நவகிரக தோசங்களுக்கு ” நச்” பரிகாரம்

Me

அண்ணே வணக்கம்ணே !
ஒரு காலத்துல தூய தமிழ்ல எழுதின தொடர் பதிவு இது. நாமதேன் தினசரி ஒரு புது மேட்டரை தெரிஞ்சுக்கிற பார்ட்டியாச்சே .அதனால லேசா அப்டேட் பண்ணி போடறேன்.

முக நூல் உபயத்துல வர்ர புதிய வாசகர்களுக்கு இது புது சரக்கு தேன். தொடர்ந்து வாசிக்கிறவுகளுக்கு எங்கயோ படிச்சாப்ல இருக்குமேன்னு தோனும்.

நம்ம படைப்புகள்ளயே சூப்பர் ஹிட் முகாபுலா இது. நமக்கு யூனிகோட்னா என்னனு தெரியாத காலத்துல தினத்தந்தி சம்பளம் கொடுத்த தகிரியத்த்ல டிடிபி செய்விச்சு வச்சிருந்த மேட்டர் . இதை நிலாசாரலுக்கு அனுப்ப அவிக பெரிய மனசு பண்ணி ஆளை வச்சு அடிச்சு போட்டாய்ங்க.

2000 ஆம் வருசத்துல ஆன்மீகம் மாத இதழ்ல தொடராக ஆரம்பிச்சு “பிராமண சதிகளால்” பாதியில் நிறுத்தப்பட்ட ஐட்டம் இது.

அப்பாறம் அந்திமழை,முத்துக்கமலம் போன்ற வலை தளங்கள், ஜோதிட பூமி மாத இதழ்ல எல்லாம் வெளி வந்து தூள் பண்ண தொடர்பதிவு இது.

இதோ உங்களுக்காக இங்கே மீண்டும்………

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.

உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதகருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி),

செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:

நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.

நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.

1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.

2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.

3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:

யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:

மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

மேலும் போதுமான மெயின்டெய்னென்ஸ் இல்லாத சப்ஸ்டேஷனுக்கு போனாலும் உபயோகம் என்ன? காந்தி தாத்தா அந்த காலத்துலயே காசி எல்லாம் கமர்ஷியலைஸ் ஆயிட்டதா சவட்டியிருக்காரு. இப்பம் அதெல்லாம் என்னா கதியில இருக்கும்னு நினைச்சுபாருங்க.

3. தானம் வழங்குதல்:

நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.

இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனை நம்ம சோஷியல் லைஃப், கேரியர் பாதிக்காத வகையில குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை.

அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.

லக்னம்/லக்னாதிபதி பலப்படுவதால் தீமைகள்

அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி பலம் பெறலின்னா டாரா கிளிஞ்சுரும்னு நானே பல சந்தர்ப்பங்கள்ள சொல்லியிருக்கன். ஆனால் அந்த சீக்வென்ஸ்ல கண்ணாலம் பத்தியோ – மேரீட் லைஃபை பத்தியோ முக்கியமா ஆன்மீகத்தை பத்தியோ பாய்ண்டே ரெய்ஸ் ஆகியிருக்காது.

லக்னாதிபதிங்கறவர் எந்த அளவுக்கு பலம் பெற்றால் ஜாதகருக்கு அந்த அளவுக்கு செல்ஃப் என்ற “சுயம்” இருக்கும்.

இதை இந்த உலகத்துல அன்னாட பொயப்புக்காக “என்னா வேணம்னா” செய்ய தயாரா இருக்கிற அல்லக்கைங்க புரிஞ்சுக்காது. இதை அகங்காரம் -ஈகோன்னு சொல்லிருவாய்ங்க. மத்த கிரகங்கள் பேர் சொல்லும் நிலையில இருந்து இந்த ஜாதகர்கள் சொந்த தொழில் -சொந்த வியாபாரம் கு.பட்சம் ஒரு டீம் லீடர்,டிப்பார்ட்மென்டல் ஹெட் மாதிரி செட்டில் ஆயிட்டா பிரச்சினை வராது.

மத்த கிரகங்கள் ஆப்படிச்சிட்டிருந்தா பார்ட்டி என்னவோ சாதாரண லேபரா இருப்பான். ஆனால் அவனோட செல்ஃப் /சுயம் பக்காவா இருக்கும். லக்னாதிபதி நைசர்கிக சுபனாக இருந்து லக்னாத் பாபனாக இருந்தா தப்பு தண்டாவுக்கு போகமாட்டான். ஆனால் எவனும் இவனை நம்பமாட்டான். இவன் லைஃபே ஒரு பேத்தடிக் ஸ்டோரியா இருக்கும். Read More

விடுபட்ட பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே !
நீங்க இந்த சைட்டை மட்டும் பார்க்கிற பார்ட்டியா இருந்தா கீழ் கண்ட பதிவுகளை மிஸ் பண்ணியிருப்பிங்க.

உங்க வசதிக்காக விடுபட்ட பதிவுகளுக்கான தொடுப்புகள்

ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க..

உலகம் இப்படித்தான் இயங்குகிறது !

ஜூ.ஐஸ்வர்யா ஜாதகம் : தாத்தாவுக்கு ஆப்பு

ஒரு கடிதம் பதிவாகிறது : இஸ்மாயில்

அண்ணே வணக்கம்ணே,
நமக்கு வர்ர மெயில் எல்லாம் ரெம்ப கான்ஃபிடன்ஷியல். ஆனால் இந்த மெயில் வேறு சாதி. நீளம் கருதி கமெண்டுக்கு பதில் மெயிலா வந்த மெயில். அதனால இதை பதிவா வெளியிடுகிறேன். சபை இது குறித்து தன் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இனி ஓவர் டு இஸ்மாயில்..

