கிரகங்கள் நின்ற பலன்: 3-9 ல் ராகு கேதுக்கள்

கிரகங்கள் நின்ற பலன்: 3-9 ல் ராகு கேதுக்கள்

Advertisements

தனுஷ் கெஸ்ட் ஹவுஸ் தரை மட்டம்: வனத்துறை அதிரடி

பாபாரஜினியின் மருமகனான  தனுஷ் குற்றாலம்,வைதேகி நீர்வீழ்ச்சி அருகில் கட்டிய கெஸ்ட் ஹவுஸை இடித்து தள்ளியதன் மூலம் தமிழக வனத்துறை ரஜினியை சீண்டி பார்த்திருக்கிறது.
மற்ற மானிலங்களில் நிலைமை எப்படியோ தெரியாது.ஆனால் தமிழகத்தை பொருத்தவரை அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை போல் முதல்வரின் கண்ணசைவு இன்றி எதுவுமே நடக்காது.
ரஜினி விஷயத்தில் ஆளுங்கட்சியின் மனவோட்டம் எப்படி இருக்கிறது என்பதை  எடைபோட  சமீப காலத்து  சில   நிகழ்ச்சிகள்  மூலம் ஓரளவு கணிக்கலாம்.
கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் ஜெ தனித்து போட்டியிட்டார். பா.ஜ.கவுடன் கூட்டோ -புரிதலோ -தேர்தலுக்கு பிறகு முடிவு என்ற நழுவலோ எதுவும் இல்லை.
தேர்தல் சமயம் மோடி ரஜினி வீட்டுக்கு வந்ததையும் -ரஜினி மோடிக்கு வக்காலத்து வாங்கி பேசியதையும் தலைமை நிச்சயம் ரசித்திருக்காது.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தது போல ரஜினி கலைஞரின் பிறந்த நாளை சாக்கிட்டு சற்று தாமதமாகவேனும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் இதே கேட்டகிரி தான்.
இதை எல்லாம் மீறி தலைமை ஒரு படி இறங்கி வந்து நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம்  வழங்கும் விழாவுக்கு அனுமதி மறுத்து ஒரு வகையில்  பச்சை கொடி காட்டியது  . ஆனால் இந்த மேட்டர்ல ரஜினி மவுனத்தையே பதிலாக்கியது அனைவருக்கும் தெரியும்.
இதை தலைமை  ரசிக்கவில்லையா? இதனால் தான் இந்த சீண்டலா?
வனப்பகுதியில் கெஸ்ட் ஹவுஸ்  கட்டுவது என்றால் வனத்துறையினருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. கட்டிக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள்?
சரி கெஸ்ட் ஹவுஸை இடிக்க முடிவு செய்தாலும் நோட்டீஸ், கீட்டீஸ்னு ஒன்னுமே இல்லாம அதிரடியா இடிச்சு தள்ளியிருக்காங்கன்னா ரஜினியை சீண்டி பார்க்க முடிவு செய்துட்டாங்கனு தான் சொல்லனும்.
விஜய்காந்த் கல்யாண மண்டப இடிப்பு அவரை அரசியலுக்கு இழுத்தது போல .. ரஜினியின் மருமகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் இடிப்பு ரஜினியை அரசியலுக்கு இழுக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ராகு/கேது/சனி+குரு சேர்க்கை பலன்

