செவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம்

IMG_0027

அண்ணே வணக்கம்ணே !
செவ் காரக மனைவி –பிரச்சினைகள் –பரிகாரம் இதான் இன்னைக்கு பதிவு . உங்க மனைவி எந்த கிரக காரகம்னு தெரிஞ்சுக்கனும்னா பழைய பதிவுகளை தேடி பிடிங்க படிங்க.

செவ் காரக மனைவியால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனேகம் இருக்கு.

சில உபகதைகளை பார்க்கலாம்.

1.கணவர் சர்க்கரை ஆலை சிப்பந்தி. சமைக்கிறச்ச பொஞ்சாதிக்கு நெருப்பு பிடிச்சுருச்சு. அதை அணைக்க இவர் போயி இவருக்கும் மார், கை எல்லாம் வெந்து போச்சு. பொஞ்சாதி டிக்கெட்டு.இவரு சில பல வருசம் கோர்ட்டுக்கு அலைஞ்சாரு.

2.கணவர் கலைத்துறையை சேர்ந்தவர் .பொஞ்சாதி கிரானிக் அனிமிக் பேஷண்ட். தன் வருமானத்துல 90 சதவீதம் பொஞ்சாதி மெடிக்கல் பில்லுக்கே வச்சாகனும்.

3.கணவன் ஈ.பி சிப்பந்தி. பக்கத்து காம்பவுண்ட்ல இவர் மாமா சிகரட் பிடிச்சா இவரை பிடிச்சு ஏறும் பொஞ்சாதி. மாமங்காரன் லேசா சுதி ஏத்திக்கிட்டு கூவ ஆரம்பிச்சா இவருக்கு சிவராத்திரி. கடேசில சொந்த வீடிருக்க வாடகை வீட்டுக்கு போயி அந்த ஆங்க்சைட்டில இவருக்கு ப்ளட் ஷூகர் வந்து போயே போயிட்டாரு.

4.புது பொஞ்சாதி என்னங்க கியாஸ் லீக் ஆகறாப்ல இருக்கு கேஸ் கம்பெனிக்கு சொல்லி விடுங்கன்னாள். நம்மாளு அதை டீல்ல விட்டுட்டான். சிறு தீ பெருந்தீ ஆகி டைவர்ஸ் வரை போயிருச்சு.

5.ஒரு ஹவுஸ் ஓனர் .தன் வீட்டு கரண்டு பில்லை குடித்தனக்காரவிக தலையில போடறதுல ஜித்தன். ஒன் டே அன்னாருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்தது.

இன்னும் ஆயிரமாயிரம் கதை இருக்கு. சுருக்கமா சொன்னா செவ் காரக பெண்ணுக்கு /அந்த பெண்ணால் செவ் காரக பிரச்சினைகள் வரும்.

அதென்ன செவ் காரக பிரச்சினை?

ரத்தம் எரிச்சல்,கோபம்,உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள்.

ரத்தம் போதாம இருக்கலாம். (மாத விலக்கு சக்கரம் அவுட் ஆஃப் ஆர்டராயிரும்) அல்லது ரத்தத்துல எதுவோ போதாம இருக்கலாம். (ஹீமோ குளோபின்/ வெள்ளை அணுக்கள்) அடிக்கடி மூக்குல ரத்தம் வரலாம், பைல்ஸ் இருக்கலாம். ப்ளட் ஷூகர், பிபி வரலாம்.

ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை இருந்து வீசிங் வரலாம், கட்டி ,கொப்புளம் வரலாம். இதெல்லாம் ரத்தம் தொடர்பானவை .

அல்சர்,பெப்டிக் அல்சர் வரலாம். உள்ளங்கையில் எரிச்சல்,உள்ளங்காலில் எரிச்சல் வரலாம். இதெல்லாம் எரிச்சல் தொடர்பானது.

கோபத்துல தனக்கு தீங்கு விளைவிச்சுக்கலாம், பிறருக்கு தீங்கு விளைவிக்கலாம். வீட்டை விட்டு வெளியேறலாம், மஹிளா ஸ்டேஷனுக்கு போயி ரிப்போர்ட்டு கொடுத்துரலாம். இதெல்லாம் கோபம் தொடர்பானவை.

வீட்ல ஷாக் சர்க்யூட் நடக்கலாம்,தீ விபத்து நடக்கலாம்,வாகனவிபத்துல சிக்கலாம்.

அக்கம்பக்கம் உள்ளவிகளோட வாய் சண்டை கைச்சண்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரை போகலாம்.

புருசங்காரனுக்கு தெரியாம தன் அண்ணன் தம்பிகளுக்கு ஏறப்போட்டு அதுல சிக்கல் வரலாம்.

சின்ன வயசு பசங்களோட வெள்ளந்தியாவோ –வில்லங்கமாவோ பழகலாம். அதனால பிரச்சினை வரலாம்.

போலீஸ், மிலிட்டரி,ரயில்வே, ஈபி குடும்பத்தாரோட தகராறு வரலாம்.

புருசங்காரனுக்கு தெரியாம வீட்டுமனைக்கு தவணை கட்டி ஏமாறலாம்.

முணுக்குன்னா கோபம் வந்து தலையை கிரோசின்ல நனைச்சுக்கிட்டு தீ வச்சுக்கலாம்.

அல்லது மணிக்கட்டுல ப்ளேட்ல கீறிக்கலாம். ஆடுமாடு முட்டிரலாம். இப்படி பல பிரச்சினைகள் செவ் காரக மனைவியால் வர வாய்ப்பிருக்கு.

செவ்வாய்னா என்ன நவகிரகத்துல ஒரு கிரகம் அவ்ளதானேன்னிராதிங்க. நம்ம மக்கள் முதல்வர் இருக்காய்ங்க. அவிக ஜாதகத்துல சுக்கிரன் உச்சம். கலைஞர் மாதிரி மானாட மயிலாட ரசிச்சுக்கிட்டு லைஃபை எஞ்ஜாய் பண்ண வேண்டியதுதானே. நெவர்.

அவிக கோபத்துக்கு பயப்படாதவனே கிடையாது. அந்த கோபத்தை தங்களுக்கு சாதகமா பயன் படுத்தி இடை தரகர்களாகி பலரும் சில காலம் ஆதாயமடைஞ்சதையும் நாடு பார்க்குது.

ஏன் இந்த நிலை? அந்தம்மாவுக்கு செவ் 2ல் நின்று (நீசமா) எட்டை பார்க்கிறாரு.

செவ்வாய்க்குரிய கடவுள் முருகன். இவருக்கு இன்னொரு பெயர் குமார சுவாமி. இப்பம் சொ.கு வழக்கை விஜாரிக்கிற ஜட்ஜய்யா பேரும் குமார சுவாமியாம். என்னமோ போங்க.

அட இந்த முருகேசனையே எடுத்துக்கங்க. மம்மியோட ஆள்,அம்பு,படைகளோட ஒப்பிட்டா நாம அவிக கால் தூசுக்கு கூட ஆகமாட்டோம்.

ஆனால் நம்மால ஒரு வில்லங்கம் புதுசா வந்திருக்கு மம்மிக்கு.ஆமாங்ணா நாம கார்டன்,ஜெயில்,மறுபடி கார்டன்னு துரத்தி துரத்தி லெட்டர் போட்டுக்கிட்டிருந்தமா ..எல்லாம் தமிழ் நாட்டோட இழி நிலைய மாத்தற தீர்வுகள் பற்றித்தான்.

