செக்ஸ் குறித்த பெண்கள் கருத்து ( வீடியோ )

அண்ணே வணக்கம்ணே !
இந்த வீடியோவோட குவாலிட்டிய பார்த்தா ஏற்கெனவே பெரிய ரவுண்டா வந்திருக்கும்னு தெரியுது .ஆனாலும் பலர் மிஸ் பண்ணியிருப்பிங்க.ஆகவே வீடியோவுக்கான தொடுப்பை கடைசியில தந்திருக்கன்.

அதுக்கு மிந்தி ஒரு சின்ன ஸ்கூப். நம்ம இமிசை தாங்க முடியாம சி.எம்.செல்லுக்கு புதிய பொறுப்பாளரை மம்மி போட்டிருக்கு.

ஆன் லைன் சி.எம்.செல்லுல மனுவோட சாதி அட்மின் ரிஃபார்ம்ஸ்னு கொடுத்திருக்கம். ஆனாலும் மக்கள் மீது பாரம் சுமத்தாம/ அரசு வருவாயை கூட்டி பெட்டர் கவர்னென்ஸ் கொடுக்க உதவ நாம கொடுக்கிற ஆலோசனைகள் மட்டும் மிக சரியா டாஸ்மாக் எம்.டிக்கே போகுதே?

ஏன்டா? ஏன்டா இப்படி ??

டாஸ்மாக்

Tasmac MD 2

ஏற்கெனவே இந்த வேலைய பண்ணதுக்கு தான் கயிவி கயிவி ஊத்தினம். இப்ப மறுபடி மே 26 ஆம் தேதி நாம இதே மேட்டர்ல அனுப்பின மனுவை அதே டாஸ்மாக் எம்.டிக்கு அனுப்பியிருக்கானுவ.

நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர் !

நிற்க ஏதோ கிளுகிளு வீடியோங்கறானேனு ஒரு எட்டு பார்க்க வந்த உங்கள வச்சு செஞ்சதுக்கு சோரி . நீங்க பார்க்க வந்த வீடியோ இங்கே

காலமாற்றம்-கிரக பலன் ( பாவம்:8 -பகுதி :2)

Lion

அண்ணே வணக்கம்ணே !
இடையில லால் கிதாப் பரிகாரங்கள் பற்றிய நம்ம கருத்துக்களை மினி தொடரா கொடுக்க ஆரம்பிச்சம்.ஆனால் அதைவிட கால மாற்றம் -கிரக பலனுக்கு தான் செம ரெஸ்பான்ஸு.

முன்னொரு காலத்துல ரஜினிய நாம கிளிச்சு போஸ்ட் போட்டப்போ ஒரு பக்கி ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுருச்சு.

அன்னைலருந்து ஒரு ஓரமா ஹிட்ஸ்,ரெஸ்பான்சையும் கவனிச்சுட்டே பதிவு எழுதறத வழக்கமா வச்சிருக்கம்.கால மாற்றத்தால எட்டாம் பாவ பலன் எப்படி மாறியிருக்குன்னு பார்த்துக்கிட்டு வர்ரம் . எட்டாம் பாவ காரகங்கள் என்னென்னன்னு ஒரு பட்டியல் போட்டு ஒவ்வொரு அம்சமும் கால மாற்றத்தால எப்படி மாறியிருக்குன்னு பார்க்கிறோம்.

பட்டியல்:
வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு, தீராத‌ரோகம், தீர்க்கமுடியாத‌ கடன்,சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல், தலைமறைவாதல் ,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்.

மேற்படி பட்டியல்ல இனி பார்க்கவேண்டியது மேஜ‌ர் விப‌த்து, மேஜர் ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்.சிறைப் ப‌டுத‌ல். மேஜ‌ர் விப‌த்து, மேஜர் ஆப்ப‌ரேஷன்லாம் இப்ப சகஜமாயிருச்சு.

சனத்தொகை பெருத்து போனதால நெம்பர் சாஸ்தியாயிருச்சு /மீடியா வளர்ச்சியால எல்லாமே வெளிச்சத்துக்கு வர்ரதால பூதாகரமா தெரியுதுன்னு அசால்டா சொல்லிர முடியாது.

மேஜர் ஆப்ப‌ரேஷனாச்சும் சுய உந்துதல் இல்லாம -புற காரணிகளால் நடக்குதுன்னு சொல்லிரலாம். புற காரணிகள்னா ஆயிரத்தெட்டு இருக்கு .
ஆனால் இந்த மேஜர் விபத்துக்கள்? அப்படி சொல்ல முடியல. அவனவன் சாகனும்னே ரோட்டுக்கு வர்ரானோன்னு ஒரு ஃபீல் ஆகுது.
மன்சங்களோட பல்வேறு செயல்பாடுகளுக்கான உந்துதலை ரெண்டு பிரிவுக்குள்ள அடக்கிரலாமாம் (சைக்காலஜி) ஒன்னு சாகறது அடுத்தது சாகடிக்கிறது . (இது ரெண்டுமே செக்ஸுல பாசிபிள்ங்கறதாலதான் மன்சனுக்கு செக்ஸ் மேல் இவ்ளோ நாட்டம்- செக்ஸ் ஏறக்குறைய இந்த சமூகத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறதால மனித அடிமனம் அதற்கு மாற்றாக தேர்வு செய்து கொண்டு லொங்கு லொங்குன்னு அலையறது பணத்துக்காவ)

