அதிரடி பரிகாரம் :சொந்த அனுபவம் (லேட்டஸ்ட்)

08lede_levinson1-blog480

அண்ணே வணக்கம்ணே !
ஜோசியத்தை பெரிய அளவுல நம்பறவிக கூட ஜோசியத்து மேல சொல்ற கம்ப்ளெய்ன்ட் என்னன்னா யார் யாரோ என்னென்னமோ சொல்றாய்ங்க. ஆனால் கெட்டது மட்டும் அப்பப்போ நடக்குது – நல்லது மட்டும் நடக்கவே மாட்டேங்குதே.

நம்ம மேட்டர்ல வர்ர கம்ப்ளெய்ன்ட் என்னன்னா “என்னப்பா எல்லாம் கெட்டதாவே சொல்றயே .. நல்லதே நடக்காதா? கடவுள் காலம்ங்கற பைப்ல நல்லது கெட்டதுன்னு மாறி மாறி வச்சு பேக் பண்ணியிருக்காரு.

நம்மாளுங்க கெட்டதை நடக்கவே விடறதில்லையே.. அப்படியே மீறி நடந்துட்டாலும் அதை அந்த செகண்ட்ல மறந்துட்டு ரொட்டின் லைஃப்ல காணாம போயிர்ராய்ங்க.

கெட்ட மேட்டர் எல்லாம் பைப் லைன்ல அடைச்சுக்கிட்டு நல்லது கசிஞ்சு தான் வருது. அதையும் ரொட்டீன் லைஃபுக்கே செலவழிச்சுர்ராய்ங்க.
உங்க ரொட்டீன் லைஃப் மாறுதுன்னா ஏதோ நல்லது நடக்க போகுதுனு அருத்தம். அதை ஏத்துக்கிடனும். இல்லின்னா நாஸ்திதான்.

இவ்ளோ மேட்டரை சொல்ற நமக்கே ரொட்டீனுக்கு டிஃப்ரன்டா ஏதாச்சும் நடந்த பிறவுதான் -அதுவும் ஆத்தாவா மனசு இறங்கி நடத்தின பிறகுதான் -மொதல்ல செமர்த்தியா கடுப்பான பிறகுதான் ஸ்பார்க் ஆகுது. ஆஹா..ஆத்தா மனசு வச்சுட்டா ஏதோ நல்லது நடக்க போகுது.

2007 ல தினத்தந்தில சேர்ந்தம் .மொதல் 3 மாசம் வரை லைன் அக்கவுண்டு தான். இந்த ரொட்டீன் கடுப்பாகி சம்பளம் ஃபிக்ஸ் பண்ணாட்டியும் பரவால்ல. ஒரு ரூவா அடையாள சம்பளம் கொடுத்தா போதும்னு அதிரடி . மேட்டர் ஓவர்.

மொதல்ல மாச சம்பளத்தை வச்சே குண்டு சட்டியில குதிரை ஓட்டினம். ஊஹூம் வேலைக்காகாதுன்னு தெரிஞ்சு போச்சு.

நம்ம ஸ்டைலுக்கு வந்துட்டம் . அங்கே இங்கே பிடுங்கிக்கிட்டு வந்து முதல் வைக்க வேண்டியது. அலைஞ்சு திரிஞ்சு வேலை பார்க்க வேண்டியது .(முதல்னா நம்ம லோக்கல் ஆட் பேஸ்ட் மேகசின் + இன்டர்னெட் சென்டர் செலவு )

2009 லயே ஆன் லைன் ஜோதிட ஆலோசனையும் ஒரு ரேஞ்சுக்கு வந்துருச்சு .2009 எலீக்சன் டைம்ல இனி அரசியல் தான்னு டிசைட் பண்ணி ஜோதியில ஐக்கியமாயிட்டம். எல்லாம் ஓகேங்கறப்ப ஒய்.எஸ்.ஆர் டிக்கெட் போட்டுட்டாரு. ஜகன் பொளைக்க தெரியாம சோனியா கிட்டே தகராறு.
லோக்கல் ஆளு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்ல சேர்ந்து தொலைச்சிருந்தா வேற கதை .தெலுங்கானா அறிவிப்பு வந்து அரசியல் களமே மாறிருச்சு.
இவரு ஒன்று பட்ட ஆந்திரா மேட்டர்ல பொங்கி எழுந்து காங்கிரஸை கிளிக்கறதுல “அடக்கி”வாசிக்க ஆரம்பிச்சாரு. கார்ப்பரேஷன் எலீக்சன்ல சுயேச்சையா சனத்தை களமிறக்க அதுவும் மொக்கை. அசெம்ப்ளி எலீக்சன்ல டிக்கெட் வேணாம்னுட்டு ஜகன் பக்கம் போனாரு.

டிக்கெட் கிடைச்ச பார்ட்டி பயங்கர மொக்கை. அரசியல் வாழ்க்கை போயே போச். ஒரு வேளை ஒய்.எஸ்.ஆர் சாகாம இருந்திருந்தா கு.பட்சம் ஒரு நாமினேட்டட் கார்ப்பரேட்டர் போஸ்டாவது கிடைச்சிருக்கலாம்.

இதெல்லாம் மேலுக்கு பார்க்க நெகட்டிவாவே தெரியும்.ஆனால் பாருங்க..சொந்த அரசியலை 2004 ல கை விட்டு ஒய்.எஸ்.ஆர் க்கு ஜே போட்டு நம்ம நதிகள் இணைப்பு மேட்டரை டீல்ல விட்டுருந்தம்.

