உங்களுக்கும் ராஜயோகம் : 7 (வைகோ ஸ்பெஷல்)

vaigo

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு 6 சாப்டர்ல லேகியம் வித்து போன சாப்டர்ல தான் அரசியல் வாழ்க்கைக்கு தேவையான ரூட்டை சூரியன் எப்படி போட்டு கொடுக்கிறாருன்னு பக்காவா பார்க்க ஆரம்பிச்சம். சில விஷயங்களை சொல்லியும் இருக்கன்.

யோவ் .. மேட்டருக்கு வரதுக்கு 3 சாப்டராய்யானு கோவிச்சுக்காதிங்க பாஸு ! முதலிரவுன்னா அந்த 5 நிமிட் மேட்டர் தான். ஆனால் அதுக்கு மிந்தி எவ்ளோ வேலை கீது?

அதுமாதிரி தான் இதுவும். சனம் ஆதிகாலத்துலருந்து எழுதிவச்சுட்டான் /நாளை நடப்பதை ஆரே அறிவார்/ முப்பது வருசம் வாழ்ந்தவனும் இல்லை /கெட்டவனும் இல்லேன்னு இஷ்டத்துக்கு உங்க மைன்ட்ல ஃபீட் பண்ணி வச்சிருக்காய்ங்க.

இதை எல்லாம் நீங்களும் நம்பி வாழ்ந்துக்கிட்டிருக்கிங்க. இதுக்கெல்லாம் அடிப்படை என்னன்னு சொல்லி வச்சு உங்களை ப்ரிப்பேர் பண்ண வேணாமா பாஸ்?
ஒரு ஜாதகத்துல சூரியன் நல்ல நிலையில இருந்தா கிடைக்கிற பலன் சுயம் உணர்தல் -சுயம் மறவாமை. இந்த இடத்துல சுயம் என்பதை செல்ஃப்ங்கற பொருள்ள சொல்லல. தான் யாரு ,ஒரிஜினலா தன் பலம் என்ன,பலவீனம் என்னங்கற தெரி நிலையைத்தான் சொல்றேன்.

ப்ரசன்ட் பாலிட்டிக்ஸ்ல பார்த்திங்கனா நம்ம வைகோ சார். இவரோட ரோல் என்ன? கலைஞரின் கைவாள்.கைவாளா மட்டும் இருந்திருந்தா பரவால்ல.கைத்தடியாவும் இறங்கியிருக்காரு. கால்ல விழறது – உசுரை கொடுப்பேன் -உப்புமா கொடுப்பேன்னு வசனம் விடறது எட்செட்ரா. சூரிய பலம் இல்லாதவன் செயல் இப்படித்தான் இருக்கும்.

வைகோ நிலைமையே இதான்னா ஆயா மின்னே வெஸ்டர்ன் டாய்லட்ல உட்கார்ந்த மாதிரி ஃபோஸ் கொடுக்கிற அடிமை திமுக மந்திரிகளை /எம்.எல்.ஏக்களை பத்தி சொல்லவே வேண்டியதில்லை.

பிறவு ஒரு கட்டத்துல கலைஞரோட முட்டிக்கிட்டு வெளிய வராரு. காரணம் என்ன ? ஸ்டாலின். அன்னைக்கு தேதிக்கு ஸ்டாலின் கச்சா. பச்சா. அந்த ஸ்டாலினை தனக்கு போட்டியா நினைச்சு – தன்னைவிட உசரமா கற்பனை பண்ணிக்கிட்டு ..சர்வைவலுக்காக , ஒரு அற்புதம் நிகழ்த்தி ஸ்டாலினை விட நான் ஜூரின்னு எஸ்டாப்ளிஷ் பண்ணிக்க கள்ளத் தோனி ஏறி இலங்கைக்கு போறாரு.

சூரிய பலம் உள்ளவன் ஓவர் கான்ஃபிடன்ஸால கெட்ட நேரத்துல மொக்கையாவானோ என்னமோ சொல்லமுடியாதே தவிர செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இல்லாம இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்ல இப்படி கண்ட ஆளையெல்லாம் தனக்கு போட்டியா -உசரமா நினைக்கவே மாட்டான்.

இது மட்டுமில்லிங்ணா எதை செய்தாலும் -உரிய கால அவகாசத்தோட நோட்டீஸ் கொடுத்து பப்ளிக்கா,லீகலா தான் செய்வான்.

நாம அப்பப்போ சொல்ற ஃபார்முலா ” எப்படியா கொத்த நட்புலயும் ஒரு யுத்தத்துக்கான சன்னலையாச்சும் திறந்தே வைக்கனும்.எப்படியா கொத்த பகையிலயும் ஒரு அமைதி ஒப்பந்தத்துக்கான சன்னலையாச்சும் திறந்தே வைக்கனும். ஆனால் நம்மாளு அப்படியில்லை வச்சா குடுமி சிரைச்சா மொட்டை . தூக்கினா எவரெஸ்ட் உசரத்துக்கு தூக்குவாரு . இறக்கினா அதல பாதாளத்துக்கு இறக்கி பேசுவாரு .

சூரியபலம் உள்ளவன் உலகமே நீ முட்டாள்னு கோரஸா கத்தினாலும் -அப்படியானு ஸ்மைலோட கேட்டுப்பான். இதுவே ஒலகமே நீ ஜூரிப்பான்னு சொல்லும் போது “நாம அந்தளவுக்கெல்லாம் ஒர்த்தில்ல பாஸு”ம்பான்

சூரியனுக்குரிய திசை “நடு”மத்த கிரகம்லாம் சூரியனை சுத்தி சுத்தி வரும். அப்படி வரும் போது டிஸ்டன்ஸ்ல டிஃப்ரன்ஸ் வரும்.ஆனால் சூரியன் என்னமோ தன் இடத்தை விட்டு அசையவே மாட்டார்.

இப்படியாக சூரியபலம் கொண்ட மனிதன் பேலன்ஸ்டாவே இருப்பான். ஆனா வைகோ? அவரு செயில்ல பார்க்கவந்தாருங்கற ஒரு பாய்ண்டை வச்சு ஜஸ்டிஃபை பண்ணிக்கிட்டு கலைஞரோடவே கூடி குலவினவரு.

பகையாள் கிட்டே வாழ் நாள் எல்லாம் பகையோட இருக்கனுங்கற பாலிசி நமக்கில்லை.ஆனால் பகைக்கு முன்னான நட்புக்கும் -பின்னான நட்புக்கும் லேசாவாச்சும் ஒரு வித்யாசத்தை காட்டவேணாமா? (காட்டனும் பாஸ் !)

