உங்களுக்கும் ராஜயோகம்: 3

parapnna

அண்ணே வணக்கம்ணே !
இந்த எலீக்சன்ல சகட்டுமேனிக்கு ஆளாளுக்கு அனைத்து தொகுதியிலயும் தனித்து போட்டின்னு சொல்லிட்டிருக்காய்ங்களா..புது புது கட்சில்லாம் ஃபீல்டுக்கு வந்துக்கிட்டிருக்கா..எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோங்கறாப்ல எந்த வேட்பாளர் நெஜமாலுமே சனத்துக்கு நெல்லது பண்ணுவாரோ ஆருக்கு தெரியும்.

ஜாதகத்துல ராஜயோகம் உள்ளவிக அசால்ட்டா செயிச்சு வந்து அனுபவிச்சுட்டு போயிருவாய்ங்க.உண்மையிலயே சனத்துக்கு நெல்லது பண்ணலாம்னு வர்ரவிக ஜாதகத்துல ராஜயோகம் இல்லாம கூட இருக்கலாம். நாம இப்ப எளுதிக்கிட்டிருக்கிற தொடரை மேற்படி வேட்பாளரோட மனைவியோ,மச்சானோ பார்த்து -அவியளுக்கு சொல்லி -ஒர்க் அவுட் ஆகி செயிச்சு வரட்டுமே.நெல்லது பண்ணட்டுமே. அந்த புண்ணியத்துல நமக்கும் ஒரு ஷேர் வரும்ல?

கடந்த பதிவுல ராஜகிரகங்கள் பல்பு வாங்கியிருந்தாலும் ராஜயோகம் வரதுக்கு வாய்ப்பிருக்குன்னு ஆரம்பிச்சு நம்ம வாழ்க்கையையே உதாரணமா காட்டியிருந்தன். அதை தொடரலமா? ஏன்னா நம்ம லைஃப்ல ஆட்டோமெட்டிக்கா நடந்ததை -குரு பல்பு வாங்கியிருக்கிறவிக – வாலண்டியரா நடத்திக்கிட்டா ராஜயோகம் வரலாம்லியா?

இப்ப ஒங்களுக்கு ராஜயோகம் கொட்டுதா பாஸ்னு கேப்பிக. நம்ம ஜாதக மேட்டர்ல ஜோதிட விதிகளை கறாரா அப்ளை பண்ணா முக்கிய ராஜகிரகமான குரு டப்பாஸுன்னு தான் சொல்லனும்.

ஆனாலும் நாட்ல டைரக்ட் எலீக்சன் வரவழைச்சு,பிரதமராகி நதிகளை இணைச்சே தீருவன்னு பினாத்திக்கிட்டிருக்கம். இதெல்லாம் பாசிபிளா? இம்பாசிபிளா?ங்கறது பிறவு. இந்த மாதிரி ஒரு கனவு -அது பத்தின ஆராய்ச்சி – தியரிட்டிக்கல் டெஸ்க்ரிப்ஷன்,முயற்சின்னு ஃபீல்டுக்கு வர்ரதுக்கே ஒரு தாக்கத் இருக்கனுமில்லையா?

1967 ல பிறந்த நம்ம வாழ்க்கையில 1986 வரை ஒரு இழவு புரட்சியும் கிடையாது .புரட்சி என்ன கு.பட்சம் சிந்தனை கூட கிடையாது .மிஞ்சிப்போனா கிளிப்பிள்ளை கணக்கா கண்டதையும் கோட் பண்ணிக்கிட்டிருப்பம் அவ்ளதான் . இப்படியே தானே மிச்ச சொச்ச வாழ்க்கையும் ஓடியிருக்கனும்?

இடையில என்னாச்சு?

ஏதோ சொந்தக்கதை சொல்லி உங்களை பேஜார் பண்றேன்னு பேஜாராயிராதிங்க. ஒங்க ஜாதகத்துல குரு பயங்கர பல்பு வாங்கியிருக்காரு.ஆனாலும் அவசரமா கவுன்சிலர்/எம்.எல்.ஏ ஆகியே தீரனும்னா இந்த பதிவு அதுக்கு ஒரு ரூட்டை போட்டு கொடுக்கும்.

என் வாழ்க்கையில தானா நடந்த விஷயங்களை நீங்களா நடத்திக்கிட்டா எம்.எல்.ஏ என்ன மந்திரியா கூட ஆயிரலாமுங்கோ..

அப்பா மாவட்ட கருவூல அதிகாரி (லக்னத்துல இருந்து 9 ஐ பார்க்கிற குருவோட பலம் இதுக்கே சரியா போச்சு ஒன்பது என்பது அப்பாவை காட்டும் பாவம்) பெரிய பக்திமான் (போச்சுரா)

ஆனால் லஞ்சம் வாங்காத பார்ட்டி .வாங்கற சொற்ப சம்பளத்துலயும் தம்பி,தங்கை குடும்பத்துக்கு டைவர்ட் பண்ணிக்கிட்டிருப்பாரு .(குரு பலம் சேவ் ஆச்சு)
சகாயத்தை எப்படி தூக்கியடிச்சுக்கிட்டிருந்தானுவளோ அப்படி எங்க அப்பாவையும் ஜில்லா ஜில்லாவா தூக்கியடிப்பாய்ங்க. ஃபேமிலிய கூப்டு வச்சுக்கற அளவுக்கு வசதி இல்லை .ஆகவே அப்பா வெளியூரு (குரு பலம் சேவ் ஆச்சு )

அவரை பத்தி மேலதிகாரிகளுக்கெல்லாம் நெல்லாவே தெரியும். எப்படியும் பத்து பைசா சேர்த்து வச்சிருக்கமாட்டான். கடேசி காலத்துல உள்ளூர்ல போஸ்டிங் போட்டா செலவு குறையும். பத்து பைசா சேர்த்து வச்சு ஃபேமிலிய செட்டில் பண்ணுவான்னு கருணை காட்ட உள்ளூர் வந்துட்டாரு (ஆஹா குரு பலம் போச்)
இங்கே தான் சடன் ட்விஸ்ட் . ஒரு யூனிஃபார்ம் சமாசாரம் அப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையில பெரிய பள்ளத்தை வெட்டிருச்சுங்ணா. ஆக்சுவலா இந்த பள்ளம் நாலாங்கிளாஸ் படிக்கிறப்பயே வந்திருக்கனும். ஏன்னா..

