2015 குருபெயர்ச்சி பலன் : மகரம்

20150713_122300

அண்ணே வணக்கம்ணே !
அந்த காலத்துல தமிழ்ல ஒரு பாட்டெடுத்து விட்டா பாம்பு வந்து தன் விஷத்தை ரீ கால் பண்ணிட்டு போயிருமாம். பாம்பு கடிச்ச பார்ட்டி பொளச்சுருவாய்ங்களாம் ( பூம்பாவைக்கு உயிரை தந்த இசை அன்ட் ஆல் தட் ) வாத்யாரு பாட்டு பாடியே ஒரு அம்மாவ வீல் சேர்ல இருந்து எந்திரிச்சு நடக்க வச்சுருவாரு .

இதெல்லாம் ப்ராக்டிக்கலா சாத்தியமா பாஸ்?னு கேப்பிக. லா.ச.ரா “முடியறவாளுக்கு எப்பவும் முடியும்”ங்காறாருங்கோ. நம்ம மேட்டர்ல ஒரு தாட்டி எச்சுமி பாட்டிக்காவ ஒரு பாட்டு படிச்சம். பொருளாதாரம் செட் ரைட் ஆயிருச்சு .அதை இங்கே கேட்கலாம்.

நம்ம ரூல் பிரகாரம் பைசா புரண்டா வாய் பேச்சு டம்மி ஆயிரனும் .ஏன்னா ரெண்டும் ஒரே பாவம் தானே . (தனஸ்தானம்+வாக்குஸ்தானம்) . நெஜமாலுமே இப்பம் வண்டி முரண்டு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு .(மேலும் கோசாரத்துல இப்ப ரெண்டு எட்டுல ராகு கேது வேற கேம்ப் அடிச்சிருக்காய்ங்களா? மிடியல)
நேத்திக்கு ராத்திரி இனி நம்மால ஜோசியமே சொல்ல முடியாதோ ? பலன் பதிவே பண்ண முடியாதோங்கற அளவுக்கு பீதி கிளம்பிருச்சு .

செரி எச்சுமிக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம்.அப்படியா கொத்தது எச்சுமியே ஒர்க் அவுட் ஆயிருச்சு (சேராதிருப்பது கல்வியும் செல்வமும்) . சரசு மம்மி பாக்கெட்ல இருக்கிற காசு மாதிரினு நினைச்சு ஒரு கவிதைக்கு ட்ரை பண்ணேன். அதை இங்கேயே தந்திருக்கன் பாருங்க.

பல காலத்துக்கு பிறவு ஒரே சிட்டிங்குல 3 ஜாதகத்தை பைசல் பண்ணமுடிஞ்சது (இது தொடரனுமே) செரி செரி..மொக்கை போதும்.மேட்டருக்கு வந்துர்ரன்.
குரு பெயர்ச்சி பலன் தொடருது . இன்னைக்கு மகர ராசி . மகர ராசிக்கு குரு 3-12 க்குடையவர் . இவர் போன ஒரு வருசம் ஏழுல இருந்தாரு. பொதுவிதிப்படி இது அனுகூலமான இடம்னாலும் அனுபவத்துல மனைவி/மனைவி வழி உறவுகளால் அல்லல் அலைச்சல் வீண் விரயங்களை கொடுத்திருப்பாரு .

செரி பாஸ்ட் ஈ பாஸ்ட் ..இனி என்ன ? அதை பார்ப்பம்.

குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஒன்பதுக்கு பெயர்ச்சி ஆய்ட்டாரு. இதனால மேற்படி அல்லல்-அலைச்சல் -விரயம்லாம் கட்டுப்படும்.

செலவுகள் குறையும், தூக்கம்,கில்மாவுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு கடுமையா உழைக்க வேண்டி வரலாம். இளைய சகோதரம் பாதிக்கும். காது தொடர்பான நோய் வரலாம், தோள் பட்டை பிரச்சினை கொடுக்கலாம்.

கரன்சி, தங்கம் டீல் பண்ணும் போது டேக் கேர். வயிறு இதயத்துக்கு சிரமம் கொடுக்காத உணவு மற்று பழக்க வழக்கங்கள் நல்லது .
ஊர் பஞ்சாயத்துக்கு போவாதிங்க. வீண் பழி வரலாம். அரசாங்கத்துக்கு அபராதம் கட்ட வேண்டி வரலாம்.அசால்டா இருந்திங்கனா லாக் அப்புக்கு கூட சான்ஸ் இருக்கு.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் அஷ்டமாதிபதி அஷ்டமத்துல ஆட்சி பெறுவதால் பல் தலை எலும்பு முதுகெலும்புக்கு பாதிப்பு வரலாம். அதே நேரம் குரு அஸ்தமிக்கிறதால ஃபைனான்ஸ் ப்ராப்ளம், மனைவி,குழந்தைகள் மேட்டர்ல மொத வாரம் ஃபுல் டென்ஷன் பிறவு தீர்வு கிடைக்கலாம்.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
எட்டுக்குடையவர் எட்டுல நின்னா மரணம்.அவர் வக்ரமானா? ஆவிசு கூடும். குரு எட்டில் நிற்பதற்கு சொன்ன தீய பலன்லாம் மாறி நல்ல ரிலீஃப் கிடைக்கலாம்.ஆனால் மனைவி,குழந்தைகள்,இளையசகோதரத்தின் போக்கு அதிர்ச்சி தரும்.

2015 குரு பெயர்ச்சி பலன் : மிதுனம்,கடகம்

IMG_0615

அண்ணே வணக்கம்ணே !

மொதல்ல கொஞ்சம் உரத்த சிந்தனை . நாங்களும் ரோசிப்பம்ல?
கால மாற்றமும் -கிரக பலனும்னு ஒரு தொடர் ஆரம்பிச்சம்.அதுக்குள்ள குரு பெயர்ச்சி சீசன் ஆரம்பிச்சிருச்சு. ஊருடன் ஒத்துவாழ் போல அதுல வாய வச்சாச்சு. மேஷம்,ரிஷபம் ஓவர். இன்னம் 10 ராசிக்கு எழுதியாகனும். வீடியோ பதிவுன்னு அள்ளி விட்டம். வர்ர 15 ஆம் தேதிக்குள்ளயாச்சும் பதிவுகளை முடிச்சுட்டா இதை பேஸ் பண்ணிக்கிட்டு -இன்னம் பரிகாரம் அது இது சேர்த்து விலாவாரியா வீடியோ பதிவு பண்ணலாம்.

கட்டண சேவைக்கு கூட்டம் அம்முது. ஆனால் வண்டி ஓடமாட்டேங்குது . கிழவாடி ஆயிட்டா காலை நேரம் மட்டும் தான் மூளை சுறுசுறுப்பா இருக்குமாம். நாப்பத்தெட்டெல்லாம் ஒரு வயசா? லக்னம் தான் வேலை செய்யுதா? ஜன்ம குரு தான் ஆப்படிச்சாரா? அப்போ இந்த குரு அனுகூலம் போல. லேட்டஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர் “குரு” நாதன்.

ஊர் வேலைக்காக உதவாக்கரை பொம்பளய வேலைக்கு சேர்த்து ஐ நூறு வட்டம். அதுல ரூ.200 வேணம்னா ஒர்த்து . ஆக முன்னூறு வட்டம். குரு காரகம்.