மிகை என்பது அரசியலுக்கே மட்டுமில்லை -தினசரி வாழ்க்கைக்கும் பகை தான். ஜெவோட போறிங்களா போங்க. அடக்கி வாசிங்க.அன்பு சகோதிரின்னு பொங்காதிங்க. இப்ப என்னாச்சு வீரலட்சுமியை கூட அன்பு சகோதிரிங்கற நிலைக்கு வந்தாச்சு .

MsJayalalitha

மிகையில் இந்த ஜெயாடிவி 100% ன்னா ,கலைஞர் செய்திகள் 35%. அங்கே தேவதேவின்னா இங்கே வார்த்தைகள் தான் வேற.கொய்யால ..அவனவன் சோத்துக்கு அல்லாடறப்ப நல்லாட்சி ,பொற்காலம், பொன்வண்டு சோப்புன்னு ஜல்லியடிச்சா என்னாகும்?

தத்துவ விசாரத்துல பாம்பு -கயிறு உதாரணம் நிறைய வரும். இந்த குழப்பம்லாம் டே லைட்ல வரவே வராது வாத்யாரே.ஏன்னா சூரியன் உள்ளதை உள்ளது போல காட்டீருவாரு .சூரிய பலம் உள்ளவனுக்கு உள்ளது உள்ளது போல தெரியும் . அதை விவரிக்கவும் தெரியும். (என்ன ஒரு லொள்ளுன்னா அவன் பேசற ஆர்டரே ஒரு அப்பங்காரன் பிள்ளைக்கு சொல்ற மாதிரி இருக்கும்.எதிராளி நெளிய ஆரம்பிச்சுருவான்)

சுயம் உணர்தல் -சுயம் மறவாமைங்கறது அரசியல்ல ரெம்ப முக்கியம். இது ஒரு மன்சனுக்கு இல்லைன்னா ஒன்னு தன்னை அதீதமா மதிப்பீடு செய்து மோதக்கூடாத இடத்துல மோதி சேதமாயிருவான். அல்லது தன்னை ரெம்ப குறைச்சு மதிப்பீடு செய்து மோதாமயே மொக்கை ஆயிருவான்.

மத்தவிகளை உதாரணம் சொன்னா அவிகளோ /அவிக அல்லக்கைகளோ உணர்ச்சிவசப்பட்டுருவாய்ங்க.அதனால என்னையே உதாரணமா காட்டறேன். நான் அப்பப்போ புலம்பிக்கிட்டிருக்கிற தேச கனவுகள் -மானில கனவுகள் /இவற்றை சாத்தியப்படுத்துவதற்கான நம்ம முயற்சிகள் எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

1997 ல பூர்வீக வீட்டை வித்து ஒன்னே கால் லட்ச ரூ கையில தந்தாய்ங்க (அப்ப நம்ம வயசு 30) அன்றைய தினமே நம்மை பத்தி ஓவரா இமேஜின் பண்ணிக்கிட்டு ஒரு வேனை வாங்கிக்கிட்டு ஆல் இண்டியா டூர் கிளம்பியிருந்தா என்னாயிருக்கும்? இதுவே 2017 ல கூட டூர் புறப்படலைன்னு வைங்க என்னாகும்? ரெண்டுமே தப்பு .
இரும்பு நெல்லா காயறதுக்கு மிந்தி அடிச்சாலும் பிரச்சினை தான். நெல்லா காஞ்ச பிறவு அடிக்காம விட்டாலும் பிரச்சினை தான்.சூரிய பலம் உள்ளவன் மைன்டுல எதை எப்ப செய்யனுங்கற மேட்டர் பக்காவா ப்ரோக்ராம் ஆகியிருக்கும் பாஸ் !

நம்ம ஸ்கெட்ச் ரெம்ப சிம்பிள் .கலைஞருக்கு நம்ம திட்டங்களை அனுப்பியிருக்கம் .தேர்தல் அறிக்கையில அந்த திட்டங்களோட வாசமாச்சும் இருக்கா பார்ப்பம். சுத்தமா இல்லின்னாலும் ஓகே பாஸ் ! உங்களுக்குன்னு ஒரு விஷன் இருக்கும். அது என்னுதை விட பெட்டராதான் இருக்கும் . யு வில் டூ பெட்டர்னு ஒரு கடிதாசி போட்டுட்டு மாங்கு மாங்குன்னு ஆதரிச்சிக்கிட்டே இருப்பம்.

ஒரு வேளை ஆட்சிக்கு வந்தும் மதுவிலக்கு மேட்டர்லயோ – இன்ன பிற வாக்குறுதிகள் விஷயத்துலயோ பம்மறாருன்னு வைங்க அப்ப கொஞ்சம் கொஞ்சமா வாலை அவுத்து விடுவம்.

ஒரு வேளை நாளைக்கே தேர்தல் அறிக்கையில என் திட்டங்களோட வாசனை கூட இல்லைன்னு போர்க்கொடி தூக்கினம்னு வைங்க. என்னாகும்?
நாம யாரு -நம்ம பலம் என்ன -பலவீனம் என்ன – ப்ரசன்ட் செனேரியோல நம்ம ரோல் என்னங்கற விழிப்பு இருக்கோனம்.வைகோவையே எடுத்துக்குவம் .தேமுதிகவுல பிளவு . தேமுதிகவோட மக்கள் நல கூட்டணி தொகுதி உடன்பாடோ/கூட்டணியோ வச்சிருக்கு.

இவர் மீடியா கிட்டே பேசனும். மொதல்ல சுதீஷை பேச விட்டு கடேசியில எங்களோட கூட்டு வச்சிருக்கிற கேப்டன் கட்சியை பிளக்க பார்க்கிறதை ம.ந.கூ ஒருங்கிணைப்பாளரா கடுமையா கண்டிக்கிறேன். இது பலிக்காது .தொடராது .தொடர்ந்தா விளைவுகள் விபரீதமா இருக்கும்னு ஃபிலிம் காட்டிட்டு எந்திரிச்சு போயிட்டே இருக்கனம்.ஆனால் இவர் செய்தது என்ன?

மரண மொக்கை.
வைகோவுக்கு சூரிய பலம் இருந்திருந்தா தலைமையோடவே தகராறு வந்திருக்காது – இன்ன பிற கிரகங்கள் காரணமா வந்திருந்தாலும் -பேட்ச் அப்புக்கு பிறகு கெத்தா மெயின்டெய்ன் பண்ணியிருப்பாரு .இல்லை போல.அதான் இப்படி.

