தமிழ்மணம் நிர்வாகி விரைவில் கைது?

null

ஆமாங்க. நாங்கதேன் யோக்கியம்னு அலாட்டிக்கிற தமிழ் மணம் சோனியா காந்தியை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வீடியோவை உள்ளடக்கமாக கொண்ட பதிவை பகிர்ந்திருக்கிறது. நம்ம பாதுகாப்பை கருதி பதிவின் யூ ஆர் எல் ஐ இங்கு தரலை. கட்டண சேவைன்னா எந்த கஸ்மாலத்தையும் திரட்டிருவாய்ங்களாமா?

வீடியோ:
ஃபோட்டோ ஃபன் மாதிரி வீடியோ ஃபன் சாஃப்ட்வேர்/ வலைதளம் எல்லாம் இருக்கில்லையா. அந்த சாஃப்ட்வேர் அ வலைதள உதவியோட இந்த வீடியோவை செய்திருக்காய்ங்க. சொல்லவே வாய் கூசுது. சோனியா மேல உங்களை போலவே எனக்கும் பயங்கர கடுப்பிருக்கு. நம்ம பாடியிலயும் தமிழ் ரத்தம் தானே ஓடுது.
அதுக்குன்னு அவிக ஒரு பெண் என்பதையும் மறந்து அந்த வீடியோ செய்திருக்காய்ங்க. ராஜபக்சே ஹோட்டல் அறையில காத்திருக்காராம். மேடம் வராய்ங்க.வந்து ………..தூத்தேறிக்க.

சர்வ நிச்சயமா கைது நடவடிக்கை இருக்கும். விரைவில் எதிர்பாருங்கள்.

எச்சரிக்கை:
என்னடாது ..சித்தூரார் ராகு கேதுவை திராட்ல விட்டுட்டாப்ல இருக்குன்னு நொந்துக்காதிங்க. அந்த அதையும் போட்டிருக்கேன். இங்கே அழுத்தி படிக்கலாம்.

ராகுல் முடிவும் ராஜீவ் போல சோகமயாமானதுதானா?

புலிக்கு பிறந்தது பூனையாகுமாம்பாய்ங்க. இதையே பூனைக்கு பிறந்தது புலியாகுமான்னும் கேட்கலாம்ல. இதான் ஜீன்களோட லீலைன்னு ஜெனட்டிக் இஞ்சினீரிங் சொல்லும்.ஆனால் தியரி ஆஃப் கர்மா இதை பூர்வ கருமங்களோட விளைவுன்னு சொல்லும். . மாதா செய்தது மக்களுக்குன்னு சொல்றாய்ங்க.கொய்யாமரத்துக்கு கொய்யாத்தான் காய்க்கும்
நாம ஆரோட சொத்து ,பதவி ,புகழ் இத்யாதியை அனுபவிக்கிறோமோ அவிக ஜாதகத்துல இருந்த தோசம்லாம் நம்மளையும் எஃபெக்ட் பண்ணிரும்.
இந்திராவின் வாரிசா ராசீவ் வந்தாரு. அந்த மகராசியின் கருமங்களும் வந்துருச்சு. சோனியாஜீ இந்திராவின் அதிகாரத்தை அனுபவிக்க ஆரம்பிச்சாரு. அவிகளை புல்லட் ப்ரூஃப் இருந்தா என்ன பண்றது அப்டமன்ல சுட்டாப்ல இவிகளுக்கு அதே பிரதேசத்துல கான்சர். ,
அதைப்போல இந்திரா -ராஜீவின்-சோனியாவின் வாரிசாக வளையவரும் ராகுலும் அவிக கருமத்தையெல்லாம் அனுபவிச்சு தீர்க்க வேண்டியதுதான். இதைத்தான் இவர் ஜாதகமும் சொல்லுது.
ராகுல் ஜாதகம் என்ன சொல்லுது – காங்கிரசுக்கு ராகு(ல்) காலம் எப்படி இருக்கும்னு சொல்றதுக்கு மிந்தி இந்த பதிவை படிச்சுருங்க.

ராகுல்ஜிக்கு 30/Mar/2007 முதல் சந்திரதசை ஆரம்பம். சந்திர தசையில மொத 5 வருசம் ஒரு விதமா அடுத்த 5 வருசம் இன்னொரு விதமா பலன் தரும்.

