குருப்பெயர்ச்சி பலன்: கும்பம்,மீனம்

MoondravathuKan

அண்ணே வணக்கம்ணே !
குரு பெயர்ச்சி பலன்ல கும்பம் ,மீன ராசி மட்டும் நிலுவையில இருக்கு .இதையும் பைசல் பண்ணிரலாம். அதுக்கு மிந்தி கொஞ்சம் போல “நெல்லது கெட்டது ” பேசிக்கலாம். யுபிஏ டூ காலத்துல பா.ஜ.க புது ட்ரென்டு ஒன்னை கிரியேட் பண்ணிருச்சு .அதான் பாராளுமன்றத்தை முடக்கறது .
இப்ப அந்த வித்தையை காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கை கொண்டு மொத்தமா இறக்க – பா.ஜ.க மெர்சலாயி கிடக்குது.ஏட்டிக்கு போட்டியா காங்கிரஸ் முதல்வர்களோட ஊழலை ஃபோக்கஸ் பண்ணனும்னு பார்க்கிறாய்ங்க. ஊஹூம்.வேலைக்காகல.

தமிழ் நாட்ல பார்த்தா தேர்தல் ஜூரம் வீச ஆரம்பிச்சுருச்சு . அன்பு மணி கவுண்ட மணி கணக்கா காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாரு .(ஒயர் பிஞ்சு பல காலம் ஆச்சு )

மதுவிலக்கு மேட்டர்ல மம்மி கரண்ட்ல இல்லேன்னு தெரியுது. ஆண்,பெண்,குஞ்சு குளுவான் எல்லாமே நாசமா போயிட்டிருக்க – கலைஞர் பெட்டர் லேட் தேன் நெவர் பாய்ண்டை கேட்ச் பண்ணிட்டாரு . மம்மி டூ லேட் !

இப்பவாச்சும் நல்லது நடக்குதேன்னு வாய் திறந்து ஒரு நல்ல வார்த்தை சொல்ல மனசில்லாம சனம் பழைய குப்பையை எல்லாம் கிளறிக்கிட்டு கிடக்கு .
ஹ்ம்.. அசலான மேட்டரை விட்டுட்டு மொக்கை போட்டுக்கிட்டிருக்கன். வேந்தர் டிவி -மூன்றாவது கண் டீம் வந்ததை பதிவுல சொன்னேனா? முக நூல்ல மட்டும் சொன்னேனா ? ஞா இல்லை. வந்திருந்தாய்ங்க. பிரம்மங்காருவோட வாழ்க்கை -அவரோட கால ஞானம் – பிரளயம் இத்யாதிகளை பத்தி மடக்கி மடக்கி கேட்டாய்ங்க. ஏதோ நமுக்கு தெரிஞ்சதை சொன்னம்.

மேற்படி நிகழ்ச்சிக்காக கடப்பா,பிரம்மங்காரு மடம் வரை போக வேண்டியதாயிருச்சு . (லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம். என்னங்க பிரம்மங்காருவ பத்தி இவ்ள ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க.இதுவரை இங்க வந்ததில்லையான்னு டீம்ல ஒருத்தரு கேட்டாரு . -ஏங்க ..தாஜ்மஹாலை பார்த்தபிறவு தான் காதலிக்கனுமா என்னன்னு மடக்கினேன்)

Brammangaru

நிற்க மேற்படி பேட்டி வரும் திங்கள் கிழமை (2015,ஜூலை,27) அன்னைக்கு வேந்தர் டிவி/மூன்றாவது கண் நிகழ்ச்சியில ஒளி பரப்பாக இருக்கிறது ( நேரம் : இரவு 9.30 முதல் 10 .00 )

ஓகே ஓகே..குரு பெயர்ச்சி பலனுக்கு போயிரலாமா?

குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஏழுக்கு பெயர்ச்சி ஆய்ட்டாரு. இவரு கும்ப ராசிக்கு 2/11 க்குடையவர் . 2/11 பாவங்கள் ரெண்டுமே பைசாவுக்கு சம்பந்தப்பட்ட இடம் தான். 7ங்கறது மனைவிய காட்டற இடம்.
மனைவி-மனைவி வழி உறவுகளால் பொருளாதார மேம்பாடு காணலாம். மனைவியுடனான கம்யூனிகேஷன் பெட்டரா இருக்கும். குரு =மந்திரி . 7=மனைவி . ஆகவே உங்க மனைவியே உங்களுக்கு மந்திரி கணக்கா ரோசனைங்க சொல்லலாம்.

மனைவியால் குடும்பத்துல சுபகாரியங்கள் நடக்கும் ( பர்ஸுக்கு வேட்டு தான்) . மூத்த சகோதரத்தாலும் அனுகூலம் இருக்கு.ஆனால் ஒன்னு இந்த குரு தான் இருக்குமிடத்தை நசிக்க செய்வார். இதனால மனைவிக்கு பொறுப்புகள் கூடி அவிக சுகவீனத்துக்கு ஆளாகலாம் (கேஸ்ட் ரிக் ,அல்சர் மாதிரி )
இவர் தான் பார்க்குமிடத்தை டெவலப் பண்ணுவாரு .இதனால உங்களுக்கும் நல்ல நல்ல ஐடியால்லாம் வரும்.குறிச்சு வச்சுக்கிட்டு ப்ராக்டிக்கலா அனலைஸ் பண்ணி இம்ப்ளிமென்ட் பண்ணுங்க. (தர்ம சிந்தனை ஓவராயிரும் -போன்டியாயிரப்போறிங்க)

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) இதானல மனைவி/மனைவி வழி உறவுகளோட இஃப்ளுயன்ஸ் அதிகமாயிரும் . ஓவரா இடம் கொடுத்துட்டமோன்னு பாதி ராத்திரி மொட்டை மாடிக்கு போயி தம் போட ஆரம்பிச்சுருவிங்க. எல்லாம் ஒரு மாச கூத்து தானே லூஸ்ல விடுங்க.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்) அக்கா,அண்ணா,மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போக்கு அதிர்ச்சியை தரும் ( ஐ மீன் பாஸ்டுக்கு கொய்ட் ஆப்போசிட்டா பிஹேவ் பண்ணுவாய்ங்க.) உங்களுக்கும்,மனைவிக்கும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

அடுத்து மீன ராசி கதைய பார்ப்பம்

இவிகளுக்கு குரு 1/10 க்குடையவர் . ஆறுல வர்ராரு (2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணி முதல்) இதனால நோய் தொல்லை,கடன் தொல்லை ,வழக்கு வில்லங்கம்லாம் முழி பிதுங்க வைக்கும். செய்தொழில்,உத்யோகம் ,வியாபாரத்துலயும் இதே லொள்ளுதான்.
இந்த நேரத்தை பாசிட்டிவா யூஸ் பண்ணிக்கனும்னா ஒரே வழி பக்கா ப்ராஜக்ட் ரெடி பண்ணி -லம்ப்சமா ஒரு அமவுண்டை வங்கி கடனா வாங்க பாருங்க. தோஷமும் குறையும் .வேலையும் நடக்கும்.

பைசா,கண்ணாலம்,பொஞ்சாதி,புள்ள ,குட்டி எல்லாமே லொள்ளு பண்ணும். கண்டுக்காம லூஸ்ல விடுங்க. எதிராளி நாயேன்னதும் நாம வாய ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக்கிட்டா நாயோட போயிரும். நாம பேயின்னா பெருசாத்தானே போகும்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்,மறதி இமிசை பண்ணும்.பெரீ மன்சங்களோட விரோதம் வந்துரும். முக்கியமா அவா. ஆகவே டேக் கேர்.
2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .

கடு கடுன்னு இருப்பிங்க. சிடு சிடுன்னு பேசுவிங்க.அடக்கி வாசிங்க.இல்லாட்டி பிரிவுகள் கூட ஏற்படலாம் (பரிகாரம்: ஆரஞ்சு நிற ஆடை அணிகலன்,சூரிய நமஸ்காரம்,காயத்ரி ஜபம்,காலை மாலை நடை பயிற்சி ) கடன்,நோய்,விவகாரங்கள் தூங்கவிடாம பண்ணும்.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (2016 மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)

இதை யோகமான காலம்னு சொல்லலாம்.(புயலுக்கு பின் அமைதி மாதிரி ) வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் உடல் நலம் ஓரளவு சீராகும், ஓரளவுக்காச்சும் நிம்மதி கிடைக்கும். சகட்டு மேனிக்கு கண்டவிக கிட்ட முட்டி மோதிக்கிட்டிருந்த நிலை மாதிரி -அவன் கெடக்கிறான் விடுங்கற -மன நிலைக்கு வந்துருவிங்க. கடன் காரவிகளும் விட்டு பிடிக்கலாம்ங்கற மூடுக்கு வந்திருப்பாய்ங்க. எதிரிகளும் நண்பர்களா மாற வாய்ப்பிருக்கு (மொத்தமா நம்பிராதிங்க) செய் தொழில்/உத்யோகம்/வியாபாரத்துல இருந்த முடக்கம் நீங்கி வண்டி ஓட ஆரம்பிக்கும்.

ஸ்..அப்பாடா இத்துடன் 2015 குரு பெயர்ச்சி பலன் முடிந்தது .

2015 குரு பெயர்ச்சி பலன் : மிதுனம்,கடகம்

IMG_0615

அண்ணே வணக்கம்ணே !

மொதல்ல கொஞ்சம் உரத்த சிந்தனை . நாங்களும் ரோசிப்பம்ல?
கால மாற்றமும் -கிரக பலனும்னு ஒரு தொடர் ஆரம்பிச்சம்.அதுக்குள்ள குரு பெயர்ச்சி சீசன் ஆரம்பிச்சிருச்சு. ஊருடன் ஒத்துவாழ் போல அதுல வாய வச்சாச்சு. மேஷம்,ரிஷபம் ஓவர். இன்னம் 10 ராசிக்கு எழுதியாகனும். வீடியோ பதிவுன்னு அள்ளி விட்டம். வர்ர 15 ஆம் தேதிக்குள்ளயாச்சும் பதிவுகளை முடிச்சுட்டா இதை பேஸ் பண்ணிக்கிட்டு -இன்னம் பரிகாரம் அது இது சேர்த்து விலாவாரியா வீடியோ பதிவு பண்ணலாம்.

