மண வாழ்வில் சிக்கல் : ப்ரிலிமினரி ரெமிடீஸ்

ஜெயா

அண்ணே வணக்கம்ணே !
9+9 வகை மனைவிகள்+பரிகாரங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சம். நெல்ல எண்ணத்தோட தான் ஆரம்பிச்சம். நம்முது ஒரு கணக்கு இருக்கு.ஒரு மன்சன் 10 டு 5 வேலை மேல இருந்துர்ரார்ன். நைட் 10 டு 6 தூக்கத்துல இருந்துர்ரான். பொஞ்சாதிங்கற கேரக்டரை டாக்கிள் பண்ண வேண்டியதெல்லாம் காலை 6 டு 10 மாலை 6 டு 10 .

ஆக மொத்தமே 6 மணி நேர பிரச்சினைதான். இந்த நேரத்தை சாலாக்கா கழிச்சுட்டா பிரச்சினையே கிடையாது.ஆனால் நடக்கறதென்ன? அவிக இவிகளை நோண்ட -இவிக அவிகளை நோண்ட , அவிக இவிகளை டார்ச்சர் பண்ண,இவிக அவிகளை டார்ச்சர் பண்ண..
காச் மூச்சுன்னு கத்தறதென்ன, சமையலறை பாத்திரங்க உடையறது என்ன, இதை பார்த்து பார்த்து பிள்ளைங்க மன நலம் கெடறது என்ன?
ஹால் பஞ்சாயத்து என்ன? மஹிளா ஸ்டேஷன் என்ன? ஃபேமிலி கோர்ட் என்ன? கொலை/தற்கொலை ,காணாம போறது, சாமியாராயிர்ரது ..ஒன்னா ரெண்டா ? ஏகப்பட்ட என்ன என்ன இருக்கு.

இந்த பிரச்சினைக்கு சூட்சுமத்துல மோட்சத்தை காட்டிரலாம். சனம் கொஞ்சம் நிம்மதியா வாழட்டுமேனு நினைச்சு தான் மேற்படி தொடரை ஆரம்பிச்சம். ஆனால் நடந்தது என்ன?

நமக்கு ஆப்பு மேல ஆப்பு. இந்த வாரம் தொடரலாம் அந்த வாரம் தொடரலாம்னு ஒத்தி போட்டு ஒத்திப்போட்டு ஒன்னம் வேலைக்காகல.
செரி பொன்னை வைக்கிற இடத்துல பூ வைக்கிறாப்ல இந்த பரிகாரங்களை தரேன். சாதாரணமா புருசன் பொஞ்சாதி தகராறு வர்ரதுக்கு காரணம் குரு -சுக்ரபலம் இல்லாம போயிர்ரதுதான். இதுக்கு செய்யவேண்டியதெல்லாம் கீழே ( குரு/சுக்கிரனே சொல்றாப்ல எழுதியிருக்கன்)

கூடவே “மீண்டும் பெரியார்”ங்கற பதிவும் போட்டிருக்கன். படிச்சு பாருங்க.

குரு ஸ்பீக்கிங்:

மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.
நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

சுக்கிரன் ஸ்பீக்கிங்:
வசதியான வீடு , வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றிற்கும் நானே காரகன். தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. கலா ரசனை,கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸ், கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டி எல்லாத்துக்கும் தான் நான் அதிபதி.

பரிகாரம்:
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

அடுத்து கொஞ்சம் சீரியசான பிரச்சினைகள் வருதுன்னா செவ் தோஷம்/ சர்ப்பதோஷம் இத்யாதி தான். ஆகவே செவ்/ராகு /கேது சொல்ற பரிகாரங்களையும் செய்துக்கங்க.

செவ்வாய் ஸ்பீக்கிங்:
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே – நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

ராகு ஸ்பீக்கிங்:

மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.

பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

கேது ஸ்பீக்கிங்:
நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் ‘நம்மவர்’ என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.

பரிகாரம்:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எச்சரிக்கை:
9+9 வகை மனைவியர் பிரச்சினையும் தீர்வும் தொடர் தொடர நீங்க செய்யவேண்டியது: உங்க மைண்ட்ல ஆயிரக்கணக்கான ட்ராக் ஓடிக்கிட்டிருக்கும்.அதுல ஒரு ட்ராக்ல “முருகேசன், இந்த தொடரை முடிக்கனும்.பலரும் பயன் பெறனும்னு ஒரு நாளைக்கு 3 தபா நினைக்கனும்.தட்ஸால்

செம மேட்டரு : 16 (சந்திர காரக மனைவி )

2

அண்ணே வணக்கம்ணே !
செம மேட்டருங்கற தலைப்புல 12 பாவங்கள் தரும் பலனை எப்படி சானலைஸ் பண்றது .சோஷியல் லைஃப்,ஃபேமிலி லைஃப் பாதிக்காம எப்படி சொற்ப பலத்தை வச்சு ஒப்பேத்தறதுன்னு சொல்லிக்கிட்டே வந்தேன். இந்த வரிசையில் 7 ஆம் பாவம் வந்திருக்கம்.

ஏழு மனைவிய காட்டும். இந்த பாவத்தை பிரபாவிக்கிற கிரகம் எதுவா இருந்தா மனைவியின் குண நலன் இதுவா இருக்கும்னு முந்தின பதிவுலயே பெண்களை 9 வகையா பிரிச்சு அவிக கேரக்டரை விவரிச்சிருந்தம்.

