உங்களுக்கும் ராஜயோகம் :19

Gopalapuram

அண்ணே வணக்கம்ணே ! ராஜயோகம்னா தெரியும்ல? ஆட்சி/அதிகாரம். இந்த ராஜயோகத்தை ராஜகிரகங்கள் மட்டும் தர்ரதில்லை . எல்லா கிரகங்களும் தரமுடியும். ஏன்னா காலமாற்றம் அப்படி இதை எல்லாம் ஏற்கெனவே சொல்லி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு.

கடந்த பதிவுல செவ் பல்பு வாங்கியிருந்தா என்னெல்லாம் நடக்கும்? நடக்கறதை நடக்க விட்டா அதுவே எப்படி பரிகாரமா ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லியிருந்தேன் ( நம்ம வாழ்க்கையில இருந்தே )

இந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்கள் தான். பதிவுக்கு போயிரலாமா?

1.போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) கூலிங் க்ளாஸ் அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .தொப்பி அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .மார்ஷல் ஆர்ட்ஸ் பழகவும்.கு.பட்சம் ட்ராக் சூட் போட்டு நடை பயிற்சி .

2.கழுத்தில் முருகன் கையில் உள்ள வேல் டாலர் /பாக்கு நிற கயிற்றில் கோர்த்து அணிதல்.கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.ரத்த தானம் செய்க. பிரவுன் கலர் பர்சில் 12 கைகளிலும் ஆயுதம் தாங்கிய முருகன் படம். மொபைல்/பிசி/லேப்டாப்ல எரிமலை,தீவிபத்து ,யுத்தம் தொடர்பான ஸ்க்ரீன் சேவர் வச்சுக்கங்க.
4.வீட்டு ஹாலில் போர்க்கள காட்சி கொண்ட போஸ்டர்.போர் வீரன் சிலை .ஹாலில் உள்ள சோஃபா கவர் /ஸ்க்ரீன்ஸ் எல்லாமே பிரவுன் நிறம். இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தாயும் செய்தல் நலம்.கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.வண்டி நிறம் பிரவுன் எனில் நல்லது . வண்டியில் எங்கேனும் ஏதேனும் ஒரு ஆயுத வடிவத்தை ஸ்டிக்கரிங் செய்து கொள்ளவும்.

5.முதல் குழந்தையை உடனே பெற்றுக்கொள்ளவும் (ப்ளான் பண்றது /தள்ளி போடறதுல்லாம் வேண்டாம்) .மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்த பின் டேக் ஆல் ப்ரிக்காஷன்ஸ்.ஒரு வேளை முதல் கரு அபார்ட் ஆயிட்டாலும் பொஞ்சாதிக்கு நல்ல பூஸ்ட் கொடுத்து அடுத்த முயற்சியில் குழந்தை பெற்றுக்கொண்டு விடவும்.முருகன் கை வேலை தியானிக்கவும்.வேல் பூசை செய்யவும்.குழந்தைகளுக்கும் முருகன் பெயர்களையே சூட்டவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை குழந்தைகளும் செய்தல் நலம்.

7.சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக. இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க)இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை மனைவி/கணவரும் செய்தல் நலம்.

8.வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், சத்ரிய குலத்தினர், சமையல் , போட்டி, ஸ்போர்ட்ஸ், , பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம் ஆகிய விஷயங்களில் முடிந்தவரை விலகி இருங்கள் தவிர்க்க முடியாத பட்சம் அலார்ட்டா டீல் பண்ணுங்க.

வருடம் ஒரு முறை / தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன் ஒரு சேவல் ஒன்றை விலைக்கு வாங்கி முருகன் கோவிலுக்கு சென்று 9 சுற்று சுற்றி -9 ஆவது சுற்றில் அந்த சேவலை அங்கேயே விட்டு விட்டு /அல்லது கோவில் மேலாளரிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடவும்.

9.சொத்து, சேமிப்புக்க‌ள்,முதலீடு ,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாக்கு நிற ஃபைல்ல போட்டு ஃபைல் மேல வேல் ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வைங்க. தூரப்பயணத்தின் போது பிரவுன் கலர் ஏர் பேக் . கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தந்தையும் செய்தல் நலம்.

12.படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை .படுக்கை அறையின் பெயிண்ட்,பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் அனைத்தும் பாக்கு நிறம். செருப்பும் இதே நிறம்.

