சோதிட கேள்வி – பதில் : 1

அண்ணே வணக்கம்ணே !
பதிவு போட நேரமில்லை – ஏதோ நாலுவரியில பதில் சொல்லி ச்சூ காட்டிவிட்டுரலாம்னு ஸ்கெட்ச் போட்டா சனம் தூள் பண்ணிட்டாய்ங்க. நம்முது ஒரு பஞ்ச் இருக்கு. அஞ்சு ரூவா காயிதம் எந்த ஊரு போனாலும் அஞ்சு ரூவாதேன். ஆத்தா நம்ம தலை எழுத்தை இதான்னு முடிவு பண்ண பிற்காடு மாத்த முடியுமா என்ன?

நம்ம ஜானகிராமன் சார் நான் சொன்னாப்லயே ஆஜராயிட்டாரு. வாக்காளர் பட்டியலை பக்கத்துல வச்சுக்கிட்டு பேரை செலக்ட் பண்ணிக்குவாரு போல.

காமலோகம் டாட் காமுக்கு போக வேண்டிய கேள்விகளையெல்லாம் அனுப்பி வச்சிருக்காரு. அன்னாருக்கு ஒரு குறிப்பு :

நம்மை இந்த ரேஞ்சுக்கு கொண்டு வந்தது ராம நாமம் தேன்.ஆனால் அந்த ராம நாமம் தந்த ஒரு சில வசதிகள்/அசதிகளாலே இடையிடையில் அந்த நாமம் மறந்து போகுது. அந்த மறதியை ஒழிக்கவே என் ராமன் இந்த ஜானகிராமனை ச்சூஸ் பண்ணிக்கிட்டாப்ல இருக்கு.

ம……….ற………..க்க முடியலிங்கண்ணா..

வந்த அத்தீனி கேள்விகளுக்கும் இன்னைக்கே பதில் தரனும்னா காலண்டர் கோவிந்தா -ஜோதிடம் 360 கோவிந்தா – ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கோவிந்தா. அதனால ஒரு நாளைக்கு 5 கேள்விகள் வீதம் பதிலளிக்கிறேன்.

இனி கேள்விகளுக்கான பதில்கள்:

கேள்வி: ஸ்ரீனிவாச ஐயங்கார்( ஜானகிராமன்)

ஏண்டா அபிஷ்டு!
நோக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை. இப்ப பாரு… மனுஷாள் எல்லாரும் கஷ்டமான கேள்வியா கேட்டு உன் மண்டையில் இருக்குற கொஞ்சம் நஞ்சம் மூளையவும் குழப்பி விடுறா.

மண்டை குளம்பினா சொஸ்தப்படுதிரலாம். நாண்டுக்கிட்டா…. யார் பொறுப்பு?

கஷ்டமான கேள்விகளுக்கு என்ன பண்ணப்போறேழ்? அல்லது வழக்கம் போல் பதில் சொல்லாம அப்படியே விட்டுருடாம்பி. இதுக்கு நீ கஷ்டமான கேள்விகளை பப்ளிஷ் பண்ணாமலேயே விட்டிருக்கலாம். ஏதோ உம்மேல உள்ள அக்கறைல சொன்னேண்டாம்பி. கேழ்க்குறதும் கேழ்க்காமல் போறதும் உன் இஷ்டம்டாம்பி. புரியறதா?

பதில்: வாங்க அய்யங்கார் !
கடேசியில நம்ம நிலைமை எந்திரன் வசீகரன் மாதிரி ஆயிருச்சு. நாம உருவாக்கிவிட்ட ரோபோ (அய்யர் தி கிரேட்) வில்லன் கிட்டே மாட்டி நம்மை லொள்ளு பண்ணுது.

நம்ம மண்டையில வைரம்,கண்ணாடிக்கல்லுனு கலந்து கட்டியா இருக்கு. அதை கலக்கிவிடறச்ச நானே மறந்து போன வைரம்லாம் தரிசனம் தருது. ஜா.ரா ! உங்க கரிசனத்துக்கு நன்றி.

கேள்வி: Senguttuvan:
Pl analyse Autism astrologically. What reasons/or combination of planets responsible for the Autism. Is there any astrological remedies for these. If a child born with Autism is there any cure when the child grows as the changes in dasa and transit of planets?..

பதில்: அய்யா வணக்கம்.ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு ஆன்லைனில் பொருள் தேடியபோது கிடைத்தவை
autism : தற்காதல் நோய் , தற்புனைவு ஆழ்வு .
autism : தற்பெருமைச் செயல் .
autism : மதி இறுக்கம் .
autism : மதியிறுக்கம் .

இதெல்லாமே மனம் தொடர்பானது என்பதால் மனோகாரகனாகிய சந்திரன் பாதிக்கப்படுவதால் ஏற்படலாம். ( உம்.சந்திரன் நீசம் பெறுவது, கேதுவுடன் சேர்க்கை) இதற்கு சந்திரன் தொடர்பான பரிகாரங்களை செய்யவேண்டும்.

உ.ம்
1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி “பார்க்கலாம்” “பார்க்கலாம்” என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.(

எச்சரிக்கை:
சந்திரனுக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதை பார்த்து பரிகாரம் சொன்னால் நச்சுன்னு ஒர்க் அவுட் ஆகும். உ.ம் சந்திரனுக்கு அஷ்டமாதிபத்யம், சந்திரன் எட்டில் நிற்றல் ,எட்டுக்கதிபதியுடன் சேர்தல் மாதிரி கிரக ஸ்திதி இருந்தால் மரணம் தொடர்பான பரிகாரங்கள் செய்யவேண்டும். அதாவது அனாதை பிணங்களை புதைக்க உதவுவது போன்றன.

கேள்வி: RPM
kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/
rpuratchimani@gmail.com
Pls answer these questions.
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_09.html

பதில்: வாங்க புரட்சிமணி ! ஆப்புன்னா ஆப்பு.செமை ஆப்பு .ஏதோ ஒரு காலத்துல ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேங்கற தலைப்புல நாம போட்ட பதிவை கோட் பண்ணி தொடர்பதிவுக்கு இழுக்கறிங்களே.. அல்லாத்துக்கும் நிச்சயம் பதில் தரேன்.. ஜனவரி 15 க்கு பிறவு.

கேள்வி: ISMAIL
ismaa@sify.com
பிறந்த இடத்திலிருந்து நீண்ட தொலைவில் புதிய சூழலில் வாழ்க்கை அமைந்தால் ஜாதக பலன்கள் மாற வாய்ப்பு உண்டா?.
அதே போல ஒரு ஜாதகனால் குடும்பத்தில் எதாவது பிரச்சினை ஏற்படும் என்று இருந்தால், அந்த ஜாதகனை காப்பாற்ற ஜாதகனால் என்ன பிரச்சினை வருமோ அதனை குடும்பத்தில் உள்ள ஒருவர் தாமாக முன்வந்து ஏற்படுத்திக்கொண்டு பரிகாரமாக செய்ய முடியுமா?

பதில்:
சர்வ நிச்சயமாக மாறும். நீங்க சொந்த ஊர்ல இருக்க – சாதி சனத்தோடு தொடர்போடு இருக்க குடும்பத்தோடு வசிக்கவே ஜாதகத்துக்கு “கண்ணை கட்டிருது” . ஜாதகத்துல உள்ள இந்த அம்சங்களை நாம வாலண்டியரா கிவ் அப் பண்ணா ஐ மீன் பிறந்த இடத்திலிருந்து நீண்ட தொலைவில் புதிய சூழலில் வாழ்க்கை அமைந்தால் ஜாதக பலன்கள் மாற வாய்ப்பு ஏற்படுகிறது.

லக்னாதிபதி விரயம் , அஷ்டமம் மாதிரி அமைப்புக்கு இது நல்ல பரிகாரம். உங்க ஊரை,சாதி சனத்தை பொருத்தவரை நீங்க “இல்லாமயே” ஆயிர்ரதால அந்த மாதிரி நிலைமை வருவதை இது தடுக்கும்.

உண்மையான பரிகாரம்னால் நடக்கப்போற தீமையை நாமே தவணையில / ஒன் டைம் செட்டில்மென்ட்ல ஏற்படுத்திக்கிறதுதான். உ.ம் விபத்து இத்யாதியை தவிர்க்க ரத்ததானம் . ஜாதகரால் கடன் ஏற்படனும்னு இருக்கு. நீங்க முன் கூட்டி ஏற்படுத்திக்கலாம்.இதான் அசலான பரிகாரம்.
_______________

கேள்வி: விமலாதித்தன்
vimalathithunsb@gmail.com

கேள்வி: ஐயா , சனி தசை யாருக்கு நன்மை செய்யும்? லக்கினத்தில் கேது மற்றும் 7ல் ராகு அமைந்தால் சனி தசை, ராகு தசை போல் அமையுமா?

பதில்:
முழு ஜாதகத்தை கண் முன்னே வச்சுக்கிட்டு அல்லாடினாலே 20 முதல் 30 % புட்டுக்குது . இருந்தாலும் சொல்றேன்.

லக்னத்துக்கு சனி யோக காரகன்/சுபனாக இருந்து கேந்திர கோணங்களில் இருந்தால் கு.ப 6,8,12 ல் இல்லாமல் இருந்தால் நன்மை தரலாம்.

லக்னத்துக்கு சனி பாவியா இருந்து நீசம்/ 6,8,12 ல் நிற்பது மாதிரி எதுனா நடந்திருந்தாலும் நன்மைய தரலாம்.