சைக்காலஜி இங்கிருந்துதான் துவங்குது .ஆனால் நாம கொஞ்சம் பின்னோக்கி போயி பார்த்து ஒரு தியரிய கண்டுபிடிச்சு வச்சிருக்கம்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு ஒரு செல் அங்க ஜீவி (அமீபா) அதுதான் செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது புது உயிரா பரிணாமமடைந்தது. ஓருயிர் ஓருடலா இருந்தப்போ காலம்/தூரம்/பாதுகாப்பின்மை/கம்யூனிகேஷன் ட்ரபிள்/பயம்/கவலை ஏதும் கிடையாது.
இரண்டாவதா இன்னொரு உயிர் இருந்தாதான் மேற்படி பிரச்சினைகள். ஓருயிரா இருந்தப்ப அனுபவிச்ச நிம்மதி பற்றிய செய்தியின் பதிவு செல் காப்பியிங் மூலமா கடைசி உயிர் வரை வந்திருக்கு .

இதனால் அனைத்து உயிர்களும்மீண்டும் இணைய துடிக்கின்றன. இந்த இணைப்புக்கு தத்தமது உடல்கள் தான் தடை என்று பிரமிக்கின்றன. உடலை உதிர்த்து தள்ள துடிக்கின்றன. இதனால் தான் மனிதர்களின் எல்லா செயல்களுக்கும் தூண்டுதலாக இரண்டே உணர்வுகள் உள்ளன. ஒன்று கொலை எண்ணம். அடுத்தது தற்கொலை எண்ணம்.

நாம உடலால பிரிஞ்சிருக்கம் . இல்லேங்கல.ஆனால் ஏதோ ஒரு அமானுஷ தளத்துல இணைஞ்சு தான் இருக்கம். ஆனால் அந்த இணைப்பை நம்ம ஈகோ மறைச்சுருது .

லேண்ட்லைன்ல இருந்து லேட்டஸ்ட் ஐ ஃபோன் வரை மேக் வேற/ப்ராண்ட் வேற ஆனால் எல்லா இழவெடுத்த ஃபோன்லயும் சார் உங்களுக்கு ஹவுசிங் லோன் வேணுமான்னு கால் வருதுல்ல? இதுவும் அப்படித்தான்.

நம்ம ஃபோன் என்னதான் லேட்டஸ்ட் மேக்கா இருந்தாலும் ஃப்ளைட் மோட்ல வச்சுக்கிட்டா கால் ரீச் ஆகுமா?

பிரிஞ்சிருக்கம் -இந்த படைப்புல நாம தனிங்கற ஃபீலை கொடுக்கிறது நம்ம ஈகோ. மறு இணைப்புக்கு தடையா இருக்கிறது இந்த உடல்ங்கறது மடமை .
ஒரு காலத்துல ஒருத்தன் ஒரு குக்கிராமத்துல பிறந்து தொலைச்சா அங்கயே வாழ்ந்து அங்கயே முடிஞ்சுருவான்.கு.பட்சம் அந்த குக்கிராமத்துலயாவது மனிதர்கள் பிணைக்கப்பட்டிருந்தாங்க. இன்னைக்கு ? கிராமத்துல உள்ளவன் டவுனுக்கு வந்துரனும்னு பார்க்கிறான் ,டவுன்ல உள்ளவன் சிட்டிக்கு வந்துரனும்னு பார்க்கிறான் ,சிட்டியில உள்ளவன் ஃபாரின் போகனும்னு துடிக்கிறான்.

எதுக்கு? காசு-பணம் -துட்டு -மணி மணி .

இந்த இழவெடுத்த பணத்தை வச்சு என்ன செய்றது? அது ஏதோ சேட்டிலைட் கணக்கா தன்னை இந்த உலகத்தின் அனைத்து உயிர்களோடும் லிங்க் பண்ணிரும். கு.பட்சம் தன் இருப்பை வெளிச்சம் போடும்.அந்த வெளிச்சத்தை கண்டு எல்லா உயிரும் -கு.பட்சம் எல்லா உறவும் தன்னை தேடி வந்துரும்னு நம்பறான்.

கொய்யால .. நமக்குள்ள பிரிவே இல்லை . இணைப்பு இருக்கு. இணைஞ்சுதான் இருக்கம்.நம்ம ஈகோதான் அதை லேசா மறைக்குது.
ஆனால் மனித மனம் தன் உடலை தடையா நினைக்குது .அதை உதிர்க்க ஹைஸ்பீட்ல ட்ரைவ் பண்ண சொல்லுது – உங்களை/உங்களுக்கு எதிரே வரும் வாகன ஓட்டியை .