(குறிப்பு: என்னடா சீரியல் நெம்பர் எகிறியிருக்கேனு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. இது சீரியல் நெம்பர் இல்லிங்ணா செவ் ஜாதகத்துல லக்னாத் எத்தனையாவது வீட்ல நிற்கிறாருனு காட்டுதுங்ணா)
ஸ்..அப்பாடா அடுத்த பதிவுல ராகு ஜாதகத்துல வலிமையா இருந்தா எப்படி ராஜயோகம் கொடுப்பாரு..பல்பு வாங்கியிருந்தா எப்படி ஆப்படிப்பாருன்னு பார்ப்பமா?
உடுங்க ஜூட்டு

செவ்வாயை டபாய்க்க முடியுமா?

null

கிரகம் தர்ர பாதிப்பும் – நமக்கு வர்ர நோயும் ஒன்னு தேன். ரெண்டையும் ஃப்ரீயா உட்டா அதோட ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.

நோயை ட்ரீட் பண்ணா அந்த நோய் அமுக்கப்பட்டு புது வடிவத்தோட மறுபடி தலை காட்டும். ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லிங்கறாப்ல வீசிங்கை டபாய்க்க டாக்டர்கிட்டே ஒரு ஊசி போட்டுக்கிட்ட பாவத்துக்கு அது ஸ்கின் ப்ராப்ளத்துல கொண்டு வந்து விட்டுருச்சு. இதுக்கு தினசரி மாத்திரை விழுங்கிக்கிட்டிருக்கேன். இது எங்க போய் முடிய போகுதோ? வீசிங்கோட விட்டிருந்தா மிஞ்சிப்போனா அரை மணி நேரம் செட் ரைட் ஆயிட்டிருக்கும்.

கிரகம் தர்ர எஃபெக்ட் கூட இப்படித்தான். அது ப்ரிலிமினரியா தர்ர எஃபெக்டை முழுமனசோட ஏத்துக்கிட்டா கதை க்ளோஸு. பிரச்சினையை விட அந்த பிரச்சினைக்கான தீர்வுதான் பிரச்சினைய விட பெரிய பிரச்சினையாயிரும்ங்கறது 100 சதம் நெஜம் தேன்.

நம்ம லேப்ல நாமதேன் மொத எலி. நம்ம ஜாதகத்துல 4 ல் செவ். இவரோட கேதுவும் இருக்காரு. 4 ங்கறது தாய்,வீடு,கல்வி,வாகனம்,இத்யம் ஆகிய விஷயங்களை காட்டுது. சின்னவயசுல கொப்புளம்லாம் வரும். எங்க பாட்டிதான் கஞ்சி காய்ச்சி எங்கயோ கொண்டு போய் வச்சுட்டு வரும். கொணமாயிரும்(?)

சாமானியமா அடியே படாது. பட்டா தாளி கிளிஞ்சு தைச்சே ஆகனும். ஒரு தாட்டி பந்தை கூரை மேல போட்டு விளையாடிக்கிட்டிருந்தம். பந்து மேல நின்னுருச்சு. ஒட்டடை குச்சியை எடுத்து கிளறினம்.

லவ் பண்ணாத குட்டிய லந்து பண்ணா அவள் மஹிளா ஸ்டேஷனுக்கு எஸ்.எம்.எஸ் அடிச்சு பெண் காவலரை வரவழைச்சுர்ராப்ல அந்த பந்து தள்ளி நின்னுக்கிட்டு அதுக்கப்பாறம் இருந்த ஓட்டை அனுப்பி விட்டுருச்சு. கிளிஞ்சு தையல்.

ஹை ஸ்கூலுதேன்.ஆறா ஏழா ஞா இல்லை. சின்னை கைகலப்பு. எதிராளி எருமையா இருக்கான். நமுக்கு இந்த ஸ்ட்ரீட் ஃபைட் டெக்னிக் எல்லாம் அத்துப்படி ..கொய்யால ஒரே ஒரு கொடக்கான் .செமர்த்தியா மாட்டிக்கிச்சு. அது தந்த உற்சாகத்துல ஒரு டிச்சி.

இங்கனதான் ஆன்டி க்ளைமாக்ஸ். அந்த மவனுக்கு லேசா புடைச்சுருச்சு. நமுக்கு மொகமெல்லாம் நனைஞ்சுருச்சு. ரத்தம்.

