2015 குரு பெயர்ச்சி பலன் :தனுசு

Brammangaru

அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னத்துக்கு அஞ்சுல சரி ஜரூரா வேலை செய்றாரு.வேந்தர் டிவியின் மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக பேட்டி+ பிரம்மங்காரு ஜீவ சமாதி விசிட்டின் போது ஒரு ஹேர் கட் இல்லை/ட்ரிம்மிங்கில்லை ,ஃபேஷியல் இல்லை. நாய் பொளப்பு .

நீண்ட நெடும்பயணம் . சாப்பாட்ல காரத்தை தவிர வேறில்லை. மோர் மட்டும் ஒன் மோர் கேட்க வேண்டியதாயிருச்சு . இந்த குரு பெயர்ச்சி பலன் கூட இழுக்குது. வீடியோ பதிவு கண்ணா மூச்சி காட்டுது .பார்ப்பம் .

இன்னைக்கு தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் தந்திருக்கன் .சாரி ஃபார் தி டிலே !
குரு பெயர்ச்சி பலன் சொல்லும் போது தனுசு, மீன ராசி –சனி பெயர்ச்சி பலன் சொல்லும் போது மகர,கும்ப ராசி களுக்கு பலன் சொல்லும் போது அலார்ட்டா சொல்லனும் .ஏன்னா தனுசு மீன ராசிக்கு குரு ராசியாதிபதி , மகர,கும்ப ராசிக்கு சனி ராசியாதிபதி .

தனுசு ராசிக்கு இவரு 1- 4 க்குடையவர் . இவர் போன ஒரு வருசம் எட்டுல இருந்தாரு. மத்த ராசிக்காரவிகளுக்கு குரு எட்டுல வந்தா உடல் நிலை +பொருளாதார நிலை ரெண்டுமே பல்பு வாங்கிரும். ஆனால் தனுசு ராசிக்காரவிகளுக்கு உடல் நிலை அல்லது பொருளாதார நிலை ரெண்டுல ஒன்னு தான் பல்பு வாங்கும். அதுவும் உடல் உழைப்புக்கு அஞ்சாத பார்ட்டி -ஹார்ட் ஒர்க்கர்னா ரெண்டுமே இல்லாம கூட எஸ் ஆகலாம். தாய்,வீடு,வாகனம்லாம் கூட பல்பு கொடுத்திருக்கும்.

செரி பாஸ்ட் ஈ பாஸ்ட் ..இனி என்ன ? அதை பார்ப்பம்.

இப்போ அஷ்டமத்துல இருந்த குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஒன்பதுக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு அஷ்டமத்துலருந்து விலகறதே ஒரு பாக்கியம். அதுவும் பாக்யத்துக்கு வராருன்னா டபுள் தமாக்கா தான்.

எட்டுலருந்து விலகறதால நோய்,நொடி,நோக்காடு,வறுமை ,வீண் பழி நீங்கும். ஒன்பதுக்கு வர்ரதால அப்பா,அப்பா வழி உறவுகளோட உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்து,உங்க முதலீடு,சேமிப்பு கை கொடுக்கும்.தூர தேச தொடர்புகளால திருப்பம் ஏற்படும், இது மட்டுமா? தாய்,வீடு,வாகன வகையில இருந்த சிக்கலும் விலகும். மாணவர்கள் தூர தேசம் போய் கல்வி பயிலவும் வாய்ப்பு கிடைக்கும்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் பாக்யாதிபதிங்கறதால சொந்த முயற்சில ரிமோட் வில்லேஜ், நியூலி டெவலப்பிங் ஏரியா ,மலை பகுதியில ஒரு சொத்தே கூட வாங்குவிக .அடகு வச்சிருந்ததை ரிலீஸ் பண்ணுவிக. லோக்கல் பாலிட்டிக்ஸ்ல உள்ளவிகளுக்கு முக்கியத்வம் கூடும். நகராட்சி,பஞ்சாயத்து காண்ட் ராக்டருன்னா சொல்லவே தேவையில்லை.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
அப்பாவின் ,அப்பா வழி உறவின் போக்கு அதிர்ச்சி தரும். தாய்,தாய் வழி உறவு எரிச்சல் தரும். வாகனம் கடுப்பேத்தும்.மாணவர்கள் ஒரு கல்வியாண்டையே இழக்கவேண்டியும் வரலாம்.வயிறு இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு சோதனை காலம்.

குரு பெயர்ச்சி பலன் : ரிஷபம்

DSC_0621

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கு கொஞ்சம் அலைச்சல் சாஸ்தியாயிருச்சா .கொஞ்சம் சுஸ்தா இருக்கு.அதனால டைரக்டா மேட்டருக்கு வந்துர்ரன் (யு ஆர் லக்கி )
2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ராசிக்கு 3 ஆமிடமான கடகத்தில் இருந்து நான்காமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.

உங்களுக்கு குரு 8,11 பாவங்களுக்கு அதிபதி. இவர் 3 ல் இருந்தார். அங்கிருந்து விலகி நாலுக்கு வரார். இவர் 3 ல் இருந்ததால் உங்கள் இயல்புக்கு மாறா தில்லு துரை கணக்கா வலுச்சண்டைக்கெல்லாம் கூட போயி பல்பு வாங்கியிருப்பிங்க. சவுன்ட் பாக்ஸ்ல -அதான் பாஸ் காதுல கூட பிரச்சினை வந்திருக்கலாம். உள்ளூர் பயணத்துல விழுந்து வாரியிருப்பிங்க. லாபம் கிடைக்கும்னு வீரத்தை காட்டியிருப்பிங்க, ரிஸ்க் எடுத்திருப்பிங்க.ஆனால் பலன் என்னவோ ஜீரோ தான். இந்த குரு 3 ஐ விட்டு விலகி 4 க்கு வர்ரதால மேற் சொன்ன பிரச்சினை எல்லாம் போயே போச்.

செரி நாலுக்கு வர்ரதால என்ன பலன்னு கேப்பிக. சொல்றேன். தாய் வீடு வாகனம் கல்வி வகையறாவுல சிக்கல் ஆரம்பிச்சுரும். தாய்க்கு நோய் பாதிப்பு, அவிகளுக்கும் உங்களுக்கும் முட்டல் மோதல், வீடு மாற வேண்டி வர்ரது , லேசா மராமத்து பண்ணலாம்னு இறங்கி பட்ஜெட் எகிறிக்கிறது இத்யாதி நடக்கும்.வண்டி வாகன மேட்டரும் பெருசா பச்சா வைக்கும்.

கல்வி மேட்டர்ல டுபாக்கூர் காலேஜ்ல மாட்டிக்கிறது,அல்லது படிப்பை டீல்ல விட்டு குண்டு போட்டுர்ரதுக்கு வாய்ப்பிருக்கு. இதயம் தொடர்பான கோளாறு உள்ளவிக ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.

இன்னொரு வீடு வாங்கிரலாம்னோ -கட்டிரலாம்னோ அட கு.பட்சம் இன்னொரு ஸ்டேர் ஏத்திரலாம்னோ இறங்கிருவிங்க.வேணா பாஸ் ! லூஸ்ல விடுங்க.
2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு சிம்மத்துலயே அஸ்தமிக்கிறார்.அஃதாவது குருவோட இம்பாக்ட் ஏறக்குறைய ஜீரோ ஆகி இங்கே சூரிய வேலை செய்ய ஆரம்பிச்சுருவாரு. இதனால அம்மாவுக்கு டென்ஷன், பூட்டின வீட்டு முன்னே நிற்கவேண்டி வர்ரது , ரிசீவ் பண்ணிக்க வேண்டிய ஆளு வராம பஸ் ஸ்டாண்ட்ல முழிக்கிறது, ஹெல்மெட் போடாம போயி டாக்குமென்ட்ஸை பறிகொடுக்கிறது, வனாந்திரத்துல ,ரிமோட் ப்ளேஸ்ல பெட் ரோல் தீர்ந்து போயி நாக்கு தள்ள வண்டி தள்ள வேண்டி வர்ரது இத்யாதி நடக்கலாம்.

கொஞ்சம் தூக்கம், தீனி, நொறுக்கு தீனிக்கு டாட்டா சொல்ட்டு ,வேலை மேட்டர்ல கவனம் செலுத்தினா உங்க “பொசிஷனை” காப்பாத்திக்கலாம். இல்லின்னா “கெட் அவுட் ” ஆயிருவிங்க.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
இதனால இந்த காலகட்டத்துல குருவோட லீலைகள் கொஞ்சம் குறையும். அதே சமயம் வயிறு/இதயம் தொடர்பான சிக்கல் முத்திப்போகவும் வாய்ப்பிருக்கு.மனைவி/குழந்தைகள் போக்கு அதிர்ச்சியை தரும்.

2014சனிப்பெயர்ச்சி பலன்+பரிகாரம் (துலாம் டு மீனம்)

5

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல சனி பெயர்ச்சி பலன் 12 ராசிக்கும் சுருக்கமா போட்டம். பிறகு மொதல் 6 ராசிகளுக்கு கொஞ்சம் விரிவான பலன்+பரிகாரம் தந்தம். இன்னைக்கு துலாம் டு மீனம் போட்டாகனும்.இன்னைக்கே இப்பமே போட்டுருவம். டோன்ட் ஒர்ரி .

காலையில ஒன்னு ரெண்டு வெடி சத்தம் கேட்டதோட க்ளோஸ். சனம் கிட்ட காசு இல்லையா? கொண்டாடற மூட் இல்லையா? புரியல.வாழ்க.ஒழுங்கா ஜோதிட பலன் பதிவுக்கும் போயிரலாம்.

