அனுபவங்கள் ஆயிரம்

IMG_0490

அண்ணே வணக்கம்ணே !
வாழ்க்கையில இதுக்கு மேல என்ன நடந்துரும்னு நினைக்கிற அளவுக்கு பல்லாயிரம் அவமானங்களை, நஷ்டங்களை பிரிவுகளை பார்த்தவன் தான். (ஆருதான் பார்க்கலைன்னு கேட்டுராதிங்க பாஸ் ! பேசிக்கலா நாம ரெம்ப சென்சிட்டிவ் -மேற்சொன்ன ஒவ்வொன்னும் ஒரு மரணம் கணக்கா என்னை வெருட்டியிருக்கு. ஆனால்முழுக்க நனைஞ்ச பிறவு முக்காடு எதுக்கும்பாய்ங்களே அப்படி ஒரு கட்டத்துல படக்குன்னு தலை கீழா மாறிட்டன்.
பேச்சுலயே செமர்த்தியா செல்ஃப் கோல் போட்டுக்க ஆரம்பிச்சுட்டன். என்னையே ஒரு சோர்ஸ் ஆஃப் ஜோக்கா எக்சிபிட் பண்ண ஆரம்பிச்சுட்டன். கான்வர்சேஷன்ல “திகில் பாண்டியா” இருக்கிற எதிராளியோட கருத்தையும் நாமளே எடுத்து விட ஆரம்பிச்சம். ஒவ்வொரு அவமானத்துக்கு பிறவும் அந்த வகை அவமானத்துக்கு நம்ம மைண்ட் இம்யூன் ஆயிரும்.

இப்படி பல மேட்டருக்கு இம்யூன் ஆயிட்டன், டாலரன்ஸ் பவரை சாஸ்தி பண்ணிக்கிட்டன். கிரகங்களோட திருவிளையாடலை எல்லாம் ஒரு கட்டத்துல ரசிக்கவே ஆரம்பிச்சுட்டன். இன்வால்மென்டோட ரசிச்சு கவனிச்சதால அவற்றின் சூட்சுமம் பிடிபட்டுபோக சொந்த பரிகாரங்களை வடிவமைக்க ஆரம்பிச்சுட்டன்.

பரிகார வடிவமைப்பு ஒரு பக்கம்னா பலன்களின் கணிப்புல நம்ம கிரியேட்டிவிட்டியும் -இன்ட்யூஷனும் செமர்த்தியா கை கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. ஒரு ஜாதகத்துல ரெண்டு எட்டுல ராகு கேது இருந்தா என்ன ஆகும்னு கேட்டா பலரும் பலவித பலனை சொல்வாய்ங்க.

கண்டேன் சீதையை கணக்கா சுருக்குன்னு சொல்லனும்னா “வெட்டி விடும்”னு சொல்லலாம். எதுலருந்து? எல்லாத்துலருந்தும்.

மவளுக்கு பிறந்தவனோட ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கு. டெம்ப்ரரியா நம்ம ராசிக்கும் (சிம்மம்) இருக்கு. எல்லாமே வெட்டிக்கனும். மவளுக்கு “அங்கே” வெட்டு, அவ மவனுக்கு இதயத்துல வெட்டு. நமக்கு மனசுல வெட்டு.

எல்லாம் வெட்டுப்பட வேண்டிய சமயத்துல புதுசா ஒரு கனெக்சன் வாங்கினா என்னாகும்? அதை சொல்றேன். ஐடியா நெட் செட்டர்ல மாசத்துக்கு 6 ஜிபி வச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தம். மலேசிய தமிழர் ஒருத்தரு தன் முக நூல் பக்கத்து செய்திகளை தெலுங்கு பக்கத்துல மொழி பெயத்து போட சொன்னாரு. செரி ப்ரொஃபெஷ்னலா ஒரு வேலை செய்றப்போ -அதுக்கு கூலியும் கிடைக்கிறப்போ கொஞ்சம் கூட செலவழிச்சா தப்பில்லேன்னு வி ஃபை க்கு மாறினேன் (மாசத்துக்கு 20 ஜிபி) .

அவ்ளதான் பல்ப் மாட்டிக்கிச்சு. சும்மாதானே வருதுன்னு ஐ ட்யூன்ஸை அப்டேட் பண்ணேன்.ஐ ஃபோன் ஃபணால்.
மாப்ளையும் மவளும் அவிக மவனுக்கு ஒரு மல்ட்டி பர்ப்பஸ் தொட்டில் ஒன்னு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருந்தாய்ங்க. அது நேத்திக்கு டெலிவரி வந்தது. அந்த மேட்டர்லதான் 2-8 ல் ராகு கேது செம வேலை பார்த்துட்டாய்ங்க.