அப்பா ஸ்டேட்ல உள்ள எல்லா ஜில்லாவுலயும் வேலை பார்த்த பார்ட்டி. அம்மா இங்கே மாமியார், மச்சினன்,நாத்தனாருன்னு ஒரே இமிசை. ஊடா .. ஓட்டு வீடு .பின்னாடி திறந்தவெளி. நாய் குட்டி சைஸுக்கு எலி. இஷ்டாத்துக்கு பாக் ஊடுருவல்காரவுக மாதிரி தோண்டி வைக்கும் ( கேது?) வாகனம்னா .. ஏறக்குறைய அரை டஜன் சைக்கிள்களை தொலைச்சிருக்கம். ( வித்து)

நாம தலையெடுத்து – அடச்சே.. தலை தூக்கி ரெண்டு வருசத்துக்கு மிந்தி வாங்கின டக்கோட்டா பஜாஜ் சன்னிதான் வாகனம்.கல்வின்னா வெற்றி நடைல்லாம் பத்தாம் கிளாசோட ஓவரு.

இதை இந்த ஸ்டேஜ்லயே விட்டிருந்தா ப்ராப்ளம் ஓவராயிருக்கும். கடேசி காலத்துல அப்பாரு சொந்த ஊருக்கே ட்ரான்ஸ்ஃபர் ஆயிட்டாரு. ( தூக்கி போட வேற ஜில்லா பாக்கி இருந்தா தானே) . அவருதும் கடகலக்னம்தேன்.

கடகலக்னக்காரவுகல்லாம் வீடு கட்டி /வாங்கித்தேன் நாசமா போறது. ( தலை எழுத்து நல்லாருந்தா பாதியில நின்னுரும்) ஒரு மழைக்கு வீடு விழுந்துருச்சு. கோழிப்பண்ணைக்கு போடற லைட் ரூஃப் போட்டாரு. அது காத்துக்கு அடிச்சிட்டு போக பார்க்க சிமெண்ட் ஸ்லாப்ல கூரை போட்டு கட்டினாரு ஊடு.

அம்மாவுக்கு கான்சர். நாம இன்டர்ல செகண்ட் க்ளாஸ் அம்மா டிக்கெட்டு போட்டாச்சு. டிகிரியில ஃபைனல் இயர்ல கோட்டு. அதுக்கப்பாறம் . லவ்ஸ் பண்ணி கண்ணாலம் பண்ணி நாம வீட்டை விட்டே வாக் அவுட். .

ஆக தாய்,வீடு, கல்வி ,வாகனம். எல்லாம் க்ளீன் போல்ட். ஸ்தூலமா பார்க்கும் போது இதெல்லாம் போயிந்தி போயிந்தி தான்.

ஆனால் செவ்வாயோட சேர்ந்த கேது -கேதுவுக்கு ஏழுல -லக்னத்துக்கு பத்துல நின்ன ராகு வேற விதத்துல இதையெல்லாம் காம்பன்சேட் பண்ணிக்கிட்டே வந்தாய்ங்க.

தாய்:
இந்த ஒலகத்துக்கெல்லாம் ஒரே தாய். இங்கன உள்ள தாய் எல்லாம் வெறும் ஜிராக்ஸுங்கற தெளிவு வந்துருச்சு.

வீடு:

இந்திய நாடே என் வீடு. இதுல சில பிரச்சினைகள் இருக்கு. ஒரு நாள் இல்லை ஒரு நாள் தீர்த்துரனும்ங்கற லட்சியம் வந்தது. லட்சிய சாதனைக்கு நாம செய்த முயற்சிகளால வறுமை வந்தது . வறுமைன்னா …….. “தேழைமையோடும் ஏழைமை பேசேல்“னு பெருசுக சொல்லி வச்சிருக்கு. ஆனாலும் இதெல்லாம் ஜஸ்ட் ஃப்ளாஷ் பேக் தானே.

வாத்யாரு “தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று”னு ஆரம்பிச்சு அண்ணாவை பத்தி பாடும் போது
“தம் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்”னு முடிப்பாரு. நாம அண்ணா ரேஞ்சுக்கு பிஸ்தா இல்லின்னாலும் ட்ரஸ்ட் மூலமா ஒரு ஆசாமிக்கு அஞ்சாயிரம் ரூவா செக் வாங்கி கொடுத்து -ட்ரெய்ன் ஏத்தி விட்டுட்டு கையில இருந்த காசை அவருக்கு கொடுத்தனுப்பிட்டு பட்டினியோட படுத்துக்கிட்ட ராத்திரில்லாம் உண்டு.