அப்பா கஜானாவையே கட்டிக்காக்கிற ட்ரஷரி ஆஃபிசரா இருந்தாலும் ஜனதா புடவைல தான் எங்களுக்கு ( நான்கு மகன்கள்) சட்டைகள். எங்கப்பா அக்மார்க் மிடில் கிளாஸ் பார்ட்டி. தூர திருஷ்டியோட அரை டஜன் பின்னி காக்கி அரை கால் சட்டை. அரை டஜன் வெள்ளை சட்டை ( ஜனதா புடவை) அரை டஜன் கலர் சட்டை ( ஜனதா புடவை).

தாளி போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல்,காணும்பொங்கலுன்னு நாலு பண்டிகைக்கும் ஒரே டிசைன் ட்ரஸ்ஸுதான்.

இதுல கலர் புடவையில ஒரு பிட்டும், வெள்ளைபுடவையில ஒரு பிட்டும் மிச்சமாயிரவே அது ரெண்டையும் சேர்த்து ஒரு சட்டை. ஒரு தாட்டி ஸ்கூல்ல இன்ஸ்பெக்சன் வந்துருச்சு.

யூனிஃபார்ம் இல்லின்னா வெளிய அனுப்பிரனும். அன்னைக்குனு பார்த்து நான் டூ இன் ஒன் சட்டை போட்டுக்கிட்டு போயிருந்தேன். எங்கப்பனுக்கு இருந்த தூர திருஷ்டி டெயிலருக்கு இல்லாததால முன் பக்கம் கலர் பின் பக்கம் வெள்ளை பிட்டை வச்சு தச்சிருந்தான்.

லலிதா டீச்சர் பார்த்தாய்ங்க. (அப்படியே எங்கம்மாவோட ஃபிசிக் -நிறம் அச்சா) டே இங்க வாடான்னுட்டு வஸ்திராபரணம் பண்ணி சட்டையை அந்த காலத்து ரவிக்கை கணக்கா திருப்பி போட்டுவிட்டாய்ங்க. இன்ஸ்பெக்சன் ஓவர்.

ஆனால் எட்டாங்கிளாசுல வந்ததுய்யா ஒரு சோதனை .சுந்தரேசன்னு கணக்கு வாத்யாரு .ஒரு நாள் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு போவல (பின்னி க்ளாத்ல தச்ச ட்ராயரும் -காடா க்ளாத்ல தச்ச சட்டையும் வருசம் முச்சூடும் தாங்குமா என்ன?)

“ஏன் யூனிஃபார்ம் போடல?”
“கிளிஞ்சிருச்சு சார்”
“புதுசு வாங்கிக்க வேண்டியதுதானே”
“வாங்கி தரல சார் ”
“நீ என்ன பண்ணியோ?

தமிழ் சினிமாவா இருந்தா ஈரோவுக்குள்ள எரிமலை வெடிக்கிறது -பூகம்பம் வர்ரதுன்னு விஷுவல் எஃபெக்ட் எல்லாம் காட்டியிருப்பாய்ங்க.
என்ன பண்ணேன்? நேர அப்பா ஃப்ரண்டு கடைக்கு போயி ரெண்டு பேண்ட்,ரெண்டு சட்டைக்கு க்ளாத் எடுத்தேன்.அப்பாவோட ஃப்ரண்டான டெய்லர் கிட்டே போய் தச்சேன் மறு நாள் போட்டுக்கிட்டு போனேன்.

பிறவு அப்பன்-மவன் உறவு என்னமா சீரழிஞ்சிருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன். (ஆக குரு பலம் செமர்த்தியா சேவ் ஆச்சு)
டிகிரி வரையாவது ஏதோ காலேஜ் போறான்னு ஒரு பேர் . 3ஆவது வருசம் ஃபெயில். (காரணம்? திமிருதேன்) மறு தேர்வு எழுதப்போனம். ஹால் டிக்கட் இல்லை . ஃபோட்டோ ஒட்டி க்ளாஸ் டீச்சர் கிட்டே சைன் வாங்கி ப்ரின்சிபல் கிட்டே சைன் வாங்கிட்டு வந்தா பரீட்சை எழுதலாம்னானுவ. க்ளாஸ் டீச்சர் வேஸ்ட் பேச்செல்லாம் பேசினான்

போடாங்கொய்யால மை ஃபுட் யுவர் காலேஜ் .ஐம் வாக்கிங் யுனிவர்சிட்டின்னு வீட்டுக்கு வந்துட்டம்.பிறவு அப்பன்-மவன் உறவு என்னமா சீரழிஞ்சிருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன். (ஆக குரு பலம் செமர்த்தியா சேவ் ஆச்சு)

குரு = கங்கண காரகன் (கண்ணாலம் பாஸ்) 1989 ல லவ்ஸ் /ஓடிப்போயி கண்ணாலம் . சாதி ? வேற சாதிதேன். சாதி பார்த்து வருமா காதல்? ஊர்ல உள்ள பெரீ மன்சன்லாம் இந்த ஒரு மேட்டர்ல ஒத்துமையா நின்னு காரியத்தை முடிச்சுட்டானுவ.பிரிச்சுட்டானுவ பாஸ் !

1991ல மறுபடி லவ்ஸ். இந்த தாட்டி அலார்ட்டா உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்லயே கதைய முடிச்சன் (இப்ப இன்னா செய்வீங்க..இப்ப இன்னா செய்வீங்க)
இங்கே இருந்து 16 வருசம் நாயடி .பைசா பைசாவுக்கு லாட்டரி ( குரு =தனகாரகன்) பொஞ்சாதி தாலியில கூட தங்கம் கிடையாது . ஏதோ 2007 க்கு பிறவு ஃபைனான்ஸ் மேனேஜ்மென்டை மவள் கையில ஒப்படைச்ச பிறவு அவளா பார்த்து ஏதோ வாங்கினாப்ல இருக்கு.

1992 மார்ச் முதல் 1994 ஜூலை வரை ரிட்டையரான அப்பா ஏதோ பாவம் பார்த்து அப்பப்போ ஃபைனான்சியலா கொஞ்சம் சப்போர்ட் பண்ணிக்கிட்டிருந்தாரு .1994 ஜூலையில அவரும் டிக்கெட்டு .

அடுத்து ஒரு 3 வருசம் கொய்யால சொத்துல பங்கு வாங்கி அம்பானி ஆயிர்ரன்னு திரிஞ்சம். பங்கு வந்தும் ஆப்பு தேன்.

கண்ணாலமா? போலீஸ் ஸ்டேஷன்ல. பொஞ்சாதிக்கு பூமுடிக்கிறது ,சீமந்தம், குழந்தைக்கு சாங்கியம்,சம்பிரதாயம் ,தொட்டில்ல போடறது புண்ணாக்குல புரட்டறது இப்படி ஒரு ம…..னாவும் கிடையாது .ஆக குரு பலம் செமர்த்தியா சேவ் ஆகி 2002 லயே தெலுங்கு தினசரியில நம்மை பத்தி ஸ்டோரி ஐட்டம் வர்ர அளவுக்கு செல்வாக்கு வளர்ந்துச்சுங்கோ ..

