லவ் மூட் ஸ்டார்ட் அவ்வ்வ்வ்வ்வ்வ் : 4

அண்ணே வணக்கம்ணே!
‘லவ் மூட் ஸ்டார்ட்..அவ்வ்” தொடரோட முக்கிய நோக்கம் ஆரையும் காதலிக்க மோட்டிவேட் பண்றதோ – காதலிக்காதிங்கன்னு குறுக்க விழுந்து தடுக்கறதோ இல்லை. ஆரும் ஆரோட அட்வைசையும் கேட்டு மார்ரதுமில்லை.ஒரு இழவுமில்லை.
பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறதுன்ன ஏசு மாதிரி -ஏசு மீண்டும் வருவார்ங்கற கிறிஸ்தவன் மாதிரி நாம பினாத்தியிருக்கிற பினாத்தலுக்கு குறைஞ்ச பட்சம் ஒரு ஜில்லாவே மாறியிருக்கனும்.மாறலை. மாறாது.
ஆருக்கு நான் கடன் பட்டிருக்கேனோ அவிக மட்டும் வேணம்னா மாறலாம். மாறினா கடன் தீரும்.
இந்த தொடரோட நோக்கம் காதல் நாடகத்துல எடுப்பு,தொடுப்பு,தொகையறா,பல்லவி அனுபல்லவி,சரணம்னு ஒவ்வொன்னையும் ஜாதகம்,கிரகம் எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும்னு சொல்றதுதேன். காதல்னே இல்லை, கண்ணாலம் , நட்பு, பார்ட்னர் ஷிப் இப்படி ஒரு மன்சன் இன்னொரு மன்சனோட இன்டராக்ட் ஆற எந்த சமாசாரத்துக்கும் அடிப்படை அந்த இரண்டு மனிதர்களோட கேரக்டர். அதை நிர்ணயிக்கிறது நட்சத்திரம்,ராசி,லக்னம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் இருக்கு.
ஆயிரத்தையும் அனலைஸ் பண்ண பிறவுதான் இன்டராக்சனுன்னா வேலைக்காகாது.அதே சமயம் மொட்டைத்தாத்தன் குட்டையில விழுந்தான்னு விழறதும் வேலைக்காகாது. சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங்.
ஒரு பையன் ஒரு பெண்ணையோ -ஒரு பெண் ஒரு ஆணையோ மணந்து தான் ஆகனும். ஆனால் அதுக்கு காதலிச்சுத்தான் ஆகனும்னு கட்டாயமில்லை. அதே சமயம் கண்ணாலத்துக்கு அப்புறமாவாச்சும் கொஞ்சம் போல கூட காதலிக்க முடியலின்னா வாழ்க்கையே வெத்தா போயிரும். அந்த வெற்றிடத்தை நிரப்ப “எது ..எது”க்கோ அலைய வேண்டி வந்துரும்.
நம்ம தொடர்பதிவு காதலிக்காமயே வாழ்ந்துட்ட நெஞ்சங்கள்ள அவிகளாலயும் முடியும்ங்கற நம்பிக்கைய கொஞ்சமே கொஞ்சமாவாச்சும் விதைக்கனும். அவிக எங்கன கோட்டை விட்டாய்ங்கன்னு புரிஞ்சுக்க வைக்கனும். அவிக ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் செய்துக்கிடனும். காதல் முயற்சியில சொதப்பினாலும் சரி .. காதல்ல சொதப்பலுக்குத்தான் மஜா சாஸ்தி.
ஓகே ஓகே .. லவ்ல சக்ஸஸ் ஆகனும்னா மொதல்ல நம்ம தலை எழுத்துல காதல் இருக்கான்னு தெரிஞ்சுக்கனும்.
நம்ம கேரக்டரை தெரிஞ்சுக்கனும் – பார்ட்னரோட கேரக்டரையும் தெரிஞ்சுக்கனும். ஒன்னுக்கொன்னு ஒத்துப்போகுமான்னு பார்க்கனும்.
கடந்த 2 நாட்களா நட்சத்திரங்களை வச்சு சில குண நலனை எல்லாம் சொன்னேன். இன்னைக்கு ராசி அதிபதியை வச்சு சில பலன் களை பார்ப்போம்.
மேஷம்,விருச்சிகம்;
இந்த ரெண்டு ராசிக்கும் செவ் அதிபதி. செவ் ஆரு? யுத்தகாரகன். இவிக ஆரு ? பட்டாளத்துக்காரவுக மாதிரி. விறைப்பு அதிகம் ( அய்யய்யோ .. நான் குணத்தையும் பாடி லாங்குவேஜையும் சொன்னேங்க). நெளிவு ,சுளிவு,ஒளிவு ,மறைவு ,நாணல் ,கோணல் இதையெல்லாம் பெருசா எதிர்பார்க்க முடியாது.
தீப்பந்தத்தை தலைகீழா பிடிச்சாலும் ஜுவாலை எப்படி மேல் நோக்கியோ பாயுதோ அப்படி சதா சர்வ காலம் லுக் அப் எய்ம் ஹை ங்கற கான்செப்ட்ல இருப்பாய்ங்க. இதுல பொருளாதார ரீதியா பின் தங்கிய குடும்பம்னா இது இன்னம் ப்ரைட்டா இருக்கும். சபரி மலைக்கு மாலை போட்ட கணக்கா “உருப்படவே” பார்ப்பாய்ங்க.
ஆனால் டீன் ஏஜ்ல ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா , சக்தியை சானலைஸ் பண்ற டெக்னிக் புரிபடாத காரணத்தால இவிக கமிட்மென்ட் காதலுக்கு டைவர்ட் ஆயிரலாம்.
ரிஷப,துலா ராசிக்காரர்களை போல ரசனையோ – சுவாரசியமான பேச்சு இத்யாதில்லாம் மூச் . ஒரு கோட்டைய பிடிக்க ஒரு தளபதி எப்படி ப்ளான் பண்ணுவானோ அப்படித்தான் இவிக அப்ரோச்சும் இருக்கும். (இந்த ராசிகளை சேர்ந்த பெண்கள் கோட்டைய காக்கும் தளபதிகளின் மனோ நிலையில இருப்பாய்ங்க -செவ் ஆண் கிரகம் என்பதால் இந்த ராசிகளை சேர்ந்த பெண்களில் ஒரு வித மேலிஷ்னெஸ் – முரட்டுத்தன்மை இருக்கலாம்)
அப்ரோச் மேட்டர்ல மேஷ ராசிக்காரவுகளாச்சும் கொஞ்சம் பெட்டர். எவனாச்சும் போட்டி இருந்தாதான் முந்துவாய்ங்க. விருச்சிக ராசில்லாம் டைரக்ட் அட்டாக் தான். பழம் விழுந்தா சரி. இல்லின்னா டெபரஸ் ஆயிருவாய்ங்க.

ரிஷப துலா ராசிகள்:
இந்த ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிர காரகங்கள்னா தெரியும்ல. அழகு ,அலங்காரம்,இசை சங்கீதம் ,நடனம் நாட்டியம் ,கலைகள்ள கொஞ்சம் ஆர்வம் , பயிற்சி , தேர்ச்சி இருக்கலாம். இவர் பெண் கிரகம்ங்கறதால இந்த ராசி ஆண்களில் ஒரு வித மெ(பெ)ன்மை இருக்கலாம்.
இதனால சம வயது பெண்கள் உட்பட பெண்கள் இவிகளை “ஆபத்தில்லாதவர்களாக” டிசைட் பண்ணி ஜோவியலா பழக சான்ஸ் இருக்கு. கொஞ்சம் ஹார்டா இருக்கிற பெண்கள் இவிகளை விரும்பவும் செய்யலாம்.
இதுல இவிகளை உண்மையிலயே விரும்பறவுக ஆரு – ஹார்ம்லெஸ்னு உப்புக்கு சப்பாவா சேர்த்துக்கிட்டவுக ஆருன்னு ஸ்மெல் பண்றது சிரமம் தான்.
இவிக ரோசையோ ,லெட்டரையோ நீட்டும் போது பலர் ” நீயுமா புரூட்டஸ்” ன்னுருவாய்ங்க. இவிகளுக்கு இவிகளை விரும்பறவுக ஆருன்னு கேல்க்குலேட் பண்ற கப்பாசிட்டி இருந்தா பிரச்சினையே இல்லை.
மிதுனம் ,கன்னி:
இவிகளுக்கு அதிபதி புதன். புதன்னாலே ஜங்க்சன் பாய்ண்ட். கனெக்டிங் பாய்ண்ட். வர்ஜியா வர்ஜியமில்லாத தொடர்புகள் (ஹ்யூமன் ரிலேஷன்ஸ் -பப்ளிக் ரிலேஷன்னு கூட சொல்லலாம்) இவிகளுக்கு ஏற்படும். அந்த தொடர்புகளுக்குள் காதல் தொடர்புகள் ஏற்படலாமே தவிர அந்த தொடர்புகளோடு இவிகளுக்கு காதல் தொடர்பு ஏற்படறது சிரமம் தான். அப்படியே அது புஷ்பிச்சிருந்தாலும் ஒன்னு இவிக கோட்டை விடுவாய்ங்க.அல்லது எதிராளி என்ன இது இவன் எல்லா கேர்ள்ஸ் கூடவும் ஒரே போல மூவ் பண்றான்னு ஜெர்க் ஆகி டைவர்ட் ஆயிரலாம்.
இவிக ஆரை ப்ரப்போஸ் பண்ணலாம்னு நினைக்கிறாய்ங்களோ அவிகளுக்கு தூது போக சொல்லி ஒரு தொடர்பு கேட்கிற வாய்ப்பும் இருக்கு. அதே சமயம் இவிக ஜஸ்ட் லைக் தட் டீல் பண்ண பார்ட்டி இவிகளை ப்ரப்போஸ் பண்ணலாம்.
கடகம்:
இவிகளுக்கு அதிபதி சந்திரன். ஆரெல்லாம் யதார்த்த வாழ்வில் சவால்களும் சமாளிப்புகளுமா சஃபர் ஆகிறாய்ங்களோ , பரபரப்பா -சிடு சிடுப்பா-கடு கடுப்பா இருக்காய்ங்களோ அவிகளுக்கெல்லாம் இவிக மேல ஒரு இது வரும். அந்த இது லவ்ஸான்னு கன்ஃபார்மா சொல்ல முடியாது.
வெயில்ல அல்லாடறவனுக்கு நிழல் தர்ர மரத்து மேல காதல் வருமா? வரலாம். அல்லது கொஞ்சம் ரெஃப்ரஷ் ஆனதும் கழண்டுக்கலாம்.
ஆரெல்லாம் பெருசா வரனும்னு ஸ்ட்ரெய்ன் பண்றானோ அவனை எல்லாம் ஊக்கப்படுத்த விரும்புவாய்ங்க.
யாருடைய வாழ்க்கையில -யாருடையை பிஹேவியர்ல கொஞ்சம் போல எதிர்பாராத்தன்மை , நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் இவிக மனசு அவிக மேல கான்சன்ட்ரேட்டாயிரும்.
உலகமே உன்னை எதிர்த்தாலும் நான் இருக்கேண்டான்னு சொல்லுவாய்ங்க.ஆனால் யதார்த்தத்தோட உஷ்ண நிலை கொஞ்சம் கூடினாலும் கழண்டுக்குவாய்ங்க. அப்பாறம் கில்ட்டியில ஒர்ரி பண்ணிக்குவாய்ங்க.
சிம்மம்:
இதுக்கு அதிபதி சூரியன். ……… தூங்கி வழியற கேரக்டர்களுக்கு – இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்ல தவிக்கிற சனத்துக்கு – இருட்டுல வாழற சனத்துக்கு இவிக மேல ஒரு ஈர்ப்பு வரும். இருட்டுன்னா எல்லா வகை இருட்டும். வறுமை,தனிமை,நிராகரிப்பு, சட்ட விரோத வாழ்க்கை சமூகவிரோத செயல்பாடுகள்,கள்ள உறவு எட்செட் ரா எட்செட் ரா..
தாய் சொல்லை தட்டாதே ,அன்னை ஓர் ஆலயம் திரைக்கதைகளுக்கெல்லாம் இவிக தான் இன்ஸ்பிரேஷனா இருந்திருப்பாய்ங்க. அம்மா கோண்டுன்னு கூட சொல்லலாம். பலான மேட்டருக்கு தாவவே பார்ப்பாய்ங்க. காரியம் முடியறவரை ஓவர் கான்ஃபிடன்டா பிரச்சினையே இல்லை பார்த்துக்கலாம்பாய்ங்க.
பிரச்சினைன்னு வரும்போது எங்கப்பனை பத்தி கவலை இல்லை எங்கம்மா கன்வின்ஸ் ஆகனும்..அதான் முக்கியம்னுருவாய்ங்க.
பொதுவாவே உச்சம் – நீசம்னு வித்யாசம் பார்க்காத பார்ட்டிங்க.லவ் மேட்டர்ல பார்க்கவா போறாய்ங்க. அதே சமயம் தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளவுகன்னா கொஞ்சம் இளப்பமா பார்ப்பாய்ங்க.
மத்ததை நாளைக்கு தொடரலாம். ராசி வைஸ் கேரக்டரை தெரிஞ்சுக்க இங்கன அழுத்துங்க.

