ராகு காதல் : நெகட்டிவ்

ஸ்னேக் விமன்

அண்ணே வணக்கம்ணே !
காதலில் 18 வகை . 9 கிரகங்களின் பாசிட்டிவ் இம்பாக்டோட 9 வகை ,நெகட்டிவ் இம்பாக்டோட 9 வகை ஆக மொத்தம் 18 வகை காதல்கள் இருக்கு. இதுல சூரியன்,சந்திரன்,செவ் இம்பாக்டுடனான பாசிட்டிவ் ,நெகட்டிவ் காதல்கள் மற்றும் அவற்றுக்கான பரிகாரங்களை பார்த்துட்டம்.
ராகு -கேது வகை காதல்களை ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு அடிச்சு தள்ளிட்டம். இதுல நெகட்டிவ் இம்பாக்ட் பத்தி பெருசா சொல்லலியோன்னு ஒரு ஆதங்கம். இதை லேசா டச் பண்ணிட்டு பரிகாரங்களுக்கு போயிரலாம்.

1.சினிமா பின்னணி:
சினிமாவே ஒரு சூதாட்டம் மாதிரி . அந்த காலத்து சாவித்திரியம்மால இருந்து இந்த காலத்துல நயன் தாரா வரை எத்தனையோ சோக கதைகள்.

2.லாட்டரி:
அந்த காலத்துல அண்ணா பூரண மதுவிலக்கை கொண்டு வந்து அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பை ஓரளவுக்காச்சும் ஈடு கட்ட லாட்டரி டிக்கெட்டை கொண்டு வந்தார்.”அடித்தால் வீட்டுக்கு..அடிக்காவிட்டால் நாட்டுக்கு”ன்னாரு

அது என்ன ஆச்சு ? கலைஞர் வழங்கும் இளைஞன் வரை போயாச்சு. லாட்டரி கிங் மார்ட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிக்கைக்கு ஒரு கோடி ரூவா டொனேட் பண்ண மேட்டர் லீக் ஆகி திருப்பி கொடுத்துட்டாய்ங்க.

ஆனால் லாட்டரி பைத்தியத்துல திவால் ஆகிப்போன குடும்பங்கள் எத்தனை எத்தனை? ஒரு பெயிண்டிங் காண்ட் ராக்டர்.. இப்பம் அவரே ப்ரஷ் பிடிச்சு பெயிண்ட் அடிச்சிட்டிருக்காரு. காரணம் வந்த பணத்துக்கெல்லாம் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு லேபருக்கு லேபர் கொடுக்கலின்னா எவன் வருவான்.
பில்டிங் காரன் கொடுத்த அட்வான்ஸ் பணத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு மறுபடி மறுபடி காசு கேட்டா எவன் வருவான்?
இப்படி ஆயிரம் கதை இருக்கு. இவிக லவ்ஸ்,தாம்பத்யம்லாம் ராகுவோட இம்பாக்ட். நெகட்டிவ் இம்பாக்ட்.

சாராயம்:
ஒரு மவராசி சென்னையிலருந்து வந்து ஜாதகத்தை கொடுத்து என் பிள்ளைக்கு எப்ப கல்யாணம் ஆகும் பார்த்து சொல்லுங்கன்னுச்சு.
நாம தேன் கில்லர் ஆச்சே. நடந்த உரையாடல் அப்படியே
“யம்மா ..ஏற்கெனவே உனக்கு ஒரு தடவை ஃபுட் பாய்சன் நடந்திருக்கனுமே”
“ஆமாங்க”
“உங்க வீட்டுக்காரருக்கு மெடிக்கல் ரியாக்சன் ?”
“அதுவும் ஆச்சுங்க”
“அவருக்கு நீங்க ஒன்னாவதா ரெண்டாவதா”
“நான் மூனாவதுங்க”
“சரி இந்த ஜாதகத்தை அப்படியே பத்திரமா வச்சிருங்க.. பையனுக்கு முப்பது முடியட்டும் அப்பாறம் பார்க்கலாம்”

இன்னாடா மேட்டருன்னா அந்தம்மாவோட ஆத்துக்காரர் ஏதோ சின்ன சைஸ் அரசியல் வாதி போல. நாலஞ்சு கடை ,பார் எல்லாம் வச்சு கொழிச்சிருக்காரு.
அவரோட ஜாதகத்துலயே ராகு 5 ல கேது 11 ல . ராகு கொடுக்கிற வரை கொடுத்தாரு. மனைவி ஜாதகத்துல 2-8 ,பையன் ஜாதகத்துல எட்டுல நின்ன லக்னாதிபதியோட ராகு .