ஆக்சுவலா 18 வகையா பிரிக்கனும். மொத்தம் ஒன்பது கிரகம். பாசிட்டிவ் இம்பாக்ட் 9 ப்ளஸ் நெகட்டிவ் இம்பாக்ட் 9 ரெண்டையும் கூட்டினா 18 வருதுல்ல. ஆனால் பலான பெண் பலான கிரகத்தின் காரகம்னு பிரிச்சு தெரிஞ்சுக்கிட்டாலே பாதி பிரச்சினை ஓவர். பாசிட்டிவா நெகட்டிவாங்கற டீட்டெய்ல் உங்களுக்கே தெரியுமே.பாசிட்டிவா இருந்தா பிரச்சினையே கிடையாது. என்றும் பதினாறாய் லைஃபை என் ஜாய் பண்ணலாம்.

நெகட்டிவ் இம்பாக்ட்னா மட்டும் தான் பரிகாரம் தேவை. இதைத்தான் கடந்த சோதிட பதிவுலருந்து ஆரம்பிச்சிருக்கம்.சூரிய காரக பெண் ஓவர்.இன்னைக்கு சந்திர காரக பெண் பத்தி சொல்லனும்.இவிகளால என்ன மாதிரி பிரச்சினைகள் வரும்னு சொல்லி பரிகாரங்களையும் தர்ரன். கரீட்டா கேட்ச் பண்ணி ஃபாலோபண்ண ஆரம்பிச்சிருங்க.மஹிளா ஸ்டேஷன்ல இருந்து ஃபேமிலி கோர்ட் வரை எல்லாத்தையும் அவாய்ட் பண்ணிரலாம்.ஓகேவா உடுங்க ஜூட்டு.
ஒபாமா வந்திருக்காரு . என்ன நடக்கும்? இன்னம் டஜன் கணக்கா அணு உலை திறப்பாய்ங்க, அங்கன குப்பைக்கு போக வேண்டிய – விற்கவே கூடாத சரக்கை எல்லாம் இங்கன விற்க அனுமதி தரப்படும். ராணுவ ஒப்பந்தம்னு கை.எ ஆகும்.

அமெரிக்காகாரன் உலகத்துக்கே விரோதி. அவனோட ஒப்பந்தம் போட்டா அவனோட விரோதி எல்லாம் நமக்கு விரோதி.ஏற்கெனவே வெளி நாட்டு உறவு மேட்டர்ல எந்தளவுக்கு சொதப்பனுமோ அந்தளவுக்கு சொதப்பியாச்சு.

இனம் இனத்தோடு சேரும்/சேரனும். இந்த விதிப்படி பார்த்தா சீனாக்காரன் தான் நமக்கு சோடி .சனத்தொகை விஷயத்துல ஆகட்டும் ,பராம்பரியம்,பண்பாடு இத்யாதியிலயாகட்டும் நமக்கு சீனத்துக்கும் தான் சோடி.ஆனால் மோடி ஒபாமாவோட சோடி போட்டு இன்னம் கொஞ்சம் ரேக்கி விடறாரு.
என்ன இழவு இது. சுஜாதா சொல்றாப்ல கடியாரத்துக்கு உள்ள மூளை போதும்.இது கூடா நட்புன்னு டிசைட் பண்றதுக்கு. நேருவோட பஞ்ச சீல கொள்கைய பஞ்சர் ஆக்கிட்டம் .பிடிச்சது சனி .

பெண் குழந்தைகள் ,பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி 100 மீட்டர் லெட்டர் போட்டாய்ங்களாம்.இது செய்தியா வருது. பிரதமர் அலுவலகத்துலருந்தே பி.டி.ஐக்கு நோட் போயிருக்கும் போல.

பெண் குழந்தைகளின் கல்விங்கறது ஆக்சுவல் ப்ராப்ளம் இல்லை. பல பிரச்சினைகளோட பின் விளைவு தான். நாம அசலான பிரச்சினைகளுக்கெல்லாம் அதிரடி சொல்யூஷன் கொடுத்து லெட்டர் போட்டம்.பதில் இல்லை.

போஸ்டேஜுக்கு சில்லறையில்லயோனு ஜன.6 ஆம் தேதி தபால் செலவுக்காக அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் கூட அனுப்பிட்டம். கண்டுக்கற நாதி இல்லை.

லேட்டஸ்டா வைட் ஹவுசுக்கு எழுதியிருக்கன். ஆனந்த விகடன் காரவிகளுக்கும் ஃபோன்ல நரேட் பண்ணியிருக்கன்.(இது ஸ்டேட் மேட்டர்)
ஒரு பரதேசியும் கண்டுக்கற மாதிரியே இல்லை. என்.டி.ஆர் கணக்கா ஒரு வேன் எடுத்துக்கிட்டு நாடு தழுவிய சுற்றுப்பயணம் தான் போகனும் போல.
செரி..பக்கத்தை மூடிராதிங்க .பதிவுக்கு வந்துட்டன்.

இன்னைக்கு சந்திர காரக பெண்களால் வரும் பிரச்சினைகளை பற்றி சொல்லியே உடறேன்.

சுஜாதாவின் சிறுகதையில கதா நாயகி , அண்ணன் காரன் பரம்பரை வீட்டை விற்கப்போறான்னு தெரிஞ்சு பிசியான கணவனை இமிசை பண்ணி டிக்கெட் ஏற்பாடு செய்துக்கிட்டு வெளி நாட்ல இருந்து இந்தியா வருவா. நாம அவள் அண்ணனோட பொருளாதார நெருக்கடிய தீர்த்து எப்படியாச்சும் வீடு விற்கிறதை நிறுத்திருவான்னு நினைப்பம்.

