உங்களுக்கும் ராஜயோகம் :25

RSS

அண்ணே வணக்கம்ணே !
குரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம்.

குரு பலம் இல்லாம கோவில் குளம்னு அலப்பறை கொடுத்தா ஆப்புதேன். கோவில்களை 3 க்ரூப்பா பிரிக்கலாம்.

1.மாடர்ன் டெம்பிள்ஸ்
இதெல்லாம் ச்சும்மா பிக்னிக் ஸ்பாட் மாதிரி-போகலாம் -போன மாதிரியே வந்துரலாம் ( ஆனா இங்கே போனாலும் சிம்னி போடாத லாந்தர் விளக்கு போல படபடன்னு அடிச்சுக்கிட்டிருக்கிற குருபலம் செலவழியும்) இதுல ஒரு ஆறுதல் என்னடான்னா இந்த மாடர்ன் டெம்பிள்ஸ் மேல உங்களுக்கு ஏற்படற கவர்ச்சி இத்யாதில்லாம் மேம்போக்கானது .கே டிவியில நல்ல படம் போட்டுட்டான்னா கோவிலுக்கு போறது கேன்சலாயிரும்.

2.மாடர்னைஸ்ட் டெம்பிள்ஸ்
ஒரு காலத்துல சாஸ்த்ரோக்தமா இருந்து மாடர்னைஸ் பண்ணப்பட்ட டெம்பிள்ஸ்ங்கறதை சுருக்கமா சொன்னேன். இங்கே போனாலும் குரு பலம் செலவழியும். அதே நேரத்துல உங்க கான்ஷியஸ் மைன்டை தாண்டி சப் கான்ஷியஸ் லெவலுக்கு கூட உங்களை இதெல்லாம் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாது .
அதே நேரம் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுரும். வாழ்ந்து கெட்டவன் /அட ராசபரம்பரையில வந்த கடேசி வாரிசோட அரண்மனைக்கு ஒரு தபா போறிங்கன்னு வச்சுக்கங்களேன். அதே எஃபெக்டுதான்.

3.கைவிடப்பட்ட புராதன கோவில்கள்:
கூடங்குளம் அணு உலையிருக்கு. திடீர்னு ஒரு விபத்தே போல சித்தூர் முருகேசன் (ஹி ஹி நான் தேன் பாஸ்) டைரக்ட் எலீக்சன்ல பிரதமர் ஆயிட்டேன்னு வைங்க. அட போங்கடா உசுரோட இருந்தா உப்பு வித்து பொளைச்சுக்கலாம். உசுரே போயிரும்னா அந்த கருமாந்திரம் எதுக்கு மூடித்தொலைன்னு சட்டம் போட்டுட்டேன்னு வைங்க. இதே நிலை தான் கைவிடப்பட்ட புராதன கோவில்களுக்கு .

அது ரன்னிங்குல இருந்தப்போ சாலக்கா மின்சார உற்பத்தி செய்திருக்கலாம்.ஊருக்கு வெளிச்சம் கொடுத்திருக்கலாம்.ஆனால் இப்போ? உற்பத்தி நடக்கவே இல்லின்னாலும் பரவால்ல. எக்கு தப்பா கூகுள் காரன் விட்ட ட்ரைவர் இல்லாத கார் கணக்கா ஏதோ நடக்குதுன்னு வைங்க.
இதான் ஹை ரிஸ்க்.

ஓஷோ சொல்வாரு.கொய்யால ..வேணம்னா நீ கடவுளா மாறலாம்.ஆனால் கடவுளை பார்க்க மிடியாது.

கோவிலுக்குள்ள “ஏதோ” இருந்தா உள்ளே போன நீங்க பழைய ஆளா நீங்க ரிட்டர்ன் ஆக முடியாது. உங்களுக்குள்ள என்னமோ நடந்துரும். உள்ளே போன ஆள் வெளியே வந்த ஆளை போல இருக்கவே மிடியாது .

