கு இன்னைக்கு முழுக்க முழுக்க ஜோதிட ரீதியிலான விஷயங்களை தரேன்.

தொழில் காரகன் சூரியன் , கில்மாவுக்கு காரகன் சுக்கிரன். தொழிலுக்கு பத்தாமிடம் -கில்மாவுக்கு 12 ஆமிடம்.
சூரியனுக்கு ஏன் தொழில் காரகத்தை கொடுத்தாய்ங்க? அவர் தான் நம்மிலான செல்ஃப் -க்கு (சுயம்) காரகர். தூக்கத்துல இருக்கிற ஓலகத்தையே தட்டி எழுப்பறவரு.

சுயம் என்பது உங்களில் இருந்து உலகம் வேறு பட்டது என்பதை ஞா படுத்தும் . நீங்கள் வெர்சஸ் இந்த உலகம் என்ற இழுபறி தான் சுயம்.(செல்ஃப்) . இது முத்திப்போனா ஈகோ.

இந்த உலகத்துல புதுசா -கூடுதலா ஒரு கடல் ஏற்படுதுன்னு வைங்க. அது என்னை பாதிக்காது. நாம ஃபேஸ்புக்ல போடற குண்டக்க மண்டக்க ஸ்டேட்டஸ்களுக்காவ நம்மை தூக்கி 15 நாள் உள்ள வச்சுட்டாய்ங்கன்னு வைங்க .இதனால இந்த உலகம் பாதிக்கப்படுமா? நோ நெவர்.

பழைய தெலுங்கு சினிமாவுல ஒரு பாட்டு :
நேனு புட்டானு ஈ லோக்கம் புட்டிந்தி ( நான் பிறந்தேன் – இந்த உலகமும் பிறந்தது)
நேனு நவ்வானு ஈ லோக்கம் ஏட்சிந்தி ( நான் சிரித்தேன் -இந்த உலகம் அழுதது)
நேனு ஏட்சானு ஈ லோக்கம் நவ்விந்தி ( நான் அழுதேன் – இந்த உலகம் சிரித்தது)
நாக்கிங்கா லோக்கம் தோ பணி ஏமுந்தி (இதுக்கு பிறகும் எனக்கு உலகத்திடம் என்ன வேலை – )
டோன்ட் கேர்.

பாட்டு தமாசா கீதுபானுட்டு ஸ்க்ரால் பண்ணிராதிங்க. பாட்டுக்குள்ள ஒரு சூப்பர் மேட்டர் கீது வாத்யாரே..
“நான்” (சுயம்) பிறந்தேன். இந்த உலகம் பிறந்தது.

நான் (சுயம்) பிறக்கும் வரை நானும் -இந்த உலகமும் இரண்டற கலந்திருந்தோம். நான் (சுயம்) பிறந்த பிறகுதான் இந்த உலகம் என்னிலிருந்து வேறு பட்டது என்ற எண்ணம் பிறந்தது. – என்னை பொருத்தவரை உலகம் புதுசா பிறந்தது.

என்னிலான “சுயம்” கண் விழிக்கும் வரை இந்த உலகம் சிரிக்கும் போது நானும் சிரித்தேன். இந்த உலகம் அழும்போது நானும் அழுதேன்.

சுயம் கண் விழித்த பிறகு நிலைமை தலை கீழானது. உலகம் ரெம்ப டிஸ்டர்ப் பண்ணுது. இதனால் டோன்ட் கேர்னு கர்ஜிக்கிறேன்.
இந்த டோன்ட் கேர் என்ற வார்த்தையை சீனாவின் ஏதோ மானிலத்தின் ஏதோ ஜில்லாவின் ஏதோ டவுனில் வசிக்கும் “சிங்சிங்” ஐ பார்த்து சொல்வேனா? ஊஹூம்.

ஏன்னா அவன் யாருன்னே தெரியாது. அவன் என்னை எந்த வகையிலயும் பாதிக்கலை.அவனை பார்த்து டோன்ட் கேர் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.

பின்னே யாரை பார்த்து சொல்வேன்? என்னை எவன் ரெம்ப டிஸ்டர்ப் பண்றானோ – எவன் என்னை ரெம்ப பாதிக்கிறானோ – யாருடைய பாதிப்பிலிருந்து நான் விடுபடலின்னா பைத்தியம் ஆய்ருவனோ அப்படியா கொத்தவனை பார்த்து தான் டோன்ட் கேர்னு கர்ஜிப்பேன்.
உலகம் வெர்சஸ் நீங்கள் . இந்த உறவில் நிச்சயமா உங்கள் கை தாழ்ந்து தான் இருக்கும். ஒலகம் எம்மாம் பெருசு. அதோட போயி சண்டை வலிச்சிக்கினு இருக்க முடியுமா என்ன? அதுக்காவ நான் சிரிச்சா அழுது – நான் அழுதா சிரிச்சு என்னை கடுப்பேத்தும் உலகத்தை டீல் பண்றதுதான் எப்பூடி ? என்ன பண்ணலாம்?

நம்மில் சுயத்தை தட்டி எழுப்பி உலகத்தோட முரண்பட செய்யும் சூரியன் தான் இந்த தெளிவையும் கொடுத்தாகனும்.
சூரியன் உங்க ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருந்தா உங்களிலான சுயம் உங்களை வடிவமைக்கும். அதுவும் எப்படி?
கொய்யால நான் உங்கள்ள யாரை போலவும் இல்லை. நான் பெசலு. ஏய் ஒலகம் ! நான் டிஃப்ரன்ட் டைப். நான் இல்லைன்னு வை – நீ என்னை கண்டுக்கலைன்னு வை .. உன்னில் ஒரு குறை -ஒரு இடைவெளி நிரப்பப்படாமலே போயிரும்னு உலகத்துக்கு அறைகூவல் விடுக்கும் அளவுக்கு உங்களை பிரத்யேகமாக வடிவமைக்கும்.

உங்களை நீங்கள் வெளிப்படுத்த “தொழிலை” விட பெட்டர் மீடியம் இருக்கா என்ன? தொழில் மூலமா நீங்க இந்த உலகத்துக்கு போட்டியா – மாற்றா ஒரு உலகத்தை உருவாக்கறிங்க. திரிசங்கு சொர்கம் மாதிரி. நீங்க அசலான ஒலகத்தை மறந்து இதுவே என் உலகம்னு மாறிப்போயிட்டா அது ஈகோ.

இதுவே சூரியன் உங்க ஜாதகத்துல பல்ப் வாங்கியிருக்காருன்னு வைங்களேன். அப்போ என்ன ஆகும்? அடுத்த பதிவில் பார்க்கலாம்..

கால ஞானம்:உலக எதிர்காலம் 2

அண்ணே வணக்கம்ணே !
பிரம்மங்காருவோட கால ஞானம் என்னதான் சொல்லுது? ஒரு அவுட்லைனாச்சும் கொடுப்பா.சஸ்பென்ஸ் தாங்க முடியலைன்னு நீங்க பதைக்கிறது புரியுது.சொல்றேன். சொல்லத்தான் போறேன்.

