கேள்வியும் நானே -பதிலும் நானே

kalachakram

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிட குறித்த புரிதல்னு அவ்வப்போது வெளிவரும் தொடரா ஒன்னை ஆரம்பிச்சன். அதனோட தொடர்ச்சியா கூட இதை வச்சுக்கலாம் .இது கேள்வி பதில் ஃபார்ம்ல இருக்கு அவ்ளதான்.

கே: 1990 மார்ச்சுலயே ஆஃபீஸ் போட்டுட்டதா சொல்றிங்க. அன்னையிலருந்து இன்னைக்கு வரைக்கும் ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பார்த்திருப்பிங்க. டீட்டெய்லா இல்லின்னாலும் ஒரு குன்ஸா சொல்லுங்க. இந்த கெரகங்களோட பிடியிலருந்து எஸ்கேப் ஆக ஒரே வழி-சரியான வழி எதுனா இருக்கா?

பதில்: ஆஹா.. பயாலஜி ப்ராக்டிக்கல்ஸ்ல தவளைக்கு ஆணியடிச்ச கணக்கா அடிச்சு வச்சுட்டு கேட்கிறியளே.. செரி ..சொல்லித்தானே ஆவனும். ரெம்ப சிம்பிள் ப்ரோ .சுய நலம் சுருக்கி -பொது நலம் பெருக்குதல்.

கே: ஊஹூம்..இது அழுகுணி ஆட்டம். உங்க ஃபிலாசஃபியை எங்க மேல திணிக்கிறிங்க. இதை ஜோதிட ரீதியா விளக்குங்க .

பதில்: செரி நம்ம லேப்ல நாம தானே மொத எலி. நம்முது கடக லக்னம். நமக்கு ஆயிரத்தெட்டு வித்தை தெரிஞ்சிருந்தாலும் மினிமம் கியாரண்டி கொடுத்து வண்டிய ஓட வைக்கிறது ஜோதிடம் தான். இதுக்கு புதன் தான் காரகன். இவரு லக்னத்துக்கு பகை +லக்னத்துலயே வேற உட்கார்ந்து தொலைச்சாரு .

நாம ஆஃபீஸ் போட்ட புதுசுல லக்னங்களுக்கு யார் சுபர் -யார் பாபி-யார் மாரகன்ங்கற டேட்டா கூட மைண்ட்ல ஸ்டோர் ஆகி இருக்காது .மொதல்ல என்ன லக்னம்னு பார்த்து சுபர்-பாபர்-மாரகன்னு மார்க் பண்ணிக்கிட்டு தான் பலன் சொல்ல ஆரம்பிப்போம். சப்ஜெக்ட்ல கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் “பைசா பார்த்துர்ரது”ங்கற நோக்கமே இருக்காது . நாம ஃபுல் ஃபார்ம்ல இருந்தப்போ பத்து பேரை அட்டெண்ட் பண்ணா அதுல கு.பட்சம் 3 பேருக்காவது இலவசமா சொல்லியிருப்பம். போற வர்ர வழியில “ஒரே ஒரு சொல்லு ..சொல்லிரு சாமீ”ங்கற கேஸ் எல்லாம் தனி .
மவ பிறந்தா லக்னம் கன்னி. புதன் 11 ல். ஜஸ்ட் ஒரு புதனோட டிப்பார்ட்மென்ட்ல சுய நலம் சுருக்கி 2 வருசம் காலத்தை ஓட்டினதுக்கே இயற்கை கொடுத்த பரிசு.(1992)

அவளுக்கு 13 வயசு இருக்கும் போது லோக்கல் மேகசின் ஒன்னு ஆரம்பிச்சேன்.(புத காரகம்) ஊத்தி மூடும் போது கடேசி பெசல் இஷ்யூ டர்ன் ஓவர் ஒரு லட்சத்து 28 ஆயிரம்.2014 ல் புஸ்தவம் போட்டோம் அதனோட டர்ன் ஓவர் ( அவ்வ்.. ஐ டி காரவிக ரெய்டு வந்துரப்போறாய்ங்க)

அப்படியும் ஜோதிட தொழில்ல பழைய ஸ்டைலை மாத்திக்கவே இல்லை . உபரியா பதிவுகள் மூலமா தொழில் ரகசியத்துல இருந்து பிரம்ம ரகசியத்துல இருந்து அவுத்து விட்டுக்கிட்டே இருக்கம்.

தொழில் முறையில பார்த்தாலும் ஆயிரத்துக்கும் அதே அவுட் புட் /இரு நூற்று அம்பதுக்கும் அதே அவுட் புட் (வச்சுக்கிட்டு வஞ்சனை செய்ய மிடியல ப்ரோ)

அங்கிருந்து 2016 வரை வண்டி இதே ரூட்ல தான் ஓடிக்கிட்டிருந்தது . மவளுக்கு ரெண்டாவதா மவன் பிறந்தான் சிம்ம லக்னம் . பதினொன்றில் சூரியன்+புதன் (மிதுனத்துல புதன் ஆட்சி என்பது பாடம் – சிம்ம லக்னத்துக்கு புதாத்திய யோகம் விசேஷம் )

மவளுக்கோ /மாப்ளைக்கோ புத காரகத்வத்துல உள்ள எந்த தொழில்லயும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது . மேலும் கருவானது முதல் நாம தேன் கேர் டேக்கர் அண்ட் ஜாமீன் தார்.

