உங்களுக்கும் ராஜயோகம் : 21

dad 50

அண்ணே வணக்கம்ணே !
நான் என்ன செய்யனும்னு என்னை விட “ஆத்தாவுக்கு” பர்ஃபெக்டா தெரியும். நான் என்ன செய்துக்கிட்டிருக்கேங்கறது ஒரு குன்ஸா புரிஞ்சாலும் நாமளும் ஆஃப்டர் ஆல் மன்சன் தானே! இந்த தொடரை டீல்ல விட்டுட்டு குரு பெயர்ச்சி அது இதுன்னு டைவர்ட் ஆகி ஏறக்குறைய ஒரு மாசம் ஆயிருச்சா..

சனம் யாரும் என்ன பாஸ் ..இந்த தொடரையும் ஊத்தி மூடிட்டிங்களானு கேட்கவே இல்லை. படக்குனு ஒரு டவுட் வந்திருச்சு. ஒரு வேளை ராஜயோகம்ங்கறதெல்லாம் சாமானிய சனத்துக்கு எட்டாத மேட்டரா? வெட்டியா எழுதிக்கிட்டிருக்கமானு சந்தேகம் வந்துருச்சு. எதுக்குனா நல்லது க்ளியர் பண்ணிக்குவம்னு ஒரு பதிவே போட்டு கருத்து கேட்டன்.

பத்து பேராச்சும் கருத்து சொன்னாதான் தொடர் தொடரும்னு பயம் கூட காட்டினேன். ஒன்னம் பேரல.ஆனால் நண்பர் சக்தி வேல் நான் ஒருத்தன் சொன்னா அந்த சக்தியும் -வேலவனும் ஒரே குரல்ல சொன்னாப்லனு ஒரு கமெண்ட் போட்டிருந்தாரு . சுஜாதா ஒக்காபிலரியில சொன்னா “சுஸ்தாயிட்டன்” (ஸ்வஸ்த் =ஆரோக்கியம் )

கடந்த சாப்டர்ல ராகு எப்படியெல்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு சொல்லியாச்சு. இந்த சாப்டர்ல ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருந்தா ராஜயோகம் பெற என்ன செய்யனும்?னு சொல்லோனம்.

நான் எல்லாம் ஆளை பார்த்ததுமே “பார்ட்டி ஜாதகத்துல ராகு பல்பு போல “னு கரெக்டா கெஸ் பண்ணிருவன். விவரம் தெரிஞ்சவிக ஜாதகசக்கரத்துல ராகு எங்க இருக்காருன்னு பார்த்து டிசைட் பண்ணிரலாம்.

இது ரெண்டுமே கைவராதவிக என்ன செய்ய?

1.உங்க நிறத்தை பாருங்க. கருப்புன்னதும் பயந்துக்காதிங்க. கருப்புல எத்தனையோ விதம் இருக்கு. சூட்சுமமா பார்த்தா கொஞ்சம் நீலம் கலந்தாப்ல தெரியும்.
2.உங்க ஃபிசிக்கை பாருங்க. ஒன்னு வயசுக்கேத்த வளர்ச்சி இருக்காது .அல்லது தாறுமாறா சதை போட்டிருப்பிங்க
3.அன் வாரன்டட் மோஷன்ஸ்/ வாமிட்டிங் சென்சேஷன்
4.பிறமதத்தவர் மேல இனம் புரியாத கடுப்பு/துவேஷம்
5.ஈசிமணி மேல கவர்ச்சி – சட்ட விரோதமான வழியில சம்பாதிக்கிறவன்லாம் நல்லாத்தானே இருக்காங்கற ஃபீல் -நாமளும் செய்தா என்ன என்ற எண்ணம்

6.சினிமா மேல ஒரு கவர்ச்சி /போதை / சினிமாவுக்காக அதிகம் செலவழிக்கிறது /அதீத முக்கியத்துவம் தர்ரது .
7.பிக் பாக்கெட் /செயின் அறுப்பு /கதவை உடைத்து கொள்ளை இத்யாதி சம்பவத்துல விக்டிமா இருக்கிறது
8.நல்லா போயிட்டிருக்கும். திடீர்னு ஒரு அவமானம் /அவப்பெயர் ,விதவை பெண் ஒருவரால் பல்பு
9.ஓரப்பார்வை பார்க்கிறவிக ,பூனைக்கண் கொண்டவிகளால நஷ்டம்/கஷ்டம்
10.லைஃப் பார்ட்னரோட செயல்பாடுகள் சந்தேகாஸ்பதமா தோன்றது – ஒரு நாளில்லை ஒரு நாள் கையும் களவுமா பிடிக்கனுங்கற எண்ணம்
11.பாம்பு /பூச்சி பொட்டு கடிச்சுர்ரது / ஃபுட் பாய்சன்/மெடிக்கல் ரியாக்சன்

மேற்படி 11 விஷயத்துல பாதி சூட் ஆனாலும் உங்க ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருக்காருனு அருத்தம்.

ஆனாலும் இந்த சமயம் பார்த்து எலீக்சன் வருது .கு.பட்சம் கவுன்சிலரா நின்னே ஆகனும்னா என்ன பண்ணனும்?

1.நோட்டிஃபிகேஷன் வரதுக்கு மிந்தியே அன்னிய மதத்தார் வாழும் பகுதிகளை விசிட் அடிச்சு உங்களால முடிஞ்ச அடிப்படை வசதிய செய்து கொடுங்க.
2.மதராசா ,மெஷினரிகள் நடத்தும் பள்ளிக்கு உங்களால முடிஞ்ச நன் கொடைய கொடுங்க.
3.இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை.
4.எலீக்சன் முடிஞ்சு ரிசல்ட் வர்ர வரைக்கும் லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது.
5.இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.எலீக்சனுக்கு மிந்தின ராத்திரி ஆப்பரேஷன்ல டைரக்டா இன்வால்வ் ஆகாதிங்க.

6.சொந்த முதலீட்டில் / நீங்களே டெசிஷன் மேக்கர் என்ற நிலை இருந்தால் மேற்சொன்ன தொழில்கள் கூடவே கூடாது. இதுவே நீங்கள் ஒரு ஊழியர் மட்டுமே என்றால் பரவாயில்லை.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
7.பையில எப்பவும் க்ளூக்கோஸ்/ எலக்ட் ரால் பாக்கெட்லாம் வச்சுக்கோங்க. டீ ஹைடரேஷன் ஆயிராம பேலன்ஸ் பண்ணிக்கிட்டே இருங்க.
8.மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. சொந்த ட்யாக்னைஸ்/ சொந்த ப்ரிஸ்கிரிப்ஷன் வேண்டாம். ரியாக்ஷன் நடக்கலாம்.
9.வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும். குடி நீர் கூட கம்பெனி மாத்தாதிங்க.
10.கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு/முக்கியமா சட்ட விரோத வியாபாரம் செய்றவிக சங்காத்தம் வேணாம் .ஷேர் மார்க்கெட் வேண்டவே வேண்டாம்)

11. கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.
12.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
13.உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் ,உலக மகா சதிகள் போன்ற புத்தகங்கள் படித்தல்.
14.மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்.
15.தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல் இவை நல்ல பரிகாரங்களாகும்.