மனிதனோட ஈகோ எந்தளவுக்கு வலுக்குதோ அந்தளவுக்கு தனிமையை உணர்வான். உறவுகள் அவனுக்கு உறைக்கவே உறைக்காது. தனிமையை தவிர்க்க செக்ஸு,செக்ஸுக்கு மாற்றா பணம்னு அலைவான். பணம் எதுக்குடான்னா உறவுகளை புதுப்பிக்க/அல்லது புது உறவுகளை ஸ்தாபிக்க.
ஆக இன்னய தேதிக்கு ஈகோ விஸ்வரூபம் எடுத்துருச்சு . உயிர்களுக்கிடையிலான பிணைப்பை மறந்து /துறந்து எல்லா பக்கியும் தனிமையில தவிக்குது .மனிதனோட ஆயுள் கூட மருத்துவ கண்டுபிடிப்புகள் காரணம்னு சொல்றாய்ங்க.

ஆனால் ஒவ்வொரு மருந்து ,மாயத்தோட பின்னணிய தெரிஞ்சுக்கிட்டா டர்ராயிருவிங்க. அட இந்த ஆன்டிபயாடிக்ஸையே எடுத்துக்கங்க டோட்டலா நம்ம இம்யூன் செட்டப்பையே ஃபணால் ஆக்கிருச்சுல்ல?

இன்றைய மனிதனோட ஆயுளை கூட்டறது இந்த தனிமைதான்.மேலும் ஒவ்வொரு மனிதனும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கான். நான் தலை மேல தூக்கி வச்சு கொண்டாடற விவசாயி கூட அடிமைதான்.பூச்சி மருந்துக்கு ,செயற்கை உரத்துக்கு ,இயந்திரங்களுக்கு, அரசு தர்ர மானியத்துக்கு , கிராமத்துலயே வாழ்ந்தாலும் நகர வாழ்வின் சுகபோகங்களுக்கு அவன் அடிமையாத்தான் இருக்கான். பெண்களை பத்தி சொல்லவே தேவையில்லை.
ஆக நவீன மனிதர்களின் ஆயுளை கூட்டுவது தனிமை-அடிமைத்தனம். ஜாதக சக்கரத்துல எட்டுக்கும் -ரெண்டுக்கும் உள்ள தொடர்பை ஏற்கெனவே சொன்னதா ஞா.

இருந்தாலும் நியூ அட்மிஷன்ஸுக்காக சொல்றேன். 2 =வாய் , 8 =இன உறுப்பு .எல்லா கிரகங்களுக்கும் 7 ஆம் பார்வை உண்டு. 2 ல் உள்ள கிரகம் எட்டை பார்க்கும். எட்டில் உள்ள கிரகம் இரண்டை பார்க்கும்.

13-14 வயசுல செக்ஸுவலா மெச்சூர் ஆயிர்ர பையனுக்கு ஆத்தரைஸ்ட் செக்ஸ் எப்போ கிடைக்குது? 30-35 வயசுல தான் கிடைக்குது .அதுவரைக்கும் அவன் இன உறுப்பு என்ன ஸ்லீப் மோட்லயா இருக்கும்? ஊஹூம். ஓவர் டைம் பார்த்து பார்த்து -தன் கையே தனக்குதவின்னு -செமர்த்தியா உழைச்சு ஓய்ஞ்சு போயிருக்கும்.

மேலும் உள்ளார்ந்த தூண்டுதலின் காரணமா அவன் தன் வாய்க்கு வேலை கொடுக்க ஆரம்பிச்சிருப்பான் (ஓரல் செக்ஸ் இல்லிங்கோ -வெட்டி பேச்சு / நொறுக்கு தீனி )

மனித உடலின் முக்கியமான இரண்டு மண்டலங்கள் இனப்பெருக்க மண்டலம் -ஜீரண மண்டலம். ஒன்னு வேலை செய்யும் போது அடுத்தது வேலை செய்யாது . மீறி செய்யனும்னு மோட்டிவேட் பண்ணா முன் சொன்னது தன் வேலைய திராட்டுல விட்டுரும்.

மன்சன் லவ்வு,செக்ஸுல தோத்தா அடுத்து அவனோட புகல் வாய் தான். சோமாலியா கதைகள் ஒரு பக்கம் உலகத்தை அச்சுறுத்தினாலும் மன்சங்களுக்கு பட்டினியால வர்ர நோய்களை விட அமித தீனியால வர்ர நோய்கள் தான் அதிகம்னு சொல்றாய்ங்க. நோய் வர்ர நிலை பிறவு.ஆனால் அதுக்கு மிந்தி அந்த தீனி பாடியோட கடைக்கால ஸ்ட்ராங் ஆக்கிருதுல்ல. இதுவும் நவீன மனிதனின் ஆயுள் நீட்டிப்புக்கு( ஆரோக்கியத்துக்கு அல்ல) காரணம் .
தொடர்ந்து பேசுவம்..