இந்த கணக்குப்படி 30/மார்ச்/2012 பாசிட்டிவ்னு தான் சொல்லோனம். (பேண்டை அவுத்தாய்ங்களே தவிர கோவணத்தை உருவலையே)

30/மார்ச்/2012 முதல் சந்திர தசையின் இரண்டாம் பகுதி ஆரம்பம். இது 29/Mar/2017 வரை நடக்கும்.மொதபகுதி லட்டா கொடுத்துட்டதால அடுத்த பகுதி …..வைத்தான் தரும்.
சந்திரதசைன்னாலே ரெண்டேகால் நாளைக்கு மேல ப்ளான் பண்ணாதிங்கன்னு சொல்றது வழக்கம்.(அவருதேன் ராசி மாறிப்புடுவாரே இவருக்கு இப்டியா கொத்த சந்திரதசையில சோனியாஜீ ராகுலை பத்தி என்னென்னமோ கனவு காண்றாய்ங்க.
சந்திரன்னாலே instability,un certainity,up and downs, logicless sudden developments இருக்கும்.மக்கள் ஆதரவுக்கு இவருதான் முக்கிய காரகம். இவரா தனபாவாதிபதியாகி 6 ல நீசமாகி கிடக்காரு.
ஆறுங்கறது சத்ரு -ரோக -ருண ஸ்தானம். இதனாலதேன் எதிரிகள் நண்பராவும் -நண்பர்கள் எதிரிகளாவும் மாறிட்டே இருக்காய்ங்க. நித்ய கண்டம் பூர்ணாயுசு கணக்கா மொதல் அஞ்சு வருசம் ஓடிருச்சு. அடுத்த அஞ்சு வருசம் இத்தாலிக்கே ஓட்டிரும் போல.
இவரு தன பாவாதிபதி -மனோகாரகனும் இவருதேன். இவரு ஆறுல உட்கார்ந்ததாலதேன்.. எப்டி வந்தா என்ன? சனம் என்ன நினைச்சா என்னன்னு ரெண்டு கையாலயும் சொல்லனுமா என்ன?
சந்திர தசைக்கே இத்தீனி வில்லங்கம்னா பார்ட்டிக்கு 30/Jan/2013 => முதல் 30/Jun/2014 வரை சந்திர தசையில புதபுக்தி நடக்கப்போகுது. இவருதேன் லக்னாதிபதி. உடல்,மனம்,புத்தி எல்லாத்துக்கும் காரகம். இவரு போயி விரயத்துல உட்கார்ந்தாரு.

கலீஞரு தலீவரு பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்துட்டு பெரியார் மியூசியத்துல போயி உட்கார்ந்துக்கிட்ட கணக்குத்தேன். ஆரு மதிப்பா? துரை முருகன் போயி சிரிப்பு காட்டுவாரா? சூப்பற ஸ்டார் போய் பார்ப்பாரா? ஊஹூம்.. இதே நிலைதான் இங்க புதனுக்கும்.

புதன் என்றால் தோல் -கீல் -அண்டம் இது தொடர்பான வியாதிகள் வரலாம். இவருக்கு இருக்கிற (இருக்கிறதா நினைக்கிற)
கொஞ்சம் நஞ்சம் இமேஜும் டேமேஜுதேன். என்ன பேசறோம் -என்ன செய்யறோம்ங்கற ப்ரக்ஞையே இல்லாம குண்டக்க மண்டக்க பிஹேவ் பண்ணுவாரு.