நிற்க..நாம போடும் அரசியல் பதிவுகளுக்கும், வர்ணாசிரம தர்ம விரோத பதிவுகளுக்கு லைக் கிடைக்குமே தவிர ஆரும் அப்போஸ் பண்ண மாட்டாய்ங்க. அப்படியே பண்ணாலும் நாகரீகமா ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லி பார்த்துட்டு கழண்டுக்குவாய்ங்க.

அவாளை பொருத்தவரை ரஜினி,ஜெ ,மோடி கும்பலை பொருத்தவரை அவிகளுக்கு ஒரு நெட் ஒர்க் இருக்கு. ஆரை கண்டுக்கனும் -ஆரை கண்டுக்க கூடாதுன்னு ஒரு முடிவோட செயல்படறாய்ங்க. இதை நான் எப்பமோ ஸ்மெல் பண்ணிட்டன்.

கண்டுக்கப்படாதுங்கற அவா லிஸ்டுல நாம இருக்கம். ஏன்னா நமக்கு பின்னாடி ஒரு நீண்ட நெடிய சரித்திரம் இருக்கு. நமக்குன்னு ஒரு விஷன் இருக்கு. நம்ம விஷனை எழுத்தாக்கி அவிக கதவுகளை தட்டிக்கிட்டே இருக்கமா – திருடனுக்கு தேள் கொட்டின கணக்கா தான் அவிக இருக்க முடியும்.
இந்த நெட் ஒர்க்ல இல்லாத சில அரைகுறைகள் வருசத்துக்கு ஒன்னோ ரெண்டோ பாயும். நெட் ஒர்க்ல இல்லியா பாஸுன்னு கேட்டதும் ஓயும். செரி ஊர்பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கட்டும் மேட்டருக்கு வந்துர்ரன்.

7.துலா:
இவிகளுக்கு சனி 4-5 க்குடையவர் .இவர் இரண்டில் வருவதால் விற்க முடியாம தவிச்ச பூர்வீக வீடு/லொடக்காணி வண்டி,வாகனத்தை விக்க முடியலாம். அல்லது இடிஞ்சு விழ தயாரா இருக்கிற வீடு,எடைக்கு போட்டாக வேண்டிய வண்டி வாகனம் வாங்கவும் கூடும். உங்களையும் அறியாம பேச்சு நிஷ்டூரமா வந்துரலாம்,கொடுக்கல் வாங்கல்ல தாமதம் ஏற்படலாம். குடும்பத்துல ஒருவித வறுமை நிலை ஒத்துழையாமை கடுப்பேத்தலாம்.கண் பாதிக்கலாம்.
தாய்/தாய் வழி உறவுகள் தாராளமா உதவி பிற்காலத்தில் சிக்கல் ஏற்படுத்துவர். கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருக்கிற பார்ட்டி அடிமாட்டு ரேட்டுக்கு ஒரு பழைய சொத்து குறித்த ஆஃபர் கொடுப்பார். ஆனால் அதனோட பலன் கைக்கு வர 2014 நவம்பர் 2 முதல் ஒன்னேகால் வருசம் ஆகலாம்.டேக் கேர்.

பரிகாரம்:
கழுத்துல ஸ்டீல் செயின் போடுங்க. அதுல அச்சாணியமான டாலர் எதுனா இருந்த நல்லது.உ.ம் கபாலம்/எருமை .சென்னை தமிழ்/கொச்சை தமிழ் பேச ட்ரை பண்ணுங்க.தாய்,வீடு,வண்டி ,வாகன வகையறாவுல ரெம்ப அலார்ட்டா இருங்க.செலவழிக்க வேண்டிய நேரத்துல உடனே செலவழிச்சுருங்க. தள்ளி போடாதிங்க. முதலீடுன்னு வந்தா அது உங்க எஸ்டிமேஷனை மீறி / லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்டா மாறும்.ஆகவே கைக்காசை மட்டும் போடுங்க. கடனை உடனை வாங்கி போட்டு மாட்டிக்காதிங்க.

8.விருச்சிகம்:
இவிகளுக்கு சனி 3-4 க்குடையவர். இவர் ஜன்மத்துல வர்ரதால சகோதரம்,பயணங்கள்,தாய்,வீடு,வாகனம் குறித்த கவலை தூக்கத்தை கெடுக்கும். தொழிலில் கவனம் சிதறும். அகால போஜனம்,அகால நித்திரை காரணமா கடுமையான மலச்சிக்கல் (பைல்ஸ் வரை கூட போகலாம்) தலை முடி உதிர்தல், முகத்தில் எண்ணெய் .மனசுல தகிரியம் பொங்கும் கொஞ்சம் தாமதமா. அதனால உபயோகம் இருக்காது.மேற்கு திசை பயணங்கள் உடனடி பலனை தராது.தொடர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். வீட்ல சாக்கடை அடைச்சுக்கறது/செப்டிக் டேங்க் லீக்/நிரம்பிர்ரது இத்யாதி நடந்து வீட்டை நாறடிக்கும்.
பரிகாரம்:
சமையலுக்கு நல்லெண்ணெய். நடை பயிற்சி, மனசுக்கு விருப்பமில்லாத வேலைகளுக்கு குட் பை. காக்கி, நீல நிற ஆடைகள் -கு.பட்சம் உள்ளாடைகள் அணியலாம்.ஸ்டீல் ஆர்னமென்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி சுடுகாட்டை ஒட்டின பகுதியில ஒரு டீ சாப்டுங்க. பழக்கமிருந்தா தம் போடுங்க.பயணங்களில் லக்சரி வேண்டாம்.வீட்டை வாகனத்தை அழகு படுத்த பார்க்காதிங்க.வண்டியோட சைலன்சர் ப்ளாக் ஆகலாம்.

9.தனுசு:
இவிகளுக்கு சனி 2-3 க்குடையவர் இவர் விரயத்தில் வருவதால் வாய கொடுத்து மாட்டிக்காதிங்க.கொடுக்கல் வாங்கல்ல மன்னிக்க முடியாத/சகிக்க முடியாத தாமதம் ஏற்படும். குடும்ப செலவுகள் திணறடிக்கும். இளைய சகோதரத்தால்/ தேவையற்ற பயணங்களால் வீண் விரயம்,அல்லல்,அலைச்சல் ஏற்படும். பாதம் பாதிக்கலாம். படுக்கையறையில் எலி செத்து நாறலாம்.ஆறின சாப்பாட்டை திங்க வேண்டி வரலாம். பணப்பற்றாக்குறை,குடும்ப நிலை,சகோதரம் இத்யாதியால் தூக்கம் கெடலாம். சிக்கனம் என்பது கஞ்சத்தன அளவுக்கு போயி ஒத்திக்கு ரெட்டியா செலவழிக்க வேண்டி வந்துரும்.
பரிகாரம்:
கட்டிலை அப்புறப்படுத்தி தரையில படுக்க பாருங்க.அலுமினயதட்டுல சாப்பிடுங்க.படுக்கையறையில் வாசனாதி திரவியங்கள்,டிவி இத்யாதி அவாய்ட் பண்ணுங்க. சனிக்கிழமை , பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி இந்த 3 நட்சத்திரத்துல ஒரு நட்சத்திரலயாச்சும் (லீவு நாள்ள வரும் போது) மவுன விரதம் இருங்க. பர்ஸ்/கேஷ் பேக் நீல நிறந்துல இருக்கனும். ஆராச்சும் யூஸ் பண்ணி வீசி எறிஞ்சதா இருந்தா சிரேஷ்டம்.

10.மகரம்:
இவிகளுக்கு சனி லக்னம் மற்றும் தன பாவாதிபதி. இவர் 11 ல் வருவது நல்லதே. ஆனால் இருமனப்போக்கு அதிகரிக்கும், பேச்சை புரட்டி பேசி அதனால் லாபம் அடைய பெறலாம். ( இதனால் சமூகத்தில் நம்பகத்தன்மை குறையும்) இன்னொரு ஃபேமிலியை சப்போர்ட் பண்ணவேண்டி வரலாம். ரெம்ப கணக்கு பார்ப்பிங்க, ரெம்ப சிக்கனமா இருக்க பார்ப்பிங்க. மனித உறவுகள் பாழ்படாம பார்த்துக்கங்க. உங்கள் இயல்புக்கு மாறாக ஆடை,ஒப்பனை இத்யாதிக்கு முக்கியத்துவம் தருவிங்க. பெரிய இரும்பு பொருள் வந்து சேரும் (வண்டி வாகனம்/ஐரன் சேஃப்)
பரிகாரம்:
தேவையில்லை. மூத்த சகோதரம் இருந்தால் அவர்களை விருச்சிகத்துக்கு சொன்ன பரிகாரங்களை பின்பற்ற சொல்லுங்கள்.

11.கும்பம்:
இவிகளுக்கும் சனிதான் லக்னாதிபதி +விரயாதிபதி. இவர் 10 க்கு வருவது நல்லதே. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படலாம். சேல்ஸ் லைன்ல இருந்தா இன்னம் நல்லது. அது ஐரன் ஸ்டீல் ஆயில் அக்ரிகல்ச்சர் மாதிரி சனி காரகமா இருந்தா இன்னம் நல்லது. வேலை நிதானமாத்தான் நடக்கும். கூலி/லாபம் கைக்கு வர தாதமதமாகலாம்.
பரிகாரம்:
சேல்ஸ் லைனை பிடிங்க

12.மீனம்:
இவிகளுக்கு சனி 11,12 க்குடையவர் .இவர் 9 க்கு வராரு. இதனால அப்பாவின் செயல்பாடுகளில் ஒரு வித மந்தத்தன்மை ஏற்பட்டுரும். அவரு டபுள் மைண்டடா இருப்பார். தூர பயணங்கள் லாபத்தையும் -நஷ்டத்தையும் மாத்தி மாத்தி தரும். ரெம்ப நாளா நிலுவையில் இருந்த பெருந்தொகை /பழைய சொத்து கைக்கு வந்து படக்குனு செலவாயிரும். சொத்து,முதலீடு,சேமிப்பு கரையும். மேற்கு திசை நோக்கிய தொலை தூர பயணம் பயன் தராது. அடுத்த டேக்ல ஓகே வாகலாம்.
பரிகாரம்:
அப்பா விருச்சிகத்துக்கு சொன்ன பரிகாரங்களை பின்பற்றவும். சொத்து,முதலீடு,சேமிப்பு தொடர்பான டாக்குமென்ட்ஸை பழைய காக்கி/நீல நிற பையில் போட்டு வைக்கவும்.உயர் அதிகாரிகள்,ஊர் பெரியவர்களிடம் சூதானமா நடக்கவும்.

