மன்மோகன் சர்க்காரும் சில பலான பழமொழிகளும்.

அண்ணே வணக்கம்ணே !

சாப்பாட்ல எப்டி வெஜ் ,நான் வெஜ் இருக்கோ அப்படியே பழமொழியிலயும் வெஜ் நான் வெஜ் இருக்கு. மன்மோகன் சர்க்காரோட சாதனைகளை (?) பார்க்க பார்க்க இதை கிழிக்க வெஜ் பழமொழிகள் போதாதோன்னு தோனுது.

யுபிஏ 1 விஷயத்துல கூட அதுக்கு கம்யூனிஸ்டுங்க வெளியிலருந்து ஆதரவு கொடுத்துக்கிட்டிருந்த
வரைக்கும் ஓரளவுக்காவது பத்தினி தன்மையை பார்க்க முடிஞ்சது. எப்பம் கம்யூனிஸ்டுகளை மீறி அணுஒப்பந்தம் கை.எ ஆச்சோ? மன்மோகனார் அரசு நம்பிக்கை தீர்மானத்துல ஜெயிச்சதோ யு.பி.ஏ1 விதவை ஆயிருச்சு.

கம்யூனிஸ்டுங்க வத்தல் பாடி , கை பனியன் – சோடா புட்டி கண்ணாடி , நாலு முழம் வேட்டி -கையில நியூஸ் பேப்பரோட ஹால்ல உட்கார்ந்திருக்கிற கணவன் மாதிரி ஒரு ரோலை ப்ளே பண்ணாய்ங்க.

இப்படிப்பட்ட புருசங்காரங்க என்னதான் கடுப்படிச்சாலும் எல்லா பொஞ்சாதிகளும் விசம் வச்சுர்ரதில்லை ஏன்னா அது வாணலிக்கு பயந்து அடுப்புல பூந்த கதையாயிரும்.

சில பொஞ்சாதிங்க வச்சுர்ராய்ங்க. வச்சு விதவை ஆயிர்ராய்ங்க அது வேற விசயம். இவிகளுக்காகத்தான் . …..ச்சிக்கு மாட்டறதெல்லாம் மொரட்டு ……………………..னுட்டு ஒரு நான் வெஜ் பழமொழி உண்டு.

கம்யூனிஸ்டுக்காரவுக லந்து பண்ணதெல்லாம் கொள்கை அடிப்படையிலானது.ஆனால் அவிகளுக்கு பிறவு லீடிங் பார்ட்னர்ஸா மாறின கட்சிக்காரவுக எப்டியெல்லாம் லந்து பண்ணாய்ங்கன்னு சொல்லவேண்டிய அவசியமில்லை. இது எந்தளவுக்கு இறங்கி போச்சுன்னா ஆதரவுக்கு மாத்தா ஜாமீனுங்கற ரேஞ்சுக்கு போயிருச்சு.

யுபிஏ கவர்மெட்டு ஊதுபத்தி,சாம்பிராணி போன்ற பூஜை பொருட்களுக்கு கூட வாட் போடப் போறாய்ங்களாமே. நக்கற மாட்டுக்கு செக்குன்னு தெரியுமா? சிவலிங்கம்னு தெரியுமா?

யுபிஏ 2 சர்க்காரை பொருத்தவரை இது தொடரும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது தான். லேட்டஸ்டா நிலக்கரி ஊழல்ல வந்து நின்னிருக்காய்ங்க. எதிர்கட்சிங்க மன்மோகனாரை ராசினாமா பண்ண சொல்லி அலப்பறை பண்றது சகஜம்.

ஆளுங்கட்சிக்காரவுக எப்டியாவது அவைய நடத்தி சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு சால்ஜாப்பாச்சும் சொல்ல பார்க்கனும்.ஆனால் என்ன ந்டக்குது “எதிர்கட்சிக்காரவுக அவைய நடத்த விடமாட்டேங்கிறாய்ங்க”ன்னு குத்தம் சொல்லிக்கிட்டே அவைத்தலைவர் காதுல போயி அவைய ஒத்திவைக்க சொல்றாய்ங்க.

