மரணத்தை வெல்ல மரணமே வழி : செவ் தோஷ பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !

நாங்கல்லாம் 1987 லயே காலேஜை விட்டு வெளிய வந்துட்டமா .. இதுல 1986 லருந்தே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டமா அதுலயும் எட்டாங்கிளாஸ் படிக்கறச்சயே படம் வரைஞ்சு கெட்ட பாடங்க எல்லாம் நடத்தின பார்ட்டி நாம. ( ஹி ஹி .. தோஸ்துங்களுக்குத்தேன்.அதும் கடா குட்டிகளுக்கு தேன்) புதுசா எதையாச்சும் மண்டையில ஏத்தனும்னா ரெம்ப கஷ்டமா கீது. பாடம் நடத்தறது ஒரு வித அவுட்லெட்டுதான் இல்லேங்கலை.

புது மேட்டருன்னா அது ஏற்கெனவே நம்ம மைண்டுல ஸ்டோர் ஆகியிருக்கிற மேட்டருக்கு தொடர்ச்சியா இருந்தாகனும் – அல்லது நெஜமாலுமே மன்சங்க வாழ்க்கைய புரட்டி போடற மேட்டரா இருக்கனும் அப்பத்தேன் அது மண்டைக்குள்ளாற போகுது.

அது சரி திடீர்னு ஏன் இந்த புலம்பலுன்னு கேப்பிக சொல்றேன். நம்முது கடகலக்னமாச்சா நாலுல சனி வந்தப்பத்துலருந்தே தாளி எப்படியாச்சும் வீட்டை விட்டு வெளியேறனும். ஊர் ஊரா சுத்திக்கிட்டு வரனும்னு ஆசை வந்துருச்சு. லேப் டாப்பு – டேட்டா கார்டுன்னு புலம்பிக்கிட்டே இருந்தம். ஒன்னும் வேலைக்காகலை.

சமீபத்துல சனி வக்ரமானாரே அப்பம் நம்ம எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா செயலாக ஆரம்பிச்சிருச்சு. என்னென்னமோ நடந்து நேத்திக்கு மவ சென்னையில இருந்து புத்தம் புது லேப் டாப் வாங்கியாந்துட்டா. அது என்னா கம்பெனி என்னா இழவு எதையும் இன்னம் பார்க்கலை.( கேட் வேன்னு ஒரு கம்பெனி இருக்கா? – ஏமாந்துட்டமா? )

நம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் காரரு கிட்டே ஓ.எஸ் போடச்சொல்லி அனுப்பினேன். அவரு யூத்தாச்சா. விண்டோஸ் 7 போட்டு விட்டுட்டாரு. நாம ஆதிகாலத்துலருந்தே எக்ஸ்பி தேன். கொய்யால கலர் கலரா இருக்கே தவிர கண்ணை கட்டுது.

லேப் டாப்லயா இந்த கீ போர்டுல என்னென்னமோ மாற்றம்லாம் செய்து விட்டிருக்காய்ங்க. நெட் கனெக்ட் ஆகி – நாம வழக்கமா பார்க்கிற சைட்டுங்களை பார்த்தாலும் கொஞ்சம் போல பழகும்னு பார்த்தா ரெம்பவே பே பே காட்டிருச்சு.

அப்பாறம் பொட்டு வச்ச பிறவு ஸ்பார்க் ஆகி லேப் டாப்போட கொடுத்திருந்த டிவிடியில இருந்த ஹார்ட் வேர்ஸ் எல்லாத்தையும் கொத்தா போட்ட பிறவு “கட்டின பசு” (சுஜாதா?)

பொஞ்சாதி முறுக்கிக்கிட்டா கூட சமாளிச்சுரலாம். இந்த கம்ப்யூட்டர் சமாசாரம் மட்டும் லொள்ளு பண்ணா செமை கடுப்பாயிருது.

( ஸ் ..அப்பாடா பந்தா பண்ணாம நாம லேப் டாப் வாங்கின கதைய சொல்லியாச்சு )

இப்பம் பதிவுக்கு போயிரலாமா/

நேத்திக்கு செவ் 7 ல இருந்து பண்ற அழும்பையெல்லாம் சொன்னேன்.அதுக்கு பரிகாரமும் ஓரளவுக்கு சொல்லியாச்சு.

இன்னைக்கு செவ் 8 ல் என்னா மாதிரி அலப்பறை கொடுப்பாருன்னு பார்ப்போம். லேடீஸ் ஃபர்ஸ்ட். இவிகளுக்கு 8 மாங்கல்ய ஸ்தானமாச்சா (அதே நேரம் ஆயுள் ஸ்தானமாவும் ஒர்க் அவுட் ஆகுதுங்கோ. என்னய்யா குழப்பறேன்னு கடுப்பாயிராதிங்க. வேணம்னா இதே வலைதளத்துல ஆண் பெண் வித்யாசம்னு ஒரு தொடர் எழுதியிருக்கேன். அதுல எட்டாம் பாவத்தை தேடி படிங்க புரியும்).

ஆக பெண் ஜாதகத்துல எட்டுல செவ் இருந்தா அவிக உசுரை மட்டுமல்லாது – அவிக ஆத்துக்காரர் உசுரையும் காப்பாத்தியாகனும். 8 = மரணம் ; செவ் = உடனடி மரணம். தெரியும்ல. காதலில் ரெண்டு வகை சைவம் ஒன்னு அசைவம் ஒன்னுன்னு ஒரு பாட்டு இருக்குது.

ஆனால் மரணத்துல மட்டும் அரை டஜனுக்கு மேலான ரகம் இருக்கு. இந்த மேட்டரை ஏற்கெனவே ஒரு தாட்டி செமை ஓட்டு ஓட்டினாப்ல ஞா. இருந்தாலும் புதுவரவுகளுக்காக சுருக்கமா ரிப்பீட்டு.

மரணத்தின் வகைகள்:

1.மன ரீதியிலான மரணம் 2.பண ரீதியிலான மரணம் 3.சமூக ரீதியிலான மரணம் 4.அரசியல் ரீதியிலான மரணம் 5.குடும்ப ரீதியிலான மரணம்.

1.மன ரீதியிலான மரணம்:

இதை எதிராளிகளின் துரோகங்கள் மட்டுமல்ல – நாம செய்ற குடி கெடுக்கும் வேலைகளும் தரலாம். ஒருவன் அடுத்தவனை கொல்லும் போது அவனிலும் ஏதோ செத்துப்போகிறது.

2.பண ரீதியிலான மரணம் :

நம்ம ஊர்ல ஒரு பார்ட்டி . ஏழை பாழைங்க கிட்ட தினசரி அஞ்சு பத்து சேகரிச்சு 100 ஆவது நாள் அதுக்கு உரிய மதிப்பிலான பொருட்களை தருவாரு. தம்மிடம் புரளும் ஊர் பணத்தை பெருக்க ஒரு தடவை ரியல் எஸ்டேட்ல போட்டுட்டாரு. (அது அந்தக்காலமுங்கோ) பணம் டம்ப் ஆயிருச்சு. அதுக்கப்பாறம் எத்தனை குரு -எத்தனை சனி மாறினாலும் மாற்றம்? ஊஹூம்.. நவகிரக தோசங்களுக்கும் அது அல்ட்டிமேட் பரிகாரமாயிருச்சு போல.

கடேசி காலத்துல ஊர் பணத்துல வாங்கி வச்சிருந்த நிலத்தை காசாக்கி அல்லாருக்கும் கொடுத்துட்டுத்தான் போனாரு மன்சன் இல்லேங்கலை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அன்னாருக்கு நிகழ்ந்தது பண ரீதியிலான மரணம் .