கட்டண சேவைக்கு கூட்டம் அம்முது. ஆனால் வண்டி ஓடமாட்டேங்குது . கிழவாடி ஆயிட்டா காலை நேரம் மட்டும் தான் மூளை சுறுசுறுப்பா இருக்குமாம். நாப்பத்தெட்டெல்லாம் ஒரு வயசா? லக்னம் தான் வேலை செய்யுதா? ஜன்ம குரு தான் ஆப்படிச்சாரா? அப்போ இந்த குரு அனுகூலம் போல. லேட்டஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர் “குரு” நாதன்.

ஊர் வேலைக்காக உதவாக்கரை பொம்பளய வேலைக்கு சேர்த்து ஐ நூறு வட்டம். அதுல ரூ.200 வேணம்னா ஒர்த்து . ஆக முன்னூறு வட்டம். குரு காரகம்.

ஜி.எம்.ஆன்லைன் சித்தூர் லைவ் இன் சைட்டுல வேற பத்தி எழுதனும். எம்.ஜி.ஆர் வேலை தான் ஆனால் பரவுதல் நடக்கும். வாரத்துக்கு ரெண்டுன்னு சொன்னம் . ஆரம்பம் ஜூலை 5 .இன்னைக்கு தேதி? ஏழுதான். ரெண்டு சாப்டர் போட்டாச்சு. அப்போ 12 ஆம் தேதிவரை யோசிக்க தேவையில்லை.

குரு பெயர்ச்சி ? எழுதியே ஆகனும்.கு.பட்சம் ரெண்டு ராசி . லேண்ட் என் க்ரோச் மென்ட் கேஸ்? மனு ட்ராஃப்ட் பண்ணியே ஆகனும். கட்டண சேவை ? நாளையிலருந்து ஜரூரா இறங்கிரனும். எங்கே தப்பு நடக்குது? வாஸ்து? தசா புக்தி ? 11/May/2015 => 17/Sep/2015 செவ் தசை சூரிய புக்தி . சுக்கிர புக்தியையே சமாளிச்சுட்டம்.

கோசாரம்? ஜன்ம குரு, அஞ்சுல சனிய விட ரெண்டுல குரு அஞ்சுல சனி பெட்டர் தானே? லேக் ஆஃப் ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ்? நோ சன் லைட்? என்னடா நடக்குது அங்கே? நான் என்ன அஞ்சு வட்டி யாவாரமா பார்க்கிறேன். கடுப்பாச்சு. இறங்கிருவன். ஞா இருக்கட்டும்.

ட்ரஷரீஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் கேஸ்? டைவர்ஸ் கேஸ்? எல்லாமே பொசுக்குன்னு முடிஞ்சுரும்.ஆனால் ஸ்டார்ட்டிங் ட்ரபுள். அல்லது ஸ்விங்ல போகும் போது வெளிய இருந்து பிரச்சினை ? பார்ப்பம். மொதல்ல ரெண்டு ராசிக்கு குருப்பெயர்ச்சி பலன்.உடுங்க ஜூட்டு .

மிதுனம்:
2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ராசிக்கு 2ஆமிடமான கடகத்தில் இருந்து மூன்றாமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.

உங்களுக்கு குரு 7,10 பாவங்களுக்கு அதிபதி. இவர் 2 ல் இருந்தார். அங்கிருந்து விலகி 3க்கு வரார். இவர் 2ல் இருந்ததால் தொழில் உத்யோகம்,வியாபாரம் வகையிலயும் ,மனைவி,மனைவி வழி உறவுகள் வகையிலயும் ஓரளவாவது அனுகூலமான சூழல் இருந்திருக்கும்.

இப்போ அவர் 3 ஆமிடத்துக்கு வர்ராரு. இதனால தொழில் உத்யோகம்,வியாபாரம் வகையிலயும் ,மனைவி,மனைவி வழி உறவுகள் வகையிலயும் அல்லல் அலைச்சல் ஏற்படும். இதனால மனசுல ஒரு வித பயம்,திகில் வந்துரும்.திகில் பாண்டி கணக்கா ஆயிருவிங்க.

உங்க ராசி ராசிச் சக்கரத்துல 3 ஆவது ராசிங்கறதால பிறப்புலயே உங்களுக்கு உடன் பிறப்புகளோடு ஹேட் அண்ட் லவ் ரிலேஷன் இருக்கும். இப்போ குரு வேற இதே இடத்துக்கு வர்ரதால விலகிப்போன உ.பி,ர.ரக்கள் நெருங்கி வர அதனால கூட நான் சொன்ன பாதிப்புகள் வரலாம். மேலும் குரு பிரதிகூலமா போறதால வரக்கூடிய ஜெனரல் எஃபெக்ட்ஸ் கூட வரலாம்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு சிம்மத்துலயே அஸ்தமிக்கிறார்.அஃதாவது குருவோட இம்பாக்ட் ஏறக்குறைய ஜீரோ ஆகி இங்கே சூரிய வேலை செய்ய ஆரம்பிச்சுருவாரு. இதனால மனசுல இருந்த பயம்,திகில் எல்லாம் மறைஞ்சு ஓரளவு தகிரியம் பிறக்கும். நீங்க பகல்ல பிறந்தவரா இருந்தா அப்பா,அப்பா வழி உறவுகள் வகையிலயும் உதவிகள் கிடைக்கலாம்.

அனைவருக்கும் மலை பிரதேசங்கள்,ரிமோட் வில்லேஜஸ்,நியூலி டெவலப்பிங் ஏரியாக்காரவிக உதவலாம். ஒன்றியம்,பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்கள் உதவி கிடைக்கலாம். இது ஜஸ்ட் ஒரு மாச பலன் தான்.ஆகவே சீக்கிரமே அறுவடை செய்ய ட்ரை பண்ணுங்க. பிறவு அடக்கி வாசிங்க.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
இதனால இந்த காலகட்டத்துல குருவோட லீலைகள் கொஞ்சம் குறையும். அதே சமயம் வயிறு/இதயம் தொடர்பான சிக்கல் முத்திப்போகவும் வாய்ப்பிருக்கு.மனைவி/பங்குதாரர்கள்/ வாடிக்கையாளர்கள்/ஊழியர்கள் போக்கு அதிர்ச்சியை தரும்.

கடகம்:

2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ஜன்ம ராசியான கடகத்துலருந்து 2ஆமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.
உங்களுக்கு குரு6,9பாவங்களுக்கு அதிபதி. இவர் ஜன்மத்துலயே இருந்தார். அங்கிருந்து விலகி 2க்கு வரார்.

ஜன்மத்துலருந்து விலகினதே ஒரு பெரிய திருப்பம். இதனால பொருளாதார நெருக்கடி ,ஊர் பஞ்சாயத்து ,வீண் பழி ,கொய்யால எல்லாத்தயும் விட்டுட்டு எங்கனா போயி நிம்மதியா இருந்திரலாமாங்கற கடுப்புல்லாம் மாறிரும். இதுவரை எஃபெக்ட் பண்ண அஜீர்ணம்,கியாஸ் ட்ரபுள் கூட கட்டுப்பாட்டுக்கு வந்துரும்ங்கோ !

இவரு ரெண்டுக்கு வர்ரதால அனுகூல தசாபுக்திகள் நடப்பவர்கள் கடன் வாங்கி சொத்து / நகை வாங்குவதும், பிரதி கூலமான தசாபுக்திகள் நடப்பவர்கள் கைக்கு வருவனா என்று கண்ணாமூச்சி காட்டிய சேமிப்பை /முதலீட்டை /சொத்தை /நகைகளை பெற்று விற்று/அடகு வைத்து கழுத்தை நெறித்த கடன் தீர்த்து நிம்மதி அடைவார்கள்.

இதில் ஏதோ ஒன்று கமுக்கமா நடந்து முடியும் வரை வெகண்டையா பேசறது ,விவகாரமா பேசறதுன்னு கசப்பை கொட்டுவிங்க. கண்,தொண்டை,வாய் பகுதியில் பாதிப்பு வரலாம். குடும்பத்துல கலகம் வரலாம் . மேலும் குரு அனு கூலமா வர்ரதால வரக்கூடிய பொதுவான பலன் கள் கூட கிட்டலாம்.
2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு சிம்மத்துலயே அஸ்தமிக்கிறார்.அஃதாவது குருவோட இம்பாக்ட் ஏறக்குறைய ஜீரோ ஆகி இங்கே சூரிய வேலை செய்ய ஆரம்பிச்சுருவாரு. இதனால சொந்த செல்வாக்குல -உங்க வாக்கு வன்மைய வச்சு பைசா சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.

நீங்க பகல்ல பிறந்தவரா இருந்தா அப்பா,அப்பா வழி உறவுகள் வகையிலயும் உதவிகள் கிடைக்கலாம். அனைவருக்கும் மலை பிரதேசங்கள்,ரிமோட் வில்லேஜஸ்,நியூலி டெவலப்பிங் ஏரியாக்காரவிக உதவலாம். ஒன்றியம்,பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்கள் உதவி கிடைக்கலாம். முக்கியமா பைசா மேட்டர்ல இது ஒர்க் அவுட் ஆகும். இது ஜஸ்ட் ஒரு மாச பலன் தான்.ஆகவே இது நிரந்தரம்னு மயங்கிராம அடக்கி வாசிங்க.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
இதனால இந்த காலகட்டத்துல உங்கள் வருமானத்துல திடீர் மாற்றம்/ஏற்ற இறக்கம்லாம் ஏற்படும். கடனே வாங்க வேண்டாத நிலை வரலாம். இதே போல செட்டி வச்சு கெட்டது போல கெட்டது போதும் வந்ததை அனுபவிக்கலாம்ங்கற மனப்போக்கும் ஏற்படும். கண்,தொண்டை,வாய் , வயிறு/இதயம் தொடர்பான சிக்கல் முத்திப்போகவும் வாய்ப்பிருக்கு. மனைவி குழந்தைகள் போக்கு அதிர்ச்சி தரும்.