16,மேலும் தனித்திருக்கும் போது அறையில் குறைவான வெளிச்சத்தை மெயின்டெய்ன் பண்ணலாம். நைட் ஷிஃப்ட் ட்யூட்டி வந்தா தாராளமா ஏத்துக்கலாம்.
17.தினசரி ஒரு மணி நேரம்-வாரம் ஒரு தினம் காவி உடை அணியவும் . இயன்றவரை சன்யாசி போலவே வாழ வேண்டும். எளிமையிலும் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவும்.
18.பிரச்சார வாகனத்து டேஷ் போர்ட்ல மும்மதங்களின் அடையாளங்களையும் வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:
ராகு பல்பு வாங்கியதன் லட்சணங்கள் இல்லாதவர்களும் இந்த பரிகாரங்களை பின்பற்றலாம். ராகுவின் பலம் சேமிக்கப்பட்டு ஓட்டுகள் குவியும்.

dad

காசு பணம் துட்டு மணி மணி : 9 ஆவது கேட்டகிரி (பரிகாரம்)

1

அண்ணே வணக்கம்ணே !

உலக மனிதர்களை 9 கேட்டகிரியா பிரிச்சு அவிக பொருளாதார தேக்கத்துக்கு காரணங்களையும் -பரிகாரங்களையும் சொல்லிட்டு வரேன். இந்த தொடரின் கடைசி அத்யாயம் இது. அடுத்த தொடருக்கான அறிவிப்பையும் இதுலயே கொடுத்திருக்கன்.இந்த அத்யாயம் ஒன்பதாவது கேட்டகிரி சனத்தோட பொருளாதார தேக்கத்துக்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்களை உள்ளடக்கி இருக்கு .பதிவுக்க்கு போயிரலாமா?

1.தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அரசியல்ல பிரமாதமான நடிகர்கள்ளாம் உண்டு.கமலே அந்தளவுக்கு நான் சிறந்த நடிகனில்லேன்னு சொல்ற அளவுக்கு இருக்காங்க.ஆனால் விஜய்காந்தை பாருங்க.. கேமரா முன்னே என்னமா நடிக்கிறாரு .ஆனால் நிஜ வாழ்க்கையில த்தூனு துப்பிர்ராரு.தூக்கி அடிச்சுருவன் பார்த்துக்கன்னிர்ராரு இது கேப்டன் மேட்டர்ல ஒர்க் அவுட் ஆயிருச்சு.ஆனால் சாதாரணர்கள் விஷயத்துல? டங்குவார் அந்துரும்.
இவிக பெண்ணா இருந்தா போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,எலக்ட் ரானிக்ஸ் தொடர்பான கல்வி /பயிற்சி முடித்து ஒர்க்கிங் விமனா போனா பிரச்சினையே இல்லை.தப்பிதவறி ஹவுஸ்வைஃபா இருந்தா சிக்கல்வரும்.

ஒரு யுத்தத்தையே நடத்தி முடிக்கிற கப்பாசிட்டி உள்ள ஆள் செயல்படவே வாய்ப்பில்லாத நிலையில இருந்தா அது இவிக உடல் நிலையை பாதிக்கும். குறிப்பா ப்ளட்ப்ரஷர்,அல்சர் . மாதவிலக்கு சக்கரத்தில் குளறுபடி .

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் முக்கிய காரணம்.

2.பேரறிஞர் அண்ணாவுக்கு கான்சர் வந்திருக்கு. ட்ரீட்மென்டு ஓடிக்கிட்டிருக்குன்னு தெரியும்.அந்த சமயம் ஏதோ ஒரு விவாதத்துல எதிர்கட்ச்சிக்காரவிக “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன”ங்கறாய்ங்க. அதுக்கு அண்ணா சென்ன சொல்றாரு? “எங்கள் காலடிகள் அளந்தே வைக்கப்படுகின்றன”
அந்த சிச்சுவேஷன்ல அண்ணா இல்லாம வேற நபர் இருந்து உங்கள் எலும்புகளும் எண்ணப்பட போகின்றனனு சொல்லிட்டு தூக்கி அடிச்சிருந்தா? மேட்டர் ஓவர். சட்டசபை ரத்து -கவர்னர் ஆட்சினு எல்லா இழவும் நடந்திருக்கும்.

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் -துடுக்கான பேச்சு முக்கிய காரணம்.

3.என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்னு ஒரு மேட்டர் இருக்கு. டாக்டர் ஷாலினி ஒரு தொடர்ல அம்மாங்கறவ பையனை எப்படில்லாம் உபயோகிச்சுக்கிறான்னு எழுதியிருக்காய்ங்க. செம மேட்டரு. சில அம்மாக்கள் தன் எதிரிகளை ஒழிச்சுக்கட்டவோ /தன் எதிரிகளை மகனோட எதிரியா எஸ்டாப்ளிஷ் பண்ணவோ ரெம்பவே மெனக்கெடுவாங்க.அந்த மாதிரி அம்மா வவுத்துல பிறந்து தொலைச்சா நாஸ்தி தான்.

எங்க பக்கத்துல ஒரு க்வாக் (போலி டாக்டரு) ஊர்ல உள்ள ரெண்டு அடிதடி க்ரூப் தலைவனையும் தன் க்ளினிக்ல வச்சு டீல் பண்ற பார்ட்டி .ஆனால் என்னாச்சு? வீடு கட்டறப்ப பக்கத்து வீட்டுக்காரன் இடத்துல சில அடிகள் சேர்த்து கட்டிக்கிட்டாரு. மேற்படி ரெண்டு க்ரூப் லீடர்ஸுல ஒருத்தன் கொஞ்சத்துல கொஞ்சம் நியாயம் பார்த்து ஒரு ஸ்டாண்ட் எடுக்க அவன் கட். இவருக்கு ஆதரவா இருந்தவன் வளரவே இல்லை.இவர் கட் பண்ணி விட்டவன் முடி சூடா மன்னனாயிட்டான். ஆக வீடு மேட்டரும் ஒரு ஆப்பு தான்.

அடுத்தது வாகனம். பார்க்கிங்ல ஆரம்பிச்சு ,ஷோ ரூம் டீலர், சர்வீஸ் சென்டர்,மெக்கானிக்,சக வாகன ஓட்டி ,ட்ராஃபிக் போலீஸ்னு எத்தனை பிரச்சினைக்கு வாய்ப்பிருக்கு? இந்த கேட்டகிரி சனத்துக்கு இந்த எல்லா பிரச்சினையும் வந்து ஆப்படிக்க வாய்ப்பிருக்கு .
டிகிரி ஃபைனல் இயர் எக்ஸாம்ஸ் நடக்குது. அன்னைக்கு பேங்கிங் எக்ஸாம். ஹால்ல உட்கார்ந்திருக்கம்.இன்விஜிலேட்டர் ஹால் டிக்கெட் கேட்கிறாரு .பிக் பாக்கெட்ல கைய விட்டா காணம். செரி ஒரு ஃபோட்டோ ஒட்டி விவரம் எழுதி க்ளாஸ் டீச்சர் கிட்டே ஒரு கை.எ வாங்கி ப்ரின்சிப்பல் கிட்டே ஒரு கை .எ வாங்கிட்டு வான்னாங்க.

க்ளாஸ் டீச்சர் இதான்டா சான்ஸுன்னு பெருசா பில்டப்லாம் கொடுத்தாரு ( நீ என் க்ளாஸா? நான் பார்த்ததே இல்லையே எட்செட் ரா) போங்கடா கொய்யால ..யுவர் காலேஜ் மை ஃபுட்.மை செல்ஃப் வாக்கிங் யூனிவர்சிட்டின்னு பஞ்ச் விட்டுட்டு வந்துட்டம்.

ஒரு சாதாரணர் லைஃப்ல இப்டி நடந்தா அவர் கதி என்ன?

4.காந்தி,இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய்,விபிசிங்,நரசிம்மராவ்லாம் தங்கள் வாரிசுகளோட மேட்டர்ல என்னெல்லாம் அவதி பட்டாங்கனு ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. இவிக விஐபிங்கறதால சமாளிச்சுட்டாய்ங்க. இதுவே ஒரு சாதாரணனோட வாரிசுகள் இப்படி அச்சானியமா எதுனா பண்ணி தொலைச்சா அந்த ஜாதகர்கள் கதி என்ன?