ஃபணால் ஆயிட்ட ஐ ஃபோனை செட் ரைட் பண்ணிரலாம்னு ஐ ட்யூன் ஓல்ட் வெர்சன் சாஃப்ட்வேர் காப்பி பண்ணிக்கலாமேன்னு மாப்ளையோட ஸ்டுடியோ பக்கம் போனேன். (அந்த நேரத்துல அந்தபக்கம் போனதே கிடையாது). அந்த சமயம் ஸ்டுடியோல மாப்ளை இல்லை. நாம வேலைக்கு வச்ச தடி தாண்டராயன் ஒருத்தன் தான் இருந்தான்.

டீக்கடையில ஒரு கையில லெமன் டீ இன்னொரு கையில சிகரட்டுன்னு ரெம்ப ரிலாக்ஸ்மூட்ல இருக்கன். அந்த செகண்டு ஸ்டுடியோல இருந்து பெரிய பார்சலோட ரெண்டு பேர் இறங்கி போறதை பார்த்தன். (லூஸ்ல விட்டிருக்கலாம் -ராகு ஆரை விட்டாரு?)

போறவிகள கூப்டு கை.எ போட்டு டெலிவரி வாங்கிட்டன். காசு? கல்லா பெட்டி சாவி மாப்ளை வண்டி சாவியில இருக்கும். மவ கிட்ட கேஷ் வச்சிருப்பா. கடையில இதுக்கு மின்ன வேலை பார்த்த பையனை பிக் அப் பண்ணி வீட்டுக்கு அனுப்பி காசு வாங்கியார சொன்னேன்.

காசு குறைவா இருக்குன்னு மவ இண்டியன் பேங்க் ஏடிஎம் கார்ட் கொடுத்தனுப்பினா. கிழவாடி ஆயிட்டம்ல. பொறுப்பு ஓவராயிருச்சு. பத்து ரூவா கொடுத்து பேனா வாங்கி துண்டு காயிதத்துல பின் நெம்பர் கேட்டு எழுதிக்கிட்டன்.

ஐசிஐசிஐ ஏடிஎம் ஹேங் ஆயிருச்சு. கூரியர் காரன் பஜார் தெருவுல ஒரு டெலிவரி இருக்கு.அங்க வந்துருங்கன்னான். செரி கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் கிட்டே இருங்க வந்துர்ரன்னன். பிறவு எஸ்.பி.ஐ “டைம் அவுட்”னிருச்சு. பிறவு பஞ்சாப் நேஷ்னல் பேங்க் தப்பான பின் 3 தாட்டி அடிச்சுட்ட கார்ட் ப்ளாக் ஆயிருச்சுங்குது.

இது என்னடா கிரகச்சாரம் பஜார் போயி சத்யா கிட்டயாச்சும் காசா வாங்கி கொடுத்துரலாம்னு வண்டிய ஸ்டார்ட் பண்றேன். அது “கைப்பழக்க” இளைஞன் கணக்கா மசாலா தீர்ந்து போயி கிடக்கு. நமக்குள்ள இருந்த யூத்து முழுச்சிக்கிட்டாரு.

கொய்யா எவன் பிரச்சினைக்கு எவன் அல்லாடறதுன்னு சினிமா தியேட்டர் சந்துல வண்டிய தள்ளி லாக் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டன். மாப்ள வழக்கமா சாவுக்கு வான்னா திவசத்துக்கு வந்துருவாரு. எக்கேடோ கெட்டு போவட்டும்னு மவ மூல்யமா தகவல் அனுப்பியாச்சு. ஆள விடுங்கடான்னு கழண்டுக்கிட்டன்.

மாப்ள அவரோட நேரத்துக்கு வந்து தொட்டிலை டெலிவரி வாங்கிக்கிட்டு வந்தாரு. பையனை தூக்கி படுக்க வைக்கிறாரு . ஒரு அலறல் போட்டான் பாருங்க. வீட்ல இன்னொரு “அடாசு” சேர்ந்துருச்சு. இந்த “ம”னாவுக்கு இவ்ள நாயடி .

என்னடா இது இதுக்கேவான்னு ரோசிச்சன். அப்பத்தேன் ஞா வந்தது.மவளொட லோன் மேட்டர்ல ஹைபோத்கேஷன் அக்ரிமென்ட் பேப்பர்ல ரூ.100க்கான ஸ்டாம்ப் ஒட்டி கொண்டுவரச்சொல்லி மேனேஜர் சொன்னது ஞா வந்தது.

ஓஹோ ரெண்டு எட்டுல ராகு கேதுவ வச்சுக்கிட்டு லட்ச ரூவா லோன் வாங்கனும்னா -அதுவும் கைக்கு வராப்ல இருந்தா இப்டி ஆயிரம் ரூவாய்க்காக அல்லாடனும் போல.
ஸ்..யப்பா மிடியல..

கிரகங்கள் நின்ற பலன்: 4-10 ல் ராகு கேது

Foto effect 4அண்ணே வணக்கம்ணே !

