“அதையும்” ப்ளான் பண்ணி செய்யனும்

பொளப்பை விட்டுப்போட்டு இதென்ன கனவு தேசம் அது இதுன்னு ரவுசுன்னு மஸ்தா பேரு கேட்டாங்ணா. அவிகளுக்கு நான் சொல்ல வர்ரது என்னன்னா..எந்த எண்ணமும் – எழுத்தும் வீண் போறதில்லை. பெரியார் எண்ணங்களை அண்ணா சட்டமாக்கினார்.அண்ணா வந்து சட்டமாக்குவாருன்னா பெரியார் எழுதினாரு இல்லையே..

என்னைப் பொருத்தவரை ஒரு விபத்து மாதிரி முடிவெடுக்கிற நிலையில நான் இருக்க நேர்ந்தா என்ன செய்யனும்னு என்னை நானே ப்ரிப்பேர் பண்ணிக்கிட்டிருக்கேன்.

அந்த ப்ரிப்பிரெஷன் தான் என் கனவு தேசம். ஒரு வேளை இப்படியே வசதியாகி – தின்னு -தூங்கி செத்துப்போயிட்டன்னாலும் என் எழுத்துக்களை படிக்கிற ஆரோ ஒருத்தர் இந்த கனவுகளை நனவாக்கலாம்லியா?

இன்னைக்கு என்.டி.ஆர் நடிச்ச விஸ்வரூபம்ங்கற படத்தை பார்த்தேன். படம் ஒரு அணைக்கட்டை சுத்தி வருது. ஒரு ஊரு. அந்த ஊருக்கு வருசா வருசம் வெள்ளம் வரும். ஒரே ஒரு அணைக்கட்டை கட்டிட்டா பிரச்சினை தீர்ந்துரும்.ஆனால் கட்டமாட்டாய்ங்க.

என்.டி.ஆர் அந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வர்ர ப்ரொஃபசர். இளைஞர்களை ஒருங்கிணைச்சு நகராட்சி சேர்மன் ஆகிறாரு. அணைக்கட்டு கட்ட கெவுர்மென்டுக்கு லெட்டர் போடறாரு. ஊர்ல உள்ள கிழவாடி அரசியல்வாதிங்க ஃபண்ட் வராம செய்றாய்ங்க.

எப்டியோ மனித சக்தியை ஒருங்கிணைச்சு – பணம் புரட்டி என்.டி.ஆர் அணை கட்டிர்ராரு. இது ஜஸ்ட் ஒரு சினிமா படம் தான். தாசரி நாராயண ராவ்ங்கற எழுத்தாளனோட மைண்ட்ல ஸ்பார்க் ஆன கதை இது.

ஆனால் இன்னைக்கு லட்சம் கோடி ரூபாய் செலவுல ஆந்திராவுல அணைகள் கட்டிக்கிட்டிருக்காய்ங்க. இதுக்கும் மேற்படி சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன்.

அந்த சினிமால நடிச்ச இன்ஸ்பிரேஷனோட என்.டி.ஆர் தெலுங்கு கங்கை கால்வாய் வெட்டினார். சென்னைக்கு குடி நீரும் ஆச்சு, பாயும் வழியெல்லாம் பாசனமும் ஆச்சு.

எங்க ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆர் ஃபேன்ங்க்ற மேட்டர் நிறைய பேருக்கு தெரியாது. என்.டி.ஆர் ஃபேனா – மேற்படி படத்தோட இன்ஸ்பிரெஷன்ல அவரு லட்சம் கோடி ரூபாய் செலவுல ஆந்திராவுல அணைகள் கட்ட ஆரம்பிச்சிருக்கலாம்லியா?

ஆக இந்த கனவு தேசம் என்னைக்கோ ஒரு நாள் நனவு தேசம் ஆகலாம். இதை ஜா.ரா உட்பட யாரும் மறுக்க முடியாது.இப்பம் ஓவர் டு கனவு தேசம் …

என் கனவு தேசத்தில் .. குவாலிட்டி கண்ட்ரோல் இருக்கும். திருமணத்துக்கு தகுதி உள்ளவுகதான் கண்ணாலம் கட்ட முடியும். அது இல்லாதவன்லாம் பாஞ்சுராம இருக்கத்தேன் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்.

தாளி.. மீசை உள்ளவன்லாம் கண்ணாலம் கட்டிக்கலாம் – மாதவிலக்கு ஆகிறவல்லாம் கண்ணாலம்னு அனுமதிச்சதாலதேன் மஹிளா ஸ்டேஷன், ஃஃபேமிலி கோர்ட் எல்லாம் ஹவுஸ் ஃபுல்லா கிடக்குது.

இன்னைக்கு டிவில பார்க்கிறேன் எவனோ டாக்டராம் . ஒன்னரை கோடி வரதட்சிணை கொடுத்து கண்ணாலம் கட்டி வச்சிருக்காய்ங்க. அது போதலின்னு புதுப்பொஞ்சாதியை டார்ச்சர் பண்ணியிருக்கான்.

வசதி படைத்த தாய்க்குலங்கள் இப்டி காஸ்ட்லியா ஒன்னரை கோடிக்கு ஒரே ஒருத்தனை வாங்கறதை விட சீப் அண்ட் பெஸ்டா ஹோல் சேல் ரேட்டுக்கு அரை டஜன் -ஒரு டஜன்னு வாங்கிரனும். டாபர் மென், பாமரேனியன் மாதிரி சங்கிலி போட்டு கட்டி வைக்கனும்.