ஒரு பார்பர். ஒரு வீணா போன வெட்டி முண்டம். பார்பர் வேலையா இருக்கான் (ஷேவிங்) இந்த தண்டம் வந்து ஓசி டீ கேட்டு லொள்ளு பண்ணுது .பார்பர் ஒரு செகண்ட் உ.வ பட்டுட்டான். கையில இருக்கிறது கத்திங்கறத மறந்துட்டான்.கையில உள்ளதை உதறி ஓடிப்போ நாயேன்னான். கத்தி அந்த தண்டத்தோட உதட்டுல மாட்டிக்கிச்சு .பொள பொளனு ரத்தம்.இப்டில்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

5.அந்த காலத்துல வாத்யாரு சி.எம் .மம்மியோட ப்ரப்போசலை டிஸ் அப்ரூவ் பண்ணிட்டு கேன்வாயோட தலைமை செயலகம் புறப்படுவாராம்.இடையில வயர்லெஸ் தகவல் வரும்.மம்மி மணி கட்டை அறுத்துக்கிட்டாய்ங்க.ஒடனே சி.எம் கேன்வாய் யு டர்ன் போட்டு ரிட்டர்ன் ஆகுமாம். செல்லாவிடத்து சினம் தீது -அதுக்காவ வாயில்லாத பூச்சிகளை நசுக்கிரலாம்னுல்ல. அவிக மேட்டர்லயும் அடக்கி வாசிச்சா உடம்புக்கு நல்லது . இல்லின்னா பொளப்பு நாறிரும்ல?
ஒரு தலை காதல்/ அல்லது காதலியை மணந்து அவரால் /அவருடன் பிரச்சினைகள் வந்து அவதிப்படுவாங்க . அல்லது எதிரிகள் குடும்பத்தில் பெண் எடுப்பாங்க. அல்லது பெண்ணெடுத்த வீட்டுடன் விரோதம் வரும்.

6. நம்ம நண்பர் ஒரு நாட் நாட் பில்டிங் வாங்கினாரு (சைட் வேல்யூதான்) டிப்பரை காட்டினா போதும் பொல பொலனு உதிர்ந்துரும்.அதுல வில்லங்கம். நம்மாளு துணிஞ்ச கட்டை தான்.ஆனாலும் லீகலாவே போவம்னு இருக்க-ஆக்கிரமிப்பாளர் மராமத்துக்கு செங்கல்,மண் ஓட்டி வைக்க இவரு போய் வேணாம்டா இதெல்லாம் ஓவரு .மொத்தமா உட்கார்ந்துக்கிட்டா என்ன தான் உள்ள வச்சுருவாய்ங்கனு சொல்ட்டு வந்தாரு.என்ன ஆச்சு? நாலு எலைங்க வந்து கடையில கவுண்டர்ல இருந்த ஆளை பட்டிப்பார்த்துட்டு பூட்டாங்க.கோர்ட்ல கேஸு நடக்குது .பில்டிங் வேல்யூ ஒரு கோடி .வட்டி என்னாச்சு பாருங்க. இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

7.நம்மாளு சோஃபா தயாரிப்பாளர். ராத்திரி பூட்டிக்கிட்டு வீட்டுக்கு போனாரு .காலையில 8 மணிக்கு கடையிலருந்து புகை வருதுப்பான்னு ஃபோன் வந்தது .கடைய திறந்து பார்த்தா எல்லாம் கருகி கிடக்கு. நிலம் விரயமாகும். சகோதரர் வழியில் நட்டம். ரத்தம்-ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை வரலாம்.போலீஸ் பிரச்சினையும் வரலாம். அதி உஷ்ணம்,நெருப்பு,மின்சாரம்,அமிலம்,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகளால் பிரச்சினை வரலாம். கோபத்தால் சில பிரிவுகள்கூட ஏற்படலாம்.இதெல்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

8.ராஜீவ் காந்தி ராத்திரி வெடிச்சு சிதறப்போறாரு (கடக லக்னம் சிம்ம ராசி ) அன்னைக்கு ராத்திரி நம்ம லைஃப்ல நடந்த இன்சிடென்ட் இது . ( நம்முதும் கடக லக்னம் சிம்ம ராசி )

அந்த காலத்துல நாம பேச்சிலர் .குப்பைக்கு டஸ்ட் பின்லாம் போதாதுன்னு அரிசி டின்னை வச்சிருந்தம்.தம் அடிச்சுட்டு சரியா அணைக்காம போட்டுட்டாப்ல இருக்கு. நள்ளிரவு ரூம் எல்லாம் ஒரே புகை /மூச்சு திணறுது .

நடிகை மஞ்சுளா கட்டில்லருந்து விழுந்துதானே செத்துப்போனாங்க?இவிக லைஃப்ல இதெல்லாம் அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?
செரி இவிக பொருளாதார ரீதியா ரிலீஃப் ஆகனும்னா என்ன பண்ணனும். பரிகாரங்களையும் இந்த பதிவுலயே பார்த்துரலாம். இந்த தொடரை இந்த பதிவோட முடிச்சுட்டு அடுத்த தொடரை ஆரம்பிச்சுருவம்.

தலைப்பு:அரசியலும் -நவகிரகங்களும்

ஜாதகத்துல சூரியன் உள்ளிட்ட 9 கிரகங்கள் எந்தெந்த நிலையில இருந்தா பிரதமராகலாம் கு.பட்சம் கவுன்சிலராகலாம்னு பார்ப்பம். இந்த தொடர்ல உள்ள சிறப்பு என்னன்னா ஜாதகமே இல்லாட்டியும் உங்க வாழ்க்கை நிலையை வச்சே குறிப்பிட்ட கிரகம் உங்க ஜாதகத்துல வலிமையா நின்னிருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க முடியும்.

ஓகே ..இப்ப 9 ஆவது கேட்டகிரி சனத்துக்குண்டான பரிகாரத்தை பார்த்துரலாம்.

போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) ரத்த தானம் செய்க.ஆண்,பெண் இருபாலாருமே கராத்தே ஜூடோ மாதிரி மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கலாம். கு.பட்சம் ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் /வாக்கிங் அல்லது ஜாகிங்.
சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக.
வாகனங்களை/வீட்டின் மின்சார உபகரணங்களை உரிய வகையில் பராமரிப்பது – கவனத்துடன் கையாள்வது நல்லது .வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி யோகா,அதிகளவு சுத்தமான குடி நீர் அருந்துதல்

கழுத்தில் முருகன் கை வேல் உருவ டாலர் -பாக்கு நிற கயிற்றில் அணிக. யூத்தா இருந்தா ஃபேன்ஸி ஸ்டோர்ல கிடைக்கும் புலி,சிங்கம் மாதிரி டாலர்கள் /ஏதேனும் ஆயுதவடிவ டாலர் அணியலாம்.பெண்கள் இவற்றை தமது கீ செய்ன்ல கோர்த்துக்கலாம்.இடுப்பில் அணியலாம்.

கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.
ஜாதகர் பர்ஸ் பாக்கு நிறத்தில் இருக்கட்டும் அதில் தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படம் இருக்கட்டும்.கண்,தொண்டை குறித்த முன்னெச்சரிக்கை அவசியம் (உ.ம் விட்டமின் ஏ கொண்ட உணவுகள்,பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகள். அதிக சூடு,குளிர்ச்சி உள்ள பானங்களை தவிர்த்தல் .
இதுவரை சொன்ன பரிகாரங்களை தாயும் செய்யவும். வீட்டு ஹால்ல போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . ஹால் சோஃபா கவர்,ஸ்க்ரீன்ஸ் பாக்கு நிறம். வண்டி வாகனத்தில் முருகன்,வேல் ஸ்டிக்கரிங், யூத்துன்னா சேகுவாரா ஸ்டிக்கர் போட்டுக்கங்க.