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் பிச்சுப்பார்த்தா எல்லாம் ஈறும் பேனுமா நாறுது. குதிரை கீழே தள்ளினதோட பள்ளமும் பறிச்சதாம்ங்கற மாதிரி ஆயிருச்சு இந்த அரசாங்கத்தோட கதை . :

யுபிஏ சர்க்காரை குதிரைன்னு வச்சிக்கிட்டா அதனோட மந்தமான செயல்பாடுகளை கீழே தள்ளின வகையில சேர்க்கலாம்.

ஆனால் இலங்கை தமிழர் விவகாரம் – கூடங்குளம் அணு உலை விவகாரம்லாம் பார்க்கும் போது இதையெல்லாம் -பள்ளம் பறிச்ச வகையறாவுல சேர்த்தாகனும்.

குதிரை குருடா இருந்தாலும் கொள்ளு திங்கறதுல குறைச்சலில்லை:மண்டேக்சிங் அலுவாலியா பல லட்சம் செலவுல கக்கூஸு கட்டினது ஞா இருக்குல்ல

குதிரை கொள்ளுக்குன்னா வாயை திறக்கும் – கடிவாளம் போடறேன்னா திறக்குமா? கடிவாளத்தை லோக் பால் பில்லுக்கு ஒப்பிட்டா இந்த பழமொழியும் ஓகே.

மத்திய அரசு ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் நம் பங்களிப்பை உன்னிப்பாக கவனிக்கிறதாம். இதுக்கு ஒரு பழமொழிய சொல்லனும்னா.. உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை படுத்தும் பாட்டை இந்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை . இப்பம் எல்லா நாட்டு ராணுவமும் தமிழனை/ இந்தியனை சுட்டு தள்ள ஆரம்பிச்சிருக்கு.

இதுக்கு ஒரு பழமொழிய சொல்லனும்னா..கொண்டவன் கோலால் அடித்தான். கண்டவன் காலால் உதைத்தான்

மெஜாரிட்டியா கிடையாது . கு.ப கூட்டணி கட்சிகளாவது முழு மனசா ஆதரிக்குதான்னா அதுவும் இல்லை. அட .. கட்சிக்குள்ளயாச்சும் எதுனா ஒத்துமை வாழுதான்னா அதுவும் கடியாது. இத்தீனி ஓட்டை இருந்தாலும் நெஜமாலுமே சனத்துக்கு எதுனா பண்ணனும்னு நினைச்சு முயற்சி பண்ணா அது வேற கதை. அதுக்கு மட்டும் பெப்பே..

சப்சிடிகளுக்கு மங்களம் பாடிரனும், சில்லறை வணிகத்தையும் அயல் நாட்டு பகாசுர கம்பெனிகளுக்கு தாரை வார்த்துரனும்.மெகா லெவல்ல ஊழல் பண்ணனும்.

எப்படி சாத்தியம்? ஆனைய தக்ஜம் பண்ண ஆசைப்பட்டா போதுமா ? அதுக்கேத்த ………..வேணாம்.. இப்பவும் காரியம் கை மீறி போயிரலை.

ஒடனே ஊழல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பிட்டு – ஊழல்களை விசாரிக்க தனி கோர்ட்டு ( ஃபாஸ்ட் ட்ராக்) அமைச்சுட்டு – ஒரு மினிமம் ப்ரோக்ராமோட அடுத்த தேர்தலுக்கு தயாரானா ஏதோ பேர் சொல்லலாம். இல்லின்னா மட்டும் நரசிம்ம ராவ் ரெஜிம்ல போல வளைக்குள்ள பதுங்கி இருக்க வேண்டியதாயிரும்.

ராவாச்சும் விட்டு வச்சாரு. இப்பம் நாட்ல போயிட்டிருக்கிற ட்ரெண்டை பார்த்தா .. முப்பது நாளும் பவுர்ணமி போல 30 நாளும் கோர்ட்டுக்கு அலைய வேண்டியாதாயிரப்போகுது..