கிரகங்கள் நின்ற பலன்: 3-9 ல் ராகு கேதுக்கள்

imagesஅண்ணே வணக்கம்ணே !

கிரகங்கள் நின்ற பலன் – ங்கற இந்த தொடரோட இந்த தொடர் பிசினசுக்கு மங்களம் பாடிரலாம்னு இருக்கேன்.கண்ணாலங்கட்டிக்கிட்ட கதையாயிருச்சு. ஆனால் ஒன்னு நம்முது கடகலக்னமாச்சா நம்ம மைண்டு ஆறு மாதிரி. ஆத்துக்கு கரை இருக்கோனம். இல்லின்னா இம்சை தான்.

கரை புரண்டுதான் ஓடுவமே. என்ன போச்சு. இந்த தொடர்ல ராகு -கேதுக்கள் நின்ற பலனை எழுதியாகனும்.

ராகு கேதுக்களை பிரித்து பலன் சொல்வது ரொம்ப கஷ்டம்.ஏன்னா ஒருவருக்கொருவர் 7 ஆம் ராசியில இருக்கிறதால அவரை இவர்,இவரை அவர் பார்க்கிறதால பெரிய இம்சை.

ராகு,கேதுக்கள் 3,6,10,11 மற்றும் 4-12 ல் இருந்தால் தோஷம் இல்லைங்கறது விதி. இந்த விதிப்படி பார்த்தால் 3 ல் ராகு/கேது இருப்பது தோஷமில்லைதான். ஆனால் இவருக்கு சம சப்தகத்துல கேது/ராகு இருந்தால்?

3ங்கறது தைரியஸ்தானம். 9ங்கறது பித்ரு ஸ்தானம். 3 இளைய சகோதரத்தை காட்டும். 9 அப்பாவ காட்டும். இந்த 3 ஆமிடத்தில் சர்ப்பகிரகம் இருந்தால் இளைய சகோதரத்துக்கு நல்லதில்லை. ஏதோ ஒருவகையில் அவர்கள் ஜாதகரை விட ஒரு படி தாழ்ந்தே இருப்பார்கள். அல்லது ஜாதகரே கூட கடைசி சந்தானமா இருக்கலாம்.

அம்மாவுக்கு தலைப்பிள்ளை மேல ஆசை சாஸ்தியாம். ஏன்னா மலடிங்கற அபவாதம் வராம காத்த பிள்ளையாச்சே. இதே போல அப்பாவுக்கு கடேசி பிள்ளை மேல ஆசையாம். ஏன்னா அவரு கடேசியா விதைச்சது இல்லையா?

நம்ம கேசை எடுத்திங்கனா நாம 3 ஆவது. சின்ன அண்ணனுக்கும் நமக்கு ஏறக்குறைய 10 வருசம் இடைவெளி. அதனாலயோ என்னமோ அப்பாவுக்கு நம்ம மேல ஒரு இது.

(மைண்ட் வாய்ஸ் : முருகேசா ..நம்முது கடகலக்னம்னு ஆரம்பிக்கிறதை அப்ஜெக்ட் பண்ணி கமெண்ட் வந்தாச்சு. இன்னம் இதை விடல. இதே போல சொந்த கதை வேணாம்னும் கமெண்ட் வந்தாச்சு.ஆனாலும் நிறுத்தல. நீ எல்லாம் .. சான்ஸே இல்லை )

தலைப்புள்ள,கடேசி புள்ள செனேரியோல பாருங்க. 3 ல் ராகு/கேது இருந்தா ஜாதகர் கடைசி பிள்ளையா இருக்க வாய்ப்பிருக்கு. /கடைசி ஆண் வாரிசா இருக்கலாம்/ ஒரு வேளை தப்பி தவறி இவருக்கு அடுத்து ஆருனா பிறந்திருந்தாலும் அவிக ஏதோ ஒரு வகையில இன்ஃபிரியரா இருப்பாய்ங்க.

இப்ப என்ன ஆகும்? ஆட்டோமெட்டிக்கா அப்பா செல்லமா இருக்க வாய்ப்பு ஏற்படுது. அப்பா செல்லத்துனால+ தைரிய ஸ்தானத்துல உள்ள ராகு/கேதுவால ஜாதகர் ரெம்ப அக்ரெசிவா/அட்வெஞ்சரசா இருக்க வாய்ப்பிருக்கு. இருக்கா இல்லையா?

3ங்கறது பயணங்கள காட்டுமிடம். இங்கே ராகு/ கேதுன்னா ரொட்டீனுக்கு எதிரான பயணம். சொல்லிட்டு போறது ரொட்டீன்.சொல்லாம போறது ? டிக்கெட் வாங்கி போறது ரொட்டீன். டிக்கெட்டில்லாம போறது ? ப்ளான் பண்ணி போறது ரொட்டீன். திடீர்னு கிளம்பிர்ரது?

இந்த மாதிரி பயணங்கள் வெற்றியடைந்தால் ஜாதகருடைய மனோ தைரியம் மேலும் கூடும். தப்பித்தவறி எங்கயாச்சும் வாய விட்டா -எவனாச்சும் செவிட்ல அறைஞ்சா சவுண்ட் பாக்ஸ் அவுட்டு. 3 ஆமிடம் காதுகளை காட்டும் இடம். ராகு/கேது பாபகிரகங்கள். லேசான செவிட்டு தன்மை ஏற்படலாம்.

நாம ரொட்டீனுக்கு எதிர்பதமான பயணங்களை மெற்கொள்ளும் போது மத வழக்கம்/குலப்பழக்கம்லாம் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்க முடியாது இல்லையா? அதனால ஜாதகருக்கு எம்மதமும் சம்மதம்ங்கற மன நிலை ஏற்படலாம். சாதி,மதம் கடந்த நட்புகள் ஏற்படலாம்.

3ஆமிடம் சிறு பயணங்களை காட்டும் இடம். இதுல சக்ஸஸ் ஆனால் ஜாதகர் நீண்ட பயணங்களுக்கும் திட்டமிடுவாரா இல்லையா?