லவ் மூட் ஸ்டார்ட் ..அவ்வ்வ்வ் : 3

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு லவ்ஸுக்கு கேரக்டர் தெரிஞ்சிருக்கிறது முக்கியம் ஜோதிடத்துல உங்க +உங்க லவ்வரோட கேரக்டரை நிர்ணயிக்கிறதுல நட்சத்திரம் முக்கிய பங்கு வகிக்கும். நட்சத்திராதிபதிய பொருத்து நட்சத்திரங்களை 9 க்ரூப்பா பிரிக்கலாம்னு சொல்லி 3 க்ரூப்புக்கான பொதுகுணங்களை சொன்னேன்.
இன்னைக்கு மத்த 6 குரூப்பையும் விஜாரிச்சுரலாம். 2013 குரு பெயர்ச்சி பலன் பதிவை மீள் பதிவா போட்டிருக்கேன். அப்பம் படிச்சு மறந்தவுக -இதுவரை படிக்காதவுக இப்பம் படிக்கலாம். உடுங்க ஜூட்டு
4.ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்:
மனம் போன போக்கிலே கால் போகலாமான்னெல்லாம் கேள்வி கேட்க மாட்டாய்ங்க. ரிட்டர்ன் டிக்கட் கூட புக் பண்ணாம கிளம்பிக்கிட்டே இருப்பாய்ங்க. ஸ்தூலமான விஷயங்களுக்கு பெருசா முக்கியத்துவம் தரமாட்டாய்ங்க (சைஸு ,கலர் ,சில்லறை,பேக் கிரவுண்டு) மாசத்துல 14 நாள் செமை லவ் மூட்ல இருப்பாய்ங்க. அடுத்த 14 நாள் கடுப்படிப்பாய்ங்க.மதர்லி ஃபிசிக், மதர்லி டச் உள்ள குட்டிகள் மேல ஜொள்ளு விடுவாய்ங்க
5.மிருக சீர்ஷம்,சித்திரை,அவிட்டம்:
ட்ரெய்ன் பைப் பிடிச்சு மாடிக்கு வந்து லெட்டர் கொடுக்கிறது, காம்பவுண்ட் ஏறி குதிச்சு வந்து பார்க்கிறது மாதிரி அட்வென்சர்லாம் செய்வாய்ங்க. படக்கு படக்குன்னு கோவிச்சுக்குவாய்ங்க. ப்ளேட்ல பேரை அறுத்துக்கறதை -கைய சுட்டுக்கறது மாதிரி பை.தனம்லாம் கூட செய்யலாம். மேட்டர் ஸ்டேஷன் வரைக்கும் கூட போகலாம். சாக்கிரதை. லவ்வரோட கச்சா முச்சான்னு சுத்தி சுத்தி வேளைக்கு சோத்தை திங்காம , ஜங்க் ஃபுட்,டின் ஃபுட்னு பசிய கொல்றதால உஷ்ண கோளாறுகள் வரலாம் ஜாண்டிஸ் வரலாம், ரத்த சோகை வரலாம்.
6.திருவாதிரை, ஸ்வாதி,சதயம்:
லவ்வருக்கு ஸ்வீட் ஷாக் கொடுக்கிறதுன்னா ரெம்ப இஷ்டப்படுவாய்ங்க. திடீர்னு லட்ச ரூவா பைக்ல வருவாய்ங்க, திடீர்னு ஸ்டார்ஹோட்டல்ல பார்ட்டி கொடுப்பாய்ங்க. சினிமா,டாஸ்மாக் ,ஏற்றுமதி,இறக்குமதி ,ஷேர் மார்க்கெட் பின்னணி இருக்கலாம், ரகசியத்துக்கு ரெம்ப முக்கியத்துவம் தருவாய்ங்க.அதுக்காவ படுக்கையில பாஞ்சுரமாட்டாய்ங்க. ஜஸ்ட் கட்டிப்புடி வைத்தியம்னா ரெம்ப பிடிக்கும். வெஸ்டர்ன் கல்ச்சர் பிடிக்கும். புதுமைக்கு வெல்கம் சொல்வாய்ங்க. பப் கல்ச்சர் டெவலப் ஆனதே இவிகளாலத்தான். போதை மேலயும் விருப்பம் இருக்கலாம்.
7.புனர்வசு,விசாகம்,பூரட்டாதி:
ரெம்ப ஆர்த்தடாக்ஸா இருப்பாய்ங்க. காதலியும் அதே போல இருக்கனும்னு ஆசைப்படுவாய்ங்க. சாதி பார்த்து ,பின்னணி பார்த்து , லவ்ஸு கண்ணாலத்துல முடியுமான்னு ரோசிச்சு லவ் பண்ணுவாய்ங்க. வங்கி,அரசியல்,ஜுடிஷியல் பின்னணி இருக்கலாம். சிக்கன வாதிகளா இருக்கலாம். சேமிப்புக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க. எதிர்ப்பு கிளம்பினா பக்காவா ப்ளான் பண்ணி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி,அதையும் ரகசியமா வச்சு எதிர்ப்பு உச்சத்துக்கு போகும்போது ரெஜிஸ்திரார் சர்ட்டிஃபிகேட்டை காட்டி பெத்தவுகளுக்கு குடைச்சல் கொடுப்பாய்ங்க.
8.பூசம், அனுஷம்,உத்திரட்டாதி:
தம்மை விட பல படிகள் தாழ்ந்து இருக்கும் பெண்ணை கூட லவ்ஸ்பண்ணுவாய்ங்க. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு லவ்வலாம். காதலி யூனிஃபார்ம் போடற தொழில்/உத்யோகம்/வியாபாரத்துல இருக்கலாம். எட்டுவருசம் லவ்ஸ் பண்ணி தீர்ப்பாட்டா கண்ணாலம் கட்டலாம். அட லவ்வை ப்ரப்போஸ் பண்றதுல கூட ரெம்ப சூதானமா இருப்பாய்ங்கன்னா பார்த்துக்கங்க. இவிக மொதல் சந்திப்பு வீட்டின் பேக் யார்டில் / தொழிற்பேட்டை/ துர் நாற்றம் விசும் இடங்களில் நடக்கவும் சான்ஸ் இருக்கு.
9.ஆயில்யம்,கேட்டை,ரேவதி:
லவ்ஸுக்கு ஹெல்ப் பண்ண சந்தானம் மாதிரி கேரக்டரை தேடுவாய்ங்க. நேரடியா ப்ரப்போஸ் பண்ணாம சகட்டுமேனிக்கு ஹிட் கொடுத்து சுத்தி வளைப்பாய்ங்க. ஒரு கார்ப்போரேட் கம்பெனி புது ப்ராஜக்டை லாஞ்ச் பண்றதுக்கு எப்படி எல்லா கோணத்துலயும் ரோசிப்பாய்ங்களோ அந்த ரேஞ்சுல லவ்வரை ச்சூஸ் பண்றதுலயும் ப்ரப்போஸ் பண்றலயும் ரோசிச்சு ரோசிச்சு கடுப்பேத்துவாய்ங்க. ஓவராலா ஒரு வித வியாபார கண்ணோட்டம் இருக்கும்.

2013 குரு பெயர்ச்சி பலன் ( மீள்பதிவு)

1.மேஷம்:
உங்களுக்கு குரு 9/12 க்கு அதிபதி.மிதுனம் 3 ஆமிடம். பொதுவிதிப்படியும் இது நல்லதில்லை. சிறப்பு விதிகளின் படி பார்த்தாலும் 9 க்கு அதிபதி 3 க்கு வர்ரது நல்லதில்லை. இதனால த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம்
இத்யாதி வகையறாக்களில் அல்லல் அலைச்சல் கியாரண்டி. முழங்கால்ல அடிபடலாம்.தூரபிரயாணம் ப்ளான் பண்ணும் போது பனி,குளிர்,மழைல்லாம் பார்த்து ப்ளான் பண்ணிக்கங்க. காசு பணம் லக்கேஜு எல்லாம் சாக்கிரதை. முதலீடு சேமிப்புகள் மேட்டர்ல வட்டி,லாபத்தை விட சேஃப்டிக்கு முதலிடம் கொடுங்க.