மன்மத பீடாதிபதியின் மாயாஜாலம்

seminar 4அண்ணே வணக்கம்ணே !
சமீபத்துல வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்துல நாம ஸ்பீச் கொடுத்தம். அதை அப்படி ஆடியோ வீடியோ ரிக்கார்ட் பண்ணிரம்னு தான் ப்ளான். லேப் டாப்ல வெப் காம் மூலம் வீடியோ -சவுண்ட் ரிக்கார்டர் மூலம் ஆடியோ ரிக்கார்ட் பண்ணலாம்னு தேன் ட்ரை பண்ணோம்.ஆடியோ பல்பு வாங்கிருச்சு.
(ரெண்டையும் ஒன்னா பண்ண வேண்டியதுதானேனு கேப்பிக. வீடியோவும் ஆடியோவும் கலைஞர்-ஜெ மாதிரி கோ இன்சைட் ஆகாது அதனாலதேன்)
வீடியோ மட்டும் என்ன வாழுது.மெகா ஃபைலா ஸ்டோர் ஆய்ருச்சு. ப்ளே ஆக ஆரம்பிக்கவே அரை மணி நேரம். மேலும் ஏதோ கரப்ட் வேற ஆயிட்டாப்ல இருக்கு.
செமினாருக்கு மிந்தி  நெட் ப்ராக்டிஸ் கணக்கா ச்சொம்மா பேசி பார்த்தம்ல அந்த ஆடியோ கிடைச்சது. அதை தான் இப்ப கேட்க போறிங்க.
ஆடியோ ஸ்டோர் ஆன பக்கத்துக்கு போக இங்கே அழுத்துங்க.