பெரியர்அண்ணே வணக்கம்ணே !
கிரகங்கள் நின்ற பலன் வரிசையில ராகு/கேது நின்ற பலனை சொல்லிக்கிட்டு வர்ரம். இடை செருகலாக இந்த ராகு/கேது/சனி+குரு சேர்க்கை பலனை சொல்லி விட்டுர்ரன்.
இந்த சேர்க்கை மீன,தனுசு லக்னங்களுக்கும் -மகர,கும்ப லக்னங்களும் செம டேமேஜிங். ஏன்னா மீன,தனுர் லக்னங்களுக்கு குரு லக்னாதிபதி. இவரோட ராகு கேது சேர்ந்தா 1-7 ல ராகு கேது இருக்கிற எஃபெக்ட் வந்துரும் (பார்க்க: கடந்த பதிவுகள்) மகர கும்ப லக்னங்களுக்கு சனி அதிபதி .இவரோட ராகு கேது சேர்ந்தாலும் சேம் எஃபெக்டுதான்.
மேலும் இந்த சேர்க்கைய பற்றி இன்னம் கொஞ்சம் ஆழமா பார்க்கலாம்.
குரு+ராகு:
குருன்னா பணம், ராகுன்னா திருடன், குருன்னா இரக்கம், நீதி ,நேர்மை ராகுன்னா  சதி, அ நீதி, ஊழல் . குருன்னா வயிறு,ராகுன்னா விஷம். குருன்னா அரசாங்கம் ராகுன்னா கடத்தல்  செய்றவுக,டூப்ளிக்கேட் தயாரிக்கிறவுக. குருன்னா தெய்வ நம்பிக்கை, ராகுன்னா பிற மதங்கள்.
அறிவிப்பு:1
நம் வலைதளத்தில் உங்களுக்கு பிடித்த பிடிக்காத 10 அம்சங்களை வரிசைப்படுத்தி எழுதுங்க. பத்து சிறந்த விமர்சனத்துக்கு நாம வெளியிட்ட ரூ.200 மதிப்புள்ள 4  புத்தகங்கள் பரிசாக தரப்படும்.
குரு+கேது
குருன்னா பணம் கேதுன்னா சன்யாசி , உண்மையான சன்யாசிக்கு பணம் தேவையில்ல. போலின்னா வாரி சுருட்டிக்கிட்டு போயிருவான். குருன்னா இரக்கம், நீதி,நேர்மை கேதுன்னா தத்துவம். அய்யா பசி உசுரு போவுதுன்னா அந்த பசிய உற்றுப்பார்ம்பாரு சன்யாசி. குருன்னா அரசாங்கம் கேதுன்னா சன்யாசி. உண்மையான சன்யாசி சேர்ந்தா கஜனா காலி.போலி சன்யாசி சேர்ந்தா ராஜாவே காலி ( சந்திரா சாமி மாதிரி பார்ட்டிகள்)  குருன்னா தெய்வ நம்பிக்கை கேதுன்னா ? யோகம் . யோகத்தின் முடிவு என்ன கடவுள்னு ஒரு பார்ட்டி இல்லவே இல்லைங்கறதை அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கறதுதான்.
அறிவிப்பு: 2
ஆகஸ்ட் 15 க்குள் நாம் வெளியிட்டுள்ள 4 புத்தகங்களை பெற காசு அனுப்பினால் கூரியர் கட்டணம் இல்லை. எம் செலவிலேயே அனுப்பப்படும் .புத்தக விலையான ரூ.200 ஐ மட்டும் அனுப்பினால் போதும்.ஆடித்தள்ளுபடிங்கோ .
குரு+சனி
குருன்னா பணம் சனின்னா தாமதம். சனிக்கிழமை கடைசி தேதின்னா வங்கி நேரத்துக்குள்ள கிடைச்சா அது பணம் . இல்லின்னா? குருன்னா இரக்கம், நீதி,நேர்மை சனின்னா தாமதம்,கஞ்சத்தனம் (வேலைக்காகுமா?) குருன்னா வயிறு சனின்னா சுண்டக்குழம்பு (சுண்டக்கா குழம்பில்லிங்கோ) ,பண்டிகை தினம் சமைத்ததில் மிச்சமானதை எல்லாம்  ஒன்னா போட்டு கொதிக்க வச்சு  நாலு  நாளைக்கு வச்சு சாப்பிடறது சுண்ட குழம்பு. குருன்னா அரசாங்கம் சனின்னா தொழிலாளர்கள் . தனியார் போக்குவரத்துல டிரைவர் கண்டக்டருக்கு என்ன சம்பளம்? அரசு போக்குவரத்து கழகத்துல என்ன சம்பளம்? உருப்படுமா? குருன்னா தெய்வ நம்பிக்கை சனின்னா சோம்பல்.
இப்படி மாறுபட்ட ஒன்றுக்கொன்று எதிரான காரகங்கள் கொண்ட கிரகங்கள் சேரும்போது செமர்த்தியா பல்ப் மாட்டிக்குது.
மேற்சொன்ன 3 கிரக சேர்க்கைக்கும் பொதுவான அம்சம் ஒன்னிருக்கு. அது என்னன்னா நீங்க மேற்படி இம்சைகளை ஃபேஸ் பண்ணி ஃபேஸ் பண்ணி உங்க தெய்வ நம்பிக்கையே நசிஞ்சு ராகு/கேது எஃபெக்டுன்னா மதம் மாறனும், அல்லது நாத்திகரா மாறனும்.

