காசு பணம் துட்டு மணி மணி :1

vishal

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும்-கிரக பலனும்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு காலமாற்றத்தால ஒவ்வொரு பாவ காரகமும் எப்படி தங்கள் பலனை மாற்றித்தருதுன்னு சொல்லிக்கிட்டு வந்தன். கடேசியா 9 ஆம் பாவத்தை பத்தி விலாவாரியா சொன்னன். இந்த பாவ காரக பலனை எப்படி “கண்டிஷனிங்” பண்றதுன்னு இந்த பதிவுல சொல்லியிருக்கனும்.ஆனால் என்னமோ திடீர்னு எல்லாமே ப்ளர்ரா -தேங்கி கிடக்கறாப்ல ஒரு ஃபீல் . அட முக நூலே ஈயடிக்குதுன்னா பார்த்துக்கங்களேன்.

வழக்கமா நாம கேட்காமயே பண மழைய கொட்டற வாசக மகாசனங்கள் மச மசன்னு இருக்கிறாய்ங்க. ஒரு தாட்டி தெலுங்குல அம்மன் சத நாமாவளி பப்ளிஷ் பண்ணிக்கிட்டிருக்கம்ன்னு ஸ்டேட்டஸ் போட்டம். செம ரெஸ்பான்ஸ். ஜோதிடம் 360 முதல் பதிப்பு /ரெண்டாம் பதிப்பிலான 4 நூல்களுக்கான முன் பதிவு இப்படி எல்லாமே செம ரெஸ்பான்ஸ்.

யப்பா.. இந்த கட்டண ஆலோசனை ஆவிசுக்கே ஆப்பு வைக்குது . கட்டிப்போட்ட மாதிரி இருக்கு .ஆகவே இங்கிலீஷ்ல ஒரு வெப்சைட்டை வச்சுக்கிட்டு அதன் மூலமா ஆட் சென்ஸ் தேத்தி இதுக்கு மங்களம் பாடிரலாம்னு இருக்கன்.2015 டிசம்பர் 31 க்குள்ள அது லாஞ்ச் ஆகி ,பிக் அப் ஆகி ,ஆட்சென்ஸுக்கும் குவாலிஃபை ஆயிரனும். பிறவு அல்லாருக்கும் இலவச ஆலோசனையை கொட்டோ கொட்டுன்னு கொட்டறேன் – நான் ஃப்ரீ ஆகி -ஃப்ரீ கன்சல்ட்டன்சி தர மேற்படி ப்ராஜெக்டுக்கு கொஞ்சம் போல பைசாவை நன் கொடையா கொடுங்கன்னு அறிவிச்சிருந்தம்.

மொத வாரம் சூப்பர் ரெஸ்பான்ஸ். எல்லாமே குப்த தானம் தான்.பேரை சொல்லக்கூடாது,ஊரை சொல்லக்கூடாதுன்னு .செரி வெப் ஹோஸ்டிங்குக்கான பைசா தேறிருச்சு . இனியும் காசு வரும் போல .ஒரு டொமைனை வாங்கி -ட்ரான்ஸ்லேட்டரை அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டு வேலைய துவக்கிரவேண்டியதுதான்னு நினைச்சம் .

மேலே மேலே கட்டண ஆலோசனைக்கு கூட்டம் அம்முதே கண்டி . நான் சொல்லும் மேற்படி ப்ராஜக்டுக்கு பைசா நஹி .செரி சனம் ரெம்ப கஷ்டத்துல இருக்காய்ங்க. மொதல்ல அவியளுக்கு பைசா புரள பரிகாரங்களை அள்ளி விடுவம். பரிகாரம் ஒர்க் அவுட் ஆகி அவியளுக்கு பைசா புரண்டா நன்றிக்கடனா நன் கொடைய அள்ளி விடுவாங்கன்னு டிசைட் ஆய்ட்டன்.

ஆகவே கால மாற்றம் -கிரக பலன் தொடர் தற்காலிகமா நிறுத்தப்பட்டு காசு பணம் துட்டு மணி மணி தொடரை ஆரம்பிக்கிறேன்.பதிவுக்கு போயிரலாமா? உடுங்க ஜூட்டு .

தடைகளும் காரணங்களும்:

பைசா புரளாம – சிங்கியடிக்க 9 க்ரூப்ஸ் ஆஃப் ரீசன்ஸ் இருக்கு. அதுகளை டீட்டெய்லா பார்க்கலாம்.கூடவே பரிகாரங்களும். மொத க்ரூப்ல வர்ர காரணகள் கீழே
1.நம்மை மாதிரி சகட்டு மேனிக்கு கொலிக்ஸை எல்லாம் விமர்சனம் பண்ணி கொஞ்சம்கொஞ்சமா ஹிட்லிஸ்டுக்கு போயிர்ரது .
2.சதா சர்வகாலம் மம்மி “எனது அரசு -எனது அரசு”ங்கறாப்ல நான் -நான் -நான் என்று பேசி தனிமைப்பட்டு போறது .
3.பைசா மேட்டர்லாம் கறாரா இருக்கனும்பான்னுட்டு தேவையில்லாம வாயை விட்டு எதிராளி ஈகோவை காயப்படுத்தி ரிலேஷனேகட் ஆயிர்ரது .
4.சக்திக்கு மீறிய தானம் -அபாத்திர தானம்
5.பெருமைக்கு பன்னி மேச்சு தேவையில்லாத கமிட்மென்ட்ல சிக்கறது
6.மலைப்பகுதி ,ரிமோட் வில்லேஜஸ், புதுசா டெவலப் ஆயிட்டிருக்கிற காலனி,ஹார்ட் ஆஃப் தி டவுன்ல தொழில் துவங்கி பல்ப் வாங்கிர்ரது .
7.மேற்படி பகுதிகளில் வாழும் மக்கள் கிட்டே கொடுக்கல் வாங்கல் வச்சுக்கிட்டு மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம அவதிப்படறது .
8.பகல்ல பிறந்தவரானால் அப்பா,அப்பாவழி உறவுகளால் ,அப்பாவின் தொழிலை தொடர்ந்து செய்வதால்/செய்வதில் தடைகள் சிக்கல்கள்.
9.ஓவர் கான்ஃபிடன்ஸுல அகலக்கால் வச்சு மாட்டிக்கிறது
10.விளம்பரத்துறை -மேற்பார்வையாளர் -சூப்பர் வைசர் -குவாலிட்டி கண்ட் ரோல் போன்ற தொழில்/உத்யோகத்தில் சிக்கி அவதி
11.திடீர்னு எலும்பு முறிவு ஏற்பட்டு /முதுகுவலி ஏற்பட்டு லீவு அதனால பொருளாதார நெருக்கடி
12.தூக்கமின்மை காரணமா பகல்ல தூங்கி ராத்திரியில ஒர்ரி பண்ணிக்கிட்டு மறுபடி பகல்ல தூங்கி -இப்படி ஒரு விஷ சுழல்ல மாட்டிக்கிறது .
13.தினப்பத்திரிக்கைகள்ல வேலை /எந்த பத்திரிக்கையா இருந்தாலும் நிருபர் தொழில்ல இருந்துக்கிட்டு மணி மேட்டர்ல தேக்கம்.
14.பஞ்சாயத்து,ஒன்றியம்,நகராட்சி ,மா நகராட்சி துறைகளில் வேலை /ஒப்பந்த தொழில்ல மாட்டி விழிக்கிறது இதனால் பொருளாதார நெருக்கடி

மேலே சொன்ன காரணங்கள் தான் உங்கள் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்னா உங்களுக்கு பரிகாரங்கள் நிச்சயம் தேவை . இந்த பரிகாரங்கள் எந்தளவுக்கு உதவும்னா இருக்கிற கமிட்மென்ட்ஸை ஃபுல் ஃபில் பண்ணிக்கிட்டு லேசா தம் ஆத்திக்கற வரை தான்.அதுக்குள்ள நீங்க ஃபீல்டை மாத்திக்கனும்.ஓகேவா.

அடுத்த பதிவுல பரிகாரங்களை தருகிறேன்.

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 5

Feel 5

அண்ணே வணக்கம்ணே !
தமிழ்ல கோனார் உரை,இங்கிலீஷுன்னா பூன் கைட். இப்படித்தான் காலம் போகுது. நான் எல்லாம் நாளன்னைக்கு எக்ஸாம்னா இன்னைக்கு டெக்ஸ்ட் புக் எடுத்து வச்சுக்கிட்டு புரட்டிக்கிட்டு பாய்ண்ட்ஸ் நோட் டவுன் பண்ணிக்கிட்டிருப்பன். அப்படியும் பிகாம்ல ஆடிட்டிங்குல சுகுரா 35 மார்க் அடிச்சம்ல.
கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிற சமாசாரத்தை நம்ம ஸ்டைல்ல இல்லாம இன்னைய ஜெனரேஷன் ஸ்டைல்ல கொடுக்கனும்னு பார்க்கிறேன். என்னதான் டைல்யூட் பண்ணாலும் ஒன்னும் பேரல.
ஒரு கிரகம் நம்ம ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருக்கா இல்லையா? அது  நமக்கு அனுகூலமா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும்னா அதுக்கு மண்டை மசுரெல்லாம் உதிரனும்.
கிரகங்களை பொருத்து வாழ்க்கைன்னா -வாழ்க்கைய வச்சு கிரக ஸ்திதிய கெஸ் பண்ணலாம் தானே. இந்த அடிப்படையில தான்  இந்த சீரியலையே ஆரம்பிச்சன்.
ச்சொம்மா லக்னம் அதுவா இருந்து – குறிப்பிட்ட கிரகம் நீசமா இருந்து வக்ரமா இருந்துன்னு அடிச்சு விடறவுக இன்னமும் இருக்காய்ங்க
( நான் கூட ஆன் லைன் ஜோதிட ஆலோசனைக்கு பலன் சொல்றச்ச இப்படித்தான் சொல்றேன்.கிரெடியபிலிட்டிக்காக)
ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல ஸ்ட் ராங்கா வீக்கானு அனுபவத்துல பட்டு பட்டுன்னு சொல்லிரலாம். இதெல்லாம் படுபயங்கர தொழில் ரகசியம்.ஆனாலும் அவா மாதிரி ஒளிச்சு வைக்க நமக்கு மனசு இடம் கொடுக்கல. அதனாலதேன் அள்ளி விட்டுக்கிட்டிருக்கன். இதை படிக்கிற நீங்களும் பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெறும் படியா இந்த பதிவுகளை ஷேர் பண்ணி பிரபலப்படுத்துங்க.  மொக்கை போதும் மேட்டருக்கு வரேன்.

