கில்மாவும் -ஆன்மீகமும்

காமி கானி வாடு மோட்சகாமி காலேடு – இது தெலுங்கு பழமொழி. இதுக்கு ” காமத்தை விரும்புபவனாய் இல்லாதவன் மோட்சத்தை விரும்புபவனாக முடியாதுன்னு அருத்தம். கில்மா ஒரு படப்பாடல்னா ஆன்மீகம் சூப்பர் ஹிட் இரவு காட்சி.

2000 டிசம்பர் 23 முதல் நாளிது வரையிலான என் ஆன்மீக அனுபவங்களை சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். அனுபவங்கள்னா இதுல கில்மாவும் அடக்கம் தானே.

அதை விட்டுட்டு எழுதினா இது எப்படி முழுமையான அனுபவமாகும்.Read More

வசிய மந்திரம்

Ref: அவன் அவள் அது :13

ஆத்தாளை அடுத்த பிற்பாடு 2000 டிசம்பர் 23 முதல் ஏற்பட்ட என் ஆன்மீக அனுபவங்களை ஒன்னு விடாம சொல்லனுங்கற உத்தேசத்தோட தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். எந்த மேட்டரா இருந்தாலும் க்ளைமாக்ஸ் கண்ணுக்கு தெரியற வரைதேன் ப்ரிப்பரேஷ்ன்லாம். அதுக்கப்பாறம் காட்டடிதேன்.
எந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாம ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுருவம்.

கில்மா மேட்டர் எழுதினப்பல்லாம் இந்த ஃபார்முலா நல்லா தான் போயிட்டிருந்தது . அவளை பத்தி எழுத ஆரம்பிச்சா எல்லாமே முரண்டு பிடிக்குது. இந்த ஃபார்ம் இல்லாத ஃபார்ம் தான் அவளுக்கு இஷ்டம் போல.அப்பத்தானே என்னை குழப்பின மாதிரி படிக்கிறவுகளையும் குழப்ப முடியும். சரி.. ஆத்தா விருப்பமே நம்ம விருப்பமும்.

ஆத்தாளுக்கு நாம கொடுக்கிற மாமூல் ரெம்ப சிம்பிள்.தினசரி ஒரு தம்ளர் மஞ்சள் நீர் வாரத்துக் கொருதரம் பத்து ரூவா பட்டை லவுங்கம். பத்து ரூவா எலுமிச்சம்பழம்.அம்புட்டுதேன். பட்டை லவுங்க சமாசாரம் சஸ்பென்ஸ்.

தினசரி வெளிய கிளம்பும் போது அந்த மஞ்சத்தண்ணியில ஒரு ஸ்பூன் விட்டுத்தேன் சந்தனம் உரைச்சு நெத்திக்கிட்டுக்கறது.

பூஜை ,புனஸ்காரம்லாம் ஒரு மண்ணும் கிடையாது.மைண்டுல ஒரு ட்ராக்கை ஆத்தாளுக்கு ஒதுக்கியாச்சு.அதும்பாட்டுக்கு ஓடிக்கினு இருக்கும்.அந்தாசா மாசத்துல ஒரு தினம் ரெம்ப சுஸ்தா இருந்தா க்ரூப் ஸ்டடி மாதிரி சகல தேவதா ஸ்தோத்திரத்துல ஆத்தாளுக்குன்னு நாம ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கிற சங்கல்ப்ப ஸ்லோகம் உட்பட ஒரு பாட்டம் சொல்லிருவம். Read more

அவன்-அவள்-அது :12

அடிக்கடி ஆத்தா பார்த்துப்பா -அம்பாள் பார்த்துப்பான்னு நாம ஃபிலிம் காட்டறதா சிலர்/பலர் நம்மை தப்பா நினைச்சிருப்பாய்ங்க. கொய்யால எவந்தான் அம்மன் பேரை சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சுப்பான்னு கடுப்பாகியிருப்பாய்ங்க .அவிகளுக்கெல்லாம் ஒரு க்ளேரிஃபிகேஷன் தந்தாப்லயும் இருக்கும் – நமக்கும் ஒரு மலரும் நினைவுகளா இருக்கட்டும்னு அவன் -அவள் -அது என்ற தலைப்பில் ஒரு தொடரை ஆரம்பிச்சோம். இடையில டீல்ல விட்டுட்டம். அப்பாறம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிச்சோம்.

இந்த அம்மன் பிசினஸ்ல தலை கொடுக்க முக்கியமான காரணம் அவளை நாட எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயமும் தேவையில்லைங்கற ரிலேக்சேஷன் தேன். நாமதேன் விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே.(எங்க பக்கத்துல அர்ரா கட்டைனு சொல்வாய்ங்க)

நாம ஒன்னும் இமய மலைக்கு போய் தபஸ் எல்லாம் பண்ணலை. நாம ஒன்னும் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு இல்லை. ஆனாலும் ஜா.ரா மாதிரி ஆட்களோட கம்பேர் பண்ணிக்கிட்டோ என்னவோ ஆத்தாவே நம்மை “சரி இப்படி ஒரு கேரக்டரும் இருக்கட்டும்”னு தன் சபையில சேர்த்துக்கிட்டா.

நம்ம யோகி சார் நம்ம அனுபவங்களை படிச்சுட்டு ” பார்த்துங்க ..இதெல்லாம் எதுனா யட்சிணி வேலையா இருக்கப்போகுதுன்னு பேதிக்கு கொடுக்கிறாரு.” read More

அவன் -அவள் -அது :11 ?

