10-11-12 அதிபதிகள் நின்ற பலன்

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புதிய பதிப்புல பிற்சேர்க்கையா வெளியிட துவாதச பாவாதிபதிகள் நின்ற பலன் எழுதிக்கிட்டிருக்கம்.இதுல 10,11,12 பாவாதிபதிகள் நின்ற பலனை கன்னிமராவுல போட்டிருக்கன். ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

பாக்யாதிபதி நின்ற பலன்

9-1 லக்னத்தில் :
அப்பா,அப்பாவழி சொந்தக்காரவுக, அப்பா வழி சொத்து, தூர பிரயாணம், கோவில் குளம்,இத்யாதி அனுகூலம். தொலை நோக்கு சிந்தனை இருக்கும்.சேமிப்பு குணமிருக்கும்.தர்ம குணம் இருக்கும். பக்தி, புராணம் இதிகாசங்கள்ள ஆர்வம் ஏற்படும். தூர தேச தொடர்புகள்,பப்ளிஷிங் அனுகூலம். அப்பா சாயல்,அவரோட இம்பாக்ட் அதிகமா இருக்கலாம்.

9-2 இரண்டில்:

சிறுக சிறுக சேர்த்து சொத்துக்கள் வாங்குவர். சேமிப்பு,முதலீடு அனுகூலம்.இந்த துறைகளில் ஆலோசகராக தொழில் செய்யவும் வாய்ப்பு. தந்தை வழி சொத்தும் -அவை வழி வருமானமும் இருக்கலாம். ஜாதகம் சரியில்லின்னா இதை வச்சே வாழ்க்கை நடத்தவேண்டியும் வரலாம்.தூர தேச தொடர்புகள், பப்ளிஷிங் ஆகியன கை கொடுக்கலாம்.தொழிலில் தந்தை வழி உறவின் ஒத்துழைப்பு கிடைக்கலாம்.

9-3 மூன்றில்:
அப்பாவுக்கு நல்லதில்ல. ரிஸ்கியான இன்வெஸ்ட்மென்ட்,சேமிப்பெல்லாம் செய்வாய்ங்க. சொத்து மேட்டர்ல அலைச்சல் ஏற்படலாம். தூர தேச தொடர்புகள்,பயணங்கள் அலைக்கழிப்பை ஏற்படுத்தலாம்.இந்த மேட்டர்லயும் அட்வென்சர் பண்ணுவிங்க. உ.ம். டூரிஸ்ட் விசாவை வச்சே வெளி நாட்ல வேலை செய்யலாம்னு நினைக்கிறது.
9-4 நான்கில்:
தாயே தந்தையின் கடமைகளை ஆற்ற நேரலாம்.அல்லது தந்தை தாயுமானவர் கணக்காக தாயின் கடமைகளை ஆற்ற நேரலாம்.பூர்விக சொத்தாய் வீடு. தந்தை/பெரிய மனிதர்கள் தரும் பரிசாய் வாகன யோகம். ஜாதகரின் கல்வி/வித்தைக்கு தூரதேசங்களில் இருந்து பரிசு பாராட்டு. தூர தேசங்களுக்கு போய் கல்வி பயிலும் /போதிக்கும்/பிரசங்கம் செய்யும் வாய்ப்பு.
9-5 ஐந்தில்:
தொலை நோக்கு,சிக்கனம்,சேமிப்பு,தொலை தொடர்பு,தூர தேச தொடர்புகள்,எக்ஸ்போர்ட்,இம்போர்ட்
பப்ளிஷிங்.தான தருமம், மதம் தொடர்பான செயல்பாடுகளில் ஈர்ப்பு.இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் கணவர் மன முதிர்ச்சியற்றவராக இருக்க ஜாதகர் ஒரு தாயை போல அவரை தம் பிடியில் வைத்திருப்பார்.ஆண் குழந்தைகள் சிறு வயதிலேயே பொறுப்புடையவர்களாக மாறுவர்.
9-6 ஆறில்:
அப்பாவுக்குசத்ரு -ரோக -ருண பீடைகள் அல்லது அவருடன் முட்டல் மோதல்,அப்பாவழி சொத்து,முதலீடு ,சேமிப்பில் வில்லங்கம்.தூர தேச தொடர்புகளால் வில்லங்கம்.பொஞ்சாதி தாலிய அடகு வச்சு கவிதை தொகுப்பு போடறது. தூர பயணத்தில் உத்தரகாண்ட் வெள்ளத்துல சிக்கினவுக கணக்கா லாக் ஆயிர்ரது. வெளி நாடு போயி கிளிக்கிறேன்னு அவதி படறது.தொடை பகுதியில் பிரச்சினை வரலாம்.
9-7 ஏழில்:
அப்பா வழி உறவில் அல்லையன்ஸ். பொஞ்சாதி ஒரு தகப்பனை போல நல்லது -கெட்டது சொல்லி வழி நடத்தலாம். அவிக வழியில பூர்வீக சொத்து கிடைக்கலாம் அல்லது உங்க பக்கத்து சொத்து கைக்கு வர அவிக உதவலாம் . தூரதேசத்துல அல்லையன்ஸ் ஃபிக்ஸ் ஆகலாம்.மனைவி சேமிப்பு -முதலீட்டுக்கு மோட்டிவேட் பண்ணுவாய்ங்க.
9-8 எட்டில்:
அப்பாவுக்கு கண்டம்,அல்லது அவருடன் பிரிவு,அப்பா வழி சொத்து நஷ்டமாதல், முதல் இழத்தல்.சேமிப்பும் கை கொடுக்காது போதல்.தூர பிரதேசத்தில் அல்லது வெளி நாட்டில் சிக்கி தவித்தல்,வெளி நாட்டு தொடர்புகளால் சிறை/பெரு நஷ்டம்/உயிராபத்துக்கும் வாய்ப்பு. தொடை பகுதியில் எலும்பு முறிவு /காயம் ஏற்பட வாய்ப்பு.

