செம்ம மேட்டரு: 7 (நான்காம் பாவம்)

DSC_9016

அண்ணே வணக்கம்ணே !
செம்ம மேட்டருங்கற சீரிஸ்ல இன்னைக்கு நாலாம் பாவத்தை பத்தி நிச்சயமா சொல்லிர்ரன்.அதுக்கு மிந்தி சின்னதா ஒரு புலம்பல்.

இன்னைக்கு நாம எளுதிக்கிட்டிருக்கிற மேட்டர்ல ஜஸ்ட் 10% ஒரு முப்பது வருசத்துக்கு மின்ன ஐ மீன் 1984 ல ஆராச்சும் குடுமி ஐயரு நமக்கு சொல்லியிருந்தா நம்ம வல்லரசு கனவுகள் நனவாயிருக்கும் – ரஜினிக்கு பதிலா நாம சூப்பர் ஸ்டார் ஆயிருப்பம்-மோடிக்கு பதிலா நாமதேன் பி.எம் ஆகியிருப்பம்னு பீலா விட மாட்டேன்.ஆனால் சர்வ நிச்சயமா லைஃப் கொஞ்சமாச்சும் பெட்டரா இருந்திருக்கும். அந்தளவுக்கு ஒர்த்தான மேட்டரு இது.
நாம டைட் ஷெட்யூல்லயும் நேரத்தை திருடி -காசு கட்டி காத்திருக்கிற சனத்தோட வவுத்தெறிச்சலை கொட்டிக்கிட்டு மாஞ்சு மாஞ்சு எளுதறம்.ஆனால் பாருங்க தமிழ் இண்ட்லிலயாகட்டும் தமிழ் 10 லயாகட்டும் நம்ம பதிவுக்கு சனம் ஓட்டே போடறதில்லை.

இதுக்கு காரணம் இல்லாம இல்லை. ஏன்னா இந்த சைட்டுக்கு வர்ரவுகல்லாம் சொந்த வீட்டுக்கு வந்த கணக்கா டைரக்டா வந்துர்ரிங்க. நான் உங்களை கேட்டுக்கிறதெல்லாம் ஒன்னுதேன். நெல்ல மேட்டரு நாலு பேருக்கு தெரிய வந்தா -தப்பி தவறி அதுல ஒரு ஆள் இதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாலும் படிப்படியா நாடே மாறிரும். என்னண்ணே ஞாபகமா ஓட்டுப்போடுவிங்கல்ல.

அப்படியே இந்த பதிவுக்கு கீழே ஷேர் பட்டன்ஸ் இருக்கு. நீங்க ஃபேஸ்புக்ல பிரபலமா அங்கே ஷேர் பண்ணுங்க.ட்விட்டர்ல பிரபலமா ட்விட்டர்ல ஷேர் பண்ணுங்க. நிற்க நம்ம தேச கனவு,மானில கனவு எல்லாத்தையும் கட்டு கட்டி மம்மிக்கு போயஸ்கார்டன் முகவரிக்கே அனுப்பிட்டன்.அதுவும் டெலிவரி ஆயிருச்சு . சட்டமன்ற கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. கடவுள் அந்த மவராசிக்கு நல்ல புத்திய கொடுத்து நம்ம ரோசனைகள்ள ஜஸ்ட் ஒரு அஞ்சோ பத்தோ அமலானாலும் சனத்துக்கு செம ரிலீஃப் கிடைச்சுரும்.

இதுக்கு மிந்தியெல்லாம் கடவுள் கிட்டே ஹாட் லைன்ல பேசிக்கிட்டிருந்தம்.இப்பம் நம்ம நெம்பரை அந்தாளு ப்ளாக் பண்ணி வச்சிருக்காப்ல இருக்கு.அதனாலதேன் புலம்பல் சாஸ்தியாயிருச்சு. ஓகே மேட்டருக்கு வந்துரலாம்.

நாலாவது இடம் தாய்,வீடு,வாகனம்,கல்வி,இதயம் இதை எல்லாம் காட்டற பாவம். கடந்த பதிவுகள்ள சொன்னாப்ல எந்த ஜாதகத்துலயும் எந்த பாவமும் 100 சதம் ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதில்லை. அப்படி இருந்தா இந்த பதிவே தேவையில்லை. எல்லாத்தையும் எஞ்ஜாய் பண்ணலாம்.நாம பார்த்தவரை எல்லா ஜாதகமும் அரை குறை ஸ்டஃப் வச்சுக்கிட்டு தான் ஒப்பேத்திக்கிட்டிருக்கம்.

அதனால இதுல எதை விட்டா மத்த மேட்டர்ல ஜொலிக்கலாம்னு பார்த்துரலாம். தாய் மேட்டரையே எடுத்துக்கங்க. சனம் சாய்ஸ்ல விடறது இந்த கேரக்டரை தான்.

தாயை பத்தி நான் சொல்ல ஆரம்பிச்சா எத்தீனி வாத்யார் படம் பார்த்திருக்கம், ராஜ் கிரண் படம் பார்த்திருக்கம்,ராஜாபாட்டு கேட்டிருக்கம். நீங்க வேற எதுக்குன்னே மொக்கைனு சலிச்சுக்குவிங்க.ஆனாலும் ஜோசிய கோணத்துல சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆகனும்.
நாம பிறக்கறதுக்கு மிந்தி தாயோட கருப்பை தான் நம்ம வீடு, நாமளா நடக்க ஆரம்பிக்கிற வரை தாய் தான் நம்ம வாகனம், ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கிற வரை தாய் தான் டீச்சர், அவள் மடி தான் ஸ்கூல், வவுத்துல இருந்த 10 மாச காலம் அவளோட இதயம் தான் நமக்காகவும் ரத்தத்தை பம்ப் பண்ணிக்கிட்டிருந்தது. பிறந்த பிறவும் என்ன? அந்த இதயம் நமக்காகத்தானே துடிக்குது.

ஆக நாலாம் பாவ காரகத்வம் முழுக்க முழுக்க தாய்தான். அவளையே நாம சாய்ஸ்ல விட்டம்னு வைங்க..நமக்கு இதயமே இல்லின்னு அருத்தம். இல்லாத இதயம் வேலை செய்தா என்ன செய்யாட்டி என்னனு இயற்கை கோவிச்சுக்கிட்டு மேசிவ் ஹார்ட் அட்டாக்ல பொட்டுன்னு போயிரவும் வாய்ப்பிருக்கு.
அம்மா உசுரோட இருக்கிற வரை நாம எவ்ள கிழடு தட்டி போனாலும் அவிக டேய் சின்னவனே ..னு கூப்டா படக்குன்னு காயகல்பம் சாப்டாப்ல பாதி வயசு குறைஞ்சுரும்.

அம்மா இப்பம் உசுரோட இல்லியேண்ணே அப்பம் நான் கிழவாடியாத்தான் வாழ்ந்தாகனுமான்னு கேப்பிக சொல்றேன். அவளை பற்றிய நினைவுகள் பசுமையா இருக்கிற வரை நீங்களும் செல்லக்குட்டி தான்.

இதுல இன்னொரு மேட்டரையும் சொல்லனும் என்னை பெத்தவ தான் ஆத்தா மத்தவல்லாம் பொம்பளங்கற மென்டாலிட்டி உதவாது.
நாலு வயசு பொம்பள குழந்தைய “யம்மாடி ஒரு டம்ளர் தண்ணி கொடேன்” னு கேளுங்க ..அந்த தண்ணியோட ருசியே வேற . “த..குட்டி ஒரு தம்ளர் தண்ணி கொடு”ன்னு கேளுங்க.. அந்த ருசி வேற.

பெண்ணை பொருத்தவரை அவள் பிறக்கும் போதே தாயாத்தான் பிறக்கறா. கு.பட்சம் அம்மா வயசு பெண்கள்,அம்மாவோட மூக்கு ,நிறம்,சாடை கொண்ட பெண்களை அம்மாவா நினைச்சு பார்த்தாலே போதும் நாலாவது பாவம் செமையா சார்ஜ் ஏறிக்கும்.
ஆகவே தாய்ங்கறது நாலாம் பாவத்தின் தொகுப்பு தாயை திராட்டுல விட்டா வீடு கிடையாது, வாகனம் கிடையாது,கல்வி கிடையாது,ஹார்ட்டுக்கு கியாரன்டி கிடையாது. பிறவு எதை விடலாம்?
வீடு?
வீடுங்கறதே சமுதாயத்தோட ஒத்து போக முடியாத ஊமை கோபம் தான். அதென்னவோ கோட்டை போலவும் – அங்கருந்து சமுதாயத்துக்கு எதிரா போரிடறது போலவும் ஒரு ஃபீல். இது எம்மாம் பெரிய முட்டாள் தனம் பாருங்க.

சமுதாயங்கறது என்ன? நம்மை மாதிரி நாலு எசென்ட்ரிக் முட்டாள்களோட கூட்டமைப்பு. ஆனால் நாம என்ன நினைக்கிறோம் நான் எல்லாம் ரெம்ப சென்சிட்டிவ்ங்க, ஒரு பேச்சை தாங்க முடியாதுங்கறம். எல்லாருமே அந்த கேட்டகிரி தான்.ஆவனால ரியாக்ட் ஆக முடியல -ஏற்கெனவே ரியாக்ட் ஆகி செமர்த்தியா பல்ப் வாங்கியிருப்பான் அவ்ளதான்.

