கோவில் நகை அடகு வைப்பு

பிட்டா படிங்க !
1. நான் ராவணனின் ரசிகன் /கமல் பேச்சு
இதென்னடா வம்பா போச்சு ஒரு காலத்துல ரஜினி கூட இதே டயலாகை சொல்லி தன் மகளுக்கு மண்டோதரினு பேருவச்சதா ஞா

2.விஜய் காங். கட்சியில் சேர்ந்தார்
ஆகா இனி தமிழக காங்கிரசில் புதிய ரத்தம். விஜய் கண்ணா பார்த்து நைனா ! கலைஞர் அழகிரிக்கு சிக்னல் கொடுத்தாருன்னா ரசிகர் மன்றமே காலி

3.ஆந்திரத்தில் ரேஷனில் கடலைப்பருப்பு(கிலோ 30க்கு) பட்டாணி(கிலோ 20க்கு) வழங்க முடிவு. (ஏற்கெனவே தரப்படும் துவரம்பருப்புக்கு கூடுதலாக.
கலைஞரய்யா உங்களுக்கெதுக்கு இந்த தலைவலி எல்லாம்.. ஜானகியம்மா யாரோட மனைவி அவர் எப்படி வாத்தியாருக்கு மனைவியானாருன்னு ஒரு எக்ஸ்க்ளூசிவ் முரசொலில கொடுத்தா தீர்ந்தது கதை
4.மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 55 வயது நிறைந்த பெண்களுக்கு ஓய்வு தொகை திட்டம்( அபய ஹஸ்தம்) நவம்பர் முதல் துவக்கம். தலா ரூ. 500 முதல் 2,500 வரை கிடைக்கும்
5. கிராம சபைகளில் கலந்து கொள்ளவிருக்கும் ஒய்.எஸ். கலைஞருக்கென்ன ஹாலில் வந்து உட்கார்ந்தால் குடும்ப உறுப்பினர்களில் பாதி பேர் சுற்றி உட்கார்ந்தால் கிராம (ட்ராமா ?) சபை தான்

6.திருப்பதி கோதண்ட ராமர் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர். அர்ச்சகர்கள் சம்பளங்களை உயர்த்த சிரஞ்சீவி கோரிக்கை
7.ஆப்பரேஷன் ஆகர்ஷா பெயரில் எதிர்கட்சி தலைவர்களை காங். கட்சிக்கு இழுத்து வரும் ஓய்.எஸ். பார்த்துங்கண்ணா சந்திரபாபுவை மட்டும் இழுத்துராதிங்க அவர் சொந்த மாமனாரை இழுத்து தள்ளினவர்
8. ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா என்ற பெயரில் கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்களை இழுக்க சந்திரபாபு திட்டம்.(ஹூம்..தப்பித்தவறி ஜெயிச்சாலும் ஜெயிச்சுரவங்கற சந்தர்ப்பத்துலயே ஓடிப்போனவங்க இப்பயா வரப்போறாங்க‌
9.கூகுல் டென் டு 100 ப்ரோஜக்டு என்ன ஆனது ? உலக அளவில் உலகத்தில் பெரும் மாற்றத்தை விளைவிக்க வல்ல ஐடியாக்களை வரவேற்று ஒரு போட்டியை அறிவித்தார்கள் . என்னப்போல் பல கேணையர்கள் ஐடியா அய்யாசாமிகள் ஐடியாக்களை அனுப்பினார்கள் . முடிவுதான் இன்னும் அறிவிக்கப்படலை http://www.project10tothe100.com/

10.இலங்கை விவகாரம் பற்றி நான் எழுதிய பதிவுக்கு 4 மறுமொழிகள். அதில் இரண்டு ஆங்கிலத்தில்

11.ஜெயலலிதா திமுகவின் பணபலம் இத்யாதியை காரணம் காட்டி தேர்தலை புறக்கணித்துள்ளார். ஆந்திர மானிலம், சித்தூரில் பிரஜாராஜ்ஜியம் கட்சி வேட்பாளர் ரூ.40 கோடி வரைசெலவழித்தார். காங்கிரஸ் வேட்பாளரோ அதைப்பற்றி கவலையே படவில்லை சம்பிரதாய பிரச்சாரத்தையே மேற்கொண்டார். முடிவு என்னாச்சு தெரியுமோ ? காங் வேட்பாளர் 1,600 வாக்கு வித்யாசத்தில் வெற்றி

12.ஆந்திரத்தில் உயர்ரக அரி்சிவிலை ஏகத்துக்கு உயர்ந்ததை அடுத்து அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு பதுக்கல் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்வர் உயர் ரக அரிசியைவிட மட்ட அரிசியில் தான் சத்து அதிகம் என்று அதையே தம் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அவர் மகனும் எம்.பி.யுமான ஜகன் மோகன் ரெட்டியும் அதே.

