நல்ல காலம் பொறந்துருச்சு !

7

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு கமல் கிட்டே கேள்வி கேட்கிறாய்ங்க.அரசியலுக்கு வருவிங்களா? நான் அத்தனை பெரிய நடிகனில்லைனுட்டாரு.
ஜோதிடம்னா பலருக்கும் அது ஏதோ கம்ப சூத்திரம்னு ஒரு நினைப்பு. இல்லையா அதெல்லாம் குடும்பத்துக்கு நல்லதில்லிங்க.தரித்திரம் பிடிச்சுக்கும்பாய்ங்க.மொத்தத்துல கழண்டுக்குவாய்ங்க. ஏதோ நாட்ல நாலு பேருக்கு தெரிஞ்சிருக்குல்ல -கொஞ்சம் சில்லறை விட்டெறிஞ்சா கிடைக்குதுங்கற எண்ணம்.

தம்பிக்கு எந்த ஊரு படத்துல ரஜினி சொல்றாப்ல வானத்துல அம்மாம் பெரிய கடிகாரம் இருக்கு (சூரியன்) ஆனால் எதுக்கு கையில கடியாரம் கட்ட ஆரம்பிச்சாய்ங்க? செல்ஃபோன்லயே டைம் தெரியுது.ஆனால் வாட்ச் கட்டற சனம் இன்னம் இருக்காய்ங்க.

அவுட் டோர்னாலும் பரவால்லை .இண்டோர்ல இருப்பான்.சுவத்துல பெரிய கடியாரம் இருக்கும்.ஆனாலும் தன் வாட்சை பார்ப்பான்.
நேரம் என்னனு தெரிஞ்சுக்கறதுலயே இவ்ள அக்கறை காட்டற சனம் நேரம் நல்லாருக்கானு தெரிஞ்சுக்கறதுல காட்டறதில்லை. எவனையோ (அது நானாவே இருந்தாலும்) நம்பி -தங்கள் வாழ்க்கையை பணயம் வச்சு முடிவெடுக்கிறாய்ங்க.

இது நல்லதான்னா இல்லைன்னு தான் சொல்வேன். ஒவ்வொருத்தரும் ஜோதிட மா நாட்ல கலந்துக்கிட்டு உபன்யாசம் பண்ற அளவுக்கு இல்லின்னாலும் சில முக்கிய திருப்பங்களை முன் கூட்டி தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு தான் சொல்வேன்.

1990 மார்ச் முதல் ஒரு நாளைக்கு ஒரு ஜாதகம்னாலும் எத்தனை ஜாதகம் பார்த்திருப்பேன்னு சின்னதா ஒரு கணக்கு போட்டு பாருங்க. ஆனாலும் வருசத்துக்கு ஒரு ஜாதகம்/ஜாதகர் பயங்கர பல்பு கொடுத்துர்ராரு. சுத்தமா பொருந்தல போயான்னிர்ராரு.

என்னங்கடா இது 364 நாளா சொன்னதும் அதே சோசியம் தான் இன்னைக்கு சொன்னதும் அதே சோசியம் தான். தப்பு எங்கே நடந்து போச்சுன்னு மண்டைய உடைச்சிக்கிட்டு ரோசனை பண்ணாலும் பதில் “நோ”

எந்த ஜாதகத்தை யாரு பார்க்கனும்னு இருக்கோ அவன் பார்த்து பலன் சொன்னா தான் ஒர்க் அவுட் ஆகும். இது மட்டுமில்லை எந்த ஜாதகத்தை எந்த நேரத்துல பார்க்கனும்னு இருக்கோ அந்த நேரத்துல பார்த்தாதான் ஒர்க் அவுட் ஆகும்.

நாம பார்க்க வேண்டிய ஜாதகம் மட்டும் நம்ம கிட்டே வரனும் – அதுவும் நாம பார்க்கவேண்டிய நேரத்துலயே வரனும்னா – அதுக்கு நம்மை சுத்தி இருக்கிற நூஸ்ஃபியர் (எண்ணங்களால் ஏற்படும் சூழல்) பர்ஃபெக்டா இருக்கனும்.

கொஞ்சம் அசந்தாலும் பல்பு வாங்க வேண்டியதுதான். நம்முது சிம்ம ராசியாச்சா வருசத்துக்கு ஒரு தபா வர்ர இந்த மாதிரி ஜாதகங்களை மறக்கவே முடியறதில்லை.

நம்ம ஜாதகத்துல குரு உச்சம் தான். நாம நிர்வாகபுலி தான். ஜாதக பலன் சொல்றது இன்னைக்கு என்ன கிழமைப்பான்னு கேட்கிறவனுக்கு பதில் சொல்ற மாதிரி தான். (பயக்கம் ஆயிருச்சு பாஸ்!) ஆனாலும் வருசத்துக்கு ஒரு கிராக்கி இப்படி மாட்டுது.

என்னமோ கடைசியா இந்த சைட்ல பதிவு போட்டு எவ்ள நாளாச்சோ ஞா இல்லை. வாரா வாரம் பதிவு போட்டப்போ அலெக்ஸாவுல ரேங்க் 64 லட்சம் பதிவு போட்டே பலகாலம் ஆச்சு இன்னைக்கு பாதிக்கு பாதி குறைஞ்சிருக்கு (முன்னேறிட்டம் பாஸ்) என்னடா நடக்குது இங்கே?
ஜெயாவுக்கு ஜெயிலுக்கே லெட்டர் அனுப்பின மேட்டர் தெரியும் தானே . ஒரு ஆன்லைன் பிரபலம் நம்ம நச்சரிப்பு தாங்காம கிவ் மீ டீட்டெய்ல்ஸ்னு மெசேஜ் பண்ணாரு.