ஓகே சூரியபலம் ஸ்தூலமா என்னெல்லாம் கொடுக்கும்னு இதுவரை சொன்னேன். சில பல சூட்சுமமான விஷயங்களை எல்லாம் கூட கொடுக்கும் பாஸ்..
அவை ஆன்மாவுடன் மவுன உரையாடல் – அபேத பாவம்.. இந்த ரெண்டு மேட்டரும் அரசியலுக்கு எவ்ளோ இம்பார்ட்டன்டுன்னு ரோசிச்சு வைங்க. அடுத்த பதிவுல விரிவா பேசுவம்..

2016 தேர்தல்கள்: தேறுமா ஜெ'கட்சி

jj

அண்ணே வணக்கம்ணே !
நாம புதுசா ஆரம்பிச்ச இங்கிலீஷ் சைட்டை பிரபலப்படுத்தறதுக்காகவே இந்த மேட்டரோட மொத பகுதியை ரெம்ப குஷ்டப்பட்டு இங்கிலீஷ் சைட்லயே போட்டேன்.ஆனால் நம்மாளுங்க விவரமானவிக.தமிழ் பதிவை மட்டும் படிச்சுட்டு -அண்ணே ! எதெல்லாம் நடந்ததோ அது ஜெ ஜாதகப்படியே நடந்ததுன்னு இந்த பதிவுல வெவரமாவே எழுதியாச்சு ..இனி என்னெல்லாம் நடக்கும்னு சொல்லுங்கண்ணே”னுட்டு கழண்டுக்கிட்டிங்க. அதனால கவுரதையா இந்த பதிவை தமிழ் சைட்லயே போடறேன்.

நமக்கு கிடைச்ச ஜாதகப்படி இப்ப அந்த மவராசிக்கு குரு தசை நடக்குது . துவக்கம் 2012/8/21. குருதசையில குரு புக்தி 2014/10/09 அன்னைக்கு க்ளோஸ்.
இவருடைய சுயபுக்தி முடிஞ்சு அடுத்த புக்தியான சனி புக்தி நடந்துக்கிட்டிருக்கு .ஜெவுக்கு இந்த குரு தசை அனுகூலமா இல்லையான்னு தெரிஞ்சுக்கறது இந்த சூழலில் மிக எளிது. ஏன்னா சுயபுக்தி முடிஞ்சுருச்சுல்ல?

குரு தசை குரு புக்தி காலம் -அதாவது சுயபுக்தி (2012/8/21 முதல் 2014/10/09 ) எப்படி இருந்தது? ஒரு தடவை அசெஸ் பண்ணி பாருங்க (கடந்து போன காலம் தானே)
அது அனுகூலமா இருந்திருந்தா குரு தசை ஃபெயில். ஒரு வேளை குரு தசை குரு புக்தி பிரதி கூலமா இருந்திருந்தா குரு தசை சக்ஸஸ்.
என்ன சொல்றிங்க? மம்மியோட ஒவ்வொரு அடியும் அம்மியா இருந்ததில்லை. எம்.ஜி.ஆர் காலத்துல கூட அசராத தாத்தாவே தலைய பிடிச்சுக்கிற மாதிரி ஆயிருச்சுல்ல? அப்ப என்னா அருத்தம்?

சுய புக்தி யோகத்தை கொடுத்துருச்சு. அப்ப குரு தசை க்ளோஸு.டப்பா டான்ஸ் ஆடனும். மொத்தையா இப்படி சொல்லி உட்டுட்டா எப்பூடி?
இப்பம் நாம வேற கலைஞருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கிக்கிட்டிருக்கமா .. மோடி மேட்டர்ல சொன்ன மாதிரி ஏதோ இட்டு கட்டி சொல்றான்யான்னு நினைச்சுரக்கூடாதில்லை.

கொஞ்சம் டீட்டெய்லா பார்ப்பம்.

மம்மியோட மிதுன லக்னத்துக்கு குரு 7/10 க்குடையவர் இவர் 7 ல் ஆட்சி பெற்றார். ஒரு கிரகத்துக்கு ரெண்டு ராசிகள் சொந்தமா இருந்து அதுல ஒரு ராசியில அந்த கிரகம் ஆட்சி ஆயிட்டா ஆட்சி பெறாத பாவகாரகம் நாஸ்தி .

7=தோழி ,10 =ஆட்சி .மம்மி என்ன பண்ணாய்ங்க? ஆட்சியை டீல்ல விட்டுட்டு தோழி மேட்டரை மட்டும் பார்த்துக்கிட்டிருந்திருக்கனும். ஆனால் என்ன ஆச்சு? அடிச்சு பிடிச்சு பிரச்சாரம் பண்ணாய்ங்க-தோழிய வெளிய அனுப்பினாங்க-மறுபடி பார்லிமென்ட் எலீக்சன்ல கில்லியா அடிச்சு விளையாடினாங்க.
அப்டின்னா என்னா அருத்தம்? குரு தசை குரு புக்தி யோகத்தை கொடுத்துருச்சு. அப்பம் குரு தசை ஃபணால்.

செரி ..இன்னம் கொஞ்சம் டீட்டெய்லா பார்ப்பம் .தற்சமயம் குரு தசையில சுய புக்தி (குரு புக்தி) முடிஞ்சுருச்சு .அடுத்ததான சனி புக்தி நடக்குது. (2014-10-09 முதல் 2017-5-01 வரை) .

மம்மியோட மிதுன லக்னத்துக்கு சனி 8/9 க்குடையவர் .இவர் ரெண்டுல இருக்காரு .எட்டு =டிக்கெட்டு , ஒன்பது = பாக்யம்.
ஒரே கிரகத்துக்கு ரெண்டு வித ஆதிபத்யம் கிடைக்கும் போது மொதல்ல தீய பலன் நடக்கும். பிறகுதான் நல்ல பலனை எதிர்ப்பார்க்க முடியும். கோசாரம்/தசை/ஆயுள் இப்படி எல்லாத்துலயும் செகண்ட் ஆஃப்ல நல்ல பலன் கிடைக்கும்

இப்போ சனி புக்தி காலத்தை ரெண்டா பிரிச்சுக்கனும். அஃதாவது 2 வ,6மா,12 நாளை ரெண்டால வகுத்துரனும். அப்ப 1 வ, 3 மா,6 நாள் சனி புக்தியோட மொத பாதி. இது 2016-1-15 ஆம் தேதியோட க்ளோஸ் ஆயிருச்சு.

இப்பம் செகண்ட் ஆஃப் ஓடுது. ஹய்யா..அப்போ அம்மாவுக்கு யோகம் தான்னு ரத்தத்தின் ரத்தங்கள் குதிப்பாய்ங்க (குதிக்கட்டும்)

யோகத்தை தரும் கிரகம் எதுன்னு பார்க்கனுமில்லை. சனிங்ணா. இந்த சனி எங்க கீறாரு? ரெண்டுல .எந்த பாவத்தை பார்ப்பாரு ? எட்டை .
எட்டு என்ன ஸ்தானம் ஆயுள் ஸ்தானம்.ஆயுள் காரகர் ஆயுள் ஸ்தானமான எட்டை பார்த்தா ஆவிசு கூடனும். ஆவிசு கூடனும்னா அரசியல்வாதி எதிர்கட்சியில இருக்கோனம்.