ஆனால் எப்பமோ சி….ன்ன வயசுல எவனோ ரமேசோடவோ சுரேசோடவோ அப்பா அம்மா விளையாட்டு விளையாடின போது சுவத்துல கிறுக்கினதை தடவிப்பார்த்துட்டு போயிருவா.

சந்திர காரகத்தால் ஏற்படும் பிஹேவியர் இதை மாதிரி தான் இருக்கும்.

சந்திர காரக பெண்ணை பற்றி கூறப்படும் புகார்கள்:
1.சீக்கிரமா சூடாகி -சீக்கிரமே கூல் ஆயிருவாய்ங்க.(கோவத்த சொன்னேங்க) இந்த இடைப்பட்ட நேரத்துல என்ன வேணா நடந்துரலாம்.(கொலை தற்கொலை உட்பட)
2.கொஞ்சம் கூட ப்ராக்டிக்காலிட்டியே இருக்காது .சகட்டுமேனிக்கு சென்டிமென்ட்ஸ் ஃபாலோபண்ணுவாய்ங்க. மனோ ராஜ்ஜியம் நடத்துவாய்ங்க.
3.இன்செக்யூர்டாவே ஃபீல் ஆவாய்ங்க. யாராவது கொஞ்சம் ஆறுதலா பேசிட்டா ஈல்ட் ஆயிருவாய்ங்க.
4.கடவுள்,அய்யரு,குறி சொல்றவிக,சோசியருங்க இப்படி ஆரு வேணம்னா இவிகள சீக்கிரமா இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியும்.
5.மாசத்துல பாதி நாள் ஒரு மாதிரி -பாதி நாள் வேற மாதிரி பிஹேவ் பண்ணுவாய்ங்க. ( அக்ரெசிவா/அமிக்கபிளா, தகிரியமா/பயந்தா கொள்ளியா
5.மழைய பத்தி சொல்லும் போது காஞ்சா காஞ்சு கெடுக்கும் -பேஞ்சா பேஞ்சி கெடுக்கும்பாய்ங்களே அதை மாதிரி தான் இவிக போக்கும்.
6.ஜஸ்ட் ரெண்டே கால் நாள்ள 20 வருசத்துக்கும் தீராத பிரச்சினையை உருவாக்கிக்குவாய்ங்க.
7.நல்லதோ கெட்டதோ பட்டுனு செய்து தொலைச்சாலும் எஃபெக்ட் குறைவு .ஆனால் இவிக ஒதகாத மேட்டருக்கெல்லாம் கூட பயங்கரமா சல்க் பண்ணிக்கிட்டு மனப்போராட்டம் காரணமா வரும் வியாதிகள் எல்லாத்துக்கும் சிகப்பு கம்பளம் விரிப்பாய்ங்க. உ.ம் ரத்த கொதிப்பு ,அல்சர்,ப்ராங்கடைஸ்,வீசிங்
8.சந்திரகாரகம் கொண்ட ஆண் என்றால் சிவசந்திரன் -லட்சுமி கணக்கா மதர்லி ஃபிசிக் /ஏஜ் உள்ள பெண்ணை மணக்கவும் சான்ஸிருக்கு.
9.என் கனவுல செத்துப்போன அம்மா வந்துன்னு ஆரம்பிச்சு – சாமியாடறது ரேஞ்சுக்கு போயி கடேசியில பைத்தியம் கூட பிடிக்கலாம்.
10.அவ முகத்துல முழிச்சாலே அப்படித்தான்னு ஆரம்பிப்பாய்ங்க.ஆரோ எனக்கு சூனியம் வச்சுட்டாய்ங்கன்ற அளவுக்கு போயிருவாய்ங்க.

இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்தா என்ன பரிகாரம்னு கேப்பிக சொல்றேன். அடுத்த பதிவுல ..

செம மேட்டரு: சூரிய காரக மனைவி (பரிகாரம்)

suryanarayana

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல பெண்களை 9 க்ரூப்பா பிரிச்சு அவிக கேரக்டர்,பின்புலம்,அங்க அடியாளம் இத்யாதிய விவரமா சொல்லியிருக்கன். இதுல உங்க மனைவி/காதலி எந்த பேட்ச் -ல வர்ராய்ங்கன்னு ஐடென்டிஃபை செய்தாச்சுல்ல. உங்க மனைவி சூரிய காரக பெண்ணா இருந்தா அவிகளால /அவிகளுக்கு /சில பிரச்சினைல்லாம் வந்திருக்கும்/வரும். இதை ஓவர் கம் பண்றதுக்கு என்ன பண்ணலாம்னு பார்க்கிறதுக்கு மிந்தி பிரச்சினைகளை லிஸ்ட் அவுட் பண்ணிர்ரன்.