அதே சமயம் பையன் இப்படி சுத்தி வர்ரதை பார்த்தா அப்பாவுக்கு எப்படி இருக்கும்? அவரு திகில் பாண்டி கணக்கா நடுங்கி கிட்டே இருக்க வேண்டியதுதான்.

லைஃப்ல எப்பயாச்சும் ரிஸ்க் எடுத்தா பரவால்ல. எப்பவும் ரிஸ்க் எடுத்தா என்ன ஆகும்? அப்பா விரோதம், அப்பாவின் ஒத்துழையாமை. அப்பாவுக்கு பிறகு அவர் வழி சொத்து ,ஜாதகரோட முதலீடு,சேமிப்பு எல்லாத்தையும் ஜாதகர் தன் தகிரியம் காரணமா கையில எடுத்து விளையாடுவாரு.

பயணங்கள்ள ஒரு குன்ஸ் இருக்கு. த்ரில்லுக்காக ,செம தில்லா, கையில பணத்தோட போனா செலவழிச்சுட்டு தான் வரனும். இதுவே பொருள் தேட போனா கையில பணத்தோட வரலாம்.

ஜாதகர் ஒரு கட்டம் வரை சிறு பயணங்கள்,பிறகு நெடும்பயணங்கள் செய்து செய்து எல்லாத்தையும் இழந்த பிறகு பொருள் தேட பயணம் செய்வாரு.

கடந்த கால அனுபவங்கள் கை கொடுக்க, கடந்த பயணங்களிலான அறிமுகங்கள் தோள் கொடுக்க ஜாதி,மதம் கடந்த சர்க்கிள் ஏற்பட்டு பைசா பண்ண ஆரம்பிச்சுருவாரு. கிடைச்ச பைசாவையும் தில்லா முதலீடு பண்ணி ஒரு சூதாட்டமே ஆடுவாரு.

அந்த சமயம் கோசாரத்துலயும் ராகு-கேது கொஞ்சம் அனுகூலமா இருந்து -ராகு /கேது தசையோ அல்லது அவர்கள் நின்ற ராசியாதிபதி தசையோ நடந்தா ஒரு ஜாக்பாட்டே கியாரண்டி.

இதுல உள்ள லாஜிக் என்னன்னா ராகு-கேது உலக வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளை ,விருப்பங்களை கொடுப்பார். இதை உலகம் அவ்ள சீக்கிரம் அங்கீகரிக்காது.

விவேகானந்தர் சொன்னாப்ல ஒரே மேட்டரை 14 வருசம் சொன்னா ஒர்க் அவுட் ஆயிரும். இப்பம் 3-9 ல ராகு கேது இருந்தா என்ன நடக்கும்னு ஒரு பிக்சர் வந்ததா?

தூள் பண்ணுங்க. அடுத்த பதிவுல 4-10 காம்பினேஷனை பார்க்கலாம்.

 

