கிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்

Jaya sign Eng

அண்ணே வணக்கம்ணே !
சோசியத்துல ஆனா ஆவன்னா தெரியாதவுகளுக்கு கூட சனின்னாலே ஒரு கிலி. இந்த பார்ட்டி தனிய நின்னாலே பேதியாக்கிருவாரே. இதுல இவரோட கிரகங்கள் வேற சேர்ந்தா என்னாகுமோன்னு பீதியாயிராதிங்க. இடம்,பொருள்,ஏவல் -கால,தேச,வர்த்தமானம்னு எத்தனையோ இருக்கு.
எல்லாத்தையும் கூட்டி கழிச்சு  நெட் ரிசல்ட்டை கேட்ச் பண்ணனும். அதுக்கப்பாறம் பயந்தாலும் ஒரு லாஜிக் இருக்கும்.ச்சொம்மாவே கற்பனை பண்ணிக்கப்படாது.ஆமாம் சொல்லிப்புட்டன்.
சனி உங்க லக்னத்துக்கு சுபர்னு வைங்க. சுஸ்தானத்துல இருக்காருன்னு வைங்க. இவரு பலம் பெறனும். அப்போ யோகம் கதவை தட்டும். ஒரு வேளை சனி உங்க லக்னத்துக்கு பாவர்னு வைங்க. துஸ்தானத்துல இருக்காருன்னு வைங்க. இவர் பலமிழக்கனும்.
அட மேற்படி விதி எதுவுமே ஒர்க் அவுட் ஆகல்லை. கு.ப அவர் வக்ரம் பெற்றால் போதும் பலன் தலைகீழா மாறும். நம்ம ஜாதகம் (ஞா இருக்கும்னு நினைக்கிறேன்) கடகலக்னம், சனி 7 – 8க்கு அதிபதி. 9 ஆமிடமான பாக்ய ஸ்தானத்துல உட்கார்ந்தாரு. ஆனால் வக்ரம். எப்படியோ தப்பி பிழைச்சோம்.
இப்படி ஆயிரத்தெட்டு விதிகள் -உபவிதிகள் எல்லாம் இருக்கு. இங்கன சொல்லப்போற பலன்லாம் ப்ரிலிமினரிதான். இதை சுப்ரீம்கோர்ட் ஆர்டர் போல நினைச்சு பயந்துக்காதிங்க.
இப்பம் சனி இதர கிரகங்களோட சேர்ந்தா என்ன பலன்னு பார்த்துருவம்.
1.சனி+சூ:
பல் தலை எலும்பு,முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை வரலாம். சொம்படிக்கிறதுல  ஆர்வம் இருக்கலாம். ஜாதகர் பகல்ல பிறந்திருந்தா இது  அப்பாவுக்கு நல்லதில்லை. அவரோட விரோதம் வரலாம். உள்ளாட்சி அமைப்புகளால் பிரச்சினை வரலாம். அபராதம் ,தண்டனை கூட கிடைக்கலாம். கால்,நரம்பு ,ஆசனம்  பாதிக்கப்படலாம்
2.சனி+சந்திரன்:
பிறர் செய்ய விரும்பாத வேலைகளை அவிகளை வற்புறுத்தி செய்ய வைக்கிற குணம் இருக்கலாம்.பிறர் துன்பத்தில் இன்பம் காண்பார்கள். பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கற அரசியல் வாதிங்க ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கலாம். சட்டுனு உ.வ படுவாய்ங்க.  நரம்பு மண்டலம் பாதிக்கும். கான்சிட்டிபேஷனும் -லூஸ் மோஷனும் மாறி மாறி கலாய்க்கும்.
3.சனி+செவ்:
ரத்த மூலம்,  நரம்பு பலவீனம், அங்கஹீனம் ஏற்படலாம். ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை ஏற்படலாம். சோதர ஹானி. சோதரர்களால் ஜாதகருக்கு ஆப்பு. வேலைக்காரன் கூட ஆபத்தை விளைவிக்க முடியும். சனி,செவ் காரகங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். இன்னும் சொல்லனுமா என்ன பல முறை தனிப்பதிவுகளே போட்டிருக்கேங்க.
4.சனி+ராகு:
இங்கே ராகுவுக்குத்தேன் பலம்.  சனி முழு வீச்சோட வேலை செய்ய முடியாது.சனி காரகம் கொண்ட தொழில்கள்ல சூதாட்டம் மாதிரி ஒரு  கேம் ஆடிப்பார்க்கலாம்.  உ.ம் கிரானைட்ஸ். எங்க பக்கத்துல ஊரான் வெட்டி வச்ச  கிரானைட்டை திருடி வித்தே பெரியாளு ஆன பார்ட்டி ஒன்னு உண்டு. இதுவும் சனி+ராகு காம்பினேஷனோட எஃபெக்டுதேன்.
ராகு காரகத்துல இறங்கும் போது சனி காரகங்களான தாமதம், தலித்,கூலிகளின்  எதிர்ப்புல்லாம் டைல்யூட் ஆயிரும்.
இந்த காம்பினேஷன் 3 ல் ஏற்பட்டா  தம்பி,தங்கை காலி,சவுண்ட் பாக்ஸ் அவுட்டு, 6 ல் நின்னா எதிரி,கடன் கொடுத்தவன்,இவிக மேல வழக்கு போட்டவன் அவுட்டு, 10ல நின்னா கூலியே இல்லாம வேலை பார்க்க சனம் வருவாய்ங்க.11ல நின்னா அக்கா,அண்ணா காலி. இப்படி ஒவ்வொரு பாவமா பார்க்கனும். லக்னத்துல நின்னா  என்னாகும்? தனபாவத்துல நின்னா என்னாகும்? வரிசையா பார்க்கனும்.
லக்னம் மகரம்/கும்பமா இருந்தா ராகு கேது 1-7 ல் உள்ள எஃபெக்ட் வந்திரலாம்.
5.சனி+குரு:
ஆசாரம்-அனாசாரம் ,ஆத்திகம் – நாத்திகம்லாம்   ஜாதகரை தலா ஒரு பக்கம் இழுக்கும். இதனால குற்றமனப்பான்மை கூட வரலாம். இவிக ஆத்திகத்தை விடறவரை குரு காரகங்கள் கண்ணா மூச்சி காட்டும். லக்னம் தனுசு,மீனமாக இருந்தால் இவிக ஜாதகத்துக்கு சொல்லும் பலன்கள் தலை கீழாக நடக்கும்.
6.சனி +புதன்:
சனி காரக தொழில்களில் ப்ரோக்கரேஜ் பண்ணலாம். உ.ம் விவசாயம்,ஐரன்,ஸ்டீல்,ஆயில். மருத்துவ தொழில்களில் செகண்ட் க்ளாஸ் துறையில  ஈடுபடலாம். உ.ம் வெட்டினரி. தலித் இலக்கியம்,நாட்டுப்புற இலக்கியம். சனி யோக காரகனா உள்ள லக்னங்களுக்கு புதனும் ஓரளவு அனுகூலமாத்தான் இருப்பாரு. இந்த சேர்க்கை சுமாரான இடத்துல ஏற்பட்டாலும் தூள் பண்ணலாம்.
7.சனி+கேது:
சனி ராகு சேர்க்கை வேறு சனி கேது சேர்க்கை வேறு . ஆசனப்புற்றுக்கு வாய்ப்புண்டு. நோய் கிருமிகளின் தாக்குதலாம்  கால், நரம்பு,ஆசனம்  பாதிக்கலாம். சனி காரக தொழில்களில் ஈடுபடும் போது லாஜிக் இல்லாம கோர்ட் கேஸுன்னு அலைய நேரிடும். திடீர்னு ஒரே நாள்ள தலைக்கு துண்டு வரலாம்.
8.சனி+சுக்கிரன்:
கலப்பு மணம் – வயதில் மூத்தவரை மணத்தல் -வீட்டு வேலைக்காரியுடன் சகவாசம். கால் தொடர்பான ஊனம் உள்ளவரை விரும்பி மணத்தல் . பின் பக்க புணர்ச்சியில் ஈடுபாடு.  பேக்யார்ட் மெயின்டெய்னென்ஸுக்கு தேவையான பொருள்களை தயாரிப்பது,விற்பது லாபம் தரலாம். உ.ம் சேனிட்டரீஸ், ஃபெனாயில்,ஆசிட். ஆட்டோமொபைல்ல டிங்கரிங் , விவசாயத்துக்கு தேவையான வாகனங்கள்,கருவிகள் தயாரிப்பு ஒர்க் அவுட் ஆகலாம்.
சனி இதர கிரகங்களுடன் சேர்ந்தால் ஏற்படக்கூடிய பலன்களை இதுவரை பார்த்தோம். நாளைக்கு புதன், நாளன்னைக்கு கேது, அப்பானாத்திக்கு சுக்கிரன் இதர கிரகங்களுடன் சேருதலால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்.
இந்த சீரிஸ் முடிஞ்சதும் கிரகங்கள் துவாதச பாவங்களில் நிற்கும் பலனை பார்ப்போம். ஓகேவா உடுங்க ஜூட்டு..