இளைய சகோதரம் பாதிக்கப்படும். அவிகளால செலவு ஏற்படலாம். சிட்டிக்குள்ளாறயே தேவையில்லாம நிறைய அல்லாட வேண்டியிருக்கும். காது தொடர்பான பிரச்சினையும் வரலாம். தங்கம்,ரொக்கம் ஹேண்டில் பண்ணும் போது பீ கேர்ஃபுல். சொல்வாக்கு -செல்வாக்குல்லாம் தேசலாயிரும். பூணூல் போட்டவுக கிட்ட சாஸ்தி வச்சுக்காதிங்க.

குரு பார்வை :
குரு தான் பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார்ங்கறது விதி. குரு 7-9-11 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால காதலி/ மனைவி ,அப்பா/மாமனார்/மேலதிகாரி/ஊர் பெரிய மனிதர்/வங்கி வகையில ஒரு ரிலீஃப் கிடைக்கலாம். மூத்த சகோதரத்துக்கு நல்லது. அவிகளால ஒரு நன்மைய எதிர்ப்பார்க்கலாம்
.
பரிகாரம்:
முதலீடு -சேமிப்பு தொடர்பான டாக்குமென்ட்ஸ் ( வங்கிபாஸ்புக் – எல்.ஐ.சி பாண்டு வகையறா) அடங்கிய ஃபைலை அடிக்கடி இடம் மாத்திக்கிட்டே இருங்க. ஒரு சான்ட் பாக்ஸ் வாங்கிக்கிட்டு சதா பஞ்சாட்சரிய ஒலிக்க விடுங்க.

2.ரிஷபம்:
உங்களுக்கு குரு 8/11 க்கு அதிபதி.மிதுனம் 2 ஆமிடம். பணம் பிக் பாக்கெட் போகலாம், கொடுத்து ஏமாறலாம் (பூணூல் போட்டவுகளுக்கு பைசா கொடுக்காதிங்க) , வாக்கு தவற வேண்டி வரலாம் (மேற்படி இனத்தாருக்கு வாக்கு தரவேண்டாம். ,குடும்பத்துலயும் இழவு வீடு கணக்கா ஒரு வித அமைதி வந்துரும். பிரிவு கூட ஏற்படலாம். கண் பார்வை பாதிக்கப்படலாம். கண் அருகே அடி படலாம். பேச்சை குறைங்க.
ஜாய்ண்டு,ஷ்யூரிட்டி பாவத்தே வேணாம். ஊர்பஞ்சாயத்துக்கு போகாதிங்க. நடுத்தர உசரம் – நல்ல நிறம் உடைய ஈஸ்வரன் பெயர் கொண்ட நபர் உதவுவார். மூத்த சகோதரத்துக்கு நன்மை. அவிகளால உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்.

குரு பார்வை :
குரு தான் பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார்ங்கறது விதி. குரு 6-8-10 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால கடன் அதிகரிக்கும், எதிரிகள் தொல்லை சாஸ்தியாகும். நோய் தொல்லை உண்டாகும்.(வயிறு இதயம்) . வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா. செய்ற தொழில் உத்யோகம் வியாபாரத்துல ஐயோ பாவம் பார்க்காதிங்க. பார்த்தா தீர்ந்திங்க.

பரிகாரம்:
வியாழன் அல்லது புனர்வசு/விசாகம்/பூரட்டாதி நட்சத்திரங்களில் மவுன விரதம் +உண்ணாவிரதம் இருங்க( இயற்கை வைத்திய முறைப்படி – ஆஃப்டர் கன்சல்ட்டிங் யுவர் ஃபேமிலி டாக்டர்)

3.மிதுனம்:
உங்களுக்கு குரு 7/10 க்கு அதிபதி. இவர் ராசியிலேயே வர்ராரு. சாதாரணமா ஜன்ம குரு வந்தா சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ், பொருளாதார நெருக்கடி ,வீண்பழி எல்லாம் ஏற்படும். முகக்களை குறையும். வயிறு ட்ரபுள் கொடுக்கும் (வாயு)
இவரு 7 க்கு அதிபதிங்கறதால மனைவி/காதலி , 10 க்கு அதிபதிங்கறதால செய்தொழில் வியாபாரம் உத்யோகம் வகையறா காரணமா மொத பாரால சொன்ன மேட்டர்லாம் நடக்கும். சாக்கிரதை. சிக்கனம் தேவை இக்கணம். ஒதகாத மேட்டர்ல எல்லாம் ரெம்ப ரோசிக்காதிங்க. அடுத்தவுக மேட்டர்ல மூக்கை நுழைக்காதிங்க. முக்கியமா கேட்காதவனுக்கெல்லாம் அட்வைஸ் தராதிங்க.
சாப்பிடத்துமே மூடு கிளம்பும். கு.ப 2மணி நேரம் இடை வெளி இருக்கட்டும்.பலான மேட்டர்லாம் மாசத்துக்கு ரெண்டு தபா தான்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. இதை மனசுல வச்சு கொஞ்சமாச்சு அடக்கி வாசிங்க.
பார்வை:
ஜன்மத்துல உள்ள குரு 5-7-9 பாவங்களை பார்ப்பாரு. மனைவி மேட்டர்ல அந்தளவுக்கு பிரகாசமா இல்லாட்டாலும் வாரிசு -பெயர் புகழ், அப்பா,அப்பா வழி உறவு விஷயங்கள்ள இந்த குரு நன்மைய தர வாய்ப்பிருக்கு.
பரிகாரம்:
மஞ்சள் நிற ஆடை அணிகலன் களை அதிகம் உபயோகிக்கவும். தினசரி காலையில அரை மணியாச்சும் பிராமணர் கணக்கா மஞ்ச வேட்டி /துண்டு போட்டு சிவ பூஜை அல்லது ஆரேனும் குருவுக்கு பூஜை செய்ங்க. புராணங்களை புரட்டுங்க. முக்கியமா சிவ புராணம்.

4.கடகம்:
உங்களுக்கு மிதுனம் விரயஸ்தானம். இங்கன குரு வர்ரதால சுப செலவுகள் சாஸ்தியாகும். (அய்யருக்கு தட்சிணை கொடுப்பிங்க) ஞா மறதி சாஸ்தியாகும். தூக்கம்,சாப்பாடு,செக்ஸ் குறையும்.
குரு உங்களுக்கு 6-9 பாவாதிபதி. இவர் 6 க்கதிபதியா 12ல மறையறது நல்லது தான். இதனால கடன் தீரும்,விரோதிகள் ஓடி ஒளிவாய்ங்க. நோய் வெளிப்பட்டு குணமாகும்.
ரெம்ப குதிக்காதிங்க. குருவுக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால சொத்து எதையாவது விற்க வேண்டி வரலாம். முதலீட்டை கூட துடைக்க வேண்டி வரலாம். ஃபிக்சட் டிப்பாசிட் எதையாவது ப்ரேக் பண்ணி எடுக்க வேண்டி வரலாம். தூர தேச பயணம் / தீர்த்தயாத்திரைக்கு கூட கிளம்பிருவிங்க. அப்பா வகையிலசெலவு. தூர தேச தொடர்புகளால் செலவு நேரலாம்.
பார்வை:
குரு பார்வை 4 -6 -8 பாவங்களின் மேலவிழுது. இது தாய்,வீடு,வாகன,கல்வி வகையறாவுக்கு நல்லது. ஆனால் இதய துடிப்பு அதிகரிக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சினை தலை காட்டலாம். படக்குனு ஓரு பெரிய மன்சனோடவோ -மேலதிகாரியோடவோ முட்டிக்குவிங்க. ஒரு கட்டத்துல எல்லா பணமும் முடங்கி எதையாவது அடகு வைக்க வேண்டியோ விக்க வேண்டியோ கூட வரலாம்.
பரிகாரம்:
மஞ்சள் நிற பில்லோ கவர் -பெட் ஸ்ப்ரெட் யூஸ் பண்ணுங்க. படுக்கையில பஞ்சாட்சரி ஜெபிங்க. அல்லது கேளுங்க. பலான நேரத்துல மஞ்சள் நிற ஆடை அணிந்தால் நல்லது (மனைவி உட்பட). சொத்து,முதலீடு,சேமிப்பு,பாஸ்போர்ட் டாக்குமென்ட்ஸை மஞ்சள் நிற ஃபைல்ல போட்டு வச்சு பெட் கீழே அல்லது கட்டிலில் உள்ள ராக்ஸ்ல / ட்ராயர்ல போட்டு வைங்க.
5.சிம்மம்:
மிதுனம் உங்களுக்கு லாபஸ்தானம். பொன் பொருள் சேரும், பெரியவுக ஆசி கிடைக்கும். செல்வாக்கு பெருகும். சொல்வாக்கு தெளிவாகும்.
குரு உங்களுக்கு 5-8 க்கு அதிபதி. அஞ்சுக்கு அதிபதியா இவர் 11 ல நின்னா நல்லதுதான். குழந்த பேறுக்கு எதிர் நோக்குவோர்க்கு அது பலிதமாகும். பெயர் புகழ் கூடும். இன்க்ரிமென்ட்,ப்ரமோஷன்,அவார்டு,ரிவார்டு கூட கிடைக்கலாம்.
ஆனால் இவருக்கு அஷ்டமாதிபத்யமும் இருக்கிறதால திடீர்னு ஒரு மரண செய்தி வரலாம். மூத்த சகோதரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். பெருத்த லாபத்தை எதிர்பார்த்திருந்த மேட்டர்ல திடீர்னு பல்பு வாங்கலாம்.
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 3-5-7 பாவங்கள் மீது விழுவதால சிட்டிக்குள்ள அதிகமா ட்ராவல் பண்ணுவிங்க. உரிய பலனும் கிடைக்கலாம். இளைய சகோதரம் ஒத்துழைக்கும். அவிகள்ள ஆராச்சும் அன் மேரீடா இருந்தா கல்யாணம் -கார்த்தின்னு நடக்க வாய்ப்பிருக்கு. அல்லது கண்ணாலம் நடந்து வேலை /தகராறு காரணமா பிரிஞ்சிருந்தா ஒன்னு சேருவாய்ங்க.
உங்க புத்தி ரெம்ப சூட்சுமமா வேலை செய்யும். பெரீ மன்சாளுக்கெல்லாம் ரோசனை சொல்லி சபாஷ் வாங்குவிங்க. குழந்தைகள் தொடர்பான திட்டமிடல்கள் வெற்றியடையும்.எத்தனை கமிட்மென்ட்ஸ் இருந்தாலும் சரி மனைவிக்கு 3கிராம் தங்கமாவது வாங்கி கொடுப்பிக. அவிக ஒத்துழைப்பு ப்ரைட்டா இருக்கும்.
பரிகாரம்:
மரண கானா சிடி போட்டு கேளுங்க. டெத் எதுனா நடந்தா “கடேசி” வரை போய் வாங்க. வியாழ கிழமை உ.விரதம்,மவுன விரதம் சேர்த்து இருங்க. ( அல்லது புனர்வசு -விசாகம் -பூரட்டாதி நட்சத்திரங்கள் ஓய்வு நாள்ள வரும் போது பயன் படுத்திக்கங்க)
6.கன்னி:
மிதுனம் உங்களுக்கு ஜீவன ஸ்தானம். பொறுப்பு அதிகரிக்கும். நிர்வாக, நிதி துறைகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் வரலாம். வட்டி மேல ஆசை பிறக்கும் (வேண்டாம்) பொன் பொருள் ஹேண்டில் பண்ணும் போது சாக்கிரதை. திடீர்னு பெரியவுக கை விட்டுருவாய்ங்க.
குரு உங்களுக்கு 4-7 க்கு அதிபதி. கண்ணாலமானவுக மனைவி – அம்மா மத்தியில மாட்டிக்கிட்டு ரெம்ப டார்ச்சர் ஆகவேண்டி வரலாம். அதுவும் இவிக பண்ற லொள்ளு வேலை -உத்யோகம் -வியாபாரத்துல உங்க கவனம் சிதறிப்போற அளவுக்கும் போகலாம்.
வீடு -வாகனம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் , பையிங் -செல்லிங்ல ,மராமத்துல இறங்காதிங்க. கல்வி மேட்டர் எதிர்பாராவிதமா ஒர்க் அவுட் ஆகும். (பரீட்சை ஹாலுக்கு போயி எழுத முடிஞ்சா)
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 2-4-6 பாவங்கள் மீது விழுவதால ஒங்க பேச்சு ஒங்களுக்கே “அட” ங்கற ரேஞ்சுக்கு இருக்கும். சனம் உங்க பேச்சுக்கு மயங்குவாய்ங்க. ரெம்ப காலத்து பற்று-வரவெலாம் செட்டிலாகும் ( ரெவின்யூ மேட்டர்ஸ்) என்னதான் அம்மா – மனைவி எலி தவளையா மாறி மாத்தி மாத்தி தண்ணிக்கும்-தரைக்கும் இழுத்தாலும் இந்த டக் அஃப் வார்ல குடும்பத்து மேல ஒரு வித அட்டாச் மென்டே வந்துரும்னா பாருங்க.
கடன் கூடிக்கிட்டே போகும். திடீர் திடீர்னு ஹெல்த் தகராறு பண்ணும். திடீர்னு ஒரு எதிரி முளைப்பார். அவர் பூணூல் போட்ட சாதிகாரரா இருக்கலாம் அ மேலதிகாரி.
பரிகாரம்:
உங்க ஆஃபீஸ் பேக் ,லேப் டாப் கவர் ,டேபிள் க்ளாத், மவுஸ்,பேனா இதெல்லாம் மஞ்சள் நிறத்துல இருக்கிறாப்ல அரேஞ்சு பண்ணிக்கங்க. விட்டா டேபிள் கண்ணாடி கீழே ராகவேந்திரர் போன்ற குருக்களின் படத்தை வச்சுக்கங்க.(அல்லது டேபிள் மேல)