ஆக ..ஜாதகத்துல குரு பலம் இல்லாம ராஜயோகத்தை அடையனும்னா என்ன பண்ணனும்? பதிவை படிச்சிங்கல்ல.. பதில் சொல்லுங்க பாஸ்..!

மாதா-பிதா-குரு- செம ஃபிகரு

NTR

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றம்-கிரகபலன் தொடர்ல 9 ஆவது பாவமான பாக்ய பாவம் தரும் பலனில் கால மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பார்த்தம். இந்த பதிவுல 9 பாவம் தரும் பலனை எப்படி “நிர்வாகம்” பண்றதுன்னு சொல்லோனம். ஆனால் ஒரு சின்ன மேட்டரை சொல்லாம விட்டுட்டம். அதான் பாஸ்..”குரு”

ஒன்பதாம் பாவத்தோட முக்கியமான காரகங்கள்ள ஒன்னு குரு. இந்த ஒரு ஃபேக்டர் மட்டும் பக்காவா அமைஞ்சுட்டா இந்த பாவத்தோட இதர காரகங்கள் மட்டுமில்லை, மத்த 11 பாவங்களோட காரகங்களையும் பக்காவா நிர்வாகம் பண்ணி “காலத்தை ஓட்டிரலாம்”

சோகமென்னடான்னா.. ஒவ்வொரு கொளந்தைக்கும் அப்பன் தான் மொத குரு. அவருக்கு அவிக அப்பா குரு.இப்டித்தான் காலம் ஓடிக்கிட்டிருந்தது. இடையில என்னென்னமோ இழவெடுத்து இன்னைக்கு தாத்தனுங்களுக்கே ஒரு ம..னாவும் தெரியாத நிலை வந்துருச்சு.

இதை ஏற்கெனவே சொல்ட்டனா என்ன ஞா இல்லை. ஒரு கிழவன் (70).ஷகரா டவுன்ல பொளச்சவன். இடையில பில்டிங் ஓனர் சாமானை எல்லாம் தூக்கி ரோட்டுல போட கிராமத்துப்பக்கம் போயி பொளைக்க வேண்டியதாயிருச்சு. பிறவு எப்டியோ புள்ளைங்க தலை எடுத்து ஓரளவு செட்டில் ஆயிட்டாய்ங்கன்னு வைங்க. விடோயர். கோவில் பணி (?) செய்வதே பணின்னு வாழ்க்கை.( ஃப்ரீ ஹவர்ஸுலதான்)

ஒரு நாள் சீரியஸா நம்மள கன்சல்ட் பண்ணாப்ல. தன்னோட ஆன்மீக (?) வாழ்க்கை,பழக்க வழக்கம்லாம் எடுத்து விட்டுட்டு விரதம் இருக்கிறச்ச எரக்சன் வருதே ஏன்னு கேட்டாப்ல.

இவனுக்கே தெரியல. புள்ளைங்களுக்கு என்ன சொல்லி தரமுடியும்? அந்த புள்ளைங்க தங்க புள்ளைங்களுக்கு என்னாத்த சொல்லித்தரமுடியும்?
செரி..அப்பன் இல்லின்னா ஆயி குருவா மாறலாம் ( நம்ம மேட்டர்ல அப்பா ஹானஸ்ட் ஆஃபீசருங்கறதால ஜில்லாஜில்லாவா ட்ரான்ஸ்ஃபர் -ஆகவே மம்மிதான் குரு )

அப்பன் இல்லை,ஆயி இல்லை. இந்த வாத்யார் பயலுவ ? (ஆருப்பா அது நக்கலா சிரிக்கிறது?) அவனவன் பொஞ்சாதிக்கு வாத்யார் வேலை வாங்கவும், பார்ட்டைம் டூர் கண்டக்ட் பண்ணவும் ,சீட்டு நடத்தவும் ,ஃபைனான்ஸ் நடத்தவுமே நேரம் போதல. பேசிக்கலா இவனுக்கே ஒரு ம..னாவும் தெரியாது. இவன் என்னாத்த குரு உத்யோகம் பார்க்கிறது?

செரி எப்டியோ பையன் படிச்சு ,வேலைகூட வாங்கிர்ரான். அப்பம் ஆரு அவனுக்கு குரு? கண்ணாலம் -கிண்ணாலம் பார்க்கும் போது சோசியரை சந்திச்சா உண்டு .இல்லின்னா அதுவும் இல்லை.

இந்த சோசிய உலகம் அது பெரிய மாஃபியா மாதிரி ஆயிருச்சு .இந்த இழவை எல்லாம் ஏற்கெனவே கிழி கிழின்னு கிளிச்சாச்சு .புதியவர்கள் இங்கே அழுத்தலாம்.

குருங்கறவனோட வேலை என்ன?
உலக வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையை சிஷ்யன் ஏற்கும் வகையில சொல்றது . வாழ்க்கையின் நிலையாமையை சொல்றது. சுய நலம் எல்லாத்தையும் சுருக்கும்டா (எல்லாத்தையும் தான் பாஸ் ! “அது” உட்பட) பொது நலம் ஒன்னு தான் உன்னை விஸ்வரூபம் எடுக்க வைக்கும் (அதாரு ? கமல் எடுத்தாச்சுன்னு கமெண்டறது?)

அப்போ வாழ்வின் பிரச்சினைகள் எல்லாம் வாமன ரூபமெடுக்கும்னு சொல்லோனம். ஓஷோ சொல்வாரு .. பூமி சூரியனின் குழந்தை -மனிதன் பூமியின் குழந்தை ” இயற்கையை பாரு. எல்லாமே ஜஸ்ட் ..ஒரு சிம்ஃபனி மாதிரி . இதுல எதுக்குமே முக்கியத்துவம் கிடையாது .ஆனால் எல்லாமே முக்கியம் இயற்கையுடனா இணைக்கமே உன்னை இயற்கையோடு பிணைக்கும்னு ஜோட்டால அடிச்சு சொல்லி வழி நடத்தனும்.
அந்த தகுதி இப்பம் இருக்கிற குருமார்களுக்கு இருக்கா? அவிக சாதி பிராமண சாதியா இருந்தாலும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அவிக சூத்திரங்களா இருந்தாலும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மனித மனம் விசித்திரமானது. அது வெற்றிடங்களை விரும்பறதே இல்லை. படக்குன்னு ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணிக்குது. ஆல்ட்டர்னேட்டிவ் தேடிக்குது. யோனி கிட்டாதவன் சுய இன்பம் அனுபவிப்பது போல.பால் குடி மறுக்கப்பட்டவன் ஸ்மோக்கிங்குக்கு அடிமையாறது மாதிரி . தாய்க்கு மனைவி மாற்று .அப்பனுக்கு காதலன் மாற்று . கொலை/தற்கொலைக்கு செக்ஸ் மாற்று. செக்ஸுக்கு பணம் மாற்று.

