கேள்வியும் நானே -பதிலும் நானே

kalachakram

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிட குறித்த புரிதல்னு அவ்வப்போது வெளிவரும் தொடரா ஒன்னை ஆரம்பிச்சன். அதனோட தொடர்ச்சியா கூட இதை வச்சுக்கலாம் .இது கேள்வி பதில் ஃபார்ம்ல இருக்கு அவ்ளதான்.

கே: 1990 மார்ச்சுலயே ஆஃபீஸ் போட்டுட்டதா சொல்றிங்க. அன்னையிலருந்து இன்னைக்கு வரைக்கும் ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பார்த்திருப்பிங்க. டீட்டெய்லா இல்லின்னாலும் ஒரு குன்ஸா சொல்லுங்க. இந்த கெரகங்களோட பிடியிலருந்து எஸ்கேப் ஆக ஒரே வழி-சரியான வழி எதுனா இருக்கா?

பதில்: ஆஹா.. பயாலஜி ப்ராக்டிக்கல்ஸ்ல தவளைக்கு ஆணியடிச்ச கணக்கா அடிச்சு வச்சுட்டு கேட்கிறியளே.. செரி ..சொல்லித்தானே ஆவனும். ரெம்ப சிம்பிள் ப்ரோ .சுய நலம் சுருக்கி -பொது நலம் பெருக்குதல்.

கே: ஊஹூம்..இது அழுகுணி ஆட்டம். உங்க ஃபிலாசஃபியை எங்க மேல திணிக்கிறிங்க. இதை ஜோதிட ரீதியா விளக்குங்க .

பதில்: செரி நம்ம லேப்ல நாம தானே மொத எலி. நம்முது கடக லக்னம். நமக்கு ஆயிரத்தெட்டு வித்தை தெரிஞ்சிருந்தாலும் மினிமம் கியாரண்டி கொடுத்து வண்டிய ஓட வைக்கிறது ஜோதிடம் தான். இதுக்கு புதன் தான் காரகன். இவரு லக்னத்துக்கு பகை +லக்னத்துலயே வேற உட்கார்ந்து தொலைச்சாரு .

நாம ஆஃபீஸ் போட்ட புதுசுல லக்னங்களுக்கு யார் சுபர் -யார் பாபி-யார் மாரகன்ங்கற டேட்டா கூட மைண்ட்ல ஸ்டோர் ஆகி இருக்காது .மொதல்ல என்ன லக்னம்னு பார்த்து சுபர்-பாபர்-மாரகன்னு மார்க் பண்ணிக்கிட்டு தான் பலன் சொல்ல ஆரம்பிப்போம். சப்ஜெக்ட்ல கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் “பைசா பார்த்துர்ரது”ங்கற நோக்கமே இருக்காது . நாம ஃபுல் ஃபார்ம்ல இருந்தப்போ பத்து பேரை அட்டெண்ட் பண்ணா அதுல கு.பட்சம் 3 பேருக்காவது இலவசமா சொல்லியிருப்பம். போற வர்ர வழியில “ஒரே ஒரு சொல்லு ..சொல்லிரு சாமீ”ங்கற கேஸ் எல்லாம் தனி .
மவ பிறந்தா லக்னம் கன்னி. புதன் 11 ல். ஜஸ்ட் ஒரு புதனோட டிப்பார்ட்மென்ட்ல சுய நலம் சுருக்கி 2 வருசம் காலத்தை ஓட்டினதுக்கே இயற்கை கொடுத்த பரிசு.(1992)

அவளுக்கு 13 வயசு இருக்கும் போது லோக்கல் மேகசின் ஒன்னு ஆரம்பிச்சேன்.(புத காரகம்) ஊத்தி மூடும் போது கடேசி பெசல் இஷ்யூ டர்ன் ஓவர் ஒரு லட்சத்து 28 ஆயிரம்.2014 ல் புஸ்தவம் போட்டோம் அதனோட டர்ன் ஓவர் ( அவ்வ்.. ஐ டி காரவிக ரெய்டு வந்துரப்போறாய்ங்க)

அப்படியும் ஜோதிட தொழில்ல பழைய ஸ்டைலை மாத்திக்கவே இல்லை . உபரியா பதிவுகள் மூலமா தொழில் ரகசியத்துல இருந்து பிரம்ம ரகசியத்துல இருந்து அவுத்து விட்டுக்கிட்டே இருக்கம்.