ஒய்.எஸ்.ஆர் டிக்கெட் போட்டதுமே -முளிச்சுக்கிட்டம். நம்ம முயற்சிகள் தொடர – நம்ம ஆக்சன் ப்ளானை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி -அங்கிருந்து ஒரு கடிதாசு வந்து -இதை எல்லாம் தொகுத்து தெலுங்குல பாக்கெட் புக்கா போட்டு இப்போ ரெண்டாவது ஆயிரம் பிரதிகளை வினியோகிக்க ஆரம்பிச்சிருக்கம். அடுத்து தமிழ்ல 6000 பிரதிகள் போடப்போறம். (ரேப்பர் மல்ட்டிக்கலர் -மொத்தம் 20 பக்கம்)

எல்லாம் பாசிட்டிவா நடந்திருந்தா ஒய்.எஸ்.ஆரோட விஸ்வாசியா கண்டதுக்கும் வக்காலத்து வாங்கியே பொளப்பு நாறியிருக்கும்.
இப்பம் சொந்த அரசியல் . ரொட்டீன் அடிவாங்கினதால இந்த சுயம் பிரகாசம். ஃப்ளாஷ் பேக் போதும்.லேட்டஸ்ட் மேட்டருக்கு வருவம்.
மவளோட மேட்டர் . நார்மல் டெலிவரியா- கொளந்தையும் நல்லபடியா பொறந்திருந்தா அவளும் -மாப்ளையும் அவிக பாதையில ஹை ஸ்பீட்ல போயிருப்பாய்ங்க. பல்பு வாங்கினதால இப்பம் நம்ம வழிக்கு வந்துட்டாய்ங்க.

இப்படி ஒவ்வொரு தாட்டி ரொட்டீன் எஃபெக்ட் ஆகறப்பயும் நம்ம லைஃப் ஒரு டர்ன் எடுக்குது. சொந்த மேட்டருக்கு வந்தா ..
காலையிலருந்து ராத்திரி 7 வரை லேப் டாப்போட மாரடிக்க வேண்டியது (பொளப்பு -பொழுது போக்கு எல்லாமே இதான்) ச்சொம்மா சாஸ்திரத்துக்கு ஊருக்குள்ள ஒரு ரவுண்டு .பிறவு லேப் டாப்.

இது செம கடுப்பேத்த அப்பப்போ அட்வென்சர் பண்ணி பார்த்தம். பஜார்ல ஆஃபீஸ் போட்டம் . ஃப்ளெக்சி வைக்கிறப்ப ஹை வோல்ட் ஷாக். ஆஃபீஸ்ல உட்கார நேரமில்லாத அளவுக்கு “பைசா”

பிறவு மொபைல் புக் ஸ்டோர்னு ஆரம்பிச்சம். ரூ.10,000 + ரெண்டு பஜாஜ் சன்னி காலி. (ஆறுதல் என்னன்னா லைஃப்ல மொத முறையா நம்ம எழுத்துக்கு பரிசு கிடைச்சது .

நம்ம சரித்திரத்துல ஒரு பக்கம் கூடிருச்சா இல்லையா?

இவ்ளோ தெரிஞ்சிருந்தும் பிப்ரவரி 6 -பிப்ரவரி 20 “நாயடி கொஞ்சம் உசுப்பி விட பாடி,மைண்டு எல்லாம் கொஞ்சம் அட்டென்ஷன்ல இருந்ததே தவிர பிறவு ஒரு ம..னாவும் இல்லை.

கெட்டது நடக்கனும்.அப்பத்தேன் நல்லது ஸ்டிமுலேட் ஆகும்ங்கறது நம்ம தியரி . தற்சமயம் லக்னாத் அஞ்சுல சனி அவமானம் நடக்கோனம். அது நடக்கலின்னா ஒரு இழவும் நடக்காது அதனாலதேன் இந்த ஃபோட்டோ . எப்பூடி?

கெட்டதை நினைச்சு பதறாதிங்க பாஸ் ! நல்லது நடக்கப்போகுதுனு அருத்தம். கெட்டதை அவாய்ட் பண்ண பார்க்காதிங்க பாஸ் ! நல்லதும் நடக்காது.
இந்த லேப் டாப் மேட்டரையே பாருங்க..எல்லாம் நெல்லா செட் ரைட் ஆகி ஒரு ஷேப்புக்கு வந்த சமயம் புட்டுக்குச்சி. அட்மிட் பண்ண வேண்டியதாயிருச்சு.
இதை அட்மிட் பண்ண போனா நம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் நிபுணர் ஹை கன்ஃபிகரேஷன்ல ஒரு சிஸ்டம் ஆஃபர் பண்ணாரு.

மாப்ள ஏற்கெனவே இப்டி ஒன்னை வாங்க ரூ.50 ஆயிரத்துக்கு ரெடியா இருந்தாரு. இந்த ஆஃபர்? நம்புங்க ரூ.12 ஆயிரம் தான்.
மேட்டர் ஓப்பன் ஆச்சுல்ல? கீப் இட் அப் !

மரணத்தை வெல்ல மரணமே வழி : செவ் தோஷ பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !

நாங்கல்லாம் 1987 லயே காலேஜை விட்டு வெளிய வந்துட்டமா .. இதுல 1986 லருந்தே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டமா அதுலயும் எட்டாங்கிளாஸ் படிக்கறச்சயே படம் வரைஞ்சு கெட்ட பாடங்க எல்லாம் நடத்தின பார்ட்டி நாம. ( ஹி ஹி .. தோஸ்துங்களுக்குத்தேன்.அதும் கடா குட்டிகளுக்கு தேன்) புதுசா எதையாச்சும் மண்டையில ஏத்தனும்னா ரெம்ப கஷ்டமா கீது. பாடம் நடத்தறது ஒரு வித அவுட்லெட்டுதான் இல்லேங்கலை.

புது மேட்டருன்னா அது ஏற்கெனவே நம்ம மைண்டுல ஸ்டோர் ஆகியிருக்கிற மேட்டருக்கு தொடர்ச்சியா இருந்தாகனும் – அல்லது நெஜமாலுமே மன்சங்க வாழ்க்கைய புரட்டி போடற மேட்டரா இருக்கனும் அப்பத்தேன் அது மண்டைக்குள்ளாற போகுது.