கலைஞர் தீர்காயுசா இருக்க அவரோட தோல்விகளும் ஒரு காரணம். அதுவும் வாத்யார் புண்ணியத்துல 13 வருசம் வனவாசம் கணக்கா இருந்தாரில்லை.

இது அழுகுணி ஆட்டம்னு அப்ஜிசன் பண்றவிகளுக்கு சொல்லிக்கிறேன். மன்சனுக்கு அவன் எதிர்ப்புகளுக்கிடையில வாழ்ந்துக்கிட்டிருந்தா அவன் பாடியோட பயோ கெமிஸ்ட் ரியே மாறிரும் வாத்யாரே -இது சைக்காலஜி ,பயோ கெமிஸ்ட் ரி சேர்ந்த சமாசாரம்

சத்ரு,ரோகம்,ருணம் மூன்றுமே ஆறாமிடம் தானே. சத்ரு இருந்தா மத்த ரெண்டும் கண்ட் ரோல்ல இருக்கும். ரோகம் இருந்தா மத்த ரெண்டும் கண்ட் ரோல்ல இருக்கும். ருணம் இருந்தா (கடன்) மத்த ரெண்டும் கண்ட் ரோல்ல இருக்கும். இது அனுபவஜோதிடம்.

அட நம்ம சொந்தகதையையே எடுத்துக்கங்களேன்.. தாளி அஞ்சு பத்துக்கு லாட்டரி அடிச்சு சந்து சந்துக்கு கை மாத்து வாங்கி -அல்லாடினப்பல்லாம் வராத நோவு நொடில்லாம் இப்பம் க்யூ கட்டுது .அந்த காலத்துல சந்திரபாபு மேட்டர்ல கோர்ட் வரைக்கும் போயி அலப்பறை பண்ணியும் எல்லாம் ஊமை குத்துதானே கண்டி நம்ம மின்னே எவனும் மூச்சு விடமாட்டான்.

ஆனால் இன்னைக்கு இன்பாக்ஸுல வந்து கயிவி கயிவி ஊத்தறான். அதுக்காகவே ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து உள்ளாற வரானுவ.
செரி இந்த பாய்ண்ட் ஓகே.

அடுத்த பாய்ண்டுக்கு போகலாம். சனி தன் பிற்பகுதியில யோகத்தை தரனும்னே வச்சுக்குவம். சனி தர்ர யோகம் எப்படியா கொத்தது தெரீமா? அந்த யோகம் நம்மை ரீச் ஆகனும்னா நாம எப்படி இருக்கோனம் தெரீமா?
சொல்றேன்.
சனி தர்ர யோகம் பார்க்கவே கேவலமா இருக்கும். தூத்தெறிக்க ..இதை தூக்கினு போயி குப்பையில போடுன்னு நாமளே சொல்லிருவம்.
மேலும் அந்த யோகத்தை தர்ரதுக்குள்ள சனி நம்மை பிஞ்ச செருப்பு, நைஞ்ச சட்டை போடற ரேஞ்சுக்கு ஆக்கிருவாரு .மொகமெல்லாம் நீண்டு போயி,கண்ணெல்லாம் உள்ளாற போயி,கன்னமெல்லாம் ஒட்டிப்போயி பிணக்களை வந்துரும்.

இது மட்டுமா? நம்ம அப்ரோச்சிங் ரேஞ்சு “அம்மா தாயே ! சாப்டு நாலு நாளாச்சும்மா – நீச தண்ணியாவது ஊத்துங்கம்மா” போல இருக்கோனம்.
நம்ம பாடி வியர்வையில குளிக்கோனம்,தூசால நிரம்பனும்.சோறு ,தண்ணி ,தூக்கம் ,ரெஸ்டு எதுக்கும் டைம் ஒதுக்காம உழைக்கனும்.
அப்படி உழைச்சும் “போச்சுரா – எல்லாம் போச்சு -இனி ஏதும் தேறப்போறதில்லை”ங்கற நிலைக்கு வந்துட்டம்னா அப்பம் சனி படையப்பா ரஜினிக்கு கிரானைட் நெலம் கிடைச்ச மாதிரி எதையாவது லிங்க் பண்ணிவிடுவாரு.

மம்மி மாறும்ங்கறிங்க? ஊஹூம். ஏசி இல்லாம இருக்க மிடியாது . வேன் கண்ணாடிய கூட இறக்கமாட்டாய்ங்க.கால் தரையில படாது . எலிசபத் க்வீன் கணக்கா பில்டப் கொடுத்துக்கிட்டிருந்தா சனி என்னாத்த கொடுப்பாரு? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இது ஒரு ஆங்கிள். இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா சனி =அடிமை .மம்மி ஆருக்குன்னா அடிமையா மாறனும். அப்பம் ஒரு வாழ்வு கிடைக்கலாம். மாறுவாய்ங்களா? நெவர்.அப்படியே மாறினாலும் இவிகள ஏத்துக்கற கிராக்கிக்கு சனி அனுகூலமா இருக்கனும். இல்லின்னா அவன் கதையே கந்தலாயிரும்.

சனி = தலித். மம்மி சேரிக்குள்ள ராத்தங்குமா? தங்காது. சனி =தொழிலாளர்கள் சனி =உடல் ஊனமுற்றவர்கள் ,சனி = அடிமை தொழில் செய்வோர் (அரசு ஊழியர்) இவிகளை நெருங்கி -இன்டராக்ட் பண்ணுவாங்களா? நெவர். மேலும் இன்று என்பது நேற்றின் தொடர்ச்சி .நாளை என்பது இன்றின் தொடர்ச்சி .
சனியோட செகண்ட் ஆஃப் ஸ்டார்ட் ஆறதுக்கு மிந்தியே சனி செகண்ட் ஆஃப்ல தர வேண்டிய எல்லா யோகத்தையும் ஓவர் ட்ராஃப்ட்ல வாங்கியாச்சு.
சனியோட காரகம் உள்ள எல்லார் வவுத்தெரிச்சலையும் கொட்டி -அவன்லாம் என்னைக்குடா தேர்தல்னு வெய்ட்டிங்.

