மரணத்தை வெல்ல மரணமே வழி : செவ் தோஷ பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !

நாங்கல்லாம் 1987 லயே காலேஜை விட்டு வெளிய வந்துட்டமா .. இதுல 1986 லருந்தே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டமா அதுலயும் எட்டாங்கிளாஸ் படிக்கறச்சயே படம் வரைஞ்சு கெட்ட பாடங்க எல்லாம் நடத்தின பார்ட்டி நாம. ( ஹி ஹி .. தோஸ்துங்களுக்குத்தேன்.அதும் கடா குட்டிகளுக்கு தேன்) புதுசா எதையாச்சும் மண்டையில ஏத்தனும்னா ரெம்ப கஷ்டமா கீது. பாடம் நடத்தறது ஒரு வித அவுட்லெட்டுதான் இல்லேங்கலை.

புது மேட்டருன்னா அது ஏற்கெனவே நம்ம மைண்டுல ஸ்டோர் ஆகியிருக்கிற மேட்டருக்கு தொடர்ச்சியா இருந்தாகனும் – அல்லது நெஜமாலுமே மன்சங்க வாழ்க்கைய புரட்டி போடற மேட்டரா இருக்கனும் அப்பத்தேன் அது மண்டைக்குள்ளாற போகுது.

அது சரி திடீர்னு ஏன் இந்த புலம்பலுன்னு கேப்பிக சொல்றேன். நம்முது கடகலக்னமாச்சா நாலுல சனி வந்தப்பத்துலருந்தே தாளி எப்படியாச்சும் வீட்டை விட்டு வெளியேறனும். ஊர் ஊரா சுத்திக்கிட்டு வரனும்னு ஆசை வந்துருச்சு. லேப் டாப்பு – டேட்டா கார்டுன்னு புலம்பிக்கிட்டே இருந்தம். ஒன்னும் வேலைக்காகலை.

சமீபத்துல சனி வக்ரமானாரே அப்பம் நம்ம எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா செயலாக ஆரம்பிச்சிருச்சு. என்னென்னமோ நடந்து நேத்திக்கு மவ சென்னையில இருந்து புத்தம் புது லேப் டாப் வாங்கியாந்துட்டா. அது என்னா கம்பெனி என்னா இழவு எதையும் இன்னம் பார்க்கலை.( கேட் வேன்னு ஒரு கம்பெனி இருக்கா? – ஏமாந்துட்டமா? )

நம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் காரரு கிட்டே ஓ.எஸ் போடச்சொல்லி அனுப்பினேன். அவரு யூத்தாச்சா. விண்டோஸ் 7 போட்டு விட்டுட்டாரு. நாம ஆதிகாலத்துலருந்தே எக்ஸ்பி தேன். கொய்யால கலர் கலரா இருக்கே தவிர கண்ணை கட்டுது.

லேப் டாப்லயா இந்த கீ போர்டுல என்னென்னமோ மாற்றம்லாம் செய்து விட்டிருக்காய்ங்க. நெட் கனெக்ட் ஆகி – நாம வழக்கமா பார்க்கிற சைட்டுங்களை பார்த்தாலும் கொஞ்சம் போல பழகும்னு பார்த்தா ரெம்பவே பே பே காட்டிருச்சு.

அப்பாறம் பொட்டு வச்ச பிறவு ஸ்பார்க் ஆகி லேப் டாப்போட கொடுத்திருந்த டிவிடியில இருந்த ஹார்ட் வேர்ஸ் எல்லாத்தையும் கொத்தா போட்ட பிறவு “கட்டின பசு” (சுஜாதா?)

பொஞ்சாதி முறுக்கிக்கிட்டா கூட சமாளிச்சுரலாம். இந்த கம்ப்யூட்டர் சமாசாரம் மட்டும் லொள்ளு பண்ணா செமை கடுப்பாயிருது.

( ஸ் ..அப்பாடா பந்தா பண்ணாம நாம லேப் டாப் வாங்கின கதைய சொல்லியாச்சு )

இப்பம் பதிவுக்கு போயிரலாமா/

நேத்திக்கு செவ் 7 ல இருந்து பண்ற அழும்பையெல்லாம் சொன்னேன்.அதுக்கு பரிகாரமும் ஓரளவுக்கு சொல்லியாச்சு.

இன்னைக்கு செவ் 8 ல் என்னா மாதிரி அலப்பறை கொடுப்பாருன்னு பார்ப்போம். லேடீஸ் ஃபர்ஸ்ட். இவிகளுக்கு 8 மாங்கல்ய ஸ்தானமாச்சா (அதே நேரம் ஆயுள் ஸ்தானமாவும் ஒர்க் அவுட் ஆகுதுங்கோ. என்னய்யா குழப்பறேன்னு கடுப்பாயிராதிங்க. வேணம்னா இதே வலைதளத்துல ஆண் பெண் வித்யாசம்னு ஒரு தொடர் எழுதியிருக்கேன். அதுல எட்டாம் பாவத்தை தேடி படிங்க புரியும்).

ஆக பெண் ஜாதகத்துல எட்டுல செவ் இருந்தா அவிக உசுரை மட்டுமல்லாது – அவிக ஆத்துக்காரர் உசுரையும் காப்பாத்தியாகனும். 8 = மரணம் ; செவ் = உடனடி மரணம். தெரியும்ல. காதலில் ரெண்டு வகை சைவம் ஒன்னு அசைவம் ஒன்னுன்னு ஒரு பாட்டு இருக்குது.

ஆனால் மரணத்துல மட்டும் அரை டஜனுக்கு மேலான ரகம் இருக்கு. இந்த மேட்டரை ஏற்கெனவே ஒரு தாட்டி செமை ஓட்டு ஓட்டினாப்ல ஞா. இருந்தாலும் புதுவரவுகளுக்காக சுருக்கமா ரிப்பீட்டு.

மரணத்தின் வகைகள்:

1.மன ரீதியிலான மரணம் 2.பண ரீதியிலான மரணம் 3.சமூக ரீதியிலான மரணம் 4.அரசியல் ரீதியிலான மரணம் 5.குடும்ப ரீதியிலான மரணம்.

1.மன ரீதியிலான மரணம்:

இதை எதிராளிகளின் துரோகங்கள் மட்டுமல்ல – நாம செய்ற குடி கெடுக்கும் வேலைகளும் தரலாம். ஒருவன் அடுத்தவனை கொல்லும் போது அவனிலும் ஏதோ செத்துப்போகிறது.

2.பண ரீதியிலான மரணம் :

நம்ம ஊர்ல ஒரு பார்ட்டி . ஏழை பாழைங்க கிட்ட தினசரி அஞ்சு பத்து சேகரிச்சு 100 ஆவது நாள் அதுக்கு உரிய மதிப்பிலான பொருட்களை தருவாரு. தம்மிடம் புரளும் ஊர் பணத்தை பெருக்க ஒரு தடவை ரியல் எஸ்டேட்ல போட்டுட்டாரு. (அது அந்தக்காலமுங்கோ) பணம் டம்ப் ஆயிருச்சு. அதுக்கப்பாறம் எத்தனை குரு -எத்தனை சனி மாறினாலும் மாற்றம்? ஊஹூம்.. நவகிரக தோசங்களுக்கும் அது அல்ட்டிமேட் பரிகாரமாயிருச்சு போல.

