காதல்.. காதல் தவிர வேறில்லை:3

B3

அண்ணே வணக்கம்ணே !
வாழ்வோ -சாவோ ,உயர்வோ – தாழ்வோ ,சாடிசமோ -மசாக்கிசமோ எல்லாத்துக்கு பின்னாடி ஒரு காதல் இருக்கு. அல்லது காதலை இழந்த சோகம் இருக்கு ,அல்லது காதலை பிரிச்ச குற்ற மனப்பான்மை இருக்கு, அல்லது காதலுக்கு இழைத்த துரோகம் இருக்கு அல்லது காதல் கிட்டாத ஏக்கம் இருக்கு.

காதல்னா என்ன? ஆண்,பெண்கள் அனேக முஸ்தீபுகள்,கவசங்கள்,ஆயுதங்களை கைவசம் வச்சிருக்காய்ங்க. ஒரு ஆணுக்கு ஒரு பெண் எதிர்ப்பட்டாலோ – ஒரு பெண்ணுக்கு ஆண் எதிர்ப்பட்டாலோ படக்குன்னு அட்டென்ஷனுக்கு வந்துர்ராய்ங்க.

யாரிடம் அந்த அட்டென்ஷன்லாம் தேவையில்லாமயே பாதுகாப்பா உணரமுடியும்னு நினைக்கிறோமோ அவிக நம்ம வாழ்க்கையில என்னைக்கும் இருக்கனும்னு முடிவு கட்டிர்ரம்.அதுக்கு பேர் தான் காதல்.

அந்த நம்பிக்கை, அந்த எண்ணம்,அந்த உணர்ச்சி நமக்குள்ள பிறக்க ஆயிரத்தெட்டு ஃபேக்டர்ஸ் காரணமா இருக்கு.

அதுல இந்த ராசியும் ஒரு ஃபேக்டர். ஏற்கெனவே பல பதிவுகள்ள நாம சொன்னாப்ல இந்த காதல்,கண்ணாலம் இதுக்கெல்லாம் ஜாதகத்தை அடிப்படையா வச்சு பார்க்கிறதுதான் முறை. தசவித பொருத்தம்லாம் ச்சொம்மா ப்ரிலிமினரி. இதுல ராசிப்பொருத்தம்ங்கறது ஜஸ்ட் ஒரு பொருத்தம் தான்.

ஜாதகத்தை பார்த்தாதான் சர்ப்பதோஷம்,செவ் தோஷம் இத்யாதி தோஷங்களை எல்லாம் ஐடென்டிஃபை பண்ண முடியும். தோஷமுள்ளவர்கள் தோஷமுள்ளவர்களையே கட்டிக்கனும்னு பண்டிதர்கள் சொல்றாய்ங்க.

இதுக்கு பின்னாடி பார்ட்டிகளோட நலனை விட சமூக நலன் தான் இருக்கு. தக்காளி கூடைய பிரிச்சதுமே பொடிய பொறுக்கி தனியா போட்டு கூறு கட்டிருவாய்ங்களே அதே ஃபார்முலா தான். இந்த தோஷ ஜாதகர்கள் சுத்த ஜாதகர்கள் வாழ்க்கைய டிஸ்டர்ப் பண்ணிரக்கூடாதுங்கறது ஒரு நோக்கம்.

அடுத்த நோக்கம் இதுக அரைகுறையா வாழ்ந்து விதவர்களா,விதவைகளா வாழ்ந்து சமூக ஒழுங்கை பாதிச்சுரக்கூடாதுங்கறது அடுத்த நோக்கம்.
செவ் தோஷம் ரெண்டு பேருக்கும் இருந்தா சாலை விபத்தில் தம்பதி மரணம்னு செய்தி வரும். (குழந்தைங்க அனாதையாயிரும் அது வேற கதை ) சர்ப்ப தோஷம் ரெண்டு பேருக்கும் இருந்தா விஷம் அருந்தி தம்பதி தற்கொலைனு செய்தி வரும்.

இந்த தோஷங்கள்ளயே வில்லங்கம் பிடிச்ச தோஷம் இந்த சுக்கிர தோஷம் தான். கள்ளக்காதல் எதிரொலி -மனைவி கழுத்து நெறித்து கொலை செய்திக்கெல்லாம் இதான் அடி நாதம்.

ஏதோ புஸ்தவத்துல படிச்சன். குறிப்பிட்ட கிரகஸ்திதியில பிறந்த பெண்ணுக்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் திருப்தியே கிடைக்காதாம். போலியா ஒரு உறுப்பை தயாரிச்சு அதாலதான் திருப்தியடையனுமாம். ( இதை எல்லாம் நம்பாதிங்க .பல புஸ்தவங்கள்ள லாஜிக்கே இல்லாம பீலா விட்டிருப்பாய்ங்க)

ஜாதகத்தை பத்தி பேச ஆரம்பிச்சா நிறைய பெரு கழண்டுக்கறாய்ங்க.அதனாலதான் ராசியை பிடிச்சன். இந்த ராசிப்பொருத்தத்துல மொத விதி என்ன ஏக ராசி .அதாவது காதலன் -காதலி ரெண்டு பேரும் ஒரே ராசியா இருந்தா நல்லது.

எனக்கென்னமோ இது மனசுக்கே வர்ரதில்லை. கவர்ச்சிங்கறது எதிர்முனைகளுக்கிடையில் தான் ஏற்படும். உ.ம் ராதை கண்ணன்.

அதே நேரத்துல இனம் இனத்தோடு ,காம்ரெட்ஸ் இன் டெஸ்ட்ரஸ்னும் சொல்லிவச்சிருக்காய்ங்க. இதை எப்படி புரிஞ்சுக்கனும்னா ஆரம்ப காலத்துல ஐ மீன் இந்த ஆசை அறுபது,மோகம் முப்பது பீரியட்ல வேணம்னா ஏக ராசியினரிடையே ஒரு வித அனாசக்த நிலை இருக்கலாம்.

ஆனால் இந்த ஆசை,மோகம்லாம் எவாப்ரேட் ஆனபிறவு அட இதுவும் நம்மை மாதிரியே கன்ஃப்யூஸ் ஆகுது,அட இதுவும் நம்ம மாதிரியே கோவப்படுதுங்கற எண்ணங்கள் உறவை பலப்படுத்தும்.

