ஜூலை மாத ராசிபலன் – 3

ஜூலை மாத ராசி பலன் -3

இந்த ராசிபலன்கள் சொல்லுவதில் இருக்கக்கூடிய சிரமம் இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது. பொதுவாக சொன்னாலும், எல்லா கிரகங்களையும் மனதில் நிறுத்தி, அவ்ர்களிடமே… நீ இப்படி செய்வாயா? இல்லை ஏதேனும் மாற்றுவழியில் பலன்களை தருவாயா என்று கேட்டு கேட்டு (!?) பலன்களை தரவேண்டி உள்ளது.

தனிப்பட்ட ஜாதகபலனில் இது கொஞ்சம் சுலபமாக இருக்கும். அந்தந்த கிரகங்களே நாங்கள் இப்படித்தான். நீயே பார்த்துக்கொள் என்பதாக அமைந்திருக்கும்.

பலன்கள் குறித்த உங்கள் யோசனைகளை, திருத்தங்களை வரவேற்கிறேன்.

தனுசு ராசிக்கான பலன்கள்
ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருகிறீர்கள். எதிர்பார்த்த வருமானமில்லமல் போனாலும், வேலையை தொடர்கிறீர்கள். உங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் தவிர்த்தே வருகிறீர்கள். கிடைத்த நேரத்தில் கோவில் சென்று இறைவனை தரிசித்து வருகிறீர்கள். மாணவர்களின் கல்வி ஆர்வம் பலனளிக்கும். அவ்வப்பொழுது ஞாபக மறதி வரலாம். முன்பின் தெரியாத நபர்களோடு ஏதேனும் பழக்கம் அதனால் சில பிரச்சனைகள் வரக்கூடும். எப்பொழுதும் மனம் ஏதேனும் நினைத்து கவலைப்ப்ட்ட வண்ணமிருக்கும். உடன்பிறந்தோர் மூலமாக உங்கள் அலுவல் பாதிக்கப்படலாம்.

மகர ராசிக்கான பலன்கள்
இந்த மாததில் ஏகப்பட்ட டென்ஷன்(!?) ஏறுகிறது. ஆனால் நினைத்த விசயத்தை செவ்வனே செய்யமுடிகிறது. எப்படியோ யாராவது உதவ காத்திருக்கிறார்கள். நட்பு வட்டாரம் சலசலப்புக்கு ஆளாகும். எங்கேயாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ள தயாராக இருப்பீர்கள் ஆகவே கவனம். நிலம் தொடர்பான விசயங்கள் மீண்டும் தலைதூக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தெய்வ நம்பிக்கை கூடும். புண்ணிய இடங்கள் செல்லும் வாய்ப்பு வரும். உஷ்ணம் தொடர்பான நோய் வந்து நீங்கும்.

கும்பராசிக்கான பலன்கள்
தொழில் தொடர்பான மாற்றங்களை யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள். வேலை அல்லது இல்லம் தொடர்பாக புதிய இடங்கள் செல்லவேண்டியது வரலாம். மனதில் குழப்பங்கள் மிகும். நீங்கள் தரும் அதே அளவு அன்பை திரும்ப பெற இயலாது. இல்லத்தில் சிறு சச்சரவுகள் வரும். புதிய கடன்கள் உண்டாகும். உடல் நலம் பாதிப்பு இருக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் புரிந்து கொள்வதில் கடினமிருக்கும். நிலம் தொடர்பான விசயங்கள், வழக்குகள் இழுத்துக்கொண்டே இருக்கும். தூக்கமின்றி இருப்பீர்கள்.

மீன ராசிக்கான பலன்கள்
என்னதான் மிகச்சரியாக நீங்கள் நடந்தாலும், ஏதேனும் ஒன்று சறுக்கிவிடுகிறது… அதாவது வாழ்க்கையில். பூர்வீக இடம் தொடர்பான விசயங்களில் பிரச்சனைகள் எழலாம். வாக்கு தந்துவிட்டு அதற்கான போராட்டம் இருக்கும். ஆன்மீக ஈடுபாடு கூடும்… வழிபாடு தலங்கள் சென்றுவருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமிருக்கும். இல்லத்தில் பிரச்ச்னைகள் இருந்தாலும், உடனே சமாதானமாகி விடுவீர்கள். வாழ்வின் கடமைகளில் ஆர்வமின்றி இருப்பீர்கள். அதிக நேரம் தூக்கம் வரலாம். மனைவி வழியில் செலவுகள் கூடும்.

