மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ……. (திறந்தகடிதம்)

மதிப்பிற்குரிய அம்மா !

தங்களுக்கு ஜோதிடம்-வாஸ்து-ஆன்மீகம் இத்யாதியில் நம்பிக்கை உண்டு என்ற நம்பிக்கையில் -அடிப்படையில் நான் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற பார்வையில் இந்த கடிதத்தை எழுத துவங்குகிறேன்.

சமீபத்தில் சென்னை மற்றும் தமிழக மாவட்டங்கள் மழை -வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு – நிவாரணமும்(?) அறிவிக்கப்பட்டு விட்ட இந்த நிலையில் இந்த திறந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இதை கூரியரிலோ -பதிவு தபாலிலோ கூட அனுப்பலாம்.ஆனால் அதற்கு எந்தவித ரெஸ்பான்ஸும் இருக்காது (அனுபவம்) அல்லது “மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான்” பாணியில் ஒரு கண் துடைப்பு பதில் வரும்(அனுபவம்)

எனவேதான் இந்த திறந்த கடிதம்.

எதிர்கட்சிகள் , ஒரு சில தைரியமான மீடியாக்கள், பிழைக்க தெரியாத அரசியல் விமர்சகர்கள் இப்படி பலரும் சொல்லியிருக்கும் விஷயங்களை தாண்டி நான் பெரிதாக ஏதும் சொல்லிவிடப்போவதில்லை.

ஆனால் அவர்களின் பெயரை கேட்டாலே ஒரு வித ஒவ்வாமை வந்து உங்கள் காதுகளும் -கண்களும் மூடிக்கொள்ளும் என்பதை அறிவேன்.
எனக்கு என்னால் எஸ்கிமோவுக்கு கூட ஃப்ரிட்ஜ் வித்துர முடியும் என்ற அதீத நம்பிக்கை உண்டு. அதற்கு காரணம் என் கம்யூனிகேஷன் ஸ்கில் மற்றும் நூதன தீர்வுகள்.

உங்களுக்கு சொல்ல தங்களின் “மெஷினரி”யுடனான அனேக பழைய விஷயங்கள் என்னிடம் உண்டு. ஆனால் அவற்றிற்கு செல்ல விரும்பவில்லை.
(உங்கள் மனம் குளிரும்படி 2 விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டுநேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.)

2001 லான உங்கள் வெற்றி -டான்சி வழக்கிலான தீர்ப்பு -2011 லான உங்கள் வெற்றியை கணித்து பகிரங்கமாக அறிவித்தவன்.

2001 ல் உங்களுக்கு கூரியர் மூலம் தெரிவித்து அதற்காக தேங்க்ஸ் கார்டு கூட கிடைக்கப்பெற்றவன். டான்சி தீர்ப்பை சரித்திர நாயகி இதழில் வெளியிட்டவன். 2011 ல் உங்கள் வெற்றி குறித்த என் கணிப்பை சுதேசி இதழில் வெளியிட்டவன்.

தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்று விட்டோம் என்பது முக்கியமல்ல. தவறு என்பது உறைத்ததுமே (மனம்) திரும்பி விட முயற்சிக்க வேண்டும்.
புனரபி ஜனனம் -புனரபி மரணம் . நாம் மறுபடி மறுபடி பிறப்பெடுப்பதே கருமங்களை தொலைக்கத்தான் . மேலும் மேலும் கருமங்களை கூட்டிகொண்டே போவது துவைக்கப்போன இடத்தில் துவைக்க கொண்டுபோன துணிகளை சேற்றில் முக்குவது போன்றதே.

ஆன்மா அப்பழுக்கற்றது. சகல உயிர்களோடும் தொடர்புள்ளது. கருணையே வடிவானது. தேவை என்பதே இல்லாதது. பரமாத்மனுக்கும் ஆத்மனுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

ஈகோ நம்மை படைப்பில் இருந்தும் சக உயிர்களிடமிருந்தும் பிரிப்பது.தனிமைப்படுத்துவது. ஈகோ வலுக்க வலுக்க முட்டாள்கள் அவையில் மூதறிஞன் கணக்காய் ஆன்மா தூங்க ஆரம்பித்துவிடுகிறது.

நம் ஈகோ நம்மை வழி நடத்தும் போது பிறவிச்சக்கரத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் விஷயங்கள் எல்லாம் கசக்க ஆரம்பிக்கின்றன. பிறவிச்சக்கரத்தில் சிக்க வைக்கும் விஷயங்கள் எல்லாம் இனிக்க ஆரம்பிக்கின்றன.

வாழ்வில் எதுவேண்டுமானாலும் பொய்யாய் போகலாம்.ஆனால் மரணம் பொய்ப்பதில்லை .இந்த உலகமே ஒரு பேருந்து நிலையம் தான்.மரணமென்ற பேருந்து வந்ததுமே காலி செய்யவேண்டிய இடம். இதில் பஸ் வர தாமதமானால் கேம்ப் ஸ்டவ் வைத்து சப்பாத்தி சுட்டு சாப்பிடலாம். அதற்காக ரோட்டி மேக்கர் ஃபேக்டரி வைப்பது அறிவீனம்.

நம் தேவைக்கு மிஞ்சி இறைவன் கொடுத்தால் அதை யாருக்காகவோ நம்மிடம் கொடுத்து வைத்திருக்கிறான்.உரியவர்கள் வரும் போது ஒப்படைக்க வேண்டும் என்ற நினைவுடன் இருப்பதே ஞானம்.

