உங்களுக்கும் ராஜயோகம் :19

Gopalapuram

அண்ணே வணக்கம்ணே ! ராஜயோகம்னா தெரியும்ல? ஆட்சி/அதிகாரம். இந்த ராஜயோகத்தை ராஜகிரகங்கள் மட்டும் தர்ரதில்லை . எல்லா கிரகங்களும் தரமுடியும். ஏன்னா காலமாற்றம் அப்படி இதை எல்லாம் ஏற்கெனவே சொல்லி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு.

கடந்த பதிவுல செவ் பல்பு வாங்கியிருந்தா என்னெல்லாம் நடக்கும்? நடக்கறதை நடக்க விட்டா அதுவே எப்படி பரிகாரமா ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லியிருந்தேன் ( நம்ம வாழ்க்கையில இருந்தே )

இந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்கள் தான். பதிவுக்கு போயிரலாமா?

1.போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) கூலிங் க்ளாஸ் அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .தொப்பி அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .மார்ஷல் ஆர்ட்ஸ் பழகவும்.கு.பட்சம் ட்ராக் சூட் போட்டு நடை பயிற்சி .

2.கழுத்தில் முருகன் கையில் உள்ள வேல் டாலர் /பாக்கு நிற கயிற்றில் கோர்த்து அணிதல்.கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.ரத்த தானம் செய்க. பிரவுன் கலர் பர்சில் 12 கைகளிலும் ஆயுதம் தாங்கிய முருகன் படம். மொபைல்/பிசி/லேப்டாப்ல எரிமலை,தீவிபத்து ,யுத்தம் தொடர்பான ஸ்க்ரீன் சேவர் வச்சுக்கங்க.
4.வீட்டு ஹாலில் போர்க்கள காட்சி கொண்ட போஸ்டர்.போர் வீரன் சிலை .ஹாலில் உள்ள சோஃபா கவர் /ஸ்க்ரீன்ஸ் எல்லாமே பிரவுன் நிறம். இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தாயும் செய்தல் நலம்.கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.வண்டி நிறம் பிரவுன் எனில் நல்லது . வண்டியில் எங்கேனும் ஏதேனும் ஒரு ஆயுத வடிவத்தை ஸ்டிக்கரிங் செய்து கொள்ளவும்.

5.முதல் குழந்தையை உடனே பெற்றுக்கொள்ளவும் (ப்ளான் பண்றது /தள்ளி போடறதுல்லாம் வேண்டாம்) .மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்த பின் டேக் ஆல் ப்ரிக்காஷன்ஸ்.ஒரு வேளை முதல் கரு அபார்ட் ஆயிட்டாலும் பொஞ்சாதிக்கு நல்ல பூஸ்ட் கொடுத்து அடுத்த முயற்சியில் குழந்தை பெற்றுக்கொண்டு விடவும்.முருகன் கை வேலை தியானிக்கவும்.வேல் பூசை செய்யவும்.குழந்தைகளுக்கும் முருகன் பெயர்களையே சூட்டவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை குழந்தைகளும் செய்தல் நலம்.

7.சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக. இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க)இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை மனைவி/கணவரும் செய்தல் நலம்.

8.வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், சத்ரிய குலத்தினர், சமையல் , போட்டி, ஸ்போர்ட்ஸ், , பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம் ஆகிய விஷயங்களில் முடிந்தவரை விலகி இருங்கள் தவிர்க்க முடியாத பட்சம் அலார்ட்டா டீல் பண்ணுங்க.

வருடம் ஒரு முறை / தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன் ஒரு சேவல் ஒன்றை விலைக்கு வாங்கி முருகன் கோவிலுக்கு சென்று 9 சுற்று சுற்றி -9 ஆவது சுற்றில் அந்த சேவலை அங்கேயே விட்டு விட்டு /அல்லது கோவில் மேலாளரிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடவும்.

9.சொத்து, சேமிப்புக்க‌ள்,முதலீடு ,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாக்கு நிற ஃபைல்ல போட்டு ஃபைல் மேல வேல் ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வைங்க. தூரப்பயணத்தின் போது பிரவுன் கலர் ஏர் பேக் . கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தந்தையும் செய்தல் நலம்.

12.படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை .படுக்கை அறையின் பெயிண்ட்,பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் அனைத்தும் பாக்கு நிறம். செருப்பும் இதே நிறம்.

(குறிப்பு: என்னடா சீரியல் நெம்பர் எகிறியிருக்கேனு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. இது சீரியல் நெம்பர் இல்லிங்ணா செவ் ஜாதகத்துல லக்னாத் எத்தனையாவது வீட்ல நிற்கிறாருனு காட்டுதுங்ணா)
ஸ்..அப்பாடா அடுத்த பதிவுல ராகு ஜாதகத்துல வலிமையா இருந்தா எப்படி ராஜயோகம் கொடுப்பாரு..பல்பு வாங்கியிருந்தா எப்படி ஆப்படிப்பாருன்னு பார்ப்பமா?
உடுங்க ஜூட்டு

உங்களுக்கும் ராஜயோகம் : 18

mythryi

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வாழ்க்கையில எதுவுமே சில காலம் தான். ஒரு கட்டத்துல அதுவே வாழ்க்கை போல இருக்கும்.ஆனால் அடுத்த கட்டம் வரும் போது அப்படி ஒன்னு இருந்ததாங்கற ஞாபகமே இருக்காது .

இந்த பட்டியல்ல இந்த வலைப்பதிவும் சேர்ந்துருமோன்னு ஒரு சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு . வலைப்பூ காலத்துலயே ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்டிருக்கம்.

இப்ப என்னடான்னா..

உதிரியா எழுதினா தான் தொடர முடியறதில்லைனு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.இதுவும் ரெம்ப ரப்சர் பண்ணுது .

இன்னைக்கு ஜாதகத்துல செவ்வாய் பல்பு வாங்கியிருந்தா என்ன பரிகாரம் பண்ணா ராஜயோகம் பெற முடியும்னு சொல்லோனம்.

என் லேப்ல நான் தான் முதல் எலிங்கற நம்ம பஞ்ச். ஆகவே என்னை வச்சே தொடருவம். நம்ம ஜாதகத்துல நான்கில் செவ். கூடவே கேது (லக்னம் கடகம் ஞா இருக்குல்ல)

நான்கு என்பது தாய்,வீடு,வாகனம் ,கல்வி இதை எல்லாம் காட்டும்.செவ் கடகலக்னத்துக்கு 5 ,10 க்குடையவர்.
அஞ்சுன்னா புத்தி/புத்ர /பூர்வபுண்ணியஸ்தானம் .பத்து ?தொழில்/உத்யோகம்/வியாபாரத்தை காட்டற இடம்.

மொதல் 17 வருசம் வரை நம்ம படிப்பு சிறப்பா கன்டின்யூ ஆச்சு . பிறவுதான் ஆப்பு மேல ஆப்பு . `1984ல் இன்டர்ல அக்கவுண்ட்ஸ் புட்டுக்கிச்சு (23 மார்க்) மறுபடி கட்டி எழுதினம் 72.அம்மாவுக்கு யூட் ரஸ்ல கேன்சர். டிக்கெட்டு.