சனி ராகுவை போல பலன் தருவாருன்னா காரகங்களை கணக்கிலெடுத்துக்கங்க. உ.ம் சனி இரும்பு தொழிலில் மேன்மை தருவார்னா ராகுவும் தரலாம்.

கேது மற்றும் 7ல் ராகு அமைந்தால் சனி 1-7 ல் நின்ற மாதிரியான பலன்கள் ஏற்படலாம்னு புரிஞ்சுக்கனும். உ.ம் மந்த புத்தி ,மந்த தன்மை, /துஷ்ட களத்ரம் ,அரூப களத்திரம் ,களத்ர ஹீனம்

எச்சரிக்கை:
கேள்விகள் குவிந்திருப்பதால் ( சைட்ல ஓகே பண்ண கமெண்ட்ஸ் ட்ரெய்லருதேன். மெயில்ல வந்தது மஸ்தா கீது நைனா. அல்லாத்துக்கும் இன்னைக்கே பதில் தரமுடியலை -ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவே முயற்சி செய்வேன்

தில்லு துரை நெம்பர்: ?

அண்ணா வணக்கங்ணா !
இன்னைக்கு ஒரு தில்லு துரைய அறிமுகப்படுத்தறேன். பேரு கார்த்திகேயன்.கன்னிமராலைப்ரரிங்கற பேர்ல வலைதளத்தை நடத்திக்கிட்டிருக்காரு. நம்ம ஊருதேன். அவரோட பதில்களை ச்சொம்மா படிச்சு வைங்க. நேரம் இருந்தா இங்கே அழுத்தி அவரோட வலைதளத்தையும் ஒரு நோட்டம் பாருங்க.

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

ட்ராவலர்.

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுஙக

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

கல்வியைவிட மாணவப்பருவத்தை விளையாட்டை மிகவும் எஞ்ஜாய் செய்தேன். , [மாலைமுழுதும் விளையாட்டுனு பாரதியார் சொன்ன விளையாட்டில்லிங்கோ) வகுப்புக்காகவும், பள்ளிக்காகவும் விளையாடியதை சொல்கிறேன்]வகுப்பை கட்டடித்து என்.டி.ஆர் சினிமா முதல்நாள் முதல்காட்சி, சினேகிதமான நண்பர்கள், ஸைட்டடித்தல்,வால்தனங்கள்.

இன்றைய மாணவர்களுக்கு என் ஆலோசனை:

படிப்பைத்தவிர, விளையாட்டு, கலை, ஓவியம் எதில் விருப்பமோ அதிலும் கவனம் செலுத்தி திறமையை கொண்டாடுங்கள். நண்பர்கள் வட்டம் மாணவப்பருவத்திலேதான் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல் அமையும். அதை கால விரயமின்றி கொண்டாடி அனுபவியுங்கள். பிற்காலத்திலே அவர்களையே நண்பர்களாக பெற்றாலும் மாணவப்பருவத்திலே இருக்கும் கொண்டாட்டம் இருக்காது. முழுமையாக அனுபவியுங்கள்.

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

இல்லை. நண்பர்களின் உதவியால்தான்.

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

இல்லை. மொபைல் போன் மூலம்தான் அறிமுகம். இப்போ கற்றுக்கொடுப்பது இந்த கேள்விகளை கேட்பவர்.

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

23 வயதிலே. இப்போதுதான் அடியே வைத்திருக்கிறேன்.

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

தானாகத்தான். அவன் வாழ்க்கையையே புரட்டிப்போடும். என் நிலையிலிருந்து கீழிறங்கிய சந்தர்ப்பங்கள் உண்டு.

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

இருந்ததில்லை. டிப்ஸ் சொல்லுமளவிற்கு அனுபவமில்லை.

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

நான் விரும்பிய பெண் என்னை விரும்பியதுண்டு. திருமணம் வேண்டாமென்ற முடிவோடிருந்ததால் அந்த பெண்ணிற்கு தூரமானேன்.[வீட்ல படிக்க யாருமில்ல] வீட்டிலே யாருமில்லாத ஒரு sunday நண்பனோடு வீட்டிலிருந்தபோது ஒரு பார்ட்டி வரும் அவகாசம் உருவாகி நண்பனை ஒரு ரூமிலே வைத்துவிட்டு மற்றொரு ரூமிலே க்ளைமேக்ஸ் தவிர்த்து…. ஏரியாவிலான திருமணமான பெண்ணோடும் அவ்விதமே…..

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

தெரியல.

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

கல்யாணத்திற்கு பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் வரதட்சினை கொடுக்கவேண்டிய நிலைகள் வரலாம்.

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

பொறுப்பற்ற சமூகமாகவேயுள்ளது. கொள்கைகளற்று பணம் ஒன்றே குறியாக அலைகின்றது. அறிவியல் வளர்ந்த நிலையிலும் மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ளது.

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

மேம்படவில்லை.யாருக்கும் யாரையும் பற்றி கவலையில்லை அக்கறையில்லை.

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சியில் மிரட்டுகிறது. ஆன்மீகம் சார்ந்தவற்றில் பர்தாபப்பட வைக்கிறது.

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

தன் தகுதிக்கும், தேவைக்கும் மேல் யாரும் எதையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும்.

16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

அவசியமே.

17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

நித்யானந்தா போன்றவர்களுக்கு உதவும் உபத்திரவமுமாகவும் மாறும். ஆன்மீகமே வேண்டாமென்பேன்.

18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

ஏக்கம்.

19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

இல்லை.

20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

சினிமா ரசனை இன்று முன்னேறி வருகிறது.

21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

வலையுலகத்தில் நான் கத்துக்குட்டி.

22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

இன்னுமில்லை.

23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

ஜோதிடத்தை நாடாதவன்.

24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

சில கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்க முடியவில்லையேயென்று நினைத்தேன்.

25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம் எதுனா இருந்தா சொல்லுங்க

இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

தில்லு துரை(கள்) : ஜானகிராமன் பதில்கள்

பேட்டி:
கேள்விகள்: சித்தூர்.முருகேசன்
பதில்கள்: திரு.ஜானகிராமன்

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

வாழ்வில் நிறைய அடிபட்டிருப்பதால் – என்னை ஒரு ” சிவனடியார் ” னு மக்கள் ஏத்துகிட்டா போதும்..

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

உண்மையில் அவர்கள் எனக்கு ஆதரவாக இல்லை.. அதுவே என்னை செம்மைபடுத்தியது…

18 வயதிலிருந்தே தனிக்குடித்தனம் தான்…

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

எவ்வளவோ விரும்பியும் – பெங்களூவில் சட்டம் ( 5 ஆண்டு திட்டத்தில் ) படிக்க சென்றும் எனது விதி அதை முடிக்க விடவில்லை. 3 ஆண்டுகளில் ஓடிவந்துவிட்டேன் ( படிக்க முடியாமல் அல்ல )

” காலத்தே பயிர் செய் என்பது போல.. இளமையில் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் தராது

படியுங்கள்.. படியுங்கள் .. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..”

பின்னால் விரும்பினாலும் கிடைக்காது…

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

நிச்சயமாக இல்லை.. படித்ததிற்கும் இன்றைய எனது வாழ்விற்கும் ஏழாம் பொருத்தம்.

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

இல்லை…ஒரு ஆண்டு காலம் ஒரு தனியார் கணிணி நிறுவனத்தில் படித்த அனுபவம்

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

18 வயதிலேயே ஆன்மிக வாழ்வில் நுழைந்தேன். எதோ இன்று வரை அந்த இறைவன் புகழ்பாடியே ஜீவனம் ஓடுகிறது.

வலைத்தளமும் பதிவரான அனுபவமும் – சற்றேறக் குறைய 6 மாதங்களே ஆகின்றன…

சுப்பையா வாத்தியாரின் வகுப்பறையை பார்த்து தான் இதுபோல நாமும் முயற்சித்தால் என்ன என்று

தோன்றியது..

ஒரு முகலாய நண்பர் பிளாகர் பற்றிய செய்திகளை சொல்ல அதன்பின் முயன்று கற்று இன்று ஒரு பதிவராக

இறையருளால் வலம் வருகிறேன்…

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

நாங்கள் படித்த காலத்திலேயே செக்ஸ் அறிவு என்பது உயர்நிலை பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இன்றைக்கு சொல்லவே வேண்டாம்.. இரு பாலரும் இதற்காக எதையும் தியாகம் செய்துவிடுகிறார்கள். இது உலக இயற்கை .. இதற்கு மேல் ஒன்றும் சொல்ல தோணவில்லை…

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே..

இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

ஆகா.. கஷ்டப்பட்டிருக்கிறேன். எனது முதல் குழந்தை பிறந்த சமயத்தில் அவனுக்கு பால் வாங்க கூட காசில்லாமல் அலைந்திருக்கிறேன்.. எனது லைப் ஒரு டிராஜடி

( உங்களுக்கு தான் பர்சனலாக எழுதியிருக்கேனே ? )

முதலில் கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சமயோசிதம் போல செய்யுங்கள்..

சும்மா மட்டும் இருக்காதீர்கள் – அது மனதையும் உடலையும் கெடுத்துவிடும்…

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

கால்ப் லவ் ? உண்டு .. பள்ளியில் படித்த காலத்தில் எனது சக தோழியின் மீது ஏற்பட்டிருந்தது..

அது காதலா என்றே தெரியாது… ஆனால் காதலித்தேன்.. பிறகு அவர் வேறு ஊருக்கும் சென்றுவிட்ட பிறகுதான்

அது காதல் அல்ல என்பது புரிந்தது..

