வி(எ)டுபட்ட பதிவுகள்

பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_14.html

சோதிட கேள்வி – பதில் : 1
http://anubavajothidam.blogspot.com/2011/12/1-anubavajothidamcom.html

கேள்வி -பதில் : 2 ஆம் பகுதி
http://anubavajothidam.blogspot.com/2011/12/2.html

சசி நீக்கம் : 9 மாதங்களுக்கு முன்பே சொன்ன அ.ஜோ
http://anubavajothidam.blogspot.com/2011/12/9.html

கீதை உட்டாலக்கடின்னாலும் தடை சரியில்லை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_19.html

“சுதேசி” யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_22.html

பிட்டு படம் பார்த்த அனுபவம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_23.html

சமையல் கலை அறிவோம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_24.html

இன்றைக்கு நாள் எப்படி?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_25.html

ஹைகோர்ட் நீதியரசராய் ஒரு கிரிமினல்

http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_26.html

ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா?
http://anubavajothidam.blogspot.com/2011/12/23-anubavajothidamcom.html

“சேட்டைய” எங்கருந்து ஆரம்பிக்கலாம்?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_29.html

வி(எ)டுபட்ட பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே !

புதிய பதிவு போடவே இல்லின்னாலும் 1,200 வரை ஹிட்ஸ் வாங்கித்தர்ர ப்ளாக் இதான்.ஆனாலும் சோஷியலிஸ்ட் மனோபாவத்தோட சோனியா கிடக்கிற அனுபவஜோதிடத்தை தூக்கி நிறுத்த புதிய பதிவுகளை அதுல மட்டும் போட்டுக்கிட்டிருக்கன்.
நீங்க இந்த ப்ளாகை மட்டும் ஃபாலோ பண்ற பார்ட்டியா இருந்தா அந்த பதிவுகளை எல்லாம் மிஸ் பண்ணியிருப்பிங்க.
உங்களுக்காவ அந்த பதிவுகளோட சுட்டிகள்
பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?
சோதிட கேள்வி – பதில் : 1
கேள்வி -பதில் : 2 ஆம் பகுதி
சசி நீக்கம் : 9 மாதங்களுக்கு முன்பே சொன்ன அ.ஜோ
கீதை உட்டாலக்கடின்னாலும் தடை சரியில்லை
“சுதேசி” யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை
பிட்டு படம் பார்த்த அனுபவம்
சமையல் கலை அறிவோம்
இன்றைக்கு நாள் எப்படி?
ஹைகோர்ட் நீதியரசராய் ஒரு கிரிமினல்
ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா?
“சேட்டைய” எங்கருந்து ஆரம்பிக்கலாம்?

இசை பிரியர்களின் "கொலை வெறி"