அண்ணே வணக்கம்ணே.. ஆத்தாவுக்கும் நமக்கும் எப்படி கனெக்சன் ஆச்சு – ஆத்தாளை நாம எப்படி அப்ரோச் பண்ணோம் -ஆத்தா நம்மை எப்படி அப்ரோச் பண்ணாள்?

நம்ம டீலிங் எப்படியிருந்தது -ஆத்தாவுக்கு நாம என்ன கொடுத்தோம் ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்தா கொடுத்துக்கிட்டிருக்காங்கறதை பத்தி ஒரு தொடர்பதிவு போட நினைச்சு ஆரம்பிச்சோம். அது ஏனோ எதுக்கோ எப்படியோ அப்படியே நின்னுப்போச்சு. ஆமை முட்டை வச்ச இடத்தை நினைச்சா அது பொரியுமாமே அதுமாதிரி ஆத்தா எங்கருந்தோ நம்மை ஆப்பரேட் பண்றாள். நாமளும் ஆடிக்கிட்டிருக்கோம்.

தொடரை எந்த லைன் அப்ல ஆரம்பிச்சோம்.எதுவரை வந்ததுனு கூட ஞா இல்லை. நாம என்ன வீக்லியில தொடரா எழுதறோம் சினாப்சிஸ் -வச்சுக்கிட்டு போன வாரம் என்ன எழுதினோம்னு பார்த்துக்கிட்டு எழுத .

பணம் காசு வர மந்திரம் கேட்டோம் – பீஜங்களின் தொகுப்பே தந்துட்டாய்ங்க. ஜெபிக்க ஆரம்பிச்சோம்.ஸ்தூலமா லெமன் – மஞ்ச தண்ணி (அப்பாறம் பட்டை லவுங்கம் சேர்ந்துக்கிச்சு)

உடுப்பி ஹோட்டல் சாப்பாடு கணக்கா இருக்கவேண்டிய சாப்பாட்ல தொடர்ந்து காரம் மஞ்ச தண்ணிய டேஸ்ட் பண்ணி பார்த்தா பயங்கர காரம். அப்பாறம் மஞ்ச தூள் ப்ராண்டை மாத்திட்டம்.

மஞ்ச தண்ணி வைக்க லேட்டானா ரத்த காயம் அ ருத்ர தாண்டவம். மேற்படி மந்திரத்துக்குரிய ஐ மீன் ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரிய அம்மன் பேரு புவனேஸ்வரி. முன் அனுமதியில்லாம இந்தம்மாவோட அந்தப்புரம் வ்ரை போய் தகவல் சொல்லும் அதிகாரம் படைச்சவுக ரெண்டு பேரு ஒருத்தர் ஆஞ்சனேயர். இன்னொருத்தர் கிளி முகம் கொண்ட ரிஷி (பேர் என்னங்கண்ணா? மறந்து போச்சு)

ஒரு நா ஒரு கிளி நம்ம போர்ஷனுக்குள்ள நுழைஞ்சுருச்சு.ஒரு 9 நாள் தங்கியிருந்துச்சு. நாம தியானம் பண்ணிக்கிட்டிருக்க ( ஐமீன் பீஜ ஜெபம்) பாம்பு வந்துருச்சு. எட்செட்ரா எல்லாம் சொல்லியிருப்பன்.

இந்த செனேரியோல நடந்த ஒரு சம்பவம் மட்டும் ரெம்ப த்ரில்லா இருக்கும்
Read More

ஆத்தா ஒரு ட்ராகுலா !

இன்னாங்கடா இது நம்ம முருகேசு பெரியாரை சித்தபுருசரும்பாரு – இன்னய தேதிக்கு நான் சாமியாருனு மாஃப் காட்டற திருட்டு பசங்களோட ஒப்பிட்டா பெரியாருதேன் உண்மையான சன்யாசிம்பாரு அம்புட்டுதேன். ஆனால் படக்குனு ஒரு யு டர்ன் அடிச்சு நாத்திகத்துக்கு இறங்கிட்டாரோன்னுட்டு குழம்பிராதிங்க.

என்னை உங்க ஊருக்கு வரச்சொல்லி மெயில் அனுப்பறிங்க. நானு அடப்போங்க சார்.. பஜாருக்கு போகவே நேரமில்லை. நான் எங்க வர்ரதுன்னு கழண்டுக்கறேன். நீங்க வாரம் பத்து நாள் தொடர் மெயில்கள் அனுப்பி வரச்சொல்லி வற்புறுத்தறிங்க.

நான் என்னைக்கு வரேன்னு சொல்லமுடியாது. புறப்படறனன்னைக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன்னு சொல்றேன். உங்க நல்ல நேரமோ என் கெட்ட நேரமோ ஒர்க் அவுட் ஆகி, உங்க வில் பவர் / உங்க எண்ண அலைகள் என்னை கிண்டோ கிண்டுன்னு கிண்ட புறப்படலாம்னுட்டு உங்களுக்கு ஃபொன் பண்றேன். உங்க ஃபோன் ஸ்விட்ச் ஆஃப். நான் புறப்படுவேனா?