இது மட்டுமா? சனின்னாலே லேட்டு .கோசாரத்துலயே சனிபெயர்ச்சி நடந்து ஆறு மாசம் வரை ஒரு ம..னாவும் கண்ணுக்கு தெரியாது .(ஆனால் விதைகள் விதைக்கப்பட்டுக்கிட்டிருக்கும் இல்லேங்கல) இந்த சனி புக்தியோட செகண்ட் ஆஃப் மட்டும் என்ன படக்குன்னு லாஞ்ச் ஆகி பலனை வாரி தந்துருமா? நெவர் ..
மேலும் ஜாதகம்ங்கறது டெபிட் கார்டா? கிரெடிட்கார்டான்னா ..டூ இன் ஒன் பாஸ் ! கிரகபலங்களை ஓவரா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணாம அடக்கி வாசிச்சு -எளிமையான வாழ்க்கை வாழ்ந்தபடி – இருந்தால் அது டெபிட் கார்ட்.

அதை விட்டுட்டு அனைத்துக்கும் ஆசைப்படுன்னு கிளம்பினா கிரெடிட் கார்டா மாறிரும். கார்டை க்ராச் பண்ணி பர்ச்சேஸ் பண்ணும் போது இனிக்கும்.ஆனால் வட்டி/அபராத வட்டின்னு எண்ணி வைக்கும் போது கசக்கும்.

ஒருத்தன் நமக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணா-ஏன் நம்ம வேலையை அடுத்தவனை வச்சு செய்தாலே சனி பலம் ஃபணால் . ஒருத்தன் நமக்காவ காசு பணம் செலவழிச்சா குருபலம் ஃபணால், நான் -நான்னு பேசிக்கிட்டே இருந்தா சூரிய பலம் கோவிந்தா , நம்ம ஆட்களையே வச்சு புகழ சொல்லி புளங்காகிதம் அடைஞ்சுக்கிட்டிருந்தா சந்திர பலம் போச்சு , நிலம் நீச்சுன்னு சேர்த்துக்கிட்டிருந்தா செவ் பலம் போயிந்தி.சினிமாகாரனை எல்லாம் வாயடிச்சு கு.விலைக்கு கேபிள் ரைட்ஸ் வாங்கினா ராகு பலம் போச்சு ,ஊர் எல்லாம் ஃப்ளெக்சி/பேனர் வச்சா புத பலம் gone ! சொகுசாவே வாழ்ந்துக்கிட்டிருந்தா சுக்கிர பலம் ஃபினிஷ். கொய்யால .. செத்தா ஒரு பிடி சாம்பல் தானேங்கற ஞானம் இல்லாம குட்டிக்கதைஅவிழ்த்துவிட்டு தத்துவம் சொன்னா கேது பலம் கிருஷ்ணார்ப்பனம்.

மம்மியோட லைஃபை ஒரு ஓட்டு ஓட்டி பாருங்க.. எந்த ஒரு கிரகத்தையாவது -கிரகபலத்தையாவது விட்டு வச்சிருக்காய்ங்களா?
அப்போ என்னாகும்?

2016: ஜெ' வெற்றிமுகம் தொடருமா?

சொ.கு.வ .மே.மு

அண்ணே வணக்கம்ணே!
உங்களில் பலரும் ஆவலா எதிர்ப்பார்த்துக்கிட்டிருந்த பதிவு ஜெ ‘ ஜாதக பலன். இந்த பதிவை வேணம்னே நாம புதுசா ஆரம்பிச்சிருக்கிற ஆஸ்ட்ரோ ஆன்ட் வெப் சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கன்.

(இந்த பதிவை ஆருனா புண்ணியாத்மாங்க இங்கிலீஷ்ல டப்பிங் பண்ணி கொடுத்தா புண்ணியமா போகும்) .தமிழ்பதிவை இங்கேயே போட்டுரலாம். பதிவை படிக்க இங்கே அழுத்துங்க ப்ளீஸ்.

முதல்வருக்கு ரோசனை சொன்னா டாஸ்மாக் எம்.டி நன்றி சொல்றாரு

Thanks From Amma

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு லால் கிதாப் பரிகாரங்கள் , கால மாற்றம் கிரக பலன் ங்கற 2 தொடரையும் ஏக் தம்ல எளுதினப்பமே கொஞ்சம் கன்னுக்குட்டி உதைச்சது . இனி இந்த தொடர்களோடு நம்மை சைட்டும் கோவிந்தாவாகப் போகுதுங்கோ ! திருஷ்டியாயிருச்சுல்ல.

நாம ஐடியா அய்யாசாமிங்கறது உங்க எல்லாருக்கும் நெல்லாவே தெரியும். மோதிஜிக்கு ரோசனை அனுப்பி – அதை எல்லாம் பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு கொடுத்து -தமிழ் எம்.பி,தெலுங்கு எம்பிக்களுக்குல்லாம் ஸ்பீக்கர் வழியா அனுப்பியிருக்கிற மேட்டரும் தெரியும்ல?

இதெல்லாம் சென்டர் லெவல். ஸ்டேட் லெவல்ல நம்ம தேச ,மானில கனவுகளை எல்லாம் 234 +234 பிரதிகள் தயாரிச்சு மொதல்ல தமிழக சட்ட மன்ற சபா நாயகருக்கும் ,பிறவு மம்மிக்கும் அனுப்பினம். கண்டுக்கல. முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பினம் .அவிக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஃபார்வார்ட் பண்ணாய்ங்க.

அது போயி சேருதோ இல்லியே நாமளும் அனுப்புவம்னு அனுப்பினம்.கண்டுக்கல. மம்மி செயில்ல இருந்தப்போ பரப்பண அக்கிரகாரா செயிலுக்கும் அனுப்பினம் கண்டுக்கல. வெளிய வந்த பிறவு கார்டனுக்கு அனுப்பினம் கண்டுக்கல.

ஈதிப்படியிருக்க 2015,ஏப்ரல் மாசத்துல ஏதோ ஒரு நாயி அம்மா டாஸ்மாக் வேலை நேரத்தை குறைக்க போறாய்ங்கன்னு கூவுச்சு . சின்னப்புள்ளத்தனமா அதை நம்பி .. முதல்வர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பினம்.

அதன் சாரம் நாலே வரி தான். ” அம்மா ! மதுவிலக்குங்கற பாதையில மொத எட்டு எடுத்து வச்சிருக்கிங்க. நன்றி. இதனால ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை சனம் மேல பாரம் சுமத்தாம – ஈடு கட்ட பல ரோசனைகளை எல்லாம் பரப்பண அக்கிரகாரா செயிலுக்கும் அனுப்பினன். அது டெலிவரியும் ஆச்சு . பிறவு கார்டனுக்கும் அனுப்பினன். மேலும் அந்த கன்டென்ட் எல்லாம் கீழ் காணும் தொடுப்பிலும் இருக்கு .