தொழில் முறையில பார்த்தாலும் ஆயிரத்துக்கும் அதே அவுட் புட் /இரு நூற்று அம்பதுக்கும் அதே அவுட் புட் (வச்சுக்கிட்டு வஞ்சனை செய்ய மிடியல ப்ரோ)

அங்கிருந்து 2016 வரை வண்டி இதே ரூட்ல தான் ஓடிக்கிட்டிருந்தது . மவளுக்கு ரெண்டாவதா மவன் பிறந்தான் சிம்ம லக்னம் . பதினொன்றில் சூரியன்+புதன் (மிதுனத்துல புதன் ஆட்சி என்பது பாடம் – சிம்ம லக்னத்துக்கு புதாத்திய யோகம் விசேஷம் )

மவளுக்கோ /மாப்ளைக்கோ புத காரகத்வத்துல உள்ள எந்த தொழில்லயும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது . மேலும் கருவானது முதல் நாம தேன் கேர் டேக்கர் அண்ட் ஜாமீன் தார்.

ஆகவே அவன் வளர்ந்து சொந்த முடிவுகள் எடுக்கிற வயசு வர்ர வரை அந்த புதாதித்ய யோகம்லாம் நமக்குதேன் பாத்யதை . தப்பித்தவறி அவனுக்கும் ஜோதிடத்துல ஆர்வம் வந்தாச்சுன்னா சொல்லவே தேவையில்லை .கடேசி வரைக்கும் குரு -சிஷ்ய பந்தம் இருக்கும்.

ஆஃப்டர் ஆல் காலணா ஜோசியத்தொழில்ல “பிசினஸ் லைக்கை ” ஒதுக்கி வச்சுட்டு செய்ததுக்கே இது ரிசல்ட் . சுய நலத்தை லேசா சுருக்கினதுக்கே இது ரிசல்ட்.

கடவுள் வேற ஏதாச்சும் சோர்ஸ் ஆஃப் இன் கம் கொடுத்து தொலைச்சு ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு கோவில் மண்டபத்துல “முற்றிலும் இலவசமா” சொன்னா என்ன ஆகும்னு ரோசிங்க.

Advertisements

ஜோதிடம் :முற்றிலும் புதிய கோணம்

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடம் ஆன்மீகத்தின் தலைவாயில். ஆனால் ஜோதிடத்தை எல்லா ஜோதிடர்களும் ( நாளிதுவரை நானும்) லௌகீக கண்ணோட்டத்துல தான் அணுகறோம். நேத்திக்கு திடீர்னு இந்த ஆங்கிள் ஸ்பார்க் ஆச்சு.

ஜாதகன் தனிப்பட்ட மனிதன் என்ற கண்ணோட்டத்துல ,உலகியல் ரீதியா பார்க்கும் போது ட்ரபுள்சம்மா -காம்ப்ளிக்கேட்டடா இருக்கற ஜாதகம் பொது நல கண்ணோட்டத்துல, ஆன்மீக கண்ணோட்டத்துல பார்க்கும் போது பெரிய வித்யாசம் தெரியுது.

வழக்கமா நாம எதையும் சீரியல்ஸ் உட்பட ப்ளான் பண்ணிக்கிட்டோ குறிப்பு வச்சுக்கிட்டோ ஆரம்பிக்கிறதில்லை. ஸ்பார்க் ஆகும் ஆரம்பிச்சுருவம். அதும்பாட்டுக்கு நம்மை கூட்டிக்கிட்டு போயிட்டே இருக்கும்.