சூரியன்:
உங்களுக்கு ஒத்தை தலைவலி மண்டையில அடிபடறது,கை ,கால் வலி ,பேக் பெய்ன் அப்பாவோட விரோதம் இப்படி நிறைய இருக்கா?
வேற வழியில்லை. லீடர்ஷிப்பை விட்டு விலகிருங்க. ஈகோ வேண்டவே வேண்டாம். அப்பா சொத்து ? வேற வழியில்லின்னா டெம்ப்ரரியா இருங்க. தீப்பிடிச்ச வீட்ல இருந்து எவ்ள சீக்கிரம் எஸ் ஆவிகளோ அவ்ள சீக்கிரம் எஸ்ஸாயிருங்க. ஒன்னாம் நெம்பர்,ஒன்னாம் தேதி , கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் நட்சத்திரங்களை அவாய்ட் பண்ணுங்க. ஆரஞ்சு நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க.

சந்திரன்:

உங்களுக்கு மனம்,நுரையீரல்,சிறு நீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கா? திடீர் பயணம் ,ஸ்பாட் டெசிஷனுன்னு பல்பு வாங்கறிங்களா?

ஃப்ளோட்டிங் பாப்புலேஷனை நம்பியிருக்கிற தொழில்,வியாபாரத்துலருந்து விலகிருங்க. உ.ம் வார சந்தை,வெஜ் மார்க்கெட்,பஸ் ஸ்டாண்ட். ஃப்ரன்ட் டெஸ்க் ஜாப்ல இருந்தா அம்பேல் ஆயிருங்க. தண்ணீர் தொடர்பானது ,நேவி சம்பந்தப்பட்ட வேலைல்லாம் வேலைக்காகாது .கழண்டுக்கங்க.
2 ஆம் நெம்பர் ,2 ஆம் தேதி, ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரங்களை அவாய்ட் பண்ணுங்க.  வெள்ளை நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க.

செவ்வாய்:

உங்களுக்கு ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதி இருக்கா? ஏற்கெனவே கட்டி,கொப்புளம்,காமாலை இப்படி பாதிக்கப்பட்டிருக்கிங்களா? மாடு முட்டியிருக்கா? உசரத்துலருந்து விழுந்திருக்கிங்களா? அண்ணன் தம்பியோட ஒத்துபோகலியா?

போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,மின் துறை,ரியல் எஸ்டேட் ஃபீல்டுல இருந்தா உடனே கழண்டுக்கங்க. ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க ரத்த விருத்தி,ரத்த சுத்தி ரெம்ப முக்கியம்.  9 ஆம் நெம்பர், 9ஆம் தேதி , மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களை அவாய்ட் பண்ணுங்க.

பி.கு: உங்க நிலைமைய பொருத்து இதர கிரகங்கள் பலமா இருக்கா பல்பு வாங்கியிருக்கா அதுக்கு என்ன பரிகாரம்னு அடுத்த பதிவுல சொல்றேன். இந்த மாதிரி மேட்டர்லாம் கொத்தா-ஹோல் சேலா எழுதி நாலு புக்ஸ் வெளியிட்டிருக்கன்.ஆர்வமுள்ளவர்கள் இங்கே அழுத்தி வாங்கி படிங்க ப்ளீஸ்.

குரு காதல் : பரிகாரங்கள் (18 வகை காதல்)

Ramakrsihna

அண்ணே வணக்கம்னே !
காதல்ல 18 வகை இருக்கு. 9கிரகங்கள் பாசிட்டிவா இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா 9 , நெகட்டிவா இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா 9 ஆக மொத்தம் 18 வகை காதல் இருக்குன்னு ஆரம்பிச்சி ஒவ்வொரு வித காதலா விவரிச்ச பிறவு நெகட்டிவ் இம்பாக்டுக்கு பரிகாரங்களும் தந்துக்கிட்டிருக்கம்.

இந்த சீரிஸ்ல குரு காதல் பத்தி சொல்லிட்டு வந்தோம். இன்னைக்கு குருவோட நெகட்டிவ் இன்ஃப்ளுயன்ஸ் உருவான காதல்,கல்யாண வாழ்க்கையில ஏற்படக்கூடிய சிக்கல்களை குறைக்க பரிகாரங்களை தந்துர்ரன். நாளைக்கு சனி காதல் ஓகேவா?

பாய்ண்ட் டு பாய்ண்ட் கட்டுரை கணக்கா எழுதிட்டு போயிட்டாலும் ஆரும் கேட்க போறதில்லை.ஆனால் மனசாட்சின்னு ஒன்னிருக்கில்லை.அது கேட்க மாட்டேங்குது. அதனால நாலு பேருக்கு உபயோகமா சில தகவல்களை தெளிச்சுட்டே போகலாம்னு ஒரு ரோசனை.

