காசு பணம் துட்டு மணி மணி : 9 ஆவது கேட்டகிரி (பரிகாரம்)

1

அண்ணே வணக்கம்ணே !

உலக மனிதர்களை 9 கேட்டகிரியா பிரிச்சு அவிக பொருளாதார தேக்கத்துக்கு காரணங்களையும் -பரிகாரங்களையும் சொல்லிட்டு வரேன். இந்த தொடரின் கடைசி அத்யாயம் இது. அடுத்த தொடருக்கான அறிவிப்பையும் இதுலயே கொடுத்திருக்கன்.இந்த அத்யாயம் ஒன்பதாவது கேட்டகிரி சனத்தோட பொருளாதார தேக்கத்துக்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்களை உள்ளடக்கி இருக்கு .பதிவுக்க்கு போயிரலாமா?

1.தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அரசியல்ல பிரமாதமான நடிகர்கள்ளாம் உண்டு.கமலே அந்தளவுக்கு நான் சிறந்த நடிகனில்லேன்னு சொல்ற அளவுக்கு இருக்காங்க.ஆனால் விஜய்காந்தை பாருங்க.. கேமரா முன்னே என்னமா நடிக்கிறாரு .ஆனால் நிஜ வாழ்க்கையில த்தூனு துப்பிர்ராரு.தூக்கி அடிச்சுருவன் பார்த்துக்கன்னிர்ராரு இது கேப்டன் மேட்டர்ல ஒர்க் அவுட் ஆயிருச்சு.ஆனால் சாதாரணர்கள் விஷயத்துல? டங்குவார் அந்துரும்.
இவிக பெண்ணா இருந்தா போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,எலக்ட் ரானிக்ஸ் தொடர்பான கல்வி /பயிற்சி முடித்து ஒர்க்கிங் விமனா போனா பிரச்சினையே இல்லை.தப்பிதவறி ஹவுஸ்வைஃபா இருந்தா சிக்கல்வரும்.

ஒரு யுத்தத்தையே நடத்தி முடிக்கிற கப்பாசிட்டி உள்ள ஆள் செயல்படவே வாய்ப்பில்லாத நிலையில இருந்தா அது இவிக உடல் நிலையை பாதிக்கும். குறிப்பா ப்ளட்ப்ரஷர்,அல்சர் . மாதவிலக்கு சக்கரத்தில் குளறுபடி .

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் முக்கிய காரணம்.

2.பேரறிஞர் அண்ணாவுக்கு கான்சர் வந்திருக்கு. ட்ரீட்மென்டு ஓடிக்கிட்டிருக்குன்னு தெரியும்.அந்த சமயம் ஏதோ ஒரு விவாதத்துல எதிர்கட்ச்சிக்காரவிக “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன”ங்கறாய்ங்க. அதுக்கு அண்ணா சென்ன சொல்றாரு? “எங்கள் காலடிகள் அளந்தே வைக்கப்படுகின்றன”
அந்த சிச்சுவேஷன்ல அண்ணா இல்லாம வேற நபர் இருந்து உங்கள் எலும்புகளும் எண்ணப்பட போகின்றனனு சொல்லிட்டு தூக்கி அடிச்சிருந்தா? மேட்டர் ஓவர். சட்டசபை ரத்து -கவர்னர் ஆட்சினு எல்லா இழவும் நடந்திருக்கும்.

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் -துடுக்கான பேச்சு முக்கிய காரணம்.

3.என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்னு ஒரு மேட்டர் இருக்கு. டாக்டர் ஷாலினி ஒரு தொடர்ல அம்மாங்கறவ பையனை எப்படில்லாம் உபயோகிச்சுக்கிறான்னு எழுதியிருக்காய்ங்க. செம மேட்டரு. சில அம்மாக்கள் தன் எதிரிகளை ஒழிச்சுக்கட்டவோ /தன் எதிரிகளை மகனோட எதிரியா எஸ்டாப்ளிஷ் பண்ணவோ ரெம்பவே மெனக்கெடுவாங்க.அந்த மாதிரி அம்மா வவுத்துல பிறந்து தொலைச்சா நாஸ்தி தான்.

எங்க பக்கத்துல ஒரு க்வாக் (போலி டாக்டரு) ஊர்ல உள்ள ரெண்டு அடிதடி க்ரூப் தலைவனையும் தன் க்ளினிக்ல வச்சு டீல் பண்ற பார்ட்டி .ஆனால் என்னாச்சு? வீடு கட்டறப்ப பக்கத்து வீட்டுக்காரன் இடத்துல சில அடிகள் சேர்த்து கட்டிக்கிட்டாரு. மேற்படி ரெண்டு க்ரூப் லீடர்ஸுல ஒருத்தன் கொஞ்சத்துல கொஞ்சம் நியாயம் பார்த்து ஒரு ஸ்டாண்ட் எடுக்க அவன் கட். இவருக்கு ஆதரவா இருந்தவன் வளரவே இல்லை.இவர் கட் பண்ணி விட்டவன் முடி சூடா மன்னனாயிட்டான். ஆக வீடு மேட்டரும் ஒரு ஆப்பு தான்.

அடுத்தது வாகனம். பார்க்கிங்ல ஆரம்பிச்சு ,ஷோ ரூம் டீலர், சர்வீஸ் சென்டர்,மெக்கானிக்,சக வாகன ஓட்டி ,ட்ராஃபிக் போலீஸ்னு எத்தனை பிரச்சினைக்கு வாய்ப்பிருக்கு? இந்த கேட்டகிரி சனத்துக்கு இந்த எல்லா பிரச்சினையும் வந்து ஆப்படிக்க வாய்ப்பிருக்கு .
டிகிரி ஃபைனல் இயர் எக்ஸாம்ஸ் நடக்குது. அன்னைக்கு பேங்கிங் எக்ஸாம். ஹால்ல உட்கார்ந்திருக்கம்.இன்விஜிலேட்டர் ஹால் டிக்கெட் கேட்கிறாரு .பிக் பாக்கெட்ல கைய விட்டா காணம். செரி ஒரு ஃபோட்டோ ஒட்டி விவரம் எழுதி க்ளாஸ் டீச்சர் கிட்டே ஒரு கை.எ வாங்கி ப்ரின்சிப்பல் கிட்டே ஒரு கை .எ வாங்கிட்டு வான்னாங்க.

க்ளாஸ் டீச்சர் இதான்டா சான்ஸுன்னு பெருசா பில்டப்லாம் கொடுத்தாரு ( நீ என் க்ளாஸா? நான் பார்த்ததே இல்லையே எட்செட் ரா) போங்கடா கொய்யால ..யுவர் காலேஜ் மை ஃபுட்.மை செல்ஃப் வாக்கிங் யூனிவர்சிட்டின்னு பஞ்ச் விட்டுட்டு வந்துட்டம்.

ஒரு சாதாரணர் லைஃப்ல இப்டி நடந்தா அவர் கதி என்ன?

4.காந்தி,இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய்,விபிசிங்,நரசிம்மராவ்லாம் தங்கள் வாரிசுகளோட மேட்டர்ல என்னெல்லாம் அவதி பட்டாங்கனு ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. இவிக விஐபிங்கறதால சமாளிச்சுட்டாய்ங்க. இதுவே ஒரு சாதாரணனோட வாரிசுகள் இப்படி அச்சானியமா எதுனா பண்ணி தொலைச்சா அந்த ஜாதகர்கள் கதி என்ன?

ஒரு பார்பர். ஒரு வீணா போன வெட்டி முண்டம். பார்பர் வேலையா இருக்கான் (ஷேவிங்) இந்த தண்டம் வந்து ஓசி டீ கேட்டு லொள்ளு பண்ணுது .பார்பர் ஒரு செகண்ட் உ.வ பட்டுட்டான். கையில இருக்கிறது கத்திங்கறத மறந்துட்டான்.கையில உள்ளதை உதறி ஓடிப்போ நாயேன்னான். கத்தி அந்த தண்டத்தோட உதட்டுல மாட்டிக்கிச்சு .பொள பொளனு ரத்தம்.இப்டில்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

5.அந்த காலத்துல வாத்யாரு சி.எம் .மம்மியோட ப்ரப்போசலை டிஸ் அப்ரூவ் பண்ணிட்டு கேன்வாயோட தலைமை செயலகம் புறப்படுவாராம்.இடையில வயர்லெஸ் தகவல் வரும்.மம்மி மணி கட்டை அறுத்துக்கிட்டாய்ங்க.ஒடனே சி.எம் கேன்வாய் யு டர்ன் போட்டு ரிட்டர்ன் ஆகுமாம். செல்லாவிடத்து சினம் தீது -அதுக்காவ வாயில்லாத பூச்சிகளை நசுக்கிரலாம்னுல்ல. அவிக மேட்டர்லயும் அடக்கி வாசிச்சா உடம்புக்கு நல்லது . இல்லின்னா பொளப்பு நாறிரும்ல?
ஒரு தலை காதல்/ அல்லது காதலியை மணந்து அவரால் /அவருடன் பிரச்சினைகள் வந்து அவதிப்படுவாங்க . அல்லது எதிரிகள் குடும்பத்தில் பெண் எடுப்பாங்க. அல்லது பெண்ணெடுத்த வீட்டுடன் விரோதம் வரும்.