9-9 ஒன்பதில்:
அப்பா,அப்பா வழி உறவுகளோட இன்ஃப்ளுயன்ஸ்,இம்பாக்ட் அதிகமா இருக்கும். உங்கள் நேரடி உழைப்பால் வரும் வருமானத்தை விட அப்பாவழி சொத்து,சேமிப்பு,முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகமாக இருக்கலாம்.ஜாதகம் பல்பு வாங்கியிருந்தா வேலை வெட்டி பார்க்காம – திங்கறதுக்கும் கணக்கு பார்த்து இழுத்து பிடிச்சு ரீ இன்வெஸ்ட்மென்ட் செய்துக்கிட்டும் – எஃப்.டி போட்டுக்கிட்டும் காலத்தை கழிப்பிங்க . வங்கியில ஹவுசிங் லோன் போடவும் -வீட்டு வாடகை வசூலுக்குமே பிழைப்பு சரியா இருக்கலாம். சிலர் இதே மேட்டர்ல கன்சல்டன்ட் கூட ஆகலாம். சிலர் காசி ராமேஸ்வரம் மாதிரி தீர்த்த யாத்திரை ஆர்கனைஸ் பண்ணலாம்.
9-10 பத்தில்:
வாழ்க்கையில 2 விதமான மன்சங்களை பார்க்கிறோம். ஒரு க்ரூப்பு வாழ் நாள் எல்லாம் மாடு மாதிரி உழைச்சிட்டே இருப்பாய்ங்க. ஒரு சொத்தா,பத்தா ஒன்னும் சேர்க்க முடியாது. இன்னொரு க்ரூப்பு இருப்பாய்ங்க. ஏதோ பெரியவுக சம்பாதிச்சு வச்சுட்டுப்போனதை வச்சு குத்தகை ,வட்டி வாடகைன்னு வாங்கி தின்னுட்டுருப்பாய்ங்க. ஆனால் பாக்யாதிபதி பத்துல இருந்தா பெரியவுக வச்சுட்டு போனதை தொழில்ல போட்டு ஒரு புரட்டு புரட்டுவிங்க. ஒர்க் அவுட்டும் ஆகும். சிலர் கோவில்-குளம் -தெய்வீகம் சம்பந்தப்பட்ட தொழிலையே செய்யலாம் (உ.ம் கிரி ட்ரேடிங் ஏஜென்சி)
9-11 பதினொன்றில்:
சித்தப்பா,பெரியப்பா மாதிரி கேரக்டரோ அல்லது அப்பா வயதுள்ள நபரோ உங்கள் வாழ்க்கையில திருப்புமுனையை ஏற்படுத்தலாம். தூரப்பயணங்கள் அதிகம். சொத்து ,பத்துலருந்து ரெண்டு விதமான ஆதாயம் கிடைக்கலாம்.
9-12 பனிரெண்டில்:
அப்பாவுக்கு நல்லதில்லை.அவர் நெல்லா இருந்தா அவர் ஆதரவு உங்களுக்கில்லை. அப்பா வழி உறவுகளாலும் வீண் விரயம் தான்.சேமிப்பும்,முதலீடும் நஷ்டமாகலாம்.தூர பயணங்களாலும்,தூர தேச தொடர்புகளாலும் வீண் அல்லல் அலைச்சல் ஏற்படும். யாகம்,ஹோமம்,அபிசேகம் ஆராதனைன்னு அள்ளிவிடுவிங்க.