அது சரி திடீர்னு ஏன் இந்த புலம்பலுன்னு கேப்பிக சொல்றேன். நம்முது கடகலக்னமாச்சா நாலுல சனி வந்தப்பத்துலருந்தே தாளி எப்படியாச்சும் வீட்டை விட்டு வெளியேறனும். ஊர் ஊரா சுத்திக்கிட்டு வரனும்னு ஆசை வந்துருச்சு. லேப் டாப்பு – டேட்டா கார்டுன்னு புலம்பிக்கிட்டே இருந்தம். ஒன்னும் வேலைக்காகலை.

சமீபத்துல சனி வக்ரமானாரே அப்பம் நம்ம எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா செயலாக ஆரம்பிச்சிருச்சு. என்னென்னமோ நடந்து நேத்திக்கு மவ சென்னையில இருந்து புத்தம் புது லேப் டாப் வாங்கியாந்துட்டா. அது என்னா கம்பெனி என்னா இழவு எதையும் இன்னம் பார்க்கலை.( கேட் வேன்னு ஒரு கம்பெனி இருக்கா? – ஏமாந்துட்டமா? )

நம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் காரரு கிட்டே ஓ.எஸ் போடச்சொல்லி அனுப்பினேன். அவரு யூத்தாச்சா. விண்டோஸ் 7 போட்டு விட்டுட்டாரு. நாம ஆதிகாலத்துலருந்தே எக்ஸ்பி தேன். கொய்யால கலர் கலரா இருக்கே தவிர கண்ணை கட்டுது.

லேப் டாப்லயா இந்த கீ போர்டுல என்னென்னமோ மாற்றம்லாம் செய்து விட்டிருக்காய்ங்க. நெட் கனெக்ட் ஆகி – நாம வழக்கமா பார்க்கிற சைட்டுங்களை பார்த்தாலும் கொஞ்சம் போல பழகும்னு பார்த்தா ரெம்பவே பே பே காட்டிருச்சு.

அப்பாறம் பொட்டு வச்ச பிறவு ஸ்பார்க் ஆகி லேப் டாப்போட கொடுத்திருந்த டிவிடியில இருந்த ஹார்ட் வேர்ஸ் எல்லாத்தையும் கொத்தா போட்ட பிறவு “கட்டின பசு” (சுஜாதா?)

பொஞ்சாதி முறுக்கிக்கிட்டா கூட சமாளிச்சுரலாம். இந்த கம்ப்யூட்டர் சமாசாரம் மட்டும் லொள்ளு பண்ணா செமை கடுப்பாயிருது.

( ஸ் ..அப்பாடா பந்தா பண்ணாம நாம லேப் டாப் வாங்கின கதைய சொல்லியாச்சு )

இப்பம் பதிவுக்கு போயிரலாமா/

நேத்திக்கு செவ் 7 ல இருந்து பண்ற அழும்பையெல்லாம் சொன்னேன்.அதுக்கு பரிகாரமும் ஓரளவுக்கு சொல்லியாச்சு.

இன்னைக்கு செவ் 8 ல் என்னா மாதிரி அலப்பறை கொடுப்பாருன்னு பார்ப்போம். லேடீஸ் ஃபர்ஸ்ட். இவிகளுக்கு 8 மாங்கல்ய ஸ்தானமாச்சா (அதே நேரம் ஆயுள் ஸ்தானமாவும் ஒர்க் அவுட் ஆகுதுங்கோ. என்னய்யா குழப்பறேன்னு கடுப்பாயிராதிங்க. வேணம்னா இதே வலைதளத்துல ஆண் பெண் வித்யாசம்னு ஒரு தொடர் எழுதியிருக்கேன். அதுல எட்டாம் பாவத்தை தேடி படிங்க புரியும்).

ஆக பெண் ஜாதகத்துல எட்டுல செவ் இருந்தா அவிக உசுரை மட்டுமல்லாது – அவிக ஆத்துக்காரர் உசுரையும் காப்பாத்தியாகனும். 8 = மரணம் ; செவ் = உடனடி மரணம். தெரியும்ல. காதலில் ரெண்டு வகை சைவம் ஒன்னு அசைவம் ஒன்னுன்னு ஒரு பாட்டு இருக்குது.

ஆனால் மரணத்துல மட்டும் அரை டஜனுக்கு மேலான ரகம் இருக்கு. இந்த மேட்டரை ஏற்கெனவே ஒரு தாட்டி செமை ஓட்டு ஓட்டினாப்ல ஞா. இருந்தாலும் புதுவரவுகளுக்காக சுருக்கமா ரிப்பீட்டு.

மரணத்தின் வகைகள்:

1.மன ரீதியிலான மரணம் 2.பண ரீதியிலான மரணம் 3.சமூக ரீதியிலான மரணம் 4.அரசியல் ரீதியிலான மரணம் 5.குடும்ப ரீதியிலான மரணம்.

1.மன ரீதியிலான மரணம்:

இதை எதிராளிகளின் துரோகங்கள் மட்டுமல்ல – நாம செய்ற குடி கெடுக்கும் வேலைகளும் தரலாம். ஒருவன் அடுத்தவனை கொல்லும் போது அவனிலும் ஏதோ செத்துப்போகிறது.

2.பண ரீதியிலான மரணம் :

நம்ம ஊர்ல ஒரு பார்ட்டி . ஏழை பாழைங்க கிட்ட தினசரி அஞ்சு பத்து சேகரிச்சு 100 ஆவது நாள் அதுக்கு உரிய மதிப்பிலான பொருட்களை தருவாரு. தம்மிடம் புரளும் ஊர் பணத்தை பெருக்க ஒரு தடவை ரியல் எஸ்டேட்ல போட்டுட்டாரு. (அது அந்தக்காலமுங்கோ) பணம் டம்ப் ஆயிருச்சு. அதுக்கப்பாறம் எத்தனை குரு -எத்தனை சனி மாறினாலும் மாற்றம்? ஊஹூம்.. நவகிரக தோசங்களுக்கும் அது அல்ட்டிமேட் பரிகாரமாயிருச்சு போல.

கடேசி காலத்துல ஊர் பணத்துல வாங்கி வச்சிருந்த நிலத்தை காசாக்கி அல்லாருக்கும் கொடுத்துட்டுத்தான் போனாரு மன்சன் இல்லேங்கலை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அன்னாருக்கு நிகழ்ந்தது பண ரீதியிலான மரணம் .