பெருமாள்னா பெருமாள் தான் பாஸூ !

Image

பெருமாள்னா  பெருமாள் தான் பாஸூ ! நின்னு விளையாடறாரு. சமீபத்துல ஆதிஷா போட்ட பெருமாள் படம் ஷேர்களை குவிக்கிறதை பார்த்துட்டு 1960 ல திருப்பதி பெருமாள் கோவில்லயே ஷூட் பண்ண ஒரு தெலுங்கு படத்தோட வீடியோவை கடந்த பதிவுல போட்டிருந்தன். எத்தனை பேரு ஷேர் பண்ணாய்ங்களோ -அவிகளுக்கு என்ன நடந்ததோ நமக்கு தெரியாது.

ஆனால் கடந்த ஏப்ரல் 19 முதல் முடங்கி கிடந்த நம்ம சைட்டுக்கு விடிவு காலம் பிறந்திருக்கு.  அனுபவஜோதிடம் சைட்டுக்கு சர்வர் உபயம் திரு சரண். பாவம் அவரு புதுசா சேர்ந்த வேலை ஒரு பக்கம் – வழக்கமான வெப்சைட் ஹோஸ்டிங் டிசைனிங்குன்னு செமை பிசி.

சித்தூரார் நம்மாளு.  புரிஞ்சுக்குவாருன்னு நம்மை ரிசர்வ்ல வச்சுட்டாரு போல. நமக்கு 46 வயசு ஆகுது. இப்பமும் “இப்போ ராமசாமி “போல அலப்பறை பண்ணா நல்லாவா இருக்கும். அதனால நாமும் டீல்ல விட்டுட்டம்.

பெருமாள் வீடியோவை பகிர்ந்ததால பெருமாளுக்கு குஜிலியாயிருச்சு போல . இன்னைக்கு கொஞ்சம் முன்னே திரு சரணே தானா ஃபோன் பண்ணி நைட் 9 மணிக்கு ஒரு தடவை கால் பண்ணி ஞா படுத்துக்கங்க. முடிச்சுரலாங்கறாரு.

பெருமாள் புதனுக்குரிய கடவுள். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிக்கே புதன் தான் காரகன். கணக்கு சரியாபோகுதா?

இது ஒரு பக்கம்னா இந்த வீடியோ பதிவுல போடறதுக்கு மிந்தி நம்ம ப்ளாகுக்கு வந்துக்கிட்டிருந்த பேஜ் வ்யூஸ் மணிக்கு 70+  தான். இப்பம் பார்த்தா 85 . தேங்க்யூ .. மிஸ்டர் செவன் ஹில்ஸ்!

Image

சமீப காலமா ஞா கிழமைகள்ள பதிவே போடறதில்லை. ஆனா நேத்திக்கு போட்டிருக்கம். இன்னைக்கு பெருமாள் வீடியோ பதிவு வேற போட்டாச்சு. இப்பம் இந்த பெருமாள் பெருமாள் தான் பதிவு. அதனால இன்னைகு ஜோதிட பதிவு இல்லை. நாளைக்கு சனியுடனான கிரகங்களின் சேர்க்கைக்கு பலனை பார்ப்போம்.
உடுங்க ஜூட்டு.

எச்சரிக்கை:

பெருமாளுக்கு நமக்கும் ஏகப்பட்ட டீலிங்கிருக்கு.அதையெல்லாம் இன்னொரு சமயம் விரிவா சொல்லுவம்ல

திருப்பதி பெருமாளை “ஜருகன்டி” இல்லாம தரிசிக்க வாங்க !