ஆனால் இந்த மாற்றுகள் நீண்ட காலத்துக்கு மன்சனை திருப்தி படுத்தறதில்லை .சுய இன்பத்துலருந்து உடலுறவுக்கோ -பாலியல் வன் கொடுமைக்கோ ஒரே ஜம்ப். பணம் செக்ஸுக்கு துரத்த செக்ஸ் கொலைக்கு /தற்கொலைக்கு துரத்திருது .

இப்படியா கொத்த மாற்றுகள் அந்தந்த பாவ காரகங்களிலேயே நடக்கறது நீண்ட ஆராய்ச்சிக்குரிய விஷயம். அப்பன் டுபாகூருன்னா சித்தப்பா-பெரியப்பா -அவிகளும் இல்லை அல்லது அவிகளும் டுபாகூருன்னா அப்பன்வழி சொத்து -அதுவும் இல்லின்னா ஃபாதர்லி பர்சன்ஸ் -அதுவுமில்லின்னா ஏரியா பெரீமன்சன். அல்லது ரோல் மாடல்ஸ் – ஐடியல் ஹி – ஒடனே மனசு தூர தேசங்களை கனவு காணுது .சொத்து சேர்க்க துடிக்குது ,சேமிக்க துடிக்குது ,முதலீடு செய்ய -லாபம் ஈட்ட துடிக்குது.

அப்பனோ , ஆத்தாளோ? வாத்யாரோ? ஒரு நாலணா சோசியனோ வாழ்வின் நிலையாமையை அவன் மனம் ஏற்கும் படியா அவனுக்கு சொல்லி வச்சிருந்தா அவன் ஏன் லோலோன்னு அலையறான்.

அலைஞ்சு சேமிக்கிறான், முதலீடு செய்றான் ,லாபமீட்டறான்.ஆனால் ஏற்கெனவே சொன்னதை போல இந்த மாற்றுகள் நீண்ட காலத்துக்கு மன்சனை திருப்தி படுத்தறதில்லை . அவன் இந்த இழவுல எல்லாம் சிக்கி சீரழிய காரணம் அவனுக்கு ஒரு குரு அமையாததுதான்.

பணம் புரள,சொத்து சேர,முதலீடு பெருக,சேமிப்பு பெருக வாழ்வின் அர்த்தமற்ற தன்மை அவனை விரட்ட,வெருட்ட,மிரட்ட நித்யானந்தா மாதிரி டுபாகூருங்க கால்ல போயி விழுந்துர்ரான். (பலர் பொஞ்சாதியோட) தன் சொத்து,முதலீடு,சேமிப்பு எல்லாத்தையும் அவன் ஆசனத்துல செருகிர்ரான்.

நான் என்ன சொல்லவரேன்னு கேட்ச் பண்ணிட்டிங்கல்ல. மன்சனுக்கு தேவை குரு . அது அப்பன்/ஆயி/வாத்யாரு சோசியர் எந்த மயிரானா இருந்தாலும் அவனுக்கு தேவை ஒரு குரு .அவன் இவன் மனமேற்க சொல்லவேண்டியது 1,2,3,4,5 (ஏற்கெனவே சொல்லிட்டன் பாஸ்)

இது மட்டும் பக்காவா நடந்து தொலைச்சா 9 ஆம் பாவமும் ஓகே.மத்த 11 பாவமும் ஓகே.. செரி பாஸ் ! அடுத்த பதிவுலயும் 9 ஆம் பாவ நிர்வாகம் தொடரும். உடுங்க ஜூட்டு

(பலர் வாழ்க்கையில ஒரு சூப்பர் ஃபிகரு கிராஸ் ஆகி இவனை தூக்கி எறிய அவன் இன்னம் இரட்டித்த மடமையோட பணத்து பின்னாடி ஓடறான்-க்ளைமேக்ஸ்ல ஒரு டுபாகூர் சோசியரோ,சாமியாரோ சமாதி கட்டிர்ராரு )

ரூ.200 மதிப்புள்ள ஜோதிட நூல்கள் இலவசம்

IMG_0454

அண்ணே வணக்கம்ணே !
எழுத்தாளர்களுக்கு வர்ர மெனோஃபஸா ? அல்லது லக்னத்துக்கு அஞ்சுல புத்தி ஸ்தானத்துல உள்ள சனியா? அல்லது மவளோட மவனுக்கு நடந்த ஓப்பன் ஹார்ட் சர்ஜரியா ? காரணம் எதுன்னு தெரியலின்னாலும் -இவற்றின் விளைவுகள் இன்னம் என்னென்னனு தெரியலின்னாலும் எழுதனுங்கற துடிப்பு மட்டும் ஃபணால் ஆயிருச்சு. நல்லா புரியுது.

எது எப்படியானாலும் என் சிக்ஸ்த் சென்ஸுக்கு தொடர்ந்து ஸ்பார்க் ஆகற மேட்டர் என்னனா அசலான மேட்டர் எதையோ நாம கேட்ச் பண்ணிட்டம். கேட்ச் பண்ணது மட்டுமில்லாம அதை மைன்ட்ல ஸ்டோர் பண்ணிக்கிட்டதோட ரெகுலரா அப்டேட்டும் பண்ணிக்கிட்டிருக்கம். என்ன தான் இணைய ஜமாவுக்காக டைல்யூட் பண்ணி எழுதினாலும் -கில்மாவ கலந்து நாறடிச்சாலும் ஆரோ பத்து பேர் நெல்லாவே ப்ரிப்பேர் ஆயிட்டிருக்காய்ங்க.

இது கடவுளுக்கோ அல்லது இயற்கைக்கோ எதுக்கோ பிடிக்கல. கொய்யா .. ஒனக்கு அஞ்சு பத்து தானே தேவை. ஒளுங்கா மொழி பெயர்ப்பு செய்ங்கறாப்ல ஆஃபர் வருது. இல்லேனு ஆகிப்போன வங்கிக்கடன் நெருங்கி வருது.

மவளோட மவனுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரின்னதும் வீட்ல இருந்த சாமான் செட்டையெல்லாம் சகட்டுமேனிக்கு ஒழிச்சதுல மைண்ட் ப்ளாக் எல்லாம் ஒழிஞ்சு அவுத்து வுட்ட மாடு மாதிரி ஒரு ஃபீல். தூக்கம் கண்ணை சுழட்டுது.