பரிசில் கேட்டு
பாவலர் செல்வார்
பாராளும் மன்னர் அவை தனுக்கே
பாடல் கேட்டு அன்னை வந்தாள்
பாவலன் எனது குடிலினுக்கே
எமக்கிடை நிகழ்ந்த சம்வாதம்
நாளை உமக்கே ஒரு வேதம்
பாவலன்:
அன்னையே வா..
அற்பன் எனை தேடி
கற்பகம் வருவதா?
( இந்த ரேஞ்சுலயே இதை கொண்டு போனா போடா பொங்கின்னுட்டு கழண்டுக்குவிங்க..அதனால நம்ம ஸ்டைலுக்கு வந்துர்ரன்)
நான்:
வா.. தாயீ.. திடீர்னு தே.சீனிவாசன் படத்துல பெருமாள் மாதிரி விசிட் அடிச்சிருக்கே.. நான் ஏதும் பெருசா பாக்கி கீக்கின்னு கூட சொல்ல முடியாதே..
அவள்:
ஒன்னுமில்லைப்பா நீ அப்பப்போ நம்மை வச்சு கவிதைல்லாம் எழுதுவியே.. இடையில சுத்தமா நிப்பாட்டிட்டாப்ல இருக்கு?
நான்:
முள்ளை முள்ளால எடுத்த பிற்காடு ரெண்டையும் தூக்கி போட்டுரனும்னு சொல்வாய்ங்க.அப்படி வறுமைங்கற முள்ளை எடுக்க ஒன்னை முள்ளா உபயோகிச்சேன். முள்ளை எடுத்தாச்சு.அதான் உன்னையும் வீசிட்டன் போல ..என்னருந்தாலும் நானும் மன்சன் தானே..
அவள்:
என்னப்பா இது உன்னாட்டம் கவிஞர்ங்க எல்லாம் நான் தேவன் இறைவன்னு பந்தாவா எழுதிக்குவிப்பிக. நானும் .மன்சந்தானே ங்கறே
நான்:
யம்மாடி.. கண்ணதாசன் கூட எனக்கு மரணமில்லைன்னு எழுதினாரு.. ஆனால் இன்னைக்கு தமிழ் கூறு நல்லுலகே கொலைவெறியில தானே அலையுது.. அப்பம் கண்ணதாசனுக்கும் மரணம் வந்துட்டாப்ல தானே..
அவள்:
இன்னா ஆச்சு மகனே ..எம்.எஸ்.உதயமூர்த்திக்கே தன்னம்பிக்கைய இரவல் கொடுக்கிற பார்ட்டி நீ .அப்படியா கொத்தது நீயே இப்டி பேசலாமா?
நான்:
கொலை வெறி தலைக்கேறின சமயமும் கண்ணதாசனை தமிழ் மனம் மறக்காது. பத்து நாளைக்கப்புறம் கொலை வெறியை நினைக்காதுன்னு கவர் பண்ணி பேசலாம்.ஆனால் இந்த பத்து நாள் கண்ணதாசனுக்கு இறப்புங்கறது யதார்த்தமில்லியா?
அவள்:
நான் ஏதோ ஒரு பாட்டு வாங்கிக்கினு போயிக்கலாம்னு வந்தேன்.. உன் மூடு சரியில்லை போல இருக்கு. நான் கழண்டுக்கறேன்.
நான்:
ஹய்யோ ஹய்யோ.. பத்து வருசம் போனா நான் எழுதற இந்த தமிழையே பேச ஆளில்லை,எழுத ஆளில்லை. படிக்க ஆளில்லை இதுல புராதன தமிழ்ல நான் பாடி என்ன ஆகப்போகுது. ஆளை விடு தாயி..
அவள்:
பார்த்தயா இரும்பை காய்ச்சறாப்ல இத்தனை காச்சியும் உன் திமிர் போகலியே..
நான்:
ஆத்தா.. பாட்டுங்கறது ஓட்டுலருந்து பழம்புளி மாதிரி கழண்டு வரனும். புளியங்காயை நசுக்கினா என்னாகும்..
அவள்:
அப்போ உனக்கு எட்டு இடமும் குளிர்ந்திருந்தாதான் பாடுவேங்கறே..
நான்:
நான் அப்படி சொல்லலே. என் தமிழை தட்டி தரம் பார்த்து அதன் உரம் கண்டு வரம் கொடுக்க நீ மட்டும் இருந்தா போதாது..தரணியில தமிழ் தழைக்கனும். அப்பம் பாடினா ஒரு அருத்தம் இருக்கும்.
அவள்:
மகனே.. கால சக்கரம் வட்டமா சுழலும்.சரித்திரம் ஒரு பைத்தியம் மாதிரி .ஒரே மேட்டரை மறுபடி மறுபடி சொல்லும். வெய்ட் அண்ட் சீ..
நான்:
நம்ம ஃபிலாசஃபியே லைஃப் ஈஸ் வெய்ட்டிங் – என்பது தான்.காத்திருக்கிறதுல எனக்கு ஒன்னும் அப்ஜக்சன் இல்லை.
அவள்:
அப்பம் பாட்டு இல்லேங்கறே..
நான்:
ஆமா தாயீ .. நீ கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணி – காலண்டர் மேட்டரை சொதப்பி – ரெக்கார்டிங்குக்கு உபயோகிக்கிற மொபைலை மொக்கை பண்ணி என்னென்னமோ செய்து பார்த்தே. ஆனாலும் பாட்டு வரலை..
நான் இந்த நாட்டை – என் மொழியை – தருமத்தை – நியாயத்தை – காலைல அஞ்சு மணிக்கு எழுந்து சோறாக்கி வேலைக்கு போயி ஆறின சோத்தை தின்னு – கூலி வாங்கி -அரிசி வாங்கி -புளி வாங்கி சமைக்கிறாளே அந்த சித்தாளை கூட உன் உருவமாத்தான் பார்க்கிறேன்.
இதையெல்லாம் ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிற்காடு பாட்டு என்ன பாட்டு காவியமே தீட்டிருவம்ல.. வெய்ட் அண்ட் சீ..

ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா?

