என் தேசம் என் கனவு (2015,அக்.26 நிலவரம்)

Jpeg
Jpeg

முன் கதை சுருக்கம்:
நம்ம மோதிஜி பிரதமராகி 100 நாள் ஆச்சு. முக நூல்ல “மோதி என்னத்தய்யா கிளிச்சாரு”ன்னு ஒரு க்ரூப் புலிவேஷம் போட -100 நாள் தானே ஆச்சுன்னு ஒரு க்ரூப் பம்ம செம லொள்ளு.

உடனே நாம “நான் பிரதமராகியிருந்தால்”ங்கற ஹேஷ் டேக் போட்டு சகட்டுமேனிக்கு ஸ்டேட்டஸ் போட ஆரம்பிச்சம். பிறவு அதை நாம தொகுக்க -முக நூல் நண்பர் ஒருவர் ஆங்கிலத்துல ட்ரான்ஸ்லேட் பண்ணி தர 2014,ஜூலை 16 ஆம் தேதி அவருக்கு கீழ்காணும் யோசனைகளை ஒரு லெட்டர் மூலமா அனுப்பினேன்.2015மார்ச் வரை அவிக கண்டுக்கல. இடையில ஒரு அம்பது ரூவா போஸ்டல் ஆர்டரை பி.எம்.ஓக்கு அனுப்பினம்.

கவரிங் லெட்டரோட சாராம்சம் :
ஆஸ்திரேலியா போயி கக்கூஸு கட்ட காசு கேட்கிறிங்களே -ஒரு வேளை சனங்க லெட்டருக்கு பதில் போட சில்லறை பிரச்சினையோ? இந்த அம்பது ரூவாயை வாங்கிக்கிட்டு என் யோசனைகளை என்ன செய்யப்போறிங்கன்னு பதில் போடுங்க

பிறவு ஒரு கட்டத்துல ஆர்.டி.ஐ படி கேட்டம் (அப்பமும் போஸ்ட் ஆஃபீஸ்ல 10 ரூ போஸ்டல் ஆர்டர் நோ ஸ்டாக் (என்னா சதி?)
பிரதமர் அலுவலகம் “உங்கள் கடிதம் கிடைத்தது – இட் ஈஸ் கெப்ட் ஆன் ரெக்கார்ட்”னு பதில் கூட போட்டாங்க. தமாசு என்னடான்னா மொதல்ல அனுப்பின அம்பது ரூவாயை ஆர்.டி.ஐ ஃபீஸா ட்ரீட் பண்ணி ஒரு பதில் -பிறவு ஆர்.டி.ஐ படி கேட்டதுக்கு ஒரு பதில் .ரெண்டு தபா பதில் வந்தது . அந்த லெட்டர்ல நான் தெரிவிச்சிருந்த யோசனைகள் தான் இந்த “என் தேசம் என் கனவு” .

இடையில நம்ம யோசனைகளை பிரதமர் அலுவலகம் சுட வேற ஆரம்பிச்சாய்ங்க.அதுவும் எப்படின்னா டிஸ்டில்ட் வாட்டரை பாத்ரூமுக்கு யூஸ் பண்ணாப்டி. இந்த விவரங்களை பக்கவாட்ல உள்ள வீடியோவுல விரிவா சொல்லியிருக்கன்.

இதை சீக்ரட்டா வச்சுக்கிட்டா சுட்டே நாறடிச்சுருவாய்ங்க. பப்ளிசைஸ் பண்ணியே ஆகனும்னு இதை பாக்கெட் புக்கா போட்டு ( 4000 பிரதிகள்) தமிழ்,தெலுங்கு வி ஐ பிக்களுக்கும் , சாமானியர்களுக்கும் இலவசமா கொடுத்துக்கிட்டிருக்கன்..(இப்பவும்)
இடையில தமிழ்-தெலுங்கு பிரதிகளை லோக்சபா ஸ்பீக்கருக்கு அனுப்பினது வேற கதை .இதுவும் பக்கவாட்ல உள்ள வீடியோவுலயே இருக்கு . அவிக பண்ண டக்கால்ட்டி வேலை கீழே

மோடி

என்ன யோசனைகளுக்கு போயிரலாமா?

பாகம்: 1
மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கிய ஒதுக்கீடே வெளி நாட்டு/உள் நாட்டு
கடன்/ கடன் மீதான வட்டி/வட்டி மீதான வட்டிக்கே செய்யப்படுகிறது .
இதற்கு ஒரு முடிவு கட்டினாலே தவிர எந்த பிரதமரும் எதையும் சாதிக்க
முடியாது. எனவே ..

1.ஜனாதிபதி-கவர்னர் பதவிகள் ரத்து. இவர்களின் பணியை சுப்ரீம் கோர்/ஹை
கோர்ட் நீதிபதிகளே செய்யலாம்.
2.ஜனாதிபதி மாளிகை/பாராளுமன்ற வளாகம்,பிரதமர் வீடு , மானிலங்களிலான
கவர்னர் மாளிகைகள் ,முதல்வர்கள் வீடு சட்டமன்ற வளாகங்கள் அனைத்தையும்
க்ளோபல் டெண்டர் அழைத்து 99 வருடங்களுக்கு லீஸ்.
(எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்டமன்ற கூட்டங்கள்/கலந்தாலோசனைகள்
வீடியோகான்ஃபரன்ஸ் முறையில் மட்டுமே நடக்க வேண்டும்)
3.ஸ்விட்ஜர்லாந்து வங்கி கணக்காய் இங்கும் ஒரு வங்கி துவக்கினால் வெளி
நாடுகளில் தேங்கி/தேக்கப்பட்டு கிடக்கும் கருப்பு பணம் தானாகவே நம்
நாட்டை வந்தடையும்.
4.வாகனங்களுக்கு பெட் ரோலுடன் 60:40 விகிதத்தில் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.
5.வாரத்துக்கு ஒரு நாளை மாசு கட்டுப்பாட்டு தினமாக அறிவித்து 52+
கேரியர்ஸுக்கு மட்டும் அனுமதி (ரயில், பஸ்) பாதுகாப்பு/மருத்துவ துறை
தொடர்பான எமர்ஜென்சி சேவை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
6.நாட்டில் உள்ள 18 வயது நிறைந்த ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் இலவச
சைக்கிள். சைக்கிள்களுக்கு சாலைகளில் மெயின் ட்ராக்.
7.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி.

பாகம்:2
மத்திய பட்ஜெட்டில் அடுத்த பெரிய ஒதுக்கீடு பாதுகாப்பு துறைக்கு மட்டுமே.
1.பாக்கிஸ்தான்,சீனா,பங்களா தேஷ் ஆகிய நாடுகள் உரிமை கோரி வரும் பாரத நில
பாகத்தை ஐ. நா செயல்பாடுகளுக்கு மட்டும் என ஒதுக்கி அவற்றின் பாதுகாப்பை
ஐ.நா பாதுகாப்பு சபை ஏற்க ஏற்பாடு.
2.நக்சல்பாரிகளின் ஆதிகத்தில் உள்ள இந்திய மாவட்டங்களில் அரசின்
வளர்ச்சி/சமூக நல திட்டங்களை நக்சல் ஆதரவாளர்களாய் முத்திரை குத்தி
இருக்கும் மனித உரிமை கழகங்கள் செயல்படுத்துமாறு செய்தல்.