12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

Bedlife

அண்ணே வணக்கம்ணே !
விரயஸ்தானம்  உங்கள்  உணவு,உடலுறவு தொடர்பான உங்க மன திருப்திக்காக செய்யும் செலவினங்களை காட்டுமிடம். சுக்கிரனோட காரகமும் ஏறக்குறைய இதேதான். அறுசுவை உணவு, நொறுக்கு தீனி, பேக்கரி ஐட்டம் ,ஜங்க் ஃபுட்,டின் ஃபுட்,பேக்ட் ஃபுட் ,மனைவி,கில்மா இப்படி பலதையும் காட்டும் கிரகம் சுக்கிரன்.
இதை போல பாவ காரகத்வத்துக்கும் -அங்கன நின்ன கிரகத்தோட  காரகத்வத்துக்கும் ஒரு ஒத்திசைவு இருப்பது  நல்லது தான். ஆனால் இந்த விதி எல்லா கிரகத்துக்கும் -எல்லா பாவத்துக்கும் பொருந்தாதுங்கோ. குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு சொல்லப்படாது.
இந்த விஷயத்துல சில விஷயங்களை சொல்லிட்டு விரய சுக்கிரனோட லீலைகளை பார்ப்போம்.
ஒவ்வொரு பாவத்துக்கும் ,ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு தலையாய  காரகத்வத்தை கொடுத்திருத்தாய்ங்க.
மொதல்ல கிரகங்களை எடுத்துக்கிட்டா  ………
சூரியன் -பித்ரு காரகன்,தொழில் காரகன்
சந்திரன் -மாத்ரு,ஜல,மனோகாரகன்
செவ் -பூமி -சகோதர காரகன்
ராகு – பிதாமஹ காரகன் ( அப்பா வழி தாத்தா பாட்டி)
குரு -தன,சொர்ண, கங்கண, புத்ர காரகன்
சனி -ஆயுள் காரகன்
புதன் -வித்யா காரகன்
கேது -மாதாமஹ காரகன்
சுக்கிரன் -களத்ரகாரகன் , சிற்றின்பங்களுக்கு காரகன்
இதுல சூரியன் தொழில் ஸ்தானத்துல நின்னா ஓகே.சந்திரன் புத்தி ஸ்தானத்துல நின்னா நாட் ஓகே. செவ் சகோதர ஸ்தானத்துல நின்னா ஓகே ( இவரு பூமி காரகன் தானே .4ங்கறது வீட்டை காட்டுமிடம் தானே. பூமி இல்லாம வீடு ஏது ..இங்க செவ்  நிக்கலாமான்னா ஊஹூம்.அம்மாவுக்கு ஆப்பு) .குரு புத்ர பாவத்துல நிக்கப்படாது ( ஆண் குழந்தை இல்லாம போயிரும்னு பொதுவிதி), சனி எட்டுல ? இருக்கலாம்.என்ன தீர்க ரோகங்கள் தொல்லை கொடுக்கும் .உ.ம் நரம்பு ,ஆசனம் தொடர்பானவை.புதன் அஞ்சுல இருக்கப்படாது. சுக்கிரன் ஏழுல  இருக்கப்படாது ( விரயத்துல இருக்கலாம்ங்கறது பொது விதி)
ஆக கிரகத்துக்கும் -பாவத்துக்கும் ஒத்திசைவு இருந்துட்டா போதாதுங்கறதை டயரியில எழுதிருங்க.
இந்த விரய பாவத்தை சுக்கிரன் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா என்ன ஆகும்னு தெரிஞ்சுக்க ஒரு கேஸ் ஹிஸ்டரிய பாருங்க.
கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸ் ( சாதி ? வேணாம் பாஸு.. நாட்ல ஒரே வெட்டுப்பழி குத்துப்பழியா இருக்கு.அது எதுக்கு கழுதை)  குடும்ப தலீவரு  நல்ல ரசனை உள்ளவர். எதுல இறங்கினாலும் க்ளாஸ் ..ஹை க்ளாஸ் தான்.
அவிக வீட்டை பார்த்திங்கனா அணுஅணுவுலயும் சுக்கிரனோட ஆதிக்கம் தெரியும்.  தினசரி நான் வெஜ், பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு டூ வீலர். நினைச்சா கார்ல பறப்பாரு.
அவரு நர்சிங் ஸ்கூல் வைக்க முடிவு செய்தாரு.ஏற்பாடுகள் எல்லாம் சரவேகத்துல நடக்குது. அட்மிஷனும் நடந்து முடிஞ்சுது –  நம்மாளும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிற  பார்ட்டி -பிள்ளைகள் வயசுல இருக்காய்ங்க. ஆல் ஆஃப் தி சடன் நெம்பர் ஆஃப் ஃபீமேல்ஸ்.    நீங்க என்னல்லாம் நினைக்கிறிங்களோ எல்லாமே நடக்க ஆரம்பிச்சுருச்சு.
மாணவிகள் பயிற்சி பெற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் உள்ள மருத்துவமனையோட டீலிங் இருக்கனுங்கறது ஒரு நிபந்தனை. அதை ஃபுல்ஃபில் பண்றதுக்கு ஜி.ஹெச்சை ஒர்க் அவுட் பண்ண பார்த்தா ஏற்கெனவே நர்ஸிங் காலேஜ் வச்சுருக்கிற பார்ட்டி சூப்பிரனன்டை வச்சு கட்டைய போடுது.
நம்மாளு தாளி  நாமளே ஒரு ஆஸ்பத்திய வச்சுட்டா என்னனு  டிசைட் பண்ணாரு. ஹோல் சேலா ஃபர்னிச்சர் எல்லாம் புக் பண்ணியாச்சு. டெஸ்டினேஷனை நோக்கி கண்டெய்னர் வந்துக்கிட்டிருக்கு. அந்த  நேரம் பார்த்து மேலதிகாரிங்க இன்ஸ்பெக்சனுக்கு  வந்துட்டாய்ங்க. நர்சிங் ஹோம்னா வெறும் கட்டிடம் தானா?  டாக்டரு , நர்ஸு மட்டும் தானா? கட்டில் ,மேஜை ,நாற்காலி லொட்டு லொசுக்குன்னு எத்தீனி தேவைப்படுது.
இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தவுகளுக்கு இவரோட தொழில் எதிரி “நெல்லா அழுத்தினாப்ல” இருக்கு. அவிக “வாங்கவே”மாட்டேன்னுட்டு “எழுதிட்டு” போயிட்ட்டாய்ங்க.
இந்த ஒரு அடி.. அவருக்கு மரண அடியா  போச்சு. அங்கன இருந்து எல்லாமே வில்லங்கம்.  என்னென்னவோ ஆகிப்போச்சு.
இந்த கேஸ் ஸ்டடிய பார்த்திங்கல்ல. அவரு ஜாதகத்துல சுக்கிரன் மினிமம் கியாரண்டியோட இருந்திருக்காரு. ஏதோ சொந்த வீடு,வாகனம், அறுசுவை உணவுன்னு கிடைச்சது. இதோட திருப்தியடைஞ்சுருந்தா அசலுக்கு மோசம் வந்திருக்காது. அவரு இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டாரு.  பல்பு வாங்கிட்டாரு.
இப்பம் இந்த விரய பாவ காரகத்வத்தை பார்க்கலாம். இந்த பாவம் பிரதானமா காட்டறது உணவு -உடலுறவு -தூக்கம் தொடர்பான செலவுகளை.
உணவு ..ஒரு காலத்துல  நம்மாளுங்க வருசத்துக்கு ரெண்டொரு பண்டிகை நாள்ள தவிர அரிசி உணவையே பார்த்ததில்லை. இதனால ஷுகரு அது இதுன்னு மாட்டிக்காம கில்மா மேட்டர்ல பவர் ஃபுல்லா இருந்திருக்காய்ங்க. பால்ய விவாகம் -கூட்டு குடும்பங்கள்  வேற.  நோ  ஏக்கம் .. நோ டென்ஷன்ஸ். திருவிழாவுல லைன் விட்ட குட்டிய பிக் அப் பண்றாப்ல பொஞ்சாதிய பிக் அப் பண்ணி ஆகனும். உடலுறவுகளின் எண்ணிக்கை குறைந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும். குழந்தை பாக்கியம் கியாரண்டி. ஆண்கள் நிலபுலம், ஆடு,மாடு மேய்ப்புன்னு செமை உழைப்பு. பெண்களும் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்ததால ஹேல் அண்ட் ஹெல்த்தியா இருந்திருப்பாய்ங்க. கில்மா மேட்டர்ல பிரச்சினை ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். தூக்கங்கறிங்களா?
சூரியன் மறைஞ்சதுமே வீட்டுக்கு வந்து  -கும்பலா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு தூங்கபோக வேண்டியதுதான். சூரியன் உதிக்கறதுக்கு மிந்தியே எந்திரிச்சாகனும்.