அய்யா வணக்கம்,
ஆண் பெண் வித்தியாசம் என்ற பதிவில் நான் எழுதிய கமெண்டுக்கு தொடர்ச்சி இது. கொஞ்சம் பெரிதாக இருந்ததால் மெயிலில் அனுப்பிவிட்டேன்.

எனக்கு ஜோதிட அறிவெல்லாம் ரொம்ப குறைவு. நான் ஒவ்வொரு கிரகத்தையும் அதன் அமைவிடம், பார்வை,
உட்கார்ந்திருக்கும் இடத்தின் அதிபதி, அது அமர்ந்த இடம், கிரகத்தின் இயல்பு, சேர்க்கை, கோச்சாரம், தசபுத்தியில் பலன்
இதெல்லாம் போட்டு ரொம்ப குழம்பிக்குவேன் முன்னெல்லாம். இப்போ ஒரு கிரகம் என்றால் இப்படித்தான் என்ற காரஹத்துவம் தெரிந்ததில் ஓரளவிற்கு தெளிய ஆரம்பித்து விட்டேன். இப்போ நீங்க சொன்ன படி வாழ்கையின் ஒவ்வொரு பிரிவுக்கும், பிரச்சினைக்கும் என்ன கிரகம் காரணம் என்று புரிய ஆரம்பித்து விட்டதால் எந்த கிரகத்தின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்கிற அளவிற்கு புரிய ஆரம்பித்து விட்டது.

எனக்கு என்னவோ தற்போது உலகில் நடக்கும் விசயங்களை பார்க்கும் பொது மனிதன் ஒவ்வொரு விசயத்தையும் பகுத்தறிந்து பார்க்க ஆரம்பித்து விட்ட மாதிரி தெரிகிறது. சாமியார்கள், அரசியல்வாதிகள் மாட்டுவது, தொடரும் மக்கள் புரட்சி இவைகள் இதனை நிரூபிக்கிறது. முன்னெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஜோதிடம் சொல்லும். இப்போது அவர்களை விட மிக நன்றாக சொல்ல பலர் வந்துவிட்டனர்.

இவன் அதற்க்கு சரிப்பட மாட்டன் என்று யாரையும் எதற்கும் தள்ளி விட முடியாத அளவிற்கு எல்லோரும்
எல்லாமும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நிறைய விஷயம் இப்போது வெப் உலகிலும் கிடைத்து விடுகிறது. ஏதேதோ விசயமெல்லாம் எளிமையாக கிடைக்கும் போது ஜோதிடம் அதுவும் மனிதன் தன்னை சுற்றி நடக்கும் விஷத்தை பற்றி அறியும் அறிவை சிக்கலான கணக்குகள், கணிதங்கள் மூலம் மனிதனை அதனிடமிருந்து தள்ளி வைப்பது நல்லதல்ல.

கிரகங்களை பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரும் ஜோதிடரை தேடி போகவே மாட்டார்கள். வேதாத்ரி மகரிஷி அவர்கள் நவகிரக யாகத்திற்கு பதிலாக பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒன்றினை அவரின் மனவளக்கலை சீடர்களுக்கு போதித்துள்ளார். அதன் உள்ளார்ந்த அர்த்தம் எத்தனை பேருக்கு புரிந்ததோ தெரியவில்லை. தாங்கள் கிரகங்களின் காரகதுவங்களை விளக்கியபின் அந்த தவம் செய்யும் போதும் எண்ணமும் ஆத்மார்த்தமாக நவகிரகங்களுடன் ஒன்ற முடிகிறது.

ஒட்டு மொத்தமாக ஜாதகத்தை வைத்து குழம்புவதை விட தனிப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் கிரகங்களை அணுகுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன். இப்படி அக்கு வேறு ஆணி வேராக பிரித்து அணுகுவதை கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங்கில் “modular ” அப்ப்ரோச் என்பார்கள். இதுவே ராணுவத்தில் Stratified எவ்வளவு பெரிய இராணுவமாக இருந்தாலும் வீரர்களை சிறு சிறு குழுக்களாகவே(STRATA எனப்படும்) வைத்திருப்பார்கள்.(சுமார் 20 பேர் மட்டுமே). இதன் தத்துவம் அந்த குழு மெம்பர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு ஒரு குடும்பமாக மாறிவிடுவார்கள். போரில் அவர்களில் ஒருவன் தாக்கப்பட்ட அவரின் குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவேசப்பட்டு எதிரியை தாக்குவர்.

மனித வாழ்கையின் பல்வேறு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் (பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகளை) ஆதிக்கம் செலுத்தும் கிரகத்தை மனிதன் தனக்கு சாதகமாக மாற்றும் சாதக கணிதம் (ஜாதக கணிதம் அல்ல) குறித்த விரிவான அலசல், விவாதம் தொடங்கி வைக்கலாம். அதாவது symptom based அனலிசிஸ். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல கிரகம் எது, அதனை எப்படி வெற்றி கொள்வது என்று அலசலாம். சாதரணமாக வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது போல எந்த வேலைக்கும் அந்த நேரத்தில் காரக கிரகத்தை புரிந்து எடுக்கும் வேலையில் வெற்றி கொள்வது எப்படி என்று விரிவாக அலசலாம். இதனை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டாலே கோள்களை கொண்டு கோலி ஆட ஆரம்பித்து விடுவான் புத்திசாலி.