ஏகராசி ஃபேக்டர் காரணமா இந்த உறவுகள் (காதல்/கல்யாணம்) இப்படி பலப்படறதுல ஒரு ரிஸ்க் இருக்கு. உதாரணமா மேஷராசிக்காரவுக ஜஸ்ட் சோல்ஜர்ஸ் மாதிரி.இவிகளுக்கு சரியான கமாண்டர் இருக்கனும்,அட்வைசர் இருக்கனும். இல்லின்னா காலையில மலையேற ஆரம்பிச்ச ஆடு மேல மேல ஏறிப்போயி மாலை நேரம் இறங்கி வரமுடியாம மே மேன்னு குரல் கொடுக்கிறாப்ல ஆயிரும்.

இதே போல சிம்மம் .ஏற்கெனவே ஓவர் கான்ஃபிடன்ட். இதுல லவ்வரும் இதே கேஸா இருந்தா என்ன ஆகும்?
இப்படி ஏக ராசிங்கறது நல்லதும் கெட்டதும் சேர்ந்த பலனை தான் தரும். இதை எல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள விரிவா பார்க்கத்தான் போறோம். உடுங்க ஜூட்டு

ராகு காதல் : நெகட்டிவ்

ஸ்னேக் விமன்

அண்ணே வணக்கம்ணே !
காதலில் 18 வகை . 9 கிரகங்களின் பாசிட்டிவ் இம்பாக்டோட 9 வகை ,நெகட்டிவ் இம்பாக்டோட 9 வகை ஆக மொத்தம் 18 வகை காதல்கள் இருக்கு. இதுல சூரியன்,சந்திரன்,செவ் இம்பாக்டுடனான பாசிட்டிவ் ,நெகட்டிவ் காதல்கள் மற்றும் அவற்றுக்கான பரிகாரங்களை பார்த்துட்டம்.
ராகு -கேது வகை காதல்களை ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு அடிச்சு தள்ளிட்டம். இதுல நெகட்டிவ் இம்பாக்ட் பத்தி பெருசா சொல்லலியோன்னு ஒரு ஆதங்கம். இதை லேசா டச் பண்ணிட்டு பரிகாரங்களுக்கு போயிரலாம்.

1.சினிமா பின்னணி:
சினிமாவே ஒரு சூதாட்டம் மாதிரி . அந்த காலத்து சாவித்திரியம்மால இருந்து இந்த காலத்துல நயன் தாரா வரை எத்தனையோ சோக கதைகள்.

2.லாட்டரி:
அந்த காலத்துல அண்ணா பூரண மதுவிலக்கை கொண்டு வந்து அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பை ஓரளவுக்காச்சும் ஈடு கட்ட லாட்டரி டிக்கெட்டை கொண்டு வந்தார்.”அடித்தால் வீட்டுக்கு..அடிக்காவிட்டால் நாட்டுக்கு”ன்னாரு

அது என்ன ஆச்சு ? கலைஞர் வழங்கும் இளைஞன் வரை போயாச்சு. லாட்டரி கிங் மார்ட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிக்கைக்கு ஒரு கோடி ரூவா டொனேட் பண்ண மேட்டர் லீக் ஆகி திருப்பி கொடுத்துட்டாய்ங்க.

ஆனால் லாட்டரி பைத்தியத்துல திவால் ஆகிப்போன குடும்பங்கள் எத்தனை எத்தனை? ஒரு பெயிண்டிங் காண்ட் ராக்டர்.. இப்பம் அவரே ப்ரஷ் பிடிச்சு பெயிண்ட் அடிச்சிட்டிருக்காரு. காரணம் வந்த பணத்துக்கெல்லாம் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு லேபருக்கு லேபர் கொடுக்கலின்னா எவன் வருவான்.
பில்டிங் காரன் கொடுத்த அட்வான்ஸ் பணத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு மறுபடி மறுபடி காசு கேட்டா எவன் வருவான்?
இப்படி ஆயிரம் கதை இருக்கு. இவிக லவ்ஸ்,தாம்பத்யம்லாம் ராகுவோட இம்பாக்ட். நெகட்டிவ் இம்பாக்ட்.

சாராயம்:
ஒரு மவராசி சென்னையிலருந்து வந்து ஜாதகத்தை கொடுத்து என் பிள்ளைக்கு எப்ப கல்யாணம் ஆகும் பார்த்து சொல்லுங்கன்னுச்சு.
நாம தேன் கில்லர் ஆச்சே. நடந்த உரையாடல் அப்படியே
“யம்மா ..ஏற்கெனவே உனக்கு ஒரு தடவை ஃபுட் பாய்சன் நடந்திருக்கனுமே”
“ஆமாங்க”
“உங்க வீட்டுக்காரருக்கு மெடிக்கல் ரியாக்சன் ?”
“அதுவும் ஆச்சுங்க”
“அவருக்கு நீங்க ஒன்னாவதா ரெண்டாவதா”
“நான் மூனாவதுங்க”
“சரி இந்த ஜாதகத்தை அப்படியே பத்திரமா வச்சிருங்க.. பையனுக்கு முப்பது முடியட்டும் அப்பாறம் பார்க்கலாம்”

இன்னாடா மேட்டருன்னா அந்தம்மாவோட ஆத்துக்காரர் ஏதோ சின்ன சைஸ் அரசியல் வாதி போல. நாலஞ்சு கடை ,பார் எல்லாம் வச்சு கொழிச்சிருக்காரு.
அவரோட ஜாதகத்துலயே ராகு 5 ல கேது 11 ல . ராகு கொடுக்கிற வரை கொடுத்தாரு. மனைவி ஜாதகத்துல 2-8 ,பையன் ஜாதகத்துல எட்டுல நின்ன லக்னாதிபதியோட ராகு .

இன்னம் ஷேர் மார்க்கெட்,ஊக வணிகம், கள்ளக்கடத்தல்,பதுக்கல், ஏற்றுமதி இறக்குமதி, புகையிலை ,ஃபோட்டோகிரஃபி, டூப்ளிக்கேட் தயாரிக்கிறது, ஃபோர்ஜரி டாக்குமென்ட் தயாரிக்கிறது இப்படி பலதும் இருக்கு. இந்த பின்னணியில உள்ளவுக காதலிச்சா என்ன ஆகும்?