இங்கு நான் காசு பணம் பற்றி மட்டும் பேசவில்லை .அதிகாரம் பற்றியும் பேசுகிறேன் . தங்களின் 4.5 வருட ஆட்சிபற்றி கடுமையான விமர்சனங்கள் உண்டு. இருப்பது இன்னும் ஆறு மாதங்களே..

நீங்கள் லோகாயத சிந்தனையில் இருந்தாலும் – பிறவிச்சக்கரத்தில் சிக்கி இன்னும் பல்லாயிரம் பிறவிகள் எடுத்து அல்லல்பட நீங்கள் தயாராக இருந்தாலும் – தேர்தல் வெற்றியே உங்கள் லட்சியமாக இருந்தாலும் இந்த 6 மாத காலத்தில் உங்கள் ஈகோவை புறம் தள்ளி ஆன்மாவின் குரலுக்கு காது கொடுங்கள் . தேர்தல் வெற்றி கூட சாத்தியமாகலாம்.

கொடுப்பதால் கர்மம் தொலைகிறது . விமர்சனங்களை ஏற்பதால் / திருத்திக்கொள்வதால் /பகைவரை மன்னிப்பதால் கர்மம் தொலைகிறது . தற்புகழ்ச்சி , புகழ் மொழிக்கு மயங்குதலால் கர்மம் கூடுகிறது .

ஈகோ என்பது நம் பெற்றோராலும் -ஆசிரியர்களாலும்-நட்பு-உறவுகளாலும் -பின் நம்மாலும் கட்டிஎழுப்பப்பட்ட சீட்டு கட்டு மாளிகை . ஒரு காற்றுக்கு கூட நில்லாதது .

சத்தியசாயிபாபாவை கடவுளென்றார்கள் .அவர் இறந்ததும் என்னவாயிற்று?அவர் யாரை நம்பி இருந்தாரோ அவர்களே கண்டெய்னர்களில் அவரது சொத்துக்களை கொள்ளையடித்து கொண்டு போனார்கள்.

என்.டி.ஆரை தேவுடு என்றார்கள் .அவர் இறந்ததும் அவர் மனைவி லட்சுமி பார்வதை வீட்டில் இருந்த நகைகள்,கரன்சி கட்டுக்களை யாரிடமோ கொடுத்து வெளியே அனுப்ப -அதை அந்த நபர் அமுக்கி கொள்ள அந்த பஞ்சாயத்து சந்திரபாபுவிடமே வந்தது .

நம்மவர்கள் என்று நாம் நம்புவது வேறு.காலம் உறுதிப்படுத்துவது வேறு.

நாம் இல்லாத இடத்தில்- இல்லாத நேரத்தில் நம்மை தூக்கிப்பிடிப்பவர்களே நம்மவர்கள். முகத்துக்கு நேரே துதி பாடுபவர்கள் நம்பத்தகாதவர்கள்.
நம்மவர்கள் என்பதற்காக திறமையற்றவர்களையே நம்ம சுற்றி வைத்துக்கொள்வது மடமை. திறமையுள்ளவர்கள் துதிபாடமாட்டார்கள் .இதை எண்ணி நடந்துகொள்வது அறிவுடைமை .

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் .இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

இந்த ஆறுமாதங்கள் ஈகோவை புறம் தள்ளுங்கள்! ஆன்மாவின் குரலுக்கு காது கொடுங்கள் !! மாற்றி யோசியுங்கள் !!!

மக்கள் அல்ப்ப சந்தோஷிகள். ஒரு ஆறுமாத நல்லாட்சியில் நாலரை வருட துன்பங்களை மறந்து போவார்கள் .

கீழ்காணும் தொடுப்புகளில் உள்ளவற்றை அமல்படுத்தப்பாருங்கள். (கு.பட்சம் இந்த ஆறுமாதத்திற்காவது) என் நம்பிக்கை என்னவென்றால் இந்த ஆறுமாத “நடிப்பு” கூட உங்கள் ஆட்டிட்யூடை பூரணமாக மாற்றி நடிப்பையே வாழ்வாக்கிவிடும் என்பதே !

வெள்ள நிவாரணம் – நிரந்தர தீர்வுகள்
http://anubavajothidam.com/?p=12312
தீர்ப்பு சரி இனி
http://anubavajothidam.com/?p=11970
மதுவிலக்கு- சாத்தியமாக
http://anubavajothidam.com/?p=12055
மானிலகனவுகள்
https://archive.org/details/swamy7867_gmail
தேச கனவுகள்
http://kavithai07.blogspot.in/p/blog-page.html
என் தேசம் என் கனவு
http://anubavajothidam.com/?p=11947

வெள்ள நிவாரணம் – நிரந்தர தீர்வுகள்

அண்ணே வணக்கம்ணே !

இது 2015,டிச.8 ஆம் தேதி தமிழக முதல்வருக்கு எழுதிய திறந்த கடிதத்தில் தொடுப்பாக இடம் பெற்ற பதிவு தலை கால் புரியலையேன்னு சிண்டை பிச்சுக்காதிங்க.

குறிப்பு:
ஊர் பிள்ளைய கிணத்துல தள்ளி ஆழம் பார்க்கிற கேஸ் நான் இல்லை. உங்கள் நிலையில நான் இருந்து தேர்தல் வெற்றியையும் மனசுல வச்சுத்தான் இதை எழுதறேன்.