சனி எஃபெக்டுன்னா தெய்வ நம்பிக்கைய இழந்து பிதுர்களை மட்டும் வணங்கும் நிலைக்கு வரனும்.
இந்த நிலைக்கு வர்ர வரைக்கும் உங்களுக்கு மேற்சொன்ன இம்சைகளோட வயிறு,இதயம் தொடர்பான பிரச்சினைகள், ஃபைனான்ஸ் ப்ராப்ளம்,திருமண தாமதம், திருமண வாழ்க்கையில சிக்கல், குழந்தை தொடர்பா சிக்கல்னு  அவதிப்படனும்.
இதுக்கு ஒரே பரிகாரம் நீங்க நாத்திகரா மாறனும். மாறலின்னா உங்க மைண்ட்ல இருந்து தெய்வ நம்பிக்கை ஒழியற வரைக்கும் மேற்சொன்ன இம்சைகளை அனுபவிச்சே ஆகனும். ஓகேவா.

ரூ.2 ஆயிரம் விலையுள்ள நூல்கள் பரிசு

DSC_1189
அண்ணே வணக்கம்ணே !
இந்த வருசம் பிப்ரவரி மாசம் ஏக்தம்ல 4 புக்ஸ் பப்ளிஷ் பண்ணம். ஞா இருக்கில்லை. நூல் தலைப்புகள்:
1.ஜோதிடம் 360 (மறுபதிப்பு)
2.ஜோதிடமும் தாம்பத்யமும்
3.ஆண் பெண் வித்யாசம்
4.பணம் பணம் பணம்
விக்காத புஸ்தவங்களை பரிசா தர்ராரு போலனு நினைச்சுராதிங்க. 1000 பிரதி சூட்டோட சூடா வித்து போயிருச்சு.
ரீ ப்ரிண்ட் போட்ட 1000 பிரதியில 800 பிரதி ஓடியே போயிருச்சு. இப்பமும் வாரத்துக்கு ரெண்டு செட் ஆச்சும் வித்துக்கிட்டு தான் இருக்கு.
இந்த நூல்களை பரிசா கொடுக்க முன் வந்ததற்கு அசலான காரணம் வேற இருக்கு.

இந்த  நூல் பரிசை நீங்க பெறனும்னா ஒரு 15 மினட் செலவழிக்கனும்.
நீங்க நம்ம வெப்சைட்டை  ரெகுலரா படிக்கிற பார்ட்டிதான்னு தெரியும். இல்லின்னா இந்த பதிவே உங்க கண்ல பட்டிருக்காதே.
ஆனால் இப்பம் ஒரு வாசகரா/ஒரு ஜோதிட ஆர்வலரா இல்லாம ஒரு விமர்சகரா  ச்சொம்மா அப்படி ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க.
நம்ம சைட்ல உங்களுக்கு ரெம்ப பிடிச்ச 10 விஷயம். அறவே பிடிக்காத 10 விஷயங்களை லிஸ்ட் அவுட் பண்ணி கமெண்ட் போடுங்க.
கருத்து சொல்ற அத்தனை பேருக்கும் பரிசு கொடுக்க ஆசைதான். ஆனால் தற்போதைக்கு 10 பேருக்கு மட்டும் பரிசு கொடுக்கறதா முடிவு செய்திருக்கன்.
என் தேர்வுக்கான அளவு கோல்:
1.உண்மைத்தன்மை
2.ஜோதிடவியல் பெயரிலான அக்கறை
3.ஒளிவு மறைவற்ற தன்மை
ஆகிய 3 விஷயங்கள் தான்.  உங்கள் நடை/எழுத்து பிழை இத்யாதில்லாம் கணக்குல வைக்கிறதா இல்லை.  தூள் பண்ணுங்க.
சுதந்திர தினத்தன்று எல்லா கமெண்டையும் ஒரு பார்வை பார்த்துட்டு  சிறந்த பத்து கமெண்ட்ஸை தேர்வு செய்து பட்டியலை ஒரு கமெண்டா போட்டுர்ரன். அவிக மட்டும் தங்கள் போஸ்டல் அட் ரசை என் மெயிலுக்கு தெரிவிச்சா போதும். இன்டியா போஸ்ட் ரெஜிஸ்டர்ட் பார்சல் மூலம் புக்ஸ் உங்களுக்கு அனுப்பப்படும்.
இதான் டீல் . நான் ஓகே. நீங்க ஓகேவா?