அம்மா இருக்கும் போதே ஒரு தரம் (வயசு ஞா இல்லை.ரெம்ப சின்ன வயசு ) பல் தேய்க்காம டிஃபன் சாப்டதுக்கு அண்ணன் திட்ட வீட்டை விட்டு போயிட்டம். கையில ரெண்டு ரூவா இருந்தது .வேலூர் போயாச்சு .டிக்கெட்டு ரூ.1.90. (4=வீடு)

அம்மாவுக்கு பிறகு வீடே நரகமாயிருச்சு .1989லயே லவ்ஸ் பண்ணி கண்ணாலம் கட்டி பிரிச்சுட்டானுவ. இல்லின்னா அன்னைலருந்தே உஞ்ச விருத்தி பண்ணியிருக்கனும்.பிரிச்சு போட்டதால அதுல இருந்து எஸ்கேப் .ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்டென்ஷன் கிடைச்சது

ஆனாலும் என்ன 1991ல மறுபடி லவ்ஸ் . கண்ணாலம் .இந்த முறை எவனும் பிரிக்கல. 1994 வரையாவது அப்பாவோட மறைமுக ஆதரவு இருந்தது .அவரும் காலி .பிறவு என்ன? பூர்விக வீட்டை வித்து காசு கொடுக்கிறவரை உஞ்ச விருத்திதான்.

வறுமைன்னா தமிழ் சினிமா மாதிரி தொடர்ச்சியான வறுமைல்லாம் கிடையாது .இடையிடையே ஓயாசிஸ்களும் உண்டு .

வருமானம் இருந்ததே தவிர -நிரந்தரவருமானம் கிடையாது .பட்டுக்கோட்டையாரை விட அதிகமான வேலைகள் செய்த பார்ட்டின்னா பார்த்துக்கங்களேன் ( 10= தொழில்ஸ்தானம்) மணி மேனேஜ்மென்ட் தெரியாது -உலகம் தெரியாது -கற்பனைகள் அதிகம்.

1997 நவம்பர் 10 ஆம் தேதி ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூவா வருது . 1998 பிப்.23 ஆம் தேதி அரிசி வாங்க பணமில்லை .வீட்ல அரிசி இல்லை.
மறுபடி இங்கேருந்து 2007 வரை இதே நிலைதான்.(இடையிடையே ஓயாசிஸ்கள் உண்டு) .இந்த 2007 தான் நமக்கு டர்னிங் பாய்ண்ட்.

தினத்தந்தில வேலை .அன்னைய தேதிக்கு நம்ம வயசு 40.கொய்யால இந்த நாற்பது வயசுல கூட லைஃப்ல செட்டில் ஆகலின்னா பொளப்பு நாறிரும்னு கிரிமினல் தனமா ப்ளான் பண்ணேன்.

கரெக்டா ரெண்டே வருஷம் . இனி வேலை இல்லைன்னாலும் புவ்வாவுக்கு பயமில்லைங்கற நிலையை கொண்டு வந்துட்டன்.

கூடவே இந்த ரெண்டு வருஷத்துல நாம போட்ட பதிவுகள் கபாலி தீம் சாங் மாதிரி “நெருப்புடா”ரகம். ஹிட்ஸ் பிச்சுக்கிச்சு . கட்டண ஆலோசனையை ஆரம்பிச்சிருந்தம்.அதுவும் பத்திக்கிச்சு . -வேலைய விட்டுட்டன்.

இடையில என்ன ஆச்சு? என்னதான் பரிகாரம் செய்து தொலைச்சன்? எப்படி ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.

1.கடந்த 24 வருசமா தொடர்ந்து ரத்த தானம் பண்ணிக்கிட்டிருக்கன். ஆரம்பிச்சப்ப உடல் எடை 48 கிலோ .இப்ப கு.பட்சம் 60 கிலோ .(ரத்தத்துக்கு காரகன் செவ்)

2.அம்மா போயாச்சு.வீடும் போயாச்சு. அரை டஜன் சைக்கிள் போயாச்சு. மூனு வண்டி போயாச்சு.இதுல மொத ரெண்டு வித்து மசூதிக்கு நன் கொடையா கொடுத்துட்டன்.கொசுறு ஒரு வாஷிங் மிஷின்.( எலக்ட் ரிக்கல் =செவ்) இப்பம் மவளுக்காவ ஒரு டிவி எஸ் எக்செல் செகண்ட் ஹேண்டி வாங்கி தந்திருக்கன் . ராத்திரி 7 மணிக்கு மேல அஞ்சு நிமிட் ஓட்டினா சாஸ்தி .

மொபைல் புக்ஸ்டோர் பண்றேன்னு நெல்லா இருந்த ரெண்டு டூ வீலரை இணைச்சு நாஸ்தி பண்ணி அது மேல ஒரு டப்பா வச்சு அதுக்கு கதவு வச்சு ..ஒரு பத்தாயிரம் ரூவா வரை வட்டம். ( நல்ல டைம் பாஸ்.மவளுக்கு கண்ணாலமான புதுசு – இந்த ப்ராஜக்ட் செம பிசியாக்கிருச்சு – பூமுடிப்பு /சீமந்தம் தவிர மவ வீட்டுபக்கம் அடியெடுத்து வைக்கலின்னா பாருங்க)

3.இருந்ததெல்லாம் வாடகை வீடு (இருப்பதும்) . கரண்ட் பில்லுக்கு வூட்டுக்காரன் சொல்ற அமவுண்டை படக்குனு எடுத்து வச்சுர்ரது . தனி மீட்டர் இருந்தா ஃபைன் போட்டுதான் கட்டறது .

4.மவ லவ் பண்ண ஆரம்பிச்சதுமே கொய்யால இதுவும் போச்சான்னு டிசைட் ஆயிட்டன் ( 5=புத்ரஸ்தானம்)

5.ஒரு சீசனல் ஃபீவர் போல திடீர்னு கார்ப்பென்டரிங்குல இறங்கிருவன்.அமெச்சூர்ங்கறதால செமயா ஏமாத்துவானுவ. பல நேரம் செய்த உருப்படி எதுக்கும் உபயோகமில்லாம போகும்.அல்லது திடீர்னு ஆருமேலனா அன்பு பொங்கி தூக்கி கொடுத்துருவன்.

6.ஒரு காலத்துல திடீர் திடீர்னு லைம் லைட்டுக்கு வந்துருவம். ( அஞ்சு = பெயர் புகழ்) வார்த்தா மாதிரி மேஜர் டெய்லில அரைப்பக்கம் ஸ்டோரில்லாம் வந்திருக்குண்ணே. இப்பம்? ஒரு ம..னாவும் கிடையாது .மோடி /ஜெ மேட்டர்ல பல்புல்லாம் செம பரிகாரம்ணே.அதுவும் கலைஞர் ஆதரவு நிலையை எடுத்த பிறவு செம பரிகாரம். (ஒரு சீக்ரெட் சொல்லவா .. கலைஞர் தான் முதல்வர்னு நாம சொல்லி -அது நடக்காம போன பிறவு தான் நம்ம கிராஃப் இன்னொரு பீக்குக்கு போயிருக்கு )

இத்தீனி இழவும் இழவெடுத்து போனதால தான் பொளப்பு ப்ரேக் இல்லாம ஓடுது .

அதுவும் இப்பம் இருக்கிற வீட்டை பத்தி சொல்லனும்னா தெற்கு பார்த்த வீடு (வாஸ்துப்படி இது நல்லதில்ல.ஆனால் தெற்கு செவ்வாய்க்குரிய திசை ) ஹால்ல போட்டிருக்கிற கிரானைட் பாக்கு நிறம்.