சனிப்பெயர்ச்சி பலன் (2014-2017)

ஜெயா

அண்ணே வணக்கம்ணே !
ராசியும் வாழ்வும் தொடர் ஒரு ஓரமா வந்திட்டிருக்கு. சிம்மம் டு கும்பம் ஃபினிஷ் ஆச்சு. மீனம் டு சிம்மம் பெண்டிங். இந்த ராசி பலன்,சனி பெயர்ச்சில்லாம் மெட் ராஸ் ஐ மாதிரி வர வேண்டிய நேரத்துல கரீட்டா வரனும்.

எனக்கென்னமோ ஏற்கெனவே ஒரு தபா எழுதினதாவே ஞா . இருந்தாலும் நீங்கள் கேட்டவை ஸ்டைல்ல சனி பெயர்ச்சி பலன் இந்த பதிவுல தந்திருக்கன்.

1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்குடையவர். சனி எட்டில் வருவதால் வேலை அழுத்தம் அதிகரிக்கும். இதனால் கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். மூத்த சகோதரம் பாதிக்கும். பெரிய/சிறிய இரும்பு பொருள் காணாமல் போய் அதனால் பெரும் சிக்கல்கள் வரலாம். விபத்து/தாக்குதலுக்கும் வாய்ப்பு .வீண் பழி விழலாம்.
2.ரிஷபம்:
இவிகளுக்கு சனி 9,10 க்குடையவர் . சனி ஏழுக்கு வருவதால் அன் மேரீட் சனத்துக்கு அப்பா வழி உறவில் திருமணம் நடக்கலாம். மேரீட் சனம் வயதில் மூத்த பெண்ணுடன் நெருக்கம் காட்டலாம். சிலர் பார்ட்னர் ஷிப்ல எதையாவது செய்ய போயி முட்டிக்கிட்டு அவதிப்படலாம்.
3.மிதுனம்:
இவிகளுக்கு சனி 8,9 க்குடையவர் .இவர் ஆறில் வருவதால் சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கும். அப்பா/அப்பாவழி உறவு நோய் வாய்படலாம்/அல்லது அவருக்கு சிக்கல்/அல்லது அவருடன் தங்களுக்கு முட்டல் மோதல் ஏற்படும். மேற்கு திசை நோக்கிய தூர பயணத்தில் சிக்கல் வரலாம்.
4.கடகம்:
இவிகளுக்கு சனி 7-8 க்குடையவர் இவர் ஐந்தில் வருவதால் அவமானம்,அவப்பெயர்,குழந்தைகளுக்கு உடல் நலக்கேடு வரலாம். கடந்த பிறவியின் காதலி /மனைவி தற்சமயம் லாஜிக் இல்லாம லைஃப்ல என்டர் ஆகி பல்பு வாங்கலாம். இதை உலகம் நீச ஸ்த்ரீ சகவாசம்னு பார்க்கும். அன் மேரீட் சனம் தங்கள் தகுதிக்கு மிக குறைந்த பெண்ணை மணக்க வேண்டிய கட்டாயம் வரலாம்.
5.சிம்மம்:
இவிகளுக்கு சனி 6-7 க்குடையவர். இவர் 4 ல் வருவதால் தாய்க்கு நோய், வீட்டுக்கடன்,வாகன கடன் சிக்கல் தரலாம். அன் மேரீடா இருக்கிற சிலருக்கு தாய் வழி உறவில் வரன் அமையலாம். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர வாய்ப்பு. டூ வீலர்ல டபுள்ஸ் ஏத்தாதிங்க. வீட்டு ஓனர் கிட்டே சூதானமா நடந்துக்கங்க.
6.கன்னி:
இவிகளுக்கு சனி 5-6 க்குடையவர். இவர் 3 ல் வருவதால் அட்வென்சரஸா,அக்ரசிவா ரோசிப்பிங்க. செயல்படுவிங்க. அதனால அல்லல் அலைச்சல் ஏற்படும்.இளைய சகோதரம் நோய் வாய்படலாம்/அல்லது அவர்களுடன் /அல்லது அவர்களுக்கு சிக்கல் வரலாம். உங்க காது டமாரம் ஆகலாம்.

எச்சரிக்கை:

அந்தோ பரிதாபம் -ஜெ நிலை இந்த தலைப்புல ஒரு வில்லங்க பதிவு . அம்மா பதவியில இருந்தா என்ன மருவாதி.பதவியில இல்லின்னா என்ன மருவாதின்னு தனிப்பிரிவு அதிகாரிகள் பட்டவர்த்தனமா காட்டியிருக்காய்ங்க.பதிவை படிக்க இங்கு அழுத்தவும்

7.துலா:
இவிகளுக்கு சனி 4-5 க்குடையவர் .இவர் இரண்டில் வருவதால் விற்க முடியாம தவிச்ச பூர்வீக வீடு/லொடக்காணி வண்டிய விக்க முடியலாம். தாய்/தாய் வழி உறவுகள் தாராளமா உதவி பிற்காலத்தில் சிக்கல் ஏற்படுத்துவர். கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருக்கிற பார்ட்டி அடிமாட்டு ரேட்டுக்கு ஒரு பழைய சொத்து குறித்த ஆஃபர் கொடுப்பார். ஆனால் அதனோட பலன் கைக்கு வர 2014 நவம்பர் 2 முதல் ஒன்னேகால் வருசம் ஆகலாம்.டேக் கேர்.
8.விருச்சிகம்:
இவிகளுக்கு சனி 3-4 க்குடையவர். இவர் ஜன்மத்துல வர்ரதால சகோதரம்,பயணங்கள்,தாய்,வீடு,வாகனம் குறித்த கவலை தூக்கத்தை கெடுக்கும். தொழிலில் கவனம் சிதறும். கடுமையான மலச்சிக்கல் (பைல்ஸ் வரை கூட போகலாம்) தலை முடி உதிர்தல், முகத்தில் எண்ணெய் .
9.தனுசு:
இவிகளுக்கு சனி 2-3 க்குடையவர் இவர் விரயத்தில் வருவதால் வாய கொடுத்து மாட்டிக்காதிங்க.கொடுக்கல் வாங்கல்ல மன்னிக்க முடியாத தாமதம் ஏற்படும். குடும்ப செலவுகள் திணறடிக்கும். இளைய சகோதரத்தால்/ தேவையற்ற பயணங்களால் வீண் விரயம்,அல்லல்,அலைச்சல் ஏற்படும்.
10.மகரம்:
இவிகளுக்கு சனி லக்னம் மற்றும் தன பாவாதிபதி. இவர் 11 ல் வருவது நல்லதே. ஆனால் இருமனப்போக்கு அதிகரிக்கும், பேச்சை புரட்டி பேசி அதனால் லாபம் அடைய பெறலாம். இன்னொரு ஃபேமிலியை சப்போர்ட் பண்ணவேண்டி வரலாம். ரெம்ப கணக்கு பார்ப்பிங்க, ரெம்ப சிக்கனமா இருக்க பார்ப்பிங்க. மனித உறவுகள் பாழ்படாம பார்த்துக்கங்க.
11.கும்பம்:
இவிகளுக்கும் சனிதான் லக்னாதிபதி +விரயாதிபதி. இவர் 10 க்கு வருவது நல்லதே. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படலாம். சேல்ஸ் லைன்ல இருந்தா இன்னம் நல்லது. அது ஐரன் ஸ்டீல் ஆயில் அக்ரிகல்ச்சர் மாதிரி சனி காரகமா இருந்தா இன்னம் நல்லது. வேலை நிதானமாத்தான் நடக்கும். கூலி/லாபம் கைக்கு வர தாதமதமாகலாம்.
12.மீனம்:
இவிகளுக்கு சனி 11,12 க்குடையவர் .இவர் 9 க்கு வராரு. இதனால அப்பாவின் செயல்பாடுகளில் ஒரு வித மந்தத்தன்மை ஏற்பட்டுரும். அவரு டபுள் மைண்டடா இருப்பார். தூர பயணங்கள் லாபத்தையும் -நஷ்டத்தையும் மாத்தி மாத்தி தரும். ரெம்ப நாளா நிலுவையில் இருந்த பெருந்தொகை /பழைய சொத்து கைக்கு வந்து படக்குனு செலவாயிரும்.
எச்சரிக்கை:
நம்ம பெசல் பரிகாரம் தான். அந்தந்த ராசிக்காரவுக கமெண்ட்ல வந்து கேட்டா சொல்ல உத்தேசம்

பிப்ரவரி 4 முதல் முதல் ஜூலை 14 வரை ரெட் அலர்ட்?