எனக்கென்னவோ இதனை தாங்கள் ஒரு ப்ராஜெக்ட் ஆக எடுத்து முழுமையாக புத்தகமாக போட்டால் நல்லது என்று எண்ணுகிறேன். யோசிக்கவும்.

2011 சனிப்பெயர்ச்சி

இந்த ஆண்டு இறுதியில் சனி கன்னியிலிருந்து துலாவுக்கு பெயர்கிறார்.அதுவரை கன்னியில் உள்ள சனி தரும் பொதுப்பலனையும் – மேஷம் முதலான 12 ராசிக்காரர்களுக்கு நடைபெற கூடிய பலனையும் பார்ப்போம்

என்ன இன்னம் 6 மாசம்தானே இருக்கு இதுக்கு ஒரு பதிவு தேவையான்னு சலிச்சுக்காதிங்க பரீட்சைக்கு வருசம் முழுக்கவா படிக்கிறோம். கடேசி 3 மாசத்துல படிச்சு கிழிச்சுரலை. அதே மாதிரிதான் இதுவும். விவரம் புரியாம சனிப்பெயர்ச்சி காலத்தை வீணடிச்சுட்டவுக இந்த ஆறுமாசம் ஒரு பிடி பிடிச்சா போதும் தூள் பண்ணலாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா?

நம்ம தலை ஒரு தறுதலை ! : ஜாதக ஆய்வு

முன்னுரை:
“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு”ங்கறது பழமொழி. நான் ஊர்ல இருக்கிறவுக ஜாதகத்தையெல்லாம் அனலைஸ் பண்ணி டர்ராக்கிக்கிட்டிருந்தா இப்ப நம்ம ஜாதகத்தையே கிழிச்சு ஆறப்போட்டிருக்காரு. எஸ்.மணி கண்டன். கணிப்பு உண்மையா இல்லியாங்கறதெல்லாம் மேட்டரே இல்லை.. அவருடைய வே ஆஃப் அனலைஸ் சிம்ப்ளி சூப்பர்ப். நான் பார்த்த கிழவாடி சோசியர்களையெல்லாம் தூசு மாதிரி ஊதித்தள்ளிட்டாரு. என்னோட ராசி – நவாம்சத்தை கொடுத்திருக்கேன் மேட்ச் பண்ணி பாருங்க. ஏறக்குறைய சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் என்ற பதிவின் ஒரு அத்யாயமாவே கூட இந்த பதிவை கொள்ளலாம்.

என் ராசி சக்கரம்:

நவாம்ச சக்கரம்:

ஓவர் டு மணி கண்டன்:

திருப்பதிக்கே லட்டா!, திருநெல்வேலிக்கே அல்வாவா? ஜோசியருக்கே ஜோசியமா?

////இப்போ என் ஜாதகத்தையே கூட உதாரணமா எடுத்துக்கிடுங்க. லக்னம் கடகம்.
லக்னத்துல சூரிய -குரு-புதன். என் குண நலன், உத்தி, வியூகம், புரிதல்
பத்தி கெஸ் பண்ணுங்க பார்ப்போம்////

ட்ரை பன்னி பார்க்கிறேன் தலை. போஸ்ட்மார்டம் தானே. பன்னிட்டா போச்சு.
என்ன சரியாக இருந்தா கன்ஃபார்ம் பன்னுங்க. தப்புன்னா திருத்தம் பன்னுங்க
ஓ.கே.வா.

///ஒவ்வொரு லக்னத்துக்கும் உள்ள பேசிக்கல் குவாலிட்டி என்னங்கறதை மனசுல வ்ச்சு///

நீங்க கடக லக்னம். கடக லக்னத்தின் பேசிக்கல குவாலிட்டி என்ன தலைவரே அந்த
லக்னத்தின் அதிபதி சந்திரன். சந்திரன் மனம், உடல், தாய், ஸ்திரமற்றதன்மை
போன்றவற்றிற்கு காரகன் மற்றும் ராசி சக்கரத்தில் 4வது ராசியாக கடகம்
வருகிறது. எனவே சந்திரனின் காரகத்துவங்கள் உங்கள் லக்னத்திற்கு
இருக்கும்.

சந்திரன் மனதை குறிப்பதால் ஆழ்ந்த சிந்தனை, கடலையும் கடக ராசி
குறிக்கிறது எனவேதான் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கிறீர்களோ.

சந்திரன் கற்பனையை குறிப்பதால் நடக்குமோ நடக்காதோ அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாமல் சதா கற்பனை உலகில் சஞ்சரிப்பீர்கள்.

கற்பனை சக்தி இருந்தால் தான் கவிதை வரும் அவர்களது கவிதை படிக்க
சகிக்கும். உங்கள் கவிதைகள் நன்றாக இருப்பதற்கு (நீங்களும்
கவிஞர்தாங்கோ!) இதுவும் ஒரு காரணம்.

உங்களிடம் மற்றவர்களை விட சற்றுத் தனித்தன்மை இருந்தே தீரும். கடக
லக்னத்தை சேர்ந்தவர்கள் மிகவும் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள்.
இவர்களுக்கு நான்கு பக்கமும் கண்கள் என்பது போல் தன்னைச் சுற்றி நடப்பதை
சட்டென யூகித்து சுதாகரித்து விடுவார்கள்.