1.ஈகோயிஸ்டா இருப்பாய்ங்க
2.அவிகளும் தூங்கமாட்டாய்ங்க.உங்களையும் தூங்க விடமாட்டாய்ங்க
3.எப்ப பாரு அங்க போகனும்னிங்களே போகலியா? அந்தாள பார்க்கனும்னிங்களே பார்த்திங்களான்னு நச் அடிச்சுக்கிட்டே இருப்பாய்ங்க.
4.சின்ன மேட்டர்ல இருந்து பெரிய மேட்டர் வரை உங்கள கமாண்ட் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க.
5.தனக்கு மிஞ்சி தர்மம் பண்றது -புகழ்ச்சிக்கு மயங்கி வில்லங்கத்துல மாட்டறது
6.பல்,தலை,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.
7.சன் செட் ஆனதுமே டீல் ஆயிருவாய்ங்க.
8.இதயபடபடப்பு கூட இருக்கலாம்.
9.கண்ணு பொட்டையா போகலாம், தலை மொட்டையா போகலாம்.
10.எப்ப பாரு அவுட்டிங் போகனும்னே பார்ப்பாய்ங்க
11.அப்பாவோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகமா இருக்கும்.

இதை எல்லாம் ஓவர் கம் பண்ணனும்னா என்ன பண்ணனும்?

1.சூரிய நமஸ்காரம் பண்ணலாம் -காலை/மாலை வாக் பண்ணலாம்.
2.காயத்ரி மந்திரம் சொல்லலாம்
3.ஆரஞ்சு நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணலாம்.
4.சன் டிவி சிம்பல் மாதிரி உள்ள டாலர் அணியலாம் -கீ செய்ன் யூஸ் பண்ணலாம்.
5.காயத்ரி தேவி ,சூரிய நாராயணரை வழிபடலாம்.
6.வாய்ப்பிருந்தா மலைப்பாங்கான பகுதி/ நியூ காலனியில மேடான பகுதியில மாடி வீடா /கிழக்கு பார்த்த வாசலா உள்ள வீட்டுக்கு குடி போகலாம்.
7.வேலைக்கு செல்லும் பெண்ணா இருந்தா வேலைய விடப்படாது. ஹவுஸ் வைஃபா இருந்தா காலனியில குடியிருப்போர் சங்கம் இத்யாதி இருந்தா ஆக்டிவா செயல்படலாம்.
8.சொந்த வீடு கட்டிக்கிட்டிருக்கிறவுக வீட்டின் நடு பகுதியில் ரூஃப்ல திறப்பு இருக்கிறாப்ல ப்ளான் பண்ணிக்கங்க.
9.மாசம் ஒரு நாளாச்சும் ஏதேனும் மலைக்கோவிலுக்கு போய் வரலாம். அல்லது சொந்த கிராமத்துக்கு போய் வரலாம்.
10.கால்ஷியம் அதிகமா இருக்கிற ஃபுட் எடுத்துக்கனும் -யூரின்ல லாஸ் ஆஃப் கேல்ஷியம் இருக்கா பார்க்கனும் -ப்ளட்ல யூரிக் ஆசிட் இருக்கா பார்க்கனும். இருந்தா உடனே சிகிச்சை.
11.வீட்டு ஹால்ல/பெட் ரூம்ல சன் ரைஸ் போஸ்டர் /வால் பேப்பர் நல்லது .

சூரிய காரக மனைவி/பெண்/காதலிக்கு வரக்கூடிய பிரச்சினைகளை எல்லாம் டச் பண்ணிட்டன்னு தான் நினைக்கிறேன். வேற எதுனா பிரச்சினை இருந்தா கமெண்ட்ல கேளுங்க.அதுக்கும் சொல்லிர்ரன்.

நவகிரக தோசங்களுக்கு ” நச்” பரிகாரம்

Me

அண்ணே வணக்கம்ணே !
ஒரு காலத்துல தூய தமிழ்ல எழுதின தொடர் பதிவு இது. நாமதேன் தினசரி ஒரு புது மேட்டரை தெரிஞ்சுக்கிற பார்ட்டியாச்சே .அதனால லேசா அப்டேட் பண்ணி போடறேன்.

முக நூல் உபயத்துல வர்ர புதிய வாசகர்களுக்கு இது புது சரக்கு தேன். தொடர்ந்து வாசிக்கிறவுகளுக்கு எங்கயோ படிச்சாப்ல இருக்குமேன்னு தோனும்.

நம்ம படைப்புகள்ளயே சூப்பர் ஹிட் முகாபுலா இது. நமக்கு யூனிகோட்னா என்னனு தெரியாத காலத்துல தினத்தந்தி சம்பளம் கொடுத்த தகிரியத்த்ல டிடிபி செய்விச்சு வச்சிருந்த மேட்டர் . இதை நிலாசாரலுக்கு அனுப்ப அவிக பெரிய மனசு பண்ணி ஆளை வச்சு அடிச்சு போட்டாய்ங்க.

2000 ஆம் வருசத்துல ஆன்மீகம் மாத இதழ்ல தொடராக ஆரம்பிச்சு “பிராமண சதிகளால்” பாதியில் நிறுத்தப்பட்ட ஐட்டம் இது.

அப்பாறம் அந்திமழை,முத்துக்கமலம் போன்ற வலை தளங்கள், ஜோதிட பூமி மாத இதழ்ல எல்லாம் வெளி வந்து தூள் பண்ண தொடர்பதிவு இது.

இதோ உங்களுக்காக இங்கே மீண்டும்………

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.

உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதகருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி),

செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:

நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.

நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.

1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.

2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.