4.மாத்ரு பாவாதிபதி நின்ற பலன்

4-1 லக்னத்தில் நின்றால்:
தாயுடன் பிணைப்பு. ,தாய் வழி உறவால் உதவி. சொந்த வீடு,வாகனம் அமையும். உயர் கல்வி சாத்தியமாகும்.

4-2 இரண்டில் நின்றால்:
தாய் வழி சொத்து, தாய் வழி உறவின் ஆதரவு, கெட்ட நேரத்தில் தாய்வழி சொத்தை விற்று செலவழித்துவிட்டாலும் பின் சிறுக சிறுக சேர்த்து சொத்து வாங்கலாம். வாகன யோகம், தெரிந்ததை எதிராளிக்கு எளிமையுடன் சொல்லி தரும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். மென்மையான உணர்வுகள் இருந்தாலும் பொருளாதார விஷயங்களிலும் கவனம்.
4-3 மூன்றில் நின்றால்:
தாய்க்கு நல்லதில்லை, வீடு மாற்றம்,ஊர்மாற்றம்,வேலை மாற்றம் ஏற்படலாம். வாகனத்தில் சுற்றி அலையும் வேலை அமையலாம், வழக்கறிஞர், பட்டிமன்ற பேச்சாளர் ஆக வாய்ப்பு. பேச்சு அக்ரசிவா,அட்வென்சரஸா இருக்கலாம். இதயபடபடப்பு இருக்கலாம்.
4-4 நான்கில் நின்றால்:
தாய்க்கு நல்லது.ஆனால் தந்தையின் ரோலையும் ப்ளே பண்ண வேண்டி வரலாம். சொந்த வீடு,வீட்டுமனைக்கு வாய்ப்பு.சொந்தவாகனம் உண்டு. உயர்கல்விக்கு வாய்ப்பு. ஹவுசிங்,ஆட்டோமொபைல்,இன்டிரியர்ல கான்சன்ட் ரேட் பண்றது பெஸ்ட்.
4-5 ஐந்தில் நின்றால்:
கடந்த பிறவியிலான தாய் வயிற்றிலேயே மீண்டும் பிறந்திருக்க வாய்ப்பு. பூர்விக சொத்தாக /பரிசு, பாராட்டாக வீடு ,வாகனம் அமையலாம். பெரிதாக அகடமிக் எஜுகேஷன் இல்லாமலே உள்ளுணர்வு காரணமாகவே விஷய ஞானம்,புகழ் கிடைக்கலாம்.
4-6 ஆறில் நின்றால்:
தாய்க்கு நோய் அ தாயுடன் கருத்து வேறுபாடு அ அவருக்கு கடன். வீட்டுக்கடன்,வாகனக்கடன். வீடு ,வாகன விஷயங்களில் வில்லங்கம். படிப்பில் அடித்து பிடித்து முன்னேறுவது. ரீ க்ரெக்சன்,ரீ டோட்டலிங் தேவைப்படலாம். இதய நோய் வர வாய்ப்பு.
4-7 ஏழில் நின்றால்:
தாயுடன் நல்ல தோழமை. மனைவி வழியில் சொந்த வீடு,வாகனம்.கம்பைன்ட் ஸ்டடி,கூட்டு ஆராய்ச்சியால் பேர் புகழ். தாய் வழி உறவில் மனைவி அமையலாம். தாய்க்கு பின் தாரம் என்பதற்கு பதில் தாய்க்கு பின் தாயே என்ற பார்த்திபன் சொல் நடைமுறையில் தெரியலாம்.