கடேசி காலத்துல ஊர் பணத்துல வாங்கி வச்சிருந்த நிலத்தை காசாக்கி அல்லாருக்கும் கொடுத்துட்டுத்தான் போனாரு மன்சன் இல்லேங்கலை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அன்னாருக்கு நிகழ்ந்தது பண ரீதியிலான மரணம் .

3.சமூக ரீதியிலான மரணம்

ஒரு அரசியல்வாதிக்கும் -பத்திரிக்கையாளனுக்கும் இடையில என்ன மாதிரி உறவு இருக்கலாம்னு ஒங்க மைண்டுல ஒரு ஐடியா இருக்கலாம்.

ஆனால் ஒரு பார்ட்டி தலீவரு வெளி நாடு போனா தன் பொஞ்சாதியோட கிளம்பிருவாரு. அவிக தங்கற கெஸ்ட் ஹவுஸ்ல வாஸ்து விவகாரமா இருக்குமுங்கோ.. தலீவர் ரூமுக்கும் – பத்திரிக்கையாளர் ரூமுக்கும் இடையில ஒரே ஒரு கதவு இருக்கும். அதை அவிகவிக தாள் போட்டுக்க வேண்டியதுதேன்.

ராத்திரியில .. அந்த கச்சாடால்லாம் நமக்கெதுக்கு. தலீவரு என்னவோ கலக்கிட்டு போய் சேர்ந்துட்டாரு. அவரு ரேஞ்சு அப்படி. ஆனால் அந்த பத்திரிக்கையாளனோட சமூகம்? அதை பொருத்தவரை ஹி ஈஸ் டெட்.அப்படித்தானே

4.அரசியல் ரீதியிலான மரணம்

கலைஞரு தீர்காயுசா இருக்கிறது சிலருக்கு இமிசை .சிலருக்கு ஆறுதல் .ஆனால் இந்த மேட்டர்ல ஒரு சொலவடை இருக்கு .அருத்தம் சொல்லமாட்டேன் “பாபி சிராயு”

ஈழத்துல தமிழின படுகொலை நடந்தப்போ தலைவரு அடக்கி வாசிச்சு ..கொய்யால வயசுல இருந்தப்போ வீணா உ.வ பட்டு ரெண்டு தாட்டி ஆட்சியை இழந்தோம் இப்பம் முதிர்ச்சி வந்துருச்சு போலன்னு தன்னை தானே பாராட்டி கூட இருக்கலாம்.

ஆனால் அது அரசியல் ரீதியிலான மரணம்னு அரசியல் அரிச்சுவடி படிச்சவன் கூட சொல்லிருவான். அப்படி அவரு பொலிட்டிக்கலா டிக்கெட் போட்டுட்டதாலதான் தீர்காயுசா இருக்காரு.

5.குடும்ப ரீதியிலான மரணம்.

பொஞ்சாதி செத்து பிழைச்சு பெத்து போட்டு கிழிஞ்ச நாரா படுத்து கிடக்கா. வீட்டுக்காரரு ஒரு நாலணா பார்ட்டிய தள்ளிட்டு வந்து தெரு நடையில வேலை எடுக்கிறாரு. இதை பார்த்துட்டு அந்த மகராசி நல்ல தங்காள் கணக்கா எல்லா குழந்தைகளையும் இழுத்துக்கிட்டு பச்சை மண்ணை தூக்கிட்டு கிணத்தை தேடி போறா. நல்ல வேளையா சாகலை தான்.

ஆனால் அந்த ஆசாமிய பொருத்தவரைக்கு அந்தாளு குடும்ப ரீதியா செத்து போயிட்டாரு. பிள்ளைங்க தலை எடுத்து அந்தாளுக்கு உட்ட ரவுசை எல்லாம் சொன்னா சிரிச்சு சிரிச்சு வவுறே புண்ணா போவும்.
அதெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல ..

இது மட்டுமில்லிங்கனா மரணமே போன்றவைன்னு ஒரு பட்டியல் இருக்கு. அதை கீழே பாருங்க..

1.சிறைப்படுதல் 2.தலைமறைவாதல் 3. நிராகரிப்பு 4.பிரிவு 5.அங்கீகாரமின்மை 6.இருட்டு 7. நெருங்கியவர்களை விட்டு வெகு தொலைவில் இருத்தல்

மேற்படி பட்டியல்ல ஏதேனும் ஒன்னு ரெண்டை வாலண்டியரா சூஸ் பண்ணிக்கிட்டு ஓன் பண்ணிக்கிட்டா போதும் செவ்வாய்க்கு டேக்கா கொடுத்துரலாம். இப்பயும் எரியாதவுக நாளை வரை காத்திருங்க.விளக்கி சொல்றேன்.

ஓகேவா ..உடுங்க ஜூட்டு ..

திருமணத்தடை : சோதிட ஆய்வு

அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம்.

9 என்றால் அப்பா. “அம்மா என்றால் அன்பு -அப்பா என்றால் அறிவு”ன்னு பாட்டெல்லாம் இருக்கு. “அன்னையும்,தந்தையும் முன்னறிவு தெய்வம்”னு சொல்றாய்ங்க.

எல்லாம் கரீட்டுதான். அதே சமயம் “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”ன்னும் சொல்லி வச்சிருக்காய்ங்க இல்லியா.

நான் மட்டும் எங்கப்பா சொன்ன மாதிரியே ஆறாங்கிளாஸ்ல காம்போசிட் மேத்ஸ் ஆப்ட் பண்ணியிருந்தா பத்தாங்கிளாஸ் தாண்டியிருக்கமாட்டேன்.

இன்டர்ல பைபிசி ஆப்ட் பண்ணியிருந்தா இன்டர் தாண்டியிருக்கமாட்டேன். 1987 ல அவர் வாங்கிட்த்தந்த வேலையில தொடர்ந்திருந்தா இன்னைக்கு மணியார்டருக்கு நாலணா கணக்குல 3 மாசத்துக்கு 4000 மணியார்டரு எழுதி ரெம்யூனரேஷன் வாங்கிக்கிட்டிருந்திருக்கனும்.

அப்பா சொன்னாப்ல ராத்திரி ஒன்பதுக்கெல்லாம் ஊட்டுக்கு போயிருந்தா உலகமே தெரிஞ்சிருக்காது ( ஐ மீன் உலகத்தோட இன்னொரு முகம் தெரிஞ்சிருக்காது)

அப்பா சொன்னாப்ல முதலியார் பெண்ணை கட்டியிருந்தா 6 மாசத்துல விவாகரத்து ஆகியிருக்கும்
( நமக்கு களத்ர ஸ்தானாதிபதி சனி )

இதை எல்லாம் ஏன் பட்டியல் போடறேன்னா லக்னாதிபதி 9 ல உள்ளவுக மேல அப்பாவோட இம்பாக்ட் அதிகம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். அப்பாங்கறவரு 25 வருசத்துக்கு மிந்தின டெலிஃபோன் டைரக்டரி மாதிரி .அதை ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு என்னா பண்றது?

