தொழிலும் கில்மாவும் : 2

மொபைல் ஹவுஸ்

அண்ணே வணக்கம்ணே !
இப்படி பைசா அப்படி கில்மா ரெண்டையும் கேட்ச் பண்ணத்தேன் ஆண் உலகம் லோ லோன்னு லோல் படுது. குட்டிகளை பிக் அப் பண்ற பர்சனாலிட்டி – அட்வெஞ்சர் – நாலெட்ஜ் எதுவுமில்லாத சனம் சுத்தி வளைச்சு பைசா புரட்டிரலாம் .அப்பாறம் ஆட்டோமெட்டிக்கா நமக்குன்னு ஒன்னு வந்துருங்கற சப் கான்ஷியஸ் தாட்ல ஒர்க் அவுட் பண்ணுதுங்க.

இதுல இன்னாடா சிக்கல்ன்னா இவன் பணத்தை துரத்தி துரத்தி தொந்தி,தொப்பை,பிருஷ்டம் பெருத்து பாடியெல்லாம் பாடி போடற அளவுக்கு ஆயி, பேட்டரி வீக் ஆகி , மேற்படி சமாசாரத்தை அல்ப்ப சங்கியைக்கு மட்டும் உபயோகிச்சுக்கிட்டிருக்கிற காலத்துல பொஞ்சாதி மட்டும் வீட்டோட யூத்தா ,ஃப்ரெஷ்ஷா இருக்கிறதை பார்த்து வீட்டுக்கு வர்ர எலக்ட் ரீஷியன் மேல ப்ளம்பர் மேலல்லாம் சந்தேக படவேண்டி வர்ர காலத்துல கொய்யால தப்பு பண்ணிட்டமோன்னு இழந்த சக்தி வைத்தியர்களை தேடி ஓட வேண்டி வந்துர்ரது.

அதே நேரம் மேற்சொன்ன பர்சனாலிட்டி -அட்வெஞ்சர் – நாலெட்ஜ் எல்லாத்தையும் வச்சுக்கிட்டு மந்தை மந்தையா குட்டிகளை கட்டி மேய்ச்ச பார்ட்டிங்க குட்டிகளோட இன்செக்யூரிட்டி – எதிர்காலம் பற்றிய சிந்தனை இத்யாதி வெளிப்படும்போது நாக்கை கடிச்சுக்கிட்டு கொய்யால தப்பு பண்ணிட்டமே “இதுகளுக்கு கில்மாவ விட பைசா தான் முக்கியம் போல”ன்னு யு டர்ன் அடிச்சு பைசா புரட்ட கிளம்பிர்ராய்ங்க.

இந்த இழவையெல்லாம் ஓவர் கம் பண்ண முடியாதா? இது ரெண்டுத்துக்கும் இடையில உள்ள தொடர்பு தான் என்ன? எல்லாத்தையும் நோண்டி நுங்கெடுத்துருவமில்லை.
ஜாதகத்துல 10 ஆமிடம் தொழில்-உத்யோகம் -வியாபாரத்தை காட்டுது. எட்டாமிடம் மரணம் -இன உறுப்பை காட்டுது. இந்த இரண்டு அதிபதிகள் அல்லது பாவங்களுக்கு தொடர்பு ஏற்பட்டால் ரெம்ப நல்லது. தொழில்-உத்யோகம்-வியாபாரத்துல ஆர்வம்,பிடிப்புல்லாம் வரும்னு கடந்த பதிவுல சொன்னேன்.

இந்த தொடர்பால் மேற்படி நன்மைகள் ஏற்படும் அதே நேரத்துல பத்தாமிடம் கர்மஸ்தானம்ங்கறதால . கர்மங்கள் கூடும். எட்டாமிடம் இன உறுப்பை மட்டுமல்லாது பேரிழப்புகள்,விபத்துகள்,தனிமை உணர்வு, வீண்பழி,சிறை செல்லுதல், தலை மறைவாதல்,திவால் ஆதல் இத்யாதிய கூட காட்டும் என்பதால் இவையும் ஏற்படலாம்.
என்ன பாஸு இப்படி குழப்பறிங்கன்னு கோச்சுக்காதிங்க. உள்ளதை சொன்னேன் தட்ஸால். வாழும் உதாரணம் வேணம்னா சரவணபவன் அண்ணாச்சி.
தொழில் -கில்மா இரண்டுக்கும் தேவை பவர். ஹ்யூமன் பாடியில உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் உருவாக்குதல் (குழந்தை மட்டுமல்ல – புதிய உலகம் ,புதிய நாடு இப்படி எதை உருவாக்கனும்னாலும் இதே பவர் தான் தேவை)

எட்டு பத்து அதிபதிகள்னா கடகலக்னத்துக்கு சனி செவ் தான். இவிக ரெண்டு பேருக்கும் தொடர்பு ஏற்படும் போதெல்லாம் நாம ரெம்ப பிசியாயிர்ரம். இல்லேங்கலை. (இப்பவும் கடக செவ் நாலாம் பார்வையா துலாத்துல இருக்கிற சனியை பார்க்கிறாரு)

ஆனால் நமக்கு மட்டும் பேசிக்கல் மெடிக்கல் நாலெட்ஜ், ஹெல்த் கான்ஷியஸ் இல்லாம இருந்திருந்தா இன்னேரத்துக்கு பைல்ஸ் ,ஃபிஸ்டுலா எல்லாம் வந்திருக்கும். அதுக்குண்டான சிம்ப்டம்ஸ் எல்லாம் புஷ்கலமா வந்தாச்சு ( சனி = ஆசனம் , செவ் = ரணம்) .

