செம்ம மேட்டரு: 7 (நான்காம் பாவம்)

DSC_9016

அண்ணே வணக்கம்ணே !
செம்ம மேட்டருங்கற சீரிஸ்ல இன்னைக்கு நாலாம் பாவத்தை பத்தி நிச்சயமா சொல்லிர்ரன்.அதுக்கு மிந்தி சின்னதா ஒரு புலம்பல்.

இன்னைக்கு நாம எளுதிக்கிட்டிருக்கிற மேட்டர்ல ஜஸ்ட் 10% ஒரு முப்பது வருசத்துக்கு மின்ன ஐ மீன் 1984 ல ஆராச்சும் குடுமி ஐயரு நமக்கு சொல்லியிருந்தா நம்ம வல்லரசு கனவுகள் நனவாயிருக்கும் – ரஜினிக்கு பதிலா நாம சூப்பர் ஸ்டார் ஆயிருப்பம்-மோடிக்கு பதிலா நாமதேன் பி.எம் ஆகியிருப்பம்னு பீலா விட மாட்டேன்.ஆனால் சர்வ நிச்சயமா லைஃப் கொஞ்சமாச்சும் பெட்டரா இருந்திருக்கும். அந்தளவுக்கு ஒர்த்தான மேட்டரு இது.
நாம டைட் ஷெட்யூல்லயும் நேரத்தை திருடி -காசு கட்டி காத்திருக்கிற சனத்தோட வவுத்தெறிச்சலை கொட்டிக்கிட்டு மாஞ்சு மாஞ்சு எளுதறம்.ஆனால் பாருங்க தமிழ் இண்ட்லிலயாகட்டும் தமிழ் 10 லயாகட்டும் நம்ம பதிவுக்கு சனம் ஓட்டே போடறதில்லை.

இதுக்கு காரணம் இல்லாம இல்லை. ஏன்னா இந்த சைட்டுக்கு வர்ரவுகல்லாம் சொந்த வீட்டுக்கு வந்த கணக்கா டைரக்டா வந்துர்ரிங்க. நான் உங்களை கேட்டுக்கிறதெல்லாம் ஒன்னுதேன். நெல்ல மேட்டரு நாலு பேருக்கு தெரிய வந்தா -தப்பி தவறி அதுல ஒரு ஆள் இதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாலும் படிப்படியா நாடே மாறிரும். என்னண்ணே ஞாபகமா ஓட்டுப்போடுவிங்கல்ல.

அப்படியே இந்த பதிவுக்கு கீழே ஷேர் பட்டன்ஸ் இருக்கு. நீங்க ஃபேஸ்புக்ல பிரபலமா அங்கே ஷேர் பண்ணுங்க.ட்விட்டர்ல பிரபலமா ட்விட்டர்ல ஷேர் பண்ணுங்க. நிற்க நம்ம தேச கனவு,மானில கனவு எல்லாத்தையும் கட்டு கட்டி மம்மிக்கு போயஸ்கார்டன் முகவரிக்கே அனுப்பிட்டன்.அதுவும் டெலிவரி ஆயிருச்சு . சட்டமன்ற கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. கடவுள் அந்த மவராசிக்கு நல்ல புத்திய கொடுத்து நம்ம ரோசனைகள்ள ஜஸ்ட் ஒரு அஞ்சோ பத்தோ அமலானாலும் சனத்துக்கு செம ரிலீஃப் கிடைச்சுரும்.

இதுக்கு மிந்தியெல்லாம் கடவுள் கிட்டே ஹாட் லைன்ல பேசிக்கிட்டிருந்தம்.இப்பம் நம்ம நெம்பரை அந்தாளு ப்ளாக் பண்ணி வச்சிருக்காப்ல இருக்கு.அதனாலதேன் புலம்பல் சாஸ்தியாயிருச்சு. ஓகே மேட்டருக்கு வந்துரலாம்.

நாலாவது இடம் தாய்,வீடு,வாகனம்,கல்வி,இதயம் இதை எல்லாம் காட்டற பாவம். கடந்த பதிவுகள்ள சொன்னாப்ல எந்த ஜாதகத்துலயும் எந்த பாவமும் 100 சதம் ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதில்லை. அப்படி இருந்தா இந்த பதிவே தேவையில்லை. எல்லாத்தையும் எஞ்ஜாய் பண்ணலாம்.நாம பார்த்தவரை எல்லா ஜாதகமும் அரை குறை ஸ்டஃப் வச்சுக்கிட்டு தான் ஒப்பேத்திக்கிட்டிருக்கம்.

அதனால இதுல எதை விட்டா மத்த மேட்டர்ல ஜொலிக்கலாம்னு பார்த்துரலாம். தாய் மேட்டரையே எடுத்துக்கங்க. சனம் சாய்ஸ்ல விடறது இந்த கேரக்டரை தான்.

தாயை பத்தி நான் சொல்ல ஆரம்பிச்சா எத்தீனி வாத்யார் படம் பார்த்திருக்கம், ராஜ் கிரண் படம் பார்த்திருக்கம்,ராஜாபாட்டு கேட்டிருக்கம். நீங்க வேற எதுக்குன்னே மொக்கைனு சலிச்சுக்குவிங்க.ஆனாலும் ஜோசிய கோணத்துல சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆகனும்.
நாம பிறக்கறதுக்கு மிந்தி தாயோட கருப்பை தான் நம்ம வீடு, நாமளா நடக்க ஆரம்பிக்கிற வரை தாய் தான் நம்ம வாகனம், ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கிற வரை தாய் தான் டீச்சர், அவள் மடி தான் ஸ்கூல், வவுத்துல இருந்த 10 மாச காலம் அவளோட இதயம் தான் நமக்காகவும் ரத்தத்தை பம்ப் பண்ணிக்கிட்டிருந்தது. பிறந்த பிறவும் என்ன? அந்த இதயம் நமக்காகத்தானே துடிக்குது.

ஆக நாலாம் பாவ காரகத்வம் முழுக்க முழுக்க தாய்தான். அவளையே நாம சாய்ஸ்ல விட்டம்னு வைங்க..நமக்கு இதயமே இல்லின்னு அருத்தம். இல்லாத இதயம் வேலை செய்தா என்ன செய்யாட்டி என்னனு இயற்கை கோவிச்சுக்கிட்டு மேசிவ் ஹார்ட் அட்டாக்ல பொட்டுன்னு போயிரவும் வாய்ப்பிருக்கு.
அம்மா உசுரோட இருக்கிற வரை நாம எவ்ள கிழடு தட்டி போனாலும் அவிக டேய் சின்னவனே ..னு கூப்டா படக்குன்னு காயகல்பம் சாப்டாப்ல பாதி வயசு குறைஞ்சுரும்.

அம்மா இப்பம் உசுரோட இல்லியேண்ணே அப்பம் நான் கிழவாடியாத்தான் வாழ்ந்தாகனுமான்னு கேப்பிக சொல்றேன். அவளை பற்றிய நினைவுகள் பசுமையா இருக்கிற வரை நீங்களும் செல்லக்குட்டி தான்.

இதுல இன்னொரு மேட்டரையும் சொல்லனும் என்னை பெத்தவ தான் ஆத்தா மத்தவல்லாம் பொம்பளங்கற மென்டாலிட்டி உதவாது.
நாலு வயசு பொம்பள குழந்தைய “யம்மாடி ஒரு டம்ளர் தண்ணி கொடேன்” னு கேளுங்க ..அந்த தண்ணியோட ருசியே வேற . “த..குட்டி ஒரு தம்ளர் தண்ணி கொடு”ன்னு கேளுங்க.. அந்த ருசி வேற.

பெண்ணை பொருத்தவரை அவள் பிறக்கும் போதே தாயாத்தான் பிறக்கறா. கு.பட்சம் அம்மா வயசு பெண்கள்,அம்மாவோட மூக்கு ,நிறம்,சாடை கொண்ட பெண்களை அம்மாவா நினைச்சு பார்த்தாலே போதும் நாலாவது பாவம் செமையா சார்ஜ் ஏறிக்கும்.
ஆகவே தாய்ங்கறது நாலாம் பாவத்தின் தொகுப்பு தாயை திராட்டுல விட்டா வீடு கிடையாது, வாகனம் கிடையாது,கல்வி கிடையாது,ஹார்ட்டுக்கு கியாரன்டி கிடையாது. பிறவு எதை விடலாம்?
வீடு?
வீடுங்கறதே சமுதாயத்தோட ஒத்து போக முடியாத ஊமை கோபம் தான். அதென்னவோ கோட்டை போலவும் – அங்கருந்து சமுதாயத்துக்கு எதிரா போரிடறது போலவும் ஒரு ஃபீல். இது எம்மாம் பெரிய முட்டாள் தனம் பாருங்க.