1.மொதல்ல ஒரு ப்ரஸ் மீட். செய்யவேண்டிய அறிவிப்புகள்
அ) என்னையோ -அரசையோ டிஃபென்ட் பண்ற முயற்சியில நான் ஈடுபட போறதில்லை. ஏன்னா என் வாதங்கள்ள பொய்யிருந்தா இன்னும் 6 மாசத்துல வரப்போற தேர்தல்கள்ள என்னையும் -என் கட்சியையும் மக்கள் நிராகரிச்சுரப்போறாங்க. உண்மை இருந்தா அது மக்களுக்கே தெரியும். அதுவும் வரவிருக்கும் தேர்தல்களில் வெளிப்பட்டுர போகுது . இந்த ப்ரஸ் மீட்டே நடந்து போன விஷயங்களை பற்றியது அல்ல. நடக்கப்போற விஷயங்களை பற்றி.

ஆ) சட்டமன்றத்தை கூட்டுவது- நிவாரணதொகைய பயனாளிகள்வங்கி கணக்குல செலுத்தறது, அனைத்து கட்சி குழு அமைக்கறது, அந்த குழுமூலமா பயனாளிகளை கண்டறியறது ,சகாயம் போன்ற அதிகாரிக்கு பொறுப்புகொடுக்கறது இது எதுவும் செய்யப்படாமலே கூடசிறப்பாக கடமை ஆற்றும் திறமை இந்த அரசுக்கு உண்டு.
நாம் சரியான நபராக இருப்பது எவ்வளவு முக்கியமோ – அதை உலகறிய செய்வதும் முக்கியமே என்பதாலும் இந்த விஷயத்தில் அரசியலை தவிர்ப்பது இந்த நிலையில் அரசின் செயல்பாடுகளில் வேகத்தை கூட்ட அவசியம் என்பதாலும் எதிர்கட்சிகள், அரசியல் விமர்சகர்களின் கோரிக்கைகளை ஏற்க முடிவு கட்டியிருக்கிறேன்.

இ)சிறப்பு சட்டமன்றம் கூடும் – நேரடி ஒளிபரப்பு இருந்தால் மட்டுமே சட்டமன்றத்துக்கு வருவேனென்று மா.மி.எதிர்கட்சி தலைவர் நிபந்தனை விதிப்பதால் – இந்த இக்கட்டான நிலையில் இதற்கான செலவை அரசின் மீது சுமத்த விரும்பாது என் சொந்தசெலவில் நேரடி ஒளிபரப்பு நடக்கும்.

(இந்த நிலையில் எதிர்கட்சிகள் வெறுமனே உங்களையும் -நடந்துபோனவற்றையும் விமர்சித்தால் அது அவர்களுக்கே ஆப்பாக முடியும் என்பதால் யு மே பி சேஃப்)
ஈ)சட்டமன்றத்தின் ஒப்புதலுடன் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் கொண்ட 2 ஹை பவர் கமிட்டிகள் அமைக்கப்படும்.

ஒரு கமிட்டி நடந்து போன சம்பவங்களை ஆராய்ந்து -தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அவற்றை பற்றிய அறிக்கையை 15 நாட்களில் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கை மீது 15 நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டாவது கமிட்டி இது போன்ற இயற்கை பேரிடர் எதிர்காலத்தில் ஏற்பட்டால் அதன் தாக்கத்தை முடிந்த அளவுகுறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை 7 நாட்களில் சமர்ப்பிக்கும்.அந்த அறிக்கை மீது 15 நாட்களில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உ)வார்டு,ஒன்றியம் அளவில் அனைத்து கட்சி குழுக்கள் அமைக்கப்பட்டு பயனாளிகள் கண்டறியப்படுவார்கள் நிவாரண தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

ஊ)இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும், முடுக்கிவிடவும் சகாயம் /…………. தலைமையில் நிபுணர்கள் குழு நியமிக்கப்படும்.
______________

சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வராக நீங்கள் அறிவிக்க வேண்டியவை . (பிறவு திராட்டுல விட்டுராம 3 மாதங்களில் செயல்படுத்தவேண்டியவை )
1.மழை நீர் வடிகால்/வாய்க்கால் / குழாய்களில் கழிவு நீர் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும்.

2.ஆக்கிரமிப்புகள் நூறு சதவீதம் அகற்றப்படும் . ஏழை மக்களின் குடியிருப்புகள் இருப்பின் சென்னை நகருக்குள் அவர்களுக்கான மாற்று குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

3.ஆக்கிரமிப்புகளில் மெகா கட்டிடங்கள் இருப்பின் அண்டர்கிரவுண்டில் அவர்கள் செலவில் ராட்சத வடிகால் குழாய்கள் அமைத்திட நடவடிக்கை ஏற்படும் .

4.நாளிதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் (விருப்பமுள்ளவர்கள்) அரசின் இந்த போர்கால நடவடிக்கையில் அவரவர் தகுதி திறமைக்கேற்ப பங்களிப்பு செய்யலாம். உரிய ஊதியம் வழங்கப்படும் . பங்களிப்பு தருவோர்க்கு எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஜெ'வுக்கு மோடி செய்த துரோகம்

சொ.கு.வ .மே.மு

அண்ணே வணக்கம்ணே !

ஜூ.வி கழுகார் பகுதியில இலங்கை தமிழர் மேட்டரையும்,நிதி மேட்டரையும் வச்சு அடிச்சு விட்டிருக்காய்ங்க. மம்மி இலங்கை தமிழ் மேட்டருக்கெல்லாம் பொங்கற கேஸு பிரபாகரனை கைது செய்து கொண்டுட்டு வரனும்னு சொன்ன பார்ட்டியாச்சே. தமிழ் சனத்துக்கு -முக்கியமா கட்சிக்காரவிகளுக்கு மிக்சி கிரைண்டர் கொடுத்துட்டா போதும் செயிச்சுரலாம்ங்கறது தான் அவிக நம்பிக்கை.