உ.வ பட்டு படபடன்னு அடிச்சு அனுப்பினமா – மூளையில தூங்கிக்கிட்டிருந்த தட்டச்சான் நியூரான் எல்லாம் முழிச்சுக்கிச்சு . அதான் இதை இப்படி காமா சோமானு அடிச்சுக்கிட்டிருக்கன்.

எல்லாமே பயக்க தோசம் தான் பாஸ்! நல்லவனா இருக்கிறது கெட்டவனா இருக்கிறது சோம்பேறியா இருக்கிறது எல்லாமே பயக்க தோசம் தான் போல.
ராசியும் வாழ்வும்னு ஒரு தொடர் ஆரம்பிச்சம். சிம்மத்துலருந்து ஆரம்பிச்சம் .மீனம் வரை முஞ்சுது போல. அதை தொடர வேண்டி இருக்கு.
ஒரு பக்கம் அரசியல் -இன்னொரு பக்கம் சினிமா ரெண்டுமே நம்மை இழுக்குது . கலர் கலரா பலூன் தெரியுது, ரிப்பன் தெரியுது. மெட்டீரியலைஸ் ஆகலின்னாலும் ஒரு வித சூழல் ஏற்பட்டுருச்சு.

ஒரு சினிமா பிரபலம் என் ஸ்க்ரிப்ட்ல வர ஒரு கேரக்டருக்கு நீதான் சரியா வருவேன்னு யாரோ சொன்னாங்கய்யா.. அவிக பேரை மறந்துட்டன். அதான் டைரக்டா மெசேஜ் பண்றேன். உன் ஃபோட்டோ நாலு அனுப்புங்கறாரு.

இன்னொரு ஆன்லைன் நண்பர் ஒரு தலைவருக்கு உன் மேட்டரை ஃபார்வார்ட் பண்ணிட்டன். நெம்பர் கொடுன்னு கேட்கிறாரு.

ஒரு மன்சன் எத்தனாம் பெரிய அதிர்ச்சிய தான் தாங்கறது? எழுதும் போது பேலன்ஸ்டா எழுதனும்னு தான் இத்தனை நாள் கேப் விட்டுட்டன்.
இப்பம் அதிர்ச்சி பழகி போச்சு. புதிய தலைமுறையின் உரக்கச்சொல்லுங்கள் நிகழ்ச்சியில நம்ம பெர்ஃபார்மென்ஸ் இன்னம் என்னென்ன அதிர்ச்சிகளை எல்லாம் தரப்போகுதோ தெரியல.

அத்தனை பேர்ல ஆரும் டச் பண்ணாத மூலத்தை பிடிச்சு உலுக்கிட்டம்ல . ஞா கிழமை காலை 10.30 க்கு வரும் பாருங்க.ஆமா இந்த சோசியத்தை பத்தி எதையோ சொல்ல ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டன் போல. நமக்கு கூட வயசாகுதுப்பா..ஆச்சரியம்!

எப்படியோ ஷெட்ல இருந்த வண்டிக்கு ட்ரெய்ல் ரன் மாதிரி இந்த பதிவு . இனி ஃபுல் ஸ்விங்ல வண்டி ஓட ஆரம்பிக்கும். ஓகேவா.உடுங்க ஜூட்டு ..

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

sundarஅண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவை படிச்சுட்டு “பதிவுல அங்கங்கே மொக்கை போடலாம்.மொக்கையே பதிவாயிட்டா எப்படினு ” கட்டாயம் நினைச்சிருப்பிங்க.
டோன்ட் ஒர்ரி லேசா இன்னைக்கு ஒரு பாரா மொக்கை.பிறவு பதிவுக்கு போயிரலாம்.
“நடக்கும் என்பார் நடக்காது -நடக்காதென்பார் நடந்துவிடும்” “காடாறு மாசம் நாடாறு மாசம்”
“ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும்  மாறுகின்ற உன் மனம்”
இப்படி அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸுக்கு உதாரணமா நிறைய கோட் பண்ணலாம்.
சந்திரன்னாலே இந்த 3 பாய்ண்ட்டை கெட்டியா பிடிச்சுக்கனும். இவரு  எந்த பாவத்துல நின்னாலும் அந்த பாவ காரகத்வங்கள்ள இந்த 3 மேட்டரை பார்க்கலாம்.