இந்த மாதிரி கேஸுங்க சுயம் இல்லாம, சுய சிந்தனை இல்லாம, சுய தொழில் இல்லாம காலத்தை தள்ளிரவும் வாய்ப்பிருக்கு.

“மாப்ளை என்ன பண்றாரு?”
“அவிக அப்பாவுக்கு நிறைய சொத்திருக்கு .. மாப்ளை அப்பாவுக்கு உதவியா இருக்காரு”

இந்த கான்வர்சேஷனுக்கு அப்புறம் பெண்ணை பெத்தவன் நிப்பானா?

இங்கன ஒரு உபகதை. ஒரு நல்ல வசதியான குடும்பம். அண்ணன் டம்மி. தம்பி அம்மி. தம்பி காரன் அப்பாவுக்கு துணையா இருந்து அப்பாவோட யாவாரத்தை எல்லாம் தூக்கி நிறுத்தினான். அப்பாவுக்கு தம்பிக்காரன் மேல அஃபெக்சன் வருமா வராதா? அண்ணன் காரன் மேல கடுப்பு இருக்குமா இருக்காதா?

பார்த்தான் அண்ணன் காரன். என்னால முடியாததை என் பொஞ்சாதி சாதிக்கட்டும்னு கட்டின பொஞ்சாதிய “விட்டு” சாதிச்சுட்டான். தம்பிக்கு அல்வா கொடுத்துட்டாய்ங்க.

அடுத்து 9 ஆமிடம் தொலை நோக்கை காட்டும். தொலை நோக்கோடு செயல்படறவுகளை பார்த்தாலே இந்த குட்டிங்களுக்கெல்லாம் டர்ரு.

ஏன்னு கேளுங்க. இவன் திட்டம்லா எப்ப சக்ஸஸ் ஆறது? எப்ப பலன் தர்ரது.. நாம எப்ப நாலு பேரு மாதிரி வாழறதுன்னு டர்ராயிருவாய்ங்க.

“மாப்ளை என்ன பண்றாரு?”
“பலான கம்பெனியில இருக்காரு.மாசம் பொறந்தா சுளையா பத்தாயிரம் சம்பளம்”

“மாப்ளை என்ன பண்றாரு?”
“சொந்த யூனிட் வச்சு ஸ்ட்ரகிள் பண்ணிக்கிட்டிருக்காரு.எதிர்காலத்துல ஓஹோன்னு வருவாரு”

இந்த ரெண்டு கான்வர்சேஷன்ல எது சக்ஸஸ் ஆகும்னு சொல்லனுமா என்ன? ஏன்னா பெண் வீக்கர் செக்ஸ்.அவளுக்கு இந்த மாசத்து மளிகை கடை பாக்கி இந்த மாசமே தீர்ந்துருமா – அடுத்த மாசம் பலசரக்கு பிரச்சினை இல்லாம வீட்டுக்கு வந்து இறங்குமாங்கறது தான் முக்கியம்.

அடுத்து இந்த 9 ஆம் பாவம் தான் சேமிப்பு,முதலீடு இதையெல்லாம் காட்டும். இது மேல எல்லாம் ஆர்வம் உள்ளவன் அவ்ள சீக்கிரம் கண்ணால மேட்டர்ல கமிட் ஆகமாட்டான். இதனாலயும் தாமதமாகும்.

அதே போல இந்த பாவம் தொலை தொடர்பை காட்டும் ஐ மீன் தூர தேச தொடர்புகள். இந்த மேட்டர்லயும் பெண்களுக்கு அந்த அளவுக்கு ஆர்வமிருக்காது. நம்ம வீடு , நம்ம அப்பார்ட்மென்ட் தாண்டி ரோசிக்கவே மாட்டாய்ங்க

அடுத்து இந்த 9 ஆமிடம் பூஜை புனஸ்காரம் ஆன்மீக குரு இத்யாதியை எல்லாம் காட்டும். தாய்க்குலத்தை பொருத்தவரை நாலு தெரு தள்ளியிருக்கிற கோவில் ஓகே. போனோமா சாமிய பார்த்தமா – சாமிய பார்க்க வந்தவள்களோட நெக்லெஸ்,புடவை,சுடிதார் டிசைன்ஸை பார்த்தமான்னு வீடு திரும்பிர்ராப்ல இருந்தா ஓகே.

அதை விட்டுட்டு இறை – மறை மந்திரம் உருவேத்தறேன்-குருவை தேடறேன்னு பினாத்திக்கிட்டிருந்தா மறை கழண்ட கேஸுன்னு ஃபேமிலி கோர்ட்டுக்கு போயிருவாய்ங்க. ( நம்முது ஏதோ லவ் மேரேஜுங்கறதால போக்கிடம் இல்லாததால வண்டி ஓடிருச்சு)

ஆக லக்னாதிபதி 9 ல இருந்தா 9 ஆம் பாவ காரகத்வங்கள் மேல அதீத ஆர்வம், பிடிப்பு காரணமாவே திருமணம் தடை படவும் -தாமதமாகவும் ,திருமண வாழ்க்கையில சிக்கல் வரவும் வாய்ப்பிருக்குங்கோ. இதுக்குண்டான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம்.

லக்னாதிபதி 8 ல் நின்றால் திருமணத்தடை எப்படி நிகழும்னு ஏற்கெனவே விலாவாரியா எழுதினது ஞா இருக்கு.ஆனால் ஒரு சில விஷயங்கள் விடுபட்டுட்டதா ஒரு ஃபீலிங் .அதனால என் திருப்திக்கு ஒரு ஃபினிஷிங் டச்.

லக்னாதிபதின்னா ஜாதகரு. எட்டுன்னா மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி 8 ல இருந்தா ஜாதகர் செத்துப்போயிருவாருன்னு சொல்லப்படாது.

இதுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு.ஜாதகர் தனியா இருக்கலாம்.தனிமைப்படுத்தப்படலாம். ஏழ்மை, நிராகரிப்பு,இருட்டு, வீண் பழி, ஊரை உறவை பிரிந்து வாழறது, கடினமான உடல் உழைப்புன்னு ஏதோ ஒரு வகையில லக்னாதிபதி 8 லிருந்து வேலை கொடுத்துருவாரு.

எட்டுல நிக்கிற எந்த கிரகமானாலும் ரெண்டை பார்க்கும். ரெண்டு வாக்குஸ்தானம். ஜாதகர் எந்த அளவுக்கு கசப்பான அனுபவங்களை பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவரோட பேச்சும் இருக்கும். நட்போ,உறவோ,வியாபாரமோ,உத்யோகமோ எல்லாத்துக்கும் அடிப்படை வாக்கு. வாக்கு சரியில்லின்னா சனம் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிப்போயிருவாய்ங்க. அல்லது பல்லு மேலயே போடுவாய்ங்க. நட்பு,உறவு,வியாபாரம்லாம் கோவிந்தா..

எட்டுங்கறது இன உறுப்பை கூட காட்டும். தன்/ தான் விரும்பும் நபரின் இன உறுப்பை மட்டும் ஒருத்தன் விரும்பறான்னா அது கொய்ட் அப் நார்மல். மேலும் இவிக நிறைய சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணுவாய்ங்க. உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்கெல்லாம் ப்ரைவசிம்பாய்ங்க.