குருப்பெயர்ச்சி பலன் : மேஷம்

சொ.கு.வ .மே.மு

அண்ணே வணக்கம்ணே !
என்னதான் நாம குரு பெயர்ச்சி ,சனிப்பெயர்ச்சில்லாம் டம்மி ,ஜாதகம்,தசாபுக்தி தான் அம்மின்னு தலை பாடா அடிச்சிக்கிட்டாலும் தமிழ் சினிமாவுல தாலி சென்டிமென்ட் கணக்கா இந்த கோசாரம்ங்கறது சோசிய சென்டிமென்ட்.

ஜாதகம் ஒரு கார். அதுல உள்ள கிரக பலம் டீசல் ,தசாபுக்தி தான் ரோடு . இதுல கோசாரம் எங்க வருதுன்னா பயணத்துக்கு உதவற ஆண்ட்ராய்ட் ஆப் மாதிரின்னு சொல்லலாம்.

ஆக்சுவலா கோசாரம் ஒரு ஜாதகருக்கு வேலை செய்தா அவர் ஜாதகத்துல சரக்கே இல்லேன்னு அருத்தம். கோசாரம்ங்கறது கார்ப்பரேஷன் காரவிக தண்ணி உடற டைம் மாதிரி. ஜாதகம் தான் பைப் லைன். பைப் லைன்ல பிரச்சினை இருந்தா எத்தீனி தபா -எத்தீனி இஞ்ச் தண்ணி விட்டாலும் வீட்டுக்குள்ள தண்ணி வந்து சேராதில்லை.

எழுத்தாளர் சுஜாதா ஜோசியத்தை பத்தி எழுத ஆரம்பிச்சாலே தன் நட்சத்திரம் கிருத்திகைங்கறதை சொல்லி ,தன்னோட ராசி மேஷமா -ரிஷபமாங்கற பஞ்சாயத்தை கிளப்பிருவாரு . அதுவாச்சும் ரெம்ப சிம்பிள் . கிருத்திகை நட்சத்திரம் உதயம்-அஸ்தமன காலத்துக்கிடையிலான நேரத்தை நாலா பிரிச்சு -மொத பாகத்துல பிறந்திருந்தா மேஷம் , 2,3,4 பாகத்துல பிறந்திருந்தா ரிஷபம்னு பைசல் பண்ணிரலாம்.

நம்ம மேட்டர் இன்னம் காம்ப்ளிக்கேட்டட். லக்னம் கடகம், ராசி சிம்மம், கடகத்துக்கு அதிபதியான சந்திரன் சிம்மத்துல ,சிம்மத்துக்கு அதிபதியான சூரியன் கடகத்துல .ரெண்டு பேரும் பரிவர்த்தனம்.

கொய்யால லக்னம் வேலை செய்யுதா? ராசி வேலை செய்யுதான்னு வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கனும். ஜட்ஜி மென்ட் கொஞ்சம் தப்பா போனாலும் நாஸ்திதான்.

இந்த மிதுன செவ்வாயையே எடுத்துக்கங்க. ராசிக்கு பதினொன்னுதானே. ஒரு போலீஸ் மேட்டர் பைப் லைன்ல இருக்கு.ஒரு ரியல் எஸ்டேட் மேட்டர் வேலைக்காகாம நாமளே கழண்டுக்கிட்டம்.

லக்னத்துக்கு இது 12 ஆமிடம். செய்தொழில்னு பார்த்தா கை நிறைய வேலை இருக்கு.வருது.ஆனால் செய்ய மிடியல். மசமசங்குது. நம்முது அனுபவஜோசியமாச்சே. கடகம் சிம்மத்துக்குண்டான குண நலைனை கீழே தரேன். நம்ம பிஹேவியருக்கு எது பொருந்துதுன்னு ஒரு வார்த்தை சொல்ட்டு போங்க பாஸ் ! ரெம்ப கொயப்பமா கீது .

4.கடகம்:
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். “என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்”
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.

மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி

ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.

சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)

திடீர் கோபம் கொள்ளுதல், சில நிமிடங்களில் சமாதானமடைதல். பெரிய்ய விஷயங்களை சகித்து கொள்ளுதல், சின்ன விஷயங்களுக்கு பெரிதாக கோபித்தல் இத்யாதி குணங்களால் இவர் எப்படித்தான் பிழைக்க போகிறாரோ என்ற எண்ணம் குடும்பத்தார் மனதில் ஏற்படலாம். வீடு கட்ட முனையும் போது ரொம்ப யோசனைகள் செய்தல் அடிக்கடி திட்டத்தை மாற்றுதல் வேண்டாம். முடிந்தவரை காண்ட் ராக்ட் மூலமாகவே கட்டிக்கொள்ளவும். கையில் முழுப்பணத்தை வைத்துக்கொண்டே இறங்கவும். இந்த லக்னக்காரர்கள் வீடுகட்ட ஆரம்பித்து அதை ஒரு தவணையில் முடிப்பது சந்தேகமே
இவர் கடல் போன்றவர். கடலின் கரையோரம் அலையடித்தபடி இருக்கும். அதே போல் இவரும் ஒதகாத மேட்டருக்கெல்லாம் பதைச்சுக்கிட்டு இருப்பார். கடல் ஆழத்துல ரெம்ப அமைதியா இருக்கும். இவருக்குள்ளயும் ஆழ்மனதில் ஒரு வித அமைதி இருக்கும்.

கடல்ல எப்படி அனைத்துவகையான தண்ணீரும் வந்து சங்கமமாகிறதோ அதே போல் இவரும் பல்வேறு நபர்களின் குண நலன்களை கிரகித்து வெளிப்படுத்துவார்.

முகம் பார்க்கும் கண்ணாடி. எதிரில் நிற்கும் நபரின் முகமே ,முகபாவனையே இவரை ரெஸ்பாண்ட் ஆக வைக்கும். நேத்து முந்தா நேத்து நடந்ததெல்லாம் கணக்கு வைக்கமாட்டார்.

நேத்து என்ன நடந்திருந்தாலும் இன்னைக்கு நீங்க சினேக பூர்வமா புன்னைகைச்சா இவரும் உடனே ஸ்மைல் பண்ணுவார்.
இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் இருக்கும். தெய்வ பக்தி, இன்னபிற சென்டிமென்ட்ஸ் இருக்கும். தன்னை யாராவது காப்பாத்தனும்னு நினைக்கிறவரு. அதே சமயத்துல தன்னை சரணடைஞ்சவங்களை காப்பாத்த பெரிய பெரிய ரிஸ்க் எல்லாம் எடுப்பாரு.

5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், (அல்லது இவர் வளர வளர தந்தையின் நிலை பலகீனமடைந்து வரும்) தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.

தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட். இவரை கண்டிப்பதோ,குறை கூறுவதோ கூடாது. மீறி செய்தால் நாம ஷெட்.
ஹோல்டான்..இப்ப குரு பெயர்ச்சி பலன் வருமா வராதான்னு டென்ஸ் ஆயிட்டிங்கல்ல. வந்துருச்சு பாஸ். மொதல்ல 2015-16 காலகட்டத்திலான குருவோட போக்குவரத்தை நோட் பண்ணிக்கங்க.

மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்:

2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ராசிக்கு 4 ஆமிடமான கடகத்தில் இருந்து ஐந்தாமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அஞ்சுக்கு வர்ரது நல்லது .அதை விட 4 ல் இருந்து விலகறது ரெம்ப நல்லது.

4 ஆமிடத்திலிருந்து விலகுவதால்:
அப்பா வீட்டோட இருக்கிறது மாறி அவரோட தொ.உ.வியாபாரம்லாம் நல்லா நடக்கும், அம்மா மேல இருந்த அழுத்தம் விலகும். ஏற்கெனவே இடம் மாறி வந்தவிக பழைய இடத்துக்கு போகலாம்.அல்லது பெட்டரான இடத்துக்கு மாறலாம்.வாகன மேட்டர்ல பல்பு வாங்கினவிகளுக்கு நல்ல ரிலீஃப் கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேட்டர்ல கூட நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

5 ஆமிடத்துக்கு வருவதால்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வுகளால் அனுகூலம் ,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள் லாபம் தரும்..பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள் சுமுகமாகும். கோவில் ,குளம்னு போக வாய்ப்பு ஏற்படும்,சேவை அமைப்புகளோடு அறிமுகம் ஏற்படும். நிர்வாகம் சீராகும்/அனுகூல சூழல் ஏற்படும்.

ஆண்குழந்தைக்கு வாய்ப்பிருக்காதே தவிர குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும் பொதுவாக குரு அனுகூலமானால் கிடைக்க கூடிய நல்ல பலன் களும் கிடைக்கும்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் .

இந்த காலகட்டத்தில் ஃபைனான்ஸ் மேட்டர் கொஞ்சம் கடுப்பேத்தும்.ஆனால் லம்பாவே கைக்கு வரும். ஒரு சொத்து மேட்டர்/முதலீடு/சேமிப்பு மேட்டர் கூட பைசல் ஆகும். செம ஐடியா எல்லாம் ஸ்பார்க் ஆகும். பெயர்,புகழ் கிட்டும்.சிலர் வெளி நாட்டு பயணம் கூட மேற்கொள்ளலாம். வெளி நாட்டில் செட்டில் ஆக முடியாதே தவிர வெளி நாட்ல/ வெளி நாட்டு கம்பெனிகள்ள வேலை கிடைச்சு பைசா கூட பார்ப்பிங்க. லோக்கல் கவர்ன்மென்ட்ல செல்வாக்கு ஏற்படும். நகராட்சி,மா நகராட்சியில வேலை கிடைக்கலாம், காண்ட் ராக்ட் கிடைக்கலாம்.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
குரு அஞ்சுக்கு வர்ரதால என்னெல்லாம் நல்லது நடக்கும்னு சொல்லியிருக்கனோ அதெல்லாம் ஒன்னமே நடக்காது. இலவச இணைப்பா குழந்தை/வாரிசுகளுக்கு நோய்,நொடின்னு படுத்தி எடுக்கும்.தப்பான முடிவெடுத்து பல்பு வாங்குவிங்க. அவப்பெயர் வரலாம்.அவமானம் நடக்கலாம். குரு பலம் போச்சுன்னா என்னெல்லாம் நடக்கும்னு கடந்த பதிவுல சொல்லியிருக்கனோ அதெல்லாம் நடக்கும்.