இந்த மனுவை அனுப்பினது ஏப்ரல் மாசம் . மே ,ஜூன்,ஜூலை ,ஆகஸ்ட்னு மாசங்களே பறந்தது .ஒரே ஸ்டேட்டஸ் தான் உரிய அதிகாரிக்கு அனுப்பியிருக்கம்.

இன்னைக்கு ஏதோ பட்சி சொல்ல என்னாச்சுன்னு பார்த்தா ………… மனு அனுப்பப்பட்ட உரிய அதிகாரி ஆரு தெரீமா? “டாஸ்மாக் எம்.டி”.
அன்னார் என்ன சொல்லியிருக்காரு? கர்னாடகாவுக்கு அனுப்பின யோசனைகளுக்கு நன்றி . இங்கே தான் கன்ஃபீஸ் ஆகுது. கொய்யால தமிழ் நாட்டோட ஆட்சி அதிகாரம்லாம் முதல்வர் கையில இருக்கா? இல்லை டாஸ்மாக் எம்.டி கையில இருக்கா?

உங்களுக்கு தெரிஞ்சா விஜாரிச்சு சொல்லுங்க பாஸ் !

எச்சரிக்கை:
இந்த மாதிரி அச்சாணியமான பதிவெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா தொடர் தொடருமா? கோவிந்தா ஆகிருமா? சைட்டு வெளங்குமா? அதான் சொல்றேன் ..கோவிந்தா ! கோவிந்தா !!

‘ஜெ’ தீர்ப்பு செரி -அடுத்தது என்ன?

75d8a188

அண்ணே வணக்கம்ணே !
நாம சொன்னதெல்லாம் நடந்துருச்சுன்னு பீத்திக்க முடியாது. (சொத்து மதிப்பீட்லயே 15% தள்ளுபடி கொடுக்கிற காலத்துல அப்டேட்டே இல்லாம “பொளப்பா” மாறிப்போன சோசிய பலிதத்துக்கு கிரேஸ் மார்க் கொடுக்க கூடாதா என்ன?

ஆனால் போன தேர்தல்ல ஜெ தலைமையில் கூட்டணி சர்க்கார்ல ஆரம்பிச்சு – மோதி மேட்டர்ல செம பல்பு வாங்கின பிறவு லேட்டஸ்டா ஜெ சொ.கு மேல் முறையீடு விவகாரத்துல பல்பு ஃப்யூஸ் போனது வரை ஒவ்வொரு எழுத்தும் அச்சா ஞா இருக்கு.

நாம வெறுமனே சோசியர்னா அண்டர் கிரவுண்டுக்கு போயிரலாம். ஆனா 1986 லயே நாட்டை பத்தி சிந்திக்க ஆரம்பிச்சு 1992 லயே ஒரு தெளிவான முடிவுக்கு வந்துட்ட பார்ட்டி . ( நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் 1992லயே ஜனசக்தி இதழ்ல வெளி வந்துருச்சுங்கோ)
1997 லருந்தே செவிடன் காதுல சங்கு ஊதின கணக்கா ஆட்சியாளர்களை “உஷார்” பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.அதுலயும் தமிழ் நாடு மேட்டர் ரெம்ப சீரியஸ்.

மம்மி வெளிய இருந்தப்பயே 110 பிரிவின் கீழ் குப்பையா (எண்ணிக்கை அடிப்படையில சொல்றன்) வெளி வந்த அறிக்கைகள் தான் லாபமே தவிர ப்ராக்டிக்கலா ஒன்னத்தையும் காணோம். அம்மா உணவகம்,ஆடு,மாடு,கோழின்னு பட்டியல் போடலாம்.ஆனால் அதெல்லாமும் சேர்ந்துதேன் தமிழ் நாட்டை திவால் ஆகிற நிலைக்கு கொண்டு வந்துருச்சு.

ஏரிக்கு பயந்து கழுவாத போன கதையா மத்தியில எந்த சர்க்கார் வந்தாலும் குடுமிப்பிடிதான். செரி சனங்க மேல பாரம் ஏத்தாம – சாணக்கியமா அரசு வருவாயை கூட்டற டெக்னிக்காவது உண்டான்னா அதுவும் இல்லை. அதுவும் ஒழியட்டும் அரசோட வெட்டி செலவுகளை குறைச்சு ,நிர்வாகத்தை முடுக்கி விடற முயற்சியாவது ..ஊஹூம் நெவர்.

இன்னைக்கு நிலை என்னன்னா மம்மி சி.எம் ஆகப்போறாய்ங்க. கர்னாடக அரசு நிச்சயமா அப்பீலுக்கு போகும்.அவிக தூங்கினாலும் அன்பழகன் தரப்பு விடாது. சுப்ரமணியம் சாமிக்கு ஏதாவது ஹெவியா ஆஃபர் பண்ணாலே தவிர அந்த ஆசாமியும் அடங்கமாட்டான் ( மிந்தி மதுரையை தூக்கி கொடுத்தாப்ல)
தலை மேல கத்தி கியாரண்டி. சிறப்பு நீதிமன்றதீர்ப்பு ஹைகோர்ட்ல மாறினாப்ல, ஹை கோர்ட் தீர்ப்பு சுப்ரீம்ல தலைகீழா மாறாதுன்னு ஆரும் கியாரண்டி கொடுக்க முடியாது.

குமாரசாமி எந்த அடிப்படையில தீர்ப்பு கொடுத்தாரோ நமுக்கு தெரியாது.வெறுமனே பேப்பர் படிக்கிற,டிவி பார்க்கிற நமக்கே தெரியுது ஹெவியா ஊழல் நடந்திருக்குன்னு. வங்கி கடனை சொத்தா காட்டிட்டாய்ங்களாம். செரி கடனை திருப்பி கட்டியாச்சுல்ல ( இன்சால்வென்ட்னா எலீக்சன்ல நிற்கவே முடியாதே)

மம்மி வாத்யார் காலத்துலயே நதியை தேடி வந்த கடல் ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க. மேலும் அந்த காலத்துல இன்னைக்கு மாதிரி சீரியல் பிசினஸும் கடியாது.அதுக்கு மிந்தி என்னதான் சம்பாதிச்சு வச்சுருந்தாலும் குந்தி தின்றால் குன்றும் மாளும்.
செரி அந்த இழவுக்குள்ள எல்லாம் நான் போக விரும்பல. மறு தீர்ப்பு வர்ர வரைக்கும் அது 3 மாசமோ -அல்லது 6 மாசமோ மம்மி சி.எம் நாற்காலியில உட்கார்ரது ஷ்யூர்.

