விற்பனையை உயர்த்த :2

அண்ணே வணக்கம்ணே !

கடந்த பதிவுல விற்பனைய உயர்த்த சில க்ளூஸ் கொடுத்திருந்தேன். நீங்க குறிப்பிட்ட கிரக காரகம் கொண்ட பொருளை விற்பனை செய்தே ஆகவேண்டும் என்ற நிலை இருந்து -உங்க ஜாதகத்துல மேற்படி கிரகம் பல்பு வாங்கியிருந்தா என்ன பண்றதுங்கற மேட்டரை இன்னைக்கு பார்க்கலாம். அதுக்கு எந்த பொருள் என்ன கிரகத்தோட காரகம்னு தெரியனும்.

விலாவாரியா பட்டியல் போட்டா பதார்த்த குண சிந்தாமணி கணக்கா ஆயிரும்.அதனால சில அடிப்படை விஷயங்களை சொல்லிர்ரன். இதை வச்சு நீங்க விக்க துடிக்கிற ஐட்டம் எந்த கிரக காரகம்னு தெரிஞ்சுக்கங்க. அட ஒரு வீடு மேட்டரையே எடுத்துக்கங்களேன்.

தொத்தல்,இடிஞ்சு விழ தயாரா இருக்கு, மனை மதிப்பு தான் போடுவாய்ங்கன்னா செவ் காரகம். ரெம்ப பழைய வீடுன்னா சனி காரகம், அடுத்தவுக வீடு அதை விக்கப்பார்க்கிறிங்கன்னா புத காரகம், பொய்ப்பத்திரம் தயாரிச்சு விக்க பார்க்கிறிங்கன்னா ராகு காரகம்.

அதுல 1008 வில்லங்கம் இருக்கு. நீங்களும் மூக்கை நுழைக்கிறிங்கன்னா கேது காரகம். வீடு ஒரு குக்கிராமத்துல இருக்கு,மலைப்பாங்கான பகுதியில இருக்குன்னா சூரிய காரகம், ஏரிக்கரை,குளக்கரையை ஒட்டியிருக்குன்னா சந்திர காரகம், வங்கி ஜப்தி பண்ணி ஏலத்துல எடுத்த வீடுன்னா குரு காரகம், அதை வித்து உங்க பட்லிக்கு ஒரு கார் வாங்கி ப்ரசன்ட் பண்ணப்போறிங்கனா சுக்கிர காரகம்.

நீங்க அதுல குடியிருக்கிங்க.ரெம்ப சவுகரியமா இருக்கு .அதை வித்துட்டா ரெம்ப அவதிப்படுவிங்கன்னா 4 ஆம் பாவத்தை பாருங்க, நீங்க அதுல குடியில்லை. வாடகைக்கு விட்டிருக்கிங்க. அந்த வீடு உங்க சொந்த சம்பாத்தியத்துல வாங்கினதுன்னா ரெண்டாம் இடத்தை பாருங்க. அப்பா சொத்துன்னா 9ஆம் வீடு, அதை வித்து தொழில் செய்யப்போறிங்கன்னா 10 ஆம் வீடு.
இப்படி இடம் பொருள் ஏவலை பொருத்து காரகம் மாறும். திங்கள் கிழமை மகளுக்கு கண்ணாலம். நாளைக்கு ரிசப்ஷன் .இந்த நிலைமையிலயும் இத்தனை வரிகள் அடிச்சேன்னா அது என் தாய் கலைவாணி போட்ட பிச்சை. அந்த மவராசியை ரெம்ப லந்து பண்ண விரும்பல.கழண்டுக்கறேன். இந்த சுப காரியம் நெல்லபடி முடியட்டும் ஃப்ரஷ்ஷா ஃபீல்டுக்கு வரேன்.ஆதியோடந்தமா ஒரு தொடராவே எழுதிருவம்.

எச்சரிக்கை:
1.திரு.விமலாதித்தன் ஸ்பான்சர் செய்த லைப்ரரி பிரதிகள் தவிர -ஒரு யு.கே நண்பருக்கு தவிர ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொண்ட மற்ற அனைவருக்கும் நான்கு நூல்களும் 1+1 செட் அனுப்பியாச்சு. கிடைக்க பெற்றவர்கள் ஒரு வரி மெயில் போட்டால் ஒரு நிம்மதி.

2.மேற்படி நான்கு நூல்களையும் பெற விரும்புப்பவர்கள் படத்தை பாருங்க. மேலதிக விவரங்களுக்கு மெயில் பண்ணுங்க swamy7867@gmail.com

Advertisements