சமுதாயங்கறது என்ன? நம்மை மாதிரி நாலு எசென்ட்ரிக் முட்டாள்களோட கூட்டமைப்பு. ஆனால் நாம என்ன நினைக்கிறோம் நான் எல்லாம் ரெம்ப சென்சிட்டிவ்ங்க, ஒரு பேச்சை தாங்க முடியாதுங்கறம். எல்லாருமே அந்த கேட்டகிரி தான்.ஆவனால ரியாக்ட் ஆக முடியல -ஏற்கெனவே ரியாக்ட் ஆகி செமர்த்தியா பல்ப் வாங்கியிருப்பான் அவ்ளதான்.

நம்மையே எடுத்துக்கங்க. கடவுள் புண்ணியத்துல வீடுங்கற மேட்டர் நம்ம மைண்டுக்குள்ள வரல. (நம்முது வேற கடகலக்னமாச்சா செமர்த்தியா பல்பு வாங்கியிருப்பம்) ஓரளவுக்கு வசதியான வீடு (கிரானைட் ஃப்ளோரிங் பாஸ்) வாடகைக்கு கிடைச்சது.

இதுக்கே என்னாச்சு? மொபைல் புக் ஸ்டோர் பண்றேன்னு ஒரு இருபதாயிரம் ரூவா வட்டம், ஒரு மூனு மாசம் வெட்டி அலைச்சல். இதுமட்டுமா ? மினி மொபைல் புக் ஸ்டோர்னு டப்பா கட்டிக்கிட்டு டூ வீலர்ல சேலம் வரை போய் அதுவும் கத்திரி வெயில்ல – ச்சூ ச்சூ வராம -பொளப்பே நாறிப்போச்சு .படிக்கிறது குறைஞ்சு போச்சு, வாகனம்? அதை எடுக்காமயே மொக்கையாகி கிடக்கு.

நான் என்ன சொல்றேன்னா உபரியா காசு இருக்கா? அப்பா,அம்மா,அண்ணன் தம்பி எல்லாம் சொகமா இருக்காய்ங்களா? கட்டின வீடா வாங்கி போடுங்க, சின்னதா அப்பார்ட்மென்ட்ல ஃப்ளாட் வாங்கிக்கங்க. அதை விட்டுட்டு எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்னன்னு வேலைக்காரிக்கு கொடுக்கிற காஃபி மொதகொண்டு கணக்கு பார்த்து வீடு இல்லின்னா கதி மோட்சமில்லேன்னு அலையாதிங்க.

மரணம் வந்தா வாடகை வீட்டுக்கும் வருது,சொந்த வீட்டுக்கும் வருது. தூங்கிப்போன பிறகு கிரானைட் ஃப்ளோரிங்கா, ரெட் ஆக்சைட் ஃப்ளோரிங்கானு தெரியவா போகுது?

நம்ம எல்டர் ஃப்ரெண்ட் ஒருத்தரு பழைய வீட்ல இருந்த வரை கரண்ட்ல இருந்தாரு .9 க்கெல்லாம் ரோட்டுக்கு வந்துருவாரு.சர்க்கிள் இருந்தது.வேலை போனாலும் தொழில் நல்லபடியா நடந்துக்கிட்டிருந்தது.

சக்திக்கு மீறி கடனை வாங்கி கடல் மாதிரி வீட்டை கட்டிட்டாரு. வீட்டுக்கு மேட்சிங்கா நாய் வாங்கினாரு ,இடம் இருக்கேன்னு தோட்டம் போட்டாரு, நாயை கவனிச்சு,தோட்டத்துக்கு தண்ணி விட்டு வீட்டை விட்டு மதியம் 12 மணிக்கு தேன் வெளிய வராரு. சர்க்கிள் போச்சு,கரெண்ட்ல இல்லை .தொழில் முடங்கி போச்சு,

நம்ம நண்பரோட தம்பி ஒரு பார்ட்டி .லக்னம் கடகம். சொந்த வீடு . பொஞ்சாதி மயக்கத்துல வேலைய விட்டுருவாரு.பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு தாய் வீடு போயிரும். உடனே இவரு வேலை தேடிக்கிட்டு பிக் அப் பண்ணிக்கிட்டு வருவாரு ,மறுபடி பழைய குருடி கதவை திறடி .தற்சமயம் வேலை இல்லை. அதுக்கு இன்னம் நாலுமாசம் ஆகும்.

அந்த பார்ட்டி வீட்ல இருந்தாதான் பிரச்சினைனு அவரோட தம்பி “சாமீ..ஒரு அமவுண்டா கையில கொடுத்துர்ரன் .அவனை 9 டு 5 வச்சு டார்ச்சர் பண்ணு. டெய்லி நூறு ரூவாய்க்கு மேல தராத”ங்கறாரு.

நானும் ராத்திரி 7 மணி வரை வீட்ல தான் இருக்கன்.ஆனால் பொஞ்சாதியோட கான்வர்சேஷன்லாம் -ஒரு வார்த்தையில தான் இருக்கும்.
செரி -விடு -டீ- தண்ணி காஞ்சுருச்சா.

மேற்படி பார்ட்டி செம புலம்பலாம். உபகதை உதாரணம்லாம் போதும்ல?

அடுத்து வாகனம் .நம்ம தொழில்,உத்யோகம்,வியாபாரத்துக்கு அவசியமா வாங்கிக்கலாம். தப்பில்லை. அதை விட்டுட்டு கெத்துக்கு வாங்கறது, புது மாடல் வந்திருக்குன்னு நல்லாருக்கிற வண்டியை எடைக்கு போட்ட கணக்கா எக்சேஞ்ச் ஆஃபர்ல தத்தம் பண்ணி புது வண்டி வாங்கறதுல்லாம் வெத்து.
அம்மாங்கற உசுரு வீட்ல இருந்தா நீங்க வண்டியை கிளப்பும் போதே பார்த்துடான்னு பதறும். நீங்க மறுபடி வண்டியோட திரும்பி வர வரைக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் லம்பா மெயில் -எஸ்.எம்.எஸ்ஸுன்னு அனுப்பிக்கிட்டே இருக்கும்.

பொஞ்சாதி கேரக்டர் வேற -அவிகளையும் நீங்க அம்மா கணக்கா ட்ரீட் பண்ணியிருந்தா சேம் எஃபெக்ட் கிடைக்கும் அதை விட்டுட்டு சம்சாரம் அது மின்சாரத்துல மனோரமா மாதிரி ” நீ கம்னு கடா” ரேஞ்சுல மெயின்டெய்ன் பண்ணியிருந்தா வேஸ்டு.

எந்த மேட்டரா இருந்தாலும் செரி அது சுகம் கொடுக்குதா அதுக்குண்டான உழைப்பை கொடுத்தாகனும். வண்டிங்கறது சுகம். அதை துடைக்கிறது,கழுவறது,சர்வீஸுக்கு விடறது,சின்னதா ரிப்பேர் வந்தா உடனே மெக்கானிக்கை பார்க்கிறது,காத்து செக் பண்றது இதெல்லாம் உழைப்பு.சுகமும்-உழைப்பும் பேலன்ஸ் ஆகும் போது சுகம் தொடரும்.

கேம்புக்கு போயி -ஓட்டல் சோத்தை தின்னு வவுறு புண்ணாகி, லாட்ஜ் பெட்ல நாத்தத்துல உருண்டு ,லேசா ஸ்கின் ப்ராப்ளம் ஆரம்பிச்சிருந்து ரிட்டர்ன் வர்ரிங்கனு வைங்க.சீரியல் பார்த்துக்கிட்டிருக்கிற பொஞ்சாதி ரெண்டு நிமிசம் அதை பார்த்துட்டே வந்துட்டிங்களான்னாலும் கோபம் வராது . ஏன்னா நிழலின் அருமை வெயிலில்,வீட்டின் அருமை வெளியூரில் தெரியும்.

தேவையில்லாதப்பல்லாம் சுகத்தை நாடினா தேவையானப்போ கிடைக்காதுங்கோ.ஒரு மவுசுக்கு இத்தீனி க்ளிக் தான். ஒரு மன்சனுக்கு இத்தீனி கிலோ மீட்டர் தான் வாகன சுகம்னு ஃபிக்ஸ் ஆகியிருக்கும்.

விக்கிரமாதித்தன்-பட்டி கதை தெரியும்ல.காடாறு மாசம் நாடாறு மாசம் கதை ஞா இருக்கா? இல்லின்னா கூகுள்ள அடிச்சு தேடி ப(பி)டிங்க.
சரக்கு வாங்க ,குடிக்க,கூத்தடிக்க , ஃப்ரெண்ட்ஸோட மொக்கை போட வண்டிய தொடாதிங்க.பொளப்பா,உத்யோகமா நோ ப்ராப்ஸ்.
பொளப்புக்கே ஆனாலும் செரி வாரத்துல ஒரு நாள் வண்டிய வீட்ல விட்டுட்டு பஸ்ஸுல போங்க. அப்பத்தேன் வண்டியோட அருமையும் தெரியும்.
சகட்டுமேனிக்கு கடனை உடனை வாங்கி -வீட்டை கட்டி வாகனத்தை வாங்கி தவணை கட்டமுடியாம முழி பிதுங்கும் போது அந்த வேக்குவம் ஆட்டோமெட்டிக்கா உங்க ஹார்ட்டை தான் டச் பண்ணும்.