Advertisements

இலங்கை விவகாரம் குரங்கு புண்

ஆம். குரங்குக்கு புண் வந்தால் அது சும்மா இருக்காதாம். அதை நோண்டி நோண்டி பெரிதாக்கிக்கொண்டே இருக்கும். அது போல் இலங்கை விவகாரம் என்பது தமிழர்களாலேயே பெரிதாக்கப்பட்டுவிட்டது என்பது என் கருத்து. ஒரு மெஜாரிட்டி பிரிவினருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது என்பது உலக வரலாற்றிலேயே ஒரு சிங்களர்கள் விஷயத்தில் தான் நடந்துள்ளது. அது என்ன இழவோ தெரியவில்லை. தமிழர் என்றொரு இன‌முண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்பது போல் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தண்ணீரில் எண்ணெய் பொட்டு போன்று வாழ்கிறார்களே தவிர இரண்டற கலப்பதே இல்லை. உடல் அங்கே உயிர் எங்கோ என்பது போல் அவர்களின் நினைவு மொத்தம் தாய் நாட்டின் மீதே உள்ளது பிற மொழியினருக்கும், இனத்தாருக்கும் (ஏன் எனக்கும் ) புரிய மறுக்கிறது.

சிங்கள் அரசுகள் இன வாத அரசுகள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.உலக நாடுகளிலான இன்றைய அரசியல் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் வந்து நிற்கிறது. எதை வேண்டுமானாலும் செய் அதிகாரத்தை கைப்பற்று என்பதே அரசியலின் முக்கிய நோக்கமாகிவிட்ட பின்பு இனவாதம், இனப்போர் எல்லாம் தவிர்க்க முடியாததே. அதை எதிர்கொண்ட மித வாத சக்திகளை இனவாத அரசுகள் கிள்ளு கீரையாய் நடத்த , தீவிர வாதம் கிளர்ந்தது.

அதிலும் பிரபாகரன் என்பவர் உலக கொடுங்கோலர்களில் எவருக்கும் இளைத்தவரல்ல. தமிழினமும் வேறு விதியில்லாத பட்சத்தில் தான் பிரபாகரனை ஆதரிக்க வேண்டி வந்தது. (அவர் தான் ஏனைய தீவிரவாத சக்திகள் அனைத்தையும் அழித்து ஒழித்துவிட்டாரே)

தமது இயக்கம் ப‌லவீனப்படும்போது அமைதி பேச்சுக்களை ஊக்குவிப்பதும், அந்த நேரத்தில் தம் இயக்கத்தை பலப்படுத்தி கொள்வதும் அவருக்கு வழக்கமாகிவிட்டது. மேலும் அவர் ஒரு ஈகோயிஸ்ட் . தான் மையப்புள்ளியாக இல்லை என்று அறிந்தால் போதும் உடனே அந்த அந்த ஏற்பாட்டையே நிராகரிப்பது அவர் ஸ்டைல். அவரது கிம்மிக்ஸ் நம் தங்க தமிழகத்து எந்த அரசியல் தலைவருடையதை காட்டிலும் இளைத்ததல்ல. தானம் கொடுத்த பசுமாட்டுக்கு பல் பிடித்து பார்த்தாலும் பரவாயில்லை , தானம் கொடுத்தவரையே கசாப்பு போட்ட காந்தீயவாதி பிரபாகரன்.
இலங்கை அரசு எப்படி புலிகளை உலக அரங்கில் வில்லன் களாக நிறுத்தியதோ அதே பணியை புலிகள் செய்திருக்கலாம். க்ளோபல் வில்லேஜ் என்ற வாதம் வலுப்பட்டு வரும் காலத்தில் உலக அரசுகள் மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகளின் கைப்பாவைகளாகி ரொம்ப காலமாகிறது.

அவர்களது வியாபாரத்தை பாதிக்கும் எந்த விஷயத்தையும் மேற்படி மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகள் விரும்புவதில்லை. அதனால் உலக அரசுகளும் தீவிரவாதிகளை தீண்ட தகாதவர்களாக பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் எந்த நாட்டுக்கும் , எந்த நடுவருக்கும் அடங்காத/வளைந்து கொடுக்காத/ எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் ஒத்துவராத பிரபாகரனை உலக நாடுகள் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எனவே தான் இலங்கை அரசு உலக நாடுகளின் ராணுவ/வியூக/ஆயுத /உளவு உதவியை பெற முடிந்தது. பிரபாகரன் கதையை முடிக்க முடிந்தது.

தனி நபர் புகழ்ச்சி என்பது அரசியலில் மட்டுமல்ல போராளிக்குழுக்களையும் நாசமாக்கும் என்பதற்கு புலிகள் ஒரு உதாரணமாகிவிட்டனர். மேலும் லட்சியம் எத்தனை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அடையும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும். கோழைத்தனமான மனித வெடிகுண்டுகள்/ குழந்தை போராளிகள் /கண்ணி வெடிகள் என்று புலிகள் செயல்பட்டதால் உலகின் அனுதாபத்தை முழுக்க பெறமுடியாது போய்விட்டது.

ஒருபுறம் தற்காலிக “காலத்தின் கட்டாயங்களால்” ஆயுதம் தூக்க வேண்டி வந்தாலும் , நிரந்தர தீர்வுக்கு முயற்சி செய்திருக்கலாம். அதில் புலிகள் தவறிவிட்டனர். ராஜீவ் கொலை புலிகள் விஷயத்தில் இந்தியாவை ஒரு ரெஃபரி யாக கூட இயங்காமல் செய்துவிட்டது. சரி நடந்தது நடந்தது தான். இதை மாற்ற முடியாது. இனியேனும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிப்பதையும் உலகத்தமிழர்கள் விட வேண்டும்.

