தனுஷ் கெஸ்ட் ஹவுஸ் தரை மட்டம்: வனத்துறை அதிரடி

பாபாரஜினியின் மருமகனான  தனுஷ் குற்றாலம்,வைதேகி நீர்வீழ்ச்சி அருகில் கட்டிய கெஸ்ட் ஹவுஸை இடித்து தள்ளியதன் மூலம் தமிழக வனத்துறை ரஜினியை சீண்டி பார்த்திருக்கிறது.
மற்ற மானிலங்களில் நிலைமை எப்படியோ தெரியாது.ஆனால் தமிழகத்தை பொருத்தவரை அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை போல் முதல்வரின் கண்ணசைவு இன்றி எதுவுமே நடக்காது.
ரஜினி விஷயத்தில் ஆளுங்கட்சியின் மனவோட்டம் எப்படி இருக்கிறது என்பதை  எடைபோட  சமீப காலத்து  சில   நிகழ்ச்சிகள்  மூலம் ஓரளவு கணிக்கலாம்.
கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் ஜெ தனித்து போட்டியிட்டார். பா.ஜ.கவுடன் கூட்டோ -புரிதலோ -தேர்தலுக்கு பிறகு முடிவு என்ற நழுவலோ எதுவும் இல்லை.
தேர்தல் சமயம் மோடி ரஜினி வீட்டுக்கு வந்ததையும் -ரஜினி மோடிக்கு வக்காலத்து வாங்கி பேசியதையும் தலைமை நிச்சயம் ரசித்திருக்காது.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தது போல ரஜினி கலைஞரின் பிறந்த நாளை சாக்கிட்டு சற்று தாமதமாகவேனும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் இதே கேட்டகிரி தான்.
இதை எல்லாம் மீறி தலைமை ஒரு படி இறங்கி வந்து நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம்  வழங்கும் விழாவுக்கு அனுமதி மறுத்து ஒரு வகையில்  பச்சை கொடி காட்டியது  . ஆனால் இந்த மேட்டர்ல ரஜினி மவுனத்தையே பதிலாக்கியது அனைவருக்கும் தெரியும்.
இதை தலைமை  ரசிக்கவில்லையா? இதனால் தான் இந்த சீண்டலா?
வனப்பகுதியில் கெஸ்ட் ஹவுஸ்  கட்டுவது என்றால் வனத்துறையினருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. கட்டிக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள்?
சரி கெஸ்ட் ஹவுஸை இடிக்க முடிவு செய்தாலும் நோட்டீஸ், கீட்டீஸ்னு ஒன்னுமே இல்லாம அதிரடியா இடிச்சு தள்ளியிருக்காங்கன்னா ரஜினியை சீண்டி பார்க்க முடிவு செய்துட்டாங்கனு தான் சொல்லனும்.
விஜய்காந்த் கல்யாண மண்டப இடிப்பு அவரை அரசியலுக்கு இழுத்தது போல .. ரஜினியின் மருமகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் இடிப்பு ரஜினியை அரசியலுக்கு இழுக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Advertisements

லிங்கா கதை: சுட்டது எங்கே?

லிங்காலிங்கா கதைய பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கும். ஒரு அணை கட்டப்படுது.கட்டியவர்கள் அவமானப்படுத்தப்படறாய்ங்க. கொல்லவும் படறாய்ங்க.எல்லாரும் ஒட்டு மொத்தமா வெளியேறிர்ராய்ங்க.அதுல இஞ்சினீரான ரஜினி நெம்பர் ஒன்னும் ஒருத்தரு. ஊருக்குள்ள அணைக்கட்டு பக்கமா  மர்மக்கொலைகள் நடக்குது. இதுக்கு ரஜினி நெம்பர் டூ காரணமோன்னு சில காட்சிகள் இருக்கலாம்.

(இல்லை இந்த பதிவை படிச்சுட்டு மாத்தினாலும் மாத்திரலாம் ஆரு கண்டா? பாபா சினிமா வந்தப்போ இன்னின்ன காட்சில்லாம் கட் பண்ணிருங்க பாஸூன்னு கூரியர்ல ஒரு லெட்டர் அனுப்பினேன். இதே உள்ளடக்கத்தோட தியேட்டர் காரவுகளுக்கு சர்க்குலர் வந்ததா தேவி பத்திரிக்கையில துணுக்கு செய்தி பார்த்தேன்)

இதை பார்த்ததும் நமக்கு படக்குனு ஸ்பார்க் ஆச்சு ஒரு பழைய சினிமாவோட கதை .அது இன்னாடான்னா..?