ஒழுங்கு மருவாதியா ரத்ததானம் செய்துட்டம். கொசுறுக்கு ஒரு ஈத்தரை அரைலிட்டர் பெட் ரோலை ஆட்டைய போட்டுட்டு குழாயை செருகாம போனதால மறுபடி ஒரு முப்பது ரூவா பெட் ரோல் ஃபணால்.(செவ்= எரிபொருள்)

ஒரு ஃபோக்கஸ் லைட்டை ஆன் பண்றோம். எதிர்ப்பக்கம் தேஜோமயமாயிருது.ஆனால் பின் பக்கம்? இருட்டு தானே. அதைப்போல எட்டுபத்து அதிபதிகள் சேர்க்கை ,பார்வைல்லாம் தொழில் முன்னேற்றத்தை மட்டும் தந்துராது. கூடவே வேற எதையோ கூட தரும்.

டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். அது தொழிலா இருந்தாலும் சரி.கில்மாவா இருந்தாலும் சரி. ரெண்டுக்கும் தேவை ஒரே பவர் -ஒரே இஸ்டிங்ட் . இந்த புரிதல் இருந்தாலன்றி ரெண்டுலயும் ஒரே நேரத்துல சாதிக்க முடியாது.

பவர் -இன்ஸ்டிங்ட் -புரிதல் இது மட்டும் சாதனைக்கு போதுமானதில்லை. உங்க இருப்பில் -உங்கள் உயிர்ப்பில் உங்களுக்கு சந்தேகம் இருக்கனும். உங்க இருப்பை -உங்களிலான உயிர்ப்பை கு.பட்சம் உங்களுக்காச்சும் நிரூபிச்சாகவேண்டிய கட்டாயம் இருக்கனும்.

அப்பத்தேன் பவர் ஜெனரேட் ஆகும். ஜெனரேட் ஆனது இத்துனூண்டு பவர்னு வைங்க அந்த பவரை நீங்க கில்மாவுல இழந்துட்டா தொழில்,உத்யோகம்,வியாபாரம்லாம் பெப்பே காட்டிரும்.

நீங்க உயிர் உள்ள வஸ்துங்கற ஃபீலே இல்லாம – நீங்களும் இருக்கிங்கங்கற ஞா கூட இல்லாம உங்க குடும்பம், உங்க தெரு , உங்க ஏரியா பிஹேவ் பண்ணனும். நான் இருக்கேனா இல்லையாங்கற சந்தேகம் உங்களுக்கே வந்துரனும்.டு பீ ஆர் நாட் டுபீ – வாழ்வதா? சாவதா?ங்கற கேள்வி வந்துரனும். அப்பத்தேன் எனாரமஸ் பவர் ஜெனரேட் ஆகும்.

அந்த பவரை உண்மையான உருவாக்குதலில் ஐ மீன் தொழில் உத்யோகம் வியாபாரம் இத்யாதியில செலவழிச்சும் அது கம்ப்ளீட்டா எக்ஸாஸ்ட் ஆகாம செக்ஸுக்கு உங்களை டைவர்ட் பண்ணும்.

தொழில் -கில்மா ஒற்றுமை:
1.நீங்க உங்க உயிர்ப்பை – இருப்பை உங்களுக்கும் கன்வே பண்ணி ஊருக்கும் பறை சாற்ற முடியும்.
2.உருவாக்க முடியும்
3உங்க மரணத்தை தள்ளி போட முடியும் ( நீங்க செத்துப்போகலாம் -ஆனால் நீங்க உருவாக்கினவை இருக்கும். கட்டி எழுப்பினவை இருக்கும்)

வேற்றுமை:
1.கில்மாவுல உங்கள் உயிர்ப்பு -இருப்பு உங்களுக்கு மட்டும் – மிஞ்சிப்போனா உங்க செக்ஸ் பார்ட்னருக்கு மட்டும் அஞ்சலாகும். தொழில்ல ? சொல்லனுமா என்ன?
2.கில்மாவுல நீங்க உருவாக்க முடிஞ்சதை (கொளந்தை -குட்டி) எல்லா உயிரும் உருவாக்கும் .ஆனால் தொழில்ல?
3. நீங்கள் பெற்ற குழந்தை ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து ஆளாகி -அது உங்க நிழலாவோ -நகலாவோ உருவானால் மட்டுமே – உங்க மரணத்தை ஒரு அந்தாஸா தள்ளிப்போடமுடியும். ஆனால் தொழில்ல?
அப்போ கில்மாவே வேஸ்ட் ஆஃப் டைமுங்கறியா? காலமெல்லாம் உழைச்சே ஓடா தேய சொல்றியாம்பிங்க. சொல்றேன். ப்ளீஸ் வெய்ட்..