வாழ்க வளமுடன்

அன்பன் சுகுமார்ஜி

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

________

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

_________

காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா: 2

அண்ணே வணக்கம்ணே,
என்னதான் சொட்டு நீலம் போட்டு வெளுத்த தூய காதல் , சாம்பிராணி புகை போட்ட தெய்வீக காதல்னு ஜல்லியடிச்சாலும் கட்டக்கடைசியில கில்மாவுக்கு போய் தான் ஆகனும். ஆனால் காதலிக்கிறதால கில்மாவுக்கு அத்யாவசிய தேவையான செக்ஸ் பவர் கோவிந்தா ஆயிருதுங்ணா. அது ஏன் /எப்படி/ எந்த அளவுக்குன்னு இந்தபதிவுல சின்ன ஆராய்ச்சி நடத்தியிருக்கேன். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க..

காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா :2


நாரத பக்தி சூத்திரத்துல சொல்றாப்ல (எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான பக்தி உண்டாம்) எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான காதல் இருக்கு.

எதையுமே ஒரு சித்தாந்தத்துக்குள்ள அடைக்க கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனால் என்ன பண்றது கடல் நீரை கூட ஒரு டெஸ்ட் ட்யூப்ல அடைச்சு அதை ஷூட் பண்ணி யு ட்யூப்ல விட்டாத்தான் பார்ப்போம்னு சனம் சொல்லுது.

அதனாலதான் நம்ம பாலிசிக்கு விரோதமா காதலை மொதல்ல சித்தாந்தப்படுத்தறேன். அப்பாறம் காதலித்தால் செக்ஸ் பவர் எப்படி கோவிந்தா ஆகும்னு சொல்றேன்.

காதலை பற்றி மட்டுமில்லே. ஒட்டு மொத்த படைப்பை -மனிதர்களை -உலகத்தை பிரிஞ்சிக்கிடனும்னா ஒரு அடிப்படை உண்மைய புரிஞ்சுக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.

*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது

*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்

*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை

*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு

*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.

*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு

*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு

(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது

*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்

*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது

*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு

*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா தனக்கே தனக்குன்னு ஒரு பெண் வேணும்ங்கற நிலை வந்துருச்சு.

அந்த தனக்கே தனக்கான பெண்ணுக்கான தேடலுக்கான துடிப்புத்தான் காதல்.

மேலும் மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு செக்ஸ்ல ஓரளவு – கொஞ்சம் நேரமாச்சும் நிறைவேறுது

செக்ஸ்ல கொல்லும் -கொல்லப்படும் இச்சை ஓரளவு நிறைவேறுது.

உடைச்சு சொன்னா ஆணுக்கு விந்து வெளியேறும் வரை கொல்லும் இச்சையும் விந்து வெளியேறிய பின் கொல்லப்படும் இச்சையும் நிறைவேறுது.

பெண்ணை பொருத்தவரை உச்சம் என்பது ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா இருக்கு. அதனால அவனுக்கு விந்து வெளியேறும் வரை இவளின் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. அவனுக்கு விந்து வெளியேறிய பின் இவளது கொல்லும் இச்சை நிறைவேறுது.

இந்த இழவெல்லாம் மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட். இதுக்கான பைலட் ப்ராஜக்டுதான் காதல்.

சோகம் என்னன்னா ஓருயிர் பல்லுயிரா மாறினாலும் எல்லா உயிரும் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. அந்த இணைப்பை உணர முடியாம ஈகோ தடுக்குது. ஈகோவை விட்டொழிச்சா உயிர்களிடையிலான இணைப்பை உள்ளபடி உணரலாம்.

ஆனால் ஆன்மாவை ஈகோ மூடி ஈகோவே ஆன்மா – ஈகோவே தான் என்ற மாயா உருவாகிவிட்டது.( நன்றி:ஓஷோ)

ஈகோ சுமக்கமுடியாத பாரமாயிருச்சு. அதை கழட்டி வைக்கிற இடமா மனசு காதலை நினைக்குது. அதனாலதான் காதலிக்கிறாய்ங்க.

இதான் காதல் கத்திரிக்காயோட செனெரியோ.