அண்ணே வணக்கம்ணே ! அக்டோ 30 முதல் மார்ச் 22 வரைங்கற தலைப்பு ல சிம்மத்துல செவ் ஸ்தம்பனம் ஆறதை பற்றி ஒரு பதிவை போட்டிருந்தேன். படிக்காதவுக – படிச்சுட்டு விஷயத்தை மறந்து போனவுக இங்கன அழுத்தி மறுபடி ஒரு ஓட்டு ஓட்டிருங்க. பொறுமையில்லாதவுகளுக்காக அதனோட சுருக்கம்:

45 நாள்ள ஒரு ராசிய விட்டு காலி பண்ண வேண்டிய செவ் 2011 அக்டோ 30 முதல் 158 நாள் சிம்மத்துல கேம்ப் அடிக்கிறாரு. இதுல 2012 ஜனவரி 23 வரை சாதா சஞ்சாரம், மார்ச் 22 வரை வக்ர சஞ்சாரம்.

இதுக்கும் ஜெ -சசி விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக.சொல்றேன். அம்மா ராசி சிம்மம். சிம்மத்துலதேன் செவ் கேம்ப் அடிச்சிருக்காருங்கறது சொல்லவும் வேண்டுமோ?

செவ் சகோதர காரகர். சசி அம்மா உடன் பிறவா சகோதரி, ஜன்ம செவ் 4 ஐ பார்ப்பாரு. அதனால ” உள்ளடி” வாங்கனும். 7 ஐ பார்ப்பாரு.அதனால கூட இருக்கிறவுகளோட முட்டிக்கனும். எட்டை பார்ப்பாரு. அதனால எதிரிகள் சதிக்கு பலியாகியிருக்கனும்.

அம்மா ஜாதகத்துல செவ் 2 ல் நின்று எட்டை பார்த்து 09/Jun/2011 முதலாக ராகு தசையில் தன் புக்தியை நடத்திக்கிட்டிருக்காரு. ( 1 வ. 18 நாளைக்கு அதாவது 27/ஜூன்/2012 வரைக்கும் ) . கணக்கு டேலி ஆகுதுங்களா?

இதை வச்சுத்தேன் சசி -ஜெ வெட்டுக்குத்தை முன் கூட்டி கணிச்சு சொல்லியிருந்தம். சரி செவ் புக்தி , செவ் ஸ்தம்பனம்லாம் சேர்ந்து வேலை கொடுத்துருச்சு. இது இன்னம் எத்தீனி நாளைக்குன்னு கேப்பிக சொல்றேன்.

செவ் 2012, ஜனவரி 23 வரை சாதாரண சஞ்சாரம். அதுக்கப்பாறம் படக்குனு வக்ரமாயிர்ராரு. கிரகம் வக்ரமாகும் போது தன் நிலைக்கு – இயல்புக்கு முற்றிலும் மாறுபாடான பலனை தரனும்ங்கறது விதி. கிரகங்கள் வக்ரமாகும் போது பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆறது நம்ம அனுபவம்.

இந்த கணக்கு பிரகாரம் ஜெ -சசி மறுபடி சேர்ந்துக்குவாய்ங்கன்னு சொல்ல முடியும். இந்த பேட்ச் அப் மார்ச் 22 வரை தொடர்ந்தாலும் வக்ர நிவர்த்திக்கு பிறகு பழைய குருடி கதவை திறடின்னு ஆனாலும் ஆயிரலாம்.

இந்த சிச்சுவேஷன்ல நாம அம்மாவுக்குன்னு ஸ்பெசலா நாலு வரி சொல்லலின்னா அது துரோகமாயிரும். நமக்கு ஆன்லைன் மூலமா படியளக்கிற புண்ணியாத்மாக்கள் தமிழ் பேசறவுக -தமிழ் நாட்டை சேர்ந்தவுக. அம்மா நல்லபடியா இருந்து – நல்ல விதமா அரசாண்டா அவிகளும் நல்லாருப்பாய்ங்க. நமக்கு படியளக்கிற அன்னதாதாதாக்களும் நல்லாருப்பாய்ங்க. அதனாலதேன் இந்த நாலுவரி.

ஓவர் டு அம்மா..

யம்மா ! சொந்த விஷயமா தமிழ் நாட்டு ஊர்காவலரை ஃபேஸ் பண்ற “தேஜஸ்” கூட இல்லாத பார்ட்டி நானு .ஆனால் சோ மாதிரி சாணக்யர்களையே கிச்சன் கேபினட்ல வச்சிருக்கிற உங்களுக்கு அட்வைஸ் பண்ற தில் எப்படி வந்துருச்சுன்னா இதுல சுய நலம் கடியாது.

நான் சொல்ல வேண்டிய வரிகளை சொல்றதுக்கு மிந்தி என் அனுபவத்துல நான் தெரிஞ்சுக்கிட்டு பஞ்சா விட பஞ்சை சொல்லிர்ரன்.

நல்லவனுக்கு நல்ல நேரம் வரும்போது கடவுள் அவனுக்கு கொஞ்சமா கெட்ட புத்தியை கொடுத்து லைஃப்ல செட்டில் பண்ணிர்ராரு.