( பயாலஜிக்கல் க்ளாக் கிறிஸ்டல் துல்லியமா வேலை செய்திருக்கும்)
செமர்த்தியா உழைச்ச பாடிக்கு கட்டாந்தரையா இருந்தாலும் ஒன்னுதேன். கட்டில்,மெத்தையா இருந்தாலும் ஒன்னுதேன்.
ஆனால் இன்னைக்கு? நெலைமை தலை கீழா ஆரம்பிச்சிருச்சு. ஜாதகத்துல சுக்கிர பலம் இருக்கோ இல்லையோ ஹவுசிங் லோன் போட்டு வீடு, வெஹிகிள் லோல் போட்டு வாகனம், அரிசி கிலோ அம்பது ரூவாய்க்கு வித்தாலும்  365 நாளும் அரிசி சோறு , குழம்பு,ரசம், மோரு ,தயிரு, நெய் , நான் வெஜ்,   நொறுக்கு தீனி, படுக்க கட்டில் ,மெத்தை ,ஏ.சி கு.ப ஏர் கூலர் அ சீலிங் ஃபேன். பாதி ராத்திரிக்கு மேல தூக்கம். காலை எட்டு வரை புரண்டுக்கிட்டு  கிடக்கிறது.
இந்த இழவுல பாட்டு,டான்ஸு,டிவி, டிவிடி ப்ளேயர்,மியூஸிக் சிஸ்டம், சாட்,ஃபேஸ்புக், மொபைல்ல மொக்கை, லாலா,மசாலா, பார்ட்டி,ஃபங்சன் , டூர், பிக்னிக்.
சுக்கிரனுக்கு இதுக்கே  நாக்கு தள்ளி போயி கில்மா மேட்டர்ல கை விட்டுர்ராரு. அப்பாறம் இழந்த சக்தி வைத்தியர்களை தேடி அலையறோம்.
நம்ம நண்பர் அவர் ஜாதகத்துல சுக்கிரன் உச்சம்.(ஆனால் லக்னாத் பாபி). வயசு அம்பது ப்ளஸ்.கண்ணாலம் கார்த்தியெல்லாம் நை.
வீடு மொத்தமும் “பூத் பங்களா ” மாதிரி இருக்கும். ஆனால் சமையலறையும் , பெட் ரூமும் சொர்க லோகம் போல இருக்கும். (வாடகை வீடு தேன் .சொந்த செலவுல ரீமாடலிங் பண்ணாரு) ரெண்டு வருசத்துக்கு மிந்தி ஷுகரு. போன வருசம் பைல்ஸ். இந்த வருசம் பைல்ஸ் ரிப்பீட்டு .
பல தடவை சொன்னாப்ல விரயத்துல உள்ள சுக்கிரன் லக்னாத் சுபனா இருந்தா “எல்லாம் ” தானா தேடி வரும். பாபியா இருந்தா ஜாதகர் தன் ஒட்டு மொத்த கிரக பலம், பண பலத்தையும் எக்ஸாஸ்ட் பண்ணி 3 மேட்டர்ல சுகம் காண்பார்.( அறுசுவை , தூக்கம் ,கில்மா) காலப்போக்குல இந்த 3 மேட்டருக்குமே ஆப்பு வந்துரும்.
இதான் விரய சுக்கிரன் பற்றிய செனேரியோ. நாளைக்கு ஃப்ரெஷ்ஷா புதுசா எதையாச்சும் ஆரம்பிப்போம்.

செக்ஸ் கிட்டாதார்க்கே சட்டென வெற்றி

என்னங்கடா இது திருமணத்தடை -ஆண்மை இழப்புன்னு ஒரு தொடர் வந்துக்கிட்டிருந்ததே. அதை டீல்ல விட்டாச்சான்னு பேஜாராயிராதிங்ணா. இந்த பதிவு டூ இன் ஒன். கடந்த பதிவுகளோட தொடர்ச்சியாவும் எடுத்துக்கலாம். தனிப்பதிவாவும் எடுத்துக்கலாம்.

தொடர்ல ஜாதகம் எப்டி இருந்தாலும் மனிதர்கள் தப்பா வாழ்ந்து திருமணத்தடை -ஆண்மை இழப்புக்கு இலக்காகலாம்னு சொல்லியிருக்கேன்.

இதுக்கு உதாரணமா லக்னாதிபதி எங்கருந்தாலும் திருமணத்தடை -ஆண்மை இழப்புக்கு எப்படி சனம் வழி செய்துக்கறாய்ங்கன்னு சொல்லிக்கிட்டு வரும்போது நேத்து லக்னாதிபதி 6 ல் இருந்தால் இதுக எப்டி ஏற்படுதுன்னு சொன்னேன்.