இப்பம் காதல்ல எத்தனை வகை இருக்குன்னு ஒரு குன்ஸா பார்ப்போம்:

1.தன் மீதான காதலால தன்னை காதலிக்கவும் ஒருத்தி வேணம்ங்கற ஈகோவால காதலிக்கிற காதல்

2.ஈகோவை சுமக்கமுடியாம ஆருக்காகவாச்சும் இந்த ‘பாரத்தை” கொஞ்சம் போல இறக்கிவச்சா நல்லாருக்குமேங்கற எண்ணத்துல வர்ர காதல்

3.இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸால – தனிமை உணர்வால – சுய பரிதாபம் – தன்னவர்களால் நிராகரிக்கப்பட்ட உணர்வால வர்ர காதல்

4.தாய் மீதான காதலால் – தாயால் தள்ளி வைக்கப்பட்டு – தாய்க்கு மாற்றாக ஒரு பெண்ணை தேடும் காதல்

5.காமத்தை அங்கீகரித்து – அது குறித்த குற்ற உணர்வு ஏதுமின்றி – நேர்மையாய் அதை நிறைவேற்றிக்கொள்ள செய்யும் காதல்

6.காமத்தை ஓவர் லுக் செய்ய செக்ஸ் அப்பீலே இல்லாத சேப்பாக் கிரிக்கெட் கிரவுண்ட் தனமான சோடாபுட்டி பெண்ணை காதலிக்கும் காதல்

7.பிஞ்சிலே பழுத்து அல்லது மெச்சூர்ட் மைண்ட் காரணமாக தன் தந்தைக்கு நகலாக மாறி பெரிய மனுஷத்தனமாக விளையாட்டுத்தனம் மிக்க பெண்ணை காதலிக்கும் காதல்

8. தானும் முதலியார் -அவளும் முதலியார் – அவிகளுக்கு சினிமா தியேட்டருங்க இருக்கு -தங்களுக்கு சினிமா டிஸ்ட் ரிப்யூஷன் இருக்குன்னு கணக்கு போட்டு காதலிக்கு காதல்

9. யதார்த்த வாழ்க்கை நரகமாக இருக்க நிலத்தில் கால் பாவாத பிரதேசத்தில் சஞ்சரிக்க – சொந்த நரகத்தை மறக்க செய்யும் எஸ்கேப்பிஸ்ட் காதல்

10.சம்மதிச்சா செக்ஸ் இல்லாங்காட்டி தெய்வீகக்காதல்ங்கற சந்தர்ப்ப வாத காதல்

11.காதலிப்போம் – எல்லாம் கை கூடி வந்தா கண்ணாலமும் கட்டிக்குவோம் -இல்லாட்டி ஆருக்கு எங்கன போட்டுவச்சிருக்கோ அப்படியே நடக்கட்டும்ங்கற வேதாந்த காதல்

இப்படி நூத்துக்கணக்கான காதல்கள் நாட்ல இருக்கு. ங்கொய்யால இந்த காதல்கள் சைவமோ அசைவமோ க்ளைமேக்ஸுல கில்மான்னு ஒன்னு நிச்சயம் உண்டு.

மேட்டர் இன்னாடான்னா லவ்வுன்னு இறங்கி லந்து பண்ணிக்கிட்டிருந்தா பேட்டரி வீக் ஆயிருதுங்ணா .. அது ஏன் எப்படி எந்த் அளவுக்குங்கறதை அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஜோதிடம் என்ன சொல்லுது:

ஜாதகத்துல களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை பெற்று – லக்னாத் சுபர்களா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா பிரச்சினை இல்லை.

அதுக்கு மாறா மேற்சொன்ன களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை இழந்து – லக்னாத் பாபிகளா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா
பேட்டரி அவுட்டுதேன். (கண்ணாலமே கட்டினாலும் பல்பு வாங்க வேண்டியதுதேன்)

அனுபவத்துல பார்க்கும் போது லவ் பண்ற பார்ட்டியெல்லாம் எந்த கிரகம் தனக்கு ஆப்பு வைக்க பைனாகுலர்ல வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வமுள்ள பெண்ணைத்தேன் லவ் பண்ண ஆரம்பிக்கிறான்.