சத்தியமா நம்புங்கப்பா.. சில்மிஷம் லாம் பண்ணலே – பண்ற வாய்ப்பு கிடைக்கலே..

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

நீங்கள் சொல்வது உண்மை.. காரணம் இன்றைய கலாச்சாரம்..

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

எனக்கென்னமோ ? பெண் சனத்தொகை குறையிறதனாலே பாதிப்பு என்பதை விட – கலாச்சார சீர்கேடால் தான் பாதிப்பு என்றும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டதாலும் + எல்லோரும் அஜீத், சூர்யாவையும், அனுஷ்கா, பாவனாவையுமே எதிர்பார்த்தால் ?

அதான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ? 32 வயதாகியும் திருமணமாகாத ஆண் + பெண் இருபாலரையும்..

எப்படியோ நாமெல்லாம் தப்பிச்சுட்டோம்…

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

மிகமிக ஏமாற்றமே அடைந்திருக்கிறேன்.. அதுவும் ஒரு ஆன்மிக பேச்சாளராக நான் சென்ற பல

இடங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பார்த்து வெறுப்பு தான் மிச்சம்..

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

சத்தியமாக மலிந்துவிட்டது…பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே…

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

இரண்டுமே..

என்னைப் பற்றி கவலைப்படும்போது – மிரட்டுகிறது..

உலகத்தைப் பற்றி நினைக்கும்போது – பரிதாபப்பட வைக்கிறது..

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

நீ வாழ பிறரை கெடுக்காதே…

16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

அவசியம் தான்.. இது தானே உலக இயக்கமே ? ஆனால் அதில் ஒரு வரையறையும் ஒழுக்கமும் வேண்டும்

17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

உதவி தான் .. அனுபவிக்காத எந்த ஒன்றின் மேலும் நமக்கு தீடிரென பற்று வரும்.. சோ.. அனுபவித்து

கழித்துவிட்டால் அதன்மீதான மோகம் தணியும்.. ( தணியுதா ? )

எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே – இது தான் ஆன்மீகம்

18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

ஒப்பிட விரும்பவில்லை –

அது காலத்தின் பரிணாம வளர்ச்சி..

19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

சத்தியமாக.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…

20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

உணவும் ஊறுகாய்க்கும் உள்ள வித்தியாசம் போல…

வாழ்க்கைக்கும – இவற்றிற்கும் வித்தியாசம் அறிவது நன்று..

21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

வலையுலகில் – இந்த இரண்டிலும் இன்னும் அனுபவம் ஏற்படவில்லை

22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

நிறைய சொல்லனும்.. வகுப்பறை, உஜிலாதேவி, அனுபவ ஜோதிடம், ஆண்டவன் அனுபூதி

வந்தேமாதரம், வசந்த மண்டபம், ஆகமக்கடல், கேள்வியும் நானே பதிலும் நானே, சித்த ஜோதிடம்,

அனுராதா, முத்துச் சிதறல்கள், பனித்துளி சங்கர், சிவக்குமாரன் கவிதைகள், ( அதனதன் பதிவர்கள் )

இன்னும் நிறைய – நல்லன சொல்லும் எல்லா சகோதர சகோதரி வலைப்பூக்களும்..

23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

எனது 34 வயது வரை நம்பியதில்லை.. கடந்த ௨ ஆண்டுகளாக நம்பத் துவங்கி + கற்கத் துவங்கி + கணிக்கவும் துவங்கியிருக்கிறேன்..

விசயம் இருக்கிறது… நடைமுறையில் ஒத்துப் போகிறது..

அனுபவ ஜோதிடமா ?

மொழியில் + எழுத்து நடையில் மாற்றம் தேவை…

சொல்ல வந்த விசயத்தை தெளிவாக சொல்ல வேண்டும்.. பெரும்பாலும் புரிவதேயில்லை

( எனக்கு அறிவு கம்மியோ ? ) எதையும் உருப்படியாக சொல்லி முடிப்பது போல தெரியவில்லை..

பாமரனுக்கும் புரியும்படி எழுத வேண்டும்.. முக்கியமாக ஆரம்பித்த விசயத்தை

முடித்துவிட வேண்டும்..

24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

அப்படியில்லை எந்த மனைவி இத்தனை கேள்விகள் கேட்டு எந்த கணவன் இத்தனை

பதில் சொல்லியிருக்கான் ? நிச்சயமாக அனுபவ ஜோதிடத்திற்கு நன்றி பாராட்டுகிறோம்..

எங்கள் மனதில் உள்ளவற்றை வெளிக்கொணர வாய்ப்பு தந்தமைக்கு நன்றி..

இதனால் மேலும் எங்களுக்கு ( எங்கள் உணர்வுகளுக்கு ஏற்ற ) நண்பர்கள் கிடைப்பார்களே ?

25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம்

எதுனா இருந்தா சொல்லுங்க

அப்பா தலை – இதை எங்கே போடறே ? ன்னு சொல்லிடப்பா ? அனுபவ ஜோதிடத்திலே

சில ஆப்சனை சேர்த்தா சொன்ன கண்டுக்கறதே இல்லை.. இனிமேலாச்சும் அதை செய்யுங்கப்பா ,,

இதை நீங்க பிரசுரிச்சீங்களா ? இல்லையானு தெரிஞ்சிக்கவே நான் ௭ தடவை உள்ளே வரனும்..

சோ.. நான் ஏற்கனவே கேட்டிருக்கும் பின் ஊட்டத்திற்கான மெயில் ஏற்பாடுகளை செய்யவும்.

பின் குறிப்பு – நீங்க கேட்கும் இந்த கேள்வி பதில் பகுதியை விளையாட்டா நினைக்காமா இதை பதிவர்களின் பயோ டேட்டா என்னும் அளவுக்கு செம்மையாக்குங்கள்… நன்றி.

இங்கு இதுபோல பதில் தர வரும் அன்பர்களும் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்

கொள்ளுங்கள்.

நன்றி – திருச்சிற்றம்பலம்

சுகுமார்ஜி கேள்விகளுக்கு சி.எம் பதில்

முதல்வர்னதுமே உங்களுக்கு அம்மா ஞா வந்திருக்கும். சமச்சீர் கல்வி, சட்டமன்ற கட்டிடம் தவிர்த்து பார்த்தா அம்மாவோட ஸ்டாண்ட் மத்த எல்லா மேட்டர்லயும் “வித்யாசமாவே” இருக்கு.

அதுலயும் இலங்கை மீது பொருளாதார தடை தீர்மானம் நெத்தியடி. தமிழின காவலர்கள் எல்லாம் “ஓய்வில்” இருக்க ( வேலையில இருக்கிறப்பயும் என்னத்த கிழிச்சாரு) அம்மான்னா அம்மாதான் நிரூபிச்சிருக்காய்ங்க.

தமிழக நதிகள் திட்டம் எஸ்பெஷலி எனக்கு ரெம்ப சந்தோசம். ஆனா இதை ஹைலைட் பண்ணி மத்த இலவசத்தையெல்லாம் 6 மாசம் தள்ளிப்போட்டிருந்தா நிதி நிலைமை சீராகியிருக்கும். ஹும் பத்தோட பதினொன்னா இருந்தாலும் அறிவிச்சிருக்காய்ங்களே சந்தோசம்.

இதை இளைஞர்களோட பங்களிப்போட ( இளைஞியரும் தேன்) முன்னெடுத்து சென்றால் தூள் பண்ணலாம். பார்ப்போம்.

இப்ப முதல்வரின் பதில்கள் பதிவுக்கு வந்துருவம். முதல்வர்னா ஆங்கிலத்துல C.M ங்கறோம். நாம Chittoor Murugesan. சந்திரபாபு மேல வழக்கு போட்டதுலருந்து மஸ்தா பேரு செல்லமா நம்மை CM னு குறிப்பிடுவதுண்டு.

ஆனால் நமக்கு அந்த பதவி மேல ஆர்வமில்லை. (சதா ..சென்டர்ல கையேந்திக்கிட்டு கிடக்கனும். பதவின்னா தாளி நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியானா கொஞ்சம் போல ட்ரை பண்ணி பார்க்கலாம்)

ஆக மொத்தத்துல இந்த பதிவின் தலைப்பு ஜெ பதில்கள் அல்ல. சித்தூர் முருகேசன் பதில்கள்.

நம்ம சுகுமார்ஜீ கேட்டிருந்த வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் இந்த பதிவுல பதில் தரப்போறேன்.

1) உங்கள் ஆப்பிரேசன் இந்தியாவுக்கான திட்டங்களில், குழந்தைகள் அவர்களின் கல்வி குறித்து எந்த திட்டமும் இல்லையே ஏன்?

என்னைப்பொறுத்தவரை அரசை விட பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் ,அவர்கள் கல்வி மீது அக்கறை அதிகம். சனத்துக்கு வேலை வாய்ப்பை கொடுத்து பசி பட்டினி வறுமைய ஒழிச்சுட்டா அவிக குழந்தைகளுக்கு என்னா மாதிரி படிப்பு வேணமோ அவிகளே டிசைட் பண்ணிக்குவாய்ங்க.

ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி ஒட்டு மொத்த மறுமலர்ச்சியை கொண்டு வந்துரும். அப்பம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நிறுவனங்கள் தன்னிச்சையா தோன்றும். என்னை கேட்டா ஒரு மேட்டரை சீரழிக்கனும்னா அதுல அரசாங்கத்தை நுழைச்சா போதும்.