6. நம்ம நண்பர் ஒரு நாட் நாட் பில்டிங் வாங்கினாரு (சைட் வேல்யூதான்) டிப்பரை காட்டினா போதும் பொல பொலனு உதிர்ந்துரும்.அதுல வில்லங்கம். நம்மாளு துணிஞ்ச கட்டை தான்.ஆனாலும் லீகலாவே போவம்னு இருக்க-ஆக்கிரமிப்பாளர் மராமத்துக்கு செங்கல்,மண் ஓட்டி வைக்க இவரு போய் வேணாம்டா இதெல்லாம் ஓவரு .மொத்தமா உட்கார்ந்துக்கிட்டா என்ன தான் உள்ள வச்சுருவாய்ங்கனு சொல்ட்டு வந்தாரு.என்ன ஆச்சு? நாலு எலைங்க வந்து கடையில கவுண்டர்ல இருந்த ஆளை பட்டிப்பார்த்துட்டு பூட்டாங்க.கோர்ட்ல கேஸு நடக்குது .பில்டிங் வேல்யூ ஒரு கோடி .வட்டி என்னாச்சு பாருங்க. இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

7.நம்மாளு சோஃபா தயாரிப்பாளர். ராத்திரி பூட்டிக்கிட்டு வீட்டுக்கு போனாரு .காலையில 8 மணிக்கு கடையிலருந்து புகை வருதுப்பான்னு ஃபோன் வந்தது .கடைய திறந்து பார்த்தா எல்லாம் கருகி கிடக்கு. நிலம் விரயமாகும். சகோதரர் வழியில் நட்டம். ரத்தம்-ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை வரலாம்.போலீஸ் பிரச்சினையும் வரலாம். அதி உஷ்ணம்,நெருப்பு,மின்சாரம்,அமிலம்,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகளால் பிரச்சினை வரலாம். கோபத்தால் சில பிரிவுகள்கூட ஏற்படலாம்.இதெல்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

8.ராஜீவ் காந்தி ராத்திரி வெடிச்சு சிதறப்போறாரு (கடக லக்னம் சிம்ம ராசி ) அன்னைக்கு ராத்திரி நம்ம லைஃப்ல நடந்த இன்சிடென்ட் இது . ( நம்முதும் கடக லக்னம் சிம்ம ராசி )

அந்த காலத்துல நாம பேச்சிலர் .குப்பைக்கு டஸ்ட் பின்லாம் போதாதுன்னு அரிசி டின்னை வச்சிருந்தம்.தம் அடிச்சுட்டு சரியா அணைக்காம போட்டுட்டாப்ல இருக்கு. நள்ளிரவு ரூம் எல்லாம் ஒரே புகை /மூச்சு திணறுது .

நடிகை மஞ்சுளா கட்டில்லருந்து விழுந்துதானே செத்துப்போனாங்க?இவிக லைஃப்ல இதெல்லாம் அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?
செரி இவிக பொருளாதார ரீதியா ரிலீஃப் ஆகனும்னா என்ன பண்ணனும். பரிகாரங்களையும் இந்த பதிவுலயே பார்த்துரலாம். இந்த தொடரை இந்த பதிவோட முடிச்சுட்டு அடுத்த தொடரை ஆரம்பிச்சுருவம்.

தலைப்பு:அரசியலும் -நவகிரகங்களும்

ஜாதகத்துல சூரியன் உள்ளிட்ட 9 கிரகங்கள் எந்தெந்த நிலையில இருந்தா பிரதமராகலாம் கு.பட்சம் கவுன்சிலராகலாம்னு பார்ப்பம். இந்த தொடர்ல உள்ள சிறப்பு என்னன்னா ஜாதகமே இல்லாட்டியும் உங்க வாழ்க்கை நிலையை வச்சே குறிப்பிட்ட கிரகம் உங்க ஜாதகத்துல வலிமையா நின்னிருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க முடியும்.

ஓகே ..இப்ப 9 ஆவது கேட்டகிரி சனத்துக்குண்டான பரிகாரத்தை பார்த்துரலாம்.

போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) ரத்த தானம் செய்க.ஆண்,பெண் இருபாலாருமே கராத்தே ஜூடோ மாதிரி மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கலாம். கு.பட்சம் ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் /வாக்கிங் அல்லது ஜாகிங்.
சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக.
வாகனங்களை/வீட்டின் மின்சார உபகரணங்களை உரிய வகையில் பராமரிப்பது – கவனத்துடன் கையாள்வது நல்லது .வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி யோகா,அதிகளவு சுத்தமான குடி நீர் அருந்துதல்

கழுத்தில் முருகன் கை வேல் உருவ டாலர் -பாக்கு நிற கயிற்றில் அணிக. யூத்தா இருந்தா ஃபேன்ஸி ஸ்டோர்ல கிடைக்கும் புலி,சிங்கம் மாதிரி டாலர்கள் /ஏதேனும் ஆயுதவடிவ டாலர் அணியலாம்.பெண்கள் இவற்றை தமது கீ செய்ன்ல கோர்த்துக்கலாம்.இடுப்பில் அணியலாம்.

கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.
ஜாதகர் பர்ஸ் பாக்கு நிறத்தில் இருக்கட்டும் அதில் தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படம் இருக்கட்டும்.கண்,தொண்டை குறித்த முன்னெச்சரிக்கை அவசியம் (உ.ம் விட்டமின் ஏ கொண்ட உணவுகள்,பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகள். அதிக சூடு,குளிர்ச்சி உள்ள பானங்களை தவிர்த்தல் .
இதுவரை சொன்ன பரிகாரங்களை தாயும் செய்யவும். வீட்டு ஹால்ல போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . ஹால் சோஃபா கவர்,ஸ்க்ரீன்ஸ் பாக்கு நிறம். வண்டி வாகனத்தில் முருகன்,வேல் ஸ்டிக்கரிங், யூத்துன்னா சேகுவாரா ஸ்டிக்கர் போட்டுக்கங்க.

மாணவர்கள் பாக்கு நிற ஸ்கூல் பேக் யூஸ் பண்ணுங்க.அதுமேல ஏதேனும் ஆயுதம் அல்லது புலி சிங்கம் மாதிரி உருவம் இருந்தா பெஸ்ட்.புக்ஸுக்கு பாக்கு நிற அட்டை போட்டுக்கோங்க. அண்டர்லைன் பண்ண பாக்கு நிற ஸ்கெட்ச் யூஸ் பண்ணலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க வாரிசுகளும் மேற்கொள்ளனும்.நீங்க தேவசேனாதிபதி ,நரசிம்மர் ,வேல் இத்யாதிகளை தியானம் செய்யலாம்.
இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க மனைவியும் மேற்கொள்ளனும். இடுப்பில் பாக்கு நிற கயிற்றை அணியலாம்.அல்லது பெல்ட் .பெல்ட்டின் முகப்பில் ஆயுதம்/புலி/சிங்கம் உருவம் இருந்தா பெஸ்ட். திருமணமான பெண்கள் தம் தாலியில் பவழக்கல் பதித்துக் கொள்ளலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க அப்பாவும் மேற்கொள்ளனும்.அப்பா,அப்பா வழி உறவு,சொத்து,சேமிப்பு,முதலீடு,வெளி நாட்டு தொடர்பு சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ் எல்லாம் ஒரு ப்ரவுன் கலர் ஃபைல்ல போட்டு வைங்க.மேல தேவசேனாதிபதி ஸ்டிக்கர் ஒட்டி வைக்கவும்.

தூரப்பயணம் போகும் போது பாக்கு நிற ஏர் பேக்-அது மேல தேவசேனாதிபதி உருவத்தை ஃபேப்ரிக் பெய்ண்ட்ல எழுதி வச்சுக்கோங்க.

படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க) தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படத்தை படுக்கையறையில் வைத்து வணங்கி வரவும்.வேல் பூஜை செய்யவும்.செப்பல்ஸ் /ஷூஸ் ப்ரவுன் கலர் பெஸ்ட்.

ஸ்..அப்பாடா டீல்ல விட்ட எத்தனையோ தொடர்கள் மாதிரியில்லாம இதை முடிச்சுட்டம்.அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்.
உடுங்க ஜூட்டு .

காசுபணம் துட்டு மணி மணீ :15 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்)

DSC_7886

அண்ணே வணக்கம்ணே !
முன் கதை சுருக்கம்:
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.

கடந்த பதிவுல ஆறாவது கேட்டகிரி சனங்களோட லட்சணங்கள் -அவிக பொருளாதார தடைகளுக்கு காரணங்களை சொல்லி முடிச்சு பரிகாரங்களைஆரம்பிச்சம்.
கடந்த பதிவுல் போலவே .//………….// குறிக்குள்ள லட்சணம் .அடுத்த பாராவுலயே இந்த லட்சணம் இருந்தா என்ன பரிகாரம்னு கொடுத்துக்கிட்டு வரன்.ஓகேவா .உடுங்க ஜூட்டு .

இவிகளுக்கு நொறுக்குத்தீனி, மென் பானங்கள் ,அறுசுவை உணவு ,பான்,பீடா ,வெத்திலை,பாக்கு ,தூக்கம் , வீடு,வண்டி வாகனம் இதெல்லாம் எங்கே கிடைக்காம போயிருமோன்னு வாழ்க்கையில பல விஷயங்கள்ள காம்ப்ரமைஸ் பண்ணிப்பாய்ங்க. இவிக ரெபல் ஆறதும் உண்டு.ஆனால் அது மேற்சொன்ன விஷயங்களை இழந்துருவமோங்கற மோமென்டுல தான் .

இதுல சோகம் என்னன்னா இவிகளுக்கு வந்திருக்கிற/வரப்போற நோய்கள் ,மரணம் எல்லாத்துக்கு காரணம் இவிகளோட இந்த ப்ரியாரிட்டி தான்.
ஓஷோ ஒரு உதாரணத்தை அடிக்கடி சொல்வாரு. குறுகிய வாய் கொண்ட ஜாடி-அதுக்குள்ளே ஒரு வாத்து . வாத்தும் சாகக்கூடாது ,ஜாடியும் உடையக்கூடாது.ஆனால் வாத்தை வெளிய எடுக்கனும்.

இன்னடா மேட்டருன்னா வாத்து ஜாடிக்குள்ளயே இல்லை. வெளிய இருக்கு. மேற்படி மேட்டர் எல்லாம் எந்தளவுக்கு சில்லி – நம்ம உடல் நலமும்-ஆயுளும் எந்தளவுக்கு பலியாகுதுன்னு ஒரு சின்ன புரிதல் வந்துட்டா போதும். இதெல்லாம் ஜூஜுபி.

அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் செக்ஸை ஆழமாக அனுபவிப்பவன் அதை பற்றி சிந்திப்பதே இல்லை. அது கிடைக்காதவன்/அதில் தோற்றவன் அதை சிந்திக்காமல் இருப்பதே இல்லை. மனித உடலில் இரண்டு மண்டலங்கள் உள்ளன. இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்வதில்லை.

அல்லாரும் என்ன நினைக்கிறாய்ங்கன்னா கில்மாவுல கில்லி மாதிரி விளையாடனும்னா செமர்த்தியா திங்கனும். சாரி பாஸ் ! நிறைகுடம் தளும்பாதுங்கற ரேஞ்சுக்கு போயிருவிங்க.மேலும் நீங்க திங்கறதை செரிக்கிறதே பாடிக்கு வேலையா போயி இ.பெ.மண்டலம் தன் வேலையை குறைச்சுக்கும்.