3.சமூக ரீதியிலான மரணம்

ஒரு அரசியல்வாதிக்கும் -பத்திரிக்கையாளனுக்கும் இடையில என்ன மாதிரி உறவு இருக்கலாம்னு ஒங்க மைண்டுல ஒரு ஐடியா இருக்கலாம்.

ஆனால் ஒரு பார்ட்டி தலீவரு வெளி நாடு போனா தன் பொஞ்சாதியோட கிளம்பிருவாரு. அவிக தங்கற கெஸ்ட் ஹவுஸ்ல வாஸ்து விவகாரமா இருக்குமுங்கோ.. தலீவர் ரூமுக்கும் – பத்திரிக்கையாளர் ரூமுக்கும் இடையில ஒரே ஒரு கதவு இருக்கும். அதை அவிகவிக தாள் போட்டுக்க வேண்டியதுதேன்.

ராத்திரியில .. அந்த கச்சாடால்லாம் நமக்கெதுக்கு. தலீவரு என்னவோ கலக்கிட்டு போய் சேர்ந்துட்டாரு. அவரு ரேஞ்சு அப்படி. ஆனால் அந்த பத்திரிக்கையாளனோட சமூகம்? அதை பொருத்தவரை ஹி ஈஸ் டெட்.அப்படித்தானே

4.அரசியல் ரீதியிலான மரணம்

கலைஞரு தீர்காயுசா இருக்கிறது சிலருக்கு இமிசை .சிலருக்கு ஆறுதல் .ஆனால் இந்த மேட்டர்ல ஒரு சொலவடை இருக்கு .அருத்தம் சொல்லமாட்டேன் “பாபி சிராயு”

ஈழத்துல தமிழின படுகொலை நடந்தப்போ தலைவரு அடக்கி வாசிச்சு ..கொய்யால வயசுல இருந்தப்போ வீணா உ.வ பட்டு ரெண்டு தாட்டி ஆட்சியை இழந்தோம் இப்பம் முதிர்ச்சி வந்துருச்சு போலன்னு தன்னை தானே பாராட்டி கூட இருக்கலாம்.

ஆனால் அது அரசியல் ரீதியிலான மரணம்னு அரசியல் அரிச்சுவடி படிச்சவன் கூட சொல்லிருவான். அப்படி அவரு பொலிட்டிக்கலா டிக்கெட் போட்டுட்டதாலதான் தீர்காயுசா இருக்காரு.

5.குடும்ப ரீதியிலான மரணம்.

பொஞ்சாதி செத்து பிழைச்சு பெத்து போட்டு கிழிஞ்ச நாரா படுத்து கிடக்கா. வீட்டுக்காரரு ஒரு நாலணா பார்ட்டிய தள்ளிட்டு வந்து தெரு நடையில வேலை எடுக்கிறாரு. இதை பார்த்துட்டு அந்த மகராசி நல்ல தங்காள் கணக்கா எல்லா குழந்தைகளையும் இழுத்துக்கிட்டு பச்சை மண்ணை தூக்கிட்டு கிணத்தை தேடி போறா. நல்ல வேளையா சாகலை தான்.

ஆனால் அந்த ஆசாமிய பொருத்தவரைக்கு அந்தாளு குடும்ப ரீதியா செத்து போயிட்டாரு. பிள்ளைங்க தலை எடுத்து அந்தாளுக்கு உட்ட ரவுசை எல்லாம் சொன்னா சிரிச்சு சிரிச்சு வவுறே புண்ணா போவும்.
அதெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல ..

இது மட்டுமில்லிங்கனா மரணமே போன்றவைன்னு ஒரு பட்டியல் இருக்கு. அதை கீழே பாருங்க..

1.சிறைப்படுதல் 2.தலைமறைவாதல் 3. நிராகரிப்பு 4.பிரிவு 5.அங்கீகாரமின்மை 6.இருட்டு 7. நெருங்கியவர்களை விட்டு வெகு தொலைவில் இருத்தல்

மேற்படி பட்டியல்ல ஏதேனும் ஒன்னு ரெண்டை வாலண்டியரா சூஸ் பண்ணிக்கிட்டு ஓன் பண்ணிக்கிட்டா போதும் செவ்வாய்க்கு டேக்கா கொடுத்துரலாம். இப்பயும் எரியாதவுக நாளை வரை காத்திருங்க.விளக்கி சொல்றேன்.

ஓகேவா ..உடுங்க ஜூட்டு ..

நச் பரிகாரங்கள்: 6 ஆம் பாவம்

null

அண்ணே வணக்கம்ணே !

எந்த குழப்படியும் இல்லாம நச் பரிகாரங்கள் தொடர் ஒழுங்கா போயிட்டிருக்கு. எந்த அப்டேஷனும் இல்லாம நம்ம வலைப்பூவை வெற்றி நடை போட வைக்கும் நம்மாளுங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கனும்னுட்டு இந்த அத்யாயத்தை நிர்வாண உண்மைகள் வலைப்பூவில் போட்டிருக்கேன். இங்கே அழுத்தி படிச்சிருங்க.

நாளையிலருந்து அடுத்தடுத்த அத்யாயங்கள் இங்கேயே பிரசுரமாகும்.கவலை வேண்டாம்.

நச் பரிகாரம்: 4 ஆம் பாவம்

அண்ணே வணக்கம்ணே !
நச் பரிகாரத்துக்கு போறந்துக்கு மிந்தி ஒரு சின்ன இன்ஃபர்மேஷன். நீங்கமுக நூல் வழியா வந்த புதிய வாசகரா/சக பதிவரா இருந்தா கவனிங்க.

இந்த சைட்டு சோனி . தினசரி அப்டேட் பண்ணாலே ஹிட்டு 300 ஐ தாண்டறதில்லை.ஆனால் நம்ம வலைப்பூவான நிர்வாண உண்மைகள் சூப்பர் ஹிட் முக்காபுலா. தாளி ..வித் அவுட் அப்டேஷன் தினசரி 700 வரைக்கும் ஹிட் அடிக்குது.