அண்ணே வணக்கம்ணே !
பல தடவை சொன்னதுதான். இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக இன்னொரு தாட்டி சொல்லிர்ரன். ராசிபலன்லாம் ச்சும்மா.
அதே சமயம் இந்த செவ் மேட்டர் மட்டும் கொஞ்சம் சீரியஸ் தான். மத்த 8 கிரகங்களோட கதை வேற . ஜாதகத்துல பலம் இல்லின்னா,தசாபுக்திகள் கொஞ்சம் சோனியா இருந்தா இதுலயும் ராகு-கேது,குரு,சனில்லாம் கொஞ்சம் அதிகமாவே பாதிப்பை கொடுத்துருவாய்ங்க. அவிகளையும் ஒரு கண் கவனிச்சிட்டே இருக்கனும்.
ஆனால் இந்த செவ் மட்டும் உடன லாட்டரி மாதிரிங்கோ. இவரை ஒரு ஒன்னரை மாசம் கண்டுக்காம விட்டுட்டா ரோட்டுக்கே வந்துரலாம் அ காட்டுக்கே அதாங்க சுடுகாட்டுக்கே கூட போய் சேர்ந்துரலாம்.அதனால இவரோட சஞ்சாரத்தை ஒரு ஓட்டம் பார்த்துரலாம்.
தற்சமயம் கன்னியில இருக்காரு கன்னியில் செவ்வாயை பத்தி ஒரு ஜோதிட மொழி இருக்கு ” கன்னியில் செவ் தங்கினால் கடலேழும் வற்றும்”
இந்த விதியை .சகட்டுமேனிக்கு கன்னியில செவ்வாயை கண்டதும் அப்ளை பண்ணிரப்படாது. “தங்கினால்”ங்கற வார்த்தைக்கு சரியான அர்த்தத்தை பிடிக்கனும்.
இங்கே வந்தால்னு சொல்லலே..தங்கினால்னு சொல்றாய்ங்க. வந்தால்னா அவர் இருக்கவேண்டிய நாள் மட்டும் இருக்கிறாப்ல வந்தால்னு அருத்தம். தங்கினால்னா கூடுதலா தங்க வந்தால்னு எடுத்துக்கனும்.
செவ் ஒரு ராசியில தங்க வேண்டியது 45 நாள். நவம்பர் 26 ஆம் தேதி செவ் கன்னிக்கு வந்தாரு. 4/2/2014 அன்று துலா ராசிக்கு மாறுகிறார். இடையில மொத்தம் எத்தனை நாள் இருக்கு?
நவம்பர்ல ஒரு 4 நாள்,டிசம்பர்ல 31 நாள் ,ஜனவரில 31 நாள்,பிப்ரவரி 4 நாள் ஆக 70 நாள் ஆயிருச்சு.ஆக இவர் ரொட்டீனா வந்தவர் இல்லை.தங்க வந்தவர். அதனால கடலேழும் வற்றும்.
ராகுல் காந்தியோட இமேஜை பில்டப் பண்றதுக்கு 500 கோடி செலவழிக்கப்போறாய்ங்களாம். அழிக்கட்டும் அழிக்கட்டும்.ச்சொம்மா வந்தது ச்சொம்மாவே போயிரும் போல.
இன்னைக்கு ஜனவரி 10 – ஜனவரியில ஒரு 21 நாள் . பிப்ரவரியில ஒரு 4 நாள்னா மொத்தம் 25 நாள் இருக்கு.இந்த 25 நாள் 12 ராசிக்காரவுகளுக்கு எப்படி இருக்கும்னு பார்ப்பம்.
செவ் மேஷ,விருச்சிக ராசிக்காரவுகளுக்கு இவர் ராசியாதிபதி.
மேஷம்?
உங்க ராசிக்கு செவ்வாய் ராசியாதிபதி. செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 6 ஆவது ராசி. செவ் ஆறுல இருந்தா ஓகே.ஆனால் அவரே ராசியாதிபதியா இருந்தா? சத்ரு -ரோக -ருண உபாதைகள் தான் மிஞ்சும். ரத்தம்,எரிச்சல்,அதி உஷ்ணம் ,கோபம் தொடர்பான வியாதிகள் உள்ளவர்கள் பீ கேர்ஃபுல்.
ரிஷபம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 7-12 க்கு அதிபதி செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி அஞ்சாவது ராசி. மோதலுக்கு பின் காதல் வரலாம். அ காதலில் ஊடல் வரலாம். அன்மேரீடா இருந்து திருமண முயற்சியில இருந்தா ஒரு சில கசப்புகளுக்கு பின் வரன் அமையலாம். பார்ட்னர் மூலமா ரியல் எஸ்டேட் வகையில லாபம் -ப்ளஸ் அவருடன் மோதல் ஏற்படலாம்.
மிதுனம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 6,11 க்கு அதிபதி . செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 4 ஆவது ராசி.தாய்க்கு நோய் அ அவிகளோட தகராறு,வீட்டுக்கடன்,வாகனக்கடன்,படிப்பே பெரும் சுமையா மாறலாம். வீடு மாறும் போது அடுக்கு மாடி வீட்டுக்கு/ ரெண்டு தலைவாசல் உள்ள வீட்டுக்கு போகலாம்.
கடகம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 5,10 க்குடையவர். செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 3 ஆவது ராசி .ரிஸ்க் எடுப்பிங்க. இளைய சகோதரத்தால் உதவி கிடைக்கலாம். அ குழந்தைகளுக்கு அல்லல் அலைச்சல் ஏற்படலாம்.தொழில் முறை பயணங்கள் ஏற்படலாம்.
சிம்மம் ?
உங்க ராசிக்கு செவ்வாய் 4,9 க்குடையவர் செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி ரெண்டாவது ராசி. தாய் ,தந்தை வழி ஆதரவு. தூர தேச தொடர்புகளால் லாபம், சேமிப்பு,முதலீடு லாபம் தரலாம். வீடு ,வாகன விற்பனை முயற்சி வெற்றி. வந்த காசை இன்வெஸ்ட் பண்ணுவிங்க. சிலர் புதிய வீடு,வாகனம் வாங்கவும் செய்யலாம்.

கன்னி?
உங்க ராசிக்கு செவ்வாய் 3,8 க்குடையவர் .இவர் உங்க ராசிலயே இருக்கிறதால நிறைய அல்லல் அலைச்சல் ஏற்படும். நிறைய ரிஸ்க் எடுப்பிங்க.கோபம்,அதி உஷ்ணம் பாதிக்கும். சகோதரர்,எதிரிகள் தொல்லை பீக் லெவலுக்கு போகலாம். மின்சாரம், நெருப்பு,கூர்மையான ஆயுதத்தால் பாதிப்பு ஏற்படலாம்.
துலா?
உங்க ராசிக்கு செவ்வாய் 2,7 க்குடையவர். செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 12 ஆவது ராசிங்கறதால (விரயம்) கைக்காசு விரயமாகலாம். சகோதரர்,பூமி வகையறாவில் முதலீடு செய்யவேண்டி வரலாம். குடும்பத்தை பிரிய வேண்டி வரலாம். அ “என் பொண்டாட்டி ஊருக்கு போறா”ன்னு பீத்திக்க வேண்டி வரலாம். இல்லின்னா தோசை கரண்டியில அடி கியாரண்டி.
விருச்சிகம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 1-6 க்குடையவர் . செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 11 ஆவது ராசி . .ஆக இவிக ஓரளவு பெட்டர் ரிசல்ட்ஸை எதிர்ப்பார்க்கலாம். ஹெல்த் பிக் அப் ஆகும். கான்ஃபிடன்டா ஃபீல் பண்ணலாம். சிலருக்கு போலீஸ்,ரயில்வே,ரியல் எஸ்டேட் ,எலக்ட் ரானிக்ஸ் வகையறாவுல ஒர்க் அவுட் ஆகலாம்.
தனுசு?
உங்க ராசிக்கு செவ்வாய் 12,5 க்குடையவர். செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 10 ஆவது ராசி. விற்பனை பிரிவில் -அதுவும் ரியல் எஸ்டேட், எலக்ட் ரானிக்ஸ்,நெருப்பு சம்பந்தப்பட்ட,ஃப்யூயல் சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்தால் டார்கெட் ரீச் ஆயிரும். இல்லின்னா உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் ஆருக்கோ போயிரும். திடீர்னு அதிர்ஷ்ட வசமா புது ப்ராஜக்ட்/வேலை மாட்டலாம்.
மகரம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 11,4 க்குடையவர். க செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 9 ஆவது ராசி. ஃபாதர்லி பர்சன் ஒருவர் ஒரு புஷ் அப் கொடுக்கலாம். பூர்விக சொத்து கை கொடுக்கலாம். அம்மா ,அம்மா வழி உறவுகள் அனுகூலம். நிறைய செலவழிச்சு தெற்கு திசையில ஒரு தூர பயணம் போய் வரலாம். திரும்பி வந்து சேமிப்புலயோ,முதலீட்டுலயோ கை வைக்க வேண்டி வரலாம்.
கும்பம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 10,3 க்குடையவர் . செவ்வாய் பிப்ரவரி 4 வரை இருக்கப்போற கன்னி 8 ஆவது ராசி. திடீர்னு வேலையில ப்ரஷர் அதிகரிக்கும். கடுமையா உழைக்க வேண்டி வரும். இளைய சகோதரம் முட்டிக்கும்.ஸ்பீக்கர் தகராறு பண்ணும் (காது) .வித் இன் தி சிட்டி ஜர்னி பண்ணும் போது முட்டி சில்லு பேரலாம்.
மீனம்?
உங்க ராசிக்கு செவ்வாய் 9,2 க்குடையவர் .கன்னி 7 ஆவது ராசி. கணவர்/காதலருக்கு எக்கனாமிக்கலா ஒரு லிஃப்ட் கிடைக்கலாம். ரெவின்யூ இன் கம் மட்டுமில்லை,லம்பாவும் எதுனா கிட்டலாம்.அவரோடயே கொடுக்கல் வாங்கல் செய்விங்க.
எச்சரிக்கை:
மேட்டர் இத்தோட முடியலிங்ணா. பிப்ரவரி 4 ஆம் தேதி துலா ராசிக்கு போறாரு. (வராரு?) இதுக்குண்டான பலன் பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள்ள எழுதிர்ரன். இதுல ஒரு சிக்கலும் இருக்கு. ஏன்னா ஏற்கெனவே இங்கே சனி ராகு இருக்காய்ங்க.
மேஷ,விருச்சிக ராசிக்கும், மகர,கும்ப ராசிகளுக்கும் பல்பு தேன்.
மார்ச் 2 ஆம் தேதி இங்கயே (துலாம்) வக்ரமாயிர்ராரு.இது மேஷ விருச்சிக ராசிக்காரவுகளுக்கு பல்பு. மகர கும்ப ராசிகளுக்கு கொஞ்சம் போல ரிலீஃப்.
மத்த ராசிக்காரவுகளுக்கு பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள்ள நாம எழுதப்போற துலா செவ் : சாதாரண நிலை சஞ்சார பலன் எல்லாம் தலை கீழா மாறும்.அங்கே நெல்லது சொல்லியிருந்தா கெட்டது நடக்கும். கெட்டது சொல்லியிருந்தா நெல்லது நடக்கும்.
மேலும் செவ் மார்ச் 25 ஆம் தேதி வக்ரமாவே கன்னிக்கு வராரு. இன்றைய பதிவில் சொல்லியிருக்கிற பலன்லாம் மேஷ,விருச்சிகம் தவிர்த்த ராசிக்காரர்களுக்கு தலை கீழா மாறும் ( மேஷ,விருச்சிகத்துக்கு மட்டும் பல்புதேன்)
மே20 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாயிருது. இன்றைய பதிவுல சொன்ன பலன்லாம் நடக்க ஆரம்பிக்கும். ஜூலை 14 ஆம் தேதி சாதாரண நிலையில செவ் துலாமுக்கு வராரு.
அங்கே ஏற்கெனவே சனி,ராகு இருப்பாய்ங்க. எனவே மகர,கும்ப ராசிகளுக்கும்,மேஷ விருச்சிக ராசிகளுக்கும் பல்பு.
துலா ராசிக்கும் பல்புதேன்.
மேக்ரோ:
சாதாரணமா செவ் வக்ரமானா தென் பகுதிகளில் கலவரம்,விபத்து,தீ விபத்துல்லாம் நடக்கும். போலீஸ்,ராணுவ புரட்சி நடக்கிறதுக்கும் வாய்ப்புண்டு. முக்கியமா மாணவர்கள் போராட்டம் வெடிக்கலாம். ராம சேனை வானர சேனையா மாறலாம். ஷாக் சர்க்யூட் பவர் கட் பீக் லெவலுக்கு போறதும் நடக்கலாம்.
கன்னி,துலாம்ல இந்த சமாசாரம்லாம் நடக்கிறதால ஆடிட்டர்கள்,டாக்டர்கள்,ஜோதிடர்கள்,எழுத்தாளர்களுக்கு பாதிப்பு வரலாம் அ அவர்களால் பிறருக்கு பாதிப்பு வரலாம்.
பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவர். காதல்,நட்பு வகையில் கொடூரங்கள் ,பரிதாபங்கள் நடக்கலாம். நில பேரம்,நில ஆக்கிரமிப்பு வழக்குகள் கொத்தாய் வெளிவரலாம். இவற்றுக்கு எதிரான தீர்ப்புகள் வரலாம். ரத்தக்களறி ரணக்களறி நடக்கலாம்.