நண்பர் ஒருத்தருக்கு பைல்ஸ் கம்ப்ளெயின்ட் வந்தது . ட்ரீட்மென்ட் எடுத்தம் ஓகே. மறுபடி ரிப்பீட் ஆச்சு. மறுபடி ட்ரீட்மென்ட் எடுத்தம் .. ஓகே.
கடந்த மாசம் மறுபடி ரிப்பீட் ஆச்சு . இப்பம் என்னடான்னா ஃபிஸ்டுலான்னு வேற பேரை சொல்றாய்ங்க. அதுக்கு ஒரு ஆப்பரேஷன் வேற.
வயசு 50+ .பேச்சிலர். இதுக்கு மிந்தியாச்சும் நாம “உண்டகட்டி” பார்ட்டி. பிரச்சினைன்னா போய் இலை எடுத்து பெருக்கி சுத்தப்படுத்திட்டு வருவம். இப்பம் ஆருமில்லை.
பார்ட்டி நமக்கு 2004 லருந்து பளக்கம். வேண்டாம்யா உன் வே ஆஃப் லைஃபே தப்பு ஷுகர் வந்துரும்னு சொன்னம். லைஃப் ஸ்டைலை மாத்தலை வந்துருச்சு. இப்பமும் பெட்டர் லேட் தேன் நெவர் லைஃப் ஸ்டைல் மாத்து இல்லாட்டி ஆசனத்துல கட்டி வந்துரும்னு சொன்னம். மாத்தலை வந்துருச்சு.

இதைபடிக்கிற உங்களுக்கு நீண்ட காலமா மலச்சிக்கல் இருக்கா? காராசாரமா சாப்பிட்டாத்தான் இறங்குதா? சிக்கன்,மட்டனுன்னு கலந்தடிச்சாத்தான் தின்ன மாதிரியே இருக்கா? பேக்கரி, சைனீஸ், ஃபாஸ்ட் ஃபுட், பிரியாணி,பரோட்டான்னு தேடி தேடி திங்கற பார்ட்டியா?

ஒரு நாளைக்கு ஏழெட்டு டீ/காஃபி , நாலஞ்சு பாக்கெட் சிகரட்டு இருந்தா தான் வண்டி ஓடுமா? உட்கார்ந்தே வேலை பார்க்கிற பார்ட்டியா? உடல் ரீதியான உழைப்பே இல்லாத வாழ்க்கையா? இங்கே அழுத்தி இந்த பதிவை ஒரு தாட்டி படிச்சுருங்க.கையோட கையா இங்கே அழுத்தி இந்த வீடியோவையும் ஒரு தடவை பார்த்துருங்க.

ஆக்சுவலா இது அடுத்த அத்யாயத்துல சனி காதல்ல வரவேண்டிய மேட்டரு. ஒரு சைக்கலாஜிக்கல் ரிலீஃபுக்காக இன்னைக்கே ரிலீஸ் பண்ணிட்டம்.
இப்பம் குரு காதலோட நெகட்டிவ் டெவலப்மென்ட்சுக்கு பரிகாரங்களை பார்ப்போம்:

காதலை வெளிபட்டுத்தறதுலயே சிக்கலா? காதல் ஓகே..அது கண்ணாலத்துல முடியறதுல சிக்கலா? கண்ணாலம் ஆயிருச்சு பொருளாதார ரீதியில சிக்கலா? அட அதுவும் ஓகே வாரிசில்லையா? வாரிசும் இருக்கு ஆண் வாரிசு இல்லையா?
அட அதெல்லாம் ஆச்சுங்க.. இப்பம் நெஞ்சுவலி -ஏற்கெனவே ஒரு பைபாஸ் வேற ஆச்சுங்கறிங்களா? அப்ப உங்களுக்குத்தேன் இந்த பரிகாரங்கள்:
________________________________________________________________________________
துணுக்கு:
நேத்திக்கி நம்ம சைட்டுக்கு கிடைச்ச ஹிட்ஸ் ஜீரோ .மேட்டர் இன்னாடான்னா ஹவுஸ் ஃபுல். அதாவது நம்ம சைட்டை மாசத்துக்கு இத்தீனி பேருதான் பார்க்கமுடியும்னு ஒரு பேண்ட் விட்த் இருக்கும்ல அதை ரெண்டு நாள் மிந்தியே பீட் பண்ணிட்டம், அதனால இன்னைக்கு மதியம் 12 வரை சைட் ஓப்பன் ஆகல்லை.
________________________________________________________________________________________________