4-8 எட்டில் நின்றால்:
தாய்க்கு கண்டம்/தாயுடன் பிரிவு. அவருக்கு கடும் உடல் உழைப்பு கட்டாயமாகலாம். ஸ்தான நாசம். வீடு வாசல் இழக்க நேரலாம். விபத்துக்கு அ வாகன திருட்டுக்கு வாய்ப்பு. கல்வியில் ஓரிரு கல்வியாண்டு வீணாதல் அல்லது பாதியில் நின்று போதல்.
4-9 ஒன்பதில் நின்றால்:
தாயே தந்தையின் கடமைகளை ஆற்ற நேரலாம்.அல்லது தந்தை தாயுமானவர் கணக்காக தாயின் கடமைகளை ஆற்ற நேரலாம்.பூர்விக சொத்தாய் வீடு. தந்தை/பெரிய மனிதர்கள் தரும் பரிசாய் வாகன யோகம். ஜாதகரின் கல்வி/வித்தைக்கு தூரதேசங்களில் இருந்து பரிசு பாராட்டு. தூர தேசங்களுக்கு போய் கல்வி பயிலும் வாய்ப்பு.
4-10 பத்தில் நின்றால்:
இத்தோடு பத்துக்குடையவரும் 2 ல் நின்றால் நிட்சேப யோகம். (புதையல் யோகம்) அதுக்குன்னு கடப்பாறைய தூக்கிட்டு கிளம்பிராதிங்க. உங்கள் ஞானம் /கல்வி அறிவு உங்க பேச்சு எழுத்து திறமையால் புதையல் எடுத்த கணக்காய் பயன் தரும். தொழிலில் தாயின் வழிகாட்டல் ஒத்துழைப்பு கிட்டலாம்.ஹவுசிங்,ஆட்டோமொபைல்,இன்டிரியர் போன்ற தொழில் அமையலாம். தாய்/தாய் வழி உறவுகளின் பரிசு பாராட்டாய் வாகனம் அமையலாம். தொடர்ந்து படிச்சிட்டே…… இருப்பிங்க.
4-11 பதினொன்றால்:
தாயோடு -தாய் வயது/சாயல் உள்ள மற்றொரு பெண்ணின் பாசமும் கிட்டும். இரண்டு வீடுகள்/இரண்டு தலைவாசல் கொண்ட வீடு/இரண்டடுக்கு மாடி வீடு அமையலாம்.வாகனமும் ஒன்றுக்கு இரண்டாய் அமையலாம்.டபுள் டிகிரி வாங்கலாம். அக்காவே தாய் பாசத்தை அள்ளி வழங்கலாம். அம்மா கூட வெளிய போனா அக்காவான்னு சனம் கேட்கலாம்.
4-12 பனிரண்டில் நின்றால்.
தாய் இருந்தாலும் இல்லைங்கற நிலை இருக்கலாம்.(நோயாளி-வெளியூர்) அல்லது தாயால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்க வேண்டி வரலாம், வாகனம் ,கல்வி தொடர்பான செலவுகள் எகிறும். இதயம் பிரச்சினை கொடுக்கலாம்.