பார்ப்பதற்கு சாதாரண ஆட்கள் போல் தெரிவார்கள் ஆனால் செயல்பட
ஆரம்பித்தார்கள் என்றால் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான் அப்படி ஒரு
சுறுசுறுப்பு வேகம் இருக்கும் (சந்திரன் விரைவாக செல்பவராயிற்றே).
எடுத்த காரியத்தை முடிக்கும் வரை தூங்கமாட்டீர்கள். சளைக்காமல் போராடும்
குணம் உங்களிடம் இருக்கும். இலேசில் எதையும்
விட்டுக்கொடுத்துவிடமாட்டீர்கள். 15 நாட்கள் சுறுசுறுப்பும் மற்ற 15
நாட்கள் சோம்பலும் மாறிமாறி வரும்.

உங்களை பேச்சில் மடக்குவது என்பது யாராலும் இயலாத காரியம். கீத்துக்கு
மாத்து என்று எதையாவது பேசி சமாளித்துவிடுவீர்கள். விரல் நுனியில்
விஷயங்களை வைத்திருப்பீர்கள். எந்த வருஷத்தில் என்ன நடந்தது என்று எத்தனை
கேள்விகளை கொக்கியாக போட்டாலும் சளைக்காமல் பதில் சொல்வீர்கள்.
யானைப்போன்ற ஞாபக சக்தி உங்களிடம் இருக்கும். இதெல்லாம் உங்களிடம்
இருக்கா தலை.

கடக லக்னத்தாருக்கு காம உணர்வுகள் அதிகம் இருக்கும் என்று
படித்திருக்கிறேன். உங்கள் லக்னாதிபதி சந்திரனே ஒரு மன்மதன்தானே 27
மனைவிகளாம். எப்போதும் பெண்கள் பற்றிய சிந்தனைகள் உங்களை துரத்தும்.

மேலும் 2ல் சந்திரன் கலைகளுக்கதிபதியான சுக்கிரன் சேர்க்கை இந்த சேர்க்கை
தான் உங்களை கில்மா பற்றியெல்லாம் எழுத வைக்கிறது (சதா சிந்திக்கவும்
வைக்கிறது) சேர்க்கை வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பிறரை
கவர்ந்திழுக்கும் உங்கள் பேச்சுக்கு யாரும் எதிர்ப்பே சொல்ல மாட்டார்கள்.
உங்ளை பேச்சை ரசித்துக்கொண்டே இருப்பார்கள் நீங்களாக நிறுத்தினால் தான்
உண்டு.

சந்திரன் தாய்க்கு காரகம் வகிப்பவர் மேலும் ராசி சக்கரத்தில் கடகம் 4வது
ராசி எனவே கடக லக்னத்தாருக்கு தாய்பாசம் இயல்பாக ரத்தத்தில் ஊன்றிய
ஒன்று. (நீங்க அன்னையர் தினம் கட்டுரையில் எழுதினதை படிச்சேன் தலை)
மேலும் நீங்க சொல்ற தாத்தாவுக்கும் (கலைஞர்) கடக லக்னம்தேன். அவரு அம்மா
(அஞ்சுகம் அம்மையார்) தங்கசிலையை வீட்ல பக்கத்திலேயே எப்போதும்
வச்சிருப்பார் டி.வி.யில் பார்த்திருக்கேன். நெஞ்சுக்கு நீதியும் முழுசா
படிச்சிருக்கேன் தலை.

ஆனா பாருங்கோ தலை 4ல் கேதுவும், செவ்வாயும் சேர்க்கை இதுதான் உங்கள்
தாயாரை பிரிய காரணமோ. மேலும் வீடு, வசதி என்று மிகவும் ஆடம்பரம் எல்லாம்
இருக்காது மிகவும் சாதாரணமாக இருக்கும். நாலில் கேது இருப்பவர்களுக்கு
சொந்த வீடு இருக்காதாம் வாடகைதானாம். செவ்வாய் வேறு கேதுவுடன்
சேர்ந்ததால் அதன் காரகத்தையும் கேது குறைத்துவிட்டார். உங்களுக்கு
சொந்தவீடு இருக்கா தலை. சொந்தபந்தங்கள் எல்லாம் ஒட்டறாய்ங்களா?. வண்டி
வாகனமெல்லாம் ஓரளவு இருக்கும் சுக்கிரன் அம்சத்தில் தப்பித்துவிட்டார்.
என்ன சரியா தலை.

உடலை குறிப்பவரும் சந்திரன் தான். கடக லக்னம் நல்ல பிரகாசமான, பிறரை
கவர்ந்திழுக்கும் உடலமைப்பு உடையவர்கள் (சந்திரன் கெடாமல் இருக்கும்
பட்சத்தில் உ.தா. சனி சம்பந்தம் சந்திரனுக்கோ, கடக லக்னத்திற்கோ
இல்லாமல்) ஆனால் வலிமையான உடலமைப்பு என்று கூற முடியாது. பஞ்ச பூத
தத்துவத்தில் நீர் ராசியாக கடகம் வருகிறது. எனவே நீரில் விருப்பம்
இருக்கும். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், நீச்சல்
போன்றவை, அடிக்கடி சளி தொந்தரவுகள், வீசிங், ஆஸ்துமா போன்றவை கூட
இருக்கும் 4மிடம் இருதயத்தை குறிப்பதால் இருதய நோய்கள் ஏற்பட கூட
வாய்ப்புகள் உண்டு (6க்குடைவர் லக்னத்தில் இருக்கிறார் பாருங்கோ)

சந்திரன் இன்ஸ்டெபிலிட்டிக்கு காரகன் அதனால் தான் நீங்கள் ஒரு
சிந்தனையில், செயலில் தொடர்ந்து இருக்க முடியாது அடிக்கடி திட்டங்களை,
செயல்பாடுகளை மாறிவிடுவீர்கள். (பிறகு திரும்பவும் வந்து ஜாய்ன் பன்னி
விடுகிறீர்கள் அது வேறு கதை)

லக்னாதிபதி சந்திரன் சூரியன் வீட்டில் சூரியன் லக்னத்தில் இருக்கிறார்
(பரிவர்த்தனை) எனவே தான் உங்கள் சிந்தனை, செயல்களில் ஒரு நேர்மை
இருக்கிறது. (நானும் மகம் 1-ம் பாதம் தான் தலை) எப்பாடு பட்டாவது கொடுத்த
வாக்கை காப்பாத்திடனும்ன்னு (2ல் சூரியன் வீட்டில் சந்திரன்) ராப்பகலா
உழைக்கிறீர்கள் (ஆன்லைன் ஜோதிடபலனுக்காக! சும்மா ஜோக்கு!)