கிரகங்கள் நின்ற பலன் வரிசையில 4-10 ல் ராகு கேதுவுக்கான பலனை சொல்லோனம்.  நாலுங்கறது தாய்,வீடு,கல்வி ,வாகனம் ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கே ராகு இருந்தால் இந்த மேட்டருக்கு எல்லாம் பாதிப்பு வரும்.ஆனால் இந்த பாதிப்பு தான் யோகம். அது எப்படின்னு கவிதையில சொல்லியிருக்கன்.

புரியாதவுகளுக்கு (கமெண்ட்ல வந்து சொல்லோனம்) மறுபடி ஒரு பதிவு போடறேன். இந்த விசப்பரீட்சை இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான். வலையுலகத்துல மஸ்தா பேருக்கு நம்ம முருகேஸுக்கு தமிழ் போதாதுப்பான்னு நினைக்கிறாய்ங்களாம். அவிக வாயை மூடனும் இல்லை. (இதை தொடர நான் மூடனும் இல்லை -வார்த்தை விளையாட்டு ) அதுக்காவத்தான்.

எச்சரிக்கை:

சிகப்பு நிற வரிகளின் அர்த்தம் விளங்க கொஞ்சம் முக்கனும்.

 

குடியிருந்த கோவில் என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் சால பகர்ந்திட்டார்
ஆயின் தாய் மடி விட்டிறங்கினோரே முன்னேற்ற திசை நோக்கி நகர்ந்திட்டார்
முன்னேற்றம் என்றே நான்  நவில்வது உள்ளார்ந்த வளர்ச்சியாகும்.
அன்னை முலை மறவாதோர் புகை என்றும் மதுவென்றும் சிக்கிவிட நாடி தளர்ச்சியாகும்
அன்னை விட்டவனே பின்னை கன்னிக்கு நகர்தல் வேண்டும்
காதல் பகிர்தல் வேண்டும்.
அன்னைக்கே அடிபணிவேன் -எந்த கன்னிக்கும்  நான் பணியேன் என்றே அவனிருக்க -மனம்
பண்ணை போலாகும்.முடிச்சுகள் மட்டும் தான் அங்கே பயிராகும்
கருப்பை தரும் புகல் ஐயிரண்டு மாதம் தான் உயிர் காக்கும்
பிறப்பை நோக்கி அது நகராக்கால் அதுவே உயிர் தாக்கும்
அன்னை முலைச்சூடு சில காலம் தெம்பு தரும்
அதிலவனே தங்கி விட்டால் ஊறு தரும் வம்பு வரும்.
அவள் கருவிலே இருந்த நாளை இவன் மனம் மறவாதே மருவ தவித்திடுமாம்.
கருவிலே தங்கி விட்டால் காலன் முத்தமன்றி அன்னை மடி கிட்டிடுமோ?
அவள் மடி வேண்டுமென்று அதிலே தங்கி விட்டால் தந்தையவன் தோள் மார்பு  கிட்டுமோ?
அவன் தோளோடு தங்கி விடின் வேற்று  ஆளோடு தொடர்பு எது?
சிற்றடி கொண்டே தான் வீடெங்கும் அளந்திருந்தால் மூவுலகம் அளந்திடவே கால்கள் பலம் பெறும்.
வீடெனக்கு சொர்கம் என்றே சொக்கி நீ நின்றால் மனிதக்காடுனக்கு அச்சம் தரும்
கல்வியில் சிறந்திடவே கல்வி சாலை ஏகிடவே தந்தை தோள் மறந்து இறங்கவேண்டும்.
எண்ணும்-எழுத்தும் கற்றே உன் அறிவு துலங்க வேண்டும்.
கல்விக்கண்ணிருப்பின் உலகம் உனை நோக்கும்
தொழில் கற்றே எழில் பெறின் பசித்தழல் சுட்டிடலாம்.
காடெங்கும்  நீ அலைய வேட்டை தொழில் கற்றே தந்தைக்கு தோள் கொடுப்பின்
வீடெங்கும் ஒளியாகும் வாழ்வில் களி சேரும்.
காலால் நடந்திட்டால் காலம் முந்தும்  என்று வேட்டைக்கு உதவி என்றே வாகனம் ஏறிட்டால் -வாழும்
காலமெலாம் போதாது உலகிதனை அளந்திடவே
வாகனம் இறங்கி வந்தால்  வீடு வரவேற்கும்.
பெற்றவரோடு உந்தன் உற்றவர்  முகம் பார்க்க
பட்டபாடெல்லாம் பாட்டாகும்
தோற்றோடும் காட்டாறும்.
வாழ்க்கையின் அடி நாதம் ஒன்றே தான் அது  நகர்தலாகும்
நகர்வு நலிந்திட்டால் இருப்பு சலிப்பாகும்
வாழ்வின் சலிப்பில் உன் வாழ்வு பதராய் விளிப்புறும்

கிரகங்கள் நின்ற பலன்: 3-9 ல் ராகு கேதுக்கள்

imagesஅண்ணே வணக்கம்ணே !

