செம மேட்டரு : 12 (ஆறாம் பாவம் )

DSC_8123
அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல சொன்னது ஞா இருக்கலாம். நம்ம ஜாதகத்துல ஆறாம் இடத்துக்கு குரு அதிபதி.இவர் உச்சம். இந்த பாவம் தரும் சத்ரு ரோக ருண உபாதைகளை பற்றி நான் அல்லாது வேறு ஆரு சொல்ல முடியும்?
இத்தனைக்கும் மேற்படி குருவே 9க்குடையவர்.  நம்ம ஜாதகப்படி  கடனே மூலதனம், எதிரியே சொத்து , நோயே வழி பாடு.ஆனாலும் கொஞ்சம் நஞ்சமா படலை பாஸ் !
அனுபவத்துல சொல்றேன். எதிரியா மன்னிச்சுருங்க ,கடனா வாங்கவே வாங்காதிங்க.கொடுக்கவே கொடுக்காதிங்க. நோயா வரட்டும் பார்த்துக்கலாம்.
எதிரிகளை செயிக்க திட்டத்துக்கு மேல திட்டம் போட்டப்பல்லாம் அவிக செயிச்சாய்ங்களே கண்டி நாம செயிக்கல. எப்பம் ப்தூ போ ! ன்னு விட்டுட்டமோ ..அவிக கதை கந்தலாயிருச்சு. உபகதை வேணம்னா டஜன் டஜனா சொல்றேன்.
கடனும் இந்த கேட்டகிரி தான். நாம ஆருக்கிட்டே கடன் வாங்கறமோ அந்த பணம் நம்ம கையில இருக்கிறவரை (ஐ மீன் திருப்பி கொடுக்காதவரை ) நம்ம ராசிக்கு சோசியம் பார்க்கிறத விட கடன் காரன் ராசிக்கு சோசியம் பார்த்தா பக்காவா சூட் ஆகும். அவன் கருமம் மொத்தத்தையும் நாமதேன் அனுபவிக்கனும்.
நம்ம கிட்டே கடன் வாங்கிக்கிட்டு திருப்பி தராம பாய்லா காட்டறாய்ங்களே அவிக தான் உண்மையான தியாகிகள். நம்ம கருமத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு நமக்கு ரிலீஃப் தர்ர தியாகிகள்.
நோய்ங்கறிங்களா? எப்பவோ ஒரு காலத்துல இமிசை கொடுத்த வீசிங் தவிர நோய்னு வந்ததே கிடையாது.ஆனால் ஊரைசுத்தி கடன், குண்டிய சுத்தி சத்திராதிங்க. இப்பம் (ஐ மீன் 2007 க்கு பிறவு) உலகத்துல உள்ள நோய்களின் அறிகுறிகள் எல்லாம் தினம் தினம் ஒவ்வொன்னா வெளிப்படுது. ஆனால் கடன் இல்லை. இந்தியன் வங்கில மவளுக்காவ லட்ச ரூவா லோனுக்கு ட்ரை பண்ணது நெஜம் தான்.ஆனால் ஆத்தாவே வேண்டான்டா ராசான்னு ஆப்படிச்சுட்டா. (நிம்மதி)
எதிரிங்கறிங்களா? ரசினி காந்து,மம்மி,மோதி மட்டுமில்லை அவிகளோட கடை கோடி தொண்டர்கள் உட்பட நம்ம காமெடி பீஸுன்னு டிசைட் பண்ணிட்டாய்ங்க போல ஆரும் கண்டுக்கிடறதில்லை.
இந்த ஆறாமிடத்தை டாக்கிள் பண்ணனும்னா நோய்க்கு ரெடி ஆகி வழி விட்டுரனும் (அது டிக்கெட் போடற நோய்க்கு அறிகுறியா இருக்க கூடாதுங்கோ) , அல்லது தேவையே இல்லின்னாலும் ஒரு கடனை வச்சுக்கிட்டு ட்யூ கட்டிக்கிட்டு வரனும், ஊற வச்சே நாறடிச்சுருவான்னு தெரிஞ்சே எவனுக்காச்சும் கடன் கொடுத்து வைக்கனும்.
யப்பா.. நா டுபாகூரு, டம்மி ,உங்க ஆருக்கும் போட்டியில்லடா சாமீனுட்டு டிக்ளேர் பண்ணி ஒரு ஓரமா விளையாடிக்கனும்.
இதெல்லாம் மானம் உள்ளவன் செய்யற வேலையா என்னால முடியாதுங்கறிங்க. அப்ப என்னாகும்னும் சொல்லனுமில்லியா?
ஒரு பெரீ ஃபைனான்ஸ் காரன்.லைசென்ஸ்ட் கன் வச்சிக்கிற அளவுக்கு சவுண்டு பார்ட்டி. கஷ்டத்துக்கு கடன் வாங்கின ஃப்ரெண்டுக்கு நோட்டீஸ் விட்டுட்டான். மேட்டர் என்னடான்னா அன்னைக்கு ராத்திரியே தூக்கு போட்டு சாவு. ( ஃப்ரெண்ட் இல்லிங்கோ -ஃபைனான்ஸ் காரரு)
மணி மேட்டர்ல பர்ஃபெக்டா இருக்க நினைச்சா இப்டி கூட நடக்கலாம். பார்த்து சூதானமா நீக்கு போக்கா நடந்துக்கங்க வாத்யாரே..
விட்டு கொடுத்தவன் கெட்டுப்போறதில்லை.