அண்ணே வணக்கம்ணே !
திருப்பதின்னாலே கோவிந்தா கோவிந்தா ஞா வருதோ இல்லையோ “ஜருகண்டி ஜருகண்டி” ஞா வந்துரும். நம்ம டர்ன் வராத வரை “கொய்யால.. பிடிச்சு தள்ள வேண்டியதுதானே.. என்னத்தை பிடுங்கறானுவ”ன்னு திட்டிக்கிட்டிருக்கம். நம்ம டர்ன் வந்து “ஜருகண்டி ஜருகண்டி”ன்னா கொலை வெறி வந்துரும்.
இதுல நம்ம ஊர்ல இருந்து ரயிலுபஸ்ஸை பிடிச்சு திருப்பதி வந்து – மலைக்கு பஸ்ஸை பிடிச்சு பொஞ்சாதி,பிள்ளை குட்டிகளோட மாரடிச்சு பெருமாளை பார்க்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துரும். சொந்த வாகனத்துல வர்ரவுக மறு நாள் செய்தியாகாம பெருமாளை பார்த்துட்டு ஊரைபோய் சேர்ரதே மலை.
பெருமாளை ஜஸ்ட் சில செகண்ட்ஸ் பார்க்கவே இத்தீனி இமிசைங்க இருக்கு. ஆனால் இப்பம் நீங்க எந்த இமிசையும் இல்லாம பெருமாளை க்ளோசப்ல -லாங் ஷாட்ல -மிட்ஷாட்லன்னு வெரைட்டி வெரைட்டியா பார்க்க போறிங்க.
ஆங் ..அது எப்படி இந்தாளு இன்னாமோ 2ஜி பண்றான்னு டவுட்டு அப்படித்தானே. நோ டவுட்டு பாஸூ. மேட்டருக்கு வரேன்.
இன்னைக்கு திருப்பதி பெருமாளை பார்க்க மலை ஏறினா படக்குன்னு கேமிரா -செல்ஃபோன் எல்லாத்தையும் பறிச்சு வச்சுக்கறாய்ங்க. ஆருனா டென்டெக்ஸுக்குள்ள வச்சு எடுத்துட்டு போயி ஒரே ஒரு ஷாட் எடுத்தா போதும் உடனே சவுக்கம் போட்டு -உட்கார வச்சிருவாய்ங்க.
ஆனால் 1960 ல எங்க தலீவரு வெங்கடேஸ்வர மஹத்யம்னு ஒரு படம் எடுத்தாரு. அதுல ஒரு பாட்டை -ஆமாங்கண்ணா முழு பாட்டை பெருமாள் சன்னிதியிலயே எடுத்தாய்ங்க. பெருமாள் சன்னிதியில எடுத்த முதலும் கடைசியுமான ஷூட்டிங் இதான் . அந்த பாட்டோட வீடியோவத்தான் ஆராமா பார்க்கப்போறிங்க. பாடகர் கண்ட சாலா. வீடியோலயும் அவரே பாடறாரு.
ச்சொம்மா பார்த்துட்டு போனா பெருமாள் கோவிச்சுக்குவாரு. அதனால இந்த பதிவை கச்சா முச்சான்னு ஷேர் பண்ணுங்க.
ஒவ்வொரு ஷேருக்கும் தமிழ் நாட்ல பவர் கட் ஒழியனும்னு வேண்டிக்கங்க. இல்லின்னா விவசாயம், தொழிற்சாலைகள், சிறு ,குறு தொழில்,கைத்தொழில் எல்லாமே முடங்கி வேலை வெட்டி இல்லாம கிரைமும் -விபச்சாரமும்தான் நாறடிக்கும்.
ஓகேவா.. உடுங்க ஜூட்டு.