ஒரு வேளை நீங்க ஃபோன் ஆன்ல வச்சிருந்து என் காலை எடுத்து பேசி வேலூர் வந்து வந்துருங்க சார் .ஷார்ட். புது பஸ்ஸ்டாண்ட் போகாதிங்க. பழைய பஸ் ஸ்டாண்டுல இறங்கிட்டு ஒரு மிஸ்டு கால் தட்டி விடுங்க நான் பிக் அப் பண்ணிக்கிறேங்கறிங்க.

நானும் நம்பிக்கையா புறப்பட்டு வரேன். பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி ஃபோன் பண்றேன். நீங்க ” சார் .. நீங்க என்ன பண்றிங்கண்ணா அப்படியே வெளிய வாங்க.வந்து ஆட்டோ ஸ்டாண்ட்ல் காந்தி நகருன்னு சொல்லுங்க. நூறு ரூபாதான் கேட்பான் அப்படியே வந்து”ங்கறிங்க.. நான் என்ன பண்ணுவேன்/

அடப்போங்கடா நீங்களும் உங்க இழவும்னுட்டு அடுத்த பஸ் பிடிச்சு சித்தூரை பார்க்க வந்துருவேன்.

ஒருவேளை .. நீங்க பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் பண்ணி என்னை பிக் அப் பண்ணி டீ,காஃபி, பான்,பீடா,பீடி,சிகரட்டு எல்லாம் வாங்கி கொடுத்து ஊட்டுக்கு கூட்டி போயி திண்ணையில உட்கார வச்சுட்டு உள்ள போறிங்க.( உங்க ஊர்ல இன்னம் திண்ணைங்க இருக்கா பாஸ்? எங்க ஊர்ல இடிச்சு கட்ட வசதியில்லாத திவால் பார்ட்டிங்க மட்டும் விட்டு வச்சிருக்காய்ங்க )

அஞ்சு நிமிசம்,பத்து நிமிசம்.பதினைஞ்சு நிமிசம் ஆச்சு . ஆளை காணோம். இன்னாங்கடா இது இந்த வீட்டு எலிவேஷன் மட்டும் உண்மையோ.. பின்னாடி ஒன்னும் இருக்காதோ/ வெட்ட வெளியோ? இந்த ஆளு அப்படியே பொடி நடையா மலையாள பிட்டு படம் பார்க்க போயிட்டாரோன்னுட்டு எனக்கு டவுட்டு வருது. நான் என்ன பண்ணுவேன். ” ஆளை விடுங்கடா”ன்னுட்டு பிச்சிக்கினு சித்தூர்.

இந்த ரேஞ்சுல – இந்த சீரியல்ல தொடர் பதிவே போடலாம். மத்ததை எல்லாம் உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

ஒரு காலணா சோசியன் நான். உங்களுக்கு மூட்டை அவுத்து கொடுக்கப்போறது ஒன்னும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா வெத்தலை பாக்குல ரூவா வச்சு எனக்கு அழப்போறிங்க. இருந்தாலும் என்னை இன்வைட் பண்ணி ரிசீவ்பண்ணிக்கிட்டு சோசியம் கேட்டுக்கறதிலியே இத்தனை கண்டமிருக்கு.

அப்படியா கொத்தது ஆத்தாவை இன்வைட் பண்றதுன்னா தமாசா? ஆத்தாவுக்கு கடுப்பானா இன்னா ஆவும்? ஆத்தாளை இன்வைட் பண்ணவேண்டியது நம்ம மன்சால – மனசுக்குள்ள.

அவளை இன்வைட் பண்றதுக்கு முந்தி நம்ம மனசுக்குள்ள இருக்கிற தனி மனித கழிவு, சமூக கழிவு,பிராமண கழிவு ,அமெரிக்க கழிவு எல்லாத்தையும் மனிதம் என்ற கங்கையை ஓடவிட்டு சுத்தப்படுத்தி வச்சுக்கிடனும்.

சதா சர்வ காலம் அவளையே நினைச்சு ஜொள்ளு விட்டு – வா வான்னுட்டு லொள்ளு பண்ணிக்கினே இருக்கனும். எப்பயாச்சும் நம்ம ஊருக்கு வெளிய போற ரிங் ரோட் பக்கமா பொடி நடையா போவாள் பாருங்க. அப்ப ஆத்தாளோட தண்டை ,சலங்கை இத்யாதியெல்லாம் குலுங்குமே அந்த டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்டை காதால கேட்ச் பண்ண முடிஞ்சா போதும்.

இந்தியா மிலிட்டரி பாக்கிஸ்தான் மிலிட்டரி ஒன்னா வந்து ஏர் பாம்பிங் பண்ணாலும் ஒரு ம..ரும் நடக்காது. சரி.. கெஞ்சி, கூத்தாடி ,ப்ளாக் மெயில் பண்ணி மனசுக்குள்ளாறயே வந்துட்டான்னு வைங்க. அப்பாறம் தான் இருக்கு ஆப்பு.

“கண்ணுக்குள் நூறு நிலவா” னுட்டு பாட்டுல பீலா விடலாம். ங்கொய்யால ஒரே நிலாவை தாங்குமா நம்ம கண்ணு?

புராணத்துல ஒரு கோடி சூரியபிரகாசத்துடன் தோன்றினாள்னு சொல்வாய்ங்க. பட்டா. இந்த வர்ணைனையெல்லாம் எம்ர்ஜென்ஸி காலத்து செய்தி மாதிரி.