ஆரும் கண்டுக்கல. என்ன ஆச்சு? ச்சும்மானாங்காட்டியும் -போது போகட்டுமேன்னு மத்திய அரசுக்கு ஒரு புகாரா அனுப்பினம்.அதை அவிக பர்ஸ்யூ பண்ணி தமிழ் நாடு தலைமை பொறியாளருக்கு அனுப்பியிருக்காய்ங்களாம். ஸ்க்ரீன் ஷாட் கீழே

Modi Vs Lady

மவளோட லோன் மேட்டர்ல இப்டித்தான் புகார் அனுப்பினம் -அது ஏ.பி .சி.எம் செல்லுக்கு வந்ததும் போன் எல்லாம் போட்டு விஜாரிச்சானுவ..
அது ஏதோ பர்சனல் இஷ்யூங்கறதால நாம பெருசா கண்டுக்கல. ஆனால் இது பொது விஷயம் பாஸ் ! கிளிச்சுருவம்ல.

இதுக்கு காரணம் மம்மி ஜாதகத்துல 2 ஆமிடத்துல நின்ன செவ் தான். இவர் தற்சமயம் ராசிக்கு 7 ல். சீக்கிரமே எட்டில் வரப்போறாரு. ஏற்கெனவே ரத்தம் தொடர்பா ஏதும் பிரச்சினை இருந்தா ஒரு ஆட்டு ஆட்டி வச்சிரும்.மம்மி ப்ளீஸ் டேக் கேர் !

மம்மிக்கு நாம அனுப்பின பூரா கன்டென்டும் இங்கே இருக்கு.

ஆருனா புண்ணியாத்மாங்க மானிலகனவுகளை மட்டுமாச்சும் இங்கிலீபீஸுல டப் பண்ணி போட்டா சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல ஒரு மனுவா போட்டு நாஸ்தி பண்ணலாம்.

நிற்க கருவுற்றிருந்த என் மகள் வெள்ளியன்று (06/02/2015) இரவு 8.24 மணிக்கு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் .சுக பிரசவம். தாயும் சேயும் நலம்.
இந்த பதிவுல செவ் காரக மனைவியரால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பார்த்தோம் இதை எல்லாம் ஓரளவுக்கு ஓவர் கம் பண்ணனும்னா என்ன பண்ணனும்? அடுத்த பதிவுல பார்க்கலாம்.

எந்த பிரச்சினைக்கும் தீர்வு

அண்ணே வணக்கம்ணே !
சனத்துக்கு எத்தனை விதமான பிரச்சினை இருக்கோ அல்லாத்துக்கும் நம்ம கிட்டே தீர்வு இருக்கு. அந்த தீர்வுக்கு அடிப்படை இயற்கை – இயற்கை விதிகள் குறித்த புரிதல். மாயமில்லை மந்திரமில்லை. எதையாவது பெறனும்னா எதையாவது இழந்துதான் தீரனும். எதை இழந்தா எதை பெறலாங்கறதுக்கு ஜோதிட அடிப்படை இருக்கு.

என்ன ஒரு வில்லங்கம்னா நீங்க பெற விரும்புவதும் -இழக்கத்தயாராவதும் சமமான மதிப்புடையதா இருக்கனும்.
சனம் தங்கள் தலை எழுத்து சிடில ஸ்டோர் ஆகியிருக்குன்னு நினைக்கிறாய்ங்க. அப்படி இல்லை பாஸ் ! அது ஒரு பென் ட்ரைவ் தான். நீங்க ஈசியா மாடிஃபை பண்ணிக்கலாம்.

சனத்துக்கு வெறும் அடிப்படைய மட்டும் சொல்லிட்டு கழண்டுக்கவும் நாம தயார்.ஆனால் இந்த சிலபசே புதுசுங்கறதால சனம் ரெம்பவே திணறுது. அதனால கோனார் உரை மாதிரி..கன்டென்டை கொடுக்க வேண்டியிருக்கு.

படிப்பு ஏறலியா? வேலை வேணமா? கண்ணாலமாகனுமா? பொஞ்சாதியோட தகராறா? குழந்தை இல்லையா? சொந்த வீடு வேணமா? வாகனம் வேணமா? இப்படி பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்லோனம்.

இதை எல்லாம் எப்படியாச்சும் இதை எல்லாம் இறக்கி வச்சுரலாம்னு பார்க்கிறோம். ஊஹூம். அதுக்கு இன்னம் வேளை வரலை போலிருக்கு.

சனம் சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் கொலை,தற்கொலைன்னு போயிர்ராய்ங்க. அவிக மு.கூ தனத்தால மத்தவுகளுக்கு எவ்ள நஷ்டம்? இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூலம் னு பார்த்தா ரெம்ப சிம்பிள்.

ஆதியோடந்தமா ஒரு தொடர் ஆரம்பிச்சு (மறுபடியுமா?) எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை சொல்லனும்னு ஒரு ஆசை. நம்ம அரசியல் ஈடுபாட்டையும்,சகட்டுமேனிக்கு ஃபோட்டோ எடுத்து முக நூல் போடற வழக்கத்தையும் சிலர் தப்பா நினைக்கலாம்.
ஆனால் நம்ம கான்ஷியஸ் க்ளியரா இருக்கு. ஆமாங்ணா.. நம்ம கையில 1008 தொழில் இருந்தாலும் கை கொடுத்தது இந்த சோசிய தொழில் தான்.ஆனால் நம்ம டிக்சனரில சோசியம் கூட ஒரு அன் ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டி தான்.

சனம் கிட்டே போயி நான் நெல்ல அரசியல் தீர்வை தரேன். அதுக்கு நான் பொழைக்கனுமில்லையா? கொஞ்சம் காசு கொடுங்கன்னு கேட்டா நெல்லாருக்காது.

அதனாலதேன் சோசியத்தை கொடுத்து கொஞ்சம் காசு பார்த்து அல்ட்டிமேட் சொல்யூஷனுக்கு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கம். இன்னம் ஒன்னம் பேரல. அடுத்து இந்த ஃபோட்டோ பிடிச்சு முக நூல்ல போடற மேட்டரு.

சித்தர்கள் சனம் தன்னை அண்டப்படாதுன்னு என்னென்னமோ கலீஜு வேலைல்லாம் செய்வாய்ங்களாம். அந்த மாதிரி கலீஜு வேலைதான் இது. மேலும் கடந்த 5 வருசமா சோசியம் சொல்லி சொல்லி தாவு தீர்ந்துருச்சு.

கொஞ்சம் போல டிவிலயோ-சினிமாவுலயே சின்னதா வாய்ப்பு கிடைச்சா காசு புரளும். ஒரு டீமை அப்பாய்ண்ட்மென்ட் பண்ணிட்டு கடந்த 5 வருச வேலைக்கு ஒரு ஃபினிஷிங் டச் கொடுக்கலாம். நம்ம எழுத்துக்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி இ-புக்காவும் -ப்ரிண்ட் எடிஷனாவும் கொண்டு வரலாம். தெலுங்குல-ஆங்கிலத்துல கொண்டு வரலாம். இதுக்கெல்லாம் அந்த டீமுக்கு சம்பளம் கொடுக்கனுமில்லை. டிவி,சினிமாவுல பணம் புரள்றதா பேசிக்கிறாய்ங்க.அதுவும் மக்கள் பணம் தான்.
மத்தவுக போல மண்டபம் கட்டவும்,ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டவும் அந்த பணத்துக்கு குறி வைக்கல. எப்படியும் கவுரதையான வாழ்க்கையத்தான் வாழல. ஒரு கவுரதையான சாவாவது வரட்டுமேங்கறதுதான் நம்ம லட்சியம்.