கால ஞானத்தோட அவுட்லைனுக்கு போகலாம் .இவரு இன்னைய தேதிக்கு 495 வருசங்களுக்கு மிந்தி பிறந்த பார்ட்டி. தோராயமா சொன்னா கி.பி.1518 ல பிறந்திருக்காரு. 175 வருசம் வாழ்ந்து 1693 ல சீவசமாதியாகி இன்னைக்கு வரைக்கும் 320 வருடங்கள் ஆகியும் நம்மை மாதிரி அல்பாத்மாக்களை கூட ட்யூன் பண்ணி இந்த மாதிரி ஒரு தொடரை எழுதவச்சிக் கிட்டிருக்காரு.

இந்த டேட்டாவை இங்கே கொடுக்க காரணம் என்னன்னா நேத்திக்கு ஆரோ தலீவர் பேட்டில சொன்ன மேட்டரையே நம்மை மாதிரி நிருபர்கள் மறு நாள் பேப்பர்ல தப்பு தப்பா எழுதி வில்லங்கம் பண்ணிர்ராய்ங்க,

பிரம்மங்காரு கால ஞானத்தை எழுதினப்போ அவரு யூத்து .குத்து மதிப்பா ஒரு இருபது வயசுல எழுதினாருன்னு வச்சுக்கிட்டாலும் கி.பி 1538 ல எழுதின மேட்டர் இந்த கால ஞானம். அப்பம் அவரு கடப்பா மாவட்டத்துல உள்ள பனகானுபல்லிங்கற ஊர்ல ஒரு மேய்ப்பர். அதாவது அச்சம்மாள் ங்கற பெண்ணோட மாடுகளை மேய்ச்சுக்கிட்டிருந்தவர்.

இவர் மாடுகளுக்கு தன் தண்டத்தை காவல் வச்சுட்டு குகையில உட்கார்ந்து கால ஞானம் எழுதிக்கிட்டிருக்க – எதிர்பாராவிதமா அச்சம்மாள் பார்வையில இந்த காட்சி பட – கியூரியாசிட்டியில என்னப்பா எழுதறேன்னு அந்தம்மா கேட்க .. பிரம்மங்காரு விஷயத்தை சொல்றாரு.

ஒடனே அச்சம்மாள் ” அப்பா ! நீ ஒரு மகான். என் மகனோட ஊனத்தை போக்கு”ன்னு அப்பீல் பண்றாய்ங்க. பிரம்மங்காருவும் அச்சம்மா அப்பீலை ஒப்லைஜ் பண்ணிர்ராரு.

இன்னம் கேட்கனுமா என்ன? ஊரே கொல்லுன்னு போயி – ஆலமரத்தடியில ஒரு பெரிய கும்பல் சேருது. பிரம்மங்காரு தான் எழுதிய கால ஞானத்தை மக்களுக்கு விவரிக்கிறாரு.

அதுக்கு அப்புறம் தான் கால ஞானம் எழுதி வச்ச ஓலைச்சுவடிகளை அதே ஊர் நடுவுல ஒரு பள்ளம் தோண்ட செய்து அதுல போட்டு புதைச்சு -அது மேல ஒரு புளியமரத்தை நட்டுர்ராரு. இன்னைக்கு அந்த மரம் அங்கே இருக்கிறதா எழுதறாய்ங்க. சொல்றாய்ங்க. நாம பார்த்ததில்லை.

இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா ஆருனா பகுத்தறிவு வாதி டாக்குமென்ட்டரி எவிடென்ஸ் கேட்டா நாம அம்பேல். பிரம்மங்காருவே “ஓரலா” தான் கால ஞானத்தை பிரச்சாரம் செய்திருக்காரு.

கால ஞானம் மேட்டர்ல என்ன ஒரு வசதின்னா பிரம்மங்காரு ரெம்ப சிம்பிள் லாங்குவேஜ்ல -அதுவும் வெகுஜன மக்கள் மொழியில எழுதி வச்சிருக்காரு. நாஸ்ட் ரோ டாமஸ் மாதிரி சுத்தி வளைக்காம -அதி மேதாவித்தனம்லாம் காட்டாம -பாய்ண்ட் டு பாய்ண்ட் எழுதியிருக்காரு .அதே நேரம் பொயட்டிக்கா எழுதியிருக்காரு.

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் தேடினா மொக்கை ஆயிருவம். உள்ளர்த்தத்தை பிக் அப் பண்ணனும்.

உதாரணமா “எர்ர சீம ஏனுகு ரூபம்லோ கனபடேனே” இதுக்கு நேரடி பொருள் சிகப்பெறும்பு ஆனை வடிவில் காட்சியளிக்கும் என்பதே.
இதுக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம்.

மரபணு மாற்ற பரிசோதனையில எக்கு தப்பா எதுனா நடந்து ஆங்கில சினிமா மாதிரி எறும்பெல்லாம் ஆனை சைஸுக்கு மாறிரலாம்.
டேலன்டே இல்லாத பார்ட்டியெல்லாம் உச்சிக்கு போயிருவாய்ங்க. எறும்பை ஆனையா காட்டற மீடியா வரலாம்.

இதுவரை விளக்கம் சொன்ன பார்ட்டிங்க எறும்பு சைஸ் பொருளோட விலை ஆனை விலையா மாறும்னு சொல்லியிருக்காய்ங்க.
கால ஞானத்துக்கான டைம் ஸ்கேல்னு பார்த்தா ஆரோ அய்யரு கலியுகாதி 5000 வருடங்கள் முடிந்த பிறவு வர்ர 108 வருசத்துல என்ன நடக்கும்ங்கறதுதான் கால ஞானம்னு சொல்லி ஆடியோ காசட்டே ரிலீஸ் பண்ணி கல்லா கட்டிட்டாரு.

இப்பம் இந்த 2013 கலியுகாதி 5114 ஆவது வருசம். அய்யர் சொன்னது கரெக்டுன்னா.. கால ஞானம் கதை ஓவர். ஆறு வருசம் முன்னாடியே கால ஞானத்துல சொல்லப்பட்ட எதிர்கால சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிஞ்சிருக்கனும். ஆனால் நடக்கலை.

அப்போ பிரம்மங்காரு பீலா விட்டுட்டாரான்னு கேப்பிக. இல்லிங்க பாஸூ. பிரம்மங்காரு அந்த வருசம் -இந்தவருசம்னு கால குறிப்பு கொடுக்கும் போது வருசங்களோட பெயரைத்தான் சொல்லியிருக்காரு.
உ.ம் :
“பிரபவ பார்த்திவே மத்யே பஹுப்ரளயம் நிஸ்ச்சயம்”

பிரபவ வருசம் 1867 ல ஒரு தாட்டி 1927 ல ஒரு தாட்டி 1987 ல ஒரு தாட்டி வந்திருக்கு ( வருசங்க மொத்தம் 60. ஒரு ரவுண்டு முடிஞ்சதும் மறுபடி மொத வருசம் ரிப்பீட் ஆகும்) பார்த்திவ வருசம் 1885 ல ஒரு தபா, 1945 ல ஒரு தபா , 2005 ல ஒரு தபா வந்திருக்கு. இதுல பிரம்மங்காரு எந்த பிரபவ வருசத்தை சொன்னாருன்னு ஆரும் கிராஸ் செக் பண்ணல்லை. நாம செய்துருவம்ல. வெய்ட் ப்ளீஸ்.