ஆமை புகுந்த வீடும் அரசு புகுந்த துறையும் உருப்படாது.ஆனால் ஆ.இ.2000 திட்டத்தின் பிற்சேர்க்கையான எக்கானமி பேக்கேஜ்ல திட்டவட்டமா சொல்லியிருக்கேன்.

படிப்புங்கறது மாணவனுக்கு அவன் உடல்,மனம்,புத்தி,ஆத்மா, பெற்றோர்,குடும்பம்,தெரு,பேட்டை, மாவட்டம் ,மானிலம், நாடு,கண்டம்,உலகம் குறித்த புரிதலை தரனும். சுய நலம் பொது நலத்தை பொசுக்கும் நிலை வந்தா அதை துக்கியெறியற மோரல் ஸ்ட்ரெங்த் அவனுக்கு/அவளுக்கு கிடைக்கனும்.

18 வ்யசு முடியறதுக்குள்ள அவன் தன் சொந்தக்கால்களில் நின்று சொந்த முயற்சியில் தான் விரும்பிய கல்வியை பெற முடியனும். ( ஐ மீன் பார்ட் டைம் ஜாப்ஸ்)

2) ஒரே பிரபஞ்சம், நம்மைபொறுத்தவரை ஒரே பூமி, ஒரே சந்திரன் எனினும் ஒரே தளத்தில் இரண்டு நபர்கள் கூட இயங்க முடிவதில்லையே, இது வரமா இல்லை சாபமா?

இல்லை பாஸ்! ஒரே தளத்தில் இயங்கும் ஒரு பெருங்கூட்டமே இருக்கு. அவிகளுக்குள்ளே கம்யூனிகேஷன் இல்லை – ஒருங்கிணைப்பு இல்லை. தட்ஸால். இதை விஞ்ஞானப்பூர்வமா சோஷியல் நெட் ஒர்க் சைட்ஸும்
மெய் ஞான பூர்வமா தியானமும் விரைவிலேயே சாதிக்கும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.

3) இறப்பு என்பது நிச்சயமாக் இருந்தாலும் மனிதர்கள் மத்தியில் அடுத்தவனை குறித்து ஒரு நொடி சிந்தனையே இல்லாமல் தான், தனது என வாழும் மனிதர்கள்களை இயற்கை என்ன செய்கிறது? குறிப்பாக பழிவாங்குகிறதா?

இல்லிங்க பாஸ் . தன்னுடனான லின்கை கழட்டி விட்டுருது. அவன் ஒரு கூட்டில் அடைபட்டு போயிர்ரான். அவனோட வெற்றி, செல்வம், மகிழ்ச்சி கூட அவனை மகிழ்விக்க முடியாத நிலை ஏற்பட்டுருது. அவன் ஒரு தீவா இருக்கிறவரை அலைகள் அவனை அச்சுறுத்திக்கிட்டே இருக்கும். இந்த கடல்ல கரைஞ்சு போயிட்டான்னா எவ்ரி திங் வில் பீ ஓகே.

உயிரின் அடிப்படை உணர்வு பரவுதல். பொது நலம் இதை சாத்தியமாக்குது. சுய நலம் அவனை சுருக்கிருது. தான் உயிரோடதான் இருக்கமா? தன்னை சுத்தி உள்ளவுக உசுரோட தான் இருக்காய்ங்களாங்கற சந்தேகம் வந்துருது. அதனாலதான் கொல்லாம கொன்னுக்கிட்டு – தற்கொலை அல்லாத தற்கொலைகளை செய்துக்கிட்டு தவிக்கிறான்.

4) செக்ஸ் குறித்த விழிப்புணர்வுக்கு, உங்கள் திட்டம் என்ன? எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?

நீங்க திருச்சில இருந்து புறப்பட்டு சித்தூர் வரனம்னாலும் அதே நேரம் தான், நான் சித்தூர்லருந்து திருச்சி வரனும்னாலும் அதே நேரம்தான். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல புறப்பட்டா மையத்துல சந்திச்சுரலாம்.அதுவும் பாதியளவு நேரத்துல.

அதனால இரு முனைகளிலும் ஆரம்பிக்கனும். ஐ மீன் குழந்தையின் கர்ப காலம் தொட்டே தாய்க்கு வழங்கினா அது பாப்பாவுக்கும் போய் சேரும். இது ஒரு முனை. அடுத்து வயது வந்தவர்களுக்கும் இது தரப்பாட்டாகனும்.

5) சிவலிங்க ரூபத்தில் மறைமுகமாக உயிர் உறுப்புக்களை வணங்கவேண்டிய கட்டாயம் என்ன? அப்படியானால் செக்சில் ஒருவனோ, ஒருத்தியோ திளைப்பது சரியானதுதானே?

உயிர் உறுப்பு ? புதிய பிரயோகம். இவை உடலின் மையங்கள் மட்டுமல்ல. மனதின் மையங்களும் தான். நீங்க என்னதான் பம்பாடு, நாகரீகம்னு பம்மாத்து பண்ணாலும் உங்க மைண்ட் அங்கனதான் குவியும். மனம் குவிப்பது தியானம் அல்ல என்றாலும் தியானத்துக்கான முதல் படி எண்ணங்களை ஒரு புள்ளியில் நிறுத்துதல்.

அடுத்து செக்ஸில் திளைப்பது. தி…ளை…ப்ப….துங்கற வார்த்தை அருமையான வார்த்தை பிரயோகம். செக்ஸ்ல எவனும் திளைக்கறதில்லை. (செக்ஸ் குறித்த கனவு கற்பனைகளில் திளைப்பது வேறு ). செக்ஸுக்குள்ள தட்டு தடுமாறி என்டர் ஆகிறான். உடனே அது இவனை தூக்கி எறிஞ்சுருது. திருப்பதி சர்வதரிசனம் கணக்கு.

உங்களை ஒரு அரைமணி நேரம் பெருமாள் முந்தி உட்கார வச்சுட்டா என்னாகும்? அடுத்த தரிசனத்துக்கு உங்க மனம் ஏங்க குறைஞ்சது ஒரு வருஷம் பிடிக்கும்.செக்ஸும் அப்படித்தான். அதில் திளைக்க முடிந்தால் உடலுறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிக்கும்.

6) ஒரு குழந்தையின் பிறப்பில் தொடங்கும் கர்ப்பச்செல் நீக்கிய காலம், அந்த குழ்ந்தையின் குடும்பத்தில் ஏற்கனவே வாழ்ந்து மடிந்த ஒருவரை அல்லது திசை இருப்பை குறிக்கிறதா?

அந்த “ஏற்கனவே வாழ்ந்து மடிந்த ஒருவர்” அதே குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குறிக்கலாம்.

7) செக்ஸ் என்ன ஒன்றிலிருந்து தோன்றியதனாலயேதான், அதுலிருந்து மீள முடியாதிருக்கிறோமா?

இல்லிங்க. அங்கன ஆரம்பிக்க வேணம்னா இது காரணமா இருக்கலாம் ஆனால் ஆரம்பிச்ச இடத்துலயே நின்னுர இந்த சமூகம் தான் காரணம். நாம ஒவ்வொருத்தரும் சைக்காலஜில சொல்ற ஆசனப்பருவத்தை கடந்து தான் ஆகனும்.

நம்ம கவனம் இன உறுப்பு பக்கமா டைவர்ட் ஆகும்போது தடுக்கப்படறோம். அதனால தான் வாய் சொல் வீரர்களா, தின்னி பண்டாரங்களா,ஹோமோவா மாறிர்ரம். இந்த தடைக்கு மட்டும் தடை விதிக்கப்பாட்டால் சரியான விழிப்புணர்வு உள்ளவன் ரெண்டு வருஷத்துல செக்ஸ்லருந்து ஜம்ப் ஆயிரலாம்.

குண்டலி யோகாப்படி பார்த்தாலும் ஆக்னா ( ஆசனத்துக்கு சற்று மேல்) ஸ்வாதிஷ்டானம் (இன உறுப்புக்கு சற்று மேல்) இந்த தியரி சரி.

பயணம் தொடரனும். அது தொடர செக்ஸை தாண்டனும். தாண்டனும்னா அதுல இறங்கித்தானே கரையேறனும். தின்னு கழியவே 30 வயசு போயிருது. அப்பாறம் செக்ஸ். இந்த சந்தர்ப்பத்தையும் சரியா உபயோகிச்சுக்க முடியாத அளவு பிரச்சினைகள். இவன் காமச்சேற்றிலிருந்து கரையேற முடியாம அதுலயே மூழ்கி செத்துப்போயிர்ரான்.

சிறுமியை கற்பழித்த 90 வயது முதியவர்லாம் இந்த கேஸுதேன்

8) செக்ஸ் என்ற தாகத்தை, ஒரே மூச்சில் தண்ணீர் குடித்து தணிக்க என்ன செய்யலாம்?

அஸ்கு புஸ்கு .. நம்ம கில்மா பதிவுகளையெல்லாம் மனப்பாடம் செய்து ப்ராக்டீஸ் பண்ணி அப்ளை பண்ணாலும் உங்க ஒக்காபிலரில சொன்னா “திளைச்சாலும்” இடைவெளி அதிகரிக்கலாமே தவிர இந்த மேட்டர்ல லைஃப் டைம் வேலிடிட்டி எல்லாம் கடியாதுங்கோ. மந்த்லி டாப் அப் தேன்.