காதலில் வெற்றி விதிக்கப்பட்டுள்ள ஜாதகன் லவ் பண்ணாமயே கூட இருந்துரலாம். ஆனால் காதலால காயடிக்கப்படனும்னு இருக்கிற பார்ட்டி மட்டும் நிச்சயம் லவ் பண்றான். இம்சைய அனுபவிக்கிறான்.

ஓகே இதுல தொட்டு காட்டின காதல் வகைகள் ஒவ்வொன்னையும் அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுப்போம்.

எந்தெந்த காதல்ல பேட்டரி அவுட்டாயிரும். எந்தெந்த காதலால பேட்டரி வீக்காயிரும்ங்கறதை எல்லாம் விலாவாரியா பார்ப்போம். டோன்ட் ஒர்ரி..

ஜூலை மாத ராசிபலன் -2

இந்த பதிவிற்கு முந்தைய பதிவு வரை சுகுமார்ஜியாகிய நான்,  ராசி பலன் எழுதியதில்லை. சென்ற பதிவில் சொல்லப்பட்ட முதல் பின்னூட்டம்படி. எல்லோருமே இதை சொல்லுகிறார்களே… இங்கேயுமா என்று கேட்டிருந்தார் அன்பர். நானும் கொஞ்சம் பின்வாங்கினேன். ஆனால் சித்தூர் முருகேசன் உள்ளே புகுந்து நெறி படுத்திவிட்டார்.

இந்த சுகுமார்ஜி தரும் ராசிபலன் சூப்பர்… என்றெல்லாம் சொல்லுவதற்கில்லை. பலன்கள் எல்லாமே பத்தோடு பதினொன்று என வைத்துக்கொள்ளவே வேண்டும்.

இதை படித்து ஒரு சின்ன ஒத்துப்பார்த்தல் மிக அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இருக்கக்கூடாது. இந்த பலன்களை 100 சதம் நம்பவும் ஆளிருக்கும், 100 சதம் மறுக்கவும் ஆளிருக்கும். எனவே இந்த பலன்கள் பொதுவானவையே. தனிப்பட்ட ஜாதக ஆய்வுகளே மிகச்சரியாக அமையும்.

நான்… இந்த ஜோதிடத்தை நம்ப மறுப்பவர்களுக்காகவே, ராசிபலன் கூறுவதாக வைத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரை அவர்களே முக்கியமானவர்கள். அப்படியான நல்ல உள்ளங்களால் தான் இந்த ஜோதிட அறிவு சரியான இடம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இதில் 1 சதவிகித பலன்கள் கூட சரியாக இல்லை என்று சொன்னால் அடுத்த முறை அதை சரிசெய்ய முயற்சிப்பேன். ஒரு இல்லத்தரசி தன் கணவனுக்கு சமைப்பாள் என்றால் மிக மிக சுவையாக சமைப்பாள். தன் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து சமைத்தால் சொல்லும்படிக்கு சமைப்பாள். ஒரு இல்லத்தின் 10 நபர்களுக்கு சமைத்தால் ஓரளவு சுவையாக சமைக்கமுடியும். 100 நபர்களுக்கு… கொஞ்சம் பதட்டமாகிவிடுவாள். 1000 நபர்களென்றால் யோசிப்பாள். பத்தாயிரம் அல்லது அதற்குமேலே என்றால், என்னமோ சமைக்கிறேன்… நல்லா இல்லையென்றால் குறை சொல்லாதீங்க என்று சொல்லிவிடுவாள்.

படிக்கிற எல்லாருக்குமே பொருத்தமான, சுவையான ராசிபலன் அத்தகையதுதான். மேலும் இதை படித்த சிலர் எனக்கு மிகச்சரியாக இருக்கிறது என்று சொன்னபொழுது, அப்படியானால் மற்ற ராசிக்கான பலன்களையும் எழுது முடித்துவிடலாம் என்று எண்ணியே மேலும் தொடர்கிறேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி, வணக்கங்கள்.