பாகம்:3
1.அரசு இயந்திரத்திலான ஊழல்/அலட்சியம்/பொறுப்பின்மையை ஒழித்தல். அரசு
நிர்வாக செலவை 50% வரை குறைத்தல்.
2.மத்திய,மானில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ,சைக்கோ மெட்ரி
டெஸ்ட். கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீது ஒரு தேர்வு
.இவற்றில் தோற்றவர்களுக்கு கோல்டன் ஷேக் ஹேண்ட். இவர் தம் வாரிசுகளில்
தகுதி உடையோருக்கு வாய்ப்பு.
3.அரசு துறையிலான காலியிடங்களையும்/மேற்படி தேர்வுகளில் தோற்றவர்களால்
காலியான இடங்களையும் டெண்டர் முறையில் நிரப்புதல் ( தேவையான தகுதி+
அதிகபட்ச குறைந்த ஊதியம்)
4.சனி,ஞா கிழமைகள்,சுதந்திர நாள்,குடியரசு தினம் தவிர்த்த அனைத்து ஓய்வு
நாட்களும் ரத்து. வருடத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து பணி
புரிந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 மாத ஓய்வு .
4.ஏரி,குளங்கள்,நீர்நிலைகளை பேராசை மற்றும் சுய நலத்துடன்
ஆக்கிரமித்துள்ளவர்களின் விவரங்களை சேகரித்து ராணுவம் மூலம் மீட்டல்.
5.வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் அண்டர் கிரவுண்டில் தம் சொந்த
செலவில் அவற்றை நிர்மாணித்து தர உத்தரவு.

6.ஒவ்வொரு குடிமகனும் ஆன்லைன் மூலம் தனது சொந்த விவரங்களை அரசுக்கு
கிடைக்க செய்யும் ஏற்பாடு. (சமூக,பொருளாதார நிலை) .எவ்வித கிராஸ்
செக்கும் இல்லாமல் இவற்றின் அடிப்படையில் அரசு சமூக நல,முன்னேற்ற
திட்டங்களில் வாய்ப்பு.
ஆனால் தவறான தகவல் தந்தவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என்பதை முன்
கூட்டியே பெரிய அளவில் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
பிறகு அரசு தன் வேகத்தில் 3 மாதத்தில் கிராஸ் செக் செய்து போலிபயனாளிகளை
கடுமையாக தண்டிக்க வேண்டும்.
7.சாலை நிர்மாண பணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மூலமே நடக்க வேண்டும். புதிய
சாலைகள் அமைப்பதை விட ரயில்வே பாதைகளை விரிவு படுத்த வேண்டும்.
8. நீதிமன்றங்கள் வருடம் முழுதும் 24 மணி நேரம் ஷிஃப்ட் முறையில் பணி
செய்யும் ஏற்பாடு.
9.மத நிறுவனங்கள் படிப்படியாக மத ரீதியிலான நடவடிக்கைகளை
குறைத்துக்கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க ஏற்பாடு .
10.பிரபல புண்ணிய சேத்திரங்கள், பெரிய ஆலயங்கள்,மடங்கள் ,ப்ரேயர் ஹால்ஸ்
சோலார்/விண்ட் மில் – பயோகியாஸ் மூலம் மட்டுமே கியாஸ்/மின்சாரம்
தயாரிக்கும் ஏற்பாடு . சுற்றுப்புற ஏரியாவுக்கும் வினியோகம்.

11.உள்ளூர் காய்கறி மார்க்கெட்/மட்டன் மார்க்கெட்/பூ மார்க்கெட் எதிரில்
வங்கிகள் எஸ்.டி.டி பூத் கணக்காய் பிரத்யேக கவுண்டர் திறந்து நடை பாதை
வியாபாரிகள், சிறு வியாபாரிகளுக்கு டெய்லி லோன்.

பாகம்:4
1.நாட்டின் 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம். அதன் மூலம்
நீர்வழி சாலைகள் -நதிகள் இணைப்பு .
2.கிராமங்கள் முதல் நாடு தழுவிய விவசாயிகள் சங்கம் அமைப்பு . விவசாய
நிலங்களை லீஸ் அடிப்படையில் மேற்படி சங்கங்களுக்கு அளித்து கூட்டுறவு
பண்ணை விவசாயம்.
3.மேற்படி சிறப்பு ராணுவத்தில் ஒரு பகுதியை கொண்டு விவசாய உற்பத்திகளை
பாதுகாக்க தேவையான கிடங்குகள்/கோல்ட் ஸ்டோரேஜ் , வி.உற்பத்திகளை கொண்டு
செல்ல தேவையான சாலை/ரயில் பாதைகள் நிர்மாணம்.
4.நதிகள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் அன்னிய நாட்டு
நிறுவனங்களுக்கு மட்டும் இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
5.முழுமையான மதுவிலக்கு. மது அடிமைகளுக்கு கொக்கோ கோலா மாதிரியான
மெஷின்ஸ் மூலம் அடக்கவிலைக்கே மது.

6.ஒவ்வொரு மாணவனும் தன் உடல்,மனம்,புத்தி
,குடும்பம்,சமூகம்,மானிலம்,தேசம்,உலகம் பற்றிய விழிப்புணர்வை பெற்று தன்
சொந்த கால்களில் நின்று குடும்பம் முதல் உலகம் ஈறாக பயன் பெறும்படி
வாழும்படி செய்யும் கல்வி முறையை அமல் செய்தல் . ஏதேனும் கோடை விடுமுறையை
இதற்கு பயன்படுத்தலாம். விடுமுறையில் ஒவ்வொரு மாணவனும் நதிகள் இணைப்பில்
பங்கேற்கும்படி செய்யலாம்.
7.கல்வி அளித்த நிறுவனமே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கும் சட்டம்
8.கடல்களில்,நதிகளில், நீர் நிலைகளில் கழிவு நீரை விடும் தொழிற்சாலைகளுக்கு தடை .
9.மின் தேவைகளில் 50 சதம் சோலார்,விண்ட் மில்,பயோ கியாஸ் மூலம் மட்டுமே
சேகரிக்கும் ஏற்பாடு .
10.போலீஸ் துறையிலான காலியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு -மேலும் 2
மடங்கு வேலையிடங்களை ஏற்படுத்தி நிரப்பியாக வேண்டும். ஷிஃப்ட் முறை
கடுமையாக அமல். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிசி கேமரா ஏற்பாடு +வெப்
காஸ்டிங்.