மாணவர்கள் பாக்கு நிற ஸ்கூல் பேக் யூஸ் பண்ணுங்க.அதுமேல ஏதேனும் ஆயுதம் அல்லது புலி சிங்கம் மாதிரி உருவம் இருந்தா பெஸ்ட்.புக்ஸுக்கு பாக்கு நிற அட்டை போட்டுக்கோங்க. அண்டர்லைன் பண்ண பாக்கு நிற ஸ்கெட்ச் யூஸ் பண்ணலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க வாரிசுகளும் மேற்கொள்ளனும்.நீங்க தேவசேனாதிபதி ,நரசிம்மர் ,வேல் இத்யாதிகளை தியானம் செய்யலாம்.
இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க மனைவியும் மேற்கொள்ளனும். இடுப்பில் பாக்கு நிற கயிற்றை அணியலாம்.அல்லது பெல்ட் .பெல்ட்டின் முகப்பில் ஆயுதம்/புலி/சிங்கம் உருவம் இருந்தா பெஸ்ட். திருமணமான பெண்கள் தம் தாலியில் பவழக்கல் பதித்துக் கொள்ளலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க அப்பாவும் மேற்கொள்ளனும்.அப்பா,அப்பா வழி உறவு,சொத்து,சேமிப்பு,முதலீடு,வெளி நாட்டு தொடர்பு சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ் எல்லாம் ஒரு ப்ரவுன் கலர் ஃபைல்ல போட்டு வைங்க.மேல தேவசேனாதிபதி ஸ்டிக்கர் ஒட்டி வைக்கவும்.

தூரப்பயணம் போகும் போது பாக்கு நிற ஏர் பேக்-அது மேல தேவசேனாதிபதி உருவத்தை ஃபேப்ரிக் பெய்ண்ட்ல எழுதி வச்சுக்கோங்க.

படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க) தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படத்தை படுக்கையறையில் வைத்து வணங்கி வரவும்.வேல் பூஜை செய்யவும்.செப்பல்ஸ் /ஷூஸ் ப்ரவுன் கலர் பெஸ்ட்.

ஸ்..அப்பாடா டீல்ல விட்ட எத்தனையோ தொடர்கள் மாதிரியில்லாம இதை முடிச்சுட்டம்.அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்.
உடுங்க ஜூட்டு .

காசு பணம் துட்டு மணி மணி :1

vishal

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும்-கிரக பலனும்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு காலமாற்றத்தால ஒவ்வொரு பாவ காரகமும் எப்படி தங்கள் பலனை மாற்றித்தருதுன்னு சொல்லிக்கிட்டு வந்தன். கடேசியா 9 ஆம் பாவத்தை பத்தி விலாவாரியா சொன்னன். இந்த பாவ காரக பலனை எப்படி “கண்டிஷனிங்” பண்றதுன்னு இந்த பதிவுல சொல்லியிருக்கனும்.ஆனால் என்னமோ திடீர்னு எல்லாமே ப்ளர்ரா -தேங்கி கிடக்கறாப்ல ஒரு ஃபீல் . அட முக நூலே ஈயடிக்குதுன்னா பார்த்துக்கங்களேன்.

வழக்கமா நாம கேட்காமயே பண மழைய கொட்டற வாசக மகாசனங்கள் மச மசன்னு இருக்கிறாய்ங்க. ஒரு தாட்டி தெலுங்குல அம்மன் சத நாமாவளி பப்ளிஷ் பண்ணிக்கிட்டிருக்கம்ன்னு ஸ்டேட்டஸ் போட்டம். செம ரெஸ்பான்ஸ். ஜோதிடம் 360 முதல் பதிப்பு /ரெண்டாம் பதிப்பிலான 4 நூல்களுக்கான முன் பதிவு இப்படி எல்லாமே செம ரெஸ்பான்ஸ்.

யப்பா.. இந்த கட்டண ஆலோசனை ஆவிசுக்கே ஆப்பு வைக்குது . கட்டிப்போட்ட மாதிரி இருக்கு .ஆகவே இங்கிலீஷ்ல ஒரு வெப்சைட்டை வச்சுக்கிட்டு அதன் மூலமா ஆட் சென்ஸ் தேத்தி இதுக்கு மங்களம் பாடிரலாம்னு இருக்கன்.2015 டிசம்பர் 31 க்குள்ள அது லாஞ்ச் ஆகி ,பிக் அப் ஆகி ,ஆட்சென்ஸுக்கும் குவாலிஃபை ஆயிரனும். பிறவு அல்லாருக்கும் இலவச ஆலோசனையை கொட்டோ கொட்டுன்னு கொட்டறேன் – நான் ஃப்ரீ ஆகி -ஃப்ரீ கன்சல்ட்டன்சி தர மேற்படி ப்ராஜெக்டுக்கு கொஞ்சம் போல பைசாவை நன் கொடையா கொடுங்கன்னு அறிவிச்சிருந்தம்.

மொத வாரம் சூப்பர் ரெஸ்பான்ஸ். எல்லாமே குப்த தானம் தான்.பேரை சொல்லக்கூடாது,ஊரை சொல்லக்கூடாதுன்னு .செரி வெப் ஹோஸ்டிங்குக்கான பைசா தேறிருச்சு . இனியும் காசு வரும் போல .ஒரு டொமைனை வாங்கி -ட்ரான்ஸ்லேட்டரை அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டு வேலைய துவக்கிரவேண்டியதுதான்னு நினைச்சம் .

மேலே மேலே கட்டண ஆலோசனைக்கு கூட்டம் அம்முதே கண்டி . நான் சொல்லும் மேற்படி ப்ராஜக்டுக்கு பைசா நஹி .செரி சனம் ரெம்ப கஷ்டத்துல இருக்காய்ங்க. மொதல்ல அவியளுக்கு பைசா புரள பரிகாரங்களை அள்ளி விடுவம். பரிகாரம் ஒர்க் அவுட் ஆகி அவியளுக்கு பைசா புரண்டா நன்றிக்கடனா நன் கொடைய அள்ளி விடுவாங்கன்னு டிசைட் ஆய்ட்டன்.

ஆகவே கால மாற்றம் -கிரக பலன் தொடர் தற்காலிகமா நிறுத்தப்பட்டு காசு பணம் துட்டு மணி மணி தொடரை ஆரம்பிக்கிறேன்.பதிவுக்கு போயிரலாமா? உடுங்க ஜூட்டு .

தடைகளும் காரணங்களும்:

பைசா புரளாம – சிங்கியடிக்க 9 க்ரூப்ஸ் ஆஃப் ரீசன்ஸ் இருக்கு. அதுகளை டீட்டெய்லா பார்க்கலாம்.கூடவே பரிகாரங்களும். மொத க்ரூப்ல வர்ர காரணகள் கீழே
1.நம்மை மாதிரி சகட்டு மேனிக்கு கொலிக்ஸை எல்லாம் விமர்சனம் பண்ணி கொஞ்சம்கொஞ்சமா ஹிட்லிஸ்டுக்கு போயிர்ரது .
2.சதா சர்வகாலம் மம்மி “எனது அரசு -எனது அரசு”ங்கறாப்ல நான் -நான் -நான் என்று பேசி தனிமைப்பட்டு போறது .
3.பைசா மேட்டர்லாம் கறாரா இருக்கனும்பான்னுட்டு தேவையில்லாம வாயை விட்டு எதிராளி ஈகோவை காயப்படுத்தி ரிலேஷனேகட் ஆயிர்ரது .
4.சக்திக்கு மீறிய தானம் -அபாத்திர தானம்
5.பெருமைக்கு பன்னி மேச்சு தேவையில்லாத கமிட்மென்ட்ல சிக்கறது
6.மலைப்பகுதி ,ரிமோட் வில்லேஜஸ், புதுசா டெவலப் ஆயிட்டிருக்கிற காலனி,ஹார்ட் ஆஃப் தி டவுன்ல தொழில் துவங்கி பல்ப் வாங்கிர்ரது .
7.மேற்படி பகுதிகளில் வாழும் மக்கள் கிட்டே கொடுக்கல் வாங்கல் வச்சுக்கிட்டு மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம அவதிப்படறது .
8.பகல்ல பிறந்தவரானால் அப்பா,அப்பாவழி உறவுகளால் ,அப்பாவின் தொழிலை தொடர்ந்து செய்வதால்/செய்வதில் தடைகள் சிக்கல்கள்.
9.ஓவர் கான்ஃபிடன்ஸுல அகலக்கால் வச்சு மாட்டிக்கிறது
10.விளம்பரத்துறை -மேற்பார்வையாளர் -சூப்பர் வைசர் -குவாலிட்டி கண்ட் ரோல் போன்ற தொழில்/உத்யோகத்தில் சிக்கி அவதி
11.திடீர்னு எலும்பு முறிவு ஏற்பட்டு /முதுகுவலி ஏற்பட்டு லீவு அதனால பொருளாதார நெருக்கடி
12.தூக்கமின்மை காரணமா பகல்ல தூங்கி ராத்திரியில ஒர்ரி பண்ணிக்கிட்டு மறுபடி பகல்ல தூங்கி -இப்படி ஒரு விஷ சுழல்ல மாட்டிக்கிறது .
13.தினப்பத்திரிக்கைகள்ல வேலை /எந்த பத்திரிக்கையா இருந்தாலும் நிருபர் தொழில்ல இருந்துக்கிட்டு மணி மேட்டர்ல தேக்கம்.
14.பஞ்சாயத்து,ஒன்றியம்,நகராட்சி ,மா நகராட்சி துறைகளில் வேலை /ஒப்பந்த தொழில்ல மாட்டி விழிக்கிறது இதனால் பொருளாதார நெருக்கடி

மேலே சொன்ன காரணங்கள் தான் உங்கள் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்னா உங்களுக்கு பரிகாரங்கள் நிச்சயம் தேவை . இந்த பரிகாரங்கள் எந்தளவுக்கு உதவும்னா இருக்கிற கமிட்மென்ட்ஸை ஃபுல் ஃபில் பண்ணிக்கிட்டு லேசா தம் ஆத்திக்கற வரை தான்.அதுக்குள்ள நீங்க ஃபீல்டை மாத்திக்கனும்.ஓகேவா.

அடுத்த பதிவுல பரிகாரங்களை தருகிறேன்.

லால் கிதாப் பரிகாரங்கள் :ரிஷபம்

DSC_6481

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றம் கிரக பலன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சம். இடையில இந்த லால் கிதாப் பரிகாரங்கள் கிராஸ் ஆச்சு. செரி கூட்டம் அம்ம உதவுமேன்னு இதை பிடிச்சம், ஏன்னா நெல்ல மேட்டரை கொடுக்கிறது மட்டும் முக்கியமில்லை.அது பரவலா போய் சேரனும்ல?

மொதல்ல ரிஷப ராசிக்குண்டான லால் கிதாப் பரிகாரங்களை பார்க்கலாம். ப்ராக்கெட்ல நம்ம கருத்தை கொடுத்திருக்கன். இனி ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
(ஊஹூம் ..இது யோகத்தை குறைச்சுரும். ஒரு வேளை ஜாதகத்துல சுக்ரன் உச்சமா இருந்தா செரிப்படலாம்)

2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
(ஆஹா.. இந்த காமசிந்தனை மேட்டர்லாம் ஒரு தொடர்ல கூட அடங்காத மேட்டராச்சே.. இந்த சப்ஜெக்ட்ல ஒரு புரிதல் ஏற்பட்டாலே அன்றி இது தீரா பிரச்சினை. பிரம்மச்சரியம் கூடலுக்கு தயார்படுத்தும்.கூடல் பிரம்மச்சரியத்துக்கு தயார்படுத்தும்.வேணம்னா ஒன்னு பண்ணுங்க ஏதேனும் “உருவாக்கும்” வேலையில ஈடுபடுத்திக்கங்க. ஐ மீன் ஹேன்டி க்ராஃப்ட்.முக்கியமா ஓவியம்தீட்டுதல் -வண்ணம் பூசுதல்)

3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.

(இந்த ஆள் மாத்தற மேட்டருக்கு காரணமே “ஹேண்ட்லிங்” பிரச்சினை தான். கரீட்டா ஹேன்டில் பண்ண தெரிஞ்சா பொஞ்சாதியே ஒவ்வொரு ராத்திரிக்கும் புதுப்பெண்ணா இருப்பா. ஒரு ரூவா காய்ன் சென்னை போனாலும் ஒரு ரூவா தான். திருச்சி போனாலும் ஒரு ரூவா தான் . சுகப்படனுங்கற தலை எழுத்து இருந்தா பொஞ்சாதியே போதும். அல்லாடனும்ங்கற தலை எழுத்து இருந்தா எத்தனை கிராக்கி கிராஸ் ஆனாலும் ஆப்பு ஆப்புதான். தேவை சின்ன புரிதல் மட்டுமே.)

குறிப்பு:
மொத 3 பாய்ண்டுமே சுக்ரன் ராசியாதிபதியாவும் -ரோகாதிபதியாவும் வர்ரதை வச்சு சொன்னதா தோனுது .

4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.

(தம்பதிகளிடையில் அன்யோன்யம் பெருகனும்னா “மனம் திறந்து” பேசனும். ஜோதிட ரீதியா வேணம்னா வெள்ளி பாத்திரம்,ஃபர்னிச்சர்,லக்சரி,பட்டாடை ,காஸ்மெட்டிக்ஸ், விருந்து ,பார்ட்டி இத்யாதில்லாம் அவாய்ட் பண்ணிருங்க. நெருப்புல பூ போடறதெல்லாம் சப் கான்ஷியஸா சேடிசத்தை தான் தூண்டும் .நல்லதில்லை. களத்ராதிபத்யம் செவ்வாய்க்கு கிடைக்கிறதால இப்படி ஒரு பரிகாரத்தை சொல்லியிருப்பாய்ங்க போல. கணவன்/மனைவி பாக்கு நிற ஆடை அணிகலன் அணிந்து வேல் பூஜை செய்தாலே போதும்)

5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
(ஹ்ம் .. குரு அஷ்டமாதிபதியாவறத வச்சு சொல்றாங்க போல. இதெல்லாம் வேலைக்காகாது .ஆகவே கையில கரன்சி பெருசா வச்சுக்காதிங்க. Gold டச் பண்ணாதிங்க. தொழில் கத்து கொடுத்த குரு யாராவது இருந்தா உடுப்பி ஹோட்டல்ல டிஃபன் வாங்கி கொடுங்க)

6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
(பட்டு சுக்கிர காரகம் . நைலான் பாலியஸ்டர்ல்லாம் எப்படி இந்த கேட்டகிரியில வருது தெரியல. ஏற்கெனவே சொன்னாப்ல சுக்ரன் உச்சமா இருந்தா ஓகே.இல்லின்னா பட்டும் வேணாம். நைலான் பாலியஸ்டர் கட்டாயம் வேண்டாம்)

7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
(இதுக்கு என்ன அடிப்படைன்னே புரியலயே ஜன 15 முதல் பிப் 15 என்றால் சூரியன் மகரத்துல இருப்பார் செருப்பு -ஷூ எல்லாம் சனி காரகம் .ஆகவே ஒரு லாஜிக் உண்டு )

8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.
(இது எல்லா ராசிக்குமே நல்லதுதானே ..குறிப்பா ரிஷபராசிக்கு நீடித்த வாழ்வு உண்டு. நல்வாழ்வு வேணம்னா? சொத்து சேர்க்காதிங்கப்பா – வேலைக்காரனுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுத்துருங்க )

மேஷ ராசி /லக்ன காரவிகளுக்கு பரிகாரம்

h

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றம்-கிரக பலன் தொடர் எழுதிக்கிட்டிருக்கம். அதே நேரம் இந்த ராசி வைஸ் பரிகாரங்களையும் ஆரம்பிச்சுட்டன்.ஆத்தா விட்ட வழி .
லால் கிதாப்னு ஒரு மேட்டர் நம்ம கண்ல பட்டுது . மேஷம் டு மீனம் பரிகாரங்கள் கொடுத்திருக்காய்ங்க. இது என்னன்னே தெரியாதவிகளுக்கு ஒரு முன்னுரை (உபயம்: இணையம்)

//இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.