கெட்டவனுக்கு கெட்ட நேரம் வரும் போது அதே கடவுள் அவனுக்கு கொஞ்சமா நல்ல புத்தியை கொடுத்து ஸ்மாஷ் பண்ணிர்ராரு.

உங்களுக்குன்னு இருந்த கொஞ்சம் நஞ்சம் பேரையும் நாறடிச்ச கூட்டம் சசி அண்ட் கோ. இதுல ஆருக்கும் எந்த சந்தேகமும் கடியாது. அவிகளுக்கு கல்தா கொடுத்தது நல்ல மேட்டரு தான். ஆனால் இது நம்ம பஞ்ச்ல ரெண்டாவது பாரால சொன்ன விதமா இருந்துரக்கூடாதுங்கறதுதேன் நம்ம கோரிக்கை.

தப்பான வழியில எம்மாந்தூரம் போயிட்டம்ங்கறது மேட்டரே கடியாது. எப்பம் யூ டர்ன் எடுக்கிறோங்கறதுதேன் மேட்டர்.

தப்பான வழியில போறச்ச சிக்ஸ் ட்ராக் ரோட்ல போற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்.ஆனால் அதனோட முடிவு அதல பாதாளமாத்தான் இருக்கும்.

நல்ல வழிக்கு திரும்பினதும் எல்லாமே ரிவர்ஸ் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங் வந்துரும். தப்பு பண்ணிட்டமோங்கற சந்தேகம் வரும். பழைய ரூட்டுக்கே திரும்பிரலாமாங்கற ஊசலாட்டம் வரும். ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தேன். மெறிச்சு நின்னுட்டா எல்லாம் பளிங்கு மாதிரி துல்லியமாயிரும்.

நாம கால் பந்தாட்டத்து பந்து. கிரகங்கள் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர்ஸுங்கற மாதிரி உங்காளுங்க சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க. கடவுள் மன்சனை சுதந்திரமா வாழச்சொல்லித்தேன் அனுப்பியிருக்காரு.

இந்த கெரகம் -வாஸ்துல்லாம் நாம சுய நலத்தோட செய்ற வேலைகளை தான் பாதிக்கும். பொது நலத்தோட செயல்பட ஆரம்பிச்சுட்டா நம்ம செயல்களால ஆரெல்லாம் பயனடைய போறாய்ங்களோ அவிகளோட நலல நேரம்லாம் நமக்கு ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுரும்.

சமச்சீர் கல்வி முதலாக அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை நடந்ததெல்லாம் நடந்ததா இருக்கட்டும். நடக்கப்போறது நல்லதா இருக்கட்டும்.

அரசியலே ஒரு பிரமிட் மாதிரி . இதுல அடித்தளத்துல நிக்கிற தொண்டன் தேன் ரெம்ப முக்கியம். சோ மாதிரி கேரக்டர் எல்லாம் கோபுரத்து பொம்மை மாதிரி . அன்னைக்கு திமுக வை மைனாரிட்டி திமுக அரசுன்னு கிழிச்சிங்க.

சோ மாதிரி ஆட்களோட கோட்டரியை எல்லாம் சேர்த்துக்கிட்டா நீங்களும் மைனாரிட்டி ஆயிருவிங்க. தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருக்கு. புரோக்கர்களோட அவசியமே இல்லாம மக்களோட நீங்க இன்டராக்ட் ஆகமுடியும். உ.ம் ஜெயா டிவியில மக்களோடு முதல்வர்னு ஒரு ஃபோன் இன் புரோகிராம் பண்ணலாம், ட்விட்டர்,ப்ளாக் அது இதுன்னு ஆயிரம் இருக்கு.

நீங்க ஜெயிச்சு வந்த புதுசுல தமிழகத்தின் நிதி நிலையை சீராக்க – மக்கள் மேல் பாரம் சுமத்தாது வருமானத்தை அதிகரிக்க சில ஐடியால்லாம் வச்சு ஒரு பதிவு போட்டிருந்தன்.அதனோட சுட்டி இதோ

பென்னி குக் சொன்னாராம். ” நான் இந்த பூமிக்கு வந்தது இதுவே முதலும் கடைசியும்.போறதுக்கு மிந்தி எதையாவது செய்துட்டு போகனும்”

நான் சொல்றேன். நீங்களும் பல கோடி கணக்கான முறை இதே வாழ்க்கைய வாழ்ந்து இதே ராஜபோகத்தை பெற்று இதே மாதிரி மிஸ் யூஸ் பண்ணி மறுபடி மறுபடி வந்துக்கிட்டிருக்கிங்க.