இன்னம் ஷேர் மார்க்கெட்,ஊக வணிகம், கள்ளக்கடத்தல்,பதுக்கல், ஏற்றுமதி இறக்குமதி, புகையிலை ,ஃபோட்டோகிரஃபி, டூப்ளிக்கேட் தயாரிக்கிறது, ஃபோர்ஜரி டாக்குமென்ட் தயாரிக்கிறது இப்படி பலதும் இருக்கு. இந்த பின்னணியில உள்ளவுக காதலிச்சா என்ன ஆகும்?

ஆளை உருக்கும். இல்லின்னா ஊளை சதையை பெருக்கும். சந்தேக புத்தி வந்துரும். ஒருத்தர் மேல ஒருத்தர் விஷ பிரயோகத்துக்கு முயற்சி பண்ணுவாய்ங்க.பிரியலாம்.ஆயுள்ஸ்தானம் வீக்கா இருந்தா டிக்கெட்டும் போடலாம்.

இதெல்லாம் ராகுவோட இம்பாக்ட். கேதுவோட இம்பாக்ட்?

ஸ்வாமி நித்யானந்தாவோட கிளு கிளு வீடியோவுக்கு காரண பூதமா இருந்தாய்ங்களே திவ்யாவா பேரு? அப்பாறம் அந்த கில்மா வீடியோல இருந்த நடிகை பேரு என்ன? ஆங் ரஞ்சிதா. இதெல்லாம் கேது காதல்.

ஒரு மவராசி .ஏதோ மூதாதையர் சொத்தா ஒரு மாடி வீடு. ஊட்டுக்காரரு ஒரு பார்ல கேஷியர் (ராகு) இந்தம்மாவுக்கு மந்திர தந்திரம் மேல அதீத நம்பிக்கை. எந்த மந்திர காரன் என்னா சொல்லி உசுப்பேத்தினானோ தெரியாது. ஏற்கெனவே ரெண்டு பெண்குழந்தைகள் இருந்தும் மூனாவதா ஒரு பெண்குழந்தைய கொண்டு வந்து வளர்த்துக்கிட்டிருந்தாய்ங்க. அதுக்கு ராஜோபசாரம். மேஜரானதும் அதும்பாட்டுக்கு அவிக குடும்பத்தோட பேட்ச் அப் ஆகி கண்ணாலம் கட்டி நிம்மதியா இருக்கு.

இங்க என்னமோ ரெவின்யூ இன் கம் சூனியம் (வாடகைல்லாம் ஆறுமாசம் அட்வான்ஸாவே வாங்கி தீர்த்திருப்பாய்ங்க) ஆனால் குறி சொல்றவுக ,மந்திரம் பண்றவுகன்னு ஆரை பத்தி கேள்விப்பட்டாலும் ஒரு பயணம் போகாம இருக்க மாட்டாய்ங்க. இன்னைக்கு சொந்த வீட்டுல இட்லி சுட்டு வவுத்தை கழுவிட்டிருக்காய்ங்க.
இதுவும் கேது காதல்தான். இதுக்கெல்லாம் பரிகாரம் என்னன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.உடுங்க ஜூட்டு.

சர்ப்பதோஷம் :ஆருக்கு விடுதலை ?

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு நம்ம வலையுலகத்துல சோசிய பதிவுகள் போடறவுகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு கட்டுச்சோத்தை பிரிச்சு பரிமாறிட்டிருந்தவுக. ரெண்டு இன்னமும் அதையே செய்துக்கிட்டிருக்கிறவுக. கட்டுச்சோறு எட்டு நாளைக்கும்பாய்ங்க. சொந்த சரக்கு இல்லின்னா இதான் நிலைமை. இதுல சந்தடி சாக்குல சுயம்புவா பிரகாசிக்கிற நம்மை வேற விமர்சிக்கிறாய்ங்களாம். ஹ..ஹா !