ஆனா என்னமோ தெரியலை .இந்த தலைப்பு ஸ்பார்க் ஆனதும் -தலைப்பே வில்லங்கமா இருக்கேன்னு ஒழுங்கு மருவாதியா குறிப்பெல்லாம் எடுத்தன் குறிப்புகளை கம்ப்யூட்டர்ல அடிச்சும் வச்சுக்கிட்டன். .(ஜாதகத்துல பத்துல ராகு கீறதால ஒழுங்குங்கறதே நமக்கு ஆகாது போல )

இந்த மேட்டரை எடுத்தாலே கடந்த 3 நாட்களா மூளை பஜ்னு ஆயிருது. அடிச்சு பிடிச்சு எழுதறதுல்லாம் நம்மால ஆகாத காரியம். மனசு உட்காரனும். மனசுல அந்த மேட்டர் உட்காரனும். உட்காருமா தெரியலை. பார்ப்போம்.

மொதல்ல நம்ம ஜாதகத்தையே எடுத்துக்குவம். நான் கடகலக்னத்துல பிறந்ததால ரெண்டேகால் நாளைக்கொருதரம் ஃபார்மட் அடிச்ச ஹார்ட் டிஸ்க் கணக்கா மாறிட்டு வர்ரதால பிழைச்சேன். இல்லின்னா நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு ஒன்னு தற்கொலை பண்ணியிருக்கனும்.இல்லின்னா கொலை.அதுவும் இல்லின்னா பைத்தியம் பிடிச்சிருக்கும்.

நம்ம ஜன்ம ராசி சிம்மம். முப்பது வயசு வரை லக்னம் வேலை செய்யும். அதுக்கப்பாறம் ராசி வேலை செய்யும்னு ஒரு தாட்டி சொல்லி வச்சதா ஞா.
நம்ம மேட்டர்ல உல்ட்டா. இதுக்கு காரணம் லக்னாதிபதி ராசியிலயும்,ராசியாதிபதி லக்னத்துலயும் பரிவர்த்தனமானதுதேன்.

கிரகங்கள் அவர் வீட்டில் இவர் -இவர் வீட்டில் அவர்னு இருந்தா அதை பரிவர்த்தனம்னு சொல்றம்.பரிவர்த்தனம்னா ரெண்டு கிரகமும் ஆட்சியில இருக்கிறதா கொள்ளனும் (பொதுவிதி). நம்ம அனுபவம் என்னா சொல்லுதுன்னா பரிவர்த்தனமான கிரகங்கள் இவர் காலத்தில் அவர்,அவர் காலத்தில் இவர் கூட வேலை செய்வாய்ங்க போல.

உங்க ஜாதகத்துல பரிவர்த்தனம் இருக்கான்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள்.

ராசிகளை மானிலங்கள்னு வச்சுக்கிட்டா மேஷம்,விருச்சிகம் என்ற மானிலங்களுக்கு செவ்வாயும் , ரிஷபம்,துலாம் என்ற மானிலங்களுக்கு சுக்கிரனும், மிதுனம்,கன்னி என்ற மானிலங்களுக்கு புதனும் ,கடகத்துக்கு சந்திரனும், சிம்மத்துக்கு சூரியனும், தனுசு மீனம் என்ற மானிலங்களுக்கு குருவும், மகர,கும்பம் என்ற மானிலங்களுக்கு சனியும் அதிபதியா இருக்காய்ங்க.

இந்த டேட்டா இருந்தா யாரோட மானிலத்துல (ராசியில) யாரு இருக்காய்ங்கன்னு வெட்ட வெளிச்சமாயிரும். இப்பம் அவர் வீட்ல இவர் ,இவர் வீட்ல அவர் இருந்தா அது பரிவர்த்தனம். இந்த பரிவர்த்தனம்ங்கறது லக்னாத் சுபர்களிடையில் நடக்கனும். அப்பத்தேன் நெல்லது. அதேசமயம் அவிகளுக்கு வேண்டாத சகவாசம்லாம் கூடாது.