இப்படியெல்லாம் ஒரு லைஃபை லீட் பண்ற பார்ட்டிக்கு கண்ணாலம் தடை படலின்னாதான் ஆச்சரியம். லக்னாதிபதி 8 ல் நின்னா எப்படிப்பட்ட பரிகாரங்களை செய்துக்கனும்னு ஏற்கெனவே விவரமா சொல்லியிருக்கன். ஞா இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே திருமணத்தடை ஆண்மை இழப்புன்னு தேடிப்பிடிங்க.

டவுட்டு:
ஆமா இன்னைக்கு வாரத்துல மொத நாளாச்சே அரசியல் பதிவுதானே போடனும்.. இதென்ன அக்மார்க் சோசியபதிவு ?

ஆண்மை இழப்பு : பரிகாரம் 5

ஆண்மை இழப்பு : பரிகாரம் 5

அண்ணே வணக்கம் ! டைப்படிச்சவன் கீபோர்டை கெடுத்தான் .க்ளிக் பண்ணவன் மவுசை கெடுத்தாங்கறாப்ல எம்மாம் நெல்ல ஜாதகத்துல பிறந்தாலும் நாறிப்போறவுக இருக்காய்ங்க. அதுலயும் இந்த கண்ணாலம் – கில்மா மேட்டர்ல நிறையவே நாறிப்போறாய்ங்க.

இந்த செனேரியோல லக்னாதிபதி எங்கே இருந்தாலும் ஆண்மை இழப்பு – கண்ணாலத்தடைக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதையடுத்து பரிகாரங்கள் சொல்லிட்டு இருக்கேன். நேத்திக்கு லக்னாதிபதி 1 டு 5 பாவங்கள்ள இருந்தா என்ன பரிகாரம்னு சொல்லியிருந்தேன். இன்னைக்கு லக்னாதிபதி ஆறுல இருந்தா என்ன..ஏதுன்னு பார்ப்போம்..

குறள்னு சொன்னதுமே அறம் ,பொருள்,இன்பம் ஞா வரும். அண்ணான்னதுமே கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஞா வரும்.

ஆறாம் பாவம்னதும் ஞா வரவேண்டியது சத்ரு,ரோகம்,ருணம். லக்னாதிபதின்னா தெரியும். ஜாதகர். ஜாதகரை காட்டும் லக்னாதிபதி சத்ரு,ரோகம்,ருணங்களை காட்டும் 6 ஆமிடத்துல நின்னா என்ன ஆகும்?

மேற்படி சத்ரு,ரோகம்,ருணங்கள் ஜாதகரின் வாழவில் இருந்து பிரிக்க முடியாத அம்சங்களாயிரும்.”பகைவர்க்கருள்வாய் நெஞ்சே”ன்னு சொன்னது பகை நம் ஸ்தூல வாழ்வை கெடுக்கிறது கெடுக்காதது அப்பாறம் கதை. பேசிக்கலா நம்ம மன் ஓட்டத்தை -ரத்த ஓட்டத்தை -பாடில நடக்கிற மெட்டஃபாலிசத்தையே மாத்திரும்.

அதனாலதேன் பகைவனுக்கருள்வாய் நெஞ்சேன்னு அந்த சப்ஜெக்டையே கழட்டி விட்டுட்டாய்ங்க. ஜா.ரா என்னை எதிரியா நினைக்கிறாருன்னா அது அவரோட பிரச்சினை. நான் ஜா.ராவை எதிரியா நினைச்சுட்டா அது என் பிரச்சினை ஆயிருது.

கடனை பத்தி சொல்லனுமா? கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னுட்டு கம்பரே சொல்லிப்புட்டாரு.

நோய் மேட்டர்ல வர்ரதுக்கு அது வர்ரதுக்கு மிந்தியே அலார்ட் ஆயிக்கிறது பெட்டர். லக்னாதிபதி 6 ல கீறாருன்னு தெரிஞ்ச அதே கணத்துலருந்து இதனோட சீரியஸ்னெஸ்ஸை புரிஞ்சிக்கிட்டு ஒரு 6 மாசம் லைஃப் ஸ்டைல மாத்திக்கிட்டா போதும். எல்லாமே பளிங்கு மாதிரி துல்லியமாயிரும்.

இந்த கிரக நிலை உங்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் 3

1.நீங்க நோயாளியாகனும்
2.கடனாளி ஆகனும்
3.வழக்கு வில்லங்கம்னு அல்லாடனும்

இந்த 3 ல எது பெட்டர்னு பார்த்து ச்சூஸ் பண்ணிக்கிர வேண்டியதுதேன். எந்த தொழில்ல உங்க க்ளையன்ட்ஸ் நோயாளி,கடனாளி அ விவகாரமுள்ளவுகளா இருப்பாய்ங்களோ அப்படியா கொத்த தொழிலை ச்சூஸ் பண்ணிக்கனும்.

ஒவ்வொரு நாளையும் கடன்ல ஆரம்பிக்கனும் ( இல்லாட்டி கடன்ல முடியுங்ணா) பட்டிமன்றங்களுக்கு போங்க.முடிஞ்சா கலந்துக்கங்க.

அதுவும் கஷ்டம்னா தினசரி ரெண்டு வெள்ளை பேப்பர் எடுத்துக்கிட்டு ஒரே விஷயத்துக்கு அனுகூலமா ஒரு பக்கம் பிரதிகூலமா ஒரு பக்கம் எழுதி ஃபைல்ல போட்டுக்கிட்டே வாங்க. உ.ம் பால்யமணம் நல்லது /பால்ய மணம் கெட்டது

ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க. வீம்புக்கு கெட்ட பழக்கங்களை தொடராதிங்க
( பான்,பீடா,பீடி,சிகரட்,வெத்தா தின்னு தூங்கறது ,ஸ்ட்ரெஸ் )

மொக்கை:
அது சரி .. ஊர் உலகத்துல கண்ணால மேட்டர்ல கசாப் ஆறவுக மேல உனக்கென்னப்பா அக்கறைன்னு கேப்பிக சொல்றேன்.

க்ளோபலைசேஷன் காரணமா ஒரு சிங்கிள் பர்சன் நெல்லாருக்கனும்னா கூட டோட்டல் உலக மக்கள் நெல்லாருக்கனும்.

ஜான்.எஃப்.கெனடி சொன்னாராம். இந்த உலகத்துல வறுமைங்கறது ஏதோ ஒரு மூலையில் சிறிய அளவே இருந்தாலும் அது உலகம் பூரா பரவ ரெம்ப நாளாகாது.

வறுமையே இம்மாம் சீக்கிரம் பரவுதுன்னா மனித மனங்களிலான அதிருப்தி – அசாந்தி -சமூகத்துல எவ்ள சீக்கிரம் பரவும்னு ரோசிச்சு பாருங்ணா.

மனிதனை மனிதனா உலாவ அனுமதிக்கிறதே பொஞ்சாதி புள்ளைக்குட்டிங்கற மேட்டருங்கதான். இதுலயும் தாளி ஆப்பாயிட்டா அவன் வெடிகுண்டை விட ஆபத்தானவன்.

அதானலதேன் இந்த மேட்டரை நை நைன்னு எளுதிக்கிட்டிருக்கேன். நாளைக்கு 7 ஆம் பாவத்தை பார்ப்போம்.