வறுமைங்கறது இன்செக்யூரிட்டிய கொடுக்கும். இன்செக்யூரிட்டி உச்சத்துக்கு போனா அந்த இன்செக்யூரிட்டியிலயே ஒரு செக்யூரிட்டி வந்துரும். முழுக்க நனைஞ்சவனுக்கு முக்காடு எதுக்கும்பாய்ங்களே அதை போல.

வறுமை சனங்களோட நிஜ ஸ்வரூபத்தை காட்டிருச்சு. ஆரம்பத்துல நமக்கும் ஆத்திரம் ,ஆவேசம்லாம் வந்திருக்கு.( கொய்யால ..எனக்கேவாங்கறாப்ல ஆயிரும்) ஆனால் செவ்வாயோட சேர்ந்த கேது ஒரு புரிதலை கொடுத்துட்டாரு.

இந்த வீடோ -இந்த நாடோ நம்ம வீடு இல்லை. நம்ம வீடு வேற .. இந்த உலகம் ஜஸ்ட் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டு. நம்ம வீடு ஜஸ்ட் ஒரு கஸ்ட் ஹவுஸு. பொஞ்சாதி,மவள் எல்லாம் பேக்கேஜ் டூர்ல வந்த கோ ட்ராவல்ர்ஸுங்கற தெளிவு ஏற்பட்டுருச்சு.

கல்வி:

நாலாமிடத்து செவ் கொஞ்சம் தூங்கியிருந்தா டிகிரி முடிச்சிருப்பம். மிஞ்சிப்போனா சி.ஏ. நம்ம கேரக்டருக்கு எவன் கிட்டயும் -எந்த நிறுவனத்துலயும் நிலைச்சிருக்க முடியாது. தனிக்கச்சேரி தான் செய்திருக்கனும்.

இனனிக்கு எவனையெல்லாம் கிழிக்கிறோமோ அவனுக்கெல்லாம் வரி ஏய்ப்புக்கு ஐடியா கொடுத்துக்கிட்டு குற்ற உணர்ச்சியில தவிச்சிருக்கனும். இல்லின்னா போட்டு கொடுத்து துரோகி பட்டம் வாங்கியிருக்கனும். அதை விடுங்க.

நமக்கு வேற ஒரு கல்வி கிடைச்சுருச்சு. அது மேற்படி கல்வியெல்லாம் கச்சாடாங்கற தெளிவை கொடுக்கிற கல்வி.

வாகனம்:
பாரதியார் சொன்ன ஞான ரதம் .( என்னதான் அப்பப்போ நொண்டியடிச்சாலும் -ஸ்டார்ட் ஆகாம தகராறு பண்ணினாலும் சோக் போட்டு ஸ்டார்ட் பண்ணிர்ரம்ல .ஒரு தாட்டி டேக் ஆஃப் ஆயிருச்சுன்னா அதை லேண்ட் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துருதுன்னா பாருங்களேன் ).

இதயம்:

இதான் டவுட் கேஸா இருக்கு. அதுலயும் ரெண்டு வண்டி வாங்கின பிறவு – நடக்கிறது குறைஞ்சு – உட்கார்ந்த மேனிக்கு கதை பண்ணிக்கிட்டிருக்கம். ஒரு நாளைக்கு ரெண்டு கட்டு பீடி. அரை பாக்கெட் சிகரட்டு. எல்லாம் சேர்ந்து ஒரு நா நிறுத்திரப்போகுதா.. இல்லை இன்னம் கொஞ்சம் வசதி வந்து சீக்கிரமே சுற்றுப்பயணத்தை ஆரம்பிச்சுரப்போறமா தெரியலை..

செவ்வாயை எப்படி டபாய்க்கிறதுன்னு ஆரம்பிச்சு சொந்தகதையில டைவர்ட் ஆயிட்டன். நம்ம சொந்தகதையில நாம நாலில் இருந்த செவ்வாயை நாம டபாய்ச்சது சின்ன சின்ன டாக்டீஸ் மூலமாத்தான்.