11.போலீஸ் துறை ஆரம்ப கட்ட விசாரணை எஃப்.ஐ.ஆர் போட்டு,ஆதாரங்களை
சேகரிப்பதோடு நின்றாக வேண்டும்.தண்டனை வாங்கிதர வேறு அமைப்பை ஏற்படுத்த
வேண்டும். இதுவும் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரம் இயங்க
வேண்டும்.
என் யோசனைகள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. இதுல எதுனா பிடிக்கலின்னா ஏன் பிடிக்கலன்னு கமெண்ட்ல சொல்லுங்க. திருத்திக்கறேன்.

Advertisements

ஜெ'வுக்கு மோடி செய்த துரோகம்

சொ.கு.வ .மே.மு

அண்ணே வணக்கம்ணே !

ஜூ.வி கழுகார் பகுதியில இலங்கை தமிழர் மேட்டரையும்,நிதி மேட்டரையும் வச்சு அடிச்சு விட்டிருக்காய்ங்க. மம்மி இலங்கை தமிழ் மேட்டருக்கெல்லாம் பொங்கற கேஸு பிரபாகரனை கைது செய்து கொண்டுட்டு வரனும்னு சொன்ன பார்ட்டியாச்சே. தமிழ் சனத்துக்கு -முக்கியமா கட்சிக்காரவிகளுக்கு மிக்சி கிரைண்டர் கொடுத்துட்டா போதும் செயிச்சுரலாம்ங்கறது தான் அவிக நம்பிக்கை.

ஆனாலும் மம்மி கோவிச்சுக்கிட்டு தில்லி ட்ரிப்பை கான்சல் பண்ணிட்டாய்ங்கன்ற மேட்டரை மட்டும் நம்பறேன். அதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
சொ.கு வழக்குல அன்பழகனும் -கர்னாடக அரசும் வாயிதா வாங்கின கதை தெரியும்ல . வழக்கு எப்படியும் சாதகாமக்கப்படலாம். அதுக்கு நாம ஏன் அவசரப்படனும். நம்ம பங்குக்கு எலீக்சன் வரை இறுதி தீர்ப்பு வராம இருக்க கட்டைய போடலாம்ங்கற ஸ்டாண்டை அவிக எடுத்திருக்கலாம்.
இதை தடுக்கலங்கற ஆதங்கம் இருக்கலாம். மேலும் தமிழக பா.ஜ.கவுல சிலதலைகள் ஊழல் ராகம் பாடறதும் -ஒரு காரணமா இருக்கலாம். எல்லாத்துக்கும் மேல அசலான மேட்டர் ஒன்னிருக்கு .

சமீபத்துல அன்னிய முதலீட்டுக்கு அனுகூலமான மானிலங்கள்னு ஒரு பட்டியல் வந்தது தெரியும்ல. அல்லாரும் (நான் உட்பட) அது உலக வங்கி கொடுத்த சர்வே முடிவுன்னு நினைச்சிருந்தம்.

ஆனால் அது பெரிய உட்டாலக்கடின்னு ஒரு முன்னாள் எம்.பி போட்டு உடைச்சிருக்காரு .ஆக்சுவலா அந்த சர்வே பண்ணது கே.பி.எம்.ஜிங்கற நிறுவனமாம். அதுவும் அவிக ஒன்னும் தன்னிச்சையா சர்வே பண்ணலியாம்.ஸ்ரீமான் மோடி அவர்கள் இப்படி ஒரு சர்வே செய்யும் படி கேட்டுக்கொண்டாராம்.

மம்மிக்கு மோடி வச்ச ஆப்பு

அந்த சர்வே எப்படி நடந்திருக்கு தெரியுமா?

அந்த நிறுவனம் ஒரு கேள்வி படிவத்தை மானில அரசுகளுக்கு அனுப்பினாய்ங்களாம் .அந்த அரசுகள் தர்ர பதில்களை வச்சு ரேங்க் டிசைட் பண்ணாய்ங்களாம்.

ஏதோ ஒரு டுபாகூர் நிறுவனம் கொசினேர் அனுப்பினா அரசு அதிகாரிகள் வேலை வெட்டியில்லாம ஃபில் அப் பண்ணி அனுப்புவாய்ங்களா என்ன? இதும் பின்னாடி மோடி உள்ளது ஆந்திர அரசுக்கு லீக் செய்யப்பட்டிருக்கலாம். அவிக ஆதியோடந்தமா ஃபில் அப் பண்ணி அனுப்பிட்டாய்ங்க போல.அடிச்சாங்கய்யா செகண்ட் ப்ரைசு.

மம்மி தான் பாவம் ! செமயா ஏமாந்திருக்காய்ங்க. செமர்த்தியா வாங்கி கட்டிக்கிட்டாய்ங்க.

Bomb

விரைவில் பிரதமர் அலுவலகம் மீது வழக்கு

DSC_9123 - Copy

பிரதமர் அலுவலகத்துக்கு நம்ம நாட்டோட பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகளை பட்டியலிட்டு கடிதாசு போட்டது தெரியும் தானே ! (அதுக்கு மின்னே சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல மனுவா போஸ்ட் பண்ணம். ஒரு 169 பேர் தெரியாத்தனமா கை.எ போட்டு ஆதரவு கூட தெரிவிச்சாய்ங்க. நம்ம கடிதாசை பிரதமர் அலுவலகம் கண்டுக்காம போகவே “கொய்யா ! போஸ்டேஜுக்கு காசில்லையாடா”னு அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் அனுப்பினதும் தெரியும் தானே !

பிறவு ஆர்.டி.ஐ ஆக்ட் படி அப்ளை பண்ணதுமே .. அம்பது ரூவா போஸ்டல் ஆர்டரோட போன கடிதாசை தேடி பிடிச்சு அதையே ஆர்.டி.ஐ அப்ளிக்கேஷனா கணக்கு பண்ணி நம்ம கடிதாசை அக்னாலட்ஜ் பண்ணி -கெப்ட் ஆன் ரெக்கார்ட்னுட்டு ஒரு பதிலை போட்டானுவ.

நாம நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம் அமைக்க சொன்னா .. பார்ப்பாரவுக நாறடிச்ச கங்கைய காப்பாத்த பெசல் மிலிட்டரி போடப்போறம்னு ஒரு அறிவிப்பு வந்தது. ஒரு முக நூல் நண்பர் இதை கோட் பண்ணி பந்தாவா நன்றில்லாம் சொல்லி பதிவு கூட போட்டிருந்தார்.

ஆனால் லூஸ்ல விட்டுட்டம். லேட்டஸ்ட் என்னன்னா வாரத்துல ஒரு நாளை சைக்கிள் தினமா அனுசரிக்கனுமாம்..தொங்கிப்போன விரையோட திடீர்னு சைக்கிள் ஓட்டினா பல்பு வீங்கிக்கும்ங்கோ ! இது தொடர்பா சாட்சி பேப்பர்ல ஒரு விளம்பரம் கூட வந்திருக்கு.
cycle day
நாம இந்த மேட்டர்ல என்ன சொன்னம்னா?