ஆனாலும் மம்மி கோவிச்சுக்கிட்டு தில்லி ட்ரிப்பை கான்சல் பண்ணிட்டாய்ங்கன்ற மேட்டரை மட்டும் நம்பறேன். அதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
சொ.கு வழக்குல அன்பழகனும் -கர்னாடக அரசும் வாயிதா வாங்கின கதை தெரியும்ல . வழக்கு எப்படியும் சாதகாமக்கப்படலாம். அதுக்கு நாம ஏன் அவசரப்படனும். நம்ம பங்குக்கு எலீக்சன் வரை இறுதி தீர்ப்பு வராம இருக்க கட்டைய போடலாம்ங்கற ஸ்டாண்டை அவிக எடுத்திருக்கலாம்.
இதை தடுக்கலங்கற ஆதங்கம் இருக்கலாம். மேலும் தமிழக பா.ஜ.கவுல சிலதலைகள் ஊழல் ராகம் பாடறதும் -ஒரு காரணமா இருக்கலாம். எல்லாத்துக்கும் மேல அசலான மேட்டர் ஒன்னிருக்கு .

சமீபத்துல அன்னிய முதலீட்டுக்கு அனுகூலமான மானிலங்கள்னு ஒரு பட்டியல் வந்தது தெரியும்ல. அல்லாரும் (நான் உட்பட) அது உலக வங்கி கொடுத்த சர்வே முடிவுன்னு நினைச்சிருந்தம்.

ஆனால் அது பெரிய உட்டாலக்கடின்னு ஒரு முன்னாள் எம்.பி போட்டு உடைச்சிருக்காரு .ஆக்சுவலா அந்த சர்வே பண்ணது கே.பி.எம்.ஜிங்கற நிறுவனமாம். அதுவும் அவிக ஒன்னும் தன்னிச்சையா சர்வே பண்ணலியாம்.ஸ்ரீமான் மோடி அவர்கள் இப்படி ஒரு சர்வே செய்யும் படி கேட்டுக்கொண்டாராம்.

மம்மிக்கு மோடி வச்ச ஆப்பு

அந்த சர்வே எப்படி நடந்திருக்கு தெரியுமா?

அந்த நிறுவனம் ஒரு கேள்வி படிவத்தை மானில அரசுகளுக்கு அனுப்பினாய்ங்களாம் .அந்த அரசுகள் தர்ர பதில்களை வச்சு ரேங்க் டிசைட் பண்ணாய்ங்களாம்.

ஏதோ ஒரு டுபாகூர் நிறுவனம் கொசினேர் அனுப்பினா அரசு அதிகாரிகள் வேலை வெட்டியில்லாம ஃபில் அப் பண்ணி அனுப்புவாய்ங்களா என்ன? இதும் பின்னாடி மோடி உள்ளது ஆந்திர அரசுக்கு லீக் செய்யப்பட்டிருக்கலாம். அவிக ஆதியோடந்தமா ஃபில் அப் பண்ணி அனுப்பிட்டாய்ங்க போல.அடிச்சாங்கய்யா செகண்ட் ப்ரைசு.

மம்மி தான் பாவம் ! செமயா ஏமாந்திருக்காய்ங்க. செமர்த்தியா வாங்கி கட்டிக்கிட்டாய்ங்க.

Bomb

முதல்வருக்கு ரோசனை சொன்னா டாஸ்மாக் எம்.டி நன்றி சொல்றாரு

Thanks From Amma

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு லால் கிதாப் பரிகாரங்கள் , கால மாற்றம் கிரக பலன் ங்கற 2 தொடரையும் ஏக் தம்ல எளுதினப்பமே கொஞ்சம் கன்னுக்குட்டி உதைச்சது . இனி இந்த தொடர்களோடு நம்மை சைட்டும் கோவிந்தாவாகப் போகுதுங்கோ ! திருஷ்டியாயிருச்சுல்ல.

நாம ஐடியா அய்யாசாமிங்கறது உங்க எல்லாருக்கும் நெல்லாவே தெரியும். மோதிஜிக்கு ரோசனை அனுப்பி – அதை எல்லாம் பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு கொடுத்து -தமிழ் எம்.பி,தெலுங்கு எம்பிக்களுக்குல்லாம் ஸ்பீக்கர் வழியா அனுப்பியிருக்கிற மேட்டரும் தெரியும்ல?

இதெல்லாம் சென்டர் லெவல். ஸ்டேட் லெவல்ல நம்ம தேச ,மானில கனவுகளை எல்லாம் 234 +234 பிரதிகள் தயாரிச்சு மொதல்ல தமிழக சட்ட மன்ற சபா நாயகருக்கும் ,பிறவு மம்மிக்கும் அனுப்பினம். கண்டுக்கல. முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பினம் .அவிக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஃபார்வார்ட் பண்ணாய்ங்க.

அது போயி சேருதோ இல்லியே நாமளும் அனுப்புவம்னு அனுப்பினம்.கண்டுக்கல. மம்மி செயில்ல இருந்தப்போ பரப்பண அக்கிரகாரா செயிலுக்கும் அனுப்பினம் கண்டுக்கல. வெளிய வந்த பிறவு கார்டனுக்கு அனுப்பினம் கண்டுக்கல.

ஈதிப்படியிருக்க 2015,ஏப்ரல் மாசத்துல ஏதோ ஒரு நாயி அம்மா டாஸ்மாக் வேலை நேரத்தை குறைக்க போறாய்ங்கன்னு கூவுச்சு . சின்னப்புள்ளத்தனமா அதை நம்பி .. முதல்வர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பினம்.