பாவாதிபதிகள் நின்ற பலன்: 3

3.சகோதராதிபதி

Multy

3-1 லக்னத்தில் நின்றால்:
அல்லல் அலைச்சல், அதிசாகசம், சகோதர வர்கத்துடன் பிணைப்பு, அடிக்கடி பிரயாணம்,இசையில் ஆர்வம். ஊர்/நகருக்குள்ளேயான போக்குவரத்து துறையில் தொழில்.

3-2 இரண்டில் நின்றால்:
ஊக வணிகம்,பந்தயம் கட்டுதல் ,ரிஸ்கி பிசினஸுக்கு வாய்ப்புண்டு. டவுன் பஸ் ,கால் டாக்சி தொழிலில் இறங்கலாம். தொழிலுக்கு இளைய சகோதரம் ஒத்துழைப்பு உண்டு.
3-3 மூன்றில் நின்றால்:
சகோதர வர்கத்தின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். துணிச்சலான முடிவுகள்.பயணங்களுக்கு அஞ்சாத -பயணங்களை பெரிதும் விரும்பும் தன்மை.இசையில் ஆர்வம்,பயிற்சி,தேர்ச்சி.
3-4 நான்கில் நின்றால்:
தாய்க்கு நல்லதில்லை. தங்கையே தாய் ரோலை ப்ளே பண்ணலாம். வீடு மாற்றம்,ஊர் மாற்றம், வாகன விஷயத்தில் அதிருப்தி,அகல கால் வைத்தல்.கல்வியிலும் நிறைய அல்லல் அலைச்சல்.
3-5 ஐந்தில் நின்றால்:
துணிவே துணை என்று முன் யோசனை இன்றி செயல்பட்டு சில சமயம் (மட்டும்) அவப்பெயருக்கும் ஆளாகலாம். பல நேரம் துணிந்து இறங்குவதே லாபம் தரும். இந்த லாபம் எவ்வளவு அதிகமானால் அந்தளவுக்கு வாரிசு,குழந்தைகள் வளர்ச்சி, அவர்கள் முன்னேற்றத்துக்கு நல்லதில்லை.
3-6 ஆறில் நின்றால்:
இளைய சகோதரம் நோய் வாய்ப்படும்,அல்லது கடன்,வழக்கு வில்லங்கத்தால் பாதிப்படும். ஜாதகர் செவிடாகலாம்.லோக்கல்ல ட்ராவல் பண்ணும் போது பிரச்சினை வரலாம் உ.ம் சிறு விபத்து ,ஃபைன்.
3-7 ஏழில் நின்றால்:
துணிவுள்ள வாழ்க்கை துணை அமையும். ஜாதகரின் கையை பிடிக்க அவர் எதற்கும் துணிவார்.ஆனால் திருமணத்துக்கு பின் அவருடைய வாழ்க்கை அல்லல்,அலைச்சலுடன் கூடியதாக மாறும். சிலர் நண்பர்கள் கூட்டுறவால் எகிடு தகிடாக செயல்பட்டு துன்புறுவர்.
3-8 எட்டில் நின்றால்:
ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் ஜாதகர் செவிட்டூமையாக கூடும். இளைய சகோதரம் நஷ்டமாகும். ஜாதகரின் துணிவே துக்கத்தில் ஆழ்த்திவிடலாம் (புலி வருது கதை ஆயிரும்).
3-9 ஒன்பதில் நின்றால்:
அப்பாவுக்கு நல்லதில்ல. ரிஸ்கியான இன்வெஸ்ட்மென்ட்,சேமிப்பெல்லாம் செய்வாய்ங்க. சொத்து மேட்டர்ல அலைச்சல் ஏற்படலாம். தூர தேச தொடர்புகள்,பயணங்கள் அலைக்கழிப்பை ஏற்படுத்தலாம்.
3-10 பத்தில் நின்றால்:
லைஃப்ல எப்பயாச்சும் ரிஸ்க் எடுக்கலாம் (அதுவும் கேல்குலேட்டட் ரிஸ்க்) ரிஸ்க் எடுத்தாதான் லைஃபுன்னா? பெரிய ரிஸ்க் ஆச்சே . ஜாதகரின் தொழில் முயற்சியில் இளைய சகோதரம் கை கொடுக்கலாம். இசைத்துறையில் சாதனை படைக்கலாம்.
3-11 பதினொன்றில் நின்றால்:
இளைய சகோதர விருத்தி. துணிந்து செயல்படுவது லாபம் தரும். அது அளவுக்கு மீறாம பார்த்துக்கனும். மூத்த சகோதரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.
3-12 பனிரண்டில் நின்றால்:
இவர் ரிஸ்க் எடுத்து வேலை செய்ய அதன் பலன் மூன்றாம் நபருக்கு போயிரலாம். காது மந்தமாகலாம். இசை ரசிகராக இருக்கலாம். வருமானத்துல பெரும்பகுதி பெட் ரோலுக்கே செலவழியலாம். திங்க ,தூங்க நேரமில்லாம பிறருக்கு உழைப்பாய்ங்க.