உங்கள் லக்னத்தில் 3,12க்குடைய புதன் பகை பெற்று அமர்ந்துள்ளார். புதன்
அம்சத்தில் சிம்மத்தில் நட்பு என்ற பலத்துடன் உள்ளார். 3-ம் மிடம்
வீரம், சகோதரம், கில்மா, குறுகிய பயணங்கள், கடித போக்குவரத்து,
கம்யூனிகேஷன் போன்றவற்றை குறிக்கிறது. மேலும் புதன் 3,12 க்குடையவர்
என்பதால் கில்மாவில் கரைதேர்ந்தவர் நீங்கள் (2 மாதத்திற்கு ஒருமுறை ஆழமான
உடலுறவு என்பதெல்லாம் இப்பதான். சின்ன வயசில் சும்மா விளையாடி
இருப்பீர்கள் தலை)

மேலும் புதன் சரியான சந்தர்ப்பவாத கிரகமாயிற்றே. உங்களை யாராலும்
கவிழ்க்கவே முடியாது தலை. கழுவற மீனில் நழுவுற மீனாக சந்தில் பொந்தில்
புகுந்து வெளியே வந்துவிடும் ஜகஜ்ஜால கில்லாடி நீங்கள். மேலும் 3க்குடைய
காரிய ஸ்தானாதிபதி முயற்சி ஸ்தானாதிபதியாக புதன் வருவதால் உங்களால்
முடியாது என்ற வேலையே இல்லை. எப்படியாவது, யாரையாவது பிடித்து மேட்டரை
முடித்துவிடும் கில்லாடி நீங்கள் சரியா தலை.

புதனுக்கு விரயாதிபத்யமும் வருவதால் நீங்கள் உங்களுக்காக நிறைய செலவுகளை
செய்வீர்கள். எதிர்காலத்திற்கும் சேமித்தும் வைப்பீர்கள். (12மிடம்
முதலீடுகளையும் குறிக்கும்) சிக்கனமாக இருக்கவும் தெரியும், சும்மா
எம்.ஜி.ஆர் வேலையும் தெரியும் டபுள் கேம் ஆடுவதில் கில்லாடி நீங்கள்.
சரியா தலை. புதன் லக்னத்தில் இருப்பதால் நகைச்சுவையாக பேசி பேசியே
எல்லோரையும் கவிழ்த்துவிடுவீர்கள் (பெண்கள் உட்பட) ஓவரா போறேனோ தலை.

அப்புறம் லக்னத்தில் சூரியன் நட்பு பெற்றுள்ளார். அம்சத்தில் பகை
பெற்றுள்ளார். சுமாரான வலிமை. சூரியன் 2க்குடையவர் லக்னத்தில் உள்ளதால்
வாக்கால் வருமானம் (ஜோதிடம்) மேலும் ஜோதிடத்திற்கு காரகனான புதன் சூரியன்
மற்றும் குரு சேர்க்கை லக்னத்தில் உள்ளது.

இந்த கிரகநிலைகள் தான் உங்களை ஜோதிடத்திற்கு இழுத்துவந்துள்ளது. சூரியன்
புதன் சேர்க்கை மிகவும் நல்லது என்பதை நீங்களே எழுதியுள்ளீர்கள். புத
ஆதித்ய யோகம் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நான் சொல்வது இந்த
சேர்க்கை காரகத்துவத்திற்கு மட்டும்தான் ஆதிபத்யத்திற்கு இல்லை ஏனென்றால்
தன விரயாதி சேர்க்கை எவ்வளவு தனமிருந்தாலும் கரைத்துவிடும்.

சூரியன் புதனுடன் சேர்ந்ததால் தான் புதனுடைய காரகத்துவம் அதிகரித்துள்ளது
மேலும் கடக லக்னத்தில் (சந்திரன் வீடாச்சே) இந்த சேர்க்கை இருப்பதும்
ஜோதிடம் பற்றி ஆழமான சிந்தனைகளும் அதன்பயனாக ஜோதிடத்தில் நீங்கள்
கரைகாணவும் உதவியது. கணக்கு சரியாப்போச்சா தலை.

குடும்பாதிபதி லக்னம் பெற்றதால் எப்போதும் குடும்பத்தின் மீது பிரியமாக
இருப்பீர்கள். சூரியனாக இருப்பதால் அரசாங்க வழியில் ஏதாவது வருமானம் வர
வாய்ப்புகள் உண்டு. (ஏதாச்சும் வந்ததா தலை)

அப்புறம் கடைசியாக நீங்கள் அடிக்கடி சொல்வீங்களே என்ன அது ஆங்! என்
ஜாதகத்தில் லக்னத்தில் குரு உச்சம் (நான் கணக்கு வைத்திருக்கிறேன் தலை
1.76 லட்சம் கோடி தடவை ஹா! ஹா!) அதுபற்றி பார்ப்போமா.