இந்த 3/6 மாசத்துல என்ன செய்யலாம்னு இங்கே விவரமா கொடுத்திருக்கன். மோசமான விருந்துக்கு பிறவு நெல்ல ஸ்வீட் பீடா மாதிரி இந்த வேலைகளயாவது செய்து எலீக்சனுக்கு ப்ரிப்பேர் ஆகறாய்ங்களா பார்ப்பம்.

மம்மி செயில்ல இருக்கச்சொல்லோ கூரியர்ல அனுப்பி டெலிவரியும் ஆயிருக்கு. போதாக்குறைக்கு செயிலுக்கு போறதுக்கு மிந்தி ஒரு தபா, போய் வந்த பிறவு ஒரு தபா கார்டனுக்கே அனுப்பியிருக்கம்.

வழக்கமா உடுங்க ஜூட்டுன்னு பதிவை முடிப்பம். இன்னைக்கு ஊஹூம்..அம்பேல் ..

'ஜெ' தீர்ப்பு செரி -அடுத்தது என்ன?

75d8a188

அண்ணே வணக்கம்ணே !
நாம சொன்னதெல்லாம் நடந்துருச்சுன்னு பீத்திக்க முடியாது. (சொத்து மதிப்பீட்லயே 15% தள்ளுபடி கொடுக்கிற காலத்துல அப்டேட்டே இல்லாம “பொளப்பா” மாறிப்போன சோசிய பலிதத்துக்கு கிரேஸ் மார்க் கொடுக்க கூடாதா என்ன?

ஆனால் போன தேர்தல்ல ஜெ தலைமையில் கூட்டணி சர்க்கார்ல ஆரம்பிச்சு – மோதி மேட்டர்ல செம பல்பு வாங்கின பிறவு லேட்டஸ்டா ஜெ சொ.கு மேல் முறையீடு விவகாரத்துல பல்பு ஃப்யூஸ் போனது வரை ஒவ்வொரு எழுத்தும் அச்சா ஞா இருக்கு.

நாம வெறுமனே சோசியர்னா அண்டர் கிரவுண்டுக்கு போயிரலாம். ஆனா 1986 லயே நாட்டை பத்தி சிந்திக்க ஆரம்பிச்சு 1992 லயே ஒரு தெளிவான முடிவுக்கு வந்துட்ட பார்ட்டி . ( நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் 1992லயே ஜனசக்தி இதழ்ல வெளி வந்துருச்சுங்கோ)
1997 லருந்தே செவிடன் காதுல சங்கு ஊதின கணக்கா ஆட்சியாளர்களை “உஷார்” பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.அதுலயும் தமிழ் நாடு மேட்டர் ரெம்ப சீரியஸ்.

மம்மி வெளிய இருந்தப்பயே 110 பிரிவின் கீழ் குப்பையா (எண்ணிக்கை அடிப்படையில சொல்றன்) வெளி வந்த அறிக்கைகள் தான் லாபமே தவிர ப்ராக்டிக்கலா ஒன்னத்தையும் காணோம். அம்மா உணவகம்,ஆடு,மாடு,கோழின்னு பட்டியல் போடலாம்.ஆனால் அதெல்லாமும் சேர்ந்துதேன் தமிழ் நாட்டை திவால் ஆகிற நிலைக்கு கொண்டு வந்துருச்சு.

ஏரிக்கு பயந்து கழுவாத போன கதையா மத்தியில எந்த சர்க்கார் வந்தாலும் குடுமிப்பிடிதான். செரி சனங்க மேல பாரம் ஏத்தாம – சாணக்கியமா அரசு வருவாயை கூட்டற டெக்னிக்காவது உண்டான்னா அதுவும் இல்லை. அதுவும் ஒழியட்டும் அரசோட வெட்டி செலவுகளை குறைச்சு ,நிர்வாகத்தை முடுக்கி விடற முயற்சியாவது ..ஊஹூம் நெவர்.

இன்னைக்கு நிலை என்னன்னா மம்மி சி.எம் ஆகப்போறாய்ங்க. கர்னாடக அரசு நிச்சயமா அப்பீலுக்கு போகும்.அவிக தூங்கினாலும் அன்பழகன் தரப்பு விடாது. சுப்ரமணியம் சாமிக்கு ஏதாவது ஹெவியா ஆஃபர் பண்ணாலே தவிர அந்த ஆசாமியும் அடங்கமாட்டான் ( மிந்தி மதுரையை தூக்கி கொடுத்தாப்ல)
தலை மேல கத்தி கியாரண்டி. சிறப்பு நீதிமன்றதீர்ப்பு ஹைகோர்ட்ல மாறினாப்ல, ஹை கோர்ட் தீர்ப்பு சுப்ரீம்ல தலைகீழா மாறாதுன்னு ஆரும் கியாரண்டி கொடுக்க முடியாது.

குமாரசாமி எந்த அடிப்படையில தீர்ப்பு கொடுத்தாரோ நமுக்கு தெரியாது.வெறுமனே பேப்பர் படிக்கிற,டிவி பார்க்கிற நமக்கே தெரியுது ஹெவியா ஊழல் நடந்திருக்குன்னு. வங்கி கடனை சொத்தா காட்டிட்டாய்ங்களாம். செரி கடனை திருப்பி கட்டியாச்சுல்ல ( இன்சால்வென்ட்னா எலீக்சன்ல நிற்கவே முடியாதே)

மம்மி வாத்யார் காலத்துலயே நதியை தேடி வந்த கடல் ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க. மேலும் அந்த காலத்துல இன்னைக்கு மாதிரி சீரியல் பிசினஸும் கடியாது.அதுக்கு மிந்தி என்னதான் சம்பாதிச்சு வச்சுருந்தாலும் குந்தி தின்றால் குன்றும் மாளும்.
செரி அந்த இழவுக்குள்ள எல்லாம் நான் போக விரும்பல. மறு தீர்ப்பு வர்ர வரைக்கும் அது 3 மாசமோ -அல்லது 6 மாசமோ மம்மி சி.எம் நாற்காலியில உட்கார்ரது ஷ்யூர்.

இந்த 3/6 மாசத்துல என்ன செய்யலாம்னு இங்கே விவரமா கொடுத்திருக்கன். மோசமான விருந்துக்கு பிறவு நெல்ல ஸ்வீட் பீடா மாதிரி இந்த வேலைகளயாவது செய்து எலீக்சனுக்கு ப்ரிப்பேர் ஆகறாய்ங்களா பார்ப்பம்.

மம்மி செயில்ல இருக்கச்சொல்லோ கூரியர்ல அனுப்பி டெலிவரியும் ஆயிருக்கு. போதாக்குறைக்கு செயிலுக்கு போறதுக்கு மிந்தி ஒரு தபா, போய் வந்த பிறவு ஒரு தபா கார்டனுக்கே அனுப்பியிருக்கம்.