இவரு எந்த கிரகத்தோட நின்னாலும் சரி (ராகு கேது தவிர) அந்த கிரகங்களோட காரகங்கள்ள இந்த 3 மேட்டரை பார்க்கலாம்.
எச்சரிக்கை: (புதியவர்களுக்கு மட்டும்)
நிர்வாண உண்மைகள்னு நம்முது ஒரு ப்ளாக் இருக்கு. அதை கடந்த 5 வருசத்துல 10 லட்சம் பேர் பார்த்திருக்காய்ங்க. நீங்க பார்க்க வேணாமா? மேலும் மோடிக்கு ஆன்லைன்ல ஒரு ஆப்புன்னு அதிரி புதிரியா ஒரு ஐட்டம் போட்டிருக்கன்.பார்த்துருங்க.
1.லக்ன சந்திரன்:
லக்னம்னா என்ன? ஜாதகரை காட்டற இடம் . இங்கே சந்திரன் நின்னா என்னாகும்? மேற்சொன்ன 3 விஷயமும் அவர் லைஃப்ல ஃபெவி குவிக் போட்டு ஒட்டினாப்ல கேம்ப்  அடிச்சுரும்.
இதுமட்டுமா? அவிக பாடியே சில நாள் பெருத்தும் சில நாள் சிறுத்தும் இருக்கும்னா பார்த்துக்கங்க. லக்னம் சந்திரனோட உச்ச ராசி -ஆட்சி வீடா இருந்தாலும் மாசத்துல 14 நாள் தான் சேஃப். சந்திரன் மனோ காரகன் ங்கறதால ப்ராக்டிக்காலிட்டி குறைச்சலாயிரும். இல்லாத பொல்லாத சென்டிமென்டெல்லாம் வந்துரும். திடீர்பயணம் ,கனவு,கற்பனை ,ஆட்டை தூக்கி மாட்ல போட்டு மாட்டை தூக்கி ஆட்ல போட்டு ஏக் தின் கா சுல்தான் கதை .
2.இரண்டில்:
ஃபைனான்ஸ் மேட்டர் பெண்டூலம் கணக்கா அந்த முனைக்கும் இந்த முனைக்கும் அலையும் . ஐ மீன் சில சமயம் உபரி வருமானம் -வீண் விரயம்,சில சமயம் அவசிய செலவுக்கே லாட்டரி. பேச்சும் சில சமயம் ஓஹோ , சில சமயம் ச்சே ச்சே. கொடுத்த வாக்கை நிறைவேத்தறது,பேச்சுக்கு மதிப்புல்லாம் கூட இதே கேட்டகிரிதான். அட குடும்பத்தோட இன்டராக்சனே இந்த கதிதான் பாஸூ.
3.மூன்றில்
இளைய சகோதர வாழ்வில் – அவர்களுக்கும் ஜாதகருக்கும் இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும். இசையில ஈடுபாடு முக்கியமா மெலடி.
4.நான்கில்
தாயார் வாழ்வில் -அவிகளுக்கும் ஜாதகருக்கும் இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் .  வீடு ? வாகனம்? இந்த மேட்டர்லயும் இதே லைன் அப் தான். மாணவர்கள் கல்வி விஷயத்துல கூட பேஞ்சா பேஞ்சு கெடுத்து காஞ்சா காஞ்சு கெடுத்தும்பாய்ங்களே அதை போல இருக்க வாய்ப்பிருக்கு.
5.ஐந்தில்
லக்ன சந்திரனுக்கு சொன்ன அதே பலன் நடக்க வாய்ப்பிருக்கு. (அதுல உள்ள உடல் மேட்டரை விட்டுருங்க). உபரியா புகழ் -இகழ், அதிர்ஷ்டம்-துரதிர்ஷ்டம்லாம் இரவு பகல் மாதிரி . குழந்தை விஷயம், ஜாதகருக்கும் வாரிசுகளுக்கும்  இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும்.
6.ஆறில்
மனம்,நுரையீரல் சிறு நீரகம் தொடர்பான வியாதி வரலாம். திடீர் திடீர்னு சத்ரு ரோக ருண உபாதைகள் வரும். வந்த மாதிரியே போகவும் செய்யலாம்.
7.ஏழில்
லக்ன சந்திரனை வச்சு ஜாதகருக்கு  நடக்கும்னு  சொன்ன அதே பலன் உபரியா வாழ்க்கை துணைக்கும் நடக்கலாமுங்கோ .
8.எட்டில்:
சைக்கியாட் ரிஸ்டை பார்க்கவேண்டி வரலாம், ஸ்புட்டம் டெஸ்ட் எடுக்க வேண்டி வரலாம். தனிமையில் தவிக்க நேரலாம், டெப்ரஷன். உணர்ச்சி வசப்பட்டு குண்டக்க மண்டக்க எதியனா செய்துட்டு செயிலுக்கு கூட போக வேண்டி வரலாம். ஸ்வப்ன ஸ்கலிதம், வெள்ளைப்படுதல்.
9.ஒன்பதில்:
அப்பா,சொத்து,முதலீடு,சேமிப்பு,தூர தேச வாசம்,தொடர்பு இத்யாதியில  அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும்.
10.பத்தில்
மக்களோட நேரடி தொடர்புக்கு வாய்ப்பிருக்கும் தொழில், வாட்டர்,லிக்விட்ஸ் தொடர்பான தொழில், நேவி ,ஃப்ளோட்டிங் பாப்புலேஷனை நம்பி செய்யும் தொழில்கள்  அல்லது அடிக்கடி வேலை மாற்றம்.அல்லது வேலை விஷயத்தில் ஆர்வம் கூடுதல் -குறைதல் (காரணமே இல்லாம)
11.பதினொன்றில்:
சகோதர வாழ்வில் – அவர்களுக்கும் ஜாதகருக்கும் இடையிலான உறவில் அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸ் இருக்கும்.ஜாதகர் வருவாயில் நிறைய ஏற்ற இறக்கம் இருக்கும்.
12.பனிரெண்டில்
திங்கறது,தூங்கறது,கில்மாவுல ஒரு நிதானமற்ற தன்மை திடீர் விரக்தி,திடீர் ஆர்வம்லாம் இருக்கலாம். பாதத்துல நீர் கோர்க்கலாம், கெட்ட கெட்ட கனவா வரலாம் (மாசத்துல பாதி நாள் நெல்ல நெல்ல)
அடுத்த பதிவுல செவ்.