இவ்ள அவதிபட்டு வாங்கியும் அதை மெயின்டெய்ன் பண்ண முடியலியே-அனுபவிக்க முடியலியேன்னு வருத்தப்படும் போது உங்க ஹாட் பீட் ரேட்டே மாறும், பாடியோட பயோ கெமிஸ்டிரியே மாறும்.

உபரியா வண்டியால உழைப்பு குறையும்,கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்,ஹார்ட்டுக்கு பிரச்சினை. வீட்டை தான் கட்டிட்டமேனு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துருவிங்க .அவுட் புட் குறையலாம், அல்லது கடன் இருக்கேன்னு உபரியா உழைக்கலாம் அதுவும் நாஸ்திதான்.
ஏம்பா நான் செரியா பேசறனா?

எத்தனை வயசுல லைஃப் செட்டில் ஆகும்

1லைஃப் செட்டில் ஆவுறதுன்னா எங்க காலத்துல எல்லாம் ஒரு வேலைனு சேர்ந்து குப்பை கொட்டி  -ஒரு கண்ணாலம்  கட்டி -ஒரு குட்டி போட்டாச்சுன்னா  ஓவர். இதெல்லாமே இருபது இருபத்தஞ்சுக்கே ஓவராயிரும்.
இப்ப எல்லாம் அப்படி கிடையாது. படிப்பே முப்பது வயசுக்கு தொடருது. அந்த முப்பதுக்குள்ளயே ஒரு கார், ஒரு அப்பார்ட்மென்ட் (வித் ஆல் ஹோம் அப்ளையன்சஸ்) .ஆனால் கண்ணாலம் மட்டும் இழுத்துக்கிட்டே போகும். தப்பித்தவறி ஆயிருச்சுன்னா 3 மாசத்துல மகளிர் காவல் நிலையம் அல்லது குடும்ப நல கோர்ட்.
ஏன் பாஸ் இப்படின்னு கேப்பிக சொல்றேன்.
சுக்கிரன் தான் களத்ர காரகன். அவரே தான் வாகன காரகன். அவரே தான் கிருஹ காரகன் (வீடுங்கோ) . நம்மாளு பைசா புரளுதேன்னு வீடு,வாகனம்னு செட்டில் ஆயிர்ராரு (?) சுக்கிரன் கல்யாண மேட்டரையும் கில்மா மேட்டரையும் டீல்ல விட்டுர்ராரு. (ஒரே ஆசாமி எத்தீனி வேலைதான் செய்யமுடியும் -சுஸ்தாயிரும்ல)
சரி பாஸ்..வியாக்யானம்லாம் ஓகே பதிவுக்கு போயிரலாமா?
உங்க பிறந்த தேதி,மாசம்,வருசம் எல்லாத்தையும் கூட்டுங்க. அத்தீனி வயசுல செட்டில் .( நம்ம கேஸ் 7-8-1967 -டோட்டல் 38)  அதுவரைக்கும் ஏதோ ஒரு குறை இருக்கும். உ.ம் படிப்பு முடியல,வேலை கிடைக்கல,கண்ணாலமாகல Etc.
எண் கணிதப்படி வாழ்வை பல பாகங்களா பிரிக்கலாம்.
இதுக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. ஒன்னு உயிர் எண் ( நமக்கு 7) அடுத்தது கூட்டு எண் ( நமக்கு 38-இதை கூட்டினா 11)
மேற்படி எண்களுக்குடைய கிரகம் எதுன்னு பாருங்க. (நமக்கு  7ன்னா கேது – 11 ன்னா சந்திரன்) அந்த கிரகம் எத்தனையாவது ராசியில இருந்தா நல்லதுன்னு ஒரு விதி இருக்குல்ல? (உதாரணமா சனி,செவ்,சூரியன் பாவ கிரகங்கள் .இவிக 3,6,10,11 ல இருந்தா நல்லது .
இப்ப உங்களோட பிறப்பு எண்/உயிர் எண் 8/9/1 என்று வருதுன்னு வைங்க. அப்போ உங்க லைஃபை அந்த கிரகத்துக்குரிய எண் அத்தனை வருடங்கள் கொண்ட பகுதிகளா பிரிச்சுக்கனும்.
என் கதைய பார்த்திங்கனா உயிர் எண் 7 . என் வாழ்க்கைய ஏழு ஏழா பிரிக்கனும். உங்க உயிர் எண் 9 என்றால் ஒன்பது ஒன்பதா பிரிக்கனும். இதுல 3,6,10,11 ஆவது ரவுண்டு நல்லா இருக்கும்.
நம்ம கேஸை எடுத்துக்கிட்டா இன்னைக்கு 48 ஆவது வயசு ஆரம்பம். இதை ஏழால வகுத்தா ஏழு வருது. அஃதாவது நான் இப்போ 7 ஆவது ரவுண்டுல இருக்கன்.
7ங்கறது எந்த ஸ்தானம்? களத்ர ஸ்தானம். ஆக  7 ரவுண்டு முடியற வரை அதாவது 49 வயசு முடியற வரை என் லைஃப்ல மனைவிக்கு பிரிக்க முடியாத பங்கு இருக்கும். எட்டாவது ரவுண்டு? கேதுன்னா சன்யாசி . அல்லது மோட்சம்.
நாம சன்யாசி போல வாழ்ந்துட்டா பிரச்சினை இல்லை. அப்படியல்லாது தப்பான வழியில போனா கதை கந்தல் .
பாபகிரகங்களோட எண்ணை உயிர் எண்ணா கொண்டவுக இப்படி ஒர்க் அவுட் பண்ணிக்கலாம். சுப கிரகங்களோட எண்ணை கொண்டிருந்தா?
உதாரணமா குருன்னு வைங்க (நெம்பர் : 3) 2,5,7,9,11 ஆவது ரவுண்டு நெல்லாருக்கும். இதே போல சுக்கிரன்,புதன் ,சந்திரன் கோசாரத்துல எந்த ராசியில இருந்தா நல்லதோ அத்தனையாவது ரவுண்ட் நல்லாருக்கும்.
என்ன சுத்தமா புரியலியா? செம நாட் மாட்டிக்கிச்சில்ல. விட்டுருவமா? உங்க அனுபவங்களையும் -இதெல்லாம் எந்த அளவுக்கு டாலி ஆகுதுங்கற மேட்டரையும் கமெண்ட்ல போட்டுக்கிட்டே வந்தா இதை தொடர்வேன். இல்லின்னா அம்பேல்.
எச்சரிக்கை:
மேற்சொன்ன விஷயங்களில் எதெல்லாம் ஹஞ்ச், எதெல்லாம் ரூல்னு பிறகு சொல்றேன். நிபந்தனை: இதெல்லாம் எந்தளவுக்கு டாலி ஆகுதுனு ஒர்க் அவுட் பண்ணி கமெண்ட்ல சொல்லுங்க.அப்பாறம் தான் நான் சொல்லவேண்டியத சொல்வேன்.

கிரகங்கள் நின்ற பலன்: 4-10 ல் ராகு கேது

Foto effect 4அண்ணே வணக்கம்ணே !

கிரகங்கள் நின்ற பலன் வரிசையில 4-10 ல் ராகு கேதுவுக்கான பலனை சொல்லோனம்.  நாலுங்கறது தாய்,வீடு,கல்வி ,வாகனம் ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கே ராகு இருந்தால் இந்த மேட்டருக்கு எல்லாம் பாதிப்பு வரும்.ஆனால் இந்த பாதிப்பு தான் யோகம். அது எப்படின்னு கவிதையில சொல்லியிருக்கன்.

புரியாதவுகளுக்கு (கமெண்ட்ல வந்து சொல்லோனம்) மறுபடி ஒரு பதிவு போடறேன். இந்த விசப்பரீட்சை இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான். வலையுலகத்துல மஸ்தா பேருக்கு நம்ம முருகேஸுக்கு தமிழ் போதாதுப்பான்னு நினைக்கிறாய்ங்களாம். அவிக வாயை மூடனும் இல்லை. (இதை தொடர நான் மூடனும் இல்லை -வார்த்தை விளையாட்டு ) அதுக்காவத்தான்.

எச்சரிக்கை:

சிகப்பு நிற வரிகளின் அர்த்தம் விளங்க கொஞ்சம் முக்கனும்.