திங்க் ஆஃப் எ டெவில் கணக்கா மனசுல நினைச்சதும் –நினைச்சவன்லாம் வந்து கண் முன்னே நிற்கிறான். என்னடா நடக்குது இங்கே?

ஒன்பது வகை மனைவிகள் தொடரை டச் பண்ணா –டச் பண்ணனும்னு நினைச்சா உடனே மைண்ட் ப்ளாக் ஆயிருது. நம்ம ஆசை ரெம்ப சிம்பிள்.மன்சங்க எதை பெற எதை இழக்கறோம்ங்கற ப்ரக்ஞையே இல்லாம வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க.

இழப்புக்கு காரணம் தாங்களேங்கற சொரனை கூட இல்லாம பொஞ்சாதிமேல, அண்ணன் தம்பி மேல,அண்டை வீட்டுக்காரன் மேல பாஞ்சுக்கிட்டிருக்காய்ங்க. இந்த நிலைய லேசா மாத்தினா போதும். அதுக்குத்தேன் இத்தனை பாடு.

ஆனால் கடவுளுக்கு இது கூட சம்மதமில்லை போல. நாம புதுசா ஒன்னும் சொல்லல. சனங்க வாழ்க்கையில நடந்த இழப்புகள் –இழப்புகளுக்கு பின்னான அவர்களது வாழ்க்கை, சனங்க பெற்ற வெற்றிகள் –வெற்றிக்கு பின்னான அவிக வாழ்க்கை –இந்த ரெண்டையும் கொஞ்சம் போல ஜோதிடம் கலந்து சொல்லிக்கிட்டிருக்கம்.

இதை கூட கூடாதுன்னு சொன்னா எப்பூடி?

அப்படியும் இந்த தடை மேட்டரை லேசா ஸ்மெல் பண்ணி கட்டணத்தை எல்லாம் உசத்தி கட்டண சேவை 2015 வரை மட்டும் தான்.பிறவு அம்பேல்னு அறிவிப்பு கூட தந்தாச்சு.ஆனாலும் ஆப்பு வந்தாச்சு.

நம்ம ப்ளஸ்,மைனஸ் ரெண்டும் ஒன்னு தான் “அய்யோ பாவம் பார்க்கிறது”. (லக்ன குரு) .இதனால பச்சை துரோகம் பண்ணவிகளையும் அட விடுறா..முருகேசா! அவனவன் பாவத்துல அவனவன் போறான்னு இருந்துர்ரம். இந்த ஒரு பாய்ண்டு நம்ம மூளைக்குள்ள ஸ்லீப்பிங்ல இருந்த நியூரான்ஸை சகட்டுமேனிக்கு உசுப்பி விட்டுட்டாப்ல இருக்கு.

எதிர்காலம்ங்கறது பெல்லி டான்ஸ் ஆடுது .இடையில என்னாச்சுன்னா கட்டண ஆலோசனை பேர்ல சனங்களோட பணம் வந்து போனதுல ஒரு வித பெரும்போக்கு வந்துருச்சு.

சைனீஸ் வாஸ்துல்லாம் ஆட்டோமெட்டிக்கா தானா அப்ளை ஆயிட்டிருந்த காலம் போயிருச்சு. எட்டு வருசமா குப்பைங்க சேர்ந்து சேர்ந்து மைண்ட் குப்பை ஆயிருச்சு போல.

சைனீஸ் வாஸ்துல என்ன சொல்றான்னா போன வருசத்து ஃபோன் புக் கூட வச்சுக்கப்படாது. தேவையான நெம்பரை காப்பி பண்ணிக்கிட்டு தூக்கியெறி.
ரவுண்ட் தி க்ளாக் வேலை இருந்ததா.. ஒழிக்கிறது விட்டுப்போச்சு. ஈசானத்துல ஒரு உபரி பாத்ரூம். வீட்டம்மா பத்து தேய்க்கிறதே நாலு நாளைக்கு ஒரு தபா தான்.சமையலறை சுத்தமா இருக்கனும்னு ஈசானத்தை நாறடிச்சுக்கிட்டே இருந்தாய்ங்க.
ஈசானம்= குரு ,குரு =புத்திர,பௌத்திர காரகன்.

லோக்கல்ல நாம ஒரு பத்திரிக்கை நடத்திக்கிட்டிருந்தம் . யாவாரிங்க விளம்பர உதவில நடக்கிற பத்திரிக்கை. (புதன்) .ப்ரிண்ட் பண்ணி ஃப்ரீ டிஸ்ட் ரிப்யூஷன் பண்ணிருவம். புதன் நமக்கு விரயாதிபதி.

இடையில ரெம்ப பிசியாயிட்டமா ..பத்திரிக்கை மேட்டரை டீல்ல விட்டுட்டம். புதன்=மருத்துவமாச்சே அவர் வேலை கொடுத்துட்டாரு.
கொஞ்சம் லேட்டா முழுச்சுக்கிட்டு வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கவுன்டர் சேல்ஸுக்கு போயி ரிட்டர்ன் வந்த பிரதிகளை இலவசமா வழங்க முடிவு செய்து இருக்கம்.

வீழ்வது நாமா இருந்தாலும் வாழ்வது தமிழா இருக்கனும்னு ஒரு ஸ்லோகன் இருக்கு. அதை போல இந்த ரகசியங்களை எல்லாம் வெளியிடறதால அழியறது நாமா இருந்தாலும் வாழ்வது சோதிடமா இருக்கனும்.

என்னைக்கேட்டா கொடுப்பின இல்லாதவன் – கொடுப்பினை இல்லாத களத்துக்கு வராம இருந்தாலே நாடு உலகம் எல்லாமே உருப்பட்டுரும்.
அரைகுறைங்க வந்து ஆலவட்டம் போடறதாலதான் இத்தனை சிக்கல். நமக்கு பாஸ் இல்லாத மேட்டர்ல இறங்கினா எல்லாமே டப்பாஸுதான்.
எது பாஸு ,எது டப்பாஸுன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள். கேட்டா சொல்றேன்.

நிர்வாகத்திறமை – ஜோதிட அலசல்

அண்ணே வணக்கம்ணே !
மவளுக்கு கண்ணாலம்ங்கற மேட்டர் ஆல்ரெடி தெரியும்னா சாரி ஃபார் டிப்பீட்டிங். கண்ணால நாள் நெருங்க நெருங்க.. இந்தளவு கூட நேரம் கிடைக்காதுன்னு கன்ஃபர்ம் ஆயிருச்சு. அதனால ஆதியோடந்தமா ஒரு பதிவை போட்டுரனும்னு முடிவு பண்ணிட்டன்.