ஜோதிட பாடம்: 9

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பாடம்னு ஆரம்பிச்சம். ராசி நட்சத்திரம்,துவாதச பாவ காரகம் வரை வந்தம். இந்த துவாதச பாவங்கள்ள கேந்திர கோண ஸ்தானங்களை பத்தி பார்த்தம். கிரேடிங் வச்சுக்கிட்டா கோணம் ஃபர்ஸ்ட் கிரேட். கேந்திரம் செகண்ட் கிரேட்.

இதுக்கடுத்து வர்ரது பணபர ஸ்தானங்கள்: 2,11. இதை தேர்ட் கிரேட்னு வச்சுக்கலாம். இன்னாபா இது அக்குறும்பா இருக்கு. 2ங்கறது தனபாவம் தானே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கறாய்ங்க. 11 ங்கறது லாப ஸ்தானமாச்சே . வாழ்க்கையில பத்து ரூவா லாபம் பார்க்கலின்னா பொளைக்கறது எப்படி? இதுக்கு போயி தேர்ட் கிரேட் கொடுத்திருக்காய்ங்களேனு ஒரு கேள்வி எழும். மேம்போக்கா பார்த்தா இது நெஜம் தான்.

ஆனால் பாருங்க நாம பைசா சம்பாதிக்க என்னெல்லாம் செய்யவேண்டியிருக்கு? ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. ஒவ்வொரு சமயம் நமக்கே ” த்தூத்தெறி இந்த பொளப்புக்கு “ன்னு தோனிருது. அந்தளவுக்கு ஈத்தரை,பிக்காலி,பீத்தரை வேலைல்லாம் பார்க்கவேண்டியிருக்கு.
கொஞ்சம் போல மானம்,ஈனம்,சூடு,சொரனை இதை எல்லாம் விட்டுட்டா கொஞ்சம் போல பைசா கிடைக்குதுன்னா பெஸ்ட் ஆஃபருப்பான்னு சம்மதிச்சுர்ரம்.பைசா கிடைக்குது.

ஆனால் நம்ம பேச்சுக்கு மருவாதி இருக்குமா? ( 2ஆம் பாவம் தான் வாக்குஸ்தானம் கூட தெரியும்ல)

நாம எதுவாச்சும் நீதி போதனை சொல்ல ஆரம்பிச்சா “ஆமாம் ஒன்னை பத்தி தெரியாதாக்கும் . நீ தினத்தந்தியில ரிப்போர்ட்டர் வேலை பார்த்த பார்ட்டிதானே”ன்னிருவாய்ங்க.

ரெண்டாம் பாவம் குடும்பத்தையும் காட்டுது. நாம பைசா தான் முக்கியம்னு கூட்டி கொடுத்து -காட்டி கொடுத்து பைசா புரட்டி குடும்பத்துக்கு செலவழிச்சா அவிக சேஃப்டி ஜோன்ல இருப்பாய்ங்க. அவிகளுக்குள்ள போராடும் குணமோ வல்லமையோ ஒரு ம..னாவும் ஜெனரேட் ஆகாது.

நாம ரெண்டு கையாலயும் “வாங்கி போட்டா” நல்லா திம்பாய்ங்க. கட்டை சேவேறி போயிரும். ச்சும்மா வர்ர பணம் தானேங்கற ஃபீல் வந்துரும். படக்குனு லஞ்ச ஒழிப்பு துறையில சிக்கி சின்னா பின்னமாயிட்டா குடும்பமே கொலாப்ஸ் ஆயிரும்.

இதுல இன்னொரு வில்லங்கம் என்னன்னா ரெண்டாமிடத்துல உள்ள எல்லா கிரகங்களும் அப்படியே ஏழாம் பார்வையா எட்டை பார்க்கும். எட்டுன்னா தெரியும்ல டிக்கெட் போடற இடம்.

நம்ம ரெண்டு டூ வீலரையும் லிங்க் பண்ணி மொபைல் புக் ஸ்டோர் செய்தம். எஸ்டேட்ல இருந்து டவுனுக்கு ஓட்டிக்கிட்டு வரும் போதே ஞம ஞமங்குது. என்னடான்னு பார்த்தா ஒரு வண்டியில பேக் வீல் பேரிங் காலி.

சாதாரணமாவே பஜாஜ் சன்னின்னா மெக்கானிக் எல்லாம் ‘போ போ”னு லெஃப்ட் ஹேண்ட்ல காக்கா விரட்டுவாய்ங்க. இதுல இது மேஜர் ப்ராப்ளம். கம்பெனி ப்ரொடக்சனே நிறுத்திருச்சு. அங்கே இங்கே பழைய சாமானாத்தான் பீராஞ்சு போடனும்.

மெக்கானிக் ரூ.350 கேட்டாரு. தரேன்னு தந்து அழுதம். அன்னாருக்கு லாபம் தான். ஆனால் லாபம் மட்டுமா அவர் கணக்குல சேரும்? நம்ம வவுத்தெரிச்சலும் தான் சேரும்.