 

குடியிருந்த கோவில் என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் சால பகர்ந்திட்டார்
ஆயின் தாய் மடி விட்டிறங்கினோரே முன்னேற்ற திசை நோக்கி நகர்ந்திட்டார்
முன்னேற்றம் என்றே நான்  நவில்வது உள்ளார்ந்த வளர்ச்சியாகும்.
அன்னை முலை மறவாதோர் புகை என்றும் மதுவென்றும் சிக்கிவிட நாடி தளர்ச்சியாகும்
அன்னை விட்டவனே பின்னை கன்னிக்கு நகர்தல் வேண்டும்
காதல் பகிர்தல் வேண்டும்.
அன்னைக்கே அடிபணிவேன் -எந்த கன்னிக்கும்  நான் பணியேன் என்றே அவனிருக்க -மனம்
பண்ணை போலாகும்.முடிச்சுகள் மட்டும் தான் அங்கே பயிராகும்
கருப்பை தரும் புகல் ஐயிரண்டு மாதம் தான் உயிர் காக்கும்
பிறப்பை நோக்கி அது நகராக்கால் அதுவே உயிர் தாக்கும்
அன்னை முலைச்சூடு சில காலம் தெம்பு தரும்
அதிலவனே தங்கி விட்டால் ஊறு தரும் வம்பு வரும்.
அவள் கருவிலே இருந்த நாளை இவன் மனம் மறவாதே மருவ தவித்திடுமாம்.
கருவிலே தங்கி விட்டால் காலன் முத்தமன்றி அன்னை மடி கிட்டிடுமோ?
அவள் மடி வேண்டுமென்று அதிலே தங்கி விட்டால் தந்தையவன் தோள் மார்பு  கிட்டுமோ?
அவன் தோளோடு தங்கி விடின் வேற்று  ஆளோடு தொடர்பு எது?
சிற்றடி கொண்டே தான் வீடெங்கும் அளந்திருந்தால் மூவுலகம் அளந்திடவே கால்கள் பலம் பெறும்.
வீடெனக்கு சொர்கம் என்றே சொக்கி நீ நின்றால் மனிதக்காடுனக்கு அச்சம் தரும்
கல்வியில் சிறந்திடவே கல்வி சாலை ஏகிடவே தந்தை தோள் மறந்து இறங்கவேண்டும்.
எண்ணும்-எழுத்தும் கற்றே உன் அறிவு துலங்க வேண்டும்.
கல்விக்கண்ணிருப்பின் உலகம் உனை நோக்கும்
தொழில் கற்றே எழில் பெறின் பசித்தழல் சுட்டிடலாம்.
காடெங்கும்  நீ அலைய வேட்டை தொழில் கற்றே தந்தைக்கு தோள் கொடுப்பின்
வீடெங்கும் ஒளியாகும் வாழ்வில் களி சேரும்.
காலால் நடந்திட்டால் காலம் முந்தும்  என்று வேட்டைக்கு உதவி என்றே வாகனம் ஏறிட்டால் -வாழும்
காலமெலாம் போதாது உலகிதனை அளந்திடவே
வாகனம் இறங்கி வந்தால்  வீடு வரவேற்கும்.
பெற்றவரோடு உந்தன் உற்றவர்  முகம் பார்க்க
பட்டபாடெல்லாம் பாட்டாகும்
தோற்றோடும் காட்டாறும்.
வாழ்க்கையின் அடி நாதம் ஒன்றே தான் அது  நகர்தலாகும்
நகர்வு நலிந்திட்டால் இருப்பு சலிப்பாகும்
வாழ்வின் சலிப்பில் உன் வாழ்வு பதராய் விளிப்புறும்

ஜோதிடமர்மங்கள்:11 (10 ல்சுக்கிரன்)

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட மர்மங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சம். அதுல பத்தில் ஒரு பாம்பாவது இருக்கனும் இல்லின்னா ஒரு பாவியாவது இருக்கனுங்கற லைனை பிடிச்சுட்டம்.பாவிகள் இருந்தா என்ன லாபம் -சுபர்கள் இருந்தா என்ன நஷ்டம் அதுக்கென்ன பரிகாரம்.. இந்த ரூட்ல தான் இந்த தொடர் போயிட்டிருக்கு.

சுபகிரகங்கள் வரிசையில வளர்பிறை சந்திரன், குரு, இதர பாவிகளோட சேராத புதன் இவிக பத்துல இருந்தா என்ன ஆகும் – அதுக்கு என்ன பரிகாரம்ங்கறதை சொல்லியாச்சு. இன்னைக்கு சுக்கிரனை பத்தி சொல்லனும்.

சுக்கிரன் தான் நம்ம ஃபேவரிட் ப்ளானட்னு நினைப்பிங்க.ஆனால் நம்ம லைஃபை பொருத்தவரைக்கும் ஆப்படிச்சதே இவருதேன். ஏதோ குரு உச்சமா இருக்கவே கிரேட் எஸ்கேப் இல்லின்னா ஜொள்ளு பார்ட்டியாவே ஒழிஞ்சு போயிருப்பம்.

இப்பம் ஒரு தகவல் அஸ்ட்ரானமிக்காரவுக சுக்கிரனும் சந்திரனும் இந்த வருசமெல்லாம் சோடிபோட்டுக்கிட்டு இருக்கப் போறாய்ங்கனு சொல்லியிருக்காங்க. நம்ம சாதகத்துலயும் இதே கிரகஸ்திதிதான். எதுனா பல்க்கா ஒர்க் அவுட் ஆகப்போகுதா/ இல்லை மறுபடி எதுனா ஜொள்ளு மேட்டர்ல சிக்க போறமா தெரியலை. ( அதையெல்லாம் கடந்து வந்தாச்சுன்னு வைங்க)

நிற்க.பத்துங்கறது தொழில்-உத்யோகம்-வியாபாரத்தை காட்டற இடம் . இதுல சுபர் நிக்கப்படாதுன்னு சொன்னம் . இதர சுபராச்சும் பரவால்லை. இந்த சுக்ரன் மட்டும் நின்னாருன்னா பொளப்பு நாறிரும்.

வாழ்க்கைய அனுபவிக்கத்தான் தொழில்-உத்யோகம்-வியாபாரத்தை எல்லாம் கட்டி அழறோம்.அதுல வர்ர காசு பணத்தை வச்சு வீடு,வாகனம்,பொஞ்சாதின்னு செட்டில் ஆகிறது மோஸ்ட்லி எல்லாரும் நினைக்கிற விஷயம் தான்.

சுக்ரன் ஜாதகத்துல ஃப்ரூட்ஃபுல்லா இருந்தா பரவால்லை.அவரு பல்பு வாங்கியிருந்தா ? பையன் வாகனம் வாங்குவான். வாங்கின வேளை ஒரு லவ் ஃபெய்லியர். ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு அதே வண்டியில ஓவர் ஸ்பீட்ல போயி டிக்கெட் வாங்கிருவான்.

சரி லவ்வே இல்லை ..அதான் லட்சம் லட்சமா சம்பளம் வருதே நாளைக்கு கண்ணாலம் நடந்தா பொஞ்சாதிய வச்சு வாழ வீடு வேணும்லன்னுட்டு தவணையில ஒரு அப்பார்ட்மென்ட் வாங்குவான்.

அதுக்கப்பாறம் கண்ணாலத்துக்கு பொண்ணை தேடி தேடி ..வெறுத்து ஹோமோ செக்ஸுக்கு பார்ட்னரை தேடற நிலை வந்துரும்.
ஏன் இந்த நிலை வருது? ஆரோட ஜாதகத்துலயும் எந்த கிரகமும் 100% ஃப்ரூட் ஃபுல் கிடையாது. யோக ஜாதகர்கள் வாழ்க்கை எல்லாம் 60-40, 70-30 ரேஷோலதான் ஓடுது. இதுல சாதாரணர்கள் லைஃப்? சொல்லவே வேண்டியதில்லை.

சுய இன்பம் முதல் – கில்மாவுக்காக நீங்க என்னெல்லாம் பண்றிங்களோ அதெல்லாம் சுக்ர காரகம் தான். அப்படியே அவரு கையோட கையா வீடு,வாகனம்,பொஞ்சாதிய கொடுக்கவும் ட்ரை பண்ணுவாரு. அவரு 3 வேளை ஹார்லிக்ஸ் சாப்ட மாதிரி ஹெல்த்தியா இருந்தா நோ ப்ராப்ளம்.பல்பு வாங்கியிருந்தா? மேலே சொன்ன கதைதான்.
இதுமட்டுமில்லை ஒரு வேலைன்னு கிடைக்கிற வரை பாதங்கள் தேய நடையா நடந்துட்டிருப்பாய்ங்க. ஒண்டிக்குடித்தனத்துல அல்லாடிக்கிட்டிருப்பாய்ங்க. கண்ணாலம் முடியும். மாமனாரு வண்டிக்கு வாயிதா வாங்கியிருப்பாரு. புருசன்பொஞ்சாதி நெல்லாவே வாள்ந்துக்கிட்டிருப்பாய்ங்க.