லக்ன ராகு/கேது (அ) சப்தம ராகு/கேது

DSC_1267அண்ணே வணக்கம்ணே !
ராகு லக்னத்துல இருந்தாலும் 7 ல இருந்தாலும் ஒரே பலனானு கேப்பிக. ராகுவோ கேதுவோ லக்னத்துல இருந்தா ஏழை பார்ப்பாய்ங்க.. ஏழுல இருந்தா லக்னத்தை பார்ப்பாய்ங்க.. அதனாலதான் அல்லதுங்கற வார்த்தைய தலைப்புல வச்சேன்.
இதே போல லக்னம் அல்லது சப்தமத்துல  ராகு  இருந்தாலும் கேது இருந்தாலும் ஒரே பலனான்னு கேப்பிக. ஆமாம் ராசா ! இவர் அவரை பார்ப்பாரு,அவரை இவரு பார்ப்பாரு. சதா சர்வ காலம் ஒருத்தருக்கொருத்தர் சம சப்தகத்துல அதாவது 180 டிகிரியிலயே இருக்கிற பார்ட்டிங்க ரெண்டு பேரும். அதனாலத்தான் இந்த தலைப்பு. மேட்டருக்கு போகலாமா?
ராகுவுக்கும் கேதுவுக்கும் உள்ள வித்யாசத்தை கடந்த பதிவுல கோடி காட்டியிருக்கன். ராகு உசுருள்ள இடத்துல இருந்தா அந்த கேரக்டரை
1.சூதாடியாவோ -அல்லது வாழ்க்கையையே ஒரு சூதாட்டமா மாத்திக்கிறவராவோ
2.ஆல்கஹாலிக்காவோ
3.பேஷண்டாவோ
( பாடியில பாய்சன் அல்லது ஃபாரின் பாடிஸ் அல்லது ஒத்துப்போகாத மெடிசின் பெரிய புரட்சிய வெடிக்க செய்யும் )
4.உருப்படாத ஆசாமியாவோ
(அதாவது மக்கள் பார்வையில .ஜாதகர் என்னமோ சின்சியரா ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே தான் இருப்பாரு)
5.ஈசி மணிக்காக மெனக்கெடுபவராவோ மாத்திருவாரு. அல்லது அப்படி ஒரு தோற்றம் சமுதாயத்துல ஏற்பட்டுரும். இவரோட இன்டராக்ட் ஆகும் சனம் இப்படியாக்கொத்த கிராக்கிகளா இருப்பாய்ங்க
இதுவே உசுருள்ள இடத்துல  கேது இருந்தா அந்த பார்ட்டிய பிச்சைக்காரரா மாத்திருவாரு அல்லது சன்யாசி ஆக்கிருவாரு. (உ.ம் 9ஆம் பாவத்துல இருந்தா அப்பாவ  )
ஒரு ஜாதகத்துல ராகு கேது கெட்டாலே நாஸ்தி தான். இது பாடி,மைண்ட்,வே ஆஃப் திங்கிங், டெசிஷன் மேக்கிங், இன்டராக்சன், கொடுக்கல் வாங்கல் ,மோட் ஆஃப் லிவிங்  இப்படி எல்லாத்தையும் நாறடிச்சுரும்.
1-7 ல் ராகு கேது:
அம்மாவாசை இருட்டு . பவர் கட். கூலிங்கிளாஸு போட்டிருக்கிங்க. அப்போ பாதை எப்படி  தெரியும்? மச மசன்னு தெரியும். லக்னத்துலயோ அல்லது சப்தமத்துலயோ  ராகு/கேது இருந்தா இதான் நிலைமை. கயிறா? பாம்பா? டைலம்மாலயே இருப்பிங்க.
நெல்லவன்லாம் கெட்டவனா தெரீவான் ,கெட்டவன்லாம் நெல்லவனா தெரீவான். பாம்புன்னு பயந்து நடுங்குவிங்க.பின்னால வர்ரவன் அசால்ட்டா தாண்டி போயிருவான்.
இது மட்டுமா? இதே நிலைமை உங்க மனைவிக்கும் வந்துரும் (அவிக ஜாதகத்துல சர்ப்பதோஷமே இல்லின்னாலும் ஜஸ்ட் ஒன்னரை வருசத்துல இந்த ஸ்டேஜ் வந்துரும்)
பாம்பு கடிச்சுருச்சுன்னு வைங்க. செம மப்புல இருக்கிங்கன்னு வைங்க. அட விசத்தையே குடிச்சு வச்சுட்டிங்கனு வைங்க. அப்ப உங்க மைண்ட் எப்டில்லாம் வேலை செய்யும்?
பெரும் கொயப்பத்துல இருக்கும். பாம்பு தான் கடிச்சுதா? அல்லது பூச்சி பொட்டா? பாம்பே கடிச்சிருந்தாலும் அது விசமுள்ள பாம்பா? அல்லது டுபாகூரா?அடிச்ச சரக்கு செரியில்லையா? ஒரு வேளை டூப்ளிக்கேட்டா? இப்படி ஒரு கொயப்பத்துல இருக்கும் போது எல்லாமே மச மசன்னு ஆயிரும்.
இன்னொரு உதாரணத்தை சொல்றேன். நேத்திக்கு முகத்துல துண்டை போர்த்தி சனம் செம கும்மு கும்மிட்டாய்ங்க. பகல்ல அதே ஏரியாவுக்கு வர்ரிங்க. அப்ப உங்க மனசு எப்டி வேலை செய்யும்? பார்க்கிறவனை எல்லாம்  இவனா இவனான்னு சந்தேகப்பட்டுக்கிட்டுத்தானே இருக்கும்.
ஆக இதுவரை சொன்ன உதாரணங்களோட சாரம்:ஞா சக்தி இருக்காது, ஜட்ஜிங் சரியிருக்காது.சந்தேக புத்தி வந்துரும்.
இந்த 1-7 காம்பினேஷன்ல ராகு-கேது உள்ளவுகளை ஒரு பாம்போட ஒப்பிடலாம்.இவிகள பார்த்தா சனத்துக்கு பயம்-சனத்தை பார்த்தா இவிகளுக்கு பயம். அதனால தனிமைய விரும்புவாய்ங்க. ரெம்ப அலார்ட்டா இருப்பாய்ங்க. அந்த அதீத அலர்ட்னெஸ்ஸே  நல்ல வாய்ப்புகளை தவற விடவும் செய்யும்.
உணவு எடுத்ததும் இரை விழுங்கிய மலைப்பாம்பு கணக்கா மந்தமாயிருவிக. குறுக்கு வழியில சக்ஸஸ் ஆனவுக மேல ஒரு ஈர்ப்பு -ஈசி மணி மேல ஒரு கவர்ச்சி இருக்கும். இவிக ரோல் மாடல் ஆருன்னு இவிகளுக்கே தெரியாம கூட இருக்கும். ஒரு ஸ்டஃப் தங்களை கவர்ந்தால் உடனே அதை தமதாக்கிக்கொள்ளும் எண்ணம் இருக்கும்.
மனதளவிலேனும் சில தீய எண்ணங்கள் இருக்கும். (இதர கிரக அமைப்பும் பல்பு வாங்கியிருந்தா செயலாகவும் வாய்ப்புண்டு) இந்த எண்ணங்கள் காரணமாக இவற்றை யாராவது கண்டுபிடிச்சிருவாய்ங்களோங்கற பதைப்பு -உதைப்பு இருந்து கிட்டே இருக்கும். இவிக மைண்ட டிஸ்டர்பன்ஸுக்கு இதுவும் ஒரு காரணம்.
சரிங்ணா இதுக்கெல்லாம் பரிகாரம் இருக்கு. டோன்ட் ஒர்ரி. கிரகங்கள் நின்ற பலனை எப்பாடு பட்டாச்சும் முடிச்சுட்டு அப்பாறம் பரிகாரங்கள் கொடுத்துக்கிட்டே வரன்.
அடுத்த பதிவுக 2-8 ல் ராகு கேது பலனை பார்க்கலாம். உடுங்க ஜூட்டு.