பார்ப்பம். நாம ஆருன்னு ஆத்தாளுக்கு தெரியும்.ஆத்தா யாருன்னு நமக்கு தெரியும். அவளோட் அஜெண்டா பிரளயம். நம்ம அஜெண்டா ..பிரளயம் வர்ர வரையாவது சனத்தை கொஞ்சம் நிம்மதியா வாழவைக்கிறது.பிரளயத்துக்கு அப்பாறம் சமதர்மம் கியாரண்டி.அது படாத இடத்துல பட்டு மொத்தமா இழந்த பிறவு காக்கிற பிரம்மச்சரியம் மாதிரி.

ஆத்தாளுக்கு எப்பமோ க்ளியர் பண்ணிட்டம். பிரளயத்துக்கு நான் எதிரி இல்லை. தூக்கு தண்டனை கைதிக்கு ஸ்வீட்டோட ஃபுல் மீல்ஸ் ஆஃபர் பண்றாப்ல அதுக்குள்றயாச்சும் ஒரு பெட்டர் லைஃப் ஸ்டைல்.ஒரு பெட்டர் சொசைட்டி. இதான் என் லட்சியம் பார்ப்பம்.

பார்ப்பம். நிற்க இந்த வலைதளம் 7-8 ஆம் தேதியில திறக்கலியா? அந்தரங்கமும் அரசியல் அரங்கமும் னு ஒரு வில்லங்க பதிவை அனுபவஜோதிடா ப்ளாக்ல போட்டிருக்கன். நேரம் கிடைக்கும் போது பாருங்க.

இன்னொரு மேட்டர்
அனுபவஜோதிடம் டாட் காம் சார்பில் 4 நூல்களை வெளியிடுட்டுள்ளேன். நான்கு நூல்களும் 80 பக்கங்கள்,மல்ட்டி கலர் ரேப்பருடன்,கிரவுன் சைஸ்.

தலைப்புகள்: பணம் பணம் பணம், ஆண் பெண் வித்யாசங்கள்,ஜோதிடமும் தாம்பத்யமும்,ஜோதிடம் 360 புதிய பதிப்பு.
ஒரே சமயத்தில் நான்கு நூல்களும் வாங்கினால் ஒரு செட் வாங்குவோர்க்கு ஒரு செட் இலவசம் -கூரியர் செலவும் இல்லை.விலை ரூ.500

தனி ஒரு நூல் வாங்கினால் ரூ.125 அதே நூலின் மற்றொரு பிரதி இலவசம் .கூரியர் கட்டணம் தனி.மேலதிக விவரங்களுக்கு என் மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.

பி.கு: ஏற்கெனவே புஸ்தவம் வாங்கிட்டிருந்தா.. ப்ளீஸ் நெக்லெக்ட் இட்

எச்சரிக்கை:
நாம வெளியிட்ட 4 புக்ஸும் 1000 மைனஸ் 419+419 தான் கைவசமிருக்கு . இனி ரீப்ரிண்ட் -ரீ எடிஷன்லாம் ரெம்ப லேட் ஆகும். அதனால ஒடனே காசை கட்டி புக் வாங்கற வழிய பாருங்க. மேலதிக விவரங்களுக்கு : மெயில் பண்ணுங்க
swamy7867@gmail.com

12+12 பாலியல் விருப்பங்கள்

அண்ணே வணக்கம்ணே !
பந்தாவா படுக்கையறை ரகசியங்கள்னு அவசரமா ஒரு தொடரை ஆரம்பிச்சோம். ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ப்ராஜக்ட்ல இது ஒரு அங்கம்தான். இடையில ஹிட்ஸ் தொங்கறதை பார்த்து தாவி தர்கமற்ற பிரச்சினைகளுக்கு தாவிட்டமா.. இன்னாபா இது ப.அ.ரகசியம்னு சொல்ட்டு மேட்டரே இல்லியேன்னு மஸ்தா பேரு கஸ்டப்பட்டாய்ங்க.

இப்பம் இந்த பதிவும் அதே ப்ராஜக்ட்ல -அதே தொடர்ல வர வேண்டிய அத்யாயம் தேன்.ஆனால் ஏமாந்த சனம் அண்டாதுங்கறதால புதுசா ஒரு தலைப்பு. இதுக்கு 12+12 செக்ஸுவல் பிஹேவியர்னு பீட்டர் விடலாம்னு பார்த்தேன். அப்பாறம் ட்ராப்.

சைக்காலஜியில இந்த மாதிரி மேட்டர் இருக்கா? இருந்தா எத்தீனி ரகம்னுல்லாம் நமக்கு தெரியாதுங்ணா. நம்முது பட்டறிவு தானே கண்டி பட்ட அறிவு கடியாது. தலைப்புல உள்ள 12+12 பாலியல் விருப்பங்களை ரெண்டு கேட்டகிரியா பிரிக்கலாம்.

1.பாசிட்டிவ் 2.நெகட்டிவ். நாம பாசிட்டிவ் திங்கருங்கறதால இன்னைக்கு பாசிட்டிவ் செக்ஸுவல் பிஹேவியர்ஸ் (9) ஐ பார்ப்போம். இவிகளுக்கு என்ன மாரி பிரச்சினைகள் வரும் அதுக்கு என்ன தீர்வுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.

1.சுகமான கற்பனைகள் – நல்ல ரசனை – கலைகள்ள ஈடுபாடு -பெண்களுடன் இரண்டற கலக்கும் மென்மை/பெண்மை உ.ம் ரெசிப்பி பத்தி கூட டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க. டிப்ஸ் கொடுப்பாய்ங்க. இவிகளை பொருத்தவரை வீடு,வாகனம்லாம் அனுபோகத்துல இருக்கும். (சொந்தம்னு அடிச்சு சொல்லவரலை -எவனுதோ இவிக தங்களோடதை போல அனுபவிக்கறாபல் ஒரு அமைப்பு.

பிரச்சினை:
கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி கியாரண்டி இதை சீரணிச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ் இல்லின்னா பிரச்சினைதேன்.

2.கை நிறைய சம்பாதிப்பாய்ங்க. சிருங்கார ரசம் தொனிக்கும் பாட்டு, வசனம், ஓவியங்களை பத்தி நிறைய பேசுவாய்ங்க. பாடிக்காட்டுவாய்ங்க,பேசிக்காட்டுவாய்ங்க.அன்ன, பானத்துக்கெல்லாம் குறைவிருக்காது குடும்ப வாழ்வில் பற்றிருக்கும். அழகான கண்கள் அமைஞ்சிருக்கும். பார்வையில இதம் இருக்கும் -ரசனை இருக்கும். தோரஹா இருக்காது.

பிரச்சினை:
பேச்சுல உள்ள வேகம் -ஆழம் செயல்லயும் எதிர்பார்க்கப்பட்டு அந்த எதிர்ப்பார்ப்பை பார்ட்டியால நிறைவேற்ற முடியலின்னா பிரச்சினை வரும்.