அடுத்து வர்ரது கேது புக்தி .இது 30/Jun/2014 => முதல்30/Jan/2015 வரை நடக்கும். இன் ஜெனரல் கேது தசை புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார். துன்பங்கள் மூலம் தான் ஞானம் பாசிபிள். ஒரு வேளை ராகுல் ஆராய்ச்சி துறைக்கோ , சன்னியாச வாழ்வுக்கோ மாறிட்டா கேதுவோட தீய பலனை ஓரளவுக்கு ஓவர் கம் பண்ணலாம்.
ராகுல் ஜாதகத்துல கேது 3 ல இருக்காரு. தகிரியம் வரணும். தகிரியம் எப்ப வரும்? கொய்யால முழுக்க நனைஞ்சாச்சுங்கற நிலை வரும் போது தான் தகிரியம் வரும்.அதனால முழுக்க நனைய போறது கியாரண்டி.
இதை வச்சு பார்க்கும் போது தேர்தல் முன் கூட்டியே வரலாம். புதபுக்தி -கேதுபுக்தியை கம்பேர் பண்ணும்போது புதபுக்தி பெட்டர் தானே. அதனால இப்படி ஒரு விஷபரீட்சையில இறங்கலாம்.(வினாசகாலே விபரீத புத்தின்னு ச்சும்மாவா சொன்னாய்ங்க)
சோக முடிவு:
ராஜீவை போல இவருதும் சோகமுடிவுன்னு தலைப்பை வச்சுட்டு அந்த வாசனை கூட இல்லியேப்பான்னு கேப்பிக .வரேன். லக்னத்துல சூரிய செவ் சேர்க்கை இருக்கா. 11 ல உள்ள சனி 3 ஆம் பார்வையா செவ்வாயை பார்க்கிறாரா? இன்னம் என்ன வேணம்? ராஜீவாச்சும் ஏதோ பொதுவாழ்க்கையில எடுத்த தப்பான முடிவுக்கு பலியானாரு.
ஆனால் நம்மாளு? (லக்னம் மிதுனம் – மைதுனம்-உடலுறவு -என்ற வார்த்தையிலருந்துதான் மிதுனங்கற வார்த்தையே வந்தது) தனிப்பட்ட விஷயங்களுக்காவ தீக்குளிச்சாலும் அதிர்ச்சி அடைய மாட்டேன். இவர் மரணத்துக்கு – தீவிபத்து? – சொந்த வாழ்க்கையிலான சிக்கல்களே காரணமா இருக்கலாம். சொந்த வாழ்க்கையிலும் 7 ஆமிடத்து சமாசாரமுங்கோ.
இது மாதிரி சம்பவம் சந்திர தசை புத புக்தியில நடக்கவே அதிக சான்ஸ் இருக்கு..

சோனியாவும் -வசந்தசேனையும்

“சுதந்திர நாட்டின் அடிமைகளே!” ஏதோ தமிழ் பட பாடல் வரின்னு ஞா. நான் ஏதோ வெறுமனே குடிமக்களை மட்டும் சுதந்திர நாட்டின் அடிமைகளே!னு விளிக்கிறதா நினைச்சுராதிங்க. ஆட்சியாளர்கள் உட்பட இந்தியர்கள் அனைவருமே அடிமைகளாவே கிடக்காய்ங்க. இதான் சோகம்.

இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்ணா “பெத்த பேர்” கொண்டிருக்கிற சோனியா மேடம் உட்பட அடிமைகளாத்தான் இருக்காய்ங்க. அடிமைத்தனமாத்தான் ரோசிக்கிறாய்ங்க. அடிமைகளைத்தான் விரும்பறாய்ங்க.

இன்னைக்கு நமக்கு அடிமையா இருக்க சம்மதிக்கிறவன். நாளைக்கு நம்ம எதிரிக்கும் அடிமையா மாறுவாங்கற சிம்பிள் லாஜிக் அடிமைப்படுத்தறவுகளுக்கு ஸ்பார்க் ஆகமாட்டேங்குது. அடிமைப்படுதலை விட அடிமைப்படுத்துதல் இன்னம் ஆபத்தானது.

மனோகரால வசந்தசேனை மூளை வளர்ச்சியில்லாத பித்தனான வசந்தனை ராசாவாக்க துடிக்கிறாப்ல ராகுலை ராசாவாக்க மெனக்கெடறாய்ங்க. ஆருனா மனோகராவை இந்தியில சப் டைட்டில் போட்டு மேடத்துக்கு போட்டு காட்டினா நெல்லாருக்கும்.

சோனியா மேடம் தன் அடாத ஆசைக்கு அடிமைன்னா மன்மோகனார் இந்த அடிமையின் அடிமை. பலவீனர்கள் எளிதில் அடிமையாகிறார்கள். பலவீனர்கள் என்றால் உடல் ,மன ரீதியாக பலவீனர்களாக உள்ள அனைவரையுமே குறிப்பிடுகிறேன்.

யார் இந்த படைப்பின் ஊற்றுக்கண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார்களோ அங்கு சக்தியின் ஊற்று நிச்சயம். எங்கு சக்தியின் ஊற்று இருக்கிறதோ அங்கு அடிமைத்தனத்துக்கு இடமே இல்லை. அடிமைத்தனம் மரணத்துக்கொப்பானது. வாழ்க்கையில எதை இழந்தாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டியது சுதந்திரத்தை. ஆனால் நம்ம சனம் வாழ்க்கைய காப்பாத்திக்க கொடுக்கிற மொத பலி சுதந்திரம்.