2013 குரு பெயர்ச்சி பலன் ( மீள்பதிவு)

1.மேஷம்:
உங்களுக்கு குரு 9/12 க்கு அதிபதி.மிதுனம் 3 ஆமிடம். பொதுவிதிப்படியும் இது நல்லதில்லை. சிறப்பு விதிகளின் படி பார்த்தாலும் 9 க்கு அதிபதி 3 க்கு வர்ரது நல்லதில்லை. இதனால த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம்
இத்யாதி வகையறாக்களில் அல்லல் அலைச்சல் கியாரண்டி. முழங்கால்ல அடிபடலாம்.தூரபிரயாணம் ப்ளான் பண்ணும் போது பனி,குளிர்,மழைல்லாம் பார்த்து ப்ளான் பண்ணிக்கங்க. காசு பணம் லக்கேஜு எல்லாம் சாக்கிரதை. முதலீடு சேமிப்புகள் மேட்டர்ல வட்டி,லாபத்தை விட சேஃப்டிக்கு முதலிடம் கொடுங்க.

இளைய சகோதரம் பாதிக்கப்படும். அவிகளால செலவு ஏற்படலாம். சிட்டிக்குள்ளாறயே தேவையில்லாம நிறைய அல்லாட வேண்டியிருக்கும். காது தொடர்பான பிரச்சினையும் வரலாம். தங்கம்,ரொக்கம் ஹேண்டில் பண்ணும் போது பீ கேர்ஃபுல். சொல்வாக்கு -செல்வாக்குல்லாம் தேசலாயிரும். பூணூல் போட்டவுக கிட்ட சாஸ்தி வச்சுக்காதிங்க.

குரு பார்வை :
குரு தான் பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார்ங்கறது விதி. குரு 7-9-11 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால காதலி/ மனைவி ,அப்பா/மாமனார்/மேலதிகாரி/ஊர் பெரிய மனிதர்/வங்கி வகையில ஒரு ரிலீஃப் கிடைக்கலாம். மூத்த சகோதரத்துக்கு நல்லது. அவிகளால ஒரு நன்மைய எதிர்ப்பார்க்கலாம்
.
பரிகாரம்:
முதலீடு -சேமிப்பு தொடர்பான டாக்குமென்ட்ஸ் ( வங்கிபாஸ்புக் – எல்.ஐ.சி பாண்டு வகையறா) அடங்கிய ஃபைலை அடிக்கடி இடம் மாத்திக்கிட்டே இருங்க. ஒரு சான்ட் பாக்ஸ் வாங்கிக்கிட்டு சதா பஞ்சாட்சரிய ஒலிக்க விடுங்க.

2.ரிஷபம்:
உங்களுக்கு குரு 8/11 க்கு அதிபதி.மிதுனம் 2 ஆமிடம். பணம் பிக் பாக்கெட் போகலாம், கொடுத்து ஏமாறலாம் (பூணூல் போட்டவுகளுக்கு பைசா கொடுக்காதிங்க) , வாக்கு தவற வேண்டி வரலாம் (மேற்படி இனத்தாருக்கு வாக்கு தரவேண்டாம். ,குடும்பத்துலயும் இழவு வீடு கணக்கா ஒரு வித அமைதி வந்துரும். பிரிவு கூட ஏற்படலாம். கண் பார்வை பாதிக்கப்படலாம். கண் அருகே அடி படலாம். பேச்சை குறைங்க.
ஜாய்ண்டு,ஷ்யூரிட்டி பாவத்தே வேணாம். ஊர்பஞ்சாயத்துக்கு போகாதிங்க. நடுத்தர உசரம் – நல்ல நிறம் உடைய ஈஸ்வரன் பெயர் கொண்ட நபர் உதவுவார். மூத்த சகோதரத்துக்கு நன்மை. அவிகளால உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்.

குரு பார்வை :
குரு தான் பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார்ங்கறது விதி. குரு 6-8-10 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால கடன் அதிகரிக்கும், எதிரிகள் தொல்லை சாஸ்தியாகும். நோய் தொல்லை உண்டாகும்.(வயிறு இதயம்) . வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா. செய்ற தொழில் உத்யோகம் வியாபாரத்துல ஐயோ பாவம் பார்க்காதிங்க. பார்த்தா தீர்ந்திங்க.

பரிகாரம்:
வியாழன் அல்லது புனர்வசு/விசாகம்/பூரட்டாதி நட்சத்திரங்களில் மவுன விரதம் +உண்ணாவிரதம் இருங்க( இயற்கை வைத்திய முறைப்படி – ஆஃப்டர் கன்சல்ட்டிங் யுவர் ஃபேமிலி டாக்டர்)

3.மிதுனம்:
உங்களுக்கு குரு 7/10 க்கு அதிபதி. இவர் ராசியிலேயே வர்ராரு. சாதாரணமா ஜன்ம குரு வந்தா சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ், பொருளாதார நெருக்கடி ,வீண்பழி எல்லாம் ஏற்படும். முகக்களை குறையும். வயிறு ட்ரபுள் கொடுக்கும் (வாயு)
இவரு 7 க்கு அதிபதிங்கறதால மனைவி/காதலி , 10 க்கு அதிபதிங்கறதால செய்தொழில் வியாபாரம் உத்யோகம் வகையறா காரணமா மொத பாரால சொன்ன மேட்டர்லாம் நடக்கும். சாக்கிரதை. சிக்கனம் தேவை இக்கணம். ஒதகாத மேட்டர்ல எல்லாம் ரெம்ப ரோசிக்காதிங்க. அடுத்தவுக மேட்டர்ல மூக்கை நுழைக்காதிங்க. முக்கியமா கேட்காதவனுக்கெல்லாம் அட்வைஸ் தராதிங்க.
சாப்பிடத்துமே மூடு கிளம்பும். கு.ப 2மணி நேரம் இடை வெளி இருக்கட்டும்.பலான மேட்டர்லாம் மாசத்துக்கு ரெண்டு தபா தான்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. இதை மனசுல வச்சு கொஞ்சமாச்சு அடக்கி வாசிங்க.
பார்வை:
ஜன்மத்துல உள்ள குரு 5-7-9 பாவங்களை பார்ப்பாரு. மனைவி மேட்டர்ல அந்தளவுக்கு பிரகாசமா இல்லாட்டாலும் வாரிசு -பெயர் புகழ், அப்பா,அப்பா வழி உறவு விஷயங்கள்ள இந்த குரு நன்மைய தர வாய்ப்பிருக்கு.
பரிகாரம்:
மஞ்சள் நிற ஆடை அணிகலன் களை அதிகம் உபயோகிக்கவும். தினசரி காலையில அரை மணியாச்சும் பிராமணர் கணக்கா மஞ்ச வேட்டி /துண்டு போட்டு சிவ பூஜை அல்லது ஆரேனும் குருவுக்கு பூஜை செய்ங்க. புராணங்களை புரட்டுங்க. முக்கியமா சிவ புராணம்.