அதன் சாரம் நாலே வரி தான். ” அம்மா ! மதுவிலக்குங்கற பாதையில மொத எட்டு எடுத்து வச்சிருக்கிங்க. நன்றி. இதனால ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை சனம் மேல பாரம் சுமத்தாம – ஈடு கட்ட பல ரோசனைகளை எல்லாம் பரப்பண அக்கிரகாரா செயிலுக்கும் அனுப்பினன். அது டெலிவரியும் ஆச்சு . பிறவு கார்டனுக்கும் அனுப்பினன். மேலும் அந்த கன்டென்ட் எல்லாம் கீழ் காணும் தொடுப்பிலும் இருக்கு .

இந்த மனுவை அனுப்பினது ஏப்ரல் மாசம் . மே ,ஜூன்,ஜூலை ,ஆகஸ்ட்னு மாசங்களே பறந்தது .ஒரே ஸ்டேட்டஸ் தான் உரிய அதிகாரிக்கு அனுப்பியிருக்கம்.

இன்னைக்கு ஏதோ பட்சி சொல்ல என்னாச்சுன்னு பார்த்தா ………… மனு அனுப்பப்பட்ட உரிய அதிகாரி ஆரு தெரீமா? “டாஸ்மாக் எம்.டி”.
அன்னார் என்ன சொல்லியிருக்காரு? கர்னாடகாவுக்கு அனுப்பின யோசனைகளுக்கு நன்றி . இங்கே தான் கன்ஃபீஸ் ஆகுது. கொய்யால தமிழ் நாட்டோட ஆட்சி அதிகாரம்லாம் முதல்வர் கையில இருக்கா? இல்லை டாஸ்மாக் எம்.டி கையில இருக்கா?

உங்களுக்கு தெரிஞ்சா விஜாரிச்சு சொல்லுங்க பாஸ் !

எச்சரிக்கை:
இந்த மாதிரி அச்சாணியமான பதிவெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா தொடர் தொடருமா? கோவிந்தா ஆகிருமா? சைட்டு வெளங்குமா? அதான் சொல்றேன் ..கோவிந்தா ! கோவிந்தா !!

ஜெ'வுக்கு டிசம்பர் 15 வரை கண்டம்

IMG_0615

DSC_0494

அண்ணே வணக்கம்ணே !
எவனாச்சும் புடிச்சு ஜெயில்ல போட்டுட்டாலும் பரவால்லங்கற அளவுக்கு வேலை அழுத்தம் சாஸ்தியாயிட்டே போகுது. உள்ளூர்ல இருந்தாலே 24 மணி நேரம் போதல. இதுல திங்கள் கிழமை வேந்தர் டிவி காரவிகளோட பிரம்மங்காரு மடம் போயாகனும். கால மாற்றம் -கிரக பலன் சீரியல் டீல்ல விட்டாச்சு. குரு பெயர்ச்சி பலன் கன்னியோட நிற்குது. (ஆத்தா ! தெரியாத்தனமா நெல்ல பேரை வாங்கிட்டன் – உள்ளது போயிராம காப்பாத்திரு தாயீ )

ஜெ’வின் உடல் நிலை பற்றி பலரும் பல விதமா பேசிக்கிறாய்ங்க. நாம சொல்றதை ஆரு கேட்பாய்ங்க -ஆரு கேட்க மாட்டாய்ங்கன்னு கணக்கு போட்டு பேசிட்டிருந்தா பிரச்சினையே இல்லை. நமக்கு தேன் மனசு கேட்கமாட்டேங்குதே. நமுக்கு லக்னத்துலயே புதன் – விரயாதிபதி. தோஷமாச்சும் குறையட்டும்னு தேன் இப்டி விஐபிங்களுக்கு பலன் சொல்லி கோர்த்து விடறதை வழக்கமா வச்சிருக்கம்.

கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்துல வெற்றி தோல்வியை கணிக்க சொல்லி சுதேசி காரவிக கேட்டாய்ங்க. கி.பி .2000 த்துல எந்த ஜாதகத்தை வச்சு கணிச்சமோ அதை தேடி பிடிச்சு கணிச்சு சொன்னம். அப்பம் ராகு தசை சந்திர புக்தி . இதுல நம்ம சொந்த ஈகோ கிராஸ் ஆக இன்ஸ்டெபிலிட்டின்னா கூட்டணி ஆட்சிதானேன்னு அடிச்சு விட்டுட்டம். நடந்த கதை என்னன்னு உங்களுக்கே தெரியும். விஜய்காந்த் ஒரு வேளை சரத்குமார் கணக்கா பவ்யம் காட்டியிருந்தா கூட்டணி சர்க்காரே கூட வந்திருக்கலாம். ஓபிஎஸ்ஸுக்கு பதிலா அவர் சி.எம் ஆகியிருப்பாரு . பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் விடுங்க.

இதை ஏன் சொல்றேன்னா ராகுதசையில நடந்துக்கிட்டிருந்த அந்த சந்திர புக்தி போயி,செவ் புக்தி போயி ,குரு தசை வச்சு-அதுல குரு புக்தி முடிஞ்சு இப்பம் சனி புக்தி நடக்குது. குரு தசை முழுக்க கெடுக்கனும் அதனால குரு புக்தியில யோகம் பிச்சிக்கிச்சி.(2014,அக்டோபர் 9 க்கு இது க்ளோஸ்) இப்ப சனி புக்தி . இது 2014,அக்டோபர் 9 முதல் 2017,பிப்,21 வரை நடக்கும்.