சில அற்புத சம்பவங்களுக்கு வருசம்,மாசம்,வளர்பிறையா தேய் பிறையா , நட்சத்திரம், திதின்னு ரெம்ப டீட்டெய்ல்டா கொடுத்திருக்காரு. இந்த டேட்டாவ வச்சு ஆங்கில தேதியை டிரைவ் பண்றது பெரிய மேட்டரே இல்லை. செய்வம். அதனால டைம் ஸ்பானை சீக்கிரமே டிசைட் பண்ணிர்ரன்.
இதுல உள்ள மேலும் ஒரு சிக்கல் என்னன்னா இன்னைக்கு செலாவணியில உள்ள “பாடங்கள்”ள அனேக முரண்பாடுகள் இருக்கலாம். இதுல எதை கரெக்டுன்னு சொல்றது? எது மெட்டீரியலைஸ் ஆச்சோ அது பக்கா.ஓகேவா?

அவுட் லைன் ஆஃப் கால ஞானம்:
நெகட்டிவ்:
ஒலக மக்கள் எல்லாம் கெட்டு கீரை வழியாகி ,பூகம்பம்,வெள்ளம்,தொற்றுவியாதி , யுத்தங்கள் ,கலகங்கள்னு லோல்பட்டு ஏழில் ஆறு பாகம் அழிஞ்சு – ஏழுல ஒரு பாகம் மிஞ்சும்.
பாசிட்டிவ்:
ஸ்ரீ பிரம்மங்காருவே வீரபோக வசந்தராயரா வந்து ஒலகத்தை ஒரு அம்ப்ரெல்லா கீழே கொண்டு வந்து நல்லாட்சி தருவாரு. எங்கும் சுபிட்சம்.
நெகட்டிவ் மொத்தம் ஓடி முடிஞ்ச பிறவு பாசிட்டிவ் நடக்கும். இதான் அவுட்லைன்.

நம்ம குன்ஸு என்னடான்னா பிரம்மங்காரு எழுதி வச்சதுல பாதிதான் நடந்திருக்கு . மீதியும் நடந்த பிறவுதான் சுபிட்சம்.

கால ஞானத்தோட டைம் ஸ்பான் முடிஞ்சிருந்தா இந்த நேரம் அஃதாவது 6 வருசங்களுக்கு மிந்தியே உலகத்துல ஏழில் ஆறு பாகம் அழிஞ்சு ஒரு பாகம் மட்டும் மிஞ்சி ஹெச்.ஜி.வெல்ஸ் சொன்னாப்ல உலக அரசாங்கம்+சுபிட்சம் ஏற்பட்டிருக்கனும்.

தும்பை செடிக்கு ஏணி போடும் மனிதர்கள் வருவார்கள் (சில பாடங்களில் துறட்டி போடும் மனிதர்கள் வருவார்கள்)னு ஒரு வரி வருது.
தும்பை செடிக்கு ஏணி போடனும்னா மன்சங்க லில்லி புட்ஸ் கணக்கா இருக்கனுமில்லையா? தலை முறைக்கு தலை முறை உசரம் குறைஞ்சுட்டே தான் போகுது. ஆனால் லில்லி புட் சைஸுக்கு இன்னம் வரலியே?

என்னதான் பிரம்மங்காரு பொயட்டிக்கா சொன்னாருன்னாலும் – இந்த உசரம் ஒரு 3 அடிக்காவது குறையனுமில்லையா? அப்பத்தானே பிரளயம் – ஏழில் ஆறுபாகம் ஊத்திக்கறதுல்லாம் நடக்கும்.
(தொடரலாம்)

ஸ்ரீ பிரம்மங்காருவின் கால ஞானம் : உலக எதிர்காலம்: 1

அண்ணே வணக்கம்ணே !
ஸ்ரீபிரம்மங்காருவின் காலஞானம் -உலக எதிர்காலம் -இன்றே ஆரம்பம்னு நேத்திக்கு ஸ்டேட்டஸ் போட்டதும் ஃபேஸ் புக் காரன் மத்த எல்லா ஸ்டேட்டஸை விட இது சூப்பர்ஹிட் ஆயிருச்சு ப்ரமோட் பண்ணுங்கறான். இன்னைய தேதிக்கு கை நிறைய வேலை இருக்கு.ஆனால் வேலை ஓடமாட்டேங்குது. சரி பிரம்மங்காரு மாதிரி ஒரு பார்ட்டி மறுபடி நமக்கு பக்க துணையா இருந்தா நல்லாருக்குமேன்னுதேன் இந்த தொடரை ஆரம்பிக்கிறேன். ( என்னா சுய நலம்னு பொங்காதிங்க பாஸு.. நாம டீக்கடை டேப் ரிக்கார்டர் மாதிரி -கொஞ்சம் நெல்லா இருந்தா நாலு பேருக்கு நல்லதை சொல்லுவம்ல -முடிஞ்சா செய்யவும் செய்வமில்லை)

பிரம்மாங்காரு மேல மத்தவுகளுக்கு இருக்கக்கூடிய ஆர்வத்துக்கும் நம்ம ஆர்வத்துக்கும் வித்யாசம் உண்டு. சிலர் தெலுங்கர்னு ஆர்வம் காட்டுவாக. சிலர் நம்ம சாதின்னு ஆர்வம் காட்டுவாய்ங்க. (கொய்யால இதுலயும் சாதி வந்துருது).

ஆனால் நமக்கு அவர் மேல ஆர்வம் பிறக்க காரணம் மீசை கேசவனும் ,என்.டிஆரும். கேசவன் பிரம்மங்காருவோட வரலாறு மற்றும் கால ஞான புஸ்தவம் வச்சுக்கிட்டு அதையே சீரியஸா படிச்சிக்கிட்டிருப்பாரு.என்.டி.ஆர் ப்ரம்மங்காருவோட வா.வரலாற்றை சினிமாவா எடுத்தாரு .

இப்படியாக ஏற்பட்ட அந்த ஆர்வம் பெருக காரணம் பிரம்மங்காருவோட அதிர்வுகள் அன்னைக்கு மட்டுமில்லாம இன்னைக்கும் உயிர்ப்போட இருக்கிறதுதான். சூப்பர் ரெஸ்பான்ஸு.

நம்ம ப்ளானை ஸ்பீக்கருக்கு அனுப்பினம் .சி.எம் க்கு அனுப்பினம் .ஒரு இழவு ரெஸ்பான்ஸும் கிடையாது.ஆனால் பிரம்மங்காரு மேட்டர்லாம் அப்படியில்லை. நினைச்சாலே போதும். உடனடி லாட்டரி கணக்கா ரெஸ்பான்ஸு.

சங்கங்கள் மூன்று , தமிழ் மூன்று, கனிகள் மூன்று, இனம் மூன்று,குணம் மூன்று – காலங்கள் மூன்று. ( எப்பூடி கலீஞர் தாத்தா ரேஞ்சுக்கு இருக்குதா? பயப்படாதிங்க. இது மாதிரில்லாம் வெத்தா ஜல்லியடிக்க மாட்டேன்.பாய்ண்ட் டு பாய்ண்ட் அடிச்சு தூள் கிளப்பிரலாம்.

காலம் மூன்று. இறந்த காலம், நிகழ் காலம்,எதிர்காலம் . இதுல மன்சனுக்கு அன் அவெய்லபிளா இருக்கிறது எதிர்காலம். அதனாலதான் மன்சனுக்கு எதிர்காலத்து மேல அவ்ளோ ஆர்வம்.