கிரகங்கள் நின்ற பலன் : செவ்

AP sepecialஅண்ணே வணக்கம்ணே !
இன்னிக்கு நம்ம நண்பர் ஒருவர் மேசிவ் ஹார்ட் அட்டாக்ல போயிட்டாரு ( கிரானிக் ஷுகர் பேஷண்ட்).  நியூயார்க்ல உள்ள நண்பர் ஆப்பரேஷனுக்கு பிறவு சேஃப்.
இதுக்கு முன்னாடியே  நம்ம நண்பர் ஒருவருக்கு ஃபிஸ்டுலா ஆப்பரேஷன் நடந்ததை விலாவாரியா எழுதியிருந்தேன்.
நம்மோட ஆறாங்கிளாஸ் படிச்ச க்ளாஸ் மெட் ரயில்ல தலை கொடுத்துட்டான், இன்னொரு நண்பரோட தங்கை கொளுத்திக்கிட்டு செத்துருச்சு,சமீபத்துல அவரோட மனைவியும் இதே போல அட்டெம்ப்ட் பண்ணிருச்சு.
ஒரு க்ளையண்ட் அவரோட மனைவி கொளுத்திக்க இவர் போயி காப்பாத்த பார்த்து இவருக்கும் வெந்துருச்சு. மனைவி மட்டும் போய் சேர்ந்துட்டாய்ங்க.
ஆந்திராவ சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் காணாம போனார்.நாலாவது நாள் எரிந்த நிலையில் சடலமா கிடைச்சாரு. ரயில் டிக்கெட் செக்கரை பயணிகள் அடிச்சு கொன்ன கதை ஞா இருக்கும்னு நினைக்கிறேன்.
தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்துக்கிட்டிருந்தாய்ங்க.
கோதாவரி மாவட்டத்துல கெயில் பைப்லைன் வெடிச்சு சனம் செத்தது தெரியும். எத்தனையோ வீட்ல கியாஸ் சிலிண்டர் வெடிச்சு செத்துப்போயிர்ராய்ங்க.
ஆயில் டாங்கர்  லாரிகள் சாம்பலாகுது, அண்ணன் தம்பியை வெட்டிர்ரான். தம்பி அண்ணனை வெட்டிர்ரான். சமீபத்துல நண்பரோட மாப்பிள்ளை நின்னுக்கிட்டிருந்த ட்ராக்டர் மேல மோதி இறந்தார் (மப்பு)
மழை காலத்துல எலக்ட்ரிக்கல் லைன் அறுந்து விழுந்து குடிசைகள் தீப்பிடிக்குது.
மேற்படி சம்பவங்கள் எல்லாம் தனித்தனியா பார்க்கும் போது வேற வேறயா தான் தோனும்.ஆனால் மேட்டர் என்னடான்னா மேற்படி மேட்டருக்கெல்லாம் காரக(ண) ம் செவ் தான்.
இவரு லக்னாத் 3,6,10,11 ல இருந்தா தோஷமில்லேங்கறாய்ங்க. அப்படியும் இவரோட 4-7-8 பார்வைகள் விழற பாவத்துக்கு பல்பை கொடுத்துர்ராரு. சனியோட சேர்ந்தா கேட்கவே தேவையில்லை.
ராகு,கேதுவோட சேர்ந்தா ரத்தம் கெட்டுப்போகுது. சகோதர சகோதிரி அவதிபடறாய்ங்க.

 

( நம்ம கேஸ்ல ரெண்டு அண்ணங்க காலி -ஒருத்தர் ஹார்ட் அட்டாக்,இன்னொருத்தர் ப்ளட் கேன்சர் -நமக்கு ரத்தம் கெட்டு ஸ்கின் ப்ராப்ளம் வந்து க்யூர் ஆனது தெரியும்ல)
மத்த கிரகங்களுக்கு சொன்னாப்ல பாய்ண்ட் டுபாய்ண்ட் பலன் சொல்ல முடியுமா தெரியல.
செவ் 3,6,10,11 லருந்தா பரவால்லனு தான் சொல்லனும். (பார்வைகள் எங்கே விழுதுனு பார்த்துக்கங்க -பார்வை விழும் பாவங்கள் எப்படி எஃபெக்ட் ஆகும்னா செவ் அங்கே நின்னா என்ன எஃபெக்டோ அந்தளவுக்கு இல்லின்னாலும் பல்பு பல்புதேன்)
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் இருக்கு. அதை எல்லாம் சொல்ல இறங்கினா விடிஞ்சுரும்.
உங்க ஜாதகத்துல செவ் பல்பு வாங்கியிருக்காரா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஒரு குன்ஸ் தரேன்.
உங்களுக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள்  இருக்கா? (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி,பெண்கள் எனில் ஒழுங்கற்ற மாதவிலக்கு சக்கரம் )
செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் இருக்கா?(கோபம்,அடி தடி, எதிரிகளை உருவாக்கிக்கறது ) செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் இத்யாதி நடந்திருக்கா பார்த்துக்கோங்க
உங்க பதில் ஆமாம்னா ஜாதகத்துல செவ் எங்க வேணம்னா இருக்கட்டும். நீங்க விக்டிம் ஆஃப் மார்ஸ் (தோஷ ஜாதகர்) தட்ஸால்.
செவ்வாயோட இன்னின்ன கிரகம் சேர்ந்தா பரிகாரம்னு ஒரு விதி இருக்கு.  அந்த விதி உங்க ஜாதகத்துக்கு டாலி ஆனாலும் மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தான் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதுன்னு அருத்தம்.
இல்லின்னா அந்த கிரகம் என்.டி.ஏவுல வைகோ மாதிரி டம்மியா இருக்குன்னு அருத்தம்.
செவ் விஷயத்துல நிறைய மேட்டர் சொல்ல வேண்டியிருக்கு. மிச்சத்தை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.
உடுங்க ஜூட்டு.

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

sundarஅண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவை படிச்சுட்டு “பதிவுல அங்கங்கே மொக்கை போடலாம்.மொக்கையே பதிவாயிட்டா எப்படினு ” கட்டாயம் நினைச்சிருப்பிங்க.
டோன்ட் ஒர்ரி லேசா இன்னைக்கு ஒரு பாரா மொக்கை.பிறவு பதிவுக்கு போயிரலாம்.
“நடக்கும் என்பார் நடக்காது -நடக்காதென்பார் நடந்துவிடும்” “காடாறு மாசம் நாடாறு மாசம்”
“ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும்  மாறுகின்ற உன் மனம்”
இப்படி அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸுக்கு உதாரணமா நிறைய கோட் பண்ணலாம்.
சந்திரன்னாலே இந்த 3 பாய்ண்ட்டை கெட்டியா பிடிச்சுக்கனும். இவரு  எந்த பாவத்துல நின்னாலும் அந்த பாவ காரகத்வங்கள்ள இந்த 3 மேட்டரை பார்க்கலாம்.