ராசி,லக்னாதிபதிகள் இடையில் பரிவர்த்தனம் இருந்ததால மேற்சொன்ன விதி ஏறுக்கு மாறா ஒர்க் அவுட் ஆச்சு.அதாவது முப்பது வயசு வரை சிம்ம ராசிக்கே உரிய அதீத தன்னம்பிக்கை -புகழ்ச்சிக்கு மயங்கறது -பேர் புகழுக்காவ எதை வேணம்னா செய்துர்ரது -தனக்கு மிஞ்சிய தர்மம் இத்யாதி.

எதுவா இருந்தாலும் அடிச்சு தூள் கிளப்பனுங்கற வெறி.அதுவும் ஒரே நாள்ள புரட்டிப்போட்டுரனுங்கற மூர்க்கம்.

ஏதோ அந்த சமயம் அப்பா ஸ்ட் ராங்கா இருந்ததால ஒரு மாதிரியா ஓட்டிட்டம். முப்பதுக்கு அப்பாறம் அப்பா நஹி. இந்த காலகட்டத்துல சிம்ம ராசி இயல்புகள் பொங்கியிருந்தா பட்டினி கிடந்தே செத்திருப்பம்.

நமக்குள்ள கடக லக்ன குணங்கள் வெளிப்பட ஆரம்பிச்சது. உ.ம் மனசு கடல் கணக்கா மாறிருச்சு. மேலுக்கு அலைகள் அலப்பறை பண்ணாலும் உள்ளுக்குள்ள ஒரு பேரமைதி.

ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மென்ட் பாலிசிக்கு வந்துட்டம். மழை எப்படி தூறல்ல ஆரம்பிச்சு அடைமழையா மாறுதோ அப்படி ப்ளான் பண்ண ஆரம்பிச்சம். அதுக்கேத்தாப்ல சம்பவங்களும் நடக்க ஆரம்பிச்சது.

தனபாவாதி சூரியன் லக்னத்துல இருந்ததால நிறைய சம்பாதிக்கனும்ங்கற துடிப்பு இருந்தது. அந்த காலத்துல நம்ம டார்கெட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்.
ஆனால் அதை எல்லாம் சேர்த்து வச்சுக்கனுங்கற எண்ணமோ கனவோ கிடையவே கிடையாது. போஜராஜன் கணக்கா அட்சரத்துக்கு லட்சம் பொன் இல்லின்னாலும் ஆரெல்லாம் கிரியேட்டிவிட்டியோட -பொது நலத்தோட படைக்கிறாய்ங்களோ அவிகளுக்கெல்லாம் மினிமம் கியாரண்டி கொடுத்தாகனுங்கற லட்சியம்.

இப்படி ஒழிச்சுக்கட்டற எண்ணம் வந்ததுக்கு காரணம் தனபாவாதிபதிக்கு விரயாதிபதியோட (புதன்) சேர்க்கை இருந்ததுதான். புதனுக்கு விரயாதிபத்யம் கிடைச்சதாலயோ என்னமோ நாம படைச்ச இலக்கியம்லாம் வீண் விரயமா போயிருச்சு. பேச்சுத்தமிழ்ல படைச்சிட்டிருக்கிற இந்த பதிவுகள் அரங்கேறி அரங்கதிர அட்டகாசம் பண்ற வேளையில ஸ்கின்ப்ராப்ளம் வந்துருச்சு.

இத்தனைக்கும் லைப்ரரிக்கு புத்தக நன்கொடை, இலவச ஜோதிட ஆலோசனை,முக நூல்ல வெட்டி அரட்டைன்னு பரிகாரம் செய்துக்கிட்டே தான் இருந்தம்.ஒரு நாள் 2013 பதிவர் சந்திப்பை பற்றி தெரிஞ்சு படக்குன்னு முடிவெடுத்தேன். மறு அச்சில் மிச்சமா இருந்த 100+ ஜோதிடம் 360 பிரதிகளை பதிவர்களுக்கு இலவசமா தந்தேன்.
அந்த பிரதிகளை பெற்றவர்கள் ஜோதிடர்களாயிரனும்ங்கற அவசியமில்லை. அது யாருக்காக அவிக கைக்கு போச்சோ அவிக கைக்கு அது போகும் போது முருகேசன் சிரஞ்சீவியாயிருவான்.