ஏற்கெனவே ஒரு சந்தர்ப்பத்துல சொன்னதா ஞா. ஆருக்கு தன் எதிர்காலத்து மேல அக்கறையில்லையோ – ஆரு மைண்டுல இறந்த காலம் குறித்த வடுக்கள் இல்லையோ அவிகளுக்கு எதிர்காலம் டிஜிட்டல் ப்ரிண்ட் சினிமா மாதிரி தெரியும். அந்தந்த நொடிக்கு வாழனும்.(ஓஷோ)

யாருடைய ப்ரக்ஞை/குண்டலினி மூலாதாரத்தை தாண்டிருதோ அவிகளுக்கு எதிர்காலம் கண் சிமிட்ட ஆரம்பிச்சிரும். சாதனையை தொடர்ந்தால் -குண்டலினியோட பயணம் தொடரும். பயணம் தொடர்ந்தால் எதிர்காலத்தை கணிக்கிறதெல்லாம் ஜூஜுபி.

நாடி ஜோதிடம்லாம் என்னங்கறிங்க? நாட் நாட் செஞ்சுரியிலயே எதிர்காலத்துல கிரக நிலைகள் இப்படியெல்லாம் இருக்கும்னு கணக்கு போட்டு ஜாதகம் கணிச்சு பலனே எழுதி வச்சுட்டாய்ங்க. கட்டைவிரல் ரேகையில ஜாதக சக்கரமே தெரியுதுங்கறாய்ங்க. அத வச்சு ஓலை தேடி பலன் சொல்லிர்ராய்ங்களாம்.

நம்ம அனுபவம் அதெல்லாம் டுபுக்குன்னு சொல்லிருச்சு. நம்ம வாயை பிடுங்கி க்ளூ கலெக்ட் பண்ணி டேட் ஆஃப் பர்த் கண்டுக்கிட்டு வாக்கிய பஞ்சாங்கப்படி ஜாதகம் போட்டு பலன் சொல்லிர்ராய்ங்க.

பிறரிடம் இருந்து நமக்கு வந்த ஃபீட் பேக் நடந்ததை எல்லாம் கரீக்டா சொல்லிர்ராய்ங்க. நடக்கப்போறதா சொன்னதுதான் பெருசா நடக்கலை.

இது கிடக்கட்டும்..இதெல்லாம் தனிப்பட்ட ஜாதகங்களுக்கு பலன் சொல்ற விவகாரம். உலக உருண்டைக்கே ஜாதகம் சொல்ல முடியுமா? முடியும். பஞ்சாங்கத்துல பார்த்திங்கனா வருசம் பிறந்த லக்னத்தை வச்சு விஸ்தாரமா பலன் சொல்லியிருப்பாய்ங்க.

இதெல்லாம் டெக்னிக்கல்.ஆனா பிரம்மங்காரு மேட்டர்ல ஆங்காங்கே வருடங்களின் பெயர்கள் – கிரக ஸ்திதிகள் ரெஃபர் செய்யப்பட்டாலும் அவர் சொல்ற பலன் இருக்கே.. யப்பா…என்னா டீட்டெய்லு? எதிர்கால சம்பவத்துல தொடர்புள்ள பேரு -வயசு -ஊரு -நாள் நட்சத்திரம் கூட சொல்றாருங்கோ ..

ஒலக எதிர்காலத்தை சொல்ற முயற்சியை பலர் செய்திருக்காய்ங்க. உ.ம் கன்னடத்தில் சர்வக்ஞர், ஃப்ரெஞ்சுல நாஸ் ட்ரோ டாமஸ், தமிழ்ல அகிலத்திரட்டு, வியாசரோட பவிஷ்ய புராணம். இவ்ள ஏன்..குரான் ,பைபிள்ள கூட பிரளயம் தொடர்பான குறிப்புகள் இருக்கு.

ஒரே நேரத்துல பலர் ரஷ்யா போய் பார்த்துட்டு வர்ரதில்லையா? அப்படித்தான் இதுவும். இவ்ள எதுக்கு நாம சுய நலம் சுருக்கி -பொது நலம் பெருக்கி வாழ்ந்தா உலக எதிர்காலத்தை கு.ப ஸ்லைடு கணக்கா வாச்சும் பார்க்க முடியும்.

நாளைக்கு இந்த கால ஞானத்தை எழுதி வச்ச பிரம்மங்காருவோட பயாக்ரஃபியை சுருக்கமா பார்த்துட்டு நாளன்னிலருந்து உலக எதிர்காலம் .ஓகேவா உடுங்க ஜூட்டு.

நடிகர் சங்க கட்டிடத்துக்கு சங்கு : ரஜினியின் பங்கு

null

நடிகர் சங்கத்துக்குன்னு சொல்ல முடியாட்டாலும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு சங்கு ஊதியது ரஜினி தான். இந்த வரி உங்களுக்கு ஆச்சரியத்தை தந்தால் நீங்க தமிழ் பத்திரிக்கைகள் படிக்கிறதில்லைன்னு அருத்தம்.இல்லின்னா மறதி பேர்வழின்னு அருத்தம்.

சமூக வலைதளங்களில் ஏகத்துக்கும் நக்கல் அடிக்கப்படும் கேப்டன் சங்கத்தை நிலைப்படுத்திட்டு போனாரு. ஆனால் நம்ம சூப்பற ஸ்டாரு சங்கு ஊதிட்டாருங்கோ.
ஒரு தாட்டி பொதுக்குழுவுலயோ அ ஏதோ நடிகர் சங்க நிகழ்ச்சியிலோ சங்கத்துக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்த நடிகர்கள் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம்னு பேச்சு வந்தப்போ -கையில வெண்ணை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையலாமா? நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை ப்ரமோட்டர்ஸுக்கு கொடுத்து காசு பார்க்கலாம்னு ச்சூ காட்டி விட்டுட்டாரு.

ஆருனா “சாமீ ! பசிக்குது ரெண்டு இட்லியும் சட்னியும் வாங்கி கொடுங்க”ன்னா பாடியில கிட்னிய வச்சுக்கிட்டு சட்னிக்கு அலையறியேன்னு இலவச ஆலோசனை வழங்குவார் போல.

அதுமட்டுமில்லிங்ணா நடிகர் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் ப்ரமோட்டர்ஸுக்கு கொடுக்கப்பட்டு -கட்டிடம் தரை மட்டமாக்கப்பட்டு இன்னமும் அப்படியே இருக்க காரணம் என்ன தெரியுமா?

ரஜினியோட சகலை ஒய்.ஜி.மகேந்திரனோட அம்மா -அதாவது ரஜினியோட மாமியாரு கோர்ட்டுக்கு போயிருக்காய்ங்களாம். ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி மகேந்திரன் கட்டிடம் கட்ட ஏன் தாமதம்னு கேட்க ராதாரவி மேட்டரை ஒடைச்சிருக்காரு.