9) ஜோதிடம் பார்ப்பதினாலும் அல்லது பார்க்காமலேயே வாழ்வதனாலும், பிறப்பின் நோக்க்த்தை அடைவதில் நிறைவோ, குறைவோ ஏற்படுகிறதா?
ஹ்யூமன் மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல தேவையான எல்லா சாஃப்ட் வேரும் போட்டுத்தான் அனுப்புது இயற்கை. அதுக்குள்ள ஈகோங்கற வைரஸ் புகுந்து குழப்படி பண்ணிருது. அப்பம் சோசியம், தியானம் இதெல்லாம் ஆன்டி வைரஸ் மாதிரி வேலை செய்யுது.

யூனிவர்சல் மைண்டோட – வாழ்ந்தா ஜோதிடம்லாம் தேவையே இல்லை. என்ன பண்றது சனம் யூனிவர்சல் மைண்டோட வர்ர குழந்தைக்குள்ளே ஈகோவை இஞ்ஜெக்ட் பண்ணி பண்ணி தன்னை இந்த படைப்பின் மையமாக கருதும் கெட்டப்பழக்கத்தை உருவாக்கிர்ராய்ங்க. பஸ் ட்ரைவருக்கே எந்த ரூட்ல போகனும்னு தெரியாத பூட்டா என்னாகும் ? ஒவ்வொரு ஜங்க்ஷன்லயும் பஸ் ரைட்டுக்கும் லெஃப்டுக்கும் அலைபாயுது.

அப்பம் ஆரோ ஒரு பயணி “யோவ் ட்ரைவர் லெஃப்ட்ல திருப்புய்யா ..என்ன ரூட்டுக்கு புதுசா”ன்னு கூவ வேண்டியிருக்கு.

10) தங்களைப்போல ஜோதிட தாகம் கொண்டோருக்கும், ஆர்வமுள்ளோர்க்கும் ஏதேனும் ஜோதிட கல்வி நிலையம் தொடங்குவது போன்ற சிந்தனையுண்டா?

ஹய்யோ ஹய்யோ.. நானே இன்னம் கத்து முடியலை. இதுல கல்வி நிலையம் வேறயா? ராகுலை பிரதமாராக்கின கதையாயிரும் பாஸ்.. அதுக்கெல்லாம் சுப்பையா சார் மாதிரி பார்ட்டிங்க இருக்காய்ங்க. ஆள விடுங்க.

தில்லு துரை நெம். 1 சங்கர் குருசாமி

கேள்விகள் : சித்தூர்.முருகேசன்
பதில் தந்த சக பதிவர் : சங்கர் குருசாமி
பதிவரின் வலைப்பூ : http://anubhudhi.blogspot.com/

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

ஆன்மீக தேடுதல் உள்ள ஒரு சாமானியன்….

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

இளம் வயசிலயே குடும்ப பாரம் ஏற்க நேரிட்டதால நிறைய கஷ்டங்கள் என்னை பண் படுத்தி இருக்கிறது. அதில் விளைந்த அனுபவங்கள் எனது ஆன்மீக வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியா இருந்திருக்கு.

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

அவ்வளவா இல்லை. ஏன்னா எனக்கு ஆர்வமுள்ள பல விஷயங்கள என்னால சுதந்திரமா செய்ய முடியல. வெறும் அறிவியல், கணக்கு, வரலாறு, புவியியல் என்று பாடங்களை மனப்பாடம் செய்து அலுத்ததுதான் மிச்சம். இதில் கணக்கு மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு.

மனப்பாடம் செய்து மட்டுமே எழுதும் தேர்வு முறை ஒழிக்கப்படணும். பல துறைகளில் வல்லுனர்களை உருவாக்காம வெறும் பொறியாளர்களைமட்டுமே உற்பத்தி செய்யும் நம் கல்வி முறை மிக கேடானது.

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

எனக்கு வேலை வாங்கி கொடுக்க நிச்சயம் உதவியா இருந்தது. ஆனா நான் கல்லூரியில் படித்த பாடங்கள் எதுவுமே நான் இதுவரை உபயோகப்படுத்தினதில்லை.

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

இன்றைய கணிணி பாடங்கள் அப்போது இல்லை. அப்போது நாங்கள் படித்த கணிணி பாடங்கள் இப்போது உபயொகத்தில் இல்லை. எங்கள் அலுவலகத்தில் இருக்கும் சக ஊழியர்கள் மூலம் கற்றதுதான்.

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

எனது 22வது வயதுல தெரிய ஆரம்பிச்சது. கஷ்டங்கள் அப்போதுதான் அதிகம் வர ஆரம்பிச்சதால ஆன்மீக தேடல் தொடங்குச்சு. அதுக்கப்புறம் அதில் பல ஏற்ற இறக்கங்கள் அனுபவங்கள்… இன்றைய நிலையில் இருக்கிறேன்.

உண்மையிலேயே பதிவரா நான் ஆனது என் அலுவலகத்தில் எனக்கு அதிக வேலை கொடுக்காமல் அதிக நேரம் சும்மா இருக்க நேரிட்டதாலதான். எனக்கு ஆர்வமுள்ள, என்னை பாதித்த விசயங்களை எழுதுகிறேன் அவ்வளவே. இதனால் மத்தவங்களுக்கும் ஒரு பாடம் கிடைக்கும்னும் நம்புறேன். அரசியல் ஆன்மீகம் சமூகம் இவை மூன்றும்தான் எனது ஆர்வம். அது பற்றி மட்டுமே எழுதுகிறேன். நான் எனக்கும் பிறருக்கும் பயனுள்ளவைன்னு கருதுவதை மட்டுமே எழுதுகிறேன்.

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

அவருடைய நண்பர்கள் கிட்ட இருந்துதான் முதல்ல ஆரம்பிக்கணும். இருந்தாலும் சில வீடுகள்ல பெற்றோர், சகோதர, சகோதரிகள் கிட்ட இருந்தும் ஆரம்பிக்கிறார்கள். செக்ஸ் பத்தி நம் ஆழ் மனதில் இருக்கக் கூடிய பாதிப்பு இது எங்கிருந்துவந்தாலும் அதை பிடித்துக்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. நம் எதிர்பாலினத்தார் சம்பந்தமாக எது செய்தாலும் அதில் இந்த விசயம் கலந்து நிற்பதை தவிர்க்கமுடியாது. சில சமயங்களில் நேர் மறையாகவும், பலசமயங்களில் எதிர் மறையாகவும்.

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

கல்லூரி முடிச்சதும் ஒரு ஆறு மாதங்கள் இருந்திருக்கிறேன். சோற்றுக்கு வழியில்லாமல் அலைந்திருக்கிறேன். உண்மையான உறவுகள், நட்புகள் என்பது எப்படிப்பட்டது என்பதை அடிபட்டு அனுபவித்து இருக்கிறேன்.

இன்றைய உத்தியோக வேட்டையில் இருப்பவர்கள் தங்கள் திறமையை மட்டும் நம்பி களத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம். தன்நம்பிக்கையும், தைரியமும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும், பணிவும் இன்றைய நிலையில் ஒரு உத்தியோகத்துக்கு தேவையாக இருக்கிறது. இவை இருந்தால் எந்த உத்தியோகத்திலும் ஜொலிக்கலாம்.

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

திருமணம் என்பது பற்றி எனக்கு பல சந்தர்ப்பங்களில் இருந்த மாறு பட்ட கருத்துகள் என்னை ஒரு குழப்ப வாதியாகவே வைத்திருந்தது. என் தியான ஆசிரியர் அதை தன் ஆலோசனைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி ஒரு சரியான வழி காட்டி உதவினார்கள். வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம். ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் இப்போது கொஞ்சம் சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது.

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

இது வெறும் நகர்ப்புறங்கள் பற்றிய கருத்துதான் என்பது என் எண்ணம். இது தொடர்ரது நல்லது இல்லை. அவசரப்படாமல் நடுநிலையோடு யோசித்து தம்பதிகள் / இளைஞர்கள் செயல்பட்டால் இதை பெரும்பகுதி தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்.

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

இது மிக ஆபத்தான ஒரு நிலை. இப்பொழுதே பல சமூகங்களில், சாதிகளில், பெண்களின் குறைந்த எண்ணிக்கையின் விளைவுகள் திருமண சந்தையில் அப்பட்டமாக தெரிய ஆரம்பிக்கிறது. அதுவும் சற்று படித்த பெண் வேண்டும் என்று தேடுபவர்கள் பாடு திண்டாட்டமாக ஆகிவிட்டது.

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

நான் எனது என்ற இன்றைய சமூகம் மீது என்க்கு ஒரு கோபமே உண்டு. நாம் நமது என்ற சிந்தனை கொஞ்சமும் வருவதில்லை. பொதுநல எல்லைகள் மிகவும் குறுகிவிட்டன. எல்லாம் தனக்கு மட்டுமே என்ற சிந்தனையின் விளைவு இன்றைய ஒரு தலைமுறையையே பாதித்து விடுமோ என்று சற்று அச்சமாகவும் இருக்கிறது.

ஒரு சார்புநிலை சமூகத்தில் வாழவே நான் ஆசைப்படுகிறேன். ஆனால் இன்று வரை தனிமையாகவே இருக்கிறேன். ஏனெனில் கிடைக்கவில்லை / வாய்க்கவில்லை. இது சமூகம் குறித்து என் தனிப்பட்ட வருத்தம்.