தீபாவளிக்கோ பொங்கலுக்கோ மாமனாரு வண்டி கொடுப்பாரு. வண்டி இவருக்கு பல்பு கொடுக்கும். பஞ்சாயத்து ,மஹிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு.
அட இங்கயும் மிஸ் ஆனால் தின்னு ,திங்காம,வாய கட்டி ,வவுத்த கட்டி 40 வயசுக்கு மேல வீடு கட்டுவாய்ங்க. பொஞ்சாதிபோய் சேர்ந்துரும்.
இதுக்கு காரணம்? காட்பாடி வரை போறதுக்கு பெட் ரோல் வச்சுக்கிட்டு திருப்பதி போக ஆசைப்படறதுதான்.

ஒரு மேட்டரை சொல்ட்டு பதிவுக்கு போயிர்ரன்.

டாட் காம் துவக்கறதுக்கு மிந்தி எழுதிக்கிட்டிருந்த வலைப்பூக்களுக்கு இப்பவும் தலா 400+ ஹிட்ஸ் வந்துக்கிட்டு தான் இருக்கு .அவிக மாறவே இல்லை. சரி மாத்திதான் பார்ப்பமேன்னு ரீடைரக்ட் பண்ணியிருக்கன்.

அனேகமா இந்த தளத்துல போடற கடைசி பதிவு இதான்னு நினைக்கிறேன். இதுல ஸ்டோரேஜ் முடிஞ்சு போச்சு. அழகா நீங்களே இந்த சைட்டை புக் மார்க் பண்ணிக்கிட்டு மாறிருங்க. அப்போ இந்த தளத்துல உள்ள பழைய பதிவுகளையும் படிக்க முடியும். கன்னிமராவுல புதிய பதிவுகளையும் படிக்க முடியும். இல்லின்னா இந்த சைட் கன்டென்ட் எல்லாம் கிடைக்காமயே போயிரும்.

பதிவுக்கு போயிரலாமா ..

இதுவரை சொல்லிக்கிட்டு வந்தது போன ஜெனரெஷனுக்கு பச்சக்குன்னு பொருந்தும். ஆனால் இன்னைக்கிருக்கிற ஜெனரேஷன் எப்படின்னா?
தாளி ஒன்னமே செய்யக்கூடாது.ஆனால் காசு மழையா கொட்டனும். வாழ்க்கைய என்ஜாய் பண்ணனும். ஒரு உபகதை : அப்பங்காரன் நோட்டடிக்கிற இடத்துல செக்யூரிட்டி. பையனை படிக்க அனுப்பறாய்ங்க. இவன் சேட்டு கிட்டே ஃபைனான்ஸ் போட்டு ஃபோர் வீலர் வாங்கி அதை வாடகைக்கு விட்டு காசு பார்த்து அந்த காசுல கொண்டாடலாம்னு ஸ்கெட்ச்.

உள்ளூர் காரனே எவனை நம்பறது -எவனை சந்தேகப்படறதுன்னு தெரியாம தினம் தினம் செத்துப்பிழைக்கிறான். இதுல இந்த பையன் இப்படி.. உருப்படுமா? ஊஹூம்.
அப்பன் காரன் ஊரை அடிச்சு உலையில போட்டு கட்டின காம்ப்ளெக்ஸ் வாடகையில மஞ்ச குளிக்கிற பார்ட்டிகளும் உண்டு.
அம்மா/அக்கா பலான தொழில் செய்றாய்ங்கன்னு தெரிஞ்சும் ஒழுங்கா படிச்சு உருப்பட்டு அவிகளுக்கு ரெஸ்ட்கொடுக்கலாம்னு கூட நினைக்காம அதுக்கு இதுக்குன்னு பணம் புடுங்கி லைஃபை என் ஜாய் பண்ற ஜென்மங்களும் இருக்கு.

இங்கே ஒரு சீக்ரெட்டை சொல்றேன்.

ஆரு ஃபேமிலில (ஃபேமிலி ட்ரீ) ஒருத்தருக்கு ரெண்டு மூனு கண்ணாலம் நடந்திருக்கோ – ஆரோ ஒருத்தரு கண்ணாலத்துக்கு மிந்தி செத்து போயிருக்காரோ – பெண்கள் சின்ன வயசுல விதவை ஆறது – கண்ணாலத்துக்கு மிந்தி செத்துப்போறதுல்லாம் நடந்திருக்கோ அவிக ஜாதகங்கள் இந்த கேட்டகிரியில வரும். (சுக்ரன் 3-7-10 ல இருக்கிறது -ராகு கேதுவோட சேர்க்கை ,சூரியனோட சேர்க்கை /செவ்வாயோட சேர்க்கை)

இவிகளுக்குத்தேன் எந்த வயாக்ராவும் இல்லாம அப்படியே கிளம்பும் -நான் மூடை சொன்னேன். இன்னாடா மேட்டருன்னா 18 – 20 வயசுக்குள்ளயே கொட்டி தீர்த்துட்டு நித்யானந்தா மாதிரி சாமியாருங்களை நம்பி நாசமா போகனும்.

இந்த மாதிரி பார்ட்டிங்கதேன் சரியான அலைஞ்சானா இருக்கும். பலி கொடுக்க போற ஆட்டுக்கு ஃபுல் மீல்ஸ் போட்டாப்ல கொஞ்ச காலம் வச்சதை எடுக்காம – ஆசைய சொன்னேங்க- அனுபவிக்க கிரகம் அனுமதிக்கும்.

பிறவு? சோத்துக்கு லாட்டரி.

இந்த மாதிரி கிராக்கிங்க லைஃபை என் ஜாய் பண்றதுக்காகத்தானே தொ-உ-வியாபாரம் எல்லாமே. மொதல்ல பொளப்ப பார்ப்போம்னு நினைக்க மாட்டாய்ங்க.ரெண்டையும் போட்டு குழப்பிக்கிட்டு கஸ்டமர் கிட்டே /க்ளையண்ட் கிட்டே /ஃபைனான்சியர் பொஞ்சாதி கிட்டே கூட நீட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க -வாலை சொன்னேங்க.

அதுமட்டுமில்லை .. வேலை -வெட்டி -ஷெட்யூல் -அஜெண்டா எது இருந்தாலும் சரி .. அதை திராட்டுல விட்டுட்டு சினிமா ,ட்ராமா, பார்ட்டி,கச்சேரி,டிவி,சாட்டிங்,கில்மான்னு டைவர்ட் ஆயிட்டே இருப்பாய்ங்க.

நம்ம நண்பர் ஒருத்தரு ..ஆள் என்னவோ பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் சைஸுதான்.ஆனால் அக்கம் பக்கத்து தாக்குலத்துக்கெல்லாம் யதேஷ்டமா வட்டிக்கு கடன் கொடுத்துட்டு அவிக கொடுக்கிற ஆட்டுக்கறி மாட்டுக்கறி ,தொடை கறிக்கு ஜொள்ளு விட்டு வட்டியும் போய்,முதலும் போயி ஊருக்கே போய் சேர்ந்துட்டாரு.
இதெல்லாம் ஒரு ரகம்னா இன்னொரு ரகமிருக்கு. அதென்னடான்னா எதை எடுத்தாலும் டைரக்டர் சங்கர் ரேஞ்சுல கற்பனை பண்றது. இன்டிரியர்,இனாகுரேஷனுக்கு அள்ளி விட்டு ஏதோபடத்துல சரத்-வடிவேலு ஜவுளிகடல் வைப்பாய்ங்களே அந்த கதையா மொக்கை ஆயிர்ரதும் உண்டு.

செரிங்ணா பலன் சொல்லவே இந்த பதிவு சரியா போச்சு .பரிகாரத்தை அடுத்த பதிவுல பார்ப்போம். அபீட் ஆயிக்கிறேன்.

தாயா ? பேயா ?

தமிழ் சினிமால மதர் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆறதுக்கு ஒரு காரணத்தை ஏற்கெனவே ஒரு தாட்டி சொன்னாப்ல ஞா.
//நாம அம்மா உசுரா இருக்கிறச்ச அவிகளை அலட்சியப்படுத்திர்ரதான். அவிக போய் சேர்ந்த பிற்பாடு சினிமா அம்மா இடத்துல நம்ம அம்மாவையும், ஹீரோ இடத்துல நம்மையும் கற்பனை பண்ணிக்கிட்டு உதவாக்கரை சினிமாவ எல்லாம் ஹிட் ஆக்கறோம். //

மதர் சென்டிமென்ட் சினிமால்லாம் சூப்பர் ஹிட் ஆக இன்னொரு காரணம் என்ன தெரியுமா? சினிமால ஒரு பெண்ணின் வாழ்க்கையை கூறு போட்டு -அம்மாங்கற கோணத்தை மட்டும் ஜூம் போட்டு காட்டிர்ராய்ங்க.

அம்மாவோட லைஃப்ல அவிக என்னென்னவோ பாத்திரங்களை போஷிச்சிருப்பாய்ங்க. ஆனால் அதையெல்லாம் ப்ளர்ராக்கி காட்டறதால தான் மதர் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுது.