பி.கு:
ஜூனியர்களான விஷால் போன்றவர்கள் மேட்டரை முன்னெடுக்க – அவிகளுக்கு ஏத்தி விட்டுட்டு -பொதுக்குழுவுக்கு வராம ரஜினி அம்பேலாக காரணம் இதான் போல.
உண்மையிலயே நடிகர் சங்கத்து மேல ரஜினிக்கு அக்கறை இருந்தா என்ன செய்திருக்கனும்.ஆரம்பத்துலயே கலை நிகழ்ச்சியா பண்ணலாமேன்னிருக்கனும்.
அட அதுவும் போகட்டு தான் கொடுத்த இலவச ஆலோசனை தவறா பின்பற்றப்படுதுன்னு தெரிஞ்சதும் தன் எதிர்ப்பை தெரிவிச்சிருக்கலாம் ( சரத் மற்றும் ராதாரவி பெயரில் பத்திரப்பதிவு)

சரி அதுவும் ஒழியட்டும் கு.பட்சம் கட்டிடம் எழாம இருக்க கோர்ட்டுக்கு போன மாமியாரையாச்சும் கன்வின்ஸ் பண்ணி “பேசி” முடிச்சிருக்கலாம்.
எதுவுமே செய்யலை. ஆக சங்க கட்டிடத்துக்கு சங்கு ஊதியது ரஜினி தானே..

தொழிலும் கில்மாவும்:9

அண்ணே வணக்கம்ணே !
சமீபத்துல இந்த தொடர்பதிவை டீல்ல விட்டுட்டம். இன்னைக்கு ஒரு ஃபினிஷிங் டச் கொடுத்து கழண்டுக்கலாம் -புதுசா எதையாவது ஆரம்பிக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கன். ராஜாஜியோட பாட்டு ஒன்னு ரெம்ப பிரபலம் “குறையேதுமில்லை மறைமூர்த்தி கண்ணா”

இது பச்சை ஹிப்பாக்ரசி. குறையில்லாத பிறவியே கிடையாது. குறை இருந்தா -இதோ இந்த குறை இருக்கு இதை தீர்த்துவைன்னு கேட்கனும். அதை விட்டுட்டு குறைய கொளந்தை ஏ.சி. பஸ்ஸுல கக்கா போனா கர்ச்சீஃப்ல முடிஞ்சு வச்ச மாதிரி வச்சுக்கிட்டா நாறிரும்.

நிற்க. தொழில்லயோ -கில்மாவுலயே நீங்க தூள் பண்ணனும்னா இந்த ரெண்டுல எதுவோ ஒன்னுல குறை இருக்கனும். அந்த குறை உங்க சப் கான்ஷியஸ் மைண்டை தூண்டி அற்புதம்லாம் செய்துரும்.

குறை இருந்தாத்தான் அதை நிறைவு செய்யும் செயல் துவங்கும். நிறைகுடம் தளும்பாதுன்னு சொல்வாய்ங்க.குடத்து நீர் தளும்பும்போதுதான் செயல்படுகிறது. அது தளும்பலின்னா அதன் இருப்பு சந்தேகத்துக்குள்ளாகுது.

மனிதனிலும் ஏதோ ஒரு குறை அதிலும் முக்கியமா தொழில் அல்லது கில்மாவுல இருக்கனும்.அப்பத்தேன் அவனையும் அறியாம அவன் உள்ளுணர்வு தீட்டப்படும்.சாதனைகள் படைப்பான்.

அட வாஸ்துவையே எடுத்துக்கங்க. அதுலயும் ஒன்னு அரை குறை இருந்தாதான் சாதனைகள் படைக்க முடியும்.

100 சதம் வாஸ்து உள்ள வீட்ல வாழ்ந்தா “போதுமென்ற மனமே பொன் செய் மருந்து” ” யாவும் அவன் செயல்” மாதிரி மென்டாலிட்டிதான் டெவலப் ஆகும். இப்படி 100 சதம் வாஸ்து உள்ள வீட்டுக்காரர் கதையையும் அனுபவ பூர்வமா பார்த்தேன்.

ஏதோ பூர்விக சொத்தா நிலங்கள் இருந்ததால பசி பட்டினி இத்யாதி இல்லைன்னாலும் பசங்க படிப்புக்காக ஒவ்வொரு சொத்தா வித்து ( நல்ல விலைக்கு) ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. பசங்களும் படிப்பை முடிச்சுட்டு அப்பாவுக்கு தப்பாத பிள்ளைகளா ஹால் சோஃபால தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க.
வாஸ்து வாஸ்துதான் இல்லேங்கலை. ஹ்யூமன் பாடிக்கு ஒரு தர்மம் இருக்கில்லயா. அதை எந்தளவுக்கு சிரமப்படுத்தறமோ அந்த அளவுக்கு ஸ்ட்ரெங்தர்ன் ஆகும் லாஞ்சிவிட்டி அதிகரிக்கும். எந்த அளவுக்கு அதை சுகம்மா வச்சிருக்கமோ அந்த அளவுக்கு லொடக்கானி ஆயிரும்.

பார்ட்டி சொகம்மா தூக்கத்துலயே மேசிவ் ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துருச்சு.. இத்தனைக்கு வயசு 50+ தான்.

இன்னைக்கிருக்கிற மெடிக்கல் மிராக்கிள்ஸுக்கு இது ஒரு வயசா? பார்ட்டி (பாட்டியில்லை) டிக்கெட் வாங்கின பிற்காடுதான் பின்னாடி எவ்ளோ பெரீ ஓட்டைய (கடன்) வச்சிட்டு போயிருக்குனு சனத்துக்கு தெரிஞ்சு என்னை கூப்டாய்ங்க.

நாமதான் அதிரடிக்கு மறுபெயர் இல்லியா? மேட்டரை உடைச்சு சொல்லி (பால்ல கூட கொஞ்சம் போல தண்ணி சேர்த்துத்தான் காய்ச்சி குடிக்கனும். அப்படியே குடிச்சா நாஸ்திதான். தங்கத்துல கூட கொஞ்சம் போல செம்பு, பித்தளை சேர்க்கனமப்பு)

டெம்ப்ரரியா ஈசானத்துல செங்கல் அடுப்பு வச்சி தண்ணி காய வைச்சு குளிங்கன்னேன்.ஒன்னரை மாசத்துல பசங்களுக்கு ஒன் பை ஒன் வேலை கிடைச்சு வீட்டை விட்டு வெளியேறினாய்ங்க. வீட்டுக்காரம்மா தனிய இருக்க பயந்துக்கிட்டு உறவுக்கார குடும்பம் ஒன்னை வாடகைக்கு வச்சுக்கிட்டாய்ங்க.

ஏதோ கொஞ்சம் போல சுறுசுறுப்பா வாழ்க்கைச்சக்கரம் நகருது. குடி வந்த பார்ட்டி விருச்சிக லக்னம்,செவ்வாய் உச்சம். லேத் வச்சிருக்காரு. விடியல் 6க்கெல்லாம் லேத்துக்கு போயாகனும். அதனால செங்கல் அடுப்பை இன்னம் எடுக்க சொல்லலிங்கண்ணா.

இவ்ளோ எதுக்கு ஜாதகத்தையே எடுத்துக்கங்க. கொய்யால ..ஒலகம் இன்னம் இயங்குதுன்னா அதுக்கு காரணம் குறையுள்ள ஜாதகர்கள் தான். அல்லாருக்கும் அல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள நின்னிருந்தா அல்லாரும் கிருஷ்ணா ராமான்னு மரத்தடியிலயோ -குகையிலயோ வாழ்ந்து முடிஞ்சிருப்பாய்ங்க.