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

மிகவும் மலினப்பட்டுள்ளது. சக மனிதனை மதிப்பதில் யாருக்குமே அக்கரை இருப்பதாக தெரியவில்லை. அதுவும் சற்று உயர் நிலையில் இருப்பவர்கள் சிந்தனை மிகவும் குறுகியதாகவே இருக்கிறது.

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

பரிதாபப்படவே வைக்கிறது.

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

தனிமனிதர்களின் பொருளாதார பொறுப்பின்மை என்பது இன்றைய தலைமுறையில்தான் அதிகம் தெரிகிறது. பகட்டுக்காக செலவு என்பதை ஒழிக்க முன்வந்தால்தான் தனிமனித பொருளாதாம் முன்னேறும்.
அரசின் பொருளாதார பொறுப்பின்மை நம் விலைவாசிகளில் நேரடியாக எதிரொலிக்கிறது. அரசில் இருப்பவர்கள் (அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்) தங்கள் சொந்த ஆதாயத்துக்காக மட்டுமே பணிசெய்வதால் இது நேர்கிறது. திருந்தினால் தேவலை.

16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

என்னைப்பொருத்தவரை இது அத்தியாவசியம். இது ஒவ்வொருவரின் சூழலுக்கும், வளர்ப்புக்கும், வயதுக்கும் தகுந்தவாறு மாறுபடும் என்று எண்ணுகிறேன்.

17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

என்னைப்பொருத்தவரை இது உதவியே. உண்மையான ஆன்மீகம் என்பது தனிமனித ஒழுக்க மேம்பாட்டில் தான் தெரியும். நாம் ஆன்மீகவாதியா என்பது நம் வாழ்வில் நாம் கடைபிடிக்கும் தனிமனித ஒழுக்க நெறிகளும் நம் வாழ்க்கை முறையுமே.

18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

மூன்றும் இல்லை. அன்றைய சூழலில் அவர்கள் வாழ்க்கைமுறை இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகுந்த முன்னேற்றம் இருக்கிறது.

19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

நிச்சயம். நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் இது நேரடியா பாதிக்குது.

20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

நிச்சயம் சமூகத்துக்கு தேவையான ஒண்ணு. ஆனா இதன் பயன்பாடு, நுகர்வு சற்று அளவோடு இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறேன்.

21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

இருண்ட பக்கங்கள் – ஒருவர் நண்பரா பழகி பணம் ஏமாத்துறதா வந்த செய்தியும், சாதி துவெஷம் கொடி கட்டி பறக்கறதும் தனிமனித தாக்குதல்கள் சற்று ஓவரா இருக்கறதும்

மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி – இதுவரை ஏதும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

சித்தர்கள் முழக்கம் – பாலா ,

கவுன்செல் ஃபார் எனி – ஷண்முகவேல்

சிவயசிவ – சிவ.சி.மா. ஜானகிராமன்

அனுபவ ஜோதிடம் – சித்தூர் முருகேசன்,

மச்ச முனிவரின் சித்த ஞான சபை – சாமீ அழகப்பன்

லிவிங் எக்ஸ்ட்ரா,

சவுக்கு – சங்கர்

உண்மைதமிழன் – சரவணன்,

23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

மிக யதார்த்தமான தளம். நிறைய தகவலகள். ஜோதிடம் என்பது ஒரு அன்னியமான விசயம் இல்லை அதுவும் ஒரு வாழ்வியல்தான் என்று சொல்லும் ஒரு முக்கியமான தளம்.

24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சேன்.

25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம் எதுனா இருந்தா சொல்லுங்க

எதுவும் இல்லை…

தில்லு துரைகளுக்கு மட்டுமான கேள்விகள்

முன்னுரை:
ஒரு ஜோதிட ஆலோசகனாக சனங்க கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொ(வெ)றுப்பான நிலையில் இருந்த எனக்கு கேள்வி கேட்க கிடைத்த மொத சான்ஸ் இது. அதனால என் கேள்விகள் “குட்டெத்து சேன்லோ பட்டட்டு” இருக்கும். ( குருட்டு காளை கழனியில இறங்கின மாதிரி) .

முடிஞ்சா அல்லாத்துக்கு பதில் கொடுங்க. இல்லாட்டி முடிஞ்சதுக்கு இப்ப பதில் கொடுங்க. முடியாததுக்கெல்லாம் முடிஞ்ச போது பதில் கொடுங்க.

1.உங்களை என்னன்னு அறிமுகப்படுத்திக்க விருப்பம்? உங்க ப்ரொஃபெஷன் தவிர்த்து . ப்ளாகர்.. – க்ரியேட்டர் – திங்கர் ரஜினி காந்த் ரேஞ்சுல ம..னி…தன்னு சொல்லிராதிங்க

2.உங்க குடும்ப பின்னணி – அது இன்றைய உங்களின் உருவாக்கத்துக்கு எந்த அளவு உதவியா இருந்ததுன்னு சொல்லுங்க

3.உங்க மாணவப்பருவத்தை கல்வியை எஞ்ஜாய் பண்ணிங்களா? ஆம் என்பது உங்க பதில்னா எந்த அளவுக்கு? இல்லைன்னா ஏன்? இன்றைய மாணவர்களுக்கு எதுனா சொல்லவிரும்பறிங்களா?

4.நீங்க கற்ற கல்வி உங்க ப்ரெட் ஹன்டிங்குக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்ததா? ஆமான்னா எந்த அளவுக்கு? இல்லேன்னா பின்னே எப்படி சமாளிச்சிங்க?

5.இன்றைக்கு களம் கண்டிருக்கும் கணிணி இன்டர் நெட் இத்யாதி உங்க அகடமிக் சில்லபஸ்ல இருந்ததா? இல்லேன்னா இதுகளோட உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? கற்றுக்கொடுத்த குருன்னு ஆருனா உண்டா?

6.இன்றைய உங்களுக்கான அடையாளங்கள் உங்க லைஃப்ல எந்த வயசுலருந்து தெரிய ஆரம்பிச்சது? பதிவரா உங்க கேரியர் பற்றி பத்து வரிகளில் சொல்லவும்

7.ஒரு மனிதனோட செக்ஸ் குறித்த பார்வைய ஆரு தராய்ங்க? இது அவனோட வாழ்க்கைய எந்தளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்? உங்க அனுபவம் என்ன?

8.அன் எம்ப்ளாய்டா இருந்திருக்கிங்களா? அந்த அனுபவத்தை சொல்லலாமே.. இன்றைய உத்யோக வேட்டையில இருப்பவர்களுக்கு எனி டிப்ஸ்

9 கன்றுக்குட்டி காதல்? காதல்? துரதிர்ஷ்டவசமா ஏற்கெனவே திருமணமாகியிருந்தா , .உங்க திருமணம் பற்றி சொல்லுங்க. ( வீட்ல படிக்கமாட்டாய்ங்கங்கற தில் இருந்தா டீன் ஏஜ்ல செய்த பிரபல சில்மிஷம் ஒன்னை பகிர்ந்துக்கோங்க.

10.இன்னைக்கு கமிட்டட் பேச்சலர்ஸ் எண்ணிக்கை அதிகமாயிட்டாப்லயும் – விவாகரத்துக்களோட சதவீதம் அதிகமாயிட்டாப்லயும் ஒரு தோற்றம் இருக்கு. இது நெஜம் தானா? இது இப்படி தொடர்ரது நல்லது தானா?

11.ஆண் பெண் சனத்தொகையில வித்யாசம் வந்துருச்சு – பெண் சனத்தொகை குறையுதுங்கறாய்ங்க.இதனோட விளைவுகள் பற்றி சொல்லுங்க

12.உங்களோட சமூகம் குறித்த பார்வை ?

13.மனித உறவுகள் மேம்பட்டுள்ளதா? மலினப்படுத்தப்பட்டுள்ளதா?

14.இந்த உலகம் மிரட்டுதா? பரிதாபப்பட வைக்குதா?

15.தனிமனிதர்கள் முதல் மத்திய அரசு வரை பொருளாதார பொறுப்பின்மை நாளுக்கு நாள் ஓங்குது..இதுமேல ஓங்கி ஒரு குட்டுவைங்க

16.எல்லாரும் எதிர்பார்த்த கில்மா மேட்டருக்கு வரேன். இது அத்யாவசியமா? அவசியமா? ஆடம்பரமா?

17.கில்மா ஆன்மீகத்துக்கு உதவியா ? உபத்திரவமா? உண்மையான ஆன்மீகம்னு எதை சொல்விங்க?

18.இருபது வருடத்துக்கு முந்திய மனிதர்களையும் – இன்றைய மனிதர்களையும் ஒப்பிட்டுபார்த்தா மிஞ்சுவது பெருமூச்சா? ஏக்கமா? துக்கமா?

19.அரசியல் சனங்க வாழ்க்கைய நேரடியா பாதிக்குதுன்னு நம்பறிங்களா?

20.கலை,இலக்கியம், சினிமா பற்றிய உங்கள் கருத்து?

21 உங்களை அதிரச்செய்த .வலையுலகத்தின் இருண்ட பக்கம் ? உங்களை ஒரு ப்ளாகரா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்ச்சி

22. உங்களுக்கு பிடித்த பதிவர்கள்? பதிவுகள்?

23. ஜோதிடம் மற்றும் அனுபவஜோதிடம் தளம் பற்றிய உங்கள் கருத்து?