அம்மாவோட லக்னம் மிதுனம். இதுக்கு சனி டூ இன் ஒன். எட்டுக்குடையவரும் இவர் தான். ஒன்பதுக்குடையவரும் இவர் தான்.ஒரே கிரகத்துக்கு ரெண்டு விதமான ஆதிபத்யம் கிடைச்சா அது தன் தசா /புக்தி காலத்துல துஸ்தானாதிபதியா தான் வேலை செய்யும்.

இதன் படி 2014,அக்டோபர் 9 முதல் சனி புக்தியில முதல் பாதி முடியறவரை 2015,டிசம்பர் ,15 வரை சனி அஷ்டமாதிபதியாத்தான் வேலை செய்வாரு. அதன் பிறகு பாக்யாதிபதியா வேலை செய்வாரு. அஷ்டமாதிபதின்னா என்ன தெரியும்ல?

நோய்வாய்ப்படுதல், மரணம்,சிறை,பழி சுமத்தல், சொத்து பறிமுதல் இப்படி பலதுக்கும் வாய்ப்பிருக்கு. நோய் என்றால் சனி தொடர்பானது (கால்,நரம்பு,ஆசனம்) அல்லது குரு தொடர்பானது ( வயிறு,இதயம்) வரலாம். இது மட்டுமா? ஏற்கெனவே உள்ள நோய்கள் விஸ்வரூபம் எடுக்கலாம்.
ஷுகர் இருக்குங்கறாய்ங்க. இன்னய தேதிக்கு இதெல்லாம் வியாதியே இல்லை. கட்டுப்பாட்ல வச்சுக்கிட்டா ஜஸ்ட் ஒரு அசௌகரியம் தான்.இல்லின்னா ஆட் கொல்லி.

மம்மியோட ராசி சிம்மம். எப்பம் அர்தாஷ்டம சனி ஆரம்பமாச்சோ அப்பமே வீட்ல இருக்கிற யோகம் போச்சு .வீடே சிறையா இருந்தாய்ங்கல்ல. இதுல ரெண்டு எட்டுல ராகு கேது வேற சாப்படற சாப்பாடே விசமாயிரனும். வெளி உலக தொடர்பு கட் ஆகனும்.குரு வேற விரயத்துல இருந்தாரா சாக்லெட் அது இதுன்னு வெட்டியிருப்பாய்ங்க போல. இப்பம் குரு ஜன்மத்துக்கு வரப்போறாரு ( ரெண்டு மாசம் மிந்தியே வேலைய ஆரம்பிச்சிருப்பாரு) . குரு =ஹார்ட்.
நம்ம சனம் இந்த மேட்டர்ல கூட நாடகம் -நடிகைனுட்டு விமர்சனம் பண்றாய்ங்க. மனு தர்ம சாஸ்திரம் சொல்றாப்ல அப்பா,புருசன்,மகன்,பேரப்பசங்க பாதுகாப்புல வாழற பெண்களுக்கே என்னென்னமோ வியாதி வருது. அதது காலா காலத்துல நடந்து க்ளாக் வைஸ் லைஃப் லீட் பண்ற பொம்பளைங்களுக்கே என்னென்னமோ வருது. மம்மியோட லைஃப்?

ஒவ்வொரு கட்டத்துலயும் போராட்டத்தையே வாழ்வா கொண்டிருந்த மவராசிக்கு எந்தெந்த பார்ட் எல்லாம் பாதிச்சிருக்கோ? மக நட்சத்திரம்,சிம்மராசி அது இதுன்னு ஏத்தி விட்டுட்டானுவ போல. எல்லாரும் தனக்கு ஒபிடியன்டா இருக்கனுங்கற எண்ணம் எப்டியோ வந்துருச்சு.

கொய்யா .. ஆட்டைய போட அரசியலுக்கு வந்த கட்சிக்காரன் பயப்படுவான். (பயந்த மாதிரி நடிப்பான்) சொந்த உடம்பு பயப்படுமா என்ன? அதுவும் எத்தினின்னு தாங்கும். மெழுகு வர்த்திய ஒரு பக்கம் ஏத்தினா எவ்ள நேரம் எரியும். ரெண்டு பக்கம் ஏத்தினா எவ்ள நேரம் எரியும்.

கூட்டி கழிச்சு பார்த்தா குரு தசை,சனி புக்தியோட முதல் பாகம் கம்ப்ளீட் ஆற வரைக்கும் கியாரண்டி இல்லைன்னு தான் சொல்லனும். ஒரு வேளை சுப்ரீம்ல ஜட்ஜ்மென்ட் மாறி ஜெயிலுக்கு பூட்டா தோஷம் பரிகாரம். இல்லின்னா ரெம்ப கஷ்டம்.

புதுசா நம்ம சைட்டுக்கு வந்த பார்ட்டிகளுக்காக மம்மியின் ஜாதகம் :(பழைய கதை -புதுசா நோய் மேட்டரை ஜூம் பண்ணியிருக்கன்)

மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

பொதுப்பலன்:
சனி ரெண்டுலருந்து எட்டை பார்க்கிறதாலயும், கேது அஞ்சுல இருக்கிறதாலயும் தான் அந்த நாள் முதல் இந்த நாள் வரை மம்மிக்கு திடீர் அவமானங்கள் ,தனிமைச்சிறைல்லாம் நடக்குது. அது வேற மேட்டர். மூன்றாமிடத்துல சந்திரன் இருக்கிறதால திடீர்னு தைரிய லட்சுமி கணக்கா பொங்குவாய்ங்க, திடீர்னு டர்ராகிருவாய்ங்க.