இதே போல கில்மா பத்தி நிறைய தெரிஞ்சுக்கனும்-பேசனும்-கற்பனை பண்ணனும்-கனவு காணனும் அப்பத்தேன் கில்மால சிக்ஸர் அடிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு . சாரி பாஸ் ! எந்த மேட்டர்ல எப்படியோ இந்த மேட்டர்ல மட்டும் மேல் மாடிக்கு எந்தளவு வேலை கொடுத்தா அந்தளவுக்கு பேஸ்மென்ட் வீக் ஆயிரும்.
நாம வாழறதுக்காவ சாப்பிடறம்.சாப்பிடறதுக்காவ வாழறதில்லை. திங்கறது-கில்மா ரெண்டுமே ஒரே கிரகத்தோட பிடியில இருக்கிறதால ரெண்டுல ஒன்னு புட்டுக்கும். அதனால லைட்டா ..லைட்டா இருந்தா ரெண்டுலயுமே ஜஸ்ட் பாஸ் கியாரண்டி.

//2.அழகான கண்கள் இருக்கும் (பேசும்) , ஹவுசிங்,ஆட்டோமொபைல் ,ஃபர்னிச்சர்,பெய்ண்ட்ஸ் ,கேட்டரிங் , இன்டீரியர்போன்ற அழகு அலங்காரம் தொடர்பான தொழில்,வேலை மூலமாக வருமானம் கிடைக்கும். இவிக இன்ஃப்ளுயன்ஸால குடும்பமே இவிக ரசனைகளை கொண்டும் இருக்கலாம். இவிக பேச்சே கவிதை மாதிரி இருக்கும் ( டோன்/வார்த்தைகள்) //

மேற்சொன்ன ஏதோ ஒரு சோர்ஸ் மூலமா வருமானம் வந்துக்கிட்டிருந்து நீங்க ரசனை கெட்ட சன்மமா -வெகண்டையா பேசிக்கிட்டிருந்திங்கன்னா பேலன்ஸ் ஆகும்.இல்லின்னா நாஸ்திதான்.

//3.சகோதிரி இருக்கலாம்.இவிக கொஞ்சம் பயந்த சுபாவியா இருக்கலாம். டூர்,பிக்னிக்லாம் உண்டு//.

லாஜிக்கலா பார்த்தா மொதல்ல சகோதிரி லைஃபை செட்டில் பண்ணனும் உங்க காதல்/கண்ணாலத்தை எல்லாம் போஸ்ட்போன் பண்ணியிருப்பிங்க. எப்படியும் “அது” தானில்லை வாழ்க்கைய அனுபவிக்கவாவது செய்யலாமேன்னு டூர்/பிக்னிக்னு டைவர்ட் ஆவிங்க. இந்த டைவர்ஷன் இல்லின்னா சட்டு புட்டுனு சிஸ்டர் லைஃபும் செட்டில் ஆகும்.உங்க லைஃபும் செட்டில் ஆகும்.

//4.இவிக வீட்டையும்-அதிலான ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸை பார்த்தே இவிக ஆறாவது கேட்டகிரின்னு சொல்லிரலாம். வாகன மேட்டர் ஏற்கெனவே சொல்லிட்டன். இதுவரை சொல்லிட்டு வந்த குண நலன்லாம் இவிக தாய் வழியா வந்ததா இருக்கலாம் -அல்லது இந்த குண நலன்லாம் தாயாருக்கும் இருக்கலாம். முதுமை காரணமா அவிக தெளிஞ்சிருக்கலாம் .இந்த பார்ட்டி தெளியாததால கொஞ்சம் முட்டல் மோதல் வரலாம்.//

நம்மாளு ஒருத்தரு டைவர்சி. ஏதோ இவருக்குன்னே மாதிரி ஒரு டைவர்சி கிடைச்சாய்ங்க.கண்ணாலமாச்சு. சகட்டுமேனிக்கு மேற்சொன்ன மேட்டர்ல எல்லாம் காசை இறைச்சாய்ங்க.இப்ப என்னாச்சுங்கறிங்க? காசை இறைச்சி வாங்கினதெல்லாமிருக்கு.ஆனால் சம்சாரம்?

ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸ்,வாகனம் எல்லாம் வாங்கும் போது மனசே நிறைஞ்சுரும்.ஆனால் மெயின்டெய்னென்ஸ் இல்லின்னா நாறீரும். இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டியில இந்த பொறுப்பும் பெண்ணுடைய தலை மேல தான் விழுது . இதனாலயே பல முட்டல் மோதல்கள். கடைசியில அசலான மேட்டருக்கே ஆப்பு.

ஆகவே மக்காஸ் ! பொஞ்சாதி முக்கியம் -அவிக அன்பு இத்யாதி இத்யாதி முக்கியம்னா மேற்படி மேட்டர்ல எல்லாம் அடக்கி வாசிங்க.
//5.பெண் குழந்தைகள் இருக்கும். அவிகளுக்கு இவர்களை ஒத்த கலை,ரசனை இருக்கலாம். இவிகளோட கலாரசனையே இவிகளுக்கு நற்பெயரையும் -அவப்பெயரையும் தரலாம். ராமன் தேடிய சீதை மாதிரி எதிர்கால வாழ்க்கை துணையை கனவு கண்டபடி தேடி தேடி …தேடி தேடி ஒண்டிக்கட்டையா கூட நிக்க வேண்டி வரலாம்.//

The life doesn’t cares your preparations. Man proposes God disposes. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். இதெல்லாம் வெறுமனே கொட்டேஷன் இல்லை பாஸ்! வாழ்க்கை ஆழ்கடலில் நம்ம முன்னோர் முத்துக்குளிச்சு எடுத்து கொடுத்திருக்கிற முத்துக்கள்.

மைன்டை ப்ளாங்கா வச்சுக்கிட்டா பிரச்சினையே கிடையாது .உங்க வாழ்க்கை வியாபாரத்துக்கு ஜஸ்ட் அக்கவுண்டென்டா இருங்க. எம்.டி ஆயிராதிங்க. வந்தா வச்சுக்க வேண்டியதுதான்.போனா விட்டுர வேண்டியதுதான். நீங்க ஆன்மீகரா இருந்தா இன்னம் வசதி “வந்ததா ..மகாபிரசாதம்-போயிருச்சா கடவுளுக்கே காணிக்கை”

தெலுங்குல ஒரு சொலவடை உண்டு.தும்மித்தே ஊடி போயே முக்கு உன்டே எந்தா போதே எந்தா.

தும்மினாலே கழண்டுக்கற மூக்கு இருந்தா என்ன போனா என்ன? வந்ததை கட்டி வச்சா அது பிச்சுக்கிட்டு ஓடப்பார்க்கும்ங்கறப்போ . போறதை இழுத்து பிடிச்சா என்னாகும் ரோசிங்க.

//6.மன்சன் எதை முக்கியம்னு நினைக்கிறானோ விதி அதுக்கு தானே ஆப்பு வைக்கும் .இவியளுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். ( இந்த விஷயங்களிலான இவர்களின் ஈடுபாடே கூட இதற்கு காரணமாகலாம்)//

பார்த்திங்களா !

இதுவரை நான் சொன்னதை எல்லாம் நக்கலா படிச்சுட்டு வந்திருந்தா – நம்ம உபதேசத்தை ஃபாலோ பண்ணலின்னா உங்க நிலை இதுதான். தேவையா? ரோசிங்க..
//7.லைஃப்ல பலான மேட்டர்ல ஆர்வம் அதிகமா இருக்கும். செயல் அப்படி இப்படி இருந்தாலும் கனவுகள்-கற்பனைகள் அமோகம். இவிக கேரக்டருக்கு ஏத்த கணவன்/மனைவி அமைஞ்சுட்டா உலகத்தையே மறந்து – “அதிலயே” மூழ்கி வாழ்க்கையில பெருசா தோத்துரவும் சான்ஸ் இருக்கு.//
உடலுறவில் இன்பம் தருவது உங்க செக்ஸ் பார்ட்னரோ/அவிக அழகோ /ஒத்துழைப்போ இல்லை.உங்க பிரம்மச்சரியம். உணவுக்கு ருசியை தருவது உங்க பசி -வயிற்றிலான ஜடராக்னி.

காது, ஜான்சன் பட்ஸ் இந்த இரண்டுக்கும் உள்ள உறவு தெரியும். காதுக்குள்ள எதையும் போட்டறியாத பார்ட்டி பட்ஸை அப்படி காட்டினா போதும் உடம்பே சிலிர்க்கும் .

அட் தி சேம் டைம் வேற ஒரு பார்ட்டி நூறு பீஸ் பட்ஸ் பாக்கெட்கை பக்கத்ல வச்சிக்கிட்டு கையும் காதும் சும்மாதானே இருக்குனு போட்டுக்கிட்டே இருந்தா எண்ணாகும் ? அதே கதை தான் இதுலயும்.

//8.ஆறாவது பாய்ண்ட்ல சொன்ன உடல் நல கோளாறுகள் வந்த பிறகாச்சும் வாய கட்டினா ஓகே.இல்லின்னா டிக்கெட்டு தான். அடுத்து இந்த செக்ஸ்/லவ் மேட்டர்ல ராங் ரூட்ல போயி உசுருக்கு உலை வச்சுக்கவும் கூடும். இழந்த சக்தி வைத்தியர்களின் தங்க சுரங்கம் இவர்கள்.//

பசியில்லாதவன் -ஜடராக்னி மந்தமாகிப்போனவன் புது புது தீனிக்கு அலையறதும் – செக்ஸ் பவர் ஜீரோவுக்கு வந்தவன் “புது புது “அனுபவங்களுக்கு கனவு காணுவதும் ஒன்னுதான்.

இந்த சின்ன புரிதல் வாலிபத்துலயே வந்துட்டா வயோதிக வாலிப அன்பர்களேங்கற அழைப்பை ஏற்க வேண்டிய அவசியமே வராது .
//9.தங்கள் சுக வாழ்வின் நீட்டிப்புக்காகவேனும் சேமிப்பதும் -முதலீடுகள் செய்வதும் -சொத்துக்கள் வாங்குவதும் இவர்கள் இயல்பு.ஆனால் இவை எந்தளவுக்கு மெட்டீரியலைஸ் ஆனா அந்தளவுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். இதுக்காவ தொடர் வைத்திய சிகிச்சை கூட தேவைப்படலாம்.//

இங்கே முடிவெடுக்க வேண்டியது நீங்க தேன். உங்கள் தேவை அதுவா?இதுவா? ரெண்டும்னா வேலைக்காகாது . அல்லது ரெண்டுலயும் காக்கா கடின்னா ஓகே.
//10.இந்த ஒன்பது பாய்ண்ட்ஸ்ல சொல்லிட்டு வந்த துறையில வேலை /உத்யோகம் /தொழில்னு அமைஞ்சிருக்கலாம். பி.ஏ மேல கை வச்சுர்ரது / க்ளையண்ட் மேல கை வச்சுர்ரது மாதிரி நடக்கவும் வாய்ப்பிருக்கு . கொலிக்ஸ்-எம்ப்ளாயிஸ் மேட்டர்ல “தடுமாறி” செம பல்பு வாங்கவும் சான்ஸ் இருக்கு.//

இந்த மாதிரி நாறிப்போன கேஸ் ஹிஸ்டரி நானூறு உண்டு.ஆகவே வரும் முன் காப்பது நல்லது .இல்லின்னா கர்பமான பிறவு காண்டோம் உபயோகிச்ச கதையாயிரும்.