நீங்கள் என்னதான் இனமானம், தன்மானம் , வாழ்வுரிமை,சமத்துவம் என்று வாய் கிழிய பேசினாலும் மேற்படி ஐட்டங்களுக்காக போராடவேனும் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். முள் வேலிக்கிடையில் சகதியில், பசி பட்டினியில் நோயில் சாகும் அந்த சகோதர, சகோதிரிகளின் துன்பங்களுக்கு முற்றும் போட முற்றும் துறக்கலாம்.

புலிகள் மொழியிலேயே கூறுகிறேன். புலி பதுங்கித்தான் ஆக வேண்டும். உயிர் பிழைத்தால்தானே மீண்டும் பாய. இலங்கை தமிழர்கள் ஸ்தூலமாக பட்டு வரும் வேதனைகள் ஒருபுறம் என்றால் அவர்கள் மனரீதியில் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள். அங்குள்ள குழந்தைகள் வளர்ந்தால் அவற்றின் மனோதத்துவம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்தாலே அச்சம் பிறக்கிறது.

நான் சொல்ல விரும்புவது ஒரே வரிதான் “Be a Roman when you are at Rom”
சாவுக்கே அழைத்துச்செல்லும் லட்சியவாதத்தை விட உயிர் வாழ செய்யும் மெட்டீரியலிசமே பெட்டர்.

பி.கு: உங்கள் மறு மொழியை சிங்களனுக்கு பிறந்தவனே என்று ஆவேசமாக துவக்கிவிடாதீர்கள். பத்து நிமிடம் யோசித்து பின் எழுத ஆரம்பிக்கவும். தமிழகத்தில் வாய் கிழிய பேசும் அரசியல் வாதிகளை இலங்கை அகதி முகாமில் ஒரு நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். அட இங்குள்ள அகதி முகாமில் அரை நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். மாயாவாதத்தை விட்டு மண்ணுக்கு வாருங்கள். உயிரோட இருந்தா உப்பு வித்து பொழச்சுக்கலாம் தலை. உயிரே போன பிறகு என்ன செய்ய.. வரிப்பணத்தை வீணாக்கி சிலை வைப்பான், அதை உடைக்க ஒரு கூட்டம் கிளம்பும் கம்பி கூண்டுல சிறைவைப்பான் அவ்ளதானே ஷிட் !

செக்ஸ் Vs பொருளாதாரம்

1.பதிமூன்று வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் மாணவன் அ மாணவி செக்ஸ் மீதான நாட்டத்தால் தன் அறிவில் பாதியை தான் கல்வி பயில செலவழிக்க வேண்டியுள்ளது. பாதி அறிவு செக்ஸை அடையவோ அ அந்த உணர்வுகளை அடக்கவோ செலவழிந்து விடுகிறது

2. அதிர்ஷ்ட வசமாக சுய இன்பம் இத்யாதி மாற்று வழிகளின் உதவியால் காதல் கத்திரிக்காய் என்று டைவர்ட் ஆகாதிருந்தால் அ புத்தி சாலித்தனமாக கணக்கு போட்டு காதலித்தால் பிரச்சினை இல்லை. தெய்வீக காதல் இத்யாதியில் இறங்கிவிட்டால் ஷெட் (திவால்)

3.அட எப்படியோ வேலை கிடைத்துவிட்டது உடனடியாக ஒரு திருமணம் நடந்துவிடுமா ? ஊஹூம் சந்தையில் மாடு பிடித்த கணக்காய் பெண்ணையோ ,பிள்ளையையோ பிடித்து கட்டி வைப்பதற்குள் அவளுக்கு முலைக்காம்பே சுருங்க ஆரம்பித்துவிடும். இவன் இழந்த சக்தி வைத்தியர்களை சுற்றி அலைந்து கொண்டிருப்பான்.

சரி ஒழியட்டும் கதம் கதம் !
அவர்களிடையே உடலுறவு என்பது இயல்பானதாக இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. அவ்வாறன்றி அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால்..

1.அவருக்கு உடலுறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை
2.பார்த்ததுமே எல்லாம் முடிஞ்சி போகுது
3.அவர் மீசை மட்டும் தான் வச்சிருக்கார்

என்றெல்லாம் அந்த பெண் குறை சொல்லி தாய் வீட்டுக்கு வந்துவிட முடியாது. காரணம் தெரிந்ததே..நம் சம்பிரதாயம்,கலாச்சாரம்,பெண்ணின் அடக்கம் கழுதை முட்டை என்று ஆயிரம்.

தன் மனக்குறை இது என்று வெளியில் சொல்ல முடியாத நிலையில் அந்த பெண் அந்த குடும்பத்தில் பிரச்சினைகளை க்ரியேட் செய்ய ஆரம்பித்து விடுகிறாள். சரி அதுலதான் ஒன்னும் கழட்ட முடியலை இதையாவது செய் என்று அவனுக்கு டார்கெட் வைக்கிறாள். (54 இஞ்ச் கலர் டிவி முதல் டபுள் பெட் ரூம் ப்ளாட் வரை.