கெட்ட மகன்கள் இருக்கலாம். ஆனால் கெட்ட தாய்னு ஆரும் கிடையாதுங்கறது தமிழ் சினிமால டயலாகா வேணாம்னா நெல்லா இருக்கலாம்.ஆனால் யதார்த்த வாழ்க்கையில பார்க்கும் போது.. ப்ர்ர்.

சரி.. ஜோதிடப்படி மாத்ருஸ்தானாதிபதி லக்னாத் எந்த பாவத்துலருந்தா எப்படியா கொத்த மம்மி அமைவாய்ங்கன்னு இன்னைக்கு பார்ப்போம்.
நான்காமிடம் வெறும் மம்மிய மட்டும் காட்டறதில்லிங்ணா. வீடு,வாகனம்,கல்வி,இதயம் ஆகிய விஷயங்களையும் காட்டுது.

1.மாத்ருஸ்தானாதிபதி லக்னத்துல இருந்தா:
தாய்:
அம்மாவோட இம்பாக்ட் ஜாதகர் மேல அதிகமா இருக்கலாம். அம்மா கோண்டா மாறலாம்.
வீடு,வாகனம்,கல்வி :
தாய் வழியில வீடு அமையலாம். ஜாதகர் சிறப்பா கல்வி பெற்று உத்யோகம் செய்து வீடு கட்டலாம். ஹவுசிங் ஆட்டோமொபைல் துறைகளில் வளர்ந்து வீடு ,வாகனம் எல்லாம் அமைய பெறலாம்.பாசப்பறவையா இருப்பாய்ங்க.

2.ரெண்டில் இருந்தா:
அம்மா வழி உறவுகள் உதவலாம். அம்மா வழி சொத்துக்கள் மூலமா வருமானம் கிடைக்கும். கிருக,வாகன யோகம் உண்டு.ஆனால் அடிக்கடி இருக்கிறதை வித்து புதுசா வாங்க துடிப்பாய்ங்க. ட்யுட்டோரியல்,ஸ்கூலுன்னு வைக்கலாம். நாலு ரூவா சம்பாதிக்கலாம்.மணி மைண்டடா இருப்பாய்ங்க.

3.மூன்றில் இருந்தால்:

அம்மா ஒர்க்கிங் வுமனா இருக்கலாம்.அல்லது அவிக குடும்பத்துக்காக அல்லாட வேண்டி வரலாம்.அடிக்கடி வீடு மாத்த வேண்டி வரலாம். வாகன விஷயத்துலயும் இதுதான் நிரந்தரம்னு சொல்ல முடியாத நிலை. கல்வி விஷயத்துல கூட அடிக்கடி க்ரூப் மாத்திக்க கூடும். அல்லது வெளியூர்ல தங்கி படிக்கலாம். தொலை தூரம் ட்ராவல் பண்ணி படிக்கலாம். இதய படபடப்பு இருக்கலாம்.

4.நான்கில் ஆட்சி பெற்றிருந்தால்:
அம்மாவோட கமாண்ட் அதிகமா இருக்கும். சிலர் விஷயத்துல அப்பா,அம்மா பிரிவினால் ஜாதகர் அம்மா போஷனையில் இருக்கவேண்டி வரலாம்.தாய் வழியில் சொந்த வீடு,வாகனம் அமையலாம். ஜாதகர் நல்ல கல்வியாளரா இருக்கலாம். நல்ல மனம் படைத்திருப்பார்.

5.ஐந்தில் நின்றால்:
தாய் என்றால் ஒரு அலட்சிய பாவம் இருக்கும். அதே நேரம் சப்கான்ஷியஸா அம்மா மேல உசுரையே வச்சிருப்பாய்ங்க. அதிர்ஷ்டவசமா வீடு,வாகன யோகம் அமையும்.( முயற்சி இல்லாமல்/பாதி விலையில/குலுக்கல்ல). தனியார் பள்ளி/கல்லூரிகள்ள லட்சக்கணக்கா கொட்டிக்கொடுக்காமயே,கண் விழிச்சு மனப்பாடம் செய்யாமலே அசால்ட்டா படிச்சு பாஸாயிருவாய்ங்க. அதிர்ஷ்டத்தையும்,விதியையும் நம்புவாய்ங்க.

6.ஆறில் நின்றால்:
தாய் நோயுறுவார். அல்லது கடன்,வழக்கு தொல்லைகள் ஏற்படும். ஜாதகர் தாயுடன் முரண்படுவார். வீட்டின் மீது கடன் இருக்கும்.மூழ்கியும் போகலாம். சகட்டுமேனிக்கு ஹவுசிங் லோன்,வெயிக்கிள் லோன் போட்டு கட்டமுடியாம தவிப்பாய்ங்க. கல்விக்கடன் கிடைக்கும். லா,மெடிசின் படிக்க முனைவார்கள். ஒன்றிரண்டு கல்வியாண்டு வீணாகலாம்.

7.ஏழில் நின்றால்:
தாய் வழியில் பிறந்தவர் மனைவியாவார். அல்லது தாய்க்கும் -மனைவிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். ஜாதகருக்கு தாயுடன் நல்ல தோழமை இருக்கும். அப்பார்ட்மென்ட்ல வீடு அமையலாம். அல்லது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கூட்டாக மனை வாங்கி வீடு கட்டலாம். மனைவி வழியில் வீடு,வாகனம் அமையலாம். அல்லது நண்பர்கள் உதவுவர். கம்பைண்ட் ஸ்டடில ஆர்வம் இருக்கும். காதல் ,நட்புக்கு முக்கியத்துவம் தருவார்.

8.எட்டில் நின்றால்:
நான்குக்குடையவர் எட்டில் நின்று தாயின் ஜாதகத்திலும் ஆயுள் பலம் இல்லாவிட்டால் தாய்க்கு மரணம் ஏற்படலாம். அல்லது பிரிவு ஏற்படும். தாய்க்கு கடுமையான உடல் உழைப்பு விதிக்கப்பட்டிருக்கும். எதிர்பாராவிதமாய் சாலை அகலப்படுத்தல் போன்றவற்றால் வீடு வாசலை இழக்கவேண்டி வரலாம். வாகன விபத்துக்கும் வாய்ப்பு. அல்லது வாகனம் திருடு போகலாம்.இதய நோய் ஏற்படலாம்.

9.ஒன்பதில் நின்றால்:
அப்பாவே அம்மா ரோலையும் ப்ளே பண்ணுவாரு. தாய் வழியில் சொத்து கிடைக்கலாம்.அது வீடாகவோ வாகனமாகவோ இருக்கலாம். தொலை தொடர்பு,கம்யூனிக்கேஷன்ஸ் , ஏரோனாட்டிக்கல்,கப்பல் போக்குவரத்து தொடர்பான கல்வி பயிலலாம். கல்வி ஒன்றே இவரது முதலீடாக இருக்கலாம். சிலர் வீட்டை வச்சு சிட்ஸ்,ஃபைனான்ஸ்,டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் போன்ற தொழிலை டெவலப் பண்ணுய்வாய்ங்க. கார்கோ சர்வீஸஸும் ஒர்க் அவுட் ஆகும்.

10.பத்தில் நின்றால்:
ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,கல்வி தொடர்பான தொழில்கள் அமையலாம். தாயின் ஊக்கத்தால் ஜாதகர் கல்வி,தொழிலில் பெரிதும் முன்னேறுவார் (சத்ரபதி சிவாஜி போல).வீட்டோடு செய்யும் தொழிலும் செய்யலாம். இவர் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டிய துறைகள் தொடர்பான கல்வியை பயில்வார். சர்வகாலமும் காரியத்தில் கண் வைத்திருப்பார்.

11.பதினொன்றில் நின்றால்:
அண்ணி தாய் பாசத்தை பொழியலாம் (கமலுக்கு போல்) அப்பாவுக்கு மறு தாரமும் இருக்கலாம். அல்லது தாய் அல்லாது மற்றொரு பெண்ணும் ஜாதகருக்கு தாய்ப்பாசத்தை அள்ளிக்கொடுப்பார். இரண்டு வீடுகள் /இரண்டு தலைவாசல் உள்ள வீடு /இரண்டடுக்கு வீடு அமையலாம். வாகனமும் அவ்வாறே.கல்வியிலும் டபுள் டிகிரி வாங்குவார்.

12.பனிரெண்டில் இருந்தால்:
தாய் இருந்தும் இல்லாதவராக இருக்கலாம்.சிறுவயதில் இருந்தே ஜாதகர் பார்ட் டைம் வேலை செய்து தாய்க்கு உதவலாம்.ஹாஸ்டல் வாசத்துக்கு வாய்ப்பு. வண்டி வாகன வகையில் வீண் விரயங்கள் ஏற்படும். கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வகையில் இவரது தொழில் உத்யோகம் அமையலாம். சில சமயம் எதிராளி “உனக்கு இதயமே இல்லையா” என்று கேட்குமாறு கட் அண்ட் ரைட்டா பிஹேவ் பண்ணலாம்.அல்லது அய்யோ பாவம்னு போயி நஷ்டமடையலாம்.