//11.இதுவரை சொல்லி வந்த துறைகளில் பெண்களால்,பெண் பெயர் கொண்ட ஆண்களால் பொருளீட்ட வாய்ப்புண்டு.//

இது உங்க லைஃப்ல மெட்டீரியலைஸ் ஆயிட்டிருந்தா ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸ்,வாகனம் ,தூக்கம்,கில்மா , நொறுக்குத்தீனி, மென் பானங்கள் ,பான்,பீடா ,வெத்திலை,பாக்கு இத்யாதி மேட்டர்ல எல்லாம் அடக்கி வாசிங்க.இல்லின்னா அசலுக்கு மோசம் வந்துரும்.

//12. இதுவரை சொல்லி வந்த சுகானுபவங்களுக்காக கடன் வாங்கியும் ,வீடு,வாகனம் மீது கடன் வாங்கியும் கூட செலவழிக்கலாம்.//
லைஃப்ல பல லைஃப் ஸ்டைல்ஸை பார்க்கிறோம். ஹ்ம் ..எல்லாம் பொறப்புலயே அப்படின்னு நினைச்சுக்கறம்.
ஆனால் என் அனுபவத்துல நான் சொல்றேன். எல்லாமே பயக்கம் தான் பாஸ் ! ஆரம்பத்துல கொஞ்சம் /ஏன் நிறைய கூட கஷ்டமா இருக்கும். பழகிருச்சுன்னு வைங்களேன்.. இவ்ள காலம் இப்படியே வாழ்ந்துட்டம்..திடீர்னு எப்படின்னு ஒரு தயக்கம்.

வாழ்க்கை தத்துவமே இதுல அடங்கிருது பயக்கம்-தயக்கம். கொய்யால தயக்கத்தை உதறிட்டா பயக்கத்தை மாத்திக்கலாம். பெருமைக்கு பன்னி மேய்ச்சு நாறிப்போறதை விட சூழலுக்கேற்ப நம்மை மாத்திக்கிறது பெஸ்டு.

என்னங்கடா இது ..பரிகாரம்னுட்டு வெறும் உபதேசமா அள்ளிவிடறாருன்னு சலிச்சுக்காதிங்க. சின்ன புரிதல் ஏற்பட்டுட்டா பரிகாரமே தேவையில்லை பாஸ் !
செரி ஒழியட்டும் அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்களை அள்ளி விட்டுர்ரன்.ஓகேவா !

உடுங்க ஜூட்டு .

காசு பணம் துட்டு மணி மணி : 13

Astro Ant FB

அண்ணே வணக்கம்ணே !
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும்னுண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.

என்னடா தொடர் ஸ்மூத்தா போகுதேன்னு கொஞ்சமா சந்தோசப்பட்டேன். வரிசையா வந்துருச்சு ஆப்பு. நம்ம எதிர்கால திட்டமான இங்கிலீஷ் வெப்சைட்டுக்கு திரு மோகன் சுந்தர் -மற்றும் திரு தணிகை வேல் நன் கொடை கொடுத்ததுமே திரி பத்திக்கிச்சு . இப்பம் மைண்டு இங்க்லீஷ் சைட் மேல போயிருச்சு .ஜனவரி 4 ஆம் தேதிக்கு கு.பட்சம் பத்து போஸ்டாவது இருக்கனும்னு பிடிவாதம்.

சுகுமார்ஜீ மொழிபெயர்த்து கொடுத்த பழைய சரக்கா? திருமுருகன் கார்த்திகேயன் உபயத்துல புதிய சரக்கா? ஆத்தா தான் முடிவு பண்ணனும். ஃபிசிக்கலா பெருசா செய்யலின்னாலும் மனசு பதிவுல நிக்க மாட்டேங்குது .

அடுத்து நேயர் விருப்பம் போல ராகு -கேது பெயர்ச்சி பலனுக்கு டிமாண்ட் அதிகமாயிருச்சு .கட்டண ஆலோசனை கடைய மூடப்போறமில்லையா -அதனால பென்டிங் வால்யூம்ஸ் எல்லாம் பைசல் பண்ணியாகனும். மொத்தத்துல இந்த தொடரும் அல்பாயுசான்னு தெரியல. நிற்க .

நம்ம பரிகாரங்களை பத்தி சனத்துக்கு மிக பெரிய அதிருப்தி இருக்கு. ஏன் பாஸ்..ஏதோ கோவில் -குளம்னா போய் வரலாம்,ஹோமம் யாகம்னாலும் செஞ்சு தொலைச்சுரலாம்.ஆனால் நீங்க சொல்ற பரிகாரம்லாம் கேட்க சிம்பிளா இருக்கு.ஆனால் சின்ன சின்ன மேட்டர்ல கூட மாற்றம் வரனும்-தொடரனும்ங்கறிங்க.(20 வருஷம் ஷூ போட்டு பழகினவனை -செருப்பு போடுங்கறிங்க – தமிழ் சினிமா வில்லன் மாதிரி சஃபாரி சூட் போட சொல்றிங்க) இத்தனை காலம் ஒரு வாழ்க்கை முறை பழகிருச்சு . படக்குன்னு மாறமுடியல.

-இதாங்க கம்ப்ளெய்ன்ட்.

நான் என்ன சொல்றேன்னா இத்தனை காலம் உங்கள் வாழ்க்கையை நடத்தினது உங்க ஈகோ. இதுக்கு உங்க ஜாதகம் தெரியாது.அதனோட பவிசு தெரியாது . நீங்க எதை எல்லாம் செய்யப்படாதோ -அதையே செய்ய உங்களை தூண்டியிருக்கும். இந்த ஈகோ வழி வாழ்க்கையால என்னெல்லாம் இழந்திங்கன்றது உங்களுக்கு தெரியாது .

உங்க ஜாதகப்படி என்னெல்லாம் நல்லது நடந்திருக்கும்னு ஜோதிடர் சொல்றாரோ- எதுவுமே நடக்கலிங்கன்றிங்க. இதே போல உங்க ஜாதகப்படி நடக்கவே கூடாத நஷ்டம்லாம் நடந்துட்டதா சொல்றிங்க.

இதெல்லாம் எப்படி நடக்குதுன்னா? உங்கள் ஜாதகம் ஒரு டூ இன் ஒன் .டெபிட் கார்டும் இதுவே.கிரெடிட் கார்டும் இதுவே. உங்களுக்கு விதிக்கப்பட்டவற்றை மட்டும் செய்துட்டு வந்தா டெபிட் கார்டா ஒர்க் ஆகும்.

இல்லை நான் அவனை மாதிரி -இவனை மாதிரி வரனும்னு உங்களுக்கு விதிக்கப்படாததை எல்லாம் செய்தா கிரெடிட் கார்டா மாறுது. ட்யூ டேட் வந்ததும் ஆப்பா மாறுது . நான் சொல்ற பரிகாரங்களே பல நிபந்தனைகள் காரணமாக என்னால் நீர்க்க செய்யப்பட்டவை . ( நான் சொல்ற பரிகாரத்தால உங்க சோசியல் லைஃப்,ஃபேமிலி லைஃப்,ஃபைனான்ஸ் எல்லாம் பாதிக்கப்பட கூடாதில்லை -முக்கியமா உசுரு போயிடப்படாதில்லை) இதுல பலரும் ஒன்னை மட்டும் ஃபாலோ பண்றேன்.சிலதை மட்டும் ஃபாலோ பண்றேன்னு பேரம் பேசறாய்ங்க.

இதெல்லாம் வேலைக்காகாது.

வாழ்க்கையில கண்ட தோல்விகள்,அவமானங்கள் இத்யாதிகளை எல்லாம் பாம்பு தோலை உரிச்ச கணக்கா உரிச்சு போட்டுட்டு போயிட்டே இருக்கனும். ஒவ்வொரு நாளும் புதுசு .ஒவ்வொரு நாளும் நாமளும் புதுசா மாறனும்.மாறலின்னா ஏமாறனும். மாறிருங்க இல்லின்னா வேஸ்ட். டோட்டல் வேஸ்ட்.

நாம இன்னைக்கு என்னவா இருக்கமே இதுக்கெல்லாம் மூலம் நம்ம இளமையில இருக்கு. நம்ம கல்யாணகுணங்களுக்கான மூலங்களை அறிந்தால் சிரிப்பு சிரிப்பா வரும். ஆகவே எதையும் -எப்பவும் மாத்திக்க தயாரா இருக்கனும். இல்லின்னா பிரச்சினைகள் நம்மை தாயாராக்கிரும்.

மகாபாரத யுத்தத்துல துரியோதனனோட இருந்த ஜூரிங்க மனசுல்லாம் பாண்டவர்ங்க பக்கம் இருக்க – அது அவிக ஆட்டிட்யூட்லயும் ரிஃப்ளெக்ட் ஆக துரியோதனன் கடுப்பாகி செம ரெய்டு விடுவான். பிறவு அதுவரை அடக்கி வாசிச்ச ஜூரிங்க கொஞ்சம் அனல் காட்டுவாய்ங்க. என்ன செய்து என்ன உபயோகம் .கடேசியில துரியோதனன் துடை பிளக்கப்பட்டு சாகத்தான் வேண்டி இருந்தது .

கொய்யால ..துரியோதனனுக்கு பாண்டவர்களோட என்ன பிரச்சினை? சின்ன வயசுல பீமன் இவனை கண்டபடி தூக்கி போட்டு விளையாடறான். இவனும் “வேணாம் வலிக்குது -அழுதுருவன்”ன்னு சொல்லியிருப்பான்.ஆனாலும் பீமன் விடல. உடல் பலம் உள்ளவனுக்கு மேல் மாடி அந்தளவுக்கு வேலை செய்யாதுங்கறதுக்கு இது ஒரு உதாரணம்.