ஜி.எம்.ஆன்லைன் சித்தூர் லைவ் இன் சைட்டுல வேற பத்தி எழுதனும். எம்.ஜி.ஆர் வேலை தான் ஆனால் பரவுதல் நடக்கும். வாரத்துக்கு ரெண்டுன்னு சொன்னம் . ஆரம்பம் ஜூலை 5 .இன்னைக்கு தேதி? ஏழுதான். ரெண்டு சாப்டர் போட்டாச்சு. அப்போ 12 ஆம் தேதிவரை யோசிக்க தேவையில்லை.

குரு பெயர்ச்சி ? எழுதியே ஆகனும்.கு.பட்சம் ரெண்டு ராசி . லேண்ட் என் க்ரோச் மென்ட் கேஸ்? மனு ட்ராஃப்ட் பண்ணியே ஆகனும். கட்டண சேவை ? நாளையிலருந்து ஜரூரா இறங்கிரனும். எங்கே தப்பு நடக்குது? வாஸ்து? தசா புக்தி ? 11/May/2015 => 17/Sep/2015 செவ் தசை சூரிய புக்தி . சுக்கிர புக்தியையே சமாளிச்சுட்டம்.

கோசாரம்? ஜன்ம குரு, அஞ்சுல சனிய விட ரெண்டுல குரு அஞ்சுல சனி பெட்டர் தானே? லேக் ஆஃப் ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ்? நோ சன் லைட்? என்னடா நடக்குது அங்கே? நான் என்ன அஞ்சு வட்டி யாவாரமா பார்க்கிறேன். கடுப்பாச்சு. இறங்கிருவன். ஞா இருக்கட்டும்.

ட்ரஷரீஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் கேஸ்? டைவர்ஸ் கேஸ்? எல்லாமே பொசுக்குன்னு முடிஞ்சுரும்.ஆனால் ஸ்டார்ட்டிங் ட்ரபுள். அல்லது ஸ்விங்ல போகும் போது வெளிய இருந்து பிரச்சினை ? பார்ப்பம். மொதல்ல ரெண்டு ராசிக்கு குருப்பெயர்ச்சி பலன்.உடுங்க ஜூட்டு .

மிதுனம்:
2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ராசிக்கு 2ஆமிடமான கடகத்தில் இருந்து மூன்றாமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.

உங்களுக்கு குரு 7,10 பாவங்களுக்கு அதிபதி. இவர் 2 ல் இருந்தார். அங்கிருந்து விலகி 3க்கு வரார். இவர் 2ல் இருந்ததால் தொழில் உத்யோகம்,வியாபாரம் வகையிலயும் ,மனைவி,மனைவி வழி உறவுகள் வகையிலயும் ஓரளவாவது அனுகூலமான சூழல் இருந்திருக்கும்.

இப்போ அவர் 3 ஆமிடத்துக்கு வர்ராரு. இதனால தொழில் உத்யோகம்,வியாபாரம் வகையிலயும் ,மனைவி,மனைவி வழி உறவுகள் வகையிலயும் அல்லல் அலைச்சல் ஏற்படும். இதனால மனசுல ஒரு வித பயம்,திகில் வந்துரும்.திகில் பாண்டி கணக்கா ஆயிருவிங்க.

உங்க ராசி ராசிச் சக்கரத்துல 3 ஆவது ராசிங்கறதால பிறப்புலயே உங்களுக்கு உடன் பிறப்புகளோடு ஹேட் அண்ட் லவ் ரிலேஷன் இருக்கும். இப்போ குரு வேற இதே இடத்துக்கு வர்ரதால விலகிப்போன உ.பி,ர.ரக்கள் நெருங்கி வர அதனால கூட நான் சொன்ன பாதிப்புகள் வரலாம். மேலும் குரு பிரதிகூலமா போறதால வரக்கூடிய ஜெனரல் எஃபெக்ட்ஸ் கூட வரலாம்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு சிம்மத்துலயே அஸ்தமிக்கிறார்.அஃதாவது குருவோட இம்பாக்ட் ஏறக்குறைய ஜீரோ ஆகி இங்கே சூரிய வேலை செய்ய ஆரம்பிச்சுருவாரு. இதனால மனசுல இருந்த பயம்,திகில் எல்லாம் மறைஞ்சு ஓரளவு தகிரியம் பிறக்கும். நீங்க பகல்ல பிறந்தவரா இருந்தா அப்பா,அப்பா வழி உறவுகள் வகையிலயும் உதவிகள் கிடைக்கலாம்.

அனைவருக்கும் மலை பிரதேசங்கள்,ரிமோட் வில்லேஜஸ்,நியூலி டெவலப்பிங் ஏரியாக்காரவிக உதவலாம். ஒன்றியம்,பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்கள் உதவி கிடைக்கலாம். இது ஜஸ்ட் ஒரு மாச பலன் தான்.ஆகவே சீக்கிரமே அறுவடை செய்ய ட்ரை பண்ணுங்க. பிறவு அடக்கி வாசிங்க.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
இதனால இந்த காலகட்டத்துல குருவோட லீலைகள் கொஞ்சம் குறையும். அதே சமயம் வயிறு/இதயம் தொடர்பான சிக்கல் முத்திப்போகவும் வாய்ப்பிருக்கு.மனைவி/பங்குதாரர்கள்/ வாடிக்கையாளர்கள்/ஊழியர்கள் போக்கு அதிர்ச்சியை தரும்.

கடகம்:

2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ஜன்ம ராசியான கடகத்துலருந்து 2ஆமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.
உங்களுக்கு குரு6,9பாவங்களுக்கு அதிபதி. இவர் ஜன்மத்துலயே இருந்தார். அங்கிருந்து விலகி 2க்கு வரார்.

ஜன்மத்துலருந்து விலகினதே ஒரு பெரிய திருப்பம். இதனால பொருளாதார நெருக்கடி ,ஊர் பஞ்சாயத்து ,வீண் பழி ,கொய்யால எல்லாத்தயும் விட்டுட்டு எங்கனா போயி நிம்மதியா இருந்திரலாமாங்கற கடுப்புல்லாம் மாறிரும். இதுவரை எஃபெக்ட் பண்ண அஜீர்ணம்,கியாஸ் ட்ரபுள் கூட கட்டுப்பாட்டுக்கு வந்துரும்ங்கோ !

இவரு ரெண்டுக்கு வர்ரதால அனுகூல தசாபுக்திகள் நடப்பவர்கள் கடன் வாங்கி சொத்து / நகை வாங்குவதும், பிரதி கூலமான தசாபுக்திகள் நடப்பவர்கள் கைக்கு வருவனா என்று கண்ணாமூச்சி காட்டிய சேமிப்பை /முதலீட்டை /சொத்தை /நகைகளை பெற்று விற்று/அடகு வைத்து கழுத்தை நெறித்த கடன் தீர்த்து நிம்மதி அடைவார்கள்.

இதில் ஏதோ ஒன்று கமுக்கமா நடந்து முடியும் வரை வெகண்டையா பேசறது ,விவகாரமா பேசறதுன்னு கசப்பை கொட்டுவிங்க. கண்,தொண்டை,வாய் பகுதியில் பாதிப்பு வரலாம். குடும்பத்துல கலகம் வரலாம் . மேலும் குரு அனு கூலமா வர்ரதால வரக்கூடிய பொதுவான பலன் கள் கூட கிட்டலாம்.
2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு சிம்மத்துலயே அஸ்தமிக்கிறார்.அஃதாவது குருவோட இம்பாக்ட் ஏறக்குறைய ஜீரோ ஆகி இங்கே சூரிய வேலை செய்ய ஆரம்பிச்சுருவாரு. இதனால சொந்த செல்வாக்குல -உங்க வாக்கு வன்மைய வச்சு பைசா சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.