இப்பமே திருவாரூர்ல சரவணன்னு ஒரு பார்ட்டி ஏறக்குறைய முருகேசனா ஃபார்ம் ஆயிட்டிருக்கு. (ஆருபெத்த புள்ளையோ என்ன ஆகப்போகுதோ) .இவருதேன் ஜோதிடம் 360 உள்ளிட்ட நாலு புஸ்தவத்துக்கு டிடிபி. பத்து பைசா முன்பணம் தரல்லே.அதுக்குள்ற மொத ப்ரூஃப் வந்தாச்சு.

நிற்க. அசலான மேட்டர் இப்பத்தேன் வருது. தாத்தாவுதும் கடகலக்னம் தேன். நம்முதும் கடகலக்னம் தேன். குரு டபுள் ரோல். சத்ரு ரோக ருண ஸ்தானாதிபதியும் இவர்தான். பாக்யாதிபதியும் இவர் தான்.

குரு=பிராமணகுலம். தாத்தா பிராமண எதிர்ப்பை சின்சியரா செய்துக்கிட்டிருந்தவரை ஹேல் அண்ட் ஹெல்த்தி. எப்போ அவரு ஆட்சியில இருக்கும் போது இழையறது -எதிர்கட்சி ஆனதும் நூலார்னு பூரான் விட ஆரம்பிச்சாரோ நோய் பாதிப்பு ஆரம்பிச்சுருச்சு.

நம்மை பொருத்தவரை கடன் ஒரு பக்கம் – எதிர்ப்பரசியல் ஒரு பக்கம். எங்க பக்கத்துல சந்திரபாபுவையே டார்கெட் பண்ணி 1997 முதல் 2003 வரை செம அலப்பறை. பிராமண எதிர்ப்பு ஆதிகாலத்துலருந்தே இருந்தாலும் இணையம் வழி வெளிச்சத்துக்கு வந்த பிறவு கடன் பிரச்சினை ஃபணால் . பெரீ மன்சங்க கிட்ட மோதல் எல்லாம் ஸ்டாப் ஆயிருச்சு.இப்பம் முக நூல்ல போடற ஸ்டேட்டஸ் எல்லாம் ச்சும்மா சாஸ்திரத்துக்கு போடறதுதேன். நாம வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கிட்டா தொல்பொருள் இலாக்கா மாதிரி . தோண்டி எடுப்பம்.

அந்த நிலை வந்துரக்கூடாதுன்னுட்டு லட்ச ரூவா கடனுக்கு ஏற்பாடு செய்திருக்கம் (அரசு) .ஓரிரண்டு வாரங்கள்ள கைக்கு வந்துரலாம். அதுக்கு பிறவாச்சும் ஸ்கின் ப்ராப்ளம் ஒழியுதா பார்க்கனும்.

இதெல்லாம் சொந்த கதை இல்லிங்ணா. இதுவரை ஜஸ்ட் லக்னத்தை மட்டும் தான் அனலைஸ் பண்ணோம். இதுல எந்த ஒரு அம்சம் இல்லின்னாலும் .. நமக்கு 40 வருச இருட்டு இல்லை. அதே நேரம் முருகேசன் வெந்ததை தின்னு விதி வந்தா செத்திருப்பான். நம்மால ஆருக்கும் காணி உபயோகம் இருந்திருக்காது.

இதைத்தான் சொல்லவந்தேன். தனிமனிதங்கற கோணத்துல பார்க்கும் போது தோஷமாக, அவயோகமாக இருக்ககூடிய அம்சங்கள் சமூகம்ங்கற கோணத்துல பார்க்கும் போது யோகமா மாறுது.ஆன்மீக கோணத்துல பார்க்கும் போது அழுக்கு மூட்டை வெளுக்கப்படுது. புதிய வாசல் திறக்குது.