ஒரு ஊரு. ஒவ்வொரு மழை காலத்துலயும் வருசா வருசம் ஆத்துல வெள்ளம் வரும். சனம் ஓட்டாண்டி ஆயிருவாய்ங்க.  லோக்கல்ல 2 அரசியல் புள்ளிங்க மானில மக்கள் கிட்டே நிவாரணம் கேட்டு ஒரு அமவுண்டு ,அரசாங்கத்துக்கிட்டேருந்து ஒரு அமவுண்டை வாங்கி ஒதுக்கிக்குவாய்ங்க. இது தொடர்கதை.

அந்த ஊருக்கு புதுசா ஒரு லெக்சரர் வராரு.( ரஜினி சார் ஏற்கெனவே பல படத்துல லெக்சரரா வந்து ஒர்க் அவுட் ஆகாததால இஞ்சினிரா மாத்திட்டாய்ங்க போல) அவரு தலையால தண்ணி குடிச்சு யூத் பவரை,ஸ்டூடண்ட் பவரை மொபிலைஸ் பண்ணி அணை கட்ட ட்ரை பண்றாரு. லோக்கல் புள்ளிங்க ரெண்டு பேரும் அவரை போட்டு தள்ளிர்ராய்ங்க..

சிஷ்ய பிள்ளைங்கல்லாம் பேஸ்தடிச்சு கிடக்காய்ங்க. அப்பம் ஒரு பேட்டை ரவுடி -கிராஸ் ஆகிறான்.அச்சு அசல் லெக்சரர் மாதிரியே இருக்கான். அவனை கூட்டி வந்து லெக்சரரா நடிக்க வைக்கிறாய்ங்க. லெக்சரர் மேயரா கூட வராரு. ஒரு கட்டத்துல சந்தேகம் வந்து பலரும் ரவுடியை இங்கிலீஸ்ல குடைய -லெக்சரர் ஆவி என்டர் ஆயிருது .லெக்சரர் பீசு பீசுன்னு பீசிர்ராரு. மத்தபடி கதை ரொட்டீனா கல்யாண கார் மாதிரி ஒரே ரூட்ல போயி சுபம்.
லிங்கா கதையை இந்தகதையிலருந்து தான் ஒப்பேத்தியிருப்பாய்ங்கனு நினைக்கிறேன். ரவுடியை நெல்லவனா  நடிக்க வைக்கிற கான்செப்ட் ஏற்கெனவே ஒரு படத்துல ரஜினியே செய்தாச்சு.அதனால இதை ட்ராப் பண்ணியிருப்பாய்ங்க.
மொத்தத்துல மாவு மட்டும் இதான். பார்ப்போம் ..படம் வரட்டும் கிளிச்சுரலாம்.

நடிகர் சங்க கட்டிடத்துக்கு சங்கு : ரஜினியின் பங்கு

null

நடிகர் சங்கத்துக்குன்னு சொல்ல முடியாட்டாலும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு சங்கு ஊதியது ரஜினி தான். இந்த வரி உங்களுக்கு ஆச்சரியத்தை தந்தால் நீங்க தமிழ் பத்திரிக்கைகள் படிக்கிறதில்லைன்னு அருத்தம்.இல்லின்னா மறதி பேர்வழின்னு அருத்தம்.

சமூக வலைதளங்களில் ஏகத்துக்கும் நக்கல் அடிக்கப்படும் கேப்டன் சங்கத்தை நிலைப்படுத்திட்டு போனாரு. ஆனால் நம்ம சூப்பற ஸ்டாரு சங்கு ஊதிட்டாருங்கோ.
ஒரு தாட்டி பொதுக்குழுவுலயோ அ ஏதோ நடிகர் சங்க நிகழ்ச்சியிலோ சங்கத்துக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்த நடிகர்கள் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம்னு பேச்சு வந்தப்போ -கையில வெண்ணை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையலாமா? நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை ப்ரமோட்டர்ஸுக்கு கொடுத்து காசு பார்க்கலாம்னு ச்சூ காட்டி விட்டுட்டாரு.

ஆருனா “சாமீ ! பசிக்குது ரெண்டு இட்லியும் சட்னியும் வாங்கி கொடுங்க”ன்னா பாடியில கிட்னிய வச்சுக்கிட்டு சட்னிக்கு அலையறியேன்னு இலவச ஆலோசனை வழங்குவார் போல.

அதுமட்டுமில்லிங்ணா நடிகர் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் ப்ரமோட்டர்ஸுக்கு கொடுக்கப்பட்டு -கட்டிடம் தரை மட்டமாக்கப்பட்டு இன்னமும் அப்படியே இருக்க காரணம் என்ன தெரியுமா?