நீங்க பகல்ல பிறந்தவரா இருந்தா அப்பா,அப்பா வழி உறவுகள் வகையிலயும் உதவிகள் கிடைக்கலாம். அனைவருக்கும் மலை பிரதேசங்கள்,ரிமோட் வில்லேஜஸ்,நியூலி டெவலப்பிங் ஏரியாக்காரவிக உதவலாம். ஒன்றியம்,பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்கள் உதவி கிடைக்கலாம். முக்கியமா பைசா மேட்டர்ல இது ஒர்க் அவுட் ஆகும். இது ஜஸ்ட் ஒரு மாச பலன் தான்.ஆகவே இது நிரந்தரம்னு மயங்கிராம அடக்கி வாசிங்க.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
இதனால இந்த காலகட்டத்துல உங்கள் வருமானத்துல திடீர் மாற்றம்/ஏற்ற இறக்கம்லாம் ஏற்படும். கடனே வாங்க வேண்டாத நிலை வரலாம். இதே போல செட்டி வச்சு கெட்டது போல கெட்டது போதும் வந்ததை அனுபவிக்கலாம்ங்கற மனப்போக்கும் ஏற்படும். கண்,தொண்டை,வாய் , வயிறு/இதயம் தொடர்பான சிக்கல் முத்திப்போகவும் வாய்ப்பிருக்கு. மனைவி குழந்தைகள் போக்கு அதிர்ச்சி தரும்.

குரு பெயர்ச்சி பலன் : 2015-16 (பொது)

Brammangaruஎச்சரிக்கை:
நம்ம பழைய பதிவுகள் வெவ்வேறு தளங்களில் சிதறியிருக்கு. இன்னைக்கும் ஒவ்வொரு வலைப்பூவும் எந்த வித அப்டேட்டும் இல்லாமலே தினசரி 250 முதல் 500 வரை ஹிட்ஸ் வாங்கிக்கிட்டுதான் இருக்கு. அந்த வலைப்பூக்களின் தொடுப்பை கீழே கொடுத்திருக்கன்.

அனுபவஜோதிடம் (ப்ளாகர் வலைப்பூ)

அனுபவஜோதிடா (வோர்ட் ப்ரஸ்)

எஸ்.முருகேசன்

இங்கே புதிய பதிவு இல்லாத சமயம் அங்கே போயி கொண்டாடுங்க. இப்ப குரு பெயர்ச்சி பலனுக்கு போயிரலாமா?

2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். கடகம் குருவோட உச்ச ராசி.
ஒரு கிரகம் உச்சமா இருக்கும் போது அது தொடர்பான காரகங்கள் “கெத்தா “இருக்கும். உதாரணமா குரு காரகம் கொண்டவை எவைன்னு குருவே சொல்றாரு பாருங்க.

நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

கடந்த ஒரு வருச காலமா தங்க விலை ஏறுமுகம், அரசியல்னு பார்த்தா லக்கி டிப் கணக்கா முழு மெஜாரிட்டியோட ஒரு ஆட்சி எற்பட்டுருச்சு. நீதிமன்றத்தை பொருத்தவரை குரு முழு பலனை தரக்கூடிய அவரோட மத்ய காலத்துல குன் ஹா தீர்ப்பு வந்து நீதியை நெட்ட நெடுக்க நிற்க வச்சுது. பிறவு குருவோட பலம் குறைஞ்சு போன காலத்துல குமார சாமி படுக்க போட்டுட்டாரு (அது வேற கதை)

பிராமணர்கள் தலைமேல் வைத்து கொண்டாடும்/ புராணம் ,வேதம் இத்யாதியை தலைமேல் வைத்து கொண்டாடும் பா.ஜ.க ஒரு வருசமா பெருசா பிரச்சினை இல்லாம காலத்தை ஓட்டிருச்சு ராம் தேவ் மாதிரி குருமார் எல்லாம் கொண்டாடிக்கிட்டிருந்தாய்ங்க.
.
ஆட்சி மொழின்னு இந்தியை பந்தி வைக்க கூட முயற்சிகள் நடந்தது. குரு பெயர்வதற்கு 2 மாதங்கள் முன்பே பலனை மாத்தி கொடுக்க ஆரம்பிச்சுருவாரு (பார்க்கிறம்ல சுஷ்மா, வசுந்தராஜே ,முண்டே,ஸ்மிரிதி ராணி )

கடகத்தை விட்டு குரு விலகுவதால் மேற்சொன்ன அரசியல் ஸ்திரத்தன்மை குறையலாம், நீதிமன்றங்கள் “அழுத்தங்களுக்கு” உள்ளாக்கப்படலாம். அவா கனவுகள் கலைய ஆரம்பிக்கலாம், இந்தி ? இருக்கும் இடத்தில் இருந்துக்க வேண்டி வரலாம்.

குரு சிம்மத்துக்கு வந்துர்ரதால என்னாகும்?
குரு நிற்குமிடத்து அதிபதியான சூரியன் லோக்கல் லீடர்ஷிப்புக்கு காரகர்.ஆகவே பா.ஜ.கவுல குடுமிப்பிடி சண்டை ஆரம்பமாகி மறுபடி உண்மையான கூட்டணி ஆட்சி வந்துரலாம். சத்திரியர்கள் பலம் பெறுவர், கிராம மக்கள்,மலை ஜாதியினர் வீதிக்கு வந்து போராடி செயிப்பாய்ங்க. ஒரு சொட்டை தலையர்/சோடாபுட்டி கண்ணாடி போட்டவர் அரசியல்ல செமர்த்தியா கலக்க வாய்ப்பிருக்கு. இவர் நாட்டின் மையப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.

அஸ்தமனம்:

இது போதாதுன்னு 2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) நான் சொன்ன பொலிட்டிக்கல் ஃபோர்ஸோட பலம் உச்சத்துக்கு போகலாம்.

குரு வக்ரம்:
ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
சிம்மத்துல குரு வர்ரதால என்ன பலன்னு சொன்னேனோ அந்த பலன் எல்லாம் ஃபணாலாகிரும். அரசியல் வாதிகள்,நீதிபதிகள்,வங்கி நிறுவனங்கள்,அவா எல்லாம் தங்கள் இயல்புக்கு மாறா செயல்பட ஆரம்பிக்கலாம், மக்களுக்கு இதயம்,வயிறு தொடர்பான நோய்கள் அதிகரிக்கலாம்.ஏற்கெனவே இந்த பிரச்சினை உள்ளவிக ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கோனம்.

குருவுக்குரிய திசை வடகிழக்கு. இதனால வ.கி பகுதியில ஆட்சி கவிழ்வது /ஆட்சியாளர்கள் டிக்கெட் போடறது மாதிரி சம்பவங்களும் நடக்கலாம்.

மன்னிக்கவும்:
குரு பெயர்ச்சின்னதும் நம்ம ராசிக்கு எப்டி இருக்கு பார்த்துரலாம்னு வந்திருப்பிங்க. நான் என்னடான்னா மேக்ரோ லெவல் ப்ரிடிக்சன்ஸ் கொடுத்திருக்கன்.(அதுக்குத்தேன் பதிவோட தலைப்புல பொது என்ற வார்த்தைய சேர்த்தேன்)

கவலை வேண்டாம் அடுத்தடுத்த பதிவுகளில் 12 ராசிகளுக்கும் உண்டான ரிசல்ட்டை கொடுக்கிறேன்.

2012,ராகு கேது பெயர்ச்சி பலன்: மேஷம்,ரிஷபம்

அண்ணே வணக்கம்ணே !