இந்த சைட்டு வெறுமனே சோசியம் சோசியம்தேன்.ஆனா நி.உ அப்படியில்லை .சூப்பர் பஜார் மாதிரி சகலமும் உண்டு. இங்கே அழுத்தினா அங்கே போயிரலாம்.

இப்பம் இனி பதிவின் தலைப்பிற்குரிய 4 ஆம் பாவ பரிகாரங்களை பார்ப்போம்

இந்த பாவம் கெட்டா தாய் நோய் வாய்படலாம். அவிக கேரக்டர் சரியில்லாம போகலாம், உங்களுக்கும் அவிங்களுக்கும் ஒத்துவராம போகலாம். குந்த குடிசையில்லாம குட்டி போட்ட பூனையாட்டம் சட்டியை தூக்கிக்கிட்டு அலைய வேண்டி வரலாம். வண்டி வாகனம் திருடு போகலாம், ரிப்பேரு ரிப்பேருன்னு கடுப்பேத்தலாம். சின்ன விபத்துகள் நடக்கலாம். படிப்புல கோட்டடிக்கலாம். இதயம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். இதயமே இல்லாதவரா இருக்கலாம்.

இதுக்கு பரிகாரம்:
தாயை பிரிஞ்சிருங்க (கு.ப ரெம்ப பூசிக்காதிங்க) , சொந்த வீடே இருந்தாலும் அதை வாடகைக்கு விட்டுட்டு நீங்க வாடகை வீட்டுக்கு குடி போயிருங்க.( வாஸ்து முக்கியம்)

டூ வீலர்/ஃபோர் வீலர் வச்சிருந்தா அதை தொடாம பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல லோல்படுங்க. கு.பட்சம் சொந்த காசுல வாங்கின வண்டி இருந்தா அதை வித்துட்டு லோன் போட்டு வண்டி வாங்குங்க.

4 ஆமிடம் எந்த கிரகத்தால கெட்டதோ அந்த கிரக காரகத்வமுள்ள படிப்பை மேற்கொள்ளவும். ரெகுலரா வயசு/உடல் வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்ங்க. கொழுப்பை தவிர்க்கவும்.

இந்த பாவம் சூரியனால் கெட்டால் : அந்த காலத்து வீடுகள் போல “முத்தம்” ஏற்பாடு பண்ணிக்கங்க. முடியாத பட்சம் வீக்லி ஒன்ஸ் மலையேற்றம் அல்லது ரிமோட் வில்லேஜ் டூர்.

சந்திரனால் கெட்டால்:
வீட்டின் ஈசான்ய மூலையில டிவி ஸ்டாண்ட் மாதிரி அடிச்சு அதுமேல அக்வேரியம் வைங்க.வசதி இல்லாதவுக வீட்டு ஹால்ல அருவி,நதி,கடல் படகு இத்யாதி கொண்ட சீனரி ஒட்டுங்க. அப்பப்போ வெளியிடத்துல தங்குங்க.

செவ்வாயால் கெட்டால்:
மாமிசம் சாப்பிடற சாதியா இருந்தா வீக்லி ஒன்ஸ் சமைங்க. ஆரோ ஒருத்தரை இன்வைட் பண்ணி சாப்பாடு போடுங்க. தீகாயம் உள்ளவர், அங்கம் அறுபட்டவர்,மேஜர் ஆப்பரேஷன் நடந்தவருன்னா சிரேஷ்டம்.

புதனால் கெட்டால்:
கு.ப 2 தமிழ் தினசரி ( தினமலம் மட்டும் கூடாது) 2 வாராந்தரி ,2 மந்த்லி புக்ஸ் வாங்குங்க. லைப்ரரி கணக்கா அழகா அடுக்கி வைங்க. ( மாவு சலிக்க கொடுத்துராதிங்க)

குருவால் கெட்டால்:
சான்ட் பாக்ஸ் ஒன்னு வாங்கி காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடுங்க. மஞ்சள் நிற ஸ்க்ரீன்ஸ்,சன்னல் திரைகள் யூஸ் பண்ணுங்க. வீட்டை கோவில் மாதிரி மெயின்டெய்ன் பண்ணுங்க

சுக்கிரனால் கெட்டால்:
வீட்டுக்கு பெண் பெயர் வைக்கவும் ( சீதா நிலையம், நமீதா நிலையம்)

சனியால் கெட்டால்:
ஒட்டடை அடிக்காதிங்க. புது துடைப்பம் வாங்காதிங்க. மாசத்துல ஒரு தரம் ஆஸ்பத்திரி கணக்கா ஃபெனாயில் போட்டு துடைச்சிருங்க. ரூம் ஸ்ப்ரேல்லாம் மூச். பரண்ல தூக்கி போட்ட ஓட்டை உடைசலை எல்லாம் ஹால்ல பொம்மை கொலு மாதிரி வச்சு அதை எல்லாம் ரிப்பேர் பண்ற ஆளுக்காக அல்லாடுங்க

ராகுவால் கெட்டால்:
வீட்டு ஹாலில் சைனீஸ் ட்ராகன் சீனரி. புத்து மண்ணை கொண்டு வந்து பிளாஸ்டிக் கவர்ல பேக் பண்ணி நாலு மூலையிலயும் போட்டு வைங்க.

கேதுவால் கெட்டால்:
பிறமத குருக்களின் (ஒருத்தரு போதும்) லைஃப் சைஸ் ஃபோட்டோ ஹால்ல வச்சு வணங்கிட்டு வாங்க.

நச் பரிகாரம் : தனபாவம்

அண்ணே வண்ணக்கம்ணே !

ஆன் லைன் ஜோதிட ஆலோசனைக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு வச்சிரலாமான்னு ரோசிக்கிற அளவுக்கு செமை பிசி.ஆனாலும் இத்தனை பேர் நம்மை நாடி வர உதவினது சைட்டுதானே,எழுத்துதானே. அதனாலதேன் விடாம அடிச்சு பிடிச்சு ஐட்டம் போட்டுக்கிட்டே இருக்கம்.