ரஜினியோட சகலை ஒய்.ஜி.மகேந்திரனோட அம்மா -அதாவது ரஜினியோட மாமியாரு கோர்ட்டுக்கு போயிருக்காய்ங்களாம். ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி மகேந்திரன் கட்டிடம் கட்ட ஏன் தாமதம்னு கேட்க ராதாரவி மேட்டரை ஒடைச்சிருக்காரு.

பி.கு:
ஜூனியர்களான விஷால் போன்றவர்கள் மேட்டரை முன்னெடுக்க – அவிகளுக்கு ஏத்தி விட்டுட்டு -பொதுக்குழுவுக்கு வராம ரஜினி அம்பேலாக காரணம் இதான் போல.
உண்மையிலயே நடிகர் சங்கத்து மேல ரஜினிக்கு அக்கறை இருந்தா என்ன செய்திருக்கனும்.ஆரம்பத்துலயே கலை நிகழ்ச்சியா பண்ணலாமேன்னிருக்கனும்.
அட அதுவும் போகட்டு தான் கொடுத்த இலவச ஆலோசனை தவறா பின்பற்றப்படுதுன்னு தெரிஞ்சதும் தன் எதிர்ப்பை தெரிவிச்சிருக்கலாம் ( சரத் மற்றும் ராதாரவி பெயரில் பத்திரப்பதிவு)

சரி அதுவும் ஒழியட்டும் கு.பட்சம் கட்டிடம் எழாம இருக்க கோர்ட்டுக்கு போன மாமியாரையாச்சும் கன்வின்ஸ் பண்ணி “பேசி” முடிச்சிருக்கலாம்.
எதுவுமே செய்யலை. ஆக சங்க கட்டிடத்துக்கு சங்கு ஊதியது ரஜினி தானே..

ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்துல திடீர் உடல் நல பாதிப்பால் மீடியா வெளிச்சத்துல இருந்து ஒதுங்கி இருந்த ரஜினி நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு அஃபிஷியலா தானே நிருபர்களை சந்திச்சு பேட்டி கொடுக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம்.

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி (கீழ்) வந்த ரஜினி , அங்கே காத்திருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியில் ரஜினி சொன்னதாவது:

என் ஹெல்த் நல்லாவே இருக்கு. ரசிகர்களின் பூஜைகளாலதான் நான் மீண்டு வந்தேன். ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்” ராவண் ” படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ( ஆருப்பா அது ரஜினி நடிக்கவே இல்லைன்னு பதிவு போட்டது ) ரெண்டு மூனு மாசத்துல ராணா ஷூட்டிங் ஆரம்பிக்கும். ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் வந்திருந்தார் ரஜினி. இரவு 7.30 க்கு ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்

ஹி ஹி.. இப்படித்தாண்ணே சனம் துண்டு துக்கடா பதிவு போட்டு ஹிட்ஸை அள்றாய்ங்க. ( பேட்டி மட்டும் நெஜம் தேன்)

கொசுறு:

தமிழ்மணம் பெரியார் வழிக்கு வந்துருச்சு. சோதிடப்பதிவுகளையெல்லாம் நீக்கப்போறாய்ங்களாம். ( நம்முதை நாமே நீக்க சொன்ன பிற்காடு நீக்கியிருக்காய்ங்க. -ஸ் அப்பாடா மரியாதை பிழைச்சது) அடுத்தது ஆன்மீக பதிவா? சொல் தமிழ்மணமே..!

ரஜினி வாயில் “நாதாரி” என்ற வார்த்தை

ஆமாங்ணா ரஜினி ஒரு படத்துல நாதாரிங்கற வார்த்தைய பஞ்ச்சாவே உபயோகிச்சிருக்காரு. என்ன படம் என்ன படம்னு கேப்பிக. (ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ற பார்ட்டிகளுக்கு பதில் தெரிஞ்சிருக்கலாம்) சொல்றேன்.

அதுக்கு மிந்தி நாதாரிங்கறதுக்கு என்ன அருத்தம்? ஆருனா சொல்லுங்கப்பு. ப்டையப்பாவுல என்ன பஞ்ச்? “என் வழி தனி வழி” இதை தெலுங்குல டப் பண்ணப்ப ” நா தாரி ரஹதாரி”ன்னு வச்சிருந்தாய்ங்க. நா = என்னோட தாரி = வழி .

ரஹதாரின்னா = ராஜ பாட்டை /ஹைவே இப்படி அருத்தம்.

நம்ம ஜோலிக்கு வந்தா கோலி காலினு ஜா.ராவுக்கு சொல்லத்தேன் இந்த பதிவு. இது நாலு பேரை போய் சேரனும்ல அதுக்குத்தேன் வில்லங்க தலைப்பு+ லீடு. பதிவுக்கு போயிரலாமா? Read more

ரஜினியும் ஆனந்தவிகடனும்

ரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ? ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.

ஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது “தம்பிக்கு எந்த ஊரு” படத்துல.

அதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)

நாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.
Read More

வீடு மாறும் ரஜினி : திகீர் வாஸ்து உண்மைகள்

வாஸ்துவும் ஜாதகம் மாதிரிதான். 100% வாஸ்து உள்ள வீடு அசாத்தியம் .எந்த வீடும் நன்மை தீமை இரண்டையும் கலந்து தான் தரும்.

உ.ம்: கிழக்கு,வடக்கு பகுதியில தெரு , காலி இடம் இருந்தா ஆண்கள் கோழைகளாவும் – பெண்களை அடிமைகளா ட்ரீட் பண்றவுகளாவும் மாறிருவாய்ங்க

தீமைய தவிர்க்க வீடு மாறினா …

அ) அடுத்த 1.5 வருடத்துக்கு பழைய வீட்டோட வாஸ்துதான் வேலை செய்யும்.
ஆ) பத்துவட்டிக்காரனுக்கு செட்டில் பண்ணிட்டு வங்கிக்கடனுக்கு போக நினைச்ச கதைதான்.
இ) ப.வ.காரன் விடமாட்டான். அப்படியே மீறிப்போனா வங்கி மேனேஜருக்கும் வத்தி வ்ச்சுருவான்
ஈ) பழை வீட்ல இன்னம் என்னெல்லாம் தீமை நடக்கனும்னு இருக்கோ அந்த தீமை எல்லாம் குறுகிய காலத்துலயே நடந்துர வாய்ப்பிருக்கு
உ) முக்கியமா பழைய வீட்டிலிருந்தபோது பெற்ற நன்மையை உடனே இழக்க நேரிடும்.

செய்தி: சூப்பர்ஸ்டார் வீடு மாறுகிறார்

பிட்டா (ப)பிடிங்க !

1.ஒரு நிறுவனத்தில் 6 மாதத்துக்கு மிஞ்சி பிரச்சினை இல்லாமல் பணியில் தொடர்ந்தால் உங்கள் சென்சிட்டிவிட்டி ரேட் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

அதே நிறுவனத்தில் ரெண்டரை வருடத்துக்கு மிஞ்சி தொடர்ந்தால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது அல்லது அந்த நிறுவனம் பெட்டர் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து விட்டால் உங்களில் எதுவோ செத்துவிட்டது அல்லது அந்த நிறுவனம் பெஸ்ட் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வும் பெற்றுவிட்டால் அந்த நிறுவனமோ அ நீங்களோ பாஸ்டை ரெவ்யு பண்ணிக்கவே இல்லை வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவே இல்லை என்று அர்த்தம்

ஓய்வு பெற்ற பிறகும் அதே நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால் உங்களை போன்ற ஜால்ரா உலகத்திலேயே இல்லைன்னு அர்த்தம். அல்லது அந்த நிறுவனம் மிக மிக உன்னதமான நிர்வாகத்தை கொண்டுள்ளது என்று அர்த்தம்

2.கடவுளுக்கு இஸ்லாம்ல சதிகாரன் (மாக்கிர்) என்று ஒரு பெயர் உண்டு.கெட்டவுகளை வச்சு நெல்லவுகளுக்கு எதிராவும் சதி பண்றாரு. ஆனால் இந்த ப்ராசஸ்ல நெல்லவுகளுக்கு கிடைக்கிறது கர்ம நாசம், ஜன்ம ராஹித்யம் ( மறு பிறவி இருக்காது) – ஞானம். கெட்டவுகளுக்கு கிடைக்கிறது பாவம்.

அதுக்காவ கெட்டவனுக்கு விருது ,பட்டம்லாம் கிடைக்காது. எவனெல்லாம் கூட்டு சேர்ந்து ஆப்படிச்சானோ அவனுகளுக்குள்ளயே விவகாரம் வரும். ஒருத்தன் அடுத்தவனை ஒழிச்சு கட்ட பார்ப்பான். அவனுக்கு வச்ச வெடி இவன் பேண்டுக்குள்ளயே வெடிக்கும். உ.ம் : ராஜ பக்சே – பொன்சேகா , ராசா -தயா நிதிமாறன், பிரணப்-சிதம்பரம் ( பிரதமர் பதவிக்கான ரேஸ்ல முந்தத்தான் சிதம்பரம் சாரு ..பிரணப் சாம்பர்ல உளவு பார்த்ததா குற்றச்சாட்டு)