கிரகங்கள் நின்ற பலன் – ங்கற இந்த தொடரோட இந்த தொடர் பிசினசுக்கு மங்களம் பாடிரலாம்னு இருக்கேன்.கண்ணாலங்கட்டிக்கிட்ட கதையாயிருச்சு. ஆனால் ஒன்னு நம்முது கடகலக்னமாச்சா நம்ம மைண்டு ஆறு மாதிரி. ஆத்துக்கு கரை இருக்கோனம். இல்லின்னா இம்சை தான்.

கரை புரண்டுதான் ஓடுவமே. என்ன போச்சு. இந்த தொடர்ல ராகு -கேதுக்கள் நின்ற பலனை எழுதியாகனும்.

ராகு கேதுக்களை பிரித்து பலன் சொல்வது ரொம்ப கஷ்டம்.ஏன்னா ஒருவருக்கொருவர் 7 ஆம் ராசியில இருக்கிறதால அவரை இவர்,இவரை அவர் பார்க்கிறதால பெரிய இம்சை.

ராகு,கேதுக்கள் 3,6,10,11 மற்றும் 4-12 ல் இருந்தால் தோஷம் இல்லைங்கறது விதி. இந்த விதிப்படி பார்த்தால் 3 ல் ராகு/கேது இருப்பது தோஷமில்லைதான். ஆனால் இவருக்கு சம சப்தகத்துல கேது/ராகு இருந்தால்?

3ங்கறது தைரியஸ்தானம். 9ங்கறது பித்ரு ஸ்தானம். 3 இளைய சகோதரத்தை காட்டும். 9 அப்பாவ காட்டும். இந்த 3 ஆமிடத்தில் சர்ப்பகிரகம் இருந்தால் இளைய சகோதரத்துக்கு நல்லதில்லை. ஏதோ ஒருவகையில் அவர்கள் ஜாதகரை விட ஒரு படி தாழ்ந்தே இருப்பார்கள். அல்லது ஜாதகரே கூட கடைசி சந்தானமா இருக்கலாம்.

அம்மாவுக்கு தலைப்பிள்ளை மேல ஆசை சாஸ்தியாம். ஏன்னா மலடிங்கற அபவாதம் வராம காத்த பிள்ளையாச்சே. இதே போல அப்பாவுக்கு கடேசி பிள்ளை மேல ஆசையாம். ஏன்னா அவரு கடேசியா விதைச்சது இல்லையா?

நம்ம கேசை எடுத்திங்கனா நாம 3 ஆவது. சின்ன அண்ணனுக்கும் நமக்கு ஏறக்குறைய 10 வருசம் இடைவெளி. அதனாலயோ என்னமோ அப்பாவுக்கு நம்ம மேல ஒரு இது.

(மைண்ட் வாய்ஸ் : முருகேசா ..நம்முது கடகலக்னம்னு ஆரம்பிக்கிறதை அப்ஜெக்ட் பண்ணி கமெண்ட் வந்தாச்சு. இன்னம் இதை விடல. இதே போல சொந்த கதை வேணாம்னும் கமெண்ட் வந்தாச்சு.ஆனாலும் நிறுத்தல. நீ எல்லாம் .. சான்ஸே இல்லை )

தலைப்புள்ள,கடேசி புள்ள செனேரியோல பாருங்க. 3 ல் ராகு/கேது இருந்தா ஜாதகர் கடைசி பிள்ளையா இருக்க வாய்ப்பிருக்கு. /கடைசி ஆண் வாரிசா இருக்கலாம்/ ஒரு வேளை தப்பி தவறி இவருக்கு அடுத்து ஆருனா பிறந்திருந்தாலும் அவிக ஏதோ ஒரு வகையில இன்ஃபிரியரா இருப்பாய்ங்க.

இப்ப என்ன ஆகும்? ஆட்டோமெட்டிக்கா அப்பா செல்லமா இருக்க வாய்ப்பு ஏற்படுது. அப்பா செல்லத்துனால+ தைரிய ஸ்தானத்துல உள்ள ராகு/கேதுவால ஜாதகர் ரெம்ப அக்ரெசிவா/அட்வெஞ்சரசா இருக்க வாய்ப்பிருக்கு. இருக்கா இல்லையா?

3ங்கறது பயணங்கள காட்டுமிடம். இங்கே ராகு/ கேதுன்னா ரொட்டீனுக்கு எதிரான பயணம். சொல்லிட்டு போறது ரொட்டீன்.சொல்லாம போறது ? டிக்கெட் வாங்கி போறது ரொட்டீன். டிக்கெட்டில்லாம போறது ? ப்ளான் பண்ணி போறது ரொட்டீன். திடீர்னு கிளம்பிர்ரது?