ஆகவே அவன் வளர்ந்து சொந்த முடிவுகள் எடுக்கிற வயசு வர்ர வரை அந்த புதாதித்ய யோகம்லாம் நமக்குதேன் பாத்யதை . தப்பித்தவறி அவனுக்கும் ஜோதிடத்துல ஆர்வம் வந்தாச்சுன்னா சொல்லவே தேவையில்லை .கடேசி வரைக்கும் குரு -சிஷ்ய பந்தம் இருக்கும்.

ஆஃப்டர் ஆல் காலணா ஜோசியத்தொழில்ல “பிசினஸ் லைக்கை ” ஒதுக்கி வச்சுட்டு செய்ததுக்கே இது ரிசல்ட் . சுய நலத்தை லேசா சுருக்கினதுக்கே இது ரிசல்ட்.

கடவுள் வேற ஏதாச்சும் சோர்ஸ் ஆஃப் இன் கம் கொடுத்து தொலைச்சு ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு கோவில் மண்டபத்துல “முற்றிலும் இலவசமா” சொன்னா என்ன ஆகும்னு ரோசிங்க.

Advertisements

ஜோதிட பலன் : புதிய பார்வை

2

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம்ங்கறது நூத்துக்கு 99.9% லௌகீகமான ஒரு விஷயமாத்தான் இருக்கு. எப்ப கண்ணாலமாகும் ? எப்ப கொளந்தை பிறக்கும்? அது எப்படி இருக்கும்? அதுக்கு படிப்பு எப்படி ?அதுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? இதுலயே முடிஞ்சு போகுது .

இல்லின்னா விட்டலாச்சார்யா கணக்கா ஜீபூம்பா கேள்விகள் வந்துரும் . எனக்கு புதையல் எடுக்கிற அமைப்பு இருக்கா? லாட்டரியில பணம் கிடைக்குமா?
ஜோதிடம் ஒரு தெய்வீக கலை. டிஸ்டில்ட் வாட்டரை குண்டி கழுவ உபயோகிச்ச மாதிரி தான் மிஸ் யூஸ் பண்றம்.

என்னோட கடந்த பிறவி என்ன? அப்போ என்னவா இருந்தேன்? என் அடுத்த பிறவி எப்படி இருக்கும்? எனக்கு முக்தி கிடைக்குமா? எந்த ரூட்ல போனா இது ஒர்க் அவுட் ஆகும்? எனக்கு குரு யார்? பூர்வ கர்மங்கள் எப்படி இருக்கு? அதெல்லாம் எப்ப ஒழியும்? எந்த தெய்வம் எனக்கு நல்ல வழிய காட்டும்?
இப்படியா கொத்த கேள்விகளை கேட்டவிக ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் தான்.

மனுஷ பிறவிங்கறது ஒரு ஜங்சன் பாய்ண்ட். ரிவர்ஸ் கியர் போட்டு மிருகமாகவும் மாறலாம். எக்சலேட்டரை அழுத்தி தெய்வமாவும் மாறலாம்.
என்னைக்கேட்டா ஒவ்வொரு மனுஷனும் தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் லௌகீக தேவைகளை குறைக்கவும் – ஆன்மீக முயற்சிகளை கூர்மை படுத்தவும் தான் உபயோகிக்கனும்.

மனுஷன் தெய்வமா மாறுவானோ இல்லையோ அது வேற கதை .ஆனால் மிருகமாக மாறிராம இருக்கு தெய்வமாக ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கனும்.
நிற்க. ஜோதிடத்தை லௌகீக மக்கள் லௌகீகமாத்தான் யூஸ் பண்றாங்க. ஜோதிடர்களும் லௌகீகமாத்தான் சொல்றாய்ங்க. இது இதோட நிற்கல.
ஜோதிட விதிகளை உருவாக்கின ரிஷிகளும் கொய்யால ..ஒவ்வொரு கிரக ஸ்திதியையும் இது லௌகீக வாழ்க்கைக்கு நல்லதா -கெட்டதான்னு பார்த்து தான் பலன் சொல்லியிருக்காய்ங்க. அவ்வ்வ்வ்வ்வ்.

இந்த பாய்ண்ட் அப்பப்போ நமக்கு ஸ்பார்க் ஆறது உண்டு. ஆனால் இந்த பதிவு போட காரணம் நம்ம பதிவுக்கு வந்த கமெண்ட்.
இந்த சுக்ரன் மேட்டரையே எடுத்துக்கங்க. இவர் 6-8-12 ல இருந்தா கூட பதறமாட்டாய்ங்க.ஆனால் 7-10 ல இருந்தா பதறிப்போயிர்ராய்ங்க.
அப்படி என்னதான் குடிமுழுகிப்போயிரும்?

சுக்கிரன் =செக்ஸ். 7=கணவன்/மனைவி ,10=தொழில். ஜாதகரோ/ஜாதகரின் வாழ்க்கை துணையோ செக்ஸ் மேல அதிக ஈடுபாடு உள்ளவிகளா இருப்பாய்ங்க.(சுக்.7ல்) அல்லது அதே வேலையா இருப்பாய்ங்க (சுக் .10ல்)

என்ன போச்சு?