7.துலாம்
மிதுனம் உங்களுக்கு பாக்ய ஸ்தானம். பொறுப்பு அதிகரிக்கும். இங்கே குரு வர்ரதால அப்பா/மாமனார்/மேலதிகாரி/ஊர் பெரிய மனிதர்/அப்பா வழி சொத்து ,உங்க முதலீடு ,சேமிப்பு வங்கி வகையில அனுகூலம் ஏற்படும். பக்தி அதிகரிக்கும்.கோவில் குளம்னு போய் வருவிங்க.
குரு உங்களுக்கு 3-6 க்கு அதிபதியாவும் இருக்கிறதால மேற்படி விஷயங்களில் அனுகூலம் ஏற்படுவதோடு அவிக ஆரோக்கியம் பாதிக்கலாம் உங்களோடு விரோதம் ஏற்படலாம். சிலர் கோர்ட்டுக்கு கூட போக வேண்டி வரலாம். சிலர் கடன் வாங்கி சொத்து வாங்கலாம். சிலர் சொத்தை அடகு வச்சு கடன் வாங்குவாய்ங்க. இது காரணமா அல்லல் அலைச்சல் ஏற்படலாம் .இந்த அலைச்சலுக்கு உங்க ஓவர் கான்ஃபிடன்ஸ்,இளைய சகோதரம் காரணமா இருக்கலாம்.
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 1-3-5 பாவங்கள் மீது விழுவதால வெளியுலகத்துல என்னதான் டென்ஸ் இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு தெளிவு – தீர்வுக்கான திட்டமிடல் இருக்கும். ஞா சக்தி அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கைகள் எடுப்பிங்க. என்னதான் பிரயாண அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் காரிய ஜெயமும் உண்டு. உங்கள் பெயர் -புகழ் கூடும். குழந்தைகள் விஷயத்துல குதூகலம் ஏற்படும்.
பரிகாரம்:
சேமிப்பு ,சொத்து வாங்குதல்,முதலீடு விஷயத்துல மொதல்ல சின்ன அமவுண்டு கடனா வாங்கி வேலைய ஆரம்பிங்க. இது தொடர்பான டாக்குமென்ட்ஸை கடன் வாங்கின காசுல வாங்கின மஞ்சள் நிற ஃபைல் அல்லது பையில போட்டு வைங்க. கோவில் குளம்னு போகும் போதும் இதே ஃபார்முலாவை (கடன்) ஃபாலோ பண்ணுங்க.

8.விருச்சிகம்:
மிதுனம் உங்களுக்கு ஆயுள் ஸ்தானம். இதனால இளைஞர்களுக்கு வயிறு தொடர்பான ,நடு வயதினருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தனிமை தகிக்க செய்யும். அபராதம் கட்ட வேண்டி வரும். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். மனைவி , பிள்ளைகளின் செயல்பாடு வேதனையை தரும். மரண செய்தி வரலாம். வீண்பழி விழலாம். எல்லா கதவும் படக்குனு லாக் ஆகிரும் .ஒடனே பாய்ஞ்சுராதிங்க.பொறுமை கடலினும் பெரிது.
குரு உங்களுக்கு 2-5 க்கு அதிபதியாவும் இருக்கிறதால பொன் ,பொருள் இழப்பு ஏற்படலாம். பேச்சுவார்த்தைகளில் தேக்கம் – சீன் ரிவர்ஸ் கூட நடக்கலாம். குடும்பத்தினர் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பது வீண். கண் பார்வை பாதிக்கப்படலாம்.
சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்சனாயிருவிங்க. அவப்பெயர் வரலாம். தவறான யோசனைகள் பிறக்கும். அவற்றை செயலாக்கினால் விளைவுகள் விபரீதமா இருக்கும். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பதை கவனத்தில் வைக்கவும்.
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 12-2-4 பாவங்கள் மீது விழுவதால சுப செலவுகள் அதிகரிக்கும்.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கற பழமொழிக்கு உதராணமாயிருவிங்க. தாய்,வீடு,வாகன வகையில முன்னேற்றம் காணலாம். வெளியுலகத்துல என்னதான் டென்ஸ் இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு தெளிவு – தீர்வுக்கான திட்டமிடல் இருக்கும். ஞா சக்தி அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கைகள் எடுப்பிங்க. என்னதான் பிரயாண அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் காரிய ஜெயமும் உண்டு. உங்கள் பெயர் -புகழ் கூடும். குழந்தைகள் விஷயத்துல குதூகலம் ஏற்படும்.
பரிகாரம்:
காசு பணம் தங்கம் கையில வச்சுக்காதிங்க. வியாழன் அல்லது புனர்வசு/விசாகம்/பூரட்டாதி நட்சத்திரங்களில் மவுன விரதம் +உண்ணாவிரதம் இருங்க( இயற்கை வைத்திய முறைப்படி – ஆஃப்டர் கன்சல்ட்டிங் யுவர் ஃபேமிலி டாக்டர்) . முடிஞ்ச வரை கடன் வாங்காதிங்க. வாங்கியே தீரனும்னா வங்கி கடன் பெஸ்ட்.
9.தனுசு:
மிதுனம் உங்களுக்கு 7 ஆவது இடம். இங்கே குருவருவது நல்லதுதான். இதனால் அன்மேரீடா இருந்தா மேரேஜ் நடக்கும். ஆல் ரெடி மேரீட்னா தம்பதிகளிடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.ஆனால் கணவன்/மனைவிக்கு உடல் நலம் பாதிக்கலாம்.
குரு உங்களுக்கு 1-4 பாவங்களுக்கு அதிபதிங்கறதால மொத பாராவுல சொன்ன பலன் இன்னம் கொஞ்சம் ப்ரைட்டா நடக்கும். தாயுடன் நல்ல தோழமை ஏற்படலாம்.மனைவிங்கறவ தாய்க்கு பின் வந்த தாயேங்கற தத்துவத்தை புரிஞ்சுக்குவிங்க.வீடு,வாகனம்,கல்வி மேட்டர்ல மனைவி -மனைவி வழி உறவினர் உதவி கிடைக்கலாம். மனைவி தொலை தூர கல்வி பயில முடிவு செய்யலாம்.
பார்வை:
குருவின் பார்வை உங்க ராசி மற்றும் 3 – 11 ஆம் பாவங்களில் விழுது. இதனால முகத்துல ஒரு களை ஏற்படும். ஞா சக்தி அதிகரிக்கும். எதையும் ப்ளான் பண்ணி செய்விங்க.பக்தி அதிகரிக்கும். மனசுல ஒரு வித பீதி பயம் இருக்கும். இளைய /மூத்த சகோதரம் முன்னேற்றம் காணும். பொன் பொருள் ஈட்டுவீர்கள்.