ஜாய்ன்ட் மீட்டர் இருந்தப்போ ஒரு கோ டெனன்ட் அச்சானியமா நான் 150 ரூ தான் கொடுப்பேன்னு அழிச்சாட்டியம் பண்ண அ நி யாயத்துக்கு அவன் உபயோகிச்ச உபரி கரண்டுக்கும் நானே கட்டி தொலைச்சன் (இப்பம் தனி மீட்டர் தான்)

அழிச்சாட்டியம் பண்ண கேஸு வேலை போயி /சொந்தமா கிளிக்கிறேன்னு இறங்கி ஷெட் ஆகி மறுபடி எங்கயோ வேலைக்கு போயிட்டிருக்கு . ( நம்ம கருமத்தை எல்லாம் இப்படி கழிச்சதுக்கு/ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கிட்டதுக்கு அன்னாருக்கு நன்றி )

இத்தனை பரிகாரத்துக்கு பிறவு நம்ம புத்தி சரியான ரூட்ல வேலை செய்யுது .லாஜிக்கலா திங்க் பண்றம்.தில்லா கருத்து சொல்றம் ( டாக்சி வரும் /ஆட்டோ வரும்னுல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணினானும் எதுவும் நடக்கல. தொழில் ஜரூரா நடக்குது .மவளும் கீழேயே வந்து சேர்ந்துட்டா.

ஒரு வேளை ஆத்தா நம்மை தூக்கி உள்ள வச்சாலும் பொஞ்சாதிக்கு மவ -மாப்ள துணை . பேரன் ? நல்ல பொழுது போக்கு.

இதெல்லாம் தானா நடந்த மேட்டரு தான். ஏதோ 1989 ல ஜோசியம் கத்துக்க ஆரம்பிச்ச பிறவு பல ஆயிரம் ஜாதகங்கள் -அந்த ஜாதகர்களின் வாழ்க்கைகளை பார்த்த பிறவு நானா மைண்டுல தொகுத்து வச்சிருந்தது ..இப்ப வெளிய வருது .

தானா நடந்ததை ப்ளான் பண்ணியும் நடத்திக்கலாம்ல? அதைத்தான் இன்னைக்கு சொல்ல நினைச்சேன்.இப்படி ஒரு பதிவு சொந்த கதையில பாழா போயிருச்சு .சாரிங்ணா..அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரம் தான்.உடுங்க ஜூட்டு ..

உங்களுக்கும் ராஜயோகம் :17

wrapper

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கிருக்கிற அரசியல்ல ராஜகிரகங்கள்னு சொல்ற சூரியன், குரு ,செவ் மட்டுமே ராஜயோகத்தை கொடுக்கும்னு சொன்னா அது உட்டாலக்கடி . அப்படி சொல்ற பார்ட்டி தன்னை அப்டேட் பண்ணிக்கவே இல்லேனு அருத்தம்.

சாணக்கியர் ஆரு?பிராமணர். (குரு காரகம்) சந்திரகுப்தன் தன்னம்பிக்கை + வீரம்/போர்த்திறமை கொண்டவன். ( சூரிய/செவ் காரகம் ) இந்த காம்பினேஷன் அந்தகாலத்துல சூப்பர் ஹிட் அடிச்சுருச்சு .

ஆனால் இதுஇன்னைக்கு வேலைக்காகுமா? சாணக்கியரு வேணம்னா தப்பிச்சுக்கலாம்.சந்திர குப்தன்? ஆயுதத்தடை சட்டத்துல உள்ளே தூக்கி வச்சுருவாய்ங்க. நிற்க.

பழங்கால கிரந்தங்கள்ள சுக்கிரனை கூட ராஜகிரகம்னு சொல்லியிருக்காய்ங்க. அதுக்குண்டான காரண காரியங்களை ஆராய்ஞ்சம்னா டெக்காமெரான் கதைகள் மாதிரி போயிரும் .ஆகவே அம்பேல். இது மட்டும் இன்னைய தேதிக்கும் ஒர்க் ஆகுதாங்கற டவுட்டு எனக்குண்டு . இந்த தொடரின் கடைசி பதிவுல இதை எல்லாம் டச்சு பண்றேன்.

அன்னைக்கிருந்தது மன்னராட்சி .ஆகவே முன் சொன்ன 3 கிரகங்கள் /பின் சொன்ன சுக்கிரனை வச்சு ராஜயோகத்தை ஆட்டைய போட்டுட்டானுவ. இன்னைக்கு அப்படியா?

நம்ம நாட்ல எஸ்.சி/எஸ்.டி/பி.சி/மைனாரிட்டி மக்கள் மட்டும் 52% பேர் இருக்காய்ங்க. இவிகள்ள குறிப்பிட்ட சதவீதத்தினர் ஆதரிச்சாதான் எந்த கட்சியுமே ஆட்சிக்கு வரமுடியும்/எந்த வேட்பாளருமே செயிச்சு வரமுடியும்.

எஸ்.டி மக்களை சூரிய காரகம்னு சொல்லலாம். எஸ்.சி ? சனி காரகம். மைனாரிட்டி ? ராகு /கேது காரகம்.

பிசி? கண்ட சாதிகளையும் இந்த பட்டியல்ல சேர்த்து சொதப்பி வச்சிருக்காய்ங்க.ஆகவே அம்பேல். அந்தந்த சாதி /அதன் பின்புலம் /அவிக ஜீன்ஸ்ல பதிவாகியிருக்க கூடிய விஷயங்களை பொருத்து காரகங்களை நிர்ணயிக்கனும்.

பா.ம.க வன்னியர் ஓட்டு அன்னியர்க்கில்லைன்னு இறங்கினாய்ங்க. கிடைச்சுதா? இல்லை . இவிக செவ் காரகம்னு வச்சுக்கிட்டா எல்லா வன்னியரும் அன்புமணிக்கு தானே ஓட்டு போட்டிருக்கனும்?ஏன் போடல.

ஒரு வேளை அன்பு மணி ஜாதகத்துல செவ் பல்போ?

ஒரு சாதியில பிறந்ததாலயே அந்த சாதி மக்கள் எல்லாரையும் ஒரு கிரக காரகத்துவத்துல அடக்கிர முடியாது . அவிகவிக மென்டல் மெச்சூரிட்டி/கல்வி /என்விரான்மென்டை பொருத்து /அவிக ஜாதகத்துல பலம் பெற்ற கிரகங்களை பொருத்து அவிக காரகம் மாறீரும்.
புரியுதா?

இந்த பதிவுல செவ்வாய் பலம் பெறாத ஜாதகர்கள் செவ் வழங்கும் ராஜயோகத்தை பெறனும்னா என்ன செய்யனும்னு சொல்லோனம்.

ஆனால் செவ்வாயை சாக்கா வச்சுக்கிட்டு கிரகங்களை பற்றிய ஒட்டு மொத்த புரிதலை ஏற்படுத்திரனுங்கற கெட்ட எண்ணம் பலம்மா எழுந்துக்கிட்டிருக்கு.ஆகவே பரிகாரங்கள் அடுத்த பதிவில்.

ஒரு ஜாதகர் அல்பாயுசுனு வைங்க. அவர் ஜாதகத்துல நல்ல பலனை தரவேண்டிய கிரகங்கள் படபடனு பலன் தந்துக்கிட்டிருக்கும் (ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ண மாதிரி ) .

இதுவே ஒரு ஜாதகர் தீர்காயுசுன்னு வைங்க. நல்ல பலனை தரவேண்டிய கெரகம்லாம் கவர்ன்மென்ட் ஆஃபீஸ் க்ளர்க் மாதிரி ஸ்லோ மோஷன்ல வேலை செய்துக்கிட்டிருக்கும்.

ஆயுசை பொருத்து 2 ரகம் இருக்காப்ல யோகங்களைபொருத்தும் 2 ரகம் இருக்கு. முன் யோக ஜாதகம்/பின் யோக ஜாதகம்.

அஃதாவது முப்பது வயசுக்கு மிந்தியே பலன் கொடுத்துர்ர ஜாதகம் முன் யோகம். முப்பது வயசுக்கு பின்னாடி / 55 வயசுக்கு பின்னாடி பலன் தர்ர ஜாதகம் பின் யோக ஜாதகம்.