காமி கானி வாடு மோட்சகாமி காலேடு .வாழ் நாள்ள செக்ஸ் மேல பிறப்பு முதல் இறப்பு வரை ஒரேவிதமான ஈடுபாட்டோட இருந்தவிக -இருக்கிறவிக கிடையவே கிடையாது .

ஒன்னு அடலசன்ட் ஏஜுல விளையாடி நடுவயசுல தெளிவு வந்து காணாம போயிரும்.அல்லது அடலசன்ட் ஏஜுல ஈர கோவணம் கட்டி அழிச்சாட்டியமா அடக்கி வச்சவன் நடுவயசுல விளையாட ஆரம்பிப்பான்.

ஏதோ ஒரு குறிப்பிட்ட காலம் டிஸ்டர்ப் பண்ற சின்ன மேட்டர் இது . ஐ மீன் தி நார்மல் பீப்பிள். சைக்கோ/மனவியாதி கொண்டவனை எல்லாம் இதுல கொண்டு வரல.

கொஞ்சம் விளையாடிட்டு தான் கடந்து வரட்டுமே. சுக் 7-10 ல இருந்தா இன்னம் தீவிரமா விளையாடப்போறான். அதுலயே நிற்க முடியாதுல்ல. பயாலஜிக்கல் ரூல்ஸ் படியே கூட இது அசாத்தியம் தான். பின்னே ஏன் இதை காட்டி பயமுறுத்தறாய்ங்க?

இங்கே பயம் செக்ஸ் பத்தினது கிடையாது . டபுள் ட்யூட்டி பார்த்துட்டு திடீர்னு கழண்டுக்குவான். ஆன்மீகத்துக்கு தாவிருவான். இது லௌகீக வாழ்க்கைக்கு ஆப்பு .

சூரியனை எடுத்துக்குவம் 3-6-10-11 தவிர எங்கேயும் இருக்க கூடாது .இதுவிதி. லக்னத்துல இருந்தா என்ன ஆயிரும்? ஆன்மாவின் குரல் ஒலிக்க ஆரம்பிக்கும். இவன் லோகாயதமா உதவமாட்டான்.ரெண்டுல இருந்தா என்ன ஆயிரும்? தான் உணர்ந்ததை உபதேசிக்க ஆரம்பிச்சிருவான்.
இப்படியாக ஜோதிட விதிகளே லோகாயத வாழ்வைத்தான் டார்கெட் பண்ணுது .ஆகவே ஜோசியர் அவர் ஆப்பு -இவர் ஆப்புன்னா பயந்துக்காதிங்க. ஆப்பு லௌகீக வாழ்க்கைக்கு தான். ஆன்மீக வாழ்வு டாப்பா இருக்கவும் வாய்ப்பிருக்குங்கோ..

கிரகங்கள் நின்ற பலன் : சந்திரன்

பாபா
அண்ணே வணக்கம்ணே !
வயசாயிருச்சா..பழைய சங்கதிங்க எல்லாமே மேண்டேஜ் ஷாட் மாதிரி ஞா வந்துருது.