நம்மையே எடுத்துக்கங்க. கடவுள் புண்ணியத்துல வீடுங்கற மேட்டர் நம்ம மைண்டுக்குள்ள வரல. (நம்முது வேற கடகலக்னமாச்சா செமர்த்தியா பல்பு வாங்கியிருப்பம்) ஓரளவுக்கு வசதியான வீடு (கிரானைட் ஃப்ளோரிங் பாஸ்) வாடகைக்கு கிடைச்சது.

இதுக்கே என்னாச்சு? மொபைல் புக் ஸ்டோர் பண்றேன்னு ஒரு இருபதாயிரம் ரூவா வட்டம், ஒரு மூனு மாசம் வெட்டி அலைச்சல். இதுமட்டுமா ? மினி மொபைல் புக் ஸ்டோர்னு டப்பா கட்டிக்கிட்டு டூ வீலர்ல சேலம் வரை போய் அதுவும் கத்திரி வெயில்ல – ச்சூ ச்சூ வராம -பொளப்பே நாறிப்போச்சு .படிக்கிறது குறைஞ்சு போச்சு, வாகனம்? அதை எடுக்காமயே மொக்கையாகி கிடக்கு.

நான் என்ன சொல்றேன்னா உபரியா காசு இருக்கா? அப்பா,அம்மா,அண்ணன் தம்பி எல்லாம் சொகமா இருக்காய்ங்களா? கட்டின வீடா வாங்கி போடுங்க, சின்னதா அப்பார்ட்மென்ட்ல ஃப்ளாட் வாங்கிக்கங்க. அதை விட்டுட்டு எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்னன்னு வேலைக்காரிக்கு கொடுக்கிற காஃபி மொதகொண்டு கணக்கு பார்த்து வீடு இல்லின்னா கதி மோட்சமில்லேன்னு அலையாதிங்க.

மரணம் வந்தா வாடகை வீட்டுக்கும் வருது,சொந்த வீட்டுக்கும் வருது. தூங்கிப்போன பிறகு கிரானைட் ஃப்ளோரிங்கா, ரெட் ஆக்சைட் ஃப்ளோரிங்கானு தெரியவா போகுது?

நம்ம எல்டர் ஃப்ரெண்ட் ஒருத்தரு பழைய வீட்ல இருந்த வரை கரண்ட்ல இருந்தாரு .9 க்கெல்லாம் ரோட்டுக்கு வந்துருவாரு.சர்க்கிள் இருந்தது.வேலை போனாலும் தொழில் நல்லபடியா நடந்துக்கிட்டிருந்தது.

சக்திக்கு மீறி கடனை வாங்கி கடல் மாதிரி வீட்டை கட்டிட்டாரு. வீட்டுக்கு மேட்சிங்கா நாய் வாங்கினாரு ,இடம் இருக்கேன்னு தோட்டம் போட்டாரு, நாயை கவனிச்சு,தோட்டத்துக்கு தண்ணி விட்டு வீட்டை விட்டு மதியம் 12 மணிக்கு தேன் வெளிய வராரு. சர்க்கிள் போச்சு,கரெண்ட்ல இல்லை .தொழில் முடங்கி போச்சு,

நம்ம நண்பரோட தம்பி ஒரு பார்ட்டி .லக்னம் கடகம். சொந்த வீடு . பொஞ்சாதி மயக்கத்துல வேலைய விட்டுருவாரு.பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு தாய் வீடு போயிரும். உடனே இவரு வேலை தேடிக்கிட்டு பிக் அப் பண்ணிக்கிட்டு வருவாரு ,மறுபடி பழைய குருடி கதவை திறடி .தற்சமயம் வேலை இல்லை. அதுக்கு இன்னம் நாலுமாசம் ஆகும்.

அந்த பார்ட்டி வீட்ல இருந்தாதான் பிரச்சினைனு அவரோட தம்பி “சாமீ..ஒரு அமவுண்டா கையில கொடுத்துர்ரன் .அவனை 9 டு 5 வச்சு டார்ச்சர் பண்ணு. டெய்லி நூறு ரூவாய்க்கு மேல தராத”ங்கறாரு.

நானும் ராத்திரி 7 மணி வரை வீட்ல தான் இருக்கன்.ஆனால் பொஞ்சாதியோட கான்வர்சேஷன்லாம் -ஒரு வார்த்தையில தான் இருக்கும்.
செரி -விடு -டீ- தண்ணி காஞ்சுருச்சா.

மேற்படி பார்ட்டி செம புலம்பலாம். உபகதை உதாரணம்லாம் போதும்ல?

அடுத்து வாகனம் .நம்ம தொழில்,உத்யோகம்,வியாபாரத்துக்கு அவசியமா வாங்கிக்கலாம். தப்பில்லை. அதை விட்டுட்டு கெத்துக்கு வாங்கறது, புது மாடல் வந்திருக்குன்னு நல்லாருக்கிற வண்டியை எடைக்கு போட்ட கணக்கா எக்சேஞ்ச் ஆஃபர்ல தத்தம் பண்ணி புது வண்டி வாங்கறதுல்லாம் வெத்து.
அம்மாங்கற உசுரு வீட்ல இருந்தா நீங்க வண்டியை கிளப்பும் போதே பார்த்துடான்னு பதறும். நீங்க மறுபடி வண்டியோட திரும்பி வர வரைக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் லம்பா மெயில் -எஸ்.எம்.எஸ்ஸுன்னு அனுப்பிக்கிட்டே இருக்கும்.

பொஞ்சாதி கேரக்டர் வேற -அவிகளையும் நீங்க அம்மா கணக்கா ட்ரீட் பண்ணியிருந்தா சேம் எஃபெக்ட் கிடைக்கும் அதை விட்டுட்டு சம்சாரம் அது மின்சாரத்துல மனோரமா மாதிரி ” நீ கம்னு கடா” ரேஞ்சுல மெயின்டெய்ன் பண்ணியிருந்தா வேஸ்டு.

எந்த மேட்டரா இருந்தாலும் செரி அது சுகம் கொடுக்குதா அதுக்குண்டான உழைப்பை கொடுத்தாகனும். வண்டிங்கறது சுகம். அதை துடைக்கிறது,கழுவறது,சர்வீஸுக்கு விடறது,சின்னதா ரிப்பேர் வந்தா உடனே மெக்கானிக்கை பார்க்கிறது,காத்து செக் பண்றது இதெல்லாம் உழைப்பு.சுகமும்-உழைப்பும் பேலன்ஸ் ஆகும் போது சுகம் தொடரும்.

கேம்புக்கு போயி -ஓட்டல் சோத்தை தின்னு வவுறு புண்ணாகி, லாட்ஜ் பெட்ல நாத்தத்துல உருண்டு ,லேசா ஸ்கின் ப்ராப்ளம் ஆரம்பிச்சிருந்து ரிட்டர்ன் வர்ரிங்கனு வைங்க.சீரியல் பார்த்துக்கிட்டிருக்கிற பொஞ்சாதி ரெண்டு நிமிசம் அதை பார்த்துட்டே வந்துட்டிங்களான்னாலும் கோபம் வராது . ஏன்னா நிழலின் அருமை வெயிலில்,வீட்டின் அருமை வெளியூரில் தெரியும்.

தேவையில்லாதப்பல்லாம் சுகத்தை நாடினா தேவையானப்போ கிடைக்காதுங்கோ.ஒரு மவுசுக்கு இத்தீனி க்ளிக் தான். ஒரு மன்சனுக்கு இத்தீனி கிலோ மீட்டர் தான் வாகன சுகம்னு ஃபிக்ஸ் ஆகியிருக்கும்.

விக்கிரமாதித்தன்-பட்டி கதை தெரியும்ல.காடாறு மாசம் நாடாறு மாசம் கதை ஞா இருக்கா? இல்லின்னா கூகுள்ள அடிச்சு தேடி ப(பி)டிங்க.
சரக்கு வாங்க ,குடிக்க,கூத்தடிக்க , ஃப்ரெண்ட்ஸோட மொக்கை போட வண்டிய தொடாதிங்க.பொளப்பா,உத்யோகமா நோ ப்ராப்ஸ்.
பொளப்புக்கே ஆனாலும் செரி வாரத்துல ஒரு நாள் வண்டிய வீட்ல விட்டுட்டு பஸ்ஸுல போங்க. அப்பத்தேன் வண்டியோட அருமையும் தெரியும்.
சகட்டுமேனிக்கு கடனை உடனை வாங்கி -வீட்டை கட்டி வாகனத்தை வாங்கி தவணை கட்டமுடியாம முழி பிதுங்கும் போது அந்த வேக்குவம் ஆட்டோமெட்டிக்கா உங்க ஹார்ட்டை தான் டச் பண்ணும்.

இவ்ள அவதிபட்டு வாங்கியும் அதை மெயின்டெய்ன் பண்ண முடியலியே-அனுபவிக்க முடியலியேன்னு வருத்தப்படும் போது உங்க ஹாட் பீட் ரேட்டே மாறும், பாடியோட பயோ கெமிஸ்டிரியே மாறும்.