ஆண் பெண் வித்யாசம்: 8 ஆம் பாவம் (5)

வாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி.Read More

ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் -முடிவுரை

அண்ணே ! வணக்கம்ணே ..
சுகுமார்ஜி ‘என்ன நீங்க நான் பேச நினைப்பதையெல்லாம் நீ(ங்கள்) பேச வேண்டும்னு நான் கேட்கவே இல்லை. நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருந்தா எப்டினு கோச்சுக்கறாரு.அதனால இந்த பதிவோட 7 ஆம் பாவத்துக்கு டாட்டா. Read More

அம்மா மகள் உறவு : மனவியல் பார்வை

( ஆண் பெண் 12 வித்யாசங்கள் : 4 ஆம் பகுதி தான் இப்படி ஒரு முகமூடியோட வருது)

அண்ணே வணக்கம்ணே,
அவன் அவள் அது தொடர் பாதில நிக்குது. ஆண் பெண் 12 வித்யாசங்கள் தொடரும் அதே கதிதான். ரெண்டு எதை எழுதலாம்னு சின்னதா டைலமா. ஆண் பெண் 12 வித்யாசங்கள்ள எத்தீனியாவது அத்யாயத்தை எழுதனும்னு பார்த்தா நாலு.

சரியான பாதையில போறவன் (?) லைஃப்ல துண்டு துக்கடா – முரண் பாடுகளுக்கே இடம் கிடையாது. எல்லாமே எடிட்டட் மூவி மாதிரி சல்லுனு போவுமாம் ( ஓஷோ) அம்மான்னா என்ன ஆத்தான்னா என்ன ? அல்லாம் ஒன்னுதேன்.

ஜாதகத்துல நாலாவது இடம் அம்மாவத்தானே காட்டுது. அம்மாங்கற மேட்டர்ல ஆண் குழந்தைக்கும்,பெண் குழந்தைக்கும் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

அப்பன் காரன் மகனை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவனும் பெரிய எழுத்தாளனா வரனும்) அம்மாக்காரி மகளை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவளுக்கு தலைமுடி அடர்த்தியா வரும்போல) மேம்போக்கானது.

ஆக்சுவலா அப்பன் காரனை பொருத்தவரை மகள் இவன் மனைவியின் மறுபதிப்பு. அம்மாக்காரிய பொருத்தவரை மகன் இவளோட கணவனின் மறுபதிப்பு. ப்ரூஃப் ரீடிங் லெவல்ல இருக்கிற புஸ்தவம் மாதிரி .

பேசிக்கலா இருக்கக்கூடிய ஆப்போசிட் செக்ஸ் அட்ராக்ஷன் ஒரு பக்கம் இந்த மறுபதிப்பு மேட்டர் இன்னொரு பக்கம். இதனால ஆட்டோமெட்டிக்கா அம்மா பையன் பக்கம் சாய, அப்பன் மகள் பக்கம் சாயறான்.

அப்பா மகன் ரிலேஷன் வேறு விதம். ஹேட் அண்ட் லவ்ம்பாய்ங்களே அந்த மாதிரி மகனோட வளர்ச்சி அப்பனை குஜிலியும் ஆக்கும். ஓவரா வளர்ந்துட்டா ஒரு பொறாமையும் வரும். ( தான் 50 வயசுல வாங்கின சம்பளம் 12 ஆயிரம் – பையன் 22 வயசுல சாஃப்ட் வேர்ல வாங்கற சம்பளம் ஒரு லட்சத்து ரெண்டாயிரம்னா பொறாமையால பொசுங்கி போயிருவான்)

என்னதான் அப்பன் மகனா இருந்தாலும் பேசிக்கலா சேம் செக்ஸ். ரெண்டு பேருமே கடா தானே. ஆட்டோமேட்டிக்கா ஒரு போட்டி மனப்பான்மை இருக்கத்தான் செய்யும்.

பையன் சாதனை படைச்சு – அம்மாக்காரி அவனுக்கு பாயாசம் பண்ணித்தர்ரப்ப மேலுக்கு சந்தோஷமாவே ஃபீல் பண்ணாலும் சப் கான்சியஸா தாளி ப்ரமோஷனுக்காக நான் டைப் ரைட்டிங் ஹையர் பாஸ் பண்ணப்ப இவள் சர்க்கரை இன்னா விலை விக்குதுன்னு சொன்னாளேங்கர பாய்ண்ட் ஞா வரும்.

அம்மா பொண்ணு மேட்டருக்கு வரும்போது ஒரு பக்கம் கணவனாலயும் ( பசங்க வளர்ந்துக்கிட்டு வர்ர சமயம் ஆட்டத்தை குறைச்சுக்கனுங்கற எண்ணம்) , இன்னொரு பக்கம் டீன் ஏஜ் பையனாலயும் தள்ளிவைக்கப்பட்ட அம்மாவும் –

( பல கேஸ்ல அம்மாவே ரிஜெக்ட் பண்ணுவாய்ங்க – தத் .. எருமை மாடு மாதிரி வளர்ந்துட்ட.. துடைப்பக்கட்டையாட்டம் மீசை வச்சிருக்கேன். இன்னமும் மம்மி ஜிம்மின்னு கொஞ்சிக்கிட்டு தள்ளி நில்றா)

பொண்ணு வயசுக்கு வந்துட்டா இன்னமும் பழைய மாதிரி கொஞ்சி குலவிட்டிருக்கக்கூடாதுன்னு அப்பனால தள்ளி வைக்கப்பட்ட மகளும் காம்ரெட்ஸ் இன் டெஸ்ட்ரஸ் மாதிரி விதியில்லாத குறைக்கு சேர்ராய்ங்க.

இதுக்கு மேலயும் அம்மா – பொண்ணு ரிலேஷனை பத்தினட் சைக்கலாஜிக்கல் உண்மைகளை நான் சொன்னா செருப்பாலடிப்பாய்ங்க. ஏதோ என் நல்ல நேரம் டாக்டர் ஷாலினி ஏற்கெனவே எழுதிட்டாய்ங்க. அம்மா – பொண்ணுக்கிடையிலான உறவு சக்களத்தி உறவுதேன். இதை டாக்டரம்மா க்ளீனா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு வச்சுட்டாய்ங்க.

அவிக பாதிவேலையதான் பார்த்திருக்காய்ங்க. மீதி வேலையயாவது நாம பார்க்கனுமில்லியா. டாக்டரம்மா சொன்ன மேட்டரு பிஃபோர் மேரேஜ் வரை ஓகே. ஆஃப்டர் மேரேஜ்?

இந்த பெண்ணுக்கு கண்ணாலமாகிற வரை அப்பா அம்மாவுக்கு கொடுக்கிற முக்கியத்துவம், காட்டற அன்பு இத்யாதிதேன் தெரியும். அதனால ஒரு வித பொறாமை. சக்களத்தி தனமான ஃபீலிங்.

ஆனால் ஆஃப்டர் மேரேஜ் அம்மா தன்னோட புருசனால என்னெல்லாம் இம்சை பட்டுருப்பாய்ங்கனு அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கிடறா. ரியலைஸ் ஆகறாள்.