4.மாத்ரு பாவாதிபதி

ஜாதகத்தில் துவாதச பாவாதிபதிகள் நின்ற பலன்

1.லக்னாதிபதி

1-1 (லக்னத்திலேயே நின்றால்)
உடல், மன நலம், மன பலம், ஞாபக சக்தி, உறுதியான எண்ணம்.மற்றவர்கள் குறித்து ஒரு அலட்சிய சுபாவம்.(மனைவி உட்பட)

1-2 (தனபாவத்தில் நின்றால்)
சுய முயற்சியால் பணமீட்டல், சாணக்யமான பேச்சு,எழுத்துதிறமை, குடும்பத்துடன் நெருக்கம்,ரசனையுடன் உணவு, அழகான கண்கள் ,நல்ல கண் பார்வை.

1-3 (மூன்றில் நின்றால்)
அல்லல் அலைச்சல், அதிசாகசம், சகோதர வர்கத்துடன் பிணைப்பு, அடிக்கடி பிரயாணம்,இசையில் ஆர்வம். ஊர்/நகருக்குள்ளேயான போக்குவரத்து துறையில் தொழில்.

1-4 ( நான்கில் நின்றால்)
தாயுடன் பிணைப்பு. ,தாய் வழி உறவால் உதவி. சொந்த வீடு,வாகனம் அமையும். உயர் கல்வி சாத்தியமாகும்.

1-5 ( ஐந்தில் நின்றால்)

புத்தி கூர்மை, சரியான நேரத்தில் எச்சரிக்கும் உள்ளுணர்வு. அதிர்ஷ்டம்,வாரிசுகளால் நன்மை, அவர்களுக்கு நல்ல முன்னேற்றம். பெயர் ,புகழ் ,உடலுழைப்பு பெரிதாக இல்லாது பணம் ஈட்டுதல்.

1-6(ஆறில் நின்றால்)

வாழ் நாள் முழுக்க கடன், நோய்,வழக்கு, விவாதங்கள்,எதிரிகளால் தொல்லை,மன நிம்மதி இன்மை, மனவியல் கோளாறுகள்

1-7 (ஏழில் நின்றால்)

ஃப்ரண்ட் ,லவர்,பார்ட்னர் வைஃப் வகையறாக்களோட இம்பேக்ட் அதிகம். இவர்களின்றி வாழ்க்கையே இல்லை என்ற நிலை. இவர்களில் யாரேனும் துரோகம் செய்தால் தாங்கமுடியாத நிலை.