1.ரத்த தானம் -அதுவும் சகட்டுமேனிக்கு 1992 ல ஆரம்பிச்சு 2002 வரை வருசத்துக்கு 2 தடவை கியாரண்டி.சில வருசம் 3 மாசத்துக்கொருதரம் கூட தந்திருக்கன். அதுக்கப்பாறம் வருசத்துக்கு ஒரு தரம். இப்பம் நேரமிலலங்கற சாக்கை வச்சு ரெண்டு வருசத்துக்கு ஒரு தரம் தந்துக்கிட்டிருக்கம்.

2.இப்பம் குடியிருக்கிற வீட்ல 3 போர்ஷன்லயும் முஸ்லீம்ஸ் தான். (கேது =இதரமதத்தவர்கள்)

செவ்வாய்க்கு டேக்கா கொடுக்க இன்னம் நிறைய டிப்ஸ் எல்லாம் இருக்கு. 3,6,10,11 தவிர மத்த இடங்கள்ள செவ்வாய் இருந்தா அவருக்கு எப்படி சோப்பு போட்டறது குளிப்பாட்டறதுங்கற விவரங்களை எல்லாம் நாளைக்கு சொல்லிர்ரனே.

செவ் தோஷம் -பலான பிரச்சினைகள் (பெண்) 4

அண்ணே வணக்கம்ணே !

செவ் தோஷத்தை பொறுத்தவரை ஆண்,பெண்கள் விஷயத்துல எப்படி வேலை செய்யுதுன்னு சமீப காலமா பார்த்துக்கிட்டிருக்கோம். செவ்வாய்க்கும் – மாதவிலக்கு சக்கரத்துக்கும் ; மா.வி.சக்கரத்துக்கும் – பெண்களின் செக்ஸ் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை கோடி காட்டியிருந்தேன்.

தோஷமுள்ளவர் -தோஷமில்லாதவர் இணையும் போது பிரச்சினைகள் வரும். தோஷமுள்ளவர்களையே சேர்த்து வைக்கும் போது தோஷமில்லாதவுக சேஃப் ஆயிருவாய்ங்களே கண்டி தோஷமுள்ளவர்களுக்கு ஒரு இழவு நன்மையும் இல்லைன்னும் சொல்லியிருந்தேன்.

செவ்வாயின் முக்கிய காரகமான கோபத்தை பற்றி பார்ப்போம். கோபங்கறதே பலவீனத்தின் வெளிப்பாடு.உடலில் போதுமான ரத்தம், அந்த ரத்தம் சுத்திகரிக்க படுவதில் பிரச்சினை இல்லாமை, ரத்தத்தில் இருக்கவேண்டிய மேட்டருல்லாம் நார்மலா இருக்கிறது ,ரத்த ஓட்டத்துல பிரச்சினை இல்லாம இருக்கிறது ..இதெல்லாம் தான் மன்சனுக்கு வலிமையை தருது.

வலிமை இருக்கும்போது எல்லாமே தன் கையில் -தன் கட்டுப்பாட்டில் இருப்பதை போல உணருவோம். வலிமை இல்லாத போது குடி முழுகிப்போனாப்ல டென்ஷன் ஆயிருவம். ஜாதகத்துல செவ் கெட்டா ரத்தம் கெடும் -ரத்தம் கெட்டா வலிமை குன்றும். வலிமை குன்றினால் கோபம் வரும்.

புருசங்காரன் பொஞ்சாதி மேல கோவத்தை காட்டினா என்ன ஆகும்? (கமெண்ட் படிவத்தில் பத்துவரிகளில் எழுதவும்)

பொஞ்சாதி புருசன் மேல கோவத்தை காட்டினா என்ன ஆகும்? (பத்துவரிகளில் கமெண்ட் படிவத்தில் எழுதவும்)

கோபம் சாதா சமயத்துல வந்தாலே நாறிரும். இதுல பலான மேட்டர்ல கோபம் வந்தா என்னாகும்? ஏதோ படத்துல காமெடி சீன்.

புருசன் காரன் பயில்வான். குஸ்தில ஜெயிச்சு கப் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வரான்.செமை மூடு பொஞ்சாதி மளிகை கடைக்காரனுக்கு பாக்கி,புடவை காரனுக்கு பாக்கின்னு பட்டியல் போட ஃபயில்வான் நொந்து போயிருவாரு.

நிறைய பெண்களுக்கு எதை எப்ப சொல்லோனங்கற சென்ஸே கிடையாது. ஆண்மையின்மை பெருகவும் – இழந்த சக்தி வைத்தியர்கள் கல்லா கட்டவும் இவிகளும் ஒரு முக்கிய காரணம்.