நெல்ல வேளையா நமக்கு இங்கிலீசு படிக்க -புரிஞ்சுக்க முடிஞ்சாலும் உசுரு போற மேட்டர் தவிர இங்கிலீசுல படிக்க மாட்டம். தமிழ்/தெலுங்கு இந்த ரெண்டு பாஷையில கிடைச்சா ஒரு ஓட்டு ஓட்டிட்டா போதும்.பச்சக்குன்னு மைண்டுல ஒட்டிக்கும்.

இதை ஏன் இங்கன சொல்றேன்னா மத்திய காலத்துல நாலு இங்கிலீசு புஸ்தவம் படிச்சுட்டு பக்கம் பக்கமா உருவி ஒரு சுயமுன்னேற்ற புஸ்தவம் எளுதிர்ரதுதான். இன்னைக்கு ஃபேஷனே நாலு இங்கிலீசு சைட்டை ஸ்க்ரால் பண்ணிட்டு எளுதிர்ரது. நம்மை பொருத்தவரை படிப்பறிவு கொஞ்சம் போல இருந்தாலும் பட்டறிவுதேன் நம்ம சொத்து.

நிர்வாகம் நிர்வாகங்கறாய்ங்களே அதுல தெறமை தெறமைன்னு சொல்றிங்களே அது இல்லின்னா என்ன ஆயிரும்னு ஒரு கேள்வி கேட்டிங்கனா அதுக்கு ஒரே பதில் “இந்தியா”

ஆமாங்ணா.. இதுல சோசியம் எங்க வருதுன்னு கேப்பிக .சொல்றேன். ஒரே நேரத்துல 4 புஸ்தவம் வெளியிடறது -மவ கண்ணாலம்-கைவசமுள்ள ரெண்டு பஜாஜ் சன்னி டூ வீலரையும் சேர்த்து ஒரு மொபைல் புக்ஸ்டாலா ஆல்ட்டர் பண்றதுங்கற 3 ப்ராஜக்டையும் ஏக காலத்துல எடுத்துக்கிட்டிருக்கம்.

இதுல நம்ம ரொட்டீன் ஒர்க் வேற இருக்கு. ஃபேஸ்புக்,மெயில் பார்க்கிறது, ஆன் லைன் ஜோதிட ஆலோசனை. இப்படி எல்லாத்தையும் மெயின்டெய்ன் பண்ணனம்னா இதுக்கு தேவை நிர்வாக திறமை. இதை கொடுக்கிறது குரு. இவரென்னவோ நம்ம ஜாதகத்துல உச்சமாத்தான் இருக்காரு. நோ ப்ராப்ஸ். குரு = திட்டமிடல்/தனகாரகன்/செல்வாக்கு/ஞா சக்தி/ நண்பர்கள்/தெய்வ பலம்

குரு திட்டமிடலுக்கு காரகன் ங்கறதால கண்ணால மேட்டரையே நவம்பர்லயே பைசல் பண்ணிரலாம் – நூல் வெளியீடு பிறவுன்னு நினைச்சேன். ஆனால் மாப்பிள்ளைக்கு அப்பங்காரன் ஒரு பாராசைட். பிள்ளைய “வீடு கட்டினாத்தான் கண்ணாலம்”னு ரேக்கி விட்டவன். இதன் பலன் பிள்ளைக்கு ஏழெட்டு லட்சம் வரை வட்டம், இன்னம் நாலஞ்சு லட்சம் கடன் வேற இருக்கு.

இன்னம் எவ்ள காலத்துக்கு எக்ஸ்ப்ளாய்ட் பண்ணா அவ்ள நெல்லதுங்கறது அவன் கான்செப்ட். 2013 நவம்பருங்கறதை 2014 பிப்ரவரிக்கு இழுத்து விட்டுட்டான். அதுக்காவ ப்ளானை மாத்தல

பேச்சு வார்த்தையில கண்ணால மேட்டரை எக்ஸ் பார்ட்டிக்கு அட்டாச் பண்ணி விட்டுட்டம். (ஸ் அப்பாடா) குரு தனகாரனும் கூட . இதனால கடந்த பல காலமாவே ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் மொத்தத்தயும் மவ கையில கொடுத்து – ஸ்டேண்டர்ட் இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுத்தாச்சு. (மவளோட லக்னம் -கன்னி ,அதிபதி புதன். இவரு வியாபார காரகன்) அவள் பாட்டுக்கு காசுபுரண்டப்பல்லாம் நகை,பீரோ,கட்டில்னு வாங்கிக்கிட்டே வந்தா. ஆக பண பிரச்சினை இப்ப வரை இல்லை.

ஒரு வேளை எதிர்பாராவிதமா எதுனா பல்பு மாட்டினா சொல்ல முடியாது.

அடுத்து குரு காரகமா வர்ரது செல்வாக்கு. கடவுள் புண்ணியத்துல நாம எல்லா டிப்பார்ட்மென்ட்லயும் புகுந்து வந்த பார்ட்டிங்கறதால லேபர் வார்டுலருந்து /சுடுகாடு வரை ஒருத்தனையாச்சும் தெரிஞ்சிருக்கு. ( நம்ம ஜாதகத்துல சகட யோகம் இருக்குங்கோ – சந்திரனுக்கு 6-8-12 ல் குரு-அதனாலதேன் ஏறினா ரயிலு -இறங்கினா ஜெயிலு . நமக்கு டாப் லெவல்லயும் ஆள் இருக்கும் – அடி மட்டத்துலயும் ஆள் இருக்கும்.) அடுத்து அப்பாவோட பின்னணி. ரெண்டு அண்ணனுவளும் டிக்கெட்டுங்கறதால அவிக ஃப்ரெண்ட்ஸெல்லாம் நம்மை அடாப்ட் பண்ணிக்கிட்டாய்ங்க. இது ஒரு ப்ளஸ்.

அடுத்து குரு காரகமா வர்ரது ஞா சக்தி/என்னதான் எத்தனையோ சோர்ஸ் இருந்தாலும் அது படக்குனு ஞா வரனும்ல? இந்த பட்டியல்ல அடுத்து வர்ரது நண்பர்கள். (சொல்லவே தேவையில்லை – ஒரு கால கட்டத்துல அப்பா ஒரு மாவட்ட கருவூல அதிகாரி .அவரை தேடி ஒரு நாளைக்கு நாலு பேர் வந்தா -நம்மை தெடி நாப்பது பேர் வருவாய்ங்க. / நமக்குன்னு தனிய ஆஃபீஸ் போட்டு வச்சிருந்தம்.

