உங்களுக்கும் ராஜயோகம் : 21

dad 50

அண்ணே வணக்கம்ணே !
நான் என்ன செய்யனும்னு என்னை விட “ஆத்தாவுக்கு” பர்ஃபெக்டா தெரியும். நான் என்ன செய்துக்கிட்டிருக்கேங்கறது ஒரு குன்ஸா புரிஞ்சாலும் நாமளும் ஆஃப்டர் ஆல் மன்சன் தானே! இந்த தொடரை டீல்ல விட்டுட்டு குரு பெயர்ச்சி அது இதுன்னு டைவர்ட் ஆகி ஏறக்குறைய ஒரு மாசம் ஆயிருச்சா..

சனம் யாரும் என்ன பாஸ் ..இந்த தொடரையும் ஊத்தி மூடிட்டிங்களானு கேட்கவே இல்லை. படக்குனு ஒரு டவுட் வந்திருச்சு. ஒரு வேளை ராஜயோகம்ங்கறதெல்லாம் சாமானிய சனத்துக்கு எட்டாத மேட்டரா? வெட்டியா எழுதிக்கிட்டிருக்கமானு சந்தேகம் வந்துருச்சு. எதுக்குனா நல்லது க்ளியர் பண்ணிக்குவம்னு ஒரு பதிவே போட்டு கருத்து கேட்டன்.

பத்து பேராச்சும் கருத்து சொன்னாதான் தொடர் தொடரும்னு பயம் கூட காட்டினேன். ஒன்னம் பேரல.ஆனால் நண்பர் சக்தி வேல் நான் ஒருத்தன் சொன்னா அந்த சக்தியும் -வேலவனும் ஒரே குரல்ல சொன்னாப்லனு ஒரு கமெண்ட் போட்டிருந்தாரு . சுஜாதா ஒக்காபிலரியில சொன்னா “சுஸ்தாயிட்டன்” (ஸ்வஸ்த் =ஆரோக்கியம் )

கடந்த சாப்டர்ல ராகு எப்படியெல்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு சொல்லியாச்சு. இந்த சாப்டர்ல ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருந்தா ராஜயோகம் பெற என்ன செய்யனும்?னு சொல்லோனம்.

நான் எல்லாம் ஆளை பார்த்ததுமே “பார்ட்டி ஜாதகத்துல ராகு பல்பு போல “னு கரெக்டா கெஸ் பண்ணிருவன். விவரம் தெரிஞ்சவிக ஜாதகசக்கரத்துல ராகு எங்க இருக்காருன்னு பார்த்து டிசைட் பண்ணிரலாம்.

இது ரெண்டுமே கைவராதவிக என்ன செய்ய?

1.உங்க நிறத்தை பாருங்க. கருப்புன்னதும் பயந்துக்காதிங்க. கருப்புல எத்தனையோ விதம் இருக்கு. சூட்சுமமா பார்த்தா கொஞ்சம் நீலம் கலந்தாப்ல தெரியும்.
2.உங்க ஃபிசிக்கை பாருங்க. ஒன்னு வயசுக்கேத்த வளர்ச்சி இருக்காது .அல்லது தாறுமாறா சதை போட்டிருப்பிங்க
3.அன் வாரன்டட் மோஷன்ஸ்/ வாமிட்டிங் சென்சேஷன்
4.பிறமதத்தவர் மேல இனம் புரியாத கடுப்பு/துவேஷம்
5.ஈசிமணி மேல கவர்ச்சி – சட்ட விரோதமான வழியில சம்பாதிக்கிறவன்லாம் நல்லாத்தானே இருக்காங்கற ஃபீல் -நாமளும் செய்தா என்ன என்ற எண்ணம்

6.சினிமா மேல ஒரு கவர்ச்சி /போதை / சினிமாவுக்காக அதிகம் செலவழிக்கிறது /அதீத முக்கியத்துவம் தர்ரது .
7.பிக் பாக்கெட் /செயின் அறுப்பு /கதவை உடைத்து கொள்ளை இத்யாதி சம்பவத்துல விக்டிமா இருக்கிறது
8.நல்லா போயிட்டிருக்கும். திடீர்னு ஒரு அவமானம் /அவப்பெயர் ,விதவை பெண் ஒருவரால் பல்பு
9.ஓரப்பார்வை பார்க்கிறவிக ,பூனைக்கண் கொண்டவிகளால நஷ்டம்/கஷ்டம்
10.லைஃப் பார்ட்னரோட செயல்பாடுகள் சந்தேகாஸ்பதமா தோன்றது – ஒரு நாளில்லை ஒரு நாள் கையும் களவுமா பிடிக்கனுங்கற எண்ணம்
11.பாம்பு /பூச்சி பொட்டு கடிச்சுர்ரது / ஃபுட் பாய்சன்/மெடிக்கல் ரியாக்சன்

மேற்படி 11 விஷயத்துல பாதி சூட் ஆனாலும் உங்க ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருக்காருனு அருத்தம்.