தொடர்பதிவுன்னு ஆரம்பிச்சு டீல்ல விட்டுர்ரது நமக்கு பழக்கம் தான்.ஆனால் இந்த கிரகங்களுக்கு டேக்கா தொடரை ஆரம்பிச்சம் பாருங்க.செம பல்பு .
இந்த பரிகார மேட்டரே ஆரம்பத்துலருந்து தகராறு தேன். இந்த பரிகார மேட்டர்ல 1990 லயே ஒரு குன்ஸு வந்துருச்சு. ஆனாலும் 1994 ல  மொதல்ல ஒரு தெலுங்கு நண்பரை வச்சு கக்க ஆரம்பிச்சன். அந்த பீரியட்ல தமிழ்ல இதுக்கெல்லாம் மார்க்கெட் ஏது? தெலுங்குல சின்னதா ஒரு புக் போடலாம்னு ஐடியா.
கொய்யால ..ஸ்கிரிப்ட் என்னமோ பக்காவா ரெடி ஆயிருச்சு.அதுக்கு பிறவு தான் வார்  ஸ்டார்ட் ஆயிருச்சு.  படக்குனு ஒரு நாள் ஞானோதயமாகி கிளிச்செறிஞ்சுட்டன்.
அதுக்கப்பாறம் ஆத்தா நம்ம லைஃப்ல என்டர் ஆனபிற்காடு ஆத்தாவ பலவிதமா கன்வின்ஸ் பண்ணினேன்.
ஆத்தா இந்த சனம் என்ன சொல்லப்படுதுன்னு பார்க்கறதில்லை.ஆரு சொல்றான்னு தான் பார்ப்பாய்ங்க. நான் சொல்லியா கேட்டுரப்போறாய்ங்க. லூஸ்ல விடு அது இதுன்னு அஜீஸ் பண்ணேன். மறுபடி ஸ்கிர்ப்ட் ரெடி பண்ணேன்.
கொல்லப்பூடி வீராஸ்வாமி அண்ட் சன்ஸ்னு ஒரு பப்ளிஷர். ரெம்ப ஃபேமஸ். அவிகளுக்கு அனுப்பினேன்.ஆச்சரியகரமா டிடிபியே செய்து ப்ரூஃப் அனுப்பிட்டாய்ங்க. அப்பாறம் தேன் ஆன்டி க்ளைமேக்ஸ்.அதை சரிபார்க்கவேண்டிய அவிக ஆஸ்தான குரு டிக்கெட் போட்டுட்டாராம். மேட்டர் ஓவரு.
தமிழ்ல ரெடி பண்ணி ஆன்மீகம் இதழுக்கு அனுப்பினேன்.அவிகளுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ தொடரை பாதிலயே நிப்பாட்டிட்டாய்ங்க.
கடேசியில இந்த தொடர் நிலாச்சாரல்,முத்துக்கமலம் வலைதளங்கள்ளயும்  ,ஜோதிடபூமி இதழ்லயும் தான் முழுசா வெளிவந்தது.
அதோட மேட்டரை விட்டுருந்தா பரவால்ல. பரிகாரங்களை  டீட்டெய்லா கொடுக்கனும்னு கிரகங்களுக்கு டேக்கா தொடர் ஆரம்பிச்சன். மொபைல் புக்ஸ்டோர் மேட்டர்ல ஒரு 20 ரூவா வரை லாக் ஆயிருச்சு. மினி மொபைல் புக் ஸ்டோர்னு ஊரு மேல போயி மூச்சா வரலை.
அப்பாறம் அலார்ட் ஆயி நிறுத்தி தொலைச்சன்.  ஜோதிட பாடம் மேட்டர்ல வேற மாதிரி அனுபவம்.ஒரு ம..னாவும் தெரியாமயே சனம் (கூலிக்கு மாரடிக்கிற சனத்தை சொன்னேன்) மக்களை அடிமையாக்கி வச்சிருக்காய்ங்க.இதுல இந்த சூட்சுமம்லாம் வேற தெரிஞ்சுட்டா அவ்ளதான்னு ஆத்தாவுக்கு செம காண்டு. எவ்ளவோ ட்ரை பண்ணியும் ஆத்தா கன்வின்சே ஆகலை.  அதையும் விட்டு தொலைச்சுட்டன்.
இப்பம் இந்த கிரகங்கள் நின்ற பலன். இன்னைக்கு சந்திரன் நின்ற பலனை சொல்லோனம். சொல்லிர்ரன். சூரியன் நின்ற பலனை படிக்காதவுக இங்கே அழுத்தி அதையும் படிச்சுருங்க.

ஆரோ ஒருத்தரு நாலே நாலு ஞா கிழமையில சோசியத்தை கத்துக்கொடுத்துர்ரதா சொல்லியிருக்காரு. இதெல்லாம் நடக்கிற காரியமான்னா இது கத்து கொடுக்கிறவரு,கத்துக்கறவரை பொருத்த மேட்டரு.
இன்னைய பதிவை கூட ஒரு வருசத்துக்கு தொடர்பதிவா எழுதற அளவுக்கு மேட்டர் இருக்கு. ஆனால் ஒரே பதிவுல அடக்கி ஆகனும்ல.முடியுதா பார்ப்பம்.
சந்திரனோட முக்கிய காரகம் மனம். மனோகாரகன்.  மனம் என்பது கடந்த கால நினைவுகளின் எதிர்கால கனவுகளின் தொகுப்பு -னு சொல்லி விட்டுரலாம். கடந்த கால நினைவுங்கறது கடந்த பிறவிகளின் நினைவாவும் இருக்கலாம். அட இந்த அண்ட சராசர பிரபஞ்சங்களின் ஒட்டு மொத்த வரலாறாவும்  கூட இருக்கலாம்ல.
எதிர்கால கனவுகளின் தொகுப்புங்கறது இனி வரப்போகும் பிறவிகளின் நினைவாகவோ – இந்த அண்ட சரா சர பிரபஞ்சங்களின் எதிர்காலமாவோ கூட இருக்கலாம்ல.
செவ் சரியில்லின்னா செவ் தோஷம்,ராகு கேது சரியில்லின்னா சர்ப்பதோஷம் அந்த தோஷம் இந்த தோஷம்னு அள்ளி விடறோம்.ஆனால் இந்த சந்திரனை ஆரும் கண்டுக்கறதில்லை.
தாயின் கருப்பையில் சிசு நீந்தி விளையாடும் பனிக்குடத்திலான நீரும், மனித உடலில் உள்ள 70 சதவீத நீர் சத்தும் ஒரே விதமான கெமிக்கல் காம்பினேசன் கொண்டுள்ளதாகவும் , கடல் நீரும் இதே கெமிக்கல் காம்பினேஷனை கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கு.
பவுர்ணமி சந்திரன் கடல் நீரை எந்த அளவுக்கு கவருதுன்னு நான் சொல்லத்தேவையில்லை. ஒங்களுக்கே தெரியும்.
நம்ம பாடிலயும் ஒரு குட்டிக்கடல் இருக்கில்ல.அதையும் பவுர்ணமி சந்திரன் கவர்வானில்லையா? அமாவாசை சந்திரன் என்ன செய்வாருன்னு விஞ்ஞானம் சொல்லல. கடகராசிக்காரனை கேளுங்க.அல்லது அப்சர்வ் பண்ணுங்க. புரியும்.
என்னைக்கேட்டா ஒரு ஜாதகத்துல சந்திரன் லக்னாத் சுபனாகி – நல்ல இடத்துல இருந்துட்டாலே போதும். மத்த கிரகங்கள் தர்ர பிரச்சினைகளை பொறுமையா டாக்கிள் பண்ணிரலாம்.
எல்லா கிரகமும் நல்லா இருந்தும் ஒரு சந்திரன் பல்பு வாங்கியிருந்தா ரெம்ப குஷ்டம்.

எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு -மனம் போல் மாங்கல்யம் -மனம் ஒன்றானால் மந்திரம் தேவையில்லை . இதெல்லாம் சொம்மா டாஸ்மாக்ல விட்ட வசனம் இல்லிங்கோ. மேட்டர் இருக்கு.
ரோசிங்க புரியும்.
பதிவு சம்பூர்ண ராமாயணம் கணக்கா நீண்டுக்கிட்டே போகுது. சந்திரன் நின்ற பலன் தானே நாளைக்கு பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்லிர்ரன். அதுவரை சந்திரனுடன் ஒரு பேட்டிங்கற இந்த பதிவை படிச்சு வைங்க. சந்திரன்னா ஒரு ஐடியா வந்துரும்.

ராகுகேது பெயர்ச்சி பலன் :2014 (2)

Pass 5

அண்ணே வணக்கம்ணே !

நேத்திக்கு மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு ராசிகளுக்கு பலன் சொல்லியிருந்தேன். இன்னைக்கு துலாம் முதல் மீனம் வரை . முதல் பகுதியில சொன்னதை போல குரு-சனி இருப்பையும் டச் பண்ணியிருக்கன். ராகு கேது காரகம் -பரிகாரம்லாம் இந்த பதிவின் முதல் பாகத்துலயே இருக்கு.

பலனை கீழே உள்ள ப்ளேயர்ல உள்ள ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுக்கங்க.

ஜோதிட பாடம்: 9

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பாடம்னு ஆரம்பிச்சம். ராசி நட்சத்திரம்,துவாதச பாவ காரகம் வரை வந்தம். இந்த துவாதச பாவங்கள்ள கேந்திர கோண ஸ்தானங்களை பத்தி பார்த்தம். கிரேடிங் வச்சுக்கிட்டா கோணம் ஃபர்ஸ்ட் கிரேட். கேந்திரம் செகண்ட் கிரேட்.

இதுக்கடுத்து வர்ரது பணபர ஸ்தானங்கள்: 2,11. இதை தேர்ட் கிரேட்னு வச்சுக்கலாம். இன்னாபா இது அக்குறும்பா இருக்கு. 2ங்கறது தனபாவம் தானே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கறாய்ங்க. 11 ங்கறது லாப ஸ்தானமாச்சே . வாழ்க்கையில பத்து ரூவா லாபம் பார்க்கலின்னா பொளைக்கறது எப்படி? இதுக்கு போயி தேர்ட் கிரேட் கொடுத்திருக்காய்ங்களேனு ஒரு கேள்வி எழும். மேம்போக்கா பார்த்தா இது நெஜம் தான்.

ஆனால் பாருங்க நாம பைசா சம்பாதிக்க என்னெல்லாம் செய்யவேண்டியிருக்கு? ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. ஒவ்வொரு சமயம் நமக்கே ” த்தூத்தெறி இந்த பொளப்புக்கு “ன்னு தோனிருது. அந்தளவுக்கு ஈத்தரை,பிக்காலி,பீத்தரை வேலைல்லாம் பார்க்கவேண்டியிருக்கு.
கொஞ்சம் போல மானம்,ஈனம்,சூடு,சொரனை இதை எல்லாம் விட்டுட்டா கொஞ்சம் போல பைசா கிடைக்குதுன்னா பெஸ்ட் ஆஃபருப்பான்னு சம்மதிச்சுர்ரம்.பைசா கிடைக்குது.

ஆனால் நம்ம பேச்சுக்கு மருவாதி இருக்குமா? ( 2ஆம் பாவம் தான் வாக்குஸ்தானம் கூட தெரியும்ல)

நாம எதுவாச்சும் நீதி போதனை சொல்ல ஆரம்பிச்சா “ஆமாம் ஒன்னை பத்தி தெரியாதாக்கும் . நீ தினத்தந்தியில ரிப்போர்ட்டர் வேலை பார்த்த பார்ட்டிதானே”ன்னிருவாய்ங்க.

ரெண்டாம் பாவம் குடும்பத்தையும் காட்டுது. நாம பைசா தான் முக்கியம்னு கூட்டி கொடுத்து -காட்டி கொடுத்து பைசா புரட்டி குடும்பத்துக்கு செலவழிச்சா அவிக சேஃப்டி ஜோன்ல இருப்பாய்ங்க. அவிகளுக்குள்ள போராடும் குணமோ வல்லமையோ ஒரு ம..னாவும் ஜெனரேட் ஆகாது.

நாம ரெண்டு கையாலயும் “வாங்கி போட்டா” நல்லா திம்பாய்ங்க. கட்டை சேவேறி போயிரும். ச்சும்மா வர்ர பணம் தானேங்கற ஃபீல் வந்துரும். படக்குனு லஞ்ச ஒழிப்பு துறையில சிக்கி சின்னா பின்னமாயிட்டா குடும்பமே கொலாப்ஸ் ஆயிரும்.