வாழ்க்கையில மாத்த முடியாதது -தவிர்க்க முடியாதது மரணம் ஒன்னைத்தான். அடிமைக்கும் மரணம் உண்டு. சுதந்திரனுக்கும் மரணம் உண்டு. சுதந்திரனின் மரணம் அடிமைகளின் குருட்டு விழிகளுக்கும் ஒளி தருகிறது.ஆனால் அடிமையின் வாழ்வோ சுதந்திரர்களின் வாழ்விலும் சந்தேக இருளை நிறைக்கிறது.

படைப்பின் ஊற்றுக்கண்ணோடு தொடர்பு கொண்டு நம்மில் சக்தியின் ஊற்றை கண்டெடுக்க வேண்டுமானால் நாம் படைப்பை உற்று கவனிக்க வேண்டும். படைப்பு என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும்.

நம்மை நாம் வெற்றாக வைத்துக்கொண்டால் படைப்பு நம்மோடு பேசுகிறது. நம் வழியே பேசுகிறது. எது எழுதப்படவேண்டுமோ அதை ஆரம்பித்தால் அது கனவே போல் எழுதப்பட்டுவிடுகிறது. எது செய்யப் படவேண்டுமோ அதை துவங்கினால் அதுவே முடிகிறது.

மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது என்று புலம்புகிறோம். ஆனால் மின்சாரத்துக்கு அடிமையாகவே தொடர்கிறோம். பிச்சைக்காரனுக்கு போடுவதையோ -புத்தகம் வாங்குவதையோ -வேலைக்காரி சம்பளத்தையோ-அவளுக்கு தரும் ஒரு வேளை காஃபியையோ குறைத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கட்டியே விடுகிறோம்.

அரசு ஏன் உயர்த்துகிறது கூடுதலாக பைசா வரும் என்று. மக்கள் அனைவரும் தம் பழைய கட்டண அளவுக்கே தன் மின் வினியோகத்தை குறைத்துக்கொண்டால் என்ன ஆகும்?

இதே விதியை பஸ் கட்டணம் ,பால், காய்கறி எல்லாவற்றுக்கும் அப்ளை செய்து பாருங்கள். நாம் எப்பேர்கொத்த அக்மார்க் அடிமைகளாக இருக்கிறோம் என்று?

ஆமை தன் கால்களை தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதை போல – நாம் நம் தேவைகளை சுருக்கிக்கொண்டால் ஹிப்பாக்ரட்டுகளால் வழி நடத்தப்படும் இந்த கேடு கெட்ட சமுதாயத்துக்கு அடிமையாக இருக்கத்தேவையில்லை.

என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்….? என்று அன்றே எழுதிய பாரதி இன்றிருந்தால் இன்னும் என்னெல்லாம் எழுதியிருப்பானோ?

மன்மோகன் சர்க்காரும் சில பலான பழமொழிகளும்.

அண்ணே வணக்கம்ணே !

சாப்பாட்ல எப்டி வெஜ் ,நான் வெஜ் இருக்கோ அப்படியே பழமொழியிலயும் வெஜ் நான் வெஜ் இருக்கு. மன்மோகன் சர்க்காரோட சாதனைகளை (?) பார்க்க பார்க்க இதை கிழிக்க வெஜ் பழமொழிகள் போதாதோன்னு தோனுது.

யுபிஏ 1 விஷயத்துல கூட அதுக்கு கம்யூனிஸ்டுங்க வெளியிலருந்து ஆதரவு கொடுத்துக்கிட்டிருந்த
வரைக்கும் ஓரளவுக்காவது பத்தினி தன்மையை பார்க்க முடிஞ்சது. எப்பம் கம்யூனிஸ்டுகளை மீறி அணுஒப்பந்தம் கை.எ ஆச்சோ? மன்மோகனார் அரசு நம்பிக்கை தீர்மானத்துல ஜெயிச்சதோ யு.பி.ஏ1 விதவை ஆயிருச்சு.

கம்யூனிஸ்டுங்க வத்தல் பாடி , கை பனியன் – சோடா புட்டி கண்ணாடி , நாலு முழம் வேட்டி -கையில நியூஸ் பேப்பரோட ஹால்ல உட்கார்ந்திருக்கிற கணவன் மாதிரி ஒரு ரோலை ப்ளே பண்ணாய்ங்க.