1.கோவில்,குளம்,யாகம்,வேதம்,புராணம் இத்யாதி என்விரான்மென்டை சுத்தமா அவாய்ட் பண்ணிருங்க
2.மஞ்சள் நிற ஆடை அணிகலனை அதிகம் உபயோகிங்க.
3.தங்கத்தை இடது கையால கூட தொடாதிங்க.
4.சேமிப்பு எஃப்.டியா இருந்தா அதை உடைச்சு எஸ்.பி அக்கவுண்டுக்கு மாத்திருங்க
5.பெரிய தொகை அல்லது ஏடிஎம் பாக்கெட்ல வச்சுக்காதிங்க.
6.உங்க எலிமென்டரி ஸ்கூல் வாத்யாரு /டீச்சர் -உங்களுக்கு எதாவது வித்தைய கத்துக்குடுத்த நபர் ஆருனா இருந்தா அவிகளை சந்திச்சு சால்வை, அது இது போட்டு அவிகளை குஜிலியாக்குங்க
7.பிராமண நண்பர்கள் டச் ல இருந்தா அவிகளுக்கு எதாச்சும் வெஜிட்டேரியன் ரெஸ்டாரன்ட்ல ப்ரேக் ஃபாஸ்ட் அல்லது ஈவினிங் டிஃபன் ஸ்பான்சர் பண்ணுங்க( உங்க வசதியை பொருத்து மாசத்துல 4,2 அல்லது குறைஞ்ச பட்சம் ஒரு வியாழக்கிழமையாச்சும் செய்ங்க)
8.ராஜரிஷிகளோடவாழ்க்கை வரலாற்றை படிங்க. அதாவது தம்பதி சமேதரா இருந்து ஆன்மீக சாதனைகளில் வெற்றி பெற்றவர்கள் .திரைப்படமா இருந்தா/கிடைச்சா டிவிடி வாங்கி பாருங்க.
9. நீதிமன்ற நடவடிக்கைகள், வங்கித்துறை செயல்பாடுகள் பற்றிய புத்தகங்கள் படிங்க அல்லது இந்த துறை தொடர்பான நண்பர்களை சந்தித்து விஷய சேகரம் பண்ண ட்ரை பண்ணுங்க.
10.உங்களுக்கு தேவையோ இல்லையோ ஆர்வம் இருக்கோ இல்லையோ இந்திய அரசியல் வரலாற்றை தெரிஞ்சுக்கங்க
11.முடிஞ்சா சமஸ்கிருதம் இல்லின்னா இந்தி கத்துக்க ட்ரை பண்ணுங்க. கு.பட்சம் தெலுங்கு
12. புகைப்பழக்கம் இருந்தா ஒடனே விட்டுருங்க. மூச்சு பயிற்சி பிராணயாமம் செய்ங்க. தினசரி நடை பயிற்சி கட்டாயம். நான் வெஜ் முழுக்க தவிர்த்திருங்க.
13.அஜீரணம்,கியாஸ் ட்ரபுள் இருந்தா அதை ஒழிச்சு கட்டுங்க.
14.உங்க ஏரியாவுல உண்மையிலயே கதியற்றவர்களுக்கு உதவி செய்யும் சேவை நிறுவனங்கள் இருந்தா அவிகளுக்கு வாயா,வார்த்தையா,காசா,பணமா உதவுங்க.
15.உங்க வீட்ல (சொந்த வீடா இருந்தா) வடகிழக்கு பகுதியில் சமையலறை ,கழிவறை, மாடிப்படி,செப்டிக் டாங்க், வீட்டின் மற்ற பகுதிகளில் திறந்த வெளி ஈசான்யத்தில் கூரை இருந்தால் உடனே சரி செய்யுங்கள்.
இதையெல்லாம் செய்தா குரு காதல் செயிக்கும்,திருமணத்தில் முடியும்,குழந்தை பேறும் கிட்டும். கு.பே கிடைத்த பின்னும் குழந்தைகளோடு தாமரை இலை தண்ணீராய் இருங்க.உங்களுக்கும் நல்லது -அவிகளுக்கும் நல்லது. மனைவி மேட்டர்ல கூட ரெம்ப ஈஷிக்காம இருக்கறது இதயத்துக்கு நல்லது . எல்லாம் சக்ஸஸ்ஃபுல் ஆனாலும் மேற்படி பரிகாரங்களை கன்டின்யூ பண்ணிக்கிட்டே இருங்க.
இவையே காதல்/திருமணம் மீது குருவின் நெகட்டிவ் இம்பாக்டுக்கு பரிகாரங்கள். நாளைக்கு ..ஐ மீன் இன்னொரு நாளைக்கு சனி காதலை பற்றி பார்ப்போம்.

நச் பரிகாரம்: கேது

null

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஞா கிழமை .சியா சாப்பிடறவுக சியா சாப்டு , வெஜ் பார்ட்டிங்க ஸ்பெஷலா எதுனா ஆக்கச்சொல்லி ஒரு கை பார்த்துட்டு, ஷாப்பிங்/சினிமான்னு போயிட்டு ,சரக்கு பார்ட்டிங்க சரக்கு போட்டுட்டு எட்டுமணிக்கு மேலத்தான் சைட்டு பக்கமே வருவிங்க.

நச் பரிகாரம் தொடரில் இன்னைக்கு கேதுவுக்கான பரிகாரங்களை பார்ப்போம். ஓவர் டு கேது

கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் ‘நம்மவர்’ என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது.

இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.

பரிகாரங்கள்:

1. எளிமையான வாழ்வு.

2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.

3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.

4. யோகம் பயிலுதல்.

5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.

6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.

7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.

8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.

(குறிப்பு: ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.)