//5.Announcing a day in a week as anti pollution day. All the private and government vehicles must be banned which carry less than 52 passengers. (Exception to police and medical department) .//
தமிழில்:
வாரத்துக்கு ஒரு நாளை மாசு எதிர்ப்பு தினமா அறிவிச்சு 52 பேருக்கு குறைவா பயணிகளை ஏற்றிச்செல்லும் எல்லா அரசு,தனியார் வாகனங்களுக்கும் தடை (காவல்,மருத்துவத்துறை வாகனங்களுக்கு விதிவிலக்கு)

Anti pollution day

சுடறதுதான் சுடறிங்க. பெருசா சுடுங்கடே ! காப்பி அடிக்கிறதுதான் அடிக்கிறிங்க..பக்காவா அடிங்கடே !! ஆனால் ஒன்னு சீக்கிரமே இன்டலக்சுவல் ஆக்ட், காப்பிரைட் ஆக்ட் கீழே பிரதமர் அலுவலகம் மேல சின்னதா வழக்கு போடலாம்னு இருக்கன். கு.பட்சம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு லெட்டர். வரேன் !

மோடி! மம்மி! டேக் கேர் !!

Announcement

1.மோடியின் அமெரிக்கா சகவாசம்:
நேருவுக்கு பிறகு ஏற்கெனவே இந்தியாவுக்கு பெத்த பேரு. இந்திராகாந்தி அம்மா ரஷ்யா கூட ரெம்பவே இணக்கம் காட்டி அணி சேரா கொள்கை ,பஞ்ச சீல கொள்கைகளை எல்லாம் பஞ்சர் ஆக்கிட்டாய்ங்க.

இன்னைக்கு அமெரிக்கா எப்படியா கொத்த கைப்புள்ள -எப்படியா கொத்த லிட்டிகன்டுன்னு அல்லாருக்கும் தெரிஞ்சு போன பிறவு -சீனாக்காரனை பக்கத்துல வச்சுக்கிட்டு இந்த சகவாசம் தேவையா?

அமெரிக்காவாச்சும் பரவால்ல. இஸ்ரேல் கதைய சொல்லவே தேவையில்லை. எனக்கு தெரிஞ்சு அணி சேரா கொள்கை இந்த தீவிரவாத யுகத்துக்கு மிக மிக ஏற்ற கொள்கை.ஆதரிக்கலின்னாலும் எதிர்க்கிறவனோட சேராம இருக்கானேன்னு எக்ஸ் பார்ட்டி மைன்ட்ல ஒரு சாஃப்ட் கார்னர் ஆவது கிடைக்கும்.

பேசாம ஊர் பஞ்சாயத்து,உலக பஞ்சாயத்துன்னு லொள்ளு பண்ணாம -கார்ப்பரேட் காரனுவ காலை கழுவி குடிக்காம சிறு தொழில் முனைவோரை அடையாளம் கண்டு,பயிற்சி கொடுத்து ,பைசா கொடுத்து சிறு தொழில் மேம்பாட்டை கேர் அப் பண்ணாலே போதும்.

ஸ்கில் இண்டியான்னு உளறிக்கொட்டிட்டு கில் இண்டியா ப்ரோக்ராமை முன்னெடுக்கிறத விட சேஞ்ச் ஆர்க்ல நாம கொடுத்திருக்கிற ஐடியாக்களை அமல் படுத்தலாம். போற காலத்துக்கு புண்ணியம்.

2.அம்மா விவகாரம்:
இவிகல்லாம் லூஸா இல்லை லூசு மாதிரி நடிக்கிறாய்ங்களா புரியல. அம்மாவோட கிச்சன் கேபினட்ல எவனோ ஜகுனி மாமன் நிச்சயம் இருக்கான். ஆரம்பத்துலருந்து எல்லாமே தப்பு தப்பா போயிட்டிருக்கு.

அ)அரசியல்ல சம்பாதிக்காதவுக ரெம்ப கம்மி .என்ன ஒரு நிபந்தனைன்னா சம்பாதனைய காட்டிக்கப்படாது .கலீஞர் பக்காவா மெயின்டெய்ன் பண்ணாரு . இந்த மாறன் அந்த மாறன்னு வந்த பிறகுதான் கட்சியோட இமேஜே கலீஜாயிருச்சு.

ஆ)அரசியல்ல நாம என்னவா இருக்கோம்ங்கறத விட என்னவா காட்டிக்கிறோம்ங்கறதுதான் முக்கியம். மம்மி மேட்டர் ஏறுனா ரயிலு இறங்கினா செயிலு. ஒன்னு வெள்ளி பாத்திரம் வித்து கட்சி நடத்தறேம்பாய்ங்க. இல்லை வளர்ப்பு மகன் திருமணம் .அஞ்சுல கேது இருக்கப்போயி தான் பிள்ளை மேட்டரே பல்பு.இதுல தத்து பிள்ளைய கொண்டு வந்து கேதுவ ரேக்கி விட்டு நாறிட்டாய்ங்க.

இ)தப்பு நடந்து போச்சுன்னே வைங்க .என்னா தப்பு? எதுல தப்புனு சிலும்பனும். வாய்தா வாய்தாவுக்கு கரீட்டா அட்டெண்ட் ஆகனும். இந்த தீர்ப்பு ஏதோ 15 வருசத்துக்கு மிந்தியே வந்திருந்தா ஒரு ரெண்டு வருசத்துல க்ளீன் சிட்டோட வெளிய வந்திருக்கலாம். இப்பம் வாய்தாராணி பட்டம் வாங்கினது தான் மிச்சம்.

ஈ)தலைக்கு மேல கத்தி வச்சுக்கிட்டு பூந்து பூந்து அடிச்சாய்ங்க. இது தேவையா? இதுவும் ஒழிஞ்சு போவட்டும் கு.பட்சம் ஜட்ஜ்மென்டு செப் 20 ஆம் தேதியே வரட்டும்னு விட்டிருந்தா இன்னேரம் கார்டன்ல இருந்திருக்கலாம்.

உ) சரி பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.. ஜாமீன் மனு போடறாய்ங்க.ஆரை வச்சு லெக் தாதாவான ராம் ஜெத்மலானிய வச்சு. ஜீனியஸ் எல்லாம் கிழவாடியானா எல்லாம் ஆடிப்போகும்.கலீஞரே பாய்ண்டுக்கு வர பத்து மினிட் ஆகுது.

ஊ) இப்பவும் ஒன்னும் மிஞ்சிப்போவல. கடந்த 3 நாள் கூத்தை சனம் மறந்து போறாப்ல தமிழகத்தின் டாப் டன் இஷ்யூஸ் பத்தை லிஸ்ட் அவுட் பண்ணிக்கிட்டு அனைத்து கட்சி குழு அமைச்சு நிதி கேட்டு, நீதி கேட்டு தில்லி,கர்னாடகா ,கேரளானு டூர் அடிக்கனும். காவல் துறைய முடுக்கி விட்டு சட்டம் ஒழுங்கை கெட்டிப்படுத்தனும்.லஞ்ச ஒழிப்பு போலீஸை முடுக்கி விட்டு கருப்பாடுகளை களை எடுக்கனும். ( அட சீனாச்சும் போடுங்கப்பு)

இ) எனக்கு ஜாமீனே வேணாம் நான் செயில்ல இருந்தே நீதி பெற தயார்ங்கற மாதிரி பில்டப்பு கொடுத்து ரிலாக்ஸ்டா இருந்தா ஜாமீன் தன்னால வந்துட்டு போகும்.