நம்ம லாபம் அடுத்தவனோட நஷ்டமா இருக்கிறதால – நம்ம நஷ்டம் அடுத்தவனோட லாபமா இருக்கிறதால லாபம் கிடைச்சா கர்மம் கூடுது. நஷ்டம் வந்தா கர்மம் ஒழியுது. இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க.

மேலும் 11 ங்கறது மூத்த சகோதரத்தை கூட காட்டும். இன்னைக்கு அண்ணாவோ அக்காவோ ஃபுல் ஃபார்ம்ல இருந்து தங்களுக்கு நமக்கு அள்ளி கொடுக்கிறாய்ங்கனு வைங்க. எதிர்காலத்துல சொத்து பிரிக்கிறச்சயோ – அல்லது அவிக கை ஓய்ஞ்சு போன நேரத்துலயே நம்ம பக்கத்துல இருந்து எதிர்ப்பார்ப்பாய்ங்களா இல்லையா?

இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க. நாளைக்கு ஆபோக்லிமம் என்ற 3 ஆமிடத்தையும், துஸ்தானங்கள் என்ற 6-8-12 பாவங்களை பத்தியும் விலாவாரியா பார்க்கலாம். உடுங்க ஜூட்டு.

மோடி ஜாதகம் : பாய்ண்ட் டு பாய்ண்ட்

அண்ணே வணக்கம்ணே !
ஆதி காலத்துலயே ஆடியோவா போட்ட மேட்டருதான் விகடன் டாட் காம்ல ஆரோ ஜூரி மோடியோட ஜாதகத்தை வச்சு அவரு கிளிச்சுரப்போறாருன்னு எளுதியிருந்தாப்ல.
நம்ம சனத்துல பேர் பாதி பேரு ஆஃபீஸ்ல படிக்கிறவுகளாச்சா ..ஆடியோவ விட டெக்ஸ்டா போட்டா நிறைய பேரு படிப்பாய்ங்கன்னு டெக்ஸ்டா போடறேன். ( ஃப்ரெஷ்ஷா அனலைஸ் பண்ணியிருக்கன்)
லக்னம் ராசி விருச்சிகம்:
இதுல சந்திரன் நீசமாறதால பப்ளிக் சப்போர்ட் கிடைக்கிறது ரெம்ப கஷ்டம், ஷார்ட் கட்ல தான் வரனும் ( நரசிம்ம ராவ் மாதிரி) இவிக  நெல்லது பண்ணாலே ஆப்புதான் வரும். மோடி கதைய  புதுசா சொல்லனுமா என்ன?
விருச்சிக லக்னத்துக்கு லக்னாதிபதி செவ். இவரே தான்  சத்ரு ரோக ருணாதிபதி. இதனால இவிகளே கஷ்டப்பட்டு சத்ரு,ரோக ,ருண உபாதைகளை ஏற்படுத்திக்குவாய்ங்க.
லக்னத்துல சந்திர செவ்:
ஒவ்வொரு லக்னத்துக்கும் பாதகாதிபதினு ஒருத்தர் உண்டு. இவர் நின்ன இடம்,பார்த்த இடம், சேர்ந்த கிரகம்லாம் உருப்படாது.
மோடி ஜாதகத்துல  லக்னாதிபதியான செவ் பாதகாதிபதியான சந்திரனோட சேர்ந்தே உட்டாரு.  இதனாலதேன் ஒரே ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியாத கிடக்கு பார்ட்டி.
அதுவும் லக்னாதிபதியோட சந்திரன் சம்பந்தப்பட்டா  இந்த மாதிரி ஜாதகர்கள் வாழ்வில் 14 வருசம் ஏறுமுகம், 14 வருசம் இறங்குமுகத்தை பார்க்கலாம். மோடி மேட்டர்ல ஏறுமுகம் ஓவர்.
அதுல வேற பாக்யாதிபதி சந்திரங்கறதால கட்சித்தலைமை எப்பம் ரிவர்ஸ் ஆகும்னு சொல்லமுடியாது. என்னதான் ஹெலிகாப்டர்ல பறந்தாலும் ஏரி,குளத்தை தாண்டாம இருக்க முடியுமா?
குரு 4 ல இருக்காரு.இவர் தான் நின்ன இடத்தை நசிக்க செய்வாரு. இதனால  ஸ்தான நாசம். சுக நாசம். கல்வி நாசம்.
அதே சமயம்  சொந்த கட்சிய வச்சு ரெவின்யூ இன் கம்,கேப்பிடல் இன் கம் ரெண்டையும் ரைட் பண்ணிக்கலாம்.
அடுத்து ராகு அஞ்சுல. இதனாலதான் சந்தானமின்மை,அவப்பெயர்.அதுவும் ராகு இதர மதங்களை குறிப்பவர்.
பத்தை பாருங்க. இங்கே 7/12 க்குடையவர் 3/4 க்குரியவரோட சேர்ந்தார். 7+3 மனைவிக்கு மாரகம் (நெல்லவேளையா பிரிஞ்சுட்டதா சொல்றாய்ங்க.மவராசி நெல்லா இருக்கட்டும்) .12+4 இவர் சார்ந்த கட்சி நாசமா போயிரும். (இந்த தடவை பல்பு வாங்கினா கட்சி ஒரு ஏழெட்டு பீசா உடையறது கியாரண்டி)
பத்துல சுக்கிரன். இதனாலதேன் விளம்பரமாடல் கணக்கா அலங்காரம், சின்னபொண்ணுங்க பின்னால போலீஸை அனுப்பி துப்பறியறது.
பதின்னொன்னை பாருங்க.இங்கே 10+8 காம்பினேஷன் இருக்கு. பொதுவா இது ஒர்க்கஹாலிக்கா மாத்தும்.அதே சமயம் பத்துன்னா தொழில் எட்டுன்னா மரணம். ஆன் டியூட்டி டிக்கெட் போடவும் சான்ஸிருக்கு.
கூட மோட்சகாரகன் வேற. ஏதோ தியானம் யோகம்னு இருக்கிறவுகளுக்கு பரவால்ல. மோடிக்கு மோட்சம்னா என்ன சொல்றது?
இந்த இழவெடுத்த ஜாதகத்தை வச்சு பிரதமர்னு சொல்றாய்ங்க. எங்க போயி முட்டிக்கிறது?