ஆராலே ஆருக்கு ஆப்பு?

அண்ணே வணக்கம்ணே !
பல தாட்டி சொல்லியிருக்கேன். பல ஆபாச சொற்களை அவற்றின் விபரீத அருத்தங்கள் தெரியாம பெண்கள் உட்பட உபயோகிச்சுட்டிருக்காய்ங்க. அந்த லிஸ்டுல ஆப்பும் ஒரு வார்த்தை. பிளவை பெருசாக்க பிளவின் இடையில் வைத்து இறக்கற ஐட்டத்துக்கு தான் ஆப்புன்னு பேரு.
வயாசான காலத்துல தொல்பொருள் துறை சேகரிச்சு வச்ச கணக்கா நம்ம மண்டையில ஸ்டோர் ஆகியிருக்கிற வார்த்தைகளையே போட்டு பதிவெழுதினா யூத்துக்கு போரடிக்கும். அதனாலதேன் அப்டேஷன் பேர்ல இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் உபயோகிக்கவேண்டியதா இருக்கு.
பாவாதிபதிகள் பாவங்களில் நின்ற பலன் – ரோகாதிபதி பாவங்களில் நின்ற பலன் இப்படி தலைப்பு வச்சா ஹிட்டு புட்டுக்கும். அதானாலதேன் ஆபாசம்னு தெரிஞ்சாலும் ஆப்புங்கற வார்த்தைய தலைப்புல உபயோகிச்சிருக்கன்.
சரி மேட்டருக்கு வந்துர்ரன்.

ஜாதகத்துல லக்னாத் ஆறாமிடத்து அதிபதியை சத்ரு ரோக ருணஸ்தானாதிபதின்னு சொல்வாய்ங்க.இவர் எந்த பாவத்துல நிற்கிறார்ங்கறதை வச்சு சில பலன் களை பார்ப்போம். ( கடந்த பதிவுகளில் சொன்ன கண்டிஷன்ஸ் அப்ளைங்கோ)

1.லக்னத்துல நின்னா:
(ஹி ஹி இது நம்ம ஜாதகத்துல உள்ள அமைப்பு) தன்னுடன் தானே முரண்டுபடுதல் ,சத்ரு ரோக ருண உபாதைகள் இருக்கும். குறை காண்பதில் நக்கீரர் வமிசம். பிரச்சினையை தாங்களே ஏற்படுத்திக்கிறது சகஜம். இவிகளோட விவகாரங்கள் (டிஸ்ப்யூட்ஸ்), நோய்கள், கடன்கள் இத்யாதிக்கு இவிகளே காரணமா இருப்பாய்ங்க. நண்பர்களை கூட விரோதிகளாக்கிக்குவாய்ங்க. (குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை). ரோகாதிபதி நைசர்கிக சுபரா இருந்தா எவ்ள அடிச்சாலும் தாங்குவாய்ங்க.அந்த நை.சுபர் லக்னாத் பாபியா இருந்தா சமயம் பார்த்து டிட் ஃபார் டேட்னு இறங்கிருவாய்ங்க.