ஈ)அது வரை ரத்தத்தின் ரத்தங்களுக்கு போது போகலின்னா கின்னஸ் ரிக்கார்டுக்காக தெரு கூட்டலாம். சனம் மனசுல கொஞ்சமாச்சும் அனுதாபம் வரும்.

உ)வேணம்னா கீழ் கண்ட தொடுப்புகளை சொடுக்கி ஆவன செய்யலாம். கோர்ட்,கேஸு,தீர்ப்பு,தண்டனை, அபராதம்லாம் அவுட் ஆஃப் ஃபோக்கஸுக்கு போயிரும்.

திரு.தம்பிதுரை அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளின் (அவ) லட்சணம்

மானிலகனவுகள்

கரீபி ஹட்டாவ் முதல் மேக் இன் இண்டியா வரை

1நேருமாமா  நாலு நாடுகளை சுத்தி பார்த்துட்டு பெரீ பெரீ ஃபேக்டரி ,பெரீ பெரீ அணைகள் கட்டிட்டா இந்தியா பணக்கார நாடாயிரும்னு நம்பின அப்பாவி. ஏதோ அந்த காலத்துல கொஞ்ச நஞ்சம் பழி பாவத்துக்கு பயந்த அதிகாரிங்க இருந்ததால சமாளிச்சுட்டாரு. ஐ மீன் ஃபேக்டரி,அணைகள் சாத்தியமாச்சு.ஆனால் அதன் பின் விளைவுகள் ?
இந்திராகாந்தி காலத்துல கரீபி ஹட்டாவ்னு ஒரு கோஷத்தை கொண்டு வந்தாய்ங்க. என்ன ஆச்சு? சோனியா ஜீயும் இதே கோஷத்தை போடற அளவுல தான் வறுமை ஒழிப்பு நடந்தது.  இப்பம் ஸ்கில் இண்டியா, மேக் இன் இண்டியா.எல்லாமே வெத்து கோஷம் தான். ஆள்றவுக சின்சியராவே இதை எல்லாம் முன்னெடுத்தாலும் அமல்படுத்தவேண்டியது பழைய சிஸ்டம் தான்.
நம்ம சிஸ்டமே தப்பு. எப்பமோ வெளி நாட்டுக்காரனான பிரிட்டீஷ் காரன் நம்மாளுங்க  மேல உள்ள சந்தேகத்தால ஏற்படுத்தின அடுக்கடுக்கான சரிபார்ப்பு அமைப்புகளை அப்படியே தொடர்ந்துக்கிட்டிருக்கம். வெட்டி செலவு.
நம்ம பட்ஜெட்ல பாதுகாப்பு, கடன்,வட்டி செலவுக்கு அடுத்தது இந்த செலவு தான். டோட்டலி அன் ப்ரொடக்டிவ்.
ஸ்கில் இண்டியாங்கறாய்ங்க. ஒரே சாதிக்குள்ள, உறவுக்குள்ள கண்ணாலம் கட்டினா ஸ்கில் எப்படி டெவலப் ஆகும்? படிப்புங்கற பேர்ல பிள்ளைங்க மூளைய சைனா மேட் பென் ட்ரைவாக்கி கண்ட அவுட் டேட்டட் சாஃப்ட்வேர்களையும், கரப்டட்  ஃபைல்ஸையும்  ஸ்டோர் பண்ணி நாறடிக்கிறம்.
எப்படி விளங்கும்? சிஸ்டம் மொத்தம் வைரஸ் தான் பரவி கிடக்கு.
நெஜமாலுமே ஸ்கில் இண்டியா உருவாகனும்னா உறவுக்குள்ள ,ஒரே சாதிக்குள்ள கண்ணாலம் கட்டறதை தடை பண்ணனும். படிப்பு நம்ம கொளந்தைகளை  எதிர்கால மனிதனா உருவாக்கனும்.
( ஐ மீன் பாட திட்டங்கள் தொலை நோக்கோட – அடுத்த 50 வருசத்து உலகளாவிய ஏற்ற இறக்கம் -மாற்றங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்படனும்)
இந்தியமக்களோட  அடுத்த ஐம்பதாண்டுகளுக்கான தேவைகள் என்னனு பட்டியல் போட்டு அந்த பட்டியல்ல உள்ள பொருட்கள்,சேவைகளை ஃபுல் ஃபில் பண்ற அளவுக்கு அந்த மாணவன் தயாரிக்கப்படனும்.
இதை செய்யனும்னா கல்வியையும்  கல்வி நிறுவனங்களையும்  அரசு தன் கைக்கு கொண்டு வரனும். (இதெல்லாம் நடக்கிற விஷயமா?)
சரி எப்படியோ ஒரு அற்புதம் நடந்து  நான் சொன்ன ரேஞ்சுல அந்த மாணவன் “தயாராகி” வெளிய வரான்னு வைங்க. அவனை தாயாராக்காம இந்த சமூகம் விடாது.
இதுக்கு என்ன செய்யனும்? எல்லா தொழில்களையும் அரசுடைமையாக்கனும். இதெல்லாம் நடக்கிற விஷயமா?
இந்திய தாய்க்கு  நெல்லா லூப்ரிக்கேட் பண்ணி வைக்கிறோம். எங்க பிள்ளைகளே விளக்கு பிடிப்பாய்ங்க. நீங்க வந்து கர்பமாக்கி கொளந்தைய மட்டும் அள்ளிக்கிட்டு போயிரலாம்ங்கறதுதான் இந்த மேக் இன் இண்டியாவோட நோக்கம்.
இவிகளுக்கு ஓட்டு போட்டதென்னவோ சாமானியசனம். மிடில் க்ளாஸு,ஏழை பாழைங்க. ஆனால் இவிக கூப்டு பேசறது மட்டும் பெரு முதலாளிகள் கிட்டே. எங்கத்தி நியாயம் இது?
அவன் தொழில் பண்றவன். வ்யாபாரம் துரோஹ சிந்தஹ. அவனோட லாபம் அவனுக்கு முக்கியம். எங்கே லாபம் இருக்கோ அங்கே தொழில் துவங்காம இருக்க முடியுமா என்ன?
இதுக்கு என்ன அவனை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கிறது?கேட்டா வேலை வாய்ப்பு கிடைக்கும்ங்கறாய்ங்க.
ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரமே விவசாயத்தை அடிப்படையா கொண்டு தான் இயங்குது. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே தொழில் விவசாயம். (ஒன்னு பத்தாகுது) ஃபவுல்ட்ரி ,கேட்டில் ஃபார்ம் எல்லாம் கூட ஜஸ்ட் கன்வெர்சன் தான்.
விவசாயத்தை வெற்றிகரமானதா -லாபகரமானதா மாத்தனும். விவசாய உற்பத்திகளை உலக அளவுல மார்க்கெட் பண்ண பார்க்கனும். ஆக்ரோ இண்டஸ்ட் ரீஸ் வரனும். இதான் இந்தியாவ வாழ வைக்கும்.
நாங்கல்லாம் ஜூரிங்க, பொருளாதாரத்தை கரைச்சு குடிச்சவுக, நாங்க கை வச்சா லாபம் கோடி கோடியா கொட்டும்னு கிளிச்சுக்கறாய்ங்களே .. இந்த பெரு முதலாளிகளால அரசுகளோட சலுகைகள்,சப்சிடி ,வங்கி கடன் இல்லாம குசு கூட விட முடியாது. இவனுவளை போயி தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சிக்கிட்டிருக்கிறத பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது.
என்னை கேட்டா காரிடார் அமைக்கிறேன், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கிறேன்னு சொல்ற தெல்லாம் கல்லை மூட்டையா கட்டி மாங்கா அடிச்ச கதைதான்.
விவசாய நிலமும் போச்சு,  அதை சார்ந்து வாழ்ந்தவிகளுக்கு மாற்று வேலை வாய்ப்பும் போச்சுங்கற நிலை தான் வரும்.
மைக்ரோ லெவல்ல போக வேண்டிய மேட்டரு இது. இந்தியவமிசா வழியினர் உலகத்துல எந்தெந்த நாட்ல இருக்காய்ங்க. அவிக அன்றாட தேவை என்ன? அவிகளுக்கு தேவையான சர்வீஸஸ் என்னனு ஒரு கணக்கெடுத்து  அதை எல்லாம்   அவிகளுக்கு இங்கிருந்தே தர்ர அளவுக்கு யூத்தை மோட்டிவேட் பண்ணி -ட்ரெய்ன் பண்ணி -கடன் கிடன் கொடுத்தாலே போதும் அன்னிய செலவானி குமியும்.
இதே போல சொந்த நாட்டுமக்களோட அடுத்த ஐம்பது ஆண்டுக்கான தேவைகளை மைண்ட்ல வச்சு ப்ளான் பண்னி ஒர்க் அவுட் பண்ணாலே போதும்.  நோக்கியா காரனுக்கு படுக்க போட்டோம் என்ன ஆச்சு?  சிறு துளி பெருவெள்ளம்னு எப்பத்தான் உறைக்கப்போவுதோ இவிகளுக்கு.
எச்சரிக்கை:
மேற்படி பெருமுதலாளிகள் புதிய சிறு தொழில் முனைவோரை விழுங்கிராம அரசு காப்பாத்தனும். குடிசை தொழிலுக்கும், சிறு,குறு தொழில்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கனும்.