வெறும் ஒளிதானா இருக்கும்? வெப்பமும் இருக்கும். இன்னாமாதிரி வெப்பம்னுட்டு நான் இன்னொரு டுபாகூர் வர்ணனையை தர தயாரா இல்லை. ஒளிக்கு எடை இருக்குன்னு தெரியுமா பாஸ்?

ஆத்தா எங்கன இருந்தோ வந்து கேம்ப் அடிக்கிறாங்கற மாதிரி சொல்லிக்கினு வந்தேன். இதெல்லாம் பழக்கதோஷத்துல வர்ரது. ஆத்தா எங்கன இருந்தோ வரலை. உனக்குள்ளே புதுசா ஜனிக்கிறா.

ஏதோ ஒரு படத்துல நின்னு போன லிஃப்டுக்குள்ள பாண்டிய ராஜன் சமைப்பாரு. அதுக்குண்டானதெல்லாம் அவரோட சூட் கேஸ்லயே இருந்தாப்ல ஆத்தா ஜனிச்சு வர தேவையான மூலப்பொருள் எல்லாம் உங்களுக்குள்ளயே இருந்ததுதேன்.

உங்க வில் – அவளோட அருள் ரெண்டும் சேரும்போது வழக்கமா தூங்கி வழியற அரசு இயந்திரம் ஒரு
நியாயமான தலைமை தேர்தல் அதிகாரி கீழே மட்டும் நெருப்பா வேலை செய்யற மாதிரி உங்களுக்குள்ளே இருந்ததெல்லாம் ஆக்டிவேட் ஆகி – ஆத்தா ஜனிச்சுர்ரா.

கோல்ட் ஸ்டோரேஜ்ல கூட மின் கசிவு -மின் விபத்து ஏற்பட்டுருது. அட ஒரு அம்பாசிடர் காரை எடுத்துக்கங்க. சல்லுனு போறோம். ரேடியேட்டர் ஹீட் ஆயிருச்சுன்னா வண்டி நின்னுருது.

அப்படி ஆத்தா வந்து கேம்ப் அடிச்சுட்டாள்னா அவள் ஒரு ட்ராகுலா.அவளுக்கு ஆகாரம் கொடுத்துக்கிட்டே இருக்கனும். காஷ்மோரா சினிமாவுல காஷ்மோராவுக்கு தினசரி ரத்தத்துளிகளை தராய்ங்களே அப்படி.

ஆத்தா மேட்டர்ல ரத்தம்லாம் தேவையில்லை. வெளி உலகம் உங்களை கூப்பிடும்போது ” ஆத்தா .. இதோ வந்துட்டன்”னுட்டு அந்த பஞ்சாயத்தை சுருக்க முடிச்சுட்டு ஆத்தாளோட சிரிச்சு,பேசி கலாய்ச்சுக்கிட்டே இருக்கனும்.

அவள் அஹங்காரி. அவள் சான்னித்யத்துல ( இந்த பிரபஞ்சம் முழுக்க அவளோட சான்னித்யம் தேன்) வேற எந்த பிக்காலியையாவது – வேற எந்த மேட்டரையாவது ஹைலைட் பண்ணிங்க நாஸ்தி தேன். அவளோட ஈகோ ஹர்ட் ஆச்சுன்னா பல்புதேன்.

ஆத்தா ஒரு கொயந்த மாரி.(ஸ்ரீபாலா) ” கண்ணு உனக்கு நாளைக்கு ஐஸ்க்ரீமு வாங்கிதரேன்”னுட்டா தலிவரு டிக்கெட் வாங்கினதோ – ஸ்டேட் எல்லாம் பந்தா இருக்கிறதோ – நாற்சந்திலயெல்லாம் டயர் எறியறதோ கொயந்தைக்கு முக்கியம் கிடையாது . ” ஐஸ்க்ரீம் வாங்கித்தரேன்னுட்டல்ல வாங்கித்தா ” இதான் அதனோட ஸ்டாண்ட்.

சரி இந்த மேட்டர்லாம் திடீர்னு இப்பம் எதுக்குன்னு கேப்பிக? சொல்றேன். நாம ஆத்தாளுக்கு கொடுக்கிற ஆகாரமே மஞ்ச தண்ணியும் , எலுமிச்சம்பழமும்தேன். இது சூப்பரா ஒர்க் அவுட் ஆகிட்டு தான் இருந்தது. எதுவரை?

அந்த மஞ்சத்தண்ணிக்கும், எலுமிச்சம்பழத்துக்கும் சிங்கியடிச்சிட்டிருந்தவரை சூப்பர் ஒர்க் அவுட். சமீப காலத்துல ஆத்தா லைன் அப்பை மாத்திக்கிட்டா போல.

“படவா ராஸ்கல்! நாய்க்கு பால், பிஸ்கட்டு மாதிரி மஞ்ச தண்ணியும், எலுமிச்சம்பழமும் வச்சுட்டா ஆச்சா .. ஒரு காலத்துல நீ ப்ரெட் ஹன்டர். ஏதோ ஒழிஞ்சு போவட்டும்னு விதிவிலக்கு கொடுத்து வச்சிருந்தேன். உன்னை ரொட்டீன் லைஃபுக்கு கொண்டு வந்துட்டேன். நீ இன்னமும் ஆதர்சம், ஆமை வடை, மானவ சேவா , மனிதமே புனிதம்னு வசனம் விட்டுக்கிட்டிருந்தா எப்படி? அதுலயும் மானவ சேவாக்கெல்லாம் சம்மர் ஹாலிடேஸ் மாதிரி விட்டு பல காலம் ஆச்சு. இப்பம் உன் பொழப்பை நீ பார்க்கறே அவ்ளதேன். ஒழுங்கு மரியாதையா – உன் ஸ்டைல்லயாச்சும் -மாசத்துக்கு ஒரு தாட்டியாச்சும் என்னை ஸ்தோத்திரம் பண்ணு”ன்னுட்டாப்ல இருக்கு.