முன் யோக ஜாதகர் வாழ்க்கையில நல்ல பலன்லாம் ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ண மாதிரி ஓடும். கேக் வாக் கணக்கா. யோகம் முடிஞ்சு போச்சுன்னா ? அம்பேல் .

பின் யோக ஜாதகர் வாழ்க்கையில நல்ல பலன்லாம் ஸ்லோ மோஷன்ல நடந்துக்கிட்டிருக்கும். முப்பது / அம்பது வயசு டச் பண்ணிட்டா பிச்சுக்கும். எங்க பக்கத்துல ஒய்.எஸ்.ஆர்லாம் சி.எம் ஆகறப்ப வயசு 55.

இந்த செவ் மேட்டர்க்கு வந்தா செவ் ஒரு ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கு . அந்த மரணம் குத்து -கொலை – குண்டு வெடிப்புன்னும் நடக்கலாம். அல்லது என்விரான்மென்ட்/வளர்ப்பு காரணமா அப்பிராணியா ஹார்ட் அட்டாக்.

இதெல்லாம் ஒரே நாள்ள நடக்கிற மேட்டரா? ஊஹூம்.. ஓஷோ சொல்றாப்ல இறப்பு பிறப்புக்கு முன்னமே துவங்கிருது.
நான் பார்த்தவரை ஒருத்தன் ஜாதகத்துல செவ் பக்காவா உட்கார்ந்தாச்சுன்னா அவன் பாட்டுக்கு தேமேனு இருப்பான்.

வடிவேலு கணக்கா சில காலம் அடிவாங்காத ஏரியாவே இல்லேங்கற ரேஞ்சுக்கு அடி கூட வாங்கலாம். இதெல்லாம் ரிவர்ஸ் எஃபெக்ட். செவ் சம்பந்தப்பட்ட தசையோ /புக்தியோ சிக்கியாச்சுன்னா சீன் தலைக்கீழா மாறும்.

திடீர் வளர்ச்சி / கிடு கிடு வளர்ச்சிங்கறாய்ங்களே இதெல்லாம் செவ் பல்ப் வாங்கின ஜாதகம் அல்லது ராகு கேது பல்ப் வாங்கின ஜாதகமாவே இருக்கும்.

செவ் எப்படியா கொத்த முடிவை கொடுப்பாருன்னு சொல்லிட்டன். இந்த ராகு கேது? படக்குனு ஓவர் நைட்ல காணாம போயிருவாய்ங்க (வேந்தர் மூவிஸ் காரர் மாதிரி) அல்லது விஷமருந்தி தற்கொலை இத்யாதி .

செரிங்காணும் ..செவ் ஜாதகத்துல செரியில்ல.ஆனாலும் நான் செவ் தர்ர ராஜயோகத்தை டேஸ்ட் பண்ணியே ஆகனும்.அதுக்கு ஒரு வழியை சொல்லும்னு சலிச்சுக்கறேளா?
வெய்ட் பண்ணுங்கோ ..அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் கொடுத்துர்ரேன்.

உங்களுக்கும் ராஜயோகம் :16

Repar

அண்ணே வணக்கம்ணே !
2014 ல் மோடி மேட்டர் போலவே லேட்டஸ்டா ஜெயா மேட்டர்லயும் பல்பு வாங்கியாச்சு . அந்த சாதனையை இங்கே விளக்கியிருக்கேன். ஆகவே நேர பதிவுக்கு போயிரலாம்.

அரசியல்ல சக்ஸஸ் ஆகனும்னா ராஜகிரகங்கள் பலம் பெறனும்ங்கறது பொதுவிதி.ஆனால் அனுபவத்துல பார்த்திங்கனா ராஜகிரகம் பலம் பெறலின்னாலும் இதர கிரகங்கள் துணை கொண்டும் பலர் ராஜயோகத்தை அச்சீவ் பண்ணியிருக்காய்ங்க.

இதுவரை இந்த தொடர்ல சூரியன்,சந்திரன் பற்றி எழுதியாச்சு. இப்ப செவ் . இந்த தொடரின் நோக்கமே

1.ஒவ்வொரு கிரகமும் எந்த வகையில அரசியல் வாழ்க்கைக்கு உதவும்.
2.குறிப்பிட்ட கிரகம் அனுகூலமா இருந்தா எப்படியெல்லாம் பொலிட்டிக்கல் மைலேஜ் கிடைக்கும்.
3.ஒரு வேளை குறிப்பிட்ட கிரகம் பல்பு வாங்கியிருந்தா எப்படி பின்னடைவு ஏற்படும்.இதுக்கு என்ன பரிகாரம்
இந்த 3 மேட்டரையும் டிஸ்க்ளோஸ் பண்றதுதான்.

விகடன்ல ஒரு ஜோக் வந்தது.அதுக்காவ அதன் ஆசிரியர் செயிலுக்கெல்லாம் போனார். அந்த ஜோக் கீழே :
அவன்:மேடையில இருக்கிறதுல எம்.எல்.ஏ யாரு ?மந்திரி யாரு ?
இவன்: பிக்பாக்கெட் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ ,கொலைகாரன் மாதிரி இருக்கிறவர் மந்திரி .

பிக் பாக்கெட் ராகு காரகம் .கொலை ?செவ் காரகம். பிக் பாக்கெட் எல்லாரும் எம்.எல்.ஏ ஆயிர்ரதில்லை .கொலைகாரன் எல்லாரும் மந்திரியும் ஆயிர்ரதில்லை. எவனோ ஒரு பிக் பாக்கெட் எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம் (ஏன் ? பூலான் தேவி எம்.பி ஆகலியா) கொத்தா கொன்ன ஆளு பிரதமராவே ஆயிட்டதாவும் பேசிக்கிறாய்ங்க.
இங்கே ஏன் செவ் -ராகு ரெண்டு பேரையும் கொண்டு வந்துட்டேன்னா செய்ற வேலை செவ் வேலையா இருந்தாலும் அதை பகிரங்கமா செய்தா செவ் காரகம் . மூன்றாவது கண்ணுக்கு தெரியாம செய்ய வச்சா ராகு காரகம். இந்த வித்யாசத்தை நெல்லா புரிஞ்சுக்கோங்க.

செவ்வாய்னா வெறுமனே குத்து -கொலைதான்னு நினைச்சுராதிங்க.செவ் பூமி காரகன். அன்னை பூமி -அதன் மீதான பற்றுக்கு செவ் காரகம். புரட்சிக்கு செவ் காரகம். (ராஜயோகம் எப்படி லிங்க் ஆகுது பார்த்திங்களா?)

புரட்சிக்கு அடிப்படை கேள்வி .வாத்தியார் அப்படி கேள்வி கேட்டுத்தானே வெளிய வந்தார். கேட்கிற கேள்வியில தர்க்கம் இருக்கனும் ( தர்கத்துக்கு செவ் தான் காரகம்) வெறுமனே கேள்வி கேட்கிறேன் பாருன்னு சொதப்ப படாது.

கடேசியா ராஜீவ் காந்தி பிரதமரா இருக்கச்சொல்லோ ராம்ஜெத்மலானி டெய்லி பத்து கேள்வி கேட்டரா இல்லையா?
செவ் ரத்தத்துக்கு காரகன் .இப்பல்லாம் அரசியல் வாதி பிறந்த நாளைக்கு ப்ளட் கேம்ப் நடாத்தியே ஆகனும்.ஏன்னா இதுக்கான ரெஸ்பான்ஸ் அப்படி .
நம்ம கேஸையே எடுத்துக்கோங்க. நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பட்டியலிட்டு பிரதமர்,சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முதல் /லோக்கல்ல கலெக்டர் வீட்டு கதவ வரை தட்டினம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தம்னு சொன்னப்பல்லாம் வராத ரெஸ்பான்ஸ் ரத்ததானம் செய்தேன்னு ஃபோட்டோவோட போட்டா உடனே வருது .