நம்ம ஜாதகத்தையே எடுத்துக்கங்க. ஒரு சந்திரன் -சுக்கிரனை தவிர மத்த கிரகம்லாம் கேந்திர கோணத்துலதான் இருக்கு. சுக்கிரன் ரெண்டுல நின்னு எட்டை பார்த்ததாலதேன் கில்மா பெசலிஸ்ட் ஆனோம் (இதுக்கு விலையா ப்ரெட் ஹன்டரா நாறினம்ங்கறது வேற கதை )

சந்திரன் ரெண்டுல நின்னு எட்டை பார்த்ததாலதேன் மனசை கடைஞ்சு கடைஞ்சு தாளி அது அமுதமோ விசமோ வர்ரதை அப்டியே ஷேர் பண்ணிக்கிறேன். ஐ மீன் இயங்கறேன். என் இருப்பு பத்திரமா இருக்கு. இல்லின்னா என்னாயிருக்கும்?

ஒலகத்துக்கும் நமக்கும் உள்ள டீலிங் என்னடான்னா நாம எதையோ சொல்லுவம் -சனம் திருப்தியா பைசா கொடுக்கும் – அல்லது கில்மா பற்றிய உண்மைகளை போட்டு உடைப்போம் ஒலகமே நம்மை எதிரியா பார்க்கும் (யதார்த்தவாதி பஹுஜன விரோதி) .என்னைக்கோ ஒரு நாள் கல்லால அடிச்சு கொன்னாலும் ஆச்சரியப்படமாட்டேன்.

சரிங்னா தொழில் -கில்மா என்ற இந்த ரெண்டு மேட்டர்ல ஒன்னுல குறை இருந்தா இன்னொன்னுல சாதனை படைக்கலாம்ங்கறிங்க.
எனக்கு ரெண்டுலயுமே குறை இருக்கே -என்னால ஒரு மண்ணு சாதனையையும் படைக்க முடியலியேன்னு சிலர் கேட்பாய்ங்க.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானேன்னு ஒரு பாட்டு இருக்கு.அதைப்போல சிலர் வாழ்ந்துர்ராய்ங்க. அவிகளுக்கு தங்களில் குறை இருக்கிறதே உறைக்காது.. அப்படியே உறைச்சாலும் அதை படக்குன்னு மறைக்க செயல்பட ஆரம்பிச்சுருவாய்ங்க. இந்த பொய் -மறைப்புல்லாம் குழந்தை பருவத்துலயே துவங்கிருது.

ஒரு குழந்தை சூப்பானுக்கு காம்ப்ரமைஸ் ஆயிருச்சுன்னா அதுக்குள்ள இருக்கிற உயிர் சக்தி பற்றாக்குறையில இருக்குன்னு அருத்தம்.
ஒரு இளைஞன் சுய இன்பத்துக்கு காம்ப்ரமைஸ் ஆயிட்டா அவனுக்குள்ள இருக்கிற உயிர் சக்தி பற்றாக்குறையில இருக்குன்னு அருத்தம்.

இந்த உண்மையை புரிஞ்சு விழிச்சுக்கிட்டா நோ ப்ராப்ளம். அப்படியில்லாம சுய ஏமாற்றே (ஹிப்பாக்கிரசி) வாழ்க்கையா போச்சுன்னா அவன் ஒரு ம..னாவும் சாதிக்க முடியாது.

மோடி வெப் சைட்ல நம்ம ப்ளான்

Modi

அண்ணே வணக்கம்ணே !
ஒலகமே(?) மோடி மோடின்னு கூவுது. எனக்கென்னமோ ஆரம்பத்துலருந்தே அந்த ஆளு மேல எங்க ஊரு சந்திரபாபு வாசனை தான் அடிச்சது. அதுலயும் கல்கில ஒருதாட்டி ஒரு கவர்ஸ்டோரி படிச்சேன்.அதே இஷ்யூவுல மும்பை நகர வங்கியெல்லாம் விளம்பரம் கொடுத்திருக்கு.

கொய்யால .. க்ளியராயிருச்சு. இந்தாளு பாபு ஃபார்முலாவுல வரான். மேட்டர் ஒன்னுமில்லை வாத்யாரே மக்களோட வரிப்பணத்தை விளம்பரம்ங்கற போர்வையில பத்திரிக்கைக்காரவுக வாய்ல போடறது. வர்ர எடிட்டர் பசங்களுக்கும்,நிருபர் பசங்களுக்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல கவனிப்பு. சி.எம் ஆஃபீஸ்லருந்து ஃபோனை போட்டு பலான பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுங்கன்னு தாக்கீது. இழந்த சக்தி வைத்தியரோட ப்ரவுச்சர் மாதிரி ஒரு மெட்டீரியலை நிருபர் கையில கொடுத்துட்டா தீர்ந்தது கதை.

அச்சுல வர்ரதெல்லாம் நெஜம்னு நம்பறவுக இன்னம் இருக்காய்ங்க. அவிக தான் இவிக டார்கெட். ஜோசியத்தையே அனுபவத்துல உரசி பார்த்துத்தான் சொல்றோம். மோடியோட -அவரோட பி.ஆர்.ஓ டீமோட பவிசு என்னங்கறதையும் அனுபவ பூர்வமா பார்க்கனுமில்லையா?

அதான் இன்னைக்கு ஐயாவோட வெப்சைட்டுக்கு போனேன். ஜபர்தஸ்தா கீதுபா. நீங்க மோடிக்கு கடிதாசி போடலாம்,மெயில் போடலாம் , அட எஸ்.எம்.எஸ் கூட அனுப்பலாம். உங்க கருத்தை சைட்ல எழுதலாம்.

நமக்குத்தேன் உருப்படாம போக ஒரு பலகீனம் இருக்கே. இந்திய நதிகளை குறுகிய காலத்துல இணைச்சு இந்தியாவின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு திட்டம் போட்டு பினாத்திக்கிட்டிருக்கமே. சமீபத்துல தமிழக சட்டமன்ற சபா நாயகருக்கு ஒரு 200+ பிரதிகள் அனுப்பினம்.

பிரதிகள் எம்.எல்.ஏக்களுக்கு கிடைக்கனும். இதை பத்தி ஒரு விவாதம் நடக்கனும். ஒரு தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பனும். இதான் நம்ம கோரிக்கை. அச்சடிச்சு ,கூரியர் காரனுக்கு அ நியாய காசு கட்டி அனுப்பினம்.ஒன்னம் பேரலை.