24. இந்த கேள்விகளுக்கு பதில் தரும்போது ங்கொய்யால பொஞ்சாதி கூட இத்தீனி கேள்வி கேட்டதில்லைனு நொந்துக்கினிங்களா? நம்ம கருத்துக்களை தவளைப்பாய்ச்சல்ல சொல்ல ஒரு களம் அமைத்துக்கொடுத்ததுன்னு நினைச்சிங்களா?

25.இதுல நான் கேட்க மறந்த – நீங்க ரெம்ப நாளா பகிர்ந்துக்க நினைச்சு பகிர முடியாத விசயம் எதுனா இருந்தா சொல்லுங்க

1.

இலவச ஜோதிட கேள்வி பதில்

எச்சரிக்கை:
உங்க கேள்விய இந்த பதிவுக்கான கமெண்டா போட்டுட்டு ஜாதகத்தை மட்டும் மெயில் பண்ணுங்க. இங்கன அங்கன ஒரே பேரை கொடுங்க சாமியோவ்! என் கணிப்பையும் …………அவர்களேன்னு விளிச்சு கமெண்டாவே போட்டுர்ரன்.

ஜாதகம் அனுப்பவேண்டிய மெயில் ஐடி:
chittoor.s.murugesan@gmail.com

ஆர்.சிந்து
கே:
எனக்கு திருமணம் எப்போது நடக்கும்?

பதில்:
சிந்து அவர்களே!
உங்களுது துலா லக்னம், கும்பராசி. உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம், செவ் தோஷம் ( செவ் தான் களத்திராதிபதி) குரு நீசம் சுக்கிர கேது சேர்க்கை இப்படி நிறைய வில்லங்கம் இருக்கு. திருமணம் எப்போ நடக்கும்னு யாரு சொன்னாலும் தள்ளிப்போகவே வாய்ப்பிருக்கு.

தற்சமயத்துக்கு உங்க ஜன்ம ராசிக்கு அஷ்டம சனி வேற நடக்குது. கொஞ்சம் பொறுத்திருங்க. எட்டுல இருக்கிற சனி ஒன்பதை பார்க்கட்டும்.. ( ஜூன் 12, 2011) அப்பாறம் ஒரு தபா முழு ஜாதகத்தோட காண்டாக்ட் பண்ணுங்க அயனான பரிகாரம்லாம் இருக்கு. தற்சமயத்துக்கு தினசரி ஆஞ்சனேயர் கோவில் போங்க. ராம நாமம் சொல்லிட்டே இருங்க. சீக்கிரமே ஒரு அல்ட்டிமேட் சொல்யூஷன் தரேன்

ஜெயபால்
கே: வேலை ,திருமணம் எப்போ அமையும்?
ப: உங்களுது விருச்சிக லக்னம் மகர ராசி. லக்னாதிபதியே விரயம். ஆனால் 2,5 க்கு அதிபதியான குரு உச்சம் பெற்றார். நீங்க மலை மேல் இருக்கும் முருகன் கோவிலுக்கு வர்ரதா நேர்ந்துக்கங்க. ஒரு தடவை குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்த தானம் செய்யவும்.பவழம் பதித்த மோதிரம் அணியவும். இந்த மே 8க்கு மேல சின்னதா ஒரு வேலை கிடைக்கும். அஜீஸ் பண்ணிக்கங்க. 2012 மார்ச்சுக்கப்பாறம் நல்ல வேலை கிடைப்பதோடு, திருமணமும் நடக்கும்

வாசு தேவன்
கே: எனக்கு எந்த வேலை அமையும்? அரசா தனியாரா?
உங்க லக்னம் மிதுனம். லக்னாதிபதியான புதன், செவ், சூரியனோட சேர்ந்து லக்னத்துல நின்னாரு.செவ் இந்த க்ரூப்ல இல்லன்னா மிக்சட் செக்டார்/அரசு சார் நிறுவனத்துல வேலை கிடைச்சிருக்கும். செவ் காரியத்தை கெடுத்தாரு. இந்த தோஷம் நீங்கிட நீங்க மாசாமாசம் மலை மேல் இருக்கும் முருகன் கோவிலுக்கு வர்ரதா நேர்ந்துக்கங்க. ஒரு தடவை குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்த தானம் செய்யவும்.பவழம் பதித்த மோதிரம் அணியவும். எலக்ட்ரிசிட்டி போர்ட் நல்லா சூட் ஆகும்.பரிகாரத்தை விட்டா பல்பு வாங்கிருவிங்க. அதனால மிக்சட் செக்டார்/அரசு சார் நிறுவனத்துலயே ட்ரை பண்ணுங்க. ஜூன் 12 க்கு மேல வாய்ப்புகள் பிரகாசமாகும்.

சி.பி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கே: என் ஜாதகத்துல செவ் தோஷமிருக்கா? நான் செவ் தோஷமுள்ள பெண்ணையே தேடனுமா?

நீங்க செவ் தோஷத்தை பற்றி கவலை படறது வீண் வேலை. லக்னாதிபதியே ஆறுல மாட்டினாரு. மொதல்ல அதைபாருங்க . இருந்தாலும் நீங்க கேட்ட கேள்விக்கு பதில். செவ் தோஷம் இருந்து பரிகாரமாயிருக்கு. இதே போல பரிகார ஜாதகத்தை தேடிப்பிடிச்சு கட்டுங்க.

ரவி
கே; பொருளாதாரம் -வேலை வாய்ப்பு?

ப: பாஸ் லக்னாதிபதி எட்டுல -ராகு கேது வேற 1-7 ல . போதாததுக்கு சூரியன் செவ் வேற விரயம். சுக்கிர கேது சேர்க்கை வேற இருக்கு. ஒன்னு பண்ணுங்க ( தப்பா நினைக்காதிங்க) எதுனா ஆம்புலென்ஸ்,அமரர் ஊர்தி,ஃப்ரீசர் பாக்ஸ்,மலர் வளையம் மாதிரி தொழில் ட்ரைபண்ணுங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. தோஷமும் பரிகாரமாகும். தொழிலும் பிக் அப் ஆகும். ராசி சிம்மம் மே 8க்கு மேல நூல் விட்டு பாருங்க. அதுவரை பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு,பசுமாட்டுக்கு அகத்திக்கீரை இது முடியாதுன்னா ஒரு நொண்டிக்கு சோறு போடுங்க. ஒர்க் அவுட் ஆகலாம்

கேள்வி: என் .ராஜன்
Dear Sir,

I have gone through your website and it is simply superb regarding the astrological facts and queries. I have one query and for the past three months I can’t able to take any decisions and having too much mental tensions and my boss is blaming me for unnecessary things.

Please find attached my horoscope for your kind reference and please inform me when I can change my job. Presently I am working in the Kuwait and I am planning to search the new job in other gulf countries or to settle in India. Please advice me whether I will get any new jobs in the other gulf countries or shall I resign my job and to settle in India.

Eventhough, I worked in Kuwait for the past 5 years, I have not saved the enough money due to my family commitments.

NAME : LOGANATHAN

Date of Birth : 24-07-1973

Time of Birth : 7.15 PM

Place of Birth : Krishnagiri (Tamil Nadu)

Your immediate reply will enable us to take decision accordingly.

Regards

பதில்:
பாஸ்! லக்னாதிபதியே 6ல இருக்காரு.அவரோட கேதுவேற சேர்ந்தாரு. ஜன்மத்துல குருவேற. எங்கே போனாலும் இந்த இழவுதான். என்ன ஒரு ஆறுதல்னா சுக்கிரன் ஓகே . 15/09/2011 முதல் தான் ராகு தசையில சூரிய புக்தி ஆரம்பிக்க போகுது. இது 6 மாசம் முந்தி அதாவாது மார்ச் 15 முதல் வேலை செய்யனும். அதுவரை சுக்கிர புக்தி தான். உங்க மேஷ ராசிக்கு இப்ப 6 ல சனி நினைச்சது நடக்கனும்.ஆனால் இவர் ஜூன் 12 முதலே 7 ஐ பார்க்க ஆரம்பிச்சுருவாரு.

அதனால மார்ச் 16 முதல் ஒர்க் அவுட் பண்ணி மே12க்கெல்லாம் வேலை மாறிருங்க. துறைகள்: ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,ஹோம் நீட்ஸ்,பெண்கள் ,கலை,அழகு, தொடர்பானவை. திசை: ஆக்னேயம். லக்கி நெம்: 6 தேதி: 6,15,24

தூள் பண்ணுங்க
கேள்வி:
பெயர்: வசீகரன்
I love your blog.It is really interesting. This is my Jathagam, i want to know about my education and career field,which field is good for me?

தம்பீ .. உங்க ஜாதகத்துல குரு உச்சம். நிர்வாகம், ஃபைனான்ஸ், நீதி தொடர்பான படிப்பு பெஸ்ட். சூரியனோட சேர்ந்ததால நெம்பர் ஒன்னாவே வருவிக . ( ஒரு வேளை வசதியில்லைன்னா அடுத்த சாய்ஸுக்கு போங்க)

அடுத்தபடியா சனி பெட்டர் பொசிஷன்ல இருக்காரு. அதனால ஐரன்,ஸ்டீல்,ஆயில்,விவசாயம் இப்படி ரூட்டை மாத்திருங்க. தூள் பண்ணுங்க.

இதுவும் மனசுக்கு வரலின்னா யூனிஃபார்ம் போடற வேலைக்கேத்த படிப்பா படிங்க. நல்லா வருவிங்க

பெயர்: வசீகரன்
கேள்வி:
Thank you sir,for your prompt answer.I intend to major in Chemistry or Chemical Engineering,Is it good a good field for me?Will i get a good job?Any suggestion to get better grades in my studies?Thank you once again.