ஒரு வகையில அவிக விமர்சனமும் உண்மைதான். நாம ப்ளாக்லயும் -சைட்லயும் எளுதிக்கிட்டு வர்ர விஷயங்களை படிச்சுட்டு நிறைய பேரு இந்தாளு ச்சொம்மா பீலா விடறாண்டான்னு கூட பேசிக்குவாய்ங்க. ஆனால் நாம எழுதற ஒவ்வொரு பாய்ண்டுக்கும் ஆதாரமா பல ஆயிரம் வாழ்க்கை நம்ம மைண்ட்ல இருக்கு. நம்பறவுக தில்லா நம்பலாம். நம்பாத சனம்? அவிக குண்டலியில விழிப்பு வரலேன்னு அருத்தம் விட்டுருவம்.

இது என்ன பாஸூ திடீர்னு சோசியத்துலருந்து குண்டலிக்கு தாவிட்டிங்கன்னு கேப்பிக .சொல்றேன். குண்டலி மூலாதாரத்துல இருக்கிற வரை திங்கறது -கழியறது -ஹோமோ தவிர வேற ஒன்னும் செய்ய முடியாது.பால்யத்துல ஹோமோவுக்கு -லெஸ்பியனுக்கு ட்ரை பண்ணாத ஆண் பெண்ணே ரெம்ப குறைவுதேன். ஸ்தூலமா ட்ரை பண்ணலின்னாலும் சப் கான்ஷியஸா அது இருக்க போயி தான் சிறுமிகள் சிறுமிகளோடும் -சிறுவர்கள் சிறுவர்களோடும் மட்டும் க்ளோஸா மூவ் பண்ணுவாய்ங்க.
இயற்கையாவே இந்த 3 ஐட்டத்துலருந்து வெளிய வந்தா பிறவு தான் முறையான -செக்ஸ் . என்னதான் மண்ணாந்தையா இருந்தாலும் சைக்கிள் ஓட்ட கத்துக்கறச்ச படக்குன்னு பேலன்ஸ் கிடைக்க ஆரம்பிச்ச மாதிரி கால கிரமத்துல கெட்ட காரியத்துல ஒரு நிதானம் வந்துரும். வீரிய ஸ்கலிதத்து மேல கட்டுப்பாடு வந்துரும்.

வராதவன் தேன் பொஞ்சாதி முந்தாணைய பிடிச்சுக்கிட்டு அலைவான். அல்லது சின்ன வீடு – வேலைக்காரி கிட்டே சில்மிஷம்னு கிடப்பான்.
இன்னொரு முக்கியமான மேட்டர் என்னடான்னா குண்டலி மூலாதாரத்துல நித்திராவஸ்தையில இருக்கிறவரை இந்த பூமி மீதான பொருட்கள் மன்சனை மருள செய்யும். எப்போ குண்டலி ஸ்வாதிஷ்டான சக்கரத்தை நோக்கி நகருதோ அப்பம் ” கன்னியர் தம் கடைக்கண் பார்வை கண்டு விட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”னு ஆயிரும்.