3.கொஞ்சம் பயந்த சுபாவமா இருப்பாய்ங்க.பிஞ்சுல பழுத்த கணக்கா ருசி காட்டப்பட்டு ருசிக்கு ஏங்கி ஏங்கி இளைச்சு இப்பம் அவெய்லபிள்ங்கற வயசு வரும்போது பேட்டரி வீக் ஆயிருக்கும். அன்னந்தண்ணிக்கு கூட அல்லாட வேண்டி வரலாம். வீடு வாகன விஷயங்கள் பிரதிகூலமா இருக்கும். நடந்தே அலைய வேண்டி சிட்டிபஸ்ல அல்லாட வேண்டி வரலாம்.24 மணி நேரம் மியூசிக் கேட்க விரும்பலாம்.

பிரச்சினை:
இவிக 18 வயசுல கண்ணாலம் பண்ணாலே லேட்டுதான்.ஆனால் பெரியவுகளே ஜாதக நோட்டை எடுத்துக்கிட்டு அலைஞ்சாலும் கண்ணாலம் ? ஊஹூம் ..

4. கலை இலக்கியத்தை பாடமாவே படிச்சிருக்கலாம். வீடு,வாகனம் ஓகே. ஜாதகர் பெண்ணா இருந்து பகல்ல பிறந்திருந்தா அம்மாவுக்கு/தாய் வீட்டு சனத்துக்கு அதீத இம்பார்டென்ஸ்/ இது காரணமாவே தாம்பத்ய வாழ்க்கை ஃபணால். வீட்டோட மாப்பிள்ளைய எதிர்பார்க்கலாம்.ஜாதகர் ஆணா இருந்தால் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் இருக்கலாம். தாய் வயது/ தாய் உடல் வாகு கொண்டவுகளை விரும்பலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

5. கலைகளின் மீது அளவற்ற ஆர்வம்.மற்ற எல்லா விஷயங்களையும் திராட்டுல விட்டுருவாய்ங்க. பிறவிக்கலைஞர்கள், தெய்வீககாதலர்கள். காதலர்/லி க்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தே எதிராளியால அலட்சியப்படுத்தப்படலாம். இவிக கலைக்கு அங்கீகாரம் கிடைச்சு பைசா புரண்டா பரவால்லை. இல்லின்னா பிரச்சினை தான்.இவிகளோட கலைப்படைப்புகளின் சாரம் காமமா இருக்கலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

6.பை பர்த் அ பால்யத்துலயே ஜனனேந்திரியத்துல பிரச்சினை வரலாம். இவிக காதல் மோதல்லதான் ஆரம்பிக்கும். பூனைக்காதலா இருக்கும். எப்பம் முட்டிக்கிறாய்ங்க – எப்பம் கட்டிக்கிடறாய்ங்கன்னு சொல்லவே முடியாது. வீடு வாகனம் தொடர்பான கடன் கழுத்தை நெறிக்கும். பகல்ல பிறந்திருந்தா தாய் கூட நோய் வாய்படலாம். வாகன பறிமுதல், அபராதம், வீடு ஜப்தி கூட நடக்கலாம். காதலர்/காதலியிடமே கை மாத்து வாங்கற கேஸுங்க.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

7.காதலுக்காக உசுரை விடற பார்ட்டிங்க. காதல் கை கூடிட்டா ( ஐ மீன் கண்ணாலத்துல முடிஞ்சு தொலைச்சா- அதிலயும் ஒன்னு மண்ணா வாழ்ந்தா ) ஒவ்வொரு வேளை சோத்துக்கும்,துணிக்கும் கூட அல்லாட வேண்டி வரலாம். இவிக காதல் சிட்டுக்குருவி காதலா இருக்கும். சட்டு புட்டுன்னு பெத்துக்கலின்னா வீரியத்துல கவுண்ட் குறைஞ்சுரும். குழந்தை பிறப்புல பிரச்சினை வ்ரலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

8.கில்மாவுக்காவ ஹை ரிஸ்க் எடுப்பாய்ங்க. ( சுவர் ஏறி குதிக்கிறது Etc) இவிகளும் அன் மேரீடா இருந்து அவிகளும் அன் மேரீடா இருந்தா பரவால்லை. ஆருனா ஒருத்தரு மேரீடா இருந்தா – தந்தியில கள்ளக்காதல் எதிரொலி கூட கேட்கலாம். இவிகளுக்கு இதர வாழ்வியல் பிரச்சினைகள் இருந்தாலே நல்லது இல்லாட்டி வகை,தொகை இல்லாத கில்மாவே இவிக ஆயுளை குறைச்சுரும். நடுவயசுலயே லுல்லாவை உச்சா போறதுக்கு மட்டும் உபயோகிக்க வேண்டி வந்தாலும் வரலாம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

9.அப்பா வழியில சொந்த வீடு இருக்கலாம். அப்பா ஹவுசிங், ஆட்டோமொபைல்ஸ், கலைத்துறையில இருக்கலாம். காதலுக்காக நாடு விட்டு நாடு போகவும் தயங்க மாட்டாய்ங்க. ஏசி வேணம், குர்ல் ஆன் பெட் வேணம்னு பாலைவனத்துல ஒட்டகம் மேய்க்க கூட ரெடி ஆயிருவாய்ங்க. கண்ணாலத்துக்கு மிந்தி காதலியை கர்பமாக்காத பொறுமைசாலிங்க. செக்ஸ் மேல நாட்டமிருக்கும்.ஆனால் அதை தள்ளிப்போட்டுக்கிட்டே வருவாய்ங்க. ( வீரியம் புரண்டா பாய்ஞ்சுருவாய்ங்க அது வேற கதை) ஃபேஸ்புக்ல லவ்/ ஆன் லைன் சாட்ல லவ் எல்லாம் இவிகளுக்குத்தேன் சாத்தியம்.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

10.லைஃப்ல செக்ஸ் இருக்கலாம். செக்ஸே லைஃபாயிட்டா? அது இவிக லைஃபை போல இருக்கும். இழந்த சக்தி வைத்தியர்களின் வேட்டைக்களம் இவிக தான். ஹவுசிங், ஆட்டோமொபைல்ஸ், கலைத்துறையில பத்தோட பதினொன்னா இருந்தா பரவால்லை. எதையாவது சாதிச்சு தொலைச்சா ஒடனே கைனகாலஜிக்கல் பிரச்சினைகள், தம்பதிகள் பிரிவு, சின்ன வீடு ,பொருந்தா காதல்லாம் வந்துரும். ஒரு தலைக்காதல், மிரட்டி காதலிக்க சொல்றது இத்யாதிக்கும் வாய்ப்புண்டு.

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

11.மாமனார் காசுல அப்பார்ட்மென்ட், ஃபோர் வீலர், வெளி நாட்டு சுற்றுலால்லாம் எஞ்ஜாய் பண்ணலாம். ஆடம்பரம், படாடோபம் இத்யாதிக்கெல்லாம் பர்ஸையோ/செக் புக்கையோதிறக்கவேண்டிய அவசியமே இல்லாம எல்லாம் தானா அமையும். ஜாதகர் ஆணா இருந்தா வசதியான அக்கா மகளை கூட மணக்க வாய்ப்பிருக்கு. சின்ன வீடு , எக்ஸ்ட்ரா மேரிடியல் அஃபேருக்கும் சான்ஸ் இருக்கு. அந்த லிங்க்ல கூட சொத்து சுகம் வந்து சேரலாம்.