சிம்மராசிக்கான பலன்கள்
மனதிற்குள் திட்டமிட்டபடியே உறங்கசெல்வதால் காலையில் எழும்பொழுது கண் எரிச்சல், தலைவலி ஒரு வழி செய்யும். நிலம், மனை தொடர்பான விசயங்கள் உடனே முடிவுக்கு வரவேண்டும். இல்லையேல் அடுத்த 30 நாட்களுக்கு மேலே காத்திருக்க வேண்டிவரும். எதிராளிக்கு அவ்வப்பொழுது சாபமிட தயாராக இருப்பீர்கள். அதாவது அவ்வளவு கோபமிருக்கும். பக்கத்து வீட்டாரிடம் பகைத்துக்கொள்ளாதிருத்தல் நலம். பகைவர்களின் திட்டங்கள் வீணாகும். இல்லத்தில் வழக்கமான பிரச்சனைகள் இருக்கும். மாணவர்கள் நல்ல ஆர்வமுடன் இருப்பார்கள். கண் தொடர்பான உபாதைகள் வரலாம். தெய்வீக உலா செல்ல பிரியப்படுவீர்கள். ஏற்கனவே திருமணம் ஆகாதோருக்கு(?!) திருமண வாய்ப்புக்கள் அமையலாம். பொதுவாக கவலைப்படாதீர்கள் சனி உங்களுக்கு, சாலையின் ஆரஞ்சு விளக்கை எரிய விட்டிருக்கிறார். உங்கள் பயணத்திற்கு கவனமாக இருங்கள்.

கன்னிராசிக்கான பலன்கள்
சரியான சோம்பேறி என்ற பட்டம் இப்பொழுது கிடைத்திருக்கிறது தானே… ஆனாலும் திட்டமிடுதலும், செயல்பாடுகளும் சரியாகவே இருக்கும். மாணவர்களின் படிப்பும் நன்றாக இருக்கும். தொழில் சிறந்தாலும் வருமானம் கொஞ்சம் கையை கடிப்பதால், கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. உடன்பிறந்தோர்களுடனான சொத்து அல்லது தொழில் பிரித்தல் நடைபெறும். உடல் பலகீனம் வந்து நீங்கும். தெய்வநம்பிக்கை வரும். காது தொடர்பான நோய்கள் வரலாம். தொழில் அல்லது இடம் மாறுதல் கிடைக்கும். திருமண சேதி வரலாம்.

துலாம்ராசிக்கான பலன்கள்
கையில் உலகலவு திட்டமிருக்கு… கையிலதான் ஒன்றுமில்லை… அடுத்தவரை கிண்டல் செய்தே வாழ்க்கை ஓடுது. தொழில மாற்றம் இப்பொதைக்கு வேண்டாம். தெய்வழிபாடு மிகும். ஆனால் கோவில் செல்ல மனமிருக்காது. நண்பர்கள் துணை இருக்கும். மிக சுலபமாக பணம் கிடைக்கும்… வாங்கி… மாட்டிக்கொள்ளவேண்டாம். உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் எழும். இல்லத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் நடைபெறும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை.

விருச்சிகராசிக்கான பலன்கள்
பரபரப்பாக இருக்கிறீகள். ஆனால் ஏனென்று தெரியவில்லை… எது சொன்னாலும் வீட்டில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். பாதங்களில் புண், கொப்பளங்கள் வந்து நீங்கும். மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். தெய்வீக வழிபாடு இருக்கும். கையில் வந்த பணம் தண்ணீராக கரையும். மாணவர்களின் படிப்பு நன்றாக இருக்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் இருக்கும். இரவில தூக்கமின்றி இருப்பீர்கள். யோசிக்க முடியாது திணறல் இருக்கும். ஞாபக மறதி ஏற்படலாம்.

 

அன்பன் சுகுமார்ஜி

தொடரும்…

 

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

________

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

_________

காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா

அண்ணே வணக்கம்ணே ..

காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தாங்கற தலைப்புல ஒரு தொடர்பதிவே போடலாம். அப்படி ஒரு வில்லங்கமான தொடருக்கு (?) இந்த பதிவு பிள்ளையார் சுழி. லவ் பண்ணா செக்ஸ் பவர் குறையும். எப்படி குறையும் -எந்த அளவு குறையுங்கற மேட்டரை தொட்டுக்காட்டியிருக்கேன். Read More

காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா!


அண்ணே வணக்கம்ணே ..