சரி ..அம்மாவுக்கு அனுப்பிரலாம்னு 2013, செப் 14 ஆம் தேதி ஒரு 200+ பிரதிகள் கூரியர்ல புக் பண்றேன் (ரூ.175) .கொய்யால கூரியன் காரன் சைட்ல ட்ராக் பண்ணா அவன் காலச்சக்கரத்தையே பின்னோக்கி திருப்பியிருக்கான் (பார்க்க :படம்)

OI in Modis website

நிற்க இந்த விவரங்களை நமக்கு வந்த ஓட்டை இங்கிலீஷ்ல மோடி சைட்ல ஏத்தி விட்டம். திட்டத்துல மொத்தமே அஞ்சு பாயிண்டு தேன். அதுல ரெண்டரை பாய்ண்ட் சென்சார். (பார்க்க:படம்)

உங்க வசதிக்கு என் திட்ட சுருக்கம் ஆங்கிலத்துலயும் -பின் தமிழ்லயும்.
மோடி சைட்ல பிரசுரமான பகுதி:
Sir,
I had drafted an action plan to resolve all the problems of our country and working for its implement. Recently I had send 200+ copies of the plan to the Honourable Speaker ,And Chief Minister of Tamilnadu.
I had requested them to let my plan reach the MLAs and they shall debate and take decision.My plan in short:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level
சென்சார் ஆன பகுதி:
and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
மோடி சைட்ல பிரசுரமான பகுதி:
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி
மோடி சைட்ல சென்சார் ஆன பகுதி:
விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.
யதா ராஜா ததா ப்ரஜா. மோடியோட மென்டாலிட்டிக்கு ஒத்துப்போறவுகளுக்குத்தேன் இந்த சென்சார் வேலை தரப்பட்டிருக்கும்.
இப்பம் புரியுதா அவிக மென்டாலிட்டி..
Any how I appreciate the site admin for paublishing atleast a part of my plan

வித் அவுட் ஜாதகம் : ஜன்ம தசை நிலுவை

அண்ணே வணக்கம்ணே !
தொழிலும் கில்மாவும்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு எழுதிட்டு வர்ரம். இதுல ஜோசியத்தை கொண்டு வரலாம்னு பார்க்கிறேன். முடியலை.
சரி ஜோசியம் தொடர்பா என்ன எழுதலாம்னு பார்த்தா அந்த நாள் ஞா நெஞ்சிலே வந்தது. நாம ஜாதகம் இல்லாத கேசை டேக் அப் பண்ணவே மாட்டோம். ஆனால் தாய்க்குலம்லாம் ரெம்ப பிடிவாதம் பண்ணுவாய்ங்க. “அந்தாசா சொல்லுங்க -உதாரா சொல்லுங்க -குன்ஸா சொல்லுங்க”ன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுவாய்ங்க.

சரி ஓஞ்சு போவட்டும் உங்க பேரையாச்சும் ஜாதகப்படி வச்சாய்ங்களான்னு கேட்டு -அதை வச்சு ஜன்ம நட்சத்திரம் -ஜ.ந வை வச்சு ஜன்ம தசை கண்டுக்கிட்டு.. ஜன்ம தசை நிலுவையை எப்படி கண்டுக்கறதுன்னு ரோசிச்சி சில கேள்விகள் கேட்டு “அந்தாசா” கேல்க்குலேட் பண்ணிக்கிட்டு மேற்கொண்டு பலன் சொல்லுவம்.
அந்த டெக்னிக்கை ஜாதகம் இல்லாதவுகளுக்கு சொன்னா என்னன்னு தோனுச்சு .உதிரியா அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துல போட்டுக்கிட்டே வந்தேன். சைட்ல போட்டா மொத நாளே கு.ப 700 பேர் படிச்சுருவிங்க.ஆனால் முக நூல்ல 200 ஐ தாண்டலை.

அவாளுக்கும் நமக்கும் உள்ள வித்யாசமே அவா அறிவை ஒளிச்சு வைச்சுண்டுருவா. நாம ..சான்ஸே கிடையாது. இந்த கொள்கை காரணமாத்தான் ஜோதிடம் 360 நூலை பதிவர் சந்திப்புல இலவசமாவே கொடுத்துட்டம். (தம்பி ! வடை இன்னம் வரலை?ங்கறிங்க. வந்துட்டன். மேட்டருக்கு வந்துட்டன்)

1.கிருத்திகை,உத்திரம்,உத்திராடம்
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஜன்ம தசை சூரிய தசை -மொத்தம் 6 வருசம் .
பகலில் பிறந்தவர்களுக்கு மட்டும்:
நீங்க பிறந்ததிலிருந்து அப்பாவின் வாழ்வில் முன்னேற்றம் / சிக்கல்கள் ஓய்ந்து எப்போ அவர் ஸ்டெடி ஆனாருன்னு பாருங்க. அஞ்சு வருசத்துலயா? 4 வருசத்துலயா? அத்தீனி வருசம் தான் ஆறு வருச சூரியதசையில இருப்பு இருந்திருக்குன்னு அருத்தம்.
(இதுக்கப்பாறம் வர்ரதையும் மேட்ச் பண்ணுங்க)
மற்றவர்களுக்கு:
மலை பிரதேசம்/வனாந்திரம்/ மேடான பகுதிகளில் வாசம்/ புதிய காலனியின் முதல் வீடு /வீட்டின் மத்தியில் ஓப்பன் ஏர் இருப்பது. இது போன்ற அமைப்பு எவ்ள காலம் இருந்தது? விஜாரிங்க. அல்லது அடிக்கடி ஜுரம்,உஷ்ண கோளாறுகள் எப்போ ஓஞ்சதுன்னு பாருங்க. அஞ்சு வருசத்துலயா? 4 வருசத்துலயா? அத்தீனி வருசம் தான் உங்க சூரிய தசா இருப்பு

2.ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்
இந்த நட்சத்திரகாரவுகளுக்கு ஜன்ம தசை சந்திர தசை (10 வருசம்). இதுல செல்லு போக மீதி எவ்ளோன்னு கெஸ் பண்ணனுமா?
பாசிட்டிவ்:
ஃபேமிலியில நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா மாசத்துல 14 நாள் பாசிட்டிவ் டெவலப்மென்ட்ஸ் – அடுத்த 14 நாள் கொஞ்சம் ரிவர்ஸ் கியர். வீட்டுக்கு தண்ணி வசதிஏற்படறது. அப்பாவுக்கு சந்திர காரக தொழில்களில் நல்ல லாபம். (உ.ம் மக்களுடன் நேரடி தொடர்புள்ள வேலைகள், )
நெகட்டிவ்:
அடிக்கடி சளி பிடிக்கிறது, இருமல், சிலருக்கு சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை, எசென்ட் ரிக்கா இருக்கிறது,ஹிஸ்டீரிக்கா பிஹேவ் பண்றது ,ஜல கண்டம் ( அண்டாவுல கவுந்துக்கறது?) இதெல்லாம் எப்போ ஓய்ஞ்சது? அப்போ சந்திர தசை முடிஞ்சதுன்னு அருத்தம்.
இரவில் பிறந்தவர்கள் :
அம்மா மேட்டர்ல அப் அண்ட் டவுன்ஸ் ஒரு முடிவுக்கு வந்து அவிக ஒரு ரேஞ்சுக்கு ஸ்டெடியானது எப்போ? நீங்க அம்மா கோண்டுங்கற நிலையிலருந்து மீண்டது எப்போ? சந்திர தசை முடிஞ்சது அப்போ ..