கொய்யால . இந்த மாதிரி கேஸையெல்லாம் பார்க்கும் போது வவுறு எரியுது. ஆரு பெத்த பெண்ணா இருந்தா என்ன? ஒன்னரை கோடி? போறலின்னா கடுப்பாயிருது. இவனுக்கெல்லாம் லுல்லால டைமண்ட் பதிச்சிருக்கா? இல்லைனா மணிக்கணக்குல கிளிக்கப்போறானா?

புதுப்பொஞ்சாதிய வச்சுக்கிட்டு வரதட்சிணைக்கு மெனக்கெடறான்னா அது பூட்டகேசுன்னு தான் அருத்தம். என்ன இழவுடா இது. தூத்தெறிக்க.

இவனுக்கெல்லாம் கண்ணாலம் கட்டற தகுதியே இல்லேனு நினைக்கிறேன். இவனுக்கெல்லாம் அரசு பாலியல் மையத்துல அஞ்சு பத்து நிமிஷம் கூட சாஸ்தி. இவனுவ அங்குள்ள செக்ஸ் ஒர்க்கர்சை கூட டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருவானுங்க போல. எஜாகுலேட்டர் தான் லாயக்கு.

நான் இன்னா சொல்றேன்னா கண்ணாலங்கறது ஒரு பெரிய விவகாரம் புடிச்ச மேட்டரு. அதை டீல் பண்ண ஒரு குவாலிஃபிகேஷன் வேணாமா? ஃபிசிக்கல் ,சைக்கலாஜிக்கல்,எகனாமிக்கல் ஃபிட்னஸ் வேணாமா? ச்சொம்மா மேலுதட்டுக்கு மேல மீசை இருந்தா செரின்னு கண்ணாலம் கட்ட அனுமதிக்கிறதாலதான் இந்த மாரி லொள்ளு.

ஆஃபீஸ்ல உசுரு இல்லாத காயிதங்களை டீல் பண்ணவே அந்த டிகிரி -இந்த டிப்ளமோ, ரிட்டர்ன் டெஸ்ட், இன்டர்வ்யூனு லந்து பண்றாய்ங்களே.. உசுருள்ள ஒரு ஜீவனை டீல் பண்ண எந்த தகுதியும் தேவையில்லின்னா எப்டிங்க த்லை?

கண்ணாலத்துக்கு தகுதி உள்ளவனுக்கெல்லாம் குளந்தை பெத்துக்கற தகுதியிருக்குன்னு நினைச்சா தப்பு. ஒரு குளந்தை ஓ.எஸ் கூட போடப்படாத கம்ப்யூட்டர் மாதிரி. அதை டீல் பண்ண எத்தனையோ தகுதிகள் தேவைப்படுது. அதனால குளந்தை மேட்டர்லயும் தகுதி உள்ளவுகளுக்குத்தேன் அனுமதி.

க‌ல்வி..கல்வியை பெறும் மாணவனை அவன் தன‌து உட‌ல்,ம‌ன‌ம்,புத்தி,ஆத்மா, குறித்த உண்மைகளை அறிந்து அவற்றை ட்யூன் பண்ணிக்கிட்டு தன் பெற்றோர்,குடும்ப‌ம்,தெரு,ஊர்,மாவ‌ட்ட‌ம்,மாநில‌ம்,நாட்டுக்கு உண்மையானவனாய்,உபயோகமானவனாய் வ‌ள‌ர‌ உத‌வனும் அதான் கல்வி.

வேலை அது எவனோ தருவதாய் இருக்கக்கூடாது. குழந்தை பிறந்த மறுநிமிடம் அவனுக்கான கல்வி, வேலை காத்திருக்க வேண்டும்,

எல்லாத்துக்கும் ஒரு ப்ளானிங் இருக்கனும். அது உடலுறவே ஆனாலும் இத்தனை நிமிசம் சூடு படுத்தற பேச்சு – இத்தீனி மினட் தொட்டு தடவுதல் -இத்தீனி நிமிஷா ஃபோர் ப்ளே – இத்தீனி நிமிஷாலு வாய்,உதடு,பல்,நாக்குன்னு ப்ளான் பண்ணி செய்யனும். இல்லாட்டி ஊத்தி மூடவேண்டியதுதான்.

அதனால நம்ம நாட்டுக்கு எத்தீனி டாக்டர் இஞ்சினீர் தேவைங்கறதுல இருந்து எத்தீனி கழிவறை தேவைங்கறதுவரை ப்ளானிங் இருக்கனும்.

ஆனா அந்த மடம் இல்லின்னா சந்தை மடம் கணக்கா ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு படிப்புக்கு டிமாண்ட். எல்லா சனமும் விட்டில் பூச்சி மாதிரி போய் விழவேண்டியது. அப்பாறம் வேலை கிடைக்கலின்னு புலம்பறதுல்லாம் கூடாது.

இந்த நிமிசத்துக்கு கங்கை காவிரி இணைப்பு,கூட்டுறவுப்பண்ணை விவசாயம் இது இரண்டு போதும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு தலைமுழுகிரலாம்.

மேலும் மேற்படி ரெண்டு காரியம் ஒளுங்கு மரியாதையா நடந்தா போதும். இவனுக இன்னைக்கு ஜல்லியடிக்கிற வாங்கும் சக்தி நெஜமாலுமே உசரும். 120 கோடி மக்களுக்கு தேவையான உணவு,உடை,இருப்பிடம்,கல்வி,தொழிற்பயிற்சி,மருத்துவ வசதிகளை தந்தே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுரும்.

இந்த நிலை ஏற்பட்டுட்டாலே மனிதசக்தியின் தேவை -எவரெஸ்டை தொடும். வேலை வாய்ப்பு பல மடங்காகும்.