பீமன் ஃபிசிக்கலா ஸ்ட்ராங்கா இருக்கலாம்.ஆனால் அப்பன் இல்லாத புள்ளை. பெரியப்பா குருடங்கறதால அப்பன் ராசாவானது நெஜம் தான்.ஆனால் அப்பன் டிக்கெட் போட்டதும் பெரியப்பன் ராஜாவாயிட்டான். அவனோட பெரிய புள்ள துரியோதனன் தான் பட்டத்து இளவரசன்.

இதை எல்லாம் ரோசிச்சு பீமன் அடக்கி வாசிச்சிருந்தா குருட்சேத்திர யுத்தமே கிடையாது. ஆனாலும் துரியோதனனை இமிசை பண்ணிட்டான். இந்த ஃப்ளாஷ் பேக்கை மனசுல வச்சுக்கிட்டு தான் துரியோதனன் பாண்டவர்கள் மேட்டர்ல ஒவ்வொரு கட்டத்துலயும் தப்பான முடிவெடுக்கிறான். இத்தனைக்கும் பீஷ்மர்ல இருந்து கர்ணனோட குட்டி தம்பி வரை வேணாம் வேணாம்னு தலை தலையா அடிச்சுக்கிறாய்ங்க .கேட்டானா? இல்லை.

பால்யத்துல நடக்கிற மேட்டரை எல்லாம் ஞா வச்சுக்கிட்டு டெசிஷன் எடுத்தா இப்படி தான் எல்லாமே தப்பா போகும். ஒன்னு சுயபுத்தி இருக்கோனம் -அல்லது சொல் புத்தியாச்சும் இருக்கனும்.ரெண்டுமில்லை. எடுத்த டெசிஷன் எல்லாமே தப்பு -அதன் விளைவு யுத்தம்.

ஆனால் தன்னோட ஆட்கள் எல்லாம் பக்காவா யுத்தம் பண்ணி செயிக்க வச்சுரனும்.இதான் துரியோதனனோட டென்ஷனுக்கு காரணம். ஆளும் வளரனும்.அறிவும் வளரனும். பாம்பு கணக்கா அப்பப்போ தோலை உரிச்சு போட்டுட்டு புதுசாயிட்டே வரனும்.இல்லின்னா இந்த இழவுதான்.

ஓகே உபகதை உபதேசம்லாம் ஆயிருச்சு .பதிவுக்கு போயிரலாமா?

இதுவரை 1,2,3,4,5 கேட்டகிரி சனங்களை பத்தி பார்த்துட்டம் .லட்சணங்கள் -ஃபைனான்ஸ் ப்ராப்ளத்துக்கு காரணங்கள்-பரிகாரங்கள்னு எல்லாத்தையும் பார்த்துட்டம். இன்னைக்கு ஆறாவது கேட்டகிரியை பார்க்கோனம்.

லட்சணங்கள்:
1.பார்க்க ரெம்ப அழகா இருப்பாய்ங்க -அல்லது அழகா காட்டிக்க மெனக்கெடுவாய்ங்க.(காஸ்மெட்டிக்ஸ் யூஸ்பண்ணுவாய்ங்க) இசை,நடனம்,நாட்டியம்,சிற்பம், கலை ,ஓவியம்,ஹேன்டி க்ராஃப்ட் இத்யாதியில தேர்ச்சி/பயிற்சி/ஆர்வம் இருக்கும். டூர்,பிக்னிக்,கெட் டு கெதர் ப்ரோக்ராம், பார்ட்டி,ஃபங்க்சன் ,முக்கியமா சுபகாரியங்கள்ள கலந்துக்க துடிப்பாய்ங்க.

நொறுக்குத்தீனி, மென் பானங்கள் கவரும். சாப்பாட்டுக்கும் ( பான்,பீடா ,வெத்திலை,பாக்கு உபரி) தூக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க. வீடு,வண்டி வாகன விஷயத்துல லாஜிக்கே பார்க்காம ரசிப்பாய்ங்க,கனவு காணுவாங்க.

இதெல்லாம் எங்கே கிடைக்காம போயிருமோன்னு வாழ்க்கையில பல விஷயங்கள்ள காம்ப்ரமைஸ் பண்ணிப்பாய்ங்க. இவிக ரெபல் ஆறதும் உண்டு.ஆனால் அது மேற்சொன்ன விஷயங்களை இழந்துருவமோங்கற மோமென்டுல தான் .

2.அழகான கண்கள் இருக்கும் (பேசும்) , ஹவுசிங்,ஆட்டோமொபைல் ,ஃபர்னிச்சர்,பெய்ண்ட்ஸ் ,கேட்டரிங் , இன்டீரியர்போன்ற அழகு அலங்காரம் தொடர்பான தொழில்,வேலை மூலமாக வருமானம் கிடைக்கும். இவிக இன்ஃப்ளுயன்ஸால குடும்பமே இவிக ரசனைகளை கொண்டும் இருக்கலாம். இவிக பேச்சே கவிதை மாதிரி இருக்கும் ( டோன்/வார்த்தைகள்)

3.சகோதிரி இருக்கலாம்.இவிக கொஞ்சம் பயந்த சுபாவியா இருக்கலாம். டூர்,பிக்னிக்லாம் உண்டு.

4.இவிக வீட்டையும்-அதிலான ஃபர்னிச்சர்ஸ்,ஃபிக்சர்ஸ்,ஃபிட்டிங்ஸை பார்த்தே இவிக ஆறாவது கேட்டகிரின்னு சொல்லிரலாம். வாகன மேட்டர் ஏற்கெனவே சொல்லிட்டன். இதுவரை சொல்லிட்டு வந்த குண நலன்லாம் இவிக தாய் வழியா வந்ததா இருக்கலாம் -அல்லது இந்த குண நலன்லாம் தாயாருக்கும் இருக்கலாம். முதுமை காரணமா அவிக தெளிஞ்சிருக்கலாம் .இந்த பார்ட்டி தெளியாததால கொஞ்சம் முட்டல் மோதல் வரலாம்.

5.பெண் குழந்தைகள் இருக்கும். அவிகளுக்கு இவர்களை ஒத்த கலை,ரசனை இருக்கலாம். இவிகளோட கலாரசனையே இவிகளுக்கு நற்பெயரையும் -அவப்பெயரையும் தரலாம். ராமன் தேடிய சீதை மாதிரி எதிர்கால வாழ்க்கை துணையை கனவு கண்டபடி தேடி தேடி …தேடி தேடி ஒண்டிக்கட்டையா கூட நிக்க வேண்டி வரலாம்.

6.மன்சன் எதை முக்கியம்னு நினைக்கிறானோ விதி அதுக்கு தானே ஆப்பு வைக்கும் .இவியளுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். ( இந்த விஷயங்களிலான இவர்களின் ஈடுபாடே கூட இதற்கு காரணமாகலாம்)

7.லைஃப்ல பலான மேட்டர்ல ஆர்வம் அதிகமா இருக்கும். செயல் அப்படி இப்படி இருந்தாலும் கனவுகள்-கற்பனைகள் அமோகம். இவிக கேரக்டருக்கு ஏத்த கணவன்/மனைவி அமைஞ்சுட்டா உலகத்தையே மறந்து – “அதிலயே” மூழ்கி வாழ்க்கையில பெருசா தோத்துரவும் சான்ஸ் இருக்கு.

8.ஆறாவது பாய்ண்ட்ல சொன்ன உடல் நல கோளாறுகள் வந்த பிறகாச்சும் வாய கட்டினா ஓகே.இல்லின்னா டிக்கெட்டு தான். அடுத்து இந்த செக்ஸ்/லவ் மேட்டர்ல ராங் ரூட்ல போயி உசுருக்கு உலை வச்சுக்கவும் கூடும். இழந்த சக்தி வைத்தியர்களின் தங்க சுரங்கம் இவர்கள்.

9.தங்கள் சுக வாழ்வின் நீட்டிப்புக்காகவேனும் சேமிப்பதும் -முதலீடுகள் செய்வதும் -சொத்துக்கள் வாங்குவதும் இவர்கள் இயல்பு.ஆனால் இவை எந்தளவுக்கு மெட்டீரியலைஸ் ஆனா அந்தளவுக்கு விரும்பினதை திங்க முடியாத , நிம்மதியா தூங்க முடியாத , தக்ஜம்ல ஈடுபடமுடியாத உடல் நல கோளாறுகள் வரலாம். இதுக்காவ தொடர் வைத்திய சிகிச்சை கூட தேவைப்படலாம்.

10.இந்த ஒன்பது பாய்ண்ட்ஸ்ல சொல்லிட்டு வந்த துறையில வேலை /உத்யோகம் /தொழில்னு அமைஞ்சிருக்கலாம். பி.ஏ மேல கை வச்சுர்ரது / க்ளையண்ட் மேல வச்சுர்ரது மாதிரி நடக்கவும் வாய்ப்பிருக்கு . கொலிக்ஸ்-எம்ப்ளாயிஸ் மேட்டர்ல “தடுமாறி” செம பல்பு வாங்கவும் சான்ஸ் இருக்கு.

11.இதுவரை சொல்லி வந்த துறைகளில் பெண்களால்,பெண் பெயர் கொண்ட ஆண்களால் பொருளீட்ட வாய்ப்புண்டு.

12. இதுவரை சொல்லி வந்த சுகானுபவங்களுக்காக கடன் வாங்கியும் ,வீடு,வாகனம் மீது கடன் வாங்கியும் கூட செலவழிக்கலாம்.
இதுவரை சொல்லிட்டு வந்த கல்யாண குணங்களாலேயே இவிக பொருளாதார ரீதியா அடிவாங்குவாங்க. இதை தவிர்க்க என்னெல்லாம் பரிகாரம் செய்யலாம்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

உடுங்க ஜூட்டு .

காசு பணம் துட்டு மணி மணி : 8

Rewrapr

அண்ணே வணக்கம்ணே !
கட்டண ஆலோசனைக்கு வந்த ஜாதகங்கள் குமிஞ்சு கிடக்கு. இந்த பதிவை அடிக்கிற நேரத்துல 3 ஜாதகத்தை பைசல் பண்ணாலும் புண்ணியம் உண்டு.ஆனாலும் அதை விட்டுட்டு இந்த தொடரை அடிக்க இறங்கியிருக்கேன். ஏன்?