3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:

யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:

மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

மேலும் போதுமான மெயின்டெய்னென்ஸ் இல்லாத சப்ஸ்டேஷனுக்கு போனாலும் உபயோகம் என்ன? காந்தி தாத்தா அந்த காலத்துலயே காசி எல்லாம் கமர்ஷியலைஸ் ஆயிட்டதா சவட்டியிருக்காரு. இப்பம் அதெல்லாம் என்னா கதியில இருக்கும்னு நினைச்சுபாருங்க.

3. தானம் வழங்குதல்:

நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.

இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனை நம்ம சோஷியல் லைஃப், கேரியர் பாதிக்காத வகையில குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை.

அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.

உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

அண்ணே ..வணக்கம்ணே !

நானும் மாஞ்சு மாஞ்சு சோசியத்தை பத்தி எழுதிக்கிட்டே இருக்கேன். நீங்களும் படிச்சிக்கிட்டே இருக்கிங்க. இன்றைய தேதிக்கு 8 லட்சம் ஹிட்ஸை தாண்டி மீட்டர் ஓடுது.

நம்ம எழுத்துக்களால் எத்தீனி பேரு பலனடைஞ்சாய்ங்கன்னு தெரியலை. சனங்க சைக்காலஜி என்னன்னா திட்டனும்னா ஒடனே திட்டிருவாய்ங்க. ஒரு நன்றி சொல்லனும்னா கூட தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு மறந்தே உடுவாய்ங்க.

இலவச ஜோதிட ஆலோசனைன்னு ஒரு பக்கம் ஓடுது. இருந்தாலும் அது ரெம்பவே நேரத்தை தின்னுருது. ஜாதகம் போட்டு – அனலைஸ் பண்ணி பதில் எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துருது.

ரயில் பெட்டியில ,ரேஷன் கடை க்யூவுல கேட்கிற சனத்துக்கு பதில் சொல்லவே ஒரு மெத்தடை டெவலப் பண்ணி வச்சிருக்கம்.

அதாவது கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு -அந்த பிரச்சினைக்கு காரணமான கெரகத்தை ஐடென்டிஃபை பண்ணி அந்த கெரகத்துக்கு பரிகாரம் சொல்லிர்ரது. இதை முற்றிலும் இலவசமா தர முடிவு பண்ணியிருக்கேன்.

ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னுன்னு பிரச்சினைகளை அனுப்பினா ஊத்தி மூடிருவன். அதே போல ஒரே பார்ட்டி கச்சா முச்சான்னு கேட்டாலும் இந்த பகுதி அம்பேலாயிரும்.

இது எந்த அளவுக்கு ஆக்யுரேட்டா இருக்கும்னு ஒரு சந்தேகம் வரலாம்.

எங்க என்.டி.ஆர் சி.எம்மா இருக்காரு.அந்த நேரம் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்துக்
கிட்டிருக்காரு. பொசிஷனுக்கு வந்து தியானத்துல உட்கார்ராப்ல ஃபோஸ் கொடுக்காரு. படக்குன்னு “கட் கட்”ங்கறாரு.ஏம்பா அங்கன ஒரு பேபி லைட் எக்ஸ்ட் ராவா இருக்கு பாரு அதை எடுத்துருங்கறாரு.
இது எப்டி சாத்தியமாகுதுன்னா எக்ஸ்பீரியன்ஸு. இந்த சம்பவத்தை ஒரு தாட்டி குமுதத்துல படிச்சதா ஞா.

நம்ம ஊருல ஒரு அய்யரு ஃபேமிலி. குழந்தைங்க இல்லின்னு ஒரு பெண் குழந்தைய தத்து எடுத்து வளர்க்கிறாய்ங்க. அது ஸ்கூலுக்கு போற வயசு. பில் குல் ஸ்கூலுக்கு போகமாட்டேங்குது. அப்பம் அய்யரம்மா இதுக்கு எதுனா பரிகாரம் சொல்லுங்கோன்னு கேட்டுது.

பாப்பாவுது மேஷ ராசி. அப்பம் மேஷத்துக்கு வாக்குல சனி. ஒரு கருப்பு கவுத்துல எட்டு ஊக்கு பின்னு கோவுத்து போட்டு விட்டுருங்க. ஸ்கூலுக்கு போகும்னேன். ப்ராப்ளம் சால்வ்ட். இது எப்டி ஒர்க் அவுட் ஆச்சுன்னு ஜூரிங்க ஆருனா சொல்லலாம்.

பிரச்சினை எம்மாம் பெருசோ சொல்யூஷன் கூட அம்மாம் பெருசா இருக்கனுங்கற அவசியமில்லை. சூட்சுமத்துல மோட்சம் இருக்குங்ணா..

உங்க பிரச்சினைய எழுதுங்க. உடனடி தீர்வை உடனடியா சொல்றேன். உடுங்க ஜூட்டு..

பின் குறிப்பு:

சென்னை பதிவர் சந்திப்புல அறிமுகத்துக்கே காலை 10 முதல் மதியம் 2 வீணாப் போயிருச்சு. இதைவிட முன் கூட்டியே பதிவர்கள் படத்தோட ஒரு புக்லெட் ஜெராக்ஸ் அடிச்சு கொடுத்திருக்கலாம்னு கடந்த பதிவுல எழுதியிருந்தன்.

இதை படிச்சு டிசைட் பண்ணாய்ங்களோ அவிகளுக்கே ஸ்ட்ரைக் ஆச்சோ தெரியலை .இப்பம் மேற்படி கன்டென்டோட ஒரு புஸ்தவமே போடப்போறாய்ங்களாம். வாழ்க..