பிரச்சினை:
பொஞ்சாதிக்கு செக்ஸ் பவர் இருந்து -செக்ல கை.எ வேணம்னா மட்டும் இன்னைக்கு வெளிய போய் சாப்பிடலாம். வீட்டுக்கு வந்ததும்னு பட்டைய கிளப்புவாய்ங்க

12.பாலியல் தொழிலாளிகள், கில்மா வீடியோ , பிட்டு படத்துக்கெல்லாம் இவிக தான் முக்கிய சோர்ஸ். பலான நேரத்துல பொஞ்சாதிக்கு எக்குதப்பா வாக்கு கொடுத்துட்டு அல்லாடற ரகம். இவிக சதைப்பசி ஒரு கட்டத்துல வெறும் பசியா மாறிரும். அப்படி மாறித்தொலைச்சா ஷுகர் வாங்கி சதைப்பசியே இல்லாத ஒரு நிலை கூட வரலாம்

பிரச்சினை:
மறுபடி சொல்லனுமா?

குறிப்பு: இந்த 12 கேட்டகிரியில நீங்க எந்த கேட்டகிரியில வர்ரிங்கன்னு பார்த்து வச்சுக்கங்க. இந்த கேட்டகிரியில இருக்கிறதால வர கூடிய பிரச்சினைகளை தவிர்க்க பரிகாரம் என்னங்கறதை நாளைக்கு பார்ப்போம்.

செமை மேட்டருதான் .. ஆனா..: தீர்வுகள்

அண்ணே வணக்கம்ணே !
நாளை முதல் (திங்கள்) நம்ம பதிவுகள் ஃபேஸ்புக்ல மட்டும் வெளியாகும். உடனே இங்கே அழுத்தி நம்ம அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போட்டுருங்க.

நம்ம இஸ்மாயில் சார் யோசனை – ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் – பாப்பா, காசு பணம் – ஃப்ளாஷ் பேக் ஞா இருக்குல்ல. இந்த காசு பண மேட்டர் உங்களை எப்டி கலாய்க்குதுன்னு ஒரு பிக்சர் இருக்கும். கீழே நான் தந்திருக்கிற பிக்சர்தான் உங்க பிக்சர்னா அதுக்கான பரிகாரங்களை ப்ராக்கெட்ல தந்திருக்கேன். ப்ளீஸ் ஃபாலோ.. கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவரி ஆகி பொருளாதார ரீதியில நெல்ல பொசிஷனுக்கு வந்துருவிங்க. டோன்ட் ஃபர்கெட் டு கன்வே ரிசல்ட் டு மீ. ஓகேவா உடுங்க ஜூட்.

பிக்சர்: 1

கிடைச்சிருக்கிற மேட்டர் சூப்பர் மேட்டருதான்.ஆனால் .. ஏழெட்டு வருசம் கஷ்டப்படனும். அப்பாறமா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். உ.ம் தொழிற்சாலை ,குவாரி, சுரங்கம்

வியாபாரம் என்னமோ ஓகே பாஸ்..ஆனால் தூசு,தும்பு,ஆயில்,கிரீஸ், நெடி மதிய சோத்தை நாலு மணிக்குத்தான் திங்க முடியும்.

நீங்க செய்து வருவது விவசாயம், ஐரன்,ஸ்டீல்,ஆயில், எருமை தொடர்பான தொழிலா? பேமென்ட் லேட் ஆகுதா? வேலைக்காரவுக திருடறாய்ங்களா? தலித்துகள் ஒத்துழைக்க மறுக்கிறாய்ங்களா?

சொத்து,சேமிப்பு, முதலீடுகள் மீது வருசக்கணக்கா வில்லங்கம் தொடருதா?

( தீர்வு/பரிகாரம் )

முட்டிக்கு காக்கி கலர் நீ பேட் போட்டுக்கங்க ( ஸ்போர்ட்ஸ் கடையில கிடைக்கும்) . உங்க தொழில் லைசென்ஸ்,அக்ரிமென்ட், முதலீடு ,சேமிப்பு ,சொத்து பத்து தொடர்பான பத்திரங்கள் டாக்குமென்ட்ஸை காக்கிப்பையில போட்டு பீரோல வைங்க. இருக்கிறதுலயே பழசான பீரோ பெட்டர் சாய்ஸ்.

அப்பா இருந்தா நீங்களே அவரை சலூனுக்கு கூட்டிப்போங்க. அவர் நோயாளியா – வெளிய வர முடியாத சந்தர்ப்பத்துல இருந்தா ஷேவ் பண்ணி விடுங்க. ஹேர் கட் பண்ண கத்துக்கிட்டு ஹேர் க்ட் பண்ணுங்க.

ஒரு வேளை படுத்த படுக்கையா இருந்தா “அலம்பி”விடுங்க. அப்பாவழி உறவினர்கள் யாராவது ஏழையா இருந்தா அவிகளுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க.

தூரப்பயணம் போகுது அங்கே தலித் நண்பர் யாராவது இருந்தா அவிக வீட்ல தங்குங்க. அல்லது ஒரு தலித் நண்பரை கூட்டி வச்சுக்கிட்டு அவருடன் ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க. கு.ப ஸ்லம்மை ஒட்டியிருக்கிற ஹோட்டல்ல ஸ்டே பண்ணுங்க.

பிக்சர் : 2

சூப்பர் ஃபீல்டு கண்ணு .ஆனா லேபர் கோ ஆப்பரேட் பண்ணனும்/ இல்லின்னா பட்டை நாமம் தான்..

( தீர்வு/பரிகாரம் )
காக்கி பாண்ட் அணியவும். தங்கம் தவிர்த்து ஸ்டீல் ஆர்னமென்ட் பூணவும். ஃபீல்டுக்கு குளிக்காம போகவும்.ஹேர் டை போடற வயசா இருந்தா ஹேர் டை தவிர்க்கவும். போலீஸ் காரவுக போடற நிறத்துல ஷூஸ் சூஸ் பண்ணிக்கங்க.

பழைய ,கிழிந்த,சாயம் போட ஆடைகள் அணியவும். ஃபீல்டிலான உங்கள் ரூம்/சாம்பர் ஓலையால் பின்னப்பட்டிருந்தால் நல்லது. அதை சுத்தப்படுத்த வேண்டாம். ரூம் ஃப்ரஷ்னர் ஏதும் யூஸ் பண்ணாதிங்க
வராக மூர்த்தி,வராகி , கிராம தேவதை படங்களை மட்டும் வைத்து பூஜிக்கவும்.

பிக்சர்: 3

வயசுல மூத்த பெண், பயங்கர கருப்பா,கருப்பா பயங்கரமா இருக்கிற பெண், அல்லது உங்க கம்பெனி நீங்க ஊழியரையே மணந்தவரா ? தம்பதிகளுக்குள்ள ஒத்துப்போகலியா?

கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கா? சோம்பல்,அகால போஜனம் ஆகிய குணங்கள் இருக்கா?

(தீர்வு பரிகாரம்:)

காக்கி பாண்ட் அணியவும் -குறைஞ்ச பட்சம் சஃபார் சூட். பிக்சர் 2 வுக்கு கொடுத்த பரிகாரங்களை நீங்களும் உங்கள் மனைவியும் ஃபாலோ பண்ணிக்கனும்.

பிக்சர் : 4

உங்களையும் அறியாம உங்க பேச்சு வெகண்டையா வெளிப்பட்டு வில்லங்கத்தை கொடுக்குதா? கொடுக்கல் வாங்கல்ல தகராறு வருதா? தாமதமாகுதா?

(தீர்வு பரிகாரம்:)

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம “கோடாலி” வச்சிருக்கம். இது மைனர் செயின் கணக்கா தொண்டைக்குழிய டச் பண்ணனும்.