உபரியா வண்டியால உழைப்பு குறையும்,கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்,ஹார்ட்டுக்கு பிரச்சினை. வீட்டை தான் கட்டிட்டமேனு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துருவிங்க .அவுட் புட் குறையலாம், அல்லது கடன் இருக்கேன்னு உபரியா உழைக்கலாம் அதுவும் நாஸ்திதான்.
ஏம்பா நான் செரியா பேசறனா?

Advertisements

கிரகங்கள் நின்ற பலன்: 4-10 ல் ராகு கேது

Foto effect 4அண்ணே வணக்கம்ணே !

கிரகங்கள் நின்ற பலன் வரிசையில 4-10 ல் ராகு கேதுவுக்கான பலனை சொல்லோனம்.  நாலுங்கறது தாய்,வீடு,கல்வி ,வாகனம் ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கே ராகு இருந்தால் இந்த மேட்டருக்கு எல்லாம் பாதிப்பு வரும்.ஆனால் இந்த பாதிப்பு தான் யோகம். அது எப்படின்னு கவிதையில சொல்லியிருக்கன்.

புரியாதவுகளுக்கு (கமெண்ட்ல வந்து சொல்லோனம்) மறுபடி ஒரு பதிவு போடறேன். இந்த விசப்பரீட்சை இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான். வலையுலகத்துல மஸ்தா பேருக்கு நம்ம முருகேஸுக்கு தமிழ் போதாதுப்பான்னு நினைக்கிறாய்ங்களாம். அவிக வாயை மூடனும் இல்லை. (இதை தொடர நான் மூடனும் இல்லை -வார்த்தை விளையாட்டு ) அதுக்காவத்தான்.

எச்சரிக்கை:

சிகப்பு நிற வரிகளின் அர்த்தம் விளங்க கொஞ்சம் முக்கனும்.

 

குடியிருந்த கோவில் என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் சால பகர்ந்திட்டார்
ஆயின் தாய் மடி விட்டிறங்கினோரே முன்னேற்ற திசை நோக்கி நகர்ந்திட்டார்
முன்னேற்றம் என்றே நான்  நவில்வது உள்ளார்ந்த வளர்ச்சியாகும்.
அன்னை முலை மறவாதோர் புகை என்றும் மதுவென்றும் சிக்கிவிட நாடி தளர்ச்சியாகும்
அன்னை விட்டவனே பின்னை கன்னிக்கு நகர்தல் வேண்டும்
காதல் பகிர்தல் வேண்டும்.
அன்னைக்கே அடிபணிவேன் -எந்த கன்னிக்கும்  நான் பணியேன் என்றே அவனிருக்க -மனம்
பண்ணை போலாகும்.முடிச்சுகள் மட்டும் தான் அங்கே பயிராகும்
கருப்பை தரும் புகல் ஐயிரண்டு மாதம் தான் உயிர் காக்கும்
பிறப்பை நோக்கி அது நகராக்கால் அதுவே உயிர் தாக்கும்
அன்னை முலைச்சூடு சில காலம் தெம்பு தரும்
அதிலவனே தங்கி விட்டால் ஊறு தரும் வம்பு வரும்.
அவள் கருவிலே இருந்த நாளை இவன் மனம் மறவாதே மருவ தவித்திடுமாம்.
கருவிலே தங்கி விட்டால் காலன் முத்தமன்றி அன்னை மடி கிட்டிடுமோ?
அவள் மடி வேண்டுமென்று அதிலே தங்கி விட்டால் தந்தையவன் தோள் மார்பு  கிட்டுமோ?
அவன் தோளோடு தங்கி விடின் வேற்று  ஆளோடு தொடர்பு எது?
சிற்றடி கொண்டே தான் வீடெங்கும் அளந்திருந்தால் மூவுலகம் அளந்திடவே கால்கள் பலம் பெறும்.
வீடெனக்கு சொர்கம் என்றே சொக்கி நீ நின்றால் மனிதக்காடுனக்கு அச்சம் தரும்
கல்வியில் சிறந்திடவே கல்வி சாலை ஏகிடவே தந்தை தோள் மறந்து இறங்கவேண்டும்.
எண்ணும்-எழுத்தும் கற்றே உன் அறிவு துலங்க வேண்டும்.
கல்விக்கண்ணிருப்பின் உலகம் உனை நோக்கும்
தொழில் கற்றே எழில் பெறின் பசித்தழல் சுட்டிடலாம்.
காடெங்கும்  நீ அலைய வேட்டை தொழில் கற்றே தந்தைக்கு தோள் கொடுப்பின்
வீடெங்கும் ஒளியாகும் வாழ்வில் களி சேரும்.
காலால் நடந்திட்டால் காலம் முந்தும்  என்று வேட்டைக்கு உதவி என்றே வாகனம் ஏறிட்டால் -வாழும்
காலமெலாம் போதாது உலகிதனை அளந்திடவே
வாகனம் இறங்கி வந்தால்  வீடு வரவேற்கும்.
பெற்றவரோடு உந்தன் உற்றவர்  முகம் பார்க்க
பட்டபாடெல்லாம் பாட்டாகும்
தோற்றோடும் காட்டாறும்.
வாழ்க்கையின் அடி நாதம் ஒன்றே தான் அது  நகர்தலாகும்
நகர்வு நலிந்திட்டால் இருப்பு சலிப்பாகும்
வாழ்வின் சலிப்பில் உன் வாழ்வு பதராய் விளிப்புறும்

4.மாத்ரு பாவாதிபதி நின்ற பலன்

4-1 லக்னத்தில் நின்றால்:
தாயுடன் பிணைப்பு. ,தாய் வழி உறவால் உதவி. சொந்த வீடு,வாகனம் அமையும். உயர் கல்வி சாத்தியமாகும்.

4-2 இரண்டில் நின்றால்:
தாய் வழி சொத்து, தாய் வழி உறவின் ஆதரவு, கெட்ட நேரத்தில் தாய்வழி சொத்தை விற்று செலவழித்துவிட்டாலும் பின் சிறுக சிறுக சேர்த்து சொத்து வாங்கலாம். வாகன யோகம், தெரிந்ததை எதிராளிக்கு எளிமையுடன் சொல்லி தரும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். மென்மையான உணர்வுகள் இருந்தாலும் பொருளாதார விஷயங்களிலும் கவனம்.
4-3 மூன்றில் நின்றால்:
தாய்க்கு நல்லதில்லை, வீடு மாற்றம்,ஊர்மாற்றம்,வேலை மாற்றம் ஏற்படலாம். வாகனத்தில் சுற்றி அலையும் வேலை அமையலாம், வழக்கறிஞர், பட்டிமன்ற பேச்சாளர் ஆக வாய்ப்பு. பேச்சு அக்ரசிவா,அட்வென்சரஸா இருக்கலாம். இதயபடபடப்பு இருக்கலாம்.
4-4 நான்கில் நின்றால்:
தாய்க்கு நல்லது.ஆனால் தந்தையின் ரோலையும் ப்ளே பண்ண வேண்டி வரலாம். சொந்த வீடு,வீட்டுமனைக்கு வாய்ப்பு.சொந்தவாகனம் உண்டு. உயர்கல்விக்கு வாய்ப்பு. ஹவுசிங்,ஆட்டோமொபைல்,இன்டிரியர்ல கான்சன்ட் ரேட் பண்றது பெஸ்ட்.
4-5 ஐந்தில் நின்றால்:
கடந்த பிறவியிலான தாய் வயிற்றிலேயே மீண்டும் பிறந்திருக்க வாய்ப்பு. பூர்விக சொத்தாக /பரிசு, பாராட்டாக வீடு ,வாகனம் அமையலாம். பெரிதாக அகடமிக் எஜுகேஷன் இல்லாமலே உள்ளுணர்வு காரணமாகவே விஷய ஞானம்,புகழ் கிடைக்கலாம்.
4-6 ஆறில் நின்றால்:
தாய்க்கு நோய் அ தாயுடன் கருத்து வேறுபாடு அ அவருக்கு கடன். வீட்டுக்கடன்,வாகனக்கடன். வீடு ,வாகன விஷயங்களில் வில்லங்கம். படிப்பில் அடித்து பிடித்து முன்னேறுவது. ரீ க்ரெக்சன்,ரீ டோட்டலிங் தேவைப்படலாம். இதய நோய் வர வாய்ப்பு.
4-7 ஏழில் நின்றால்:
தாயுடன் நல்ல தோழமை. மனைவி வழியில் சொந்த வீடு,வாகனம்.கம்பைன்ட் ஸ்டடி,கூட்டு ஆராய்ச்சியால் பேர் புகழ். தாய் வழி உறவில் மனைவி அமையலாம். தாய்க்கு பின் தாரம் என்பதற்கு பதில் தாய்க்கு பின் தாயே என்ற பார்த்திபன் சொல் நடைமுறையில் தெரியலாம்.
4-8 எட்டில் நின்றால்:
தாய்க்கு கண்டம்/தாயுடன் பிரிவு. அவருக்கு கடும் உடல் உழைப்பு கட்டாயமாகலாம். ஸ்தான நாசம். வீடு வாசல் இழக்க நேரலாம். விபத்துக்கு அ வாகன திருட்டுக்கு வாய்ப்பு. கல்வியில் ஓரிரு கல்வியாண்டு வீணாதல் அல்லது பாதியில் நின்று போதல்.
4-9 ஒன்பதில் நின்றால்:
தாயே தந்தையின் கடமைகளை ஆற்ற நேரலாம்.அல்லது தந்தை தாயுமானவர் கணக்காக தாயின் கடமைகளை ஆற்ற நேரலாம்.பூர்விக சொத்தாய் வீடு. தந்தை/பெரிய மனிதர்கள் தரும் பரிசாய் வாகன யோகம். ஜாதகரின் கல்வி/வித்தைக்கு தூரதேசங்களில் இருந்து பரிசு பாராட்டு. தூர தேசங்களுக்கு போய் கல்வி பயிலும் வாய்ப்பு.
4-10 பத்தில் நின்றால்:
இத்தோடு பத்துக்குடையவரும் 2 ல் நின்றால் நிட்சேப யோகம். (புதையல் யோகம்) அதுக்குன்னு கடப்பாறைய தூக்கிட்டு கிளம்பிராதிங்க. உங்கள் ஞானம் /கல்வி அறிவு உங்க பேச்சு எழுத்து திறமையால் புதையல் எடுத்த கணக்காய் பயன் தரும். தொழிலில் தாயின் வழிகாட்டல் ஒத்துழைப்பு கிட்டலாம்.ஹவுசிங்,ஆட்டோமொபைல்,இன்டிரியர் போன்ற தொழில் அமையலாம். தாய்/தாய் வழி உறவுகளின் பரிசு பாராட்டாய் வாகனம் அமையலாம். தொடர்ந்து படிச்சிட்டே…… இருப்பிங்க.
4-11 பதினொன்றால்:
தாயோடு -தாய் வயது/சாயல் உள்ள மற்றொரு பெண்ணின் பாசமும் கிட்டும். இரண்டு வீடுகள்/இரண்டு தலைவாசல் கொண்ட வீடு/இரண்டடுக்கு மாடி வீடு அமையலாம்.வாகனமும் ஒன்றுக்கு இரண்டாய் அமையலாம்.டபுள் டிகிரி வாங்கலாம். அக்காவே தாய் பாசத்தை அள்ளி வழங்கலாம். அம்மா கூட வெளிய போனா அக்காவான்னு சனம் கேட்கலாம்.
4-12 பனிரண்டில் நின்றால்.
தாய் இருந்தாலும் இல்லைங்கற நிலை இருக்கலாம்.(நோயாளி-வெளியூர்) அல்லது தாயால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்க வேண்டி வரலாம், வாகனம் ,கல்வி தொடர்பான செலவுகள் எகிறும். இதயம் பிரச்சினை கொடுக்கலாம்.