இன்னைக்கு ஒரு மாறுதலுக்கு ச்சொம்மா கடலை போடலாம் வாங்க !
என்னதான் நாட்டு நிலைமை முதல் – சனங்கள்ள சோசியத்தை பத்தின விழிப்புணர்வு வரை கவலைக்கிடமா இருந்தாலும் எப்பப்பாரு சீரியசா ..ரோசிச்சு ரோசிச்சு மண்டை காய்ஞ்சுப்போச்சு. மெகாசீரியல் ஓடற ஹால் மாதிரி டல் ஆயிருது. அதான் ச்சொம்மா கடலை போடலாம்னு ஒரு உத்தேசம்.

இதுக்கு காரகர் சுக்கிரன் விகட ,வினோத பரிகாச பிரசங்க பிரியம். ச்சொம்மா பேசிக்கிட்டே இருந்துட்டா சுக்கிர பலம்லாம் இதுல செலவாகி கில்மா பின் தங்கிரும். காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஏசி ரெஸ்டாரண்டை அவாய்ட் பண்ணிருங்க -சோடியா டூ வீலர்ல அலையறதை விட்டுருங்க – ஜங்க் ஃபுட், பேக்ட் ஃபுட், கூல் ட்ரிங்ஸ்,சினிமா மாதிரி இழவையெல்லாம் விட்டுருங்க . இதெல்லாமே சுக்கிர காரகம் தேன்.

தப்பித்தவறி காதலிச்ச பார்ட்டியையே கண்ணாலம் பண்ணவேண்டி வந்தா மேற்படி மேட்டர்களோட விளைவா பேட்டரி வீக் ஆயிரும். இப்பல்லாம் கில்மாவுல வீக்காயிருந்தா குட்டிங்க உடனே விவாகாரத்துக்கு அப்ளை பண்ணிர்ராய்ங்களாம்.

குஷ்டம் வந்தவன் அவில் ஃபைவ் விழுங்கறான். கடப்பாறைய விழுங்கினவன் சுக்கு கஷாயம் சாப்பிடறான். அதென்னமோ நமக்கு சில்லியா சில்லி வேர்களை பிடிச்சு தொங்கற வித்தை கை வரலிங்ணா. அசால்ட்டா ஆணிவேரை புடிச்சுர்ரோம் .சனத்துக்கு கிலியடிச்சுருது. ஆப்பு வச்சிர்ராய்ங்க.

மொதல்ல கடலை -அப்பாறம் ஆப்பை பத்தி பார்ப்போம். அதுக்கு மிந்தி நேத்திக்கு நீங்க படிச்ச (ஏறக்குறைய 1094 பேர் இரவு 11.30 நிலவரம்) நவீனபரிகாரம் தொடர் 2000 வருடத்தில் ஆன்மீகம் மாத இதழ்ல துவங்கி ரெண்டு மூனு அத்யாயத்துல நிறுத்தப்பட்டதை சொல்லியே ஆகனும்.

நாம பிடிச்சதென்னவோ ஆணிவேர். அசால்ட்டா அசைக்க “அவாளோட” பழைய பொய்கள் எல்லாம் பல்லிளிக்க ஆரம்பிச்சுருச்சு.பொயப்பு கெட்டுப்போற நிலைமை வந்துருச்சு. ஆப்பு வச்சிட்டாய்ங்க.

கடலை:
வேர்கடலை விக்கிறவுகளை பார்த்திருப்பிங்க. எப்பமோ வறுத்து பொட்டலம் போட்டு வச்சிருப்பாய்ங்க. ஆனால் ச்சொம்மா சொம்மா ஜல்லி கரண்டிய வாணலில தட்டி சத்தம் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. அது விளம்பரத்துக்கு.

ஆனால் அசலான மேட்டரை விட்டுட்டு/காரியத்தை விட்டுட்டு வெட்டிப்பேச்சு பேசறதுக்கு கடலை போடறதுனு ஆரு பேரு வச்சாய்ங்க?

ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.

ஆப்பு:
மரத்தை கோடாரியில பிளக்க சின்னதா பிளவு வரும் ( ஒரே அர்த்தங்ணா – ரெட்டைன்னாலே நமக்கு பிடிக்காது – தப்பான அர்த்தம்லாம் நம்ம அகராதியில கடியாது) அதுல ஒரு மரத்துண்டை வச்சு அடிப்பாய்ங்க. மரம் பிளக்கும். அந்த மரத்துண்டுக்குத்தேன் ஆப்புன்னு பேரு. இதை எங்க அடிச்சா வலிக்கும்னு “பின்”னாடி கூட சொல்லமாட்டேங்ணா