12+12 பாலியல் விருப்பங்கள்: 2

அண்ணே வணக்கம்ணே !
உடலுறவு விருப்பங்கள் 12+12 ஆரம்பம் எப்பூடி? பாசிட்டிவ் 12 , நெகட்டிவ் 12 ஆக 24 நாளை ஓட்டமுடியும். நேத்து பாசிட்டிவ் 12 பார்த்தோம். இன்னைக்கு நெகட்டிவ் 12 பார்ப்போம். நாளைக்கு 24 கேட்டகிரிக்கும் பரிகாரங்களை பார்ப்போம்.

இந்த பதிவு உங்களுக்கு பயன்படனும்னா இந்த 24 கேட்டகிரியில நீங்க எதுல வர்ரிங்கன்னு அசெஸ் பண்ணிக்கனும். நம்ம பத்தி நாம அசெஸ் பண்ணும்போது ரிசல்ட் கரீட்டா வர்ரது கஸ்டம் தேன்.

ஆதி நாட்கள்ள நான் ஒரு பெரிய ஜன நாயகவாதிங்கற ஃபீலிங் நமக்கிருந்தது உண்டு. அதை அப்படியே வச்சு அசெஸ் பண்ணா ரிசல்ட்டு ராங்கா தானே பூடும்.

நாம இன்னைக்கு ஜன நாயகத்தை பத்தி , மனித உரிமைகளை பத்தி கிழிச்சுக்கறோம்னா நமக்கு இந்த அரசுகளை பிடிக்கலை , இந்த அரசுகள் நம்மோடதில்லை. தப்பித்தவறி நாட்ல டைரக்ட் டெமோக்ரசி வந்து – எலீக்சன்ல ப்ரசிடென்டா எலக்ட் ஆயிட்டம்னு வைங்க என்ன ஆகும்? ( நல்ல பேரடி பதிவாயிர்ர வாய்ப்பு இருக்கு.ஆருனா ட்ரை பண்ணுங்ணா)

அடிப்படையில நாம அராஜக வாதி. ஆனால் மேலுக்காச்சும் ஜன நாயகவாதியா காட்டிக்கனுமில்லியா? அதுனாலதேன் ஒரு காலத்துல சனங்க வண்டை வண்டையா போட்ட கமெண்ட்ஸை கூட பிரசுரிச்சுக்கிட்டிருந்தம். நம்ம ஜா.ரா வருகைக்கு பிறவு – அந்த பிரகிருதி கமெண்டு போடறவுகளையும் வம்புக்கிழுக்கிறதை பார்த்துட்டு சனம் நமக்கெதுக்கு வம்புன்னு பேசாம படிச்சுட்டு கமெண்ட் போடாம போயிர்ராய்ங்க.

இது நமக்கு கொஞ்சம் உறுத்தலை கொடுக்குது. ஆனால் முக நூல்ல பாருங்க .. போற போக்குல ஒரு லைக் போட்டுட்டு போயிட்டே இருக்கலாம். அல்லது ஷேர் பண்ணலாம். இப்படி எத்தனையோ வசதி இருக்கு.

சரிங்ணா இன்னைக்கு போட வேண்டிய உடலுறவு விருப்பங்கள் தொடர் பதிவின் அத்யாயத்தை முக நூல்ல போட்டிருக்கன். இங்கே அழுத்தி நம்ம முக நூல் பக்கத்துக்கு வாங்க .பதிவை படிங்க .பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. ரெம்ப பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க இந்த முக நூல் பக்கத்தை ஒரு ஜோதிட என்சைக்ளோ பீடியா கணக்கா மாத்திரனும்னு ஆசை .உங்க ஆலோசனைகள் ,கருத்தை தெரிவிக்க தயங்காதிங்க..

12+12 பாலியல் விருப்பங்கள்

அண்ணே வணக்கம்ணே !
பந்தாவா படுக்கையறை ரகசியங்கள்னு அவசரமா ஒரு தொடரை ஆரம்பிச்சோம். ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ப்ராஜக்ட்ல இது ஒரு அங்கம்தான். இடையில ஹிட்ஸ் தொங்கறதை பார்த்து தாவி தர்கமற்ற பிரச்சினைகளுக்கு தாவிட்டமா.. இன்னாபா இது ப.அ.ரகசியம்னு சொல்ட்டு மேட்டரே இல்லியேன்னு மஸ்தா பேரு கஸ்டப்பட்டாய்ங்க.

இப்பம் இந்த பதிவும் அதே ப்ராஜக்ட்ல -அதே தொடர்ல வர வேண்டிய அத்யாயம் தேன்.ஆனால் ஏமாந்த சனம் அண்டாதுங்கறதால புதுசா ஒரு தலைப்பு. இதுக்கு 12+12 செக்ஸுவல் பிஹேவியர்னு பீட்டர் விடலாம்னு பார்த்தேன். அப்பாறம் ட்ராப்.

சைக்காலஜியில இந்த மாதிரி மேட்டர் இருக்கா? இருந்தா எத்தீனி ரகம்னுல்லாம் நமக்கு தெரியாதுங்ணா. நம்முது பட்டறிவு தானே கண்டி பட்ட அறிவு கடியாது. தலைப்புல உள்ள 12+12 பாலியல் விருப்பங்களை ரெண்டு கேட்டகிரியா பிரிக்கலாம்.