அடுத்தது தெய்வ பலம். 2007,மார்ச் கடைசி வாரத்துல தினத்தந்தி ஆஃபீஸுக்கு போறம் (ஜாய்ன் பண்றதுக்கு) அதுக்கான டிக்கெட் காசு கூட நம்ம கிட்டே கிடையாது. அதுவும் ஸ்பான்ஸர்ட் ப்ரோக்ராம் தான். இன்னைக்கு ஒரு கண்ணாலம் நடக்குதுன்னா இது தெய்வ பலம் அல்லாது வேறென்ன?

இதை வச்சுக்கிட்டே நிர்வாகம் பண்ணிர முடியுமான்னா ஊஹூம் . பின்னே இன்னம் என்னென்ன தேவை? சொல்றேன்.
இது எல்லாத்தையும் ஒருங்கிணைக்கனும். அதுக்கு தேவை புதபலம். ஜாதகப்படி இவரு கடகலக்னத்துக்கு விரயாதிபதி +3 க்கு அதிபதி. லக்னத்துல -பகையா இருக்காரு. தன,வாக்குஸ்தானாதிபதியான சூரியனோட சேர்ந்து வேற இருக்காரு.
ஆனாலும் எப்படி சமாளிக்கிறோம்?

இங்கதான் ஓஷோ வராரு. நம்ம மொபைல் புக் ஷாப் மேட்டருக்கு வந்தா மெக்கானிக்,வெல்டர்,க்ரசர் ஃபேக்டரி ஓனர்,வெல்டிங் மிஷன்,பவர் எல்லாம் சேர்ந்தாகனும். இதெல்லாம் நடக்கிற காரியமா? இங்கன காலைமதியம் பவர் கட் துவங்கிட்டானுவ. நம்மால பவரை கொண்டு வரமுடியாது, அதனால பவர் கட் நேரத்துல அதை நினைக்கவே மாட்டம்.

மெக்கானிக்கை பிடிச்சா அவர் அவெய்லபிலிட்டியில இருக்கமாட்டாருன்னு ஒரு “அப்பரன்டிசை”பிடிச்சம். நாம ஃபோன் அடிச்சா வந்துருவான். க்ரசன் ஃபேக்டரி ஓனரு ஃப்ரெண்ட்,க்ளையண்ட். நம்மை விட நம்ம வேலையில அவருக்கு அக்கறை அதிகம். வெல்டரும்-வெல்டிங் மிஷினும் வெளியூர் வேலைய முடிச்சுட்டு வந்ததுமே நமக்கு ஒரு ஃபோன் அடிச்சாரு. நாம மெக்கானிக்கை கூட்டிக்கிட்டு போனம்.

தேவையான ராட், ஆங்கிள்,ப்ளாட்,நெட் ,போல்ட்டுன்னு பெரிய லிஸ்டு கொடுத்தாய்ங்க. அதை காயிதத்துல எழுதிக்கல. மொபைல்ல வாய்ஸ் ரெக்கார்டர்ல ரெக்கார்ட் செய்துக்கிட்டம். கடைக்காரனுக்கு போட்டு காட்டினம். பட்டுன்னு வேலை ஆச்சு.

மெக்கானிக் பையனை ஒரு ஆட்டோவுல போட்டு இதை எல்லாம் உள்ளாற வச்சு அனுப்பிட்டு நம்ம வேலைக்கு நாம வந்துட்டம். கொஞ்சம் முக்கினா டூ வீலர்லயே போயிரலாம்.ஆனால் ரிஸ்க், நம்ம டைமும் வேஸ்ட்.

ஓஷோ என்ன சொல்றாரு? இழக்க துணிந்துவிட்டால் பெறுவாய்” “இலைக்கை அடைய உன் முயற்சியே தடை”
புக் மேட்டர்ல பாருங்க. நாம ஒரு புக் ரூ.125 . 4 புக் ரூ 500ன்னு அறிவிச்சாச்சு. சனமும் அட்வான்ஸ் புக்கிங் செய்தாச்சு.
நம்ம மைண்டுல என்ன ஓடுச்சுன்னா எப்படியும் ப்ரஸ்காரவுக மிளகா அரைச்சுருவாய்ங்க.கைய கடிச்சுரும். மவ கண்ணால நேரத்துல பல்பு வாங்கினா ரிஸ்கு.

அதனாலதேன் இப்படி ஒரு ஸ்பென்சர் ரேட்டை ஃபிக்ஸ் பண்ணினம். அதுக்கு ஜஸ்டிஸ் பண்றதுக்காவ திருவாரூர் சரவணன் ஐ பிடிச்சம். முழு பொறுப்பையும் கொடுத்தம். அவர் மூலமாவே ப்ரஸ் ஏற்பாடாச்சு.

சகாயமான விலை -ப்ராம்ப்ட் ரெஸ்பான்ஸ். இப்பம் மத்த 3 புஸ்தவமும் ஓடி – பைண்டிங் நடந்துக்கிட்டிருக்கு. அஞ்சாம் தேதி சென்னை போறம் லாரி சர்வீஸ்ல போட்டுட்டு வர்ரம்.

“சுருக்கமா” வேலை முடிஞ்சதால லாப சதவீதம் எகிறிக்கிச்சு. இப்பமே ஸ்கின் ப்ராப்ளம் .இதுல இத்தனை லாபம் தாங்காதுன்னு ஒரு செட் புக் பண்ணவுகளுக்கு 1+1 ஆ அனுப்பப்போறோம்.

இந்த நெல்ல எண்ணத்துக்கு காரணம் குரு. புஸ்தவ மேட்டர்ல வாலண்டியரா லாஸ் ஆறதால கண்ணாலம் வரை புத காரகமான “ஒருங்கிணைப்பு” பக்காவா நடக்கும்.

இவ்ளோ இருந்தாலும் நம்ம மேட்டர்ல காரியத்தை கெடுக்கிறது கோபம். ( நான்கில் செவ்) அதனால படக்குன்னு ரத்த தானமும் கொடுத்துட்டம்.

எந்த மேட்டரா இருந்தாலும் அது சுமுகமா முடிய 12 இடமும் பெட்டரா இருக்கனும். அல்லது மேற்படி 12 பாவ காரகங்கள்ள சரி பாதிய நாம இழக்க தயாராயிரனும்.

உ.ம் லக்னம். இது உடல்,மனம் ரெண்டையும் காட்டுது. இந்த க்ளைமேட்டுக்கு விடியல்ல எந்திரிச்சு பச்சை தண்ணியில ஒரு குளியல் போட்டா அது உடம்புக்கு சித்தரவதை.ஆனால் மனசுக்கு ? ஒரு துள்ளலே வருதுங்கோ..