அடடா இதெல்லாம் தெரியாம பாவம் அம்மாவை ரெம்பவே இம்சை படுத்திட்டம் போலிருக்கேங்கற கில்ட்டியிலதான் இந்த பொஞ்சாதிங்கல்லாம் அம்மா அம்மான்னு அனத்தறாய்ங்க.

இது ஒரு ஆங்கிள். இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா மகளோட கண்ணாலத்துக்கப்பாறம் அம்மா தன் மகள் மேல கட்டுப்பாட்டை முழுக்க இழந்துர்ரா. என்னடி இது பொட்டை இத்துனூண்டு வச்சிருக்கேன்னா “அவருக்கு இப்படி இருந்தாதான் பிடிக்குது”ன்னுட்டா மேட்டர் ஓவர்.

எந்த உறவுல ஒருத்தர் இன்னொருத்தரை கட்டுப்படுத்தறதில்லையோ அந்த உறவு நீடிக்கும். நிலைக்கும். தித்திக்கும்.

இன்னொரு ஆங்கிள்ள பார்க்கும் போது கண்ணாலத்துக்கப்பாறம் மகள் தன் தாயை இழந்துர்ரா. ஒரு பொருளை இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமையே தெரியும்.

ஒன் மோர் ஆங்கிள் ; இவிக சேர்ந்திருக்கக்கூடிய நேரம் குறைஞ்சு போகுது. பெட்டியை கீழே வைக்கும் போதே புறப்படற நேரத்தையும் பொண்ணு அறிவிச்சுர்ராளே.

நாடகம் , சினிமால்லாம் சக்ஸஸ் ஆக காரணமே டைம் லிமிட் தேன். 365 நாளைக்கு ஓடறாப்ல சினிமா எடுத்தா எடுத்தவனே பார்க்கமாட்டான்.

சீரியல் வெற்றிக்கு காரணம் அதுவும் ஹ்யூமன் லைஃப் மாதிரி அடுத்து என்னங்கறதை சஸ்பென்ஸுல திராட்டுல விட்டுர்ரதுதேன்.

இப்படி திராட்டுல விடும்போது சஸ்பென்ஸே பிடிக்காத மூளை ஃபில் அப் தி ப்ளாங்ஸ் செய்துக்குது. நேர்ல பார்த்த ஆன்டிய கனவுல துரத்த காரணமும் இதுதேன்.

மனித மனம் முழுமைக்கு ஆசைப்படுது. குடிக்கிறவன்,அடிக்கிறவன், ஊழல் பண்றவன்லாம் இந்த முழுமைக்கான துடிப்புலதேன் பெருசா செய்து மாட்டிக்கிறான். ஓகே ஓகே மொக்கை போதும் பாய்ண்டுக்கு வந்துர்ரன்.

ஏதோ மகளுக்கு ஒரு சில பிரத்யேக உடல் உபாதைகள் ஏற்படும்போது உபசாந்திக்கு த்ர்ர ஒத்துழைப்பு ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தலாம் தான். இல்லேங்கலை. ஆனால் இந்த மேட்டர்ல அம்மாக்காரிக்கே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இது பொண்ணுக்கும் ஒட்டிக்குது.

மேலும் மகள் மேட்டர்ல அம்மாவுக்கு கிடைக்கிறது கார்ட் ட்யூட்டி. இந்த மாதிரி பல காரணங்களால திருமணத்துக்கு முன்னான அம்மா -மகள் உறவு ஸ்பெக்ட் ரம் மேட்டருக்கு பின்னான காங்கிரஸ் திமுக கூட்டணி மாதிரி தேன் இருக்குது.

கண்ணாலத்துக்கப்பாறம் மேற்சொன்ன காரணங்களால அம்மா -மகள் இடையில வயர்லெஸ் கனெக்சனே ஏற்பட்டு போகுது. இந்த வயர்லெஸ் கனெக்சன் ஏதோ ஒரு அளவோட நின்னா பரவால்லை. பல குடும்பங்கள்ள கும்மியடிச்சுருதுங்கண்ணா.

நம்மாளுங்க வேற பலான மேட்டர்ல கோட்டையை விட்டாய்ங்கன்னா ஃபினிஷ். அவள் பிறந்த வீட்ல சோறில்லையா,டிவி இல்லையா, டிஷ் இல்லியா என்ன இழவுக்கு அந்த வீட்டை ஒட்டு மொத்தமா வெட்டிக்கிட்டு இங்கன வந்தா? கில்மாவுக்காகத்தானே. ( ஐ மீன் அட்லீஸ்ட் எப்பயோ வாரத்துக்கு ஒன்னு ரெண்டு தாட்டியாச்சும் -ஆவரேஜா – )

அந்த கில்மாவுக்கே ஆப்புன்னா ஆட்டோமெட்டிக்கா பொஞ்சாதிங்க மனசு அம்மா பக்கம் சைடு வாங்கிரும். அப்பால ஷாட் கட் பண்ணா அம்மாக்காரி இவளுக்கு பேன் பார்க்க இவள் இவள் மனசுல இருக்கிற பாம்புகளையெல்லாம் எடுத்துவிட மகளிர் காவல் நிலையம் ,ஃபேமிலி கோர்ட்டு

காரணம் எதுவா வேணம்னா இருந்துட்டு போகட்டும் ஒரு பாவம் நாலஞ்சு காரகத்வத்தை கொண்டிருக்கும்போது ஒரே காரகத்வத்து மேல அட்டாச்மெண்டை வளர்த்துக்கிட்டா மத்த காரகத்வமெல்லாம் ஆட்டோமெட்டிக்கா டிம் அண்ட் டிப் அடிக்க ஆரம்பிச்சிரும்.

அந்த அம்சங்கள் என்னங்கறதை மட்டும் சொல்லி இந்த பகுதியை முடிக்கிறேன்.ஒரு பெண் தன் தாய்க்கு -தாய் வீட்டுக்கு கொடுக்கிற அமிதமான இம்பார்ட்டன்ஸால இதெல்லாம் எப்படி பாதிக்கப்படுதுங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன்.

அதீத தாய் – தாய் வீட்டு பாசத்தால் பாதிக்கப்பட கூடிய நான்காம் பாவத்தின் இதர காரகத்வங்கள்:

வீடு,வாகனம்,கல்வி, இதயம்,கற்பு,பாசத்துக்குரியவர்கள்

திருமணவாழ்வில் சிக்கலா?

அண்ணே வணக்கம்ணே,
அவன் அவள் அதுன்னுட்டு பெருசா ஆரம்பிச்சு டீல்ல விட்டாச்சு. இடையில ஒரு தாரம் ரெண்டு தாரம் 3 தாரம்னு மண வாழ்வில் சிக்கல்களை பத்தி எழுத ஆரம்பிச்சிட்டன்.

ரெண்டுத்துக்கும் என்னா சம்பந்தம்? ஆத்தா எதுக்கு இப்படி நம்மை டைவர்ட் பண்றாள்னு ரோசிச்சன். நான் பந்தாவா அல்லா தாய்குலமும் சக்தியோட அம்சம் – ரஜினி ரசிகன்ல ஏதோ ஒரு ஆங்கிள்ள ரஜினி தெரிஞ்சுர்ராப்ல ஒவ்வொரு பெண்ணிலும் ஏதோ ஒரு ஆங்கிள்ள ஆத்தாவை பார்க்க முடியுது.