இப்படிப்பட்ட புருசங்காரங்க என்னதான் கடுப்படிச்சாலும் எல்லா பொஞ்சாதிகளும் விசம் வச்சுர்ரதில்லை ஏன்னா அது வாணலிக்கு பயந்து அடுப்புல பூந்த கதையாயிரும்.

சில பொஞ்சாதிங்க வச்சுர்ராய்ங்க. வச்சு விதவை ஆயிர்ராய்ங்க அது வேற விசயம். இவிகளுக்காகத்தான் . …..ச்சிக்கு மாட்டறதெல்லாம் மொரட்டு ……………………..னுட்டு ஒரு நான் வெஜ் பழமொழி உண்டு.

கம்யூனிஸ்டுக்காரவுக லந்து பண்ணதெல்லாம் கொள்கை அடிப்படையிலானது.ஆனால் அவிகளுக்கு பிறவு லீடிங் பார்ட்னர்ஸா மாறின கட்சிக்காரவுக எப்டியெல்லாம் லந்து பண்ணாய்ங்கன்னு சொல்லவேண்டிய அவசியமில்லை. இது எந்தளவுக்கு இறங்கி போச்சுன்னா ஆதரவுக்கு மாத்தா ஜாமீனுங்கற ரேஞ்சுக்கு போயிருச்சு.

யுபிஏ கவர்மெட்டு ஊதுபத்தி,சாம்பிராணி போன்ற பூஜை பொருட்களுக்கு கூட வாட் போடப் போறாய்ங்களாமே. நக்கற மாட்டுக்கு செக்குன்னு தெரியுமா? சிவலிங்கம்னு தெரியுமா?

யுபிஏ 2 சர்க்காரை பொருத்தவரை இது தொடரும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது தான். லேட்டஸ்டா நிலக்கரி ஊழல்ல வந்து நின்னிருக்காய்ங்க. எதிர்கட்சிங்க மன்மோகனாரை ராசினாமா பண்ண சொல்லி அலப்பறை பண்றது சகஜம்.

ஆளுங்கட்சிக்காரவுக எப்டியாவது அவைய நடத்தி சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு சால்ஜாப்பாச்சும் சொல்ல பார்க்கனும்.ஆனால் என்ன ந்டக்குது “எதிர்கட்சிக்காரவுக அவைய நடத்த விடமாட்டேங்கிறாய்ங்க”ன்னு குத்தம் சொல்லிக்கிட்டே அவைத்தலைவர் காதுல போயி அவைய ஒத்திவைக்க சொல்றாய்ங்க.

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் பிச்சுப்பார்த்தா எல்லாம் ஈறும் பேனுமா நாறுது. குதிரை கீழே தள்ளினதோட பள்ளமும் பறிச்சதாம்ங்கற மாதிரி ஆயிருச்சு இந்த அரசாங்கத்தோட கதை . :

யுபிஏ சர்க்காரை குதிரைன்னு வச்சிக்கிட்டா அதனோட மந்தமான செயல்பாடுகளை கீழே தள்ளின வகையில சேர்க்கலாம்.

ஆனால் இலங்கை தமிழர் விவகாரம் – கூடங்குளம் அணு உலை விவகாரம்லாம் பார்க்கும் போது இதையெல்லாம் -பள்ளம் பறிச்ச வகையறாவுல சேர்த்தாகனும்.

குதிரை குருடா இருந்தாலும் கொள்ளு திங்கறதுல குறைச்சலில்லை:மண்டேக்சிங் அலுவாலியா பல லட்சம் செலவுல கக்கூஸு கட்டினது ஞா இருக்குல்ல

குதிரை கொள்ளுக்குன்னா வாயை திறக்கும் – கடிவாளம் போடறேன்னா திறக்குமா? கடிவாளத்தை லோக் பால் பில்லுக்கு ஒப்பிட்டா இந்த பழமொழியும் ஓகே.

மத்திய அரசு ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் நம் பங்களிப்பை உன்னிப்பாக கவனிக்கிறதாம். இதுக்கு ஒரு பழமொழிய சொல்லனும்னா.. உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை படுத்தும் பாட்டை இந்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை . இப்பம் எல்லா நாட்டு ராணுவமும் தமிழனை/ இந்தியனை சுட்டு தள்ள ஆரம்பிச்சிருக்கு.