அடுத்து ரெண்டாமிடம் (2=தனம்,வாக்கு).
உண்மைய பேசினா -நாம உண்மையத்தான் பேசறம்ங்கற ஃபீல் எதிராளிக்கு வந்துட்டா நம்ம பேச்சுக்குஇருக்கிற மருவாதியே தனி.
நாமளும் ஒரு காலத்துல பொய் இல்லின்னா போஜனமில்லைன்னு இருந்த பார்ட்டிதான், ராமகிருஷ்ண பரம ஹம்சர்ல இருந்து ஓஷோ வரை படிச்சதுல, பொய்னாலே அலர்ஜி ஆயிருது. அடுத்தது பட்டவர்த்தனமான பேச்சு. ஆரம்பத்துல கொஞ்சம் அதிர்ச்சி ஆனாலும் அட பரவால்லடா இந்தாளுங்கற ஃபீலை கொடுக்குது.

நமக்கு காரியம் நடக்கிறது முக்கியம். காசு முக்கியமில்லை. இது ஒரு ஸ்டாண்ட். நமக்கு காரியம் லேட்டானாலும் பரவால்ல,குவாலிட்டி குறைஞ்சாலும் பரவால்ல, காசு மிச்சமாகனும் .இது ஒரு ஸ்டாண்ட்.எதாச்சும் ஒரு ஸ்டாண்ட் எடுத்துக்கனும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா வேலைக்காகாது.

நம்ம பொருத்தவரை உறுதி,பாதுகாப்பு,எதிர்கால தேவைகள் எதுல முக்கியமோ அதுல காசை பார்க்க மாட்டம். இதுவே ஷோ,டிஸ்ப்ளே ,பந்தா இதுல காசை விட மாட்டோம்.

இப்பம் மொபைல் புக் ஷாப் மேட்டர்ல கூட ரென்டு வண்டியும் லிங்க் ஆற சமாசாரம், பேசிக் தொட்டில ஹை குவாலிட்டி,ஹை கேஜ். டப்பாவுக்கு ? ஊஹூம். அதே நேரத்துல மழை,வெயில்லருந்து பாதுகாக்கும் டாப்புக்கு ஹை குவாலிட்டி.எப்பூடி?

இதையே நீங்க மத்த 10 பாவங்களுக்கும் பொருத்தி ஒர்க் அவுட் பண்ணா எம்.பி.ஏ படிக்காமயே மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட் ரேஷன் ஆயிரலாம்.

ஓகே இன்னொரு நாள் இன்னொரு சப்ஜெக்டோட சந்திக்கிறேன். உடுங்க ஜூட்.

நச் பரிகாரம்: குரு

“புனரபிமரணம், புனரபிஜனனம்” “உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள்.

கடந்த பிறவியில் உங்கள் உழைப்பின் பலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.

பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார்.

சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, நான் -அந்தணர்,சான்றோரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.புதன் -கல்வியாளர்கள்,வர்த்தகர்களை ஆள்கிறோம்.

இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு தீங்கு செய்தீர்கள், அவர்களது உழைப்பை பெற்று அவர்களுக்கு உரிய கூலி/சன்மானம் வழங்காது கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம்.

எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே ‘உங்கள் சாய்ஸ்’ படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட சில விசயங்களையாவது விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.

கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? “ஆம்” என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.

பரிகாரங்கள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.

2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள்.

3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.

4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

5. உங்களுக்கு ஏதேனும் வித்தை கற்று கொடுத்தவர்களுக்கு, பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.

6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.

7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.

8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.

9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.

10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.

11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

போனஸ்:
ஜோதிடத்தின் அடிப்படையை அறியாதவர்கள் கூட திருமண பேச்சை எடுத்ததுமே “குருபலம்” இருக்கா பாருங்க என்று யோசனை தெரிவிப்பர்.

குரு பலத்துக்கும் – கல்யாணத்துக்கும் என்ன தொடர்பு?

குரு பலம் இருந்தால் இதயம் முழு வேகத்துடன் வேலை செய்யும். முகத்தில் திருமண களை வரும்.கல்யாணம் முடிந்த பிறகு காஞ்சமாடு கம்பங்கொல்லையில் விழுந்தது போல் “இன்பத்தில்” திளைத்தாலும் உடல் நலகோளாறுகள் வராது.

திருமணம் நடக்கவேண்டுமானால் காசு பணம் தேவை. குருபலம் இருந்தால் தான் இவை புரளும். கல்யாணத்துக்கு தங்கம் முக்கியம். குரு ஸ்வர்ண காரகன் என்பதால் குரு பலம் இருந்தால் தான் கைக்காசு தங்கம் ஆகும். தங்கம் நகையாகும்.

திருமண காரியங்கள் நல்லபடி நடக்க காசுபணம் மட்டும் இருந்து விட்டால் போதாது செல்வாக்கும் தேவை .மேலும் ஒவ்வொரு காரியமும் உரிய சமயத்தில் நடந்தாக வேண்டும். இதற்கெல்லாம் குரு தான் காரகன். இதனால் தான் கல்யாணம் என்றதுமே குரு பலம் வந்திருச்சா என்ற கேள்வி எழுகிறது.

சிலர் மணமகள் அ மணமகன் இருவரில் ஒருவருக்கு குரு பலம் இருந்தால் போதும் என்று சொல்வர். இது சரியல்ல.

குருபலம் இல்லாத தரப்பினர் குரு பலம் உள்ள தரப்பினரிடம் படாத பாடு படவேண்டி வந்துவிடும்.

கில்மாகுரு : மலேசிய தமி..ழருங்கோ

முந்தா நாள் காஞ்சிபுரத்தில் மலேசிய கில்மா குருங்கற தலைப்புல ஒரு பதிவை போட்டிருந்தேன். இதை படிச்சுட்டு மஸ்தா பேரு நிறை………..ய்ய மேட்டரு கொடுத்துருக்காய்ங்க.

அதையெல்லாம் முடிஞ்சவரை தொகுத்து தந்திருக்கேன். கேளுங்க

இணையவேகம் ஒத்துழைக்கலின்னா இங்கே அழுத்தி டவுன் லோட் பண்ணி கேட்கலாம்

ஜோதிட பால பாடம் : குரு A டு Z பலன்

அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு துவாதசபாவங்களில் குரு நின்றால் ஏற்படக்கூடிய பலனை ஒரு புதிய கோணத்துல சொல்லியிருக்கன். நாளைக்கு ரொட்டீனாவும் பார்ப்போம்.

வழக்கம்போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்கி கேட்டுருங்க.சோனியா காந்திக்கு யோசனை கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன் .ஆனால் ஆரும் கண்டுக்கிடலை (ஐ மீன் ஐடியா கொடுக்கலை – திருந்தாத ஜென்மம்னு முடிவு பண்ணிட்டிங்கனு நினைக்கிறேன். )