இந்த மாதிரி பயணங்கள் வெற்றியடைந்தால் ஜாதகருடைய மனோ தைரியம் மேலும் கூடும். தப்பித்தவறி எங்கயாச்சும் வாய விட்டா -எவனாச்சும் செவிட்ல அறைஞ்சா சவுண்ட் பாக்ஸ் அவுட்டு. 3 ஆமிடம் காதுகளை காட்டும் இடம். ராகு/கேது பாபகிரகங்கள். லேசான செவிட்டு தன்மை ஏற்படலாம்.

நாம ரொட்டீனுக்கு எதிர்பதமான பயணங்களை மெற்கொள்ளும் போது மத வழக்கம்/குலப்பழக்கம்லாம் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்க முடியாது இல்லையா? அதனால ஜாதகருக்கு எம்மதமும் சம்மதம்ங்கற மன நிலை ஏற்படலாம். சாதி,மதம் கடந்த நட்புகள் ஏற்படலாம்.

3ஆமிடம் சிறு பயணங்களை காட்டும் இடம். இதுல சக்ஸஸ் ஆனால் ஜாதகர் நீண்ட பயணங்களுக்கும் திட்டமிடுவாரா இல்லையா?

அதே சமயம் பையன் இப்படி சுத்தி வர்ரதை பார்த்தா அப்பாவுக்கு எப்படி இருக்கும்? அவரு திகில் பாண்டி கணக்கா நடுங்கி கிட்டே இருக்க வேண்டியதுதான்.

லைஃப்ல எப்பயாச்சும் ரிஸ்க் எடுத்தா பரவால்ல. எப்பவும் ரிஸ்க் எடுத்தா என்ன ஆகும்? அப்பா விரோதம், அப்பாவின் ஒத்துழையாமை. அப்பாவுக்கு பிறகு அவர் வழி சொத்து ,ஜாதகரோட முதலீடு,சேமிப்பு எல்லாத்தையும் ஜாதகர் தன் தகிரியம் காரணமா கையில எடுத்து விளையாடுவாரு.

பயணங்கள்ள ஒரு குன்ஸ் இருக்கு. த்ரில்லுக்காக ,செம தில்லா, கையில பணத்தோட போனா செலவழிச்சுட்டு தான் வரனும். இதுவே பொருள் தேட போனா கையில பணத்தோட வரலாம்.

ஜாதகர் ஒரு கட்டம் வரை சிறு பயணங்கள்,பிறகு நெடும்பயணங்கள் செய்து செய்து எல்லாத்தையும் இழந்த பிறகு பொருள் தேட பயணம் செய்வாரு.

கடந்த கால அனுபவங்கள் கை கொடுக்க, கடந்த பயணங்களிலான அறிமுகங்கள் தோள் கொடுக்க ஜாதி,மதம் கடந்த சர்க்கிள் ஏற்பட்டு பைசா பண்ண ஆரம்பிச்சுருவாரு. கிடைச்ச பைசாவையும் தில்லா முதலீடு பண்ணி ஒரு சூதாட்டமே ஆடுவாரு.

அந்த சமயம் கோசாரத்துலயும் ராகு-கேது கொஞ்சம் அனுகூலமா இருந்து -ராகு /கேது தசையோ அல்லது அவர்கள் நின்ற ராசியாதிபதி தசையோ நடந்தா ஒரு ஜாக்பாட்டே கியாரண்டி.

இதுல உள்ள லாஜிக் என்னன்னா ராகு-கேது உலக வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளை ,விருப்பங்களை கொடுப்பார். இதை உலகம் அவ்ள சீக்கிரம் அங்கீகரிக்காது.

விவேகானந்தர் சொன்னாப்ல ஒரே மேட்டரை 14 வருசம் சொன்னா ஒர்க் அவுட் ஆயிரும். இப்பம் 3-9 ல ராகு கேது இருந்தா என்ன நடக்கும்னு ஒரு பிக்சர் வந்ததா?

தூள் பண்ணுங்க. அடுத்த பதிவுல 4-10 காம்பினேஷனை பார்க்கலாம்.

 

கிரகங்கள் நின்ற பலன்: ராகு-கேது (தொடர்ச்சி 2)

ballon burst

அண்ணே வணக்கம்ணே !
அக்கா மாருங்க என்னங்க நாங்களும் தான் உங்க எழுத்தை படிக்கிறோம் ஆனால் எங்கள விளிக்கிறதே இல்லைன்னு கேட்கறாய்ங்க. ( முக நூல் உள்டப்பி இந்த மாதிரி வில்லங்கங்களுக்குத்தான் போல) தொழிற்களம் சைட்ல பணம் பணம் பணம் எழுதிக்கிட்டிருந்தப்ப மட்டும் கூடவே அக்கா வணக்கம்க்கானு ஆரம்பிச்சம். ஏனோ அது கொஞ்சம் செயற்கையாவே இருந்தது.அதனாலதான் விட்டுட்டம்.