அதுக்கப்பாறம் மணிபூரகம் . வவுத்துப்பாடு ஆரம்பிச்சுரும். இந்த கட்டத்துல கடுமையான உழைப்பும் – ஊக்கமும் கொண்டு தன் பசி -தன்னவர் பசியாற்ற தெரிஞ்சுகிட்டா குண்டலியின் பயணம் தொடரும் .அனாஹத சக்கரத்தை தொடும். கஷ்டத்துல உள்ளவுகளை பார்த்து “அய்யோ பாவம் “ங்கற மென்டாலிட்டி வரும்.
இதனால செல்வமும் – செல்வாக்கும் பெருகி குண்டலி விசுத்தியை தொடும். அப்போ உங்க சொல்லே செயலா மாறும். இந்த நெடுந்தூர பயணத்திலும் கிரகங்களின் எஃபெக்ட் நிச்சயம் உண்டு. அவை போடும் தடைகளும் உண்டு. தடையை மீறி பயணம் தொடர்ந்தாலும் கிரகங்கள் உங்களை அப்பப்போ சீண்டி கிட்டே இருக்கும்.
குண்டலி ஆக்னாசக்கரத்தை தொடும்போதுதான் கிரகங்களின் பிடியிலிருந்து தப்ப முடியும். அப்படி தப்பனும்னா கிரகங்கள் எப்படி வேலை செய்யுது -பாவங்களோட காரகங்கள் என்ன? ஒருகிரகம் கெட்டால் அதனோட காரகம் எல்லாம் கெட்டுப்போகுதா? ஒரு பாவம் கெட்டா அந்த பாவத்தோட எல்லா காரகமும் கெட்டு போகுதாங்கற சூட்சுமம்லாம் தெரியனும்ல. ( கெடாதுங்கறதுதான் என்னோட பதில்)
இந்த சூட்சுமத்தை தெரிஞ்சுக்கிட்டா எதை விட்டா எதை பிடிக்கலாங்கற குன்ஸு தெரிஞ்சுரும்ல. இந்த குன்ஸு தெரிஞ்சு போச்சுன்னா நவகிரகங்களின் பிடியிலிருந்து விலகிரலாம்ல.
மூலாதாரத்துக்கும் -ஆக்னாவுக்கும் பல பிறவிகளின் இடைவெளி இருக்கும் போது நான் பாட்டுக்கு என் சரக்கை எல்லாம் அவுத்து விட்டா பீலா விடற மாதிரி தானே இருக்கும். எல்கேஜி படிக்கிற பையன் கிட்டே போயி பி.ஹெச்.டிக்கு தயாரிச்ச ஆராய்ச்சி கட்டுரைய கொடுத்தா என்ன ஆவும்? அதான் நடக்குது.
சரி ஒழியட்டும். நம்பறவுகளுக்கான மேட்டருக்கு போயிரலாம். நவகிரகங்களுடன் பேட்டி சீரிஸ்ல ராகு கேதுக்களை பத்தி எழுதிக்கிட்டிருக்கம்.
ராகு கேதுக்கள் ஜாதகத்துல கெட்டிருந்தா என்ன எஃபெக்டுன்னு சொல்லிட்டு வர்ரச்சயே ராகு கேதுக்கள் பெட்டர் ப்ளேஸ்மென்ட்ல இருந்தா என்ன எஃபெக்டுன்னும் சொல்லிர்ரன்.

மொதல்ல ஆறாமிடத்துல ராகு இருந்தா என்னபலன்னு பார்ப்போம். ஆறுங்கறது சத்ரு -ரோக -ருண ஸ்தானம். ராகு நிழல் கிரகம். தான் நின்ற பாவத்தோட பலத்தை உறிஞ்சி எடுத்துரும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஆகவே ஆறுல ராகு இருந்தா எதிரிகளோட பலம் போக போக குறைஞ்சுக்கிட்டே போகும். ராகு என்றால் ரகசியம். நீங்க வாங்கின கடன் ரகசிய கடனா இருந்தா பிரச்சினையே இல்லையே. நாலு பேருக்கு தெரிஞ்சாதானே பிரச்சினை.
ரோகஸ்தானம்னு பார்க்கும் போதும் இடுப்புக்கு மேல் பாகத்தை விட கீழ்பாகம் கொஞ்சம் குறுகலா இருக்கலாம். அப்படி இருந்துட்டா பிரச்சினையே இல்லை. ஒரு வேளை நார்மலா இருந்தா இடுப்புக்கு கீழ்பாகத்துல இனம் புரியாத பலவீனமோ – ரத்த ஓட்டத்துல தடையோ – வீக்கமோ ஏற்படலாம்.
எதிரிகள், கடன் மேட்டர்ல எந்தளவுக்கு உங்களுக்கு அனுகூலம் நடக்குதோ அந்தளவுக்கு உடல் நலத்துல பாதிப்பு ஏற்படலாமுங்கோ.

மேலும் இது தாய்மாமனை காட்டுமிடம் என்பதால் அவர் சட்டத்துக்கு புறம்பான செய்ல்களில் ஈடுபடுபவராக இருக்கலாம். அல்லது நீங்க பிறந்து வளர வளர அவர் இருட்டுக்கு போயிரலாம்.