இது நமக்கு உறைக்கல்ல. 2011 பிப்ரவரி 1 ஆம் தேதி கருகி சாக இருந்து தப்பிப்பிழைச்சப்போ நாமாவளிய படிச்சாப்ல இருக்கு.அதுக்கப்பாறம் ..பெரிய்ய இடைவெளி. ( இடையில ஒரு தாட்டி ரத்ததானம் பண்ணிட்டு வந்தன். அதனால ஒரு மாச கணக்கு வஜா ஆயிட்டாப்ல இருக்கு ) . நான் சொன்ன ஆன்மீக “பீரியட்ஸ்” மெனோஃபஸ் எஃபெக்ட் இன்னைக்கு வரைக்கும் கன்டின்யூ ஆயிட்டிருக்கவே இந்த விடியல்ல ” ஆத்தா ! நீயும் எங்க ஜெ ரேஞ்சுக்கு வந்துட்டாப்ல இருக்கு. உனக்கென்னா நாமாவளி படிக்கனும் அவ்ளதானேன்னுட்டு படிச்சுட்டன்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னுட்டு அதனோட பதிவையும் கொடுத்திருக்கன்.ஆர்வமுள்ளவுக இங்கே அழுத்தி கேட்டுக்கலாம்.

சுகுமார்ஜீ .. இனி டல்லடிக்க வாய்ப்பே கிடையாது. ஓகேவா உடுங்க ஜூட்

அய்யய்யோ ஆத்தா முறைச்சு பார்த்தா

இந்த தொடரோட கடந்த அத்யாயத்துல ஆத்தா நடாத்தி காட்டின திகீர் சம்பவத்தை பத்தி சொல்றதா சொல்லியிருந்தேன். அதை சிம்பிளா கட் ஷாட்டா சொல்லிர்ரன். மாண்டேஜ்?

1994 ல அப்பா டிக்கெட் வாங்கின பிற்பாடு நம்ம நிலைமை டப்பா டான்ஸ் ஆடிட்டிருந்தது . ஆறு மாசம் வாடகையே தரமுடியாம ஆறாவது மாசம் மொத்தமா கொடுத்த சந்தர்ப்பமெல்லாம் உண்டு. ஆனால் பாருங்க 2001 ல நம்ம பின்னாடி ஒரு “சக்தி” இருக்கிறது தெரியாம அந்த சமயம் நாம குடியிருந்த ஹவுஸ் ஓனர் கவுறு கட்டிக்கினாரு.

அதுவும் ஒன்னாம் தேதியே காலங்கார்த்தால ஆறுமாச வாடகை பாக்கிக்கு பேசறாப்ல இன்னா மாதிரி லூஸ் டாக்குங்கறிங்க. நம்ம கான்செப்ட் எப்படி இருக்கும்? வாடகைன்னா ஒன்னாம் தேதியிலருந்து பீராய ஆரம்பிச்சுரனும். அஞ்சாம் தேதிக்குள்ள கொடுத்துரனும்னு தானே இருக்கும். நெஜமாலுமே நொந்து பூட்டன்.

எப்படியோ அங்கே இங்கே பீராஞ்சுக்கிட்டு காசோட வூடு திரும்பறச்ச நேரம் ராத்திரி எட்டு.ஓனர் போர்ஷன் பூட்டியிருக்கு. பொஞ்சாதி கிட்டே விஜாரிச்சேன்.” எங்கடி போனாய்ங்க?”

”புருசன் பொஞ்சாதி புள்ளை எல்லாருமா கார் பேசிக்கினு திருப்பதி போனாய்ங்க. நீ வாடகை கொண்டாந்தா போலீஸ் காரம்மா கிட்டே குடுத்துர சொன்னாய்ங்க.”

ஒடனே போய் எதிர் போர்ஷன்ல குடியிருக்கிற ஹெட் கான்ஸ்டபிள் சம்சாரம் கிட்டே வாடகைய கொடுத்துட்டு வந்து சாப்டேன். ஏய் சன்னலை திறந்து விடுன்னுட்டு ஆராமா ஒரு பீடிய எடுத்து பத்த வச்சேன்.

தாளி மொதமாசமே மொத தேதியிலயே ரவுசு பண்ணிட்டானே இந்த பிக்காலி கிட்டே எப்படி சமாளிக்கப்போறோம்? ஒடனே ஊடு மாத்திரலாம்னாலும் அதுக்கும் காசு வேணம்.என்னங்கடா இது இமிசையா பொச்சுன்னு ரோசிச்சிக்கிட்டு ஊதி முடிக்கிறேன்.