2.ரெண்டாமிடத்தில் நின்னா:
கடன், நிஷ்டூர பேச்சு, வாய்,தொண்டை ,கண் நோய்,குடும்ப கலகங்கள். டம்ப பேச்சால் ,வீம்பால் வீண் செலவுகள். டாக்டருக்கும் செலவழிப்பாய்ங்க. குடும்பம் ஒரு ப்ளாக் ஹோல் மாதிரி எவ்ள போட்டாலும் விழுங்கிக்கிட்டே இருக்கும்.

3.மூன்றில் நின்னா:
டூ வீலர்,பெட்ரோலுக்கு,ஆட்டோ,டாக்சிக்கு எக்கச்சக்கமா செலவழிப்பாய்ங்க. வித் இன் தி சிட்டி ஜர்னி பண்ணும்போது எதுனா சிக்கல்ல மாட்டுவாய்ங்க. ( லக்கேஜ் மிஸ் ஆறது எட்செட் ரா) இளைய சகோதரத்தால் கடன் ஏற்படும்.அவர் நோயாளியா/கடனாளியா இருக்கலாம். ஜாதகருக்கு சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆகலாம்.பட்டிமன்றம்,விவாத மேடை இத்யாதியில ஆர்வமிருக்கும். வாதம் விதண்டா வாதம் ஆயிராம பார்த்துக்கனும். தில்லுதுரைங்க. அதனால லொள்ளும் உண்டு.

4.நான்கில் நின்னா:
தாய் நோய் வாய்ப்படலாம். அ அவிகளோட விரோதம். சகட்டுமேனிக்கு கடன் வாங்கி வீட்டை கட்டி அவதி படறவுக, குடக்கூலிக்காரன் அல்லது அண்டை வீட்டுக்காரன் போட்ட கேஸுக்கு கோர்ட்டுக்கு அலையறவுகளுக்கு இருக்கக்கூடிய கிரகஸ்திதி இது. வாகனக்கடன் வந்ததே இது போன்ற ஜாதகர்களுக்காகத்தான்.கல்வி மேட்டர்ல ரீ டோட்டலிங், ரீ கரெக்சன், ரீ எக்ஸாம்லாம் வந்ததும் இவிகளுக்காகத்தான். இதயம் தொடர்பான பிரச்சினையும் வரலாமுங்கோ. மெடிசின் , லா ,பேங்கிங், ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் படிக்கலாம்.

5.ஐந்தி நின்றால்:
எதையும் கொனஷ்டையாவே ரோசிப்பாய்ங்க. சொந்த முயற்சியில் கடன்,நோய்,வழக்குகளை ஏற்படுத்திக்குவாய்ங்க. குழந்தை பிறப்பில் பிரச்சினை. குழந்தைகளை விரோதிகள் மாதிரி ட்ரீட் பண்ணுவாய்ங்க. சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம்ஸ் வரலாம். அவார்டுக்கு சண்டை போடற சாதி. நாம என்னதான் முயற்சி பண்ணி ரிவீல் பண்ணாலும் தங்கள் குறையை ஏத்துக்கமாட்டாய்ங்க. அப்படியே தப்பித்தவறி ஏத்துக்கிட்டாலும் அவிகளால ம் அதை நிவர்த்திக்கமுடியாது. குழந்தைகள் இவிகளை நடுத்தெருவில் விடும்

6.ஆறில் நின்றால்:
இவிகளோட தினசரி ஆக்டிவிட்டீஸ் கூட கடன், நோய்,வழக்குகளை அடிப்படையாக கொண்டே இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும். தாய்மாமனுடன் விரோதம் ஏற்படும். கிரெடிட் கார்டை எசகு பிசகா உபயோகிச்சுட்டு மாட்டி விழிக்கிறவுக இந்த கேட்டகிரி தான். போலீஸ் ஸ்டேசன்,கோர்ட்,ஆஸ்பத்திரியில் அடி வைத்தே ஆகனும்.