லக்ன ராகு/கேது (அ) சப்தம ராகு/கேது

DSC_1267அண்ணே வணக்கம்ணே !
ராகு லக்னத்துல இருந்தாலும் 7 ல இருந்தாலும் ஒரே பலனானு கேப்பிக. ராகுவோ கேதுவோ லக்னத்துல இருந்தா ஏழை பார்ப்பாய்ங்க.. ஏழுல இருந்தா லக்னத்தை பார்ப்பாய்ங்க.. அதனாலதான் அல்லதுங்கற வார்த்தைய தலைப்புல வச்சேன்.
இதே போல லக்னம் அல்லது சப்தமத்துல  ராகு  இருந்தாலும் கேது இருந்தாலும் ஒரே பலனான்னு கேப்பிக. ஆமாம் ராசா ! இவர் அவரை பார்ப்பாரு,அவரை இவரு பார்ப்பாரு. சதா சர்வ காலம் ஒருத்தருக்கொருத்தர் சம சப்தகத்துல அதாவது 180 டிகிரியிலயே இருக்கிற பார்ட்டிங்க ரெண்டு பேரும். அதனாலத்தான் இந்த தலைப்பு. மேட்டருக்கு போகலாமா?
ராகுவுக்கும் கேதுவுக்கும் உள்ள வித்யாசத்தை கடந்த பதிவுல கோடி காட்டியிருக்கன். ராகு உசுருள்ள இடத்துல இருந்தா அந்த கேரக்டரை
1.சூதாடியாவோ -அல்லது வாழ்க்கையையே ஒரு சூதாட்டமா மாத்திக்கிறவராவோ
2.ஆல்கஹாலிக்காவோ
3.பேஷண்டாவோ
( பாடியில பாய்சன் அல்லது ஃபாரின் பாடிஸ் அல்லது ஒத்துப்போகாத மெடிசின் பெரிய புரட்சிய வெடிக்க செய்யும் )
4.உருப்படாத ஆசாமியாவோ
(அதாவது மக்கள் பார்வையில .ஜாதகர் என்னமோ சின்சியரா ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே தான் இருப்பாரு)
5.ஈசி மணிக்காக மெனக்கெடுபவராவோ மாத்திருவாரு. அல்லது அப்படி ஒரு தோற்றம் சமுதாயத்துல ஏற்பட்டுரும். இவரோட இன்டராக்ட் ஆகும் சனம் இப்படியாக்கொத்த கிராக்கிகளா இருப்பாய்ங்க
இதுவே உசுருள்ள இடத்துல  கேது இருந்தா அந்த பார்ட்டிய பிச்சைக்காரரா மாத்திருவாரு அல்லது சன்யாசி ஆக்கிருவாரு. (உ.ம் 9ஆம் பாவத்துல இருந்தா அப்பாவ  )
ஒரு ஜாதகத்துல ராகு கேது கெட்டாலே நாஸ்தி தான். இது பாடி,மைண்ட்,வே ஆஃப் திங்கிங், டெசிஷன் மேக்கிங், இன்டராக்சன், கொடுக்கல் வாங்கல் ,மோட் ஆஃப் லிவிங்  இப்படி எல்லாத்தையும் நாறடிச்சுரும்.
1-7 ல் ராகு கேது:
அம்மாவாசை இருட்டு . பவர் கட். கூலிங்கிளாஸு போட்டிருக்கிங்க. அப்போ பாதை எப்படி  தெரியும்? மச மசன்னு தெரியும். லக்னத்துலயோ அல்லது சப்தமத்துலயோ  ராகு/கேது இருந்தா இதான் நிலைமை. கயிறா? பாம்பா? டைலம்மாலயே இருப்பிங்க.
நெல்லவன்லாம் கெட்டவனா தெரீவான் ,கெட்டவன்லாம் நெல்லவனா தெரீவான். பாம்புன்னு பயந்து நடுங்குவிங்க.பின்னால வர்ரவன் அசால்ட்டா தாண்டி போயிருவான்.