12 ஆமிடத்துல உள்ள கேது என்ன செய்வாரு?
எதிரிகள் தானா ஒடுங்கி போறதை பார்த்து உங்களுக்குள்ள ஒரு ஃபிலசாஃபிக்கல் அவுட்லுக் ஏற்படலாம். கடன் மேட்டர்ல தானா ரத்தாயிர்ரது -வட்டி தள்ளுபடி ஆயிர்ரதுமாதிரி சம்பவங்களும் மேற்படி அவுட்லைக்கை அதிகரிக்கலாம். தனக்கு மிஞ்சி ஒரு சக்தி வேலை செய்யுதுங்கற ஃபீலிங் வரும்போது ஆட்டோமெட்டிக்கா உலகியல் சந்தோஷங்களான உணவு,செக்ஸ் இத்யாதி மேல ஆர்வம் குறைஞ்சுரும். தியானம் இத்யாதி மேல ஆர்வம் அதிகரிக்கலாம். சரியான பாதையில உங்க தியானம் தொடர்ந்தால் உங்க தூக்கமே தியானமாயிரும்.

மிச்சம் மீதி மேட்டரை நாளைக்கு பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

உயிரணுக்களை கொல்லும் யோனி சுரப்பு

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டிங்கற தொடர்ல ராகு கேதுவை பற்றி பார்த்துக்கிட்டிருக்கம்.கடந்த பதிவுல ராகு -கேதுக்கள் 1-7 ,2-8 பாவங்களில் இருந்தால் என்ன பலன்னு பார்த்தோம். 3-9 காம்பினேஷன்ல 3 ஐ மட்டும் சொல்லியிருந்தன். இப்பம் 9 ஐ பத்தி பார்ப்போம்.

9 ஆமிடத்துல ராகு இருந்தா அப்பா நைட் ஷிஃப்ட் காரரா இருக்கலாம்,லாலா பார்ட்டி,சினிமா,லாட்டரி,சூதாட்டத்துல (ஷேர்மார்க்கெட்) ஆர்வம் உள்ளவரா இருக்கலாம்.அல்லது அது தொடர்பான தொழில்,வேலை,வியாபாரத்துல இருக்கலாம்.

தலைமறைவா இருக்கலாம். அல்லது முடங்கி இருக்கலாம். அவருக்கு வீக்கம்,கட்டி போன்ற பிரச்சினைகள் வரலாம்.ஃபுட் பாய்சன் நடக்கலாம்.வெளி நாட்டு தொடர்புகள் இருக்கலாம்.தூர தேசத்துல இருக்கலாம்.

அவர் வழி உறவுல ஒரு க்ரூப் மதம் மாறியிருக்கலாம். ஜாதகருக்கு முழங்கால் பகுதியில கருப்பு மச்சம் இருக்கலாம்.

ஆழமான பார்வைன்னு தலைப்புல சொல்லிட்டு கோனார் உரை மாதிரி போயிட்டிருக்கு பதிவு. அதனால இன்னம் கொஞ்சம் ஆழத்துக்கு பைப்பை இறக்கிருவம்.

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவயாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும்.

ஏற்கெனவே சொன்னதை போல லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும்னு கூட சில ஜோதிடர்கள் சொல்றாய்ங்க. அதை எல்லாம் நம்பாதிங்க.

உங்க ஜாதகம் தீர்காயுசு ஜாதகமா இருந்தா ஆக்சிடென்ட் ஆக போற பஸ்லருந்து முந்தின ஸ்டாப்ல இறங்கிர்ராப்ல கழண்டு வந்துருவிங்க. டோன்ட் ஒர்ரி. என்ன ஒரு லொள்ளுன்னா உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம் இல்லின்னாலும் கன்றோடு சேர்ந்த பன்றி கணக்கா தோஷ ஜாதகர்களுக்கு சொல்லப்பட்ட பலன்லாம் உங்களையும் லேசா எஃபெக்ட் பண்ணலாம்.

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. அவற்றின் அசலான சாரத்தை – நோக்கத்தை புரிஞ்சிக்கிட்டா நீங்க புலி தான். அதை விட்டுட்டு ஸ்தூலமான விவரங்களை பிடிச்சுக்கிட்டு தொங்கினா நான் அம்பேல்.