லைஃப்ல ரெண்டாவது சோசியரை சந்திச்ச புதுசுல ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றவுக மார்க்கெட் ரிசர்ச் பண்ற கணக்கா கிரக பெயர்ச்சிகளை அப்சர்வ் பண்ண பார்ட்டி தான் நாமளும். ஆனால் சொந்த அனுபவம்+ நம்ம க்ளையண்டுகளோட அனுபவங்களை எல்லாம் பார்த்து “அப்படியா..”னுட்டு ஸ்க்ரால் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டம்.

என்னைக்குமே ( ஐ மீன் நம்ம சைட்ல) கோசார பலனை நாம ஹைலைட் பண்ணதில்லை. ஆனாலும் ஹிட்ஸுக்காக, அதுவும் தீவிர பதிவுகள் சராசரி ஹிட்ஸை குறைச்சுரக்கூடாதுங்கறதுக்காவ -மக்கள் கருத்தே மகேசன் கருத்துன்னுட்டு குரு பெயர்ச்சி ,சனிபெயர்ச்சி பலன்லாம் எழுதியிருக்கமே தவிர கிரகங்கள் மாறும்வரை காத்திருக்கற மென்டாலிட்டியை நாம என்கரேஜ் பண்ணதே இல்லை.

அதுக்காவ கோசாரத்துக்கு பலனே இல்லையான்னு கேப்பிக இருக்கு. உதாரணமா நமுக்கு லக்னத்துக்கு அஞ்சு பதினொன்னுல வந்தாய்ங்க.

5 ஆமிடம் = புத்தி ஸ்தானம் = புத்திக்குழப்பம் வரனும். டி.என் அனந்த நாயகிக்கு பதிலா பி.டி.சரஸ்வதி பேரை மென்ஷன் பண்ணிட்ட கூத்தெல்லாம் நடந்தது.

5 பேர் புகழை காட்டும் இடம் = அவமானம் நடக்கனும் ; ஜா.ரா பாவம் நம்ம கருமத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு பரிகாரம் பண்ணிக்கிட்டிருந்தாரு.இதுவும் போதாதுன்னு மாப்ளை மேட்டர்ல அ,ஆ,இ ,ஈ தெரியாத டிக்கெட்டுங்க கிட்ட எல்லாம் பஞ்சாயத்து பண்ண வேண்டியதாயிருச்சு.

5 குழந்தைகளை காட்டுமிடம் = கடந்த ராகு கேது பெயர்ச்சி காலத்துல மவ கன்ஸ்யூமர் கல்ச்சருக்கு அக்மார்க் அடிமையாயிட்டா.திண்ணையில தாத்தா மாதிரி புலம்ப வேண்டியதாயிருச்சு. டிவியில எஃப் சானல் (தானே) வந்தா படக்குன்னு மாத்தறாப்ல விளம்பரம் வந்தாலே மாத்தவேண்டியதாயிருச்சு.இல்லின்னா மறு நாளே விளம்பரிக்க பட்ட சந்தேகாஸ்பதமான வஸ்துவை எல்லாம் வாங்கிட்டு வர ஆரம்பிச்சுட்டா.

போதாக்குறைக்கு ஸ்கின் ப்ராப்ளம். ராகு கேதுன்னாலே விஷம். அசிமிலேஷன் -எலிமினேஷன் கரீட்டா நடக்கலின்னா பாடியில பாய்சன் கன்டென்ட் உருவாகும் .அதை பாடி எதிர்த்தா வாந்தி,பேதி,ஸ்கின் ப்ராப்ளம் இப்டி வந்துக்கிட்டு கிடக்கும். புது ஆளுங்க நம்ம ஸ்கின்னை பார்த்த பார்வையே சவுக்ல வேட்டி உருவிட்ட கணக்கா ஃபீல் ஆச்சு.

அதுக்குன்னு பித்தம் பிடிக்கலை, பஞ்சாயத்துல நிறுத்தி சாணி கரைச்சு ஊத்தலை. மவ தற்கொலைக்கு முயற்சி பண்ணலை. இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா கோசாரத்தோட இம்பாக்ட் எந்தளவு இருக்கும்னு விளக்கத்தேன்.

கிரக பாதிப்புகளில் இருந்து ஓரம் கட்டிக்கிறது ஒரு கலை. அதுக்கு ஈகோ தூக்கி வீசனும். நடக்கறதை நடக்க அனுமதிக்கனும்.ரெசிப்டிவா இருக்கனும். அப்படி இல்லாத பட்சத்துல டங்குவார் அறுந்துரும்.

இப்டி ஒரு அசால்ட்டான வழி இருந்தாலும் சனம் வீம்புக்கு அலையறதால – பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிக்கிடறதால – நேர்லயும் -ஃபோன்லயும் – மெயில்லயும் நிறைய பேரு ரிமைண்ட் பண்ணிக்கிட்டே இருக்கிறதால டிசம்பர் 23 ஆம் தேதி நடக்க உள்ள ராகு -கேது பெயர்ச்சிக்கான பலனை எழுதறம்.

பலன்ல நாம தரப்போற டூஸ் அண்ட் டோன்ட்ஸை ஃபாலோ பண்ணிக்கறதா இருந்தா இந்த பெயர்ச்சி பிரதிகூலமா உள்ள ராசிக்காரவுகளுக்கு நாம சொல்லியிருக்கிற தீயபலன்லாம் சமாளிக்கக்கூடியதுதாங்கறதை சொல்லிட்டு பதிவுக்கு போறேன்.

புதியவரவுகளுக்கு:

ஏற்கெனவே ஒரு தாட்டி சொன்னாப்ல ஞா . நம்ம ட்ராஃபிக் சோர்ஸே கூகுல் கூகுல் தான். இன்ட்லி,தமிழ்வெளி,தமிழ் 10 லாம் கொஞ்சம் கொசுறு போல. ஆனாலும் புதுப்புது சைஸுல ஆளுங்க வர்ராய்ங்க.

2000 லருந்து எளுதிக்கிட்டிருக்கிறதால அதுலயும் 2009 லருந்து தீவிரமா எளுதிக்கிட்டிருக்கிறதாலயும் எதை எழுத நினைச்சாலும் ஏற்கெனவே எளுதிட்ட மாதிரியே ஒரு ஃபீலிங். நம்முது கடகலக்னமாச்சா எதுவாருந்தாலும் புதுசா இருக்கனும்.

நீங்க ஒன்னு பண்ணுங்க.இந்த ப்ளாக்ல /சைட்ல உள்ள கூகுல் கஸ்டம் சர்ச்ல போயி ராகு/கேதுன்னுட்டு அடிச்சு தேடுங்க. முக்கியமா போனவருசம் எளுதின ராகு கேது பெயர்ச்சி பலன் ங்கற பதிவை ஒரு ஓட்டு ஓட்டுங்க. நெட் கனெக்ட் ஆனதும் நான் குறிப்பிட்ட அந்த பதிவுகளுக்கான தொடுப்புகளை தர ட்ரை பண்றேன்.

