நவகிரக தோசங்களுக்கு ” நச்” பரிகாரம்

Me

அண்ணே வணக்கம்ணே !
ஒரு காலத்துல தூய தமிழ்ல எழுதின தொடர் பதிவு இது. நாமதேன் தினசரி ஒரு புது மேட்டரை தெரிஞ்சுக்கிற பார்ட்டியாச்சே .அதனால லேசா அப்டேட் பண்ணி போடறேன்.

முக நூல் உபயத்துல வர்ர புதிய வாசகர்களுக்கு இது புது சரக்கு தேன். தொடர்ந்து வாசிக்கிறவுகளுக்கு எங்கயோ படிச்சாப்ல இருக்குமேன்னு தோனும்.

நம்ம படைப்புகள்ளயே சூப்பர் ஹிட் முகாபுலா இது. நமக்கு யூனிகோட்னா என்னனு தெரியாத காலத்துல தினத்தந்தி சம்பளம் கொடுத்த தகிரியத்த்ல டிடிபி செய்விச்சு வச்சிருந்த மேட்டர் . இதை நிலாசாரலுக்கு அனுப்ப அவிக பெரிய மனசு பண்ணி ஆளை வச்சு அடிச்சு போட்டாய்ங்க.

2000 ஆம் வருசத்துல ஆன்மீகம் மாத இதழ்ல தொடராக ஆரம்பிச்சு “பிராமண சதிகளால்” பாதியில் நிறுத்தப்பட்ட ஐட்டம் இது.

அப்பாறம் அந்திமழை,முத்துக்கமலம் போன்ற வலை தளங்கள், ஜோதிட பூமி மாத இதழ்ல எல்லாம் வெளி வந்து தூள் பண்ண தொடர்பதிவு இது.

இதோ உங்களுக்காக இங்கே மீண்டும்………

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.

உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதகருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி),

செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:

நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.

நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.

1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.

2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.

3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:

யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:

மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

மேலும் போதுமான மெயின்டெய்னென்ஸ் இல்லாத சப்ஸ்டேஷனுக்கு போனாலும் உபயோகம் என்ன? காந்தி தாத்தா அந்த காலத்துலயே காசி எல்லாம் கமர்ஷியலைஸ் ஆயிட்டதா சவட்டியிருக்காரு. இப்பம் அதெல்லாம் என்னா கதியில இருக்கும்னு நினைச்சுபாருங்க.

3. தானம் வழங்குதல்:

நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.

இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனை நம்ம சோஷியல் லைஃப், கேரியர் பாதிக்காத வகையில குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை.

அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.

Advertisements

அலித்தன்மைய தரும் புதன்

அண்ணே வணக்கம்ணே..
உங்கள்ள சோதிட பிரியரா உள்ளவுக சுள்ளுன்னு ஒரு காதலை கேட்டு டிஸ் அப்பாய்ண்ட் ஆயிருக்கலாம். உங்களை திருப்திப்படுத்தவே அகாலமா இந்த ஆடியோ ஜோதிடபால பாடத்தின் தொடர்ச்சியை போஸ்ட் பண்றேன்.

இன்னைக்கு புதன் 7 முதல் 12 பாவங்களில் இருந்தால் ஏற்படக்கூடிய பலனை விவரிச்சிருக்கேன். வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

மரணம் குறித்த பார்வை : ஆண் பெண் வித்யாசம்

மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா – நிதியா – பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா – அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல – அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட – சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு ) Read More

ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் -முடிவுரை

அண்ணே ! வணக்கம்ணே ..
சுகுமார்ஜி ‘என்ன நீங்க நான் பேச நினைப்பதையெல்லாம் நீ(ங்கள்) பேச வேண்டும்னு நான் கேட்கவே இல்லை. நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருந்தா எப்டினு கோச்சுக்கறாரு.அதனால இந்த பதிவோட 7 ஆம் பாவத்துக்கு டாட்டா. Read More

ஒரு கடிதம் பதிவாகிறது : இஸ்மாயில்

அண்ணே வணக்கம்ணே,
நமக்கு வர்ர மெயில் எல்லாம் ரெம்ப கான்ஃபிடன்ஷியல். ஆனால் இந்த மெயில் வேறு சாதி. நீளம் கருதி கமெண்டுக்கு பதில் மெயிலா வந்த மெயில். அதனால இதை பதிவா வெளியிடுகிறேன். சபை இது குறித்து தன் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இனி ஓவர் டு இஸ்மாயில்..