3.சமூக ரீதியிலான மரணம்

ஒரு அரசியல்வாதிக்கும் -பத்திரிக்கையாளனுக்கும் இடையில என்ன மாதிரி உறவு இருக்கலாம்னு ஒங்க மைண்டுல ஒரு ஐடியா இருக்கலாம்.

ஆனால் ஒரு பார்ட்டி தலீவரு வெளி நாடு போனா தன் பொஞ்சாதியோட கிளம்பிருவாரு. அவிக தங்கற கெஸ்ட் ஹவுஸ்ல வாஸ்து விவகாரமா இருக்குமுங்கோ.. தலீவர் ரூமுக்கும் – பத்திரிக்கையாளர் ரூமுக்கும் இடையில ஒரே ஒரு கதவு இருக்கும். அதை அவிகவிக தாள் போட்டுக்க வேண்டியதுதேன்.

ராத்திரியில .. அந்த கச்சாடால்லாம் நமக்கெதுக்கு. தலீவரு என்னவோ கலக்கிட்டு போய் சேர்ந்துட்டாரு. அவரு ரேஞ்சு அப்படி. ஆனால் அந்த பத்திரிக்கையாளனோட சமூகம்? அதை பொருத்தவரை ஹி ஈஸ் டெட்.அப்படித்தானே

4.அரசியல் ரீதியிலான மரணம்

கலைஞரு தீர்காயுசா இருக்கிறது சிலருக்கு இமிசை .சிலருக்கு ஆறுதல் .ஆனால் இந்த மேட்டர்ல ஒரு சொலவடை இருக்கு .அருத்தம் சொல்லமாட்டேன் “பாபி சிராயு”

ஈழத்துல தமிழின படுகொலை நடந்தப்போ தலைவரு அடக்கி வாசிச்சு ..கொய்யால வயசுல இருந்தப்போ வீணா உ.வ பட்டு ரெண்டு தாட்டி ஆட்சியை இழந்தோம் இப்பம் முதிர்ச்சி வந்துருச்சு போலன்னு தன்னை தானே பாராட்டி கூட இருக்கலாம்.

ஆனால் அது அரசியல் ரீதியிலான மரணம்னு அரசியல் அரிச்சுவடி படிச்சவன் கூட சொல்லிருவான். அப்படி அவரு பொலிட்டிக்கலா டிக்கெட் போட்டுட்டதாலதான் தீர்காயுசா இருக்காரு.

5.குடும்ப ரீதியிலான மரணம்.

பொஞ்சாதி செத்து பிழைச்சு பெத்து போட்டு கிழிஞ்ச நாரா படுத்து கிடக்கா. வீட்டுக்காரரு ஒரு நாலணா பார்ட்டிய தள்ளிட்டு வந்து தெரு நடையில வேலை எடுக்கிறாரு. இதை பார்த்துட்டு அந்த மகராசி நல்ல தங்காள் கணக்கா எல்லா குழந்தைகளையும் இழுத்துக்கிட்டு பச்சை மண்ணை தூக்கிட்டு கிணத்தை தேடி போறா. நல்ல வேளையா சாகலை தான்.

ஆனால் அந்த ஆசாமிய பொருத்தவரைக்கு அந்தாளு குடும்ப ரீதியா செத்து போயிட்டாரு. பிள்ளைங்க தலை எடுத்து அந்தாளுக்கு உட்ட ரவுசை எல்லாம் சொன்னா சிரிச்சு சிரிச்சு வவுறே புண்ணா போவும்.
அதெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல ..

இது மட்டுமில்லிங்கனா மரணமே போன்றவைன்னு ஒரு பட்டியல் இருக்கு. அதை கீழே பாருங்க..

1.சிறைப்படுதல் 2.தலைமறைவாதல் 3. நிராகரிப்பு 4.பிரிவு 5.அங்கீகாரமின்மை 6.இருட்டு 7. நெருங்கியவர்களை விட்டு வெகு தொலைவில் இருத்தல்

மேற்படி பட்டியல்ல ஏதேனும் ஒன்னு ரெண்டை வாலண்டியரா சூஸ் பண்ணிக்கிட்டு ஓன் பண்ணிக்கிட்டா போதும் செவ்வாய்க்கு டேக்கா கொடுத்துரலாம். இப்பயும் எரியாதவுக நாளை வரை காத்திருங்க.விளக்கி சொல்றேன்.

ஓகேவா ..உடுங்க ஜூட்டு ..

கணவன்/மனைவியை கொல்பவர் யார்: 2

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு போட வேண்டிய பதிவை நிர்வாண உண்மைகள் வலைப்பூவில் போட்டிருக்கேன். பதிவையும்- ஏன் இந்த புரட்சிங்கறதுக்குண்டான காரணங்களையும் இங்கே க்ளிக் பண்ணி படிச்சுருங்க. இந்த சுத்தல் இன்னைக்கு ஒரு நா மட்டும் தேன்.

நாளையிலருந்து புதிய பதிவுகள் இதே வலைதளத்தில் வெளியாகும். உடுங்க ஜூட்டு

காசை கரியாக்கும் ஜாதகர்கள்

அண்ணே வணக்கம்ணே !
ஆராச்சும் காசு பணத்தை தாராளமா செலவழிச்சா “காசை கரியாக்கிறான்”னு சொல்வாய்ங்க. நெஜமாலுமே காசை கரியாக்கிறவுகன்னா அது செவ்வாயை தனபாவத்தில் கொண்ட ஜாதகர்கள் தான். (செவ் லக்னாத் யோக காரகனாகவோ – சுபனாகவோ இருந்தால் அவிக செலவழிக்கிற வேகத்துக்கு காசு வந்துக்கிட்டே இருக்கும். ஒரு வேளை செவ் லக்னாத் பாபி,மாரகனா இருந்தா ? கதை கந்தலுதேன்)

நவகிரகங்களுடன் பேட்டி தொடர் – செவ் தோஷம்ங்கற வரிசையில இன்னைக்கு செவ் இரண்டாமிடத்தில் உள்ளவர்களுக்கான பரிகாரங்களை இன்னை தரப்போறோம். ஆட்டத்துக்கு ரெடியா?

ஜாதகம் இல்லாதவுக:

ஜாதகம் இல்லாதவுக கீழே தந்திருக்கிற பலனை படிங்க. இது உங்களுக்கு பொருந்தினா உங்க ஜாதகத்துல செவ் 2 ஆமிடத்துல இருக்காரு. கு.ப அவருதேன் தன பாவாதிபதி அல்லது அவரு தனபாவத்தை பார்க்கிறாருன்னு ருசுப்படுத்திக்கலாம். கடைசியில கொடுத்திருக்கிற பரிகாரங்களை ஃபாலோ பண்ணலாம்.பரிகாரங்களை ஆரம்பிச்ச மொத 9 நாட்கள்ள கெட்டபலன் எக்கச்சக்கமா எகிறிச்சுக்குன்னா உங்க அசெஸ்மென்ட் கரெக்ட் – நீங்க ஆரம்பிச்ச பரிகாரம் பலன் கொடுக்க போகுதுன்னு அருத்தம்.

கொஞ்சம் வில் பவரோட பரிகாரத்தை தொடருங்க. நல்ல பலன் கிடைக்கும்.