ஆளை உருக்கும். இல்லின்னா ஊளை சதையை பெருக்கும். சந்தேக புத்தி வந்துரும். ஒருத்தர் மேல ஒருத்தர் விஷ பிரயோகத்துக்கு முயற்சி பண்ணுவாய்ங்க.பிரியலாம்.ஆயுள்ஸ்தானம் வீக்கா இருந்தா டிக்கெட்டும் போடலாம்.

இதெல்லாம் ராகுவோட இம்பாக்ட். கேதுவோட இம்பாக்ட்?

ஸ்வாமி நித்யானந்தாவோட கிளு கிளு வீடியோவுக்கு காரண பூதமா இருந்தாய்ங்களே திவ்யாவா பேரு? அப்பாறம் அந்த கில்மா வீடியோல இருந்த நடிகை பேரு என்ன? ஆங் ரஞ்சிதா. இதெல்லாம் கேது காதல்.

ஒரு மவராசி .ஏதோ மூதாதையர் சொத்தா ஒரு மாடி வீடு. ஊட்டுக்காரரு ஒரு பார்ல கேஷியர் (ராகு) இந்தம்மாவுக்கு மந்திர தந்திரம் மேல அதீத நம்பிக்கை. எந்த மந்திர காரன் என்னா சொல்லி உசுப்பேத்தினானோ தெரியாது. ஏற்கெனவே ரெண்டு பெண்குழந்தைகள் இருந்தும் மூனாவதா ஒரு பெண்குழந்தைய கொண்டு வந்து வளர்த்துக்கிட்டிருந்தாய்ங்க. அதுக்கு ராஜோபசாரம். மேஜரானதும் அதும்பாட்டுக்கு அவிக குடும்பத்தோட பேட்ச் அப் ஆகி கண்ணாலம் கட்டி நிம்மதியா இருக்கு.

இங்க என்னமோ ரெவின்யூ இன் கம் சூனியம் (வாடகைல்லாம் ஆறுமாசம் அட்வான்ஸாவே வாங்கி தீர்த்திருப்பாய்ங்க) ஆனால் குறி சொல்றவுக ,மந்திரம் பண்றவுகன்னு ஆரை பத்தி கேள்விப்பட்டாலும் ஒரு பயணம் போகாம இருக்க மாட்டாய்ங்க. இன்னைக்கு சொந்த வீட்டுல இட்லி சுட்டு வவுத்தை கழுவிட்டிருக்காய்ங்க.
இதுவும் கேது காதல்தான். இதுக்கெல்லாம் பரிகாரம் என்னன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.உடுங்க ஜூட்டு.

ராகு -கேது காதல்

அண்ணே வணக்கம்ணே !
சூரியகாதல் ,சந்திர காதல் ,செவ் காதல் ஆச்சு. இன்னைக்கு ராகு காதலை பற்றி பார்ப்போம்.மரோ சரித்ரா படம் ஞா இருக்கா. கமல்,சரிதா சோடி. கமல் தமிழ் பையன்,சரிதா தெலுங்கு பொண்ணு .ஞா வந்துருச்சா.ஓகே உடுங்க. இதான் ராகு காதல்.

அலைகள் ஓய்வதில்லை? பார்த்திருக்கிங்களா? ராதா கிறிஸ்டியன்,கார்த்திக் இந்து. இது கேது காதல். நான் இப்ப சொல்லப்போறது இட்டுக்கட்டினதாவோ அல்லது ஏதோ பாடாவதி தெலுங்கு படத்தோட கதை போலவோ தோனலாம்.ஆனால் நெஜமா நடந்த கதைங்கோ.

50 வயசுல ஒரு கிராக்கி. இவருக்கு 40 ,30 ,20 வயசுல சிஷ்ய கோடிங்க. இவிக ஃபுல் டைம் ட்ரெய்ல்ஸ் மந்திர வித்தையில ஜூரிங்க ஆயிரனும்ங்கறதுதேன். இவிகளுக்கு வேற ஒரு பார்ட்டி லிங்க் ஆச்சு. அந்தாளு ஒரு ட்ரைவர். ஆனால் மந்திர தந்திரங்கள்ள ஜூரின்னு க்ளெய்ம் பண்ணிக்குவாரு.

கொஞ்சம் கொஞ்சமா இவிக ரெம்ப க்ளோஸ் ஆயிட்டாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா டிரைவருக்கு 40,25,15 வயசுல பெண் குழந்தை (?) என்னென்னமோ கசமுசா வெல்லாம் ஆகி – அவன் என்னவோ “செய்து வச்சுட்டதா” இவிக , அந்த பொணுங்களை இவிக ஏதோ செய்துட்டதா அந்தாளு புகார் சொல்லிக்கிட்டு செம நாஸ்தி .

இது கேது காதல்.

வேற ஒரு கிராக்கி . இவனோட ஃபுல் டைம் ப்ராஜெக்ட் மதுவிலக்கு பீரியட்ல பாண்டிச்சேரியிலருந்து சரக்கு கொண்டு வந்து ஹோல் சேலா விக்கிறது.ஆனால் பார்ட்டிக்கிட்டே முதல் கிடையாது.

யாரோ ஒருத்தரு முதல் வைக்க இவரு ஜாலக்கா சரக்கை கொண்டு வரனும். கொண்டு வருவாரு.ஆனால் மொதல் வச்சவனுக்கு டெலிவரி தரமாட்டாரு. வேற ஒரு பார்ட்டிக்கு டெலிவரி கொடுத்து காசை வாங்கி ஏப்பம். இது இப்படியே தொடர் கதை . அவன் காசுல சரக்கு கொண்டாந்து இன்னொருத்தனோட பழைய கடனை தீர்க்கிறது, இன்னொருத்தன் காசுல சரக்கு – காசை சொந்தத்துக்கு உபயோகிச்சுர்ரது.

இவரு வீட்டு வராந்தாவுல எப்பவும் நாலு பேர் முக்காடு போட்டு உட்கார்ந்திருப்பாய்ங்க. எல்லாம் மொத வச்சு -முக்காடுபோட்டுக்கிட்ட பார்ட்டிகளோட அல்லக்கைகள். அசல் ஆளு எப்ப வரான்னு கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி காத்திருப்பாய்ங்க.