இன்னைக்கு லக்னாதிபதி 7 ல நின்னா திருமணத்தடை -ஆண்மை இழப்பு எப்டி ஏற்படும்னு சொல்லோனம். லக்னாதிபதி 7 ல நின்னு லக்னத்தை பார்த்தா நெல்லதுதேன் .இதனால லக்னம் பலப்படும்.

டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் – பிஹைன்ட் எவ்ரி ஃபார்ச்சூன் தேர் ஈஸ் எ சின் – ஒளிவிளக்குக்கு பின் ஒரு இருட்டுங்கறாப்ல லக்னம்/லக்னாதிபதி பலப்படறதால கூட சில தீமைகள் இருக்கு.

இந்த வெற்றி வெற்றின்னு அலைபாயற கேஸுங்க ரெண்டு விதம் .அதுல ஒன்னு லக்னாதிபதி பல்பு வாங்கின ஜாதகர்கள். இவிக தீர்ந்து போற நிலையில இருக்கிற பேட்டரி மாதிரி இருக்கிற சக்தியை எல்லாம் பொளேர்னு ரிலீஸ் பண்ணி சக்ஸஸ் ஆயிருவாய்ங்க. ( இது பால்யத்தில்/டீன் ஏஜ்ல நடக்கலாம்) .

அதுக்கு பிறகு இவிக நிலைமை ரெம்ப மோசமாயிரும். வெற்றி வெற்றின்னு தவிப்பாய்ங்க. ஆனால் அது கானல் நீராவே இருக்கும். இது அவிக லைஃப்ல திருமணத்தடை/ ஆண்மை இழப்புக்கும் காரணமாயிரும்.

வெற்றி வெற்றின்னு அலையற க்ரூப்ஸ்ல ரெண்டாவது க்ரூப்பு லக்னாதிபதி ஆட்சி, உச்சம்னு பலப்பட்ட ஜாதகர்கள் /அல்லது லக்னத்துல ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் இருக்கிற ஜாதகர்கள்.

லக்னாதிபதி பலம் பெற்றால் உயிர்களின் அடிப்படை இச்சைகளான தான் உயிருடன் இருப்பதை சக உயிர்களுக்கு பறை சாற்றுதல் (முந்துதல்) ,பரவுதல் ( இனப்பெருக்கம் / இதற்கு மாற்றாக பெயர் புகழ், செல்வம்,பதவி அதிகாரம்,வன்முறை) இவிக முக்கிய நோக்கமா இருக்கும்.

இந்த நோக்கங்கள் நிறைவேற இருக்கும் நேரடியான நியாயமான வழி வகுக்கும் செக்ஸ் ஒன்றுதான். ஆனால் செக்ஸ் இந்த சமூகத்துல ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கு.

இதனால ஒன்னு செக்ஸை ரகசியமா பெறனும் ( சுய இன்பம்/கள்ள உறவு) அல்லது செக்ஸுக்கு மாற்றா ஏதோ ஒன்னை பெறனும். இந்த எண்ணங்கள் தான் இவிகள்ள உந்து சக்தியா செயல்படும். செக்ஸுக்கு மாற்று பணம் அதை ஈட்ட கல்வி , பணம் கிடைச்ச பிறவு பதவி பதவி கிடைச்சா அதிகாரம் இதெல்லாம் செக்ஸுக்கு மாற்றா நின்னு திருப்தியை தருது . பல கேஸ்ல செக்ஸையும் தருது.

மொத்தத்துல வெற்றின்னா என்ன.. அது கிடைச்சா என்ன நஷ்டம் , கிடைக்கலின்னா என்ன லாபம்னு கொஞ்சமா தெரிஞ்சுக்கவேண்டியது அவசியமாகுது. அசலான மேட்டரை நாளைக்கு சொல்றேன்.

1.வெற்றிக்கான சக்ஸஸ் ஃபார்முலான்னு ஒன்னிருக்கிறதா நினைக்கிறதை விடுங்க

2.எங்கும் -எதிலும் வெற்றி அடைஞ்சே தீரனும்னு நினைக்காதிங்க

3.ஒரு இடத்துல -ஒரு விஷயத்துல சக்ஸஸ் ஆனா போதும் .மத்ததெல்லாம் ஆத்துல அடிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டா “எதிலயும்” வெற்றியடையலாம்.

4.வெற்றி அடைஞ்சே தீரனும்னு இல்லின்னா நான் ஒழிஞ்சேங்கற நிலையில வெற்றிக்கு ப்ளான் பண்ணாதிங்க. வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டரா நினைக்கிற வரை அது பயங்கரமா தண்ணி காட்டும்

5.வெற்றிங்கறது தமிழ் சினிமாவுல போடற “END” கார்ட் மாதிரி.சகல பைத்தாரத்தனத்தையும் சகிச்சுக்கிட்டு பாடாவதி படத்தை தொடர்ந்து பார்த்தாதேன் “END” கார்டை பார்க்க முடியும்.

6.ஜெயிச்சவனை பார்த்து நம்மகிட்டே இல்லாதது ஏதோ அவங்கிட்ட இருந்திருக்குன்னு நினைச்சுராதிங்க. நாம எப்டி இருக்கோமோ அப்டியே தான் அவனும் இருந்தான் -இருக்கான் – இருக்கப்போறான்.