4.கடகம்:
உங்களுக்கு மிதுனம் விரயஸ்தானம். இங்கன குரு வர்ரதால சுப செலவுகள் சாஸ்தியாகும். (அய்யருக்கு தட்சிணை கொடுப்பிங்க) ஞா மறதி சாஸ்தியாகும். தூக்கம்,சாப்பாடு,செக்ஸ் குறையும்.
குரு உங்களுக்கு 6-9 பாவாதிபதி. இவர் 6 க்கதிபதியா 12ல மறையறது நல்லது தான். இதனால கடன் தீரும்,விரோதிகள் ஓடி ஒளிவாய்ங்க. நோய் வெளிப்பட்டு குணமாகும்.
ரெம்ப குதிக்காதிங்க. குருவுக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால சொத்து எதையாவது விற்க வேண்டி வரலாம். முதலீட்டை கூட துடைக்க வேண்டி வரலாம். ஃபிக்சட் டிப்பாசிட் எதையாவது ப்ரேக் பண்ணி எடுக்க வேண்டி வரலாம். தூர தேச பயணம் / தீர்த்தயாத்திரைக்கு கூட கிளம்பிருவிங்க. அப்பா வகையிலசெலவு. தூர தேச தொடர்புகளால் செலவு நேரலாம்.
பார்வை:
குரு பார்வை 4 -6 -8 பாவங்களின் மேலவிழுது. இது தாய்,வீடு,வாகன,கல்வி வகையறாவுக்கு நல்லது. ஆனால் இதய துடிப்பு அதிகரிக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சினை தலை காட்டலாம். படக்குனு ஓரு பெரிய மன்சனோடவோ -மேலதிகாரியோடவோ முட்டிக்குவிங்க. ஒரு கட்டத்துல எல்லா பணமும் முடங்கி எதையாவது அடகு வைக்க வேண்டியோ விக்க வேண்டியோ கூட வரலாம்.
பரிகாரம்:
மஞ்சள் நிற பில்லோ கவர் -பெட் ஸ்ப்ரெட் யூஸ் பண்ணுங்க. படுக்கையில பஞ்சாட்சரி ஜெபிங்க. அல்லது கேளுங்க. பலான நேரத்துல மஞ்சள் நிற ஆடை அணிந்தால் நல்லது (மனைவி உட்பட). சொத்து,முதலீடு,சேமிப்பு,பாஸ்போர்ட் டாக்குமென்ட்ஸை மஞ்சள் நிற ஃபைல்ல போட்டு வச்சு பெட் கீழே அல்லது கட்டிலில் உள்ள ராக்ஸ்ல / ட்ராயர்ல போட்டு வைங்க.
5.சிம்மம்:
மிதுனம் உங்களுக்கு லாபஸ்தானம். பொன் பொருள் சேரும், பெரியவுக ஆசி கிடைக்கும். செல்வாக்கு பெருகும். சொல்வாக்கு தெளிவாகும்.
குரு உங்களுக்கு 5-8 க்கு அதிபதி. அஞ்சுக்கு அதிபதியா இவர் 11 ல நின்னா நல்லதுதான். குழந்த பேறுக்கு எதிர் நோக்குவோர்க்கு அது பலிதமாகும். பெயர் புகழ் கூடும். இன்க்ரிமென்ட்,ப்ரமோஷன்,அவார்டு,ரிவார்டு கூட கிடைக்கலாம்.
ஆனால் இவருக்கு அஷ்டமாதிபத்யமும் இருக்கிறதால திடீர்னு ஒரு மரண செய்தி வரலாம். மூத்த சகோதரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். பெருத்த லாபத்தை எதிர்பார்த்திருந்த மேட்டர்ல திடீர்னு பல்பு வாங்கலாம்.
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 3-5-7 பாவங்கள் மீது விழுவதால சிட்டிக்குள்ள அதிகமா ட்ராவல் பண்ணுவிங்க. உரிய பலனும் கிடைக்கலாம். இளைய சகோதரம் ஒத்துழைக்கும். அவிகள்ள ஆராச்சும் அன் மேரீடா இருந்தா கல்யாணம் -கார்த்தின்னு நடக்க வாய்ப்பிருக்கு. அல்லது கண்ணாலம் நடந்து வேலை /தகராறு காரணமா பிரிஞ்சிருந்தா ஒன்னு சேருவாய்ங்க.
உங்க புத்தி ரெம்ப சூட்சுமமா வேலை செய்யும். பெரீ மன்சாளுக்கெல்லாம் ரோசனை சொல்லி சபாஷ் வாங்குவிங்க. குழந்தைகள் தொடர்பான திட்டமிடல்கள் வெற்றியடையும்.எத்தனை கமிட்மென்ட்ஸ் இருந்தாலும் சரி மனைவிக்கு 3கிராம் தங்கமாவது வாங்கி கொடுப்பிக. அவிக ஒத்துழைப்பு ப்ரைட்டா இருக்கும்.
பரிகாரம்:
மரண கானா சிடி போட்டு கேளுங்க. டெத் எதுனா நடந்தா “கடேசி” வரை போய் வாங்க. வியாழ கிழமை உ.விரதம்,மவுன விரதம் சேர்த்து இருங்க. ( அல்லது புனர்வசு -விசாகம் -பூரட்டாதி நட்சத்திரங்கள் ஓய்வு நாள்ள வரும் போது பயன் படுத்திக்கங்க)
6.கன்னி:
மிதுனம் உங்களுக்கு ஜீவன ஸ்தானம். பொறுப்பு அதிகரிக்கும். நிர்வாக, நிதி துறைகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் வரலாம். வட்டி மேல ஆசை பிறக்கும் (வேண்டாம்) பொன் பொருள் ஹேண்டில் பண்ணும் போது சாக்கிரதை. திடீர்னு பெரியவுக கை விட்டுருவாய்ங்க.
குரு உங்களுக்கு 4-7 க்கு அதிபதி. கண்ணாலமானவுக மனைவி – அம்மா மத்தியில மாட்டிக்கிட்டு ரெம்ப டார்ச்சர் ஆகவேண்டி வரலாம். அதுவும் இவிக பண்ற லொள்ளு வேலை -உத்யோகம் -வியாபாரத்துல உங்க கவனம் சிதறிப்போற அளவுக்கும் போகலாம்.
வீடு -வாகனம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் , பையிங் -செல்லிங்ல ,மராமத்துல இறங்காதிங்க. கல்வி மேட்டர் எதிர்பாராவிதமா ஒர்க் அவுட் ஆகும். (பரீட்சை ஹாலுக்கு போயி எழுத முடிஞ்சா)
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 2-4-6 பாவங்கள் மீது விழுவதால ஒங்க பேச்சு ஒங்களுக்கே “அட” ங்கற ரேஞ்சுக்கு இருக்கும். சனம் உங்க பேச்சுக்கு மயங்குவாய்ங்க. ரெம்ப காலத்து பற்று-வரவெலாம் செட்டிலாகும் ( ரெவின்யூ மேட்டர்ஸ்) என்னதான் அம்மா – மனைவி எலி தவளையா மாறி மாத்தி மாத்தி தண்ணிக்கும்-தரைக்கும் இழுத்தாலும் இந்த டக் அஃப் வார்ல குடும்பத்து மேல ஒரு வித அட்டாச் மென்டே வந்துரும்னா பாருங்க.
கடன் கூடிக்கிட்டே போகும். திடீர் திடீர்னு ஹெல்த் தகராறு பண்ணும். திடீர்னு ஒரு எதிரி முளைப்பார். அவர் பூணூல் போட்ட சாதிகாரரா இருக்கலாம் அ மேலதிகாரி.
பரிகாரம்:
உங்க ஆஃபீஸ் பேக் ,லேப் டாப் கவர் ,டேபிள் க்ளாத், மவுஸ்,பேனா இதெல்லாம் மஞ்சள் நிறத்துல இருக்கிறாப்ல அரேஞ்சு பண்ணிக்கங்க. விட்டா டேபிள் கண்ணாடி கீழே ராகவேந்திரர் போன்ற குருக்களின் படத்தை வச்சுக்கங்க.(அல்லது டேபிள் மேல)

7.துலாம்
மிதுனம் உங்களுக்கு பாக்ய ஸ்தானம். பொறுப்பு அதிகரிக்கும். இங்கே குரு வர்ரதால அப்பா/மாமனார்/மேலதிகாரி/ஊர் பெரிய மனிதர்/அப்பா வழி சொத்து ,உங்க முதலீடு ,சேமிப்பு வங்கி வகையில அனுகூலம் ஏற்படும். பக்தி அதிகரிக்கும்.கோவில் குளம்னு போய் வருவிங்க.
குரு உங்களுக்கு 3-6 க்கு அதிபதியாவும் இருக்கிறதால மேற்படி விஷயங்களில் அனுகூலம் ஏற்படுவதோடு அவிக ஆரோக்கியம் பாதிக்கலாம் உங்களோடு விரோதம் ஏற்படலாம். சிலர் கோர்ட்டுக்கு கூட போக வேண்டி வரலாம். சிலர் கடன் வாங்கி சொத்து வாங்கலாம். சிலர் சொத்தை அடகு வச்சு கடன் வாங்குவாய்ங்க. இது காரணமா அல்லல் அலைச்சல் ஏற்படலாம் .இந்த அலைச்சலுக்கு உங்க ஓவர் கான்ஃபிடன்ஸ்,இளைய சகோதரம் காரணமா இருக்கலாம்.
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 1-3-5 பாவங்கள் மீது விழுவதால வெளியுலகத்துல என்னதான் டென்ஸ் இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு தெளிவு – தீர்வுக்கான திட்டமிடல் இருக்கும். ஞா சக்தி அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கைகள் எடுப்பிங்க. என்னதான் பிரயாண அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் காரிய ஜெயமும் உண்டு. உங்கள் பெயர் -புகழ் கூடும். குழந்தைகள் விஷயத்துல குதூகலம் ஏற்படும்.
பரிகாரம்:
சேமிப்பு ,சொத்து வாங்குதல்,முதலீடு விஷயத்துல மொதல்ல சின்ன அமவுண்டு கடனா வாங்கி வேலைய ஆரம்பிங்க. இது தொடர்பான டாக்குமென்ட்ஸை கடன் வாங்கின காசுல வாங்கின மஞ்சள் நிற ஃபைல் அல்லது பையில போட்டு வைங்க. கோவில் குளம்னு போகும் போதும் இதே ஃபார்முலாவை (கடன்) ஃபாலோ பண்ணுங்க.