ஆனால் அந்தாளு எப்ப வந்தான் -எப்படி வந்தான் – எப்போ போனான்னே தெரியாது.வந்து -பொஞ்சாதியை கொஞ்சி பேசி – கொளந்தைங்க தூங்கற அழகை பார்த்து – குளிச்சு சாப்ட்டு போயிருவாரு. இதுக்கு பேரு ராகு காதல்.

இன்னொரு பார்ட்டி.இவருக்கும் நெம்பர் டூ பிசினஸ் தான். பொஞ்சாதி எங்கயோ குடும்பத்துக்காவ உழைச்சிட்டிருக்க -இவரு தலை நகரத்துல மச்சினிய பிக்கப்பு. அதுவும் அவ புருசனுக்கு டவுட்டு வந்து – கையும் களவுமா பிடிக்க கருவிக்கிட்டிருக்கிற சமயத்துல கூட காரியத்தை கச்சிதமா முடிச்சுட்டு ஃபீல்டுக்கு வந்துருவாரு. இதுவும் ராகு காதல் தேன்.

இது பாசிட்டிவ். நெகட்டிவ் லவ்ஸையும் பார்த்துரலாம். ஒரு பார்ட்டி வெட்டினரி ஹாஸ்ப்பிட்டல்ல அட்டெண்டரு. ஆனால் டாக்டர் கணக்கா பில்டாப்பு. அதுக்கேத்த மாதிரி காஸ்ட்யூம்ஸ், பிள்ளைகளுக்கு கான்வென்ட் படிப்பு,பொஞ்சாதி கழுத்துல சரம் சரமா நகைங்க.

ட்ரான்ஸ்ஃபர் ஆயி வந்த ஊருல பெரிய்ய லக்பதி கணக்கா சீன் போட்டு.. தனக்கு மூதாதையர் சொத்து மஸ்தா இருக்காப்ல பீலா விட்டு -அதையெல்லாம் டிஸ்போஸ் பண்ணிட்டு பெருசா பிசினஸ் பண்ணப்போறதா அலப்பறை செய்து ஊருல இளிச்ச வாயன் தலையில எல்லாம் மொளகா அரைச்சு .. நெல்லாத்தான் போயிட்டிருந்தது.. திடீர்னு ஒரு நாள் குடும்பமே காணாம போயிருச்சு. இது ராகு காரக நெகட்டிவ் லவ்ஸ்.

அப்பா லாரி ஓனரு . திடீர்னு செத்து போயிட்டாரு. ஒடனே அம்மா குறி கேட்க போனாய்ங்க. ” என் பிள்ளைய நான் கை விடமாட்டேண்டி அவனை பெரியாளா ஆக்கி காட்டுவேன்”னு செத்துப்போன புருசன் சொல்லிட்டாரா .. அதுக்கேத்தமாதிரி அடுத்த எலீக்சன்ல பிள்ளை ஒன்றியமோ எந்த இழவோ பதவிக்கு கன்டெஸ்ட் பண்ணி செயிச்சாச்சு.

அப்பாறம் பார்க்கனுமே ஒத்தை தலைவலி வந்தா குறி கேட்கபோயிருவாய்ங்க, மருமவ இதை எதிர்த்து கேட்டா ஒடனே குறி. குறி சொல்றவுக இவிக வீக் பாய்ண்டை நெல்லா கேட்ச் பண்ணிக்கிட்டு மொட்டய போட்டு ஆட்டைய போட ஆரம்பிச்சாய்ங்க. அங்கருந்து சூனியம், வைக்கிறது,எடுக்கிறது,குட்டி சைத்தான்னு செமை டெவலப்மென்டு.

பதவி இருக்கிறவரை காசு பணம் நடமாடிக்கிட்டிருந்தது .செலவு கண்ணுக்கு தெரியலை. பதவி காலம் முடிஞ்சு போச்சு.ஆனாலும் பைத்தியம் தெளியலை. பத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது புது மந்திரவாதியை பார்த்துட்டு வந்துர்ராய்ங்க. அந்த ஒன்றியத்தோட காதல் வாழ்வை கேது காரக காதல்னு தானே சொல்லனும்.
குதிராட்டம் பொஞ்சாதி,கதிராட்டம் புருசங்கறாப்ல ஒரு சோடி. புருசங்காரனுக்கு பொஞ்சாதியோட ஃபிசிக்கை பார்த்து இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்.எவனோ ஃப்ரெண்டு “மச்சான் .. சரக்கடிச்சுட்டு போடா ..சூப்பரா இருக்கும்”னு சஜஸ்ட் பண்ணான்.

ஒரு மூனு மாசம் வரை பெருசா பிரச்சினை இல்லை.ஆனால் போக போக புருசங்காரன் சரக்குக்கு அடிமையாகிட்டான். தொழில் மேல கவனமில்லை , பிக்க பிடுங்கல் அதிகமாக – குடியும் அதிகமாயிருச்சு. பெட் ரூம் பெர்ஃபார்மென்ஸும் புடுங்கிக்கிச்சு. இவன் போதையில மட்டையானா பார்சல் பண்ணி வீட்ல டெலிவரி பண்ணிட்டு போற கடை பையனுக்கும் – பொஞ்சாதிக்கும் லிங்க் வந்துருச்சு.

ஏதோ அந்த பொம்பளைக்கு கொஞ்சம் போல தெளிவு வந்து கடையில வந்து உட்கார்ந்து – கடைய நிமிர்த்தி – பெத்த பொண்ணுங்களை கரையேத்தி விட்டுருச்சு. பார்ட்டி மட்டும் லிவர் வீங்கி – 40+ வயசுக்கே வாக்கிங் ஸ்டிக் பிடிக்க வேண்டி வந்துருச்சுங்கோ .

இதுவும் ராகு காதல் தேன். என்ன கொஞ்சம் நெகட்டிவ்.

சூரிய -சந்திர காதல்ல நெகட்டிவ் ஏஸ்பெக்ட்ஸை குறைக்க பரிகாரம்லாம் கொடுத்ததா ஞா . இந்த செவ் ,ராகு ,கேது காரக லவ்ஸுல நெகட்டிவ் ஆஸ்பெக்ட்ஸை எப்படி குறைக்கலாம் -அதுக்கெல்லாம் என்ன பரிகாரம்னு அடுத்த பதிவுல சொல்றேன். ஓகேவா ..உடுங்க ஜூட்டு.

செவ்வாய் காதல் !