7.ஏழில் நின்றால்:
காதல் விவகாரத்துல காம்ப்ளிக்கேஷன்ஸ் ஏற்படும். திருமணம் கூட ஃபிக்ஸ் ஆகி ,கேன்சல் ஆகி ,மறுபடி ஏற்பாடாகும். உறவுலயே ஒரு க்ரூப்புக்கு பிடிச்சு ,இன்னொரு க்ரூப்புக்கு பிடிக்காம நடக்கும். மனைவி நோய் வாய்ப்படுவார். மனைவியே எதிரியாவார்.மஹிளா ஸ்டேஷன், ஃபேமிலி கோர்ட் வரைக்கும் கூட போவாய்ங்க. பார்ட்னர்ஷிப் வியாபாரத்துல தகராறு வரும். நட்பு வட்டத்துலயும் அடிக்கடி முட்டிக்குவாய்ங்க. ஜாதகருக்கு தொப்புள் பகுதியில் எதுனா மெடிக்கல் ப்ராப்ளம் வரலாம்.

8.எட்டில் நின்றால்:
சத்ருஜெயம் ,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி ஏற்படும். ஆனால் எல்லா எதிரிகளையும் ஜெயிச்சு முடிச்சபிறகு அதுவரை தலைவலி கூட வராம இருந்த பார்ட்டிக்கு கிரானிக்கல் டிசீஸ் எதுனா மாட்டிக்கலாம். கடன் மேட்டர்லயும் செட்டில் பண்ண பிறவு நோய் ஏற்படலாம். ஆனால் மாரகம் இருக்காது.அவதிப்படனும் அவ்ளதான்.
ரகசியம்: இவிகளோட மோதினவுக, இவிகளுக்கு கடன் கொடுத்தவுக,இவிக மேல கேஸ் போடறவுக செத்துக்கூட போகலாம்.

9.ஒன்பதில் நின்றால்:
இது அப்பா தொடர்பான விஷயங்களுக்கு இது நல்லதில்லை.பூர்வீக சொத்து ஆக்கிரமிப்புக்குள்ளாகலாம். டெப்பாசிட் பண்ண சிட் ஃபண்ட் காரன் ஓடிப்போகலாம்.போலி ஏஜெண்டை நம்பி வெளி நாடு போக முயற்சி பண்ணி போண்டியாகலாம். தூர தேச தொடர்புகளால் பெரு நஷ்டம் சிலருக்கு கண்டமும் உண்டு. தூரபிரயாணங்களில் விபத்து ஏற்படலாம். தொடை பகுதியில் எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் வரலாம்.

10.பத்தில் நின்றால்:
வங்கி, ஸ்டேஷன்,கோர்ட்,ஆஸ்பத்திரி தொடர்பான வேலையில் இருந்தால் பிழைச்சாய்ங்க. இல்லின்னா வாழ்க்கை சத்ரு ,ரோக,ருண உபாதைகளால் கற்பழிக்கப்பட்டுரும்.

11.பதினொன்றில் நின்றால்:
ஜெனரேட் ஆன இன்கம் கூட கைக்கு வராது. மூத்த சகோதர மாரகம் உண்டு.பாதம் -முழங்காலுக்கு இடையிலான பகுதியில் பிரச்சினை வரும். மேற்படி நஷ்டம் -மாரகம் இத்யாதி ஒத்தையா வராது . ஜோடியா வரும்.

12.பனிரெண்டில் நின்றால்:
கடன்,நோய்,எதிரிகள் எல்லா அம்சங்களும் வாழ்க்கையில இருக்கும். ஆனால் சரியா தின்னமுடியாத ,தூங்க முடியாத வியாதி வரலாமே கண்டி இவிகளுக்கு மட்டும் எறும்பு கடிச்ச மாதிரி கூட இருக்காது. கடன்,நோய்,எதிரிகள் விஷயத்துல துரும்பை கூட கிள்ளிப்போட மாட்டாய்ங்க. அதும் பாட்டுக்கு அதுவே பைசலாயிரும்.