ஆணின் கதை வேறு. அவனுக்கு அந்த விஷயத்தில் மனைவி சரிப்பட்டு வரவில்லை என்றால் நிறைந்த சபையில் உடைத்து சொல்லி விடுகிறான்.

ஒருவேளை இவனால் அவளை திருப்திப் படுத்த முடியாத நிலை இருந்தால் அதை மட்டும் வாயால் சொல்ல் முடியாது வேறு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட முயல்கிறான்.

இவன் தான் பெரிய ஆண்பிள்ளை சிங்கம் ,மதன காமராஜன் என்ற நினைப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைகிறான். ஏதோ காரணத்தால் தோற்று போய்விட்டால் அவள் முகத்தை மறுநாள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை எப்படி சபையில் வைத்து சொல்வது..

இந்த நிலையில் தான் என் அம்மாவை ம‌திக்கிற‌தில்லே..
க‌ல்யாண‌த்துக்கு போட்ட‌ ந‌கை எடை குறைவா இருக்கு
மெத்தை த‌ர‌லை,க‌ட்டில் த‌ர‌லை எல்லாம் ச‌பையில் வைக்க‌ப்ப‌ட்டு க‌தை காவ‌ல் நிலைய‌த்துக்கோ, குடும்ப‌ கோர்ட்டுக்கோ செல்கிற‌து.
மேற்படி ஆணோ பெண்ணோ வெத்து ஆட்கள் அல்லவே அவர்களில் ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் ஒருவர் டாக்டராக இருக்கலாம் லாயர்,ஆடிட்டர் இத்யாதி வேலைகளில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்.

பாதிபேர் அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது என்று தம்மை தாமே வடிவமைத்து கொண்டு விடுகின்றனர். இந்த நிதானம்/ ஹிப்பாக்ரஸி/கோழைத்தனம் இல்லாதவர்களால் தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இது போன்ற கணவன் மனைவி பொருளாதார விஷயங்களில் பைத்தியம் பிடித்தாற்போல் நடந்து கொள்வார்கள். ஒன்று வடிகட்டின கஞ்சத்தனம் வந்துவிடும். (எதிராளியை பழி வாங்குகிறார்களாம்) அல்லது ஊதாரித்தனமாக செலவழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இங்கே ஒரு தத்துவம்:
மனிதனில் இருப்பது ஒரே சக்தி. அது காம சக்திஅது மேல் நோக்கி போனால் யோக சக்தி. கீழ் நோக்கி வந்தால் காம சக்தி. அது படைப்பின் சக்தி. ஒரு உயிரை படைக்கத்தான் காம சக்தி. தன்னை இழக்கத்தான் (தன் ஈகோ) காமசக்தி , அதில் இழக்க முடியாதவன், படைக்க முடியாதவன் உடைக்க ஆரம்பித்துவிடுகிறான். சட்டத்தை, பொருளாதார அமைப்பை உடைக்கிறான். தூள் பண்ணுகிறான்.

நான் சவாலிட்டு கூறுகிறேன் . எவனொருவனுக்கு செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறதோ அவன் பாதுகாப்பற்று இருப்பதாய் உணர்கிறான். பெரும் பணம் சேர்க்கிறான்.

தன் “பவிசு” தெரியாத அ புரிந்து கொள்ள முடியாத சிறுமிகளை சீரழிக்கிறான். அ ஹோமோவாகிறான் , மனிதன் தான் ஒரு வேலையை திருப்திகரமாக முடித்து விட்டால் மீண்டும் அதில் ஈடுபாடு பிறக்க நாள் பிடிக்கும். அரை குறைகள் தம் அரை குறைத்தனத்தை மறைக்க மீண்டும் மீண்டு ஈடுபட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச சக்தியையும் இழந்துவிடுகின்றன.

எனவே அரசாங்கம் முதற்கண் தம் மக்களின் செக்ஸ் லைஃபை சீர்திருத்த வேண்டும் .

இல்லாவிட்டால் மேற்படி அரை குறைகள் படைக்கும் சக்தியை படைப்பில்

செலவழிக்காது உடைப்பில் செலவழிக்க ஆரம்பித்துவிட்டால் கதை கந்தல் தான். ஒரு கள்ளக்காதல், மனைவி வெட்டிக்கொலைக்கு மட்டுமல்ல சத்யம் ஊழல் முதல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை இதுவும் ஒரு காரணம். இதுவே காரணம்.

கலைஞருக்கு வுமன் தான் எமன் !