ஒரு தலீவரு. முன்னாள் நடிகை இவரோட பட்லி. கோட்டைக்கு புறப்படறதுக்கு மிந்தி இவருக்கும் -பட்லிக்கும் எதாச்சும் வாக்கு வாதம் நடக்கும். தலீவரு தன் ஸ்டாண்ட்ல உறுதியா நின்னு “போடிங்கோ”னுட்டு கோட்டைக்கு புறப்பட்டுருவாரு. பாதிவழியில வயர்லெஸ் மெசேஜ் வரும். “அம்மா .. மணி கட்டை அறுத்துக்கிட்டாய்ங்க” அவ்ளதான் கேன்வாய் அப்டியே அபவுட் டர்ன் அடிச்சு வீட்டுக்கு திரும்பும்.இதை செவ் காதல்னு சொல்லலாம்.

ஒரு பார்ட்டி. ஏதோ ஃபேக்டரி எம்ப்ளாயி. ஜாதகத்தை கொடுத்து பொண்ணு எந்த பக்கத்துலருந்து தகையும்னு கேட்டாரு. நாம அடடே செவ் தானே 7 ஐ இன்ஃப்ளுயன்ஸ் பண்றாருன்னுட்டு “தெற்கு திசையிலருந்து அமையும்.ஆனால் ரெம்ப கோவக்காரியா இருக்கலாம். ஆரம்பத்துல செட் ஆகிறது கஷ்டம். படக்குன்னு சமையலறையில புகுந்து மண் எண்ணெயை கவுத்துக்கும். சமையலறைக்கு கதவில்லாத வீடா பாரு”ன்னு சொல்லி உட்டேன்.

ஒரு ஆறுமாசம் கழிச்சு பார்ட்டி வருது. கழுத்து மார் எல்லாம் தீக்காயம். இதையும் செவ் காதல்னு சொல்லலாம்.காதலர்கள்/தம்பதி ஜாதகங்கள்ள 1 அல்லது 7 ஆமிடத்தை செவ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா இதெல்லாம் சகஜம்.

நம்ம ஊருல ஒரு பார்ட்டி டி.எஸ்.பி மகளுக்கே ப்ரப்போஸ் பண்ண – அந்த காலகட்டத்துல ஃபார்ம்ல இருந்த யூத் லீடர் ஒருத்தர் இந்த காதலுக்கு ஆதரவு கொடுக்க சேசிங் -ரெய்டு -ஸ்டேஷன்ல லாடம்னு பல திருப்பங்களோட கண்ணாலத்துல முடிஞ்சது. இதுதான் செவ் காதல்.

இந்த அமைப்பு உள்ளவுகளுக்கு செட் ஆகிற காதலன்/காதலி எப்பூடி இருப்பாய்ங்க.. அவிக இவிக பிஹேவியர் எப்படி இருக்கும்னு பார்க்கலாம்.
வயசு வித்யாசம் அதிகமா இருக்கும். (அதாவது உங்க கவுன்டர் பார்ட் உங்களை விட ரெம்ப சின்னவுகளா இருப்பாய்ங்க. அல்லது வயசு சாதாரணமா இருந்தாலும் கௌமார ஸ்வரூபம் இருக்கும்.இங்கிலீஷ்ல ” ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோ ” – “ஹேட் அண்ட் லவ்”னு சொல்வாய்ங்களே அப்படி ஒரு உறவு இவிக மத்தியில இருக்கும்.

ஒரு பார்ட்டி இரும்பு முக்காலிய எடுத்து பொஞ்சாதிக்கு மண்டைய கிளிச்சுட்டான். செர்ரி கலர் பெயிண்டோட சேம்பிள் டப்பாவ தலையில கவுத்துட்ட மாதிரி ரத்தம். அந்த பெண்ணோட ஒன்னு விட்ட அண்ணாரு அவனை உள்ளே வச்சே தீருவேன்னு அலைய ஃபயர் இஞ்சின் வேலைல்லாம் செய்து -அந்த பெண்ணுக்கு தையல் கிய்யல் போட்டு எப்படியோ ஒப்பேத்தி வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்துட்டம்.

பெரிய்ய பஞ்சாயத்து ஆயிருச்சு. சாதி சனம்லாம் கூடிருச்சு. சின்னதா தம் போடலாம்னு வெளிய வந்தோம். அந்த பெண்ணோட அண்ணாரு “சாமி ! ஒன்னைத்தான் அவன் தெய்வமா கும்பிடனும். தாளி ஆள வச்சு முடிச்சிருப்பேன்”னு பொங்க யதேச்சையா நம்ம பார்வை மாடிப்பக்கம் போயிருச்சு.

என்னா சீனு ? கிளிச்சவனும் -கிளிஞ்சவளும் பெட் ரூம் சன்னலோட கண்ணாடியில நிழலாடறாய்ங்க.

அடிச்சு புடிச்சு ,வெட்டி மடிஞ்சு ரத்தக்கறையோட பலான மேட்டரை முடிச்சு சமாதானமான பார்ட்டில்லாம் இருக்கு. இதான் செவ்வாய் காதல்.

புருசன் பொஞ்சாதி உறவு தொடரனும்னா ஒருத்தரு சாடிஸ்டா -அடுத்தவர் மசாக்கிஸ்டா இருக்கனும்னு எப்பமோ எழுதினது ஞா வருது. ராத்திரியில சாடிஸ்ட் மசாக்கிஸ்டா -மசாக்கிஸ்ட் சாடிஸ்டா ரோல் மாத்திக்கிறதும் உண்டு.

என்ன ஆச்சு ? எதுவும் ஓட மாட்டேங்குது? செரி எதையாச்சும் செய்து ஒப்பேத்த துடிமன்னன் மாதிரி ஆட்கள் ட்ரையா இருக்குன்னிருவாய்ங்க. உடுங்க ஜூட்டு நாளைக்கு பார்த்துரலாம்.

18 வகை காதல் (லவ் மூட் ஸ்டார்ட் அவ்வ்வ்வ் :9 )

அண்ணே வணக்கம்ணே !
பேசாமலே காதல்,பார்க்காமலே காதல்,சைவ காதல்,அசைவ காதல் இப்படி அனேக காதல்களை சினிமா நமக்கு காட்டியிருக்கு. நம்ம பங்குக்கு நாம எதுவும் செய்யலின்னா எப்படி ?