கிரக சேர்க்கை : குருவும் இதர கிரகங்களும்

Image

1.குரு+சூ :
பிராமண லட்சணங்கள் மிக குறைவாகவும் சத்திரிய லட்சணங்கள் அதிகமாவும் இருக்கலாம். சுய சம்பாத்தியத்தில் ஆர்வம். ஸ்தூல பூஜை,புனஸ்காரங்களை விட ஆத்ம சாட்சியாக வாழ்வது வாழ்வது பெட்டர் என்ற கொள்கை. ஒரே குழந்தை.  பெண்குழந்தையே பிறந்தாலும் அது மேலிஷா இருக்கும். சாம,பேத,தான,தண்டோபாயங்களில் தண்டோபாயமே கவரும்.அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்ற கொள்கை.
2.குரு+சந்:
பண விஷயத்துல ஆட்டை தூக்கி மாட்ல,மாட்டை தூக்கி ஆட்ல போடறவுகளா இருப்பாய்ங்க.   லைஃப்ல தன் தகுதிக்கு ஒவ்வாத (குறைந்த) வாழ்வை ஒரு 14 அ 15 வருசம் வாழவேண்டி வரலாம். பணம்,பதவில்லாம் எப்ப வரும் எப்ப போகும் தெரியாது. மனைவி/குழந்தைகள் விஷயத்துல நெருக்கம் கூடும் குறையும்.
3.குரு+செவ்:
ஃபைனான்ஸும் நல்லா இருக்கும். நில புலனும் ஓகே. கோவில் நிலத்துல அதுவும் சிவன் கோவில் நிலத்துல கைய வச்சுட்டா நாறிரும். தார்மிக குணம் கொண்ட போலீஸாவோ, டேர் டெவில் லாயர்/ நீதிபதியாகவோ கூட ஆகலாம்.  என்ன ஒரு லொள்ளுனா பொஞ்சாதி,பிள்ளைங்க எல்லாருமே கோவக்காரங்களா மாறலாம். ஜாதகருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.அல்சர் வரலாம்.
4.குரு+ராகு:
குரு காரகம் ஃபணால். கோல்ட்,ஃபைனான்ஸ்,அரசியல் செல்வாக்கு,கல்யாணம், மனைவி,மகன்,பேரன் எல்லாத்துக்கும் பிரச்சினை. வயிறு இதயம் தொடர்பான பிரச்சினையும் வரலாம். லக்னம் தனுசு ,மீனமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல். 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும். இவர்கள் பெரியார் வழி நடப்பது நலம்.
5.குரு+சனி:
ஆசாரம்-அனாசாரம் இந்த ரெண்டும் ஜாதகரை தலா ஒரு பக்கம் இழுக்கும். இதனால குற்றமனப்பான்மை கூட வரலாம். குரு+ராகு சேர்க்கைக்கு சொன்ன தீய பலன் வாழ்வில் ஏற்படும் தாமதங்களால் -தாமதமாக ஏற்படலாம். லக்னம் தனுசு,மீனமாக இருந்தால் இவிக ஜாதகத்துக்கு சொல்லும் பலன்கள் தலை கீழாக நடக்கும்.
6.குரு+புதன்:
இந்த கிரகங்களுக்கு துஸ்தானாதிபத்யம் கிடைக்காது ( 6,8,12)- லக்னாத் சுபர்களாவும் இருந்து – வேறு பாபர்களின் சம்பந்தம் இத்யாதி கிடைக்கலின்னா சூப்பர். தன் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸை தார்மிக வழியில் பயன்படுத்தி பேரும் புகழும் பெறலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் உள்ளவுக கதை,கவிதை நாடகம்,திரைக்கதைல புகுந்து விளையாடலாம். சிட்ஸ்,ஃபைனாஸ் ,மணி மார்க்கெட்டிங்ல சாதிக்கலாம். தார்மிகம் தொடர்பான வியாபாரங்களும் வெற்றி தரும்
(உ.ம் கிரி ட்ரேடிங் ஏஜென்சி போல ).என்.ஜி.ஓ,ட்ரஸ்ட் நடத்தலாம்.
7.குரு+கேது:
குரு+ராகு,குரு+சனி சேர்க்கைக்கு சொன்ன பலனே ரிப்பீட் ஆகலாம். ஜாதகர் காலப்போக்குல விரக்தி -விரக்தியில இருந்து தேடல்,தேடலாம் ஞானம் பெற்றுவிட்டால் பிரச்சினை ஓவர்.இல்லின்னா ஹார்ட் அட்டாக் கூட வரலாம்.
8.குரு+சுக்கிரன்:
குரு = தேவகுரு ; சுக்கிரன் =ராட்சச குரு .
குரு= தொலை நோக்கு,திட்டமிடல்,சேமிப்பு,கோவில்,குளம்,பக்தி,அரசியல் ,சமூகத்துல மரியாதை,செல்வாக்கு
சுக்கிரன்= மாட மாளிகை ,வண்டி வாகனங்கள்,விருந்து,போஜனம்,பிக்னிக்,டூர்,பார்ட்டி,ஃபங்சன்,கில்மா,தூக்கம்
இந்த ரெண்டுகிரகங்களுக்குண்டா அதிர்வுகள் வேறு காரகங்கள் வேறு .இந்த 2 கிரகங்கள் சேரும்போது ஆளுக்கொரு பக்கமா இழுக்கும். ஒன் கென் நாட் ரெய்ட் டூ ஹார்சஸ் .ஒன் கென் நாட் சர்வ் டூ பாஸஸ். குரு சுபரா உள்ள ஜாதகங்களுக்கு சுக்கிரன்  பாபரா இருப்பார். சுக்கிரன் சுபரா உள்ள கிரகங்களுக்கு குரு பாபரா இருப்பார்.
இதனால இந்த சேர்க்கை உள்ளவுக லைஃப்ல ரெம்ப அவதிப்படுவாய்ங்க.
எங்க தலீவர் ஃபீல்டுல இருந்தவரை (சுக்கிரன்) அஜாத சத்ரு எதிரியே கிடையாது.அரசியலுக்கு வந்தாரு (குரு) நாறிட்டாரு .பைபாஸ் சர்ஜரி நடந்தது (குரு) கடேசியில  பிள்ளைங்கல்லாம் விரோதம் (குரு) ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு.