இளமையில் முதுமை (கில்மா பதிவல்ல)

null

ஸ்ரீ ஸ்ரீ தன் மஹா ப்ரஸ்தானத்துல “புட்டுக்கத்தோ வ்ருத்துலு”ன்னு சொல்வாரு. அதாவது பிறக்கும்போதே கிழவாடியா பிறந்த பார்ட்டின்னு அருத்தம். அப்படி ஒரு கேரக்டரை பத்தி சொல்லத்தேன் இந்த பதிவு. வயசு 20+ படிப்பு பத்தாங்கிளாசுக்குள்ள. அம்மா அப்பங்காரன் டார்ச்சர் தாங்காம சின்ன வயசுலயே குட்டி தங்கச்சியோட கிணத்துல குதிச்சு டிக்கெட்டு. அப்பன் சரியான லக்காடி

( ஆமா இதுக்கு ஆக்சுவல் அருத்தம் என்ன? வயசு அம்பதாகுது முந்தா நேத்து ஒரு பட்லியோட ஃபோன்ல கடலை போட நானூறு ரூவாய்க்கு டாப் அப் போட சொல்லி பிள்ளைக்கு போன் பண்ணான். இந்த அருத்தத்துல தான் இந்த வார்த்தைய நான் உபயோகிச்சேன் )

அம்மா டிக்கெட் போட்டதும் இன்னொரு கண்ணாலம் கட்டிக்கிட்டு இவனை கழிச்சு விட்டுட்டான். இவன் அம்மாவ பெத்த பாட்டியோட குடிசை வீட்லயே வளர்ந்தான்.சின்னவயசுலருந்தே காசு மேட்டர்ல கெட்டி. அஞ்சு காசு பத்து காசு சீட்டுலருந்து சேர்க்க ஆரம்பிச்சவன்.

என்ன இவன் சேர்ப்பான்.அப்பங்காரன் அதை லவட்டிக்கிட்டு போயி குடிச்சு கூத்தடிச்சுருவான். நெல்ல வேளையா புத்திர பாக்கியம் இல்லை. நம்மாளு எங்கயோ இலை எடுத்து பொளப்பை ஓட்டிக்கிட்டிருக்க ஒரு குட்டியோட லவ்ஸு. அவளை பெத்தவன் நம்மை போல ப்ராக்டிக்கல் ஆசாமி போல.

ஒரு ரூட்டை போட்டு கொடுத்து பொளப்புக்கு வழி காட்டினான்.ஒடனே அப்பங்காரனுக்கு பொத்துக்கிச்சு பாசம். ஏதோ ப்ளாட்டை வித்தேன்னு ஒரு லட்ச ரூவாயை கண்ல காட்டிட்டு அதை இவன் தொழிலுக்காகவே செலவழிச்சதா கதை பண்ணி கணக்கு பண்ணிட்டு ரெண்டாவது பாரால சொன்ன டாப் அப் மாதிரி ஆயிரக்கணக்குல சுரண்ட ஆரம்பிச்சான்.

இடையில அப்பங்காரன் குடிச்சுட்டு ரோட்டோரமா உட்கார்ந்திருக்கிற எருமைங்க மேல டூ வீலரை விட்டு விலா எலும்பை உடைச்சுக்கிட்டு ரோட்ல கிடக்க தெரிஞ்சவுக அள்ளிக்ககிட்டு வந்து பஸ் ஸ்டாண்ட்ல டம்ப் பண்ணிட்டு போனது தனி கதை .

அதுக்கப்பாறம் ஏதோ சில்லறை தகராறுல செருப்பு கூட போட்டுக்க விடாம அடிச்சு முகத்தை வீங்க வச்சு விரட்டி விட்ட சாதனையும் மேற்படி அப்பாக்கள் குல திலகத்துக்கே சொந்தம்.

இந்த அலப்பறைல்லாம் போதாதுன்னு கங்கையம்மன் திருவிழாவுக்கு நன் கொடை கேட்க வந்த ஊர் தலைவர் கிட்ட ஏடாகூடமா பேசி அவிக வீட்டுக்காரர் சைனியத்தை அனுப்ப – இந்த அ நியாயத்தை தட்டி கேட்க பிள்ளைக்கு கீர் போட்டு அனுப்பின சாதனையும் அவருக்கே சொந்தம். நம்மாளு ஏதோ படத்துல ராஜ்கிரண் அடி வாங்கறதை பார்த்து பொங்கி எழும் அஜித் கணக்கா பொங்கி எழுந்து மறு நாள் விடியல்ல ஊர் தலைவர் வீட்டண்டை போய் ஏடாகூடமா பேச அவிக நாப்பது பேருக்கு குறையாம மிதிச்சு “செத்துரப்போறான்” னு பெருக்கி தூர தள்ளிட்டாய்ங்க.

இப்படியா கொத்த அப்பன் தன் பேர்ல இருக்கிற ப்ளாட்ல இருக்கிற வீட்டை ( ரூமுங்ண்ணா) கட்டு கட்டுன்னு ஓதி ஓதி இறக்கிவிட்டுட்டான்னா இது அவனோட ஜாலக்கு. நம்மாளுக்கு மூளை எங்க போச்சு.20+ வயசுக்கு வீடு கட்டற எண்ணம் வர்ரதே அப் நார்மல் . இதுல அந்த மேரி அப்பன் சொல்ல கேட்டான்னா என்னான்னு சொல்றது?

வீடுங்கறது இன்செக்யூரிட்டியில தவிக்கிற சனத்துக்கு ஒரு கற்பனையான பாதுகாப்பை கொடுக்கிற ஒரு அம்சம். வீடு கட்டனுங்கற எண்ணம் 40+ல வந்தா அது நார்மல்.

20+ல வருதுன்னா என்னாங்கறது? இதான் இளமையில் முதுமை போல (அப்பாடா .. தலைப்பை பதிவுக்குள்ள கொண்டு வந்துட்டம்) .

எப்படியோ நம்மாளும் சொந்த தொழில் இருக்கிற தகிரியத்துல கண்ட இடத்துல கைய நீட்டி ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டின கணக்கா கட்டினான் கட்டினான் ரெண்டு வருசம் கட்டினான். எட்டு லட்ச ரூவாய விழுங்கிட்டு தேமேனு நிக்கிற வீட்டுக்கு இன்னம் எலக்ட்ரிக்கல் ஒர்க் கூட முடியலை. கிரகபிரவேச வைபவமும் நடந்தேறிருச்சு.இந்த வைபவத்துக்கும் கூடுதலா ஒரு இருபதாயிரம் கடன் வாங்கியாச்சு.

அந்த ப்ளாட் இருக்கிறது ஒரு கிராமாந்தர ஏரியாவுல.. அந்த ப்ளாட்ல கையில உள்ளதை எடுத்து கட்டினாலே வெட்டி. வங்கியில உள்ளதை எடுத்து கட்டினாலே வட்டி நஷ்டம். கடன் வாங்கி கட்டினா ஒரு பத்து வருச வாழ்க்கை நஷ்டம . இளமை நஷ்டம் .

ஏற்கெனவே தனுஸ் தனமான பாடி – ரெண்டு பைசா மூஞ்சி . இதுல குன்டிய சுத்தி கடன். கடங்காரனை நினைச்சா சகலமும் ஒடுங்கிராதோ?

லவ்ஸ் மேட்டர் என்னாச்சுன்னு சொல்லவே இல்லியே ! மொதல்ல வீடு கட்டி முடியட்டும் அப்பாறம் பேசி முடிச்சுரலாம்னு சொன்ன அப்பங்காரன் எனக்கென்னமோ கடனை அடைச்சுட்டு கண்ணாலம் கட்டிக்கிறது பெஸ்டுன்னு தோனுதுனு பேச ஆரம்பிச்சானா பெண்ணை பெத்தவன் அலார்ட்டாயிக்கினு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிச்சாச்சு. என்ன சாந்தி முகூர்த்தம் தான் கொஞ்சம் தள்ளி போகுது.

இளமை பொங்கினாதானே இதெல்லாம் சிரமம். இளமையில் முதுமை வரம் பெத்தவனுக்கு இதெல்லாம் ஒரு கணக்கா ஃப்ரீயா உடுங்க..

நம்முது கடகலக்னமாச்சா – கடக லக்னக்காரன்லாம் வீடு கட்டியே போண்டியாறதையும் – கட்டி பாதியில நின்னு போறதையும் பார்த்து பார்த்து வளர்ந்தமா -அதனால வீடு மேட்டருக்கு நம்ம மைண்ட் இம்யூன் ஆயிருச்சு.

அதனால லெச்சுமி கூரைய பிச்சுக்கிட்டு கொட்டி கொடுத்து லட்சங்களே மிச்சமாயிட்டாலும் தாளி நம்ம ப்ளான்………….. படத்தை பார்த்திங்கல்ல..