இந்த பேட்டர்ன்ல சொந்த ஜாதகத்தை உதாரணத்துக்கு மட்டும் சொன்னேன். நாளையிலருந்து லக்னாதிபதி 6-8-12 ல் , செவ் தோஷம்,சர்ப்பதோஷம் -இதர கிரகங்கள் கெடுதல் இத்யாதில்லாம் சமூக கோணத்துல -ஆன்மீக கோணத்துல என்னவிதமான நன்மைகளை செய்யுதுன்னு தொடர்ந்து பார்ப்போம்

மேக்ரோ ஜோதிடம்

எக்கனாமிக்ஸ்ல மேக்ரோ எக்கனாமிக்ஸ், மைக்ரோ எக்கனாமிக்ஸ்னு இருக்கிறாப்ல ஜோதிடத்துலயும் கொண்டுவரலாம். நாட்ல இன்னைக்கு செலாவணியில உள்ளதெல்லாம் 99.9% மைக்ரோ ஜோதிடம் தான். ஐ மீன் ” என் ஜாதகம் எப்படி இருக்கு ? எனக்கு எப்போ வேலை கிடைக்கும்? எப்போ சேலை கிடைக்கும்? எப்போ குட்டி போடுவன்”ங்கற கேள்விகளோட நின்னுர்ர ஜோதிடம் மைக்ரோ ஜோதிடம்.

இந்தா தாட்டி நல்ல மழை இருக்குமா? அரசாங்கம் ஸ்திரமா இருக்குமா? இடை தேர்தல் எதுனா வந்துருமா?
( கானிப்பாக்கம்? காளாஸ்திரியா ஞா இல்லை தேவஸ்தானத்து ஆஸ்தான பண்டிதர் ஆந்திராவுல கிரண் சர்க்கார் ஸ்திரமா இருக்கும்னு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காரு – ஆகஸ்டுல இருக்குடி உனக்கு ஆப்பு)
சீனாக்காரன் எதுனா வேலை கொடுத்துருவானா? – பாக் இனிமேயாச்சும் திருந்துமா? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய ஜோதிடம் மேக்ரோ ஜோதிடம்.

இந்த மேக்ரோ ஜோதிடத்தை ஒட்டு மொத்த மனித குல மேன்மைக்கு பயன்படுத்த முடியுமான்னா நிச்சயம் முடியும். தற்போதைய தலைமுறைய திருத்தறது கஷ்டம்தேன்.ஆனால் அடுத்த தலைமுறை சீரழியாம சேஃப் பண்ண முடியும்.

கண்ணால ஸ்டேஜுலயே இதை ஆரம்பிச்சுரனும். ஆருக்கெல்லாம் மணவாழ்க்கை இமிசையா இருக்குமோ அவிகளுக்கெல்லாம் கவுன்சிலிங் கொடுத்து திருமணமில்லாமயே வாழ்ந்துர்ராப்ல செய்யலாம்.

இந்த சோடியிலயும் அஞ்சாமிடம் கெட்டிருந்தா குழந்தை பெத்துக்க அனுமதி மறுப்பு.
இந்த மாதிரி ரிலேஷன்ல தொடர்ச்சி – முதுமையில் பாதுகாப்புல்லாம் ரிஸ்குங்கறதால கட்டாய இன்ஷியூரன்ஸ் (அரசே கூட ப்ரிமியம் செலுத்தலாம்) – உலக சேவை நிறுவனங்களின் நேரடி பார்வையில முதியோர் இல்லங்கள் ஏற்படுத்தலாம்.

ஆனால் இப்படிப்பட்ட உறவுல பிறக்கிற குழந்தைகளுக்கு உரிய சட்டப்பாதுகாப்பு – அரசாங்கத்தோட சிறப்பு கவனம் அவசியம் இருந்தாகனும்.

( தாம்பத்ய வாழ்க்கைக்கான கொடுப்பினை இல்லாத ஆண் ,பெண்களுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் ப்ரொசிஜரா : சேர்ந்து வாழ அனுமதிக்கலாம் – கேடு கெட்ட சாதகமா இருந்தா பாலியல் தொழிலுக்கு ரெக்கமெண்ட் பண்ணலாம். அதுக்கு மிந்தி அந்த தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்.