கலைஞரின் சிறு பிள்ளைத்தனம்

தமது அரசை மைனாரிட்டி அரசு என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடும்
ஜெயலலிதாவை திருமதி என்றே அழைப்பேன் என்ற கலைஞர் அதற்கு ஆதாரமாக குமுதத்தில் வெளிவந்த ஜெயலலிதாவின் பேட்டி மற்றும் சோபன் பாபுவுடனான படங்களை முரசொலியில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.
காலச்சக்கரம் 60 வருடங்களில் ஒரு சுற்றை முடித்து மீண்டும் மறு சுற்றை ஆரம்பிக்குமாம். அதை போல் மனிதன் 60 வயதை முடித்தான பிறகு மீண்டும் குழந்தையாகிவிடுகிறான். குழந்தையை யாரேனும் கொஞ்சுவர். குழந்தை தனமான முதியவரை ? கலைஞரும் இந்த ஸ்டேஜுக்கு வந்து விட்டார் போலும். ஐந்தி வளையாதது என்பது போல் கலைஞர் தமது அரசியல் வாழ்வில் பெண்களை துச்சமாகவே மதித்து வந்தவர். இந்திரா காந்தி தமிழ‌கத்துக்கு வந்து குடியேறினால் விதவை பென்ஷன் தருவோம் என்று ஆர்ப‌ரித்த கூட்டத்துக்கு தலைவன் அல்லவா ?

அந்த காலத்தில் பி.டி.சரஸ்வதியை நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியும் என்று சொன்னதும் உண்டாம். பிறகு நான் சொன்னது பாவாடை நாடாவை அல்ல கோப்பு நாடாவை என்று ஜகா வாங்கியதும் உண்டாம். எல்லாம் செவி வழி செய்திகள் தான். “இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர் ” என்று கவிதையில் எழுதினால் அது விரசமாகவே இருந்தாலும் ரசனை என்று வாதிடவேணும் வாய்ப்புண்டு. எம்.ஜி.ஆரை மனதில் வைத்து அவரை போன்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவனுக்கு கவிதை எழுத தெரியாத நிலையில் யாரோ ஒருவரின் கவிதையை தன் கவிதையாக காட்டி பெயர் வாங்குவதாகவும், தனக்கு பிள்ளை பிறக்காது என்று வேலைக்காரனை பாத்ரூமில் ஒளித்து வைத்து தன் மனைவியை கூடச்செய்து பிள்ளை பெறுவதாகவும் கதை எழுதி தமது நிறைவேறாத நீசமான ஆசைகளை நிறைவேற்றி கொண்ட குதர்க மனம் கொண்டவர்தானே கலைஞர். ( குறு நாவலின் பெயர் : வான் கோழி)

ஒரு தலைவன் அ தலைவியின் தனிப்பட்டவாழ்க்கையை விமர்சிக்க எந்த நாய்க்கும் அருகதை கிடையாது . அந்த தனிப்பட்ட வாழ்க்கை அந்த தலைவன் அ தலைவியின் பொதுவாழ்வை பாதிக்காத வரை. சசிகலா பற்றி பேசுகிறார்கள். அதை நான் விமர்சிக்க மாட்டேன். ஏன் என்றால் மேற்படி மன்னார்குடி கூட்டம் ஜெயலலிதாவின் பொதுவாழ்வை எப்படியெல்லாம் பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாடறியும்.

சோபன் பாபுவுக்கு ஜெயலலிதா காண்ட்ராக்ட் கொடுத்தாரா ? விதிகளை மீறி ஃபேவர் செய்தாரா அதை பற்றி பேச. சேர்ந்து வாழ்வது என்பது சட்டத்தாலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. சேர்ந்து வாழ்பவர்களை கணவன் மனைவியாக கருதுவதா இல்லையா என்ற பிரச்சினை அவர்களின் வாரிசு கச்சேரிக்கு வந்து பிராது கொடுக்கும்போதோ /பாதிக்கப்பட்ட ஆண் அ பெண் பிராது கொடுக்கும்போதோதான் நீதிமன்றத்தில் எழும்.
சோபன் பாபு அமரராகி விட்டார், ஜெயலலிதா எந்த நிலையிலும் தமது உரிமையை நிலை நாட்ட முன் வரவில்லை. வாரிசு என்று இருப்பதாக பரவலாக பேசப்பட்டாலும் அப்படி யாரும் மீடியா முன்பு வரவில்லை. இந்த நிலையில் திருமதி என்பேன் என்பதும், பழைய குப்பையை கிளறுவதும் வேண்டாத வேலை.

கலைஞர் இர்ரிட்டேட் ஆகிவிட்டார் என்பது தான் இதன் மூலம் உலகத்துக்கு புரிகிறது. கலைஞர் இது போன்ற பேச்சுக்களை பேசுவதும் வாங்கிகட்டிக்கொள்வதும் புதிதொன்றுமல்ல.

மனோரமா, விஜயகுமாரி, இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே இருக்கும்போது கலைஞர் இந்த விவாதத்தை கிளப்பியிருப்பது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போல் இருக்கிறது.

கலைஞரின் ராசி கடக ராசி. கடகராசிக்கு பாதகாதிபதி சுக்கிரன். எனவே தான் பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து கலைஞர் இது போல் ஒன்றை கொடுத்து பத்தை வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

ஓரின சேர்க்கையையே சட்டம் குற்றமல்ல என்று சொல்லும் இந்த காலத்தில் கலைஞர் மீண்டும் பத்தினி தேர்வை நடத்த விரும்புவது அவரது ஆணாதிக்க போக்கையே காட்டுகிறது.