மோடி ஜாதகம் : பாய்ண்ட் டு பாய்ண்ட்

அண்ணே வணக்கம்ணே !
ஆதி காலத்துலயே ஆடியோவா போட்ட மேட்டருதான் விகடன் டாட் காம்ல ஆரோ ஜூரி மோடியோட ஜாதகத்தை வச்சு அவரு கிளிச்சுரப்போறாருன்னு எளுதியிருந்தாப்ல.
நம்ம சனத்துல பேர் பாதி பேரு ஆஃபீஸ்ல படிக்கிறவுகளாச்சா ..ஆடியோவ விட டெக்ஸ்டா போட்டா நிறைய பேரு படிப்பாய்ங்கன்னு டெக்ஸ்டா போடறேன். ( ஃப்ரெஷ்ஷா அனலைஸ் பண்ணியிருக்கன்)
லக்னம் ராசி விருச்சிகம்:
இதுல சந்திரன் நீசமாறதால பப்ளிக் சப்போர்ட் கிடைக்கிறது ரெம்ப கஷ்டம், ஷார்ட் கட்ல தான் வரனும் ( நரசிம்ம ராவ் மாதிரி) இவிக  நெல்லது பண்ணாலே ஆப்புதான் வரும். மோடி கதைய  புதுசா சொல்லனுமா என்ன?
விருச்சிக லக்னத்துக்கு லக்னாதிபதி செவ். இவரே தான்  சத்ரு ரோக ருணாதிபதி. இதனால இவிகளே கஷ்டப்பட்டு சத்ரு,ரோக ,ருண உபாதைகளை ஏற்படுத்திக்குவாய்ங்க.
லக்னத்துல சந்திர செவ்:
ஒவ்வொரு லக்னத்துக்கும் பாதகாதிபதினு ஒருத்தர் உண்டு. இவர் நின்ன இடம்,பார்த்த இடம், சேர்ந்த கிரகம்லாம் உருப்படாது.
மோடி ஜாதகத்துல  லக்னாதிபதியான செவ் பாதகாதிபதியான சந்திரனோட சேர்ந்தே உட்டாரு.  இதனாலதேன் ஒரே ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியாத கிடக்கு பார்ட்டி.
அதுவும் லக்னாதிபதியோட சந்திரன் சம்பந்தப்பட்டா  இந்த மாதிரி ஜாதகர்கள் வாழ்வில் 14 வருசம் ஏறுமுகம், 14 வருசம் இறங்குமுகத்தை பார்க்கலாம். மோடி மேட்டர்ல ஏறுமுகம் ஓவர்.
அதுல வேற பாக்யாதிபதி சந்திரங்கறதால கட்சித்தலைமை எப்பம் ரிவர்ஸ் ஆகும்னு சொல்லமுடியாது. என்னதான் ஹெலிகாப்டர்ல பறந்தாலும் ஏரி,குளத்தை தாண்டாம இருக்க முடியுமா?
குரு 4 ல இருக்காரு.இவர் தான் நின்ன இடத்தை நசிக்க செய்வாரு. இதனால  ஸ்தான நாசம். சுக நாசம். கல்வி நாசம்.
அதே சமயம்  சொந்த கட்சிய வச்சு ரெவின்யூ இன் கம்,கேப்பிடல் இன் கம் ரெண்டையும் ரைட் பண்ணிக்கலாம்.
அடுத்து ராகு அஞ்சுல. இதனாலதான் சந்தானமின்மை,அவப்பெயர்.அதுவும் ராகு இதர மதங்களை குறிப்பவர்.
பத்தை பாருங்க. இங்கே 7/12 க்குடையவர் 3/4 க்குரியவரோட சேர்ந்தார். 7+3 மனைவிக்கு மாரகம் (நெல்லவேளையா பிரிஞ்சுட்டதா சொல்றாய்ங்க.மவராசி நெல்லா இருக்கட்டும்) .12+4 இவர் சார்ந்த கட்சி நாசமா போயிரும். (இந்த தடவை பல்பு வாங்கினா கட்சி ஒரு ஏழெட்டு பீசா உடையறது கியாரண்டி)
பத்துல சுக்கிரன். இதனாலதேன் விளம்பரமாடல் கணக்கா அலங்காரம், சின்னபொண்ணுங்க பின்னால போலீஸை அனுப்பி துப்பறியறது.
பதின்னொன்னை பாருங்க.இங்கே 10+8 காம்பினேஷன் இருக்கு. பொதுவா இது ஒர்க்கஹாலிக்கா மாத்தும்.அதே சமயம் பத்துன்னா தொழில் எட்டுன்னா மரணம். ஆன் டியூட்டி டிக்கெட் போடவும் சான்ஸிருக்கு.
கூட மோட்சகாரகன் வேற. ஏதோ தியானம் யோகம்னு இருக்கிறவுகளுக்கு பரவால்ல. மோடிக்கு மோட்சம்னா என்ன சொல்றது?
இந்த இழவெடுத்த ஜாதகத்தை வச்சு பிரதமர்னு சொல்றாய்ங்க. எங்க போயி முட்டிக்கிறது?