10.மகரம்:
மிதுனம் உங்களுக்கு 6 ஆவது இடம். இங்கே குருவர்ரது நல்லதில்லை. இதனால சத்ரு,ரோக ருண உபாதைகள் தான் ஏற்படும். தங்கம் அடகு வைக்கவேண்டி வரலாம். அல்லது பொன் பொருளால் விவகாரம் ஏற்படலாம்.
இவரு உங்களுக்கு 3-12 பாவங்களுக்கு அதிபதி. குரு சகோதராதிபதியா இங்கே நிக்கிறதால காது நோய் வரலாம். இளைய சகோதரம் நோய்வாய்ப்படலாம். அல்லது அவிகளோட உங்களுக்கு மோதல் ஏற்படலாம். வித் இன் தி சிட்டி ட்ராவல் பண்ணும் போது சிறு விபத்து நடக்கலாம் . அல்லது அபராதம் கட்டவேண்டி வரலாம். சக வாகன ஓட்டியோட முட்டி மோதவேண்டி வரலாம்.
குரு விரயாதிபதியா இங்கே நிக்கிறதால ஒரு கடன் விவகாரத்துல திடீர்னு ப்ரஷர் ஏற்பட்டு அது பைசலாகாலம். வெளிப்பட்ட நோய் முழு குணமடையும். ஒரு எதிரியின் கதை க்ளோஸ் ஆயிரும்.
பார்வைகள்:
குரு 10-12-2 ஆகிய இடங்களில் படுது. இதனால பணப்புழக்கம் அதிகரிக்கும். நீதி,நிர்வாக பிரிவுக்கு ட்ரான்ஸ்ஃபர் வரலாம். மதம் சார்ந்த நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டி வரலாம். சுப செலவுகள் அதிகரிக்கும் . அப்படி இப்படி வாழ்ந்துட்டு வந்தவுக “முறையான” வாழ்க்கைக்கு மாற தவிப்பிங்க. வாக்பலிதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாத்துவிங்க. வருமானம் கூடும். குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம்:
தேவையே இல்லின்னாலும் இளைய சகோதரத்துக்கிட்டே கடன் வாங்குங்க. (சின்ன அமவுண்டு) அல்லது கொடுங்க .சீசன் டிக்கெட்டோ -வண்டிக்கு பெட் ரோல் போடறதோ கடன் வாங்கின காசுல போடுங்க. தங்கத்தை கையிலயோ வீட்லயோ வச்சுக்காதிங்க. கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் எதுனா இருந்தா அதுல டெப்பாசிட் பண்ணிருங்க.வேளைக்கு சாப்பிடுங்க. எளிதா டைஜஸ்ட் ஆகக்கூடியதை மட்டும் சாப்பிடுங்க.
11.கும்பம்:
மிதுனம் உங்களுக்கு 5 ஆவது ராசி. இங்கே குரு வர்ரது நல்லதுதான். ஆனால் ஆண் குழந்தைய எதிர்பார்த்துள்ளவர்கள் மட்டும் ஏமாற்றம் அடைவீர்கள். உங்க புத்தி ரெம்ப சூட்சுமமா வேலை செய்யும். பெரீ மன்சாளுக்கெல்லாம் ரோசனை சொல்லி சபாஷ் வாங்குவிங்க. குழந்தைகள் தொடர்பான திட்டமிடல்கள் வெற்றியடையும்.அதிர்ஷ்டம் கை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் சரளம்.
குரு உங்களுக்கு 2-11 க்கு அதிபதி. இரண்டுக்கு அதிபதியா இவர் 5 ல வர்ரதால டிப்,லாட்டரி கணக்கா ஒரு உபரி வருமானம் ஏற்படலாம். சம்பள உயர்வு,இன் க்ரிமென்ட்,ரிவார்ட் கிடைக்கலாம். உங்க குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்ங்கற பழமொழிக்கு ஏற்ப சிறக்கும். ஏற்கெனவே குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு அடுத்த குழந்தை பிறக்க வாய்ப்பு, மொத முறையா கர்பமடைபவர்களுக்கு இரட்டை குழந்தை கூட பிறக்கலாம்.
பார்வை:
குரு பார்வை 9-11 பாவங்களின் மீதும் உங்க ஜன்ம ராசி மீது படியுது. வெளி நாடு செல்ல திட்டமிட்டு வந்தவர்களுக்கு க்ளியரன்ஸ் கிடைக்கும். தூர தேச தொடர்புகள் லாபம் தரும். புதிய ,கூடுதல் முதலீடுகளுக்கு காலம் கனியும். அப்பாவழியில வழிகாட்டுதலும் உதவியும் கிடைக்கும். சொத்து விவகாரங்களில் தீர்வு ஏற்படலாம். உபரி வருமானத்துக்கு வழி ஏற்படலாம். மூத்த சகோதர வகையில உதவி கிடைக்கலாம். ஜன்ம ராசி மீதான பார்வை பக்தியை பெருக்கும். ஞா சக்தி அதிகரிக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும்.
பரிகாரம்:
தேவையில்லை. ஆனால் பேராசை வேண்டாம். படக்குன்னு மனைவிக்கோ குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படலா.
12.மீனம்:
மிதுனம் உங்களுக்கு 4 ஆவது ராசி. இங்கே குரு வர்ரது நல்லதில்லை. இதனால தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவில் சிக்கல் ஏற்படலாம். இடமாற்றம் ஏற்படலாம். நடுவயதை கடந்தவர்களுக்கு இதய படபடப்பு ஏற்படலாம்.
குரு உங்களுக்கு 1-10 பாவங்களுக்கு அதிபதி. ராசியாதிபதியா இவர் 4 ஆமிடத்துக்கு வர்ரது நல்லதுதான். இதனால நீங்க வீட்ல இருக்கிற நேரம் அதிகரிக்கலாம். படிப்பு அதிகரிக்கலாம். தாயுடனான கம்யூனிகேஷன் மேம்படலாம் (அப்படின்னா எந்தளவுக்கு வேலை வெட்டி இல்லாம போயிரும் ரோசிங்க)
ஆஃபீஸ் கோயரா இருக்கிற பெண்களுக்கு ஹவுஸ் வைஃபா மாறிரலாமாங்கற எண்ணம்கூட பிறக்கலாம்.( கண்ட் ரோல் யுவர் செல்ஃப்) .ஜீவனாதிபதியா இவர் 4 ஆமிடத்துக்கு வர்ரதால வீடு கட்டவோ -மராமத்து பண்ணவோ இறங்கிருவிங்க (வேண்டாம்) வண்டி வாகனம் ரிப்பேர் செலவை எதிர்பார்க்கலாம்.
பார்வை:
குரு பார்வை 8-10-12 ராசிகளில் படியுது. ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் டேக் கேர். நோ எக்ஸைட்மென்ட்ஸ் எப்பவும் சிகிச்சைக்கு அருகாமையில இருங்க. யூத்து பீசா,பர்க்கர்னு வெளுத்து கட்டறதை நிப்பாட்டுங்க.
செய்ற வேலையில மூஞ்சி முலாஜா பார்க்காதிங்க. கியாரண்டி ஷ்யூரிட்டில்லாம் வேண்டாம். கொஞ்சம் ஆர்த்தடாக்ஸா மாறுவிங்க. தெண்ட செலவுகள் குறைந்து உருப்படியான செலவுகள் பண்ணுவிங்க.
பரிகாரம்:
அம்மாவை மஞ்ச சேலை கட்டிக்கிட்டு பிரதி வியாழன் சிவலிங்கத்துக்கு பூஜை பண்ணச் சொல்லுங்க. ( வீட்லயே வாங்கி வச்சுக்கலாம்.ஆனால் சிவலிங்கம் குடும்பத்தலைவரோட ஆட்காட்டி விரல் அளவே உசரம் இருக்கனும்). வீட்டுகதவுக்கு பெயிண்ட் பண்ண வேண்டி வந்தா மஞ்ச பெயிண்ட் அடிச்சுருங்க. இல்லாட்டி மஞ்ச ஸ்க்ரீன். கதவு மேல சிவலிங்கம் ஸ்டிக்கர். வண்டியோட நெம்பர் ப்ளேட்ல சிவலிங்கம் ஸ்டிக்கர்.