1.பாசிட்டிவ் 2.நெகட்டிவ். நாம பாசிட்டிவ் திங்கருங்கறதால இன்னைக்கு பாசிட்டிவ் செக்ஸுவல் பிஹேவியர்ஸ் (9) ஐ பார்ப்போம். இவிகளுக்கு என்ன மாரி பிரச்சினைகள் வரும் அதுக்கு என்ன தீர்வுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.

1.சுகமான கற்பனைகள் – நல்ல ரசனை – கலைகள்ள ஈடுபாடு -பெண்களுடன் இரண்டற கலக்கும் மென்மை/பெண்மை உ.ம் ரெசிப்பி பத்தி கூட டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க. டிப்ஸ் கொடுப்பாய்ங்க. இவிகளை பொருத்தவரை வீடு,வாகனம்லாம் அனுபோகத்துல இருக்கும். (சொந்தம்னு அடிச்சு சொல்லவரலை -எவனுதோ இவிக தங்களோடதை போல அனுபவிக்கறாபல் ஒரு அமைப்பு.

பிரச்சினை:
கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி கியாரண்டி இதை சீரணிச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ் இல்லின்னா பிரச்சினைதேன்.

2.கை நிறைய சம்பாதிப்பாய்ங்க. சிருங்கார ரசம் தொனிக்கும் பாட்டு, வசனம், ஓவியங்களை பத்தி நிறைய பேசுவாய்ங்க. பாடிக்காட்டுவாய்ங்க,பேசிக்காட்டுவாய்ங்க.அன்ன, பானத்துக்கெல்லாம் குறைவிருக்காது குடும்ப வாழ்வில் பற்றிருக்கும். அழகான கண்கள் அமைஞ்சிருக்கும். பார்வையில இதம் இருக்கும் -ரசனை இருக்கும். தோரஹா இருக்காது.

பிரச்சினை:
பேச்சுல உள்ள வேகம் -ஆழம் செயல்லயும் எதிர்பார்க்கப்பட்டு அந்த எதிர்ப்பார்ப்பை பார்ட்டியால நிறைவேற்ற முடியலின்னா பிரச்சினை வரும்.

3.கொஞ்சம் பயந்த சுபாவமா இருப்பாய்ங்க.பிஞ்சுல பழுத்த கணக்கா ருசி காட்டப்பட்டு ருசிக்கு ஏங்கி ஏங்கி இளைச்சு இப்பம் அவெய்லபிள்ங்கற வயசு வரும்போது பேட்டரி வீக் ஆயிருக்கும். அன்னந்தண்ணிக்கு கூட அல்லாட வேண்டி வரலாம். வீடு வாகன விஷயங்கள் பிரதிகூலமா இருக்கும். நடந்தே அலைய வேண்டி சிட்டிபஸ்ல அல்லாட வேண்டி வரலாம்.24 மணி நேரம் மியூசிக் கேட்க விரும்பலாம்.

பிரச்சினை:
இவிக 18 வயசுல கண்ணாலம் பண்ணாலே லேட்டுதான்.ஆனால் பெரியவுகளே ஜாதக நோட்டை எடுத்துக்கிட்டு அலைஞ்சாலும் கண்ணாலம் ? ஊஹூம் ..

4. கலை இலக்கியத்தை பாடமாவே படிச்சிருக்கலாம். வீடு,வாகனம் ஓகே. ஜாதகர் பெண்ணா இருந்து பகல்ல பிறந்திருந்தா அம்மாவுக்கு/தாய் வீட்டு சனத்துக்கு அதீத இம்பார்டென்ஸ்/ இது காரணமாவே தாம்பத்ய வாழ்க்கை ஃபணால். வீட்டோட மாப்பிள்ளைய எதிர்பார்க்கலாம்.ஜாதகர் ஆணா இருந்தால் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் இருக்கலாம். தாய் வயது/ தாய் உடல் வாகு கொண்டவுகளை விரும்பலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

5. கலைகளின் மீது அளவற்ற ஆர்வம்.மற்ற எல்லா விஷயங்களையும் திராட்டுல விட்டுருவாய்ங்க. பிறவிக்கலைஞர்கள், தெய்வீககாதலர்கள். காதலர்/லி க்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தே எதிராளியால அலட்சியப்படுத்தப்படலாம். இவிக கலைக்கு அங்கீகாரம் கிடைச்சு பைசா புரண்டா பரவால்லை. இல்லின்னா பிரச்சினை தான்.இவிகளோட கலைப்படைப்புகளின் சாரம் காமமா இருக்கலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

6.பை பர்த் அ பால்யத்துலயே ஜனனேந்திரியத்துல பிரச்சினை வரலாம். இவிக காதல் மோதல்லதான் ஆரம்பிக்கும். பூனைக்காதலா இருக்கும். எப்பம் முட்டிக்கிறாய்ங்க – எப்பம் கட்டிக்கிடறாய்ங்கன்னு சொல்லவே முடியாது. வீடு வாகனம் தொடர்பான கடன் கழுத்தை நெறிக்கும். பகல்ல பிறந்திருந்தா தாய் கூட நோய் வாய்படலாம். வாகன பறிமுதல், அபராதம், வீடு ஜப்தி கூட நடக்கலாம். காதலர்/காதலியிடமே கை மாத்து வாங்கற கேஸுங்க.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