ராசிபலனும்-ஜாதகபலனும்

2

அண்ணே வணக்கம்ணே !
கால மாற்றமும் கிரக பலனும்னு ஒரு பதிவு போட்டேன். ரெம்ப நாளைக்கு பிறவு நெல்ல ரெஸ்பான்ஸ். ஜாதகம் பார்க்க வந்தவிகள ஜாதகம் கொண்டு வந்திங்களான்னா “ஏஞ்சாமி அந்த காலத்துல எல்லாத்தையும் ஜாதகம் பார்த்தா செய்தம் – ச்சொம்மா பேர் ராசிய வச்சு சொல்லுங்க”ம்பாய்ங்க.

செம கடுப்பாகும். ஆனாலும் இந்த மேட்டரை நிறுத்தி நிதானமா ரோசிச்சதுல பல மேட்டர் ஸ்பார்க் ஆச்சு. அவிக சொல்றதும் உண்மை தானே. இப்போ கம்ப்யூட்டர் ஜாதகம் வந்துருச்சு . படக்குனு பத்து ரூவா கொடுத்து ஜாதகம் போட்டுக்கிடறம். இதுக்கு மிந்தி?

ஜோதிட தொழில்ங்கறது மோனோப்பலியா இருந்த காலம் ஒன்னிருக்கில்ல. அய்யரு ஏதோ ரெட்டி ,நாயுடு, தேவர், நாடார், நாயக்கர்னா கொஞ்சம் பயந்துக்குனு எளுதி கொடுப்பார். அவரும் எத்தனை ஜாதகம் எழுதுவாரு?

எங்க ஊருல ஒரு சோசியர் செம பிசி. ( நான்-பிராமின் தான்) கிடைக்கிற கேப்ல கூட ஜாதக நோட்டு ஒன்னை எடுத்து எழுத ஆரம்பிச்சுருவாரு. ஜாதக நோட்டுங்க (எம்ப்ட்டி) குமிஞ்சி கிடக்கும்.

அன்னாரு எழுதி கொடுக்கிறதுக்குள்ள ஜாதகர் கழுத்து நின்னு , கவுந்துகிட்டு, சுவற்றை பிடிச்சு நடந்து பிறவு நடை வண்டியோட நடந்து ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சுருவாரு.

அதுவரை என்ன பண்றது? ச்சும்மா பேர் ராசிய வச்சு கதை பண்ண வேண்டியது தான்.ஆனால் அதெல்லாம் பக்காவா ஒர்க் அவுட் ஆகியிருக்கே?
இப்பல்லாம் ஜாதகத்தை வச்சு மாஞ்சு மாஞ்சு கணக்கு போட்டு சொன்னாலும் ஒன்னு ரெண்டு உதைக்குதே என்னா மேட்டரு?

மேட்டருக்கு வரேன்.

அந்த காலத்துல பால்ய விவாகம். அணை நிரம்புதோ இல்லையோ நீர் பாய்ச்ச நிலம் ரெடியா இருக்கும். இயற்கையோட நெருங்கிய தொடர்புள்ள வாழ்க்கை (விவசாயம் -கருக்கல்ல முழுக்கிறது என்ன? இருட்னதும் தூங்கிப்போறதென்ன?)

அந்த காலத்து விதை எல்லாம் ( நான் எதை சொல்றேன்னு புரியுதுல்ல?) செம வீரியம். மொத டிக்காஷன்ல காஃபி மாதிரி அப்டி இறங்கும். தாத்தாவோட கலர் ஜெராக்ஸ் பையன், பையனோட கலர் ஜெராக்ஸ் பேரன்னு ஈயடிச்சான் காப்பியா இறங்கியிருக்கும்.

இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு?

எப்பம் பசி மந்தமாயிருதோ அப்பத்தான் மன்சன் ருசிக்கு அலைவான். எப்ப மன்சனோட தாக்கத் குறைஞ்சு போகுதோ அதை பேலன்ஸ் பண்ண தன் தனித்துவத்தை காட்ட ஆரம்பிப்பான். (சர்வைவல்). அந்த காலத்துல தாக்கத் சூப்பர். சர்வைவல் பிரச்சினையே கிடையாது.

பாடி ஃபிட்னஸ் சூப்பர், சனம் கம்மி, நிலம் சாஸ்தி, தண்ணி ஃப்ரீ, எரி பொருள் ஃப்ரீ ,காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு .இதனால தனித்தன்மை குறைவு . அதை மந்தத்தனம்னு சொல்லக்கூடாது . வேணம்னா மந்தை தனம்னு சொல்லலாம்.

இப்பம் என்னாச்சு. சின்ன சின்ன குட்டீஸுக்கெல்லாம் தனி டேஸ்ட் என்ன? டோன்ட் டிஸ்டர்ப் மீ போர்ட் என்ன? தனி ரூம் என்ன?
நாம நட்சத்திரப்படி பார்த்தா 27 க்ரூப்புதேன், ராசி படி பார்த்தா 12 க்ரூப்பு தேன். மன்சங்களுக்குள்ள -அவிக டேஸ்டுகளுக்கிடையில வித்யாசம் ரெம்ப குறைச்சல். ஆனால் இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு?

உதாரணத்துக்கு லக்ன பாவத்தை எடுத்துக்குவம். இது நம்ம தலை,முகம் , ஆடை,அணிகலன்,எண்ணம் ,உள்ளம் இத்யாதிய காட்டுது.
குழந்தை பிறக்கும் போது தலையோட ஷேப்பு அது இஷ்டாத்துக்கு இருக்கும். பாட்டியோ,விதவையா போன அத்தையோ ஆரோ ஒரு பார்ட்டி தண்ணிய கொதிக்க கொதிக்க ஊத்தி அமுக்கி அமுக்கி ஒரு ஷேப்புக்கு கொண்டுவருவாய்ங்க.

இன்னைக்கு?
தாய்ப்பாலில் வீரம் கண்டேன்னு வாத்யாரு பாடினாரு. இன்னைக்கு தாய்ப்பால்ல டயாக்சின், டை கன்டென்ட் தான் இருக்கும் போல.

அப்பன் ஆத்தா ,அவிக அப்பன் ஆத்தாவுக்கு அடங்கி நடந்திருந்தா இதுவும் நடக்கும். அதுக அடங்கலின்னா அந்த அடங்காமை தானே அந்த தாய்ப்பால்லயும் ,அவன் போட்ட விதையிலயும் வரும்?

இதெல்லாம் இப்ப சொன்னா ஹய்யா நம்ம முருகேசன் சாருக்கு வயசாயிருச்சும்பாய்ங்க. சொல்லிட்டு போவட்டும் , நமக்கு சப்ஜெக்ட் முக்கியம்.
அன்னைக்கு ராசிக்கு சொன்னா நடந்தது -இன்னைக்கு ஜாதகத்துக்கு சொன்னாலே உதைக்குது ஏன்? இதான் சப்ஜெக்ட். இன்னைக்கு மக்களோட தனித்தன்மை வளர்ந்துருச்சு. சகட்டுமேனிக்கு ரோசிக்கிறான், சகட்டு மேனிக்கு கற்பனைகள்.ஆனால் மேற்படி ரோசனைகளை செயலாக்கற தாக்கத் இல்லை, கற்பனைகள் நிஜமானாலும் அதை அனுபவிக்கிற “மஸ்த்” இல்லை.

ஒருவன் மனது ஒன்பதடா -அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடான்னு கவிஞர் எழுதிட்டாரு. இன்னைக்கு எழுத சொன்னா ட்ரில்லியன்,மில்லியன் கணக்குலதான் எழுதனும்.

ஒரு வண்டி -பேசிக்கலா லொடக்கானி, பெட் ரோலும் சரியில்லை, அளவும் ரெம்ப குறைச்சலா இருக்கு, ஓட்டறவனும் செரியில்லை, ஒன்பது திசைப்பக்கமும் குண்டக்க மண்டக்க அலையுதுன்னு வைங்க அந்த வண்டி எந்த இலக்கை போய் அடையும்னு கரீட்டா சொல்ல முடியுமா? நெவர் !
நான் எல்லாம் சின்ன வயசா இருக்கும் போது குப்பன்ங்கற நாவிதர் காலையில வீட்டுக்கே வருவாரு . வெட்ட ஆரம்பிச்சா கொய்யால குளிச்சுட்டு சோறே சாப்பிட்டுரலாம். அவ்ளோ நேரம் வெட்டுவார். கூலி ? ஒரு ரூவாயா ரெண்டு ரூவாயா தெரியாது.

பிறவு கொஞ்சம் பெரிய பசங்க ஆன பிறவு அப்பா கூப்டு போயி கடையில விடுவாரு, அப்பா ஒரு மாசத்துக்குண்டான காய் கறி எல்லாம் வாங்கிட்டு வர்ர வரை வெட்டிக்கிட்டே இருப்பாய்ங்க. கட்டணம்? அஞ்சு ரூவாயா இருக்கலாம்.

இன்னைக்கு ? மொதல்ல ஃபோன் போட்டு கடை திறந்திருக்கா? ஹேர் ட்ரசர் கடைக்கு வந்திருக்காரா? வந்திருந்தாலும் ஃப்ரீயா இருக்காரா? தெரிஞ்சுக்கிட்டு போவனும். அப்படியே போனாலும் முன்னாள் கவுன்சிலரோ ,இ ந் நாள் பிகில் ரவுடியோ கிராஸ் ஆயிட்டா நாம வெயிட்டிங்குல இருக்கனும்.

ஒரு தலை மேட்டருக்கே இவ்ளோ கதை .இன்னம் முகம்? விடிஞ்சுரும் (இப்பமே 4.29) நான் என்ன சொல்ல வரேன்னா வாழ்க்கைய கிரகத்தோட போக்குல , பாவத்தோட போக்குல விடாம கிரக பலன்/பாவ பலன்ல ஓவர் ட்ராஃப்ட் பண்ணி “ஷோக்” பண்ணிக்கிறம். மத்த மேட்டர்லாம் எப்படி ஒர்க் அவுட் ஆகும்?