ஜோதிட மர்மங்கள் : 4

ஏழாமிடம் தொப்புள் – மனைவி – நண்பர்கள் ஆகியோரை காட்டும். தொப்புள் தாய்க்கும் மகனுக்கும் இடையிலான கேபிள். சப்ளை சானல் .

நல்ல அம்மா நல்ல ஆரம்பம். “மாதா செய்தது மக்களுக்கு” “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -அவன் நல்லவன் ஆவதும் -தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே”

அம்மாவிடம் “அம்மா சுகத்தை “அனுபவித்தவன் அதை மனைவியிடமும் பெற அறிந்திருப்பான். அம்மாவிடம் கொடுமை அனுபவித்தவன் “சூடு கண்ட பூனை மாதிரி” பொஞ்சாதிய தள்ளியே வைப்பான். பெண்ணை தாயாக பாவித்தால் அவள் உலகத்தாயாக மாறி – சக்தியாக மாறி சம்ரட்சிக்கிறாள்.அவளை ஜஸ்ட் ஒரு பெண்ணாக பார்க்கும் போது தான் சிக்கலே ஆரம்பம். அவள் அதை அங்கீகரித்தாலும் சிக்கலே.அங்கீகரிக்காவிட்டாலும் சிக்கலே.

ஏழாமிடம் சுபபலமாய் இருந்தால் தொப்புள் – தாய் ,மனைவி என்ற இந்த மூன்று மேட்டரும் ஓகே. ஒரு ஆணுக்கு தாயும்,மனைவியும் கரெக்டா செட் ஆயிட்டா அவனோட நண்பர்கள் வட்டம் இவனை மையமாக கொண்டு செயல்படும்.

அப்பா மாவட்ட கருவூல அதிகாரி .அவரை தேடி வர்ர விசிட்டர்ஸை விட நம்மை தேடி வர்ர விசிட்டர்ஸ் அதிகம். சாதாரணமா அப்பா,அம்மாவுக்கு இதெல்லாம் கடுப்பை தரும் மேட்டர்.ஆனால் நம்மை தேடி நம்ம “பட்லிக்களே” வந்தாலும் ..
அப்பா ” சார்.. மேல இருக்காரு..போங்க”ன்னிருவாரு. அம்மான்னா டீ,காஃபி,இத்யாதில்லாம் ஆஃபர் பண்ணுவாய்ங்க. எட்டாங்கிளாஸ் படிக்கிறச்ச நண்பனுக்கு யூனிஃபார்ம் இல்லாம -அவனை விரட்டி விட அம்மா நம்ம சட்டையை கொடுத்து விட்டவுக.

பொஞ்சாதி மேட்டர்லயும் பரவால்லன்னு தான் சொல்லனும். “பிறப்புலயே நோயாளியா” இருந்தாலும் (அப்படி ஒரு ஃபீல் அவிகளுக்கு) பல்லை கடிச்சுக்கிட்டு வேண்டியதை செய்வாய்ங்க (கொஞ்சம் ஸ்லோ)

இதனால நம்ம நண்பர்கள் வட்டம் எக்ஸ்பான்ட் ஆயிட்டே போனது. நல்லதோ கெட்டதோ நண்பர்கள் மூலம் நடந்ததே 99.99 சதவீதம். இது ஒரு வட்டம்.ஆரம்ப புள்ளி தொப்புள் முடிவு புள்ளி நண்பர்கள்.

ஒருவன் யாரையோ எதையோ இழக்க வேண்டும் என்பது அவன் தலை எழுத்தாயிருந்தால் – அது சப் கான்ஷியலா அவன்ல ஃபீட் ஆகியிருக்கும் போல. அதனால அவன் இறுக்கி கொள்ள பார்ப்பான். இந்த இறுக்கமே இழப்புக்கு ஆரம்பமாயிரும்.

நம்மை பொருத்தவரை ஆராயிருந்தாலும் வந்தால் வரவில் வைப்போம் -போனால் செலவில் வைப்போமே தவிர ஃபீல் பண்றதெல்லாம் கடியவே கடியாது.

வந்தவுகளை விரட்டி விடறாப்லயே பேசுவம்..அது ஜோசியம் கேட்க வந்தவுகளா இருந்தாலும்.

உ.ம் ” மச்சான் ! நானே கெட்டு நொந்து கிடக்கேன். டேமேஜ் பார்ட்டி .ஸ்க்ராப்..என்னால என்னத்தை கிழிக்க முடியும்னு வந்தே”
“யாரோ உங்களை மிஸ் கைட் பண்ணியிருக்காய்ங்க. நாம ஒன்னும் ஜோதிடப்புலியெல்லாம் இல்லை. நமக்கு தெரிஞ்ச ஜோசியமே ஒரு சதவீதமோ -ரெண்டு சதவீதமோ”

நாம இழக்க தயாராயிட்டா இழப்புகள் தவிர்க்கப்படும். அப்படியே இழந்தாலும் பிரச்சினையில்லை. இதான் சூட்சுமம். “அந்த்ய நிஷ்டூரத்தை விட ஆதி நிஷ்டூரம் பெட்டர்”

உங்க ஜாதகத்துல 7 ஆமிடத்தின் பலத்தை -சுப பலத்தை பொருத்து அம்மா -மனைவி -நண்பர்கள் அமையறாய்ங்க.
நீங்க எந்தளவுக்கு இவிக மேல டிப்பெண்ட் ஆகறிங்களோ அந்தளவுக்கு மேற்படி பாவ பலம் குறைஞ்சுக்கிட்டே வரும்.

ஒரு உறவு தொடர டிப்பென்டன்சி குறையனும். சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் அம்மா,பொஞ்சாதி ,நண்பர்கள் மேல டிப்பெண்ட் ஆறதை விட்டு தொலைங்க. 7 ஆம் பாவத்து தீய பலன்லாம் பெருமளவு குறையும்.

தாயா ? பேயா ?

தமிழ் சினிமால மதர் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆறதுக்கு ஒரு காரணத்தை ஏற்கெனவே ஒரு தாட்டி சொன்னாப்ல ஞா.
//நாம அம்மா உசுரா இருக்கிறச்ச அவிகளை அலட்சியப்படுத்திர்ரதான். அவிக போய் சேர்ந்த பிற்பாடு சினிமா அம்மா இடத்துல நம்ம அம்மாவையும், ஹீரோ இடத்துல நம்மையும் கற்பனை பண்ணிக்கிட்டு உதவாக்கரை சினிமாவ எல்லாம் ஹிட் ஆக்கறோம். //

மதர் சென்டிமென்ட் சினிமால்லாம் சூப்பர் ஹிட் ஆக இன்னொரு காரணம் என்ன தெரியுமா? சினிமால ஒரு பெண்ணின் வாழ்க்கையை கூறு போட்டு -அம்மாங்கற கோணத்தை மட்டும் ஜூம் போட்டு காட்டிர்ராய்ங்க.