நச் பரிகாரம் வரிசையில் 9 கிரகங்கள் கெட்டிருந்தா என்ன பரிகாரம்னு சொல்லி முடிச்சுட்டம். இப்பம் 1-12 பாவங்கள் கெட்டிருந்தா என்ன பலன்னு சொல்லிட்டு வர்ரோம்.

ஒரு பாவம் கெட்டிருக்கா இல்லியான்னு தெரிஞ்சுக்க லோக்கல்ல உங்க குடும்ப சோசியரை கன்சல்ட் பண்ணுங்க. அல்லது கீழே தந்திருக்கிற பாவ காரகங்கள்ள எதெல்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்கு -கிடைக்கலின்னு பாருங்க.

குறிப்பிட்ட பாவ காரகத்வத்துல உங்க அச்சீவ்மென்ட் 50 சதத்துக்கும் கீழே இருந்தா பாவம் கெட்டு போச்சுன்னு அருத்தம்.

ஜாதகம்ங்கறது 12 சானல்கள் கொண்ட டிவி மாதிரி. இதுல எந்த சானல் சுத்தமா தெரியலியோ அந்த சானல் /பாவம் ஃபணால் ஆயிருச்சுன்னு அருத்தம். ஓகேவா..

ஜாத‌க‌த்தில் 12 சேன‌ல்க‌ள் உள்ள‌தாக‌ சொன்னேன். அவ‌ற்றில் தெரிய‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளை இப்போது பார்ப்போம்.

முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி

2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள்

5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,

6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு

7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம்

10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்

11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.

12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

இன்னைக்கு 2 ஆம் பாவமான – தனபாவம் கெட்டிருந்தா என்ன பரிகாரம்னு பார்க்கனும். பார்த்துருவமா?

பொதுவான பரிகாரங்கள்:

கொடுக்கல் வாங்கல் வேணாம் -கை மாத்து வாங்கறது -கொடுக்கிறதும் கூட வேண்டாம். சம்பளம் வாங்கினதும் “வீட்ல” கொடுத்துட்டு செலவுக்கு கேட்டு வாங்குங்க. தினசரி 1 மணி நேரம் , வாரத்துல ஒரு நாள் மவுன விரதம் இருங்க.

செட்டில்மென்ட் -பஞ்சாயத்துலல்லாம் வாயே திறக்காதிங்க- குடும்பத்துல கூட சொல்ல நினைச்சதை ரெண்டு மூனு தாட்டி மனசுக்குள்ளயெ ரிஹர்சல் பார்த்துக்கிட்டு சொல்லுங்க. வாக்கு கொடுக்காதிங்க.காமராசர் மாதிரி “பார்க்கலாம்”னுட்டே சொல்லுங்க.

கண்,வாய்,தொண்டை பாதிக்க வாய்ப்பிருக்கு . இந்த ஸ்பேர் பார்ட்ஸுக் இமிசை கொடுக்கிற வேலைகள் விட்டுருங்க.

இனி இந்த பாவம் எந்த கிரகத்தால் கெட்டிருந்தால் என்ன பரிகாரம்னு பார்ப்போம்.

1.சூரியன்:
ஞா.கிழமை மவுனவிரதம் -மத்த நாட்கள்ள காயத்ரி,ஆதித்ய ஹ்ருதயம் வாய் விட்டு சொல்லுங்க. கழுத்துல சூரிய வடிவிலான டாலர் போடுங்க. மத்தியில கெம்பு பதிச்சா ஸ்ரேஷ்டம். நீங்க ஒன்னும் தினமணி,தினமலர்ல காலமிஸ்ட் இல்லை.கு.ப ரிப்போர்ட்டர் கூட இல்லேங்கறதை மனசுல வச்சுக்கிட்டு அடுத்தவுகளை விமர்சிக்கிறதை விட்டுருங்க. முக்கியமா மேலதிகாரிகள்.

2.சந்திரன்:
திங்கட் கிழமை மவுனவிரதம் அசாத்தியம் – ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல மெயின்டெய்ன் பண்ண பாருங்க.மத்த நாட்கள்ள கடல்,ஆறு,மனம்,நிலாங்கற வார்த்தைகள் வர்ர சினிமா பாட்டுக்களை வீட்ல வாய் விட்டு பாடுங்க. ஆஃபீஸ்ல மனசுக்குள்ள ஹம் பண்ணுங்க. கழுத்துல பிறை சந்திரன் வடிவிலான டாலர் போடுங்க. மத்தியில முத்து பதிச்சா ஸ்ரேஷ்டம்

3 செவ்வாய்:
செவ் கிழமை மவுனவிரதம் அசாத்தியம் – ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல மெயின்டெய்ன் பண்ண பாருங்க. -மத்த நாட்கள்ள முருகனின் மூல மந்திரத்தை வாய் விட்டு சொல்லுங்க.( தெரியாதவுக இங்கே அழுத்தி முக நூல் பக்கம் வாங்க. ஒரு லைக் போடுங்க -கேளுங்க சொல்றேன்) கழுத்துல வேல் வடிவ டாலர் போடுங்க. மத்தியில பவழம் பதிச்சா ஸ்ரேஷ்டம்

4.புதன்:

நீங்க பெரிய பிசினஸ் மேக்னட்டா இருக்கலாம்.ஆனால் வாழ்க்கைங்கறது ரெம்ப விபரீதமான வியாபாரம். இங்கன லாபம் பார்த்து செயல்பட்டவுகல்லாம் நஷ்டமாயிட்டாய்ங்க. ( இதுல ரெட்டை அருத்தம் இருக்கு -லாபம் பார்த்துன்னா -லாபம் எதிர்பார்த்துன்னு ஒரு அருத்தம் – இன்னொன்னு கிடைச்ச லாபத்தை பார்த்துங்கறது) இந்த வாழ்க்கைங்கற யாவாரத்துல பாலன்ஸ் ஷீட் என்னதான் புஷ்டியா இருந்தாலும் கடேசியில லியாபிலிட்டிஸ் பக்கத்துல மரணம்ங்கற என்ட்ரி விழுந்தா கதை கந்தலாயிரும்.