லவ் மூட் ஸ்டார்ட் அவ்வ்…. : 2

அண்ணே வணக்கம்ணே !
மொக்கை போடக்கூடாது. பாய்ன்ட் டு பாய்ன்ட் பதிவு போடனும் நினைக்கிறேன்.ஊஹூம். நம்ம பாடியில உஷ்ண கோளாறுகள் சகஜம். சீதள கோளாறுகளும் சகஜம். (கடக லக்னம் -சிம்மராசிங்கோ) ஆனால் ஒரே நேரத்துல ரெண்டும் வந்ததில்லை.
இந்த நிபந்தனையும் போயே போச்.
நேத்திக்கு கொப்புளம் வந்திருக்கு. அதே சமயம் ஏகத்துக்கு கூல் ஆகி தொண்டையெல்லாம் வலிக்குது. என்ன செய்ய ? மொத்தத்துல நான் வேலை செய்யக்கூடாது அவ்ளதானேன்னு வேலையை நிப்பாட்டிட்டன்.
இன்னைக்கு எவ்ரிதிங் பர்ஃபெக்ட்னு சொல்ல முடியாட்டாலும் நாட் பேட். சரி சொந்தகதை போதும் மேட்டருக்கு போயிரலாமா?
லவ்ஸுங்கறது ரெண்டு பேருக்கு – ரெண்டு கேரக்டருக்கு சம்பந்தப்பட்ட மேட்டரு. கேரக்டர்ங்கற வார்த்தைக்கு ரெண்டு அருத்தம். ஒன்னு பாத்திரம் – ரோல் ; அடுத்தது குண நலன்.
இந்த உலகமே ஒரு நாடக மேடை இதில் நாம் எல்லாம் பாத்திரங்கள்னு ஷேக்ஸ்பியர் சொல்றாரு. ஒவ்வொரு பாத்திரமும் – ஐ மீன் ஒவ்வொரு மன்சனும் தன் பாத்திரத்தை உணர்ந்து ” நடிச்சா” பிரச்சினையே வராது.
அதுலயும் இந்த காதல் நாடகம் இருக்கே .. செமை நச்சு பிடிச்சது. இதுல சம்பந்தப்பட்ட ரெண்டு கேரக்டரும் தங்களோட கேரக்டரை சப்ஜாடா தெரிஞ்சுக்கிட்டு வாழ்ந்து காட்டனும். அப்பத்தேன் லவ்ஸு சக்ஸஸ் ஆகும்.
ஜோதிடத்துல உங்க கேரக்டருக்கான அடிப்படை உங்க நட்சத்திரம் -ராசி -லக்னம்தான். இதுக்கப்பாறம் லக்னாதிபதி ஆரு -அவரு எங்கன நின்னாரு ? லக்னத்தில் நின்ற கிரகம் – லக்னத்தை பார்க்கும் கிரகம் – அஞ்சுல நின்ன கிரகம் -அஞ்சுக்கதிபதி நின்ன இடம் இப்படி ஆயிரத்தெட்டு அம்சங்கள் உங்க கேரக்டரை நிர்ணயிக்குது.
உங்க பேச்சை ரெண்டாமிடம் காட்டுது. தகிரியத்தை 3 ஆமிடம் காட்டுது , உங்க லவ்ஸுக்கு உங்க குடும்பம் ஒப்புத்துக்குமா இல்லையாங்கறதை நாலாமிடம் காட்டும். இப்படி சொல்லிக்கினே போவலாம். ( எல்லாத்தையும் விவரமா பார்க்கத்தான் போறோம்..இது ச்சொம்மா ஸ்லைடு மாதிரி )
மொதல்ல நம்மை பத்தி நமக்கு ஓரளவுக்காச்சும் தெரிஞ்சிருக்கனும். ராசி கேரக்டர்ங்கற தலைப்புல ஏற்கெனவே எழுதினாப்ல ஞா. ஒரு சேஞ்சுக்கு இன்னைக்கு நட்சத்திரங்களை பார்க்கலாம்.
ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கு. இதுல தலா 3 நட்சத்திரத்துக்கு ஒரு அதிபதி இருக்காரு.
அதாவது 27 நட்சத்திரத்துல 9 க்ரூப்பு. இதுல அந்தந்த குருப்புக்குள்ளவே லவ்ஸ் வர்ரது சகஜம். ஆனா தொடர்ரது கஷ்டம். இனம் இனத்தோடு சேரும்ங்கறாப்ல லவ்ஸ் வந்துரும். ஆனால் “ஒன்லி தி ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்”ங்கற விதிப்படி நாளாவட்டத்துல கவர்ச்சி குறைஞ்சுருங்கோ.
இந்த கோணத்துல மும்மூனு நட்சத்திரத்துக்கும் சில பொதுவான குணங்கள் இருக்கும். அந்த பொதுவான குணங்கள் என்னன்னு ஒரு ஓட்டம் பார்த்துருவம்.
எச்சரிக்கை:
திருமண பொருத்தம் பார்க்கிறச்ச ஆண்,பெண் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆரு. அதிபதிகளுக்கிடையில் நட்பு இருக்கான்னு பார்ப்பது உண்டு.இதை அதிபதி பொருத்தம்பாய்ங்க. மக்கள் வழக்கில் இதை “சம்பந்தி பொருத்தம்” என்பதும் உண்டு.
ஆனால் இந்த பதிவுல நாம சொல்லப்போறது பொதுவான சில குண நலன்களை தான்.
கண்ணாலத்துக்கு பொருத்தம் பார்க்கிறோமோ இல்லையோ லவ்ஸுக்கு கட்டாயம் பார்த்தாகனும். கண்ணாலத்துல பிரச்சினை வந்தாலும் வீட்டு ஹால்ல பஞ்சாயத்து , ஊர் பஞ்சாயத்து, தாதா பஞ்சாயத்து ,மஹிளா ஸ்டேஷன், ஃபேமிலி கோர்ட்டுன்னு ஆல்ட்டர்னேட்டிவ்ஸ் இருக்கு லவ் மேட்டர்ல ? ஊஹூம்.
இப்பம் லேட்டஸ்டா சுப்ரீம் கோர்ட் கூட காதலியோட சம்மதத்தோட கெட்டகாரியம் நடந்திருந்தா அதை கற்பழிப்பா கொள்ள் முடியாதுன்னு தீர்ப்பு கொடுத்திருக்காம். இப்பம் மும்மூனு நட்சத்திரமா சில குணநலன் களை பார்ப்போம்.
1.அஸ்வினி,மகம்,மூலம்:
இந்த 3 நட்சத்திரத்துக்கும் அதிபதி கேது. இவர் ஞான காரகன். இவிக ஞானம் பெறனும். கெட்ட பின்பு ஞானின்னு கவிஞரே சொல்லியிருக்காருல்ல. காமி கானி வாடு மோட்ச காமி காலேடு.
மேலும் இவிகளுக்கு பால்யத்துலயே சுக்கிரதசை மாட்டிக்கும். இதனால எதிர்காலத்துல இவிக அடைய போற ஞானத்துக்கு தேவையான அனுபவங்கள் இளமையிலயே கிடைக்க ஆரம்பிச்சிரும். அதாவது லவ்ஸு. ஞானம் கிடைக்க என்ன மாதிரி லவ் கிடைக்கனுமோ அந்த மாதிரி லவ் கிடைக்கும்.
2.பரணி,பூரம்,பூராடம்:
இந்த க்ரூப்புக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்னாலே லவ்ஸு தான். இவிகளுக்கும் பால்யத்துலயே சுக்கிர தசை மாட்டிக்கும். (மேக்சிமம் 20 வயசுல முடிஞ்சுரும் -இது ஒரு ஆறுதலான அம்சம்) .பால்ய கால சுக்கிரதசைய பத்தி திகட்ட திகட்ட நிறைய சொல்லியாச்சு. அதன் சுருக்கம்:
பெண் வீக்கர் செக்ஸ். தன்னை அலட்சியப்படுத்துபவனை பிரமிப்புடன் பார்ப்பா. தன்னை பிரமிப்புடன் பார்ப்பவனை அலட்சிய படுத்துவா. பால்யத்துல சுக்கிரதசை நடக்கிறவனுக்கு பெண் மீது பிரமிப்புதான் இருக்கும்.
3.கிருத்திகை ,உத்தரம்,உத்திராடம்:
இந்த க்ரூப்புக்கு அதிபதி சூரியன். இவர் ஆத்ம காரகன். இவிக வயசு காரணமா என்னதான் ஜொள்ளு விட்டாலும் ,என்னதான் சரண்டர் ஆனாலும் ஒரு பாய்ன்ட்ல படக்குனு ரிவர்ஸ் ஆயிருவாய்ங்க. தன்மானம்,சுயமரியாதைன்னு பஞ்ச் டயலாக் எல்லாம் தூள் பறக்கும். அப்பாறம் என்னதான் கெஞ்சினாலும் நோ யூஸ். மேலும் இவிக உள்ளுணர்வு ரெம்ப பர்ஃபெக்டா இருக்கும். ஜட்ஜிங் கப்பாசிட்டியும் ஓகே. என்னடான்னா கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க.
மத்த 6 க்ரூப்ஸை பத்தி நாளைக்கு பார்க்கலாமே !

லவ் மூட் ஸ்டார்ட் ..அவ்வ்வ்வ்வ் !

அண்ணே வணக்கம்ணே !
பாரதியார் என்னவோ “ஆதலினால் காதல் செய்வீர்”னாரு. ஔவையார் என்னவோ “தையல் சொல் கேளாதே”ன்னிருக்காய்ங்க. சித்தர்கள் பத்தி சொல்லவே தேவையில்லை. ” எத்தனை பேர் தொட்ட முலை.எத்தனை பேர் நட்ட குழி”ன்னு பட்டவர்த்தனமாவே சொல்லியிருக்காய்ங்க.
கில்மாவாச்சும் எசன்ஷியல் ப்ராடக்ட் . ஸ்தூல தேவை. இல்லேன்னா முடியாது. மாச க்கணக்குல பூட்டி வச்சா அட்டு ஃபிகரு மேல கூட பாஞ்சுரவேண்டி வரும். ஒத்துக்கறேன். இதுல காதல் எல்லாம் தேவையா? காதல்ங்கறதே கில்மாவுக்கான முஸ்தீபு தானே.. காதல் இல்லாத கில்மா உண்டு. கில்மா இல்லாத காதல் உண்டா? இல்லை.

இந்த 46 வயசுக்கு கில்மாவை புரிஞ்சுக்க முடியுதே தவிர காதலை? ப்ர்ர்ர்ர்ர்.. அதுலயும் இன்னைய தேதிக்கு லவ்ஸுங்கற பேர்ல சனம் பண்ற அலப்பறைய நிச்சயமா புரிஞ்சுக்க முடியலை. நாம லவ் பண்ண தேதிக்கே கூட உணர்ச்சி வசப்பட்டதா எல்லாம் சரித்திரம் கிடையாது. அப்படியே உ.வ பட்டிருந்தாலும் தனிமையில – செந்தமிழ்ல உ.வ பட்டிருப்பம். (ஹி ஹி கவிதை எழுதுவம்) மத்தபடி நேர்ல ஊஹூம். இந்த வயசுக்கு சான்ஸே இல்லை.

இந்த காதல் மேட்டர்ல நம்ம கருத்து எதுவா இருந்தாலும் – தேவை /தேவையில்லைன்னு வாதங்களை அடுக்கினாலும் லவ் பண்றவன் நிறுத்தப்போறதுமில்லை.பண்ணாத பார்ட்டி பண்ணப்போறதுமில்லை. பின்னே எதுக்கு இந்த தொடர்?

உடலால இளைஞர்களாயும் ,உள்ளத்தளவில் குழந்தைகளாயும் இருக்கிற டீன் ஏஜ் பிள்ளைகள் லவ் மேட்டர்ல பல்பு வாங்காம -அப்படியே வாங்கினாலும் அது மிச்ச சொச்ச வாழ்க்கைய – அப்பா,அம்மாவை -குடும்பத்தை – சமுதாயத்தை – தினசரிகளின் முத பக்கத்தை பாதிக்காம பார்த்துக்க ஜோதிட ரீதியில சில அலசல்கள் -முன் எச்சரிக்கைகள் – பரிகாரங்களை தர்ரதுதான் இந்த பதிவோட நோக்கம் .

கையோட கையா நம்மை போன்ற 40+ கிராக்கிகள் பொஞ்சாதி மேட்டர்ல எங்க தப்பு பண்ணிட்டம். ஏன் சமீப காலமா பொஞ்சாதிய லவ் பண்ண முடியாம போயிருச்சுன்னு தெரிஞ்சுக்க உதவறதும் இந்த பதிவோட நோக்கம் தான்.

என்ன பதிவுக்கு போயிரலாமா?

வாங்க தம்பிகளா.. லவ் ரேஸ்ல இறங்கறதா முடிவு பண்ணிட்டிங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நேத்திக்கு நம்ம பவர் ஸ்டார் ஃபோன் பண்ணி பேசிட்டிருந்தப்போ சொன்ன மேட்டரு இது .

பவரை அவரோட செல்லுக்கு கூட்டிக்கிட்டு போற வழியில ஒரு செல். அதுல ஒரு கைதி, தன் கையில ஒரு பெண்ணோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவ வச்சுக்கிட்டு அவளை வண்டை வண்டையா திட்டிக்கிட்டும் , சிண்டை பிச்சுக்கிட்டும் இருந்தானாம்.
பவரு ஜெயிலரை “என்ன மேட்டரு”ன்னு கேட்டி ருக்காரு. ஜெயிலரு ,”அது ஒன்னுமில்லை பவரு ..இவன் ஒருத்தியை லவ்ஸு. அவள் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்.”