இவரு எந்த கிரகத்தோட நின்னாலும் சரி (ராகு கேது தவிர) அந்த கிரகங்களோட காரகங்கள்ள இந்த 3 மேட்டரை பார்க்கலாம்.
எச்சரிக்கை: (புதியவர்களுக்கு மட்டும்)
நிர்வாண உண்மைகள்னு நம்முது ஒரு ப்ளாக் இருக்கு. அதை கடந்த 5 வருசத்துல 10 லட்சம் பேர் பார்த்திருக்காய்ங்க. நீங்க பார்க்க வேணாமா? மேலும் மோடிக்கு ஆன்லைன்ல ஒரு ஆப்புன்னு அதிரி புதிரியா ஒரு ஐட்டம் போட்டிருக்கன்.பார்த்துருங்க.
1.லக்ன சந்திரன்:
லக்னம்னா என்ன? ஜாதகரை காட்டற இடம் . இங்கே சந்திரன் நின்னா என்னாகும்? மேற்சொன்ன 3 விஷயமும் அவர் லைஃப்ல ஃபெவி குவிக் போட்டு ஒட்டினாப்ல கேம்ப்  அடிச்சுரும்.
இதுமட்டுமா? அவிக பாடியே சில நாள் பெருத்தும் சில நாள் சிறுத்தும் இருக்கும்னா பார்த்துக்கங்க. லக்னம் சந்திரனோட உச்ச ராசி -ஆட்சி வீடா இருந்தாலும் மாசத்துல 14 நாள் தான் சேஃப். சந்திரன் மனோ காரகன் ங்கறதால ப்ராக்டிக்காலிட்டி குறைச்சலாயிரும். இல்லாத பொல்லாத சென்டிமென்டெல்லாம் வந்துரும். திடீர்பயணம் ,கனவு,கற்பனை ,ஆட்டை தூக்கி மாட்ல போட்டு மாட்டை தூக்கி ஆட்ல போட்டு ஏக் தின் கா சுல்தான் கதை .
2.இரண்டில்:
ஃபைனான்ஸ் மேட்டர் பெண்டூலம் கணக்கா அந்த முனைக்கும் இந்த முனைக்கும் அலையும் . ஐ மீன் சில சமயம் உபரி வருமானம் -வீண் விரயம்,சில சமயம் அவசிய செலவுக்கே லாட்டரி. பேச்சும் சில சமயம் ஓஹோ , சில சமயம் ச்சே ச்சே. கொடுத்த வாக்கை நிறைவேத்தறது,பேச்சுக்கு மதிப்புல்லாம் கூட இதே கேட்டகிரிதான். அட குடும்பத்தோட இன்டராக்சனே இந்த கதிதான் பாஸூ.
3.மூன்றில்
இளைய சகோதர வாழ்வில் – அவர்களுக்கும் ஜாதகருக்கும் இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும். இசையில ஈடுபாடு முக்கியமா மெலடி.
4.நான்கில்
தாயார் வாழ்வில் -அவிகளுக்கும் ஜாதகருக்கும் இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் .  வீடு ? வாகனம்? இந்த மேட்டர்லயும் இதே லைன் அப் தான். மாணவர்கள் கல்வி விஷயத்துல கூட பேஞ்சா பேஞ்சு கெடுத்து காஞ்சா காஞ்சு கெடுத்தும்பாய்ங்களே அதை போல இருக்க வாய்ப்பிருக்கு.
5.ஐந்தில்
லக்ன சந்திரனுக்கு சொன்ன அதே பலன் நடக்க வாய்ப்பிருக்கு. (அதுல உள்ள உடல் மேட்டரை விட்டுருங்க). உபரியா புகழ் -இகழ், அதிர்ஷ்டம்-துரதிர்ஷ்டம்லாம் இரவு பகல் மாதிரி . குழந்தை விஷயம், ஜாதகருக்கும் வாரிசுகளுக்கும்  இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும்.
6.ஆறில்
மனம்,நுரையீரல் சிறு நீரகம் தொடர்பான வியாதி வரலாம். திடீர் திடீர்னு சத்ரு ரோக ருண உபாதைகள் வரும். வந்த மாதிரியே போகவும் செய்யலாம்.
7.ஏழில்
லக்ன சந்திரனை வச்சு ஜாதகருக்கு  நடக்கும்னு  சொன்ன அதே பலன் உபரியா வாழ்க்கை துணைக்கும் நடக்கலாமுங்கோ .
8.எட்டில்:
சைக்கியாட் ரிஸ்டை பார்க்கவேண்டி வரலாம், ஸ்புட்டம் டெஸ்ட் எடுக்க வேண்டி வரலாம். தனிமையில் தவிக்க நேரலாம், டெப்ரஷன். உணர்ச்சி வசப்பட்டு குண்டக்க மண்டக்க எதியனா செய்துட்டு செயிலுக்கு கூட போக வேண்டி வரலாம். ஸ்வப்ன ஸ்கலிதம், வெள்ளைப்படுதல்.
9.ஒன்பதில்:
அப்பா,சொத்து,முதலீடு,சேமிப்பு,தூர தேச வாசம்,தொடர்பு இத்யாதியில  அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும்.
10.பத்தில்
மக்களோட நேரடி தொடர்புக்கு வாய்ப்பிருக்கும் தொழில், வாட்டர்,லிக்விட்ஸ் தொடர்பான தொழில், நேவி ,ஃப்ளோட்டிங் பாப்புலேஷனை நம்பி செய்யும் தொழில்கள்  அல்லது அடிக்கடி வேலை மாற்றம்.அல்லது வேலை விஷயத்தில் ஆர்வம் கூடுதல் -குறைதல் (காரணமே இல்லாம)
11.பதினொன்றில்:
சகோதர வாழ்வில் – அவர்களுக்கும் ஜாதகருக்கும் இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும்.ஜாதகர் வருவாயில் நிறைய ஏற்ற இறக்கம் இருக்கும்.
12.பனிரெண்டில்
திங்கறது,தூங்கறது,கில்மாவுல ஒரு நிதானமற்ற தன்மை திடீர் விரக்தி,திடீர் ஆர்வம்லாம் இருக்கலாம். பாதத்துல நீர் கோர்க்கலாம், கெட்ட கெட்ட கனவா வரலாம் (மாசத்துல பாதி நாள் நெல்ல நெல்ல)
அடுத்த பதிவுல செவ்.