புதன் கிழமை மவுனவிரதம் அசாத்தியம் – ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல மெயின்டெய்ன் பண்ண பாருங்க. -மத்த நாட்கள்ள ஏதோ ஒரு நாமம் போட்ட சாமியோட மூல மந்திரத்தை வாய் விட்டு சொல்லுங்க.( தெரியாதவுக
முக நூல் பக்கம் வாங்க. ஒரு லைக் போடுங்க -கேளுங்க சொல்றேன்). ஃபோனுக்கு ஒரு கவுத்தை கட்டி மாட்டுங்க. கேபினெட்,கயிறு பச்சை நிறமா இருந்தா நெல்லது)

5.வியாழன்:
சாதிக்கிறவன் சாதிக்கிறான்.சாதிக்க முடியாதவன் போதிக்கிறாங்கற மேட்டரு உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நீங்க அட்வைஸ் பண்ணி கழுத்தறுக்கிறவுகளுக்கு தெரியும்.அதனால பேச்சை குறைங்க. திருந்தறவன் எப்டியும் திருந்துவான்.திருந்தாதவன் எப்டியும் திருந்த போறதில்லை. இதுல உங்க பேச்சுக்கு என்ன வேலை?

வியாழக் கிழமை மவுனவிரதம் அசாத்தியம் – ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல மெயின்டெய்ன் பண்ண பாருங்க. -மத்த நாட்கள்ள பஞ்சாட்சரியை வாய் விட்டு சொல்லுங்க.( தெரியாதவுக
முக நூல் பக்கம் வாங்க. ஒரு லைக் போடுங்க -கேளுங்க சொல்றேன்). சிவலிங்க வடிவ டாலரை கழுத்துல போடுங்க. லிங்கத்துல விபூதிக்கு சென்டர்ல புஸ்பராக கல் பதிச்சா ஸ்ரேஷ்டம்.

6.சுக்கிரன்:

எதையும் பேசி ஆகப்போறது ஒன்னுமில்லை.அதுவும் கில்மா மேட்டருன்னா சு..த்தம். திங்கறதெல்லாம் சில மணி நேரத்துல கழிவுதான். எல்லா கலைகளும் நிறைவேறாத செக்ஸ் ஆசைகளின் தேசலான பிரதிபலிப்பு தான். ஆக கில்மா,தீனி,கலைன்னு பேசி நேரத்தை வீணாக்காதிங்க.

வெள்ளி கிழமை மவுனவிரதம் அசாத்தியம் – ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல மெயின்டெய்ன் பண்ண பாருங்க. -மத்த நாட்கள்ள லட்சுமி தொடர்பான சுலோகம் எதையாவது வாய் விட்டு சொல்லுங்க.( தெரியாதவுக
முக நூல் பக்கம் வாங்க. ஒரு லைக் போடுங்க -கேளுங்க சொல்றேன். இனி அடுத்த கிரக பரிகார பத்தியில முக நூல் பக்கத்து கூப்ட மாட்டேன். அவிகவிக வந்து சேர்ந்திரனும்.ஆமா சொல்ட்டன் ).கழுத்துல வெள்ளியிலான லட்சுமி டாலர் போடுங்க.

7.சனி:
சனி கிழமை மவுனவிரதம் அசாத்தியம் – ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல மெயின்டெய்ன் பண்ண பாருங்க. -மத்த நாட்கள்ள உங்க குல தெய்வம்/கிராம தேவதை -காவல் தேவதைங்கோ -பேரை வாய் விட்டு சொல்லுங்க.( தெரியாதவுக குடும்ப பெரியவுகளை கேளுங்க.குல தெய்வம்னா முருகன்,வினாயகர்னு சொல்லாதிங்க.அது ஜல்லி. ஸ்டீல்ல ஏதாவது ஒரு டூல் வடிவிலான டாலரை போடுங்க ( டூ.ல்: ஸ்பேனர்,மண்வெட்டி,கோடாலி – நான் கோடாலி போட்டிருந்தேன்) தப்பா நினைக்க மாட்டிங்கனா பல்லு விளக்குங்க. தின்ன பிறவு உப்பு கரைசல்ல வாய் கொப்பளிங்க.

8.ராகு:
தினசரி ராகு காலங்களில் அல்லது திருவாதிரை, ஸ்வாதி,சதயம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் மவுன விரதம். எல்லாமே வேலை நாட்கள்ள மாட்டினா ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல மெயின்டெய்ன் பண்ண பாருங்க. கனக துர்கா ஸ்தோத்திரம் சொல்லுங்க.ஹம் பண்ணுங்க. கழுத்துல ஏழு தலை நாகம் தலை விரித்திருக்க உள்ள அம்மன் சிரசை டாலரா அணியவும். அ காளிங்கராய நர்த்தன ஃபோஸ்ல உள்ள கண்ணன்.

நிறைய பொய் சொல்லுங்க. காலங்கார்த்தால டீக்கடையில சூப்பர்ஸ்டார் கிட்ட மாட்டினேன். 100 ரூ கைமாத்துக்கேட்டு சதாய்ச்சுட்டாரு போயேன். எப்டியோ சமாளிச்சு வந்தேன் .இது போன்ற பொய்கள்.

9.கேது:
பைபிள்,குரான் படியுங்கள். ( நீங்க முஸ்லீம் அ கிறிஸ்தவராக இருந்தால் பகவத் கீதை படியுங்கள்) மேற்படி நூல்களில் உள்ள வசனங்கள் ,ஆயத்துகள்,ஸுலோகங்களை வாய் விட்டு சொல்லுங்கள். கழுத்தில் வினாயகர் அ பிற மத சிமபல்ஸ் கொண்ட டாலரை அணியவும்.