டைட்டில்ஸ்:
எல்லா கிரகமும் க்ளாக் வைஸ் சஞ்சரிக்க -ராகு கேது மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ் போறாய்ங்க. இப்பம் விருச்சிகத்துல உள்ள ராகு துலாமுக்கு போறாரு. ரிஷபத்துல உள்ள கேது மேஷத்துக்கு போறாரு. ஒருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல – 7 ஆம் வீட்ல இருக்கிறதால பரஸ்பரம் பார்த்துக்கறதால இவிகளை பிரிச்சு பலன் சொல்றதே வெட்டி. ஒருத்தரு அனுகூலமா -மத்தவர் பிரதிகூலமா இருக்கிறச்ச பலன்ல வித்யாசம் தெரியுமே தவிர அவரு இவர் ஜோலிய -இவர் அவர் ஜோலியை பார்க்கிறதும் உண்டு. இவிக 3,4,6,10,11,12 ல இருந்தா நெல்லது. இது பொது விதி.

கண்டிஷன்ஸ் அப்ளை:
இவிகளுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. தாம் நின்ற பாவாதிபதி -தம்முடன் சேர்ந்த கிரகங்கள், தாம் பார்க்கும் கிரகங்கள், தம்மை பார்க்கும் கிரகங்களை பொருத்து பலன் தருவாய்ங்க.

மேஷம்:( 1-7 ல் கேது ராகு)

உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி பாதிக்கப்படும். நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி மேட்டர்ல அவிகளோ /நீங்களோ சீக்ரெட் மெய்ன்டெய்ன் பண்ண வேண்டி வரலாம், அவிகளுக்கும் உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி பாதிக்கப்படும். உங்கள் இடையிலான உறவு பாதிக்கப்படலாம் . தொப்புளை சுற்றி வலி வரலாம்.

உடல்: இளைக்கலாம் / ஊளைசதை பெருகலாம். மறதி வரலாம் . குறுக்கு வழிகளில் மனம் செல்லலாம்.பாடி கலரே ஒரு மாத்து குறையலாம்.ஃபுட் பாய்சனிங் ,மெடிக்க அலர்ஜி,புழு பூச்சி வைரஸ் தொல்லை தரலாம்,

பிறமொழி ,பிறமதத்தினரால் பிரச்சினை வரலாம்.வெளி நாட்டு மோகம் நஷ்டம் தரலாம்.லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை ஆகியவற்றில் பிரச்சினை வரலாம்,நஷ்டம் ஏற்படலாம்.

சனி ராகு சேர்க்கை:
10,11 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால செய் தொழில் உத்யோகம்,வியாபாரம் பாதிக்கலாம். வரவேண்டிய பங்கு ,பாக்கியில வில்லங்கம் வரலாம். சிலருக்கு காதல் தோல்வி, சிலருக்கு மணவாழ்வில் சிக்கல்,மிக சிலருக்கு வாழ்க்கை துணையை நிரந்தரமா பிரிதல் கூட நடக்கலாம்.

பரிகாரம்: (பொது)
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. வெளியிடத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். . ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.அன்னிய மொழி கற்கவும். யோகிகளின் வாழ்க்கை வரலாறு படிக்கவும் /கிடைச்சா டிவிடி பாருங்க.

பரிகாரம் (சிறப்பு)
வாரத்துல ஒரு நாளாச்சும் தண்ணீர் பாட்டில் ,கட்டுச்சோத்தோட போயி வெளிய தங்கிப்பாருங்க. மேற்சொன்ன பரிகாரங்களை வாழ்க்கை துணையும் செய்துக்கனும்.

2.ரிஷபம்: ( 6-12 ல் ராகு கேது)
மேஷ ராசிக்காரவுகளுக்கு எந்தெந்த மேட்டர்ல எல்லாம் நஷ்டம் வரும்னு சொன்னமோ அந்த மேட்டர்ல எல்லாம் பயங்கரமா பார்கெய்ன் பண்ணி -எதிராளியை கன்வின்ஸ் பண்ணி – பேதியாக்கி லாபம் அடையலாம். அவிகளுக்கு சொன்ன தீயபலன்லாம் உங்களுக்கு பாஸ்ட்ல நடந்திருக்கும். அதெல்லாம் மாறிரும். சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கும். தாய்மாமன் நிலை மட்டும் கவலை தரலாம்.

சில சமயத்துல வீண் விரயம் ஏற்படலாம். தூக்கம் கெடலாம். வேளைக்கு திங்க முடியாம போவலாம்.என்னடா லைஃப் இதுன்னு விரக்தி கூட தலை காட்டும்.

சனி ராகு சேர்க்கை:
9,10 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் தொடர்பாகவும் – செய் தொழில் உத்யோகம்,வியாபாரத்துலயும் ஒரு வித சூதாட்டத்தனம் வந்துரும்.( வர்ரும் ஆனால் வராது )

பரிகாரம்:
பெட் ஸ்ப்ரெட் ,பில்லோ கவர் காவி நிறத்துல இருந்தா நல்லது. கட்டில் ,மெத்தை தவிர்க்கவும். பெட் ரூம்ல யாராவது பிறமத துறவி/யோகி படத்தை வச்சுக்கங்க.

பரிகாரம் (சிறப்பு )
முக்கியமான டாக்குமென்ட்ஸை பாம்பு தோல் போன்ற எஃபெக்டோட இருக்கிற பேக் /அல்லது ஃபைல்ல போட்டு வைங்க. தொழில்/உத்யோக/வியாபார ஸ்தலத்துல துர்கை படத்தை வச்சு பூஜை பண்ணுங்க.

காங்கிரஸ் எம்பியின் கில்மா வீடியோ

அண்ணே வணக்கம்ணே !
ஆஃப்டர் ஆல் எம்.எல்.ஏங்க பலான வீடியோ பார்க்கிறப்ப நாங்க கில்மா வீடியோவுலயே வருவம்லன்னு நினைச்சுட்டாப்ல இருக்கு.

அபிஷேக் சிங்விங்கற பேரை கேள்வி பட்டிருப்பிங்க. இவரு காங்கிரஸ் எம்.பி. ராஜஸ்தான் மானிலத்தை சேர்ந்தவரு. ராஜ்யசபாவுக்கு நாமினேட் ஆகியிருக்காரு.

இவர் தொடர்பானதா சொல்லப்படற பலான வீடியோ ஒன்னு இன்டர்னெட்ல திரிஞ்சுக்கிட்டிருக்காம்.
( பத்திரிக்கை செய்திங்க. ஆதாரம்: ஈ நாடு தெலுங்கு தினசரி) இதை கேள்விப்பட்ட சிங்வி ஒடனே தன் ட்ரைவரை கூப்டு ஒரு அஃபிடவிட்டை ஃபைல் பண்ண வச்சிருக்காரு.

மேற்படி வீடியோவை நெட்ல உலவ விட்டது நாந்தான்.ஆனால் அதுல இருக்கிறது அய்யா இல்லேன்னு அஃபிடவிட்ல ட்ரைவர் சொல்லியிருக்காராம். ஹூம்.. இந்த அப்ரோச் ரெம்ப பிடிச்சிருக்கா.

மேட்டருக்கு வந்துர்ரன். தமிழ் புத்தாண்டுபலன்னு ஆரம்பிச்சுட்டம். மேஷத்துலருந்து துலாம் வரை முடிச்சுட்டம். இன்னைக்கு விருச்சிகம்.

2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : விருச்சிகம்

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு ரத்த சுத்தியில் பிரச்சினை இருக்கும். நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது). லைஃப் ஸ்டைல மாத்திக்கிடலன்னா சிறு நீரகம் தொடர்பான தொல்லையில கொண்டு விடும்.
இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார்.
இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள்,காமாலை போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம்.
இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா.
சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 11 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. இதை லாப சனின்னு சொல்லுவம்.