குரு உங்கள் லக்னத்திற்கு யோகாதிபதிதான் ஆனா அவருக்கு ரோகாதிபத்யமும்
வருகிறதே. முதலில் ரோகம், கடன், எதிரி பின்பு யோகமா?

6க்குடையவர் லக்னத்தில் பலம் பெற்றால் என்ன பலன் தலை. நோய் நிச்சயம்
உடலில் இருக்கும் (குருவுக்குடைய காரத்வ நோய்கள்). குருவாக இருப்பதால்
நோய் அடிக்கடி வருவதும் போவதுமாக இருக்கும். இப்படிதேன் கடனும்
கொடுக்கலும், வாங்கலும் மாறிமாறி வரும் (குரு தனகாரகன்) சரிதானே தலை.

விரோதின்னா நீங்களாகவே தேடிக்கறதா. இல்ல யாரு என்னன்னு பாக்காம பெரிய
மனிதர்களோட நீங்க மோதரதால வந்ததா (குரு 6க்குடையவர் எதிரியை குறிப்பவர்,
குரு சமூகத்தில் பெரிய மனிதர்களை குறிப்பவரல்லவா? அட நீங்க கூடதான்
பெரியமனிதர் லக்னத்தில் குருவாச்சே) குரு அம்சத்தில் நீசம் பெற்றதால்
வலிமை குறைந்து விடுகிறார். இல்லையெனில் நிரந்தர நோய், கடன், எதிரிகள்
என்று உங்களை படுத்தி எடுத்திருக்கும்.

குருவுக்கு பாக்யாதிபத்யமும் கிடைச்சிருக்கு. இதுதான் உங்களுக்கு தர்ம
சிந்தனை மேலோங்கியிருக்க காரணம் (ஆ.இ.2000) மேலும் பொதுச்சேவை, தெய்வ
சிந்தனை, அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் இந்த பாக்கியாதிபதி குரு
லக்னம் பெற்றது தான் காரணம். பொதுகாரியங்களுக்கு தயங்காமல் தாராளமாக
கைநீட்டும் குணம் உங்களுக்கு இருக்கும். சமூகத்தில் ஓரளவு கௌரவமாக
இருப்பதும் இந்த குருவால்தான்.

9ம்மிடமான தந்தையை குறிப்பவரும் குருவே, உங்கள் வீட்டில் எத்தனை
குழந்தைகள் இருந்தாலும் உங்கள் தந்தைக்கு நீங்கள் தான் செல்லப்பிள்ளை.
குருநாதரைக் குறிப்பவரும் குருவே உங்களுக்கு யாராச்சும் நல்ல குரு
கிடைச்சிருக்காங்களா தலை. ஆனால் இந்த பலன்கள் உங்களுக்கு மிகச்சிறப்பாக
அமைந்திருக்க வேண்டும். அம்சத்தில் வலிமை இழந்தால் ஏதோ பெயரளவிற்கு
மட்டும் கொடுத்தார். கற்பூர ட்ப்பாவில் கற்பூரம் தீர்ந்து போச்சு.
வாசனை மட்டும்தேன் மிச்சம்.

நீங்கள் லக்னத்திற்கு மட்டும் கேட்டதால் அதை மட்டும் எடுத்து எழுதவே
இவ்வளவு நீளமாக போய்விட்டது. முடிஞ்சா ஒரே பதிவாக போடுங்கள் நீளமாக
இருந்தாலும் பரவாயில்லை தொடர்ச்சி விட்டுபோயிடக்கூடாது. இன்னும் மத்த
பாவங்களுக்கு விவரித்து எழுதினால் அம்மாடியோவ்வ்வ் தனி புத்தகம்தான்
அச்சடிக்க வேண்டும் போல இருக்கிறது. சரி வரட்டா தலை.

அன்புடன்
S. மணிகண்டன்.

அம்மா மகள் உறவு : மனவியல் பார்வை

( ஆண் பெண் 12 வித்யாசங்கள் : 4 ஆம் பகுதி தான் இப்படி ஒரு முகமூடியோட வருது)

அண்ணே வணக்கம்ணே,
அவன் அவள் அது தொடர் பாதில நிக்குது. ஆண் பெண் 12 வித்யாசங்கள் தொடரும் அதே கதிதான். ரெண்டு எதை எழுதலாம்னு சின்னதா டைலமா. ஆண் பெண் 12 வித்யாசங்கள்ள எத்தீனியாவது அத்யாயத்தை எழுதனும்னு பார்த்தா நாலு.

சரியான பாதையில போறவன் (?) லைஃப்ல துண்டு துக்கடா – முரண் பாடுகளுக்கே இடம் கிடையாது. எல்லாமே எடிட்டட் மூவி மாதிரி சல்லுனு போவுமாம் ( ஓஷோ) அம்மான்னா என்ன ஆத்தான்னா என்ன ? அல்லாம் ஒன்னுதேன்.

ஜாதகத்துல நாலாவது இடம் அம்மாவத்தானே காட்டுது. அம்மாங்கற மேட்டர்ல ஆண் குழந்தைக்கும்,பெண் குழந்தைக்கும் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

அப்பன் காரன் மகனை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவனும் பெரிய எழுத்தாளனா வரனும்) அம்மாக்காரி மகளை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவளுக்கு தலைமுடி அடர்த்தியா வரும்போல) மேம்போக்கானது.

ஆக்சுவலா அப்பன் காரனை பொருத்தவரை மகள் இவன் மனைவியின் மறுபதிப்பு. அம்மாக்காரிய பொருத்தவரை மகன் இவளோட கணவனின் மறுபதிப்பு. ப்ரூஃப் ரீடிங் லெவல்ல இருக்கிற புஸ்தவம் மாதிரி .