“நச்” பரிகாரங்கள் : சுக்கிரன்

அண்ணே வணக்கம்ணே !
நச் பரிகாரங்கள் வரிசையில இன்னைக்கு சுக்கிரனை பத்தி பார்க்கப்போறோம்.சுக்கிரன் தான் காதலுக்கு காரகன். கிரேக்க கலாச்சாரத்துல காதல் தேவதைக்கு வீனஸ்னு பேரு. வீனஸ் என்பது சுக்கிரனின் ஆங்கிலப்பெயர்.

விந்துவை சுக்கிலம்னுவாய்ங்க. விந்துவில் உள்ள உயிரணுக்களை தெலுங்குல சுக்கில கணங்கள்னு சொல்றாய்ங்க.இதுக்கெல்லாம் காரகம் சுக்கிரன் தான். ஆனால் தெரியாத்தனமாவோ அ உள்ளுணர்வின் காரணமாவோ அ தீர்க தரிசனத்தோடவோ இதுக்கெல்லாம் சுக்கிர சம்பந்தப்பட்ட பெயராவே வச்சிருக்காய்ங்க பாருங்க. அங்கதான் நம்ம முன்னோர்கள் நிக்கிறாய்ங்க.

நாளைக்கு ஒவ்வொரு பாவம் கெட்டுப்போனா என்ன பரிகாரம்னு பார்த்துருவம். அடுத்து ஜாதகத்துக்கு ஆப்படிக்கிற கிரக சேர்க்கைகளுக்கு என்ன பரிகாரம்னு பார்ப்போம். இதையெல்லாம் முடிச்சுட்டுதேன் அடுத்த மேட்டருக்கு தாவறதா உத்தேசம்.ஆத்தா என்ன பண்றாளோ பார்ப்போம்.

இனி ஓவர் டு சுக்கிரன்.

யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் “அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது” என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, சூப்பர் செக்ஸ் பவர். படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி.

தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே.

ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை,துரித ஸ்கலிதம்,சொப்பன ஸ்கலிதம், செக்ஸ்வெறி, பர்வெர்சன்ஸ், செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும்.

நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.

பரிகாரங்கள் :

1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும்.

2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.

3. ஆடம்பரம், படாடோபம், ஃபர்னிச்சர், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.

4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.

5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்- இல்லின்னா சேம்பிள் பவுடர் டப்பா, ஃபேர் அண்ட் லவ்லி இத்யாதி) அவர்கள் ஆசியைப் பெறவும்.

6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.6 ஆவது வெள்ளிக்கிழமை 5,7 பரிகாரங்களை ஃபாலோ செய்யவும்.

7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).

8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.

9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும். இந்த திசையில் சமையலறை இருந்தால் நல்லது.

10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

முடிவுரை:

எதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

நச் பரிகாரம்: கேது

null

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஞா கிழமை .சியா சாப்பிடறவுக சியா சாப்டு , வெஜ் பார்ட்டிங்க ஸ்பெஷலா எதுனா ஆக்கச்சொல்லி ஒரு கை பார்த்துட்டு, ஷாப்பிங்/சினிமான்னு போயிட்டு ,சரக்கு பார்ட்டிங்க சரக்கு போட்டுட்டு எட்டுமணிக்கு மேலத்தான் சைட்டு பக்கமே வருவிங்க.

நச் பரிகாரம் தொடரில் இன்னைக்கு கேதுவுக்கான பரிகாரங்களை பார்ப்போம். ஓவர் டு கேது

கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் ‘நம்மவர்’ என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது.

இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.

பரிகாரங்கள்:

1. எளிமையான வாழ்வு.

2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.

3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.

4. யோகம் பயிலுதல்.

5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.

6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.

7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.

8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.

(குறிப்பு: ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.)

பொரிகடலை:

பத்தில் கேது:
இங்கே கேது நிற்பது நல்லதே. இது தொழில் உத்யோக துறையில் தோல்விகளை கண்டு அஞ்சாத மன நிலையை காட்டும்.அதே நேரம் செய்யும் வேலைகளில் புதுமையை புகுத்துகிறேன் பேர்வழி ஏகத்துக்கு குழப்பவும் செய்யலாம். மொத்தத்தில் சோம்பல் இருக்காது. நல்லதாவோ /பொல்லாததாவோ ஏதோ ஒன்னை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.

குரு+சனி /ராகு கேது
தங்கள் தெய்வ, சாஸ்திர நம்பிக்கை முழுக்க ஒழிந்து போகும் வரை சோதனைகள் தொடரும். வயிறு,இதயம், வாரிசுகள், தங்கம்,ரொக்கம் ,அரசியல் வகைகளிலும் பிரச்சினைகள் ஏற்படும்.
கேது சுபபலமானால்:
லைஃப் செட்டில்மென்ட்ல லோகாயதமாக பிரச்சினைகளை தந்தாலும் தங்களுக்கு ராஜ யோகம் இத்யாதியில் ஆர்வம் ,பயிற்சி ஏற்படும்

4ல் ராகு/ கேது
பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது.

செவ்வாயுடன் கேது இணைந்ததால்:
செவ்வாயுடன் கேது சேருவது பரிகாரம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடை முறையில் பார்க்கும்போது நேரடி தாக்குதல்கள் ,விபத்துக்கள் தவிர்க்கப்பட்டாலும் ரத்தம் கெடுதல் போன்ற உடல் நல பிரச்சினைகளோடு மேலுக்கு சமாதானமாய் போனாலும் ஜாதகரிலாகட்டும் எக்ஸ் பார்ட்டியிலாகட்டும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருப்பதை காணமுடிகிறது.. எச்சரிக்கை தேவை. நேரடி எதிரிகள் மட்டுமன்றி ரகசிய எதிரிகளாலும், துரோகிகள் சதிகாரர்களாலும் தொல்லைகள் ஏற்படும். நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து சந்தேக காரராக கூட தயாராகிவிடலாம். சில நேரம் தாங்களும் சதி திட்டம் தீட்ட முனைந்துவிடுவீர்கள் திடீர் என்று விரக்தி ஏற்பட்டு விடும்.