புராண கதைகள் ஒரு பக்கம்னா சில “மித்” எல்லாம் இருக்கும். சரியான தமிழ் வார்த்தை கிடைக்கலை.அதான் இங்கிலிபீஸ்லயே தந்தாச்சு. சாரி. அந்த மாதிரி “மித்” ஒன்னை இங்கே சொல்றேன்.

சத்தியமா இதை ஒரு புஸ்தவத்துல தான் படிச்சேன் -அதுவும் கில்மா புக்ல இல்லை. மரியாதைப்பட்டவுக படிக்கிற புஸ்தவத்துலதான். பாரதியார் வேலைக்காரவுகளோட தான் பட்ட வேதனையை சொல்றச்ச “பானையிலே தேளிருந்து பல்லாலே கடித்ததென்பார்”ம்பாரு.

நான் படிச்ச புஸ்தவத்துல சர்ப்பதோசம் உள்ள பெண்ணின் ………க்குள்ள ஒரு பாம்பு இருக்கும். உறவு கொள்ளும் ஆணின் உறுப்பை கொத்திரும்னு இருந்தது. இந்த மாதிரி பீலாவை எல்லாம் கிட்டே சேர்க்கப்படாது.

ஆனா இதை வேறு மாதிரி புரிஞ்சுக்க ட்ரை பண்ணனும். உதாரணமா சில பெண்களின் சுரப்புல ஆணின் உயிரணுக்களை கொல்லும் கெமிக்கல்ஸ் இருக்காம். இதே போல ஆணின் ஆண்மையை குறைக்கும் கெமிக்கல்ஸ் கூட இருக்கலாம். தேர் ஈஸ் எ சான்ஸ்.

தன் உடலையே தானாக பாவித்து வாழும் ஆண் ஆண்மையை இழப்பதுன்னா ஏறக்குறைய செத்துப்போனமாதிரி தானே..

பின்னே சர்ப்பதோஷம் என்னதான் செய்யும்னா கடந்த பதிவுல கொடுத்த எஃபெக்ட்ஸை எல்லாம் கொடுக்கும். உங்களுக்கு சர்ப்பதோஷம் இல்லின்னாலும் சர்ப்பதோஷம் உள்ளவுகளை மணந்தா இந்த எஃபெக்ட்ஸ் உங்களையும் அப்பப்போ டச் பண்ணலாம்.

பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தான் இந்த தோஷம் வந்ததான்னு கேட்டா வந்திருக்கலாம்.ஆனால் இது ஏழு தலைமுறைகளுக்கு முன்னேயோ – அல்லது கடந்த தலைமுறையிலயோத்தான் நடந்திருக்கனும். நம்ம தலைமுறையில பாம்பெல்லாம் ஏது?

நாம “சிட்டி”சன்ஸ்ங்கறதால இது ஓகே. ஒரு வேளை கிராமத்துப்பக்கம் இன்னைக்கு – நாளைக்கு கூட நடக்கலாமேன்னா நடக்கலாம் .

பாம்பை கொல்லக்கூடாதா? பாம்பு என்ன ஸ்பெஷலுன்னு கேப்பிக எல்லாத்துக்கும் பதில் இதே பதிவுல வருது வெய்ட்.

சர்ப்பதோஷம்ங்கற வார்த்தைய சூட்சுமமா புரிஞ்சுக்கனும்.பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது.

மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட பூச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

சர்ப்பம் யோகத்துக்கும் அறிகுறி:

ஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு,கேதுக்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் யோகத்தில் வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் விழிப்பு நிலைக்கேகிய குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.

சர்ப்பம் செக்ஸுக்கு அறிகுறி:

சர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள்.

பாம்புக்குரிய குணநலன்கள் :
பாம்புக்கு மனிதர்கள் மீது பயம். மனிதர்களுக்கு பாம்பு மீது பயம். எனவே பாம்பு மறைந்து வாழ்கிறது. மனிதன் கண்ணில் பட்டால் அடிப்பட்டு சாகிறது. அல்லது மனிதனை கொத்தி கொன்று விடுகிறது. வளைந்து வளைந்து செல்கிறது. இரையெடுத்தபின் அசையாமல் கிடக்கிறது. பாம்புக்கு சிறுநீர்,மலம் கழிக்க விந்துவை வெளியேற்ற தனித் தனி துவாரங்கள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக க்ளோயகா என்றதுவாரம் தான் உண்டு.இதனால் சர்ப்பதோஷ ஜாதகர்களுக்கு அன்வாரன்டட் மோஷன்ஸ் நடக்கவும் – துரித ஸ்கலிதம் நடக்கவும் வாய்ப்புண்டு.