பாவாதிபதிகள் நின்ற பலன்: 3

3.சகோதராதிபதி

Multy

3-1 லக்னத்தில் நின்றால்:
அல்லல் அலைச்சல், அதிசாகசம், சகோதர வர்கத்துடன் பிணைப்பு, அடிக்கடி பிரயாணம்,இசையில் ஆர்வம். ஊர்/நகருக்குள்ளேயான போக்குவரத்து துறையில் தொழில்.

3-2 இரண்டில் நின்றால்:
ஊக வணிகம்,பந்தயம் கட்டுதல் ,ரிஸ்கி பிசினஸுக்கு வாய்ப்புண்டு. டவுன் பஸ் ,கால் டாக்சி தொழிலில் இறங்கலாம். தொழிலுக்கு இளைய சகோதரம் ஒத்துழைப்பு உண்டு.
3-3 மூன்றில் நின்றால்:
சகோதர வர்கத்தின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். துணிச்சலான முடிவுகள்.பயணங்களுக்கு அஞ்சாத -பயணங்களை பெரிதும் விரும்பும் தன்மை.இசையில் ஆர்வம்,பயிற்சி,தேர்ச்சி.
3-4 நான்கில் நின்றால்:
தாய்க்கு நல்லதில்லை. தங்கையே தாய் ரோலை ப்ளே பண்ணலாம். வீடு மாற்றம்,ஊர் மாற்றம், வாகன விஷயத்தில் அதிருப்தி,அகல கால் வைத்தல்.கல்வியிலும் நிறைய அல்லல் அலைச்சல்.
3-5 ஐந்தில் நின்றால்:
துணிவே துணை என்று முன் யோசனை இன்றி செயல்பட்டு சில சமயம் (மட்டும்) அவப்பெயருக்கும் ஆளாகலாம். பல நேரம் துணிந்து இறங்குவதே லாபம் தரும். இந்த லாபம் எவ்வளவு அதிகமானால் அந்தளவுக்கு வாரிசு,குழந்தைகள் வளர்ச்சி, அவர்கள் முன்னேற்றத்துக்கு நல்லதில்லை.
3-6 ஆறில் நின்றால்:
இளைய சகோதரம் நோய் வாய்ப்படும்,அல்லது கடன்,வழக்கு வில்லங்கத்தால் பாதிப்படும். ஜாதகர் செவிடாகலாம்.லோக்கல்ல ட்ராவல் பண்ணும் போது பிரச்சினை வரலாம் உ.ம் சிறு விபத்து ,ஃபைன்.
3-7 ஏழில் நின்றால்:
துணிவுள்ள வாழ்க்கை துணை அமையும். ஜாதகரின் கையை பிடிக்க அவர் எதற்கும் துணிவார்.ஆனால் திருமணத்துக்கு பின் அவருடைய வாழ்க்கை அல்லல்,அலைச்சலுடன் கூடியதாக மாறும். சிலர் நண்பர்கள் கூட்டுறவால் எகிடு தகிடாக செயல்பட்டு துன்புறுவர்.
3-8 எட்டில் நின்றால்:
ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் ஜாதகர் செவிட்டூமையாக கூடும். இளைய சகோதரம் நஷ்டமாகும். ஜாதகரின் துணிவே துக்கத்தில் ஆழ்த்திவிடலாம் (புலி வருது கதை ஆயிரும்).
3-9 ஒன்பதில் நின்றால்:
அப்பாவுக்கு நல்லதில்ல. ரிஸ்கியான இன்வெஸ்ட்மென்ட்,சேமிப்பெல்லாம் செய்வாய்ங்க. சொத்து மேட்டர்ல அலைச்சல் ஏற்படலாம். தூர தேச தொடர்புகள்,பயணங்கள் அலைக்கழிப்பை ஏற்படுத்தலாம்.
3-10 பத்தில் நின்றால்:
லைஃப்ல எப்பயாச்சும் ரிஸ்க் எடுக்கலாம் (அதுவும் கேல்குலேட்டட் ரிஸ்க்) ரிஸ்க் எடுத்தாதான் லைஃபுன்னா? பெரிய ரிஸ்க் ஆச்சே . ஜாதகரின் தொழில் முயற்சியில் இளைய சகோதரம் கை கொடுக்கலாம். இசைத்துறையில் சாதனை படைக்கலாம்.
3-11 பதினொன்றில் நின்றால்:
இளைய சகோதர விருத்தி. துணிந்து செயல்படுவது லாபம் தரும். அது அளவுக்கு மீறாம பார்த்துக்கனும். மூத்த சகோதரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.
3-12 பனிரண்டில் நின்றால்:
இவர் ரிஸ்க் எடுத்து வேலை செய்ய அதன் பலன் மூன்றாம் நபருக்கு போயிரலாம். காது மந்தமாகலாம். இசை ரசிகராக இருக்கலாம். வருமானத்துல பெரும்பகுதி பெட் ரோலுக்கே செலவழியலாம். திங்க ,தூங்க நேரமில்லாம பிறருக்கு உழைப்பாய்ங்க.