வழக்கமா உடுங்க ஜூட்டுன்னு பதிவை முடிப்பம். இன்னைக்கு ஊஹூம்..அம்பேல் ..

மே 11 ,ஜெ தீர்ப்பு எப்படி ?

ஜெஜெ தீர்ப்பு

அண்ணே வணக்கம்ணே !
மம்மி மேட்டர்ல மே 11 ம் தேதி ,காலை 11 மணிக்கு ஜட்ஜிமின்டு வரப்போவுதாம்.அஃபிஷியலாவே அறிவிச்சுட்டாய்ங்க.இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் ஜனன ஜாதகத்தை விட ஆரூட லக்னம் தான் உடனடி லாட்டரி மாதிரி ஒர்க் அவுட் ஆகும்.

கனிமொழி அம்மா 2ஜி மேட்டர்ல தில்லி போனப்போ இப்டித்தான் வாய வச்சோம், மம்மி மேட்டர்ல குன் ஹா தீர்ப்புக்கு மிந்தியே நாம ஒரு தீர்ப்பு எழுதிட்டம். இந்த சான்ஸை விட்டுர முடியுமா என்ன? கரண்ட்ல இருக்கனும்ல?

மே 11 ம் தேதி ,காலை 11 மணிக்கு சக்கரம் போட்டா லக்னம் கடகம் : நெல்லதோ கெட்டதோ டெம்ப்ரரி தான்

லக்னத்துல 6/9 க்குடையவரான குரு லக்னத்துலயே உச்சம். அதுவும் தனிய வேற இருக்காரு. அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம்ங்கறது விதி.(மம்மியோட ஜன்ம ராசிக்கு இது விரயம் வேற)

பலன்: நம்பின பெரியவா கை விட்டிரலாம் -எதிர்காலத்துல (ஐ மீன் ஜூலைக்குள்ளே) உதவி கிடைக்கலாம்.குருவுக்கு 9 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால என்னதான் நெகட்டிவா தீர்ப்பு வந்தாலும் முழுக்கை தைரியம் இழக்க செய்யாத வகையில் கொஞ்சம் ரிலீஃபும் சேர்ந்து வரும்
7 க்குடைய சனி -5 ல் வக்ரம் . எதிர்ப்பார்த்தவிக உடனே லைனுக்கு வந்திருக்கலாம்.ஆனால் நம்பினவா நட்டாத்துல விட்டுருவோ அல்லது எட்டுவாரம்/எட்டு மாசம் களிச்சு சகாயம் பண்ணலாம்.

சனி 8 க்குடையவராவும் இருப்பதால் -5 ல் வக்ரம் பெற்றதால் உயிர்பயம் இராது /தற்கொலை எண்ணம் வராது. (சனி வக்ர நிவர்த்தி ஆகஸ்ட் 2)
லக்னாதிபதியான சந்திரன் 7 ல் நின்னாரு (திதி :அஷ்டமி) சந்தோசமோ துக்கமோ ரெண்டே கால் நாள் தான். துக்கம் ஏற்பட்டுருச்சுன்னா அது தீர 2 முதல் 20 வருசம் ஆகலாம்.

9 ல் கேது . தூரத்துல உள்ள நம்பினவா ஆட்டைய போட்டுட்டு – பெருசா “ஹேண்ட்” கொடுத்துருவாய்ங்க. பிறமத குருக்கள் ஆறுதல் தரலாம்
இரண்டுக்குரிய சூரியன் பத்தில் உச்சம். 2=தனம் , 10= தொழில் .ஒரு வேளை பெரிய தொகை எதாச்சும் டெப்பாசிட் பண்ண சொல்லி தீர்ப்புல சொல்வாய்ங்களோ? டோன்ட் டாக் -னுட்டு ஆர்டர் போடுவாய்ங்களோ?

5-10 க்குடையவர் 11 ல் இருந்தா நல்லது தான்.ஆனால் கூடவே விரயாதிபதி இருக்காரே.. ஒர்க் அவுட்லருந்து ,செலவழிச்ச புத்தி வரை , இருக்கிற கொஞ்சம் நஞ்சம் சிம்பதி வரை எல்லாம் வீண் விரயமா போயிருமோ?

4 க்குடைய சுக்கிர ன் விரயத்தில் .அய்யய்யோ அப்போ வீட்டுக்கு வரமுடியாதோ? அல்லது வீட்டுச்சிறையா? வண்டி வாகனங்களை கூட ஜப்தி பண்ணிருவாய்ங்களோ?

நட்சத்திரம் அவிட்டம்..மம்மியோட மக நட்சத்திரத்துக்கு 5 ஆவது நட்சத்திரம் : சரியா வராதே ..வேலைக்காகாதே

கோசாரத்துல மம்மியோட ஜன்ம ராசியான சிம்மத்துக்கு 2/8 ல ராகு கேது கைக்கெட்டினது வாய்க்கெட்டாது , காரிருள் சூழும்.,சுத்தி உள்ள சனமே கொள்ளையடிச்சுக்கிட்டு போயிரனும். சனி நால்ல இருந்தாலும் வக்ரம்ங்கறதால பரவால்ல (ஜூன் 2 வரை)

5 க்குடைய குரு விரயத்துல உச்சம் பெற்றதால் சொந்த புத்தியாலயே வீண் விரயங்களை விலை கொடுத்து வாங்குவாய்ங்க

அதே நேரம் குரு அஷ்டமாதிபதியாவும் இருக்கிறதால அவர் 12 ல் மறையறதால கொஞ்சம் போல ரிலீஃப்/ டைம் கிடைக்கலாம்.(ஆனாலும் உச்சமா கீறாரே)

தீர்ப்பு வர்ர நேரம் எமகண்டம்னு சொல்வாய்ங்க எமகண்டம்லாம் மேட்டரே இல்ல பாஸ் ! அரெஸ்ட் பண்ணிட்டாலும் சிம்பதி வரும் ஹவுஸ் அரஸ்டுன்னு சொல்ட்டா? அரசு அதிகார வர்கம் மம்மிய சீண்டப்படாதுன்னுட்டா? கார்டன்ல ஜாமர் வச்சுட்டா?

பார்ப்பம் பாஸ் ! பலன் சொல்றதுதான் நம்ம வேலை. பலன் கொடுக்கிறது ஆத்தா வேலை. அசலான மேட்டர் என்னடான்னா மம்மி ஜாதகத்துல செவ் தான் செம பல்பு . ஜட்ஜு பேரு குமாரசாமி .இது செவ் காரக பெயர்