நமக்குள்ள ஒரு டீல் இருக்கு. ஞா இருக்கில்லை. நான் உலக மக்களை எல்லாம் 3கேட்டகிரியா பிரிச்சு – அவிகளோட பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் -அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்லோனம். படிக்கிற சனம் தங்களோட கேட்டகிரி எதுன்னு ஐடென்டிஃபை பண்ணி பரிகாரங்களை ஃபாலோ பண்ணி பைசா புரட்டனும். பைசா புரட்டியான பிறவு அடடா ..சூட்சுமத்தை சொல்லி போட்டு -நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் கொடுத்ததே இந்தாளுதானே.இந்தாளுக்கு எதுனா பண்ணனும்யான்னு நினைச்சு நாம 2016 ல ஆரம்பிக்கப்போற சைட்டுக்கு நன் கொடை கொடுக்கனும்.

இப்பமே சிலர் கொடுத்தாச்சு (ஊர் /பேர் சொல்லக்கூடாதுங்கற நிபந்தனையோட) பலர் வாக்கு கொடுத்திருக்காய்ங்க. இந்த நன்கொடைய வச்சு கு.பட்சம் ஒரு 3 மாசமாச்சும் நான் உட்கார்ந்து வேலை செய்தா தான் இங்கிலீஷ் வெப்சைட் லாஞ்ச் ஆகும். ஆட்சென்ஸ் வருமானம் கிடைக்கும்.

எப்படியும் கட்டண ஆலோசனைக்கு 2015லயே மங்களம் பாடிரப்போறம்.புவாவுக்கு ஆட்சென்ஸை விட்டா வேற வழி கிடையாது.தெரியும்ல.இதான் டீலு.
எங்களுக்கு ஐடியா கொடுத்து எங்ககிட்டே கைய நீட்டுவானேன். நீயே அதை எல்லாம் அப்ளை பண்ணி காசுபுரட்டலாமேன்னு உங்கள்ள சிலருக்கு டவுட்டு வரலாம்.

மேட்டர் என்னடான்னா நம்ம ஜாதகத்துல குரு உச்சம்.பத்துல ராகு .அப்படியும் செரி-இப்படியும் செரி காசு புரட்டற கப்பாசிட்டி நமக்கிருக்கு. சிக்கல் எங்கே வருதுன்னா குரு =மந்திரி, குரு =தனகாரகன். நாம பைசா புரட்ட ஆரம்பிச்சுட்டா ரத்த ருசி கண்ட புலி மாதிரி ஆயிருவம். நம்ம ஜாதகத்துல உள்ள குரு தனகாரகனாவே ஒர்க் ஆகி -மந்திரி கனவெல்லாம் ஃபணால் ஆயிரும்.(நம்ம டார்கெட் பிரதமமந்திரி தெரியும்ல)
ஓகே .. இப்ப பதிவுக்கு போயிரலாம்.

இந்த தேர்ட் கேட்டகிரி சனத்தை பத்தியும், அவிக பொருளாதார நெருக்கடிக்குண்டான காரணங்களை பத்தியும் கடந்த 2 பதிவுல விரிவா அனலைஸ் பண்ணியாச்சு.சில சஜஷன்ஸும் கொடுத்தாச்சு.அவிக அதை எல்லாம் கண்ணை மூடிக்கிட்டு ஃபாலோ பண்ணனும் .இதான் மொத கண்டிஷன்.
அடுத்த கண்டிஷன் இந்த பதிவுல சொல்லப்போற பரிகாரங்களையும் ஃபாலோ பண்ணனும்.ஒடனே பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டனில்லாலும் ஒன்னரை மாசத்துலயே நெல்லா சேஞ்ச் தெரியும் (சில்லறையில்லிங்கோ -மாற்றம்) அடுத்து 3 மாசத்துல வளர்ச்சி .பரிகாரத்தை விடாம ஃபாலோ பண்ணா ஒன்னரை வருசத்துலயே ஸ்டெடி ஆயிரலாம்.செட்டில் ஆயிரலாம்.ஓகேவா உடுங்க ஜூட்டு .

இப்ப பரிகாரங்கள்:
1.உங்க பர்ஸு/கேஷ் பேக் மஞ்சள் நிறத்துல இருக்கட்டும்.
2.பர்ஸுல தட்சிணா மூர்த்தி , ராகவேந்திரர் உங்க ஒன்னாங்கிளாஸ் வாத்யார் படம் /அல்லது ஏதாச்சும் தொழிலை கத்துகொடுத்த குருவோட படங்கள் இருக்கட்டும்.

3.பர்ஸை எங்கே வச்சாலும் -லாட்ஜு ரூம்ல வச்சாலும் மஞ்சள் நிற கர்சிஃப் போட்டு அதுமேல வைங்க.

4.ஒவ்வொரு வியாழக்கிழமையும் வீட்ல/ரூம்ல இருக்கிற தட்சிணா மூர்த்தி , ராகவேந்திரர் படத்தாண்டை 3 நிமிட் வச்சிருங்க.

5.ஒவ்வொரு சரித்திர புருஷனோட வாழ்க்கையையும் அவனோட குரு எப்படி ஒடைச்சு திருப்பினாருன்னு தகவல் சேகரிங்க.ஒரு நோட்டுல எழுதிட்டு வாங்க. அல்லது கம்ப்யூட்டர்ல அடிச்சு வைங்க.

6.தெய்வங்கள், மந்திரத்துல நம்பிக்கை உள்ளவிக குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வர: குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா: தஸ்மை ஸ்ரீ குரவே நம: -இந்தமந்திரத்தை இங்கிலீஷ் வெர்சன்லயும் தேடிப்பிடிச்சு சரியான உச்சரிப்பை கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டு வாங்க.

7.வாரத்துல ஒரு நாள் -வியாழக்கிழமை சிவன் கோவில் போங்க (விபூதி தவிர வேறு எதையும் கொண்டுட்டு வராதிங்க) .அய்யரா பார்த்து வில்வ இலை கொடுத்தா அதை மண் பாத்திரத்துல தண்ணியில ஊறவச்சு மறு நாள் வெறும்வயித்துல குடிச்சு மென்னு தின்னுங்க.

9.கூலிங்கிளாஸ்/க்ளாஸ் போடுங்க .அதன் ஃப்ரேம் மஞ்சள் நிறத்துல இருக்கனும்.

10.வாயு கோளாறுக்கு காரணமான உணவுகளை விலக்கிருங்க. வேளைக்கு சாப்பிடுங்க .காலை மாலை நடை பயிற்சி.தண்ணீர் நிறைய குடிங்க. ஆங்சைட்டி கூடவே கூடாது .நடக்கிறதுதான் நடக்கும்னு லூஸ்ல விடனும் ( நிதானமா ரோசிச்சு -செய்தே ஆகவேண்டிய காரியங்களை செய்த பிறவு)

12.ஜஸ்ட் உணவுகளையே மருந்தா உபயோகிச்சு வாயு கோளாறை சால்வ் பண்ணமுடியும். உ.ம் இஞ்சி இந்த ரூட்ல ஆராய்ச்சி பண்ணி ஒர்க் அவுட் பண்ணுங்க.

14.வீட்டின் வடக்கில்/வடகிழக்கில் மேடிருந்தால் சமன்படுத்துங்க. சின்னதாகவேனும் மழை நீர் தேக்க தொட்டி ஒன்னு கட்டுங்க. (படத்தை பாருங்க)

Inkudu guntha

எச்சரிக்கை:
உண்மையிலயே நாளைக்கே இதை செய்துர்ர உத்தேசமிருந்தா கமெண்ட்ல கேளுங்க.இன்னம்சில டிப்ஸ்தரேன்.

15. மணி மேட்டர்ல ஸ்கெட்ச் பண்றதுல இருந்து பேமென்ட் கொடுக்கல் /வாங்கல் எல்லாம் வளர்பிறை காலம், தை முதலான ஆறுமாதங்களில் பகல்வேளையில் செய்யலாம். இரவு நேரம் /கிரகண காலத்தை தவிர்க்கவும்.

16.மஞ்சள் நிற தொப்பி அணிக

17.டை போடற வயசுல உள்ளவிக / கூலிங் எஃபெக்ட் -சளி -இருமல்-ஆஸ்மா இல்லாதவிக தலைக்கு மருதாணி போடுங்க.

18.உலகத்தை பொருத்தவரை நீங்க எந்த சாதியா இருந்தாலும் -இந்த ஜகன் நாடகத்துல உங்க ரோல் ஜஸ்ட் ஒரு அட்வைசர்/கேர் டேக்கர்/மந்திரி /தானம்வாங்க வந்த ஐயருங்கறதை மறக்காதிங்க.

19.உங்க பேச்சு எதிராளிதான் உங்கள வாழ வைக்க வந்த ராசாங்கறாப்ல இருக்கோனம்.

19. கழுத்துல ஒரு டாலர்/கீ செயின் / கம்ப்யூட்டர்ல டெஸ்க் டாப் பிக்சர்/வண்டியோட நெம்பர் ப்ளேட் /தலைவாசல் கதவு /ஃபோன்ல ஸ்க்ரீன் சேவர் எல்லாத்துலயும் ராகவேந்திரர்/தட்சிணாமூர்த்தி இருக்கட்டும்.

20.செல்ஃபோன் ரிங் டோனா/ காலர் ட்யூனா பொன்,பணம்,பதவி தொடர்பான பாட்டை வச்சுக்க்ங்க உ.ம் பொன்மகள்வந்தாள் , காசு பணம் துட்டு மணீ மணீ
அடுத்த பதிவுல அடுத்த வேளை சோத்துக்கு ப்ளான் பண்ணாம அந்த வேளை சோத்தை கூட இன்வெஸ்ட் பண்ணிட்டு -லாங் டெர்ம் ப்ராஜக்டுகள்ள சிக்கி சீரழியற பார்ட்டிகளோட நிலையை விரிவா பார்க்கலாம்.

காசுபணம்துட்டுமணிமணி‬:5

Amaravathi

‪அண்ணே வணக்கம்ணே !
இங்க்லீஷ்ல வெப்சைட் வச்சுக்கிட்டு -ஆட்சென்ஸ் வருமானத்துல வவுத்த கயுவலாம். கட்டண ஆலோசனைய ஏறக்கட்டிரலாம் -இலவச ஆலோசனைய மட்டும் தொடரலாம்னு ஸ்கெட்ச் போட்டம். ஒரு அறிவிப்பு கூட கொடுத்தம். ஆனால் ஆரும் பெருசா கண்டுக்கிடல.