இதுல இன்னொரு வில்லங்கம் என்னன்னா ரெண்டாமிடத்துல உள்ள எல்லா கிரகங்களும் அப்படியே ஏழாம் பார்வையா எட்டை பார்க்கும். எட்டுன்னா தெரியும்ல டிக்கெட் போடற இடம்.

நம்ம ரெண்டு டூ வீலரையும் லிங்க் பண்ணி மொபைல் புக் ஸ்டோர் செய்தம். எஸ்டேட்ல இருந்து டவுனுக்கு ஓட்டிக்கிட்டு வரும் போதே ஞம ஞமங்குது. என்னடான்னு பார்த்தா ஒரு வண்டியில பேக் வீல் பேரிங் காலி.

சாதாரணமாவே பஜாஜ் சன்னின்னா மெக்கானிக் எல்லாம் ‘போ போ”னு லெஃப்ட் ஹேண்ட்ல காக்கா விரட்டுவாய்ங்க. இதுல இது மேஜர் ப்ராப்ளம். கம்பெனி ப்ரொடக்சனே நிறுத்திருச்சு. அங்கே இங்கே பழைய சாமானாத்தான் பீராஞ்சு போடனும்.

மெக்கானிக் ரூ.350 கேட்டாரு. தரேன்னு தந்து அழுதம். அன்னாருக்கு லாபம் தான். ஆனால் லாபம் மட்டுமா அவர் கணக்குல சேரும்? நம்ம வவுத்தெரிச்சலும் தான் சேரும்.

நம்ம லாபம் அடுத்தவனோட நஷ்டமா இருக்கிறதால – நம்ம நஷ்டம் அடுத்தவனோட லாபமா இருக்கிறதால லாபம் கிடைச்சா கர்மம் கூடுது. நஷ்டம் வந்தா கர்மம் ஒழியுது. இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க.

மேலும் 11 ங்கறது மூத்த சகோதரத்தை கூட காட்டும். இன்னைக்கு அண்ணாவோ அக்காவோ ஃபுல் ஃபார்ம்ல இருந்து தங்களுக்கு நமக்கு அள்ளி கொடுக்கிறாய்ங்கனு வைங்க. எதிர்காலத்துல சொத்து பிரிக்கிறச்சயோ – அல்லது அவிக கை ஓய்ஞ்சு போன நேரத்துலயே நம்ம பக்கத்துல இருந்து எதிர்ப்பார்ப்பாய்ங்களா இல்லையா?

இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க. நாளைக்கு ஆபோக்லிமம் என்ற 3 ஆமிடத்தையும், துஸ்தானங்கள் என்ற 6-8-12 பாவங்களை பத்தியும் விலாவாரியா பார்க்கலாம். உடுங்க ஜூட்டு.

விற்பனையை உயர்த்த :2

அண்ணே வணக்கம்ணே !

கடந்த பதிவுல விற்பனைய உயர்த்த சில க்ளூஸ் கொடுத்திருந்தேன். நீங்க குறிப்பிட்ட கிரக காரகம் கொண்ட பொருளை விற்பனை செய்தே ஆகவேண்டும் என்ற நிலை இருந்து -உங்க ஜாதகத்துல மேற்படி கிரகம் பல்பு வாங்கியிருந்தா என்ன பண்றதுங்கற மேட்டரை இன்னைக்கு பார்க்கலாம். அதுக்கு எந்த பொருள் என்ன கிரகத்தோட காரகம்னு தெரியனும்.

விலாவாரியா பட்டியல் போட்டா பதார்த்த குண சிந்தாமணி கணக்கா ஆயிரும்.அதனால சில அடிப்படை விஷயங்களை சொல்லிர்ரன். இதை வச்சு நீங்க விக்க துடிக்கிற ஐட்டம் எந்த கிரக காரகம்னு தெரிஞ்சுக்கங்க. அட ஒரு வீடு மேட்டரையே எடுத்துக்கங்களேன்.

தொத்தல்,இடிஞ்சு விழ தயாரா இருக்கு, மனை மதிப்பு தான் போடுவாய்ங்கன்னா செவ் காரகம். ரெம்ப பழைய வீடுன்னா சனி காரகம், அடுத்தவுக வீடு அதை விக்கப்பார்க்கிறிங்கன்னா புத காரகம், பொய்ப்பத்திரம் தயாரிச்சு விக்க பார்க்கிறிங்கன்னா ராகு காரகம்.

அதுல 1008 வில்லங்கம் இருக்கு. நீங்களும் மூக்கை நுழைக்கிறிங்கன்னா கேது காரகம். வீடு ஒரு குக்கிராமத்துல இருக்கு,மலைப்பாங்கான பகுதியில இருக்குன்னா சூரிய காரகம், ஏரிக்கரை,குளக்கரையை ஒட்டியிருக்குன்னா சந்திர காரகம், வங்கி ஜப்தி பண்ணி ஏலத்துல எடுத்த வீடுன்னா குரு காரகம், அதை வித்து உங்க பட்லிக்கு ஒரு கார் வாங்கி ப்ரசன்ட் பண்ணப்போறிங்கனா சுக்கிர காரகம்.