கிரகங்கள் நின்றபலன்: சூரியன்

sundar
எச்சரிக்கை: இவை பொதுப்பலன்களே. சூரியனின் பலம், இதர கிரகங்களின் சேர்க்கை ,பார்வை,லக்னாத் சுபரா ,பாவரா என்பதை பொருத்து பலன் தலைகீழாயும் மாறும்.
1.லக்ன சூரியன்:
சொட்டை விழலாம், ஒற்றைத்தலைவலி, சோடாபுட்டி கண்ணாடி,அடர் புருவம்,இன்சோம்னியா,ஜாய்ன்ட் பெயின்,பேக் பெயின், தலையில அடிபடறது,மலச்சிக்கல்
பி.கு: இவர் அப்படியே ஏழை பார்க்கிறதால இதே எஃபெக்ட் வாழ்க்கை துணைவிக்கும்.
2.இரண்டில் சூரியன்:
டாம்பீக செலவு ,லேசான மிரட்டலுடன் கூடிய வருவாய்,உள்ளதை உள்ளபடி பேசி வம்பை விலை கொடுத்து வாங்கறது, குடும்பத்தையும் ரிங் மாஸ்டர் கணக்கா மெயின்டெய்ன் பண்றது, சோடாபுட்டி கண்ணாடி,அடர் புருவம்,கண்ணருகே அடிபடுவது .
3.மூன்றில் சூரியன்:
தைரியம்,மலைகள்,கிராமாந்தர பிரதேசங்கள்,காடு சார்ந்த பகுதிகளில் அதிகம் பயணிக்க விரும்புதல்,இளைய சகோதரத்துக்கு ஹானி,காது வலி /மந்தம்.
4.நான்கில்:
தாய்வழி உறவு ஒருவருக்கு ஊர் தலைமை, தாய் மீது ப்ரஷர், குடும்ப தலைமை – நடுவில் ஓப்பன் ஏர் இருக்கும்படியான வீடு -அல்லது ஒரு கட்டத்தில் குந்த கூரையில்லாத நிலை – மலைகள்,கிராமாந்தர பிரதேசங்கள்,காடு சார்ந்த பகுதிகளில் வீடு அமைதல் – டூ வீலர் அல்லது மேக்சிமம் ஓப்பன் டாப் ஜீப் – உள்ளுணர்வுக்கு அதிகம் வேலை இருக்கும் கல்வி ,ஒரு மேற்பார்வையாளர்,குவாலிட்டி கண்ட் ரோலர் அல்லது எம்.பி.ஏ சார்ந்த படிப்புகள்
5.ஐந்தில்:
முன் கோபம்,கண்டிப்பு,மிரட்டல்,ஏக புத்திரன், பெயர் புகழுக்காக மெனக்கெடுவது,அவமானங்கள்,அபாத்திர தானம்
6.ஆறில்
சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி ( ஆனால் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் அல்லது சூரிய தசை ஆரம்பிக்கும் முன் சத்ரு,ரோக,ருண பீடைகள் இருக்கலாம்) தாய்மாமனுக்கு நல்லதில்லை.
7.ஏழில்:
லக்ன சூரியனுக்கு சொன்ன பலன் வாழ்க்கைதுணைக்கு நடக்கும். ஜாதகர் படுக்கையறையில் கூட ரிங் மாஸ்டர் கணக்கா பிஹேவ் பண்ணுவார். வது வர ஜாதகங்களில் சிக்கல் இருந்தால் பிரிவு தனிமை கூட ஏற்படலாம்.
8.எட்டில்:
ஸ்பைனல் கார்ட்ல பிரச்சினை வரலாம்,ஒரு கண் (ஆண்களுக்கானால் வலது ,பெண்களுக்கானால் இடது) பாதிக்கலாம்.எலும்பு முறிவு ,மண்டை உடைவது,அபராதம்,காவல்,சிறை ,உள்ளூர் தலைவர்களுடன் குடுமிப்பிடி.மலைகள்,கிராமாந்தர பிரதேசங்கள்,காடு சார்ந்த பகுதிகளில் சைட் வாங்கி/வீடு கட்டி பிறகு வில்லங்கம் வந்து அல்லாடுவது.
9.ஒன்பதில்:
பகலில் பிறந்திருந்தால் அப்பாவுக்கு நல்லது. மலைகள்,கிராமாந்தர பிரதேசங்கள்,காடு சார்ந்த பகுதிகளில் சொத்து , கிராம பெரியவர்களின் ஆதரவு,உள்ளூர் நிர்வாகத்தில் பங்கு .சிவ சேத்திர தரிசனம் ( நாட்டின்மையப்பகுதியில் உள்ள) ,லாங் டூர் அடிக்கிற தொழில். ஃபீல்ட் சூப்பர்வைசர் மாதிரி.
10.பத்தில்:
இதுவரை சொல்லப்பட்ட படிப்புகள் படித்து இதுவரை சொல்லப்பட்டதொழில்/உத்யோகம் வியாபாரம் செய்யலாம் (வியாபாரம்னா எஸ்காம் ,கோதுமை,மிளகு வியாபாரம்முள் உள்ள பொருட்கள் உ.ம் கடிகாரம், தராசு)
தொழிலகம் ஹார்ட் ஆஃப் தி டவுன்ல இருக்கலாம். மலைகள்,கிராமாந்தர பிரதேசங்கள்,காடு சார்ந்த பகுதிகளில் வேலை செய்ய வேண்டி வரலாம். புஸ்தவங்கள்ள தந்த வியாபாரம் கூட சொல்லியிருக்கு. வீரப்பன் கதை ஞா இருக்கில்லை?
11.பதினொன்றில்
மேற்சொன்ன தொழில்கள் லாபம் தரும். மூத்தசகோதரம் மேற்படி தொழில்களில் ஈடுபடலாம்.
12பனிரெண்டில்:
மேற்சொன்ன தொழில்களில் நஷ்ட ஏற்படலாம் . பாதத்தில் எலும்பு முறிவு ,தூக்கமின்மை,டாம்பீக ஆடம்பர செலவுகள்.
அறிவிப்புல சொன்னாப்லயே பாய்ண்ட் டு பாய்ண்ட் பலன் சொல்லிட்டன். பரிகாரம் அடுத்த பதிவுல. பாரேன் ஆருனா கிளம்பி வந்து என்னண்ணே உங்க பதிவை படிக்கிறதே நீங்க சொல்ற சொந்த கதை,உபகதைகளுக்காகத்தான்.இப்படி பொசுக்குனு முடிச்சுட்டிங்களேனு கேட்பாய்ங்க.