இது மட்டுமா? இதே நிலைமை உங்க மனைவிக்கும் வந்துரும் (அவிக ஜாதகத்துல சர்ப்பதோஷமே இல்லின்னாலும் ஜஸ்ட் ஒன்னரை வருசத்துல இந்த ஸ்டேஜ் வந்துரும்)
பாம்பு கடிச்சுருச்சுன்னு வைங்க. செம மப்புல இருக்கிங்கன்னு வைங்க. அட விசத்தையே குடிச்சு வச்சுட்டிங்கனு வைங்க. அப்ப உங்க மைண்ட் எப்டில்லாம் வேலை செய்யும்?
பெரும் கொயப்பத்துல இருக்கும். பாம்பு தான் கடிச்சுதா? அல்லது பூச்சி பொட்டா? பாம்பே கடிச்சிருந்தாலும் அது விசமுள்ள பாம்பா? அல்லது டுபாகூரா?அடிச்ச சரக்கு செரியில்லையா? ஒரு வேளை டூப்ளிக்கேட்டா? இப்படி ஒரு கொயப்பத்துல இருக்கும் போது எல்லாமே மச மசன்னு ஆயிரும்.
இன்னொரு உதாரணத்தை சொல்றேன். நேத்திக்கு முகத்துல துண்டை போர்த்தி சனம் செம கும்மு கும்மிட்டாய்ங்க. பகல்ல அதே ஏரியாவுக்கு வர்ரிங்க. அப்ப உங்க மனசு எப்டி வேலை செய்யும்? பார்க்கிறவனை எல்லாம்  இவனா இவனான்னு சந்தேகப்பட்டுக்கிட்டுத்தானே இருக்கும்.
ஆக இதுவரை சொன்ன உதாரணங்களோட சாரம்:ஞா சக்தி இருக்காது, ஜட்ஜிங் சரியிருக்காது.சந்தேக புத்தி வந்துரும்.
இந்த 1-7 காம்பினேஷன்ல ராகு-கேது உள்ளவுகளை ஒரு பாம்போட ஒப்பிடலாம்.இவிகள பார்த்தா சனத்துக்கு பயம்-சனத்தை பார்த்தா இவிகளுக்கு பயம். அதனால தனிமைய விரும்புவாய்ங்க. ரெம்ப அலார்ட்டா இருப்பாய்ங்க. அந்த அதீத அலர்ட்னெஸ்ஸே  நல்ல வாய்ப்புகளை தவற விடவும் செய்யும்.
உணவு எடுத்ததும் இரை விழுங்கிய மலைப்பாம்பு கணக்கா மந்தமாயிருவிக. குறுக்கு வழியில சக்ஸஸ் ஆனவுக மேல ஒரு ஈர்ப்பு -ஈசி மணி மேல ஒரு கவர்ச்சி இருக்கும். இவிக ரோல் மாடல் ஆருன்னு இவிகளுக்கே தெரியாம கூட இருக்கும். ஒரு ஸ்டஃப் தங்களை கவர்ந்தால் உடனே அதை தமதாக்கிக்கொள்ளும் எண்ணம் இருக்கும்.
மனதளவிலேனும் சில தீய எண்ணங்கள் இருக்கும். (இதர கிரக அமைப்பும் பல்பு வாங்கியிருந்தா செயலாகவும் வாய்ப்புண்டு) இந்த எண்ணங்கள் காரணமாக இவற்றை யாராவது கண்டுபிடிச்சிருவாய்ங்களோங்கற பதைப்பு -உதைப்பு இருந்து கிட்டே இருக்கும். இவிக மைண்ட டிஸ்டர்பன்ஸுக்கு இதுவும் ஒரு காரணம்.
சரிங்ணா இதுக்கெல்லாம் பரிகாரம் இருக்கு. டோன்ட் ஒர்ரி. கிரகங்கள் நின்ற பலனை எப்பாடு பட்டாச்சும் முடிச்சுட்டு அப்பாறம் பரிகாரங்கள் கொடுத்துக்கிட்டே வரன்.
அடுத்த பதிவுக 2-8 ல் ராகு கேது பலனை பார்க்கலாம். உடுங்க ஜூட்டு.