3. மிருகசீர்ஷம்,சித்திரை,அவிட்டம் :
ஜன்ம தசை செவ் தசை -மொத்தம் 7 வருசம். செவ் பலம் பெற்றால் சகோ, நிலம், மாடு,கன்று,எரிபொருள் ,காவல் துறை வகையில் நலம் விளைந்திருக்கும்.
செவ் பலகீனம் அடைந்திருந்தால் ரத்தம்,ரத்த சுத்திகரிப்பு, எரிச்சல் தொடர்பான பிரச்சினை,நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதங்களால் பிரச்சினை இருந்திருக்கும்.
மேற்படி நல்லது கெட்டது 4 வருசத்துல முடிஞ்சதா- அஞ்சுவருசத்துல முடிஞ்சதா உங்க அனுபவம் என்ன சொல்லுது பாருங்க. ஜன்ம தசையில அத்தீனி வருசம் நிலுவை இருந்ததா அருத்தம்

4. திருவாதிரை,ஸ்வாதி,சதயம்:
இவிகளுக்கு ஜன்ம தசை ராகு தசை .மொத்தம் 18 வருசம். ராகு சுபபலமா இருந்தா படிப்போடு – உலக கல்வியும்(?) சூப்பரா வரும்.
ஒரு வேளை ராகு பல்பு வாங்கியிருந்தா ஆளு ஒல்லி பீச்சானா இருக்கிறது இல்லின்னா பல்க்கா இருக்கிறது.தமிழ் சினிமாவுல ஃப்ளாஷ் பேக் காட்சி போல ஃபேமிலி சிதறிப்போறது. படிப்பு நாசமா போறது இத்யாதி நடக்கும். மேற்சொன்ன சம்பவங்கள் எப்போ முடிவுக்கு வருதோ -ஓயுதோ அந்த வருசம் ராகு தசை முடிஞ்சு போச்சுன்னு அருத்தம்

5. புனர்வசு,விசாகம்,பூரட்டாதி :
இவிகளுக்கு ஜன்ம தசை குரு தசை.மொத்தம் 16 வருசம்.
குரு சுப பலமா இருந்தா நல்ல ஞா சக்தி ,பொருளாதார வளர்ச்சி (குடும்பத்துக்கு) ,பக்தி,நல்ல ஜீரண சக்தி இரு(ந்திரு)க்கும்.
ஒரு வேளை குரு பல்பு வாங்கியிருந்தா ஞா மறதி, ஏழ்மை,நாத்திக வாதம் ,வாயு கோளாறு,இதயம் தொடர்பான பிரச்சினை இருந்திருக்கும். இதெல்லாம் எப்போ மாறியது ? எப்போ ஓய்ந்தது ? சின்னதா கணக்கு போட்டு பாருங்க. அப்போ அப்ப வரைக்கும் குரு தசை நடந்ததுன்னு அருத்தம்.
6.பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
இவிகளுக்கு ஜன்மதசை சனி தசை . இது மொத்தம் 19 வருசம்.

ராத்திரியில பிறந்திருந்தா:
பித்ருகாரகனும் இவரே. ஜாதகத்துல சனி பலம் பெற்றிருந்தா அப்பாவுக்கு நிதானமான, நிலையான முன்னேற்றம் இருந்திருக்கும். யூனிஃபார்ம் போடற வேலை / சனி காரகதொழில்கள் கை கொடுத்திருக்கும்.( உ.ம் ஐரன்,ஸ்டீல் ஆயில்,அக்ரிகல்ச்சர்)
சனி பல்பு வாங்கியிருந்தா அப்பா மேட்டர் ஊத்திக்கும். அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள இன்டராக்சன் கூட பாதிக்கப்படும்.
பொதுவா சனி பலம் பெற்றிருந்தா லேசான மந்தத்தன்மை இருந்தாலும் கடும் உழைப்புக்கும் அஞ்சாத நேச்சர் இருக்கும். பேப்பர் ,பேனா,பென்சிலை விட ஸ்பேனர்,கட்டிங் ப்ளேயர் ரெம்ப கவரும்.

7.ஆயில்யம்,கேட்டை,ரேவதி
இவிகளுக்கு ஜன்ம தசை புத தசை .மொத்தம் 17 வருசம்.
புதன் சுபபலமா இருந்தா நியூமரிக்கல் எபிலிட்டி,கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்,தாய் மாமன் ஆதரவுல்லாம் இருந்திருக்கும்.
இதுவே புதன் பல்பு வாங்கியிருந்தா தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினைகள்,கணக்குன்னாலே பிணக்கு , வாத்தியார் எதை கேட்டாலும் பேந்த பேந்த முழிக்கிறது,தாய் மாமன் ஊரை விட்டு ஓடிப்போறது இத்யாதி நடந்திருக்கும்.
இந்த காட்சிகள் எப்போ ஓய்ஞ்சது? நீங்க பிறந்த அஞ்சு வருசத்துலயா? பத்து வருசத்துலயா? திரும்பிப்பாருங்க.

8.அஸ்வினி-மகம் -மூலம்:
இவிகளுக்கு ஜன்ம தசை கேது தசை. டோட்டலா 7 வருசம். திரும்பிப்பாருங்க. இளமையில் வறுமை அல்லது பாசத்துக்கு ஏங்கும் நிலை – புண்கள்,சிரங்கு, நீங்க வளர்ந்த என்விரான்மென்ட்ல இதர மதத்தவர்கள் இதெல்லாம் எந்த வயசுல முடிவுக்கு வந்தது ? அந்த வயசுல கேது தசை முடிஞ்சு போச்சு?

9.பரணி,பூரம்,பூராடம்:
இவிகளுக்கு ஜன்ம தசை சுக்கிர தசை. டோட்டலா 20 வருசம். சுக்கிரன் பெட்டர் பொசிஷன்ல இருந்தா கலை,இலக்கியம்,ஹேண்டிகிராஃப்ட் ,சங்கீதம் ,நடனம் இத்யாதியில் ஆர்வம்,பயிற்சி ,வளர்ச்சி . வீட்டில் செல்வ செழிப்பு. தினசரி விருந்து ,பார்ட்டி,விசேஷம்.( இந்த கலாட்டாவுல நீங்க ஸ்கூலுக்கு போனிங்களா இல்லையான்னு கேட்ககூட ஆள் இருந்திருக்காது) கூடவே வயசுக்கு மீறின கெட்ட ஆட்டம்லாம் கிராஸ் ஆகியிருக்கலாம்.
ஜாதகத்துல சுக்கிரன் பல்பு வாங்கியிருந்தா பிஞ்சுல பழுத்து -படிப்பை கோட்டை விட்டு பொளப்பு நாறியிருக்கும். கடந்த பாராவுல சொன்ன கலை இலக்கியம்லாம் எந்தளவுக்கு கவர்ந்ததோ அந்தளவுக்கு வாடகை வீடு, சோற்றுக்கில்லாமை ,வண்டி வாகனமில்லாம கால் தேய நடக்கிறது இத்யாதியும் நடந்திருக்கலாம்.
இதெல்லாம் எத்தீனி வருசம் நடந்துச்சோ அத்தீனி வருசம் சுக்கிர தசை நடந்ததுன்னு அருத்தம்.

போனஸ்:
தசைகள் எந்த வரிசையில வருமோ அதே வரிசையில தான் இந்த பதிவை எழுதியிருக்கேன். அதனால அடுத்தடுத்த தசைகளுக்குரிய பலனை படிச்சே அந்த தசா நாதன் உங்க ஜாதகத்துல சுப பலமா -பல்பு வாங்கியிருக்காரான்னு அசெஸ் பண்ணிக்கலாம்.
ஜாதகம் உள்ளவர்கள் தமக்கு எதிர்காலத்துல வர இருக்கும் தசை/புக்திகள் எப்படி பலனளிக்கக்கூடும் என்று ஊகிக்கவும் முடியும்..