ஆனாலும் இந்த சமயம் பார்த்து எலீக்சன் வருது .கு.பட்சம் கவுன்சிலரா நின்னே ஆகனும்னா என்ன பண்ணனும்?

1.நோட்டிஃபிகேஷன் வரதுக்கு மிந்தியே அன்னிய மதத்தார் வாழும் பகுதிகளை விசிட் அடிச்சு உங்களால முடிஞ்ச அடிப்படை வசதிய செய்து கொடுங்க.
2.மதராசா ,மெஷினரிகள் நடத்தும் பள்ளிக்கு உங்களால முடிஞ்ச நன் கொடைய கொடுங்க.
3.இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை.
4.எலீக்சன் முடிஞ்சு ரிசல்ட் வர்ர வரைக்கும் லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது.
5.இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.எலீக்சனுக்கு மிந்தின ராத்திரி ஆப்பரேஷன்ல டைரக்டா இன்வால்வ் ஆகாதிங்க.

6.சொந்த முதலீட்டில் / நீங்களே டெசிஷன் மேக்கர் என்ற நிலை இருந்தால் மேற்சொன்ன தொழில்கள் கூடவே கூடாது. இதுவே நீங்கள் ஒரு ஊழியர் மட்டுமே என்றால் பரவாயில்லை.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
7.பையில எப்பவும் க்ளூக்கோஸ்/ எலக்ட் ரால் பாக்கெட்லாம் வச்சுக்கோங்க. டீ ஹைடரேஷன் ஆயிராம பேலன்ஸ் பண்ணிக்கிட்டே இருங்க.
8.மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. சொந்த ட்யாக்னைஸ்/ சொந்த ப்ரிஸ்கிரிப்ஷன் வேண்டாம். ரியாக்ஷன் நடக்கலாம்.
9.வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும். குடி நீர் கூட கம்பெனி மாத்தாதிங்க.
10.கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு/முக்கியமா சட்ட விரோத வியாபாரம் செய்றவிக சங்காத்தம் வேணாம் .ஷேர் மார்க்கெட் வேண்டவே வேண்டாம்)

11. கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.
12.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
13.உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் ,உலக மகா சதிகள் போன்ற புத்தகங்கள் படித்தல்.
14.மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்.
15.தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல் இவை நல்ல பரிகாரங்களாகும்.

16,மேலும் தனித்திருக்கும் போது அறையில் குறைவான வெளிச்சத்தை மெயின்டெய்ன் பண்ணலாம். நைட் ஷிஃப்ட் ட்யூட்டி வந்தா தாராளமா ஏத்துக்கலாம்.
17.தினசரி ஒரு மணி நேரம்-வாரம் ஒரு தினம் காவி உடை அணியவும் . இயன்றவரை சன்யாசி போலவே வாழ வேண்டும். எளிமையிலும் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவும்.
18.பிரச்சார வாகனத்து டேஷ் போர்ட்ல மும்மதங்களின் அடையாளங்களையும் வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:
ராகு பல்பு வாங்கியதன் லட்சணங்கள் இல்லாதவர்களும் இந்த பரிகாரங்களை பின்பற்றலாம். ராகுவின் பலம் சேமிக்கப்பட்டு ஓட்டுகள் குவியும்.

dad

உங்களுக்கும் ராஜயோகம் :20

Exif_JPEG_420
Exif_JPEG_420

அண்ணே வணக்கம்ணே !

உங்களுக்கும் ராஜயோகம்ங்கற தலைப்புல ஒவ்வொரு கிரகமும் எப்படி ராஜயோகத்தை தரக்கூடும் ஒரு வேளை குறிப்பிட்ட கிரகம் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா என்ன மாதிரி பரிகாரங்களை செய்துக்கலாம்னு எழுதிக்கிட்டு வரன்.

தேர்தல் காலத்துலயே ஆரம்பிச்சு தேர்தல் முடிவு வரதுக்குள்ள பைசல் பண்ணிரனும்னு நினைச்சுதான் ஆரம்பிச்சம். ஏனோ இப்படி இழுக்குது .
ராகு எப்படிங்காணும் ராஜயோகத்தை தருவார்னு சனாதனிகள் பொங்கி எழலாம். அவியள திருவண்ணாமலை போலீஸ் வெளுக்கட்டும் .
நாம மேட்டருக்கு போயிரலாம். ஒவ்வொரு கிரகத்துக்கும் சில காரகங்கள் உண்டல்லவா? அந்த காரகங்கள் வழியே ராஜயோகம் வர்ரதை பார்த்துக்கிட்டுதானே இருக்கம்.