நானும் இன்னைக்கு சொல்ற இதே மேட்டரை பல கோடிக்கணக்கான முறை உங்களுக்கு சொல்லிக்கிட்டுதான் இருந்தேன். கேட்டுக்கலை. இந்த முறையாவது காதுல போட்டுக்கங்க.

தப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் அதை சொந்த புத்தியோட செய்யனும். ஆரோ செய்த தப்புக்கு தண்டம் அழறது கிரிமினல் வேஸ்ட்.

பெஸ்ட் ஆஃப் லக்..

பிட்டு படம் பார்த்த அனுபவம்

அண்ணே வணக்கம்ணே !

நாலாம் க்ளாஸ் படிக்கறச்சயே “பருவம்”படிச்ச கேஸு நாம. அல்லாமே ரெண்டு வருசத்துல போரடிச்சுரும். இப்படி பல விஷயங்களை தொட்டதுண்டு, அப்பாறம் விட்டதும் உண்டு. அப்படிப்பட்ட பட்டியல்ல ஒன்னுதேன் பிட்டுப்படம்.

நம்ம ஊருல ஒரு தியேட்டர் மொக்கையாயிட்டா நஷ்டத்தை சமாளிக்க ரெண்டு மூனு வழிதேன்.ஒன்னு எம்.ஜி.ஆர்,சிவாஜி பழைய படங்கள்,ரெண்டு என்.டி.ஆர் ,ஏ.என்.ஆர் பழைய படங்கள் போடனும். இல்லாட்டி பிட்டுதேன்.

பிட்டு படம் ஓட்டறது – பார்க்கிறதுல்லாம் அல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு நினைக்கிறேன்.
இருந்தாலும் அனுபவங்களை மேட்ச் பண்ணி பார்த்துக்க வசதியா இந்த பதிவு. இந்த படத்துக்கெல்லாம் பிகின் பண்றதுக்கு ஒரு டைம் -இன்ட்ரோலு – ஊட்டுக்கு உடறதுல்லாம் இருக்காது.

மெயின் பிக்சர் ஒரு நல்ல படமா கூட இருக்கலாம். ஆனால் அதுக்கான போஸ்டர் புதிய தலைவரின் “எழுச்சி உரை” மாதிரி பம்பார்டா இருக்கும். பத்துமணியிலருந்து சட்டசபைக்கு எம்.எல்.ஏங்க கணக்கா பார்வையாளர்கள் வந்துக்கிட்டே இருப்பாய்ங்க. ஆனால் லைட்ஸ் ஆஃப் ஆனபிற்காடுதேன் என்ட்ரியே கொடுப்பாய்ங்க.

சுமாரா கூட்டம் சேர்ர வரைக்கும் மெயின் படம் தேமேன்னு ஓடிக்கிட்டிருக்கும். கூட்டம் ஒரு மாதிரியா சேர்ந்து இனி ஆரும் வரமாட்டாய்ங்கன்னு ஆப்பரேட்டர் முடிவு பண்ணிட்டா பிட்டை தூக்கி கோர்த்துவிடுவாரு.

தொந்தியும் தொப்பையுமா ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அவசர அவசரமா- அப்பப்போ கேமராவை திரும்பி பார்த்துக்கிட்டு கெ.கா செய்வாய்ங்க.ஆண் பெண்ணுன்னு சொல்றது ஒரு உத்தேசமான அவுட் லைனை வச்சுத்தேன். இன்னைக்கு ? வாழ்க தகவல் தொழில் நுட்பம். பிட்டு முடிஞ்சதும் தலைவர் பேச்சுக்கு பின்னான மாநாடு கணக்கா சனம் படக்குனு காலியாயிருவாய்ங்க. செக்ஸும் குழந்தை பிறப்பும் -குப்த ஞான் – எய்ட்ஸ் & பால்வினை நோய்கள் இதெல்லாம் வேறு சாதி.

இப்படி பிட்டு படத்துக்காகவே ஒரு தியேட்டர் சுடுகாட்டை தாண்டி இருந்தது.செகண்ட் ஷோ போறச்ச சுடுகாட்டுக்குள்ளாற போயி போனா “சுருக்க” போயிரலாம்னு கூட்டாளிகளை ஏமாத்தி சமாதிகள் மேல உட்கார்ந்து பஞ்சாட்சரி சொன்ன நாட்களும் உண்டு.

பிட்டு கதை இதோட முடிஞ்சுரலை. இப்பத்தேன் அசலான விஷயத்துக்கு வரப்போறேன். பேசும்போது பிட்டை போடறதை பத்தி கொஞ்சம் பேசுவம். பேசும் போது பிட்டை போடலாம் .ஆனால் ஆளுக்கேத்த பிட்டா போடனும் !