1-8 (எட்டில் நின்றால்)

தற்கொலை, கொலை எண்ணம். ஐ.சி (தாழ்வுமனப்பான்மை) ,தொடரும் துரதிர்ஷ்டம், தன்னை தனிமையா ஃபீல்பண்றது, தீராத கடன், கண்டங்கள் ( ஆசியா ,ஐரோப்பா இல்லிங்கோவ்) , சிறைப்படுதல், ஐபி போடறதுல்லாம் நடக்கலாம். பெண்ணானால் அதுவும் ஹோம் மேக்கரானால் பெருசா பிரச்சினை இல்லை.

1-9 (ஒன்பதில் நின்றால்)

அப்பா,அப்பாவழி சொந்தக்காரவுக, அப்பா வழி சொத்து, தூர பிரயாணம், கோவில் குளம்,இத்யாதி அனுகூலம். சேமிப்பு குணமிருக்கும்.தர்ம குணம் இருக்கும். பக்தி, புராணம் இதிகாசங்கள்ள ஆர்வம் ஏற்படும். தூர தேச தொடர்புகள்,பப்ளிஷிங் அனுகூலம்.

1-10 (பத்தில் நின்றால்)

தொழில்,உத்யோகம், வேலை,கைத்தொழிலில் ஆர்வமிருக்கும். இவற்றாய் விட்டால் வேறு எதுவுமே தெரியாது என்ற நிலை இருப்பது மைனஸ் தான்.

1-11 (பதினொன்றில் நின்றால்)

பிசினஸ் மைண்ட் இருக்கும். மூத்த சகோதரவர்கத்தோட உதவி கிடைக்கும். டபுள் மைண்டடா இருப்பிங்க.

1-12 (பன்னிரெண்டில் நின்றால்)

வாழ் நாள் எல்லாம் எம்.ஜி.ஆர் வேலைக்கே சரியா போயிரும். வீண் செலவு அதிகம். தூக்கம் அதிகம். சாப்பாட்டுக்கு, செக்ஸுக்கு, லக்சரிக்கு அதிக முக்கியத்துவம் தருவிக