வராந்தால அப்படியே நடந்து போறச்ச இன்னொரு செல். அதுல இன்னொரு கைதி .அவன் கையிலயும் ஒரு பெண்ணோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ. நரகல் நடையில வசை மொழி. பவரு ஜெயிலரை கேட்டாரு.

“என்ன ஜெயிலர் சார் ..இன்னொரு லவ் ஃபெயிலியரா? ”

“இல்லை பவரு.. மொதல்ல பார்த்தமே அவனோட காதலி இவனை த்தான் காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிட்டாள்”

லவ்ஸோட அசலான செனேரியோ இதுதான்.

கொய்யால லவ்ஸு ஃபெய்ல் ஆகி அதை பாசிட்டிவா எடுத்துக்கிட்டு சீரணம் பண்ணிக்கிட்டா அந்த லவ்ஸ் பத்தின மெமரிஸ் கூட ஒரு சுகம்.
ஆனால் லவ் சக்ஸஸ் ஆகி காதலியே பொஞ்சாதியாகி -பொஞ்சாதிங்கற ஜந்துவா மாறி தொலைச்சா அது பெரிய சோகம்.
ஜோதிடத்துல நட்சத்திரம்,ராசி,லக்னம் இதெல்லாம் ரெம்ப ப்ரிலிமினரி விஷயங்க தான்.ஆனால் ஒரு ஜாதகரோட கேரக்டர் பில்ட் அப் பண்றதுல பேசிக்கல் ஃபேக்டர்ஸ் இவை தான்.

மொதல்ல நட்சத்திரங்கள் 27 . இதுல தலா 3 நட்சத்திரங்களுக்கு ஒரு அதிபதி இருப்பாய்ங்க. 9 கிரகங்களுக்கு தலா 3 நட்சத்திரம்னா 27 நட்சத்திரம் சரியா போச்சா.
இருக்கிற 9 கிரகங்கள்ள சில கிரகங்கள் காதலுக்கு ஒத்துக்கு வராது. அந்த கிரகங்களுக்குரிய தலா 3 நட்சத்திரத்துல பிறந்தவுகளும் லவ்ஸ் மேட்டர்ல கொஞ்சம் பட்டும் படாம இருக்கலாம் .அல்லது அதுலயும் ப்ரஸ்டிஜ் -ஈகோ பார்க்கலாம்.

லவ்ஸ்ங்கற மேட்டருக்கு சூரியன் முதலான 9 கிரகங்கள் எந்த அளவுக்கு ஒத்துவரும். அந்த 9 கிரகங்களுக்குரிய நட்சத்திரங்கள் என்னன்னு ஆதியோடந்தமா பார்க்கலாம். இந்த தொடர் பதிவை முழுக்க முழுக்க ஜன நாயக முறையில கொண்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
உங்க கருத்துக்களை ஒடைச்சு தெரிவிச்சா தொடர்பதிவை ஒடைச்சு திருப்ப வசதியா இருக்கும். ஓகேவா உடுங்க ஜூட்டு.

12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

Bedlife

அண்ணே வணக்கம்ணே !
விரயஸ்தானம்  உங்கள்  உணவு,உடலுறவு தொடர்பான உங்க மன திருப்திக்காக செய்யும் செலவினங்களை காட்டுமிடம். சுக்கிரனோட காரகமும் ஏறக்குறைய இதேதான். அறுசுவை உணவு, நொறுக்கு தீனி, பேக்கரி ஐட்டம் ,ஜங்க் ஃபுட்,டின் ஃபுட்,பேக்ட் ஃபுட் ,மனைவி,கில்மா இப்படி பலதையும் காட்டும் கிரகம் சுக்கிரன்.
இதை போல பாவ காரகத்வத்துக்கும் -அங்கன நின்ன கிரகத்தோட  காரகத்வத்துக்கும் ஒரு ஒத்திசைவு இருப்பது  நல்லது தான். ஆனால் இந்த விதி எல்லா கிரகத்துக்கும் -எல்லா பாவத்துக்கும் பொருந்தாதுங்கோ. குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு சொல்லப்படாது.
இந்த விஷயத்துல சில விஷயங்களை சொல்லிட்டு விரய சுக்கிரனோட லீலைகளை பார்ப்போம்.
ஒவ்வொரு பாவத்துக்கும் ,ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு தலையாய  காரகத்வத்தை கொடுத்திருத்தாய்ங்க.
மொதல்ல கிரகங்களை எடுத்துக்கிட்டா  ………
சூரியன் -பித்ரு காரகன்,தொழில் காரகன்
சந்திரன் -மாத்ரு,ஜல,மனோகாரகன்
செவ் -பூமி -சகோதர காரகன்
ராகு – பிதாமஹ காரகன் ( அப்பா வழி தாத்தா பாட்டி)
குரு -தன,சொர்ண, கங்கண, புத்ர காரகன்
சனி -ஆயுள் காரகன்
புதன் -வித்யா காரகன்
கேது -மாதாமஹ காரகன்
சுக்கிரன் -களத்ரகாரகன் , சிற்றின்பங்களுக்கு காரகன்
இதுல சூரியன் தொழில் ஸ்தானத்துல நின்னா ஓகே.சந்திரன் புத்தி ஸ்தானத்துல நின்னா நாட் ஓகே. செவ் சகோதர ஸ்தானத்துல நின்னா ஓகே ( இவரு பூமி காரகன் தானே .4ங்கறது வீட்டை காட்டுமிடம் தானே. பூமி இல்லாம வீடு ஏது ..இங்க செவ்  நிக்கலாமான்னா ஊஹூம்.அம்மாவுக்கு ஆப்பு) .குரு புத்ர பாவத்துல நிக்கப்படாது ( ஆண் குழந்தை இல்லாம போயிரும்னு பொதுவிதி), சனி எட்டுல ? இருக்கலாம்.என்ன தீர்க ரோகங்கள் தொல்லை கொடுக்கும் .உ.ம் நரம்பு ,ஆசனம் தொடர்பானவை.புதன் அஞ்சுல இருக்கப்படாது. சுக்கிரன் ஏழுல  இருக்கப்படாது ( விரயத்துல இருக்கலாம்ங்கறது பொது விதி)
ஆக கிரகத்துக்கும் -பாவத்துக்கும் ஒத்திசைவு இருந்துட்டா போதாதுங்கறதை டயரியில எழுதிருங்க.
இந்த விரய பாவத்தை சுக்கிரன் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா என்ன ஆகும்னு தெரிஞ்சுக்க ஒரு கேஸ் ஹிஸ்டரிய பாருங்க.
கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸ் ( சாதி ? வேணாம் பாஸு.. நாட்ல ஒரே வெட்டுப்பழி குத்துப்பழியா இருக்கு.அது எதுக்கு கழுதை)  குடும்ப தலீவரு  நல்ல ரசனை உள்ளவர். எதுல இறங்கினாலும் க்ளாஸ் ..ஹை க்ளாஸ் தான்.
அவிக வீட்டை பார்த்திங்கனா அணுஅணுவுலயும் சுக்கிரனோட ஆதிக்கம் தெரியும்.  தினசரி நான் வெஜ், பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு டூ வீலர். நினைச்சா கார்ல பறப்பாரு.
அவரு நர்சிங் ஸ்கூல் வைக்க முடிவு செய்தாரு.ஏற்பாடுகள் எல்லாம் சரவேகத்துல நடக்குது. அட்மிஷனும் நடந்து முடிஞ்சுது –  நம்மாளும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிற  பார்ட்டி -பிள்ளைகள் வயசுல இருக்காய்ங்க. ஆல் ஆஃப் தி சடன் நெம்பர் ஆஃப் ஃபீமேல்ஸ்.    நீங்க என்னல்லாம் நினைக்கிறிங்களோ எல்லாமே நடக்க ஆரம்பிச்சுருச்சு.
மாணவிகள் பயிற்சி பெற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் உள்ள மருத்துவமனையோட டீலிங் இருக்கனுங்கறது ஒரு நிபந்தனை. அதை ஃபுல்ஃபில் பண்றதுக்கு ஜி.ஹெச்சை ஒர்க் அவுட் பண்ண பார்த்தா ஏற்கெனவே நர்ஸிங் காலேஜ் வச்சுருக்கிற பார்ட்டி சூப்பிரனன்டை வச்சு கட்டைய போடுது.
நம்மாளு தாளி  நாமளே ஒரு ஆஸ்பத்திய வச்சுட்டா என்னனு  டிசைட் பண்ணாரு. ஹோல் சேலா ஃபர்னிச்சர் எல்லாம் புக் பண்ணியாச்சு. டெஸ்டினேஷனை நோக்கி கண்டெய்னர் வந்துக்கிட்டிருக்கு. அந்த  நேரம் பார்த்து மேலதிகாரிங்க இன்ஸ்பெக்சனுக்கு  வந்துட்டாய்ங்க. நர்சிங் ஹோம்னா வெறும் கட்டிடம் தானா?  டாக்டரு , நர்ஸு மட்டும் தானா? கட்டில் ,மேஜை ,நாற்காலி லொட்டு லொசுக்குன்னு எத்தீனி தேவைப்படுது.
இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தவுகளுக்கு இவரோட தொழில் எதிரி “நெல்லா அழுத்தினாப்ல” இருக்கு. அவிக “வாங்கவே”மாட்டேன்னுட்டு “எழுதிட்டு” போயிட்ட்டாய்ங்க.
இந்த ஒரு அடி.. அவருக்கு மரண அடியா  போச்சு. அங்கன இருந்து எல்லாமே வில்லங்கம்.  என்னென்னவோ ஆகிப்போச்சு.
இந்த கேஸ் ஸ்டடிய பார்த்திங்கல்ல. அவரு ஜாதகத்துல சுக்கிரன் மினிமம் கியாரண்டியோட இருந்திருக்காரு. ஏதோ சொந்த வீடு,வாகனம், அறுசுவை உணவுன்னு கிடைச்சது. இதோட திருப்தியடைஞ்சுருந்தா அசலுக்கு மோசம் வந்திருக்காது. அவரு இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டாரு.  பல்பு வாங்கிட்டாரு.
இப்பம் இந்த விரய பாவ காரகத்வத்தை பார்க்கலாம். இந்த பாவம் பிரதானமா காட்டறது உணவு -உடலுறவு -தூக்கம் தொடர்பான செலவுகளை.
உணவு ..ஒரு காலத்துல  நம்மாளுங்க வருசத்துக்கு ரெண்டொரு பண்டிகை நாள்ள தவிர அரிசி உணவையே பார்த்ததில்லை. இதனால ஷுகரு அது இதுன்னு மாட்டிக்காம கில்மா மேட்டர்ல பவர் ஃபுல்லா இருந்திருக்காய்ங்க. பால்ய விவாகம் -கூட்டு குடும்பங்கள்  வேற.  நோ  ஏக்கம் .. நோ டென்ஷன்ஸ். திருவிழாவுல லைன் விட்ட குட்டிய பிக் அப் பண்றாப்ல பொஞ்சாதிய பிக் அப் பண்ணி ஆகனும். உடலுறவுகளின் எண்ணிக்கை குறைந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும். குழந்தை பாக்கியம் கியாரண்டி. ஆண்கள் நிலபுலம், ஆடு,மாடு மேய்ப்புன்னு செமை உழைப்பு. பெண்களும் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்ததால ஹேல் அண்ட் ஹெல்த்தியா இருந்திருப்பாய்ங்க. கில்மா மேட்டர்ல பிரச்சினை ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். தூக்கங்கறிங்களா?
சூரியன் மறைஞ்சதுமே வீட்டுக்கு வந்து  -கும்பலா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு தூங்கபோக வேண்டியதுதான். சூரியன் உதிக்கறதுக்கு மிந்தியே எந்திரிச்சாகனும்.