நீங்க அதுல குடியிருக்கிங்க.ரெம்ப சவுகரியமா இருக்கு .அதை வித்துட்டா ரெம்ப அவதிப்படுவிங்கன்னா 4 ஆம் பாவத்தை பாருங்க, நீங்க அதுல குடியில்லை. வாடகைக்கு விட்டிருக்கிங்க. அந்த வீடு உங்க சொந்த சம்பாத்தியத்துல வாங்கினதுன்னா ரெண்டாம் இடத்தை பாருங்க. அப்பா சொத்துன்னா 9ஆம் வீடு, அதை வித்து தொழில் செய்யப்போறிங்கன்னா 10 ஆம் வீடு.
இப்படி இடம் பொருள் ஏவலை பொருத்து காரகம் மாறும். திங்கள் கிழமை மகளுக்கு கண்ணாலம். நாளைக்கு ரிசப்ஷன் .இந்த நிலைமையிலயும் இத்தனை வரிகள் அடிச்சேன்னா அது என் தாய் கலைவாணி போட்ட பிச்சை. அந்த மவராசியை ரெம்ப லந்து பண்ண விரும்பல.கழண்டுக்கறேன். இந்த சுப காரியம் நெல்லபடி முடியட்டும் ஃப்ரஷ்ஷா ஃபீல்டுக்கு வரேன்.ஆதியோடந்தமா ஒரு தொடராவே எழுதிருவம்.

எச்சரிக்கை:
1.திரு.விமலாதித்தன் ஸ்பான்சர் செய்த லைப்ரரி பிரதிகள் தவிர -ஒரு யு.கே நண்பருக்கு தவிர ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொண்ட மற்ற அனைவருக்கும் நான்கு நூல்களும் 1+1 செட் அனுப்பியாச்சு. கிடைக்க பெற்றவர்கள் ஒரு வரி மெயில் போட்டால் ஒரு நிம்மதி.

2.மேற்படி நான்கு நூல்களையும் பெற விரும்புப்பவர்கள் படத்தை பாருங்க. மேலதிக விவரங்களுக்கு மெயில் பண்ணுங்க swamy7867@gmail.com

லக்னாதிபதியும் – மக்கள் தொடர்பும்

குறிப்பு:
நாம அறிவிச்சிருந்த 4 நூல்களையும் சித்தூர்,ரமேஷ் அண்ட் கோ அதிபர்,பிரபல ஆடிட்டர் ஆர்.ரமேஷ் பாபு ரிலீஸ் செய்யும் காட்சி

அண்ணே வணக்கம்ணே !
தலைக்கு மேல வேலை இருந்தாலும் இப்படி ஒரு பதிவை போட 1008 காரணம் இருக்கு. நாம எதை செய்தாலும் அது மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்டுதேன் (லக்ன குரு). எந்த ஒரு சின்ன வேலையையும் அந்திம லட்சியத்தோட தொடர்பு படுத்திக்கறது நம்ம ப்ளஸ்ஸா மைனசா தெரியாது.

இப்பம் என்ன? அறிவிச்ச நூல் வெளியீடு முடிஞ்சுருச்சு. இனி முன் பதிவு செய்தவுகளுக்கு பார்சல் அனுப்பிரனும். அதே போல இந்த நூல்களின் டிடிபி ஆப்பரேட்டரா மட்டுமில்லாம எடிட்டராவும் செயல்பட்ட திருவாரூர் சரவணன், அம்பேத்கரின் ரூபாயின் பிரச்சினை சாரத்தை ஆங்கிலத்துல எழுதி கொடுத்த திருமுருகன் கார்த்திகேயன், அதை மொ.பெயர்ப்பு செய்த சுகுமார்ஜி, நதிகள் இணைப்பின் அவசியம் குறித்து எழுதின சர்தார் ஐ.ஏ.எஸ், ஜீவா வனத்தையன் ஆகியோருக்கு காம்ப்ளிமென்டரி காப்பிஸ் அனுப்பனும்.

அதுக்கு மிந்தி சகாய கட்டணத்துல -உரிய நேரத்துல, நல்ல தரத்துல அச்சிட்டு தந்த மணிவாசகர் பதிப்பகத்தாருக்கு நன்றி சொல்லனும். மகளோட கல்யாண பத்திரிக்கைய கூரியர்ல அனுப்பனும்.
மனுஷ்யபுத்திரனை போறவன் வரவன்லாம் விமர்சிச்சப்போ நமக்கு பயங்கர கடுப்பாச்சு.ஏன்னா ஒரு பாக்கெட் புக் போடனும்னா கூட கிளிஞ்சுரும்.

ஓ…ற நாய பார்த்தா … பார்க்கிற நாய்க்கு இளப்பம்னு ஒரு சொலவடை உண்டு. இதே சிக்வென்ஸ்ல ஒரு பலான ஜோக் கூட கைவசமிருக்கு. சனம் நேயர் விருப்பத்துல கேட்டா சொல்றேன்.