நோய்கள்:
சனி ரெண்டுலருந்தா ஆறிப்போனதை -மிச்சம் மீதிய திங்கனும். அப்படியா தின்னிருப்பாய்ங்க? இல்லையே. ஆகவே தான் இப்ப அறுவை சிகிச்சை வரை மேட்டர் போயிருக்கு ( சனி =ஸ்டீல் /சர்ஜிக்கல் ஐட்டம்ஸ்லாம் ஸ்டீல் தானே)

கேது அஞ்சுல இருந்தா மைன்ட் கராப் ஆயிரும். மூட் செரியில்லன்னதுமே எதையாவது தின்ன ஆரம்பிச்சுருவாய்ங்க போல .ஷுகருக்கு இதுவும் ஒரு காரணம்.

மூன்றாமிடத்து சந்திரன் திடீர் தைரியம்,திடீர் பயம்னு கொடுக்கிறதால டோட்டல் பயோ கெமிஸ்ட் ரியே மாறிரும்ங்கோ. மெட்டஃபாலிசமே மாறிரும்.
ஒரு ஃப்ளாஸ்க்ல திடீர்னு வென்னீரை ஊத்தி திடீர்னு ஐஸ் வாட்டரை ஊத்தினா என்னாகும்? (இங்கே ஃப்ளாஸ்க் = பாடி ). ஆங்சைட்டியால வரக்கூடிய எல்லா வியாதியும் வரும்.

பொதுப்பலன்:
மம்மி பவருக்கு வர்ரப்பல்லாம் ஒரு பிராமண லாபி மம்மியை ரவுண்ட் அப் பண்ணி ஆப்படிக்கவும் – லாஜிக்கே இல்லாம சசி கும்பலை தாங்கு தாங்குறதுக்கும் ஏழுல குரு தான் காரணம். ஏழு நண்பர்களை காட்டும். குரு லக்னாத் சுபனா இருந்திருந்தா வேற கதை .பாபியாச்சே .அதான் ஆப்பு.

வியாதிகள்
குரு =இனிப்பு , குரு = எதிர்கால திட்டங்கள் . மைன்ட் பரபரன்னு வேலை செய்யும் போது அதிக க்ளூக்கோஸ் தேவைப்படறாப்ல ஒரு ஃபீல் வரும். ஒரு சாக்லெட். ஃபிசிக்கலா ஸ்ட் ரெய்ன் பண்ணா க்ளூக்கோஸ் பர்ன் ஆயிரும்.ஆனால் ஆகாய கோட்டைதானே.எப்டி செலவாகும்? அதனால ரத்தத்துல அதிகரிக்கிற க்ளூக்கோஸை க்ளைக்கோஜனா மாத்தற அளவுக்கு இன்சுலின் சுரக்கனும்ல. போதுமான இன்சுலின் சுரக்கலின்னா அதான் ஷுகர்.

பொதுப்பலன்:
மூன்றுக்குரிய சூரியன் 9 ல இருக்கிறதால தான் மத்திய அரசோட எப்பவும் மோதல் போக்கு .லக்னாதிபதியான புதனே இங்கே சூரியனோட சேர்ந்திருக்கிறதால தான் ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. (லைஃப்ல எப்பவாச்சும் ரிஸ்க் எடுக்கலாம். தினம் தினம் எடுத்தா?)

பத்துல சுக்கிரன் தான் சொத்துக்குவிப்புக்கு காரணம். வாகன ஊர்வலம்,ஆடம்பரம்,படாடோபம் இத்யாதியும் இவரோட கைங்கரியம் தான் . (உ.ம், தத்து புத்திரரோட கண்ணாலம்)

நோய்கள்:
சுக்கிரன் கைனகாலஜிக்கல் செட்டப்புக்கு காரகர். இவரு உச்சமானது ஓகே தான்.ஆனால் எங்கேன்னு பார்க்கனும்ல? பத்துல. இதான் ஆப்பு. செரியா திங்க முடியாத, செரியா தூங்க முடியாத வியாதி வரனும்.

பொதுப்பலன்:
ரெண்டாமிடத்து சனி தான் அப்பப்போ வெகண்டையா பேச வச்சுர்ராரு (ஜானகி எம்.ஜி.ஆருக்கு மோர்ல விசம் கொடுத்துட்டாய்ங்க, கலைஞர் என்னை லாரி ஏத்தி கொல்லப்பார்த்தாரு , ஆமா நான் பாப்பாத்திதான் -இதெல்லாம் ஒரு சில உதாரணங்கள்)