இந்த சனி உங்களுக்கு 3- 4 க்கு அதிபதியா இருக்கிறதால உ.பி/ர.ர க்களால் லாபம் நடக்கும். பாகப்பிரிவினை இத்யாதி நிலுவையில இருந்தா பைசலாகும். பஸ்ஸா,ரயிலான்னு தயங்கின காலம் போயி பைய தூக்கிக்கிட்டு கிளம்பிக்கிட்டே இருப்பிங்க. அதனால அனுகூலமும் உண்டு. குறிப்பா மேற்கு திசையிலான பயணங்கள் லாபம் தரும்.

சனி 4 க்கும் அதிபதியா இருக்கிறதால தாய், வீடு, வாகனம்,கல்வி விஷயங்களில் வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டு பத்து காசு தாராளமா கையில புழங்கும்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்களுக்கு 12 ஆவது ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி தூக்கமின்மை,பசியின்மை, வீண் விரயம்லாம் ஏற்படும்.

ஆனால் சனி இவிகளுக்கு சுகஸ்தானாதிபதிங்கறதால தாய்,வீடு,வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிச்சுக்கிட்டே போகும். மேற்சொன்ன விஷயங்களில் பிரச்சினை ஏற்பட்டு எதுவும் பைசலாகாது இழுத்துக்கிட்டே போகும்.

சனி இவிகளுக்கு சோதராதிபதிங்கறதால உபி,ர,ரக்கள் விவகாரம் பழைய குருடி கதவை திறடின்னு ஆயிரும். நீங்களே தெண்டம் அழவேண்டி வரும்.இதிலயும் இழுவை அதிகமா இருக்கும்.

ராகு வந்து சேரும் வரை இந்த இழுவை இருக்கும். அதுக்கப்பாறம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான். கை மேல செலவு வந்து – நஷ்டம் வந்து முழி பிதுங்க வைக்கும்.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 6 ஆமிடம். பொதுவிதிப்படி இது நல்லதல்ல.வயிறு,இதயம் பிரச்சினைய கொடுக்கும்.பொன் அடகுக்கடைக்கு போகும். பொருள் . விரயமாகும்.பெரிய தொகையா கடன் வாங்க வேண்டி வரும். பெரியமன்சங்களோட விரோதம் வரும்.

இவர் 2 க்கு அதிபதிங்கற வகையில கடன், வாக்கு வாதம்,குடும்ப கலகம்கண் நோய் உருவாகும்.இவரே பஞ்சமாதிபதியாவும் இருக்கிறதால அவப்பேர் வரும்,மறதி அசிங்கப்பட வைக்கும்.அதிர்ஷ்டத்தை நம்பி எதையாவது செய்தா பல்பு வாங்கும்.குழந்தைங்க மேட்டர்லயும் குண்டக்க மண்டக்கன்னு எதுனா நடக்கும்.டேக் கேர்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா சப்தம குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. பொதுவிதிப்படி ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையில நன்மை நடக்கனும். அவிகளும் முன்னேற்றம் பெறனும்.

சிறப்பு விதிப்படி 2- 5 பாவங்களுக்கான ஆதிபத்யம் குருவுக்கு கிடைக்கிறதால பொருளாதார முன்னேற்றம், வாக்கு வன்மை ,செல்வாக்கு , குடும்ப ஒற்றுமை, நற்பெயர், அதிர்ஷ்டம்லாம் கூடி வரனும். முக்கியமான மாற்றம் என்னடான்னா சதா சர்வ காலம் பிறரை அண்டவிடாமல் துரத்திய – உங்களின் பிறரை குறை சொல்லும் பேச்சு குறையும். டைம் கீப் அப் பண்ண முடியும்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 12-6 ஆம் இடங்கள் என்பதால் ராகு கேதுக்களால் பிரச்சினை இருக்காது. சத்ரு,ரோக ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கும். பிற மொழி,மதம், நாட்டினரால் நன்மைய எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே விரயத்தில் உள்ள சனியோட ராகு சேர்ரதால தூக்கம் ,சாப்பாடு, கில்மா மேட்டர்ல லொள்ளு ஏற்படலாம் . வீண் விரயங்கள் மனசை சஞ்சலப்படுத்தும்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
இவர் உங்களுக்கு லக்னாதிபதியாவும் இருக்காரு .அதனால இவரோட சஞ்சாரம் ரெம்ப முக்கியம்.பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது அல்லல் அலைச்சல், 6 ல் வரும் போது நோய்,கடன்,விவகாரம் வரும். 10 , 11 ல் ஓகே .

உங்க ராசியிலயே வரும்போது உஷ்ண ரோகங்களை கொடுத்தாலும் பூமி சகோதர வகையில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

2ல் வரும்போது பூமி,சகோதரர் வகையில் வருமானம் உசர வழி ஏற்படும். 4 ல் வரும்போது அம்மாவுக்கு பிரச்சினை வந்தாலும் ஸ்தான லாபம் ஏற்படும் . அஞ்சுல வரும்போது பயங்கர கோபம் வந்தாலும் திடீர் அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்கலாம்.

7 ல் வரும்போது மனைவியுடன் ஊடலுக்கு பின்னான கூடல் இன்பம் தரலாம். எட்டு வேஸ்டு. 9 ல வரும்போது சொத்து,சேமிப்பு,முதலீடு மேட்டர்ல கான்சன்ட்ரேட் பண்ணுவிக

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது துலா ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 11 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 12 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்க ஜன்ம ராசி

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 2 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 3 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 4 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 5 ஆமிடம்

கொலைகாரன்களுக்கு கொடி பிடிக்கும் மீடியா

அண்ணே வணக்கம்ணே !
சூர்யா நடிச்சு வெளி வந்த ரத்த சரித்திரம் பார்த்தவுகளுக்கு விளக்கம் எதுவும் தேவைப்படாது. மத்தவுகளுக்காக சிறு விளக்கம்.

அனந்தப்பூர் மாவட்டம் தெ.தேசம் லீடர் பரிட்டால ரவீந்திரா. இவரை லோக்கல் ஆதிபத்யம்+ பழிவாங்கலுக்காவ ஒரு பார்ட்டி போட்டு தள்ளிருச்சு.உன்னை நான் வெட்ட என்னை நீ வெட்டன்னு நடந்த தொடர் சம்பவங்களில் ஒரு பாகமா சூரிங்கறவனை அந்தாளோட ஆளே ( பானு கிரண்) பின் சீட்ல இருந்து துப்பாக்கியால சுட்டு போட்டு தள்ளிட்டான்.

2011 ஜனவரி 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த பிற்காடு ஆளு எஸ்கேப். நேத்திக்கு போலீஸ் புடிச்சிட்டாய்ங்க. இது தொடர்பா ப்ரஸ் மீட் நடக்குது.

மீடியாகாரவுக எல்லாம் ஆஜர். சிஐடி ஐஜி ப்ரஸ் மீட்ல வந்து உட்கார்ராரு. பேச ஆரம்பிக்கிறாரு.அப்பம் கொலை குற்றவாளியான பானுகிரணை ப்ரஸ் கான்ஃபிரன்ஸ் நடக்கிற அறைக்கு கூட்டி வராய்ங்க.

நம்ம மீடியா என்னா பண்ணுது.. 15 நாளா கார்ப்பரேஷன் குழாய்ல தண்ணி வராதப்ப வந்த தண்ணி லாரியை நோக்கி ஆணும்,பெண்ணுமா பிளாஸ்டிக் குடங்களோட பாயற மாதிரி வாசல் நோக்கி பாயுது.