கன்னிமரா லைப்ரரியில தற்கொலைதான் தீர்வான்னு ஒரு பதிவு போட்டிருக்கன். தேவையுள்ளவர்கள் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

கிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல ஒரு சனிக்கிழமை  டு சனிக்கிழமை  -அடுத்து ஏப்ரல் 19 முதல் இன்று வரை வெப் சைட் முடங்கிருச்சு. இதுல என்னடா கூத்துன்னா இந்த 16 நாள்ளதான் ஜாதக வரத்து அமோகம். தமிழ் நாடு அசெம்ப்ளி எலீக்சன்  ரிசல்ட் வந்துட்டிருந்த சமயம் போல கொத்து கொத்தா ஜாதகங்கள்.
அதனாலதேன் டபுள் ட்யூட்டி பண்ணிக்கிட்டிருக்கம். பதிவுகள் கூட பாய்ண்ட் டு பாய்ண்ட் சுருக்கமா போட்டுக்கிட்டிருக்கம். இத்தனைக்கும் லேப் டாப் + ஐடியா நெட் செட்டர் இருக்கிறதால பவர்கட் கூட நம்மை பாதிக்கிறதுல்ல. (ஒயுங்கா சார்ஜ் பண்ணி வச்சுருவம்ல) .
சரி சொந்த கதை போதும். மேட்டருக்கு வந்துர்ரன்.
1.ராகு+சூரியன்:
லக்னம் சிம்மமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
2.ராகு+சந்திரன்:
லக்னம் கடகமா  இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
3.ராகு+செவ்
லக்னம் மேஷம்,விருச்சிகமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
குறிப்பு: இந்த சீரிஸ்ல எழுதின மொதல் 3பதிவுகள்ளயே இதுக்குண்டான  விரிவான பலன் இருக்கு. ப்ளீஸ் ரெஃபர் டு தெம்.  ஐ டோன்ட் வாண்ட் டு ரிப்பீட்டு.
4.ராகு+குரு:
குரு காரகம் ஃபணால். கோல்ட்,ஃபைனான்ஸ்,அரசியல் செல்வாக்கு,கல்யாணம், மனைவி,மகன்,பேரன் எல்லாத்துக்கும் பிரச்சினை. வயிறு இதயம் தொடர்பான பிரச்சினையும் வரலாம். லக்னம் தனுசு ,மீனமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல். 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
5.ராகு+சனி:
லக்னம் மகரம்/கும்பமா இல்லாது , இந்த சேர்க்கை 3-6-10-11 ல ஏற்பட்டிருந்தா ஓகே. இல்லின்னா கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான  பிரச்சினை வரும். லக்னம் மகரம்/கும்பமா  இருந்தா இன்னம் கிரிட்டிக்கல்  1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
6.ராகு+புதன்:
லக்னம் கன்னி/மிதுனமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும். மத்த லக்ன காரவுகளுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை வரலாம். மிரட்டல் கடிதாசு போடறது,ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பறதுல்லாம் இந்த கேட்டகிரிதான். போலி டாக்குமென்ட் கிரியேட் பண்றது, திருட்டு கணக்கு எழுதறது, வரி ஏய்ப்புக்கு திட்டமிடறது,ஏஜென்சி வச்சு கம்பெனிக்காரனை ஏமாத்தறதும் உண்டு.
7.ராகு+சுக்கிரன்:
இன உறுப்புகளில் தொற்று ஏற்படலாம்,ரகசிய உறவுகள் ஏற்படலாம். மேல் நாட்டு கலைகளை ரசிப்பார்கள், வீட்டு பெண்கள் அவதிக்குள்ளாகலாம். வீடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகலாம். விஷ ஜந்துக்கள் நடமாடலாம். திருடு போகலாம். வாகனமும். மத்த கிரகங்களும் பல்பு வாங்கியிருந்தா விமன் ட்ராஃபிக்கிங் ,வாகன கடத்தல் கூட செய்யலாம். லக்னம் ரிஷபம்,துலாமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
1-7 ல் ராகு கேது இருந்தா என்ன எஃபெக்டுன்னு சொல்லவே இல்லியேன்னு கமெண்ட் போட சனம் இருப்பாய்ங்க. அதனால அந்த எஃபெக்டு கீழே:
இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் – ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால்  இது இப்படி  நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக இருக்கலாம். ரகசியம்னா “எல்லாத்துலயும்” அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.
மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம்.
உடுங்க ஜூட்டு. அடுத்த பதிவுல குரு மத்த கிரகங்களோட சேர்ந்தா என்ன பலன்னு பார்ப்போம். நீங்க இன்னம் நம்ம முக நூல் பக்கத்துக்கு லைக் போடலின்னு நினைக்கிறேன். இங்கே அழுத்தி போட்டுருங்க. ஐ நூறு லைக் சேர்ந்த பிற்காடு ஜோதிட சூட்சுமங்கள் -தொழில் ரகசியங்கள் உட்பட இங்கே போடறதா உத்தேசம்.