அப்பப்போ வாய் விட்டு ஓம் நமோ வராஹஸ்வாமினே நமஹ ஓம் நமோ வாராஹி மாத்ரே ஸ்வாஹான்னு சொல்லிக்கிட்டிருங்க.

ச்சொம்மா தமாசுக்கு மெட் ராஸ் பாஷை பேசுங்க.க்ளோஸ் சர்க்கிள்ஸ்ல சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தை பேசுங்க.

பிக்சர்: 5

பொதுக்குனு உட்கார்ந்துக்குமோங்கற வீட்ல வசிக்கிறிங்களா? அரத பழசான வாகனத்தை வச்சுக்கிட்டு மல்லாடறிங்களா? அம்மா சொம்மா சொம்மா உங்க பொஞ்சாதியோட மல்லுக்கட்டி லொள்ளு பண்றாய்ங்களா?

கழுத்தில் ஸ்டீல் செயின் அணியவும். கலப்பை, மன்வெட்டி, கொல்லூறு வடிவத்துல டாலர் கிடைச்சா அதை அந்த செயின்ல சேர்த்து போட்டுக்கங்க. நாம “கோடாலி” வச்சிருக்கம். டாலர் மார்பு பகுதியை டச் பண்ணனும்.

வீட்டு வாசற்படியை ஒட்டிய வென்டிலேட்டருக்கு ,வாகனத்தோட பம்பருக்கு எருமைக்கு கட்டற கருப்பு கயிறை கட்டுங்க.

வீட்டை ஒட்டடை அடிக்காதிங்க . கழுவாதிங்க.. அழகுப்படுத்தாதிங்க. வாகனத்துக்கு நோ வாட்டர் சர்வீஸ். பூசை போட்டுத்தான் ஆகனும்னா உங்க கிராம தேவதை அ ஏதேனும் காவல் தேவதை கோவிலுக்கு கொண்டு போய் போடுங்க. வீட்டு ஹால்ல எதுனா ஃபேக்டரி / விவசாயம் தொடர்பான சீனரி கொண்ட போஸ்டரை ஒட்டி வைங்க.

பிக்சர்: 6

எட்டுவருசத்துக்கு மேல சந்ததியில்லாம இருக்கா?

தீர்வு:
பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க. தையல் விட்டது, கிழிஞ்சது,சாயம் போனது போன்ற சட்டை ,பாண்ட் அணியவும். ஷேவிங்குக்கு சில்லறை இல்லாத மாதிரி தாடியை அப்படியே விட்டுருங்க. ( நோ ட்ரிம்மிங் ஆல்ஸோ)

வராஹமூர்த்தி,வாராஹி அம்மனோட உருவத்தை கற்பனை பண்ணுங்க. குழந்தைங்க பிறந்தா ஒரு பரம ஏழை தன் குழந்தைக்கு எந்தவிதமான ஃபெசிலிட்டீஸை கொடுப்பானோ அதை மட்டும் கொடுப்பேன்னு சங்கல்ப்பம் பண்ணிக்கங்க.

செமை மேட்டருதான் .. ஆனா..

வாழ்க்கைங்கறது ஒரு பாழடைஞ்ச கிணறு .அதுல தவறி விழுந்தாச்சு. கைக்கு கிடைச்சதை பிடிச்சுக்கிட்டு மேலே ஏறி வந்தாகனும். ( அப்படி வந்தா அங்கன காத்திருக்கிறது மரணம்..அதுவேற கதை) அப்படி ஏறி வரச்ச நம்ம மேல மண்ணையும் ,செத்தையையும் அள்ளிப்போட ஒரு கூட்டம் மேல காத்திருக்கும். நம்ம மேல விழுந்ததை உதறித்தள்ளிக்கிட்டே இருந்தம்னு வைங்க. ஒரு நாள் கிணறே ஃபில் அப் ஆகி அசால்ட்டா மேல ஏறி வந்துரலாம்.

அதுவரைக்கும் கைக்கு எதாவது அகப்படுதான்னு பார்த்துக்கிட்டே இருக்கனும். கிடைச்சதை ஒரு கையால கெட்டியா பிடிச்சுக்கனும். இன்னொரு கையால தேடலை தொடரனும். இதை விட உசரமான இடத்துல ஒரு பிடி கிடைச்சா அதை பிடிச்சுக்கனும். இதான் வாழ்க்கை.

உஸ்..அப்பாடா ..ஒரு தத்துவம் ஓவர். இனி பதிவுக்கு போயிரலாம்.

நம்ம இஸ்மாயில் சார் யோசனை – ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் – பாப்பா, காசு பணம் – ஃப்ளாஷ் பேக் ஞா இருக்குல்ல. இந்த காசு பண மேட்டர் எப்டி கலாய்க்குதுன்னு ஒரு பிக்சர் இருக்கும். கீழே நான் தந்திருக்கிற பிக்சர்தான் உங்க பிக்சர்னா அதுக்கும் கீழே நான் கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்துக்கங்க.

கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவரி ஆகி பொருளாதார ரீதியில நெல்ல பொசிஷனுக்கு வந்துருவிங்க. ஓகேவா உடுங்க ஜூட்.

நீங்க இப்ப சிக்கியிருக்கிற பிக்சர் :

கிடைச்சிருக்கிற மேட்டர் சூப்பர் மேட்டருதான்.ஆனால் .. ஏழெட்டு வருசம் கஷ்டப்படனும். அப்பாறமா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். உ.ம் தொழிற்சாலை ,குவாரி, சுரங்கம்

சூப்பர் ஃபீல்டு கண்ணு .ஆனா லேபர் கோ ஆப்பரேட் பண்ணனும்/ இல்லின்னா பட்டை நாமம் தான்..

வியாபாரம் என்னமோ ஓகே பாஸ்..ஆனால் தூசு,தும்பு,ஆயில்,கிரீஸ், நெடி மதிய சோத்தை நாலு மணிக்குத்தான் திங்க முடியும்.

நீங்க செய்து வருவது விவசாயம், ஐரன்,ஸ்டீல்,ஆயில், எருமை தொடர்பான தொழிலா? பேமென்ட் லேட் ஆகுதா? வேலைக்காரவுக திருடறாய்ங்களா? தலித்துகள் ஒத்துழைக்க மறுக்கிறாய்ங்களா?

வயசுல மூத்த பெண், பயங்கர கருப்பா,கருப்பா பயங்கரமா இருக்கிற பெண், அல்லது உங்க கம்பெனி நீங்க ஊழியரையே மணந்தவரா ? தம்பதிகளுக்குள்ள ஒத்துப்போகலியா?

கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கா? சோம்பல்,அகால போஜனம் ஆகிய குணங்கள் இருக்கா?

உங்களையும் அறியாம உங்க பேச்சு வெகண்டையா வெளிப்பட்டு வில்லங்கத்தை கொடுக்குதா? பொதுக்குனு உட்கார்ந்துக்குமோங்கற வீட்ல வசிக்கிறிங்களா? எட்டுவருசத்துக்கு மேல சந்ததியில்லாம இருக்கா?

சொத்து,சேமிப்பு, முதலீடுகள் மீது வருசக்கணக்கா வில்லங்கம் தொடருதா?

மேற்சொன்ன பிரச்சினைகள் உள்ளவுகள்ளாம் கைய தூக்குங்க.. மேற்சொன்ன பிரச்சினைகள்ள 35 சதவீதம் இருந்தா போதும்.. உங்க பிரச்சினைக்கு தீர்வு நம்ம கையில இருக்கு. நாளைக்கு சிந்தாம சிதறாம அதையெல்லாம் தர இருக்கிறோம். வெய்ட் அண்ட் சீ..