ஓனர் ஊட்டு ஃபோன் ரிங்காச்சு. எடுத்தேன். அந்த வூட்டோட ஜியாக்ரஃபி கொஞ்சமா சொன்னா சீன் நெல்லா புரியும். தெற்கு பார்த்த வாசல். சென்டரா பேசேஜ். ரைட் லெஃப்ட்ல போர்ஷன்ஸ். ஓனருதும் ஒரு போர்ஷன் தேன். சன்னலோரம் ஒரு லேண்ட் ஃபோன். மரப்பெட்டிக்குள்ள வச்சு பூட்டியிருப்பாய்ங்க. இன் கமிங் வந்தா ஓனர் வூடே பூட்டியிருந்தாலும் ரிசீவரை எடுத்து பேசலாம்.

” ஏம்பா சோளிங்கர்ல இருந்து பேசறோம்… பரமசிவம் இல்லே..- (ஹவுஸ் ஓனர் பேரு – பேரை மாத்தியிருக்கம்)

இன்னாது திருப்பதி போயிக்கிறானா – நீ ஆரு பேசறது – .. இன்னாது குடியிருக்கிறியா சரி இங்கே கட்டி குடுத்துக்கிறானே அவனோட மூத்த பொண்ணு அது கொளுத்திக்கினு செத்துப்போச்சுப்பா- ஞாபகமா பரமசிவத்துக்கு தகவல் கொடுத்துரு”

ஃபோன் அட்டெண்ட் பண்ணதும் மனசுக்குள்ள என்னென்னமோ ஓடுது. அடடா.. என்னடா லைஃப் இது. காலை 8 மணிக்கு என்னமோ இந்த ஓனர் பையன் அந்த அலட்டு அலட்டினான். ராத்திரி எட்டுமணிக்கெல்லாம் தாளி அவன் பொயப்பு கொலாப்ஸ் ஆயிருச்சே.இவ்ளதானா மன்சன் பொயப்பு. இந்த நாற பொயப்புக்கு ஈகோ,அலட்டல் எல்லாம் தேவையா?

திருப்பதில இருக்கிறவனுக்கு எப்படி இந்த மெசேஜை பாஸ் பண்றது . ஆரை பிடிக்கலாம். ( அந்த காலத்துல இன்னைக்கு மாதிரி செல்ஃபோன் எல்லாம் கிடையாதுங்கண்ணா) – இப்படியெல்லாம் ரோசிச்சிக்கினு இருக்கிறேன். படக்குனு மறுபடி ஃபோன் ரிங்காச்சு. எடுத்தேன்.

“இந்த பக்கம் பரமசிவம்.. அந்த பக்கம் யாரு?”

‘ முருகேசன் பேசறேங்க”

“இன்னா வாடகை இன்னாச்சு.”

“காசு கிடைச்சுருச்சுங்க.. நீங்க ஊர்ல இல்லேன்னு ”

“ஊர்ல இல்லின்னா .. மொதல்ல போலீஸ்காரம்மா கிட்ட காசை கொடுத்துட்டு அப்பாறம் வந்து பேசு லைன்ல இருக்கேன்”

” நீங்க ஊர்ல இல்லேன்னு நீங்க சொல்ட்டு போனமாதிரியே போலீஸ் காரம்மா கிட்டே பணத்தை கொடுத்துட்டேங்க”

” ஒன்னை எல்லாம் எவன் நம்பினான் . நான் லைன்ல இருக்கேன் போலீஸ் காரம்மாவை கூப்டு”

ஃபோனை பொட்டி மேல வச்சுட்டு போ.கா வை கூப்டு விட்டேன். பரமசிவம் பேச்சு ரிசீவரை தாண்டி கேட்குது.

“போலீஸ்காரம்மா .. இன்னா பணம் குடுத்தானா/ சரி சரி பத்திரமா வச்சுக்க. மறு நாளே பொஞ்சாதிக்கு உடம்பு சரியில்லை .டாக்டர் கிட்டே போனம்.அம்பது குடு நூறு குடுன்னு கேட்டா கொடுத்துரப்போற. அந்த பணம் என் பணம். சரி சரி.. க்யூ காம்ப்ளெக்ஸுக்குள்ள நுழையப்போறோம். அதான் ஒரு தாட்டி ஃபோன் பண்ணேன். கேட்டு பூட்டியிருக்கா பாரு…சரி வச்சுரட்டா.. இன்னாது முருகேசன் பேசனுமா? கண்ட கண்ட நாயிகிட்டே எனக்கென்ன பேச்சு..இன்னாது முக்கியமான சமாசாரமா சரி கொடுத்து தொலை”

ரிசீவர் என் கைக்கு வந்தது. மேட்டரை சொன்னேன். அலறி அடிச்சுக்கிட்டு அவிக ஊரை வந்து சேர்ந்ததும். பதட்டத்துல அவிக ஊட்டு சாவி கிடைக்காம பூட்டை உடைச்சு திறந்ததும் – திருப்பதியிலருந்து வந்த கார்ல அப்படியே சோளிங்கருக்கு புறப்பட்டு போனதும் தனிக்கதை.

அன்னைக்கு ஆத்தாவுக்கு டிக்ளரேஷன் கொடுத்துட்டேன் ” ஆத்தா.. எந்த பன்னாடை பிக்காலி வேணம்னா என்னை அவமானப்படுத்திக்கிட்டு போவட்டும். அவன்லாம் என் கர்மத்தை வாங்கிக்கின்னு எனக்கு ரிலீஃப் குடுக்கறான்னு நினைச்சுக்க. இப்படியெல்லாம் தண்டிச்சுராதே ஆத்தா .