கலைஞரய்யா காலம் மாறிப்போச்சுய்யா ! இன்னமும் அந்த காலத்துலயே இருக்கிங்களே. முரசொலில பேட்டி,படங்களை போட்டு என்னத்தை சாதிச்சுட்டிங்க ?

13 வருச வனவாசத்தை மறந்துட்டிங்களேய்யா ! சேவல்/புறா சீசன் திமுகவுக்கு வராதுன்னு என்ன கியாரண்டி ? மறுபடி ஜெயலலிதா கோலை எடுத்தால் குரங்காடனும் ஆடாதுனு என்ன கியாரண்டி?

ஜெயலலிதாவின் குணங்களில் ஏதேனும் குற்றம் குறையிருந்தால் அதற்கு உம் போன்ற ஆணாதிக்க பேய்களே பொறுப்பு என்று நான் கூறுகிறேன். பெண்ணை தாயா வணங்கினா அவள் தெய்வமா இருந்து குலத்தை காப்பாள். பேயாக்கிராதிங்கய்யா !

உங்க ஜாதகத்துக்கு பெண்ணால தான் தோல்வி/அழிவு எல்லாமே.. மஞ்சத்துண்டு காரரே.. மஞ்சள் முகம்தான் உங்களுக்கு எமன் ..சுருக்கமா சொன்னா வுமன் தான் எமன் . பீ கேர்ஃபுல் !

டீ, சிகரட், ந்யூஸ் பேப்பர்

இப்போது கல்லூரியில் படிக்கும் தலைமுறை தலை எடுத்து குடும்ப பட்ஜெட் போடுங்காலத்தில் அதில் பத்திரிக்கைகளுக்கு இடமே இருக்கப்போவதில்லை. என்பதை கவனத்தில் கொண்டு இந்த பதிவை படியுங்கள்.

டீ, சிகரட், ந்யூஸ் பேப்பர் இந்த மூன்றுக்கும் உள்ள பிணைப்பு தளர்ந்து வருகிறது. இதற்கு காரணம் நாளிதழ் நிர்வாகத்தில் உள்ள அசமஞ்சத்தனம் தான். ரீடர்ஸ் டைஜஸ்டே திவாலாகிவிட்ட நிலையில் இந்த பொடிசுகள் மட்டும் நிலைத்து நிற்கவா போகின்றன ?

அவர்களுக்கு அந்த பயம் இல்லாவிட்டாலும் டீ, சிகரட், ந்யூஸ் பேப்பர் என்ற பிணைப்பு ஃபணால் ஆகிவிடக்கூடாதே என்ற சுய நலத்தில் இந்த பதிவை போட்டிருக்கிறேன்.

உங்களுக்கும் தோன்றும் யோசனைகளையும் மறுமொழியாக இடுங்கள் . ஊதுற சங்கை ஊதி வைப்போம்

1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் நான். விவேகானந்தா கல்வி நிலையம், மணிமேகலை பிரசுரம், அபிசாரிகா (தெலுங்கு இதழ்) ஆகியவற்றிற்கு யோசனைகள் , விளம்பர வாசகங்கள் தந்துள்ளேன். லோக்கலில் இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற விளம்பர இதழும் நடத்தி வருகிறேன். இந்த வகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட சென்னைக்கு செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். சிக்கனம் கருதி பி.எஸ்.என்.எல் மூலம் நெட் கனெக்ஷன் வைத்திருப்பார்கள் .இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்ததை இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.

6.புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !

புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். ஊக சித்திரங்கள் (கொலை ,வெடி வைப்பு இத்யாதியின் போது) உபயோகிக்கலாம் இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.

லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.

தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

அப்ரென்டிஸ், ஃப்ரீ லான்சர், வாசகர் இப்படி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தூள் கிளப்பலாம்.

குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்

எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
12‍/315 ,பிள்ளையார் கோவில் தெரு,
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001

பத்திரிக்காசிரியர்களுக்கு 10 கேள்விகள்

ஏன் என்ற கேள்வி அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று வாத்தியார் பாடி வைத்தார். எனவே கே.பி.சுந்தராம்பாள் மாதிரி என்ன என்ன என்று கச்சா முச்சானு கேள்வி கேட்காம சுருக்கமா (சுருக்குனு) 10 கேள்வி கேட்கிறேன்.

மது,மாது,சூதால் வாழ்வை இழந்தவர்கள் உண்டு. இந்த பாடாவதி பத்திரிக்கைகளால் வாழ்வை இழந்தவன் நான். எனவே இந்த கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. பத்திரிக்காசிரியன் கள் பதில் தருவார்கள் என்று நம்ப நான் ஒன்றும் கேணையன் இல்லை.

என்னைபோல் வேறு எவரும் இவர்களது சதிக்கு பலியாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை இடுகிறேன். எவரேனும் ஆசிரியர் உ.வ.பட்டு லாயர் நோட்டீஸ் அனுப்புனால் ஸ்ரேஷ்டம்.