1.சினிமா
அந்த நாள்ள ரீகன், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் முதல் இன்றைய ஜெ வரை . எதிர்காலத்துல இந்த சீனா மூனாவும் லிஸ்டுல வரலாம். ஏன் இந்திய பிரதமராவே கூட ஆகலாம்.ஆரு கண்டா?

2.லாட்டரி
லாட்டரி டிக்கெட் வித்த மார்ட்டின் என்னவோ இளைஞன் படத்துக்கு கலைஞரை புக் பண்ற அளவுக்கு தான் வளர்ந்தாரு . இங்கே மேட்டர் லாட்டரி விற்கிறதில்லை.லாட்டரி போல. அரசியல் வாய்ப்பு லாட்டரி போல வர்ரது. வந்துர்ரது பெருசுல்ல. அதை தக்க வச்சுக்கிறதுதான் ராஜயோகம்.
என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த புதுசுல எத்தனயோ டாக்டர்/லாயர்/டாக்ஸி ஓனருக்கு எல்லாம் வாய்ப்பை அள்ளி விட்டாப்ல ( அவிக ஜாதகத்துல ராகு செமயா இருந்தாப்ல இருக்கு )இன்றைய அதிமுகவுலன்னா சொல்லவே தேவையில்ல . ராகு நல்லாருந்தா தான் வாய்ப்பே.
எங்க பக்கத்துல சந்திரபாபுவோட மவன் ஜல்லியடிச்சுக்கிட்டிருக்காப்ல .அவிக அப்பா அந்த பதவில இருக்கிறவரை கதை பண்ணலாம். பிறவு?

3.சாராயம்:
இந்த ஃபீல்டுல இருந்து அரசியலுக்கு வந்த கேரக்டர் தொகுதிக்கு ஒன்னு நிச்சயமா உண்டு . ஆனால் ஊரை சொன்னாலும் பேரை சொல்லப்படாதில்லையா? (ஆட்டோ வந்துரும் பாஸ்)

4.ரகசியம்:
ராகுன்னாலே ரகசியம் தான். அன்றைய இந்திரா முதல் இன்றைய சோனியா வரை சோப்ளாங்கிகளை கூட வைத்துக்கொண்டிருக்க காரணம் அந்த சோ’ங்களுக்கு இவிக ரகசியங்கள் தெரியும். இன்னும் ஒரு படி மேல போனா ரகசிய உறவுகளே கூட ராஜயோகத்தை தந்துர்ரதா பேசிக்கிடறாய்ங்க. உ.ம் கன்ஷிராம் -மாயாவதி

5.மாஃபியா:
இன்னைய தேதிக்கு கூட மாஃபியா தொடர்புள்ள எம்பிக்கள் கு.பட்சம் அரை சதமாவது இருப்பாய்ங்க. இல்லேனு சொல்ல முடியுமா?

6.சூதாட்டம்:
அந்த பக்கம் எப்படியோ தெரியாது .ஆந்திராவுல சீட்டாட்ட க்ளப் நடத்தியே எம்.பி,எம்.எல்.ஏ ஆகி பழைய கெத்துக்காவ இன்னைக்கும் தொடர்ராய்ங்க.

7.கள்ளக்கையெழுத்து:
க.கை மட்டுமில்லை ,குரலை மாத்தி பேசறது ?இதுவும் ராகு காரகம் தான். உதாரணங்கள் டக்குனு ஸ்பார்க் ஆகல. உங்களுக்கு ஸ்பார்க் ஆனா கமெண்ட்ல சொல்லுங்க.

8.ஷேர் மார்க்கெட் :
அரசியல் வாதிகளோட பணம் ஷேர் மார்க்கெட்ல புழங்கும் .தேர்தல் சமயம் அவிய கைக்கு போய் சேரும்.இதெல்லாம் தெரிஞ்ச கதை தானே.
9.வரிஏய்ப்பு /கடனை எகிறடிக்கிறது

10.கள்ளத்தோனி :
பாவம்..வைகோ, சீமான் ஜாதகத்துல எல்லாம் ராகு சரியில்லை போல .இல்லின்னா முதல்வராகி மக்களை டர்ராக்கியிருப்பாய்ங்க.
ராகு காரகம்னு இன்னம் என்னெல்லாம் இருக்கோ எல்லாமே ராஜயோகத்துக்கு வழி வகுக்குதுங்கோ. இயற்கைக்கு புறம்பானது ,சமூக வழக்கங்களுக்கு புறம்பானது எல்லாமே ராகு காரகம் தான்.