நேத்து பதிவா போட்ட மேட்டரு கொடவுன்ல கிடந்த மேட்டருங்ணா. அந்த நாள்ள மேக்சிமம் 400 பேர் தான் படிச்சிருப்பாய்ங்க. இப்பம் ஆயிரம் தாண்டிருச்சே. மேட்டரா மாத்தி ரோசிக்க(ச்சு) சொல்ற மேட்டர் சனம் பின்னி பெடலெடுப்பாய்ங்க. பெரீ டிஸ்கசன்லாம் நடக்கும்னு நினைச்சேன். நிறைய விளக்கம்லாம் தரலாம்னு வெயிட்டிங். ஆனால் “மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படலை”

இதை ரெண்டுவிதமா புரிஞ்சிக்கிடலாம். ஒன்னு குளவி கொட்டி கொட்டி பூச்சிகளை குளவியா மாத்தினாப்ல உங்க மைண்ட்ஸையெல்லாம் என் எழுத்துக்கள் ஏற்கெனவே ட்யூன் பண்ணியிருக்கனும். அல்லது ஆரோ ஒரு பத்தாறு போட்ட கமெண்ட் தான் சனங்க கருத்தோ என்னமோ (“பினாத்தலுக்கும் அளவு வேணும்”)

கடலை போடலாம் வாங்கனு தலைப்புல கூப்டாலும் டீன் ஏஜ்ல கூட கடலை போடறது நம்ம சரித்திரத்துல கிடையாதுங்ணா.

நாம என்ன செய்தாலும் அதனோட முடிவான லட்சியம் நம்ம லட்சியமாத்தான் இருக்கும். நம்ம லட்சியம் (ஆப்பரேஷன் இந்தியா 2000) தெரியும்ல.

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனேங்கறாப்ல என் மனசு லட்சியத்துலயே நிக்குது. ( கால் வலிக்கப்போவுதுனு ஆருப்பா நக்கலடிக்கிறது?)

சமீபத்துல கலாம் அய்யாவோட மெயிலுக்கும் / விசயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்களோட மெயிலுக்கும் , தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கும் ஆ. இந்தியா 2000 திட்டத்தின் சுருக்கத்தை அனுப்பினேன்.
பதில் வரவே வராதுனு தெரியும். இதெல்லாம் தெரிஞ்சே செய்யற லொள்ளு. ம்னமே அதை விட்டுத்தள்ளு.

கிரகங்கள் மனிதர்களை / மனிதர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துதுன்னு இத்தீனி நாளூ சொல்லிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல நவகிரக பாதிப்புகளை குறைப்பது எப்படின்னும் இன்னொரு கட்டத்துல நவகிரகங்களிடமிருந்து விடுதலைன்னும் தொடர் பதிவு போட்ட பார்ட்டி நாம.

இந்த க்ஷணம் என்ன தோணுதுன்னா நாம என்னதான் பரிகாரம், விடுதலைன்னு வாய்ல வவுத்துல அடிச்சிக்கிட்டாலும் சனம் கிரகங்கள் காலால கால்பந்தாய் உதைப்படறதை எண்ணி அவிக வருந்தவும் போறதில்லை திருந்தவும் போறதில்லை. நாம எதுக்கு ச்சொம்மா நை நைன்னு அடிச்சு சுஸ்தாகனும்.பேசாம “தொழிலை” கவனிக்கலாமேனு தோணுதுங்ணா..

இதுல ஒரு லாபம் என்னன்னா .. சனம் தங்களோட வில்லை ( Will) உபயோகிச்சு நம்மை முடக்க பார்க்க பார்க்க ஆத்தாளுக்கு கோவம் பொத்துக்கினு வந்து “பெரீ பெரீ சமாசாரத்தை எல்லாம் அசால்ட்டா தூக்கி கொடுத்துக்கினு கீறா”

இவிக வில் ( Will) என்ன ராமன் கை வில்லா? ங்கொய்யால ராம பாணத்தையே டுபுக்காக்கின ராம நாமம்ங்கற ஆயுதம் நம்ம கையில கீது.