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் அவர்கள் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா? விளம்பரங்களின் நம்பக தன்மைக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று டிக்ளேர் செய்யும் நீங்கள் இந்த இந்த செய்திகளுக்கும் இதே அறிவிப்பை அப்ளை செய்தால் என்ன ?

2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா? உ.ம். ஆட்டுக்காரன், காய்கறிகாரன், தங்க நாணயம்பரிசு தந்த ஃபைனான்ஸ் நிறுவன‌ங்கள், மலையாள் மாந்திரீகம்

3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன? ப்ளாக்ல வித்து காசாக்கிர்ரிங்களாண்ணா ?

4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?

5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்ஸுக்கும் செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?

6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளை கேட்டால் திருப்பி அனுப்பிருவிங்களாண்ணா ?

7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?

8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்? அண்டர்ஸ்டாண்டிங்கோடு ஆரம்பிச்ச தொடரா ? இல்லே தொடர் நடுவில அண்டர் ஸ்டாண்டிங் வந்துருச்சா ?

9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா? உ.ம் எஸ்.வி சேகர், சுப்பிரமணியம் சாமி

10.உங்கள் வலை தளத்தில் தொடர்புக்கு என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?

பத்திரிக்கைகள் மீது சிரஞ்சீவி கடும் தாக்கு


சிரஞ்சீவி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று கூட தெரியாத நிலையில் ஈ நாடு ,ஆந்திர ஜோதி பத்திரிக்கைகள் அவரை தலை மேல் வைத்து கொண்டாடின. இதோ புலி அதோ புலி என்று (அச்சு அசலாய் ரஜினி விசயத்தில் தமிழ் நாட்டு பத்திரிக்கைகள் போலவே) பாவம் சிரஞ்சீவி இவர்கள் விட்ட டகுலு நிஜம் தான் என்று நம்பி அரசியலில் குதித்தார். கொல்ட்டிகள் என்று தமிழர்கள் கூறும் தெலுங்கு மக்கள் ” நீ சினிமால வா பாத்து தொலைக்கிறோம் ,அரசியல் எல்லாம் வேணாம் கண்ணு” என்று கழட்டி விட்டார்கள். 10 கோடி மக்கள் கொண்ட ஆந்திரமானிலத்தில் சிரஞ்சீவியால் 7 லட்சம் வாக்குகளையே பெற முடிந்தது.

பஸ் ஸ்டாண்டில் புதிதாய் ஒரு பஸ் வந்ததும் எல்லோரும் நம்ம ஊரு பஸ்ஸுதான் என்று பரபரப்பார்களே அது போல் பெருந்தலைவர்களில் இருந்து, குட்டித்தலைவர்கள் வரை சிரஞ்சீவி கட்சிக்கு தாவினார்கள். ஆனால் சிரஞ்சீவியை சுற்றி ஒரு இரும்புத்திரை இருந்தது. அவரது மைத்துனர் அல்லு அரவிந்த்த்

டிக்கெட் கேட்டவர்களிடம் பண மூட்டையை பெற்றுக்கொண்டுதான் பி ஃபார்மையே வழங்கினார். இதில் தேர்தலுக்கு முன்பே சிரஞ்சீவியின் கட்சி கூடாரம் காலியாக துவங்கியது. பிட் படம் பார்க்க போனவர்கள் பிட்டை போடட்டும் பார்க்கலாம் என்று காத்திருப்பது போல் காத்திருந்தனர். பாவம் பிட்டு படம் கூட அறுவைதான் என்று மக்கள் தீர்ப்பு தந்துவிட்டதும். அவரவர்கள் இடத்தை காலி செய்ய ஆரம்பித்தார்கள்.

இன்னிலையில் ஈனாடு பத்திரிக்கை ” சிரஞ்சீவி கட்சி கொடி பிடுங்கப்படுமா?” என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டது . ஆந்திர ஜோதியும் ஏறக்குறைய இதே போன்ற செய்தியை வெளியிட்டது.

சிரஞ்சீவி தேர்தலுக்கு முன் முதல்வர் கனவில் இருந்தவர். திடீர் என்று எதிர்கட்சி அரசியலில் தாளிக்க தெரியாது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கதையாய் முதல்வருக்கு அவ்வப்போது ஜால்ரா போடுவதும், அவ்வப்போது நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழுவு என்பதாய் சீன் போட்டார்.

தமிழக‌த்தில் பத்திரிக்கைகளின் கதை எப்படியோ பதிவன்பர்கள் தான் கூற வேண்டும். எனக்கு தெரிந்தவரை தமிழ் பத்திரிக்கைகள் வைசிய குணம் (வேசி அல்ல) கொண்டவை. வியாபாரம் தான் முக்கியம். ஆனால் தெலுங்கு பத்திரிக்கை உலகம் அப்படியல்ல.