அம்மாவோட லைஃப்ல அவிக என்னென்னவோ பாத்திரங்களை போஷிச்சிருப்பாய்ங்க. ஆனால் அதையெல்லாம் ப்ளர்ராக்கி காட்டறதால தான் மதர் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுது.

கெட்ட மகன்கள் இருக்கலாம். ஆனால் கெட்ட தாய்னு ஆரும் கிடையாதுங்கறது தமிழ் சினிமால டயலாகா வேணாம்னா நெல்லா இருக்கலாம்.ஆனால் யதார்த்த வாழ்க்கையில பார்க்கும் போது.. ப்ர்ர்.

சரி.. ஜோதிடப்படி மாத்ருஸ்தானாதிபதி லக்னாத் எந்த பாவத்துலருந்தா எப்படியா கொத்த மம்மி அமைவாய்ங்கன்னு இன்னைக்கு பார்ப்போம்.
நான்காமிடம் வெறும் மம்மிய மட்டும் காட்டறதில்லிங்ணா. வீடு,வாகனம்,கல்வி,இதயம் ஆகிய விஷயங்களையும் காட்டுது.

1.மாத்ருஸ்தானாதிபதி லக்னத்துல இருந்தா:
தாய்:
அம்மாவோட இம்பாக்ட் ஜாதகர் மேல அதிகமா இருக்கலாம். அம்மா கோண்டா மாறலாம்.
வீடு,வாகனம்,கல்வி :
தாய் வழியில வீடு அமையலாம். ஜாதகர் சிறப்பா கல்வி பெற்று உத்யோகம் செய்து வீடு கட்டலாம். ஹவுசிங் ஆட்டோமொபைல் துறைகளில் வளர்ந்து வீடு ,வாகனம் எல்லாம் அமைய பெறலாம்.பாசப்பறவையா இருப்பாய்ங்க.

2.ரெண்டில் இருந்தா:
அம்மா வழி உறவுகள் உதவலாம். அம்மா வழி சொத்துக்கள் மூலமா வருமானம் கிடைக்கும். கிருக,வாகன யோகம் உண்டு.ஆனால் அடிக்கடி இருக்கிறதை வித்து புதுசா வாங்க துடிப்பாய்ங்க. ட்யுட்டோரியல்,ஸ்கூலுன்னு வைக்கலாம். நாலு ரூவா சம்பாதிக்கலாம்.மணி மைண்டடா இருப்பாய்ங்க.

3.மூன்றில் இருந்தால்:

அம்மா ஒர்க்கிங் வுமனா இருக்கலாம்.அல்லது அவிக குடும்பத்துக்காக அல்லாட வேண்டி வரலாம்.அடிக்கடி வீடு மாத்த வேண்டி வரலாம். வாகன விஷயத்துலயும் இதுதான் நிரந்தரம்னு சொல்ல முடியாத நிலை. கல்வி விஷயத்துல கூட அடிக்கடி க்ரூப் மாத்திக்க கூடும். அல்லது வெளியூர்ல தங்கி படிக்கலாம். தொலை தூரம் ட்ராவல் பண்ணி படிக்கலாம். இதய படபடப்பு இருக்கலாம்.

4.நான்கில் ஆட்சி பெற்றிருந்தால்:
அம்மாவோட கமாண்ட் அதிகமா இருக்கும். சிலர் விஷயத்துல அப்பா,அம்மா பிரிவினால் ஜாதகர் அம்மா போஷனையில் இருக்கவேண்டி வரலாம்.தாய் வழியில் சொந்த வீடு,வாகனம் அமையலாம். ஜாதகர் நல்ல கல்வியாளரா இருக்கலாம். நல்ல மனம் படைத்திருப்பார்.

5.ஐந்தில் நின்றால்:
தாய் என்றால் ஒரு அலட்சிய பாவம் இருக்கும். அதே நேரம் சப்கான்ஷியஸா அம்மா மேல உசுரையே வச்சிருப்பாய்ங்க. அதிர்ஷ்டவசமா வீடு,வாகன யோகம் அமையும்.( முயற்சி இல்லாமல்/பாதி விலையில/குலுக்கல்ல). தனியார் பள்ளி/கல்லூரிகள்ள லட்சக்கணக்கா கொட்டிக்கொடுக்காமயே,கண் விழிச்சு மனப்பாடம் செய்யாமலே அசால்ட்டா படிச்சு பாஸாயிருவாய்ங்க. அதிர்ஷ்டத்தையும்,விதியையும் நம்புவாய்ங்க.

6.ஆறில் நின்றால்:
தாய் நோயுறுவார். அல்லது கடன்,வழக்கு தொல்லைகள் ஏற்படும். ஜாதகர் தாயுடன் முரண்படுவார். வீட்டின் மீது கடன் இருக்கும்.மூழ்கியும் போகலாம். சகட்டுமேனிக்கு ஹவுசிங் லோன்,வெயிக்கிள் லோன் போட்டு கட்டமுடியாம தவிப்பாய்ங்க. கல்விக்கடன் கிடைக்கும். லா,மெடிசின் படிக்க முனைவார்கள். ஒன்றிரண்டு கல்வியாண்டு வீணாகலாம்.

7.ஏழில் நின்றால்:
தாய் வழியில் பிறந்தவர் மனைவியாவார். அல்லது தாய்க்கும் -மனைவிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். ஜாதகருக்கு தாயுடன் நல்ல தோழமை இருக்கும். அப்பார்ட்மென்ட்ல வீடு அமையலாம். அல்லது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கூட்டாக மனை வாங்கி வீடு கட்டலாம். மனைவி வழியில் வீடு,வாகனம் அமையலாம். அல்லது நண்பர்கள் உதவுவர். கம்பைண்ட் ஸ்டடில ஆர்வம் இருக்கும். காதல் ,நட்புக்கு முக்கியத்துவம் தருவார்.

8.எட்டில் நின்றால்:
நான்குக்குடையவர் எட்டில் நின்று தாயின் ஜாதகத்திலும் ஆயுள் பலம் இல்லாவிட்டால் தாய்க்கு மரணம் ஏற்படலாம். அல்லது பிரிவு ஏற்படும். தாய்க்கு கடுமையான உடல் உழைப்பு விதிக்கப்பட்டிருக்கும். எதிர்பாராவிதமாய் சாலை அகலப்படுத்தல் போன்றவற்றால் வீடு வாசலை இழக்கவேண்டி வரலாம். வாகன விபத்துக்கும் வாய்ப்பு. அல்லது வாகனம் திருடு போகலாம்.இதய நோய் ஏற்படலாம்.

9.ஒன்பதில் நின்றால்:
அப்பாவே அம்மா ரோலையும் ப்ளே பண்ணுவாரு. தாய் வழியில் சொத்து கிடைக்கலாம்.அது வீடாகவோ வாகனமாகவோ இருக்கலாம். தொலை தொடர்பு,கம்யூனிக்கேஷன்ஸ் , ஏரோனாட்டிக்கல்,கப்பல் போக்குவரத்து தொடர்பான கல்வி பயிலலாம். கல்வி ஒன்றே இவரது முதலீடாக இருக்கலாம். சிலர் வீட்டை வச்சு சிட்ஸ்,ஃபைனான்ஸ்,டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் போன்ற தொழிலை டெவலப் பண்ணுய்வாய்ங்க. கார்கோ சர்வீஸஸும் ஒர்க் அவுட் ஆகும்.

10.பத்தில் நின்றால்:
ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,கல்வி தொடர்பான தொழில்கள் அமையலாம். தாயின் ஊக்கத்தால் ஜாதகர் கல்வி,தொழிலில் பெரிதும் முன்னேறுவார் (சத்ரபதி சிவாஜி போல).வீட்டோடு செய்யும் தொழிலும் செய்யலாம். இவர் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டிய துறைகள் தொடர்பான கல்வியை பயில்வார். சர்வகாலமும் காரியத்தில் கண் வைத்திருப்பார்.

11.பதினொன்றில் நின்றால்:
அண்ணி தாய் பாசத்தை பொழியலாம் (கமலுக்கு போல்) அப்பாவுக்கு மறு தாரமும் இருக்கலாம். அல்லது தாய் அல்லாது மற்றொரு பெண்ணும் ஜாதகருக்கு தாய்ப்பாசத்தை அள்ளிக்கொடுப்பார். இரண்டு வீடுகள் /இரண்டு தலைவாசல் உள்ள வீடு /இரண்டடுக்கு வீடு அமையலாம். வாகனமும் அவ்வாறே.கல்வியிலும் டபுள் டிகிரி வாங்குவார்.

12.பனிரெண்டில் இருந்தால்:
தாய் இருந்தும் இல்லாதவராக இருக்கலாம்.சிறுவயதில் இருந்தே ஜாதகர் பார்ட் டைம் வேலை செய்து தாய்க்கு உதவலாம்.ஹாஸ்டல் வாசத்துக்கு வாய்ப்பு. வண்டி வாகன வகையில் வீண் விரயங்கள் ஏற்படும். கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வகையில் இவரது தொழில் உத்யோகம் அமையலாம். சில சமயம் எதிராளி “உனக்கு இதயமே இல்லையா” என்று கேட்குமாறு கட் அண்ட் ரைட்டா பிஹேவ் பண்ணலாம்.அல்லது அய்யோ பாவம்னு போயி நஷ்டமடையலாம்.