2.தனபாவாதிபதி

2-1.லக்னத்தில் நின்றால்:
ப்ராஃபிட் மோட்டிவ் இருக்கும், சம்பாதிக்கனும்ங்கற துடிப்பு இருக்கும். நல்ல வாக்கு வன்மை ,பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழில் கை கொடுக்கும். குடும்பத்தின் மீது அக்கறை. தனபாவாதிபதி லக்னாத் அல்லது நைசர்கிக பாவியானால் பணப்பேயாகி,பொய்,புரட்டு,ப்ளாக் மெயில்,பிறரை அச்சுறுத்தி,பயமுறுத்தி பணம் செய்யவும் கூடும். இதனால் குடும்பத்தினரும் அவதி பட நேரலாம்.
2-2.தனபாவத்தில் ஆட்சி பெற்றால்:
பணத்துக்கு(கே) முக்கியத்துவம். நட்பு -உறவு எல்லாமே பணத்தால் நிர்ணயிக்கப்படும்.பயங்கரமா பேரம் பேசுவாய்ங்க. குடும்பத்தினர் மீது கொள்ளும் பாசம்,நேசத்துக்கும் பணமே காரணமாக அமையும்.
2-3.மூன்றில் நின்றால்:
ஊக வணிகம்,பந்தயம் கட்டுதல் ,ரிஸ்கி பிசினஸுக்கு வாய்ப்புண்டு. டவுன் பஸ் ,கால் டாக்சி தொழிலில் இறங்கலாம். தொழிலுக்கு இளைய சகோதரம் ஒத்துழைப்பு உண்டு.
2-4.நான்கில் நின்றால்:
குடியிருக்கிற வீட்டை கூட ப்ரமோஷனுக்கு கொடுத்து காசு பார்ப்பாய்ங்க. ஹவுசிங்,ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபடலாம். தாய் வழி சொத்து முதலீடாகலாம். தாய் வழி உறவின் ஒத்துழைப்பு. கல்வித்துறையில் ஆர்வமிருக்கும்.
2-5.ஐந்தில் நின்றால்:
அதிர்ஷ்டத்தை நம்பி தொழில் செய்வர். ராகு -கேது ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருந்தா ஷேர் மார்க்கெட் ,லாட்டரி,சூதாட்டம் கூட கை கொடுக்கலாம். ஜாதகரது புத்தியே முதலீடாகும். குடும்பத்தின் நற்பெயர் துணைக்கு வரும்.ஸ்பெக்குலேஷனில் ஈடுபாடு. தொழிலில் பிள்ளைகள் ஒத்துழைப்பு உண்டு. சிலர் பெற்ற பிள்ளையை தத்து (போல) கொடுத்து பணம் பார்க்கலாம்.வசதி பெறலாம்.
2-6.ஆறில் நின்றால்:
கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவர்.வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழப்பர். கடன் தொல்லை, விவகாரமான பேச்சு,பேச்சால் கலகம்,குடும்பத்தில் கலகம்.கண் நோய் ஏற்படலாம். வாய்,தொண்டை பாதிக்கலாம்.
2-7.ஏழில் நின்றால்:
வாழ்க்கை துணையையும்,அவருடனான நெருக்கத்தையும் பணம் நிர்ணயிக்கலாம். இருவரிடையில் பணமே பிரதானமாக இருக்கலாம்.தொழிலில் மனைவி வழி உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கலாம்.
2-8.எட்டில் நின்றால்:
வறுமை,பேச்சால் பெரு நஷ்டம், குடும்பத்தை பிரிதல் ,கண் பார்வை குறைவு ஏற்படலாம். மரணம் தொடர்பான தொழில் செய்யலாம். தொண்டை,வாய் பாதிக்கலாம்.
2-9.ஒன்பதில் நின்றால்:
சிறுக சிறுக சேர்த்து சொத்துக்கள் வாங்குவர். சேமிப்பு,முதலீடு அனுகூலம்.இந்த துறைகளில் ஆலோசகராக தொழில் செய்யவும் வாய்ப்பு. தந்தை வழி சொத்து இருக்கலாம். தூர தேச தொடர்புகள், பப்ளிஷிங் ஆகியன கை கொடுக்கலாம்.தொழிலில் தந்தை வழி உறவின் ஒத்துழைப்பு கிடைக்கலாம்.
2-10.பத்தில் நின்றால்:
பேச்சுக்கு முக்கியத்துவமுள்ள தொழில் அமையலாம். உ.ம் ரெப்,மெடிக்கல் ரெப் ,ரேடியோ ஜாக்கி. கொடுக்கல் வாங்கலை தொழிலாக செய்யலாம். ஃப்ரன்ட் டெஸ்க் ஜாப்ஸுக்கு வாய்ப்பு. தொழிலுக்கு குடும்பம் மனமுவந்து ஒத்துழைப்பு தரும்.
2-11.பதினொன்றில் நின்றால்:
அதி பேச்சு .இரண்டு வழிகளில் வருவாய். தன் குடும்பமே அல்லாது இன்னொரு குடும்பத்துடனும் நெருக்கம் இருக்கும்.அவர்களின் ஒத்துழைப்பும் இவரது தொழிலுக்கு உதவும்.
2-12.பனிரண்டில் நின்றால்:
வாக்கு வன்மை இராது. கம்யூனிக்கேஷன்ஸ்கில்ஸ் பூஜ்ஜியம். பேச்சுக்கு மதிப்பிருக்காது. கொடுத்த வாக்கை காற்றில் விடலாம் அல்லது அதை காப்பாற்ற பெரும் பணத்தை இழக்கலாம். குடும்பத்தை பிரிந்து வாழலாம்.குடும்ப செலவுகள் அதிகரித்து கொண்டே போகும் .( அன் ப்ரொடக்டிவ் எக்ஸ்பென்சஸ்)