மொதல்ல தனியோ தனின்னு ஆயிட்ட பார்ட்டிக்கு ராசிபலன் எப்படி பொருந்தும்? ஜாதகமே இருந்தாலும் நொடிக்கு நொடி மனம் மாறி ,மனம் போன போக்குல போற வாழ்க்கைய எப்படி கணிக்க முடியும்?

இன்னொரு சந்தர்ப்பத்துல தொடர்ந்து பேசுவம்

ஆரு எதுக்கு சரிப்பட்டு வருவாய்ங்க+ஃபேஸ்புக் மீட் 2014

DSC_7807
அண்ணே வணக்கம்ணே !
ஆக்சுவலா இந்த பதிவு முக நூல் பதிவர் சந்திப்பை கவர் பண்ணத்தான் போடறேன்.ஆனால் ஏற்கெனவே ஜெ சொத்துக்குவிப்பு வழக்கு என்னாகும்னு ஊர் பஞ்சாயத்து பதிவை போட்டதுல ஜோதிட ஆர்வலர்கள் நொந்து போயிருப்பாய்ங்க. அதனால ஆரு எதுக்கு சரிப்பட்டுவருவாய்ங்கனு தலைப்பு வச்சு தலைப்பையும் ஜஸ்டிஃபை பண்றேன்.
அதுக்கு மிந்தி ஞா கிழமை சென்னையில நடந்த ஃபேஸ்புக் மீட் பத்தி சொல்லனும். பேசிக்கலா பார்த்தா நம்முது எல்லாமே ஒன் மேன் ஷோ தான். அதே சமயம் டீம் ஒர்க்கை வேடிக்கை பார்க்கிறதுல ஒரு ஆர்வம். கேட்டாலும் கேட்கலின்னாலும் நம்ம சஜசன்ஸை அள்ளி விட்டுக்கிட்டே இருப்பம்.
ஒரு தாட்டி லோக்கல் கேபிள் டிவி காரவுக சில்வர் ஜூப்ளி கொண்டாட ஏற்பாடு பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அதோட ஓனர் எங்க அண்ணன் ஃப்ரண்டு . அழையா விருந்தாளியா உள்ளாற போயி எதையும் ப்ளான் பண்ணி செய்யனும். அதுலயும் கெட்டதை நினைச்சே ப்ளான் பண்ணனும்.
உதாரணமா மழை வந்துட்டா என்ன பண்றது -பவர் கட்டாயிட்டா என்ன பண்றதுன்னு துவங்கி நிறைய மேட்டர்லாம் சொல்ட்டு வந்தேன்.
என்னாச்சுங்கறிங்க? ஃபங்சன்  வென்யூ ஒரு காலேஜ் கிரவுண்டு . காலேஜ் ஸ்டேஜுக்கு எதிர்த்தாப்ல 3 பக்கமும் க்ளாஸ் ரூம்ஸ்.
ஃபங்சன் ஆரம்பிக்கவே காத்திருந்தாப்ல மழை கொட்ட ஆரம்பிச்சுருச்சு. சனம் பதறியடிச்சு க்ளாஸ் ரூம் வராண்டாக்கள்ள ஒதுங்கிட்டாய்ங்க.மழை ஆரம்பிக்கவே காத்திருந்தாப்ல பவர் கட். ஜெனரேட்டர் இல்லை. என்னாகும்?
மொத ப்ளாகர்ஸ் மீட்டுக்கு போனப்பயே கவனிச்சன். சனம் மேடைக்கு வந்து அறிமுகம் செய்துக்கவே அரை நாள் போயிந்தி. அப்பமே ஐடியா வந்தது.
இந்த மாதிரி மீட்டுக்கு வந்ததும் ஏற்கெனவே கலெக்ட் பண்ணி வச்சிருக்கிற ப்ளாகர்ஸோட பயோ டேட்டாஸை ஜெராக்ஸ் போட்டு ஒரு ப்ளாஸ்டிக் ஃபைல்ல போட்டு கொடுத்துரலாம்.
இந்த தாட்டி ஃபேஸ்புக் மீட்ல அரை லிட்டர் மாசா கொடுத்தாய்ங்க. இதை விட அது ஒன்னும் காஸ்ட்லி ஆகாதுன்னு நினைக்கிறேன்.
அடுத்த பிரச்சினை மீட்டுக்குள்ளயே மீட்டு . ஆமாம் பாஸ் ! சத்திய மூர்த்தி பவனை விட அனேக கோஷ்டிகள் . ஆளாளுக்கு சள சளன்னு பேசிக்கிட்டு ஃபோட்டோ செஷன் வேற.
ரெண்டாவது ப்ளாகர்ஸ் மீட்டுக்கு போயி பாடியே நாறிருச்சு. ஆஸ்பெஸ்டாஸ் கூரை . சட்டை தொப்பலா நனைஞ்சுருச்சு. அவிகளுக்கும் முன் கூட்டியே சொன்னேன். பயோடேட்டா ஐடியா. கேட்டாய்ங்களா? ஊஹூம்.
இங்கயும் அதே கதைதான். இந்த ரெண்டாவது மீட்ல ரீ ப்ரிண்ட் போட்ட ஜோதிடம் 360 புஸ்தவங்களை இலவசமா கொடுத்தேன்.
ஆனால் பாருங்க மீட் முடிஞ்ச பிறவு நானே பத்து காப்பி வரை கண்டெடுத்தேன்னு ஒரு பிரபலம் சொன்னாரு .
இந்த தாட்டி மல்ட்டிகலர் ரேப்பரோட ப்ரொஃபெஷ்னல் எக்சலன்ஸியோட நாம பப்ளிஷ் பண்ண 4 புஸ்தவம் ஒரு 200 பிரதிவரை இருக்கு. ( மொத்தமா போட்டது 2000 பிரதி) . இலவசமா கொடுத்திருக்கலாம்.
ஆனால் கடந்த கால அனுபவம்? அதான் கொடுக்கல. ஒரே ஒரு செட் மட்டும் Saravanaprasad Balasubramanian சார் கிட்டே கொடுத்து ஆரு படபடன்னு 12 ராசிகளோட பேரையும் வரிசையா சொல்றாய்ங்களோ அவிகளுக்கு கொடுத்துருங்கனு சொல்லிட்டன்.
அடுத்து நாம அட்டெண்ட் பண்ணது பாண்டிச்சேரி ஃபேஸ்புக் மீட்.ச்சொம்மா சொல்லக்கூடாது முகமது அலி சார் விஸ்வரூபம் எடுத்து காட்டினாரு.
நல்ல க்ளைமேட்,நல்ல வென்யூ , நல்ல மேடை அமைப்பு.ஆனால் ஃபோட்டோ பிடிச்சா எல்லாமே வெள்ளையாத்தான் வந்தது. மைக்ல என்னமோ ஃபெவிக்கால் இருந்த கணக்கா கைக்கு  கிடைச்சதை  விடமாட்டேங்கற பார்ட்டிங்க நிறைய மொக்கை மோட்டாய்ங்க.
என்ன பாஸ் ! எப்பத்தான் 2014 க்கு வருவிங்கன்னு அலுத்துக்குறிங்க அப்டித்தானே .புரியுது.புரியுது. வரேன் மேட்டருக்கு வரேன். வயசாயிருச்சுல்ல மொதல்ல ஃப்ளாஷ் பேக் தான் வருது.
சமீப காலமா ஒவ்வொரு நாளும் சிவராத்திரியாயிருச்சு. ஜாதக பலன்லாம் மொபைல்ல ரிக்கார்ட் பண்ணவேண்டியிருக்கா -பகல்லன்னா அவனவனை போய் கெஞ்சிக்கிட்டு கிடக்கனும். கூடவே ஒரு நாய் வேற -அதை ரேக்கி விடவே குரங்குப்படை அப்பப்போ விசிட். அதனாலதான் இந்த நிலை.

ரா முழுக்க கண் விழிச்சு விடியல்ல அப்படியே போய் பஸ் ஏறினேன். தூங்கற நேரத்துலயே தூக்கம் வந்து அழுவாது. ட்ராவல்ல எங்கே தூங்கறது.
நம்ம வாழ் நாள் சேமிப்பே இந்த லேப் டாப் தான் எவனாச்சும் ஆட்டைய போட்டுட்டா -ஆட்டைய போட்ட கதைய ஸ்டேட்டஸா போட கூட முடியாதே.
நல்லவேளையா சென்னை நண்பர் திரு மீனாட்சி சுந்தரம் போரூர்ல இறங்கிருங்க நான் பிக் அப் பண்ணிக்கிறேன்னுட்டாரு.பிழைச்சேன்.