குழந்தை பிறப்பு:
ஆருக்கெல்லாம் குழந்தை பிறப்புல பிரச்சினை வரும்னு தெரியுதோ அவிக பெத்துக்காம இருந்துர்ராப்ல செய்யலாம்.ஒரு வேளை குழந்தை பெற்றோரை பிரிந்து வாழ்ந்தா பெட்டர்னு இருந்தா பெற்றதும் பிரியனுங்கற கண்டிஷனோட பர்மிஷன் தரலாம்.

இந்த மாதிரி குழந்தைகளை வளர்க்க உலக சேவை நிறுவனங்களின் நேரடி பார்வையில ரெசிடென்ஷியல் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தலாம்.

அதிலும் அந்த குழந்தைகள்னே இல்லே – எல்லா குழந்தைகளோட ஜாதகங்களும் பரிசீலிக்கப்பட்டு அவற்றின் பலம் பலகீனங்களுக்கு ஏற்ற உணவு ,உடை , என்விரான்மென்ட் தரனும். ஜாதகப்படியா கல்வியை தரனும். உ.ம் சனி நல்லாருந்தா டெக்னிக்கல், சுக்கிரன் நல்லாருந்தா ஃபைன் ஆர்ட்ஸ்

குழந்தைகள் அவற்றின் ஜாதகப்படி எதிர்காலத்துல என்னவா மோல்ட் ஆகப்போகுதோ அந்த டார்கெட் -கோல் அதன் மனசுல நல்லா பதியவைக்கப்படனும்.

வேலை வாய்ப்பு:
இதுவும் அவரவர் ஜாதகப்படியே நிர்ணயிக்கப்பட்டு அதுக்குரிய பயிற்சி தரப்படனும். செவ் பலமுள்ளவன் போலீஸ்லயும், ராகு பலம் உள்ளவன் ரகசிய போலீஸ்லயும் ,குரு பலம் உள்ளவன் வங்கித்துறையிலயும் இருந்தா நாடு இப்படி சிங்கியடிக்காது.

இதே டெக்னிக்கை கட்சிகள் தங்கள் உறுப்பினர்கள் விஷயத்துல ஒர்க் அவுட் பண்ணலாம். மொள்ளமாரி,முடிச்சவிக்கி ஜாதகத்துல பிறந்த பிக்காலிகளை தங்கள் ரத்தம் என்ற ஒரே காரணத்துக்காக ப்ரமோட் பண்ணி திகாருக்கு அனுப்பறதை விட இது பெட்டரில்லையா?

எச்சரிக்கை:
ஆனால் குழந்தை பிறப்பின் நேரத்தை குறிக்க ஜாதகங்களை கணிக்க கணிணியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பலனை கேல்குலேட் பண்ண நாட்டில் தலை சிறந்த ( சித்தூர் முருகேசனை தவிர) ஜோதிடர்களின் உதவியுடன் ஒரு புதிய சாஃப்ட்வேரை தயாரிக்கவேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ் தர்ரப்பயே அப்ளிகண்டோட ஜாதகத்தை பார்த்து நாசகாரி ஜாதகனா இருந்தா ரெஃப்யூஸ் பண்ணி வீட்டுக்கனுப்பிரனும்.

சுமார் ஜாதகனா இருந்து லைசென்ஸ் கொடுத்தாலும் கோசாரத்துல எப்பல்லாம் செவ் சனி சேர்க்கை எங்கே – எப்போ ஏற்படும்- அந்த காலகட்டத்துல என்னென்னைக்கு சனி ,செவ்வாய்க்குரிய நட்சத்திரங்க்ள் வரும்னு னு அறிக்கையை கொடுத்து விட்டுரனும். அந்த நாட்கள்ள நமீதாவே வரச்சொன்னாலும் இவன் போகக்கூடாது. மீறிபோனா நஷ்ட ஈடு கிடையாது .

இதுமாதிரி ரோசனைங்கள நீங்களும் சொல்லலாம்ணே. (கமெண்டா போடலாம் – நீளமா இருந்தா மெயிலுக்கு அனுப்புங்க -பதிவாவே போட்டுரலாம்)