அவன் வெற்றிக்கு மிந்தி எப்டி இருந்தானோ வெற்றியடையும் போதும் அப்படியே தான் இருந்திருப்பான். வெற்றிக்கு பிறகும் அப்டியே தான் இருப்பான்.

வெற்றிங்கறது டூரிஸ்ட் ஸ்பாட்ல நாம ஃபேமிலி ஃபோட்டோ எடுக்கறச்ச குறுக்கால பூந்துர்ர அறிமுகமில்லாத ஆசாமி மாதிரி.

7.வெற்றிக்கு மிந்தியே நம்ம திறமை என்னன்னு நமக்கு தெரியும் . வெற்றிக்கு பிறகு இன்னும் கொஞ்சம் பேரு தெரிஞ்சுக்குவாய்ங்க அதான் வித்யாசம்.

8.சில சமயம் நம்ம வெற்றியை உலகம் அங்கீகரிக்காம போகலாம். அது உலகத்தோட பிரச்சினைன்னு புரிஞ்சிக்கிட்டா நாம சேஃப். என் வெற்றியை உலகம் அங்கீகரிக்கிறாப்ல பண்ணுவேன்னு நினைச்சா அது நம்ம பிரச்சினை ஆயிரும்.

9.வெற்றிக்கான இலக்கணம் ஆளை பொருத்து மாறும். ஆர்.எஸ்.எஸ் ஆளு ஃபெர்ட்டைல் சென்டர் மூலமா குழந்தை பெத்துக்கிட்டா அது வெற்றியில்லை. ஒரு நாத்திக வாதி கோவிலுக்கு போன பிற்காடு குழந்தை பெத்துக்கிட்டா அது வெற்றியில்லை.

10.வெற்றிங்கறது பட்டுச்சேலை மாதிரி அதை வாங்கி உடுத்தின க்ஷணம் தான் ஆனந்தம். மடிச்சு பீரோல வச்ச பிறவு? அதை கட்டிக்கிட்டு ஒன் பாத்ரூம் போறது கூட கஷ்டம்.

11. வெற்றி நம்ம தகுதிய வச்சு வந்தா ஓகே. வெற்றி மட்டும் தான் நம்ம தகுதிங்கற நிலை பரிதாபமானது.

12.வெற்றியிலயும் தன் தோல்விகளை மறக்காதவன் மறுபடி தோற்கிறதே இல்லை. தோல்வியிலயும் தன் வெற்றிகளை மறக்காதவன் வருந்தறதே இல்லை.

13.வெற்றிக்காகவே செய்யப்பட்டாலும் வெற்றிக்கான முயற்சிகள் தான் நம்ம மேல நமக்கு இருக்கிற மரியாதையை அதிகப்படுத்தும்.

14.நீங்க உயிரை பணயம் வச்சு பெற்ற வெற்றில்லாம் எதிர்காலத்துல தோல்வியா முடியலாம். உ.ம் காதல் அதனால பீ கூல்!

15. நீங்கள் பெறும் வெற்றிக்கு இலவச இணைப்பெல்லாம் உண்டு உ.ம் எதிரிகள்,தனிமை,பாதுகாப்பின்மை

16.மன்சன் வெற்றின்னு நினைக்கிறதெல்லாம் தான் உயிர்ப்போட இருக்கிறது பறைசாற்றும் முயற்சி – தன் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் முயற்சி -பரவுதலுக்கான முயற்சிதான். முயற்சியில வெற்றி பெற செக்ஸை கூட தள்ளிப்போடுவான். ஆனால் வெற்றிக்கு பிறகு செக்ஸ் தவிர வேறு ஏதும் அவன் மைண்ட்ல இருக்காது.

17.செக்ஸ் கிடைக்காதவன் -செக்ஸ்ல தோத்தவன் தான் வெற்றிக்கு அலையறான். வெற்றிக்கிடைச்ச பிறகு செக்ஸுக்கு அலையறான்.

சுக்கிரன்னா கில்மா மட்டும் தானா?

அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு ஆடியோ ஜோதிட பால பாடத்துல சுக்கிரன் துவாதசபாவங்கள்ள நின்ன பலனை விவரிச்சிருக்கேன்.

கையோட கையா ஒரு விஷயத்தை ஞா படுத்த விரும்பறேன். மார்ச் 6 ,2011 ஆம் தேதி “விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்”னு ஒரு பதிவை போட்டிருந்தோம்.

அதுல 2011 செப் 27 க்குள்ள இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு சொல்லியிருந்தோம் .

தனித்தெலுங்கானா போராட்டம் காரணமா இது நெஜமாயிரும்போல இருக்கு. இன்னைலருந்து ஆந்திராவுல 6 மணி நேரம் பவர் கட்டாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா? வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

மரணம் குறித்த பார்வை : ஆண் பெண் வித்யாசம்

மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா – நிதியா – பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா – அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல – அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட – சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு ) Read More