ஏ.சி ரூம்ல ஸ்டெரிலைஸ்ட் ஊசி குத்தி ரத்தம் சிந்தினாலே இப்படின்னா? சனத்துக்காவ -சனங்க பிரச்சினைக்காக ரத்தம் சிந்தினா எப்படியா கொத்த ரெஸ்பான்ஸ் இருக்கும்?

செவ்வாய்னா போலீஸ். அரசியல்ல பால பாடமே என்னன்னா சனத்தை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டு வர்ரது . இதே போல சனத்தை லொள்ளு பண்றவனை ஸ்டேஷன்ல குத்த வைக்கிறது .

என்னதான் ஷேர் சர்ட்டிஃபிகேட்/ நகை நட்டு / கிரெடிட் கார்ட்/டெபிட் கார்ட் எல்லாம் இருந்தாலும் நெலம் இருக்கிறது ஒரு கெத்து .அதுலயும் லம்பா இருந்தா அந்த ஏரியாவுலயே ஜூரி ஆயிரலாம். குடும்பத்துக்குள்ள வர்ர நில தகராறு / சொந்தக்காரவிக மத்தியில வர்ர தகராறு/ஏன் ஊர்க்காரன் தகராறு வரை பஞ்சாயத்து பேசற கெத்து ஆட்டோமெட்டிக்கா வந்துரும். மேலும் சனத்துக்கு வீட்டு மனை பட்டா வாங்கி கொடுக்கிறது நல்ல மைலேஜை கொடுக்கும்.

கோபத்துக்கு காரகன் செவ். ஒரு ஜாதகத்துல செவ் சரியான பொசிஷன்ல இருந்தா கோபமே இருக்காதுன்னுல்ல.இருக்கும்.
ஆனால் அது எப்போ /எங்கே /யார் மேல /எந்தளவு வெளிப்படனுமோ அந்தளவு வெளிப்படும்.செவ் சரியில்லாத பக்கிங்க தான் இடம் தெரியாம மோதி சின்னா பின்னமாயிர்ரது .

நமக்கு போட மாட்டானுவன்னு தெரிஞ்சா சேரியில உள்ள குடிசைகளை எரிச்சு பயம் காட்டறது /துடியா வேலை செய்ற எதிர்கட்சி ஆளுக்கு கோடு போட்டுர்ரது .இதெல்லாம் தற்காலிகமா ஒர்க் அவுட் ஆகும். லாங் ரன்ல பல்பை தான் கொடுக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மர வெட்டி கட்சின்னே பேர் வந்துருச்சு ஞா இருக்குல்ல.ஆத்தா செயிலுக்கு போனப்ப மாணவிகளை எரிச்சு போட்டானுவ.என்னாத்த வாரிக்கிட்டானுவ?

செவ் ஒரு ஜாதகத்துல சரியான இடத்துல உட்கார்ந்திருந்தா எனர்ஜி ஜெனரேட் ஆகும். ஸ்டோர் ஆகும்.தேவையானப்போ அதை செலவழிக்கலாம்.
ஆனால் செவ் ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா மேட்டர் வேற மாதிரி போகும். எனர்ஜி ஜெனரேட் ஆகும்.ஏதோ ஒரு வகையில உடனே அது டிஸ் சார்ஜ் ஆகனும்.இல்லின்னா பாடி காட்பாடி ஆயிரும்.
இந்த மாதிரி கேஸுங்க தேன் யுத்தம் இல்லாத சமயத்துல கூட பித்தம் தலைக்கேறி கண்டவளை படுக்க போட புருசங்காரனை மிரட்டறது /போட்டு தள்ளிர்ரது மாதிரி வேலைல்லாம் பார்க்கிறது .

அண்ணாவை பார்த்து எதிர்கட்சி காரரு “யுவர் டேஸ் ஆர் நெம்பர்ட்”ங்கறாரு . அண்ணாவுக்கு கேன்சர்னு தெரியும். ஆனாலும் பக்கி இப்படி ஒரு பிட்டை போடுது .
அப்பம் அண்ணா என்ன சொன்னாரு? “மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட்” இந்த மாதிரி ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டு போனா அரசியல்ல லாங் ரன்ல பொளைக்கலாம்.
செரி ..ஒரு பெரிய இடைவெளிக்கு பிறவு ஃபீல்டுக்கு வந்திருக்கம்.ஒரு பதிவை ஒப்பேத்திட்டம்.அடுத்த பதிவுல செவ்வாயை பற்றிய மிச்சம் மீதி மேட்டரை எல்லாம் சொல்றேன்.உடுங்க ஜூட்டு

பிப்ரவரி 4 முதல் முதல் ஜூலை 14 வரை ரெட் அலர்ட்?