மோடி பிரதமராயிட்டா அப்படி என்னதான் நடந்துரும்?

4 IN 1அண்ணே வணக்கம்ணே !

ஒரு மாறுதலுக்கு இந்த அரசியல் கட்டுரை . உங்க ரெஸ்பான்ஸை பொறுத்து தொடர்வதும்,விடுவதும்.

மோடியை ஆதரிக்கிறவுக எப்படி கரடியா கத்தறாய்ங்களோ -அவரை எதிர்க்கிறவுகளும் கரடியா தான் கத்திக்கிட்டிருக்கம்.  அரசியல்ல மத்த மேட்டர்ல அக்கறை காட்டாதவுக கூட  இந்த மேட்டர்ல க்ளியர் கட்டா ஒரு ஐடியா வச்சிருக்காய்ங்க.
மோடிங்கற ஒரு தனி ஆள் அப்படி என்னத்தை தான் புரட்டிர முடியும்?  அட  அவிக கனவெல்லாம் நனவாகி பா.ஜ.க 272 தொகுதியில செயிச்சு மெஜாரிட்டியே கிடைச்சுட்டாலும் என்னத்தை கிளிச்சுருவாரு?
இருக்கிற பாய்ங்களுக்கெல்லாம் ஆளுக்கு  ரெண்டு சப்பாத்தி கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிருவாரா? காமன் சிவில் கோட்? ராமனுக்கு கோவில்? காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து? இந்திய மக்கள்  இந்து -முஸ்லீம்னு பிரிஞ்சு  இன்னொரு தபா  மதகலவரம் வந்துருமா?
ஊஹூம்..ஒரு ம..னாவும் நடக்காது. பின்னே ஏன் நாம இந்த அளவுக்கு பதறி கருத்து தெரிவிக்கிறோம்? ராகுல் ஒத்தை வெடி. அந்த கும்பல் ஜஸ்ட் ஊழல் பெருச்சாளிகள் தான். நக்கற மாட்டுக்கு செக்குன்னு தெரியுமா? சிவலிங்கம்னு தெரியுமாங்கற மாதிரி கண்டதுலயும் கைய வச்சு நாறிக்கிடக்கு. அவிக முன்னேற்றம்-வளர்ச்சின்னு பேச வாய் திறந்தாலே சனம் காத்துதான் பிரிப்பாய்ங்க.
இவிக சைட்ல  இருந்து எதிர்ப்பார்க்க கூடிய இன்னொரு  ஆபத்து காசுக்கு ஆலாப்பறந்து ராஜபக்சே கிட்டயும் கை நீட்டிட்டாய்ங்களோ? அணு ஒப்பந்தம்னு அமெரிக்கா காரன் கிட்டே கைய நீட்டிட்டாய்ங்களோங்கற சந்தேகம் தான். நோக்கமென்னவோ ஊழல் தான் .ஆனால் இதுல நம்ம நாட்டோட மானம்,மருவாதி,பாதுகாப்பு எல்லாத்துக்குமே ஆப்பு வந்துரும்.
இந்த கும்பலை பத்தி பெருசா அலட்டிக்க வேண்டிய அவசியமே இல்லை. மொத அஞ்சு வருசம் கம்யூனிஸ்டுங்க புண்ணியத்துல கொஞ்சமே கொஞ்சம் ஒளுங்கு மருவாதியா ஆட்சி பண்ணாங்க. அடுத்த அஞ்சுவருசம் முழுக்க நனைஞ்ச பிறவு முக்காடு எதுக்குங்கற ரேஞ்சுக்கு போயிட்டாய்ங்க. இது குப்பன்,சுப்பனுக்கெல்லாமும் க்ளியராகி கழுவி கழுவி ஊத்தறாய்ங்க.
இது பூட்ட கேஸு.
பின்னே மோடி மட்டும் பொளந்து கட்டிருவாரான்னா.. அப்படி ஒன்னு நடந்துராதான்னு ஒரு கும்பலே நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையுது.
அலையடிக்குது,மழையடிக்குது,புயலடிக்குதுன்னு பினாத்தறானுவளே பின்னே என்னா இழவுக்கு வத்தல்,தொத்தல்களோட கூட்டு வைக்க இஇப்படி பறக்கறாய்ங்க?
சந்திர பாபுவை ஆந்திராவின் நிரந்தர எதிர்கட்சி தலைவர்னு சொல்ல கூட  பயமா இருக்கு. அதுக்கே தலை கீழ நின்னு கக்கூஸு கழுவற ஆசிட்ல மூஞ்சி கழுவனும். அந்த பாபுவோட கூட்டுக்கு என்னா சஸ்பென்ஸு ?
மோடில்லாம்  தானே ஒரு அவாளா இருந்துக்கிட்டு – பஞ்ச கச்சம் பூணூலோட வந்து டைரக்டா த பாருப்பா எங்களோட மூல வேர் ஆர்.எஸ்.எஸ். எங்க கொள்கை இந்துத்வா, நாங்க  ஆட்சிக்கு வந்தா இருக்கிற பாய்ங்களுக்கெல்லாம் ஆளுக்கு  ரெண்டு சப்பாத்தி கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிருவம்.  காமன் சிவில் கோட் கொண்டுவருவம். ராமனுக்கு கோவில் கட்டியே தீருவம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து பண்ணியே தீருவம்னு ஓட்டு கேட்டா இந்த அளவுக்கு பதற வேண்டிய அவசியமில்லை.
நீங்க கேட்கிறத கேளுங்கடா கொடுக்கிறத (?) வாங்கிட்டு போங்கன்னு விட்டுரலாம்.
இங்கே சிக்கல் எங்கே வருதுன்னா
1.மோடி நான் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன்னு ஆரம்பிக்கிறார். அவா கூட்டம் சூசைட் பாம்பர் மாதிரி மோடிய முன்னாலே தள்ளி பின்னாடி மறைஞ்சு நிற்குது.
2.குஜராத் படுகொலைகளின் போது முட்டி செத்த  வாஜ்பேயி கூட “முட்டிய தட்டிருவன் படவா”ன்னு வார்ன் பண்ண பிறவு “ஓவரா போயிட்டமோ”ங்கற கில்ட்டில மோடி கட்டின வேசம் தான் வளர்ச்சி நாயகன்.