நாமளும் ஒரு 18 வகை காதலை லிஸ்ட் அவுட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். சூரிய காதல் ,சந்திர காதல்னு சொன்னோம்.இதுல பாசிட்டிவ் நெகட்டிவ்னு பார்த்தோம்.
இப்படி 9 கிரகங்களுக்கு பாசிட்டிவ், நெகட்டிவ்னு பார்த்தா பதினெட்டாயிரும். ஆக்சுவலா இன்னைக்கு செவ் காதலை பார்க்கனும். இவரு நம்ம ஜாதகத்துலயே பல்பு வாங்கியிருக்கிறதாலயா என்னன்னு தெரியலை. கடந்த பதிவு ரெம்ப சைக்கலாஜிக்கலா போயிருச்சு.

இன்னைக்காச்சும் அஸ்ட்ராலஜிக்கல் டேட்டாவை வாரி வழங்கலாம்னு நினைச்சா – காதலை பத்தி எழுத ஆரம்பிச்சதாலயோ என்னமோ கவிதையா கொட்ட ஆரம்பிச்சிருச்சு. நம்ம காத்திருப்பே அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுத சொரிவுக்காகத்தானே .

சிந்தாம சிதறாம படியெடுத்து தந்திருக்கேன். நல்ல தமிழ் நல்ல தமிழ்னு குரல் கொடுக்கிற பார்ட்டிங்க இதை எந்த ரேஞ்சுக்கு புரிஞ்சு மறுமொழி போடறாய்ங்கன்னு பார்ப்போம்.

அம்மா !
எனக்கு நீ உறைக்க செய்தவற்றை எல்லாம் இவர்களுக்கு உரக்க
உரைக்கத்தான் செய்கிறேன் முயற்சி.
ஏனோ .. நான் பாடங்கள் பயின்ற போதை காட்டிலும்
அனுபவ முள் படுக்கை மீது துயின்ற போதை காட்டிலும்
இந்த முயற்சிதான் தருகிறது தர்க்கமற்ற அயர்ச்சி
ஒரே வரியை நிரவும் கர்னாடக இசை பாடகனாகிவிடுகிறேன்
அடுத்த வரிக்கு போக மனமின்றி சுழலில் சிக்கியவன் போல்
சுழல்கிறது எழுத்து
முடிவுரை முன்பே மின்னிவிட
முன்னுரையே கட்டுரையை காட்டிலும் நீண்டு விடுகிறது
என் மூளைத்திரையில் கண் சிமிட்டிய கடைசி வரிக்கான நியாயத்தை
ஏற்க தயங்கும் என் மனதை ஒப்புவிப்பதற்குள்
அவ்வப்போது தடுக்கி விடும் தர்கத்தையும் – தருக்கையும்
தடுத்து தரப்பட்ட தரவை மாசு படாது தப்புவிப்பதற்குள்
தாவு தீர்ந்து விடுகிறது.
அட இந்த காதலையே பாரேன்
காதல் போயின் சாதல் என்றான் என் பாட்டன்.
உலகம் இதை இருவருக்கிடையான உணர்வு என்றே
உரக்க சொல்லிவருகிறது.
எனக்கென்னமோ தனியொருவனின் மனதிலான காதல் – காதல் உணர்வு
என்ற புரிதலே ஏற்படுகிறது.
காதலுக்கு தேவை காதலனோ -காதலியோ அல்ல
காதலிக்கும் மனம் – அல்லது அந்த மனதில் காதல் உணர்வு தான் தேவை
அதற்கு பிறகுதான் தேவை காதலனோ -காதலியோ
அவர்கள் செய்வதெல்லாம்
காதல் அடைப்பட்டிருக்கும் பட்டியை திறந்துவிடுவதே
சூரிய உதயம் போல பருவம் இந்த நிகழ்வுக்கு
ஒரு முன்னெடுப்பாக இருக்கலாம் அவ்வளவே.
காதல் என்பது மனதை லேசாக்குகிறது
சிறையே போல் உங்கள் ஆன்மாவை அடைத்து வைத்திருக்கும் உடலையும்
லேசாகும் போது சிறகு முளைத்த உணர்வு வருகிறது
உங்கள் எண்ணம் உங்கள் ஆன்மாவின் புறப்பாட்டு ஸ்தலத்தை
எட்டிப்பார்க்க தவ்வுகிறது.
உங்கள் காதல் உங்களில் உள்ள உயிர்ப்பின் துடிப்பு
உங்களை கருவாக்கி -உருவாக்கிய இந்த படைப்போடு தொடர்பு கொள்ள துடிக்கும்
ஆதி எண்ணத்தின் வெளிப்பாடு
நீங்கள் ஒரு வியக்தியின் மீது கொள்ளும் காதல்
விசுவ காதலின் ஃபோன்சாய்க் வடிவமே
விசுவத்தை காதலிக்க வேண்டிய நீங்கள் வியக்தியில் துவங்கி
விசுவத்துக்கு விரிய வேண்டும்.
ஏனோ வியக்தியை உங்கள் உலகமாக உருவகித்து
விரிந்து பரவி விசுவத்தோடு தொடர்பு கொள்ளவேண்டிய அந்த வியக்தியை
இறுகப்பற்றி -பற்று முற்றி தொடர்பற்று போகிறீர்கள்
தருக்கமும் தருக்கும் ஒவ்வொரு வியக்தியையும் ஒரு விசுவம் ஆக்கி
வைத்திருக்க ..
அந்த இரண்டு விசுவங்களுக்கிடையிலான ஈர்ப்பு விசுவத்தையே
மறக்க செய்கிறது
ஒருவருக்கொருவர் உலகமாய் மாற கலகம் பிறக்கிறது.
ஒரு ஆண் பெண்ணையோ -ஒரு பெண் ஆணையோ காதலிப்பது நல்ல ஆரம்பம் மட்டுமே
ஆரம்பமே முடிவென நின்று விட்டால் காதல் தள்ளிப்போகிறது
உங்களை தள்ளி வைக்கிறது.
எச்சூஸ்மி.. நாளையிலருந்து ஒழுங்கு மரியாதையா காதலின் 14 வகைகளை டீட்டெய்ல்டா பார்த்துரலாம். நாளைக்கும் கவிதையோன்னு பயந்துக்காதிங்க. இந்த கவிதை புரியலைங்கறவுங்க கைய தூக்குங்க. நீங்கல்லாம் நம்ம கட்சி . இந்த டீலிங் நமக்குள்ள இருக்கட்டும்.. நமக்குள்ளவே இருக்கட்டும்.