விக்கிரக வழிபாட்டை பத்தி ஓஷோ சொல்வார் “இது தப்பான வார்த்தை. விக்கிரகம் இருக்கும் வரை அங்கே வழிபாடு நிகழாது. வழிபாடு துவங்கி விட்டால் அங்கே விக்கிரகம் இருக்காது”

இதெல்லாம் தத்துவார்த்தமா பார்த்தா ஓகே தான். ஆனால் லாஜிக்கலா பார்த்திங்கன்னா கோவிலோ -உள்ளாற இருக்கிற விக்கிரகமோ ஸ்தூல பொருள் தான். ஏதோ ஒரு டெக்னாலஜியை உபயோகிச்சு அதை உயிரோட்டமுள்ளதா மாத்தியிருக்காய்ங்க.

உங்களுக்கு புரியனும்னா சிம்பிளா சொல்றேன். விக்கிரகம் ஒரு ரீசார்ஜபிள் பேட்டரி – அதை தொடர்ந்து சார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கோனம். ப்ளஸ் -மைனஸ் மாறப்படாது.பேட்டரி கெப்பாசிட்டிய பொருத்து சார்ஜ் இருக்கனும். ஷார்ட் ஆகப்படாது .

இதெல்லாம் ஒர்க் அவுட் ஆற வரை ஓகே. இதுல எதுனா ஒன்னு பிடுங்கிக்கிட்டா என்னாகும்? பேட்டரி நில் ஆயிரும்.
நில்லான பேட்டரி என்ன செய்யும்? சார்ஜ் ஆகவே பார்க்கும். ஏதோ கிடைக்கும்னு போன மகாசனங்களோட பேட்டரியை அவுட்டாக்கி அது சார்ஜ் ஆக ஆரம்பிச்சிரும்.

(ஏம்பா நான் செரியா பேசறனா?)

குருபலம் இல்லாத ஹ்யூமன் பாடி லோ சார்ஜ்ல உள்ள பேட்டரி மாதிரி – நில் பேட்டரி பக்கத்துல போனா பேட்டரி காலியாயிரும்.
குருபலம் இல்லாதவிக கதையே இதான். ஒரு வேளை குருவோட ராகு /கேது/சனி ஆருனா சகவாசம் வச்சிருந்தா சொல்லவே தேவையில்லை.
இன்னாபா இது கெரகம் செரியில்லன்னுதான் கோயிலுக்கு போக சொல்றாய்ங்க .போறம் .நீ என்னமோ இப்படி பேதியாக்கறியேன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க.

மறுபடி பேட்டரி உதாரணத்தையே எடுத்துக்குவம். கனெக்சன் கரீட்டா இருக்குன்னா நிதானமா சார்ஜ் ஆகும். நிதானமா டிஸ்சார்ஜ் ஆகும்.
கெரகம் கெட்டுப்போனப்போ எக்குத்தப்பா சார்ஜ் ஆகி தொலைக்கும். ஒலகமே டீ ஜெனரேட்டட் . இதுல நீங்க ஓவர் சார்ஜுல இருந்திங்கன்னா டீம் லீடர் கோயான் இன்சல்ட் பண்ணான்னு ராஜினாமா பண்ணிட்டு அல்லாடுவிங்க. (டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் -கெரகம் கெட்டு போனா நடக்கிறது இதான் -செவ் கெட்டிருந்தா வீரம் அதிகமா இருக்கும்,சூரியன் கெட்டிருந்தா ஈகோ அதிகமா இருக்கும்)

மத்த கெரகம் செரியில்லின்னா கோவிலுக்கு போங்க. எக்கு தப்பா சார்ஜ் ஆனது டிஸ் சார்ஜ் ஆகி நெல்லது நடக்கும்.

ஆனால் குரு செரியில்லின்னா மட்டும் அம்பேல் ஆயிருங்க. கோவிலுக்கு போறதே ஆப்புன்னா கமிட்டியில மெம்பரா இருக்கிறது -அபிசேகம் -பூர்ண கும்ப மரியாதை -யானை கிட்டே மாலை இதெல்லாம் பெரிய ஆப்பா ஆயிரும்.டேக் கேர்.

முக்கியமா பஜனை மண்டலி /திருவிழா சமயத்துல வாலண்டியரா இருக்கேங்கறதுல்லாம் நெருப்போட விளையாடற மாதிரி.
அதே சமயம் குரு+கேது சேர்க்கை இருந்தா தியானம் பண்ணுங்க. குரு+ராகு சேர்க்கை இருந்தா வீட்டோட இருந்து துர்கையை தியானம் பண்ணுங்க. குரு+சனி சேர்க்கை இருந்தா கொல தெய்வத்தை தியானம் பண்ணுங்க.