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற பாய்ண்டை பார்த்துட்டு சந்தர்ப்ப வாதம் பண்ண சொல்றதா நினைச்சுராதிங்க.

சினிமா உலகத்துல நேட்டிவிட்டின்னு ஒரு சமாசாரத்தை பத்தி மஸ்தா பேசுவாய்ங்க. நீங்க பேசற மேட்டரு எதிராளிக்கு அன்னியமா தோனாம அட நமக்கு சம்பந்தப்பட்ட மேட்டரா இருக்கேன்னு தோனும்படி பேசனும்.அதைத்தேன் ஆளுக்கேத்த பிட்டா போடனும்னு சொன்னேன்.

சட்டியிலிருந்தாதானே அகப்பையில வரும் – இது மேட்டரு. இதை ஒரு டூவீலர் மெக்கானிக்குக்கு சொல்லனும்னா “டாங்குல இருந்தாதானே கார்ப்பெட்டர்ல வரும்”னு சொல்லனும் .( கார்ப்போரேட்டர் – இது சரியான உச்சரிப்பு -ஆனால் இப்படி உச்சரிச்சா நீங்க அன்னியமாயிருவிக)

லைஃப்ல பாலன்ஸ் பண்ணிக்கிட்டு போகனும்னு ஒரு தாய்குலத்துக்கு சொல்றாப்ல இருந்தா தயிர் குழம்புல இஞ்சி போடறோம் சாம்பார்ல பெருங்காயம் போடறோம் ஏன்? தயிர் சீதளம் இஞ்சி சூடு. பருப்பு வாயு. பெருங்காயம் அதை சால்வ் பண்ணும்னு சொல்லனும்.

ஆளுக்கேத்த பிட்டா போடனும்ங்கற யதார்த்தத்தை நான் உணர்ந்துக்கிட்டது டீன் ஏஜ்லன்னா ஆச்சரியபடுவிங்க.ஆனா இது நெஜம். அந்த காலத்துல நம்ம கொலிக்ஸ் எல்லாம் “பலான” மேட்டர்னா உடனே வாயை பொளப்பாய்ங்க.

ஆனால் நாம வர்ஜியா வர்ஜியமில்லாம படிச்சுட்டு கண்டதையும் ரோசிச்சு கண்டதையும் கண்டுபிடிச்சுக்கிட்டிருப்பம். அதை பகிர்ந்துக்கிட்டா அது நம்ம மனசுல பச்சக்குனு பதியும்.எப்படி பகிர்ந்துக்கறது?

உன்னதமான மேட்டரை கூட பலான உவமான உவமேயங்களோட சொல்ல ஆரம்பிச்சம். ஃபார்முலா சூப்பர் சக்ஸஸ். (அதை இப்பயும் கன்டின்யூ பண்ண வேண்டி இருக்கிறது சோகம்) சொல்ல வேண்டிய ஃபார்ம் எவ்ளோ முக்கியமோ சொல்ல வேண்டிய மேட்டரை ஷேப் அப் பண்ணிக்கிறது ரெம்ப முக்கியம். இதுக்கு ரோசிக்கனும்.

அதென்னமோ நமக்கு ரோசிக்க வேண்டிய அவசியமே இல்லாம மைக்ரோ செகண்ட்ல ஸ்பார்க் ஆகும்.
இன்னைக்கு ஒரு கேள்வி.மாமியாரு அடிமை மாதிரி நடத்தறாய்ங்க.கேவலமா பேசறாய்ங்க. இதுக்கு என்ன பரிகாரம்?

ஒரு கருப்பு கயிறு எடுத்துக்க அதுல ஒரு சங்கை கோர்த்துக்க . அதை கழுத்துல மாட்டிக்க. இப்படி இன்னம் ரெண்டு கயிறு ரெடி பண்ணி வீட்டு வாசல், வாகனத்தோட பம்பருக்கு கட்டிக்க. ஒரு ப்ளூ நிற ப்ளாஸ்டிக் உண்டியல் வாங்கிக்க.அது மேல வராக ஸ்வாமி படத்தை பேஸ்ட் பண்ணு. வாராவாரம் 8 ரூ உண்டியல்ல போட்டுக்கிட்டே வா. பிரச்சினை தீர்ந்தா அந்த பணத்தை திருமலை வராகஸ்வாமி உண்டியல்ல சேர்த்துருன்னு சொல்ட்டு கழண்டுக்கிட்டோம்.

இதுல உள்ள லாஜிக் என்ன? மொத்தத்துல பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ரோசிச்சு சொல்றவுகளுக்கு ஜோதிடம் 360 பாம்லெட் இலவசம்.