அண்ணே வணக்கம்ணே !
பல தடவை சொன்னதுதான். இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக இன்னொரு தாட்டி சொல்லிர்ரன். ராசிபலன்லாம் ச்சும்மா.
அதே சமயம் இந்த செவ் மேட்டர் மட்டும் கொஞ்சம் சீரியஸ் தான். மத்த 8 கிரகங்களோட கதை வேற . ஜாதகத்துல பலம் இல்லின்னா,தசாபுக்திகள் கொஞ்சம் சோனியா இருந்தா இதுலயும் ராகு-கேது,குரு,சனில்லாம் கொஞ்சம் அதிகமாவே பாதிப்பை கொடுத்துருவாய்ங்க. அவிகளையும் ஒரு கண் கவனிச்சிட்டே இருக்கனும்.
ஆனால் இந்த செவ் மட்டும் உடன லாட்டரி மாதிரிங்கோ. இவரை ஒரு ஒன்னரை மாசம் கண்டுக்காம விட்டுட்டா ரோட்டுக்கே வந்துரலாம் அ காட்டுக்கே அதாங்க சுடுகாட்டுக்கே கூட போய் சேர்ந்துரலாம்.அதனால இவரோட சஞ்சாரத்தை ஒரு ஓட்டம் பார்த்துரலாம்.
தற்சமயம் கன்னியில இருக்காரு கன்னியில் செவ்வாயை பத்தி ஒரு ஜோதிட மொழி இருக்கு ” கன்னியில் செவ் தங்கினால் கடலேழும் வற்றும்”
இந்த விதியை .சகட்டுமேனிக்கு கன்னியில செவ்வாயை கண்டதும் அப்ளை பண்ணிரப்படாது. “தங்கினால்”ங்கற வார்த்தைக்கு சரியான அர்த்தத்தை பிடிக்கனும்.
இங்கே வந்தால்னு சொல்லலே..தங்கினால்னு சொல்றாய்ங்க. வந்தால்னா அவர் இருக்கவேண்டிய நாள் மட்டும் இருக்கிறாப்ல வந்தால்னு அருத்தம். தங்கினால்னா கூடுதலா தங்க வந்தால்னு எடுத்துக்கனும்.
செவ் ஒரு ராசியில தங்க வேண்டியது 45 நாள். நவம்பர் 26 ஆம் தேதி செவ் கன்னிக்கு வந்தாரு. 4/2/2014 அன்று துலா ராசிக்கு மாறுகிறார். இடையில மொத்தம் எத்தனை நாள் இருக்கு?
நவம்பர்ல ஒரு 4 நாள்,டிசம்பர்ல 31 நாள் ,ஜனவரில 31 நாள்,பிப்ரவரி 4 நாள் ஆக 70 நாள் ஆயிருச்சு.ஆக இவர் ரொட்டீனா வந்தவர் இல்லை.தங்க வந்தவர். அதனால கடலேழும் வற்றும்.
ராகுல் காந்தியோட இமேஜை பில்டப் பண்றதுக்கு 500 கோடி செலவழிக்கப்போறாய்ங்களாம். அழிக்கட்டும் அழிக்கட்டும்.ச்சொம்மா வந்தது ச்சொம்மாவே போயிரும் போல.
இன்னைக்கு ஜனவரி 10 – ஜனவரியில ஒரு 21 நாள் . பிப்ரவரியில ஒரு 4 நாள்னா மொத்தம் 25 நாள் இருக்கு.இந்த 25 நாள் 12 ராசிக்காரவுகளுக்கு எப்படி இருக்கும்னு பார்ப்பம்.
செவ் மேஷ,விருச்சிக ராசிக்காரவுகளுக்கு இவர் ராசியாதிபதி.
மேஷம்?
உங்க ராசிக்கு செவ்வாய் ராசியாதிபதி. செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 6 ஆவது ராசி. செவ் ஆறுல இருந்தா ஓகே.ஆனால் அவரே ராசியாதிபதியா இருந்தா? சத்ரு -ரோக -ருண உபாதைகள் தான் மிஞ்சும். ரத்தம்,எரிச்சல்,அதி உஷ்ணம் ,கோபம் தொடர்பான வியாதிகள் உள்ளவர்கள் பீ கேர்ஃபுல்.
ரிஷபம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 7-12 க்கு அதிபதி செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி அஞ்சாவது ராசி. மோதலுக்கு பின் காதல் வரலாம். அ காதலில் ஊடல் வரலாம். அன்மேரீடா இருந்து திருமண முயற்சியில இருந்தா ஒரு சில கசப்புகளுக்கு பின் வரன் அமையலாம். பார்ட்னர் மூலமா ரியல் எஸ்டேட் வகையில லாபம் -ப்ளஸ் அவருடன் மோதல் ஏற்படலாம்.
மிதுனம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 6,11 க்கு அதிபதி . செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 4 ஆவது ராசி.தாய்க்கு நோய் அ அவிகளோட தகராறு,வீட்டுக்கடன்,வாகனக்கடன்,படிப்பே பெரும் சுமையா மாறலாம். வீடு மாறும் போது அடுக்கு மாடி வீட்டுக்கு/ ரெண்டு தலைவாசல் உள்ள வீட்டுக்கு போகலாம்.
கடகம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 5,10 க்குடையவர். செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 3 ஆவது ராசி .ரிஸ்க் எடுப்பிங்க. இளைய சகோதரத்தால் உதவி கிடைக்கலாம். அ குழந்தைகளுக்கு அல்லல் அலைச்சல் ஏற்படலாம்.தொழில் முறை பயணங்கள் ஏற்படலாம்.
சிம்மம் ?
உங்க ராசிக்கு செவ்வாய் 4,9 க்குடையவர் செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி ரெண்டாவது ராசி. தாய் ,தந்தை வழி ஆதரவு. தூர தேச தொடர்புகளால் லாபம், சேமிப்பு,முதலீடு லாபம் தரலாம். வீடு ,வாகன விற்பனை முயற்சி வெற்றி. வந்த காசை இன்வெஸ்ட் பண்ணுவிங்க. சிலர் புதிய வீடு,வாகனம் வாங்கவும் செய்யலாம்.

கன்னி?
உங்க ராசிக்கு செவ்வாய் 3,8 க்குடையவர் .இவர் உங்க ராசிலயே இருக்கிறதால நிறைய அல்லல் அலைச்சல் ஏற்படும். நிறைய ரிஸ்க் எடுப்பிங்க.கோபம்,அதி உஷ்ணம் பாதிக்கும். சகோதரர்,எதிரிகள் தொல்லை பீக் லெவலுக்கு போகலாம். மின்சாரம், நெருப்பு,கூர்மையான ஆயுதத்தால் பாதிப்பு ஏற்படலாம்.
துலா?
உங்க ராசிக்கு செவ்வாய் 2,7 க்குடையவர். செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 12 ஆவது ராசிங்கறதால (விரயம்) கைக்காசு விரயமாகலாம். சகோதரர்,பூமி வகையறாவில் முதலீடு செய்யவேண்டி வரலாம். குடும்பத்தை பிரிய வேண்டி வரலாம். அ “என் பொண்டாட்டி ஊருக்கு போறா”ன்னு பீத்திக்க வேண்டி வரலாம். இல்லின்னா தோசை கரண்டியில அடி கியாரண்டி.
விருச்சிகம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 1-6 க்குடையவர் . செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 11 ஆவது ராசி . .ஆக இவிக ஓரளவு பெட்டர் ரிசல்ட்ஸை எதிர்ப்பார்க்கலாம். ஹெல்த் பிக் அப் ஆகும். கான்ஃபிடன்டா ஃபீல் பண்ணலாம். சிலருக்கு போலீஸ்,ரயில்வே,ரியல் எஸ்டேட் ,எலக்ட் ரானிக்ஸ் வகையறாவுல ஒர்க் அவுட் ஆகலாம்.
தனுசு?
உங்க ராசிக்கு செவ்வாய் 12,5 க்குடையவர். செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 10 ஆவது ராசி. விற்பனை பிரிவில் -அதுவும் ரியல் எஸ்டேட், எலக்ட் ரானிக்ஸ்,நெருப்பு சம்பந்தப்பட்ட,ஃப்யூயல் சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்தால் டார்கெட் ரீச் ஆயிரும். இல்லின்னா உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் ஆருக்கோ போயிரும். திடீர்னு அதிர்ஷ்ட வசமா புது ப்ராஜக்ட்/வேலை மாட்டலாம்.
மகரம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 11,4 க்குடையவர். க செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 9 ஆவது ராசி. ஃபாதர்லி பர்சன் ஒருவர் ஒரு புஷ் அப் கொடுக்கலாம். பூர்விக சொத்து கை கொடுக்கலாம். அம்மா ,அம்மா வழி உறவுகள் அனுகூலம். நிறைய செலவழிச்சு தெற்கு திசையில ஒரு தூர பயணம் போய் வரலாம். திரும்பி வந்து சேமிப்புலயோ,முதலீட்டுலயோ கை வைக்க வேண்டி வரலாம்.
கும்பம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 10,3 க்குடையவர் . செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 8 ஆவது ராசி. திடீர்னு வேலையில ப்ரஷர் அதிகரிக்கும். கடுமையா உழைக்க வேண்டி வரும். இளைய சகோதரம் முட்டிக்கும்.ஸ்பீக்கர் தகராறு பண்ணும் (காது) .வித் இன் தி சிட்டி ஜர்னி பண்ணும் போது முட்டி சில்லு பேரலாம்.
மீனம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 9,2 க்குடையவர் .கன்னி 7 ஆவது ராசி. கணவர்/காதலருக்கு எக்கனாமிக்கலா ஒரு லிஃப்ட் கிடைக்கலாம். ரெவின்யூ இன் கம் மட்டுமில்லை,லம்பாவும் எதுனா கிட்டலாம்.அவரோடயே கொடுக்கல் வாங்கல் செய்விங்க.
எச்சரிக்கை:
மேட்டர் இத்தோட முடியலிங்ணா. பிப்ரவரி 4 ஆம் தேதி துலா ராசிக்கு போறாரு. (வராரு?) இதுக்குண்டான பலன் பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள்ள எழுதிர்ரன். இதுல ஒரு சிக்கலும் இருக்கு. ஏன்னா ஏற்கெனவே இங்கே சனி ராகு இருக்காய்ங்க.
மேஷ,விருச்சிக ராசிக்கும், மகர,கும்ப ராசிகளுக்கும் பல்பு தேன்.
மார்ச் 2 ஆம் தேதி இங்கயே (துலாம்) வக்ரமாயிர்ராரு.இது மேஷ விருச்சிக ராசிக்காரவுகளுக்கு பல்பு. மகர கும்ப ராசிகளுக்கு கொஞ்சம் போல ரிலீஃப்.
மத்த ராசிக்காரவுகளுக்கு பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள்ள நாம எழுதப்போற துலா செவ் : சாதாரண நிலை சஞ்சார பலன் எல்லாம் தலை கீழா மாறும்.அங்கே நெல்லது சொல்லியிருந்தா கெட்டது நடக்கும். கெட்டது சொல்லியிருந்தா நெல்லது நடக்கும்.
மேலும் செவ் மார்ச் 25 ஆம் தேதி வக்ரமாவே கன்னிக்கு வராரு. இன்றைய பதிவில் சொல்லியிருக்கிற பலன்லாம் மேஷ,விருச்சிகம் தவிர்த்த ராசிக்காரர்களுக்கு தலை கீழா மாறும் ( மேஷ,விருச்சிகத்துக்கு மட்டும் பல்புதேன்)
மே20 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாயிருது. இன்றைய பதிவுல சொன்ன பலன்லாம் நடக்க ஆரம்பிக்கும். ஜூலை 14 ஆம் தேதி சாதாரண நிலையில செவ் துலாமுக்கு வராரு.
அங்கே ஏற்கெனவே சனி,ராகு இருப்பாய்ங்க. எனவே மகர,கும்ப ராசிகளுக்கும்,மேஷ விருச்சிக ராசிகளுக்கும் பல்பு.
துலா ராசிக்கும் பல்புதேன்.
மேக்ரோ:
சாதாரணமா செவ் வக்ரமானா தென் பகுதிகளில் கலவரம்,விபத்து,தீ விபத்துல்லாம் நடக்கும். போலீஸ்,ராணுவ புரட்சி நடக்கிறதுக்கும் வாய்ப்புண்டு. முக்கியமா மாணவர்கள் போராட்டம் வெடிக்கலாம். ராம சேனை வானர சேனையா மாறலாம். ஷாக் சர்க்யூட் பவர் கட் பீக் லெவலுக்கு போறதும் நடக்கலாம்.
கன்னி,துலாம்ல இந்த சமாசாரம்லாம் நடக்கிறதால ஆடிட்டர்கள்,டாக்டர்கள்,ஜோதிடர்கள்,எழுத்தாளர்களுக்கு பாதிப்பு வரலாம் அ அவர்களால் பிறருக்கு பாதிப்பு வரலாம்.
பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவர். காதல்,நட்பு வகையில் கொடூரங்கள் ,பரிதாபங்கள் நடக்கலாம். நில பேரம்,நில ஆக்கிரமிப்பு வழக்குகள் கொத்தாய் வெளிவரலாம். இவற்றுக்கு எதிரான தீர்ப்புகள் வரலாம். ரத்தக்களறி ரணக்களறி நடக்கலாம்.