மொதல்ல பலன்:
இது தனபாவம்ங்கறதால காசை கரியாக்குவாய்ங்க. அதுவும் போட்டி,விவகாரம்,போலீஸ் ஸ்டேஷன்,அடி தடின்னா வெல்லம். மேலும் செவ் காரகம் கொண்ட துறைகளில் நட்டப்படுவாய்ங்க. உ.ம் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,எலக்ட்ரானிக்ஸ். சகோதரர்களோட விவகாரம் இருக்கும்.கொடுக்கல் வாங்கல்ல வில்லங்கம் வரும். யூத்தோட நிறைய சகவாசம் வச்சுப்பாய்ங்க.அவிகளாலயும் ஆப்பு.

இது வாக்குஸ்தாங்கறதால இவிக பேச்சே யுத்தத்துக்கான அழைப்பு போல இருக்கும். வாய்,தொண்டை பகுதிகளில் ரணங்கள் ஏற்படலாம்,

இது குடும்ப ஸ்தானங்கறதால குடும்ப செலவுகள் பிச்சுக்கிட்டு போகும்.விபத்துகள்,ஆப்பரேஷன்ஸுக்கு செலவழிக்க வேண்டி வரலாம். இதனாலயே குடும்பத்துல அடிக்கடி கலகம் ஏற்படலாம். மாமிச பிரியர்களா இருப்பாய்ங்க. இதன் விளைவாக பி.பி,அல்சர்,பைல்ஸ் இத்யாதியும் வரலாம்.

இது நேத்திர ஸ்தானங்கறதால அதி உஷ்ணம் காரணமாய் . கண்கள் சிவந்திருக்கலாம். கண்ணில் அ கண்ணருகி அடிபடலாம்.

எட்டை பார்க்கிறதால:
மேற்படி பிரச்சினைகள் உசுருக்கே உலை வைக்கலாம். அடி தடி கொலையில கூட முடியலாம். சில சமயம் தற்கொலைக்கும் முயற்சிக்கலாம்.

நீங்க ஒரு பெண்ணாக இருந்தால் இது வைதவ்யத்தை கூட தரலாம். கணவரை போட்டு தள்ளிர்ர பெண்கள் ஜாதகத்துல இது போன்ற அமைப்பை பார்த்திருக்கேன். லக்ன செவ்வாய்க்கு செய்துக்க வேண்டிய பரிகாரங்களை உங்க கணவர் செய்வது நல்லது. ராம நாமம் ஜெபிக்க சொல்லுங்க. சனி /செவ் கிழமை ஆஞ்சனேயர் கோவிலுக்கு போக சொல்லுங்க.

நீங்களும் லக்ன செவ்வாய்க்கான பரிகாரங்களை செய்வது நல்லது.

5 ஐ பார்ப்பதால் :
அபார்ஷன்,மிஸ் கேரி, குழந்தைங்க இல்லாம இருக்கிறது ,குழந்தைகளுக்கு புண்,ரணம்,கட்டி ஜாதகருக்கும் வாரிசுகளுக்கும் எதிரிகள் . அதி உஷ்ணம்,மின்சாரம்,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகளால் ஆபத்து. வாரிசுகள் கோபக்காரர்களாக இருக்கலாம்.அவமானங்கள் ஏற்படலாம்.

9 ஐ பார்ப்பதால்:
அப்பாவுக்கு மேற்சொன்ன பிரச்சினைகள் வரலாம். கூசாம சொத்தை அடகு வைப்பாய்ங்க.பாதி விலைக்கும் விப்பாய்ங்க. வித்து வந்த காசையும் கரியாக்கிருவாய்ங்க..

இதுக்கெல்லலாம் என்னதான் பரிகாரம்?

இரண்டில் நின்றமைக்கு:

1.பிரவுன் நிற கூலிங்கிளாஸ் அணியவும்
2.கழுத்தில் செம்பு சங்கிலியில் பன்னிரு கையனின் டாலர் (இதுவும் செம்பா இருந்தா விசேஷம்)
3.முருகனின் மூல மந்திரத்தை வாய் விட்டு சொல்லுங்க
4.ராமாயணம்,பாரத நூல்களில் உள்ள யுத்த காண்டங்களை வாய் விட்டு படிங்க.
5.அக்னி முகமா தொழில் செய்வோருக்கு ( நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு ), மேஜர் ஆப்பரேஷன்,ஆக்சிடென்ட் நடந்தவுகளுக்கு ,தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு , அங்கம் அறுபட்டவர்களுக்கு முடிந்த உதவியை செய்யவும்.
6.முருகன் கோவில்கள், அனாதை குழந்தைகளுக்கு ( சிறார் = செவ்) எரியும் பொருட்களை தானம் செய்யவும்.

5 ஐ பார்ப்பதற்கு:

பன்னிரு கையனின் உருவத்தை தியானிக்கவும் – மார்ஷல் ஆர்ட்ஸ் தொடர்பான நூல்கள் படிக்கவும் -டிவிடி பார்க்கவும்.

சமைக்க கற்றுக்கொள்ளவும் -சமைக்கவும் -முக்கியமாய் மாமிசம் (ஆனா நீங்க சாப்பிடாதிங்க)

குழந்தைகளுக்கு முருகன் தொடர்பான பெயர் வைக்கவும்.

அவர்களை ஸ்போர்ட்ஸ்,மார்ஷல் ஆர்ட்ஸில் ஊக்குவிக்கவும்.

லக்ன செவ்வாய்க்கு சொல்லப்பட்ட பரிகாரங்களை செய்விக்கவும்.

9 ஐ பார்ப்பதற்கு:

முதலீடு ,சேமிப்பு தொடர்பான டாக்குமென்ட்ஸ் வைக்க ப்ரவுன் கலர் ஃபைல்/பேக் உபயோகிக்கவும்.அதில் பன்னிருகையனின் படம் .

தூர பயணம் செல்லும் போது ப்ரவுன் நிறை ஆடை,அணிகலன் அதிகம் உபயோகிக்கவும். தந்தை (இருந்தால்) அவர் லக்ன செவ்வாய்க்கு சொல்லப்பட்ட பரிகாரங்களை ஃபாலோ பண்ணனும்.

அப்பா வழியில் வந்த வீடு ,கடை இருந்தால் அதன் கதவுகளுக்கு ப்ரவுன் கலர் பெய்ண்ட். வாசற்காலில் வேல் உருவம் பதிக்கவும்.

தூர தேச தொடர்புகளுக்கு ப்ரவுன் நிற கவர் /ப்ரவுன் நிறத்தில் அச்சடிக்கப்பட்ட லெட்டர் ஹெட் உபயோகிக்கவும். அதில் பன்னிரு கையன் உருவம் அ வேல் உருவம் அச்சிட்டால் நல்லது.

மெயில் உபயோகிப்பவர்கள் செட்டிங்ஸ்ல போயி ப்ரவுன் நிறத்துக்கு மாறலாம். எழுத்துக்கள் கூட ப்ரவுன் நிறத்தில் இருந்தால் நல்லது.

தொப்புளில் அதிர்ஷ்ட கல்

அண்ணே வணக்கம்ணே !

சனிக்கிழமை செவ் லக்னத்துல இருந்து என்ன பண்ணாரு – அதுக்கு நாம என்ன விதமான பரிகாரங்களை ப்ரிஸ்க்ரைப் பண்ணினோம்னு சொல்ல ஆரம்பிச்சேன். லக்னத்துல உள்ள செவ் 4,7.8 ஆமிடங்களை பார்ப்பாரே. இதுல 4 ஆமிடத்து மேட்டருக்கு பரிகாரம் ஓவர்.

