2015 குருபெயர்ச்சி பலன் : மகரம்

20150713_122300

அண்ணே வணக்கம்ணே !
அந்த காலத்துல தமிழ்ல ஒரு பாட்டெடுத்து விட்டா பாம்பு வந்து தன் விஷத்தை ரீ கால் பண்ணிட்டு போயிருமாம். பாம்பு கடிச்ச பார்ட்டி பொளச்சுருவாய்ங்களாம் ( பூம்பாவைக்கு உயிரை தந்த இசை அன்ட் ஆல் தட் ) வாத்யாரு பாட்டு பாடியே ஒரு அம்மாவ வீல் சேர்ல இருந்து எந்திரிச்சு நடக்க வச்சுருவாரு .

இதெல்லாம் ப்ராக்டிக்கலா சாத்தியமா பாஸ்?னு கேப்பிக. லா.ச.ரா “முடியறவாளுக்கு எப்பவும் முடியும்”ங்காறாருங்கோ. நம்ம மேட்டர்ல ஒரு தாட்டி எச்சுமி பாட்டிக்காவ ஒரு பாட்டு படிச்சம். பொருளாதாரம் செட் ரைட் ஆயிருச்சு .அதை இங்கே கேட்கலாம்.

நம்ம ரூல் பிரகாரம் பைசா புரண்டா வாய் பேச்சு டம்மி ஆயிரனும் .ஏன்னா ரெண்டும் ஒரே பாவம் தானே . (தனஸ்தானம்+வாக்குஸ்தானம்) . நெஜமாலுமே இப்பம் வண்டி முரண்டு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு .(மேலும் கோசாரத்துல இப்ப ரெண்டு எட்டுல ராகு கேது வேற கேம்ப் அடிச்சிருக்காய்ங்களா? மிடியல)
நேத்திக்கு ராத்திரி இனி நம்மால ஜோசியமே சொல்ல முடியாதோ ? பலன் பதிவே பண்ண முடியாதோங்கற அளவுக்கு பீதி கிளம்பிருச்சு .

செரி எச்சுமிக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம்.அப்படியா கொத்தது எச்சுமியே ஒர்க் அவுட் ஆயிருச்சு (சேராதிருப்பது கல்வியும் செல்வமும்) . சரசு மம்மி பாக்கெட்ல இருக்கிற காசு மாதிரினு நினைச்சு ஒரு கவிதைக்கு ட்ரை பண்ணேன். அதை இங்கேயே தந்திருக்கன் பாருங்க.

பல காலத்துக்கு பிறவு ஒரே சிட்டிங்குல 3 ஜாதகத்தை பைசல் பண்ணமுடிஞ்சது (இது தொடரனுமே) செரி செரி..மொக்கை போதும்.மேட்டருக்கு வந்துர்ரன்.
குரு பெயர்ச்சி பலன் தொடருது . இன்னைக்கு மகர ராசி . மகர ராசிக்கு குரு 3-12 க்குடையவர் . இவர் போன ஒரு வருசம் ஏழுல இருந்தாரு. பொதுவிதிப்படி இது அனுகூலமான இடம்னாலும் அனுபவத்துல மனைவி/மனைவி வழி உறவுகளால் அல்லல் அலைச்சல் வீண் விரயங்களை கொடுத்திருப்பாரு .

செரி பாஸ்ட் ஈ பாஸ்ட் ..இனி என்ன ? அதை பார்ப்பம்.

குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஒன்பதுக்கு பெயர்ச்சி ஆய்ட்டாரு. இதனால மேற்படி அல்லல்-அலைச்சல் -விரயம்லாம் கட்டுப்படும்.

செலவுகள் குறையும், தூக்கம்,கில்மாவுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு கடுமையா உழைக்க வேண்டி வரலாம். இளைய சகோதரம் பாதிக்கும். காது தொடர்பான நோய் வரலாம், தோள் பட்டை பிரச்சினை கொடுக்கலாம்.

கரன்சி, தங்கம் டீல் பண்ணும் போது டேக் கேர். வயிறு இதயத்துக்கு சிரமம் கொடுக்காத உணவு மற்று பழக்க வழக்கங்கள் நல்லது .
ஊர் பஞ்சாயத்துக்கு போவாதிங்க. வீண் பழி வரலாம். அரசாங்கத்துக்கு அபராதம் கட்ட வேண்டி வரலாம்.அசால்டா இருந்திங்கனா லாக் அப்புக்கு கூட சான்ஸ் இருக்கு.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் அஷ்டமாதிபதி அஷ்டமத்துல ஆட்சி பெறுவதால் பல் தலை எலும்பு முதுகெலும்புக்கு பாதிப்பு வரலாம். அதே நேரம் குரு அஸ்தமிக்கிறதால ஃபைனான்ஸ் ப்ராப்ளம், மனைவி,குழந்தைகள் மேட்டர்ல மொத வாரம் ஃபுல் டென்ஷன் பிறவு தீர்வு கிடைக்கலாம்.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
எட்டுக்குடையவர் எட்டுல நின்னா மரணம்.அவர் வக்ரமானா? ஆவிசு கூடும். குரு எட்டில் நிற்பதற்கு சொன்ன தீய பலன்லாம் மாறி நல்ல ரிலீஃப் கிடைக்கலாம்.ஆனால் மனைவி,குழந்தைகள்,இளையசகோதரத்தின் போக்கு அதிர்ச்சி தரும்.