பிரச்சினை எதுவானாலும் தீர்வு

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புஸ்தத்தை படிச்சுட்டு நம்ம இஸ்மாயில் சார் ஒரு தூள் ஐடியா கொடுத்தாரு. அதாவது ப்ராப்ளம் பேஸ்ட் அனலைஸ் அண்ட் சொல்யூஷன்.

ராஜமன்ட்ரி கொல்லப்புடி வீராஸ்வாமி அண்ட் கோ வினர் பரிகாரங்கள் பற்றிய நம்ம ஸ்க்ரிப்டை படிச்சுட்டு ஓகே பண்ணாய்ங்க.ஆனாலும் ஃபைனலா வெரிஃபை பண்ணி திருத்தங்களுடன் ஓகே சொல்ல வேண்டிய அவிக ஆஸ்தான வித்வான் டிக்கெட் போட்டுட்டாரா அந்த ப்ராஜெக்ட் ஊத்திக்கிச்சு.

இதை ஏன் இங்கே சொல்றேன்னா அந்த புஸ்த்வத்துல இப்படி ஒரு அத்யாயமே வச்சிருந்தன். தினசரி வாழ்க்கையில சனத்துக்கு பலப்பல பிரச்சினைகள் . கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு கிரகத்தை கேட்ச் பண்ண முடியும் (லாஜிக்) .பிரச்சினை தரக்கூடிய பாவத்தை – கிரகத்தை கேட்ச் பண்ண பிற்காடு பரிகாரம் சொல்றதும் சாத்தியம்தேன்.

நாமளும் மன்ச ஜன்மம் தேன். நாம இன்டராக்ட் ஆறது மன்சங்களோட தானே. இதனால மன்சங்களோட பிரச்சினைகள் என்னனு நமக்கு தெரியும். ( இதுல கு.பட்சம் 99.99 பிரச்சினைகள் நமக்கே வந்திருக்கு. அ நம்மை சேர்ந்தவுகளுக்கு வந்திருக்கு. பிரச்சினையிலருந்து எஸ்கேப் ஆறது நம்ம ஸ்டைல் கிடையாது. ஒன்டிக்கு ஒன்டி. எனி கார்னர். இதான் நம்ம சித்தாந்தம்.

அதனால மன்சங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை கே.பி.சுந்தராம்பாள் மாதிரி ஒன்னு ரெண்டுன்னு வரிசைபப்டுத்தியிருக்கம். அதுகளுக்குண்டான சொல்யூஷனும் தந்திருக்கம். இதெல்லாம் அருள் வாக்கு கடியாது, கப்சா கிடையாது. இதுக்கெல்லாம் தியரிட்டிக்கலா -லாஜிக்கலா -அஸ்ட்ராலஜிக்கலா -ஏன் சைக்காலஜிக்கலா கூட நிறைய ஆதாரம் இருக்கு.அதையெல்லாம் இந்த பதிவுல எளுத ஆரம்பிச்சா பிரச்சினைகள் கவர் ஆக நாள்/மாசம்/வருசங்கள் பிடிக்கும்.

மேலும் ஆராச்சும் டாக்டர் பட்டம் கிட்டம் கொடுத்து தொலைச்சா வம்பு. நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா பாஸு! வேணம்னா நம்ம எழுத்துக்களை ஆராய்ச்சி பண்றவுகளுக்கு கொடுங்க ( பைத்தியம் பிடிக்காத பட்சத்துல)

சரிங்ணா ..ஒரே ஒரு மொக்கை போட்டுட்டு பதிவுக்கு போயிரலாம். வேலூர்ல கண்ணப்பர்னு ஒரு சித்தவைத்தியர்.அவரு மூலிகை மணின்னு ஒரு புஸ்தவம் நடத்திட்டிருந்தாரு. அதுல நோயும் மருந்தும்னு ஒரு பகுதி. (கேள்வி -பதில்)

நம்மாளுக்கு ரூசோ சொன்ன கோ பேக் டு நேச்சர் சித்தாந்தம் ரெம்ப பிடிக்கும் போல. சனங்க கேள்விக்கு பதில் சொல்றச்ச மக்களோட பழக்க வழக்கங்களை காஃபி முதல் – கோலா வரை கிழி கிழின்னு கிழிப்பாரு.இந்த ரேஞ்சுல அந்த பகுதி உபதேச மஞ்சரிமாதிரி ஆயிட்டுது.

அப்பம் எங்க அப்பா மதனபல்லியில எஸ்.டி.ஓ போல. கண்ணப்பரோட பதில்கள்ளருந்து நோய் – நோய்க்கான மருந்துன்னுட்டு பாய்ண்ட் டு பாய்ண்ட் தொகுத்துக்கிட்டே வந்தாரு போல. ( ஒரு டாப் சீக்ரெட்: மேற்படி ஸ்க்ரிப்டை எங்கம்மா கை.எ ல பார்த்திருக்கன் -செகண்ட் காப்பியா என்ன தெரியலை)

கண்ணப்பரை நேர்ல சந்திக்கும் போது இந்த விஷயத்தை சொல்ல “அப்படியா புஸ்தவமா போட்டுருவம்”னு போட்டிருக்காரு. கண்ணப்பரோட வாரிசுகள் சினிமா -அரசியல்னு சீரழியாம இருந்தா இப்பமும் மார்க்கெட்ல கிடைக்கலாம்.

இந்த மொக்கை எதுக்குன்னா கண்ணப்பரோட பதில்களை வெட்டி -தொகுக்க அன்னைக்கு எங்க அப்பா இருந்திருக்காரு.

நம்ம பதில்களை வெட்டி தொகுக்கும் அளவுக்கு ஆருக்கு நேரம் இருக்கு.அதனாலதேன் இந்த பாய்ண்ட் டு பாய்ண்ட் ஸ்டைல்.ஓகே உடுங்க ஜூட்.

1.குழந்தை பாக்கியம்: கரு நின்னு மிஸ்கேரி,அபார்ஷன்னு ஆயிட்டிருந்தா?

வேல்,சூலம் மாதிரி எதையாவது வச்சு பூஜை பண்ணுங்க. பூஜையை விட முக்கியம் தியானம்.தியானம்னா பயந்துக்காதிங்க.ஜஸ்ட் வேல் அ சூலத்தை கற்பனை பண்ணனும்.

இஃப் யுவார் ஹேல் அண்ட் ஹெல்த்தி..ஒரு தாட்டி ரத்ததானம் செய்ங்க. உங்க பேர்ல நிலம்/மனை இருந்தா அதுலருந்து வரும் ரிட்டர்ன்ஸை இடது கையால கூட தொடாதிங்க.

முடிஞ்சா மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கங்க. இதை விட முக்கியம் ஏதாவது ஒரு ஆயுதப்பயிற்சி. (நிஞ்சா இன்னபிற)

2. குழந்தை பாக்கியம்: கருவே நிற்கலையா?

வைன் ஷாப் , லாட்டரி,சினிமா, ஃபோட்டோகிரஃபி, ஷேர் மார்க்கெட் , ஃபாரின் கொலாபரேஷன் கம்பெனி ,சீட்டாட்டம் , அன்னிய மதத்தினர் மூலம் வர்ர வருமானத்தை ஓரக் கண்ணால கூட பார்ககாதிங்க.