8.விருச்சிகம்:
மிதுனம் உங்களுக்கு ஆயுள் ஸ்தானம். இதனால இளைஞர்களுக்கு வயிறு தொடர்பான ,நடு வயதினருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தனிமை தகிக்க செய்யும். அபராதம் கட்ட வேண்டி வரும். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். மனைவி , பிள்ளைகளின் செயல்பாடு வேதனையை தரும். மரண செய்தி வரலாம். வீண்பழி விழலாம். எல்லா கதவும் படக்குனு லாக் ஆகிரும் .ஒடனே பாய்ஞ்சுராதிங்க.பொறுமை கடலினும் பெரிது.
குரு உங்களுக்கு 2-5 க்கு அதிபதியாவும் இருக்கிறதால பொன் ,பொருள் இழப்பு ஏற்படலாம். பேச்சுவார்த்தைகளில் தேக்கம் – சீன் ரிவர்ஸ் கூட நடக்கலாம். குடும்பத்தினர் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பது வீண். கண் பார்வை பாதிக்கப்படலாம்.
சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்சனாயிருவிங்க. அவப்பெயர் வரலாம். தவறான யோசனைகள் பிறக்கும். அவற்றை செயலாக்கினால் விளைவுகள் விபரீதமா இருக்கும். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பதை கவனத்தில் வைக்கவும்.
பார்வைகள்:
மிதுன குருவின் பார்வை 12-2-4 பாவங்கள் மீது விழுவதால சுப செலவுகள் அதிகரிக்கும்.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கற பழமொழிக்கு உதராணமாயிருவிங்க. தாய்,வீடு,வாகன வகையில முன்னேற்றம் காணலாம். வெளியுலகத்துல என்னதான் டென்ஸ் இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு தெளிவு – தீர்வுக்கான திட்டமிடல் இருக்கும். ஞா சக்தி அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கைகள் எடுப்பிங்க. என்னதான் பிரயாண அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் காரிய ஜெயமும் உண்டு. உங்கள் பெயர் -புகழ் கூடும். குழந்தைகள் விஷயத்துல குதூகலம் ஏற்படும்.
பரிகாரம்:
காசு பணம் தங்கம் கையில வச்சுக்காதிங்க. வியாழன் அல்லது புனர்வசு/விசாகம்/பூரட்டாதி நட்சத்திரங்களில் மவுன விரதம் +உண்ணாவிரதம் இருங்க( இயற்கை வைத்திய முறைப்படி – ஆஃப்டர் கன்சல்ட்டிங் யுவர் ஃபேமிலி டாக்டர்) . முடிஞ்ச வரை கடன் வாங்காதிங்க. வாங்கியே தீரனும்னா வங்கி கடன் பெஸ்ட்.
9.தனுசு:
மிதுனம் உங்களுக்கு 7 ஆவது இடம். இங்கே குருவருவது நல்லதுதான். இதனால் அன்மேரீடா இருந்தா மேரேஜ் நடக்கும். ஆல் ரெடி மேரீட்னா தம்பதிகளிடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.ஆனால் கணவன்/மனைவிக்கு உடல் நலம் பாதிக்கலாம்.
குரு உங்களுக்கு 1-4 பாவங்களுக்கு அதிபதிங்கறதால மொத பாராவுல சொன்ன பலன் இன்னம் கொஞ்சம் ப்ரைட்டா நடக்கும். தாயுடன் நல்ல தோழமை ஏற்படலாம்.மனைவிங்கறவ தாய்க்கு பின் வந்த தாயேங்கற தத்துவத்தை புரிஞ்சுக்குவிங்க.வீடு,வாகனம்,கல்வி மேட்டர்ல மனைவி -மனைவி வழி உறவினர் உதவி கிடைக்கலாம். மனைவி தொலை தூர கல்வி பயில முடிவு செய்யலாம்.
பார்வை:
குருவின் பார்வை உங்க ராசி மற்றும் 3 – 11 ஆம் பாவங்களில் விழுது. இதனால முகத்துல ஒரு களை ஏற்படும். ஞா சக்தி அதிகரிக்கும். எதையும் ப்ளான் பண்ணி செய்விங்க.பக்தி அதிகரிக்கும். மனசுல ஒரு வித பீதி பயம் இருக்கும். இளைய /மூத்த சகோதரம் முன்னேற்றம் காணும். பொன் பொருள் ஈட்டுவீர்கள்.

10.மகரம்:
மிதுனம் உங்களுக்கு 6 ஆவது இடம். இங்கே குருவர்ரது நல்லதில்லை. இதனால சத்ரு,ரோக ருண உபாதைகள் தான் ஏற்படும். தங்கம் அடகு வைக்கவேண்டி வரலாம். அல்லது பொன் பொருளால் விவகாரம் ஏற்படலாம்.
இவரு உங்களுக்கு 3-12 பாவங்களுக்கு அதிபதி. குரு சகோதராதிபதியா இங்கே நிக்கிறதால காது நோய் வரலாம். இளைய சகோதரம் நோய்வாய்ப்படலாம். அல்லது அவிகளோட உங்களுக்கு மோதல் ஏற்படலாம். வித் இன் தி சிட்டி ட்ராவல் பண்ணும் போது சிறு விபத்து நடக்கலாம் . அல்லது அபராதம் கட்டவேண்டி வரலாம். சக வாகன ஓட்டியோட முட்டி மோதவேண்டி வரலாம்.
குரு விரயாதிபதியா இங்கே நிக்கிறதால ஒரு கடன் விவகாரத்துல திடீர்னு ப்ரஷர் ஏற்பட்டு அது பைசலாகாலம். வெளிப்பட்ட நோய் முழு குணமடையும். ஒரு எதிரியின் கதை க்ளோஸ் ஆயிரும்.
பார்வைகள்:
குரு 10-12-2 ஆகிய இடங்களில் படுது. இதனால பணப்புழக்கம் அதிகரிக்கும். நீதி,நிர்வாக பிரிவுக்கு ட்ரான்ஸ்ஃபர் வரலாம். மதம் சார்ந்த நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டி வரலாம். சுப செலவுகள் அதிகரிக்கும் . அப்படி இப்படி வாழ்ந்துட்டு வந்தவுக “முறையான” வாழ்க்கைக்கு மாற தவிப்பிங்க. வாக்பலிதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாத்துவிங்க. வருமானம் கூடும். குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம்:
தேவையே இல்லின்னாலும் இளைய சகோதரத்துக்கிட்டே கடன் வாங்குங்க. (சின்ன அமவுண்டு) அல்லது கொடுங்க .சீசன் டிக்கெட்டோ -வண்டிக்கு பெட் ரோல் போடறதோ கடன் வாங்கின காசுல போடுங்க. தங்கத்தை கையிலயோ வீட்லயோ வச்சுக்காதிங்க. கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் எதுனா இருந்தா அதுல டெப்பாசிட் பண்ணிருங்க.வேளைக்கு சாப்பிடுங்க. எளிதா டைஜஸ்ட் ஆகக்கூடியதை மட்டும் சாப்பிடுங்க.
11.கும்பம்:
மிதுனம் உங்களுக்கு 5 ஆவது ராசி. இங்கே குரு வர்ரது நல்லதுதான். ஆனால் ஆண் குழந்தைய எதிர்பார்த்துள்ளவர்கள் மட்டும் ஏமாற்றம் அடைவீர்கள். உங்க புத்தி ரெம்ப சூட்சுமமா வேலை செய்யும். பெரீ மன்சாளுக்கெல்லாம் ரோசனை சொல்லி சபாஷ் வாங்குவிங்க. குழந்தைகள் தொடர்பான திட்டமிடல்கள் வெற்றியடையும்.அதிர்ஷ்டம் கை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் சரளம்.
குரு உங்களுக்கு 2-11 க்கு அதிபதி. இரண்டுக்கு அதிபதியா இவர் 5 ல வர்ரதால டிப்,லாட்டரி கணக்கா ஒரு உபரி வருமானம் ஏற்படலாம். சம்பள உயர்வு,இன் க்ரிமென்ட்,ரிவார்ட் கிடைக்கலாம். உங்க குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்ங்கற பழமொழிக்கு ஏற்ப சிறக்கும். ஏற்கெனவே குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு அடுத்த குழந்தை பிறக்க வாய்ப்பு, மொத முறையா கர்பமடைபவர்களுக்கு இரட்டை குழந்தை கூட பிறக்கலாம்.
பார்வை:
குரு பார்வை 9-11 பாவங்களின் மீதும் உங்க ஜன்ம ராசி மீது படியுது. வெளி நாடு செல்ல திட்டமிட்டு வந்தவர்களுக்கு க்ளியரன்ஸ் கிடைக்கும். தூர தேச தொடர்புகள் லாபம் தரும். புதிய ,கூடுதல் முதலீடுகளுக்கு காலம் கனியும். அப்பாவழியில வழிகாட்டுதலும் உதவியும் கிடைக்கும். சொத்து விவகாரங்களில் தீர்வு ஏற்படலாம். உபரி வருமானத்துக்கு வழி ஏற்படலாம். மூத்த சகோதர வகையில உதவி கிடைக்கலாம். ஜன்ம ராசி மீதான பார்வை பக்தியை பெருக்கும். ஞா சக்தி அதிகரிக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும்.
பரிகாரம்:
தேவையில்லை. ஆனால் பேராசை வேண்டாம். படக்குன்னு மனைவிக்கோ குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படலா.
12.மீனம்:
மிதுனம் உங்களுக்கு 4 ஆவது ராசி. இங்கே குரு வர்ரது நல்லதில்லை. இதனால தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவில் சிக்கல் ஏற்படலாம். இடமாற்றம் ஏற்படலாம். நடுவயதை கடந்தவர்களுக்கு இதய படபடப்பு ஏற்படலாம்.
குரு உங்களுக்கு 1-10 பாவங்களுக்கு அதிபதி. ராசியாதிபதியா இவர் 4 ஆமிடத்துக்கு வர்ரது நல்லதுதான். இதனால நீங்க வீட்ல இருக்கிற நேரம் அதிகரிக்கலாம். படிப்பு அதிகரிக்கலாம். தாயுடனான கம்யூனிகேஷன் மேம்படலாம் (அப்படின்னா எந்தளவுக்கு வேலை வெட்டி இல்லாம போயிரும் ரோசிங்க)
ஆஃபீஸ் கோயரா இருக்கிற பெண்களுக்கு ஹவுஸ் வைஃபா மாறிரலாமாங்கற எண்ணம்கூட பிறக்கலாம்.( கண்ட் ரோல் யுவர் செல்ஃப்) .ஜீவனாதிபதியா இவர் 4 ஆமிடத்துக்கு வர்ரதால வீடு கட்டவோ -மராமத்து பண்ணவோ இறங்கிருவிங்க (வேண்டாம்) வண்டி வாகனம் ரிப்பேர் செலவை எதிர்பார்க்கலாம்.
பார்வை:
குரு பார்வை 8-10-12 ராசிகளில் படியுது. ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் டேக் கேர். நோ எக்ஸைட்மென்ட்ஸ் எப்பவும் சிகிச்சைக்கு அருகாமையில இருங்க. யூத்து பீசா,பர்க்கர்னு வெளுத்து கட்டறதை நிப்பாட்டுங்க.
செய்ற வேலையில மூஞ்சி முலாஜா பார்க்காதிங்க. கியாரண்டி ஷ்யூரிட்டில்லாம் வேண்டாம். கொஞ்சம் ஆர்த்தடாக்ஸா மாறுவிங்க. தெண்ட செலவுகள் குறைந்து உருப்படியான செலவுகள் பண்ணுவிங்க.
பரிகாரம்:
அம்மாவை மஞ்ச சேலை கட்டிக்கிட்டு பிரதி வியாழன் சிவலிங்கத்துக்கு பூஜை பண்ணச் சொல்லுங்க. ( வீட்லயே வாங்கி வச்சுக்கலாம்.ஆனால் சிவலிங்கம் குடும்பத்தலைவரோட ஆட்காட்டி விரல் அளவே உசரம் இருக்கனும்). வீட்டுகதவுக்கு பெயிண்ட் பண்ண வேண்டி வந்தா மஞ்ச பெயிண்ட் அடிச்சுருங்க. இல்லாட்டி மஞ்ச ஸ்க்ரீன். கதவு மேல சிவலிங்கம் ஸ்டிக்கர். வண்டியோட நெம்பர் ப்ளேட்ல சிவலிங்கம் ஸ்டிக்கர்.