4.மாத்ரு பாவாதிபதி

ஜாதகத்தில் துவாதச பாவாதிபதிகள் நின்ற பலன்

1.லக்னாதிபதி

1-1 (லக்னத்திலேயே நின்றால்)
உடல், மன நலம், மன பலம், ஞாபக சக்தி, உறுதியான எண்ணம்.மற்றவர்கள் குறித்து ஒரு அலட்சிய சுபாவம்.(மனைவி உட்பட)

1-2 (தனபாவத்தில் நின்றால்)
சுய முயற்சியால் பணமீட்டல், சாணக்யமான பேச்சு,எழுத்துதிறமை, குடும்பத்துடன் நெருக்கம்,ரசனையுடன் உணவு, அழகான கண்கள் ,நல்ல கண் பார்வை.

1-3 (மூன்றில் நின்றால்)
அல்லல் அலைச்சல், அதிசாகசம், சகோதர வர்கத்துடன் பிணைப்பு, அடிக்கடி பிரயாணம்,இசையில் ஆர்வம். ஊர்/நகருக்குள்ளேயான போக்குவரத்து துறையில் தொழில்.

1-4 ( நான்கில் நின்றால்)
தாயுடன் பிணைப்பு. ,தாய் வழி உறவால் உதவி. சொந்த வீடு,வாகனம் அமையும். உயர் கல்வி சாத்தியமாகும்.

1-5 ( ஐந்தில் நின்றால்)

புத்தி கூர்மை, சரியான நேரத்தில் எச்சரிக்கும் உள்ளுணர்வு. அதிர்ஷ்டம்,வாரிசுகளால் நன்மை, அவர்களுக்கு நல்ல முன்னேற்றம். பெயர் ,புகழ் ,உடலுழைப்பு பெரிதாக இல்லாது பணம் ஈட்டுதல்.

1-6(ஆறில் நின்றால்)

வாழ் நாள் முழுக்க கடன், நோய்,வழக்கு, விவாதங்கள்,எதிரிகளால் தொல்லை,மன நிம்மதி இன்மை, மனவியல் கோளாறுகள்

1-7 (ஏழில் நின்றால்)

ஃப்ரண்ட் ,லவர்,பார்ட்னர் வைஃப் வகையறாக்களோட இம்பேக்ட் அதிகம். இவர்களின்றி வாழ்க்கையே இல்லை என்ற நிலை. இவர்களில் யாரேனும் துரோகம் செய்தால் தாங்கமுடியாத நிலை.

1-8 (எட்டில் நின்றால்)

தற்கொலை, கொலை எண்ணம். ஐ.சி (தாழ்வுமனப்பான்மை) ,தொடரும் துரதிர்ஷ்டம், தன்னை தனிமையா ஃபீல்பண்றது, தீராத கடன், கண்டங்கள் ( ஆசியா ,ஐரோப்பா இல்லிங்கோவ்) , சிறைப்படுதல், ஐபி போடறதுல்லாம் நடக்கலாம். பெண்ணானால் அதுவும் ஹோம் மேக்கரானால் பெருசா பிரச்சினை இல்லை.

1-9 (ஒன்பதில் நின்றால்)

அப்பா,அப்பாவழி சொந்தக்காரவுக, அப்பா வழி சொத்து, தூர பிரயாணம், கோவில் குளம்,இத்யாதி அனுகூலம். சேமிப்பு குணமிருக்கும்.தர்ம குணம் இருக்கும். பக்தி, புராணம் இதிகாசங்கள்ள ஆர்வம் ஏற்படும். தூர தேச தொடர்புகள்,பப்ளிஷிங் அனுகூலம்.

1-10 (பத்தில் நின்றால்)

தொழில்,உத்யோகம், வேலை,கைத்தொழிலில் ஆர்வமிருக்கும். இவற்றாய் விட்டால் வேறு எதுவுமே தெரியாது என்ற நிலை இருப்பது மைனஸ் தான்.

1-11 (பதினொன்றில் நின்றால்)

பிசினஸ் மைண்ட் இருக்கும். மூத்த சகோதரவர்கத்தோட உதவி கிடைக்கும். டபுள் மைண்டடா இருப்பிங்க.

1-12 (பன்னிரெண்டில் நின்றால்)

வாழ் நாள் எல்லாம் எம்.ஜி.ஆர் வேலைக்கே சரியா போயிரும். வீண் செலவு அதிகம். தூக்கம் அதிகம். சாப்பாட்டுக்கு, செக்ஸுக்கு, லக்சரிக்கு அதிக முக்கியத்துவம் தருவிக