ஆரு மேலனா வருத்தம் ஏற்பட்டா ஒடனே ஒரு காயிதம் எடுத்துக்கிட்டு வரி வரியா எளுதி ஒரு ஃபைல்ல போட்டு வச்சிருங்க.அதை பத்தி ரோசிக்கவே ரோசிக்காதிங்க.

கிரைம் நாவல் படிங்க ,கிரைம் படம் பாருங்க ( வெளி நாட்டு சரக்கா இருந்தா விசேஷம்)

தினசரி ஒரு மணி நேரம்,வாரத்துல ஒரு நாள் காவி தரிச்சு துளசி மாலையில வினாயகர் டாலர் கோர்த்துக்கிட்டு வினாயகரை தியானம் பண்ணுங்க. யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கவும். தொழில்,உத்யோகம்,வீடு விஷயங்களில் டாம்பீகம்,அலங்காரம் வேண்டாம். எளிமையை கடைபிடிக்கவும்.

3.குழந்தை பாக்கியம்: உச்சியே வெளுத்து போச்சு -முதுகு வளைஞ்சு போச்சு ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லையா?

சஃபாரி சூட், ஸ்டீல் செயின், மோதிரம் அணியவும்.வராஹ மூர்த்தியை தியானம் செய்யவும்.( கருப்பு/ஆஷ் கலர் அ நீல நிறம் – டார்க் /லைட்/ நேவி ப்ளூ/ ஸ்கை ப்ளூ – எதுவானாலும் சரி நீலம்) பெண்கள் இதே நிறத்தில் சேலை உடுத்தலாம்.

ஐரன்,ஸ்டீல்,ஆயில்,சுரங்கம்,குவாரி,மெஷினரிஸ் போன்ற துறைகளில் இருந்தால் உடனே விலகவும். கு.ப அவ்வழியில் வரும் வருமானத்தை வங்கியில் போட்டுவிட்டு வட்டியை கூட தொடாதிங்க. புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு கேட்டா பாப்பா வேணம்னா வேறு எந்த வழியிலயாவது பைசா தேடுங்க.

தலித் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிங்க. செகண்ட்ஸ், துருப்பிடிச்சது,வளைஞ்சது, சாயம் போனது, கருப்பானது போன்ற பொருட்களையே உபயோகிங்க. (புது நோட்டை கூட யூஸ் பண்ண கூடாது)

எச்சரிக்கை:
இந்த பரிகாரங்கள் எல்லாம் மினிமம் டோஸ்தான் . இவற்றை ஃபாலோ பண்றவுக அப்பப்போ டெவலப்மென்ட்ஸை ஷேர் பண்ணிக்கிட்டா ( ஃபோன்ல தேன்) அப்டேட்ஸ் கொடுப்பம். காட்டமான டோஸ் ரெகமெண்ட் பண்ணுவம்.

சரிங்ணா எப்படியோ ஆரம்பிச்சுட்டம். இயற்கை அனுமதிச்சா மன்சனுக்கு என்னெல்லாம் பிரச்சினைகள் வருமோ எல்லா பிரச்சினைகளுக்கும் பரிகாரம் சொல்லிருவம்ல.

திருமண தடை: உடல் -உளவியல் காரணம்

அண்ணே வணக்கம்ணே !
ஒரு படத்துல வடிவேலு “ஒரு மனுசன் வீட்ல இருந்து வெளிய வந்து வீடு சேர்ரதுக்குள்ள எத்தீனி கண்டம்டா சாமீ”ன்னு புலம்புவார். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவுக்கு வர்ரதுக்குள்ள எத்தீனி டைவர்சனு?

நேத்திக்கு சொன்னாப்ல ஃபேஸ் புக் காரன் ஆப்படிச்சுட்டான். மொபைலுக்கு கோட் அனுப்பறேங்கறான். கோடும் வரமாட்டேங்குது.. லங்கோடும் வரமாட்டேங்குது. இப்பம் என்னடான்னா கோட் லிமிட் தாண்டி போச்சு ஃபர்ஸ்ட் நேம் – லாஸ்ட் நேம் ஃபோட்டோ -டேட் ஆஃப் பர்த் எல்லாம் இருக்கிறாப்ல ஒரு ஐ டி ப்ரூஃப் அனுப்பனுமாம்.

ஜா.ரா ரேன்ஜுக்கு இல்லின்னாலும் நமக்கும் ரெண்டு மூணு பேரிருக்கு. பேங்க்லயே ரெண்டு பேரு (அஃபிடவிட் கொடுத்திருக்கம்) என்னா இழவு இதெல்லாம்? அல்லாரையும் பிளாட்ஃபார வியாபாரி மாதிரி வாங்க வாங்கன்னு ஃபேஸ் புக்குக்கு கூப்டாச்சு. இப்பம் நாமே போகமுடியாத ஆயிருச்சு ( சுமார் 4,000 பேரை கூப்டிருக்கம் – நம்ம கான்டாக்ட்ஸ் அப்படி) பார்ப்பம் பான் கார்ட்ல முருகன் அலியாஸ் முருகேசன் கொடுத்தாப்ல ஞா. நாளைக்கு த்தேன் இந்த இழவை எடுக்கனும்.

நிற்க திருமண தாமதம் மேட்டரை மேரீட் லைஃபுக்கு அப்ளை பண்ணிக்க சொல்லி சொல்லியிருந்தம்.அது எத்தீனி பேரு கண்ல பட்டதோ தெரியலை.

இதுவரை மேற்படி மேட்டருக்கு அப்பா,அம்மா , உ.பிக்கள் காரணமா லொள்ளு இருந்தா என்னா பண்றதுன்னு பார்த்தோம். இன்னைக்கு அசலான மேட்டரு தன் திருமணத்துக்கு தானே தடையா இருக்கிறது. அஸ்கு புஸ்கு அதெப்படினு கேப்பிக. சொல்றேன்.

உடலியல் காரணங்கள்:

இழந்த சக்தி வைத்தியர்கள் தர்ர விளம்பரங்கள்ள உள்ள காரணங்கள் அப்படியே பச்சக்குன்னு பொருந்தும். ( கைப்பழக்கம் -சக்தி விரயம் – கனவுகளில் சக்தி வெளியாதல் – தாழ்வு மனப்பான்மை இத்யாதி இத்யாதி) இதையெல்லாம் ஒரு காலத்துல ரெம்ப விரிவாவே எழுதியாச்சு அதனால இப்பம் அம்பேல்.

(இந்த நிலைமை லக்னாதிபதி – அவரோட சேர்ந்த கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன் –

மனோகாரகனாகிய சந்திரனின் நிலை -அவருடன் சேர்ந்த கிரகங்கள்

பஞ்சமாதிபதி அவரோட சேர்ந்த கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்-

ரோகாதிபதி – அவரோட சேர்ந்த கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்
களத்ர பாவம்/ அதில் (ஏழில்) நின்ற கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்

அஷ்டமாதிபதி – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்
விரய பாவாதிபதி -அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன் ஆகியவற்றால் ஏற்படும் – )

மனவியல் காரணங்கள்:
உடலியல் காரணங்களுக்கு சொன்ன அதே கிரகங்கள் இதற்கும் காரணமா இருக்க சான்ஸிருக்கு. கூடுதலாக சந்திரனின் நிலை மற்றும் ஐந்தாம் பாவம் இதற்கு ரெம்ப முக்கியம். இதற்கு பரிகாரம்:

இவற்றிற்கான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம்.. (ஸ்கூலுக்கு வராதவுகளுக்கும் சொல்லிருங்க .. நாளைக்கு வந்துரச்சொல்லுங்க)