இன்னைக்கு 7 ஆமிடத்து மேட்டருக்கு பரிகாரத்தை பார்ப்போம்.

7ங்கறது தொப்புளை காட்டும். ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்/ஹப்பியை காட்டும். இந்த இடத்தை செவ் பார்த்தா என்ன ஆகும்னு உங்களுக்குள்ள ஒரு ஐடியா வந்துரனும். வரலின்னா பழைய பதிவுகளையெல்லாம் புரட்டுங்க.

லக்னத்தில் நின்று 7 ஆமிடத்தை பார்க்கும் செவ் ஜாதகரையும் , காதலர்/கணவரையும் ஒரு வழி ஆக்கிருவாரு. இதுக்கு பரிகாரம் பவழம். 7 ஆமிடம் தொப்புளை காட்டுமிடம். ஆகவே லோஹிப் கட்டும் தாய்க்குலங்கள் தொப்புளில் பவழம் பதித்த ப்ரஸ்ஸிங் டைப் ஜுவெல் அணியலாம்.

இதே போல சூரியன் இருந்தால் கெம்பு , சந்திரன் இருந்தால் முத்து, ராகு இருந்தால் கோமேதகம், சனி இருந்தால் கரு நீலம், கேது இருந்தால் வைடூரியம் பதித்த நகை அணியலாம். தோஷம் குறையும்.

இன்னாங்கடா இது .. நம்ம சீனா மூனா படக்குன்னு தொப்புளுக்கு போயிட்டாருன்னு ஒரு கேள்வி பிறக்குதில்லை. சொல்றேன்.

ஜோதிடம் 360 புஸ்தவத்தை போடற சமயம் அலெக்ஸாவுல 25 ஆயிரத்துல இருந்த நாம லட்சத்து 94 ஆயிரத்துக்கு போயி மறுபடி 44 ஆயிரம் வரை இறங்கி வந்தம். அப்பாறம் என்ன ஆச்சோ தெரீலை நேத்திக்கு மறுபடி 46 க்கு போயிருக்கு. ஹிட் ,ரேங்கை பிடிக்கனும்னா கில்மா,பலான ங்கறதெல்லாம் மந்திர சொற்கள். இதுல தொப்புளை சேர்த்திருக்கன்.

ஹிட்ஸ் பத்தியோ ரேங்க் பத்தியோ பேசினா ” கடமையை செய் பலனை எதிர்பாராதே” ன்னு கீதாசாரம்லாம் சொல்றாய்ங்க. நம்ம பாலிசி என்னடான்னா கடமைய செய்யனும் -பலனை எதிர்பார்க்கனும் -ஆனால் அந்த பலனால நம்ம லைஃப்ல ஒரு ம..னாவும் மாறாதுங்கறதை உணர்ந்திருக்கனும். இன்னம் சொல்லப்போனா கொஞ்சம் காம்ப்ளிக்கேட் ஆயிருங்கறதை உணர்ந்திருக்கனும்.

ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாயி நக்கித்தான் குடிக்கனுமாம். அதை போல கடமை செய்யப்படலாம் -பலனும் எதிர்ப்படலாம் -ஆனால் அந்த பலனை அனுபவிக்க ஒரு கொடுப்பினை வேணம்ல.

அப்படி ஒரு கொடுப்பினை நமக்கு இருந்தா வேட்டிய வரிஞ்சு கட்டி – நாக்கு தள்ள கடமைய செய்ய வேண்டியதுமில்லை – பலனை எதிர்ப்பார்க்க வேண்டியதுமில்லை லைஃப் அதும்பாட்டுக்கு மாறிக்கிட்டே இருக்கும்.

எப்போன்னு ஞா இல்லை. வலையுலகத்துல நாம தீவிரமா இருந்த சமயம் ஒரு பன்னாடை ” ஆளில்லாத டீக்கடையில ஆருக்கு டீ ஆத்தறே”ன்னு கேட்டுருச்சு. அன்னையிலருந்து தேன் இந்த ஹிட்ஸு, பேஜ் வ்யூஸ்,அலெக்சா மேல எல்லாம் ஒரு கண்ணு வச்சோம்.

போட்டிக்கு அதிபதி செவ்வாய் . ( பெட்டிங் = ராகு ). இந்த செவ் தோஷ பரிகாரம் முடியறதுக்குள்ளயே அலெக்சாவுல 25 ஆயிரத்தை பிடிச்சாகனும். பிடிச்சுருவம்ல.

செரிங்னா .. செவ் லக்னத்துலருந்து 7 ஐ பார்த்தா செய்ய வேண்டிய பரிகாரங்களை இப்ப பார்த்துருவம்.
லக்ன செவ்வாய்க்கு சொன்ன பரிகாரங்களை ரெண்டு பேரும் செய்யனும்.

1. புருசன் ,பொஞ்சாதி ரெண்டு பேரும் செமை யூத்தா மாறனும் – கிள்ளி எடுக்க சதை இல்லாம பார்த்துக்கனும்.

2.வீடே போலீஸ் அகாடமி மாதிரி மாறனும் -தம்பதி கமாண்டோ கணக்கா மாறனும் ஜிம் , புல் ஒர்க்கர் Etc. வாய்ப்பு உள்ளவுக கராத்தே,ஜூடோ மாதிரி தற்காப்பு கலைகள் கத்துக்கலாம்.

3.ராமாயணம் ,பாரதம் மாதிரி புக்ஸ்ல வர்ர யுத்த காண்டங்களை நோண்டி நுங்கெடுக்கனும். -புதிய தலைமுறையில இறையன்பு சமீபத்துல ஒரு தொடர் எழுதினாரு (போர் தொழில் பழகு?) அதையும் விடாதிங்க.

4.போர் பின்னணியில் உருவான படங்களை டிவிடியில பாருங்க

5. ஸ்டாம்ப் கலெக்சன் மாதிரி ஆயுதங்களோட விவரங்களை -படங்களை சேகரிங்க.

6.பெட் ரூம்ல ஹிஸ்டாரிக்கல் மூவில வர்ர மாதிரி கேடயம் -வாள் வச்சிருங்க. ( அல்லது ஆயுதம் தரித்த ஆண் பெண்ணின் ஆளுயர படம் போஸ்டர்)

7.ஃபேமிலி டாக்டரோட அனுமதியுடன் வருசத்துக்கொரு தரம் ரத்ததானம். ஆறு மாசத்துக்கொருதரம் ப்ளட் டெஸ்ட்.

8.வாரண்டி,கியாரண்டி,ஐ.எஸ்.ஐ இல்லாத எலக்ட்ரிக்கல் சாமான் வாங்கவே வாங்காதிங்க.

9.பவர் கட் சமயம் மெழுகு வர்த்தி ஏத்தறது -மெழுகு வர்த்தி ஊர்வலத்துல கலந்துக்கறதெல்லாம் வேணா.

10.கீ செயின்ல ஏதாச்சும் ஆயுதம்

11.மாசத்துல ஒரு தாட்டி மலை மேல் இருக்கக்கூடிய முருகனை தரிசனம் செய்யவும்

12.வீட்லயே சின்னதா வேல் வச்சுக்கிட்டு வேல் பூஜை..

இந்த 12 பரிகாரங்களை ஒரு ஒன்னரை மாசம் தொடர்ந்து செய்து பாருங்க. நிச்சயமா மாற்றம் தெரியும். தெரியலின்னா உங்க ஜாதகத்துல செவ் ரெம்ப கெட்டிருக்காருன்னு அருத்தம். இன்னம் கொஞ்சம் காட்டமான பரிகாரங்கள் தேவை. அவையும் கைவசமிருக்கு . ஒரு மெயில் தட்டிவிடுங்க.சொல்றேன்..