பொரிகடலை:

பத்தில் கேது:
இங்கே கேது நிற்பது நல்லதே. இது தொழில் உத்யோக துறையில் தோல்விகளை கண்டு அஞ்சாத மன நிலையை காட்டும்.அதே நேரம் செய்யும் வேலைகளில் புதுமையை புகுத்துகிறேன் பேர்வழி ஏகத்துக்கு குழப்பவும் செய்யலாம். மொத்தத்தில் சோம்பல் இருக்காது. நல்லதாவோ /பொல்லாததாவோ ஏதோ ஒன்னை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.

குரு+சனி /ராகு கேது
தங்கள் தெய்வ, சாஸ்திர நம்பிக்கை முழுக்க ஒழிந்து போகும் வரை சோதனைகள் தொடரும். வயிறு,இதயம், வாரிசுகள், தங்கம்,ரொக்கம் ,அரசியல் வகைகளிலும் பிரச்சினைகள் ஏற்படும்.
கேது சுபபலமானால்:
லைஃப் செட்டில்மென்ட்ல லோகாயதமாக பிரச்சினைகளை தந்தாலும் தங்களுக்கு ராஜ யோகம் இத்யாதியில் ஆர்வம் ,பயிற்சி ஏற்படும்

4ல் ராகு/ கேது
பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது.

செவ்வாயுடன் கேது இணைந்ததால்:
செவ்வாயுடன் கேது சேருவது பரிகாரம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடை முறையில் பார்க்கும்போது நேரடி தாக்குதல்கள் ,விபத்துக்கள் தவிர்க்கப்பட்டாலும் ரத்தம் கெடுதல் போன்ற உடல் நல பிரச்சினைகளோடு மேலுக்கு சமாதானமாய் போனாலும் ஜாதகரிலாகட்டும் எக்ஸ் பார்ட்டியிலாகட்டும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருப்பதை காணமுடிகிறது.. எச்சரிக்கை தேவை. நேரடி எதிரிகள் மட்டுமன்றி ரகசிய எதிரிகளாலும், துரோகிகள் சதிகாரர்களாலும் தொல்லைகள் ஏற்படும். நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து சந்தேக காரராக கூட தயாராகிவிடலாம். சில நேரம் தாங்களும் சதி திட்டம் தீட்ட முனைந்துவிடுவீர்கள் திடீர் என்று விரக்தி ஏற்பட்டு விடும்.

நச் பரிகாரம் : சனி

null
அண்ணே வணக்கம்ணே !
நம்ம மாஸ்டர் பீசான நவகிரக தோசங்களுக்கு நவீன பரிகாரங்கள் தொடரை மீள் பதிவா போட்டுக்கிட்டிருக்கன். இந்த வரிசையில சூ,சந்,செவ்,ராகு,குரு வரைக்கும் தாண்டியாச்சு. இன்னைக்கு சனி.

அதுக்கு மிந்தி நம்ம புதிய செல் நெம்பர்களை தந்துர்ரன்.

அண்ணே !
நம்ம செல் நெம்பர் 9397036815 ங்கறது அல்லாருக்கும் தெரிஞ்சதுதேன்.ஆனால் இந்த நெம்பருக்கு பின்னி எடுக்கிறதால சார்ஜ் ஒரு மணி நேரத்துக்கு கூடவரமாட்டேங்குது. அதனால இதை லோக்கலுக்கு வச்சுக்கிட்டு ஆன்லைன் தோழமைகளுக்காக பிரத்யேக நெம்பர்கள் ஏற்பாடு செய்திருக்கேன்.

9985087583
7382290438

செல் வேலை செய்யும் நேரங்கள்:
காலை 9 முதல் மதியம் 2 வரை
மாலை 6 முதல் இரவு 9 வரை

இனி ஓவர் டு சனி …..

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? 1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும் . இது நான் உங்களை பிடிக்கும் போதுதான் சாத்தியம்.

நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். இந்த கால கட்டத்தில் நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.

19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். அதிலும் என் புக்தியில் நிச்சயம் நன்மை செய்ய மாட்டேன்.

ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன். மேலும் நான் அடுத்த ராசிக்கு மாறுவதற்கு 6 மாதங்கள் இருக்கும் போதே அடுத்த ராசியில் இருந்தால் தரக்கூடிய பலனை தர ஆரம்பித்துவிடுவேன்.

அதாவது நன்மை செய்யும் வீட்டில் இருக்கும் போது ரெண்டரை வருடங்கள் முழுக்க முழுக்க நல்ல பலனே தருவேன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் தீமை செய்யும் வீட்டுக்கு மாறுவதற்கு 6 மாதம் பாக்கி இருக்கும் போதே தீமை செய்ய ஆரம்பித்துவிடுவேன்.

எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள்.என்ன ஒரு நிபந்தனை என்றால் அந்த ஏழரை சனி காலத்தில் கு.ப குருவோ,ராகு கேதுக்களோ அனுகூலமாய் இருக்கும் காலகட்டம் வரவேண்டும்.

சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்- நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன்.

இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக அடுத்தவர்களின் பிரச்சினை ரொம்ப சின்னதாக தெரியும் . அதை அலட்சியப்படுத்துவீர்கள்.வேலைக்காரர்களை கசக்கி பிழிவீர்கள்.

இப்படி நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன்.

நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன்.

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி.

சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன்.

இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? ‘ஆம்’ என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? ‘ஆம்’ என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.

நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.கொலஸ்ட்ரால் இத்யாதி பிரச்சினைகள் இல்லை என்றால் வெண்ணை, மோர் சேர்க்கவும்

2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள். ஆடைகள் அழுக்காகவும் ,தையல் பிரிந்தும், வெளிறியும் இருந்தால் விசேஷம்.

3.பரம ஏழைகள், மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு ( கால் ஊனம் விசேஷம்) ,பழுத்த முதியவர்களுக்கு பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.

4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.

5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.

6. எனக்குரிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் எனக்குரிய உலோகமான ஸ்டீல் அ இரும்பில் அணியவும். அல்லது எனக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது. ஸ்டீல் மோதிரம், வளையம், டாலர் கருப்புகயிறு அணியவும்.,

7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள்.

8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.

9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.

10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள். வாராஹி,வராக மூர்த்தியையும் வழிபடலாம்.

11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.

12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.

13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

செமை மேட்டருதான் .. ஆனா..: தீர்வுகள்

அண்ணே வணக்கம்ணே !
நாளை முதல் (திங்கள்) நம்ம பதிவுகள் ஃபேஸ்புக்ல மட்டும் வெளியாகும். உடனே இங்கே அழுத்தி நம்ம அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போட்டுருங்க.

நம்ம இஸ்மாயில் சார் யோசனை – ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் – பாப்பா, காசு பணம் – ஃப்ளாஷ் பேக் ஞா இருக்குல்ல. இந்த காசு பண மேட்டர் உங்களை எப்டி கலாய்க்குதுன்னு ஒரு பிக்சர் இருக்கும். கீழே நான் தந்திருக்கிற பிக்சர்தான் உங்க பிக்சர்னா அதுக்கான பரிகாரங்களை ப்ராக்கெட்ல தந்திருக்கேன். ப்ளீஸ் ஃபாலோ.. கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவரி ஆகி பொருளாதார ரீதியில நெல்ல பொசிஷனுக்கு வந்துருவிங்க. டோன்ட் ஃபர்கெட் டு கன்வே ரிசல்ட் டு மீ. ஓகேவா உடுங்க ஜூட்.

பிக்சர்: 1

கிடைச்சிருக்கிற மேட்டர் சூப்பர் மேட்டருதான்.ஆனால் .. ஏழெட்டு வருசம் கஷ்டப்படனும். அப்பாறமா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். உ.ம் தொழிற்சாலை ,குவாரி, சுரங்கம்

வியாபாரம் என்னமோ ஓகே பாஸ்..ஆனால் தூசு,தும்பு,ஆயில்,கிரீஸ், நெடி மதிய சோத்தை நாலு மணிக்குத்தான் திங்க முடியும்.

நீங்க செய்து வருவது விவசாயம், ஐரன்,ஸ்டீல்,ஆயில், எருமை தொடர்பான தொழிலா? பேமென்ட் லேட் ஆகுதா? வேலைக்காரவுக திருடறாய்ங்களா? தலித்துகள் ஒத்துழைக்க மறுக்கிறாய்ங்களா?

சொத்து,சேமிப்பு, முதலீடுகள் மீது வருசக்கணக்கா வில்லங்கம் தொடருதா?

( தீர்வு/பரிகாரம் )

முட்டிக்கு காக்கி கலர் நீ பேட் போட்டுக்கங்க ( ஸ்போர்ட்ஸ் கடையில கிடைக்கும்) . உங்க தொழில் லைசென்ஸ்,அக்ரிமென்ட், முதலீடு ,சேமிப்பு ,சொத்து பத்து தொடர்பான பத்திரங்கள் டாக்குமென்ட்ஸை காக்கிப்பையில போட்டு பீரோல வைங்க. இருக்கிறதுலயே பழசான பீரோ பெட்டர் சாய்ஸ்.

அப்பா இருந்தா நீங்களே அவரை சலூனுக்கு கூட்டிப்போங்க. அவர் நோயாளியா – வெளிய வர முடியாத சந்தர்ப்பத்துல இருந்தா ஷேவ் பண்ணி விடுங்க. ஹேர் கட் பண்ண கத்துக்கிட்டு ஹேர் க்ட் பண்ணுங்க.

ஒரு வேளை படுத்த படுக்கையா இருந்தா “அலம்பி”விடுங்க. அப்பாவழி உறவினர்கள் யாராவது ஏழையா இருந்தா அவிகளுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க.

தூரப்பயணம் போகுது அங்கே தலித் நண்பர் யாராவது இருந்தா அவிக வீட்ல தங்குங்க. அல்லது ஒரு தலித் நண்பரை கூட்டி வச்சுக்கிட்டு அவருடன் ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க. கு.ப ஸ்லம்மை ஒட்டியிருக்கிற ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க.

பிக்சர் : 2

சூப்பர் ஃபீல்டு கண்ணு .ஆனா லேபர் கோ ஆப்பரேட் பண்ணனும்/ இல்லின்னா பட்டை நாமம் தான்..