கிரக சேர்க்கை : செவ்+இதரகிரகங்கள்

Image

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வினோத்ஜீ மிக குறைந்த செலவில்  ஒரே யூனிட்டில்  மின்சாரம்+மினரல் வாட்டர்+உப்பு தயாரிக்கும் ப்ராஜக்ட் ஒன்றை தாம் வடிவமைச்சிருக்கிறதாவும் அதைப்பற்றி நம்ம கன்னிமரா லைப்ரரியில எழுதறதாவும் சொன்னாரு. நிச்சயம் எழுதுவாரு.

இதை பத்தி பேசிட்டிருந்தப்போ (அதாங்க சாட்ல) நம்ம லைஃப்ல நாம பண்ண ஜி.டி.நாயுடு வேலைகள் எல்லாம் ஞா வந்துருச்சு.
எல்லாரும் வசதி வந்தா சொகம்மா வாழலாம்னு தேன் நினைப்பாய்ங்க.ஆனால் நம்ம பொருத்தவரை வசதி வந்துட்டா தாளி என்.டி.ஆர் மாதிரி விடியல் 3 மணிக்கு எந்திரிச்சு வேலை பார்க்க கூட ரெடி. அந்த வசதி வரனுங்கறதுக்காவத்தான் டிவி சீரியல் ரேஞ்சுக்கு கூட இறங்கிட்டம்.(சித்தப்பா,பெரியப்பா ரோலுக்கு கூட ரெடி) ஆனால் ஒன்னும் பேரலை.

 தப்பி தவறி அப்படி ஒரு வசதி வந்துட்டா ஒரே காம்பவுண்ட்ல லேத் முதல் வுட் கட்டிங் யூனிட் வரை வச்சுக்கிட்டு -சின்ன குடிசையில வாழ்ந்தபடி மக்களுக்கு அன்றாட வாழ்வில் உதவும்படியாக  புதுசு புதுசா ஐட்டங்களை தயாரிக்கனுங்கறது நம்ம கனவு.

இதுக்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சி புத்தி.இது எல்லா குழந்தைக்கும் இருக்கும். ஆனால் ஒரு கட்டத்துல ஃபணால் ஆயிருது. நம்மை பொருத்தவரை இன்னைக்கும் நாம பாப்பாதேன். இந்த ஆராய்ச்சி புத்தியால பல முறை நஷ்டப்பட்டிருந்தாலும் பல முறை லாபப்பட்டிருக்கம்ல. உ.ம் நம்ம வீட்டு வாஷிங் மிஷின். நாளிது வரை ஒரு பிரச்சினையுமில்லாம ஓடிக்கிட்டிருக்கு.