‘சுதேசி’யில் கனிமொழி எதிர்காலம்

அண்ணே வணக்கம்ணே !
ஒரு ஆசாமி ஊருக்கு புதுசா வந்த சாமி(யார்) கிட்டே லைஃப்ல நிம்மதியே இல்லை. என்ன பண்ணலாம்னு கேட்டாரு. சாமி விவரமான ஆளு. ஒரு நா கோழி வளர்க்க /இன்னொரு நாள் நாய் வளர்க்க / இன்னொரு நாள் கிளி வளர்க்கன்னு உபதேசங்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருந்தாரு.

என்ட்ரி கொடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு விதமா டார்ச்சர் பண்ண – ஒன்னு இன்னொன்னை விரட்ட ஆசாமிக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சிருச்சு. மறு நாள் டக்கர் குட்டி ப்ரதர்னிட்ட கணக்கா பயங்கர விரக்தியோட சாமியை பார்க்க போனாரு.

சாமி நீ வளர்க்க ஆரம்பிச்ச எல்லா ஜீவராசியையும் ஜெ சசி அண்ட் கோவை விரட்டின மாதிரி விரட்டிருன்னாரு. ஷாட் கட்.

மறு நாள் ஆசாமி வந்தான். அக்மார்க் இழந்த சக்தி வைத்தியரை பார்த்து லேகியம் சாப்ட கணக்கா சுஸ்தா வந்தான். சாமி கேட்டாரு.

எப்படிப்பா இருக்கேன்னாரு அதுக்கு ஆசாமி தினத்தந்தி ஹெட் லைன்ஸ் கணக்கா ” நிம்மதியா இருக்கேன் சாமி”ன்னான்.

இந்த கதையை ஏன் இப்பம் சொல்றேன்னு கேப்பிக.சொல்றேன். தெய்வம் என்னெல்லாம் கொடுத்திருக்கோ அதனோட மகிமை அதுக நம்மாண்ட இருக்கிற வரை தெரியாது, எதுனா கிரகம் சைடு வாங்கி உள்ளடி கொடுத்து “உள்ளது போச்சுரா நொள்ளை கண்ணா”னு ஆயிட்டா அப்பத்தேன் தெய்வம் நம்மை “எம்மாம்”
கருணையோட ஆசீர்வதிச்சிருந்தாருன்னு புரியும்.

நம்ம கதையும் அப்படித்தேன் ஆயிருச்சு. இந்த 40+ வயதுங்கறது ஒரு ஆணோட லைஃப்ல முக்கியமான காலகட்டம். மேலும் மேலும் தீவிரமா உழைச்சு மேலும் மேலும் சொத்து சுகம்னு சேர்க்க வேண்டிய வயசு.

நாம பைபிள் சொல்றாப்ல ( பறவைகள் விதைப்பதுமில்லை -அறுப்பதுமில்லை) வாழ்ந்துட்ட பார்ட்டி. பழக்கத்தை மாத்திக்க முடியலை. ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப் மாதிரி ஓடிக்கிட்டிருந்தது. எங்க பாட்டி “அவுத்து வுட்ட மாடு மாதிரி”ன்னு சொல்வாள்.அப்படி ஒரு லைஃப்.

மொதல் ஆப்பு மின்வாரியம் வச்சுருச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் பவர் கட். இதுக்கு மிந்தி தீப்பெட்டி கணக்கான போர்ஷன்ல பவர் கட் நேரத்துலயும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தம். ( அதாங்க பலன்களை பதிவு பண்ணி வச்சுக்கறது) .

வாழ்க்கையில உயரனும்ங்கறதை நெஜமாக்க மேல் மாடிக்கு வந்துட்டமா சுத்து வட்டாரத்துல வியாபர தலங்கள் , லாட்ஜுகள்ள ஓடும் ஜெனரேட்டர்கள் சத்தம் மண்டைய பிளக்குது.இதுல என்னத்தை பதிவு பண்றது.

இடையில இந்த காலண்டர் சமாசாரம் ஒன்னு .( இன்னைக்கு பாரத்தை சென்னை ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ் தலை மேல இறக்கியாச்சுன்னு வைங்க) . ஜோதிடம் 360 நூல் வெளியீடு ஒன்னு. ( பொங்கல் வெளியீடு)

எல்லாம் சேர்ந்து ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல பயங்கர எஃபெக்ட் வந்துருச்சு. இந்த இழவுல ஒரு சாட்சி சொல்லும் கடமை வேற .