லவ் மூட் ஸ்டார்ட் அவ்வ்வ்வ்வ் : 8

அண்ணே வணக்கம்ணே !
காதல் செயிச்சா சந்தோசம் -அந்த காதல் கண்ணாலத்துல முடிஞ்சு வாழ்க்கையிலயும் செயிச்சா பரம சந்தோசம். நாம இந்த காதல் -கில்மா பத்தியெல்லாம் டிப்ஸ் மழை பொழிய தலையாய காரணம் ஆணினம் தன் ஆண்மைய இழந்துக்கிட்டே வருது.

ஆண்மை மீன்ஸ் எழுச்சி ,விறைப்பு மாதிரி “ஏ “சமாசாரங்களை மட்டும் சொல்லலை. நான் சொல்ற ஆண்மை காவிய காலத்து ஆண்மை.
தாய் நாட்டுப்பற்று,மொழிப்பற்று, வீரம்,தீரம்,தியாகம் இப்படி ஒன்னரை டஜன் நல்ல குணங்களை உள்ளடக்கிய ஆண்மைய சொல்றேன். இந்த ஆண்மை ஆண்களுக்கு மட்டும் சொந்தமானதில்லை.பெண்களுக்கும் சொந்தம் தான்.

ஆண்களே ஆண்மைய இழந்துட்ட கலிகாலத்துல பெண்ணினம் ஜஸ்ட் ஒரு ஒட்டுண்ணியா மாறிக்கிடக்குது. கூட்டுக்குடும்பங்கள் போய் , தனிக்குடித்தனம் வந்து ,அதுவும் காலாவதியாகி நியூக்ளியர் ஃபேமிலின்னு ஒன்னு வந்திருக்கு.

ஆணையும் -பெண்ணையும் ஒருங்கிணைக்கிற காதல்ங்கற சமாசாரம் காலாவதியாயிருச்சு. (இன்னைக்கு செலாவணியில இருக்கிற காதல் எல்லாம் காதல்ல சேர்த்தியில்லைங்கறது நம்ம தாழ்வான கருத்து). இந்த ஒரே ஒரு சமாசாரம் சமாதியாயிட்டதால வாழ்க்கையில ஒரு வெற்றிடம் ஏற்பட்டுருச்சு. அதை நிரப்பறதே நோக்கமா ஆண் ,பெண்கள் அலையறாய்ங்க.

ஹ்யூமன் பாடி ,மைண்டு ரெண்டுக்கும் ஒரு கெட்ட குணம் இருக்கு. எதுவா இருந்தாலும் அதுவே ஜெனரேட் பண்ணிக்கனும். வெளிய இருந்து கொடுத்தா அது தங்காது.
வெத்தா போன வாழ்க்கைய நிரப்ப என்னென்னமோ செய்றாய்ங்க. வீடு தான் வெத்தா இருக்குன்னு ஃபர்னிச்சரை கொண்டு நிரப்பறாய்ங்க. ஃப்ரிட்ஜை ஜங்க் ஃபுட்,டின் ஃபுட்டால நிரப்பறாய்ங்க, வயித்தை குப்பைகளால் நிரப்பறாய்ங்க.

அது நிரப்பப்படுவது ஜஸ்ட் காதலால மட்டும் தான். இங்கே இன்னொரு சமாசாரத்தை சொல்லனும். காதல்னே இல்லை ஒரு பிடிப்பு . அது தன் வாழ்க்கைதுணை மீதான கடுப்பா கூட இருக்கட்டும். ஒரு பிடிப்பு இருக்கனும்.அந்த பிடிப்புக்கு அடிப்படையும் காதல் தான்.

வெத்தா போனதை நிரப்ப கன்ஸ்யூமரிசம் -இதை கேஷ் பண்ணிக்க பன்னாட்டு முதலாளிகள் – நாட்டின் வளங்களையெல்லாம் அவிகளுக்கு கொட்டி கொடுக்க ஆட்சியாளர்கள் – இன்னம் இந்த மண்ணுடனான உறவை தொடரும் ஆதிவாசிகள் இதை எதிர்த்தால் உயரும் இயந்திர துப்பாக்கிகள். ஒரு முழு வட்டம் பூர்த்தியாயிட்டாப்ல இருக்கு. இந்த வட்டத்துல உலக நாடுகள், மனித இனம் சிக்கி மூச்சு திணறுது.

இந்த வட்டத்தை சிதைச்சு வெளிய வரக்கூடிய வாய்ப்பு யூத்துக்குத்தான் இருக்கு. அதென்னா யூத்து மட்டும் பெசலுன்னு கேப்பிக. சொல்றேன்.
தெய்வீககாதல் ,பைசாச காதல்னு எந்த இழவு காதலா இருந்தாலும் அதுக்கு அடிப்படை இளமை பூத்து குலுங்கும் பாடி தான். வாழ்க்கையில எல்லாமே பழக்கதோஷம் தான்.

ஒரு மன்சன் நெல்லவனா இருக்கிறான்னா கொஞ்ச நாள் நெல்லவனா இருந்து பழகிருச்சு. அட இப்பம் போயி எங்கருந்து கச்சடா வேலைக்கெல்லாம் போறதுன்னு விட்டுர்ரான். நெல்லவனாவே கன்டின்யூ ஆயிர்ரான்.

சிக்கனம்,தில்லு,தகிரியம்,கற்பு எல்லாமே பளக்க தோசம் தேன். யூத்துல பாடி அட்ராக்சனால ஏற்படற காதல் பழக்க தோசத்துல உண்மை காதலா கூட மாறலாம்.அதுக்கு தேன் சொல்றேன். இன்னைக்கு மனித குலத்தை முற்றுக்கையிட்டு நெருக்கி மூச்சு திணற வைக்கும் மேற்படி விஷ வளையத்தை சிதைக்கனும்னா அந்த வாய்ப்பு லவ்ஸ் பண்ற யூத்துக்குத்தான் இருக்கு.