அய்யா வணக்கம்,
ஆண் பெண் வித்தியாசம் என்ற பதிவில் நான் எழுதிய கமெண்டுக்கு தொடர்ச்சி இது. கொஞ்சம் பெரிதாக இருந்ததால் மெயிலில் அனுப்பிவிட்டேன்.

எனக்கு ஜோதிட அறிவெல்லாம் ரொம்ப குறைவு. நான் ஒவ்வொரு கிரகத்தையும் அதன் அமைவிடம், பார்வை,
உட்கார்ந்திருக்கும் இடத்தின் அதிபதி, அது அமர்ந்த இடம், கிரகத்தின் இயல்பு, சேர்க்கை, கோச்சாரம், தசபுத்தியில் பலன்
இதெல்லாம் போட்டு ரொம்ப குழம்பிக்குவேன் முன்னெல்லாம். இப்போ ஒரு கிரகம் என்றால் இப்படித்தான் என்ற காரஹத்துவம் தெரிந்ததில் ஓரளவிற்கு தெளிய ஆரம்பித்து விட்டேன். இப்போ நீங்க சொன்ன படி வாழ்கையின் ஒவ்வொரு பிரிவுக்கும், பிரச்சினைக்கும் என்ன கிரகம் காரணம் என்று புரிய ஆரம்பித்து விட்டதால் எந்த கிரகத்தின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்கிற அளவிற்கு புரிய ஆரம்பித்து விட்டது.

எனக்கு என்னவோ தற்போது உலகில் நடக்கும் விசயங்களை பார்க்கும் பொது மனிதன் ஒவ்வொரு விசயத்தையும் பகுத்தறிந்து பார்க்க ஆரம்பித்து விட்ட மாதிரி தெரிகிறது. சாமியார்கள், அரசியல்வாதிகள் மாட்டுவது, தொடரும் மக்கள் புரட்சி இவைகள் இதனை நிரூபிக்கிறது. முன்னெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஜோதிடம் சொல்லும். இப்போது அவர்களை விட மிக நன்றாக சொல்ல பலர் வந்துவிட்டனர்.

இவன் அதற்க்கு சரிப்பட மாட்டன் என்று யாரையும் எதற்கும் தள்ளி விட முடியாத அளவிற்கு எல்லோரும்
எல்லாமும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நிறைய விஷயம் இப்போது வெப் உலகிலும் கிடைத்து விடுகிறது. ஏதேதோ விசயமெல்லாம் எளிமையாக கிடைக்கும் போது ஜோதிடம் அதுவும் மனிதன் தன்னை சுற்றி நடக்கும் விஷத்தை பற்றி அறியும் அறிவை சிக்கலான கணக்குகள், கணிதங்கள் மூலம் மனிதனை அதனிடமிருந்து தள்ளி வைப்பது நல்லதல்ல.

கிரகங்களை பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரும் ஜோதிடரை தேடி போகவே மாட்டார்கள். வேதாத்ரி மகரிஷி அவர்கள் நவகிரக யாகத்திற்கு பதிலாக பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒன்றினை அவரின் மனவளக்கலை சீடர்களுக்கு போதித்துள்ளார். அதன் உள்ளார்ந்த அர்த்தம் எத்தனை பேருக்கு புரிந்ததோ தெரியவில்லை. தாங்கள் கிரகங்களின் காரகதுவங்களை விளக்கியபின் அந்த தவம் செய்யும் போதும் எண்ணமும் ஆத்மார்த்தமாக நவகிரகங்களுடன் ஒன்ற முடிகிறது.

ஒட்டு மொத்தமாக ஜாதகத்தை வைத்து குழம்புவதை விட தனிப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் கிரகங்களை அணுகுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன். இப்படி அக்கு வேறு ஆணி வேராக பிரித்து அணுகுவதை கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங்கில் “modular ” அப்ப்ரோச் என்பார்கள். இதுவே ராணுவத்தில் Stratified எவ்வளவு பெரிய இராணுவமாக இருந்தாலும் வீரர்களை சிறு சிறு குழுக்களாகவே(STRATA எனப்படும்) வைத்திருப்பார்கள்.(சுமார் 20 பேர் மட்டுமே). இதன் தத்துவம் அந்த குழு மெம்பர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு ஒரு குடும்பமாக மாறிவிடுவார்கள். போரில் அவர்களில் ஒருவன் தாக்கப்பட்ட அவரின் குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவேசப்பட்டு எதிரியை தாக்குவர்.