ஒரு செகண்ட் “கொய்யால ..நாமளும் தனாகர்ஷன மூலிகை /ஜனவசிய பொடி இப்படி இறங்கிரலாமான்னு செம கடுப்பாய்ருச்சு.

செரி சனத்துக்கு கையில காசு பணம் தாராளமா புரண்டா நமக்கா கொடுக்காம போயிருவாய்ங்கன்னு நினைச்சு ‪காசுபணம்துட்டுமணிமணி‬ ங்கற இந்த தொடரை ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம்.

இதுல சனங்களை 9 க்ரூப்பா பிரிச்சு ஒவ்வொரு க்ரூப்போட பொருளாதார பிரச்சினைகளுக்கும் என்ன காரணம்? அந்த காரணங்களை எப்படி இல்லாம பண்றது? எப்படி எக்கனாமிக்கலா பூஸ்ட் பண்ணிக்கிறதுன்னு விலாவாரியா சொல்றது.இதான் கான்செப்ட்.

இந்த தொடர்ல மொத 2 க்ரூப்போட கதைய பைசல் பண்ணிட்டம். இன்னைக்கு 3 ஆவது க்ரூப்பு. நான் ரெடி..நீங்க ரெடியா?
இந்த 3 ஆவது கேட்டகிரில சிக்கி சீரழியற சனம் சர்வ நிச்சயமா கெட்டவிக இல்ல. (எப்பயோ ஒரு தாட்டி கில்மா மேட்டர்ல வழுக்கி விழுந்திருக்கலாம் .அது ஜாதகத்துல உள்ள இன்னபிற கிரகங்களின் ஸ்திதிய பொருத்த மேட்டர்.

இவிகளை பத்தி புட்டு புட்டு வைக்கிறேன். உங்களுக்கு எந்தளவுக்கு பொருந்துதுன்னு பார்த்துக்கங்க.

வேதம்,புராணம்,இதிகாசம்,விரதம்,பூசை,புனஸ்காரம்,ஹோமம்,யாகம் இப்படி இவிக மேட்டர்ல ஒன்னத்துக்கும் குறைவே இருக்காது.இதுமட்டுமா செமர்த்தியான மெமரி பவர்,சிக்கனம்,சாரிட்டி,ப்ளானிங், தூரதிருஷ்டி எல்லாமே உண்டு. கொஞ்சமா ஐயோ பாவம் பார்ப்பாய்ங்க.
கோவை சரளா இது வீடா ஆஸ்பத்திரி வார்டாங்கறாப்ல இவிக வீட்டை வீடா அல்லது சேவாசிரமமான்னிரலாம். அந்தளவுக்கு ஹெல்ப்பிங் டென்டன்சி இருக்கும்.

அரசியல் பின்னணி ,கோவில் பின்னணி கூட உண்டுங்கோ. எந்த சாதியில பிறந்திருந்தாலும் பிராமண லட்சணங்கள் இருக்கும். நடுத்தர உசரம். இவிக பேச்சே உபதேச மஞ்சரி கணக்கா இருக்கும். என்னதான் உடம்பெல்லாம் மூளையா இருந்தாலும் உள்ளுக்குள்ள கன்னுக்குட்டி உதைச்சுக்கிட்டே இருக்கும்.
இவிக ரோசனையை டேக் அப் பண்ணி லட்ச லட்சமா சம்பாதிக்கிற சனம் உண்டு. இவிகளுக்கு சமுதாயத்துல செம ரெஸ்பெக்டு உண்டுங்கோ. ஆனால் அந்த ரெஸ்பெக்டுக்கு ஈக்வலா பைசா புரளுமான்னா இல்லைன்னு தான் சொல்லனும்.

இவிகளோட வாரிசுகள் கொஞ்சம் முட்டாளா இருந்தாலும் பைசா மேட்டர்ல கெட்டியா இருப்பாய்ங்க. (இவியளுக்கு இந்த மேட்டர்ல ஒரு மனக்குறை உண்டு)

ஆயிரத்தெட்டு ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாலும் வாயு கோளாறு மட்டும் இவியள விட்டேனாங்கும். கொஞ்சம் அலார்ட்டா இல்லேன்னா இதயக்கோளாறுகள்ள போய் முடியும்.

மனைவியும் இவிக இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவாய்ங்க. இவியள சுத்தி உள்ளவிகள விட தொலை தூரத்துல /ஏன் வெளி நாட்ல உள்ள சனம் இவியளை பக்காவா யூஸ் பண்ணிக்கும்.

ஓவரலா அரசியல் சாசனத்தையே தொகுத்தளித்த அம்பேத்கர் அரசியல் ரீதியா எப்படி பெருசா க்ளிக் ஆகலையோ அப்படித்தான் இவிக பொளப்பும்.
நிர்வாக விஷயத்துல புலியா இருப்பாய்ங்க.ஆனால் அந்த நிர்வாகம் காரணமா பைசா புரண்டா தானே உலகம் மதிக்கும்?

இந்த கேட்டகிரியல நாம சொன்ன மேட்டர்லாம் எந்தளவுக்கு டாலி ஆகுது பார்த்துக்கங்க. இந்த கேட்டகிரி சனம் எப்படி பைசா மேட்டர்ல வித் ஸ்டாண்ட் ஆகறதுன்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்..

உடுங்க ஜூட்டு
எச்சரிக்கை:
ஏற்கெனவே ரெண்டு கேட்டகிரி சனத்துக்கு அல்ட்டிமேட் ரெமிடீஸ் எல்லாம் கொடுத்தாச்சு .மேற்படி சனம் நாம கொடுத்த ரெமிடீஸை ஃபாலோ பண்ணி பைசா புரட்டியிருந்தா நம்ம இங்கிலிஷ் சைட்டுக்கு நன் கொடை தரலாம்.

கு.பட்சம் தங்களோட ஃபீட்பேக்கையாவது தரலாம். எழுதற பார்ட்டிக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்குமில்லை?

காசு பணம் துட்டு மணி மணி : 4

Snapshot_20151027_6

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல மணி மேட்டர்ல ஏறினா ரயிலு -இறங்கினா செயிலு கணக்கா வாழறவிகள பத்தி சொல்லியிருந்தன். இன்னைக்கு அவியளுக்குண்டான பரிகாரங்களை பார்க்கலாம்.

1.பௌர்ணமி நிலா கணக்கா வட்டமான மஞ்சள் நிற பொட்டு ஒன்னு உங்க நெத்திய அலங்கரிக்கட்டும்.
2.வாரத்துல ஒரு நாளாச்சும் வைட் அண்ட் வைட் போடுங்க
3.இந்த காலத்துல என்னாட்டம் தாத்தாஸ் கூட டீ ஷர்ட் போடறாய்ங்க. கடல் தொடர்பான மேட்டருங்க ப்ரிண்ட் ஆன டீ ஷர்ட்ஸ் கிடைச்சா போடுங்க. உ.ம் மீன்,சீகல்,திமிங்கலம்,படகு
4.மேற்படி விஷயங்களேஉங்க கீ செயின்ல, டெஸ்க் டாப்ல ,மொபைல் ஃபோன்ல இடம் பெறட்டும்.
5.வடமேற்கு திசையில உங்க ஆஃபீஸ்/சேம்பர் இல்லாதவாறு பார்த்துக்கோங்க

6.உங்க டேபிள் மேல ஃபேக் வாட்டர் ஃபவுண்டெய்ன், குழாய் – போல ஏதாவது ஒன்னு இருக்கட்டும்.கூடவே ஆட்டோவா ஆடி அசையற ஐட்டம் ஒன்னு
7.டேபிள் க்ளாத் வெள்ளை/இள நீல நிறம். அதுல மீன்,சீகல்,திமிங்கலம்,படகு இத்யாதி ப்ரிண்ட் ஆகியிருந்தா நெல்லது.
8.வீடு/ஹால்/அறை/சேம்பரின் வ.கி லூலையில் சுவத்துலயே ரேக் மாதிரி வச்சு அதுமேல சின்னதா அக்வேரியம்
9.வீட்ல ஒரு ஊஞ்சல் (வேற எதுக்கு ? உட்கார்ந்து ஆடத்தேன்)
10.மூன் லைட் டின்னர்

11.பர்ஸு /கேஷ் பேக் எல்லாம் வைட்/ லைட் ப்ளூ கலர்ல இருக்கட்டும்.அது மேல மீன்,சீகல்,திமிங்கலம்,படகு இத்யாதி ப்ரிண்ட் ஆகியிருந்தா நெல்லது .இல்லாட்டி சின்னதா ஃபோட்டோப்ரிண்ட் போட்டு உள்ளாற வச்சுக்கங்க.
12.வீட்டோட இன்டிரியரை அடிக்கடி மாத்துங்க.
13.வாகனம்? செகண்ட்ஸாவே வாங்குங்க. ரெண்டு வருசத்துக்கொரு தபா மாத்திருங்க.
14.காலை/தூங்குவதற்கு முன் கடல்/முழு நிலவு இத்யாதிய தியானம் பண்ணுங்க.
15.கடல்/அருவி/தண்ணீர்/முகம் இத்யாதி வார்த்தைகள் வர்ர பாட்டை கொஞ்சம் உரக்கவே முணுமுணுத்துக்கிட்டிருங்க.

16.சைக்காலஜி தொடர்பான நூல்கள் படிங்க/ப்ரோக்ராம்ஸ் பாருங்க(ரெம்ப டீப்பா போயிராதிங்க)
17.உங்க ரிங் டோன்/காலர் ட்யூன்ல கடல்/அருவி/தண்ணீர்/முகம் இத்யாதி வார்த்தைகள் வர்ர பாட்டுகள் இருக்கட்டும்.
18.முடிஞ்சா இந்த பரிகாரங்களை உங்க மனைவி/குழந்தைகளும் பண்ணா இன்னம் நல்லது.
19.உங்க என்விரான்மென்ட்ல தூசு/புகை/நெடி இருக்கப்படாது.
20சுத்தமான குடி நீர் அதிகம் அருந்தவும்.