இவற்றிற்கு தீக்ஷை எதுவும் தேவை இல்லை .இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.//

என்னதான் நாலு பேருக்கு சொல்ற இடத்துல இருந்தாலும் நமக்கும் ஒரு க்யூரியாசிட்டி இருக்கும்ல? ச்சொம்மா அப்டீ ஒரு நோட்டம் விட்டம்.
சிலது லாஜிக்கலா தான் இருந்தது . சிலது உதைக்குது . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ங்கறாப்ல நம் கருத்துக்களோட அவற்றை தந்திருக்கன். இறுதியில் சொந்த சரக்கு .

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-

1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
-இது எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
– நம்ம சாய்ஸ் .. பாக்கு நிறம் .அதிர்ஷ்டம் தரலின்னாலும் பெட்டர் ஹெல்த் -கோபம் கட்டுப்படும்
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
-இதுல எந்த லாஜிக்கும் ஸ்பார்க் ஆகமாட்டேங்குது – 3 ஆம் பாவம் மிதுனம் -அதிபதி புதன் -இவருக்குரிய உலோகம் வெள்ளியல்லவே !
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
-ஹ்ம்..கிச்சன் செக்ஸன்னா டபுள் ஓகே .மத்தபடி இந்த பாய்ண்ட் ஓகே தான் -மீறி மேற்படிஃபீல்டுல இருந்தா சுக்ர சம்பந்த பிரச்சினைகள் வந்துரும்ணே !
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
-ஊஹூம்.. இந்த மேட்டரை விவசாயம் பத்தி தெரிஞ்சவிக தேன் ஃபைனலைஸ் பண்ணனும். எலுமிச்சை மரம் -முருங்கை மரம் கணக்கா முறியுமா? ஸ்ட் ராங்கா? இதை வச்சு டிசைட் பண்ணுங்கப்பா.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
-இதுவும் எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்தற மேட்டர் தான் .(குரு தோஷம் குறையும்) அதே சமயம் குரு விரயாதிபதியாவதால் இது மேஷத்துக்கு கன பொருத்தம்
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்.
-ம்..உதைக்குதே.. திருஷ்டி கழிக்கிற மாதிரி மேட்டரா தெரியுது . இதை விட ஈயம் பூசப்பட்ட செம்பு பாத்திரத்து நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இனி லாஜிக்கல் ரெமிடீஸ் (சொந்த சரக்குங்கோ)

1.ஹேர் ட்ரஸ்ஸிங் ,மீசை போலீஸ் மிலிட்டரி கணக்கா
2.குரல் கர்ண கடூரமா இருந்தா நெல்லது .பக்கத்து வீட்டுக்காரன் நியூசென்ஸ் கேஸ் கொடுக்காத ரேஞ்சுல வாய் விட்டு பாடுங்க.
3.சகோதிரிகள் / ஃபீமிலிஷா இருக்கிற ப்ரதர் இருந்தா அவிகளுக்கு ஹெல்ப் பண்ணுங்க.
4.அம்மா கடல் தொடர்பான உருவங்கள் பதித்த டாலர்/ பொறித்த ஆடைகள் அணிவது நலம். தலைவாசல் கதவு ,வண்டியோட நெம்பர் ப்ளேட் ,மாணவர்கள் தம் புத்தக அட்டையிலும் மேற்படி மேட்டரை ஒர்க் அவுட் பண்ணலாம்.
5.சூரிய உதய/அஸ்தமன காட்சிகளை அப்சர்வ் பண்ணுங்க.கொளந்தைங்க சூரிய வடிவங்கள்/ உருவங்கள் பதித்த டாலர்/ பொறித்த ஆடைகள் அணிவது நலம்.
6.தாய் மாமனுக்கு உதவவும்
7.பொஞ்சாதியை ஓவியம் வரைஞ்சு -வண்ணம் தீட்ட சொல்லுங்க. நோ காஸ்மெட்டிக்ஸ் நோ ஃபர்னிச்சர்ஸ்
8.சமையலுக்கு நல்லெண்ணெய்,அதிகம் தண்ணீர் அருந்தவும்,கொலஸ் ட்ரால் பிரச்சினை இல்லின்னா வெண்ணை/நெய் சேர்க்கவும். சைனஸ் இல்லின்னா மோர்.
9.அப்பா மஞ்சள் நிற ஆடை அணிகலன் உபயோகிக்கவும். நார்த் ஈஸ்ட் தேசங்களின் மீது படை எடுக்கலாம். இதே திசையில் முதலீடு /சேமிப்பை மேற்கொள்ளவும்.
10.வேலை செய்ற இடம் தூசியும் தும்புமா இருந்தா நல்லது -தலித்துகளுக்கு வாய்ப்பு தரவும்.
11.பண மேட்டர்ல புரட்டறதெல்லாம் வேலைக்காகாது . கொடுக்கல் வாங்கலில் தாமதம் தவிர்க்க மாடி/பால்கனி/வீட்டின் முன் புறம் /பின் புறம் சின்னதா தோட்டம் போடுங்க.
12.பில்லே கவர்/பெட் ஸ்ப்ரெட்/நைட் லேம்ப்லாம் மஞ்சள் நிறம்
அடுத்த பதிவில் ரிஷப ராசி.

செம மேட்டரு : 16 (சந்திரகாரக பெண்கள்)

அண்ணே வணக்கம்ணே !
செம மேட்டருங்கற தலைப்புல 12 பாவ பலனையும் எப்படி மேனேஜ் பண்றதுன்னு ஒரு தொடர் எழுதிக்கிட்டு வர்ரம். மத்த பாவம்லாம் ஒன்னு அல்லது ரெண்டு பதிவுல முடிஞ்சுருச்சு . இந்த 7 ஆம் பாவம் மட்டும் கு.பட்சம் 9+9 பதிவுகளுக்கு இழுக்கும் போல.

லக்னாத் 7 ஆம் பாவம் தொப்புளை காட்டும். இதுதான் உடலின் மையம். கழைக்கூத்தில் குழந்தைய கொம்பு மேல வச்சு தூக்கும் போது தொப்புள் பகுதி தான் லேண்டிங் பாய்ண்டுங்கறத கவனிச்சிருப்பிங்க.

அதே போல பிரச்சினைகள் வந்து ஒரே தூக்கா தூக்ககும் போது – இந்த ஏழாம் பாவம் காரகம் வகிக்கும் பொஞ்சாதிங்கற கிராவிட்டி பாய்ண்ட் கரீட்டா இருந்தா -ஐ மீன் கான் க்ரீட்டா இருந்தா ஜமாளிச்சுரலாம். இறங்கி வந்த பிறவு ஜமாய்ச்சுரலாம்.