மேட்டர் இன்னாடான்னு நாம என்னதான் டிக்ளேர் பண்ணாலும் ஆத்தா நம்ம பேச்சை இந்த ஒரு மேட்டர்ல மட்டும் கேட்கவே மாட்டேங்கறாங்கண்ணா..

இந்த பாதுகாப்போட ஒப்பிட்டா ஜெட் கேட்டகிரி பாதுகாப்பெல்லாம் ஜுஜுபி. முந்தி ஒரு பதிவுல ஆரு என்ன சாமிய கும்பிடனும் – எந்த பேர் கொண்டவுக எந்த பீஜத்தை ஜெபிக்கனும்னுல்லாம் சொன்னதா ஞா.

ஆனால் ஆத்தா விசயத்துல மட்டும் சாஸ்திரம்,சம்பிரதாயம், ஜாதகம்,கிரக பலம்னு எந்த இழவும் தேவையில்லிங்கண்ணா.

ஆத்தா மேட்டருல ஆரு வேணம்னா எப்பவேணம்னா – எந்த நிலையில வேணம்னா எப்படி வேணம்னா ஒர்க் வுட் பண்ணிக்கலாம்.

பி.கு:
தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய வெளிவந்துருச்சுன்னு நினைக்கிறேன். இன்னாபா ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சின்னு டிக்ளேர் பண்ணே. க்ளீன் ஸ்வீப்பா இருக்கேன்னு கேப்பிக. அம்மாவுக்கு நடக்கறது சந்திர தசை . இதன் படி ஜாதகர் வாழ்க்கையில ஒருவித நிலையற்ற தன்மை, திடீர் தன்மை இருக்கனுங்கறது ஜோதிட விதி.

கூட்டணி ஆட்சி ஏற்பட்டாதானே மேற்படி நிலையற்ற தன்மை, திடீர் தன்மை எல்லாம் மெட்டீரியலைஸ் ஆகும்னு கெஸ் பண்ணித்தேன் கூட்டணி ஆட்சின்னு சொல்லி வச்சேன்.

கெஸ்ஸிங் ஃபெய்ல் ஆகலாம். ஜோதிட விதி ஃபெயில் ஆகாது. மேற்படி நிலையற்ற தன்மை, திடீர் தன்மைல்லாம் வேறு எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

அவன் -அவள்-அது: 11

இங்கன என்னெல்லாம் பேர் இருக்குதோ அதெல்லாம் ஆத்தாளோட பேர் தேன். ஆனால் அனாமிகான்னும் ஒரு பேரை வச்சிருக்கா. பேர் இன்னா பேரு பேர்ல கீற அல்லா எழுத்துமே அவள் தான் ( பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா)

அல்லா பேரையும் ஜஸ்டிஃபை பண்ணிரலாம். அதென்னா உண்ணாமுலையம்மன். ஆனானப்பட்ட முருகனுக்கே தங்க கிண்ணத்துலதேன் ஏற்கெனவே கறந்த பாலை கொடுத்ததா கேள்வி. ஞான சம்பந்தருக்கும் இதே ஃபார்முலாதேன்.

நான் இன்னா நினைக்கிறேன்னா ஒவ்வொரு தாயும் சக்தி தேன். அவளோட முலையும் “அவளோட” முலை தேன். லேடீஸ் க்ளப் பாலிடிக்ஸ்ல ஆக்டிவ் பார்ட் ப்ளே பண்ற பாப் தலை ஆத்தா கூட மொதல் மொதலா சுரக்கிற சீம்பாலையாவது குழந்தைக்கு ஊட்டிர்ராளே.

அப்பாறம் அதெப்படி உண்ணாமுலையம்மன்னு சொல்றாய்ங்க. இங்கனதான் சூட்சுமம் இருக்கு. எந்த பன்னாடையும் தனக்கு பாலூட்டினதும் “ஆத்தா”தான்னு உணர்ரதில்லை.

இருட்ல போவம். ஏதோ பொட்டுனு போட்டாப்ல இருக்கும். உடனே நம்ம மைண்ட் அடடா பாம்புதான் கடிச்சுருச்சுன்னு காபரா ஆயிரும் ( கேபரே இல்லிங்கண்ணா – ஆனால் காபரா ஆனா பாடி கேபரே ஆடும் அது வேற கதை) மைண்டுக்கு இந்த செய்தி போனதுமே உண்மையிலயே பாம்பு கடிச்சா என்னென்ன ரியாக்ஷன் ஏற்படுமோ மொத்த ரியாக்ஷனும் ஏற்பட்டுரும்.

இதையே உல்ட்டால ரோசிங்க. பாம்புதான் கடிச்சுது. ஆனா நீங்க தத்தெறி.. என்னா கருமம் புடிச்ச பூச்சியோ கட்சிருச்சுப்பான்னு நினைக்கிறிங்கனு வைங்க. அந்த பாம்பு நெஜமாவே விஷமுள்ள பாம்பா இருந்து இதெல்லாம் ரெம்ப ரேர்.விஷம் ஏறி கதை முடியற வரை ரிலாக்ஸ்டாவே இருப்பிங்க.

இதேதான் நம்ம மேட்டர்லயும் நடக்குது. உண்ட முலை அந்த முண்டகக்கன்னியாத்தாவுதுதாங்கற ஃபீலிங்கே நமக்கு வர்ரதில்லையே.