சர்ப்பதோஷம் கொண்டவர் நிலை:
ஜாதகத்தில் சர்ப்பதோஷம் கொண்டவர் நிலையும் ஏறக்குறையஇப்படித்தான். எப்படி என்பதை கொஞ்சம் முக்கி யோசியுங்கள். இந்த ரூட்ல நான் ரோசிச்சதை தான் கடந்த பதிவுல விவரமா தந்திருக்கேன்.

அங்கு விடுபட்டவை மட்டும் இங்கே:

சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நேர் வழி, நேர் மறை சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரக் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

இரவில்,இருளில் செய்யும் வேலைகளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிரஃபி)சட்டவிரோதசெயல்கள்,கடத்தல், டூப்ளிகேட் தயாரித்தல்,கள்ளக்கையெழுத்து

தோசங்கள் குறித்த விதி:
தோஷம் உள்ளவுக தோஷம் உள்ளவுகளையே மணக்கனும். ஆனால் தோஷங்களோட அளவு சமமா இருக்கனும். இல்லாட்டி இம்சை தான். உதாரணமா ஆண் ஜாதகத்துல 1-7 ல் ராகு கேது ,பெண் ஜாதகத்தில் 2-8 ல் ராகு ,கேதுன்னா பொருந்தாது.

ஜாதகம் பொருந்திட்டா தோஷங்கள் போயிரும்னு இல்லை. அவிகளுக்கு நடக்கிறது எதுவும் புதுசா தெரியாது.புரட்சி பண்ணமாட்டாய்ங்க.அஜீஸ் பண்ணிக்கிட்டு போயிருவாய்ங்க. தட்ஸால்.

இந்த ஆழம் போதும்னு நினைக்கிறேன். நாளைக்கு 5-11 , காம்பினேஷனை பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

சர்ப்பதோஷம் : பரிகாரங்கள்

சர்ப்பதோஷம்னா ராகு கேதுக்கள் லக்னத்துலருந்து 3,6,10,11,4,12 தவிர இதர இடங்களில் இருப்பது. இதற்கான பரிகாரத்தை கேட்க கீழ் காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்குங்க

ஒரு நானோ கார் இலவசம்

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கும் ஆடியோ பாடம் தொடருது. நேத்து ராகு கேதுக்கள் பற்றிய முன்னோட்டம் + துவாதச பாவங்களில் ராகு நின்ற பலனை பார்த்தோம். இன்னைக்கும் ராகு -கேது பற்றிய முன்னோட்டம் தொடருது ( நேத்து மிஸ் பண்ண டேட்டா) .

இத்துடன் துவாதச பாவங்களில் கேது நின்ற பலனையும் சொல்லியிருக்கேன். ஆடியோவா டெக்ஸ்டான்னு ஒரு வாக்கு பதிவு ஆரம்பமாகியிருக்கு.Read More

சர்ப்பதோஷம் : விளக்கங்கள்

வாக்காள பெருமக்களேனு விளிச்சு பிரச்சாரம் செய்யனும் போல இருக்கு. ஆனாலும் அ நி யாயம் ஆடியோ ஃபார்மெட்டுக்கு ரெண்டே ஓட்டுதானா?

ஜானகிராமன் மட்டும் வாக்காளர் பட்டியல் ஒன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு Read More

ஜோதிட பால பாடம் :3

அண்ணே !
வணக்கம்ணே. ஜோதிட பால பாடம் நெஜமாலுமே பால பாடமா இருக்கா? அல்லது அந்த காலத்து மணிபிரவாளம் போல கஷ்டமா இருக்கா அல்லது உபயோகமா இருக்கான்னு சொன்னா சரக்கை டென்ஸாக்கவோ டைல்யூட் பண்ணி தரவோ வசதியா இருக்கும்.பால பாடம் இன்னைக்கும் தொடருது.
Read More