அல்லாத்துக்கும் க்ளைமாக்ஸ் மாதிரி காலண்டர் ப்ரிண்டிங் வேலையா சென்னைக்கு போன நம்ம பாப்பாவோட உட்பி + அவள் வேலை பார்க்கும் ஸ்டுடியோ ஓனர் அவளுக்கு செக்யூரிட்டியா போறதால தன்னோட வளர்ப்பு நாயை நம்ம ஆத்துல விட்டுட்டு போயிட்டான். ஏற்கெனவே நம்ம ஆத்துல ஒரு டிக்கெட் இருக்கு.

ஆனால் அது ஸ்னேகா டைப். புதுசா வந்த டிக்கெட் இருக்கே கொய்யால சஞ்சய் காந்தி டைப். நம்ம நரம்பை கழட்டிருச்சு போங்க. இப்பத்தேன் உறைக்குது ஆத்தா நம்மை எந்த அளவுக்கு காபந்து பண்ணி வச்சிருந்தான்னு.

நாளையிலருந்தாச்சும் கொஞ்சம் நிம்மதியா விட்டா “பொளப்ப” பார்க்கலாம். ஆத்தா என்ன பண்றாளோ ஆருக்கு தெரியும்?

எச்சரிக்கை:

கனிமொழியின் எதிர்காலம் குறித்த நம்ம கணிப்பு சுதேசி இதழ்ல வெளியாகியிருக்கு. கடைசி பாராவுல மட்டும் தங்கள் சரக்கை சேர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்காய்ங்க. ஆன்லைனில் பார்க்க விரும்பறவுக கீழே உள்ள சுட்டிகளை க்ளிக்கி பார்க்கலாம்.

http://sudesi.com/tamil/viewpage?order=21
http://sudesi.com/tamil/viewpage?order=22

(என்னண்ணே சோதிட கேள்விபதில் பகுதிக்கு மொத நாள் வந்த கேள்விகளோட சரி ..கேள்விகளே வரலை.. ஆளுக்கு ஒன்னா தூக்கி தட்டுங்க. இல்லாட்டி ஜா.ரா மாதிரி போலி பெயர்ல கேள்வி கேட்டு பதில் கொடுக்க வேண்டி வந்துரப்போவுது)

கீதையே உட்டாலக்கடின்னாலும் தடை கூடாது

அண்ணே வணக்கம்ணே !

ரஷ்யாவுல கீதைய தடை பண்ணப்போறாய்ங்கன்னு ஒரே லொள்ளு. இது நம்ம பாராளுமன்றத்துல கூட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கு.

நம்மை கேட்டா தடை பண்ணனும்ங்கறது நம்ம ஸ்டாண்ட் இல்லை. ஆனால் நாளாவட்டத்துல கரப்ட் ஆயிட்ட இன்றைய கீதைய ஒரு இந்து இளைஞன் பதினெட்டு புராணங்கள் ,வேதங்களின் சுருக்கம்னு நம்பி ஏமாந்துராம இருக்க ஒரு விழிப்புணர்வை தர வேண்டிய கட்டாயம் இருக்கு. அதிக பட்சமா அப்டேட் பண்ணலாம். குறைந்த பட்சமா சில பகுதிகளை நீக்கலாம். ( உ.ம் வர்ணாசிரம தர்மம்/ அன் சைன்டிஃபிக்/ பகுதிகள்)

விளம்பரங்கள்ள ஸ்டார் மார்க் கொடுத்து “ரிஸ்கை” விவரிக்கிறாப்ல பொடி எழுத்துலயாச்சும் “இதன் மீது பல்வேறு விமர்சனங்க இருக்கு . அதையும் படிச்சு முடிவெடுக்கிறது நல்லதுன்னு போட்டாகனும்.

இங்கன பவர் கட் நேரம் நெருங்கிருச்சு. அதுக்குள்ளாற பதிவையும் போட்டு பிங் பண்ணவும் வேண்டியிருக்கு.அதனால ஒரு சில வெளி பதிவுகளின் சுட்டிகளை கொடுத்து கழண்டுக்கறோம். கடேசியில நாம எழுதின பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி பதிவின் சுட்டியையும் தந்திருக்கம்.

சனம் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வர்ரது நல்லது,

பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டும் இலக்கியமா? தீர்ப்பு வழங்க காத்திருக்கும் சைபீரிய நீதிமன்றம்
http://www.tamilkudiyarasu.com/?p=2242

பகவத்கீதை புனித நூலா? ‘மனுதர்ம’ கையேடுவா?
http://www.generationneeds.blogspot.com/2011/12/blog-post.html

ஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை…
http://paraneetharan-myweb.blogspot.com/2011/08/blog-post_19.html

நாம எழுதின தொடர்பதிவோட சுட்டி :

http://anubavajothidam.com/geetha-fake/