செவ்வாயும் கில்மாவும் (மீள்பதிவு)

ஜோதிடமும் கில்மாவும் புக்ல வர வேண்டிய ஐட்டங்களை தொகுத்துக்கிட்டிருக்கன்.ஃபான்ட் ப்ராப்ளம்.அதனால இந்த மீள் பதிவு .

இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக “உணர்ச்சிகள்” தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)

எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே

இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்…….வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். ” விளக்கை அணை” “அம்மா தூங்கட்டும் – ஆட்டுக்குட்டி தூங்கட்டும்” செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரும். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் ” ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க”னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறைய லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) – நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) “ஏடாகூடமா”பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.

1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

செவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம் : 3

அண்ணே வணக்கம்ணே !
கடந்த 2 நாட்களாக செவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம்னு சொல்லிக்கிட்டு வரேன். செவ் பலமில்லாதவுகளால – செவ் பலமில்லாதவுகளுக்கு என்னென்ன இம்சை எல்லாம் ஏற்படுதுன்னு சொல்லிக்கிட்டு வரேனில்லையா. அதுல மிச்சம் மீதிய இன்னைக்கு பைசல் பண்ணிருவம். அதுக்கு பிறவு தீர்வுகளை பார்ப்போம்.

கூலிப்படைகள்:
செவ் அக்னிதத்துவ ராசி. அக்னியோட இயல்பு மேனோக்கி பாயறது. ஒரு தீப்பந்தத்தை தலைகீழா பிடிச்சாலும் ஜுவாலை மேல் நோக்கி தான் திரும்பும்.

செவ் பலம் உள்ளவன் மைண்ட்ல ஒரு நம்பிக்கை இருக்கும். பொறுமை இருக்கும். என்னைக்கோ ஒரு நாள் மேலுக்கு வந்துருவம்ங்கற உள்ளுணர்வு இருக்கும். அதனால அவன் லீகல் மெத்தட்ஸ்ல ,மோரலோட மேலுக்கு வர பார்ப்பான்.

ஆனால் செவ் பலமில்லாதவனுக்கு மைண்ட்ல அவ நம்பிக்கை இருக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும். நாம ஏமாந்தா தரையோட தரையா தேச்சு அரக்கிருவானுவங்கற பதட்டம் இருக்கும். இப்ப விட்டா எப்பவும் மேலுக்கு வரமுடியாதுங்கற பரபரப்பு இருக்கும்.

இப்படியா கொத்தவுக தான் இல்லீகல் மெத்தட்ஸுக்கு டைவர்ட் ஆயிர்ராய்ங்க. மொதல்ல அவனை இவனை வெட்டுவான்.ஆனால் இது இவன் வெட்டப்படறதுக்கு காரணத்தை உருவாக்கத்தேங்கறது அவனுக்கு தெரியாதுல்ல.

மேலும் செவ் கௌமார தசைக்கு காரகன்.அதாவது இளமை காலத்தை ரெம்ப எஃபெக்ட் பண்ணுவார். இன்னைக்கு கூலிப்படையில உள்ளவுக மெஜாரிட்டி மீசை கூட சரியா முளைக்காதவுக தான்.

ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு:
செவ் ரத்தத்துக்கு காரகன்.செவ் கெட்டா ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு வர்ரதெல்லாம் சகஜமப்பா.. இதையெல்லாம் கண்டுக்காம விட்டுட்டா இதய நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக்ல முடியவும் வாய்ப்பிருக்கு.

மூலம்:
உராய்வின் போது / இயக்கத்தின் போது வெப்பம் உண்டாகும் இது பொதுவிதி. நம்ம பாடியிலயும் எத்தனையோ இயக்கங்கள் அதனால வெப்பம் ஏற்படுது. கொழுப்பு எரிக்கப்படுவதால் வெப்பம் ஏற்படுகிறதுங்கறாய்ங்க.

ஹ்யூமன் பாடி ஒரு அற்புதமான தானியங்கி இயந்திரம். உடல் வெப்பம் அதிகரிக்கும் போது அதை குறைப்பதற்கான ஏற்பாடு பாடியில இருக்கு.. இல்லேங்கலை. ஆனால் இதையும் மீறி வெப்பம் அதிகரிக்கும் போது ………?

உணவுகளில் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளும் உண்டு.வெப்பத்தை தணிக்கும் உணவுகளும் உண்டு. பாடியிலயும் ஹீட்டு ,கூல் உண்டு.

இது மட்டுமில்லிங்ணா உணர்வுகளுக்கும் பாடியோட டெம்பரேச்சரை பாதிக்கிற நேச்சர் உண்டு. முக்கியமா கோபம் அதிகரிக்கும் போது டெம்பரேச்சர் எகிறிக்கும். ( நமக்குன்னா கீழ இருந்து மேல வரை காய்ஞ்சுரும். கண்ணெல்லாம் பொங்கும். ) இன்னொரு சந்தர்ப்பத்துலயும் எகிறிக்கும்.அது என்னனு சனத்துக்கு தெரியும்.
அந்த மேட்டர்ல க்ளைமேக்ஸ்ல இரட்டிப்பா கூல் ஆயிரும். நோ ப்ராப்ளம்.