பிட்டா புடிங்க:

இன்னைக்கு இளைய தலைமுறை அசால்ட்டா உபயோகிக்கிற பல வார்த்தைகளோட அசலான அர்த்தம் விபரீதமா இருக்குங்ணா. உ.ம் ஆப்பு

என்ன ஒரு ஆறுதல்னா பண விஷயத்துல க்ளியரா இருக்காய்ங்க. என்ன ஒரு பயம்னா கிரைமுக்கு கூட தயங்க மாட்டேங்கறாய்ங்க.அந்த காலத்துல வீட்டு ஏழுமலையான் உண்டி – அம்மாவோட சீர்வரிசையை சேர்ந்த வெள்ளி டம்ளர்களோட நம்ம கிரைம் நின்னுருச்சுங்ணா.

நமக்கும் வயசு ஆகுது. ச்சொம்மா கண்டவுகளை வம்புக்கிழுத்து அவிக வவுத்தெறிச்சலை ஏன் கொட்டிக்கனும்னும் தோணுது. தாளி வழக்கு போடுவான்/டாக்சி அனுப்புவாங்கறதுக்கெல்லாம் பயப்படற கேஸ் நாம இல்லிங்ணா.

பெட்டைபுலம்பல் மாதிரி புலம்புவாய்ங்க போல.அதெல்லாம் டெலிபதில வந்து ரெம்ப டார்ச்சர் பண்ணுது. எது எப்படியோ ஜாதகங்க வந்துக்கிட்டே இருக்கு. ரவுண்ட் தி க்ளாக் ஒர்க் அவுட் பண்ணாலும் “முடியலிங்ணா” அதனால வர்ர மாசம் 7 ஆம் தேதிவரை ஆரும் ஜாதகம் அனுப்பாம இருந்தா உள்ளதை பைசல் பண்ண வசதியா இருக்கும்.

நம்ம வலைதளத்துல பதிவு போடறவுக ஃப்யூச்சர்ட் ஐட்டமா போட்டா பொருத்தமான படத்தை ஃப்யூச்சர்ட் இமேஜா பொடுங்ணா.

பாண்டியண்ணன் எப்பத்தேன் பதிவு சைஸ்ல கமெண்ட் போடறத விட்டு பதிவு போட ஆரம்பிக்கப்போறாரு கேட்டு சொல்லுங்ணா..

அப்பாறம் சமச்சீர்கல்வி ஆய்வு கமிட்டி உறுப்பினர் ஒருத்தரு தங்களோட நிறுவன ஆசிரியருக்கு சம்பளம் சரியா கொடுக்காத வழக்குல இருக்காராமே நெஜமா ஆருப்பா அது?

பிரதமர் நாளை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறாராம். வாரா வாரம் சந்திப்பாராமே.. (அய்யய்யோ அப்ப இனிமே வாரா வாரம் பல ஊழல்கள் வெடிக்கப்போவுதா?)

பொதுக்கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிய குழு உறுப்பினர்கள் (காங்கிரஸ்) நக்கலடிச்சு சிரிச்சாய்ங்களாமே?

“நல்ல தீர்ப்பை உலகம் கூறும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது”

ராகுல் காந்தி எப்ப பிரதமராக போறாரு? தாளி ராகுல் பிரதமராகனும் – முன் கூட்டி தேர்தலுக்கு போகனும். காங்கிரஸ் போண்டியாகனும்.

ங்கொய்யால நேரு குடும்பத்துல இருந்து நாய்குட்டி வந்தா போதும் ஜெயிச்சுரலாம்னு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையற காங்கிரஸ் கிழவாடிகளுக்கு டெப்பாசிட் கூட கிடைக்கக்கூடாது.

சோதிட புதிர் தொடர்.. பதில்கள்..

பெறுவாரியான வாக்கு 3 ??? வித்தியாத்தில் தொடரை தொடர வாக்களித்த உங்களுக்கு நன்றிகள்…

முன்னரே சொன்னபடி சோதிட படிப்புக்கக 200+ சாதகங்க்ளை சேர்த்துவைத்துளேன்.

அதிலிருந்து ஆடிட்டர்களின் முழு தகவல்களை தருகிறேன்.

இது உங்களின் சோதிட படிப்புக்கு மட்டும் பயன்படுத்த வேன்டுகிறேன்.

(இதில் தனிப்பட்ட விபரங்களும் அடங்கியிருக்கலாம் என்பதால்)

https://rapidshare.com/files/3469634010/auditorhoro.rar
http://www.mediafire.com/?0dnj67mnyiytzic

நன்றி.

வினோத்.