நம்ம வீட்ல உள்ள கம்ப்யூட்டர் டேபிள்,ட்ரஸ்ஸிங் டேபிள், சமையலறை கேபின்(?) எல்லாமே நாம தயாரிச்சதுதான். சரியான ஹெல்ப்பர் இருந்தா தூள் பண்ணலாம்.  நிற்க இந்த ஆராய்ச்சி புத்தியாலதேன் நம்ம தளம் முடங்கி போச்சு. ஒரு தாட்டி பண்ண தப்பை இன்னொரு தாட்டி பண்ணக்கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனா விதி?

ஒரு தாட்டி வோர்ட் ப்ரஸ் வெர்சனை அப்டேட் பண்ண பார்த்து பல்பு. லேட்டஸ்டா தீம் அப்டேட் பண்ண பார்த்து பல்பு. எப்படியோ நம்ம சுகுமார்ஜியோட ஐடி -பாஸ் வோர்ட் வொர்க் அவுட் ஆக ஒரு அறிவிப்பு கொடுத்து வச்சிருக்கம். புதிய பதிவுகளுக்கு இங்கன வந்துருங்கன்னு.
மொக்கை போதும்.பதிவுக்கு வாங்கண்ணேங்கறிங்க.அப்படித்தானே. இதோ வந்துட்டன்.

1.செவ்+சூ:
ஏற்கெனவே இந்த சீரிஸ்ல  மொதல் பதிவுலயே சொல்லியிருக்கேன்.
2.செவ்+சந்திரன்:
இந்த சீரிஸ்ல ரெண்டாம் பதிவுல சொல்லியிருக்கன்.

3.செவ்+ராகு:
இது செவ் தோஷத்தை கண்ட் ரோல் பண்ணும்னு சொல்றாய்ங்க. ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வைரல் ஃபீவர் கூட வரலாம். அதே போல சதி எண்ணங்கள். எதிரிகளை நேர புகுந்து அடிக்காம உள்ளடி,முதுகுல குத்தறது இத்யாதி இருக்கலாம். சகோதர வர்கத்துக்கு ஆப்பு. சொந்த (வீட்டு) மனையில விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கலாம். சிலர் விஷயத்துல பாம்பு புற்றே கூட இருக்கலாம். யூனிஃபார்ம் போடாம வேலை செய்ற போலீஸ் கார் ஜாதகத்துல இந்த காம்பினேஷன் இருக்கலாம்.ரியல் எஸ்டேட் மேட்டர்ல குலுக்கல்,பம்பர் லாட்டரில்லாம் அறிமுகப்படுத்துவாய்ங்க.

4.செவ்+குரு:
ஃபைனான்ஸும் நல்லா இருக்கும். நில புலனும் ஓகே. கோவில் நிலத்துல அதுவும் சிவன் கோவில் நிலத்துல கைய வச்சுட்டா நாறிரும். தார்மிக குணம் கொண்ட போலீஸாவோ, டேர் டெவில் லாயர்/ நீதிபதியாகவோ கூட ஆகலாம்.  என்ன ஒரு லொள்ளுனா பொஞ்சாதி,பிள்ளைங்க எல்லாருமே கோவக்காரங்களா மாறலாம். ஜாதகருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.அல்சர் வரலாம்.

5.செவ்+சனி
சொல்லனுமா என்ன பல முறை தனிப்பதிவுகளே போட்டிருக்கேங்க.

6.செவ்+
புதன்
தாய்மாமனுடன் விரோதம் வரலாம். கொதி நீர் -கொதி எண்ணெய் ,மின்சாரம்,நெருப்பால் தோலுக்கு பாதிப்பு. ஜாய்ன்ட்ஸ்ல,ஜங்சன்ல  கட்டி வரலாம்.  ப்ளட் க்ளாட் ஆகலாம் . அண்டம் தொடர்பான பாதிப்பு வரலாம் ( டெஸ்டிக்கல்ஸ்)

7.செவ்+கேது:
ஆரம்ப காலத்துல செவ்+ராகு காம்பினேஷனுக்கு சொன்ன மேட்டர் நடக்கலாம்.ஆனால் போக போக ஒரு வித ஃபிலசாஃபிக்கல் அவுட் லுக் வந்துரும் (வந்தா பிழைச்சாய்ங்க. இல்லின்னா கான்சர் கூடவரலாம்) .ஏக்கரா ஏக்கரா நிலத்துல ஆசிரமம் அமைக்கிற உண்மை சாமியார்கள் ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கலாம்.

8.செவ்+சுக்கிரன்:
சொல்லனுமா என்ன பல முறை தனிப்பதிவுகளே போட்டிருக்கேங்க.