( தீர்வு/பரிகாரம் )
காக்கி பாண்ட் அணியவும். தங்கம் தவிர்த்து ஸ்டீல் ஆர்னமென்ட் பூணவும். ஃபீல்டுக்கு குளிக்காம போகவும்.ஹேர் டை போடற வயசா இருந்தா ஹேர் டை தவிர்க்கவும். போலீஸ் காரவுக போடற நிறத்துல ஷூஸ் சூஸ் பண்ணிக்கங்க.

பழைய ,கிழிந்த,சாயம் போட ஆடைகள் அணியவும். ஃபீல்டிலான உங்கள் ரூம்/சாம்பர் ஓலையால் பின்னப்பட்டிருந்தால் நல்லது. அதை சுத்தப்படுத்த வேண்டாம். ரூம் ஃப்ரஷ்னர் ஏதும் யூஸ் பண்ணாதிங்க
வராக மூர்த்தி,வராகி , கிராம தேவதை படங்களை மட்டும் வைத்து பூஜிக்கவும்.

பிக்சர்: 3

வயசுல மூத்த பெண், பயங்கர கருப்பா,கருப்பா பயங்கரமா இருக்கிற பெண், அல்லது உங்க கம்பெனி நீங்க ஊழியரையே மணந்தவரா ? தம்பதிகளுக்குள்ள ஒத்துப்போகலியா?

கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கா? சோம்பல்,அகால போஜனம் ஆகிய குணங்கள் இருக்கா?

(தீர்வு பரிகாரம்:)

காக்கி பாண்ட் அணியவும் -குறைஞ்ச பட்சம் சஃபார் சூட். பிக்சர் 2 வுக்கு கொடுத்த பரிகாரங்களை நீங்களும் உங்கள் மனைவியும் ஃபாலோ பண்ணிக்கனும்.

பிக்சர் : 4

உங்களையும் அறியாம உங்க பேச்சு வெகண்டையா வெளிப்பட்டு வில்லங்கத்தை கொடுக்குதா? கொடுக்கல் வாங்கல்ல தகராறு வருதா? தாமதமாகுதா?

(தீர்வு பரிகாரம்:)

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம “கோடாலி” வச்சிருக்கம். இது மைனர் செயின் கணக்கா தொண்டைக்குழிய டச் பண்ணனும்.

அப்பப்போ வாய் விட்டு ஓம் நமோ வராஹஸ்வாமினே நமஹ ஓம் நமோ வாராஹி மாத்ரே ஸ்வாஹான்னு சொல்லிக்கிட்டிருங்க.

ச்சொம்மா தமாசுக்கு மெட் ராஸ் பாஷை பேசுங்க.க்ளோஸ் சர்க்கிள்ஸ்ல சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தை பேசுங்க.

பிக்சர்: 5

பொதுக்குனு உட்கார்ந்துக்குமோங்கற வீட்ல வசிக்கிறிங்களா? அரத பழசான வாகனத்தை வச்சுக்கிட்டு மல்லாடறிங்களா? அம்மா சொம்மா சொம்மா உங்க பொஞ்சாதியோட மல்லுக்கட்டி லொள்ளு பண்றாய்ங்களா?

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம “கோடாலி” வச்சிருக்கம். டாலர் மார்பு பகுதியை டச் பண்ணனும்.

வீட்டு வாசற்படியை ஒட்டிய வென்டிலேட்டருக்கு ,வாகனத்தோட பம்பருக்கு எருமைக்கு கட்டற கருப்பு கயிறை கட்டுங்க.

வீட்டை ஒட்டடை அடிக்காதிங்க . கழுவாதிங்க.. அழகுப்படுத்தாதிங்க. வாகனத்துக்கு நோ வாட்டர் சர்வீஸ். பூசை போட்டுத்தான் ஆகனும்னா உங்க கிராம தேவதை அ ஏதேனும் காவல் தேவதை கோவிலுக்கு கொண்டு போய் போடுங்க. வீட்டு ஹால்ல எதுனா ஃபேக்டரி / விவசாயம் தொடர்பான சீனரி கொண்ட போஸ்டரை ஒட்டி வைங்க.

பிக்சர்: 6

எட்டுவருசத்துக்கு மேல சந்ததியில்லாம இருக்கா?

தீர்வு:
பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க. தையல் விட்டது, கிழிஞ்சது,சாயம் போனது போன்ற சட்டை ,பாண்ட் அணியவும். ஷேவிங்குக்கு சில்லறை இல்லாத மாதிரி தாடியை அப்படியே விட்டுருங்க. ( நோ ட்ரிம்மிங் ஆல்ஸோ)

வராஹமூர்த்தி,வாராஹி அம்மனோட உருவத்தை கற்பனை பண்ணுங்க. குழந்தைங்க பிறந்தா ஒரு பரம ஏழை தன் குழந்தைக்கு எந்தவிதமான ஃபெசிலிட்டீஸை கொடுப்பானோ அதை மட்டும் கொடுப்பேன்னு சங்கல்ப்பம் பண்ணிக்கங்க.

அவாள் கூறும் டுபுக்கு பரிகாரங்கள்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.
ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.
மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். ————————————– சித்தூர். எஸ். முருகேசன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!
செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.
2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?
3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!
விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.
இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.
நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.
நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.
ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.
Read More