கிரகங்கள் நின்ற பலன்+பரிகாரம் :1

Fresh 3அண்ணே வணக்கம்ணே !
உசரனும் உசரனும்னு துடிச்சு மேல மேல போய்க்கிட்டே இருந்தா சிகரத்துக்கு போன பிறவு கம்பெனி இருக்காதுன்னு ரஜினி சொல்வாரு.
நாம ஒன்னும் சிகரத்துல இல்லை. ஏதோ அலெக்சா ரேங்க்ல 3 லட்சத்துக்குள்ள இருந்தம். இந்திய அளவுல 25 ஆயிரத்துக்குள்ள இருந்தம்.
இன்னைக்கு என்னடான்னா இந்தியாவுக்குள்ள நீ கணக்குலயே இல்லேடாங்குது அலெக்சா. சரி ஒழியட்டும் உலக அளவுல நம்ம நிலைமை என்னனு பார்த்தா 25 லட்சத்து சில்லறைங்குது.
என்ன ஆச்சு? சரி என்னமோ ஆச்சு.

ஆனால் இதுவும் நல்லதுக்குத்தான். ஏன்னா ஆளுங்கட்சி அரசியல் வாதி கணக்கா அஞ்சு வருசம் சுகவாசம் போரடிச்சுருச்சு.
நமக்கு ஜீவனாதிபதியே செவ். செவ்வாய்னா போட்டி -யுத்தம். அவரு எங்க இருக்காரு? நாலில். இது வித்யாஸ்தானம். செவ்வாய்னா தர்க்கம். நம்ம அன்ன தாதாவே லாஜிக் தான். ( நிறைய பேருக்கு புரியாதது லாஜிக் தான். )
உலக வாழ்க்கையில -இன்னைக்கிருக்கிற உலகத்தை புரிஞ்சுக்கனும்னா லாஜிக் தேவை . ஆனால்   நாம கனவு காண்றது லாஜிக் இல்லாத உலகம். ஏன்னா இந்த லாஜிக் தான் மன்சன ஆன்மீகத்துக்குள்ள போக விடமாட்டேங்குது.
கோவில்,குளம்,ஹோமம்,யாகம் இதெல்லாம் ஆன்மீகத்துல சேர்த்தியில்ல. நீங்க இன்னைக்கிருக்கிற  கோவிலுக்குல்லாம் போனா  போயிட்டு போன மாதிரியே தான் திரும்பி வரனும்.
நான் சொல்ற ஆன்மீகம் வேற நாம  நமக்குள்ளருந்து நகர்ந்து வழி விட்டு நம்ம வழியா கடவுளை பேச வைக்கனும்.
நமக்கு எங்கே கடுப்பாகுதுன்னா சனம் உலக வாழ்க்கையில கூட லாஜிக் பார்க்கமாட்டேங்குது. உலக வாழ்க்கையிலயே அல்லாடி கடேசி வரைக்கும் அங்காடி நாயா அலைஞ்சு முடிஞ்சு போகுது.
ஜோதிடம் லாஜிக்.ஜோதிட பலன் லாஜிக். பரிகாரம் ( நாம சொல்ற) லாஜிக். லாஜிக்கை பலமா எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டே வர்ர வரை சனம் ஆர்வமா பின் தொடருது.
லாஜிக் எல்லாம் வேலை செய்யாத  ஏரியாவுக்குள்ள நாம நுழைஞ்சா கழண்டுக்குது. நாம ஒன்னும் வள்ளலார் இல்லை. “கடை விரித்தேன் கொள்வாரில்லை”னு கிளம்பறதுக்கு. கடை திறப்புக்கு  நமீதாவ கூப்பிடற அளவுக்கு வசதி இல்லேன்னாலும் எந்த அளவுக்கு வேணம்னா இறங்குவம்ல.
எந்த அளவுக்கு இறங்கினாலும் நம்ம நோக்கம் ஒன்னுதான் உலகியல் வாழ்க்கையில உள்ள சிக்கல்களை தீர்க்கிறது – உலக வாழ்க்கை சிக்கல் இல்லாம இருந்தாதான் மன்சனுக்கு போரடிக்கும்.அடுத்து என்னனு ரோசிப்பான். ஆன்மீகம் பக்கம் எட்டிப்பார்ப்பான்.
இதனால உங்க உலக வாழ்க்கையில உள்ள சிக்கல்களுக்கு காரணமான கிரகங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்றதா முடிவு பண்ணிட்டன்.
இதெல்லாம் ஜஸ்ட் 12 பதிவுல முடிஞ்சுரப்போகுது. இந்த 12 பதிவும் தூள் பண்ணனும். சகட்டு மேனிக்கு சமூக வலைதளங்கள்ள ஷேர் பண்ணுங்க.

ஆளில்லாத கடையில டீ ஆத்த நான் தயாரா இல்லை.
கடவுள் புண்ணியத்துல நம்ம பொளப்புக்கு எந்த பிரச்சினையுமில்லை. ஒளுங்கு மருவாதியா பொளப்பை பார்த்துக்கிட்டு ஃபேஸ்புக்ல டைம் பாஸ் பண்ணிக்குவன்.
வசதி எப்படி?

4.மாத்ரு பாவாதிபதி நின்ற பலன்

4-1 லக்னத்தில் நின்றால்:
தாயுடன் பிணைப்பு. ,தாய் வழி உறவால் உதவி. சொந்த வீடு,வாகனம் அமையும். உயர் கல்வி சாத்தியமாகும்.