இதுக்கு ஒரு பழமொழிய சொல்லனும்னா..கொண்டவன் கோலால் அடித்தான். கண்டவன் காலால் உதைத்தான்

மெஜாரிட்டியா கிடையாது . கு.ப கூட்டணி கட்சிகளாவது முழு மனசா ஆதரிக்குதான்னா அதுவும் இல்லை. அட .. கட்சிக்குள்ளயாச்சும் எதுனா ஒத்துமை வாழுதான்னா அதுவும் கடியாது. இத்தீனி ஓட்டை இருந்தாலும் நெஜமாலுமே சனத்துக்கு எதுனா பண்ணனும்னு நினைச்சு முயற்சி பண்ணா அது வேற கதை. அதுக்கு மட்டும் பெப்பே..

சப்சிடிகளுக்கு மங்களம் பாடிரனும், சில்லறை வணிகத்தையும் அயல் நாட்டு பகாசுர கம்பெனிகளுக்கு தாரை வார்த்துரனும்.மெகா லெவல்ல ஊழல் பண்ணனும்.

எப்படி சாத்தியம்? ஆனைய தக்ஜம் பண்ண ஆசைப்பட்டா போதுமா ? அதுக்கேத்த ………..வேணாம்.. இப்பவும் காரியம் கை மீறி போயிரலை.

ஒடனே ஊழல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பிட்டு – ஊழல்களை விசாரிக்க தனி கோர்ட்டு ( ஃபாஸ்ட் ட்ராக்) அமைச்சுட்டு – ஒரு மினிமம் ப்ரோக்ராமோட அடுத்த தேர்தலுக்கு தயாரானா ஏதோ பேர் சொல்லலாம். இல்லின்னா மட்டும் நரசிம்ம ராவ் ரெஜிம்ல போல வளைக்குள்ள பதுங்கி இருக்க வேண்டியதாயிரும்.

ராவாச்சும் விட்டு வச்சாரு. இப்பம் நாட்ல போயிட்டிருக்கிற ட்ரெண்டை பார்த்தா .. முப்பது நாளும் பவுர்ணமி போல 30 நாளும் கோர்ட்டுக்கு அலைய வேண்டியாதாயிரப்போகுது..

ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்

வணக்கம்ணே.

08/Aug/2012 முதல் ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம் ஆரம்பமாயிரும்.

யுபிஏ சர்க்காருக்கும் -சோனியா காந்திக்கும் நடக்கப்போற சம்பவங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு. சர்க்கார் அன்னாடங்காய்ச்சி மாதிரி ஆயிரும்.

ஒவ்வொரு பில்லுக்கு ஒவ்வொரு கட்சியோட ஆதரவை பெற மல்லு கட்ட வேண்டி வரும். தமிழ் நாட்ல மந்திரி சபை நிலவரம் மாதிரி தில்லி காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி விவகாரம் ஆயிரும்.

அவனவன் ஊட்டு மாப்ளை மாதிரி அலட்டப்போறான். சோனியா அம்மா பிழிய பிழிய அழுது கொஞ்ச நாள் சமாளிக்கலாம்.

ஆனால் ரெண்டு மாசத்துல ஆட்சி கவுந்து போனா கூட நான் ஆச்சரியப்படமாட்டேன். உங்களை பதிவுக்குள்ள இழுக்க போட்ட பாரா இது.

பிட்டு படம் மாதிரி இருக்கேன்னு நினைக்காதிங்க. ஒழுங்கு மரியாதையா ஜாதகத்தை அனலைஸ் பண்ணித்தான் எழுதியிருக்கேன்.டோன்ட் ஒர்ரி

காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டு சோனியாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அபாயச்சங்கு ஊதின பார்ட்டி நாம.
.இத்தனைக்கும் அப்பம் ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன். இடையில தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் சமயம் ஜெ, கலைஞர்,சோனியா,ராகுல்னு வரிசையா ஜாதகங்களை அனலைஸ் பண்ணி பதிவுகள் போட்டோம்.

தனக்கு வந்தாத்தான் தலைவலியும் சுரமும்ங்கற மாதிரி இந்த மகராசி தில்லியில உட்கார்ந்துக்கிட்டு கிழவாடிங்க பேச்சை கேட்டு ஜகனை கழட்டி விட்டுட்டாய்ங்க. அந்த புள்ளைய சி.எம் ஆக்காம விடறதில்லைன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கம்.