கோயில் நோட்டீஸ்ல பேரை போடறது /பேனர் வைக்கிறதுல்லாம் வேண்டாம் வாத்யாரே. குரு செரியில்லையா?
நலம்.ஃபைனான்ஸ்/ என்டோன்மென்ட் போர்ட்/ நீதி/ஆசிரியதுறைகளில் இருந்தால் சீக்கிரமே கழண்டு கொள்வது நல்லது
.
பிராமணர்கள்,பூணூல் அணியும் வகுப்பினர்,அரசு அலுவலர்கள், நீதித்துறை,அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கை தேவை.
இருக்கும் தங்க நகைகள் அனைத்தையும் காசாக்கி -வந்த பணத்தை கரண்ட் அக்கவுண்ட்ல போட்டுருங்க.

வயிறு-இதயம் தொடர்பான விஷயங்களில் ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க.
கல்யாணம்,திருமண வாழ்வு ,குழந்தை பிறப்புக்கு டாப் பிரியாரிட்டி கொடுங்க .பணம் பண்ண துடிக்காதிங்க. (தப்பித்தவறி சக்ஸஸ் ஆயிருச்சுன்னா முன் சொன்னதெல்லாம் புடுங்கிக்கும்)

கையில் காசு ரூ.30 க்கு மேல் வச்சுக்கப்படாது .கோவில் குளம்,யாகம்/ஹோமம்,சுப காரியம்லாம் போகப்படாது
எளிமையான லைஃப் ப்ளான் பண்ணுங்க. பொஞ்சாதி/கொளந்தைகளையும் கன்வின்ஸ் பண்ணி இதே ரூட்டுக்கு கொண்டுவாங்க.

முக்கியமா சவுண்டு விடாதிங்க .ஐ மீன் அதிகாரம் பண்ணாதிங்க. அரசு வகை வருமானங்களை டச்சு பண்ணாதிங்க வட்டி ?? விஷம் மாதிரி.ஆளையே காலி பண்ணிரும்.

ஆருக்கும் ஐடியா தராதிங்க/அட்வைஸ் பண்ணாதிங்க. சொந்த பந்தம்/நட்பு வட்டத்துல சாவு நடந்தா போய் வாங்க.
ஓகேவா .. அடுத்த பதிவுல பெரியவரை பத்தி சொல்றேன்.அதான் பாஸ் ..சனி பகவான்.

Advertisements

உங்களுக்கும் ராஜயோகம் : 6

download (1)

அண்ணே வணக்கம்ணே !
தோசை மாவு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுல மிளகாபொடி தூவி கொடுத்தா ஒரு டேஸ்ட் ,ஒரு பேரு .வெங்காயம் +பச்சமிளகாயை வெட்டி வதக்கி தோசைமேல தூவி கொடுத்தா ஒரு டேஸ்ட் ,ஒரு பேரு , இதே போல முட்டைய உடைச்சு ஊத்தினா ஒரு டேஸ்டு.

ஜோதிடமும் இதே கேஸ் தான். ஒரு காலத்துல கில்மா ஜோதிடம்னு ஒரு தொடர் எழுதினம். எந்தெந்த கிரகம் செரியில்லின்னா கில்மாவுல எப்டில்லாம் பல்பு வாங்குவம்னு ஆராய்ச்சி.

லேட்டஸ்டா காசு பணம் துட்டு மணி மணின்னு ஒரு தொடர் ஒவ்வொரு கெரகம் கெட்டா மன்சன் ஒவ்வொரு ரூட்ல போன்டியாயிருவான். அதை வச்சு சனத்தை 9 கேட்டகிரியா பிரிச்சு மேஞ்சம்.

இந்த ராஜயோகம் மேட்டரும் இவ்ளதான். இந்த தொடருக்கு 9வகை அரசியல் ,நவகிரகங்கள் தரும் அரசியல் அனுபவங்கள் இப்படி ஏதோ ஒரு பாய்ண்ட் ஆஃப் வ்யூல கொண்டு போயிருக்கலாம்.ஆனா சரக்கென்னவோ ஒன்னுதான்.