அவள் ! அவளே !! அவளே தான் !!!

சின்ன வயதில் அண்ணனும் நானும் வேலைக்காரனின் தோளில் ஏறி ஸ்கூலுக்கு போனது ஞா வந்தது. அக்காக்களின் கல்யாண களேபரங்களாலும் -ஒவ்வொருத்தியாய் விதவையாகி நிற்க ஒவ்வொருத்திக்கும் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம் ஏற்படுத்த அண்ணன் மெனக்கெட்டது நினைவு வந்தது.

இந்த கூத்தில் அண்ணனின் கல்யாணம் தமாதமாகிக்கொண்டே போக அப்பா எனக்கு கல்யாணம் செய்து வைத்து செத்துப்போனது கல்யாணமான 3 ஆவது மாதமே . அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்தது நினைவுக்கு வந்தது.

அப்பாவின் பல சரக்கு கடைய அண்ணன் நடத்தி வரும் போது ” என்னங்க.. ஆனாலும் உங்க அண்ணன் வேலைக்காரனை விரட்டறாப்ல விரட்டறாரு’ என்ற பெண்டாட்டி பேச்சை கேட்டு தனிக்கடை போட பங்கு கேட்டது பளிச் என்று மின்னியது.

கடைக்கு குறுக்கே சுவர் எழுப்பி அவனுக்கு பாதி எனக்கு பாதி என்று தனித்தனியே கடை நடத்தினோமே தவிர – வீடு விஷயத்தில் மொத்த வீட்டையும் நானும் -மனைவியுமே ஆண்டு வந்தோம். மாடியில் இருந்த அறைக்கு வெளிப்புறம் படி வைத்து அண்ணன் இருந்து கொண்டான். அம்மா எங்களுடன்.

மார்க்கெட் சுற்று வட்டாரத்தில் அப்பாவுக்கு சொந்தமாக இருந்த வீடுகளை இன்னார்க்கு இது என்று பாகம் பிரிக்கவில்லை. வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்து போக புதிதாய் யாரும் குடி வரும் வரை காலியாக உள்ள வீடுகளை இருவரும் கொடவுனாக உபயோகித்துக்கொள்வது வழக்கமாக இருந்தது.

அண்ணனுக்கும் எனக்கும் அடிப்படையிலேயே வித்யாசம்.

அவன் உடலமைப்பே வேறு உயரத்தில் என்னை போலத்தான்.ஆனால் பலசாலி. அவன் முரடன். நிறையவே கோபப்படுவான். நிறையவே உழைப்பான். நிறையவே செலவழிப்பான். நிறையவே சம்பாதிப்பான்.

நான் பூஞ்சை உடம்பு. நாலு மூட்டையை நகர்த்தி வைத்தால் இடுப்பு பிடித்துக்கொள்ளும். எனக்கென்னவோ அண்ணனை பார்க்கும் போது முட்டாள் முட்டாள் கொஞ்சம் மூளைய உபயோகிடா என்று கூவ தோன்றும்.

நான் மூளையை ( ! ) உபயோகித்து வியாபாரம் செய்து வந்தேன். அண்ணன் அப்பா காலத்து கடை .அந்த பேரை காப்பாத்தினா போதும் என்று பினாத்திக்கொண்டு காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மல்லாடுவான்.

நான் அரிசி விலை உயரப்போகிறது என்று தெரிந்து வாங்கி அடுக்கினேன். 1975 ல எமர்ஜென்சி வந்தது.
கூடவே ரெய்டும் வந்தது. வீடுகளை பாகம் பிரிக்காதது வசதியாய் போனது.பிடிபட்ட கணக்கில் வராத சரக்கு எல்லாமே அண்ணனோடது தான்னு சாதிச்சிட்டென்.

ஒரு கட்டம் வரைக்கும் மறுத்த அண்ணன் என்ன நினைத்தானோ சரக்கு தன்னோடதுதான்னு ஒத்துக்கிட்டு செயிலுக்கு போயிட்டான்.

எமர்ஜென்சி முடிவுக்கு வரதுக்குள்ள குறுக்குசுவரை இடிச்சு மொத்தக்டையையும் சொந்தமாக்கிக்கிட்டேன். கடை பேரை மாத்தினேன். லைசென்ஸை என் பேருக்கு மாத்தினேன்.எல்லா வீட்டையும் என் பேருக்கு மாத்திக்கிட்டேன். எதிர்ப்பே கிடையாது. ஜஸ்ட் மூளைய உபயோகிச்சேன். அவ்ளதான்.

இந்த இடத்துல என் பொஞ்சாதியை பத்தி கொஞ்சம் சொல்லனும்.சொந்தக்கடை அண்ணனுக்கு ஒத்தாசையா இருக்கான்னு சொன்னா ஜமீந்தார் பெண்ணையா கொடுப்பாங்க. ஃபைனான்ஷியா ஒன்னும் பேக் கிரவுண்டு கிடையாது. பார்க்க ஜீனத் அமன் மாதிரி ஒரு ஸ்ட்ரக்சர். நல்ல நிறம்.எந்த விஷயத்துல எப்படியோ அந்த விஷயத்துல எங்களுக்குள்ள நல்ல பொருத்தம். எனக்கு தினம் தினம் வேணும். நினைச்ச போது வேணும்.எல்லாம் சரியா நடந்துக்கிட்டிருந்தாலும் “விசேஷம்”தான் ஒன்னுமில்லை.டாக்டர் கிட்டே போகலாம்னா பயம்.

ஸ்டேட்ல காங்கிரஸ் ஆட்சி போயி தெலுங்கு தேசம் வந்தது.ரெண்டு ரூபாய்க்கே கிலோ அரிசின்னு ஒரு ஸ்கீம் கொண்டு வந்தாரு என்.டி.ஆர். மத்த விவகாரங்கள்ள மனுஷன் எப்படி அரசாண்டாரோ நமக்கு தெரியாது.ஆனால் இந்த ரைஸ் ஸ்கீம்ல மட்டும் பக்கா.

வெறும் அரிசிய வச்சுக்கிட்டு நாக்கை வழிக்கவா அவனவனுக்கு எத்தனையோ கெட்ட பழக்கம் அரிசி வேணும். ரேஷன் கடையில வாங்க வேண்டியது நம்ம கடையில வந்து வித்துட்டு பணத்தை எண்ணிக்கிட்டு போக வேண்டியது. அஞ்சுக்கு வாங்கினாலும் பன்னென்டுக்கு விக்க முடிஞ்சது. அதையே பாலிஷ் பண்ணி வித்தா 20 க்கு கூட விக்க முடிஞ்சது. வித்தேன். மூளைய உபயோகிச்சா பைசா பார்க்கலாம். நான் மூளைய உபயோக்கிக்கிறவன். அப்பங்காலத்து கடைன்னு நாக்கு வழிக்கிறதா?

எவனோ எடுபட்ட பைய கரெக்டா போட்டுக்கொடுத்துட்டாப்ல இருக்கு ரெய்டு .கடைக்கும் கொடவுன் களுக்கும் சீல் வச்சுட்டாங்க. பொஞ்சாதியே உலகம்னு இருந்துட்டனா எவனையும் தெரியலை. செயிலுக்கு போக வேண்டியதாயிருச்சு.

ஜெயிலுக்கு போன அண்ணன் வட நாட்டு பக்கம்லாம் பித்தம் பிடிச்சாப்ல அலைஞ்சு திரும்பி வந்தான். ஜெயில்ல வந்து பார்த்தான். யார் யாரையோ பார்த்து கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சு கடைக்கும் ,கொடவுனுக்கு சீல் எடுக்க வச்சு வியாபாரத்தை மறுபடியும் துவக்கினான்.

நான் ஜெயில்லருந்து திரும்பி வந்தேன். நான் கடையில செய்து வச்சிருந்த வேலை (குறுக்கு சுவரை இடிச்சது) எனக்கே ஆப்பாயிருச்சு.பஜார்ல “உன்னை போல உண்டா”ன்னு சொம்படிச்ச சும்பன் எல்லாம் அண்ணன் கிட்டே தலை சொரிஞ்சு நிக்கிறான். இவனுங்களை நம்பி என்னத்தை பஞ்சாயத்து பண்றது?

சரி பிள்ளையா குட்டியா என்னைக்கோ ஒரு நாள் சாகத்தான் போறான். பிறவு மொத்தம் நமக்குத்தானேன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். விஷயம் என்னடான்னா ராத்திரி கடை சாத்தின பிறவு நிறையவே குடிப்பான். கூத்தடிப்பான். எங்க ஜாதியில கவிச்சே தொடமாட்டோம். ஆனால் இவன் வெளுத்து வாங்குவான். அதுக்குன்னு ஒரு வட்டம். மறுபடி காலையில அஞ்சுக்கெல்லாம் கடை திறக்க ஆரம்பிச்சுருவான்.