2.தனபாவாதிபதி

2-1.லக்னத்தில் நின்றால்:
ப்ராஃபிட் மோட்டிவ் இருக்கும், சம்பாதிக்கனும்ங்கற துடிப்பு இருக்கும். நல்ல வாக்கு வன்மை ,பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழில் கை கொடுக்கும். குடும்பத்தின் மீது அக்கறை. தனபாவாதிபதி லக்னாத் அல்லது நைசர்கிக பாவியானால் பணப்பேயாகி,பொய்,புரட்டு,ப்ளாக் மெயில்,பிறரை அச்சுறுத்தி,பயமுறுத்தி பணம் செய்யவும் கூடும். இதனால் குடும்பத்தினரும் அவதி பட நேரலாம்.
2-2.தனபாவத்தில் ஆட்சி பெற்றால்:
பணத்துக்கு(கே) முக்கியத்துவம். நட்பு -உறவு எல்லாமே பணத்தால் நிர்ணயிக்கப்படும்.பயங்கரமா பேரம் பேசுவாய்ங்க. குடும்பத்தினர் மீது கொள்ளும் பாசம்,நேசத்துக்கும் பணமே காரணமாக அமையும்.
2-3.மூன்றில் நின்றால்:
ஊக வணிகம்,பந்தயம் கட்டுதல் ,ரிஸ்கி பிசினஸுக்கு வாய்ப்புண்டு. டவுன் பஸ் ,கால் டாக்சி தொழிலில் இறங்கலாம். தொழிலுக்கு இளைய சகோதரம் ஒத்துழைப்பு உண்டு.
2-4.நான்கில் நின்றால்:
குடியிருக்கிற வீட்டை கூட ப்ரமோஷனுக்கு கொடுத்து காசு பார்ப்பாய்ங்க. ஹவுசிங்,ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபடலாம். தாய் வழி சொத்து முதலீடாகலாம். தாய் வழி உறவின் ஒத்துழைப்பு. கல்வித்துறையில் ஆர்வமிருக்கும்.
2-5.ஐந்தில் நின்றால்:
அதிர்ஷ்டத்தை நம்பி தொழில் செய்வர். ராகு -கேது ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருந்தா ஷேர் மார்க்கெட் ,லாட்டரி,சூதாட்டம் கூட கை கொடுக்கலாம். ஜாதகரது புத்தியே முதலீடாகும். குடும்பத்தின் நற்பெயர் துணைக்கு வரும்.ஸ்பெக்குலேஷனில் ஈடுபாடு. தொழிலில் பிள்ளைகள் ஒத்துழைப்பு உண்டு. சிலர் பெற்ற பிள்ளையை தத்து (போல) கொடுத்து பணம் பார்க்கலாம்.வசதி பெறலாம்.
2-6.ஆறில் நின்றால்:
கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவர்.வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழப்பர். கடன் தொல்லை, விவகாரமான பேச்சு,பேச்சால் கலகம்,குடும்பத்தில் கலகம்.கண் நோய் ஏற்படலாம். வாய்,தொண்டை பாதிக்கலாம்.
2-7.ஏழில் நின்றால்:
வாழ்க்கை துணையையும்,அவருடனான நெருக்கத்தையும் பணம் நிர்ணயிக்கலாம். இருவரிடையில் பணமே பிரதானமாக இருக்கலாம்.தொழிலில் மனைவி வழி உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கலாம்.
2-8.எட்டில் நின்றால்:
வறுமை,பேச்சால் பெரு நஷ்டம், குடும்பத்தை பிரிதல் ,கண் பார்வை குறைவு ஏற்படலாம். மரணம் தொடர்பான தொழில் செய்யலாம். தொண்டை,வாய் பாதிக்கலாம்.
2-9.ஒன்பதில் நின்றால்:
சிறுக சிறுக சேர்த்து சொத்துக்கள் வாங்குவர். சேமிப்பு,முதலீடு அனுகூலம்.இந்த துறைகளில் ஆலோசகராக தொழில் செய்யவும் வாய்ப்பு. தந்தை வழி சொத்து இருக்கலாம். தூர தேச தொடர்புகள், பப்ளிஷிங் ஆகியன கை கொடுக்கலாம்.தொழிலில் தந்தை வழி உறவின் ஒத்துழைப்பு கிடைக்கலாம்.
2-10.பத்தில் நின்றால்:
பேச்சுக்கு முக்கியத்துவமுள்ள தொழில் அமையலாம். உ.ம் ரெப்,மெடிக்கல் ரெப் ,ரேடியோ ஜாக்கி. கொடுக்கல் வாங்கலை தொழிலாக செய்யலாம். ஃப்ரன்ட் டெஸ்க் ஜாப்ஸுக்கு வாய்ப்பு. தொழிலுக்கு குடும்பம் மனமுவந்து ஒத்துழைப்பு தரும்.
2-11.பதினொன்றில் நின்றால்:
அதி பேச்சு .இரண்டு வழிகளில் வருவாய். தன் குடும்பமே அல்லாது இன்னொரு குடும்பத்துடனும் நெருக்கம் இருக்கும்.அவர்களின் ஒத்துழைப்பும் இவரது தொழிலுக்கு உதவும்.
2-12.பனிரண்டில் நின்றால்:
வாக்கு வன்மை இராது. கம்யூனிக்கேஷன்ஸ்கில்ஸ் பூஜ்ஜியம். பேச்சுக்கு மதிப்பிருக்காது. கொடுத்த வாக்கை காற்றில் விடலாம் அல்லது அதை காப்பாற்ற பெரும் பணத்தை இழக்கலாம். குடும்பத்தை பிரிந்து வாழலாம்.குடும்ப செலவுகள் அதிகரித்து கொண்டே போகும் .( அன் ப்ரொடக்டிவ் எக்ஸ்பென்சஸ்)