இப்ப மேட்டருக்கு வந்துர்ரன். மொதல்ல சூரியன். இந்த கெரகம் தர்ர ராஜயோகம் எப்படி இருக்கும்னு பார்ப்பம். பகல்ல பிறந்தவிகளுக்கு சூரியன் தான் பித்ரு காரகன். ஒரு ஜாதகத்துல சூரியன் நல்ல இடத்துல உட்கார்ந்தாச்சுன்னா வாரிசுரிமையா ராஜயோகம் வந்திரும்.

இதுக்கு ஆயிரத்தெட்டு உதாரணம் இருக்கு. பிஜூபட்னாயக் -நவீன் பட்னாயக் , நேரு -இந்திரா ,இந்திரா-ராஜீவ். நம்மாளுங்க ..ஹ போங்க பாஸ் ! எந்த அரசியல் வாதி தன் பிள்ளை குட்டிய அரசியலுக்கு கொண்டுவராம இருக்கான்னு வெகண்டையா கேப்பாய்ங்க.சொல்றேன்.

ntr

என்.டி.ஆர் -ஹரி கிருஷ்ணா ,ஒய்.எஸ்.ஆர் -ஜகன் ,மொரார்ஜி தேசாய் -காந்திதேசாய் , விபி சிங்குக்கு அஜய்-அபய்னு ரெண்டு பசங்க .. என்னாச்சு? பப்பு வேகல.
எங்கயோ ஏன் போறிங்க. எங்க அப்பா கருவூல அதிகாரி . தெருவுல வீட்டண்டை பூக்கட்டிக்கிட்டிருந்தவன்,தீப்பெட்டி ஒட்டிக்கிட்டிருந்தவனை எல்லாம் டெம்ப்ரரியா போட்டு -நிரந்தரமாக்கினாரு . தன் பிள்ளைகள்ள(4) ஒருத்தனுக்கு கூட ஏன் வேலை பண்ணி வைக்கல?

செரி ஃப்ளாஷ் பேக் வேணா. ப்ரசன்டுக்கு வரேன்.எங்க பக்கத்துல சந்திரபாபு தன் மகன் லோகேஷை மந்திரியாக்க போறாராம்.இதெல்லாம் உருப்படுமா? மூப்பனார்-வாசன் கதைய பாருங்களேன். புள்ளை பாவம் கடேசி பஸ்ஸை தவற விட்ட வயசு பொண்ணு மாதிரி முழிக்குது.

ஆக சூரியன் பெட்டர் பொசிஷன்ல இருந்தா வாரிசுரிமையா ராஜயோகம் வரலாம். அட அப்பா அரசியல்ல இல்லிங்க.அப்ப எப்படி சூரியன் ராஜயோகத்தை கொடுப்பாரு?

ஒய்.எஸ்.ஆர் மெடிசின் படிக்க சொல்லோ அவிக அப்பா நாலஞ்சு ஃபீஸு அனுப்புவாராம்.ஏன்னா ? நம்மாளு தன் நாலு நண்பர்களுக்கு தொடர்ந்து ஃபீஸ் கட்டிக்கிட்டிருந்தாராம்.

ஆக தான குணம் ராஜயோகத்தை தரலாம் (வாத்யாரு கதை அல்லாருக்கும் தெரிஞ்சதுதானே ..அதான் அதை எடுக்கல) சூரியனை ஆத்மகாரகன்னு சொல்வாய்ங்க. ஆத்மாவுக்கு முக்காலமும் தெரியுமாம்ல?

ஸ்கூல் டேஸ்ல க்ளாஸ் டீச்சர் ஒவ்வொரு ஸ்டூடண்டையா எழுப்பி நீ பெரியவனாகி என்ன பண்ண போறேன்னு கேட்க ஒய்.எஸ்.ஆர் பாலிட்டிக்ஸ்ல போயி சனத்துக்கு சர்வீஸ் பண்ண போறேன்னாராம்.

புரியுதுல்ல?