செவ் தோஷம் : பரிகாரங்கள் :1

null

அண்ணே வணக்கம்ணே !

நம்முது கடகலக்னம் -சந்திரன் 21/4 நாளைக்கொரு தாட்டி மாறிர்ரதால ரெண்டே கால் நாளைக்கொருதாட்டி ஃபார்மெட் அடிச்ச சிஸ்டம் மாதிரி ஃப்ரெஷ் ஆயிருது. 14 நாள் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வர்ரதும், அடுத்த 14 நாள் எல்லாம் வளர்ந்துக்கிட்டே வர்ரதும் த்ரில்லா தான் இருக்கு. புதுபுது யோசனைகள், புதிய புதிய உத்திகள்னு எல்லாமே செமை த்ரில்லுதான்.

ஆனால் இதுல ஒரு பெரிய மைனஸ் பாய்ண்ட்டும் இருக்கு. 1989 லருந்து கிரகங்களை வாட்ச் பண்ணிட்டிருக்கம். இது 2013 . 20+3 வருசங்களா க்ளோசா வாட்ச் பண்ணிட்டிருக்கம். அதே போல நம்ம சிந்தனைகள் ,உத்திகளையும் கவனிச்சுட்டு வரும்.

உங்களுக்கு வேணம்னா நம்ம சிந்தனை -உத்திகள் புதுசு புதுசா இருக்கலாம்.ஆனால் இதையெல்லாம் ப்ரிவ்யூலருந்து பார்க்கிற எனக்கு எல்லாமே பழசு. ரெம்ப போர் அடிக்குது.கடவுளுடைய அருள் இருந்து -ஒரு நல்ல டீம் செட் ஆயிட்டா நம்ம மண்டைங்கற ஹார்ட் டிஸ்கை ஒரு கோஸ்ட் சாஃப்ட் வேர் போட்டு க்ளோனிங் பண்ண கணக்கா எல்லா சரக்கையும் வெளிய எடுத்துரனும்.

இந்த ப்ராசஸ் விடியல் 3 அ 4 க்கு ஸ்டார்ட்.காலை 10 க்கு க்ளோஸ்.காலை 10 டு மதியம் 1 உடலால உழைக்கனும். மதியம் 1 டு மாலை 6 தூக்கம். மாலை 6 முதல் நள்ளிரவு 11 அ 12 வரை க்ளோனிங் ப்ராசஸ். பிறகு தூக்கம். இந்த டைம் டேபிள் படி ஒரு 90 நாள் ஒர்க் அவுட் பண்ணிட்டா கு.ப ஒரு மினி லைப்ரரி ரேஞ்சுக்கு மெட்டீரியல் ப்ரிப்பேர் ஆயிரும். ஒரு ஆயிரம் புஸ்தவம் / அதே மெட்டீரியலை அடிப்படையா வச்சு ஒரு ஆயிரம் டிவிடி.

பிரதமர் /ஜனாதிபதி கணக்கா இதையெல்லாம் நாட்டுக்கு அர்ப்பணிச்சுட்டு அண்டர் கிரவுண்டுக்கு போயிரனும். புது பெயர் -புது வாழ்க்கை. தாளி சாக்கடை அள்ளினாலும் பிரச்சினை இல்லை. அப்பத்தேன் இந்த ஆஸ்மாவுக்கு அடச்சீ..ஆத்மாவுக்கு நிம்மதி. ஹூம் பார்ப்போம் ..

இன்னையிலருந்தாச்சும் செவ் தோஷத்துக்கு பரிகாரம் தந்தே ஆகனும். சின்ன சின்ன கட் ஷாட்ஸ் /மாண்டேஜ்களோட இதை தரேன்.

ஷாட் :1

ஒரு பெண் குழந்தை . நம்ம மொத விசிட்டின் போது வயசு 13 . கட்டி வரும். பழுக்கும். டாக்டர் சீவிட்டு மருந்து போட்டு ஆனுப்பிருவாரு. மறு முறை டாக்டர் கிட்டே போறச்ச ஏற்கெனவே கட்டி வந்த அதே ஸ்பாட்ல மறு படி ஒரு கட்டி புதுசா கிளம்பும்..

இந்த கேஸ்ல நாம பரிகாரம்லாம் கொடுத்தோம். ஒர்க் அவுட் ஆச்சு. கட்டிகள் வர்ரது நின்னுருச்சு. அடுத்த அஞ்சுவருசத்துல ஷி வாஸ் ஹேல் அண்ட் ஹெல்த்தி. அந்த நேரம் பார்த்து அப்பனுக்கு கண்ணாலம் பண்ணி பார்க்கிற ஆசை வந்துருச்சு.

நாம சின்சியரா சொன்னோம். “யோவ் வேணாய்யா.. கட்டி கிளம்பினாலும் பரவாயில்லைன்னு விட்டிருந்தா இப்பம் கண்ணாலம் செய்திருக்கலாம். அதுக்கு பரிகாரம் வேற செய்து செவ்வாயை சீண்டி விட்டுட்டம். கு.ப இன்னம் ஒரு 10 வருசம் போவட்டும். ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிரப்போவுதுன்னு சொன்னோம். கேட்கலை. கண்ணாலம் கட்டினாய்ங்க.

மொத இரவுல அது என்ன ஆச்சோ ஏது ஆச்சோ . மறு . விடிஞ்சு விடியாத சமயத்துலயே “உங்க பொண்ணு ரயில்வே ஸ்டேஷன் பெஞ்ச்ல பித்து பிடிச்சாப்ல உட்கார்ந்திருக்கு. ஒடனே வாங்கன்னு மெசேஜ்.

அந்த கொளந்தை நார்மல் ஸ்டேஜுக்கு வரதுக்கு ஏழெட்டு மாசம் ஆயிருச்சு. அதுக்கப்பாறம் அவிக அம்மாவை கூட வச்சு பேச வச்சு -மேட்டர் வாங்கி – பரிகாரம் செய்து -பஞ்சாயத்து நடந்து நார்மல் லைஃபுக்கு வரதுக்கு சரிய்யா ரெண்டரை வருசம் ஆச்சு.

பாடம்:
தோஷம் கொடுக்கிற எஃபெக்டை விட அந்த தோஷத்துக்கு நாம செய்யற பரிகாரம் கொடுக்கிற எஃபெக்ட் எனாரமஸ். அதுலயும் நம்ம பரிகாரம் தோஷத்தை ஸ்மாஷ் பண்ணிருச்சு – பாடி மைண்டு நார்மல் ஸ்டேஜுகு வந்துருச்சுன்னு நினைச்சு “எல்லாத்துக்கும் ஆசைப்பட்டா’ நெலமை ரெம்ப மோசமாயிருது. இந்த ஸ்டேஜ்ல ரெமிடிஸ் தர்ரதும் ரெம்ப கஷ்டம் .அதை ஃபாலோ பண்றதும் ரெம்ப கஷ்டம்.