அல்லாபத்தியில சூடு,சீதளம்லாம் இல்லைம்பாய்ங்க. இதுக்கெல்லாம் கண்ணதாசன் ஏற்கெனவே பதில் சொல்லியாச்சு. அதனால நாம அம்பேல்.

சாதாரணமா செவ் பலமில்லாத ஜாதகர்கள் அவசரக்குடுக்கைகளா இருப்பாய்ங்க. இது அவிக உணவெடுக்கும் முறையிலும் பிரதிபலிக்கும். லபக்கு லபக்குன்னு விழுங்கிருவாய்ங்க. ( நொறுங்க தின்றால் நூறு வயது)

நொறுங்க தின்னாலுமே வவுத்து பகுதியில வெப்பம் உருவாகும். இதுல அள்ளி தின்னா எந்த அளவு உருவாகும்?

மேலும் இவிகளுக்கு வன்முறையில விருப்பம் இருக்கும். இது மாமிச உணவுகளின் மீது விருப்பமாக வெளிப்படும். கோழி ,ஆடுல்லாம் ஹீட்.

பூமிக்கடியில விளையற பொருட்கள் உடல் உஷ்ணத்தை எகிறச்செய்யும். செவ் பூமிகாரகனில்லையா.. அதனால செவ் பலமில்லாத ஜாதகர்கள் தங்களில் இல்லாத தாதுக்கள் கிடைக்கும்ங்கற உள்ளுணர்வுல இந்த உணவுகளை அதிகம் சுவைக்கலாம்.

இது போன்ற பல காரணங்களால் மூலம் (பைல்ஸ்) ஏற்பட வாய்ப்பிருக்கு.

கருக்கலைப்பு -கருச்சிதைவு:

கரு கலையவோ ,சிதையவோ மெடிக்கலா பல காரணங்கள் இருக்கலாம். அந்த காரணங்களுக்கு பிள்ளையார் சுழி போடறதென்னவோ செவ்வாய் பலமின்மையால் ஏற்படும் ரத்த சோகை , ரத்த கொதிப்பு, அதி உஷ்ணம் , கோபம் , அதி .. காரம் ( அதாங்க காரம் அதிகமா சேர்த்துக்கறது)

கணவன் மனைவி இடையிலான விவகாரங்கள் கொலையில் முடிவது:

செவ்வாய் மட்டுமில்ல மற்ற எட்டு கிரகங்களும் கூட கணவன் மனைவி இடையில பிரச்சினைகளை உருவாக்கலாம். கொலை ரேஞ்சுக்கு கொண்டு போறது மட்டும் செவ்வாய் தான். (கமுக்கமா விசம் வச்சு காரியத்தை முடிக்கறதுல ராகு -கேதுக்கள் பெசலிஸ்டுங்க )

அது ஏன்?

சூரியன்னா ஈகோ. மனைவி உங்க ஈகோவை சீண்டறாய்ங்கன்னா நீங்க அவிக ஈகோவை சீண்டலாம். சந்திரன்னா மனம் . மனைவி உங்க மனசை நோகடிச்சா நீங்க அவிக மனசை நோகடிக்கலாம். Tit for Tat !

ஆனால் செவ்வாயை பொருத்தவரை ஒரு வித்த போரை துவக்கி வச்சுருவாரு. (யுத்தகாரகன்) இத்தனாம்பெரிய தொடரை செவ் பத்து எளுதிக்கிட்டிருக்கம் . ஸ்போர்ட்ஸுக்கும் செவ் தான் காரகன்னு சொன்னேனா இல்லையா தெரியலை.

மொத உலக யுத்தம் ஆரம்பிக்க ஒலிம்பிக்சை பார்க்க போன ஆஸ்திரிய இளவரசர் கொல்லப்பட்டதுதான். விளையாட்டே யுத்தத்துல முடியறப்போ .. யுத்தம் கொலையில முடியறதெல்லாம் சகஜமப்பா.

ஒரு ஆண் பெண் செக்ஸ்ல ஈடுபடறாய்ங்கன்னா ஒருத்தர் மேல அடுத்தவருக்கு கொலை வெறி இருக்குன்னு அருத்தம். ஸ்தூலமா நடக்கிறது உடலுறவுன்னாலும் – சைக்கலாஜிக்கலா நடக்கிறதென்னவோ கொலை தான்.

உடலுறவு ஆழமானதாக – இருவரும் சம காலத்தில் உச்சம் பெறுவதாக அமைந்துவிட்டால் கொலை உடலுறவிலேயே அரங்கேறிவிடும்.பிரச்சினையே இருக்காது.

ரத்தம் கெட்டு இருப்பதாலோ -உஷ்ண கோளாறுகளாலோ உடலுறவில் சிக்கல் ஏற்பட்டு அரைகுறையாக முடிந்தால் கொலை வெறி மிச்சமிருக்கும். யுத்தம் துவங்கிரும். யுத்தம் கொலையில் முடியும்.

உடலுறவும் ஒரு யுத்தம் தான்:

யுத்தத்துல எப்படி வியூகங்கள் இருக்குமோ உடலுறவிலும் வியூகங்கள் உண்டு. முதலில் கண்களால் , உடல் வெப்பத்தால் , பேச்சால் துவக்கபப்டனும்.

பிறகு லேசான தொடுகை ,தடவல்,உரசல் , முற்றுக்கை , கோட்டை கதவை உடைத்தல் ,படை உட்புகுதல் இப்படி எல்லாமே ஒரு யுத்தம் போல தான் நடக்கனும். ஒரு வியூகப்படி நடக்கனும்.

செவ் பலமில்லாத ஜாதகர் என்னத்தை கிழிக்க முடியும்?

எனவே உடலுறவில் கொலை வெறி ,வன்முறை தாகம்லாம் தீரவே தீராது. குடும்ப வாழ்வில் வெடிக்கும்.

கள்ள தொடர்புகள் காரணமாய் கொலைகள்:

ஒரு கணவன் -மனைவி – அவிகளுக்கு இடையில “எல்லாம்” பர்ஃபெக்டா நடக்குதுன்னு வைங்க . எல்லாம்னா உடலுறவு – உட்பட.

அந்த கணவனோ மனைவியோ இன்னொரு உறவை தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை. அட .. அப்படியே தேடிப்போறாருன்னு வைங்க.

அடுத்தவருடைய உணர்ச்சி எப்படி இருக்கும்? கோபம் வருமா? ஊஹூம்.. எல்லாம் பர்ஃபெக்டா தானே இருந்தது .ஏன் இப்படிங்கற கழிவிரக்கம்தான் தோணும். ச்சீன்னு ஆயிரும்.

இதே மேற்படி சோடியின் இடையில் எதுவுமே பர்ஃபெக்டா நடக்கலை. முக்கியமா தாம்பத்யத்துல குறை இருக்கு. இன்னொரு தொடர்பை தேடிப்போறாய்ங்கன்னா என்னா ஆகும்?

இருட்டுல நடந்த/ நடக்காத மேட்டரை வெளிச்சத்துக்கு கொண்டுவர்ரியாங்கற ஆத்திரம் பிறக்கும். இது ஏறக்குறைய கொலை. கொலைக்கு ரியாக்சன் என்ன ? கொலை தானே..

ஓகே ஓகே… நாளைக்கு இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வுன்னு பார்த்துட்டு நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல ராகு -கேதுக்களை பற்றி பார்க்க ஆரம்பிச்சுரலாம். உடுங்க ஜூட்டு..