முக நூல்ல 11% தாய்க்குலம் தான் நம்ம எழுத்துக்களை ஆதரிக்கிறதா ஒரு டேட்டா கைவசம் இருக்கு. (இதுல ஃபேக் ஐடிங்க எத்தனையோ)ஆனால் நமக்கு நிறைய ஜாதகங்கள் வர்ரது மட்டும் இந்த 11% கிட்டே இருந்துதான்.

நமக்கென்ன பயம்னா நாம ஏதோ பழி பாவத்துக்கு பயந்து மாங்கு மாங்குன்னு பலன் மட்டும் சொல்ட்டு மறந்துர்ரம். இந்த சனம் அப்படியே இன்ன பிற சாமியார் ரேஞ்சு பார்ட்டிங்க கிட்டேயோ அல்லது ஜொள்ளு பார்ட்டிங்க பக்கமோ ஒதுங்கினா என்னாகும்ங்கறதுதான். நூல் விடறதுலயே அங்கிள் மார் சனத்தொகை தான் சாஸ்தியாம்.அராத்து நூல் விடற அங்கிள் மார்கிட்டே நியூட் போட்டோ கேளுங்கனு ஒரு ஐடியா கொடுத்திருந்தாரு.

நம்மை பொருத்தவரை நமக்கு அந்த அளவு ட்ரீட்மென்ட்லாம் தேவையே இல்லை. நாம அரண்டு கிடக்கோம். பொம்பளன்னா அது நம்ம பொஞ்சாதி மாதிரி இன்னொரு ஜந்துன்னு ஒரு ஃபோபியா வந்துருச்சு.அய்ய அய்ய.. வேணான்டா சாமீ ..( நினைச்சு பார்க்கிறத சொன்னேன்)

சரி சரி மேட்டருக்கு வரேன். கிரகங்கள் நின்ற பலன்ல ராகு கேதுக்களை பத்தி சொல்லனும். ஞா இருக்கு. இதுல ராகு கேதுவை பத்தி தனித்தனியாவும் சொல்லவேண்டியிருக்கு. பிரிச்சும் சொல்லவேண்டியிருக்கு.
ஜாதக சக்கரத்துல உசுருள்ள இடங்கள்னா தெரியுமா? 1-3-4-5-6-7-9-11. இதெல்லாம் உசுருள்ள இடங்கள்.
1-நீங்க
3-இளைய சகோதரம்
4-தாய்
5-குழந்தைங்க
6-தாய்மாமன்
7-மனைவி
9- அப்பா
11-மூத்த சகோதரம்

இந்த ராகு கேதுக்கள் மேற்கண்ட உசுருள்ள இடங்கள்ள இருந்தா அவிகள என்ன பண்ணுவாய்ங்க?

ராகு இருந்தா உருக்குவார். இல்லை ஊளை சதையாக்கிருவாரு.எல்லாமே மூடு மந்திரமா இருக்கும்.பகல்ல தூங்கி வழிவாய்ங்க. ராத்திரில செம ஷார்ப் ஆயிருவாய்ங்க (பலான அர்த்தம்லாம் இல்லை) . மேலை நாட்டு பண்பாடு,பழக்க வழக்கங்களை ஆதரிப்பாய்ங்க. எந்த வேலையா இருந்தாலும் ஊரு நாட்ல எவனும் செய்யாத மாடல்ல செய்ய நினைப்பாய்ங்க. ராகு பலம் இருந்தா கொஞ்ச காலம் சமூகத்தால அவதிப்பட்டாலும் அதே சமூகத்தால அங்கீகரிக்க படுவாய்ங்க.லைஃபே ஒரு கேம்ப்ளிங் மாதிரி இருக்கும். நைட் ஷிஃப்ட் வேலையில இருக்கலாம்.வெளி நாட்ல இருக்கலாம். ஈசி மணி மேல கவர்ச்சி .சட்டவிரோத செயல்கள்.சதி செய்யலாம்.சதிக்கு பலியாகலாம்.(இன்னம் மஸ்தா கீது எல்லாத்தையும் அவுத்து உடறேன். வெய்ட்)

மேற்படி உசுருள்ள இடங்கள்ள கேது இருந்தா சம்பந்தப்பட்டவரை சாமியார்/சாமியாரிணி ஆக்கிருவாரு. நம்ம ஜாதகத்துல நாலாமிடத்துல இருந்தாரு. நாம டீன் ஏஜ்ல என்டர் ஆகற வரைக்கும் அப்பா ஜில்லா ஜில்லாவா ட்ரான்ஸ்ஃபர். அம்மா நாலு பிள்ளைங்க,ஒரு மாமியாரோட அல்லாடி அல்லாடி ஜென் நிலைக்கு வந்துட்டாய்ங்க.