காதலன் – காதலி, கணவன் – மனைவி ரிலேஷன்ல ஸ்தூலமா பார்த்தா அந்த உறவு அஞ்சு நிமிச உறவாத்தான் தோணும்.

ஆனால் ஒவ்வொரு காதலனும் – ஒவ்வொரு கணவனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல காதலியை – மனைவியை அம்மாவா ஃபீல் பண்றான்.

இன்னைக்கு குட்டிங்கல்லாம் லவரை டா போட்டுத்தான் பேசுதாம். “டா” போடறான்னா அவள் இவனை தன் மகனா ஏதோ ஒரு அணுவுல உணர்ராள். இவன் அதை கேட்டுக்கறான்னா இவன் அவளை ஏதோ ஒரு அணுவுல தாயா உணர்ரான்.

“சக்தி இருந்தா செய். இல்லைன்னா சிவனேனு கிட”ங்கற பாய்ண்டை ஆல்ரெடி சொல்லியிருக்கேன். (உபயம்: வாரியார்) . சக்தி இருந்தாதான் சிவன் செயல்பட ஆரம்பிக்கிறார். சக்தியை (பெண்ணை) எதிர்பார்த்துத்தான் ஆணோட கல்வி, வேலை தேடல், எல்.ஐ.சி,சீட்டு எல்லாமே நடக்குது. சக்தியின் வரவுல சந்தேகம் ஏற்படறச்ச அந்த பயத்துல தான் பான்,பீடா,ஜரிதா,குட்கா,கஞ்சா,தண்ணின்னு ஆண் டைவர்ட் ஆகறான்.

ஒரு ஆண் எத்தனாம் பெரிய மேதையா, விஞ்ஞானியா, வித்வான், வெல்வெட்டா இருந்தாலும் அவன் வாழ்க்கையோட மையப்புள்ளி பெண். அவள் சக்தியின் வடிவம். ஒரு பெண் அவள் என்னதான் அடங்கா பிடாரியா, பஜாரியா, நாலணா தேவடியாளா இருந்தாலும் அவளுக்குள்ள சக்தியின் அம்சம் இருக்கு.

ஆண் சிவனோட அம்சம். இவன் செயல்படனும்னா தாளி சக்தி 32 வயசு தூரத்துலயாவது இருக்கனும். இல்லாட்டி உலக இயக்கமே தடை பட்டு போயிரும்.

இன்னைக்கு திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் ஆன்,பெண் உறவையே – திருமண அமைப்பையே சந்தேக கண் கொண்டு பார்க்க வச்சிருது. உள்ளே இருக்கிறவன்லாம் “செமர்த்தியா மாட்டிக்கிட்டோமோ?”னு சந்தேகப்படறான். வெளிய உள்ளவன் விவரமில்லாம ” உள்ளாற எக்ஸ்ட்ரா சேர்னா கிடைக்காதா? ” ன்னு தவிக்கிறான். இவனை உள்ளே விட்டா இவனும் கலைஞரின் இளைஞன் படத்தை பார்த்து அரண்டு போன மாதிரி எப்படா கேட் திறக்கும்னு தவிக்க ஆரம்பிச்சுர்ரான்.

கடவுள் சச்சிதானந்த ஸ்வரூபன். அவனோட நேரடி வாரிசு ஆண்.பெண்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அதனாலதான் ஆண் பெண்கள் ஆனந்தத்தை தேடறாய்ங்க. சத்+சித்+ஆனந்தம்

“சத்” என்றால் நல்ல /மஷ்டு நீங்கிய – தமோ ,ரஜோ வரிசையில் வர்ர சத்வ குணம்
“சித்’ என்றால் மனம்
“ஆனந்தம்”னா ஐங்கரன் இன்டர் நேஷ்னல்ஸ் தயாரிச்ச படம்

மனதில் உள்ள மஷ்டு நீங்கனும்னா அவை எல்லாம் வெளிபப்டுத்தப்படனும். மனித மனதில் உள்ள தமோ,ரஜோ குணங்கள் நீங்கனும்னா அவை முழுகக் முழுக்க எக்ஸாஸ்ட் ஆகனும். அப்பாறம் தேன் சத்வ குணம் வெளிப்படும்.

அதுக்கு மவனே உன் ஈகோ ஆத்தா காலடியில ராட்சசன் கணக்கா நசுங்கனும் – உன் ஈகோவை உயிரினும் மேலா போற்றி பாதுகாக்கிற நீ .அதுமேல ஈ எறும்பு உட்கார்ந்தா கூட பதறிப்போயிடற கேஸு. அடுத்தவன் வந்து உன் ஈகோவை சீண்டினா பராசக்தியில சிவாஜி மாதிரி பக்கம் பக்கமா வசனம் பேச ஆரம்பிச்சுருவ.
மனோகரால சிவாஜி மாதிரி பொங்கி எழுந்துருவ – உனக்குள்ள இருக்கிற மிருகத்துக்கு கட்டப்பட்டிருக்கிற சங்கிலியெல்லாம் தெறிச்சு விழுந்து அதகளமாக்கிருவ.

முக்கியமா ஆண் . ஆண் மனதில் உள்ள மஷ்டு ,மிருகத்தன்மை எல்லாம் எக்சாஸ்ட் ஆகனும் அவன் மனம் பளிங்கு கணக்கா ஆகனும்னா அவன் மனசு க்றிஸ்டல் க்ளியரா ஆகனும்னா அவன் செயல்படனும். உலகத்தை,சமூகத்தை எதிர்கொள்ளனும். அதுக்கு இவன் படிக்கனும்,வேலை தேடனும். இதுக்கெல்லாம் ஒரு ஊக்கப்பரிசா “சக்தி’ எட்ட நின்னுட்டு வாவானுட்டு ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பா.

அவளை அடைய நீ மேற்கொள்ற முயற்சியிலயே உன் ஈகோ 2011 தேர்தல்ல திமுக மாதிரி ஒடுங்கி போயிரனும். அப்போ மிச்சம் மீதி இருக்கிறதை பொஞ்சாதி வந்து ஒழிச்சு கட்டறப்ப வலிக்காது.

பூர்வ புண்ணியம் காரணமாவோ/பாவம் காரணமாவோ – அப்பா அம்மாவோட மெனக்கெடலாலயோ சக்தியை வரவேற்பதற்கான தயாரிப்புல உன் ஈகோ டேம்ஜ் ஆகலைன்னு வை . அது இந்தியாவொட உலகவங்கி கடன் மாதிரி பெருகிப்போயிட்டே இருக்குனு வை . அந்த சந்தர்ப்பத்துல சக்தியோட திருவிளையாடல்ல ( தாம்பத்யம்) ஈகோ மரண அடி வாங்கும்போது ரெம்ப வலிக்கும்.