எப்படியும் அவனை கான்ஃபிரன்ஸ் ஹால்ல ஆஜர் படுத்தப்போறாய்ங்க.ஆனால் இவிகளுக்கு அத்தனை துடிப்பு.

இதுவாச்சும் பரவால்லை. பானு கிரணை சிஐடி ஆஃபீஸ்ல வச்சு விஜாரிக்கிறாய்ங்க. அதை திருட்டுத்தனமா நீலப்படம் கணக்கா இருளோன்னு ஷூட் பண்ணி போட்டி போட்டுக்கிட்டு காட்டறாய்ங்க.

இந்த அழகுல பானு கிரண் போட்டு த்ள்ளினது ஏதோ தேசத்தலைவனைத்தாங்கற ரேஞ்சுல பானு போட்டுத்தள்ளின சூரியோட மனைவிகிட்டே பேட்டி வேற .அன்னைக்கு எத்தீனி சம்பவங்கள் நடந்திருந்தாலும் – எத்தனை நிருபர்கள் உசுரை கொடுத்து கவர் பண்ணி அனுப்பியிருந்தாலும் பெப்பே. எல்லா சானல்ஸ்லயும் இதே பீடை. இவனுவளை திருத்தவே முடியாதா? சரிங்ணா புத்தாண்டு பலன்ல இன்னைக்கு துலா ராசிக்கான பலனை பார்ப்போம்.

2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : துலாம்

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.

பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும் மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.

சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 12 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. இதை விரய சனின்னு சொல்லுவம்.

இந்த சனி உங்களுக்கு 4- 5 க்கு அதிபதியா இருக்கிறதால தாய், வீடு, வாகனம்,கல்வி விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்படலாம். மேலும் இருக்கிற பேரை காப்பாத்திக்கனுமேங்கற கவலை, மறதி, சின்ன சின்ன அவமானங்கள்,குழந்தைகள் தொடர்பான திடீர் செலவுகள் கவலை தரும்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்க ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி மந்த புத்தி, முகத்துல எண்ணெய் வடியறது, மலச்சிக்கல் முதல் பைல்ஸ் வரை வரலாம்.அகால போஜனம்,அகால நித்திரை போன்ற பலன்கள் நிகழலாம்..கால், நரம்பு ஆசனம் தொடர்பான நோய்களும் வாட்டலாம். மனக் கவலையில முடி உதிரும், வெள்ளை முடியே கூட வந்துரும்.

இவர் 3 ஐ பார்க்கிறதால சகோதர நஷ்டம், காது நோய் ,சிறு விபத்து நடக்கலாம்.7 ஐ பார்க்கிறாதால கண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா அக்மார்க் லோ கிளாஸ் பார்ட்டியோட காதல் கீதல் ஏறபடலாம். 10 ஐ பார்க்கிறதால அப்பப்போ தொழில் -உத்யோகத்து மேலயும் அக்கறை வந்து செயல்பட ஆரம்பிப்பிங்க ஒடனே ஆப்பு.

சனி இவிகளுக்கு சுகஸ்தானாதிபதிங்கறதால தாய்,வீடு,வாகனம் தொடர்பான கவலைகள் அமைதியை கெடுக்கும். டெக்னிக்கல் லைன்ல உள்ளவுகளுக்கு கடுமையான உழைப்புக்கு பின் நீடித்த பயன் ஏற்படலாம். தாய்க்கு ஆயுள் கூடும்.( ராகு வந்து சேரும் வரை) வீட்டு பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது. ஒரு சிலர் பழைய வீட்டை வாங்கலாம். வாகன விஷயத்துலயும் செகண்ட் ஹேண்ட் ஆஃபர்ஸ் வ்ரும். சர்வீஸுக்கு ஆளிருந்தாலே தவிர தவிர்ப்பது நல்லது.

சனி இவிகளுக்கு பஞ்சமாதிபதிங்கறதால குழந்தை பிறப்பை எதிர்ப்பார்ப்பவர்களுக்கு நிராசை ஏற்படலாம். வாய்ப்பு உள்ளவர்கள் வாலன்டியரா கு.பி தள்ளி வைப்பது நல்லது. கிடைக்க வேண்டிய பெயர் புகழ்,அங்கீகாரம் தாமதமா கிடைக்கும். ஒரு சிலருக்கு மட்டும் உயில் மூலம் ஒரு ஆதாயம் கிடைக்கலாம் ஒருத்தரோட நஷ்டம் /ஏமாற்றம் இவிகளுக்கு எதிர்பாரா லாபமா முடியலாம்.குழந்தைகள் தொடர்பா மனசுக்கு கஷ்டம் தரக்கூடிய செலவுகளும் வரலாம். வெகு சிலர் பட்டம் பதவிக்காக பணம் காசு செலவழிச்சு ப்ராசஸ் லேட் ஆறதை பார்த்து டென்சன் ஆவாய்ங்க.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 7 ஆமிடம். பொதுவிதிப்படி இது நல்லதுதான். இல்லேங்கலை . ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையறாவுல நன்மைகள் ஏற்படனும். ஆனால்
இவர் 3 க்கு அதிபதிங்கற வகையில உ.பி, ர.ரக்களின் ஒத்துழைப்பு கிடைக்கலாமே தவிர, இவரே ரோகாதிபதியாவும் இருக்கிறதால ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையறாவுலயே கடன் ஏற்படலாம்,வழக்கு,வில்லங்கம்,விவகாரம் ஏற்படலாம். அல்லது அவிக நோய் வாய்ப்பட்லாம்,உங்க கிட்டே முட்டிக்கலாம்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா அஷ்டம குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. பொதுவிதிப்படி உ.பி,ர.ரக்கள் வகையில் விரோதம், வயிறு ,இதய கோளாறுகள்,மனைவி ,மக்கள் வழியில் பிரிவு ,அவதி ,விரயம் ஏற்படனும்.ஆனால் சிறப்பு விதிப்படி 6 க்குஅதிபதியான குரு 8ல் மறையறது நல்லதுதான். இதனால் சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி,விவகார ஜெயம்,கடன் வசூல் போன்ற நன்மைகள் நடக்கனும். உ.பி/ர.ர ஒருவரின் நிலைமை, கவலைக்கிடம் தரலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

4/7 க்கு அதிபதியான குரு வக்ரமாறதால உ.பி/ர.ரவின் போக்கு அதிர்ச்சியை தரும். சின்னதுன்னு துவக்கின பயணம் பெருசாகலாம். ஒரு நாள் வேலைன்னு புறப்பட்டது 8 நாள் ஆகலாம். பத்து நாள் திரிஞ்சாகனும்னு நினைச்ச வேலை ஒரே நாள்ள பைசல் ஆகலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 1-7 ஆம் இடங்கள் என்பதால்

இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் – ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால் இது இப்படி நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக மாறலாம். ரகசியம்னா “எல்லாத்துலயும்”

.ஏற்கெனவே ஜன்ம ராசியில் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால துலா சனிக்கு நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
துலா ராசிக்கு இவர் 2-7 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது பணத்துக்கான அலைச்சல், வெத்து பேச்சு,சவால்கள், 6 க்கு வரும்போது கடன் தொல்லை, வாய்,கண்,தொண்டைக்கு பாதிப்பு ஏற்படலாம்.

அதே போல 3 ல் வரும்போது மனைவிக்கு/மனைவியால் அலைச்சல் திரிச்சல், 6க்கு வரும்போது அவிகளுக்கு நோய்/ அவிகளோட வாக்குவாதம், ஆகிய நெகட்டிவ் ரிசல்ட் வரலாம்.