மக்களை ஒரு இடத்துல கூட்டி பேசிட்டு போறது ரொட்டீன். இது குரு காரகம் . மக்கள் இருக்கிற இடத்துக்கே போறேன்னு என்.டி.ஆர் கிளம்பினாரு .அது ராகு காரகம்.

இங்கே ஒரு ஜெனரல் ரூல் ஒன்னை ஞா படுத்தனும். சுபகிரகங்களுக்கு பகலில் பலம் .பாப கிரகங்களுக்கு இரவில் பலம். ராகு பாம்பு கிரகம் +பாவ கிரகம்.
ஒரு ஜாதகத்துல ராகு பெட்டர் பொசிஷன்ல இருந்தா சனம் தூங்கும் போது இவிக விழிச்சிருப்பாய்ங்க. சனம் விழிச்சிருக்கும் போது இவிக தூங்குவாய்ங்க.
நம்மை டிஸ்டர்ப் பண்றது பக்கத்து வீட்டு ஹோம் தியேட்டர், கீழ் போர்ஷன் குழந்தையின் அழுகை ,வீட்டம்மா போடற மிக்சி/கிரைண்டர் மட்டுமில்லிங்கோ ..சக மனுஷங்களோட எண்ண அலைகளும் தான்.

உதாரணத்துக்கு நம்ம ” என் தேசம் -என் கனவு ” மேட்டரையே எடுத்துக்கங்க. பகல்ல விழிச்சு -ராத்திரியில தூங்கி போற சனம் என்ன நினைக்கும்?
கொய்யால இவர் லெட்டர் போடுவாராம் .ஒடனே பி.எம்,சி.எம்.லாம் உடனே அலறியடிச்சு இவர் யோசனைகளை அமலாக்கிருவாய்ங்களாம்னு தான் நினைக்கும்.

இது தொடர்பான வேலைகளை பகல்ல செய்றத விட – அல்லாரும் தூங்கின பிறவு செய்தா? மேற்படி சனங்களோட எண்ண அலைகள் டிஸ்டர்ப் பண்ணாதில்லையா?

ராகுங்கறவர் இந்துமதம் அல்லாத பிறமதங்களுக்கு காரகம். இந்துக்கள் மெஜாரிட்டிங்கறதால அவிக செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க. மதம்ங்கற கோட்டை தாண்டி ரோசிச்சு ஓட்டு போடுவாய்ங்க.

இப்பல்லாம் இலங்கையில போல மெஜாரிட்டி மக்களுக்கு இன்செக்யூரிட்டிய ஊட்டற வேலைய பா.ஜ.க செய்துக்கிட்டிருக்கு . இந்த ஃபார்முலா உ.பில ஒர்க் அவுட் ஆகிப்போச்சுன்னா கோவிந்தா கோவிந்தா ..

மேட்டருக்கு வரேன் .இந்துக்களல்லாதவர்கள் கொஞ்சம் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவாய்ங்க.ஆகையால் தங்களுக்குள்ள சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதங்கற கோட்டை தாண்டாம ஓட்டு போடுவாய்ங்க. பல்க்கா போல் பண்ணுவாய்ங்க.

ஒருத்தன் ஜாதகத்துல ராகு நெல்லா இருந்தா அவனுக்குள்ள நேச்சுரலாவே ஒரு ரிலிஜியஸ் ஹார்மனி இருக்கும். எண்ணம் செயலானா இன்ன பிற மதத்தினரின் ஆதரவு அவனுக்கு சாலிடா கிடைக்க வாய்ப்பிருக்கு.

மத துவேஷம் உள்ளவன்லாம் நூத்துக்கு 99.99% சர்ப்பதோஷ கேஸாதான் இருப்பாங்கறது என் ஹஞ்ச்.

ஓகே ராகுவுக்கும் ராஜயோகத்துக்கும் உள்ள லிங்க் புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். உங்க ஜாதகத்துல ஒரு வேளை ராகு பல்பு வாங்கியிருந்தா அவரை எப்படி டைவர்ட் பண்ணி ராஜயோகத்தை அனுபவிக்கிறதுங்கற மேட்டரை அடுத்த பதிவுல சொல்லிர்ரன். உடுங்க ஜூட்டு .

டெய்ல் பீஸ்:
நேத்திக்கு “பக்தி ஒரு தோஷம் -நாத்திகம் ஒரு பரிகாரம்”னு முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். சனம் மேல விழுந்து பிடுங்க போவுதுனு நினைச்சேன்.ஆரும் கண்டுக்கிடல. அனுபவஜோதிடம் வாசகர்களாவது கண்டுக்கிறாய்ங்களா பார்ப்பம்னு இங்கே தட்டிவிட்டிருக்கன்.