பேசிக்கலா இருக்கக்கூடிய ஆப்போசிட் செக்ஸ் அட்ராக்ஷன் ஒரு பக்கம் இந்த மறுபதிப்பு மேட்டர் இன்னொரு பக்கம். இதனால ஆட்டோமெட்டிக்கா அம்மா பையன் பக்கம் சாய, அப்பன் மகள் பக்கம் சாயறான்.

அப்பா மகன் ரிலேஷன் வேறு விதம். ஹேட் அண்ட் லவ்ம்பாய்ங்களே அந்த மாதிரி மகனோட வளர்ச்சி அப்பனை குஜிலியும் ஆக்கும். ஓவரா வளர்ந்துட்டா ஒரு பொறாமையும் வரும். ( தான் 50 வயசுல வாங்கின சம்பளம் 12 ஆயிரம் – பையன் 22 வயசுல சாஃப்ட் வேர்ல வாங்கற சம்பளம் ஒரு லட்சத்து ரெண்டாயிரம்னா பொறாமையால பொசுங்கி போயிருவான்)

என்னதான் அப்பன் மகனா இருந்தாலும் பேசிக்கலா சேம் செக்ஸ். ரெண்டு பேருமே கடா தானே. ஆட்டோமேட்டிக்கா ஒரு போட்டி மனப்பான்மை இருக்கத்தான் செய்யும்.

பையன் சாதனை படைச்சு – அம்மாக்காரி அவனுக்கு பாயாசம் பண்ணித்தர்ரப்ப மேலுக்கு சந்தோஷமாவே ஃபீல் பண்ணாலும் சப் கான்சியஸா தாளி ப்ரமோஷனுக்காக நான் டைப் ரைட்டிங் ஹையர் பாஸ் பண்ணப்ப இவள் சர்க்கரை இன்னா விலை விக்குதுன்னு சொன்னாளேங்கர பாய்ண்ட் ஞா வரும்.

அம்மா பொண்ணு மேட்டருக்கு வரும்போது ஒரு பக்கம் கணவனாலயும் ( பசங்க வளர்ந்துக்கிட்டு வர்ர சமயம் ஆட்டத்தை குறைச்சுக்கனுங்கற எண்ணம்) , இன்னொரு பக்கம் டீன் ஏஜ் பையனாலயும் தள்ளிவைக்கப்பட்ட அம்மாவும் –

( பல கேஸ்ல அம்மாவே ரிஜெக்ட் பண்ணுவாய்ங்க – தத் .. எருமை மாடு மாதிரி வளர்ந்துட்ட.. துடைப்பக்கட்டையாட்டம் மீசை வச்சிருக்கேன். இன்னமும் மம்மி ஜிம்மின்னு கொஞ்சிக்கிட்டு தள்ளி நில்றா)

பொண்ணு வயசுக்கு வந்துட்டா இன்னமும் பழைய மாதிரி கொஞ்சி குலவிட்டிருக்கக்கூடாதுன்னு அப்பனால தள்ளி வைக்கப்பட்ட மகளும் காம்ரெட்ஸ் இன் டெஸ்ட்ரஸ் மாதிரி விதியில்லாத குறைக்கு சேர்ராய்ங்க.

இதுக்கு மேலயும் அம்மா – பொண்ணு ரிலேஷனை பத்தினட் சைக்கலாஜிக்கல் உண்மைகளை நான் சொன்னா செருப்பாலடிப்பாய்ங்க. ஏதோ என் நல்ல நேரம் டாக்டர் ஷாலினி ஏற்கெனவே எழுதிட்டாய்ங்க. அம்மா – பொண்ணுக்கிடையிலான உறவு சக்களத்தி உறவுதேன். இதை டாக்டரம்மா க்ளீனா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு வச்சுட்டாய்ங்க.

அவிக பாதிவேலையதான் பார்த்திருக்காய்ங்க. மீதி வேலையயாவது நாம பார்க்கனுமில்லியா. டாக்டரம்மா சொன்ன மேட்டரு பிஃபோர் மேரேஜ் வரை ஓகே. ஆஃப்டர் மேரேஜ்?

இந்த பெண்ணுக்கு கண்ணாலமாகிற வரை அப்பா அம்மாவுக்கு கொடுக்கிற முக்கியத்துவம், காட்டற அன்பு இத்யாதிதேன் தெரியும். அதனால ஒரு வித பொறாமை. சக்களத்தி தனமான ஃபீலிங்.

ஆனால் ஆஃப்டர் மேரேஜ் அம்மா தன்னோட புருசனால என்னெல்லாம் இம்சை பட்டுருப்பாய்ங்கனு அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கிடறா. ரியலைஸ் ஆகறாள்.

அடடா இதெல்லாம் தெரியாம பாவம் அம்மாவை ரெம்பவே இம்சை படுத்திட்டம் போலிருக்கேங்கற கில்ட்டியிலதான் இந்த பொஞ்சாதிங்கல்லாம் அம்மா அம்மான்னு அனத்தறாய்ங்க.

இது ஒரு ஆங்கிள். இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா மகளோட கண்ணாலத்துக்கப்பாறம் அம்மா தன் மகள் மேல கட்டுப்பாட்டை முழுக்க இழந்துர்ரா. என்னடி இது பொட்டை இத்துனூண்டு வச்சிருக்கேன்னா “அவருக்கு இப்படி இருந்தாதான் பிடிக்குது”ன்னுட்டா மேட்டர் ஓவர்.