( திருமண அமைப்பால ஒரு பெண் மனம் என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாகுதுங்கற மேட்டர் தேவைங்கறிங்களா? நம்ம ப்ளாக் சைட்டு எதையும் தாய்குலம் அண்டறதில்லேனு அலெக்ஸா சைட் ஆடிட் சொல்லுதுங்கண்ணா? இருந்தாலும் நீங்க தேவைனு சொன்னா ஒரு சுப முகூர்த்தத்துல போட்டுருவமில்லை )

ஒவ்வொரு மனித உயிரும் ஆனந்தத்தை அடையனும்னா ஈகோ ஒழியனும், தமோ ரஜோ குணங்கள் எக்ஸாஸ்ட் ஆகனும்.இது தாம்பத்யத்துலதான் சாத்தியம். இதை சக்தியின் பிரதி நிதியா இருந்து மனைவி செய்யறாள். இந்த ப்ராசசோட நோக்கம் உங்க மனசுல உள்ள மஷ்டுவை எல்லாம் சுத்தமாக்கறதுதான் .

அப்போ உங்க மனசு ஈகோ இல்லாம அடைப்பில்லாம ப்ளெசண்டா இருக்கும். அந்த மாதிரி ஒரு நிலைதான் ஆன்மீகபயணத்துக்கான ஸ்டார்ட்டிங் பாய்ண்ட். இரும்பை காச்சி எடுக்கிறது அதுக்கு ஒரு ஷேப்பை தரத்தான்.இதை செய்யறது திருமதி. இந்தவகையில நெஜமாலுமே திருமதி ஆத்தா கொடுத்த வெகுமதிதேன்.

ஆனால் சாமானியன் இந்த ப்ராசசை எதிர்கொள்ளும் இது எனக்கு மட்டும் நடக்குது . இது அ நியாயம் அக்கிரமம்.. செத்துப்போயிருவன் போலிருக்கே அது இதுனு டென்ஷன் ஆயிர்ரார்ன். இதுக்கெல்லாம் காரண காரியம் இருக்கு.(இந்த பதிவுல சர்ப்பதோஷம் பத்தி சொல்லியிருக்கன்.) ப்ராசஸ்ல எதிர்படற இம்சைய ஓரளவுக்காவது குறைச்சுக்க பரிகாரம்லாம் இருக்குண்ணே. இந்த பதிவுல சர்ப்பதோஷத்துக்கான பரிகாரங்களை தந்திருக்கேன்.

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும்.

ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன். அவர்களுக்கு கிடைத்த பலனையும் பார்த்திருக்கிறேன்.
( நல்லது நடந்தா சொல்றதில்லிங்கண்ணா)

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி “இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க ” என்று ஆரம்பித்த நொடியிலேயே ” ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு” என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது:

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

பின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

சர்ப்பம் யோகத்துக்கும் அறிகுறி:

ஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு,கேதுக்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் யோகத்தில் வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் விழிப்பு நிலைக்கேகிய‌ குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.

சர்ப்பம் செக்ஸுக்கு அறிகுறி:

சர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள்.

பாம்புக்குரிய குணநலன்கள் :
பாம்புக்கு ம‌னித‌ர்க‌ள் மீது ப‌ய‌ம். ம‌னித‌ர்க‌ளுக்கு பாம்பு மீது ப‌ய‌ம். என‌வே பாம்பு ம‌றைந்து வாழ்கிற‌து. ம‌னித‌ன் க‌ண்ணில் ப‌ட்டால் அடிப்ப‌ட்டு சாகிற‌து. அல்ல‌து ம‌னித‌னை கொத்தி கொன்று விடுகிற‌து. வ‌ளைந்து வ‌ளைந்து செல்கிற‌து. இரையெடுத்த‌ பின் அசையாம‌ல் கிட‌க்கிற‌து. பாம்புக்கு சிறுநீர்,ம‌ல‌ம் க‌ழிக்க விந்துவை வெளியேற்ற தனித் த‌னி துவார‌ங்க‌ள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக‌ க்ளோய‌கா என்ற‌ துவார‌ம் தான் உண்டு.

ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலை:
ஜாத‌க‌த்தில் ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலையும் ஏற‌க்குறைய‌ இப்ப‌டித்தான். எப்படி என்பதை கொஞ்ச‌ம் முக்கி யோசியுங்க‌ள். அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.

சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

உட‌ல‌மைப்பிலும் வித்யாச‌ம் இருக்கிற‌து. ஒன்று ஊளைச்ச‌தை,அல்ல‌து வ‌ய‌துக்கேற்ற‌ வ‌ள‌ர்ச்சி இன்மை காண‌ப்ப‌டுகிற‌து. சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.

1-7 ல் ராகு கேது;
கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் இதே அமைப்பு இருந்தா ஓகேன்னு சிலர் சொல்றாய்ங்க. இது சுத்தஜாதகர்கள் இந்த மாதிரி சிண்டிகேட்ல மாட்டி சீரழியாம இருக்க உதவுமே தவிர தோஷ ஜாதகர்களுக்கு இதனால உபயோகம் கிடையாது.
வேணம்னா “ஏன் இவர்/இவள் இப்படி இருக்கா(ர்)” ன்னு சிண்டை பிச்சுக்காம இருக்கலாம். ஒரு புரிதல் இருக்க வாய்ப்பிருக்கு. ஆனால் கணவன் மனைவி ரெண்டு பேருமே சதி,கிரைம்,சட்டவிரோத செய்ல்களில் ஈடுபடவும் வாய்ப்பிருக்குங்கோ..
இதன் க்ளைமேக்ஸ். கணவன்/மனைவி (ரெண்டு பேருக்கும் தோஷமிருந்தா தம்பதி ) தம்மவரை பிரிஞ்சு தனிமரமாகி,இருட்டில,இன்செக்யூரிட்டில வாழறதுதேன்வேண்டியதுதான் . ஆயுள் ஸ்தானம் வீக்கா இருந்தா இன்னம் ரிஸ்கு. இந்த அழகுல திருமண வாழ்வு எப்படி சிறக்கும்? குடும்ப மானம் தேன் பறக்கும்.
லட்சணங்கள்:
அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.
பரிகாரம்:
பரிகாரம்; கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

2ல் கேது 8ல் ராகு:

தெலுங்குல ஒரு பழமொழி ” நோரு மஞ்சிதைதே ஊரு மஞ்சிதி” அதாவது நம்ம வாய்மொழி நல்லதா இருந்தா எந்த ஊரும் நல்ல ஊராவே தோணும்.

2ங்கறது வாக்கு ஸ்தானம். இங்கன ராகு உட்கார்ந்தா பீலா விடறது, ரீல் விடறது,எதிராளி பாடில பாம்பு கொத்தினா பாய்சன் ஏறிர்ராப்ல விசம் தோய்ந்த பேச்சுக்களை வாரி விடறது நடக்கலாம்.

இந்த சோடி பிரியாது/ மஹிளா ஸ்டேஷன்/ஃபேமிலி கோர்ட்டு போகாதுன்னு எப்படி சொல்றது?

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
( இன்ன பிற சர்ப்ப தோஷங்கள்/இதர தோஷங்கள் -பரிகாரங்கள் அடுத்த வாரம் – அதாவது 2011, மே 3 ஆம் தேதி முதல் வெளிவரும். அதுவரைக்கும் ? கந்தன்,வினோத்,டவுசர் பாண்டி இப்படி சிறப்பு விருந்தினர்கள் விருந்து படைப்பாய்ங்க)