ரெம்பவே டேமேஜ் ஆகி லக்னத்துல நின்னு நாறடிச்சிட்டிருந்த செவ்வாய்க்கு மொத ஸ்டேஜ்ல நாம கொடுத்த பரிகாரங்கள்:

லக்னத்துல நின்னதுக்கு:

1.உடல் ரீதியான உஷ்ணம் குறைய

ராத்திரியில ஏழரை எட்டுக்கெல்லாம் சாப்டு முடிச்சு – எட்டரை ஒன்பதுக்கெல்லாம் படுக்கைக்கு போயிர்ரது -காலை எந்திரிச்சதும்- வெறும் வயித்துல இளஞ்சூடான வென்னீர் குடிக்கிறது – இடையில ஒரு தம்ளர் க்ளுக்கோஸ் – கான்சிட்டிபேஷன் இல்லாம பார்த்துக்கறது – காலை எழுந்ததும் ஸ்கிப்பிங் – – சமையலுக்கு நல்லெண்ணெய் –

சனிக்கிழமை நல்லெண்ணை தேய்ச்சு குளியல் – தினசரி தலைக்கு தேங்காய் எண்ணெய் – ஹாட் வாட்டரையே குடிக்கிறது – அதிக குடிக்கிறது – விடியல்ல பழையது – மதியம் காரம்,புளி,மசாலா குறைச்சு ஃபைபர் அதிகமா இருக்கக்கூடிய சீக்கிரமா டைஜஸ்ட் ஆகக்கூடிய உணவுகள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய காய் கறிகளை அவாய்ட் பண்றது (செவ் =பூமிகாரகன்) – ஆட்டு,கோழி மாமிசத்துக்கு தடை.

நீர் சத்து அதிகம் உள்ள காய்களை சேர்த்துக்கறது – சாப்பாட்ல கட்டாயம் மோர் -நெய் – தினசரி அம்மாவுக்கு சமையல்ல உதவறது -கேஸ் ஸ்டவ் துடைக்கிறது -மிக்ஸி,கிரைண்டர்,ஃபிரிட்ஜ் மாதிரி எலக்ட்ரிக்கல் உபகரணங்களை மெயின்டெய்ன் பண்றது – மாலை மறுபடி ஸ்கிப்பிங் – ராத்திரியில ஒரு தம்ளர் பால் -வாழைப்பழம். கழுத்துல ஏதாவது ஒரு ஆயுத உருவம் பொறித்த டாலர். பிரவுன் நிற ஆடை அணிகலன் அதிகம் உபயோகிக்கிறது. வாரத்துல ஒரு நாள் எனிமா நேச்சர் க்யூர் முறைப்படி உண்ணாவிரதம்.

2.ரத்த சுத்தி+ ரத்த விருத்திக்கு:

ஸ்கிப்பிங் சமயத்துலயே – இடையில கிடைக்கிற கேப்ல – நுரையீரலின் அடி வரை ப்ரீத் பண்றது – கேரட் ,பீட் ரூட் மாதிரி சிகப்பு நிற காய்களை அதிகம் சேர்த்துக்கறது. இன்னம் காய்ந்த திராட்சை ,தேன் கலந்த வென்னீர் இப்படி பல விஷயங்கள்.

3.கோபம் குறைய :
தேவ சேனாதிபதியான முருகனை தியானம் பண்றது அவர் உருவத்தை கற்பனை பண்றது ( 12 கையிலயும் ஆயுதம் ) முருகன் மூல மந்திரத்தை சதா சர்வ காலம் ஜபிச்சிட்டே இருக்கிறது.

முருகன் மூல மந்திரம்:

ஓம் ஸௌம் ஸரஹணபவ ஸ்ரீம், ஹ்ரீம்,க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ ..

கோபம் வரும்போது “ஹூ” மந்திரம் அல்லது “ஹூம்” என்ற சண்டி மந்திரத்தை ஜெபிக்கிரது.

நாலை பார்க்கிறதுக்கு:

1.தாய்க்கு தந்த பரிகாரம்:

கொய்யால ..பொண்ணுக்கு தோஷம்னா தாய்க்கு என்னய்யா பரிகாரம்னு கேப்பிக சொல்றேன்.என்னதான் ஆண் பெண் சமம் , பெண்ணியம்,பெண் சுதந்திரம்னு நாம பேசினாலும் பேசிக்கலா அவிக வீக்கர் செக்ஸ் அவிக பாடி ,மைண்டு எல்லாமே ரெசிப்டிவ். ( நோய்கள் ,ஆவிகள்னு எல்லாத்துக்கும் வெல்கம்னு ஒரு பேனர் கட்டி தொங்க விடாத குறை).

இதனால ஒரே ஜியாக்ரஃபில இருக்கிற பெண்களோட உடல் சீக்கிரமா சிங்க்கரைன்ஸ் ஆயிருது.(ஒத்திசைவு?) லேடீஸ் ஹாஸ்டல்ல ஒரே அறையில தங்கற பெண்களோட மென்ஸ்ட்ருவல் டேட்ஸ் கூட ஒன்னேவா மாறிருதாம். மேலும் செவ் 4 ஐ பார்க்கிறார். 4 ன்னா தாய். அதனாலதேன் தாய்க்கு பரிகாரம்.

பெண்ணுக்கு சொன்ன எல்லா டிப்ஸையும் தாயும் ஃபாலோ பண்றது.

2. வீடு மேட்டர்ல:

வீட்டு ஹாலில் ஒரு போர்க்கள காட்சி கொண்ட போஸ்டர். தலைவாசல்ல ஒரு வேல் வீட்டுக்கதவுல முருகன் உருவம். கதவுக்கு ப்ரவுன் நிற பெயிண்ட் அ பிரவுன் நிற ஸ்க்ரீன்.அந்த ஸ்க்ரீன்ல ஃபேப்ரிக் பெயிண்ட்ல முருகனுடைய /அல்ல வேலின் உருவம்.

3.வாகன மேட்டர்ல:

வீட்டுக்கு சொன்ன அதே டிப்ஸை வாகனத்துக்கும் உபயோகிக்கிறது.

4.கல்வி மேட்டர்ல:

பாரதம் ,ராமாயணத்துல வர்ர யுத்த காண்ட வருணனைகளை படிக்கிறது அ சீரியல் டிவிடி கிடைச்சா பார்க்கிறது. கராத்தே/குங்ஃபூ/ஜூடோ கற்றுக்கொள்ளுங்கள் மாதிரி புத்தகங்கள் படிக்கிறது /டிவிடி கிடைச்சா பார்க்கிறது..

இந்த பரிகாரங்களை எல்லாம் சின்சியரா செய்துட்டு வந்ததுல கட்டி மேட்டர் ஓகே ஆயிருச்சு. அடுத்து கண்ணால மேட்டர்ல பல்பு வாங்கின பிறவு என்னெல்லாம் பரிகாரம் செய்யவேண்டி வந்ததுன்னு நாளைக்கு சொல்றேனே..!

செவ் தோஷம்: ஜாதகத்துலயே ரிலீஃப்

null

அண்ணே வணக்கம்ணே !

செவ்வாயை பத்தி இத்தீனி நாளு நோண்டி நுங்கெடுத்துட்டம். இன்னைக்காச்சும் செவ் தோஷத்துக்கான அல்டிமேட் சொல்யூஷன்ஸை ச்சூ காட்டிட்டு ராகுவை பார்க்க போகலாம்னு நினைச்சிருந்தேன். என்னமோ உதைக்குதே ரோசிச்சப்பத்தான் ஜாதகத்துலயே செவ்வாய் தோஷத்தை ஐ மீன் அதனோட தீவிரத்தை டைல்யூட் பண்ணக்கூடிய சில ஏற்பாடுகள் பத்தி ஞா வந்தது. அந்த ஏற்பாடுகளை பற்றியும் ( அதாங்க .. செவ் தோஷத்தை பாலன்ஸ் பண்ணக்கூடிய கிரக நிலைகள்) இதெல்லாம் அனுபவத்துல எந்தளவுக்கு பலன் கொடுக்குதுங்கறதை பத்தியும் பார்த்துரலாம். நாளைக்கு சர்வ நிச்சயமா பரிகாரங்களை பார்க்கலாம்.