சொன்னபடியே பிக் அப் பண்ணி ஸ்ட் ராங்கா ஒரு டீ -ஒரு பாக்கெட் கோல்ட் ஃப்ளாக் . மண்டப வாசல்ல இறக்கி விட்டுட்டு முடிஞ்சதும் போன் பண்ணுங்கன்னாரு (பண்ணல அது வேற கதை)
உள்ளாற போறம். என்டரன்ஸ்ல பன்னீர் தெளிச்சு -கையில மாசா அரை லிட்டர் பாட்டில் ஒன்னு கொடுத்துட்டாய்ங்க. ஐடில நம்ம பேரைத்தான் சித்திரை முருகேசன்னு குறிச்சு கொடுத்துட்டாய்ங்க. எத்தனை பேரு ஃபேஸ்புக்ல சித்திரை முருகேசன்னு  தேடிக்கிட்டிருக்காய்ங்களோ? chittoor murugeshan னுட்டு தேடுங்கப்பு. இல்லின்னா இங்கே அழுத்துங்க
உள்ளாற போறம். மீட்டுக்குள்ள மீட்டு . மண்டப ஹால்லயும்,வெளியேயும் மீட்டு. ஃபோட்டோ ஷூட்டு நடந்துக்கிட்டிருக்கு.
ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டுல 2000+ இருக்காய்ங்களே ஒரு இருபது பேர் இந்த மீட்டுக்கு வந்திருக்கமாட்டாய்ங்களானு ஒரு அல்ப்ப ஆசை .
அனுபவ ஜோதிடம் முக நூல் பேஜை 577 பேர் லைக் பண்ணியிருக்காய்ங்களே ஒரு 77 பேர் வந்து அறிமுகப்படுத்திக்க பாட்டாய்ங்களானு ஒரு கேவலமான எண்ணம்லாம் இருந்தது.
இதுல எது ஒன்னு ஒர்க் அவுட் ஆனாலும் நாமளும் சனங்களை மாதிரியே மீட்டுக்குள்ள  ஒரு மீட் நடத்திரலாம்ல.  நல்ல வேளையா ஒன்னும் பேரலை .க்ரிஷ் ராம் ஒருத்தர் தான் தானா வந்து அறிமுகப்படுத்திக்கிட்டாரு.
மீட் என்னவோ 9 மணிக்கு ஆரம்பம்னு ஷெட்யூல்ல இருந்தாலும் சவுண்ட் சிஸ்டம் ஒரு பக்கம் தகராறு, பவர் கட்ல பேயா சுத்த வேண்டிய ஃபேன் எல்லாம் மன்மோகன் சர்க்கார் மாதிரி பேர் பண்ணிக்கிட்டிருந்தது.
நல்லவேளையா ஒரு மினி டவல் கொண்டு போயிருந்ததால சமாளிச்சுட்டம்.
நம்ம பக்கத்துல ஏறக்குறைய ஆத்தா மாதிரியே ஒரு மாதரசி உட்கார்ந்திருந்தாய்ங்க. ஒரு ஆங்கிள்ள எங்க மம்மி சாடை .இன்னொரு ஆங்கிள்ள நாலாங்கிளாஸ் டீச்சர் லலிதா டீச்சர் மாதிரி சாடை.
பயபக்தியாவே உட்காந்திருந்தம். நடக்கிற கூத்தை பார்த்தா “ஜோதிடம் வாஸ்து பெயரால் மோசடிகள்” உரைய நிகழ்த்தமுடியுமான்னு சந்தேகமாயிருச்சு. saravanaprasad சாரை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டன்.
ஒரு குறுந்தாடிக்காரரு ..நல்ல வயசாளி , டிவி ஆர்ட்டிஸ்டாம். அந்த கால திராவிட இயக்க மேடையே போல பேசிக்கிட்டிருந்தாரு.ஆரும் கண்டுக்கற மாதிரியே தெரியல.
ஒரு வழியா ஆம்ப்ளிஃபயர் ,குள்ள மணி சைஸுக்கு ஸ்பீக்கர்லாம் வந்து இறங்கிருச்சு. பவர் கட்டும் முடிஞ்சு ஜில்லுன்னு காத்து.
நம்ம பக்கத்துல ஒருத்தரு அசெம்ப்ளில எதிர்கட்சி உறுப்பினர் மாதிரி விரல் உயர்த்தி வாய்ப்பு கேட்டுக்கிட்டே இருந்தாரு. மீட்டுக்குள்ள மீட்டு ஃபோட்டோ செஷன் -மீன் மார்க்கெட் இரைச்சல்லாம் கன்டின்யூ ஆயிட்டே இருக்கு.
நாலு பேருக்கு நல்லதுன்னா நாம கொஞ்சம் தியாகம் பண்ணியாகனும்னு முடிவு பண்ணிட்டன். சரவண குமார் சார் கிட்டே சார் என் சப்ஜெக்டை விட்டுரலாம். மொதல்ல இதை செட் ரைட் பண்ணிரலாம்னு சொன்னேன்.
அவரும் இதுக்கு மேல புதுசா என்ன சிக்கல் வந்துரும்னு மேடைக்கு அனுப்பி விட்டார்.
என்னப்பா இது பந்தாவா ஒரு அறிமுகம் செய்துருக்கலாமே – ஊஹூம் வெறுமனே அனுப்பி உட்டாங்க. வலையுலக மாத்ரு பூதம்,ஜோதிட ஓஷோ ,வலையுலக பவர் ஸ்டாருன்னுட்டு என்னை நானே அறிமுக பட்டுத்திக்கிட்டன் .வேற வழி?
பிறவு சின்ன பசங்க ஐப்ரோல மீசை வரையறது என்னாட்டம் கிழவாடிகள் தலைக்கு டை போடற மேட்டரை சொன்னேன்.
மதர் சென்டிமென்ட் சினிமாவுல க்ளிக் ஆக காரணம் அம்மா இருக்கும் போது நாம கண்டுக்கறதில்லை.
தாலி சென்டிமென்ட் க்ளிக் ஆக காரணம் பொஞ்சாதிய ஆரும் கண்டுக்கறதில்லை
இப்படி ஒரு ஐட்டம் இருக்கிற வரை அதோட வேல்யூ தெரியறதில்லை நமக்கு.
இருக்கிறத இருக்கறப்போ அதோட மதிப்பு தெரிஞ்சு உபயோக்கிக்கனும் பாஸ்.
நேற்று இன்று நாளைன்னுல்லாம் இல்லை. இருக்கிறதெல்லாம் இன்றுதான் -இப்பத்தான் (ஓஷோ)
இதை எல்லாம் சொல்லி எங்க வரேன் புரியுதான்னு கேட்டேன்.

ஆச்சரியம் என்னடான்னா நிறைய பேர் கை தூக்கினாய்ங்க.
அந்த புண்ணியாத்மாக்களுக்கு மால்ல மினரல் வாட்டர் வாங்கினாலும் சரியான விலைக்கு கிடைக்கும்.
கடேசியில அய்யா சாமிகளா .. இந்த மீட்டையும் அப்படி ஆக்கிராதிங்கனு கெஞ்சி கதறி கேட்டுட்டு இறங்கி வந்துட்டன்.
(சனம் இதுக்கும் கை தட்டி ,விசில் எல்லாம் அடிச்சாய்ங்கப்பா)
பிறகு முல்லை வேந்தன்னு ஒரு லாயர். சாதி அமைப்பு ஒழியனும்னா காதல் கலப்பு மணம் தான் ஒரே வழி .அதுக்கு நாங்க சப்போர்ட் பண்றோம். தமிழ் நாடு முழுக்க நெட் ஒர்க் இருக்குன்னு நிபந்தனைல்லாம் சொன்னாரு.
ஆடியன்ஸ்லருந்து “மொத திருமணமா இருக்கனும்”னு எடுத்து கொடுத்தாய்ங்க. சிரிப்பலைகளுக்கிடையில அவரு அதை கன்ஃபார்ம் பண்ணாரு.
நான் பார்த்த கா.க.மண தம்பதிகள் எல்லாருமே அவிகளுக்குள்ள உசந்த சாதி (என்றுகருதப்படும்) பழக்க வழக்கங்களுக்கு மாறிர்ராய்ங்க.
அடுத்த தலைமுறையில அந்த உசந்த சாதிக்குள்ளயே பிள்ளைகளுக்கு கண்ணாலம் கட்டறாய்ங்க. சாதீய ஒழிக்கவே முடியாதோன்னு தோனுது.
ஒருத்தர் நான் கவிதை மட்டும் தான் எழுதுவேன்னு சொன்னாரு (பாவம்! )
இந்த மீட்லயே என்னை கவர்ந்தது நிகழ்ச்சிய நடத்தினவுகளை கவுரவப்படுத்தினதுதான்.
அவிக களம் கண்டு -களத்தில்  பட்ட விழுப்புண்ணை எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் நக்கி கொடுத்து பேசினது ஹார்ட் டச்சிங்.
சரவண குமார் இது யாருக்கும் போட்டியா நடத்தினதில்லைன்னு ஆரம்பிச்சு இங்கே யாரும் சிறப்பு விருந்தினர் இல்லை. எல்லாருமே சிறப்பு விருந்தினர் தான்.
அங்கே பலருக்கும் முக்கியத்துவம் தரப்படல. அப்பவே முடிவு பண்ணிட்டம்னு முடிச்சாரு (பத்தவச்சுட்டியே பறட்டை !)
ஆதித்யாவுல வலைச்சிரிப்பு நடத்தறவர் மாட்னாரு.அவர் கிட்டே கேட்டேன். ஏங்க தம்மாத்தூண்டு பெஞ்சுல இடுக்காட்டமா உட்கார்ந்துக்கறிங்க?
அவரு சொன்னாரு “பெரிய பெஞ்சுல உட்கார்ந்தா கேமராலருந்து வெளிய போயிருவம்” அப்படியா?
ராணி நிருபர் ராஜய்யா பக்கத்து நாற்காலியில உட்கார்ந்திருந்தார் . நாம தினத்தந்தியில முன்னாள் ரிப்போர்ட்டராச்சே.பழைய பாசம் விடுமா.பேசிக்கிட்டம்.
நாம சட்டையில குத்தியிருந்த ஐடிய உத்துபார்த்தவுகளுக்கெல்லாம் நம்ம விசிட்டிங் கார்டை அள்ளிவிட்டம். ஞா இரவு நாம பெங்களூர்ல இருக்கனும்.  நெட்ல அடிச்சு பார்த்ததுல சித்தூர் போய் -பெங்களூர் போறதே பெட்டர்னு டேட்டா கிடைச்சது. ஊட்டுக்கு வந்து வென்னீர்ல குளிச்சமா -படுத்தமா திங்கள் மதியம் 11 மணி .
கொய்யால ரிசப்சன்,கண்ணாலம் எல்லாம் ஓவராகியிருக்கும்னு  நினைச்சு அம்பேல்.
ஒளுங்கு மருவாதியா சாயந்திரம் வரை இருந்திருந்தா மீட் ஆச்சும் மீட்டாபான் ஆகியிருக்கும். ரெண்டும் கெட்டான் பேர்ணாம்பட்டான் கதையாயிருச்சு.
ஊருக்கு திரும்பி வர்ர சமயம் எப்படியும் ஒரு அம்பது ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்திருக்கும்னு கணக்கு ஓடிக்கிட்டே இருந்தது.
ஆனால் பாருங்க..ஒரே ஒரு ரிக்வெஸ்ட் கூட காணோம்..அடுத்த தாட்டி பதிவர் சந்திப்பு நடந்தா வசிய வேர் கட்டிக்கிட்டு தான் போவனும் போல.
நல்ல வேளையா ஹோஸ்டுங்களுக்கு  நாம கொடுத்த ரெக்வெஸ்ட்  எல்லாம் ஆக்செப்ட் பண்ணிட்டாய்ங்க.
இந்த மீட்ல சந்திச்ச ஒரு ஆச்சரியம் கானா விஜி. இவரை பத்தி மேகசின்ஸ்ல படிச்சிருக்கம்.
அஷ்டம சனி இருக்கிற க்ளையன்ட்ஸுக்கு மரண கானா கேளுங்கன்னு ரெக்கமண்ட் பண்ணியிருக்கம் . இவரை சந்திச்சதும்-பேசினதும் மனசுல ஒரு அமானுஷ்ய உணர்வை கொடுத்தது. மரண சித்தாந்தம்னு ஏதோ சொல்ல வந்தாரு. அதுக்குள்ள சாப்பாடு வந்திருச்சு. கழண்டுக்கிட்டன். இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காமயா போயிரும்.
ஒரு வீட்ல கெட்டது  நடக்க இருக்குன்னு சோசியர் சொல்டாருன்னு வைங்க  . அந்த சமயம் ஹோமம்,யாகம்னு போறத விட அப்பம் டகாண்டாக்ட் பண்ணி வீட்டுக்கு கூப்டு ஒரு பாட்டு பாட வைங்க .தோஷம்லாம் போயே போச். அன்னாரின் தொடர்புக்கு இங்கே அழுத்துங்க.
வருந்துகிறேன்:
கடந்த மீட்டுக்கு போறச்ச மவள் அன் மேரீட் .கேமராவோட வருவா. படமா எடுத்து தள்ளுவா. இந்த தாட்டி அவ மேரீட்.மேலும் கர்பம். ஆகவே ஒன்டிக்கட்டையா போனதுல ஃபோட்டோஸ் போட முடியல.