எந்த உறவுல ஒருத்தர் இன்னொருத்தரை கட்டுப்படுத்தறதில்லையோ அந்த உறவு நீடிக்கும். நிலைக்கும். தித்திக்கும்.

இன்னொரு ஆங்கிள்ள பார்க்கும் போது கண்ணாலத்துக்கப்பாறம் மகள் தன் தாயை இழந்துர்ரா. ஒரு பொருளை இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமையே தெரியும்.

ஒன் மோர் ஆங்கிள் ; இவிக சேர்ந்திருக்கக்கூடிய நேரம் குறைஞ்சு போகுது. பெட்டியை கீழே வைக்கும் போதே புறப்படற நேரத்தையும் பொண்ணு அறிவிச்சுர்ராளே.

நாடகம் , சினிமால்லாம் சக்ஸஸ் ஆக காரணமே டைம் லிமிட் தேன். 365 நாளைக்கு ஓடறாப்ல சினிமா எடுத்தா எடுத்தவனே பார்க்கமாட்டான்.

சீரியல் வெற்றிக்கு காரணம் அதுவும் ஹ்யூமன் லைஃப் மாதிரி அடுத்து என்னங்கறதை சஸ்பென்ஸுல திராட்டுல விட்டுர்ரதுதேன்.

இப்படி திராட்டுல விடும்போது சஸ்பென்ஸே பிடிக்காத மூளை ஃபில் அப் தி ப்ளாங்ஸ் செய்துக்குது. நேர்ல பார்த்த ஆன்டிய கனவுல துரத்த காரணமும் இதுதேன்.

மனித மனம் முழுமைக்கு ஆசைப்படுது. குடிக்கிறவன்,அடிக்கிறவன், ஊழல் பண்றவன்லாம் இந்த முழுமைக்கான துடிப்புலதேன் பெருசா செய்து மாட்டிக்கிறான். ஓகே ஓகே மொக்கை போதும் பாய்ண்டுக்கு வந்துர்ரன்.

ஏதோ மகளுக்கு ஒரு சில பிரத்யேக உடல் உபாதைகள் ஏற்படும்போது உபசாந்திக்கு த்ர்ர ஒத்துழைப்பு ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தலாம் தான். இல்லேங்கலை. ஆனால் இந்த மேட்டர்ல அம்மாக்காரிக்கே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இது பொண்ணுக்கும் ஒட்டிக்குது.

மேலும் மகள் மேட்டர்ல அம்மாவுக்கு கிடைக்கிறது கார்ட் ட்யூட்டி. இந்த மாதிரி பல காரணங்களால திருமணத்துக்கு முன்னான அம்மா -மகள் உறவு ஸ்பெக்ட் ரம் மேட்டருக்கு பின்னான காங்கிரஸ் திமுக கூட்டணி மாதிரி தேன் இருக்குது.

கண்ணாலத்துக்கப்பாறம் மேற்சொன்ன காரணங்களால அம்மா -மகள் இடையில வயர்லெஸ் கனெக்சனே ஏற்பட்டு போகுது. இந்த வயர்லெஸ் கனெக்சன் ஏதோ ஒரு அளவோட நின்னா பரவால்லை. பல குடும்பங்கள்ள கும்மியடிச்சுருதுங்கண்ணா.

நம்மாளுங்க வேற பலான மேட்டர்ல கோட்டையை விட்டாய்ங்கன்னா ஃபினிஷ். அவள் பிறந்த வீட்ல சோறில்லையா,டிவி இல்லையா, டிஷ் இல்லியா என்ன இழவுக்கு அந்த வீட்டை ஒட்டு மொத்தமா வெட்டிக்கிட்டு இங்கன வந்தா? கில்மாவுக்காகத்தானே. ( ஐ மீன் அட்லீஸ்ட் எப்பயோ வாரத்துக்கு ஒன்னு ரெண்டு தாட்டியாச்சும் -ஆவரேஜா – )

அந்த கில்மாவுக்கே ஆப்புன்னா ஆட்டோமெட்டிக்கா பொஞ்சாதிங்க மனசு அம்மா பக்கம் சைடு வாங்கிரும். அப்பால ஷாட் கட் பண்ணா அம்மாக்காரி இவளுக்கு பேன் பார்க்க இவள் இவள் மனசுல இருக்கிற பாம்புகளையெல்லாம் எடுத்துவிட மகளிர் காவல் நிலையம் ,ஃபேமிலி கோர்ட்டு

காரணம் எதுவா வேணம்னா இருந்துட்டு போகட்டும் ஒரு பாவம் நாலஞ்சு காரகத்வத்தை கொண்டிருக்கும்போது ஒரே காரகத்வத்து மேல அட்டாச்மெண்டை வளர்த்துக்கிட்டா மத்த காரகத்வமெல்லாம் ஆட்டோமெட்டிக்கா டிம் அண்ட் டிப் அடிக்க ஆரம்பிச்சிரும்.

அந்த அம்சங்கள் என்னங்கறதை மட்டும் சொல்லி இந்த பகுதியை முடிக்கிறேன்.ஒரு பெண் தன் தாய்க்கு -தாய் வீட்டுக்கு கொடுக்கிற அமிதமான இம்பார்ட்டன்ஸால இதெல்லாம் எப்படி பாதிக்கப்படுதுங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன்.

அதீத தாய் – தாய் வீட்டு பாசத்தால் பாதிக்கப்பட கூடிய நான்காம் பாவத்தின் இதர காரகத்வங்கள்:

வீடு,வாகனம்,கல்வி, இதயம்,கற்பு,பாசத்துக்குரியவர்கள்