நிற்க ..மக்கள் தொடர்பு பற்றி ஒரு விதிய சொல்லிட்டு மேட்டருக்கு வந்துர்ரன். “மனிதன் ஒரு சமூக விலங்கு”ன்னும் சொல்றாய்ங்க.அதே நேரம் “ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு”ன்னும் சொல்றாய்ங்க. இதுல எதுதான் உண்மைன்னா ரெண்டும் உண்மைதான். மனிதன் தன் தேவைகள் நிறைவேறும் வரை சமூக விலங்கா இருக்கான். தேவைகள் நிறைவேறியதும் தனித்தீவா மாறிர்ரான்.

ஆக ஒவ்வொருவரும் சமூகத்தை சுரண்டிக்கிட்டு தான் இருக்கம். குறைஞ்ச பட்சம் சமூகத்துக்கும் சக மனிதர்களுக்கும் ஒரு நன்றி கூட சொல்றதில்லை. மக்கள் தொடர்பில் மொதல் பாடம்.உங்கள் தேவைகள் நிறைவேறும் வரை மட்டுமல்லாது நிறைவேறிய பிறகும் இன்டராக்சன் தொடரனும்.

என் பாடாவதி மொபைல்ல 600 நெம்பர் இருந்தது. புதுசா எதுனா நெம்பரை ஃபீட் பண்ணனும்னா ஏற்கெனவே உள்ளதுல ஒன்னை தூக்கினாத்தான் முடியும். ச்சொம்மா நெம்பர் மட்டும் இருந்துட்டா போறாது. அவிகளோட இன்டராக்சன் இருக்கனும். நாம எவ்ள விலை உயர்ந்த ஃபோனை வச்சிருக்கம்ங்கறது முக்கியமில்லை. அதை கொண்டு எத்தனை பேரோட தொடர்புல இருக்கம்ங்கறது முக்கியம்.

நம் தேவைய நிறைவேத்தறவுகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை தங்கள் தேவைக்கு நம்மை தொடர்பு கொள்பவர்களுக்கும் கொடுக்கனும். என்னை பொருத்தவரை ஒவ்வொரு மன்சனும் ஒரு லாட்டரி டிக்கெட் மாதிரி. எவன் மூலம் பம்பர் லாட்டரி அடிக்குமோ தெரியாது.

நமக்கு லக்னாதிபதி ரெண்டுல இருக்கிறதாலயோ என்னமோ ” நம்ம பேச்சே” நாம செய்யவேண்டிய வேலைய செய்துருது. பேச்சு -எழுத்து ரெண்டும் ஒன்னுதானே.

கண்ணாலத்துக்கு பத்திரிக்கை கொடுக்க போகும் போது ” தெரியும்ல..என்னுது கலப்பு திருமணம். ரெண்டு அண்ணன் டிக்கெட்டு,இருக்கிற ஒரு தம்பியும் பத்திரிக்கைல பேர் போடறன்னா கூட நான் வெளியூர்ல இருக்கன்..என் பேரு எதுக்குன்னு கழட்டி விட்டுட்ட கேஸு. எனக்கு இருக்கிறதெல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் தான். வந்தா நீங்க தான் வரனும். இல்லின்னா பயங்கர மொக்கை தான். பிள்ளை பக்கம் கச கசன்னு சொந்த பந்தம் இருக்கு. நீங்களும் வரலின்னா நான் அனாதையா நிக்கனும். அப்பாறம் உங்க இஷ்டம்”னு சொல்லி தான் கொடுத்தேன். பயங்கர ரெஸ்பான்ஸு.

இதை எதுக்கு சொல்றேன்னா மக்கள் தொடர்புல முக்கியமான அம்சம் “உண்மை – யதார்த்தம்” இது ரெண்டும் இல்லாம என்னதான் கலர்ஃபுல்லா பேசினாலும் “போடாங்கொய்யால..உன்னை பத்தி எனக்கு தெரியாதா”ன்னு நினைச்சுக்குவாய்ங்க.
லக்னாதிபதி நிலைக்கும் மக்கள் தொடர்புக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன். லக்னம் லக்னாதிபதில்லாம் உங்களை காட்டும் . ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நீங்க ஸ்டெபர்னா இருக்கனும். ஐ மீன் ஒரு அச்சில் நிக்கனும்.அப்பத்தேன் உங்க சுழறிசி கரீட்டா இருக்கும். எல்லா ஏரியாவயும் ஃபோக்கஸ் பண்ணலாம்.இல்லின்னா நாஸ்திதான்.

மக்கள் தொடர்பு பக்காவா இருக்கனும்னா உங்களுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸும் கூடாது. இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸும் கூடாது. ஜஸ்ட் ..தன்னம்பிக்கையும், யதார்த்தட்தை புரிஞ்சுக்கற ஓப்பன் மைண்டும் இருக்கனும். இதை எல்லாம் கொடுக்கிறது லக்னாதிபதி தான்.

இதுமட்டுமில்லிங்ணா ..மக்கள் தொடர்புல உங்க ஆரோக்கியமும் ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கு. உங்க புன்சிரிப்பை,இனிய பேச்சை ,உங்கள் இன்டராக்சனை, உங்க ப்ரசன்சை டிஸ்டர்ப் பண்ற நோய் எல்லாம் கூட இருக்கு. உ.ம் ரத்த கொதிப்பு,பைல்ஸ்,வீசிங்.

அதனாலதான் சொல்றேன் மக்கள் தொடர்புக்கு லக்னாதிபதி பலம் ரெம்ப முக்கியம்.