ஜெ’வுக்கு டிசம்பர் 15 வரை கண்டம்

செயிலுக்கு அனுப்பின கூரியருக்கு வந்த பதில்

response from CM Cell

அண்ணே வணக்கம்ணே !
நதிகள் இணைப்பு திட்டத்துக்கான நமது செயல் திட்டத்தை அன்றைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பார்வைக்கு கொண்டு செல்ல நாம செய்த முயற்சிகள் தெரிந்ததே.
இந்த விவகாரத்தை செய்தியா ப்ரஸ்ஸுக்கு கொடுக்க எழுதி வச்சிருந்த மேட்டர் அப்படியே கீழே :
_____________________
1.தமது திட்டத்தின் 234 பிரதிகளை தமிழக சபா நாயகருக்கு அனுப்புகிறார்.எம்.எல்.ஏ க்களுக்கு கிடைக்கச்செய்யுமாறு கோருகிறார். நடவடிக்கை இல்லை
2.இன்னொரு முறை 234 பிரதிகள் தயாரித்து தமிழக முதல்வர் (இன்றைய மக்கள் முதல்வர்) இல்லத்துக்கு அனுப்புகிறார் . நடவடிக்கை இல்லை
3.அந்த சமயம் மக்களின் முதல்வர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்ததால் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தம் யோசனைகளை சேர்க்கலாமே என்று முதல்வர் தனிப்பிரிவுக்கு ஆன் லைனில் மனு அனுப்புகிறார் .அவர்கள் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு ஃபார்வார்ட் செய்ததாக பதில் தருகிறார்கள்.
4.உடனே கட்சி அலுவலகத்துக்கு தொடர்பு கொள்கிறார் -ஒரு செட் யோசனைகளை கூரியரில் அனுப்புகிறார். பதில் இல்லை. நடவடிக்கை இல்லை
5.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிறார். பெங்களூர் பரப்பண அக்ரஹாரா செயிலில் இருக்கிறார். இவர் தம் யோசனைகளை -இவற்றின் பால் ஜெ வை சுற்றியிருக்கும் நபர்களின் அலட்சிய போக்கை சுட்டிக்காட்டி கூரியர் தபால் அனுப்புகிறார்.
6.கூரியர் தபால் அக்டோபர் 7 ஆம் தேதி டெலிவரி ஆகிறது. ப்ரூஃப் ஆஃப் டெலிவரியும் கிடைக்கிறது.
7.இதற்கிடையில் ஜெ வுக்கு ஜெயில் விலாசத்துக்கு தாம் தமது யோசனைகளை அனுப்பியுள்ள விஷயத்தை முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறார்.
பினாமி முதல்வர் பன்னீர் செல்வம் பதவியேற்று கொலுவிருக்கும் நாளிலேயே இவரது மனு ரிஜெக்ட் செய்யப்படுகிறது.
_______________
ஃப்ளாஷ் பேக் முடிஞ்சுருச்சு. இப்பம் லைவுக்கு வந்துரலாம். நாம கூரியர் மூலம் அனுப்பின கன்டென்ட்டை மம்மி புரட்டியிருக்காய்ங்க. (செயில்லயா? கார்டன்லயானு நமுக்கு தெரியாதுங்கோ ..நடந்ததை வச்சு ஒரு ஹன்ச் தேன்.
மம்மிக்கு எழுதின லெட்டருக்கு மம்மியே பதில் கொடுத்தா – அது செரியா வராது. சி.எம் செல் /கார்டன் நிர்வாகம்/சபா அலுவலகம்/கட்சி அலுவலக நிர்வாகம் எல்லாமே டுபாகூருனு தெரிஞ்சுரும்ல. அதனால இந்த ஆசாமியோட பழைய கம்யூனிக்கேஷன்ஸ் எதுனா பென்டிங்ல இருந்தா இப்பயாச்சும் ஒரு பதிலை கொடுத்து பைசல் பண்ணுங்கனு சொன்னாப்ல இருக்கு.
________________
சி.எம் செல் அதிகாரிகள் தங்க்ள் டேட்டா பேஸை சலிக்க ஜூன் 8,2014 ல நாம எழுதின மனு சிக்கியிருக்கு. மனுவுல என்ன சொல்லியிருக்கம்னா..
யம்மாடி..நதிகள் இணைப்புக்குன்னு ஒரு சூப்பர் ப்ளான் வச்சிருக்கன். அதை உங்க பார்ட்டி மேனிஃபெஸ்டோல சேர்க்க சொல்லி பார்லிமென்ட் எலீக்சன் டைம்ல அனுப்பினன். உங்க அதிகாரிங்க பார்ட்டி ஆஃபீஸுக்கு ஃபார்வார்ட் பண்ணாய்ங்க.
பார்ட்டி ஆஃபீஸையும் காண்டாக்ட் பண்ணேன்.அவிகளும் கண்டுக்கல. இப்பம் எலீக்சன் முடிஞ்சு ரிலாக்ஸா இருப்பிங்க. இப்பயாச்சும் பாருங்க. கு.பட்சம் ஸ்டேட் லெவல்லயாவது இம்ப்ளிமென்ட் பண்ணுங்க..
____________________
இந்த மனுவுக்கு 28/10/2014 ல அவிக கொடுத்த பதில் தான் இது. இந்த தேதிக்குள்ள மம்மி செயிலுக்குபோயி -நம்ம கூரியரை டெலிவரி வாங்கி -வீட்டுக்கு வந்துட்டாய்ங்கல்ல? வீட்ல பவர் க்ளாஸ் போட்டுக்கிட்டு நம்ம கன்டென்ட் பூரா புரட்டியிருப்பாய்ங்க போல
ஏம்பா நான் செரியா ரோசிக்கிறனா?
_______________________
மனுவுக்கு வந்த பதிலை ஸ்க்ரீன் ஷாட்டா கொடுத்திருக்கன். என்னா மாதிரி ஒரு வழுக்கல் பதில் பாருங்க. வெளங்கிரும்.
நம்ம ப்ளான்ல உள்ள ஹைலைட்டே நிருத்யோகர்களை கொண்டு நதிகளை இணைக்கிறது. அந்த ஸ்மெல் கூட இல்லை பாருங்க.
// நீர் வளத்தை அறிவியல் பூர்வமா காப்பாத்துவாய்ங்களாம்//

__________________

#வருத்தம்:

இதுக்கு மிந்தியெல்லாம் ஏதாச்சும் நடக்க போகுதுன்னாலே 24 மணி நேரத்துக்கு மிந்தியே நம்ம மைண்ட் ரிசீவ் பண்ணிக்கும்.ஆனால் இப்பம் அக்.28 ஆம் தேதியே வந்த பதிலை நவம்பர் 25 ஆம் தேதி தான் பார்க்க முடியுது.

முருகேசா.. எங்கயோ தப்பு நடக்குது.. அலார்ட்டாய்க்கடா !