ஓகே இப்பம் 12 ராசிக்காரவுகள்ள ஆரு எதுக்கு செரிப்பட்டுவருவாய்ங்கன்னு பார்த்துரலாமா?

1.மேஷம்
ஃபீல்டு ஒர்க். அலைச்சல் திரிச்சல் எல்லாத்துக்கு சரிப்பட்டு வருவாய்ங்க. ஆனால் கையில ஒரு ப்ரோக்ராம் போட்டு கொடுத்துரனும். எங்கயாச்சும் முட்டிக்கிட்டு நின்னா அப்படியில்லப்பா இப்படின்னு கைட் பண்ணனும்.
2.ரிஷபம்:
பேச்சுன்னா இவிகளுக்கு வெல்லம். இவிக பேச்சுன்னா சனத்துக்கு வெல்லம். அதே நேரத்துல பேச்சுலயே தங்கிருவாய்ங்க. அதனால இவிகளை சிங்கிளா விடப்படாது .கூடவே இன்னொரு ஆளை போடனும்.தேவையில்லாத பேச்சை வெட்ட. அடுத்த ப்ளஸ் கலெக்சன்.
3.மிதுனம்:
மக்கள் தொடர்புக்கு சரிப்பட்டுவருவாய்ங்க. அதே போல ஒருங்கிணைப்பு. தகவல் திலகமா இருப்பாய்ங்க. எங்கே போனாலும் சோடியாத்தான் போவேம்பாய்ங்க (மனைவி-காதலி) அதை இடம்,பொருள் ,ஏவல் பார்த்து மெயின்டெய்ன் பண்ணா பிரச்சினை இல்லை.
4.கடகம்:
வென்யூ செலக்சன், போக்குவரத்துல இவிகளை விடப்படாது. மத்தபடி சனத்தை சைக்காலஜிக்கலா மோட்டிவேட் பண்ணவும் – ஆர்கனைஸ் பண்ணவும் சரிப்பட்டுவருவாய்ங்க.
5.சிம்மம்:
செலவழிக்கிற மேட்டர்ல இறக்கவே கூடாது.பட்ஜெட் எகிறிக்கும்.அதே சமயம் பெரிய மன்சங்களை மீட் பண்றது, அறிக்கை,அறிவிப்பு வெளியிடறது,கூட்டத்தை கட்டுப்படுத்தறது மாதிரி விஷயங்களுக்கு சரிப்பட்டுவருவாய்ங்க.
6.கன்னி:
பேச்சு வார்த்தை நடத்தறது -பேரம் பேசறது -டீல் முடிக்கிறது ,கணக்கு வழக்கு பார்க்கிறது ,பெண்களை டீல் பண்றதுக்கெல்லாம் சரிப்பட்டுவருவாய்ங்க.
7.துலாம்:
சனங்களை எடை போடறது -ஜட்ஜ் பண்றது -ஃப்ரென்ட்லி டீல் தேவையான சந்தர்ப்பங்களுக்கு சரிப்பட்டுவருவாய்ங்க.
8.விருச்சிகம்:
குத்தம்-குறை கண்டுபிடிக்கிறது – விமர்சிக்கிறது சமையல் மேற்பார்வை இத்யாதிக்கு சரிப்பட்டுவருவாய்ங்க. ஆனால் தண்ணி (H2o) மேட்டரை இவிக கிட்ட விடப்படாது.
9.தனுசு:
ஓவரால் சூப்பர் விஷனுக்கு சரிப்பட்டுவருவாய்ங்க. ஆனால் இவிக பேசறது டீம் மெம்பர்ஸுக்கிட்டே மட்டும் இருக்கனும். வெளி தொடர்புன்னா சொதப்பிருவாய்ங்க.வம்பா போயிரும்.
10.மகரம்:
இவிகளுக்கு எந்த வேலைய வேணும்னா என்டார்ஸ் பண்ணலாம். கடனேனு சொன்னதை மட்டும்செய்வாங்க. அதே நேரம் கேஷ் டீலிங்குக்கு சரிப்பட்டு வரமாட்டாய்ங்க. பெரீ மன்சங்க,ஆஃபீசருங்களை டீல் பண்ண கஷ்டப்படுவாய்ங்க.
11.கும்பம்:
லாபம் கருதி செய்ற எந்த வேலையா இருந்தாலும் சரி. உதாரணமா என்ட்ரன்ஸ் ஃபீஸ், சப்ஸ்கிருப்ஷன் வசூல் பண்றதுல புலியா இருப்பாய்ங்க.
12.மீனம்:
செலவழிக்கிற டிப்பார்ட்மென்டுக்கு சிக்குன்னு பொருந்தி வருவாய்ங்க.  கைக்காசையும் செலவழிக்க தயாரா இருப்பாய்ங்க.

தமிழ் புத்தாண்டு பலன்: மீனம்

இன்னைக்கு சென்சேஷன் முன்னாள் பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமணுக்கு 4 ஆண்டு சிறை.
( எங்களை மட்டும் ஈசியா உள்ளே தூக்கி போட்டுர்ராங்கய்யா -வாய்ஸ் ஆஃப் தலித்/தென் இந்தியர்கள் )

..புத்தாண்டு பலனை தொடரலாமா? இன்னைக்கு மீனராசி. மொதல்ல இவிக கேரக்டரை பார்த்துருவம்

இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும். பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)

சனி:

உங்களுக்கு லாப,விரயாதிபதியான இவர் இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 7 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி மட்டுமில்லை சிறப்பு விதிப்பதியும் இது ரெம்ப ரெம்ப நல்லதில்லை.

விரயாதிபதியாக சனி 7 ல நின்னா காதல்,கல்யாணம்,திருமண வாழ்வுக்கெல்லாம் ஆப்பு. உங்களுக்கோ உங்க காதலி/மனைவிக்கோ கால்,ஆசனம்,நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம்.ஏன் பிரிவு கூட ஏற்படலாம்.அவிகளால நஷ்டமும் ஏற்படலாம்.

அதே சமயம் லாபாதிபதியாக சனி 7 ல நிக்கிறதால தகுதியில்லாத பெண்/ஆணிடம் புதுசா காதல் ஏற்படறது -கண்ணாலமானவுகளுக்கு இரண்டாவது கல்யாணத்துக்கு வாய்ப்பு ஏற்படறது கூட நடக்கலாம். டேக் கேர் !

ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையறாவில் கஷ்டம்,நஷ்டம்,மனக்கஷ்டம் வர்ரதுக்கு வாய்ப்பிருக்கு. பரிகாரம்: எதை செய்தாலும் சொந்த யோசனையில் தனியா செய்ங்க.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்களுக்கு 8 ஆவது ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. அஷ்டம சனின்னாலே இம்சை தான். அடிபடறது, வீண்பழி சுமக்கறது, அபராதம் கட்டறது,செயிலுக்கு போறது இப்படி பலப்பல எதிர்கொள்ளனும். இதுல இவர் லாபாதிபதியாவும் இருக்கிறதால அண்ணன்/அக்கா போன்றவர்களுக்கு /போன்றவர்களால் இம்சை ஏற்பட வாய்ப்பிருக்கு.

ஆனால் சனியே உங்களுக்கு விரயாதிபதிங்கறதால மைனஸ் ப்ளஸ் மைனஸ் பிகம்ஸ் ப்ளஸ் அதாங்க கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜயோகம். டீட்டெய்லா சொன்னா செலவு படிப்படியா குறையும். பொருளாதாரம் சீர்ப்படும்.