ஆனால் பொஞ்சாதி மேட்டர்ல பல்பு வாங்கியே பல சரித்திரங்கள் சாக்கடையாகியிருக்கு. கமலா நேரு கொஞ்சம் ஹெல்த்தியா இருந்திருந்தா நேருவோட ஆட்டிட்யூடே வேறயா இருந்திருக்கும்.இந்திராவின் மண வாழ்வு கொஞ்சம் பெட்டரா இருந்திருந்தா ..இப்படி சொல்லிட்டே போகலாம்.

ஆனானப்பட்ட நெல்சன் மண்டேலாவ கூட அவிக சம்சாரம் டைவர்ஸ் பண்ணிருச்சுன்னா நாம எல்லாம் எதுல கணக்கு? அறிவு ஜீவி -நடமாடும் கம்ப்யூட்டர் சுஜாதாவையே அவரோட சம்சாரம் மொக்கை பண்ணிட்டாய்ங்க.அதுவும் அவரு டிக்கெட் போட்ட பிறவு .

இதனாலதேன் இந்த ஏழாம் பாவத்தை 18 பதிவுககள்ள அனலைஸ் பண்ணலாம்னு டிசைட் பண்ணிட்டன். சுஜாதாவே சொல்வாரு .நாட்ல உள்ளள புருசன் பொஞ்சாதிகளை ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாமாம். ஒன்னு பிரிஞ்சுட்டவிக ரெண்டு பிரிய முடியாதவிக.

மொக்கை போதும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல சந்திர காரகம் கொண்ட பெண்களால் வரும் பிரச்சினைகளை சொன்னேன். அதுக்குண்டான பரிகாரங்களை இப்ப பார்த்துரலாம்.

1.என்விரான்மென்ட்ல புகை,தூசு,சூடு இல்லாம பார்த்துக்கனும்.
2.மனரீதியா அழுத்தம் கூடவே கூடாது. அப்படியே இருந்தாலும் அதுக்கொரு அவுட்லெட்டைதேர்வு செய்துக்கனும் (சீரியல் பார்க்கும் போது அழுதா ஆரும் கண்டுக்கமாட்டாய்ங்க)
3.ஊஞ்சலாடலாம் – அக்வேரியம் வச்சுக்கலாம் . இதை அறையின் வடகிழக்குமூலையில் சுவற்றிலேயே ரேக் மாதிரி வச்சு அதுல வைக்கனும்.
4.வெள்ளை – நீல நிற ஆடை நல்லது. அதில் மீன்,சுறா,படகு இத்யாதி கடல் தொடர்பான உருவங்கள் பொறித்திருந்தால் சூப்பர்.
5.மேற்படி உருவங்கள் பொறித்த டாலர் அணியலாம். கீ செயின் இத்யாதி உபயோகிக்கலாம்.
6.எதையும் ரெண்டே கால் நாளைக்கு மேல ப்ளான் பண்ணவே கூடாது.
7.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புது புது இடங்கள்,புது புது மனிதர்களை சந்திக்கனும்.
8.குளிர் பானங்கள்,மோர்,லெமன் மாதிரி விஷயங்களை தவிர்க்கவும். சுத்தமான குடி நீரை எவ்ள வேணா அருந்தலாம்.
9.இவிக எதை அழுத்தமா நம்பறாய்ங்களோ அதை விமர்சிக்க கூடாது .(கண்டதையும் நம்பினா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒன்னை மட்டும் விட்டுட்டு மத்ததை எல்லாம் கிளிச்சு எஜுக்கேட் பண்ணனும்)
10.மூன் லைட் டின்னர் சாப்பிடலாம். பவுர்ணமி அல்லது வளர்பிறை தினங்களில்.
11. சீதோஷ்ண நிலையில் அதீத குளிர்,அதீத வெப்பம் இருக்கும் நாட்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
12.ஆண்கள் ஸ்படிக மாலை அணியலாம்.பெண்கள் முத்து மாலை அணியலாம்.
13.மனோ சக்தியின் மகிமை/மனதின் இயற்கையை பேசும் சினிமா, புத்தகங்கள் அதிகம் பார்ப்பது /படிப்பது நல்லது.

எச்சரிக்கை:

Announcement

12 பாவங்கள் – 9 கிரகங்கள் பற்றிய பரம ரகசியங்கள் உட்பட எல்லா விஷயங்களையும் 21 நூல்களாக வெளியிட இருக்கிறேன். முன் பதிவெல்லாம் கிடையாது. புத்தகங்கள் அச்சானதும் கிடைக்கும்.
இந்த ப்ராஜக்டை கையில எடுக்கனும்னா ஏற்கெனவே வெளியிட்டு நிலுவையில் இருக்கும் 100+ செட் புக்ஸ் க்ளியர் ஆகனும்.
இதனால ரூ.200 க்கு விற்பனையாகி வந்த இந்த 4 நூல்கள் கொண்ட செட்டை வாங்குவோர்க்கு இன்னொரு செட் இலவசமா கொடுக்க முடிவு பண்ணியிருக்கன். (கூரியர் கட்டணம் ரூ.50 தனி)
இந்த சலுகை பிரதிகள் உள்ளவரை மட்டுமே . மேலதிக விவரங்களுக்கு swamy7867@gmail.com

செம மேட்டரு : 16 (சந்திர காரக மனைவி )

2

அண்ணே வணக்கம்ணே !
செம மேட்டருங்கற தலைப்புல 12 பாவங்கள் தரும் பலனை எப்படி சானலைஸ் பண்றது .சோஷியல் லைஃப்,ஃபேமிலி லைஃப் பாதிக்காம எப்படி சொற்ப பலத்தை வச்சு ஒப்பேத்தறதுன்னு சொல்லிக்கிட்டே வந்தேன். இந்த வரிசையில் 7 ஆம் பாவம் வந்திருக்கம்.

ஏழு மனைவிய காட்டும். இந்த பாவத்தை பிரபாவிக்கிற கிரகம் எதுவா இருந்தா மனைவியின் குண நலன் இதுவா இருக்கும்னு முந்தின பதிவுலயே பெண்களை 9 வகையா பிரிச்சு அவிக கேரக்டரை விவரிச்சிருந்தம்.

ஆக்சுவலா 18 வகையா பிரிக்கனும். மொத்தம் ஒன்பது கிரகம். பாசிட்டிவ் இம்பாக்ட் 9 ப்ளஸ் நெகட்டிவ் இம்பாக்ட் 9 ரெண்டையும் கூட்டினா 18 வருதுல்ல. ஆனால் பலான பெண் பலான கிரகத்தின் காரகம்னு பிரிச்சு தெரிஞ்சுக்கிட்டாலே பாதி பிரச்சினை ஓவர். பாசிட்டிவா நெகட்டிவாங்கற டீட்டெய்ல் உங்களுக்கே தெரியுமே.பாசிட்டிவா இருந்தா பிரச்சினையே கிடையாது. என்றும் பதினாறாய் லைஃபை என் ஜாய் பண்ணலாம்.

நெகட்டிவ் இம்பாக்ட்னா மட்டும் தான் பரிகாரம் தேவை. இதைத்தான் கடந்த சோதிட பதிவுலருந்து ஆரம்பிச்சிருக்கம்.சூரிய காரக பெண் ஓவர்.இன்னைக்கு சந்திர காரக பெண் பத்தி சொல்லனும்.இவிகளால என்ன மாதிரி பிரச்சினைகள் வரும்னு சொல்லி பரிகாரங்களையும் தர்ரன். கரீட்டா கேட்ச் பண்ணி ஃபாலோபண்ண ஆரம்பிச்சிருங்க.மஹிளா ஸ்டேஷன்ல இருந்து ஃபேமிலி கோர்ட் வரை எல்லாத்தையும் அவாய்ட் பண்ணிரலாம்.ஓகேவா உடுங்க ஜூட்டு.
ஒபாமா வந்திருக்காரு . என்ன நடக்கும்? இன்னம் டஜன் கணக்கா அணு உலை திறப்பாய்ங்க, அங்கன குப்பைக்கு போக வேண்டிய – விற்கவே கூடாத சரக்கை எல்லாம் இங்கன விற்க அனுமதி தரப்படும். ராணுவ ஒப்பந்தம்னு கை.எ ஆகும்.