இந்த ராகு கேது ரெண்டு பேருமே உசுருள்ள இடத்துல இருந்தா சம்பந்தப்பட்டவுகளுக்கு வைத்திய சாஸ்திரத்துக்கு பிடிபடாத நோய் குறிகளையும், உபாதைகளையும் கொடுப்பாய்ங்க.

நம்மாளுங்கள்ள நிறைய பேருக்கு உபகதை இருந்தாதான் பதிவே ருசிக்குது. சரி 1-7 இடங்கள்ள ராகு கேது இருந்தா அப்டி என்னதான் நடந்துருங்கறதுக்கு ஒரு கேஸ் ஸ்டடி.( இதே தான் எல்லாருக்கும் நடக்கும்னு சட்டமில்லிங்கோ)

பார்ட்டியோட பாடி அப்படியே உருவி விட்ட மாதிரி இருக்கும். ஆள் என்னமோ ஒல்லியோ ஒல்லிதான் சாப்பிட உட்கார்ந்த செம கில்லி. அஞ்சு தடவையும் சாம்பார் சோத்தை செம கட்டு கட்டுவாப்ல.லாலா பயக்கம் உண்டு.

எப்பமோ கேபிள் டிவில பார்ட்னர், எப்பமோ ஒரு டீக்கடை அதை விட்டா வேலை வெட்டி கிடையாது. பேச்சு மட்டும் ஏழுதலை நாகம் படம் எடுத்து ஆடினாப்ல பிரம்மாண்டமா இருக்கும். பேச்சுல கோடி,லட்சம் தவிர வேற ஃபிகரே வராது.

இவன் ஒரு குட்டிய தேத்தியிருக்கான். அவளை “போட” ஒரு இடம் வேணமே. தன் ஃப்ரெண்டோட வீட்டையே உபயோகிச்சிருக்கான். பார்ட்டிக்கிட்ட சமாசாரம் இல்லையா என்ன தெரியல. அந்த குட்டி அந்த ஃப்ரண்டையே தேத்திட்டா.கண்ணாலமும் கட்டிக்கிட்டா. பிறவு டைவர்ஸும் ஆயிருச்சு. பிறவு வேற ஆளோட கோர்த்துக்கிட்டா .

இவளுக்கும் லேட்டஸ்ட் சேர்க்கைக்கும் பிறந்த கொளந்தைகளும் – இவளுக்கும் மாஜி கணவனுக்கும் பிறந்த கொளந்தைகளும் ஒரே ஸ்கூல்ல படிக்கிறாய்ங்க. தன் கொளந்தைகளை கூட்டி விட/கூட்டிக்கிட்டு வர போற சமயம் மாஜி கணவனுக்கு பிறந்த கொளந்தைகளை அவள் டார்ச்சர் பண்ணுவா போல. இந்த மேட்டரு மாஜி கணவர் மூலமா நம்மாளுக்கு தெரியவர களத்துல குதிச்சாரு.

என்ன ஆச்சோ ஏதாச்சோ சீன் ரிவர்ஸ் ஆகி பப்ளிக் எல்லாம் சேர்ந்து குமுக்கிட்டாய்ங்க. இதுல எவனோ போலீஸுக்கு ஃபோன் போட்டுர ராத்திரி வரை ராட்டினம்.சரிங்ணா அடுத்த பதிவுல 1 டு 12 ராகு/கேது நின்ற பலனை பார்த்துட்டு குருவுக்கு போயிரலாம். உடுங்க ஜூட்டு .

(நிறைய குறிப்பெல்லாம் எடுத்து வச்சிருக்கன்.இனி வரும் அத்யாயங்கள் ஆதியோடந்தமா போகும். வெய்ட் அண்ட் சீ )

நச் பரிகாரம் : ராகு

null

அண்ணே வணக்கம்ணே !
கிரக தோசங்களுக்கு லாஜிக்கல் ரெமிடீஸை தொடர் பதிவா (ஹி ஹி மீள் பதிவு) கொடுத்துக்கிட்டிருக்கம். இதுல இன்னைக்கு ராகுவோட டர்ன்.

செவ் சரியில்லினா தோச ஜாதகம்னு தனிய எடுத்து வச்சு – அதுக்கு தோச ஜாதகத்தையே கட்டி வைக்கிறாய்ங்க. அதே போல ராகு /கேது சரியில்லினாலும் அதை தோச ஜாதகம்னு சொல்லிர்ராய்ங்க. ஏன்னா செவ் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை கசாப்பு போட்டு கண்ட நோய்களுக்கும் இலக்காக்கி -பாடியை காட்பாடியாக்கி -கோபத்தை கொடுத்து தனக்கும் -பிறருக்கும் தீங்கு விளைவிக்க செய்துர்ராரோ .. அதே ரேஞ்சுல ராகுவும் வேலை கொடுத்துர்ராரு.

மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது. இந்த சக்தியை தர்ரது ராகுதான்.

ஒரு வேளை உலகமே திருந்தி இயற்கை விவசாயம்,இயற்கை வழியில் ஜீவனம்னு மாறித்தொலைச்சாலும் மன்ச பாடியில விசத்துக்கு குறைவிருக்காது. எப்டி எப்டினு கேப்பிக சொல்றேன்.

ஹ்யூமன் பாடியில அசிமிலேஷன்,எலிமினேஷன்ங்கற ரெண்டு ப்ராசஸ் கரீட்டா நடக்கனும். அசிமிலேஷன்னா புவ்வா சாப்பிடறது,லாலா குடிக்கிறது, காத்தை இழுக்கிறது -எலிமினேஷனுன்னா கக்கா போறது ,உச்சா போறது ,கார்பண்டை ஆக்சைடை வெளிய தள்றது.

இது பர்ஃபெக்டா நடக்கிறதுல்ல கொஞ்சம் போல மஷ்டு பாடியிலயே தங்கிருது. இது விசமா மாறுது. இந்த விசத்தை மேனேஜ் பண்ற கப்பாசிட்டியை கொடுக்கிறதும் ராகுதான்..

ராகு சரியில்லின்னா வாந்தி,பேதி,சொறி,சிரங்கு,படை வழியா மேற்படி மஷ்டு வெளியதள்ளப்படும். பாடிக்கு கோ ஆப்பரேட் பண்ணாம ஒடனெ அல்லாப்பத்தி மெடிசினை உள்ளாற தள்ளினா மெடிக்கல் ரியாக்சன் கூட நடக்கலாம். அதுவுமில்லாம மேற்படி விசத்தை வெளித்தள்ளும் முயற்சி தள்ளிப்போடப்பட்டுரும். மறுபடி என்னைக்கோ ஒரு நாள் புரட்சி வெடிக்கும்..

சரிங்ணா.. ராகுவே பேசறாரு .. கேளுங்க.

ராகு பேசுகிறேன்

சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன்.

இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன?

கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன்.

நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும்.

சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்!

நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவார்கள்.

இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன.

பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? ‘ஆம்’ என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.

நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.

பரிகாரங்கள் :

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.

2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற அன்னிய மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.

3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.

4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.

5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்.

6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.

7. பரமபதம் ஆடுங்கள்.

8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.

9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.

10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள்.

11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

12.வெளியிடத்தில் வாங்கிய உணவை சாப்பிடறதோ -தண்ணி குடிக்கிறதோ வேண்டாம். வீட்லருந்து கொண்டு போயிருங்க.

13.உங்க ஜட்ஜ்மென்டு எப்பயும் தப்பாத்தான் போகும். அதனால பெரியவுக பேச்சை கேட்டு நடந்துக்கங்க.

14.ஒரே நாள்ள பணக்காரராறதுல்லாம் சினிமாலதான் சாத்தியம். ஆனால் ஒரே நாள்ள பிச்சை எடுக்கிற ஸ்டேஜுக்கு வர்ரது வாழ்க்கையிலயும் சாத்தியம் அதனால ஈஸி மணிக்காக அல்லாடறதெல்லாம் வேணா..

ராகு மட்டும் இல்லை கேது மட்டும் சரியில்லின்னாலும் கீழ்காணும் பரிகாரங்களை செய்துக்கங்க:

காதல் , கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

ஒரு நானோ கார் இலவசம்

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கும் ஆடியோ பாடம் தொடருது. நேத்து ராகு கேதுக்கள் பற்றிய முன்னோட்டம் + துவாதச பாவங்களில் ராகு நின்ற பலனை பார்த்தோம். இன்னைக்கும் ராகு -கேது பற்றிய முன்னோட்டம் தொடருது ( நேத்து மிஸ் பண்ண டேட்டா) .

இத்துடன் துவாதச பாவங்களில் கேது நின்ற பலனையும் சொல்லியிருக்கேன். ஆடியோவா டெக்ஸ்டான்னு ஒரு வாக்கு பதிவு ஆரம்பமாகியிருக்கு.Read More

சர்ப்பதோஷம் : விளக்கங்கள்

வாக்காள பெருமக்களேனு விளிச்சு பிரச்சாரம் செய்யனும் போல இருக்கு. ஆனாலும் அ நி யாயம் ஆடியோ ஃபார்மெட்டுக்கு ரெண்டே ஓட்டுதானா?

ஜானகிராமன் மட்டும் வாக்காளர் பட்டியல் ஒன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு Read More