ஒரு தடவை சீக்கிரமே சாகட்டும்னு பக்கெட் தண்ணியில சயனைட் போட்டு வச்சேன். நாலு முன் பல் உதிர்ந்ததோட சரி. நான் தான் சில்மிஷம் பண்ணினேன்னு தெரியும்.எதுக்கோ கண்டுக்கலை. சரி அவனா சாகட்டும்னு விட்டுட்டன்.அதுவரைக்கும் என்ன பண்றது? கடை திண்ணையில கம்பு ,கேழ்வரகு,நொய்யின்னு கூடையில வச்சு விக்க ஆரம்பிச்சேன்.

சொந்த கடையில அண்ணனுக்கு ஒத்தாசையா இருந்த காலத்துலருந்தே கொஞ்சம் கொஞ்சமா பணத்தை ஒதுக்கி வச்சது நல்லதா போச்சு. கடைய பிரிச்ச பிறவு முதலுக்காச்சு. அண்ணன் செயிலுக்கு போனதும் மொத்தத்தையும் ஆட்டைய போட்டு அரசாண்ட காலத்துல ஃபிக்சட் டெப்பாசிட் எல்லாம் போட்டு வச்சேன்.

தே.மவனுங்க ஒவ்வொருத்தனா ஊரை விட்டு ஓட ஆரம்பிச்சான். பித்தம் பிடிக்கிறாப்ல ஆயிருச்சு. இடையில இந்த ரம்மி வேற தொத்திக்கிச்சு. சுருக்கமா சொன்னா அண்ணன் பொஞ்சாதி மூலமா படியளந்தா தான் பொழப்புங்கற நிலைக்கு வந்துட்டன். இருந்தாலும் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்ங்கற எண்ணம் மட்டும் அப்படியே இருந்தது. அதுக்கும் ஒருத்தி ஆப்பா வந்து நின்னா.

கடையில அரிசி புடைக்கிறதுக்குன்னு வேலைக்கு சேர்ந்தவ.. மாடிக்கு போய் பெருக்கறேன்,ஒட்டடை அடிக்கிறேன், பூஜை சாமான் துலக்கிறேன்னு ஆரம்பிச்சு அண்ணனுக்கு தாலிகட்டாத பொஞ்சாதியா ஆயிட்டா.

இத்தனைக்கும் அவளுக்கு கண்ணாலமாகி புருசன் வேற இருக்கானாம். மரத்துலருந்து விழுந்து இடுப்பு நொறுங்கி கிராமத்துல கிடக்கிறான். இவள இங்கே ஆட்டம் போடறாள். ராத்திரியில தங்கவே ஆரம்பிச்சுட்டா. ஒரே குடி கூத்து.

அண்ணனோட லூப் ஹோல் இதுன்னு தெரிஞ்சதுமே சொந்தம் பந்தத்துக்கெல்லாம் பத்த வச்சேன். இவன் இந்த மாதிரி ஆட்டம் போட்டா நாங்க எப்படி இங்கே குடித்தனம் பண்ண முடியும்ங்கறது தீம். என் பொஞ்சாதிக்கு சொல்லி அம்மாவுக்கு பண்ற சிஸ்ருஷையை நிறுத்த சொன்னேன். அவள் அதையும் செய்ய ஆரம்பிச்சாள்.

கிழவியை அப்படியே அள்ளி தூக்கிக்கிட்டு போயி குளிப்பாட்டுவா. படுக்கை விரிப்பை மாத்துவா போரிக் பவுடர் போட்டு விடுவா. என்னென்னமோ பண்ணுவா.. அம்மா இருந்த ஹால் பேய் பங்களா மாதிரி இருளோன்னு இருக்கும்.அதை ஜகஜ்ஜோதியா ஜொலிக்க விட்டு போர்ட்டபிள் கலர் டிவி வச்சு என்னென்னமோ சினிமால்லாம் காட்டினா.

அவள் சாதிய சொல்லி வண்டை வண்டையா திட்டுவேன். அவன் கிட்டே துட்டிருக்குன்னு தானே வரே நானும் தரேன் வாம்பேன். ஒரு பக்கம் அண்ணன் காதுல போட்டுட்டா எப்படிங்கற பயம் இருந்தாலும் எரிச்சல்ல வாய்க்கு வந்தபடி கேட்பேன். ஊஹூம்.

ஒரு தடவை அந்த பொம்பளை தன் புருசங்காரனை பார்த்துக்க ஏற்பாடு பண்ண பொம்பளை வெளியூர் போயிருச்சுன்னு ஒரு வாரம் போல கடைக்கும் வரலை வீட்டுக்கும் வரலை.

பெருந்தீனியாலயோ – பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே கிடந்தாதலயோ அண்ணன காரனுக்கு
மூலம் வந்துருச்சு. தின்னா வெளிக்கு போகனும்னு பயந்து நாலஞ்சு நாளு போல திங்காமயே கிடந்திருக்கான். கடையும் திறக்கலை.மாடிய விட்டு கீழே இறங்கியும் வரலை. நாலாவது நாள் மெல்ல ஏறிப்போயி பார்த்தேன். அப்பவோ இப்பவோன்னு இருக்கு. நைசா இறங்கி வந்துட்டன். ஏழாவது நாள் அந்த பொம்பள வருது.இவன் பேச்சு மூச்சில்லாம கிடக்கிறதை பார்த்துட்டு திம் திம்னு படியிறங்கி வந்து என்னை பார்த்தா பாருங்க ஒரு பார்வை. குலை நடுங்கி போயிட்டேன்.

வெளிய வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி வச்சுட்டு அண்ணனை அப்படியே அள்ளிக்கிட்டு வரா . சலைனு குளுக்கோஸுன்னு ஏத்தி தேத்தி கொண்டு வந்துட்டாளே . எனக்கு சீ போன்னு ஆயிருச்சு.
என் புலம்பலை இவ்ள நேரம் கேட்டுக்கிட்டிருந்த உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். அண்ணனுக்கு மூலம் வந்ததை போல எனக்கு ஷுகர்.

போன மாசம் தான் மொத முறையா ஃபீல் பண்ணேன். சாப்பாடே ஏல மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு குமட்டிக்கிட்டு வருது. அண்ணன் கடைக்கும் மாடிக்கும் ஏறி இறங்கறச்சல்லாம் “என்னடா திங்கறயா இல்லையாட்டா .. ஈன்னு போயிக்கிட்டிருக்கே.. தின்னு தொலைடா”னு திட்டிக்கிட்டே போவான். ஊஹூம்.

ஒரு நாள் கடுப்பாயி கார் வச்சு சி.எம்.சிக்கு அனுப்பினான். அவங்க லிவர் பத்து பைசாவுக்கு உதவாதுன்னு சொல்லிட்டு என்னென்னமோ மருந்து மாயம்லாம் கொடுத்து அனுப்பிச்சாங்க. இடையிடையில ஞாபகம் வேற பிசக ஆரம்பிச்சு. மறுபடி சி.எம்.சிக்கு ஓட எம்.ஆர்.ஸ்கான் எடுத்ததுல மூளையில் ரத்தம் கட்டியிருக்குனு சொல்ட்டானுங்க

இந்த நாலஞ்சு நாளா தொடர்ச்சியா சிந்திக்கவே முடியலை. என் யோசனை எல்லாமே அபத்தமா இருக்கு. ஆனால் அதை நிறுத்த முடியலை. இல்லைன்னா அந்த தேவடியாளை அம்மான்னு நினைச்சு பேசிக்கிட்டிருப்பேனா. என் பொஞ்சாதிய தேவடியான்னு திட்டுவனா. திடீர்னு நினைவுகள் எல்லாம் ஜாம் ஆயிரும். கொஞ்ச நாழி கழிச்சு விலகும்.

ஒரு அரைமணி நேரத்துக்கு மிந்தி மூச்சு முட்டுது. மார் எல்லாம் கனக்குது. சன்னலை திறந்து விட சொல்லி சைகை காட்டறேன். நாக்கு வறளுது. தண்ணி தண்ணின்னு ஜாடை காட்டறேன்.ஊஹூம். யாரோ நான் படுத்திருந்த சோஃபாவை தாண்டி போறாப்ல இருந்தது.

அவள் .. ஒரு பூதம். அவள் என்னை புதையலை எடுத்து செல்லும் பூதம் போல் அள்ளினாள். பூதகணங்களுக்கெல்லாம் தலைவனையே பெற்றவள் அல்லவா?

அவள் ஒரு பேய் பிணத்தை தூக்கும் பேயை போல் என்னை தூக்கினாள் பேயாண்டியை மணந்தவள் அல்லவா?

அவள் ஒரு ராட்சசி. அவள் பலம் ராட்சஸ பலம். ஆம் பூதனை பால கிருஷ்ணனை அள்ளி மார்போடணைத்து கொண்டது போல் என்னை அணைத்துக்கொண்டாள்.

அவள் அன்னை. அவளுக்கு வயசுடன் வேலையில்லை. அவள் பார்வையில் அசூயை இல்லை. என் அண்ணனை அன்று எப்படி அள்ளிக்கொண்டு இறங்கி வந்தாளோ அப்படியே இன்று என்னை.அவளில் அவன் இவன் என்ற பேதம் இல்லை.