3.ஆனால் அவரோ -அவரை ஆதரிக்கிறவுகளோ கலவரத்துக்கும் வருத்தப்படல-அந்த ரத்தக்கறைய கழுவ போட்ட வளர்ச்சி நாயகன் வேடத்தால நிலமிழந்த, வீடிழந்த, வாழ்வாதாரம் இழந்த லட்சோப லட்சம் மக்களை பத்தியும் வருத்தப்படல. இவனுவ பேண்டு வச்ச நாத்தமும் போகலை.அந்த நாத்தத்தை  மறைக்க ஊத்தின சென்டட் ஃபெனாயில் நாத்தமும் இன்னம் போகல. ஆனால்  நாங்கல்லாம் கார் சக்கரத்துல மாட்டி நாய்க்குட்டி செத்தாலும் வருத்தப்படறவுகனு வசனம் விடறானுவ. இங்க தான் உதைக்குது.
காங்கிரஸ் காரவுக சீக்கியர் படுகொலையிலயாச்சும் மரம் சாயும் போது அதிர்வுகள் சகஜம்னு வியாக்யானம் செஞ்சாய்ங்க. இவரு பாதிக்கப்பட்டவுக உரிமைகுரலை ரத்து பண்ணிக்கிட்டா அமைதி சீக்கிரமே திரும்புங்கறவரு.
4.மோடி கும்பலுக்கும் ராகுல் கும்பலுக்கும் பொருளாதார விசயங்கள்ள “ரவூண்டு” வித்யாசம் கூட கிடையாது. மெஜாரிட்டி இல்லாத யுபிஏ சர்க்கார் இதுவரை நிறைவேற்றிய எல்லா மக்கள் விரோத சட்டங்களுக்கும் இவனுவளும் உடந்தை .
காங்கிரஸ் காரன் எதை செய்தாலும் இதுல எவ்வளவு சுருட்ட போறானுவளோன்னு மெகாசீரியல் பார்க்கிற தாய்குலம் கூட டவுட் பண்ற நாள் வந்துருச்சு.
ஆனால் இவனுவ ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி காங்கிரஸ் காரன்லாம் அபிஷ்டு .நாங்கல்லாம் ரெம்ப பாச்சா குட்டிங்க .நாங்கதான் இந்தியாவ காப்பாத்துவம்னு போலா விடறானுவ.
மோடிகும்பலுக்கு இருக்கிற வசதி என்னன்னா மதவாதத்தை ஊழல் மறைக்குது,ஊழலை மதவாதம் மறைக்குது.
வளர்ச்சி வளர்ச்சின்னு ஊத்தி விடறானுவளே ஒரு கையேந்தி பவன் காரன் போலீஸ் மாமூல்,ரவுடி மாமூல் எல்லாம் கொடுத்துக்கிட்டு ,கந்து வட்டி கட்டிக்கிட்டு ,எந்த வித சப்சிடியும், சலுகையும்,கடனும் இல்லாம எத்தனை  பேருக்கு வேலை வாய்ப்பு தரான்.
ஒரு கையேந்திபவனுக்கு தேவையான முதலீடு எவ்ளோ? குசராத்துக்கு கிடைச்ச அன்னிய முதலீடு எவ்ளோ? கிடைச்ச வேலை வாய்ப்பு எவ்ளோ?
நான் ஆரம்பத்துலருந்து ஒன்னையே சொல்றேன். மோடியோட ஃபார்முலா எங்க பக்கம் வாயிதா போன சந்திரபாபு நாயுடுவோட ஃபார்முலா.
மக்கள் தொடர்பு துறைய வச்சுக்கிட்டு – வெளி மானில பத்திரிக்கைக்காரவுகளுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல விருந்து ,அரசு/அரசுத்துறை/குஜராத் வங்கிகள் விளம்பரம்னு அள்ளி விட்டு ஒரு பொய்யான இமேஜை வளர்த்துக்கிட்டே வந்துட்டாரு.
எமர்ஜென்சி காலத்துல தூர்தர்சன் மட்டும் தான். ஆல் இண்டியா ரேடியோ மட்டும் தான். இருந்தததெல்லாம் நாலஞ்சு பிரிண்ட் மீடியா. எல்லாத்துக்கும் வாய்ப்பூட்டு போட்டு வச்சிருந்தாய்ங்க. ஆனால் அடுத்து வந்த தேர்தல்ல என்ன ஆச்சு?
இன்னைக்கு நிலைமை என்னனு நான் சொல்லத்தேவையில்லை. அந்த காலத்துலயே தோத்துப்போன வியூகம் இது. நம்ம மாறனும், ராஜாவும் செய்த வேலைக்கு தொலை தொடர்பு எங்கயோ போயிருச்சு.
மோடி பெருசா ஏமாறப்போறாரு. இந்த 272 ல்லாம் வெறும கனா.  இந்த  தேர்தல்ல வந்தவரை லாபம்னு எம்.பிக்களை அறுவடை செய்துக்கிட்டு மோடிய கழட்டி விட்டுரப்போறாய்ங்க. இந்துத்வாவ ஏற்கும் இந்துக்கள் சொற்பம்.ஆனால் இந்துத்வாவ ஒட்டு மொத்த இஸ்லாம் சமுதாயமே எதிர்க்கும்.
தாராளமயம், உலகமயம்,தனியார் மயம்லாம் தோத்துப்போன சமாசாரம். சொறியர வரைக்கும் இன்பம்னு சொறிஞ்சு விட்டுட்டானுவ.இப்பமே எரிய ஆரம்பிச்சுருச்சு. பா.ஜ.கவோட பொருளாதார கொள்கைகளோட ஒப்பிடும்போது மதவாதமே பெட்டர்.

 

என்ன ஆயிரப்போகுது. ஆட்சிக்கு வந்ததும் ஏதோ ஒரு ஸ்டேட்ல தீய வச்சு -கொழுந்து விட்டு எரியசெய்து முஸ்லீம்களை ஹரர் ஆக்கி சைலண்ட் ஆக்கிருவானுவ அவ்ளதான். இதை ஒட்டு மொத்த உலகமே கண்டிக்கும். நடவடிக்கைக்கு நெருக்கும். ஒடனே வளர்ச்சி நாயகன் அவதாரம் எடுத்துருவாய்ங்க. அதான் டேஞ்சர் . ஆமாம்  மோடி கும்பலோட பொருளாதார கொள்கை அவிக மதவாதத்தை விட டேஞ்சர்.
மக்களோட வாழ்வாதாரங்கள் சிதைஞ்சா உடனடியா பாதிக்கப்படறது பெண்கள் -குழந்தைகள் தான். இருக்கிற பொம்பளல்லாம் அவுசாரி ஆகி குழந்தை குட்டியெல்லாம் புரோக்கரா மாற வேண்டி வந்துரும்.
ஆமாம் சொல்ட்டன். அப்பாறம் உங்க இஷ்டம்.