2012 குரு வக்ர பலன் ( அக்டோ.4 முதல் நவ 11 வரை)

அண்ணே வணக்கம்ணே !
நூல் பிடிச்சாப்ல போயிட்டிருந்தம் (நச் பரிகாரங்கள் தொடர்). ரெம்ப போரடிக்குது.அதனால கொஞ்சம் போல ஹிட்ஸை அள்ள குரு வக்ர பலனை 12 ராசிக்கும் தந்துரலாம்னு ஒரு ஐடியா.

நாம வெகு காலமா நம்பி உபயோகிக்கிற ஆந்திர பூமி -திருக்கணித பஞ்சாங்கப்படி 2012,அக்டோபர்,4 முதல் நவம்பர் 11 வரைக்கும் குரு வக்ரமா சஞ்சாரம் பண்ணப்போறாரு.

ராகு கேதுக்களை தவிர மத்த கிரகங்கள் க்ளாக் வைஸ் தான் சஞ்சரிப்பாய்ங்க. சில நேரம் ஆன்டி க்ளாக் வைஸ் சஞ்சரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ( பிரபாகரனை கைது செய்து கொண்டு வரனும்னு தீர்மானம் போட்ட அம்மா இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா சில நடவடிக்கைகள் எடுக்கலியா அப்படி)

இந்த வக்ரத்துலயும் சுப கிரகத்துக்கு பவர் சாஸ்தி. ஒரு மொள்ளமாரி தண்ணி போட்டாலும், கஞ்சா அடிச்சாலும் அவனோட பிஹேவியர்ல பெருசா வித்யாசம் வந்துராது. இதுவே ஒரு நெல்லவன் திடீர்னு தண்ணி போட்டா அவன் கேரக்டர் தலைகீழா மாறிரும்லியா அப்படி..

வக்ர சஞ்சாரத்தோட நேச்சரை இன்னொரு உதாரணம் மூலமா சொல்ல ட்ரை பண்றேன். பந்தியில உட்கார்ந்திருக்கிங்க. சப்ளை பண்றவர் அல்லாருக்கும் லட்டு வச்சுக்கிட்டே போறாரு. பக்கத்து இலைக்காரனுக்கு ஒன்னுக்கு ரெண்டா வச்சுட்டாரு. உங்க இலையை மிஸ் பண்ணிட்டாரு.

போனவர் அப்படியே போயிட்டா பக்கத்து இலைகாரனுக்கு ஒன் ப்ளஸ் ஒன்னு கிடைச்சது கிடைச்சதுதேன். உங்களுக்கு லட்டு கிடைக்காம போனது போனது தேன்.

சப்போஸ் போனவர் போனவழியே திரும்பி வர்ராருன்னு வைங்க. அப்பம் உங்க இலையில லட்டு இல்லாததை கவனிச்சு லட்டு வைக்க ஒரு சான்ஸ் இருக்கு.அதே போல ஒத்திக்கு ரெட்டியா வச்சிருக்கிற பக்கத்து இலை ஆசாமியை நக்கலா நாலு வார்த்தை கேட்கவும் வாய்ப்பிருக்கு.

கிரக வக்ரத்தை இப்படித்தான் புரிஞ்சுக்கனும்.

இதுல இன்னொரு சமாசாரம் என்னடான்னா குரு -சனி ரெண்டு பேரும் கவுன்டர் பார்ட்ஸ். குரு பிராமணர்கள்,உயர்சாதியினர்,ஆட்சியாளர்களை குறிப்பிடும் கிரகம்.சனி பிற்படுத்தப்பட்டோர்,ஊழியர்கள், உடல் ஊனமுற்றவர்கள்,தொழிலாளர்களை குறிப்பிடும் கிரகம்.

ஏற்கெனவே சனி உச்சம் பெற்றிருக்காரு. இதனாலதேன் நிலக்கரி ஊழல் வெடிச்சுருச்சு. (சனின்னா கருப்பு )
இதுல குரு வேற வக்ரமாயிட்டா ரூலிங் -ரூல்ட் க்ளாஸ் மத்தியில டக் அஃப் வார் ஆரம்பிச்சுரும். நாடு தழுவிய தொழிலாளர் புரட்சி வெடிச்சாலும் வெடிக்கலாம். ஆட்சியே ஃபணால் ஆனாலும் ஆகலாம்.

நாடு எக்கேடு கெட்டு போனா என்ன என் ராசிக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்கய்யாம்பிங்க.சொல்லிர்ரன்.

குரு ரிஷபத்துக்கு மாறிவந்த நாள் முதலா குரு காரகங்கள்ள உங்களுக்கு ஓரளவாச்சும் அனுகூலம் ஏற்பட்டிருந்தா இந்த வக்ர காலத்துல அலார்ட் ஆயிக்கங்க. ஓரளவுங்கற வார்த்தைய உபயோகிக்க காரணம் குரு+கேது சேர்க்கை தான்.

இந்த வக்ர காலத்துல கீழே தந்திருக்கிற குரு காரகங்கள்ள மூக்கை நுழைக்காதிங்க.

ஒரு வேளை குரு ரிஷபத்துக்கு மாறி வந்த நாள் முதலா குரு காரகங்கள்ள உங்களுக்கு பிரதிகூல பலனே ஏற்பட்டிருந்தா இந்த குரு வக்ர காலத்துல குரு காரகங்கள்ள ஒரு ஜாக்பாட் உங்களுக்கு காத்திருக்கு.

குருவோட காரக்த்வம்: ( குருவோட பேட்டை)

ஆருக்கெல்லாம் குரு அனுகூலமா இருக்காரோ அவிக இந்த பேட்டையில புகுந்து விளையாடலாம். ஆருக்கெல்லாம் குரு சரியில்லையோ அவிக இந்த பக்கம் ஒதுங்காம இருக்கிறது நல்லது.

(குருவே சொல்றாருங்கோ.. ) நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

குருவுக்குரிய பரிகாரங்கள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.