அம்மா என்ற கேணச்சி

அண்ணே வணக்கம்ணே !
பாலியல் விருப்பங்கள் தொடர்ல இதுவரை 3 லைஃப் பிக்சர்ஸ் /அதுக்கான பரிகாரங்களை தந்திருக்கம். இன்னைக்கு 4 ஆவது பிக்சர்.

ஊடுகட்டி விளையாடறது தெருச்சண்டையில வேணம்னா கித்தாப்பா இருக்கலாம்.ஆனால் ரியல் லைஃப்ல ஊடு கட்டறதுங்கறது சொந்த செலவுல சூனியம் வச்சுக்கற மாதிரி. அது கூட கப்பாசிட்டி இருந்து பாங்க் லோன்,எல்.ஐ.சி லோன்லயே முடிச்சுர்ர மாதிரி இருந்தாலும் பரவால்லை. இதையும் தாண்டி கோதாவுல இறங்கினா பல்பு வாங்க வேண்டியதுதான்.

இந்த ஊடு கட்டறவுக சைக்காலஜியை கொஞ்சம் பார்ப்போம். ஒரு ஊடு ஊடா கீனம்னா அங்கன அம்மான்னு ஒரு கேணச்சி இருக்கனும்.

வேளைக்கு திங்காம, தூங்காம ,மத்த பன்னாடைகளுக்கு உழைச்சே ஓடா தேயறவளை பின்னே இன்னான்னு சொல்றது.

இப்படியா கொத்த அம்மா அமைஞ்சவுகளோட மைண்ட்ல அந்த பிக்சர் அதாவது அம்மாவோட பிக்சர், அந்த அம்மா ஊடாடின ஊடோட பிக்சர் பச்சக்குனு ஒட்டிக்குது.

அதுக்கப்பாறம் அம்மா கிளவியாயிரலாம், செத்துப்போயிரலாம், பக்கத்து வீட்டுக்காரனோட ஓடிப்போயிரலாம்.அதெல்லாம் வேற கதை .ஆனால் இவிக மைண்ட்ல இருக்கிற பழைய பிக்சர் மட்டும் ரீட் ஒன்லி ஃபைல் கணக்கா அப்டியே இருக்கும்.

இவிகளால கிளவியாப்போன அம்மாவை குமரியா மாத்தமுடியாது – செத்துப்போன அம்மாவ உசுரோட கொண்டுவரமுடியாது.. ஆனால் இவிக இவிகளோட இளமையில நிச்சிந்தையா – பனி நீர் கணக்கா எந்த கல்மிஷமும் இல்லாம வாழ்ந்த ஊட்டை கட்ட முடியும்.

அதைத்தான் செய்றாய்ங்க. ஆக்சுவலா பெண் வீக்கர் செக்ஸுங்கறதால -இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் காரணமா பெண்களுக்குத்தான் “வீடு” பற்றிய கற்பனைகள் இருக்கனும்.

அந்த கற்பனை நிஜமாகனும்னா அதுக்கு ஆண் சம்மதிச்சே ஆகனும். ஆண் தான் ஸ்ட்ராங்கர் செக்ஸாச்சே
இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் எல்லாம் இருக்கக்கூடாதே ..பின்னே ஏன் மெஜாரிட்டி ஆண்கள் ஊடுகட்டி விளையாடறாய்ங்க சாரி அவஸ்தை படறாய்ங்க.

இங்கன காலத்தின் கோலம் வேலை செய்யுது. தலைமுறைக்கு தலைமுறை ஆண்கள் ஆண்மைய இழந்துக்கிட்டே வர்ராய்ங்க. பெண்கள் பெண்மையை இழந்துக்கிட்டே வர்ராய்ங்க.

உலகமயம்,தாராள மயம், தனியார் மயம் மாதிரி காரணங்களால ஆண் பெண் இருவரும் சம்பாரிச்சாத்தேன் சமாளிக்கமுடியுங்கற நிலை. இதனால பெண்ணும் வேலைக்கு போகவேண்டியிருக்கு. பெண் வேலைக்கு போறதால ஆண் ” அவள் காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டியிருக்கு. இதனாலயும் பெண்களில் ஆண்மை -ஆண்களில் பெண்மை அதிகரிக்குது.

ஊட்டு மேட்டரை தான் எப்டி ஆரம்பிக்கிறதுங்கற மன நிலையில கணவன் இருக்க மனைவி ப்ரப்போஸ் பண்றா கணவன் ஒப்ளைஜ் பண்ணிர்ரான்.

ஆணை பொருத்தவரை ஊடுங்கறது அதுவும் கண்ணாலத்துக்கு மிந்தி வாள்ந்த ஊடுங்கறது ஒரு சொர்கம். அதை திரும்ப பெறுவதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறதை புரிஞ்சுக்கலாம்.

ஆனால் பெண்?

அவளை பொருத்தவரை ஊடுங்கறது அவள் ரத்தத்தை உறிஞ்சற அட்டை. அவள் சிறகுகளை வெட்டற கத்திரி , அதுவும் கண்ணாலத்துக்கு மிந்தின்னா ரெஸ்ட் ரிக்சன்ஸ் சாஸ்தி.ஆனாலும் அவ ஏன் ஊடு மேட்டரை ப்ரப்போஸ் பண்றா? பேசிக்கலா பெண் மசாக்கிஸ்ட். தன் நரகத்தை திரும்ப பெறுவதில் ஒரு ஆர்வம்.

வேணம்னா ஒரு சர்வே கூட பண்ணிபாருங்க. ஆரெல்லாம் -ப்யூர்லி ஃபார் டொமஸ்டிக் பர்ப்பஸ் -வட்டி /வாடகை/ரீ சேல் வேல்யூல்லாம் பார்க்காம பெரிய தியாகங்களையும் சின்ன முணுமுணுப்பு கூட இல்லாம் செய்து சக்ஸஸ் ஃபுல்லா ஊடு கட்டறாய்ங்களோ

அவிகளுக்கு தாயன்பு கிடைச்சிருக்கும். அல்லது விவரம் தெரியறதுக்கு மிந்தியே தாயை இழந்திருப்பாய்ங்க.

ஹாஸ்டல் கேஸு , ஆயா கையால சோறு தின்ன கேஸெல்லாம் டவுட்டுதேன். இவிக கட்டினா அதுக்கு வேற காரணம் இருக்கும்.

அம்மான்னாலே ஒரு கிக்குதான். அதுலயும் அந்த அம்மா ஒரு நல்ல ஹோம் மேக்கரா – கலைகளில் ஈடுபாடுகள் கொண்டவளா – அழகானவளா – இருந்தா அந்த நினைவுகள் தரும் சுகமே தனி . இந்தமாதிரி அம்மா அமைஞ்சவுக பத்து வட்டிக்கு கடன் வாங்கியாச்சும் வீட்டை கட்டியே தீருவாய்ங்க.

இவிக படிப்பு கூட ஆட்டோ மொபைல்ஸ், சிவில் இஞ்சினீரிங், கேட்டரிங் டெக்னாலஜி, டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான படிப்பா இருக்க வாய்ப்பிருக்கு.

வாகனத்தை பொருத்தவரை இவிக பொருளாதார நிலைக்கு தொடர்பே இல்லாத வாகனம் அமையும்.

இவிக பகல்ல பிறந்திருந்தா இவிக தாய்க்கும்,மனைவிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். உம் அம்மா பேரு மல்லிகா பொஞ்சாதி பேரு கனகா.

மேட்டரு இன்னாடான்னா அம்மா மேட்டர் டபுள் ஓகேன்னா வாகன மேட்டர் சைடு வாங்கும். இது ரெண்டும் டபுள் ஓகேன்னா ஊடு மேட்டர்ல பல்பு வாங்கிருவாய்ங்க. அட இதெல்லாமே டபுள் ஓகேன்னா மொதல்ல அம்மா, அப்பாறம் பொஞ்சாதி ,அப்பாறம் வாகனம்னு எல்லாமே ஒவ்வொன்னா மக்கர் பண்ண ஆரம்பிச்சிரும்.

அட .. இது எதுவுமே நடக்கல்லை. சப்ஜாடா எல்லாம் நெல்லாருக்குன்னு வைங்களேன். சரியான வயசுல -அதாவது இளமையின் வேகம் -முதுமையின் இயலாமை ரெண்டும் இல்லாத ஒரு கால கட்டம் மத்திய வயசு. அந்த வயசுல தாளி பேட்டரி வீக் ஆயிரும்.கைனகாலஜிக்கல் பிரச்சினைல்லாம் வர ஆரம்பிச்சுரும்.

இதான் நாலாவது பிக்சர் இதுல வர்ரவுக – ஐ மீன் இந்த பதிவுல நான் சொல்லியிருக்கிற சிம்ப்டம்ஸ் உள்ளவுக நாளைய பதிவை எதிர்பாருங்கள் . ஏன்னா அதுல உங்களுக்கான பரிகாரங்களை தரப்போறேன்.