இந்த சின்ன சூட்சுமம் தெரியாம வெற்றிடத்தை நிரப்ப – சனம் அலைய -அதை எந்தெந்த குப்பையால நிரப்பலாம்னு மார்க்கெட்டிங் ஜூரிங்க சொல்ல – அதை எப்படி தயாரிக்கலாம்னு பன்னாட்டு முதலாளிகள் அல்லாட – ஒலகமே ஒரு மாயையில போதையில மிதந்துக்கிட்டிருக்கு.(தமிழ் நாடு கூடுதலா டாஸ்மாக் போதையிலயும்)
அவனவன் தன் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்ப போட்ட திட்டங்கள் தனியார் மயம்,தாராள மயம், உலகமயம்னு கேன்சரா வளர்ந்து இன்னைக்கு உலகமே ஒரு பேரழிவை நோக்கி ஓடுது. ஏதோ ஒரு நாடு தங்கத்தை வித்தா அதனோட இம்பாக்ட் எல்லா நாடுகளின் பொருளாதாரத்தையும் உதற செய்யுது. ஒரு நாட்டின் நிதி மந்திரி தங்கம் வாங்காதிங்கன்னு கேன்வாஸ் பண்றாரு.

இத்தீனி கருமாந்திரத்தையும் கருவறுக்கனும்னா அதுக்கு ஒரே வழி காதல். அதுக்காவத்தேன் இந்த தொடர். நேத்திக்கு சந்திர காதலை திராட்டுல விட்டுட்டம். நாளைக்கு கன்டின்யூ பண்ணிக்கிரலாம் .ஓகேவா உடுங்க ஜூட்டு.

லவ் மூட் ஸ்டார்ட் அவ்வ்வ்வ்வ்வ் : 7

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு லவ் மேட்டர்ல சூரியனோட நெகட்டிவ் இம்பாக்ட் எப்படி இருக்கும் – அதை எப்படி ஓவர் கம் பண்றதுன்னு சொன்னேன். இன்னைக்கு சூரிய ஆதிக்கத்தில் உள்ள காதலர்/காதலியோட பிஹேவியர் எப்படி இருக்கும்னு ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.
வீட்ல அப்பா அள்ளி விடற உபதேசங்களையே இவிகளும் அள்ளி விடுவாய்ங்க. சந்திப்புக்கு இவிக ச்சூஸ் பண்றதெல்லாம் ஊரின் /நகரத்தின் நட்ட நடுவுல இருக்கலாம் அல்லது மேடான பகுதியாவோ ஏன் மலைப்பகுதியாவோ கூட இருக்கலாம்.
மொதல் சந்திப்புலயே உங்களை கமாண்ட் பண்ண ஆரம்பிச்சிருவாய்ங்க. காதலை கூட கொஞ்சம் சிடு சிடுன்னு தான் காட்டுவாய்ங்க. கடற்கரை,ஏரி,குளம் மாதிரி இடங்களை விரும்பவே மாட்டாய்ங்க.
தன் அப்பாவுக்கு அளவுக்கு அதிகமாவே முக்கியத்துவம் தருவாய்ங்க. வாழ்க்கையில உயரனும்ங்கற துடிப்பு அதிகமா இருக்கும்.
ஓகே ஓகே.. இனி சந்திரனோட கதைய பார்ப்போம்.
ராஜேந்திரன் சித்தி வீட்டுக்கு லீவுக்கு வந்தான். பவிதா தன் மேல் இறங்கியிருக்கிற (!) பேயை விரட்ட உறவுக்காரங்க வீட்டுக்கு வந்தா. இவிக ரெண்டு பேருக்கும் லவ்ஸு உருப்படுமா?
ஆனால் நம்ம ஜாதகத்துல சந்திரன் வலிமையோட உட்கார்ந்து 7 ஆம் இடத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா பச்சக்குன்னு லவ்ஸும் சக்ஸஸ் ஆகும். கண்ணாலம் வரைக்கும் கூட போகலாம். இதான் சந்திரனோட ஸ்பெஷாலிட்டி.
சிக்னல்ல லவ் – ரயில்வே ஸ்டேஷன்,பஸ்ஸ்டாப்ல லவ்ஸு, கண்ணாலவீட்ல லவ்ஸுக்கு எல்லாம் சந்திரன் தான் காரணம்.
அதே சமயம் சந்திரனால் ஏற்படும் காதல் மூன்றாவது அணி தலைமையிலான மத்திய சர்க்கார் மாதிரி கவுந்துக்க காரணமே தேவையில்லை. சதா சர்வ காலம் ஆட்டம் கொடுத்துக்கிட்டே இருக்கும்.
சந்திர காரகம் கொண்ட ஆண்,பெண்கள் வாழ்வின் யதார்த்தத்தை ஓரளவுக்கு தான் சமாளிக்கப்பார்ப்பாய்ங்க. அளவுக்கு மீறிப்போனா கழண்டுக்கக் கூட தயங்க மாட்டாய்ங்க. அதே சமயம் வாழ்வின் அன்றாட பிரச்சினைகளை கிரியேட்டிவிட்டி,கற்பனையோட ரெம்ப ஜாலாக்கா ஃபேஸ் பண்ணுவாய்ங்க.
இவிக முகமே ஸ்லைட் ஷோ மாதிரி இருக்கும். சின்ன மேட்டருக்கும் ரியாக்சன் பக்காவா இருக்கும்.இவிக பிஹேவியர்ல ஒரு வித அன் சர்ட்டெனிட்டி, இன் ஸ்டெபிலிட்டி, எதிர்பாராதன்மை, திடீர் தன்மை இருக்கும்.
இவிக ரெசிடென்ஸ் உங்க வீட்டுக்கு வடமேற்கு பகுதியில இருக்கலாம். அதுல பள்ளமான பகுதியா இருக்கலாம். நீர் நிலை அல்லது மேல் நிலை குடி நீர் தொட்டியை ஒட்டி இருக்கலாம்.உங்க மொத சந்திப்பே சினிமாட்டிக்கா நடந்திருக்கும்.
சம்பவம் ப்ளாக் அண்ட் வைட்டா இருந்தாலும் உங்க மனசு அதுக்கு கலர் கொடுத்துதான் பார்க்கும். ஒரு கட்டத்துல கலர் வெளுத்துப்போனா “தத் ..இதுக்கா அப்படி பொங்கினோம்”னு ஃபீல் பண்ணவும் சான்ஸ் இருக்கு.
ஓகே இந்த பதிவை இந்தளவு ஒப்பேத்தினதே மலை. நாளைக்கு தொடரலாம்.