4-2 இரண்டில் நின்றால்:
தாய் வழி சொத்து, தாய் வழி உறவின் ஆதரவு, கெட்ட நேரத்தில் தாய்வழி சொத்தை விற்று செலவழித்துவிட்டாலும் பின் சிறுக சிறுக சேர்த்து சொத்து வாங்கலாம். வாகன யோகம், தெரிந்ததை எதிராளிக்கு எளிமையுடன் சொல்லி தரும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். மென்மையான உணர்வுகள் இருந்தாலும் பொருளாதார விஷயங்களிலும் கவனம்.
4-3 மூன்றில் நின்றால்:
தாய்க்கு நல்லதில்லை, வீடு மாற்றம்,ஊர்மாற்றம்,வேலை மாற்றம் ஏற்படலாம். வாகனத்தில் சுற்றி அலையும் வேலை அமையலாம், வழக்கறிஞர், பட்டிமன்ற பேச்சாளர் ஆக வாய்ப்பு. பேச்சு அக்ரசிவா,அட்வென்சரஸா இருக்கலாம். இதயபடபடப்பு இருக்கலாம்.
4-4 நான்கில் நின்றால்:
தாய்க்கு நல்லது.ஆனால் தந்தையின் ரோலையும் ப்ளே பண்ண வேண்டி வரலாம். சொந்த வீடு,வீட்டுமனைக்கு வாய்ப்பு.சொந்தவாகனம் உண்டு. உயர்கல்விக்கு வாய்ப்பு. ஹவுசிங்,ஆட்டோமொபைல்,இன்டிரியர்ல கான்சன்ட் ரேட் பண்றது பெஸ்ட்.
4-5 ஐந்தில் நின்றால்:
கடந்த பிறவியிலான தாய் வயிற்றிலேயே மீண்டும் பிறந்திருக்க வாய்ப்பு. பூர்விக சொத்தாக /பரிசு, பாராட்டாக வீடு ,வாகனம் அமையலாம். பெரிதாக அகடமிக் எஜுகேஷன் இல்லாமலே உள்ளுணர்வு காரணமாகவே விஷய ஞானம்,புகழ் கிடைக்கலாம்.
4-6 ஆறில் நின்றால்:
தாய்க்கு நோய் அ தாயுடன் கருத்து வேறுபாடு அ அவருக்கு கடன். வீட்டுக்கடன்,வாகனக்கடன். வீடு ,வாகன விஷயங்களில் வில்லங்கம். படிப்பில் அடித்து பிடித்து முன்னேறுவது. ரீ க்ரெக்சன்,ரீ டோட்டலிங் தேவைப்படலாம். இதய நோய் வர வாய்ப்பு.
4-7 ஏழில் நின்றால்:
தாயுடன் நல்ல தோழமை. மனைவி வழியில் சொந்த வீடு,வாகனம்.கம்பைன்ட் ஸ்டடி,கூட்டு ஆராய்ச்சியால் பேர் புகழ். தாய் வழி உறவில் மனைவி அமையலாம். தாய்க்கு பின் தாரம் என்பதற்கு பதில் தாய்க்கு பின் தாயே என்ற பார்த்திபன் சொல் நடைமுறையில் தெரியலாம்.
4-8 எட்டில் நின்றால்:
தாய்க்கு கண்டம்/தாயுடன் பிரிவு. அவருக்கு கடும் உடல் உழைப்பு கட்டாயமாகலாம். ஸ்தான நாசம். வீடு வாசல் இழக்க நேரலாம். விபத்துக்கு அ வாகன திருட்டுக்கு வாய்ப்பு. கல்வியில் ஓரிரு கல்வியாண்டு வீணாதல் அல்லது பாதியில் நின்று போதல்.
4-9 ஒன்பதில் நின்றால்:
தாயே தந்தையின் கடமைகளை ஆற்ற நேரலாம்.அல்லது தந்தை தாயுமானவர் கணக்காக தாயின் கடமைகளை ஆற்ற நேரலாம்.பூர்விக சொத்தாய் வீடு. தந்தை/பெரிய மனிதர்கள் தரும் பரிசாய் வாகன யோகம். ஜாதகரின் கல்வி/வித்தைக்கு தூரதேசங்களில் இருந்து பரிசு பாராட்டு. தூர தேசங்களுக்கு போய் கல்வி பயிலும் வாய்ப்பு.
4-10 பத்தில் நின்றால்:
இத்தோடு பத்துக்குடையவரும் 2 ல் நின்றால் நிட்சேப யோகம். (புதையல் யோகம்) அதுக்குன்னு கடப்பாறைய தூக்கிட்டு கிளம்பிராதிங்க. உங்கள் ஞானம் /கல்வி அறிவு உங்க பேச்சு எழுத்து திறமையால் புதையல் எடுத்த கணக்காய் பயன் தரும். தொழிலில் தாயின் வழிகாட்டல் ஒத்துழைப்பு கிட்டலாம்.ஹவுசிங்,ஆட்டோமொபைல்,இன்டிரியர் போன்ற தொழில் அமையலாம். தாய்/தாய் வழி உறவுகளின் பரிசு பாராட்டாய் வாகனம் அமையலாம். தொடர்ந்து படிச்சிட்டே…… இருப்பிங்க.
4-11 பதினொன்றால்:
தாயோடு -தாய் வயது/சாயல் உள்ள மற்றொரு பெண்ணின் பாசமும் கிட்டும். இரண்டு வீடுகள்/இரண்டு தலைவாசல் கொண்ட வீடு/இரண்டடுக்கு மாடி வீடு அமையலாம்.வாகனமும் ஒன்றுக்கு இரண்டாய் அமையலாம்.டபுள் டிகிரி வாங்கலாம். அக்காவே தாய் பாசத்தை அள்ளி வழங்கலாம். அம்மா கூட வெளிய போனா அக்காவான்னு சனம் கேட்கலாம்.
4-12 பனிரண்டில் நின்றால்.
தாய் இருந்தாலும் இல்லைங்கற நிலை இருக்கலாம்.(நோயாளி-வெளியூர்) அல்லது தாயால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்க வேண்டி வரலாம், வாகனம் ,கல்வி தொடர்பான செலவுகள் எகிறும். இதயம் பிரச்சினை கொடுக்கலாம்.