இவரோட ராகு வந்து சேர்ந்தபிறவு உங்களுக்கு நாள்பட்ட/ எக்ஸ்பயர் ஆன ஃபுட் ஐட்டத்தாலயோ -தூக்கமின்மையாலயோ ஒரு தாட்டி வாந்தி வயிற்று போக்கு நடக்கலாம். அல்லது ஈசி மணி மேல கவர்ச்சியாலயோ -ஷேர் மார்க்கெட் இத்யாதியாலயோ பணம் பறிபோகலாம். பூச்சி பொட்டுகடிச்சு வைக்கலாம்.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இவர் உங்களுக்கு லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதி. மேஷம் உங்களுக்கு 2 ஆமிடம். பொதுவிதிப்படி நல்லதே . இதனால் வருமான உயர்வு, பேச்சுக்கு மதிப்பு,வாக்கு வன்மை ,குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலனை எதிர்ப்பார்க்கலாம். பேச்சுக்கு முக்கியத்துவமுள்ள தொழில் அமையலாம். ஏற்கெனவே உள்ள தொழிலில் உங்கள் வாக்குவன்மையால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல சஞ்சரிப்பாரு இது உங்களுக்கு 3 ஆமிடம். பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால் மனசுல இனம் புரியாத பீதி பயம் எற்படலாம். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். உ.பி/ர.ர க்களால் பிரச்சினை வரலாம்.

குரு 1-11 க்கு அதிபதியா இருக்கிறதால உங்களுக்கு மட்டுமில்லை அண்ணன்,அக்கா (ஆருனா இருந்தா ) ஆகியோருக்கும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம். உங்கள்+ அண்ணன்,அக்கா ஆகியோரின் போக்கு அதிர்ச்சி தருவதா இருக்கும். தோள் பகுதியில் அடிபடுத்தல் ,சுளுக்கு மாதிரியும் நடக்கலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இவை உங்களுக்கு 2- 8 ஆம் இடங்கள் என்பதால்

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
இவர் உங்களுக்கு 2+9 பாவங்களுக்கு அதிபதியா இருக்காரு பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது பணம் /உபி க்கள்/ர.ர க்கள் காரணமா அல்லல் அலைச்சல் ஏற்படும்.

இவர் 6 ல் வரும்போது உ.பி/ரரக்களுடன் முட்டல் மோதல் ஏற்படும்.அவிகளால கடன் ஏற்படலாம். உங்களுக்கும் மெடிக்கல் பில்/லாயர் பில் வரலாம். 10,11 ல வரும்போது மாச/வருட வருமானமும் உசரும் -சொத்து,சேமிப்பு,முதலீடு வகையறாவிலும் நன்மையே கிடைக்கும்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது உங்க மீன ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 7 ஆமிடம் )

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 8 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 9 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 10 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 11 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 12 ஆமிடம்

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு ஜன்ம ராசி

உஸ் ..அப்பாடா .. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்குமான புத்தாண்டு பலன் முற்றியது.

காங்கிரஸ் எம்பியின் கில்மா வீடியோ

அண்ணே வணக்கம்ணே !
ஆஃப்டர் ஆல் எம்.எல்.ஏங்க பலான வீடியோ பார்க்கிறப்ப நாங்க கில்மா வீடியோவுலயே வருவம்லன்னு நினைச்சுட்டாப்ல இருக்கு.

அபிஷேக் சிங்விங்கற பேரை கேள்வி பட்டிருப்பிங்க. இவரு காங்கிரஸ் எம்.பி. ராஜஸ்தான் மானிலத்தை சேர்ந்தவரு. ராஜ்யசபாவுக்கு நாமினேட் ஆகியிருக்காரு.

இவர் தொடர்பானதா சொல்லப்படற பலான வீடியோ ஒன்னு இன்டர்னெட்ல திரிஞ்சுக்கிட்டிருக்காம்.
( பத்திரிக்கை செய்திங்க. ஆதாரம்: ஈ நாடு தெலுங்கு தினசரி) இதை கேள்விப்பட்ட சிங்வி ஒடனே தன் ட்ரைவரை கூப்டு ஒரு அஃபிடவிட்டை ஃபைல் பண்ண வச்சிருக்காரு.

மேற்படி வீடியோவை நெட்ல உலவ விட்டது நாந்தான்.ஆனால் அதுல இருக்கிறது அய்யா இல்லேன்னு அஃபிடவிட்ல ட்ரைவர் சொல்லியிருக்காராம். ஹூம்.. இந்த அப்ரோச் ரெம்ப பிடிச்சிருக்கா.

மேட்டருக்கு வந்துர்ரன். தமிழ் புத்தாண்டுபலன்னு ஆரம்பிச்சுட்டம். மேஷத்துலருந்து துலாம் வரை முடிச்சுட்டம். இன்னைக்கு விருச்சிகம்.

2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : விருச்சிகம்

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு ரத்த சுத்தியில் பிரச்சினை இருக்கும். நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது). லைஃப் ஸ்டைல மாத்திக்கிடலன்னா சிறு நீரகம் தொடர்பான தொல்லையில கொண்டு விடும்.
இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார்.
இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள்,காமாலை போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம்.
இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா.
சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 11 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. இதை லாப சனின்னு சொல்லுவம்.

இந்த சனி உங்களுக்கு 3- 4 க்கு அதிபதியா இருக்கிறதால உ.பி/ர.ர க்களால் லாபம் நடக்கும். பாகப்பிரிவினை இத்யாதி நிலுவையில இருந்தா பைசலாகும். பஸ்ஸா,ரயிலான்னு தயங்கின காலம் போயி பைய தூக்கிக்கிட்டு கிளம்பிக்கிட்டே இருப்பிங்க. அதனால அனுகூலமும் உண்டு. குறிப்பா மேற்கு திசையிலான பயணங்கள் லாபம் தரும்.

சனி 4 க்கும் அதிபதியா இருக்கிறதால தாய், வீடு, வாகனம்,கல்வி விஷயங்களில் வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டு பத்து காசு தாராளமா கையில புழங்கும்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்களுக்கு 12 ஆவது ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி தூக்கமின்மை,பசியின்மை, வீண் விரயம்லாம் ஏற்படும்.

ஆனால் சனி இவிகளுக்கு சுகஸ்தானாதிபதிங்கறதால தாய்,வீடு,வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிச்சுக்கிட்டே போகும். மேற்சொன்ன விஷயங்களில் பிரச்சினை ஏற்பட்டு எதுவும் பைசலாகாது இழுத்துக்கிட்டே போகும்.

சனி இவிகளுக்கு சோதராதிபதிங்கறதால உபி,ர,ரக்கள் விவகாரம் பழைய குருடி கதவை திறடின்னு ஆயிரும். நீங்களே தெண்டம் அழவேண்டி வரும்.இதிலயும் இழுவை அதிகமா இருக்கும்.

ராகு வந்து சேரும் வரை இந்த இழுவை இருக்கும். அதுக்கப்பாறம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான். கை மேல செலவு வந்து – நஷ்டம் வந்து முழி பிதுங்க வைக்கும்.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 6 ஆமிடம். பொதுவிதிப்படி இது நல்லதல்ல.வயிறு,இதயம் பிரச்சினைய கொடுக்கும்.பொன் அடகுக்கடைக்கு போகும். பொருள் . விரயமாகும்.பெரிய தொகையா கடன் வாங்க வேண்டி வரும். பெரியமன்சங்களோட விரோதம் வரும்.

இவர் 2 க்கு அதிபதிங்கற வகையில கடன், வாக்கு வாதம்,குடும்ப கலகம்கண் நோய் உருவாகும்.இவரே பஞ்சமாதிபதியாவும் இருக்கிறதால அவப்பேர் வரும்,மறதி அசிங்கப்பட வைக்கும்.அதிர்ஷ்டத்தை நம்பி எதையாவது செய்தா பல்பு வாங்கும்.குழந்தைங்க மேட்டர்லயும் குண்டக்க மண்டக்கன்னு எதுனா நடக்கும்.டேக் கேர்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா சப்தம குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. பொதுவிதிப்படி ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையில நன்மை நடக்கனும். அவிகளும் முன்னேற்றம் பெறனும்.

சிறப்பு விதிப்படி 2- 5 பாவங்களுக்கான ஆதிபத்யம் குருவுக்கு கிடைக்கிறதால பொருளாதார முன்னேற்றம், வாக்கு வன்மை ,செல்வாக்கு , குடும்ப ஒற்றுமை, நற்பெயர், அதிர்ஷ்டம்லாம் கூடி வரனும். முக்கியமான மாற்றம் என்னடான்னா சதா சர்வ காலம் பிறரை அண்டவிடாமல் துரத்திய – உங்களின் பிறரை குறை சொல்லும் பேச்சு குறையும். டைம் கீப் அப் பண்ண முடியும்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 12-6 ஆம் இடங்கள் என்பதால் ராகு கேதுக்களால் பிரச்சினை இருக்காது. சத்ரு,ரோக ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கும். பிற மொழி,மதம், நாட்டினரால் நன்மைய எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே விரயத்தில் உள்ள சனியோட ராகு சேர்ரதால தூக்கம் ,சாப்பாடு, கில்மா மேட்டர்ல லொள்ளு ஏற்படலாம் . வீண் விரயங்கள் மனசை சஞ்சலப்படுத்தும்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
இவர் உங்களுக்கு லக்னாதிபதியாவும் இருக்காரு .அதனால இவரோட சஞ்சாரம் ரெம்ப முக்கியம்.பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது அல்லல் அலைச்சல், 6 ல் வரும் போது நோய்,கடன்,விவகாரம் வரும். 10 , 11 ல் ஓகே .

உங்க ராசியிலயே வரும்போது உஷ்ண ரோகங்களை கொடுத்தாலும் பூமி சகோதர வகையில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

2ல் வரும்போது பூமி,சகோதரர் வகையில் வருமானம் உசர வழி ஏற்படும். 4 ல் வரும்போது அம்மாவுக்கு பிரச்சினை வந்தாலும் ஸ்தான லாபம் ஏற்படும் . அஞ்சுல வரும்போது பயங்கர கோபம் வந்தாலும் திடீர் அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்கலாம்.

7 ல் வரும்போது மனைவியுடன் ஊடலுக்கு பின்னான கூடல் இன்பம் தரலாம். எட்டு வேஸ்டு. 9 ல வரும்போது சொத்து,சேமிப்பு,முதலீடு மேட்டர்ல கான்சன்ட்ரேட் பண்ணுவிக

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது துலா ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 11 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 12 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்க ஜன்ம ராசி

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 2 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 3 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 4 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 5 ஆமிடம்