பலான மேட்டர்ல போயி எப்டி கோபம் வரும்னு கேப்பிக .. சின்ன மேட்டரு கிள்ளலோ ,கடியோ கொஞ்சம் பலமானாலே போதும் . சிலது எரிஞ்சு விழும். இவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி போயிரும். இது சில்லி மேட்டரு.

நிறைய ஆண்களுக்கு துரித ஸ்கலிதம் (ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷன் ) பெரிய பிரச்சினை. இதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு. இந்த மேட்டர்ல பெண் தான் கோச் மாதிரி. புருசங்காரன் டெப்ரஸ் ஆகும் போது போவட்டும் விடுங்க மாமா ! காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாய்ஞ்ச மாதிரி பாய்ஞ்சா இப்படித்தான் ஆவும். மேலும் உங்களுக்கு என் மேல எம்பூட்டு ஆசைங்கறதை தான் இது காட்டுதுன்னுஆறுதலா பேசினாலே போதும். பார்ட்டி நின்னு விளையாட ஆரம்பிச்சுருவான்.

ஆனால் ஜாதகத்துல செவ் கெட்டிருந்தா இந்த மாதிரி ஆறுதல் வசனம்லாம் வராது. “இந்த இழவுக்கு தான் வரமாட்டேங்கறது” மாதிரி பேச்சு எழுந்தாலோ – அல்லது பாத்ரூமுக்கு எந்திரிச்சு போகும் போதே கதவு தாழ்ப்பாளை சத்தமா திறந்து “டமார்”னு கதவை சாத்திட்டு போனாலோ .. அந்த நேரம் புருசன் அடக்கி வாசிச்சாலும் – விடிஞ்ச பிறவு?

மேலும் ஏற்கெனவே சொன்னதை போல கோபம் -பயம் மாதிரி உணர்வுகள் செக்ஸ் உணர்வுகளை (எதிராளியின் உணர்வுகளை மட்டுமல்ல தன் உணர்வுகளையும்) கொஞ்சம் கொஞ்சமா கொலை பண்ணிரும். இதுமட்டுமில்லை பாடியோட பயோ கெமிஸ்ட்ரியே மாறிரும். ஹார்மோன்ஸோட சுரப்புல மாறுதல் வந்துரும்.

ஆணாயிருந்தா விந்து உற்பத்தியிலயும் – விறைப்பு மேட்டர்லயும் ,பெண்ணா இருந்தா மா.வி சக்கரத்துலயும் -செக்ஸ் உணர்வுகளிலும் – பால் உறுப்பின் தோற்றம் – மாற்றத்துலயும் கூட மாறுதல் வந்துரும்.

இந்த இழவுல பலான மேட்டர்லயே கோபம் கோட்டை கட்டி உட்கார்ந்தா தாம்பத்யத்துக்கு சமாதிதான்.
செவ்வாய் எந்தெந்த இடத்துல இருந்தா என்னென்ன பிரச்சினைன்னு பார்த்துக்கிட்டு வந்தம் .சீரிஸ் எங்கயோ விடுபட்டு போச்சு அடுத்த பதிவுல சரி பண்ணிரலாம்.

உடுங்க ஜூட்டு.

செவ்வாய் தோஷம்:அசலான பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !
முக்கியமா மணி அண்ணன், கிருஷ்ணா ,சுதர்சன் மற்றும் மெயில் அனுப்பின நண்பர் ஆகியோருக்கு சாரி. இன்னைக்கும் குரல் பதிவு தேன்.இதுல உள்ள அனுகூலங்களையும் சொல்லியிருக்கேன். உங்களுக்கும் வேணா எனக்கும் வேணா பேசாம ஓட்டிங் வச்சுருவம்.

நம்ம சைட்டுக்கு கிடைக்கிற ஹிட்ஸ் மேக்சிமம் 1000 இதுல பாதி பேர்..மாணா மாணா அதுல பாதிபேர் (250) அது கூட மாணா பட்டுன்னு 25பேர் குரல் பதிவு வேணான்னு ஓட்டுப்போட்டுட்டா டெக்ஸ்டுக்கு மறிர்ரன்.

நம்ம ஜா.ராவுக்கு இது ஒரு சான்ஸ்.தான் Read More