( பயாலஜிக்கல் க்ளாக் கிறிஸ்டல் துல்லியமா வேலை செய்திருக்கும்)
செமர்த்தியா உழைச்ச பாடிக்கு கட்டாந்தரையா இருந்தாலும் ஒன்னுதேன். கட்டில்,மெத்தையா இருந்தாலும் ஒன்னுதேன்.
ஆனால் இன்னைக்கு? நெலைமை தலை கீழா ஆரம்பிச்சிருச்சு. ஜாதகத்துல சுக்கிர பலம் இருக்கோ இல்லையோ ஹவுசிங் லோன் போட்டு வீடு, வெஹிகிள் லோல் போட்டு வாகனம், அரிசி கிலோ அம்பது ரூவாய்க்கு வித்தாலும்  365 நாளும் அரிசி சோறு , குழம்பு,ரசம், மோரு ,தயிரு, நெய் , நான் வெஜ்,   நொறுக்கு தீனி, படுக்க கட்டில் ,மெத்தை ,ஏ.சி கு.ப ஏர் கூலர் அ சீலிங் ஃபேன். பாதி ராத்திரிக்கு மேல தூக்கம். காலை எட்டு வரை புரண்டுக்கிட்டு  கிடக்கிறது.
இந்த இழவுல பாட்டு,டான்ஸு,டிவி, டிவிடி ப்ளேயர்,மியூஸிக் சிஸ்டம், சாட்,ஃபேஸ்புக், மொபைல்ல மொக்கை, லாலா,மசாலா, பார்ட்டி,ஃபங்சன் , டூர், பிக்னிக்.
சுக்கிரனுக்கு இதுக்கே  நாக்கு தள்ளி போயி கில்மா மேட்டர்ல கை விட்டுர்ராரு. அப்பாறம் இழந்த சக்தி வைத்தியர்களை தேடி அலையறோம்.
நம்ம நண்பர் அவர் ஜாதகத்துல சுக்கிரன் உச்சம்.(ஆனால் லக்னாத் பாபி). வயசு அம்பது ப்ளஸ்.கண்ணாலம் கார்த்தியெல்லாம் நை.
வீடு மொத்தமும் “பூத் பங்களா ” மாதிரி இருக்கும். ஆனால் சமையலறையும் , பெட் ரூமும் சொர்க லோகம் போல இருக்கும். (வாடகை வீடு தேன் .சொந்த செலவுல ரீமாடலிங் பண்ணாரு) ரெண்டு வருசத்துக்கு மிந்தி ஷுகரு. போன வருசம் பைல்ஸ். இந்த வருசம் பைல்ஸ் ரிப்பீட்டு .
பல தடவை சொன்னாப்ல விரயத்துல உள்ள சுக்கிரன் லக்னாத் சுபனா இருந்தா “எல்லாம் ” தானா தேடி வரும். பாபியா இருந்தா ஜாதகர் தன் ஒட்டு மொத்த கிரக பலம், பண பலத்தையும் எக்ஸாஸ்ட் பண்ணி 3 மேட்டர்ல சுகம் காண்பார்.( அறுசுவை , தூக்கம் ,கில்மா) காலப்போக்குல இந்த 3 மேட்டருக்குமே ஆப்பு வந்துரும்.
இதான் விரய சுக்கிரன் பற்றிய செனேரியோ. நாளைக்கு ஃப்ரெஷ்ஷா புதுசா எதையாச்சும் ஆரம்பிப்போம்.

11ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

karuna

 

அண்ணே வணக்கம்ணே!

மொதல்ல சுக்கிரன் 1,2 பாவங்களில் நின்னா என்ன பலன்னு பார்த்தோம்.அடுத்து சுக்கிரன் 3,7,10 பாவங்களில் சுக்கிரன் நின்ற பலனை பார்த்தோம். பிறவு முந்தா நேத்திக்கு வரைக்கும் சுக்கிரன் 9 ஆம் பாவத்துல நின்னா என்ன பலன்னு பார்த்தோம். இந்த சீக்வென்ஸ்ல சுக்கிரன் 11 ல நின்னா என்ன பலன்னு பார்க்கப்போறோம்.

பொதுவா 11 ன்னா லாபஸ்தானம் தானே சுக்கிரன் லாபத்துல இருந்தா சுக்கிர காரகங்களில்  லாபம் தானே கிடைக்கும்னு நினைப்பிங்க. இது ஓரளவு நெஜம் தான்.

ஆனா இந்த இடத்துல பழைய பல்லவிய ஞா படுத்திக்கனும். சுக்கிரன் லக்னாத் சுபரா இருந்தா இந்த நற்பலனை எதிர்ப்பார்க்கலாம். அடிஷ்னலா   மற்றொரு அம்மாவாகிய “மூத்த சகோதிரி”யின்  பாசம் ,நேசம்லாம் கிடைக்கும்.  அவிகளால அனுகூலம் ஏற்படும். ஒன்னுக்கு ரெண்டு மூ.சகோதிரிகள் கூட இருக்கலாம்.சுக்கிர காரகங்கள் லாபம் கொடுக்கும். கலை,இலக்கியத்துல ஆர்வம்,தேர்ச்சி ,லாபம் கிடைக்கலாம்.

பாவங்களுக்கு கூட கிரேடிங் இருக்குங்கோ. லக்னம்,5 ,9 பாவங்கள் ஃபர்ஸ் கிரேட். லக்னம்,4,7,10 செகண்ட் கிரேட். , இந்த கிரேட் வரிசையில லாபஸ்தானம்ங்கறது தள்ளு கேஸுதான்.

சப்போஸ் சுக்கிரன் லக்னாத் பாபியா இருந்தா ஒரே நேரத்துல ரெண்டு குட்டிகளை கணக்கு பண்றது .பல்பு வாங்கி ரெண்டு பேரையும் பிரியறதும் நடக்கலாம்.

சுக்கிர காரகங்களின் நிறைய ஆர்வம் இருக்கும். பிஞ்சுல பழுத்துருவாய்ங்க.கரெக்டா கிடைச்சே ஆகவேண்டிய வயசுல ஒரு இழவும் கிடைக்காது.

இவிக வமிசாவளியில ஒருத்தருக்கு ரெண்டு  கண்ணாலம் நடந்திருக்கலாம்.அல்லது ஆருனா கண்ணாலத்துக்கு மிந்தியே டிக்கெட் போட்டுர்ரது, பெண்கள் சரியான குடும்ப வாழ்க்கை அமையாம அவதி படறது, இளம் விதவைகள் இருக்கிறதும் இருக்கலாம். இந்த இம்பாக்ட்னாலே இவிகளுக்கும் ஒன்னுக்கு ரெண்டு கண்ணாலம் நடக்கிறது -பிரிஞ்சு சேர்ரது நடக்கலாம்.

ரெண்டு வீடு (டூ ஸ்டேர்ஸ் ,ரெண்டு தலைவாசல்) ,ரெண்டு வாகனம்,ரெண்டு பொஞ்சாதி இருந்தும் வெளியூர்ல ,தனிய அவதிப்பட வேண்டி வரலாம். ரெண்டு டிகிரி வாங்கலாம். அம்மாவோடு இன்னொரு மதர்லி லேடி கேரக்டரோட பாசம் ,நேசம் ஜாதகருக்கு கிடைக்கலாம்.ஆனால் அந்த  ரெண்டு பேருமே குடும்ப வாழ்க்கை சரியில்லாம அவதி படலாம்.

ஒரு வேளை லக்னம் துலாம்,ரிஷபமா இருந்தா ரெண்டு விதமான மனோதத்துவம் இருக்கும்.  இதே போல ஒவ்வொரு லக்னத்துக்கு சுக்கிரன் எந்தெந்த பாவங்களுக்கு ஆதிபத்யம் பெற்றிருக்கிறார்னு பார்க்கனும். உ.ம் லக்னம் கடகம்னா இவரு லாபாதிபதி .அதே நேரம் பாதகாதிபதி.

இந்த மாதிரி ஒவ்வொரு லக்னத்துக்கும் பலன் மாறும். ஜாதகத்துல சுக்கிரனின் பலத்தையும் பார்க்கனும்.ஆட்சி,உச்சம் ,நட்புன்னு இருந்தா தீய பலன் குறையும், ந ற்பலன் கூடும். அடுத்து எந்த நட்சத்திர சாரத்துல இருக்காருன்னு பாருங்க. (சுக்கிரன் தன் சொந்த நட்சத்திரத்துல நின்னா பலம் சாஸ்தி . பரணி,பூரம்,பூராடம்)  . அடுத்து நவாம்சத்தை பாருங்க. சுக்கிரன்  ராசி சக்கரத்துல  நின்ன அதே ராசியில  நவாம்சத்துல கூட நின்னா பலம் சாஸ்தி. கையோட கையா பாவ சக்கரத்தையும் பாருங்க. சுக்கிரனோட நிலையில எதுனா சேஞ்ச் இருக்கா பாருங்க.

சுக்கிரன் சூரியனோட சேர்ந்தா அங்கே சூரியன் மட்டும் இருக்கிறாப்ல நினைச்சு பலனை கணிச்சுக்கங்க.  இதே இடத்துல சூரியனோட புதன் இருந்தா சுக்கிரனுக்கு மூச்சு விடவாச்சும் பலம் இருக்கும். சுக்கிரன்  ராகு ,கேதுவோட சேர்ந்தாலும்  நாஸ்திதான்.செவ்வாயுடன் சேர்க்கையும் வில்லங்கம்.

எச்சரிக்கை:
பப்ளிக் ப்ளாக்ல இதுக்கு மேல டீட்டெய்லா எழுதினா ஹிட்டு புட்டுக்கும்.அதனால அம்பேல் .உடுங்க ஜூட்டு.