நீங்க ப்ரிஃப்ர் பண்றது செவ் காரகதவம். இவர் உங்க ஜாதகத்துல சுக்கரனோட சேர்ந்திருக்காரு. அதனால வேணாம்.
அப்பாறம் பாதிப்படிப்புல லவ்ஸ் கிவ்ஸ் வந்து ப்ரேக்காயிரும்

கேள்வி:
பெயர்: பூங்குன்றன்
Respected Sir:

I want to know when will i get a job.Thanks in advance.Eagerly waiting for ur reply
My Birth details
1.Name – Poongundran

2.Date of Birth- 12 Sep 1987

3.Time of Birth – 00:54 AM

4.Place of Birth- Thanjavur (Tamilnadu State)
பதில்:
பூங்குன்றன் அவர்களே,
12/2/2017 வரை நிலையான வேலை அமைவது கடினமே.

என்றாலும் கன்னியாகுமாரி அம்மன் வழிபாடு, வண்ண மீன் வளர்ப்பு, பவுர்ணமி தினம் மூன் லைட் டின்னர் போன்ற சந்திரன் தொடர்பான பரிகாரங்கள் செய்து வந்தால் சமாளிக்கலாம்.

தங்கள் ஜாதகத்தில் நல்ல யோகம் இருக்கிறது. ஆனால் கேது கெடுக்கிறார்.

தர்கா ,சர்ச் செல்லவும்.எளிய வாழ்வு வாழவும்.
மரத்தடி வினாயகருக்கு தொடர்ந்து 7 நாள் ஜலாபிஷேகம் செய்யவும்.

மார்ச் 8க்கு மேல் வெளியூரில் ( வட கிழக்கு) வேலை அமையும். மணி ஹேண்ட்லிங் என்றால் தவிர்க்கவும்.

ஹவுசிங்,ஆட்டோ மொபைல்ஸ்,ஹோம் நீட்ஸ், மெடிசின்,கல்வி,கணிதம் தொடர்பானதெனில் ஒப்புக்கொண்டு செல்லவும்.

பரிகாரம் தொடர்ந்து செய்தால் அதுவே நிலைக்கலாம்
கேள்வி:
பெயர்: டி.எஸ்.தனசேகர்
dear sir,
i studied diploma in mechanical engineering.and i having one arrear in maths-2 in first year.coming April examination is the last chance to write exam.so please tell us this time i will clear my arrear?.and what god should i pray for clearing my arrear.and i had interest in design field.can i go in the mechanical design field for job.how is my future please kindly explain sir.

பதில்:
தம்பி, உங்க ஜாதகம் மிதுன லக்னம் , துலாராசி காம்பினேஷன். லக்னத்துல குரு
கலைஞர் மாதிரி மஞ்சள் சால்வை போடலைன்னாலும்
படிக்கிறச்ச மஞ்ச நிற டவலை தோள்ள போட்டுட்டு படிங்க
பரீட்சைக்கு போறச்ச அந்த நிறத்துல ரைட்டிங் பேட் கொண்டு போங்க.

ராகு கேது 2/8 ல இருக்காய்ங்க
வினாயகர்,துர்கை டாலர் கழுத்துல போடுங்க
ஓம் தும் துர்காயை நமஹ
ஓம் கம் கணபதே நமஹ
என்று ஜெபிங்க.
அஞ்சுல சந்திரன்
ஸ்டடி ரூம்ல அ படிக்கிறச்ச பார்வையில படற மாதிரி வண்ண மீன் தொட்டி

7 ல் சனி .சுவற்றில் விவசாயம் நடக்கிற காட்சி கொண்ட போஸ்டர் வைங்க

அஷ்டமத்துல செவ்,சுக்கிரன்,ராகு/கேது
செத்துப்போன சகோதரன் , பெண் உறவினர்,தாத்தா அ பாட்டி ஃபோட்டோக்களை
பர்ஸுல வச்சிருங்க.

தற்போது ஏழரை நடக்கிறது
தினசரி காகத்துக்கு சோறு வச்சிட்டு சாப்பிடுங்க.

கால் தொடர்பான ஊனமுள்ள பையனுக்கு பிரதி சனிக்கிழமை ப்ரேக் ஃபாஸ்ட் ஆஃபர் பண்ணுங்க

வெற்றி நிச்சயம். பெரிய ஆளா வருவிங்க.
______________
பெயர்: மணி மாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
ஊர்: குறிப்பிட வில்லை
கே:
எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அதாவது சொந்த தொழில் அல்லது வேலையா?
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்?

லக்னத்துல சந்திரனை வச்சுக்கிட்டு கேட்கறிங்க. நான் என்னத்த சொல்ல முடியும்? சந்திரனுக்குரிய பரிகாரங்களை தவறாது செய்ங்க. அதுக்கு இங்கே அழுத்துங்க.ஓரளவுக்கு இன்ஸ்டெபிலிட்டி கட்டுப்படும்.

சொந்த தொழில்னா.. ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,ஹோம் நீட்ஸ், அழகு அலங்காரம் தொடர்பானதை செய்ங்க. நல்லா வருவிங்க/

திருமணம்னா.. மா நிறமா, ஏழைப்பெண்ணா பார்த்து செய்துக்கங்க. ஓகே. இல்லாட்டி மஹிளா ஸ்டேசன்லாம் பார்க்கவேண்டி வரும்

மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
ஊர்: குறிப்பிடவில்லை
தம்பி!
உங்க ஜாதகம் பார்த்தேன். சூப்பர் ஜாதகம். உங்களுக்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கு. 9 நாள் ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க . அடுத்த 9 நாளைக்குள்ள வேலை கிடைக்கும். மனசை தளரவிடாதிங்க. மிக மிக மிக உயர்ந்த நிலைக்கு வருவிங்க.மிகப்பெரிய தனயோகம் இருக்கு. தாய்மாமன் உதவுவார். உங்களுக்கு கால் தொடர்பான ஒரு சின்ன பிரச்சினை வரும். அதுக்கப்பாறம் பாருங்க. “தூக்குடா”ன்னுட்டு என்னை உங்க ஊருக்கு தூக்கிட்டே போயிருவிக ( நான் வரதாயில்லை).இப்ப அமையப்போற வேலை 2011 மே 8 வரைக்கு ஓகே .அதுக்கப்பாறம் மறுபடி வேலை போயிரும். என்னைக்கேட்டா நீங்க ஆட்டோமொபைல் தொடர்பான ப்ரோக்கரேஜ் பண்ணுங்க. நீங்களே பத்துபேருக்கு வேலை கொடுப்பிங்க

தம்பி ராசு,
நாகப்பட்டினம்
My Date of Birth is: 04-10-1980
Time is : 11 AM
Place : Naluvedapathy ( Nagapattinam Dt)
I want to know about my future life

தம்பிராசு!
ஆன்லைன்ல ஜாதகம் போடும்போது AM PM கரீட்டா கொடுக்கனும். இல்லாட்டி தலை எழுத்தே மாறிரும். ஜாதகத்தை அட்டாச் பண்ணா போதும். கட் பேஸ்ட் பண்ணக்கூடாது. உங்க ஜாதகம் பார்த்தேன்.( நீங்க அனுப்பினது ராங்)

விருச்சிக லக்னம். லக்னாதிபதியான செவ் லக்னத்துலயே ஆட்சி. நீங்க ஒரு நல்ல போலீஸாவறதை ஆரும் தடுக்கமுடியாது. என்ன கொஞ்சம் கோபம், படபடப்பு, அதி உஷ்ணம் இருக்கு. 9 நாள் முருகனுக்கு விரதமிருங்க. மார்ஷல் ஆர்ட்ஸ், ஜிம்,ரன்னிங் ப்ராக்டீஸ் பண்ணுங்க

21/Aug/2011 வரை சுக்கிர தசை சனி புக்தி . படிப்புல தடை ஏற்படலாம். டேக் கேர். ராசி கடகம் மே 8 வரை குரு ஓகே.அப்பாறம் பததுல வந்து பதவியை ( மாணவர்?) பறிக்கலாம்.

Saravanan.S
கே:என் எதிர்காலம் பத்தி சொல்லுங்க?

ப: ஐயா, லக்னாதிபதியே 6 ல அஷ்டமாதிபதி லக்னத்துல. 2011 மே 8 வரை ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாயாச்சும் கடன் வாங்கிக்கிட்டே இருங்க. உங்கள் முன்னோர்களில் இறந்து போன பெண்கள் 6 பேரின் வாழ்க்கை குறிப்பை தயார் செய்து அவர்கள் ஆன்ம சாந்திக்காக பிரார்த்தனை பண்ணுங்க.

2011 மே 8க்கு மேல் ஓரளவு மாற்றம் தெரியும். அதன் பிறகாவது உள்ளூரில் உள்ள ஜோதிடரிடமாவது ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிருங்க. நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. வாழ்த்துக்கள்

வாசுதேவன்
கே:1 . எனக்கு எப்போது எந்த வயதில் வேலை கிடைக்கும் .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

2011 செப்,8 க்கு மேல் அரசு /அரசு சார் துறைகளில் ( போக்குவரத்து கழகம், எலக்ட்ரி சிட்டி போர்ட்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ராகு கேது சரியில்லை. இதனால தள்ளிப்போகும்,வெட்டிப்போகும். பரிகாரம்: கணபதி துர்கா வழிபாடு