மேலும் உ.பி தேர்தலுக்கு பிறகு யுபிஏ சர்க்காருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிருச்சு. காங்கிரஸ்ல சோனியாம்மா நாற்காலியே ஆட்டம் கண்டு போச்சு. ஆந்திராவுல சோனியா பேரை சொன்னதும் ராம நாராயணன் சினிமா கணக்கா சாமியாடற கிழவாடியெல்லாம் தெலுங்கானா பை எலக்சன்ஸ்ல கட்சி பல்பு வாங்கின பிறவு சி.எம் ராஜினாமா பண்ணனும் – மேலிடம் மாத்தி ரோசிக்கனும்னெல்லாம் அல்ட்டிமேட்டம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

அட நம்ம தாத்தாவே வெளியிலிருந்து ஆதரவு -மந்திரிகள் ராஜினாமா -உண்ணாவிரதம்னு சினிமா காட்ட ஆரம்பிச்சுட்டாருன்னா இன்னா அருத்தம் அம்மாவுக்கு டப்பா டான்ஸ் ஆடிப்போச்சுன்னு தானே அருத்தம்.

தமிழ் ஈழம் மேட்டரை பொருத்தவரை காங்கிரஸை விட பா.ஜ.க வை நம்பலாம் . இங்கனருந்து பத்து அய்யரை அனுப்பி அவிகளுக்கு பிழைப்பு வழிகாட்டவாச்சும் – அங்கன உள்ள இந்து கோவில்களை காப்பாத்தவாச்சும் காட்டடி அடிப்பாய்ங்க.ஆனால் சோனியா,காங்கிரஸ்லாம் இந்த மேட்டர்ல பூட்ட கேஸு.

ஆக சோனியாம்மா ஆடி முடிச்சு ( அல்லது அவிக தலையில உட்கார்ந்த சைத்தான் ஆட்டி முடிச்சு) ஊரைப்பார்க்க பூட்டா நெல்லது நடக்கலாம். அது எப்பம் நடக்கும்னு கொஞ்சம் சின்சியரா பார்ப்போம்.

அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் – அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.

லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)

இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.

இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும் ( கணவர் – சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.

இவர் 3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.

இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)

மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு இன்னைக்குள்ள ” வானளாவிய அதிகாரம்” உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.

சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனால தண்ணீர் மூலமா பரவும் வியாதிகள்,மனோவியாதிகள், நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

கடல் தாண்டியும் “விவகாரங்கள்” நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.

அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு ” நெல்ல மனசுங்கோ”.

ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி) தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான் ஏதோ நோன்பு அதிரசம் கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?

இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்………தான மானாங்கறது) ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.

அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?

4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?

அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.

இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.

என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்) சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்) இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.

கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.

இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில – ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?

அஞ்சுல உட்கார்ந்த கேது ராகுலை சன்னியாசியாக்கனும் அ பிச்சைக்காரர் ஆக்கனும். ரெண்டுல ஒன்னு சீக்கிரமே பைசல் ஆயிரும்.

5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.

இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.

சனி தசை சுக்கிர புக்தி (27/Jun/2008 => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.

இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம் சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993 => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.

இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.

சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ

சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.

2012, ஆகஸ்ட் ,8 க்கு அப்புறம் சனிதசையில சந்திர புக்தி ஆரம்பிச்சுரும்.கூட ராகு வேற இருக்காரு. ஒரு பாரால மனம்,சிறு நீரகம், நுரையீரல் பாதிக்கும். தண்ணீர் மூலம் பரவும் வியாதி வரலாம்னு சொல்லியிருக்கனே அதுவரலாம்.

லக்னாதிபதியோடயே ராகு சேர்ந்திருக்கிறதால அவருக்கு ரெட்டையான கேது அஞ்சுல உட்கார்ந்திருக்கிறதால ஒரு பெரிய்ய அவமானம் நடந்து சொல்லிக்காமயே கூட போயிரலாம். ( அட இத்தாலிக்குங்க)

2012 ல் சோனியா முதல் சிம்பு வரை

அண்ணே வணக்கம்ணே !

புத்தாண்டில் பிரபலங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு திராட்ல விட்டுட்டம். நம்ம வேகத்துக்கு – நமக்கிருக்கிற டைட் ஷெட்யூலுக்கு விடாப்பிடியா டெக்ஸ்டா தொடர்ந்தா இன்னொரு புத்தாண்டு வந்துரும். அதனால சோனியா,ராகுல்,ஜெயலலிதா முதல் சிம்பு ,சூர்யா வரை பிரபலங்களோட எதிர்காலம் 2012ல எப்படி இருக்கும்னு ஆடியோவா தந்திருக்கேன்.

கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

நம்ம புதிய விருந்தினர் சுந்தரேசன் அவர்களுடைய விபத்து பதிவையும் தந்திருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க.

அதுக்கு மிந்தி ச்சொம்மா டைம் பாஸுக்கு ரெண்டு உபகதை.

ஷீர்டி சாயிபாபா ஷீர்டில செட்டிலான புதுசுல திடீர்னு ஒரு ஆசாமி வந்தான்.பாபாவை அவர் உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க சொன்னான். பாபா எந்திரிச்சாரு. வந்தவன் பாபா சீட்ல உட்கார்ந்துக்கிட்டான். இப்படி ஒரு 3 நாள் ஓடிருச்சு. சனம் பொங்கி எழுந்து வந்தவனை கிளிச்சுரப்பார்க்க பாபா "ஃப்ரீயா உடுங்க"ன்னாரு.

நாலாவது நாள் அந்த ஆசாமி எந்திரிச்சு பாபாவை வணங்கி "வந்து உங்க சீட்ல உட்காருங்க"ன்னான். பாபாவும் உட்கார்ந்தாரு. வந்தவர் பாபாவுக்கு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட்டாரு.

இந்த உபகதைக்கும் நம்ம சுந்தரேசன் சாரோட வரவுக்கும் அலம்பலுக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தமிருக்குன்னு நினைச்சாலும் நஷ்டமில்லை. நிற்க.

மெர்ஜென்சிக்கு மிந்தி தமிழ் நாட்டு வந்துரு விதவை பென்சன் தரோம்னு இந்திரா காந்தியை திமுக காரவுக சகட்டு மேனிக்கு பேசினாய்ங்க. எமெர்ஜன்சி சமயம் செமர்த்தியா பொங்கல் வாங்கினாய்ங்க.

அதே எமெர்ஜென்சி பீரியட்ல டி.கே.பரூவான்னு ஒரு பார்ட்டி இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியான்னு ஊத்தி விட்டாரு. அப்பாறம் நடந்த எலக்சன்ல இந்திராவை சனம் ஊத்தி மூடிட்டாய்ங்க.

நாகர் கோவில்ல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு காமராசர் சொன்னாரு எந்திரிக்கவே இல்லை.இதையெல்லாம் ஹிட்ஸ் கணக்கு சொல்லி தாண்டி குதிக்கிற சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை.

நம்ம ஜாதகத்துல ஆறுக்கு எட்டாவது இடம் கடகம் . இங்கனதான் குரு உச்சமா உட்கார்ந்திருக்காரு. குரு சுப கிரகம். நம்ம எதிரிகளுக்கு ரெம்ப டார்ச்சரெல்லாம் கொடுக்க மாட்டாரு.

வில்லன் கெட்டவன்னு வைங்க. அணு அணுவா சித்திரவதை பண்ணுவான்.அப்பாறம்தேன் கொல்லுவான்.

இதுவே வில்லன் ரெம்ப நல்லவன்னு வைங்க.. " டே ..டேய்.. என் கண்ணுக்கு மறைவா கொண்டு போயி ரெம்ப இம்சை -ரத்த சேதம் இல்லாம் பட்டுன்னு முடிச்சுருங்கடான்னு தேன் ஆணை கொடுப்பான்.

அப்படி ஆறுக்கு எட்டுல நின்ன குரு நம்ம எதிரிங்க கதையை முடிச்சுருவாரு. அதுக்காவ நாம நேரத்தை செலவழிக்கிறதா இல்லை.

அதே சமயம் நாம பூனை கணக்கா எலியை ஓடவிட்டு அடிப்பம். அதை பார்த்து அந்த எலி இது சோப்ளாங்கி பூனைன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தா இந்த பூனைக்கு தேன் லாபம்.

இதையெல்லாம் சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை. அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.

கூகுல்ல தேடு கொட்டும்னாரு. இந்தியாவுல லட்சம் சுந்தரேசன் இருப்பான். அல்லா சுந்தரேசனும் ஆஜர். இதுல இந்த வந்தரேசனை எப்படி கேட்ச் பண்றது? வில் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ்?

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..

அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ… நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பால பாடம் இன்னைக்கும் தொடருது. மத்திய புலனாய்வுத்துறை ஆளுங்க நம்ம விலாசத்தை விசாரிக்கிற ரேஞ்சுக்கு ஒரு அரசியல் பதிவும் போட்டிருக்கம்.

Read More