சூரியன்னா தலைமை குணம் -ஈகோ . நம்ம ஊர்ல ஒரு பெரிய ரவுடி .தமிழாளுதேன். செம அலப்பறை.அந்த கதைல்லாம் சொன்னா ரக்த சரித்ரா போல ஆயிரும். நான் அடிக்கடி மென்ஷன் பண்ற எங்க எம்.எல்.ஏ காலேஜ் படிக்கிறாரு .யூனியன் எலீக்சன் . அப்பல்லாம் மேற்படி ரவுடி சொன்னவுகதேன் சேர்மன். நம்மாளு சாதியில ரெட்டி (ஈகோ சாஸ்தி) ரவுடிய மீறி நின்னாரு . அவிக ஆளுங்க வந்து காலேஜுக்குள்ளயே தலை மேல பெரிய கல்லா தூக்கி போட்டுட்டு போயிட்டாய்ங்க.

நானா இருந்திருந்தா கொய்யால உசுரோட இருந்தா என்னைக்கோ ஒரு நா பி.எம்.ஆகலாம் செத்து தொலைஞ்சா ஆருக்கு லாபம்னு பேக் அப் ஆகியிருப்பேன்.ஆனால் நம்மாளு விடல.(ஈகோ) .மேற்படி ரவுடியால பாதிக்கப்பட்டவிகள எல்லாம் ஆர்கனைஸ் பண்ணாரு (தலைமை குணம் ).ஒரு நாள் விடிஞ்சது. ஷாட் கட் பண்ணா 25 வருசம் தொகுதியை ரூல் பண்ணாரு .

ஒரு வைக்கோல் போர் இருக்கு .அதுக்குள்ள ஒரு சேவல் போனாலே தேடிப்பிடிக்கிறது கஷ்டம்.ஆனால் சூரிய பலம் உள்ளவன் ஊசியை கூட எடுத்துருவான்.சூட்சும புத்தி .சரின்னா சரி -தப்புன்னா தப்புனு ஸ்டிக் ஆன் ஆவான். சரியா தப்பா ஜட்ஜ் பண்ணுவான்.

ysr

ஒரு வரலாற்று சம்பவத்தை பாருங்க. என்.டி.ஆர் முதல்வர். ஒய்.எஸ்.ஆர் மானில காங்கிரஸ் தலைவர்+எம்.எல்.ஏ . மாவட்ட அபிவிருத்தி மண்டல மீட் .

வென்யூ: கடப்பா

என்.டி.ஆர் உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு அறிவிக்கிறாரு .ஒய்.எஸ்.ஆர் இங்கே பாசன வசதி இல்லாததால உணவுப்பயிரே கிடையாது . தோட்டப்பயிர்கள் தான் இங்கே அதிகம். போட்டவிகல்லாம் போன்டியாயிட்டாய்ங்க.அவிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கனும்னு கேட்கிறாரு. (தவறை உணர்தல்)
வாக்கு வாதம் வளருது. என்.டி.ஆர் “ப்ரதர் ..மொதல்ல சாப்பாடு முக்கியம்.பிறவுதானே பழம்”அது இதுன்னு கன்வின்ஸ் பண்ண பார்க்கிறாரு.
வேலைக்காகல. ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆர் முன்னே இருந்த மைக்கை எடுத்துக்கிட்டு ஓட்டமும் நடையுமா வெளி நடப்பு பண்றாரு.(இருந்தது ஒரே மைக் -அதான் வலம் வருது )

தன் விமர்சனத்து மேல ஸ்டிக் ஆன் ஆகிறாரு .அப்பம் என்.டி.ஆர் என்ன பண்றாரு தெரியுமா? மேடையில இருந்து இறங்கி ஒய்.எஸ்.ஆர் பின்னால ஓடறாரு . ப்ரதர்! ராஜசேகர் ! ப்ளீஸ் ..நில்லுங்க நில்லுங்க..

ஒரு வழியா ஒய்.எஸ்.ஆரை பிக் அப் பண்ணிக்கிட்டு வந்து மேடையில தன் பக்கத்துல உட்கார வச்சுக்கிட்டு .. தோட்டப்பயிர்களுக்கும் நஷ்ட ஈடு அறிவிக்கிறாரு .
ராஜ சேகர் ரெட்டி ஜாதகத்தை விட என்.டி.ஆர் ஜாதகத்துல சூரிய பலம் சாஸ்திபோல. சூரியன் =பித்ருகாரகன். அந்த இடத்துல தன்னை தந்தையாகவும் -ஒய்.எஸ்ஸாரை மூத்தமகனாவும் உணர்ந்ததால தான் இது அவருக்கு சாத்தியமாகியிருக்கு.

எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளானட்டுன்னு ஒரு பஞ்ச் அப்பப்ப விடுவேன். இட் மீன்ஸ் சூரிய பலம் உள்ளவன் சூரியனாவே மாறிர்ரான். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டல்லவா? ஆகவே வானத்துல சூரியன் வர்ரச்ச இவனும் ஃபீல்டுக்கு வந்துர்ரான்.

என்.டி.ஆர் அப்பாய்ண்ட்மென்ட் காலை 4 மணிக்கு ஆரம்பிச்சிரும். (கொய்யால ஷூட்டிங் 6 மணிக்கு முடிஞ்சாச்சுன்னா நேர வீடு தான் – சி.எம் ஆன பிறவு டபுள் ஷிஃப்ட் ஓட்டிதான் ஹார்ட் பஞ்சர் ஆயிருச்சு போல )

ஒய்.எஸ்ஸாரும் அவ்ளதேன். அதிகால எந்திரிச்சு பேப்பர் பார்த்து அதிகாரிகளை கூப்டு மின்சாரம்,அணை நீர்,நிலக்கரி நிலவரம் ,எதிர்கட்சி போராட்டம்லாம் விஜாரிச்சுட்டு 6 மணிக்கு பிரஜா தர்பார் . மக்கள் கிட்டே நேரடியா ஒன்னு ரெண்டு வார்த்தையாவது பேசி (த்தான்) மனு வாங்குவாரு .
இந்த இடத்துல மம்மிய கம்பேர் பண்ணிக்கோங்க.

சூரியனுக்கெல்லாம் ஆரும் மிஸ் கால் கொடுத்து கூப்பிடறதில்லை . வந்தாச்சேன்னு லேபரும் கொடுக்கிறதில்லை.சூரிய பலம் உள்ளவனும் அவ்ளதான்.ஊர்ல உள்ள நாறிப்போன குண்டிக்கெல்லாம் பக்கெட்ல தண்ணி எடுத்துக்கிட்டு அலைவான். இதனால என்னடா லாபம்னு நினைச்சுகூட பார்க்க மாட்டான்.
மறுபடி ஒய்.எஸ்ஸாரை எடுத்துக்கிட்டா அவருக்கு பேரே ரெண்டு ரூபா டாக்டர் தான்.

காலேஜ் படிக்கிறச்சயே வருமான வரி கட்டின பார்ட்டி .ஆனால் தொடர்ந்த அரசியல் ஈடுபாட்டால 2003 ல் என்னடா நிலைமைன்னா ஹைதராபாத் வீட்டை ப்ரமோஷனுக்கு கொடுத்து பணம்புரட்டலாமானு ஸ்கெட்ச் பண்ற நிலை .

இப்டி இருந்தா ஏன் வராது ராஜயோகம்? எம்.ஜி.ஆரெல்லாம் ப்ரொட்யூசர் கிட்டே இந்த கையால அட்வான்ஸ் வாங்கி அந்த கையால வாரி இறைச்சுருவாராம்.
சூரியன் தர்ர அடுத்த வரமோ சாபமோ என்னடான்னா ? தன்மானம் -சுயகவுரவம் -தன்னம்பிக்கை .இந்த 3 ம் ஒருத்தங்கிட்டே இல்லேன்னா அவன் ஜாதகத்துல சூரியன் பல்பு வாங்கியிருக்காருன்னு அடிச்சு சொல்லிரலாம்.

மம்மி முன்னே சாஷ்டாங்கமா விளுந்துகிடக்கிற பார்ட்டியெல்லாம் இந்த கேட்டகிரி தான் போல.அப்ப என்னாகும்? நோ தலைமை குணம் ,நோ தான குணம் .ஒன்லி கலெக்சன்,கமிஷன், ரோட்ல வச்சு தலையை எடுத்துருவம் etc., தான் .

(ஓகே பாஸ் ! என்னதான் இந்த தொடரோட 2 ஆவது அத்யாயத்தை 37ஆயிரத்து 387 பேர் படிச்சுட்டாய்ங்கன்னாலும் ஓவர் டோஸா கொடுத்துரக்கூடாதில்லையா? அடுத்த பதிவுல பார்ப்பம் . டவுட்டிருந்தா ஸ்க்ரீன் ஷாட்டை பாருங்க.மிடியல )

Top 10 pages