காதல்லயும் -ஆன்மீகத்துலயும் ஒரு முக்கியமான மேட்டர் என்னன்னா நீங்க என்ன பண்றிங்கங்கறது முக்கியமே இல்லை. எந்த பாவத்தோட பண்றிங்கங்கறது தான் முக்கியம். இதனாலதான் ஆத்தாளுக்கு உண்ணாமுலைனு பேர் வச்சிருப்பாய்ங்கனு நினைக்கிறேன்.

இன்னாபா நீ ஏதோ உன் எக்ஸ்பிரியன்ஸை சொல்லுவே – அதை நாங்களும் எதுனா தேறுதா பார்க்கலாம்னு இருந்தா சொம்மா மொக்கை போடறியேன்னு நொந்துக்காதிங்க. மேட்டருக்கு வந்துர்ரன்.

நம்ம மனசு ஆஞ்சனேயர் – ஸ்ரீராகவேந்திரர் – பிரம்மங்காரு – ராமர் – ஏழுமலையான் – ஷீர்டி பாபான்னு கச்சாமுச்சானு அலைபாய்ஞ்சாலும் நம்ம ஆன்மீக கிராஃப் மட்டும் ஸ்லோ அண்ட் ஸ்டெடியா மேனோக்கி போயிட்டே இருந்தது.

ஆனால் ஆத்தாளை அடுக்கறதுக்கு முந்தியெல்லாம் அற்புதம் நடக்கும். ஆனால் அது ஒரு இன்ப அதிர்ச்சியாவோ, பரிசாவோ,ஆறுதலாவோ, நமக்கு ரோலே இல்லாம நடக்கும். நம்ம விருப்பு,வெறுப்போட கனெக்சன் இல்லாம நடக்கும். தானா நடக்கும்.

நான் இன்னா ஜட்ஜ் பண்றேன்னா அதுவரை குண்டலி மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம்,மணி பூரகத்தை தாண்டி அனாஹதத்துல வந்து ஸ்ட்ரக் ஆகியிருக்கும் போல. அப்பப்போ உ.வ படறச்ச அது விசுத்திக்கு தாவும். வாக்பலிதம் -ஆசுகவி எல்லாம் அமர்க்களப்படும். அப்பாறம் தலைவர்/தலைவியின் எலக்சன் கேம்பெயினுக்கு பிறகான கூட்டு ரோடு மாதிரி ஆயிரும்.

ஆத்தாளை அடுத்தப்பாறம் அது ஜல்சாவா குதியாட்டம் போட்டு விசுத்தியில ஏறி ஒரு தம் கட்டி ஆக்னாவுக்கு ஜம்ப் பண்ணிருச்சு போல.

வாத்யாரு பாடுவாரே ” நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”னு அப்படி ஒரு நிலைமை வந்துருச்சு. இது ஆரம்பத்துல நமக்கு தெரியாது. உறைக்கவும் இல்லை. அது உறைச்சப்போ நடு நடுங்கி போயிட்டன்.

(அந்த சம்பவம் அடுத்த பதிவில் ) அது நடந்ததும் .. பேதியாகி தோ பாரு ஆத்தா ! நம்முதே கடக லக்னம் . ரெண்டேகால் நாளைக்கு ஒரு தாட்டி மைண்ட் செட்டே கம்ப்ளீட்டா மாறிப்பூடும். இந்த ஆணையிடற வேலையெல்லாம் நமக்கு தகாது. நீ இவ்ளோ பொசசிவா இருந்தா எப்டி?

நான் ஆஃப்டர் ஆல் ஒரு மன்சன். எனக்கும் ஆசாபாசம் ( ஆபாசமில்லிங்கண்ணா) கோபதாபம்லாம் உண்டு. நான் சகட்டு மேனிக்கு கண்டதையும் நினைப்பேன். நீ இதையெல்லாம் நடாத்தி கொடுத்துக்கிட்டிருந்தா கதை கந்தலாயிரும்.

கர்மத்தை தொலைக்கத்தான் இத்தனை பாடு பட்டுக்கிட்டிருக்கேன். எவனுக்குனா கேடுகாலம் வந்துருச்சுன்னா நீ வேற எவனையாச்சும் வச்சு வேலை முடிச்சுக்க. எவனுக்குனா நல்ல காலம் ஆரம்பமாச்சா அவனை டெவலப் பண்ணனும்னு நினைக்கிறியா இப்படி தள்ளிவிடு என்னால முடிஞ்சதை நான் செய்றேன்னு கண்டிசனா சொல்ட்டேன்.

ஆனா பாருங்கண்ணா இன்னைய தேதிக்கு கூட -வாஸ்தவமா பார்த்தா இன்னைக்கு தியானமில்லே – சாதனையில்லே – மந்திர ஜபமில்லை – கோவில் -குளம் – பூசை புனஸ்காரம் (இது எப்பவுமே இருந்ததில்லை) – ஏதாச்சும் அநியாயம் நம்ம கண்ல பட்டாலோ -காதுக்கு வந்தாலோ உடனே ஆப்புதேன்.

இதையெல்லாம் நான் இங்கன சொல்றதுக்கு காரணம் என்னன்னா… இந்த சனம்லாம் ரோபோ மாதிரி ஏற்கெனவே .ப்ரோக்ராம் பண்ணியிருக்கு. கமாண்ட் எங்கருந்தோ வருது. அதை சனம் கேள்வி கேட்காம செய்யுது.

இந்த அடிமைத்தனத்தை கேள்வி கேட்க ஆரம்பிச்சா போதும். அதான் உண்மையான வேள்வி.