மார்போடு அணைத்து பால் ஊட்டுகிறாள். அவள் ஜகன் மாதா. மாதாவின் மடி சேர்ந்த பின் இந்த மகவுக்கு உயிர் இரண்டாம் பட்சம். அடுத்த நொடி அவள் மடியை பிரிய வேண்டி வரலாம். இதைவிட என் உயிர் பிரிவது நன்று. இந்த உலகை நான் பிரிவது நன்று.

சர்வம் மாத்ருமயம் ஜகத்

அம்மா என்ற கேணச்சி

அண்ணே வணக்கம்ணே !
பாலியல் விருப்பங்கள் தொடர்ல இதுவரை 3 லைஃப் பிக்சர்ஸ் /அதுக்கான பரிகாரங்களை தந்திருக்கம். இன்னைக்கு 4 ஆவது பிக்சர்.

ஊடுகட்டி விளையாடறது தெருச்சண்டையில வேணம்னா கித்தாப்பா இருக்கலாம்.ஆனால் ரியல் லைஃப்ல ஊடு கட்டறதுங்கறது சொந்த செலவுல சூனியம் வச்சுக்கற மாதிரி. அது கூட கப்பாசிட்டி இருந்து பாங்க் லோன்,எல்.ஐ.சி லோன்லயே முடிச்சுர்ர மாதிரி இருந்தாலும் பரவால்லை. இதையும் தாண்டி கோதாவுல இறங்கினா பல்பு வாங்க வேண்டியதுதான்.

இந்த ஊடு கட்டறவுக சைக்காலஜியை கொஞ்சம் பார்ப்போம். ஒரு ஊடு ஊடா கீனம்னா அங்கன அம்மான்னு ஒரு கேணச்சி இருக்கனும்.

வேளைக்கு திங்காம, தூங்காம ,மத்த பன்னாடைகளுக்கு உழைச்சே ஓடா தேயறவளை பின்னே இன்னான்னு சொல்றது.

இப்படியா கொத்த அம்மா அமைஞ்சவுகளோட மைண்ட்ல அந்த பிக்சர் அதாவது அம்மாவோட பிக்சர், அந்த அம்மா ஊடாடின ஊடோட பிக்சர் பச்சக்குனு ஒட்டிக்குது.

அதுக்கப்பாறம் அம்மா கிளவியாயிரலாம், செத்துப்போயிரலாம், பக்கத்து வீட்டுக்காரனோட ஓடிப்போயிரலாம்.அதெல்லாம் வேற கதை .ஆனால் இவிக மைண்ட்ல இருக்கிற பழைய பிக்சர் மட்டும் ரீட் ஒன்லி ஃபைல் கணக்கா அப்டியே இருக்கும்.

இவிகளால கிளவியாப்போன அம்மாவை குமரியா மாத்தமுடியாது – செத்துப்போன அம்மாவ உசுரோட கொண்டுவரமுடியாது.. ஆனால் இவிக இவிகளோட இளமையில நிச்சிந்தையா – பனி நீர் கணக்கா எந்த கல்மிஷமும் இல்லாம வாழ்ந்த ஊட்டை கட்ட முடியும்.

அதைத்தான் செய்றாய்ங்க. ஆக்சுவலா பெண் வீக்கர் செக்ஸுங்கறதால -இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் காரணமா பெண்களுக்குத்தான் “வீடு” பற்றிய கற்பனைகள் இருக்கனும்.

அந்த கற்பனை நிஜமாகனும்னா அதுக்கு ஆண் சம்மதிச்சே ஆகனும். ஆண் தான் ஸ்ட்ராங்கர் செக்ஸாச்சே
இன் செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் எல்லாம் இருக்கக்கூடாதே ..பின்னே ஏன் மெஜாரிட்டி ஆண்கள் ஊடுகட்டி விளையாடறாய்ங்க சாரி அவஸ்தை படறாய்ங்க.

இங்கன காலத்தின் கோலம் வேலை செய்யுது. தலைமுறைக்கு தலைமுறை ஆண்கள் ஆண்மைய இழந்துக்கிட்டே வர்ராய்ங்க. பெண்கள் பெண்மையை இழந்துக்கிட்டே வர்ராய்ங்க.

உலகமயம்,தாராள மயம், தனியார் மயம் மாதிரி காரணங்களால ஆண் பெண் இருவரும் சம்பாரிச்சாத்தேன் சமாளிக்கமுடியுங்கற நிலை. இதனால பெண்ணும் வேலைக்கு போகவேண்டியிருக்கு. பெண் வேலைக்கு போறதால ஆண் ” அவள் காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டியிருக்கு. இதனாலயும் பெண்களில் ஆண்மை -ஆண்களில் பெண்மை அதிகரிக்குது.

ஊட்டு மேட்டரை தான் எப்டி ஆரம்பிக்கிறதுங்கற மன நிலையில கணவன் இருக்க மனைவி ப்ரப்போஸ் பண்றா கணவன் ஒப்ளைஜ் பண்ணிர்ரான்.

ஆணை பொருத்தவரை ஊடுங்கறது அதுவும் கண்ணாலத்துக்கு மிந்தி வாள்ந்த ஊடுங்கறது ஒரு சொர்கம். அதை திரும்ப பெறுவதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறதை புரிஞ்சுக்கலாம்.

ஆனால் பெண்?

அவளை பொருத்தவரை ஊடுங்கறது அவள் ரத்தத்தை உறிஞ்சற அட்டை. அவள் சிறகுகளை வெட்டற கத்திரி , அதுவும் கண்ணாலத்துக்கு மிந்தின்னா ரெஸ்ட் ரிக்சன்ஸ் சாஸ்தி.ஆனாலும் அவ ஏன் ஊடு மேட்டரை ப்ரப்போஸ் பண்றா? பேசிக்கலா பெண் மசாக்கிஸ்ட். தன் நரகத்தை திரும்ப பெறுவதில் ஒரு ஆர்வம்.

வேணம்னா ஒரு சர்வே கூட பண்ணிபாருங்க. ஆரெல்லாம் -ப்யூர்லி ஃபார் டொமஸ்டிக் பர்ப்பஸ் -வட்டி /வாடகை/ரீ சேல் வேல்யூல்லாம் பார்க்காம பெரிய தியாகங்களையும் சின்ன முணுமுணுப்பு கூட இல்லாம் செய்து சக்ஸஸ் ஃபுல்லா ஊடு கட்டறாய்ங்களோ

அவிகளுக்கு தாயன்பு கிடைச்சிருக்கும். அல்லது விவரம் தெரியறதுக்கு மிந்தியே தாயை இழந்திருப்பாய்ங்க.

ஹாஸ்டல் கேஸு , ஆயா கையால சோறு தின்ன கேஸெல்லாம் டவுட்டுதேன். இவிக கட்டினா அதுக்கு வேற காரணம் இருக்கும்.

அம்மான்னாலே ஒரு கிக்குதான். அதுலயும் அந்த அம்மா ஒரு நல்ல ஹோம் மேக்கரா – கலைகளில் ஈடுபாடுகள் கொண்டவளா – அழகானவளா – இருந்தா அந்த நினைவுகள் தரும் சுகமே தனி . இந்தமாதிரி அம்மா அமைஞ்சவுக பத்து வட்டிக்கு கடன் வாங்கியாச்சும் வீட்டை கட்டியே தீருவாய்ங்க.

இவிக படிப்பு கூட ஆட்டோ மொபைல்ஸ், சிவில் இஞ்சினீரிங், கேட்டரிங் டெக்னாலஜி, டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான படிப்பா இருக்க வாய்ப்பிருக்கு.

வாகனத்தை பொருத்தவரை இவிக பொருளாதார நிலைக்கு தொடர்பே இல்லாத வாகனம் அமையும்.

இவிக பகல்ல பிறந்திருந்தா இவிக தாய்க்கும்,மனைவிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். உம் அம்மா பேரு மல்லிகா பொஞ்சாதி பேரு கனகா.

மேட்டரு இன்னாடான்னா அம்மா மேட்டர் டபுள் ஓகேன்னா வாகன மேட்டர் சைடு வாங்கும். இது ரெண்டும் டபுள் ஓகேன்னா ஊடு மேட்டர்ல பல்பு வாங்கிருவாய்ங்க. அட இதெல்லாமே டபுள் ஓகேன்னா மொதல்ல அம்மா, அப்பாறம் பொஞ்சாதி ,அப்பாறம் வாகனம்னு எல்லாமே ஒவ்வொன்னா மக்கர் பண்ண ஆரம்பிச்சிரும்.

அட .. இது எதுவுமே நடக்கல்லை. சப்ஜாடா எல்லாம் நெல்லாருக்குன்னு வைங்களேன். சரியான வயசுல -அதாவது இளமையின் வேகம் -முதுமையின் இயலாமை ரெண்டும் இல்லாத ஒரு கால கட்டம் மத்திய வயசு. அந்த வயசுல தாளி பேட்டரி வீக் ஆயிரும்.கைனகாலஜிக்கல் பிரச்சினைல்லாம் வர ஆரம்பிச்சுரும்.

இதான் நாலாவது பிக்சர் இதுல வர்ரவுக – ஐ மீன் இந்த பதிவுல நான் சொல்லியிருக்கிற சிம்ப்டம்ஸ் உள்ளவுக நாளைய பதிவை எதிர்பாருங்கள் . ஏன்னா அதுல உங்களுக்கான பரிகாரங்களை தரப்போறேன்.