மனித வாழ்கையின் பல்வேறு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் (பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகளை) ஆதிக்கம் செலுத்தும் கிரகத்தை மனிதன் தனக்கு சாதகமாக மாற்றும் சாதக கணிதம் (ஜாதக கணிதம் அல்ல) குறித்த விரிவான அலசல், விவாதம் தொடங்கி வைக்கலாம். அதாவது symptom based அனலிசிஸ். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல கிரகம் எது, அதனை எப்படி வெற்றி கொள்வது என்று அலசலாம். சாதரணமாக வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது போல எந்த வேலைக்கும் அந்த நேரத்தில் காரக கிரகத்தை புரிந்து எடுக்கும் வேலையில் வெற்றி கொள்வது எப்படி என்று விரிவாக அலசலாம். இதனை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டாலே கோள்களை கொண்டு கோலி ஆட ஆரம்பித்து விடுவான் புத்திசாலி.

எனக்கென்னவோ இதனை தாங்கள் ஒரு ப்ராஜெக்ட் ஆக எடுத்து முழுமையாக புத்தகமாக போட்டால் நல்லது என்று எண்ணுகிறேன். யோசிக்கவும்.

ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம்

அண்ணே வணக்கம்ணே ! ஆண்,பெண் வித்யாசம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டது ஞா இருக்கலாம். அதை தொடர உத்தேசம். தொடர்ந்து எழுதறதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒன்னு சுட்டுர்ராய்ங்க. ரெண்டு நமக்கே போரடிச்சுருது. read more

பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன்

நாம எதையெல்லாம் வளர்ச்சின்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நமக்கு ஆப்பாவே முடியுது. உ.ம் இந்த சைட். ப்ளாக் என்னமோ வித் அவுட் அப்டேஷன் மினிமம் 700 ஹிட்ஸோட சக்கை போடு போடுது. சைட் என்னமோ பஸ்ட் ஆன லாரி ட்யூபுக்கு காத்தடிச்ச கணக்கா -க்ளைமேக்ஸுல ஹீரோயின் பல்ஸ் மாதிரி 1000 க்கும் 300க்கும் இடையில ஃப்ளக்சுவேட் ஆயிட்டு கிடக்கு.

நாம ஏற்கெனவே டிக்ளேர் பண்ண மாதிரி நமக்குள்ள ஆயிரத்தெட்டு திறமைகள் இருக்கு. ஆனால் உலகம் சோசியத்தை மட்டும்தேன் அங்கீகரிச்சிருக்கு. நமக்கும் பைசா தேவைதான். ஆனால் பைசா மட்டும்தேன்னா சாரி.

ஏறக்குறைய உருசு/ திருவிழால ரோபோ வடிவத்துல கம்ப்யூட்டர் (?) சோசியம் சொல்ற பொம்மை மாதிரி ஆயிட்டன். என் ப்ரியாரிட்டிஸ் – என் லட்சியங்கள் எல்லாம் சைடு வாங்கி சோசியம் சோசியம்னு சுத்திவர ஆரம்பிச்சதுல ரெம்ப சுஸ்தாயிட்டன்.

அதனால ரூட்டை மாத்தி 360 டிகிரியில வலம் வரலாம்னு ஒரு ப்ளான். இந்த லைன் அப்ல முதல் பதிவு. பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன் .

பதிவோட உள்ளடக்கத்தை குறித்த ஜோதிட கோணம் பற்றி அனுபவஜோதிடத்துல ஜோதிட ஆராய்ச்சி தொடரட்டும்.

உ.ம் ; கம்யூனிகேஷன் கேப்,ஜெனரேஷன் கேப்க்கு காரணமான கிரகம் எது? புதன்

பெற்றோர் – பிள்ளைகள் உறவுக்கு எந்த பாவம் / கிரகம் முக்கியம்? (லக்னம் -வாக்கு – மாத்ருபாவம் -புத்ரபாவம் – ரோக பாவம் – ஏழாம் பாவம் -ஆயுள் பாவம் – பித்ருபாவம் – விரய பாவம்)

பித்ரு காரகன் சூரியன் (இரவில் பிறந்தோர்க்கு சனி) -புத்ரகாரகன் குரு

அவசியம்னு பட்டா நானும் கலந்துக்கிடறேன். Read More