அமெரிக்காகாரன் உலகத்துக்கே விரோதி. அவனோட ஒப்பந்தம் போட்டா அவனோட விரோதி எல்லாம் நமக்கு விரோதி.ஏற்கெனவே வெளி நாட்டு உறவு மேட்டர்ல எந்தளவுக்கு சொதப்பனுமோ அந்தளவுக்கு சொதப்பியாச்சு.

இனம் இனத்தோடு சேரும்/சேரனும். இந்த விதிப்படி பார்த்தா சீனாக்காரன் தான் நமக்கு சோடி .சனத்தொகை விஷயத்துல ஆகட்டும் ,பராம்பரியம்,பண்பாடு இத்யாதியிலயாகட்டும் நமக்கு சீனத்துக்கும் தான் சோடி.ஆனால் மோடி ஒபாமாவோட சோடி போட்டு இன்னம் கொஞ்சம் ரேக்கி விடறாரு.
என்ன இழவு இது. சுஜாதா சொல்றாப்ல கடியாரத்துக்கு உள்ள மூளை போதும்.இது கூடா நட்புன்னு டிசைட் பண்றதுக்கு. நேருவோட பஞ்ச சீல கொள்கைய பஞ்சர் ஆக்கிட்டம் .பிடிச்சது சனி .

பெண் குழந்தைகள் ,பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி 100 மீட்டர் லெட்டர் போட்டாய்ங்களாம்.இது செய்தியா வருது. பிரதமர் அலுவலகத்துலருந்தே பி.டி.ஐக்கு நோட் போயிருக்கும் போல.

பெண் குழந்தைகளின் கல்விங்கறது ஆக்சுவல் ப்ராப்ளம் இல்லை. பல பிரச்சினைகளோட பின் விளைவு தான். நாம அசலான பிரச்சினைகளுக்கெல்லாம் அதிரடி சொல்யூஷன் கொடுத்து லெட்டர் போட்டம்.பதில் இல்லை.

போஸ்டேஜுக்கு சில்லறையில்லயோனு ஜன.6 ஆம் தேதி தபால் செலவுக்காக அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் கூட அனுப்பிட்டம். கண்டுக்கற நாதி இல்லை.

லேட்டஸ்டா வைட் ஹவுசுக்கு எழுதியிருக்கன். ஆனந்த விகடன் காரவிகளுக்கும் ஃபோன்ல நரேட் பண்ணியிருக்கன்.(இது ஸ்டேட் மேட்டர்)
ஒரு பரதேசியும் கண்டுக்கற மாதிரியே இல்லை. என்.டி.ஆர் கணக்கா ஒரு வேன் எடுத்துக்கிட்டு நாடு தழுவிய சுற்றுப்பயணம் தான் போகனும் போல.
செரி..பக்கத்தை மூடிராதிங்க .பதிவுக்கு வந்துட்டன்.

இன்னைக்கு சந்திர காரக பெண்களால் வரும் பிரச்சினைகளை பற்றி சொல்லியே உடறேன்.

சுஜாதாவின் சிறுகதையில கதா நாயகி , அண்ணன் காரன் பரம்பரை வீட்டை விற்கப்போறான்னு தெரிஞ்சு பிசியான கணவனை இமிசை பண்ணி டிக்கெட் ஏற்பாடு செய்துக்கிட்டு வெளி நாட்ல இருந்து இந்தியா வருவா. நாம அவள் அண்ணனோட பொருளாதார நெருக்கடிய தீர்த்து எப்படியாச்சும் வீடு விற்கிறதை நிறுத்திருவான்னு நினைப்பம்.

ஆனால் எப்பமோ சி….ன்ன வயசுல எவனோ ரமேசோடவோ சுரேசோடவோ அப்பா அம்மா விளையாட்டு விளையாடின போது சுவத்துல கிறுக்கினதை தடவிப்பார்த்துட்டு போயிருவா.

சந்திர காரகத்தால் ஏற்படும் பிஹேவியர் இதை மாதிரி தான் இருக்கும்.

சந்திர காரக பெண்ணை பற்றி கூறப்படும் புகார்கள்:
1.சீக்கிரமா சூடாகி -சீக்கிரமே கூல் ஆயிருவாய்ங்க.(கோவத்த சொன்னேங்க) இந்த இடைப்பட்ட நேரத்துல என்ன வேணா நடந்துரலாம்.(கொலை தற்கொலை உட்பட)
2.கொஞ்சம் கூட ப்ராக்டிக்காலிட்டியே இருக்காது .சகட்டுமேனிக்கு சென்டிமென்ட்ஸ் ஃபாலோபண்ணுவாய்ங்க. மனோ ராஜ்ஜியம் நடத்துவாய்ங்க.
3.இன்செக்யூர்டாவே ஃபீல் ஆவாய்ங்க. யாராவது கொஞ்சம் ஆறுதலா பேசிட்டா ஈல்ட் ஆயிருவாய்ங்க.
4.கடவுள்,அய்யரு,குறி சொல்றவிக,சோசியருங்க இப்படி ஆரு வேணம்னா இவிகள சீக்கிரமா இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியும்.
5.மாசத்துல பாதி நாள் ஒரு மாதிரி -பாதி நாள் வேற மாதிரி பிஹேவ் பண்ணுவாய்ங்க. ( அக்ரெசிவா/அமிக்கபிளா, தகிரியமா/பயந்தா கொள்ளியா
5.மழைய பத்தி சொல்லும் போது காஞ்சா காஞ்சு கெடுக்கும் -பேஞ்சா பேஞ்சி கெடுக்கும்பாய்ங்களே அதை மாதிரி தான் இவிக போக்கும்.
6.ஜஸ்ட் ரெண்டே கால் நாள்ள 20 வருசத்துக்கும் தீராத பிரச்சினையை உருவாக்கிக்குவாய்ங்க.
7.நல்லதோ கெட்டதோ பட்டுனு செய்து தொலைச்சாலும் எஃபெக்ட் குறைவு .ஆனால் இவிக ஒதகாத மேட்டருக்கெல்லாம் கூட பயங்கரமா சல்க் பண்ணிக்கிட்டு மனப்போராட்டம் காரணமா வரும் வியாதிகள் எல்லாத்துக்கும் சிகப்பு கம்பளம் விரிப்பாய்ங்க. உ.ம் ரத்த கொதிப்பு ,அல்சர்,ப்ராங்கடைஸ்,வீசிங்
8.சந்திரகாரகம் கொண்ட ஆண் என்றால் சிவசந்திரன் -லட்சுமி கணக்கா மதர்லி ஃபிசிக் /ஏஜ் உள்ள பெண்ணை மணக்கவும் சான்ஸிருக்கு.
9.என் கனவுல செத்துப்போன அம்மா வந்துன்னு ஆரம்பிச்சு – சாமியாடறது ரேஞ்சுக்கு போயி கடேசியில பைத்தியம் கூட பிடிக்கலாம்.
10.அவ முகத்துல முழிச்சாலே அப்படித்தான்னு ஆரம்பிப்பாய்ங்க.ஆரோ எனக்கு சூனியம் வச்சுட்டாய்ங்கன்ற அளவுக்கு போயிருவாய்ங்க.

இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்தா என்ன பரிகாரம்னு கேப்பிக சொல்றேன். அடுத்த பதிவுல ..