7.காதலுக்காக உசுரை விடற பார்ட்டிங்க. காதல் கை கூடிட்டா ( ஐ மீன் கண்ணாலத்துல முடிஞ்சு தொலைச்சா- அதிலயும் ஒன்னு மண்ணா வாழ்ந்தா ) ஒவ்வொரு வேளை சோத்துக்கும்,துணிக்கும் கூட அல்லாட வேண்டி வரலாம். இவிக காதல் சிட்டுக்குருவி காதலா இருக்கும். சட்டு புட்டுன்னு பெத்துக்கலின்னா வீரியத்துல கவுண்ட் குறைஞ்சுரும். குழந்தை பிறப்புல பிரச்சினை வ்ரலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

8.கில்மாவுக்காவ ஹை ரிஸ்க் எடுப்பாய்ங்க. ( சுவர் ஏறி குதிக்கிறது Etc) இவிகளும் அன் மேரீடா இருந்து அவிகளும் அன் மேரீடா இருந்தா பரவால்லை. ஆருனா ஒருத்தரு மேரீடா இருந்தா – தந்தியில கள்ளக்காதல் எதிரொலி கூட கேட்கலாம். இவிகளுக்கு இதர வாழ்வியல் பிரச்சினைகள் இருந்தாலே நல்லது இல்லாட்டி வகை,தொகை இல்லாத கில்மாவே இவிக ஆயுளை குறைச்சுரும். நடுவயசுலயே லுல்லாவை உச்சா போறதுக்கு மட்டும் உபயோகிக்க வேண்டி வந்தாலும் வரலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

9.அப்பா வழியில சொந்த வீடு இருக்கலாம். அப்பா ஹவுசிங், ஆட்டோமொபைல்ஸ், கலைத்துறையில இருக்கலாம். காதலுக்காக நாடு விட்டு நாடு போகவும் தயங்க மாட்டாய்ங்க. ஏசி வேணம், குர்ல் ஆன் பெட் வேணம்னு பாலைவனத்துல ஒட்டகம் மேய்க்க கூட ரெடி ஆயிருவாய்ங்க. கண்ணாலத்துக்கு மிந்தி காதலியை கர்பமாக்காத பொறுமைசாலிங்க. செக்ஸ் மேல நாட்டமிருக்கும்.ஆனால் அதை தள்ளிப்போட்டுக்கிட்டே வருவாய்ங்க. ( வீரியம் புரண்டா பாய்ஞ்சுருவாய்ங்க அது வேற கதை) ஃபேஸ்புக்ல லவ்/ ஆன் லைன் சாட்ல லவ் எல்லாம் இவிகளுக்குத்தேன் சாத்தியம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

10.லைஃப்ல செக்ஸ் இருக்கலாம். செக்ஸே லைஃபாயிட்டா? அது இவிக லைஃபை போல இருக்கும். இழந்த சக்தி வைத்தியர்களின் வேட்டைக்களம் இவிக தான். ஹவுசிங், ஆட்டோமொபைல்ஸ், கலைத்துறையில பத்தோட பதினொன்னா இருந்தா பரவால்லை. எதையாவது சாதிச்சு தொலைச்சா ஒடனே கைனகாலஜிக்கல் பிரச்சினைகள், தம்பதிகள் பிரிவு, சின்ன வீடு ,பொருந்தா காதல்லாம் வந்துரும். ஒரு தலைக்காதல், மிரட்டி காதலிக்க சொல்றது இத்யாதிக்கும் வாய்ப்புண்டு.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

11.மாமனார் காசுல அப்பார்ட்மென்ட், ஃபோர் வீலர், வெளி நாட்டு சுற்றுலால்லாம் எஞ்ஜாய் பண்ணலாம். ஆடம்பரம், படாடோபம் இத்யாதிக்கெல்லாம் பர்ஸையோ/செக் புக்கையோதிறக்கவேண்டிய அவசியமே இல்லாம எல்லாம் தானா அமையும். ஜாதகர் ஆணா இருந்தா வசதியான அக்கா மகளை கூட மணக்க வாய்ப்பிருக்கு. சின்ன வீடு , எக்ஸ்ட்ரா மேரிடியல் அஃபேருக்கும் சான்ஸ் இருக்கு. அந்த லிங்க்ல கூட சொத்து சுகம் வந்து சேரலாம்.

பிரச்சினை:
பொஞ்சாதிக்கு செக்ஸ் பவர் இருந்து -செக்ல கை.எ வேணம்னா மட்டும் இன்னைக்கு வெளிய போய் சாப்பிடலாம். வீட்டுக்கு வந்ததும்னு பட்டைய கிளப்புவாய்ங்க

12.பாலியல் தொழிலாளிகள், கில்மா வீடியோ , பிட்டு படத்துக்கெல்லாம் இவிக தான் முக்கிய சோர்ஸ். பலான நேரத்துல பொஞ்சாதிக்கு எக்குதப்பா வாக்கு கொடுத்துட்டு அல்லாடற ரகம். இவிக சதைப்பசி ஒரு கட்டத்துல வெறும் பசியா மாறிரும். அப்படி மாறித்தொலைச்சா ஷுகர் வாங்கி சதைப்பசியே இல்லாத ஒரு நிலை கூட வரலாம்

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

குறிப்பு: இந்த 12 கேட்டகிரியில நீங்க எந்த கேட்டகிரியில வர்ரிங்கன்னு பார்த்து வச்சுக்கங்க. இந்த கேட்டகிரியில இருக்கிறதால வர கூடிய பிரச்சினைகளை தவிர்க்க பரிகாரம் என்னங்கறதை நாளைக்கு பார்ப்போம்.