அதே சமயம் 2ல் வரும்போது பூமி,சகோதரர் தொடர்பான பிரச்சினை முற்றி + தீர்ந்து கைக்கு காசு பணம் வரலாம். 7 ல் வரும்போது மனைவியுடன் ஊடலுக்கு பின்னான கூடல் இன்பம் தரலாம்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது துலா ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 12 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 1 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 2 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 3 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 4 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 5 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 6 ஆமிடம்

2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம்

அண்ணே வணக்கம்ணே!
கிரகங்கள் வக்ரமானா பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆகும். டைம் மெஷின் பின் நோக்கி ஓடும்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தது ஞா இருக்கலாம். 1986 …மாடியறையில ரூம்பு. வெளிய விஸ்தாரமான இடம். ராத்திரியில கட்டிலை தூக்கி வெளிய போட்டுக்கிட்டு படிக்கிறதும் எழுதறதுமா இருந்த காலம் இப்பம் இந்த வீட்டுல மேற்படி வசதில்லாம் இருந்தாலும் இத்தீனி நாளு அதும் மேலல்லாம் போகல்ல. கடந்த 3 நாட்களா மொட்டை மாடியிலதான் தூக்கம் (?)
பாதி ராத்திரி வரை படிக்கிறது எழுதறது. கண்கள்,உடல் மட்டும் சோர்ந்து கிடக்க.. கண்ணை மூடிக்கிட்டுகிடக்கிறது . . பனி (?) பொழிய ஆரம்பிச்சு தலையணைல்லாம் நனைஞ்ச பிறவு இறங்கி வந்துரவேண்டியது. செருப்பணிய ஆரம்பிச்ச பிறவு மண்ணோடு உறவு போச்சு. கூரையின் கீழ் மக்கிக் கிடந்து வானோடும் உறவு உலுத்துப்போச்சு. அது புதுப்பிக்கப்பட இன்னம் எத்தனை காலம் ஆகுமோ பார்க்கலாம்.
இயற்கைக்கும் -இறைவனுக்கும் நெருக்கமான கிரகம் சந்திரன் – நெருக்கமான ராசி கடகம். இப்பம் புத்தாண்டு பலன் தொடர்ல கடகம்.
மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். “என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்”
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும்.
சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 3 ஆமிடம். சனி 7, 8, பொதுவிதிப்படி சகோதர நஷ்டம், காது நோய் ,சிறு விபத்து நடக்கலாம்.

கண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா
பொஞ்சாதிக்கு அல்லல் அலைச்சல்.

அவிகளோட போறச்ச ஜாதகருக்கும் சின்னதா அடி ,கிடி கூட பட்டிருக்கலாம். அவிகளுக்கு பயணங்கள் அதிகம் செய்யவேண்டி வந்திருக்கலாம். இவிக உட்ன் பிறப்புகளுக்கு ஆப்பு. அவிகளோட நீயா நானா ரேஞ்சுலதேன் ரிலேஷன் இருக்கும்.

தைர்யே சாஹசே லக்ஷ்மி கணக்கா தைரியம் அதிகரிச்சிருக்கும். அதனால அதனால லாபமா நஷ்டமாங்கறது நீங்க தைரியத்தை எக்சிபிட் பண்ண ஃபீல்டை பொருத்தது.

எச்சரிக்கை: தைரியம்னா ஓகே. அது குருட்டு தைரியமா ஆயிராத பார்த்துக்கங்க. பொஞ்சாதி ஹெல்த்தையும் பாருங்க.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 4 ஆமிடம் தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி, இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள் விஷயங்கள்ள பாதிப்பை தரும். சிலருக்கு வீடு மாற்றம் ,வாகனமாற்றம்,சீட் மாற்றம்,உத்யோக மாற்றம் கூட நடக்கலாம்

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 10 ஆமிடம். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும்னு ஒரு விதி. பதவியில இல்லாதவுகளுக்கு ஒரு நற்செய்தி. பறிபோகறதுக்காச்சும் ஒரு பதவி இருந்தாகனும்ல. பறிபோகவாச்சும் வந்தாகனும்ல. வரட்டும் பார்த்துக்கலாம். ( ஏற்கெனவே வேலையில உள்ளவுக வேலை விஷயத்துல எம்.ஜி.ஆர் வேலைகள் வேண்டாம் – கறாரா இருங்க -இல்லாட்டி அவப்பேர் வரும் -பதவி ஃபணாலாயிரும் )

ரோகாதிபதிங்கற வகையில செய்தொழில் வியாபாரம், உத்யோகம் வகையறாவுல கடன் ஏற்படலாம், எதிரிகள் தொல்லை கொடுக்கலாம், கோர்ட்டு கேஸுன்னு கூட வரலாம். அதே சமயம் குருவுக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால பொதுவிஷயங்களில் ( சேவை) ஆர்வம் ஏற்படும். கைப்பணத்தை செலவழிச்சு கூட எம்.ஜி.ஆர் வேலை செய்விங்க.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா லாப குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. இவர் ரோகாதிபதிங்கற வகையில கடன், நோய், வழக்கு என்ட்ரி கொடுக்கும். சிங்கிளா வந்து டபுளாகும். அதே சமயம் உங்க சொத்து, சேமிப்பு,முதலீடெல்லாம் கூட டபுளாக வாய்ப்பிருக்கு.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

ரோகாதிபதியா இவர் வக்ரமாறது சிங்கிளா வந்து டபுளான சத்ரு ரோக ருண உபாதைகள் பாதியா குறையலாம். அப்பா மேட்டர்ல தான் அதிர்ச்சிகள் காத்திருக்கும். அல்லது தூரதேச தொடர்புகள் ரிவிட் அடிக்கலாம். அக்கடான்னு புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு போனா அங்கயும் ஆப்புதான். டேக் கேர்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 4-10 ஆம் இடங்கள் என்பதால் பெருசா பிரச்சினை இருக்காது.(அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ) பிற மொழி பேசறவுக பிற மதங்களை சேர்ந்தவுக,புதுசா அறிமுகமாகிறவுகளால நன்மை ஏற்படலாம் ..ஏற்கெனவே 4 ல் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால துலா சனிக்கு நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.( சீட் சேஞ்ச் எட்செட்ரா)

செய்ற வேலையில புதுமைய புகுத்தறேன் -புரட்சி பண்றேன்னு சொதப்பிக்கிட்டிருப்பிங்க அல்லது எத்திக்ஸ் பத்தி லெக்சர் அடிப்பிங்க ரெண்டையும் .அடக்கி வாசிங்க.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
கடக ராசிக்கு இவர் 5-10 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா 6 ல் வரும்போது மட்டும் குழந்தைகளுக்கு நோய் தொல்லை, செய் தொழில் உத்யோகத்துல கடன்,விரோதம் அ வாக்குவாதங்களை ஏற்படுத்துவாரு. 3 க்கு வரும்போது குழந்தைகள் விஷயத்துல அல்லல் அலைச்சலை தருவாரு. அஞ்சுல ஆட்சி பெறும் போது கொஞ்சம் முன் கோபத்தை கொடுத்தாலும் தன் காரகத்வத்துல அதிர்ஷ்டத்தை கொடுப்பாரு. (பொஞ்சாதி கர்பமாயிருந்தா ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். மிஸ் கேரி கூட நடந்துரலாம் – பன்னிருகையனை நினைவில் நிறுத்துங்க)

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது கடக ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 3 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 4 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 5 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 6 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 7 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 8 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 9 ஆமிடம்