1. தோஷம் தரும் நிலையில் உள்ள செவ் மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய ராசிகளில் செவ்வாய் இருத்தல் . செவ் தோஷத்தோட தீவிரத்தை இது எப்படி குறைக்கும்னு பார்ப்போம்.

செவ் மேற்படி ராசிகளில் மேஷ,விருச்சிகத்தில் ஆட்சியும் , மகரத்தில் உச்சமும் பெறுகிறார்.

கிரகங்கள் பலம் பெறும் போது சுப பலனை அதிகமாகவும் – அசுப பலனை குறைவாகவும் தருவாய்ங்கங்கறது இது பொது விதி.

இதை இது உதாரணம் மூலமா பார்க்கலாம். வாசன் யாரு? மூப்பனாரோட வாரிசு. ஸ்டேட் லீடர். தமிழ் நாட்ல இவரை வச்சா லொள்ளு சாஸ்தின்னுட்டு சென்டர்ல ஒரு மினிஸ்டர் போஸ்டை கொடுத்துட்டாய்ங்க. ( செவ் ஆட்சி உச்சம் பெற்றதை போல)

வாசன் சென்டர்ல மினிஸ்டர் ஆயிட்டதால ஸ்டேட் பார்ட்டியில் உள்ள தன் கோஷ்டியை கலைச்சுட்டாரா? இல்லையே.. இப்பவும் லோக்கல் பாலிட்டிக்ஸ் பண்ணிக்கிட்டுதானே இருக்காரு

2.லக்னம், சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு செவ்வாய் 2ல் நிற்க அப்படி நின்ற ராசி மிதுனம் அல்லது , கன்னியாவது.

செவ் சத்திரிய கிரகம். மிதுன,கன்னிக்கு அதிபதியான புதன் வைசிய கிரகம்.( யாவாரிங்கோ) ஒரு வீரன் ஒரு ஒரு யாவாரியோட வீட்டுக்கு எப்ப போவான்? தான் கெட்டு நொந்து அஞ்சோ பத்தோ பண உதவி கிடைக்குமாங்கற நிலையில இருக்கும் போது போவான்.. ஆக மிதுன கன்னியில செவ்வாய்க்கு பலம் குறைவு .அதனால பெருசா எஃபெக்ட் இருக்காதுங்கற அசம்ப்ஷன்ல இப்படி ஒரு ரிலாக்சேஷனை கொடுத்திருக்காய்ங்க.

ஆனால் பாருங்க மொத விதிக்கு இது கொய்ட் ஆப்போசிட்டா இருக்கு. மொத விதியில மேஷ ,விருச்சிக,மகரங்களில் இருந்தால் பரவால்லைன்னாய்ங்க. (ஏன்னா ஆட்சி உச்சம்) கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறும் போது தீய பலனை குறைச்சு கொடுப்பாய்ங்கங்கற விதியை பேஸ் பண்ணி சொனனய்ங்க. ரெண்டாவது விதியில இதை திராட்டுல விட்டுட்டாய்ங்க.

3.லக்னம்-சந்திர லக்னம் சுக்கிர லக்னம் இவைகளுக்கு நாலாமிடத்து செவ்வாய் நின்றது மேஷம்/ விருச்சிகம் ஆதல்.

இங்கேயும் மொதல் விதி ஒர்க் அவுட் ஆகுது. இது ஏன் ரிலீஃப் தராதுன்னும் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.( வாசன் கதை)

4. லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 12-ல் செவ் நின்று அந்த ராசி ரிஷபம் /துலாம் ஆதல்.

ரிஷப,துலா ராசிகளுக்கு அதிபதி ஆரு? சுக்கிரன். சுக்கிரன் வீட்ல செவ் நின்னா ரிலீஃப் கிடைக்கும்னு சொல்றாய்ங்க.

கொய்யால செவ்வாயும் சுக்கிரனும் சம்பந்தப்பட்டா என்னா கதியாகும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

5.லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 4-ம் இடத்தில் செவ் நின்று அவர் நின்ற ராசி மேஷமும், விருச்சிகமுமாதல்

இங்கயும் மொத விதி தான் பேஸ் பண்ணப்பட்டிருக்கு. வாசன் உதாரணத்தை ஞா படுத்திக்கங்க.

6.லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 7-மிடத்தில் செவ் நிற்க , அவ்வாறு நின்ற ராசி மகரம் /, கடகமாதல் .

செவ் மகரத்துல உச்சமாவறாரு. மொத விதி ஒர்க் அவுட் ஆகுதுன்னு வச்சுக்கலாம். அதென்னா கடகத்தையும் சேர்த்துட்டாய்ங்க. கடகத்துல செவ் நீசமாச்சே..

படகு போட்டியில பந்தா பண்ண வலைய வித்துட்ட அம்பர்லா பாக்கெட்லயும் – அம்பானி பாக்கெட்லயும் சில்லறையா எவ்வளவு வச்சிருப்பாய்ங்க?

பெரிய ஜீரோ..

செவ் திடீர்மரணத்தை கொடுக்கிற கிரகம். 7ங்கறது மனைவிய காட்டும் இடம். இங்கன அவரு உச்சம் ஆனா என்ன பெரிய மாற்றம் வந்துரப்போகுது? ஒன்னரை மாசத்துல டிக்கெட்டுங்கறது ஒன்னரை வருசம் இழுக்கலாம் அவ்ளோதான்.

அதே போல அவரு நீசமானா என்ன பெரிய மாற்றம் வந்துரப்போகுது? ஒன்னரை வருசத்துல போறது ஒன்னரை மாசத்துல போயிரப்போகுது .. இதைப்போயி பெரிய ரீலீஃபா சொல்லியிருக்காய்ங்களே..

7.லக்னம் சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு எட்டில் செவ் நின்று அந்த ராசி தனுசு/மீனம் ஆதல்
எட்டில் செவ் நின்றால் மரணம் ஏற்படனும். அந்த எட்டாமிடம் தனுசு,மீனமாவதாலும் ,இந்த ராசிகளுக்கு அதிபதி குரு என்பதனாலும் அந்த மரணம் பொருளாதார ரீதியாக ஏற்படலாம். உசுரு மிச்சமாகலாம் போல.

8.சிம்மத்தில் அ கும்பத்தில் செவ்வாய் இருத்தல்

சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சூரிய செவ் ஒரு ஜாதகத்துல சம்பந்தப்பட்டா ஒரு பிரிவு ஏற்பட்டால் பிறவு பேட்ச் அப் என்ற பேச்சுக்கே இடமிருக்காதுங்கோ..

கும்பத்துக்கு அதிபதி சனி. சனி செவ் சம்பந்தப்பட்டா என்ன ஆகும்னு பெசல் பதிவெல்லாம் போட்டு ஏற்கெனவே டர்ராக்கியிருக்கம்ல.

9. செவ்வாயுடன் குரு/ சந்திரன் பத்து பாகைக்குள் சேர்ந்திருத்தல்

செவ்வாய்னா நெருப்பு.சந்திரன்னா நீர். நீரில் விழுந்த நெருப்பு நனைஞ்சுருங்கற லாஜிக்கா?