21.கிட்னிக்கு சிரமம் கொடுக்கிற விஷயங்கள கம்ப்ளீட்டா அவாய்ட் பண்ணிருங்க. ஹேர் டை முதல் லாலா/மசாலா வரை.
22.பிராணயாமம்/ரேப்பிட் ப்ரீத்திங் இத்யாதி ட்ரை பண்ணுங்க.
23.வாய்ப்பு கிடைச்சப்போ நீஞ்ச கத்துக்கங்க.(அதுக்காவ ரெம்ப ஊறாதிங்க -பிறவு மண்டை ஓட்ல ஓட்டை போட்டு தண்ணி எடுக்கறாப்ல ஆயிரும்)
24.உங்க சொத்து,முதலீடு,சேமிப்பு,வருமானம் தொடர்பான டாக்குமென்ட்ஸ்/புக்ஸ்/ஐடிஸ் எல்லாம் ஒரு ட்ரான்ஸ்ப்ரன்ட் ஃபைல்ல இருக்கட்டும். அதுமேல கன்யாகுமாரி அம்மன் ஸ்டிக்கர் ஒட்டி வைங்க.
25.எவனுக்கும்/எவளுக்கும் ஈல்ட் ஆயிராதிங்க.பிறவு உங்களையே மறந்துருவிங்க. ரோசனை வேணம்னா பெசலிஸ்டுகளை மீட் பண்ணுங்க.
26.அடுத்தவியளுக்கு நீங்க உபயோகப்படலாம்.அதுக்காவ கண்ட நாயி உங்களை யூஸ் பண்ண அனுமதிச்சிராதிங்க.

எச்சரிக்கை:
உங்க சொத்து,முதலீடு,சேமிப்பு,வருமானம் எல்லாத்தையும் க்ளோசா வாட்ச் பண்ணிக்கிட்டே இருங்க. ஏதோமன மயக்கத்துல எல்லைய தாண்டிட்டா பிறவு சிங்கியடிக்க வேண்டியதுதான். உங்க செலவுகளை எசன்ஷியல்ஸ்,கம்ஃபர்ட்டபிள்ஸுன்னு பிரிச்சுக்கங்க. இந்த செலவெல்லாம் பைசல் பண்ண பிறவு மிச்சம் மீதி இருந்தா வேணம்னா சூதாடுங்க.

அறிவிப்பு:
அடுத்த பதிவுல உடம்பெல்லாம் மூளை/ நெல்ல ப்ளானிங் /ஃபோர் சைட்டட்னெஸ்/நல்ல குணங்கள்/பயபக்தி எல்லாம் இருந்தும் பெருசா ப்ளான் பண்ணி முதலீட்டு பற்றாக்குறையாலயோ அல்லது தங்கள் மூ முலாஜா காரணமாவோ பல்பு வாங்கற க்ரூப்பை பத்தி விலாவாரியா பார்க்கலாம்.

காசு பணம் துட்டு மணி மணி :1

vishal

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும்-கிரக பலனும்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு காலமாற்றத்தால ஒவ்வொரு பாவ காரகமும் எப்படி தங்கள் பலனை மாற்றித்தருதுன்னு சொல்லிக்கிட்டு வந்தன். கடேசியா 9 ஆம் பாவத்தை பத்தி விலாவாரியா சொன்னன். இந்த பாவ காரக பலனை எப்படி “கண்டிஷனிங்” பண்றதுன்னு இந்த பதிவுல சொல்லியிருக்கனும்.ஆனால் என்னமோ திடீர்னு எல்லாமே ப்ளர்ரா -தேங்கி கிடக்கறாப்ல ஒரு ஃபீல் . அட முக நூலே ஈயடிக்குதுன்னா பார்த்துக்கங்களேன்.

வழக்கமா நாம கேட்காமயே பண மழைய கொட்டற வாசக மகாசனங்கள் மச மசன்னு இருக்கிறாய்ங்க. ஒரு தாட்டி தெலுங்குல அம்மன் சத நாமாவளி பப்ளிஷ் பண்ணிக்கிட்டிருக்கம்ன்னு ஸ்டேட்டஸ் போட்டம். செம ரெஸ்பான்ஸ். ஜோதிடம் 360 முதல் பதிப்பு /ரெண்டாம் பதிப்பிலான 4 நூல்களுக்கான முன் பதிவு இப்படி எல்லாமே செம ரெஸ்பான்ஸ்.

யப்பா.. இந்த கட்டண ஆலோசனை ஆவிசுக்கே ஆப்பு வைக்குது . கட்டிப்போட்ட மாதிரி இருக்கு .ஆகவே இங்கிலீஷ்ல ஒரு வெப்சைட்டை வச்சுக்கிட்டு அதன் மூலமா ஆட் சென்ஸ் தேத்தி இதுக்கு மங்களம் பாடிரலாம்னு இருக்கன்.2015 டிசம்பர் 31 க்குள்ள அது லாஞ்ச் ஆகி ,பிக் அப் ஆகி ,ஆட்சென்ஸுக்கும் குவாலிஃபை ஆயிரனும். பிறவு அல்லாருக்கும் இலவச ஆலோசனையை கொட்டோ கொட்டுன்னு கொட்டறேன் – நான் ஃப்ரீ ஆகி -ஃப்ரீ கன்சல்ட்டன்சி தர மேற்படி ப்ராஜெக்டுக்கு கொஞ்சம் போல பைசாவை நன் கொடையா கொடுங்கன்னு அறிவிச்சிருந்தம்.

மொத வாரம் சூப்பர் ரெஸ்பான்ஸ். எல்லாமே குப்த தானம் தான்.பேரை சொல்லக்கூடாது,ஊரை சொல்லக்கூடாதுன்னு .செரி வெப் ஹோஸ்டிங்குக்கான பைசா தேறிருச்சு . இனியும் காசு வரும் போல .ஒரு டொமைனை வாங்கி -ட்ரான்ஸ்லேட்டரை அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டு வேலைய துவக்கிரவேண்டியதுதான்னு நினைச்சம் .

மேலே மேலே கட்டண ஆலோசனைக்கு கூட்டம் அம்முதே கண்டி . நான் சொல்லும் மேற்படி ப்ராஜக்டுக்கு பைசா நஹி .செரி சனம் ரெம்ப கஷ்டத்துல இருக்காய்ங்க. மொதல்ல அவியளுக்கு பைசா புரள பரிகாரங்களை அள்ளி விடுவம். பரிகாரம் ஒர்க் அவுட் ஆகி அவியளுக்கு பைசா புரண்டா நன்றிக்கடனா நன் கொடைய அள்ளி விடுவாங்கன்னு டிசைட் ஆய்ட்டன்.

ஆகவே கால மாற்றம் -கிரக பலன் தொடர் தற்காலிகமா நிறுத்தப்பட்டு காசு பணம் துட்டு மணி மணி தொடரை ஆரம்பிக்கிறேன்.பதிவுக்கு போயிரலாமா? உடுங்க ஜூட்டு .

தடைகளும் காரணங்களும்:

பைசா புரளாம – சிங்கியடிக்க 9 க்ரூப்ஸ் ஆஃப் ரீசன்ஸ் இருக்கு. அதுகளை டீட்டெய்லா பார்க்கலாம்.கூடவே பரிகாரங்களும். மொத க்ரூப்ல வர்ர காரணகள் கீழே
1.நம்மை மாதிரி சகட்டு மேனிக்கு கொலிக்ஸை எல்லாம் விமர்சனம் பண்ணி கொஞ்சம்கொஞ்சமா ஹிட்லிஸ்டுக்கு போயிர்ரது .
2.சதா சர்வகாலம் மம்மி “எனது அரசு -எனது அரசு”ங்கறாப்ல நான் -நான் -நான் என்று பேசி தனிமைப்பட்டு போறது .
3.பைசா மேட்டர்லாம் கறாரா இருக்கனும்பான்னுட்டு தேவையில்லாம வாயை விட்டு எதிராளி ஈகோவை காயப்படுத்தி ரிலேஷனேகட் ஆயிர்ரது .
4.சக்திக்கு மீறிய தானம் -அபாத்திர தானம்
5.பெருமைக்கு பன்னி மேச்சு தேவையில்லாத கமிட்மென்ட்ல சிக்கறது
6.மலைப்பகுதி ,ரிமோட் வில்லேஜஸ், புதுசா டெவலப் ஆயிட்டிருக்கிற காலனி,ஹார்ட் ஆஃப் தி டவுன்ல தொழில் துவங்கி பல்ப் வாங்கிர்ரது .
7.மேற்படி பகுதிகளில் வாழும் மக்கள் கிட்டே கொடுக்கல் வாங்கல் வச்சுக்கிட்டு மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம அவதிப்படறது .
8.பகல்ல பிறந்தவரானால் அப்பா,அப்பாவழி உறவுகளால் ,அப்பாவின் தொழிலை தொடர்ந்து செய்வதால்/செய்வதில் தடைகள் சிக்கல்கள்.
9.ஓவர் கான்ஃபிடன்ஸுல அகலக்கால் வச்சு மாட்டிக்கிறது
10.விளம்பரத்துறை -மேற்பார்வையாளர் -சூப்பர் வைசர் -குவாலிட்டி கண்ட் ரோல் போன்ற தொழில்/உத்யோகத்தில் சிக்கி அவதி
11.திடீர்னு எலும்பு முறிவு ஏற்பட்டு /முதுகுவலி ஏற்பட்டு லீவு அதனால பொருளாதார நெருக்கடி
12.தூக்கமின்மை காரணமா பகல்ல தூங்கி ராத்திரியில ஒர்ரி பண்ணிக்கிட்டு மறுபடி பகல்ல தூங்கி -இப்படி ஒரு விஷ சுழல்ல மாட்டிக்கிறது .
13.தினப்பத்திரிக்கைகள்ல வேலை /எந்த பத்திரிக்கையா இருந்தாலும் நிருபர் தொழில்ல இருந்துக்கிட்டு மணி மேட்டர்ல தேக்கம்.
14.பஞ்சாயத்து,ஒன்றியம்,நகராட்சி ,மா நகராட்சி துறைகளில் வேலை /ஒப்பந்த தொழில்ல மாட்டி விழிக்கிறது இதனால் பொருளாதார நெருக்கடி

மேலே சொன்ன காரணங்கள் தான் உங்கள் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்னா உங்களுக்கு பரிகாரங்கள் நிச்சயம் தேவை . இந்த பரிகாரங்கள் எந்தளவுக்கு உதவும்னா இருக்கிற கமிட்மென்ட்ஸை ஃபுல் ஃபில் பண்ணிக்கிட்டு லேசா தம் ஆத்திக்கற வரை தான்.அதுக்குள்ள நீங்க ஃபீல்டை மாத்திக்கனும்.ஓகேவா.

அடுத்த பதிவுல பரிகாரங்களை தருகிறேன்.