ஈனாடு வந்த புதிதில் ஆன ஆட்டமெல்லாம் போட்டும் கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்ந்துவிட்டது. பழைய பத்திரிக்கைகள் ஃபணால். என்.டி.ஆர் வந்தார். ஜாதி அபிமானத்திலும் , தமது காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் காரணமாகவும் ஈனாடு அதிபர் ராமோஜிராவ் என்.டி.ஆரை தூக்கிப்பிடித்தார். என்.டி.ஆர் கவர்ச்சியும் ஈனாடுவுக்கு உதவியது. 1989 தேர்தல்களின் போது உதயம் என்ற பத்திரிக்கை வந்தது. தாசரி நாராயணராவ் ஆசிரியர். பப்ளிஷர் சுப்புராமிரெட்டி . ரெட்டி எரி சாராய தொழில் அதிபர். உதயத்தை ஒழித்துகட்ட ஈனாடு மது எதிர்ப்பு ஸ்டாண்ட் எடுத்தது. உதயம் ஒழிந்து போனது . 1994 தேர்தல்களில் என்.டி.ஆர் மதுவிலக்கை அமல் செய்வேன் என்று அறிவித்தார். லிக்கர் லாபி ராமோஜியை அணுகியது . என்.டி.ஆருக்கு அழுத்தம் தரப்பட்டது. என்.டி.ஆர் அரசியலுக்கு வந்து விட்டாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த காலத்து மனிதர். அவர் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். எனவே லிக்கர் லாபி ராமோஜிராவை சந்திரபாபு நோக்கி உந்தி தள்ளியது. லட்சுமி பார்வதியை காரணமாய் காட்டி சந்திரபாபு என்.டி.ஆரை முதுகில் குத்தினார் . ஆட்சி,கட்சி,சின்னம் யாவும் முது கிழவரான என்.டி.ஆர் கையில் இருந்து பறிக்கப்பட்டது.

இதற்கு முன் ஒரு சிறு தகவல் (ராமோஜிராவின் பெரிய மனிதத்தனம் எப்படிப்பட்டது என்று காட்ட)
1989 தேர்தலின் போது பிரச்சாரத்துக்கு தேவையான போஸ்டர் இத்யாதியை ராமோஜிராவ் அச்சடித்து கட்சி அலுவலக‌த்துக்கு அனுப்பினாராம். ஒரே வாரம் தான். எட்டாவது நாள் பில் வந்ததாம். பணம் கொடுத்தால் அச்சடித்து தர ஆந்திரத்தில் அச்சகமா இல்லை. இதுதான் ராமோஜிராவ் மென்டாலிட்டி. இவரது மார்க தர்சி சிட் ஃபண்டில் ஏராளமான வரி ஏய்ப்பு, சட்ட மீறல்கள் இவற்றை காங்கிரஸ் எம்.பி.உண்டவல்லி அருண்குமார் பொது நல பெட்டிஷன் மூலம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். இதையடுத்து ஈனாடுவுக்கு காங்கிரஸ் என்றாலே நவத்வாரங்களும் எரிய ஆரம்பித்துவிட்டது.

ஆந்திர ஜோதி கதை ஆந்திர ஜோதியின் பழைய முதலாளிகள் அதை இழுத்து மூடிவிட சாதாரண ரிப்போர்ட்டராக இருந்த ராதாகிருஷ்ணா அதை தாம் நடத்த விரும்புவதாக முன் வந்தார். அவருக்கு சந்திரபாபு பண உதவி செய்ததாகவும், ராதாகிருஷ்ணா சந்திரபாபுவின் பினாமி என்றும் கூட கிசு கிசுக்கள் உண்டு.

இந்த 2009 தேர்தல் சமயத்தில் சந்திரபாபுவின் தெ.தேசம் கட்சி ரொம்பவே சோனியாக இருந்தது. மறுபுறம் பார்த்தால் ஆளுங்கட்சியுடனான இந்த பத்திரிக்கைகளின் மோதல் குழாயடி சண்டையாகவே மாறிவிட்டது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த இந்த பத்திரிக்கைகளுக்கு சிரஞ்சீவியின் அரசியல் பிரவேஸம் புதிய ஆசைகளை ஏற்படுத்தியது. தற்சமயத்துக்கு சந்திரபாபுவை ஓரங்கட்டி சிரஞ்சீவியை தூக்கி பிடித்தனர். தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மாறியது. பாபு மகா கூட்டணி அமைத்தார். சிரஞ்சீவி கட்சியின் பலம் (?) என்ன என்பது ஓரளவு தெரிய ஆரம்பித்துவிட்டது.

சிரஞ்சீவி,பாபுவை இணைக்க ராமோஜிராவே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தார்.வேலைக்காகவில்லை. கடைசியில் பார்த்தால் சிரஞ்சீவி வரவு ஆளுங்கட்சிக்கே வெற்றியாக முடிந்தது. இந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஈனாடு, ஆந்திர ஜோதியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தான் சிரஞ்சீவி கட்சியில் அவர் தாவுகிறார், இவர் தாவுகிறார் என்று ஊக அடிப்படையில் செய்தி வெளியிட துவங்கி விட்டன. தனக்கு வந்தால் தான் த்லைவலி தெரியும் என்பது போல் சிரஞ்சீவி பத்திரிக்கைகளை சீறித்தள்ளிவிட்டார்.

பாவம் சிரஞ்சீவி.. முதல்வர் கனவுகளை கைவிட்டு இன்னொரு விஜயகாந்தாக காலம் தள்ள வேண்டியதாகிவிட்டது