குளோபல் வார்மிங் காரணமா கடல் நீரே விரிவடைஞ்சு நில பாகத்தை விழுங்கிக்கிட்டு வருதுங்கறாய்ங்களே…

சந்திரன் செவ் ரெண்டு பேரும் ஒரு லக்னத்துக்கு சுபரா இருந்து சேர்ந்தா அது சந்திர மங்கள யோகம். (அனால் இவிக கஜினி கணக்கா பிஹேவ் பண்ணுவாய்ங்க) ஸ்பெக்குலேசன்ல காசு பார்க்கலாம் தான் .இல்லேங்கலை.அதுக்குன்னு செவ் தோஷம் காத்தா மறைஞ்சுருமா?

குரு செவ் ரெண்டு பேரும் ஒரு லக்னத்துக்கு சுபரா இருந்து சேர்ந்தா அது குரு மங்கள யோகம். ரியல் எஸ்டேட்ல கொழிக்கலாம். அதுக்குன்னு செவ் தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிருமா?

சில புஸ்தவத்துல செவ்வாயோட சனி/ ராகு/கேது சேர்ந்தாலும் ரிலீஃப் கிடைக்கும்னு சொல்லியிருக்கு.. செவ் கேது சேர்க்கைய நம்ம சொந்த கதைய வச்சே விவரிச்சிருந்தேன். ஞா இருக்கில்லை. செவ்+சனி சேர்க்கைய பத்தி பிடிசாமி கணக்கா நாறடிச்சாச்சு..

எச்சரிக்கை:
மேற்படி கிரகஸ்திதிகள் ஒரு காலத்துல செவ் தோசத்துக்கு கொஞ்சம் போல ரிலீஃப் தந்திருக்கலாம் ஆனால் இப்பம் ? ஊஹூம்..ஏன் .. நாளைக்கு பார்ப்போம்.

உடுங்க ஜூட்டு..

.

செவ் தோஷம் : உயிருக்கு உலை?

அண்ணே வணக்கம்ணே !

செவ் தோஷம்னா என்ன? ஜாதகத்துல செவ் 3,6,10,11 தவிர எங்கருந்தாலும் தோசம் தேன். செவ் தோசம்னா செவ் காரகமுள்ள மேட்டர்ல எல்லாம் பல்பு வாங்கறதுதேன். ஆனால் இதுனால எல்லாம் உசுரு போயிருமான்னு இன்னைக்கு பார்ப்போம்.

ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன். ஜாதகத்துல உள்ள ஒரே அம்சத்தை வச்சுக்கிட்டு பலன் சொல்லிரப்படாது. எல்லாத்தையும் கூட்டுக்கழிச்சுத்தேன் பலன் சொல்லனும்.. இப்படி பதிவுல போடறதை எல்லாம் வேத வாக்கா எடுத்துக்கிட்டு காபரா ஆயிரப்படாது.

உங்களுது என்ன லக்னம் / செவ் எந்தெந்த பாவங்களுக்கு ஆதிபத்யம் பெறுகிறார், லக்னத்துக்கு அவர் சுபரா -பாபரா அவர் நின்ற ராசியில அவருக்குள்ள பலம் என்ன? -அவரோட இன்னம் என்னென்ன கிரகம்லாம் சேர்ந்திருக்கு – அந்த கிரகங்களுக்கு அங்கன என்ன பலம் -செவ்வாயோட என்ன உறவு -அந்த கிரகங்களின் பார்வை எங்கன விழுது இப்படி ஆயிரத்தெட்டு மேட்டரை பார்த்தாகனும்.

இது ஜஸ்ட் ஒரு பதிவு. ஒன்னமே தெரியாதவுகளுக்கு ஏதோ கொஞ்சமாச்சும் தெரியட்டும்னு செய்ற விஷய தானம்.

வடிவேலு சாம்பிள் வாங்கியே கடை வச்சுர்ராப்ல சிலரு நாம இங்கன போடற நுனிப்புல் பதிவுகளையே சுட்டு -காப்பி பேஸ்ட் எல்லாம் பண்றாய்ங்க.

அதனால ச்சொம்மா மேட்டரை தெரிஞ்சுக்க படிங்க. ரோசிங்க. எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு அப்பாறம் தேன் முடிவுக்கு வரனும். ஓகேவா..

1.லக்ன செவ்:

சான்ஸ் ..இருக்கு. செவ் காரகங்களான மின்சாரம், நெருப்பு,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகள் வகையறாவுல ஆபத்து ஏற்படலாம். உடல் ரணமாகலாம் /எரியலாம்/கருகலாம். எதிரிகளால் தாக்குதல் கூட நடக்கலாம். செவ் லக்னத்துல நின்னா 4-7-8 பாவங்களை பார்ப்பாரு.

4 ஐ பார்ப்பதால் தாய்க்கு /தாயால் -வீட்டில்/வீட்டால் வாகனத்தில் /வாகனத்தால் தீங்கு ஏற்படலாம்.

7 ஐ பார்ப்பதால் காதலிக்கு/காதலியால் -மனைவிக்கு/மனைவியால் தீங்கு ஏற்படலாம்.

8 ஐ பார்ப்பதால் உயிருக்கு,இன உறுப்புக்கு பாதிப்பு ஏற்படலாம்.

2.தன பாவ செவ்:

இவர் ரெண்டுல இருக்கிறதால கண்,வாய்,தொண்டை பாதிக்கலாம். மானாவரியா காரம் திங்கற பழக்கம் இருக்கலாம்.

இவர் ஏழாம் பார்வையா எட்டை பார்க்கிறதால உசுருக்கு உலையும் வச்சுரலாம்.

4.மாத்ரு பாவ செவ்:

தாய்க்கு /தாயால் -வீட்டில்/வீட்டால் வாகனத்தில் /வாகனத்தால் தீங்கு ஏற்படலாம். இதுல என்ன ஒரு வில்லங்கம்னா வயசான காலத்துல ஹார்ட்டு புடுக்கலாம்.

5.புத்தி செவ்:

இது ஹை ரிஸ்கு . ஒரு கணத்துல அடுப்பங்கரையில நுழைஞ்சு தீக்குளிச்சுர்ர கேஸ். ஏற்கெனவே ஒன்னு ரெண்டு மிஸ் கேரி,அபார்சன் நடந்திருந்தா பரவால்லை. இல்லின்னா உ.உ க்கு வாய்ப்பிருக்கு.

7.களத்திர செவ்:

காதலிக்கு/காதலியால் -மனைவிக்கு/மனைவியால் தீங்கு ஏற்படலாம். செவ் காரகமுள்ள பெண்ணையே மணந்தால் ஓரளவு ஓவர்கம் பண்ணலாம்.

8.அஷ்டம செவ்:

இதுவும் ரிஸ்கான மேட்டருதேன். செவ் காரகங்களில் இருந்து விலகி வாழ்ந்தா தப்பலாம்.

9.பாக்ய செவ்:

இது அப்பா,அப்பா வழி சொத்துக்கு தீங்கு தரலாம். சொத்து மேட்டர்ல வில்லங்கமிருந்தா விட்டு கொடுத்து செட்டில் பண்ணிக்கிட்டு தூர வந்துர்ரது பெட்டர். தூரபயணங்களின் போது உல்வா பஸ்ஸு/ஸ்லீப்பர்களை தவிர்ப்பது நலலது .

12.விரய செவ்:

கொஞ்சம் அசால்ட்டா இருந்தாலும் நிலம் பறி போயிரும், போலீஸுக்கு கூலிப்படைக்கெல்லாம் செலவழிக்க வேண்டி வந்துரும். செலவானாலும் பரவால்லை. தூங்கற நேரம் பார்த்து அட்டாக் நடக்கவும் சான்ஸ் இருக்கு.